en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 32 (Kc.32) : சுத்திகரிக்கப்பட்டு வெண்மையாக்கப்பட்டு புடமிடப்பட்டது
(2004 ஆகஸ்டு 15 ஞாயிறு காலை, லோக்காட்ஜ்ரோ – ஆபிட்ஜான், ஐவரி காஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 இன்று, நாம் ஆகஸ்டு 15-ம் தேதியில் இருக்கிறோம், இது பெண்தெய்வமான மரியாள் என்னும் பிசாசின் வழிபாட்டு நாளாகும், அது எரேமியா 44:17-ன் வானராக்கினியான அஸ்தரோத்தேயன்றி வேறொன்றுமல்ல. 1 இராஜாக்கள் 12:32-ல் யெரொபெயாமினால் ஆகஸ்டு 15-ன் இந்த வழிபாட்டு நாள் நிறுவப்பட்டது. இருப்பினும், புதிய ஏற்பாட்டில் இந்த அதே வழிபாடு லூக்கா 11:27 முதல் 28 வரை மீண்டும் தோன்றினது. அங்கு தான் மரியாளை ஆராதிக்கும் பிசாசு முதன் முறையாக கிறிஸ்தவத்துக்குள் தோன்றினது.
2 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவைகளைச் சொன்னபொழுது, ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவளுக்கு மறுமொழியாக: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். இன்றைக்கு பாக்கியவான்கள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அல்ல ஆனால் அவரது செய்தியை கேட்டு அதன்படி செய்கிறவர்கள் தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
3 நல்லது, ஒரு செய்தியானது அடையவேண்டிய இலக்குதான், நிருத்துப் பார்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. சாயங்கால நேரத்தில், செய்தியானது பரிசுத்தவான்களின் அறிவு என்னும் நோக்கத்தை கொண்டிருந்தது; முத்திரைகள், மூல பாவம் மற்றும் பல இரகசியங்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் நடுராத்திரியில், இந்த செய்தி வெளிப்படுத்துதல் 12:14-ன் படி சர்ப்பத்தின் முகத்திற்கு விலக்கி திருச்சபையை கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது; ஆனால் முதலாவதாக அவள் சர்ப்பத்தினிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும், இந்தச் செய்தி அதை செய்யும் என்று தானியேல் 12:10-ல் வேதாகமம் சொல்கிறது.
4 தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் "சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாக" விளங்கவேண்டும் என்று தானியேல் 12:10 கூறுகிறது. மேலும், வானமும் பூமியும் சமுத்திரமும் தேவதூதர்களும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே, தேவன் தாமே இந்த செய்தியை முத்திரையிட்டு மறைத்தார், ஏனெனில் இது சாத்தான் திரைநீக்கப்படுதலும் பரிசுத்தவான்களின் சுத்திகரிப்பும் ஆகும். தேவன் செய்த அனைத்தையும் பார்த்து, சாத்தானும் அதை அப்படியே செய்கிறான், மேலும் தூதர்களினுடைய மற்றும் வெளிச்சங்களுடைய புகைப்படங்களையும் நாம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். நான் கூட என் கண்களாலேயே நான்கு புகைப்படங்களை பார்த்திருக்கிறேன். அவைகள் உலகெங்கிலும் டஜன் கணக்கில் இருப்பதை நான் அறிவேன். அவை அனைத்திலும் அங்கே மீதமாக இருப்பது, தீர்க்கதரிசிகளின் மோதலும் அல்லது தோற்றுப்போதலும் தான்; பிசாசின் பிள்ளைகளுக்கு வார்த்தையானது உபத்திரவமாக இருப்பதால் அதைக்கொண்டு போர் செய்ய அவர்களால் முடியாது.
5 நல்லது. கவனத்தை செலுத்துங்கள்: பெந்தெகொஸ்தேயினருக்கு பரிசுத்த ஆவி இருப்பதாக நீங்கள் சாயங்கால நேரத்தில் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் இன்று காரியம் அப்படியல்ல, பிரன்ஹாமிஸ்டுகளிடம் கூட அது கிடையாது. ஆவியானவர் சிலர் மீது விதிவிலக்காக இருப்பார், ஆனால் எந்த சபையிலும் இல்லை. தனக்குள்ளே ஆவியை உடையவன் எவனோ அவன் ஏற்கனவே இந்தச் செய்திக்காக அனல் கொண்டிருக்கிறான் மேலும் அவனால் புரிந்துகொள்ள முடியாததையும் அவன் விசுவாசிப்பான்.
6 தேவன் இங்கு என்ன செய்கிறாரோ அதற்கு வெளியே, வேறு எங்கும் பரிசுத்த ஆவி இல்லை. ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபைகளில் இருந்துக்கொண்டு, நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்று இருப்பதாகக் உரிமைகோர முடியாது. நீங்கள் அந்த சபைகளில் இருந்து, நீங்கள் ஒரு உணர்ச்சி அல்லது அபிஷேகம் பெற்றிருப்பதாக உணர்ந்தால், அந்த உணர்ச்சிகளும் அபிஷேகமும் பிசாசுகளினுடையது என்று அறிந்துகொள்ளுங்கள். நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, நான் பிரசங்கிக்கிற செய்திக்கு வெளியே வேறெங்கும் இரட்சிப்பு இல்லை; சத்தியம் வேறெங்கும் இல்லை, பரிசுத்த ஆவி வேறெங்கும் இல்லை. [ஆசிரியர்: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7 இந்தச் செய்தி உங்களை வந்து அடைகிறவரையில் நீங்கள் ஒரு சபையில் இருந்து, அங்கே நீங்கள் அந்நியபாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்திருக்கலாம்... மேலும் நீங்கள் அந்த சபைகளில் ஒன்றில் சத்தியத்தில் இருக்கிறதாக நினைத்திருக்கலாம், அப்படியானால், அது பரிசுத்த ஆவி அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் சபையின் உபதேசம் பொய்யானது என்றால், உங்களிடம் இருக்கும் பரிசுத்த ஆவி (holy spirit) உண்மையான பரிசுத்த ஆவி (Holy Spirit) அல்ல என்று உங்களிடம் சொல்ல ஒருவர் வருவதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டாம்.
8 நல்லது, தானியேல் 12:10 என்ன சொல்கிறது? "சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாக விளங்குவார்கள்" என்கிறது, நீங்கள் நீதிமானாக்கப்படாமல், அதாவது களங்கமற்றவர் என ரூப்பிக்கப்படாமல் நீங்கள் வெண்மையாக்கப்பட முடியாது. தானியேல் 12:10-ல் "சுத்திகரிக்கப்பட்டு" என்னும் வார்த்தையின் பொருள்: "நீதிமானாக்கப்படுவதற்காக பிரித்தெடுக்கப்பட்டது" என்பதாகும். ஏனென்றால், தானியேல் 12:10-ல் அது உங்களினூடாக கிரியை செய்த தீய ஆவிகள் பற்றின காரியமாக இருக்கிறது. இவ்வாறு, "சுத்திகரிக்கப்பட்டது" என்பதற்கு "நீதிமானாக்கப்பட்டது" என்று பொருள், ஏனென்றால் அது நீங்கள் அல்ல, ஒரு பிசாசு, ஒரு குறிசொல்லும் ஆவி உங்கள் மூலமாக அக்காரியங்களை நடப்பித்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் நீங்கள் கனவுகள் காண்கிறது பற்றி, அவைகள் பிசாசுகளின் ஆவிகளும், குறிசொல்லும் ஆவிகளுமாக இருக்கிற அதேநேரத்தில் நீங்கள் அவைகளை பரிசுத்த ஆவியென நினைத்துக் கொண்டிருந்தீர்கள்.
9 அந்த பிசாசுகளுக்கும், கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு பரிசுத்த ஆவிகளுக்கும் (holy spirits) தான் தேவன் நரகத்தையும், எரிகிற அக்கினிக் கடலையும் சிருஷ்டித்துள்ளார். உங்கள் மரணத்திற்கு முன்பாக இந்த ஆவிகளிடமிருந்து நீங்கள் விடுதலையடையவில்லை என்றால், நீங்கள் நரகத்திற்கு போவீர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? பரதீஸின் நிமித்தம் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்களது நாளின் செய்தியை ஏற்றுக்கொள்ள தேவன் அவர்களுக்கு மெய்யான பரிசுத்த ஆவியை அருளுகிறார். இந்தப் பிரகாரமாகவே, பிசாசின் புத்திரர்கள் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு பரிசுத்த ஆவிகளை நரகத்திற்குப் போகும்படிக்கு பெறுகிறார்கள். உங்களுக்கு சொப்பனங்களை கொடுக்கிற பரிசுத்த ஆவி தான் குற்றவாளி, அது தான் அது. இந்த செய்தியை தவிர்த்துவிட்டு விடுதலை அடைவதென்பது கூடாதகாரியம். அதைத்தான் தானியேல் 12:10 கூறுகிறது. இதை செய்வது ஒரு தூதனோ, ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு சபையோ... அல்ல, ஆனால் அறியமுடியாத மொழியின் வியாக்கியானம் அதை செய்யும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
10 வெண்மையாக்கப்படுதல் என்றால் "களங்கமற்றதென நிரூபிக்கப்படுதல்" என்று பொருள். ஆப்பிரிக்காவில், ஒரு மந்திரவாதி நிரபராதி என நிரூபிக்கப்பட்டால், மக்கள் அவன் மீது கொஞ்சம் வெண்ணிற மண் (kaolin) அல்லது வெண்ணிற பொடியை தூவுகிறார்கள். இருப்பினும், ஒரு மனிதன் மேல், பில்லி சூனியக் குற்றஞ்சாட்டப்படும் போது, பாஸ்போர்ட்டோ அல்லது விசாவோ இல்லாமல் ஐரோப்பாவில் யாரையாவது கொன்றுபோட்டது அந்த ஏழை முதியவர் அல்ல, ஆனால் அவனில் தங்கியிருக்கிற அந்த பில்லி சூனிய ஆவிதான் அதைச் செய்ததாக இருக்கிறது. இயேசு: "என்னில் வாசமாயிருக்கிற என் பிதா, அவரே இவைகளை செய்கிறார்" என்றார். ரோமர் 7:15 முதல் 25 வரை வாசித்து பாருங்கள், நீங்கள் அதை காண்பீர்கள். அதுமுதற்கொண்டு, பில்லி சூனிய ஆவியும் கிழவனும் ஒன்றாயிருக்கிறபடியினால்; அந்த கிழவன் மேல் அந்த பாவம் சுமத்தப்படுகிறது.
11 நான் துன்புருத்தப்படுவேன் என்பது உண்மை தான், ஆனாலும் ஏனோக்கு முதல் நான் மட்டுமான எல்லா தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழிகளும் என்னைத் துன்பப்படுத்துகிற எல்லார் மேலும் திரும்பும். ஏன்? ஏனெனில் இரட்சிப்பின் வரலாற்றில் பரிசுத்தவான்களை துன்புறுத்திக் கொலை செய்த அந்த அதே பிசாசுகள் தான் என்னைத் துன்புறுத்த இன்றைக்கு இந்த கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் மேல் தங்கியிருக்கின்றன. அவருடைய காலத்தின் மார்க்கபக்திகொண்ட ஜனங்கள்மேல் ஆபேலின் இரத்தப்பழியும் அனைத்து பரிசுத்தவான்களின் இரத்தப்பழியும் திரும்பி வருமென கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். அதே நேரத்தில் அந்த ஜனங்களோவெனில் ஆபேலின் காலத்திலும் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளின் காலத்திலும் வாழ்ந்தவர்களல்ல. ஆனாலும் அந்த சுவிசேஷக சபை பரிசுத்த ஆவியானது உங்களை விட்டுப் போய்விடுமானால், நியாயத்தீர்ப்பின் போது, நீங்கள் ஒரு சுவிசேஷக சபையிலே இருந்திருக்கிறீர்கள் என்பதை, அதாவது நீங்கள் சாத்தானுடைய ஒரு ஊழியக்காரனாக இருந்தீர்கள் என்பதைக் கூட தேவன் நினைப்பதில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 உங்களில் இருக்கிற அந்த பொல்லாத ஆவிகள், அவைகளே பாலியல் (Sex), குறி சொல்லுதல், பில்லி சூனியம்... போன்ற பாவங்வைகளைச் செய்கின்றன. ஏனென்றால், தேவன் தமது சாயலில் படைத்த மனிதன் யாருக்கும் தீங்கு செய்ய விரும்பினது இல்லை, தீங்கு செய்யவும் முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து: "நான் செய்கிற கிரியைகளை நான் அல்ல, ஆனால் என்னில் வாசமாயிருக்கிற பிதாவானவர், அவரே இந்த கிரியைகளைச் செய்கிறார்", "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" என்றார்.
13 இந்தச் செய்தியை நீங்கள் புரிந்து கொண்டீர்களெனில், மத்தேயு 25:6-ன் சத்தத்தை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். அந்த பாப்டிஸ்டு சபை, தேவர்கூட்டு சபை அல்லது பெந்தகொஸ்தே சபைகளின் பரிசுத்த ஆவி தவறானது என்று எவராவது ஒப்புக் கொள்ள விரும்பவில்லை என்றால், அவனை விட்டு விடுங்கள், ஆனால் அவன் நரகத்திற்கு செல்வான். தன்னுடைய நேர்மையின் காரணமாக தேவன் அவனுக்கு ஒரு கள்ளப் பரிசுத்த ஆவியை கொடுக்க முடியாது என்று அவன் நினைக்கிறான். ஆனால் இதற்காகவே, அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு கள்ளப் பரிசுத்த ஆவிகளினின்று, உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவே அவர் இந்த செய்தியை அனுப்பியிருக்கிறார்.
14 ஆனால், நீங்கள் பிறப்பதற்கு முன்னரே அந்த அதே பரிசுத்த ஆவிகள் அங்கே இருந்து, விக்கிரக பூசாரிகளையும் ஆயிரக்கணக்கான ஜனங்களையும் பயன்படுத்தின என்பதையும், லூசிபரின் கிளர்ச்சி முதற்கொண்டு பரலோகத்தின் சாபமும் பூலோகத்தின் சாபமும் அவைகளை பின்தொடருகிறது என்பதையும் கவனியுங்கள். மேலும் அவைகள் இன்று உங்களுக்குள் புகுமேயானால், பின்னர் நீங்களும் பரலோகத்தில் தேவனுக்கு எதிராகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு அனுப்பிய அனைத்து தீர்க்கதரிசிகளுக்கு எதிராகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிராகவும் செய்த அனைத்து கலகங்களின் குற்றத்திற்கும் ஆளாவீர்கள். அவைகள் ஊழியங்களை மாற்றிக்கொள்கிற அதே பிசாசுகள் தான்.
15 நீங்கள் ஒரு சுவிசேஷக சபை பரிசுத்த ஆவியுடன் இறந்துபோவீர்களேயாகில், நீங்கள் ஆகாபின் காலத்தில் பாகால் தீர்க்கதரிசிகளின் பட்சமாக இருந்தீர்கள் என இறுதித் தீர்ப்பில் உங்களுக்குச் சொல்லப்படும்போது நீங்கள் ஆச்சரியமடைய வேண்டியதில்லை. ஏன்? ஏனென்றால் அங்கே எலியாவுக்கு முன்பாக பாகால் தீர்க்கதரிசிகள்மேல் கிரியை செய்து கொண்டிருந்த அதே பரிசுத்த ஆவிகள் தான் இன்றைக்கு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு தலைவர்கள் மீது கிரியை செய்து கொண்டிருக்கும் பரிசுத்த ஆவிகளாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16 நல்லது. ஒருவன் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறதை நான் கேட்கிறேன். அது கலப்பற்ற பொய்யாகும். நூறு நாட்கள் உபவாசத்தில் கழியுங்கள்; ஆனாலும் பிசாசு உங்களைப் பார்த்து சிரிப்பான். உபவாசமிருத்தல் தான் காரியம் என்றால், மாந்திரிக ஆவிகளால் (coffins) சில பாஸ்டர்கள் தாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். சமீபத்தில், மாந்திரிக ஆவியால் (coffins) தாக்கப்பட்ட ஒரு பாஸ்டர் பற்றி செய்தித்தாள்கள் பேசின. அவர்கள் உண்மையில் குற்றவாளிகளா? ஆம்! மேலும் பில்லிசூனிய ஆவிகள் உங்கள் மேல் தங்கியிருக்கிறவரை, உங்களின் உபவாசங்களும் ஜெபங்களும் ஒரு பொருட்டல்ல, நரகம் உங்களை உரிமைகோருகிறது, நீங்கள் அழிவுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் தான் தேவன் இந்த செய்தியை தானியேல் 12:10-ன் படி பரிசுத்தவான்களின் சுத்திகரிப்புக்காக அனுப்பியிருக்கிறார்.
17 நம்மில் ஒவ்வொருவரும் இந்த செய்தியினூடாக தன்னைத்தானே நோக்கிப் பார்த்து, "சகோதரனே, நான் கொண்டிருந்த அந்த ஆவியும் (the spirit) நான் பரிசுத்த ஆவி என விசுவாசித்திருந்ததுமான அது அவர் (Him) அல்ல" என்று சொல்ல வேண்டும். விடுதலை அடைவதற்கு முன்பாகவே, அவனிடமுள்ள ஆவியானது பரிசுத்த ஆவி அல்ல என்னும் உருதிப்பாட்டை பெற்றவனாக அவன் இருத்தல் வேண்டும். ஆனால், ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபையில் நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியை கொண்டிருக்க முடியும்? தனது நேரத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை புறக்கணித்துவிடட்ட ஒரு சபை மேல் தேவனால் எப்படி பரிசுத்த ஆவியை அனுப்ப முடியும்? இது தீர்க்கதரிசிகளின் காலத்தில் சாத்தியமானதல்ல, இது இன்றும் சாத்தியமானதல்ல.
18 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில், பரிசேயர், சதுசேயர், கிரேக்கவாதிகள், செலோத்தேயினர்கள் மற்றும் அந்த அனைவரும் பரிசுத்த ஆவியை கொண்டிருக்க இயலவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியை கொண்டிருப்பதற்கு, உங்களது காலத்தில் உயிர்வாழும் தீர்க்கதரிசியாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் மத்தேயு 23:34 முதல் 35 வரை, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தீர்க்கதரிசிகளை அனுப்புவதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். இது ஒரு வாக்குறுதியாக இருக்கிறது மேலும் அவர் தமது வாக்குறுதிகளை காத்துக்கொள்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 "நான் பரிசுத்த ஆவியை கொண்டிருக்கிறேன் ஆனாலும் ஒரு குறி சொல்லும் ஆவியினால் அல்லது பாலியல் (Sex) ஆவியினால் நான் பிடிக்கப்பட்டிருக்கிறேன்" என்று சொல்லாதீர்கள். இல்லை, நீங்கள் அவரை கொண்டிருக்கவில்லை. "நான் அந்நிய பாஷைகளைப் பேசுகிறேன், ஏதோ ஒன்றை உணர்கிறேன், நான் ஒரு அபிஷேகத்தை உணர்கிறேன், அதனால் எனக்கு பரிசுத்த ஆவி உண்டு" என்று சொல்லாதீர்கள். இயற்கைக்கு அப்பாற்பட்டது எல்லாம் தேவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மேலும் உங்களது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிப்பதற்கு முன்பு தேவனைப் பற்றி பேச உங்களால் முடியாது.
20 ஒரு சபையில் பரிசுத்த ஆவியை பெற்றதாகக் கூறிய ஒரு சகோதரியின் அறிக்கையை நான் ஒரு பயணத்தின் போது கேட்டேன். அந்த அதே ஆவி மற்றும் அந்த அதே வரத்துடன் அவள் தனது நான்காவது சபையான, நடுராத்திரி சத்தத்தில் இருத்தாள். ஆனால் அந்த நாளில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவள் அந்த ஆவியைக் கொண்டு கடைசி முறையாக தீர்க்கதரிசனம் உரைத்ததாள், தேவனுடைய கிருபையானது அதை அப்படியாக்கிற்று. இந்த அனுபவத்திற்குத்தான் இந்த செய்தியானது முழு பூமியையும் அழைக்கிறது. உங்கள் தீர்க்கதரிசனங்கள் அல்லது சொப்பனங்கள் பொய்யென்று நான் சொல்லவில்லை, அவை ஒருபோதும் தோல்வியடையாததாகவும் கூட இருக்கலாம், ஆனால் அதற்கு ஏவின அந்த ஆவி அது பரிசுத்த ஆவி அல்ல.
21 கள்ளச் சபையையும் அதனுடைய கள்ள உபதேசத்தையும் நீங்கள் நிராகரித்துவிட்டு அதன் கள்ளப் பரிசுத்த ஆவியை வைத்துக் கொள்ள உங்களால் எப்படி முடியும்? ஒருவன் வந்து, நீ கள்ளப் பரிசுத்த ஆவியை கொண்டிருக்கிறாய் என்று உனக்கு அறிவிக்கும் வரை காத்திருக்காதே. அந்த ஆவியை வைத்துக்கொள்வதற்காக அந்த கள்ளப் போதகத்தை புறக்கணிக்காதே. ஆனால் அந்த கள்ளப் பரிசுத்த ஆவியை நீ வைத்துக்கொள்ள விரும்புவாயானால், நீ எங்கு இருக்கிறாயோ அங்கேயே தரித்திரு, ஆனால் உன்னுடைய முடிவு நரகமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22 ஆனால் பரிசுத்த ஆவியை கொண்டிருப்பதற்கு, அதுதானே இந்த செய்தியின் ஆவியாக இருக்கிறது; நீங்கள் அதை முழுவதுமாக, ஒரு முனை முதல் மறுமுனை வரை, உங்களால் புரிந்துகொள்ள முடியாததையும் அல்லது இதுவரையிலும் நீங்கள் கேள்விப்பட்டிராததையும் கூட விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அதை முழுவதும் விசுவாசிக்கவேண்டும். இதை நினைவு கூருங்கள்: "செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளை நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் ..." இந்த செய்தியைத் தவிர வேறு எதையும் நம்பாதே, இந்த செய்தியை எந்த விதத்திலும் சந்தேகிக்காதே.
23 இப்பொழுது, நான் இதை சொல்ல என்னை அனுமதியுங்கள்: தேவன் இராஜாதிபத்தியமானவர். அவர் ஒரு செய்தியைக் கொடுத்திருக்கிறார், அதை அவர் பாதுகாப்பார். யோவான் 2:1 முதல் 5 வரை மரியாள் முயற்சி செய்ததைப் போல், அதை பதுகாக்க அல்லது அதை உறுதிப்படுத்தவேண்டுமென்று அவருக்குச் சொல்வது என்னைச் சார்ந்த காரியமல்ல. ஆனால் இந்த செய்தியை விசுவாசிக்க, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்குத் தேவையானது இன்னதென்று, இதை கொடுத்த அவருக்கு தெரியும். மேலும் ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தில், "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்" என்று தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தாமே சொன்னார்கள். இது என்ன? எடுத்துக்கொள்ளப்படுதலின் நோக்கிலான தீர்க்கதரிசன விசுவாசம் தான் இது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24 நான் அமைதியாக இருப்பேனாக, அப்பொது நான் ஏதோவொன்றாக முடியும். நான் மனிதனின் பாதுகாப்பை விட தேவனின் பாதுகாப்பை விரும்புகிறேன். நான் மனிதனுடையதை விடவும் தேவனுடைய உறுதிப்படுத்தலை விரும்புகிறேன். அங்கே இரண்டாயிரம் கடுமையான எதிர்ப்பாளர்கள் இருக்கட்டும், ஆனாலும், "ஓ தேவனே! உமது வார்த்தையை உறுதிப்படுத்தும்! உமது வார்த்தையை உறுதிப்படுத்தும்! உமது வார்த்தையை உறுதிப்படுத்தும்!" என்று சொல்லுமளவுக்கு நான் பரீட்சைக்குள்ளாகவோ அல்லது தொல்லைக்குள்ளாகவோ வேண்டாம். அத்தகையது அப்போஸ்தலிக்க விசுவாசமாக இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு தான் யூதர்கள் வனாந்திரத்தில் மரித்தார்கள். அவர் என்னிடம் எதை சொல்லச் சொன்னாரோ அதை நான் சொல்லிவிட்டேன் என்றால், பின்பு நான் செய்வதற்கு இன்னும் மீதமாக இருப்பது தான் என்ன? இந்தச் செய்தியை சுமந்துகொண்டுவந்த பரலோக மேகங்கள், அவை இங்கே இல்லையா? தேவனுக்கு என் உதவி தேவையில்லை. இராஜ்ஜியத்தின் புத்திரரை இரட்சிப்பதற்காக, புத்தியில்லாதவர்களுக்காகவும் கூட, தேவதூதர்கள் அவர்கள் மேல் இறங்கவும் ஏறவும் செய்வார்கள். செய்தி தன்னில் தானே மகிமைப்படும், நீங்கள் அதைக் காண்பீர்கள், நீங்கள் அதைக் கேட்பீர்கள், முழு பூமியும் அதை பிரகடனம் செய்யும்.
25 இந்த செய்திக்கு முன்னர், சில முகமூடிகள், ஜோதிடம், எண்கணிதம், மாயவித்தை புத்தகங்கள் ... போன்ற பல்வேறு காரியங்களுக்குப் பின்னால் பிசாசுகள் மறைத்து இருந்தன. பவுல் முதற்கொண்டு ஒவ்வொரு முறையும் செய்திகள் அவற்றைத் வெளியரங்கமாக்கிற்று. ஆனால் எல்லாவற்றினுடையவும் முடிவில், அவைகள் 2 இராஜாக்கள் 17:29 முதல் 31 வரையான வசனங்களின் மேடைகளான சபைகளுக்குள் நுழைந்துகொண்டன, வேதாகமங்களுக்கு (bibles) பின்னாலும் மறைந்துகொண்டன; பரிசுத்த ஆவிகள் என்று இன்று அழைக்கப்படுகிற அந்த விழுந்துபோன தூதர்கள், திரை நீக்கிக்காண்பிக்கப்படுவர் என்பதை ஒரு போதும் நினைத்துப் பார்த்தது கிடையாது. ஆனால் அவைகளின் மறைவிடங்கள் வெளியரங்கமாக்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்டன; சில வேதாகமங்களும் கூட அக்கினிக்கு உட்படுத்தப்பட்டது. நினைவுச்சின்னங்கள் மட்டுமல்ல ஆனால் சில வேதாகமங்களும் தான்.
26 ஆனால் அவைகளின் கடைசி பதுங்கு குழி, அதுதான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஆனால் நாம் அவர்களை சுட்டெரிக்க முடியாது, தங்களது மரணம் வரைக்கும் அந்த பரிசுத்த ஆவிகளை வைத்துக்கொண்டு இருக்கப்போகிறவர்களான அந்த கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரான்ஹாமிஸ்டுகள் உட்பட இஸ்லாம் மற்றும் யூத மதத்தின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலையும் தேவன் திட்டம் பண்ணியுள்ளார்.
27 வெளிப்படுத்துதல் 20:13 பேசுவது சமுத்திரத்தில் மரித்த ஜனங்களைப் பற்றியல்ல என்பதை கவனியுங்கள் ஆனால் அது அவர்களது பரிசுத்த ஆவிகளாக இருக்கிறது, மேலும் அவை பாதாளத்தின் ஆழங்களில் இருந்தன, அவர்கள் மரித்த பொழுது அவர்களை அங்கு அனுப்பிவைத்தவைகளும் அவைதான். தேவனுடைய கரங்களில் கருவிகளாக இருப்பதற்கு பதிலாக, நீங்கள் பரிசுத்த ஆவி என அழைக்கிற அந்த பிசாசுகளின் கரங்களில் கருவிகளாக இருக்கிறீர்கள். உங்களையும் கொண்டேயல்லாமல் அவைகள் நரகத்திற்கு போகாது.
28 இன்னுமாக, சாத்தான் அந்த ஆவிகளை பரிசுத்த ஆவி என்றும் ஆகையால் அதோடு கூட அவர்கள் பரதீஸுக்குச் செல்வார்கள் என்றும் கத்தோலிக்கர்களையும் புரோட்டஸ்டன்டுகளையும், சுவிசேஷக சபையினர்களையும் பிரன்ஹாமிஸ்டுகளையும் நம்பவைக்கிறான். ஆனாலும், நீங்கள் பரிசுத்த ஆவி என்று அழைக்கிற அந்த அனைத்து ஆவிகளும், அவைகள் பிசாசுகளின் ஆவிகள் என்றும் அதனுடன் நீங்கள் நரகத்திற்குத் தான் செல்வீர்கள் என்றும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆயினும், அவைகளை வெளியரங்கமாக்க தேவன் அவர்தாமே அனுப்பிய இந்த செய்தியினாலேயல்லாமல் அவைகளின் பிடியிலிருந்து எந்தவொரு மாம்சமும் தப்பமுடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 இதை முழுவதும் புரிந்துகொள்வதற்காக இந்த செய்தியின் ஒவ்வொரு அம்சத்தையும் தியானியுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகம் முழுவதிலும் உள்ள தமது பிள்ளைகள் அனைவருக்கும் தம்மை வெளிப்படுத்துவாராக என்பதே அடியேனுடைய ஜெபம். அந்த கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் இருக்கிற அந்த பரிசுத்த ஆவிகள் தான், 2800 ஆண்டுகளுக்கு முன்பு, பாகால் (Baal), பாகால் செபூப் (Baal-Zebub), ஹாப்பி (Hâpi), ஒஸிரிஸ் (Osiris), சாபெக் (Sabek), பௌட்டோ (Bouto), தாகோன் (Dagon), மேம்மன் (Mammon), சுக்கோத்பெனாத் (Succoth-Benoth), நர்கல் (Nergal), ஆஷிமா (Ashima), நிப்ஹாஸ் (Nibkhaz), தர்தாக் (Tharthak), அத்ரம்மெலெக்கு (Adrammelech), ... என அழைக்கப்பட்டன.
30 ஆனால் இன்று, அந்த விழுந்துபோன தூதர்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றன. பாகால் செபூப் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றது. ஒஸிரிஸ் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றது. சாபெக் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றது. பௌட்டோ இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றது. தாகோன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றது. மேம்மன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றது. அத்ரம்மெலெக்கு இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றது. மேலும் அனைத்து சபைகளும் தங்களது தெய்வத்தை கொட்டை எழுத்தில் தேவன் (capital "g") என எழுதுகின்றன. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் தானியேல் 12:8-10-ன் அறியமுடியாத மொழி அவைகளைத் திரைநீக்கி காண்பித்துவிட்டது.
31 மார்மொன்கள் (Mormons) பற்றி உங்களுக்குத் தெரியுமா? தனது கைகளிலும் கால்களிலும் ஆணியரைந்த வடுக்களுடன் ஜோசப் ஸ்மித்துக்கு தோன்றிய அந்த மனிதனின் பெயர் என்ன? அவன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டான். எகிப்தில் ஆரம்பிக்கப்பட்ட ரோசிகுரூசிய சகோதரத்துவத்தின் மாபெரும் தலைவனின் பெயர் என்ன? அவனும் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான்.
32 இந்த செய்தி மிக ஆழமானது. மேலும் இந்த தெய்வங்களின் அனைத்து மேடைகளும் இன்று சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. தானியேல் 12:8 முதல் 10 வரையின் பிரகாரமான மத்தேயு 25:6-ன் இந்த செய்தியினாலேயன்றி ஒருவரும் அவைகளை வேறுபடுத்தி காணவோ அவைகளின் பிடியிலிருந்து தப்பவோ முடியாது. கேட்கிறதற்கு காதுகள் உள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்!
--:--
--:--