Kacou 34 (Kc.34) : அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்
(2004 மே 9, ஞாயிறு லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1இந்த காலை வேளையில், நான் ஞானஸ்நானம் பற்றி பேச விரும்புகிறேன். ஞானஸ்நானம் என்பது முக்கிய ஒழுங்கின் ஒரு அமைப்பு. அப்போஸ்தலர் 8: 36-38-ல் அப்போஸ்தலர் 16:30-33ல் காணப்படுவதை போன்று ஒவ்வொரு மனிதனும் விசுவாசித்து, பாவத்திலிருந்து பிரிக்கப்படுவதற்க்கு ஒப்புக்கொண்ட மாத்திரத்திலே உடனடியாக ஞானஸ்நானம் பெற வேண்டும். மத்தேயு 28: 19-20 ல், அவ்விதமாக "முதலில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள், பிறகு அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள் " என்கிறார்.
2ஞானஸ்நான வகுப்புகள் ஒரு மனித நிறுவனமாகும், மேலும் இந்த வகுப்புகள் நல்லதாக இருந்தாலும், ஒவ்வொரு மனித நிறுவனத்திற்கு பின்னால் ஒரு பிசாசு இருக்கின்றது என்று நாம் அறிவோம். தேவன் எதை நிறுவவில்லையோ, அது அர்த்தமுள்ளதாக இருந்தாலும், அதை செய்ய வேண்டாம்! வார்த்தையின் எல்லைக்குள் தங்கியிருங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
3தெளிப்பு ஞானஸ்நானத்தைப் பற்றி பார்க்கும் பொழுது, பேரரசர் கான்ஸ்டன்டைன் தன்னை ஒரு கிறிஸ்தவன் என நினைத்துக்கொண்டான், ஆனால் ஞானஸ்நானம் பெற மறுத்துவிட்டான். அவனது மரணத்திற்கு முன்பு, கர்த்தராகிய இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடத்திலே யோர்தானுக்கு அக்கரையில் ஞானஸ்நானம் கொடுக்கும்படி அங்கு கொண்டு போகும்படியாக கேட்டுக்கொண்டான். அவர்கள் செல்லும் வழியில், அவர் இறந்து கொண்டிருந்தார் மற்றும் அவர் மரிக்கும் தருவாயில் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அது மே 22, 337 அன்று மதியம் நடந்தது. பின்னர் இந்த சந்தர்ப்பங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு தெளிப்பதாக முடிவு செய்யப்பட்டது, மேலும் அது "மருத்துவ ஞானஸ்நானம்" என அழைக்கப்பட்டது.
4இப்பொழுது மத்தேயு 28: 19-20 வாசிக்கலாம்... மத்தேயு 28: 19-20 ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளை சொன்னபின்பு, அவர் : காத்திருங்கள் என்று சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ! லூக்கா 24:49 மற்றும் அப்போஸ்தலர் 1: 4 அதை கூறுகிறது! ஏன்? ஏனெனில் அவர்கள் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தின் வெளிப்பாட்டை பெற வேண்டியிருந்தது, ஏனெனில், சாத்தானும் பிதா குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியாக இருக்கிறான்.
5நாம் யோவான் 8:38 வாசிக்கலாம் : " நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார். மற்றும் வசனம் 44 கூறுகிறது, "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்..." உங்களால் பார்க்கமுடிகிறதா? தேவன் பிதாவாக இருக்கிறார், சாத்தானும் பிதாவாக இருக்கிறான். நாம் யோவான் 17:12 வாசிப்போம். இயேசு குமாரனாக இருக்கிறார், அதாவது சொல்ல வேண்டுமானால் தேவன் மாம்சமானார், மற்றும் யூதாசும் குமாரனாக இருக்கிறான், சாத்தான் மாம்சமானான்.
62 கொரிந்தியர் 11:14 சொல்கிறபடி, சாத்தான் ஒளியின் தூதனாக, அதாவது பரிசுத்த ஆவியாக மாறுவேடம் தரித்துக் கொண்டு வருவான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யூதாஸ் ஸ்காரியோத்தும் ஒரே வயதினர், அவர்கள் இருவரும் அருகருகே நடந்தார்கள், அவர்கள் அதே நாளில் மரித்தார்கள், இருவரும் மரத்திலே தொங்க விடப்பட்டு இறந்தார்கள். இரண்டு பலிகள். ஒன்று தேவனிடத்திலிருந்தும் மற்றொன்று சாத்தானிடமிருந்தும் வந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
7பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு எழுந்து நின்று, அவர்களை நோக்கி: "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்." என்றான்.அதை அவன் எல்லா அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்கள் முன்னிலையில் கூறினான். ஏனெனில் மத்தேயு 16: 17-19 ன் படியாக ; அவன், பேதுருவே பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோள்களை கொண்டிருந்தான்.
8பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியை அங்கு (நாமங்கள்) என்று இல்லாத போது அவைகளை எப்படி நாமம் என்று ஒருவர் சொல்லலாம் ? யாராவது ஒருவர் "நிறுவனத்தின் பொது மேலாளரின் நாமத்தில்" என்று ஒரு காசோலையின் மேல் எழுத முடியுமா? இப்பொழுது கர்த்தருடைய வார்த்தையினாலே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமமானது இயேசு கிறிஸ்து மறுபுறத்தில் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமமானது யூதாஸ் ஸ்காரியோத் அதாவது இன்றைய கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள் உள்பட எல்லா வற்றிக்கும் உடைய இயேசு கிறிஸ்து . [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
9இருப்பினும் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடுகிறதாவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானமானது : "... உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ள யாவருக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் அழைக்கும் வரை உண்டாயிருக்கிறது" திருத்துவ ஞானஸ்நானம் பெறுவதற்கு இடம் எங்கே இருக்கிறது? தேவன் இன்னும் அழைத்துக் கொண்டிருக்கின்றாரா? ஆம் என்றால், பிறகு ஞானஸ்நானம் எப்பொழுதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ளது.
10வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலும் இந்த பட்டங்களில் எவரும் ஞானஸ்நானம் பெறவில்லை அப்படி இருக்கும் போது எல்லா ஞானாஸ்நானமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இருக்கின்றது. அப்போஸ்தலர் 2: 37-41, அப்போஸ்தலர் 19: 1-7, அப்போஸ்தலர் 10: 44-48, அப்போஸ்தலர் 8: 14-16, முதலியன ... நம்முடைய வாதங்களை ஒதுக்கி வைத்து, வேதாகமம் கூறுவதோடு நம்மை ஒழுங்குபடுத்துவது சிறந்தது.
11திரித்துவ ஞானஸ்நானம் என்பது பலமதவழிபாட்டு முறைகளின் நடைமுறை ஆகும். திருத்துவ ஞானஸ்நானத்தை நிர்வகிக்கும் எந்த ஒரு சபையும் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவனை கொண்ட ஒரு பல மத வழிபாட்டு சபை. இது ஒரு பல தெய்வ வழிப்பாடு. அப்போஸ்தலர் 19: 1-7 ன் பிரகாரமாக நீங்கள் மறுபடியுமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுத்தாக வேண்டும். ஆனால் இப்போது கவனியுங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பதால் இது சரியான ஞானஸ்நானம் என்று பொருள் அல்ல.
12நல்லது! ஜனங்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசிக்கு வெளியே தேவனுடைய சித்தத்தில் இருப்பது கூடாத காரியம். "யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்". என்று எழுதியிருக்கிறது. யோசபாத் கூறினதாவது, "யெகோவாவை விசுவாசியுங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது நீங்கள் செழிப்பீர்கள் என்றான்". தீர்க்கதரிசிகளுக்கு விசேஷ கவனம் செலுத்தும்படி தேவன் பரிந்துரைக்கிறார்.
131 நாளாகமம் 16: 21-22-ல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு, நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார். சாமுவேலைப் போல, உயிர் வாழும் தீர்க்கதரிசியை நிராகரிப்பது தேவனை நிராகரிப்பதாகும். அப்படியென்றால், ஏப்ரல் 24, 1993 அன்று தேவன் என்னை நியமித்திருந்தால், நான் பிரசங்கிக்கும் இந்த செய்தியை நிராகரிக்கின்ற எவரும், நரகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் மற்றும் அவர்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியை கொண்டிருப்பதில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
14ஒரு சபையோடு நாங்கள் ஒருபோதும் கூட்டு வைத்துக் கொள்ள மாட்டோம் என்பதை அறியுங்கள். கூட்டு வைத்துக் கொள்ளவதற்கான விவாதம் என்பது அதன் அனைத்து வடிவங்களிலும் மூடப்பட்டுள்ளது. இது எஸ்றா 4 போல் நமக்கு எதிராக தந்திரமாக சாத்தானே செயல்படுகிறான். அவர்களே இந்த செய்தியின் சன்பல்லாத் மற்றும் டோபிஜாவாக இருக்கிறார்கள். அவர்கள் நம்மை நேசித்தால், அவர்கள் நம்மை விட்டு விலகி இருக்கட்டும்! நம்மோடு கூட்டிச் சேர்க்காத எவரும் சிதறிப்போகிறார்கள்!
15நல்லது! யோவான் 6: 47-70-ஐப் பற்றி நான் இன்று பிரசங்கிக்க விரும்பினேன், ஆனால் இந்த பொருளின் பேரில் ஒரு தீர்க்கதரிசன வெளிப்பாட்டை பிரசங்கிக்க நான் வழிநடத்தப்பட்டேன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
16நன்றி, அப்போஸ்தலர் 2: 37-38-ல் நம்முடைய வேதாகமத்தை எடுத்துக்கொள்ளலாம்: "இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ள யாவருக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் அழைக்கும் வரை உண்டாயிருக்கிறது" ஆமேன்!
17நாங்கள் வெவ்வேறு இடங்களில் பிரசங்கிக்க நின்றோம் இடத்திலே, பிரன்ஹாமிஸ்டுகள் அதாவது (நாம் நடுராத்திரியில் இருக்கையில் வில்லியம் பிரான்ஹாமின் செய்தியை அதன் தூய்மையில் இன்னுமாக பின் பற்றி கொண்டிருப்பவர்கள் ) நம்மை எதிர்த்து பாப்டிஸ்டுகள், பெந்தேகோஸ்தேயினர்கள், அசம்பிலீஸ் ஆஃப் காட் மற்றும் மற்றவர்களை போன்று போராட்டத்தை போராடுகின்றனர். அவர்களை போன்று பிரன்ஹாமிஸ்டுகள் அஞ்ஞானிகளாக இருக்கின்றனர். ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில், அவர்கள் கலப்பின ஸ்திரீயாகவும் ஒரே இராணுவ டிரக்கில் கத்தோலிக்கர்களோடு உட்கார்ந்திருந்தாள், அதினுடைய ஓட்டுனர் சாத்தானாக இருந்தான்.
18இப்போது, 1993, ஏப்ரல் 24 அன்று எனக்கு கிடைத்த வெளிப்பாட்டின் படி, பரிசுத்த ஆவியானவர் இன்று மனிதகுலத்திற்குச் கூறுகிறதாவது. தேசங்களின் சபை யோவான் ஸ்நானகனுடன் துவங்கியது அது மனந்திரும்புதலின் ஞானஸ்நானமாக இருந்தது. பிறகு ஒரு நேரம் வந்தது அது பாவமன்னிப்பிற்கென்ற ஞானஸ்நானமாக இருந்தது. பின்னர், பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், மார்ட்டின் லூதருடன் நீதிமானாக்கப்படுதலுக்கான ஞானஸ்நானம் பெற மற்றொரு வேளை வந்தது; முதல் ரோமன் துன்புறுத்தல்கள் மறுமலர்ச்சிக்கான ஞானஸ்நானமாக வேறொரு வேளையில் அது வந்தது;
19பிற்பாடு மற்றொரு வேளை மீண்டும் வந்தது அது புத்திர சுவிகாரத்தின் ஞானஸ்நானமாக இருந்தது, பின்னர் ஜான் வெஸ்லி உடன் பரிசுத்தமாக்கப்படுதலின் ஞானஸ்நானம் வந்தது, மற்றொரு முறை பெந்தேகோஸ்த்துடன் மறு மீளாக்கம் பற்றிய ஞானஸ்நானம் வந்தது மற்றொரு முறை வில்லியம் பிரான்ஹாம் உடன் திரும்ப அளிக்கப்படுவதற்கான ஞானஸ்நானம் வந்தது மேலும் இப்போது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு உடன் மீட்டளிக்கப்படுவதற்கான ஞானஸ்நானம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
20இதற்கு புறம்பாக, மற்ற எல்லா ஞானஸ்நானமும் அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் பெற்று இருந்தாலும் அல்லது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் நாமத்தில் மூழ்கியதன் மூலம் பெற்று இருந்தாலும் அது தவறு. மேலும் தேவன் தலைமுறை தலைமுறையினரிடமிருந்து வகுக்கப்பட்ட அவருடைய இரட்சிப்பின் திட்டமாக இருக்கின்றது, மற்றும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வெளிப்பாட்டின் மூலமாக அதை விசுவாசித்து கடைப்பிடிப்பார்கள், மத்தேயு 16:19, பிரகாரமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசன வெளிப்பாட்டின் மீது அவரது திருச்சபையை கட்டினார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
21மார்டின் லூதர் ஞானஸ்நானம் கொடுத்த போது, அது நீதிமானாக்கப்படுதலுக்காக இருந்தது அவருடைய செய்தி நீதிமானாக்கப்படுதலின் செய்தி. வில்லியம் பிரான்ஹாம் ஞானஸ்நானம் கொடுத்த போது, அது திரும்ப அளிக்கப்படுதலுக்காக இருந்தது. எனெனில் திருச்சபையின் திரும்ப அளிக்கப்படுவதற்க்கு அது ஒரு செய்தியைக் கொண்டிருந்தார். மேலும் இன்று முழு பூமியின் மீது தேவன் அஙகீகரித்து எற்றுக் கொள்ளுகிற ஒரே ஞானஸ்நானம், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படுகிற மீட்டளிக்கப்படுதலுக்கான ஞானஸ்நானமாக இருக்கின்றது எனெனில் மீட்டளிக்கப்படுதலுக்கான செய்தியானது இன்று பிரசங்கிக்கப்படுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
22ஆனால் கடந்த தலைமுறையில், தேவன் தங்களை நம்பிக் கொடுத்த செய்தியின்படி ஞானஸ்நானங்கள் கொடுக்கப்பட்டது என்ற வெளிப்பாட்டை செய்தியாளர்கள் அறியாதிருந்தார்கள். யோவான் ஸ்நானகனுக்கு மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம், ஏனெனில் அவர் மனந்திரும்புதலுக்காக ஒரு செய்தியை பிரசங்கித்தார். அப்போஸ்தலர்களுக்கு பாவ மன்னிப்பிற்கான ஞானஸ்நானம், ஏனெனில் பாவமன்னிப்பிற்கென்று ஒரு செய்தியை அறிவித்தார்கள்.
23மார்ட்டின் லூதருக்கு நீதிமானாக்கப்படுதலுக்கான ஞானஸ்நானம் ஏனெனில் அவர் நீதிமானாக்கப்படுதலின் செய்தியை பிரசங்கித்ததார். ஜான் வெஸ்லிக்கு பரிசுத்தமாக்கப்படுதலின் ஞானஸ்நானம் ஏனெனில் அவர் பரிசுத்தமாக்கப்படுதலின் செய்தியை பிரசங்கித்தார் வில்லியம் பிரான்ஹாமின் திரும்பளிக்கப்படுதலுக்கான ஞானஸ்நானம், ஏனெனில் அவர் திரும்ப அளிக்கப்படுதலுக்கான செய்தியை பிரசங்கித்தார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சபை மனந்திரும்பியதால் இன்றும் அது மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானமாக இருக்க முடியாது.
24பாவத்திற்க்கான மன்னிப்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையின் மேல் நிறைவேற்றப்பட்டது. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது, மேலும் இன்று நீதிமானாக்கப்படுதலுக்கான ஞானஸ்நானம் கொடுக்க முடியாது. ஆனால் இன்று நாம், சபையானது தன்னுடைய ஆதி நிலைக்கு மிட்டளிக்கப்படுகிறதான யுகத்தில் உள்ள கட்டத்தில் உள்ளோம், மேலும் இன்று முழு பூமியின் மேலும் தேவன் ஏற்றுக்கொள்கிற ஞானஸ்நானம் அது மிட்டளிப்பிற்கான ஞானஸ்நானம்.
25ஒரு நாளிலே அவர் சபையை எடுத்துக் கொள்ளும் படியாக வரும் வரை வெளிப்பாட்டின் மூலமாக தேவன் ஒரு தலைமுறை முதல் தலைமுறையாக, ஒரு காலம் முதல் காலமாக, ஒரு தூதன் முதல் தூதன் வரைக்கும் வெளிப்பாட்டின் மூலம் வெளிப்படுத்துகிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
26வெளிப்படுத்துதல் 1 ல் ஏழு பொன் விளக்குகளுக்கு நடுவே நடக்கிறவர் என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு காலம் முதல் இன்னொரு காலத்திற்கு நடக்கிறார் அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்துகிறார், மேலும் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் வெளிப்பாட்டை பின்பற்றுவார்கள் ஏன்? ஏனெனில் அவர் தன்னுடைய திருச்சபையை வெளிப்பாட்டின் மேல் கட்டுவேன் என்று தம்முடைய சீஷர்களிடம், பிலிப்பு செசரியாவின் பட்டணத்தின் அருகில் கூறினார்.
27இருப்பினும், பெந்தேகோஸ்தினுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் ஞானஸ்நானம் பிரன்ஹாமிஸ்டுகளால் ஏற்றுக் கொண்டபிறகும், நடுராத்திரி சத்தத்தில் மறுபடியுமாக பெற வேண்டும், நாம் ஏன் பிரன்ஹாமிஸ்டுகளின் ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது? ஒரே மணி வேளையில் இரண்டு சுவிசேஷம் அல்லது இரண்டு ஞானஸ்நானம் இருக்கின்றதா? இல்லை!
28யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுக்கும் போது, அது மனந்திரும்புதலுக்கு பிறகு அப்போஸ்தலர்கள் பாவ மன்னிப்புக்கு ஞானஸ்நானம் கொடுத்தனர் அதிலே மனந்திரும்புதல் உள்ளடங்கியுள்ளது. பின்னர் மார்ட்டின் லூதர் நீதிமான்களாக்கப்படுவதற்காக ஞானஸ்நானம் கொடுத்த போது அதிலே மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் அடங்கியுள்ளது மற்றும் ஜான் வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுக்கும் பொழுது அதிலே மனந்திரும்புதல், பாவமன்னிப்பு மற்றும் நீதிமானாக்கப்படுதல் அடங்கியுள்ளது மற்றும் வில்லியம் பிரான்ஹாம் திரும்ப அளிக்கப்படுவதற்காக ஞானஸ்நானம் கொடுக்கும் பொழுது அதிலே மீதமுள்ள யாவும் அடங்கியுள்ளது, ஆனால் வர போகிற மீட்டளிக்கப்படுதல் அதில் இல்லை.
29இன்று அது மீட்டளிப்பின் ஞானஸ்நானம் மற்றும் அதிலே மீதமுள்ள யாவும் அடங்கியிருக்கிறது, வில்லியம் பிரான்ஹாமின் திரும்ப அளிக்கப்படுதல் உட்பட எல்லாவற்றையும் அடங்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்]. இது தூய உண்மை. ஒருவர் பெற்றுள்ள செய்திக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டும்.
30ஒருவர் ஞானஸ்நானத்தின் மூலமாக தன்னுடைய மணி வேளையின் செய்திக்குள்ளாக நுழைகிறார். அது மரணத் திரைக்கு அப்பால் , நித்திரையாக இருக்கும் பரிசுத்தவான்கள் . அப்போஸ்தலர்களின் காலத்தில் மனந்திரும்புதலின் ஞானஸ்நானம் போதுமானதாக இருந்ததா ? இல்லை! இயேசு கிறிஸ்துவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானன் முலமாக ஏற்கனவே அப்பொல்லோ மனம் திரும்புதலுக்கான ஞானஸ்நானம் பெற்று இருந்தாலும் அப்போஸ்தலர் 19: 1-7 படி மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டும். இருப்பினும் அது ஒரே காலமும், அதே ஜனங்களாக இருந்தனர் ஆனால் இரண்டு வெவ்வேறு செய்திகள், ஆகவே இரண்டு வெவ்வேறு ஞானஸ்நானம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
31அப்படியிருக்க, அர்பணிப்பிற்கும் அது அதே விதம். சாயங்காய நேரத்திற்கு நீங்கள் அர்ப்பணிக்கப்பட்டிருந்தால், நாம் நடுராத்திரியில் இருக்கும்போது நீங்கள் மறுபடியுமாக அர்ப்பணிக்கப்பட வேண்டும். சாயங்கால வேளையில் ஒரு ஊழிக்காரருடைய அர்பணிப்பு நடுராத்திரியில் செல்லுபடியாகாது.
32சாயங்கால வேளையிலே, மோசேயோடு உள்ள யூதர்கள் சிவந்த சமுத்திரத்தில் ஞானஸ்நானம் பெற்றனர் அதன் பிறகு யோர்தானில் யோசுவாவுடன் பெற்றனர். ஆனால் நேபோ மலையில் தேவன் அவனிடத்தில் கானானை காட்டியபோது, மோசே வரப்போகிற தண்ணிர் ஞானஸ்நானத்தை பார்க்கவில்லை. மோசேக்கு பிறகு யோசுவா ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து போகையில், அது மீட்டளிப்பிற்காக இருந்தது; அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள். அது மீட்டளிப்பின் ஞானஸ்நானம்.
33இதே போன்று எலியாவுக்குப் பிறகு, 2 இராஜாக்கள் 5:10 ல் யோர்தானில் ஏழு தடவை கழுவ வேண்டிய நாகமானுடைய ஞானஸ்நானத்தை வைத்து மீட்டளிப்பின் ஞானஸ்நானத்தை ஒரு அடையாளமாக எலிசா தெளிவாகக் கொடுத்தார். அங்கே நாம் சுத்திகரிப்பு பற்றிய செய்தியைக் காண்கிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் " ஆமேன் " என்கிறார்கள்]. திரும்ப அளிக்கப்படுதலின் ஞானஸ்நானத்தில் மிட்டளிக்கப்படுதல் சேர்க்கப்படவில்லை !
34ஆப்பிரிக்காவில் கவனித்தீர்களானால், எல்லா மாயவித்தைக்காரரும் வியாதியஸ்தர்களுக்காக ஒரு குளியலை மேற்கொள்வார்கள். அது வீட்டில் இருந்தால், முந்தைய நாளின் தண்ணீரை பயன்படுத்த மாட்டார்கள். ஒவ்வொரு மாந்திரீகவாதியும் தங்களுடைய ஞானஸ்நானத்தை நிர்வகிக்கிறார்கள். இது உண்மையான காரியத்தை பாவனை செய்வதாகும்! பிழிந்து சாறு எடுப்பதற்கு அல்லது நிவாரனி தயாரிப்பதற்க்கும் கூட, முந்தைய நாளின் தண்ணீரை பயன்படுத்த மாட்டார்கள். உங்களால் பார்க்கமுடிகிறதா?...
35இருப்பினும் இதை கவனிக்கவும்: மத்தேயு 25: 6 ல் உள்ள செய்தியாளன் சாயங்கால வேளையில் இருந்து வர வேண்டும், இல்லையெனில் அது வினோதமான தீ ஆக இருக்கும். அவர் அப்போஸ்தலர்களின் அரைகளிலிருந்து வரவேண்டும், அவர்களே, மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, வில்லியம் பிரன்ஹாம் ஆகியோர் இயேசுவினடத்திலிருந்து வருகிறார்கள் இல்லையெனில் அது வினோதமான தீ ஆகும், அவர் மாத்திரம் தனியாக ஞானஸ்நானம் பெற முடியாது அப்படியானால் யாரால் அவர் ஞானஸ்நானம் பெற முடியும்? மேல் அறையில், யார் அப்போஸ்தலர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது ? யார் யோவான் ஸ்நானகனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது? ஒரு செய்தியாளன் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாக இருக்கிறான் அதாவது தேவன் தாமே தன்னுடைய பண்பு கூறுகளை வெளிப்படுத்துவது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
36தேவனே அனைத்தையும் சிருஷ்டித்தவர், அவராலே அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டது, ஆகையால் " சிருஷ்டிக்கப்படாதது " என்று இல்லை மேலும் நீங்கள் அதை இந்த வழியில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தீர்க்கதரிசி செய்தியாளன் எல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுத்து அனைவரையும் பரிசுத்தப்படுதுகிறார், ஆனால் தமக்கு தாமே ஞானஸ்நானம் கொடுக்க அல்லது பரிசுத்தமாகிக் கொள்ள முடியாது. எனவே எல்லா பிரன்ஹாமிஸ்டுகளும் போதகர்கள் உள்பட,ஏவால்ட் ஃபிராங்க், பிரன்ஹாமின் குமாரர்கள் தாழ்மையோடு வந்து அங்கே அப்பொல்லோ பவுலிடம் செய்ததை போல மறுபடியுமாக அவர்களுடைய காலத்தில் வாழும் உயிர் வாழும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
37இந்த ஐஸ்வரிய பிரன்ஹாமிஸ்டுகளுக்கு தங்களுடைய பரிசேய பிதாக்களை போல பரலோக இராஜ்யத்திற்குள் நுழைவதற்குத் எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்களா ? யோவான் 6: 47-70 கூறுகிறது, "இது கடினமான உபதேசம், யார் இதைக் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்கள். நாங்கள் பிரன்ஹாமின் பிள்ளைகளாக இருக்க, இவன் எங்களை மறுபடியுமாக ஞானஸ்நானம் கொடுக்க விரும்புகிறான். மோசேவுடன் செங்கடலை கடந்த பிறகு, யோசுவா அதே ஜனங்களோடு யோர்தானைக் கடந்து சென்றார் என்பதை அந்த பிரன்ஹாமிஸ்டுகள் மறந்து விட்டனர். எலிசா யோர்தானை பிரித்து எலியாவைப் போல யோர்தானை கடந்தார் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். குருட்டுத்தன்மை மற்றும் பெருமை காரணமாக, ஞானஸ்நானமானது பிரன்ஹாமிஸ்ட்டுகளுக்கு மிகப்பெரிய தடையாகிவிட்டது.
38கத்தோலிக்கர்கள் மற்றும் சுவிசேஷ சபைகளிலுள்ள திரளான ஜனங்கள், அவர்கள் "நடுராத்திரி" என்ற வார்த்தையை கேட்ட பொழுது அவர்கள் இந்த செய்தியை எற்றுக்கொள்ள பயப்படுகிறார்கள். மேலும் வேறு சிலர் அதாவது பிரன்ஹாமிஸ்டுகள் மறுபடியுமாக ஞானஸ்நானம் எடுக்க பயப்படுகிறார்கள். இவர்கள் நியாதிபதிகள் 7: 1-7-ல் உள்ள குழுமங்கள். உங்களால் காணமுடிகிறதா? இது தான் கூர் நுனி கோபுரத்தில் மேலே உள்ள கதவு. மேலும் இது தான் "கர்த்தர் உரைக்கிறதாவது".
39ஞானமுள்ள, தங்கள் கண்களில் எச்சரிக்கையாகவும், அறிவார்ந்தவர்களாக இருப்பவர்கள் ஒருவரும் இதை புரிந்துகொள்வதில்லை, ஆனால் ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் . மேலும் பேதைகளாக இருந்தாலும் திசைக் கெட்டுப் போவதில்லை. வில்லியம் பிரான்ஹாம் இறந்தபின், பிரன்ஹாமிஸ்டுகள் பிரிந்து போகவில்லை என்றாலும், அவர்கள் மறுபடியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் மீட்டளிப்பிற்க்கென்று மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற வேண்டும். திரும்ப அளிக்கப்படுதல் அது வில்லியம் பிரான்ஹாம் உடன் இருந்தது.
40திரும்ப அளித்தல் என்றால், மறுபடியுமாக உறுதிப்படுத்துதல், பழுதுபார்த்தல். வலிமையை மீண்டும் பெறுதல், இப்போது, இது காக்குவ் பிலிப்புடன் மீட்டளிக்கப்படுதல். மீட்டளித்தல் என்றால் அதினுடைய : திருப்பிக் கொடுத்தல், முதல் நிலைக்கு திரும்ப வைத்தல், இதை நினைவில் வையுங்கள்: "தேவன் தந்தது எதுவோ அதை பிசாசு பறித்துக்கொண்டான், அவை இப்பொழுது உம்மிடத்தில் மீட்டளிக்கப்பட்டுள்ளது". உங்களால் பார்க்க முடிகிறதா? நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
41மனந்திரும்புதல், அதை மணவாட்டி யோவன் ஸ்நானகனிடமிருந்து பெற்றுக் கொண்டாள்; பாவமன்னிப்பு, அதை மணவாட்டி அப்போஸ்தலர்களிடமிருந்து பெற்றுக் கொண்டாள்; பிறகு நீதிமானாக்கப்படுதல், மறுபடியுமாக பிறத்தல், புத்திரசுவிகாரம், பரிசுத்தமாக்கப்படுதல், திரும்ப அளிக்கப்படுதல், இவை எல்லாவற்றையும் மணவாட்டி பெற்றுக் கொண்டு இப்போது அவள் மீட்டளிப்பின் படியில் இருக்கிறாள். மனிதன் ஜனங்களை நோக்கி பார்க்கிறான், தேவன் சபையை நோக்கி பார்க்கிறார் மேலும் உயிருள்ள தீர்க்கதரிசியே தேவனுடைய கண்களும் சிந்தையுமாக இருக்கிறார்.
42வெளிப்படுத்தல் 22: 6 கூறுகிறது அவர் தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்]. நற்செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவருமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக வேதாகமம் கூறுகிறது. மேலும் அந்த "அனைவரும் " என்பவையில் பிரன்ஹாமிஸ்டுகளும் கணக்கில் கொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
43நல்லது! இப்போது ஞானஸ்நானம் நிர்வகிப்பதற்காக, நீங்கள் ஞானஸ்நானம் பெறுபவரிடம் பாவங்களை அறிக்கையிட்ட பிறகு, நீங்கள் தண்ணீரில் இறங்கிய பிறகு, நீங்கள் கிழக்கை பார்த்தபடியாக இருக்க வேண்டும், மேலும் ஒரு சிறிய ஜெபத்திற்க்கு பிறகு அதாவது: "ஒ தேவனே! இந்தச் செய்தியில் நீர் எனக்குக் கொடுத்த இந்த கிருபையின் வல்லமையால், இந்த தண்ணீரில், இந்த சகோதரர் அல்லது சகோதரியுடைய வாழ்க்கையில் நடந்திருக்கக்கூடிய தோல்வி அல்லது அடைந்த தோல்விகளையும் சாபங்களும் என்றைக்கும் மறிப்பதாக, இந்த தண்ணிரை விட்டு வெளியே வரும் பொழுது, அவர் ஒரு புதிய சாட்சி மற்றும் பாவத்தின் மீதான வெற்றியோடு மற்றும் உம்முடைய உதவியுடன் ஒரு புதிய வாழ்க்கையோடு அவன் வீட்டிற்கும், மேலும் நமக்கும் ஆசீர்வாதமாக இருப்பானாக."...
44பிறகு இரண்டு அல்லது மூன்று முறை இந்த கேள்வியைக் கேளுங்கள்: "சகோதரரே, தேவனுக்கு முன்பாகவும் அவருடைய பரிசுத்த தூதர்களுக்கும் முன்பாகவும், மற்றும் மனிதர்களுக்கு முன்பாகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? முடிவாக, "இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் உங்களை மீட்டளிப்பிற்கென்று ஞானஸ்நானம் கொடுக்கிறேன்" [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்]. இது இயற்கையான தண்ணீரில் இருக்க வேண்டும், மேலும் முழு சரீரமும் மூழ்க வேண்டும். மேலும் முழுகுகிற நபர் தான் எந்த பாவத்தையும் மறைக்கவில்லை என்று திட்டவட்டமாக நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் சில பாவங்களைச் மறைத்திருந்தால், இப்பொழுது அதை அவர் சபைக்கு முன்பாக தான் அவர் அவைகளை அறிக்கை செய்வார்.
45ஞானஸ்நான தொட்டி மற்றும் நீச்சல் குளத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை. இயற்கையான தண்ணீராக இருக்க வேண்டும். அங்கு மீன்கள் இருக்க வேண்டும். ஞானஸ்நானம் ஒரு ஆசீர்வாதம் மற்றும் விடுதலைக்கான ஒரு கணம் என நான் நினைக்கிறேன். ஆனால் வெளிப்பாடு குறைப்பாட்டினால், அது வெறும் சம்பிரதாயமான ஒன்றாகி விட்டது.
46மக்கள் ஒன்று அல்லது இரண்டு முறை இஸ்லாமிய துறவிகள் அல்லது மாந்திரீக பூஜாரிகளிடத்தில் சென்று அவர்களிடம் ஒரு சில நிமிடங்கள் செலவு செய்திருப்பார்கள். இதை அவர்கள் ஞானஸ்நானத்தில் ஒப்புக்கொள்வார்கள், ஆனால் அவர்கள் பாப்டிஸ்டு, கத்தோலிக்க, பிரஸ்பிடேரியன்கள், மெத்தடிஸ்டுகள் மற்றும் அது போன்றவர்களிடம் சென்றதை அவர்கள் அறிக்கையிட மாட்டார்கள். அவர்கள் ஒரு இஸ்லாமிய துறவி அல்லது ஒரு பாரம்பரிய சூனிய பூஜாரி இடத்தில் இருந்தேன் என்று ஒப்பு கொள்வார்கள் ஆனால் அவர்கள் இந்த சுவிசேஷ தீர்க்கதரிசியின் இரவு ஜெபத்தில் இருந்த உண்மையை அறிக்கையிட மாட்டார்கள். உங்களால் பார்க்கமுடிகிறதா? அதன்பிறகு, அது அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசுவார்கள்.
47இந்த சுவிசேஷ தீர்க்கதரிசிகள் கையில் வேதாகமங்களோடு சூட்டுகளை அணிந்திருந்தாலும், தேவனின் பார்வையில், அவர்கள் இந்த பாரம்பரிய மாந்திரீக பூஜாரிகளை விட மோசமானவர்களாக உள்ளனர். பாரம்பரிய மாந்திரீக பூஜாரியும் மற்றும் சுவிசேஷக தீர்க்கதரிசியும், அது ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் இருக்கிறது. இது ஒரே காரியம் மற்றும் அதனுடைய நிழல். இது தான் உங்களுடைய மணி வேளையின் வெளிப்பாடானது கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
481993 ஆம் ஆண்டின் தரிசனத்தில், நான் கடல் மணலில் மேல் நின்று கொண்டு இருந்தேன், பின்னர் ஒரு கூர் நுனி கோபுரத்தின் மேல் இருந்தேன், பின்னர் கடல் மணலில் மற்றொரு இடத்திலே நின்றேன். இவை மூன்று வெவ்வேறு இடங்களாகும். தூதனும் ஆட்டுக்குட்டியானவரும் இறங்கி வருவதற்கு சற்று முன்பு, அங்கு ஒரு கிரகணம் ஏற்பட்டது, அவர்கள் கீழே வந்து கொண்டிருந்தபோது, பூமியானது மறுபடியுமாக பிரகாசிப்பிக்கப்பட்டது. இந்த கிரகணமானது இந்த நூற்றாண்டின் பிரதான ஆசாரியர்களால் சாயங்கால செய்தி சிலுவையில் அறையப்பட்டது... [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
49இந்த கூர்நுனி கோபுரத்தை மீண்டும் பார்க்கவும். நான் அதின் மேலே நின்று கொண்டிருந்தேன். ஜூனியர் ஜாக்சனின் சொப்பனத்தின் படி, வில்லியம் பிரான்ஹாம் மற்றும் பிரன்ஹாமிஸ்டு பிரசங்கிகள் கடந்து விட்டனர். இருப்பினும் , அவர் அந்த வெண்மையான குறிக்கல் மீது தங்கள் கண்களை வைக்கும் படியாக கேட்டுக் கொண்டார். அது ஒரு நாளிலே விளக்கப்படும் என்றும், ஒரு வகையான அறியாத மொழியாக இருக்கும் என்றார்.
50வெளிப்படுத்துதல் 2: 17 பிரகாரமாக வெண்மையான குறிக்கல் மீட்பின் இரகசியத்தைக் கொண்டிருக்கிறது, இதற்குப் பின்பாக தான் உயிர்த்தெழுதல் மற்றும் தேவனுடைய புத்திரர்களின் பிரத்தியட்சமாகுதல் காணப்படுகிறது. நான் அவனுக்கு மறைந்த மன்னா, அதாவது நடுராத்திரியின் சத்தம் மற்றும் வெண்மையான குறிக்கல்லின் செய்தியை கொடுப்பேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
51வெளிப்படுத்துதல் 5: 1-7-ல், ஆட்டுக்குட்டியானவரே மீட்பின் புஸ்தகத்தை எடுத்தார், ஏழு முத்திரைகளின் புஸ்தகம், வேதாகமத்தின் பண்புகள், ஜீவ புஸ்தகம் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகம். அதே புஸ்தகம். உங்களால் காணமுடிகிறதா? ஆட்டு குட்டியானவர் வெண்மையான குறிக்கல் மற்றும் அறியாத மொழியின் இரகசியத்தை வைத்திருந்தார். மோசேயும் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளும் இதை அறிந்திருக்கவில்லை. தாவீதும் ராஜாக்களும், ஆபிரகாமும் முற்பிதாக்களும் அதை அறியவில்லை. பவுலும் மற்றும் பேதுருவும் அதை அறியவில்லை. வில்லியம் பிரான்ஹாம் அதை அறியவில்லை. காபிரியேல் மற்றும் தூதர்கள் அதை அறியவில்லை, இருபத்தி நான்கு மூப்பர்களும் அதை அறியவில்லை, ஆனால் ஏப்ரல் 24, 1993 ன் ஆட்டுக்குட்டியும் மற்றும் வெளிப்படுத்தல் 5 அதை அறிந்தனர். ஆமேன்!
52கடலின் நண்டுகள் மற்றும் பாம்புகளிலிருந்து விலகி இது இரகசியமாக நடைப் பெருகிறது. வில்லியம் பிரான்ஹாம்: "இந்த நடுராத்திரி சத்தத்திற்காக நாம் ஆயத்தமாகுவோம். நீங்கள் நினையாத வேளையிலே அது வரும்! ஒரு சத்தம் உண்டாகும் அது அவ்விசுவாசிக்கின்ற உலகத்தின் மத்தியில் அல்ல அது ஒரு இரகசியமாக இருக்கும்.
53ஜூனியர் ஜாக்சன் சொப்பனத்தில், பிரன்ஹாமிஸ்டுகள் எல்லோரும் மோசேயோடுச் சென்ற இஸ்ரவேல் ஜனங்கள் மடிந்து போனது போன்று மடிந்து போனார்கள். ஆனால், நாம் தரிசனத்தின் முடிவிலே ஒரு கூட்டமானது அனைத்து சபைகளிலிருந்து இயற்க்கைக்கு மேப்பட்ட விசுவாசத்தோடு வந்ததைக் காண்கிறோம்: "நாங்கள் பார்க்கவும் இல்லை கேட்க்கவும் இல்லை ஆனால் நாங்கள் முழுவதையும் விசுவாசிக்கிறோம்." [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
54அனைத்து பிரன்ஹாமிஸ்டுகளும் பாலைவனத்தில் இறந்தனர். தேவன் அவர்களுக்காக பாம்புகளையும் வஞ்சகங்கன்களையும் அனுப்பினார். இங்கு உட்கார்ந்திருக்கும் மெத்தோடிஸ்டுகளும் இந்த காரியங்களை புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்கள் ஞானஸ்நானத்தை கூட புரிந்து கொள்ளவில்லை.
55அப்போஸ்தலர் 19-ல் அப்பொல்லோவின் சீடர்களை பவுல் சந்தித்தபோது, "நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான்..." ஆனால் "எந்த நாமத்தினால்" அல்ல ஆனால் எந்த ஞானஸ்நானம்"? அதற்கு அவர் : இல்லை, யோவான் மனந்திரும்புவதற்கு உங்களை ஞானஸ்நானம் கொடுத்தார், ஆனால் நாம் புதிய யுகத்தில் இருக்கிறோம், நாம் ஒரு புதிய கட்டத்தில் இருக்கிறோம், பாவ மன்னிப்பின் கட்டத்தில் இருக்கின்றோம்.
56பவுல் நாமத்தை பற்றிப் பேசவில்லை, ஆனால் ஒரு செய்தியைக் குறித்து பேசினார் ஏன் என்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்த மார்ட்டின் லூதர் மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோரின் ஞானஸ்நானத்தை குறித்து என்ன? உங்களால் பார்க்க முடிகிறதா? யோவானுடைய செய்தியும், யோவானின் ஞானஸ்நானமும் பரலோகத்திலிருந்து வந்தவை; ஆனால் பாவமன்னிப்பின் செய்தி தோன்றினவுடன், யோவானின் ஞானஸ்நானம், ஊழியம் மற்றும் அவன் ய செய்தி எல்லாம் மதிப்பற்றதானது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
57நாம் நித்தியத்தின் சிருஷ்டிகள். நான் தெரிந்துக் கொள்ளப்பட்டவனாகவும் தேவனின் குமாரனாகவும் இருந்தால், யோவானின் ஞானஸ்நானத்தில் நான் மனந்திரும்பி,அப்போஸ்தலர்களிடத்திலே நான் பாவமன்னிப்பை பெற்று, 1993 ஆம் வருடத்தில் அல்ல. பிரன்ஹாமிஸ்டுகளே, மெத்தடிஸ்டுகள் எதை பார்கிறார்களோ அதை நீங்கள் பார்க்கவில்லை ஆனால் நீங்கள் கழுகுகள் போல பாசாங்கு செய்கிறீர்கள்? ஆகையால் எந்த இன கழுகு?
58யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கிறிஸ்து தன்னை தாழ்த்தியிருந்தால், தேவனால் உண்டானவர்கள் யாராக இருந்தாலும் அதை மறுதலிக்க மாட்டார்கள்."நான் தகுதியற்றவன்" என்று நான் சொல்லவேண்டியதாக இருக்கள்: நீங்கள் "வேத வாக்கியங்கள் நிறைவேறுவதற்காக செய்யவேண்டியது அவசியம்! " என என்று நீங்கள் கூறவேண்டியது!" இது என் முன்னாள் போதகர் அல்லது ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் மற்றவர்கள், நம்மிடத்தில் ஞானஸ்நானம் பெறுவது ஒரு மரியாதையோ அல்லது தாழ்மையின் ஒரு அடையாளம் அல்ல?
59தன்னுடைய திரும்ப அளிக்கப்படுதலின் ஞானஸ்நானத்தை வைத்து கொண்டு ஒரு பிரன்ஹாமிஸ்டு எப்படி இங்கே வந்து உட்கார முடியும்? நீதிமானாக்கப்படுதலின் நேரத்தில் பாவ மன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் கொடுக்க முடியுமா? நீங்கள் பெற்றுக் கொண்ட செய்தியின் ஞானஸ்நானத்தை அந்த செய்தியினுடைய யுகத்தில் உள்ள பரிசுத்த ஆவியை பெரும் படியாக நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்]. ஞானஸ்நானம் என்பது வெறும் பெயர் மட்டுமே என்றால், ஒரு பெண் ஞானஸ்நானத்தை நிர்வகிக்க முடியும்.
60இப்போது வெளிப்படுத்துதல் 6-ஐ கவனியுங்கள், ஆட்டுக்குட்டியானது முதலாவது முத்திரையை திறந்தது... ஆட்டுக்குட்டியானது இரண்டாம் முத்திரையைத் திறந்தது... வெளிப்படுத்துதல் 8: 1 கூறுகிறது: ஆட்டுக்குட்டியானது ஏழாவது முத்திரையைத் திறந்தது. மற்றும் ஏப்ரல் 24, 1993, அது தூதனா? இல்லை! ஆனால் ஆட்டுக்குட்டி. வெளிப்படுத்துதல் 10 இவ்வாறு கூறுகிறது: மேகம் சூழ்ந்துள்ள ஒரு பலமுள்ள தேவதூதன் எங்கே நிற்கிறார்? தண்ணீர்களின் மேல். என்ன அணிந்திருந்தார்? ஒரு மேகம்! நடு ராத்திரியின் சத்தத்தை நிராகரித்தல் உங்கள் சொந்த கண்டனத்தை கையொப்பமிடுதலாகும். நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக, எலியா, தானியேல் மற்றும் அப்போஸ்தலர்களின் ஆவிகள் பூமியின் மேல் மறுபடியுமாக செயல்படுகின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்]. பெல்தெஷாத்சார் ராஜா முன் தானியேல் ஒரு அறியாத மொழியை விளக்கினார்.
61டாமி ஆஸ்போர்ன், பில்லி கிரஹாம் அல்லது யோங்கி சோ என்னிடம், "அவர் உங்களைப் பெரிதும் உபயோகிக்கப் போகிறார் என என் தேவன் சொல்கிறார்," என கூறினால் நான் ஒருபோதும் மக்களிடம், "ஓ! [தேவன்] என்னைப் பயன்படுத்துவார் என்று மகத்தான டாமி ஆஸ்போர்ன் என்று சொல்கிறார்." என்று ஒரு போதும் ஜனங்களிடம் சொல்ல மாட்டேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இத்தகைய ஆட்களிடம் "அமைதலாயிரு! "என்று சொன்னார். அப்பொழுது குறிச்சொல்லும் ஆவிகள் அமைதலாக இருந்தது. அவர்கள் அனைவரும் பிரன்ஹாமிஸ்டுகளும் கூட அதினாலே நிரப்பப்பட்டிருந்தனர்.
62வரங்கள், அற்புதங்கள் அல்லது ஒருவரின் மேல் உள்ள ஆவியின் வல்லமை ஒரு பொருட்டல்ல, அவருடைய மணி வேளையின் உயிர் வாழும் தீர்க்கதரிசியின் செய்தியை அவர் நிராகரித்தவுடன், அது ஒரு பிசாசு என்று அறிந்து கொள்ளுங்கள். அவன் மேல் இருக்கும் ஒரு பிசாசயே அவன் "பரிசுத்த ஆவியானவர்" என்று அழைக்கிறான் மற்றும் அவனுக்கு பயப்பட வேண்டாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமேன்!" என்கிறார்கள்].
63இப்போது பில்லி கிரகாம் பிரசங்கம் செய்யும் போது, அவர் சில எழுத்தாளர்கள், சில தத்துவஞானிகள், சில அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டுகிறார் ... அது அவருடைய எந்த தேவனென்றும் என்ன தேவன் என்ன இயேசு கிறிஸ்து என்றும் காட்டுகிறது ஏனெனில் 2 இராஜாக்கள் 17 எல்லாம் "சபைகள்" என அழைக்கப்படுகிறது மற்றும் பாகால் தெய்வங்களை பெயல் செபூல், கிமோஷ் நெர்கால், மற்றும் தாகோனுடைய அத்ரமலேக்குக்கும் இன்று இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறது.
64பாப்டிஸ்டுகளின் தேவன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார். மெத்தடிஸ்டுகளின் தேவன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார். பிரன்ஹாமிஸ்டுகளின் தேவன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார். அது தான் பிரச்சனை! அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். அனைத்து ஆவிகளையும் அவர்கள் பரிசுத்த ஆவியானவர் என்று அழைத்தார்கள். ஆனால் தேவன் அவரது நற்குணத்தால் தேவன் இந்த செய்தியை வெளிப்படுத்தல் 3:18 பிரதாரமாக கண்ணுக்கு களிக்கத்தை போன்று திட்டமிட்டுள்ளார். ஆகையால் நம்முடைய நிர்வானத்தின வெட்க்கமானது தோன்றாமல் இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் " ஆமேன்!" என்கிறார்கள்].
65கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் பரிசேயரும் சதுசேயரோடு சேர்ந்து ஊழியம் செய்ததை அவர்கள் காண்பிக்காமல் நாங்கள் அவர்களோடு ஒருபோதும் கூட்டுசேர மாட்டோம். நாங்கள் அவர்களுடைய மனமாற்றங்களை குறித்து அக்கறைக்கொள்வதில்லை. மத்தேயு 28:19 நீங்கள் சென்று சர்வதேச மாநாடுகளை ஒழுங்குபடுத்துங்கள் என கூறினதா? இல்லை!
66சில சகோதர சகோதரிகள் பொய் பரிசுத்த ஆவிகளைக் கொண்டு மனந்திரும்பினார்கள். சிலர் அந்நிய பாஷைகளில் பேசினார்கள், தீர்க்கதரிசனம் உரைத்தார்கள், சில ஆவியின் அக்கினி அபிஷேகம், அவைகளை உண்மையான பரிசுத்த ஆவி என்று விசுவாசித்தார்கள். உங்களால் பார்க்க முடிகிறதா? இந்த மத அமைப்புகள் அனைத்தும் 5 வது பரிமாணத்தில் உள்ளன, இது இழக்கப்பட்டவர்களின் பகுதி, வேதனையுள்ள பகுதி மற்றும் கொடுங்கனவு ஆகியவை ஆகும். அதனால்தான், ஒரு பிரசங்கத்தில், நீங்கள் பொய் என்று தெரிந்த ஒருவரை நீங்கள் மேற்கோள் காட்டக்கூடாது, அவர் முற்றிலும் உண்மையான விஷயங்களைச் சொன்னாலும் கூட.
67யூதா புத்தகம் புதிய ஏற்பாட்டின் புத்தகங்களில் ஏற்றுக்கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. பல சபைகள், குறிப்பாக கிழக்கு, அவரது செய்தி மிக தெளிவானதாக மற்றும் வலுவான செய்தியாக இருந்த போதிலும் அவரை நிராகரித்தது. கர்த்தராகிய இயேசுவின் சொந்த சகோதரனாேல அது எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அதை நிராகரித்தார்கள். ஏன்? ஏனென்றால், ஏனோக்கு புத்தகத்தின் 146-ம் வசனம், மோசேயின் வசனம் 9-ஐயும், பன்னிரண்டு மூப்பர்களின் விருப்பங்களையும் பற்றிய நூலில் அவர் மேற்கோள் காட்டினார். பழைய ஏற்பாட்டில் மூன்று புத்தகங்கள் இருக்கின்றன, ஆனால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
68டாமி ஆஸ்போர்ன், பில்லி கிரஹாம் அல்லது ஏவால்ட் ஃபிராங்க் கூறியதில் நல்ல விஷயங்களை நோக்க வேண்டாம். உங்கள் நேரத்தின் செய்தி என்னவென்பது பற்றிய எல்லைகளுக்குள் கண்டிப்பாக இருங்கள். போதிக்கும் போதும், அதைப் கவனமாக பின் தொடருங்கள். ஜலப்பிரளயத்திற்கு முன்னால் தேவனால் ஏவப்பட்ட புத்தகங்கள் இருந்தன, ஆனால் அவர்களில் எந்தவொரு புத்தகமும் ஜலப்பிரளயத்தை மேற்க்கொள்ளவில்லை. ஏனென்றால் உலகத்திற்கு அது அவசியம் இல்லை, எந்த ஒரு புத்தகமும், வேதாகமம் கூட ஆயிர வருட அரசாட்சியை கடக்காது, ஏனென்றால் அது நமக்கு அங்கே தேவையில்லை! உங்களால் பார்க்க முடிகிறதா? ஏனோக்கு புத்தகத்தின் மூலம் உக்குவிக்கப்படாவிட்டால் யூதாவினால் எழுத முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் " ஆமேன்!" என்கிறார்கள்].
69ஏப்ரல் 24, தரிசனத்திற்கு சற்று முன்பு எனக்கு ஒரு அனுபவம் இருந்தது... நான் வானத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருந்தேன். நான் அங்கு இருந்தேன், இன்று காலை நான் உங்களை பார்க்கிறதை போல் நான் மக்களை தெளிவாக பார்த்தேன். நான் அந்த இடத்தை கண்டு கொள்ள முடிந்தது.. நான் 15 செ.மீ. அரை விட்டத்தில் அளவு சுருக்கப்பட்ட காற்றை போல இருந்தேன்.
70நான் என் கண்களை இல்லாமல் பார்த்தேன் நிச்சயமாக ஒரு சத்தம் என்னிலிருந்து வெளியே வர முடிந்தது.. நான் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த நேரத்திலும் என்னால் சிந்திக்க முடிந்தது. நான் மனிதரையும் மரங்களையும் வீடுகளையும் பார்த்தேன். ஆனால் நான் எந்த ஆவி அல்லது எதையும் இயற்கைக்கு மேம்பட்டதை எதையும் பார்க்கவில்லை. அது எட்டு மணி நேரம் முழுவதும் பகல் வெளிச்சத்தில் இருந்தது, அது ஒரே ஒரு முறை நடந்தது, என் உயிருள் சரீரம் நகர்வதற்க்கு இருந்தது, நான் வீட்டிலே ஆவிக்குள்ளாயிருந்தேன், என் சரீரத்தில் அல்ல என்று கண்டேன்; வேறு ஒருவன் உட்பிரவேசித்ததை கண்டேன் அது மறுபடியும் நானாக இருக்கிறதைக் கண்டேன்.
71நான் இங்கு நினைத்தேன், அங்கு நான் நினைத்தேன். நான் மூன்று வெவ்வேறு உடல்களில் நினைத்தேன். நான் மூன்று வெவ்வேறு வடிவங்களில் இருந்தேன். அது மூன்று என்று தோன்றியது, அதன் பிறகு நான் முன்பு போலவே ஆனேன், இந்நாள் மட்டும் அது போன்று நான் அப்படி ஒருபோதும் பார்த்ததில்லை. அது ஆதியாகமம் 1: 26-27 மற்றும் ஆதியாகமம் 2 வசனங்கள் 7 மற்றும் 21 என நான் புரிந்துகொண்டேன். ஆமேன்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நாம் இப்போது எழுந்து நிற்கலாம்!