Kacou 33 (Kc.33) : எஸ்தர் புத்தகத்தின் மீதான வெளிப்பாடு
(2004 ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான் - ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1தாங்கள் யூதரல்லாதபோதிலும், தாங்களே வெளிப்படுத்துதல் 11:3-ன் நிறைவேறுதல் என்று சொல்ல, அனைத்து தேசங்களிலிருந்தும், ஜனங்கள் எழும்பினது போலவே, அந்த அதே பிரகாரம், அவர்கள் தான் மத்தேயு 25:6 என உரிமைகோருகிற சில ஜனங்களை, ஒவ்வொரு தேசத்திலும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் இயேசு கிறிஸ்து, "நான் சொல்லுகிற வார்த்தைகளே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளாக இருக்கிறது" என்றார். அங்கே மத்தேயு 25:6-ன் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் இருப்பார்கள், ஆனால் அவர்களிடமிருந்து அந்த உண்மையான ஒருவன் தன்னையே வேறுபடுத்திக் காட்டுவான்! ...
2அற்புதங்களையும் சுகமளித்தல்களையும், நாங்கள் எல்லோரும் செய்கிறோம், ஆனால் அவர்களுடைய ஜீவியம், அவர்களுடைய கடந்தகால வாழ்கை கூட, ஒரு செய்தியாளன் என்பதற்கு சாட்சியளிக்கிறதா? அவர்கள் ஒரு அதிகாரப்பூர்வமான அழைப்பைப் பெற்றிருக்கிறார்களா? அவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டு தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? ... அவர்கள் குடிக்காமல், புகை பிடிக்காமல் அல்லது தங்கள் ஊழியத்திற்கு முன்னர் அல்லது திருமணத்திற்கு முன்னர் பெண்களுடன் சயனிக்காமல் இருந்துள்ளனரா? முழு வேதாகமமும் அவர்களது ஊழியத்தை உறுதிப்படுத்துகிறதா? அவர்களது செய்தி கூறுவது தான் என்ன? நீங்கள் பார்க்கிறீர்களா?
3இந்த அதே வழியில், அநேக பேய்த்தன அபிஷேகங்களுடன் தாங்கள் தான் நடுராத்திரி சத்தம் என அநேகர் உரிமை கோருகின்றனர். ஆனால், ஒரு அழைப்பையோ, ஒரு பணிநியமனத்தையோ, நாம் இதுவரை அறியாத ஒன்றை அறிவிக்கிறதான ஒரு செய்தியையோ கொண்டுள்ள ஒருவனையும் அவர்களுக்குள்ளே நான் இதுவரை கண்டதில்லை. அவர்கள் அனைவரும் சர்ப்பங்களே, மேலும் அவர்கள் தங்கள் நாட்டின் எல்லைக்கு அப்பால் செல்ல மாட்டார்கள். அவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளாக இருப்பதால், அவர்கள் தங்கள் தாயகத்தில் மட்டும் தீர்க்கதரிசிகள் என அங்கீகரிக்கப்படுகிறார்கள். மாம்சத்திலும் ஆவியிலும் கெட்டுப்போன, ஒன்றுமற்ற ஜனங்கள், உலகப்பற்று மற்றும் அறியாமையின் பலிபீடத்தின்மேல் தங்கள் ஆத்துமாக்களை பலியாக்கின ஜனங்களாக இருக்கிறார்கள்; நரகம் அவர்களை பின்தொடர்கிறது.
4இருப்பினும், உண்மையான ஒன்று வேறுபடுத்தி காட்டப்படும்படிக்கு, நாங்கள் நடுராத்திரியில் இருக்கிறோம் என்று சொல்கிற சில மத்தேயு 25:6-கள் அங்கே இருக்கவேண்டியதாக உள்ளன. பின்னர், போராட்டங்களுக்கு மத்தியிலும் இது உலகம் முழுவதும் பரவும், ஏனெனில் தேவனிடமிருந்து வந்த ஒரு செய்தி மனிதர்களால் ஒருபோதும் அங்கீகரிக்கப்பட்டது கிடையாது.
5ஆனால் 1 இராஜாக்கள் 17-ல் அந்த பிரன்ஹாமிஸ்டுகள், அற்புதங்களினிமித்தமே வில்லியம் பிரான்ஹாமை விசுவாசித்தனர் என்பதை நாம் காண்கிறோம். பாப்டிஸ்டு மற்றும் பெந்தெகொஸ்தே காகங்களுக்குப் பிறகு, இந்த விபச்சார விதவையாம் பிரன்ஹாமிஸ்டுகளை காண்கிறோம். இந்த விதவை அற்புதங்களைக் கண்டபோது, வசனம் 24-ல் அவள்: "இப்பொழுது நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து புறப்படுகிற யெகோவாவின் வார்த்தையெல்லாம் சத்தியம் என்றும், இதனால் அறிந்திருக்கிறேன்." என்றாள்.
6ஆனால் 2 இராஜாக்கள் 4-ல், இந்த சூனேமியாள் எலிசா யார் என்னும் வெளிப்பாட்டை கொண்டவளாக இருந்தாள் மேலும் அந்த அற்புதத்திற்கு முன்னரே அவள் அவனை ஏற்றுக்கொண்டாள். ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தில்: “நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்ற இந்த சூனேமியாளை நாம் காணலாம் ... காரியம் இப்படியிருக்கிற போதிலும், "விசுவாசிப்பதற்காக அதன் உறுதிப்படுத்தப்படுதலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்" என்று சொல்கிற சில பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர்களை நான் காண்கிறேன். அது மத்தேயு 12:38-ஆக இருக்கிறது.
7அவர்கள் அந்த பரிசேயருடைய கொள்ளுப் பேரன்கள் தான். பூமியானது சாத்தானின் கரத்தில் இருக்கிறதினால், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இல்லாத போது சில தேவகுமாரர்களுக்கு சபைகளை வழிநடத்துவது அல்லது ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மரித்ததற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு சபை தேவனுடைய சித்தத்தில் இருப்பதென்பது, கடினமான காரியம் அல்லாத பட்சத்தில் அது கூடாத காரியம் என்று நான் உங்களுக்கு கூறி இருக்கிறேன்.
8நல்லது. எஸ்தர் புத்தகத்திற்கு முன் ரூத் புத்தகத்தைக் பார்க்கலாம். வேதாகமத்தின் எல்லா புத்தகங்களும் ரூத் புத்தகத்திலுள்ளது போன்று அடையாளச்சின்னங்களைக் கொண்டிருக்கின்றன: நகோமி, அது அப்போஸ்தலர்களுடைய காலத்து திருச்சபையாக இருக்கிறது. தேவன் இஸ்ரவேலை விட்டு விலகினார், அப்பொழுது அங்கே வார்த்தையின் ஒரு பஞ்சம் உண்டானது, அவள் புறத்தேசங்களுக்கு சென்றாள். அங்கே, அவளது கணவன், அப்போஸ்தலருக்கு அடையாளமானவன், மரித்தான். அந்த விதவையின் விசுவாசத்தை அவளது மகன்களான ஏழு தூதர்கள் நிலைநிருத்திக் கொண்டுவந்தார்கள்; இறுதியில் அவள் மூலமாக வரவேண்டியது தான் ஒரு புத்தியுள்ள கன்னிகையான ரூத்தும் ஒரு புத்தியில்லாத கன்னிகையான ஒர்பாளும் ...
9இப்பொழுது எஸ்தரின் புத்தகத்தை எடுத்ததுக்கொள்ளலாம் ... புறஜாதிகளின் திருச்சபையின் 7-வது காலத்தில், ஏழு பரலோக தூதர்களின் வேலைக்குப் பிறகு, அவர்கள் தான் ஏழு அதிபதிகள். நீங்கள் பார்க்கிறீர்களா? அங்கே பரலோகத்தில் இராஜாவின் முகத்தை தரிசிக்கிற ஏழு அதிபதிகள் உள்ளனர்: [கர்ஷேனா (Carshena), ஷேத்தார் (Shethar), அத்மாதா (Admatha), தர்ஷீஸ் (Tarshish), மேரேஸ் (Meres), மர்சேனா (Marsena) மற்றும் மெமுகான் (Memucan)].
10பின்பு பூமியிலே ஏழு பிரதானிகள்: [புவுல் (Paul), ஐரேனியஸ் (Irenaeus), மார்ட்டீன் (Martin), கொலம்பன் (Columban), மார்ட்டீன் லூதர் (Martin Luther), ஜான் வெஸ்லி (John Wesley) மற்றும் வில்லியம் பிரன்ஹாம் (William Branham)], இவர்களே திருச்சபையினுடைய ஏழு காலங்களின் பூமிக்குரிய தூதர்கள். பிரதானிகள் பெண்கள் சார்பாக உள்ளவர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? எனவே, ஏழாவது தேவதூதன், அதுவே எலியாவின் ஆவி, அது மெமுகான் ஆகும், அவன் ஒரு அரசாணையை, நடுராத்திரி சத்தத்தை பிரகடனம் செய்ய காட்சியில் வருகிறான்.
11இராஜாவின் முகத்தை, அதாவது தேவனை தரிசிக்கிற ஏழு அதிபதிகள் அங்கே பரலோகத்தில் உள்ளனர்; இங்கே பூமியில் ஏழு பிரதானிகள் ராணியான, கிறிஸ்துவின் மணவாட்டியுடன் உள்ளனர். ஆனால் அதற்குப் பின்னும், அதாவது பூமியிலுள்ள ஏழாவது பிரதானியின் வேலைக்குப் பிறகும், எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழவில்லை.
12பின்னர், யேகாய் என்ற 8-வது பிரதானி பூமியில் காட்சிக்கு வருவார். அவன் ஒரு சத்தத்தை, ஒரு அரசாணையை பிறப்பிப்பான். மத்தேயு 25:6-ல் உள்ளதைப் போல், இந்த அரசாணை பூமியின் அனைத்து மாகாணங்களின் கன்னிப் பெண்களை அழைக்கிறது. மேலும் பிரதானி என்ன சொல்கிறானோ அதனோடு கூட புத்தியுள்ளவர்கள் தரித்திருப்பார்கள். சகோதர சகோதரிகளே, யேகாய் வழியாக தேவன் கொடுக்க பிரியப்பட்டது எதுவோ அதற்கு வெளியே எவராவது பிரசங்கிக்கப்போகிற உண்மையான இரகசியங்கள், சரியான வெளிப்பாடுகள் ஒன்றும் ஒரு பொருட்டல்ல, அவைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் சிலர் அங்கே இருப்பார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. சகோதரர்களே, நீங்கள் எச்சரிக்கப்படவில்லை என்று நீங்கள் சொல்லக்கூடாது.
13ஆனபடியால் ஏழாவது பரலோக தூதனான மெமுகானின் அரசாணை, மத்தேயு 25:6-ன் சத்தமாக இருந்து, பூமியில் ஒரு எட்டாவது பிரதானியான, யேகாயின் நடத்துதலின் கீழ், கன்னிகைகளை வெளியே அழைக்கிறது. இது, கர்த்தர் உரைக்கிறதாவது! வசனம் 9-ல் வஸ்தியும் கூட தனது செல்வத்தை வெளிக்காண்பித்து, "எங்களுக்கு செய்தி உண்டு, எங்களுக்கு ஏவால்ட் ஃபிராங்க் இருக்கிறார், நாங்கள் பிரன்ஹாமின் பிள்ளைகளைக் கொண்டிருக்கிறோம் ... எங்களுக்கு நடுராத்திரி சத்தம் தேவையில்லை! எல்லாவற்றையும் பிரன்ஹாம் வெளிப்படுத்தியிருக்கிறார், எங்களுக்கு செய்திப் புத்தகங்கள் இருக்கின்றன." என்கிறாள். அவர்கள் தான் வஸ்தியின் விருந்தில் உள்ள ஆமான்கள். வஸ்தியின் உருதியும் பிழையும், அது அவளது விருந்தில் இருந்த ஆமான் தான்.
14ஆனால் எலியாவின் ஆவியான 7-வது பரலோகதூதன், மெமுகான் [Memucan - 7 எழுத்துக்கள்], வேலையை தொடருகிறான், மத்தேயு 25:6-ன் புத்தியுள்ள கன்னிகைகள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள் ... எஸ்தர் 2:15. ஆனால்! ... ஒரு சிறிய யேகாய் [காக்குவ் (Kacou) போன்று 5 எழுத்துக்கள்: கிருபை (grace)] ஏற்றவேளைக்கு அங்கே இருந்தான். அரசாணை திட்டமிடப் பட்டிருக்கவில்லை, எஸ்தர் திட்டமிடப் பட்டிருக்கவில்லை, யேகாய் திட்டமிடப் பட்டிருக்கவில்லை ஆனால் கிருபை தான் அதை செய்தது. யேகாய், ஒரு எட்டாவது நபர் ஆனால் எழு பரலோக தூதர்களில் ஒருவனல்ல, பூமியிலிருக்கும் ஏழு பிரதானிகளில் ஒருவனல்ல, தாவீது போலவே, ஒரு எட்டாவதானவன், ஏழுபேர்களில் ஒருவனல்ல. ஓ புத்தியில்லாத பிரன்ஹாமிஸ்டுகளே, நீங்கள் ஏன் அதை புரிந்து கொள்ளவில்லை?
15ஏழு பிரதானிகளால் யேகாய் சூழப்பட்டிருந்தது போல, சுத்திகரிப்புக்காக இராஜ அரண்மனையின் தாதிமாரான ஏழு கன்னிகைகளால் எஸ்தர் சூழப்பட்டிருக்கிறதை கவனியுங்கள். அவர்கள் ஏழு காலங்களின் ஏழு கன்னிகைகளாக உள்ளனர். அந்த ஏழு பிரதானிகளும் ஏழு திருச்சபை-காலங்களின் பூமிக்குரிய ஏழு செய்தியாளர்களுமாக இருக்கின்றனர்.
16எஸ்தரின் சுத்திகரிப்பை நாம் பார்க்கலாம், அது தானியேல் 12:10-ன் ஒரு வகையாக இருக்கிறது. வெள்ளைப்போளத் தைலம், சுகந்தவர்க்கங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்ட இந்த சுத்திகரிப்பு பன்னிரண்டு மாதங்கள் நீடிக்கிறதாக உள்ளது. இந்த பொருட்களின் அர்த்தம் சுத்திகரிப்பின் ஆழத்தை காட்டுகிறது. திருச்சபையின் சுத்திகரிப்புக்காக கர்த்தர் இயேசுவின் பிறப்பின் போது சாஸ்திரிகள் வெள்ளைப் போளத்தை காணிக்கையாக செலுத்தினர்.