Kacou 35 (Kc.35) : மாற்கு 13:35 ன் நான்கு தீர்க்கதரிசன வேளைகள்
(2004 அகஸ்டு 8, ஞாயிரு காலை லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1மாற்கு 13:35: "...அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.." இது எசேக்கியேல் 1: 19 முதல் 21-ல் அதே விதானத்தில் செல்கிறது …
2இருந்த போதிலும் பரிபூரணமானது மனிதனின் வேலையாக இல்லாத போதும் மேலும் அவன் தயாராக இல்லை என்றாலும், அவன் " ஒரு குறிப்பிட்ட வருடத்தில் தான் எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும்..." என்று கேட்க விரும்புகிறான். அநேக தவறான தேதிகள் இருந்தாலும், ஆனால் அவன் இன்னும் அதிமாக விரும்புகிறான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவன் எல்லா இடங்களிலும், யாரிடத்திலும் அதை பெற விரும்புகிறான். இது வரையிலும் வேதாகமம் முழுவதிலும், தானியேலின் ஆவி மட்டுமே அது காலங்களின் கருத்தை கொண்டிருந்தது. இதை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை ஆராய்ந்து பாருங்கள். தானியேலைத் தவிர வேறு தீர்க்கதரிசி யாரும் இல்லை.
3தானியேல் தாமே முதன் முதலாக காலங்களின் மொழி நடையை உபயோகப்படுத்தினார்: "ஒரு நேரம், நேரங்கள் மற்றும் பாதி நேரம், காலங்களும் மற்றும் அரை நேரம்," மேலும் தானியேல் 7:12 கூறுகிறது. "... ஒரு காலம் மற்றும் ஒரு நேரம்" அது மேலும் லூயிஸ் செகண்ட் கூறுகிறதைப் போல "சில நேரம்" அல்ல. இதேபோல்: "2300 சாயங்காலங்கள் [ மற்றும்] "காலைகள்", 2300 பகல்கள் மற்றும் இரவுகள் அல்ல, ஆனால் நாம் எஸ்தர் ல் பார்பதை போன்று சாயங்காலங்கள் மற்றும் காலைகள். "70 வாரங்கள், 1260 நாட்கள், 1290 நாட்கள், 1335 நாட்கள், "இப்படியாக, தானியேல் 7: 12-ல் அது "ஒரு காலம் மற்றும் ஒரு நேரம் வரை" மேலும் அது " சில நேரம்" அல்ல.
4வெளிப்படுத்துதல் புத்தகத்தில் தேவனுடைய அனைத்து ஆவிகளின் முத்திரையை நீங்கள் கண்டீர்களா? அது தான்! ஆனால் இன்று, நான் ஒரு பொதுவான வழியில் எடுத்துக் கொள்ளப்படுதலை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வேதாகமத்தின்படி, அது சாயங்காலத்திலா, நடுராத்திரியிலா, சேவல் கூவும் நேரத்திலா அல்லது காலையிலா? இப்போது, சாயங்கால வேளை கடந்தது மற்றும் மாற்கு 13:35 கூறுகிற பிரகாரமாக காலை வேளையானது அது மோசே மற்றும் எலியாவோடு 144,000 யூதர்களை மீட்கும் வேளையாக வெளிப்படுத்துதல் 11 பிரகாரமாக இருக்கிறது…
5முதலாவதாக, மத்தேயு 25: 6 கூறுகிற பிரகாரமாக ஒரு செய்தி இருந்தது, பின்னர் பத்து கன்னிகைகள் எழுந்தார்கள்... பின்னர் அவர்கள் தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள், பிறகு சற்று நேரம் கழித்து, புத்தியில்லாத ஸ்திரீகள் நித்திரையடைந்தார்கள் ஆனால் அதே வேளையில் புத்தியுள்ளவர்கள் இன்னுமாக விழித்துக் கொண்டு வைராக்கியமாக இருந்தார்கள். பிறகு புத்தியில்லாத கன்னிகைகள் புத்தியுள்ள கன்னிகைகளிடம் : தண்ணிர்களின் மேல் நடக்கும் படியாக, மறையும் படியாகவும், நீங்கள் சாட்சிக் கொடுக்கின்ற அதியசயங்கள் நடப்பிக்கும் படியாக உங்களுடைய கைகளை எங்கள் மேல் வையுங்கள், என கேட்பார்கள்... பிறகு சில நேரம் கழித்து எடுத்துக் கொள்ளப்படுதல் வந்த போது, அது சேவல் கூவும் வேளையாக இருந்தது மேலும் புத்தியில்லாத கன்னிகைகளின் துன்புறுத்தல் சேவல் கூவும் வேளை மற்றும் காலை வேளைக்கு இடையே நடைப்பெற்றது.
6யாரோ ஒருவன் சாயங்கால வேளைக்கு முன்னே நின்று இருந்தால், அவன் சாயங்கால வேளையில் எடுத்துக் கொள்ளப்படுதலை காண்பான். ஆனால் யாரோ ஒருவன் சாயங்கால வேளையில் நின்று கொண்டு இருந்தால் அவன் நடுராத்திரியில் எடுத்துக் கொள்ளப்படுதலை காண்பான். ஆனால், கர்த்தருடைய நாமத்தினால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எடுத்துக் கொள்ளப்படுதலானது சேவல் கூவும் வேளையிலே நடக்கும். சேவல் கூவும் வேளைக்கு பின்பு, புத்தியில்லாத கன்னிகையின் துன்புறுத்துதல் இருக்கும் மேலும் காலை வேளையில் அது எலியாவும் மோசேவும் இஸ்ரவேலில் இருக்கும் வேளை. அங்கே யூதர்களின் சந்திப்பு இருக்கும். இயேசு கிறிஸ்து யூதர்களுக்கும் தம்மை வெளிப்படுத்தி மற்றும் 1,44,000 பேர்களும் இஸ்ரவேலில் இரட்சிக்கப்படுவார்கள்.
7நல்லது! வெளிப்படுத்துதல் 12:14 கூறுகிறதாவது, நடுராத்திரி சத்தம் ஒவ்வொரு நாட்டிலுள்ள தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்காக கொடுக்கப்பட்டது... ஒவ்வொரு தேசமும் ... ஒவ்வொரு தேசமும்.. பரிமானத்திற்க்குள்ளாக, சத்தத்தின் ஆவியை எடுத்துச் செல்வார்கள். நடுராத்திரி சத்தத்தின் செய்தி கடைசி நாட்டிற்கு சென்றதும், நடுராத்திரி சத்தத்தின் கடைசி தேர்ந்தெடுக்கப்பட்டவர் வரத் தொடங்கும் போது, பிறகு நடுராத்திரி சத்தத்தின் செய்தியாளன் காட்சியை விட்டு கடந்து செல்வார். பின்னர் நடுராத்திரி சத்தத்தின் காலம் கடந்து சென்று மேலும் மற்றொரு தீர்க்கதரிசியை தேவன் பூமியிலே ஒரு புதிய செய்தியோடு அனுப்புவார்
8உதாரணமாக, வெளிப்படுத்தல் 10 ஆம் அதிகாரத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக நீடிக்கப்படுகிறது. உதாரணமாக, 1 ஆம் வசனத்தில் பலமுள்ள தூதன் சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நின்று கொண்டிருக்கிறான், ஆனால் 8 ஆம் வசனத்தில் "சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய வெளிப்பாடு ஒரு பட்டம் போல அதாவது "சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருப்பவர் " போன்று உள்ளது.
9அறியாத மொழியின் வியாக்கியானத்தை நான் நினைத்து பார்க்கும் பொழுது அது ஒரு திறக்கப்பட்ட சிறிய புத்தகத்திலோ அல்லது ஏழு இடி முழக்கங்களிலோ இல்லை ஆனால். ஆட்டுக்குட்டியானவரே அதை வைத்திருந்தார்
10நல்லது! நாம் மாற்கு 13:35க்கு திரும்ப வருவோம், அங்கு நான்கு தீர்க்கதரிசன காலங்கள் உள்ளன: சாயங்காலம், நடுராத்திரி, சேவல் கூவும் வேளை அல்லது காலை. இருப்பினும் எடுத்துக்கொள்ளப்படுதல் சாயங்கால வேளையில் வரவில்லை அது 1993 இல் முடிவடைந்தது. மேலும் வில்லியம் பிரான்ஹாமின் மகிமை வாய்ந்த செய்தி புழுக்களின் இரக்கத்திலும் மற்ற அனைத்து விதமான தவளைகளிலும், வில்லியம் பிரான்ஹாம் செய்ததை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கின்றது. அவர்கள் பிரிந்து, குழுக்களாக, தொகுதிகளாக,..." கொள்கைளை" கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் கன்வென்ஷன் கூட்டங்களை பாருங்கள்!
11ஒரு கத்தோலிக்கன் பூமியின் மேல் உள்ள எந்த சபையிலும் பரிசுத்த இராபோஜனத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாப்டிஸ்டு பூமியின் மேல் உள்ள எந்த சபையிலும் பரிசுத்த இராபோஜனத்தை எடுத்துக் கொள்ளலாம்.ஒரு மெதடிஸ்டு பூமியின் மேல் உள்ள எந்த சபையிலும் பரிசுத்த இராபோஜனத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு கத்தோலிக்கன் பாப்டிஸ்டு சபையில் பரிசுத்த இராபோஜனத்தை எடுக்க முடியாது. ஒரு பாப்டிஸ்ட் பரிசுத்த இராபோஜனத்தை ஒரு மெத்தடிஸ்டு சபையில் அல்லது ஒரு அசம்பளிஸ் ஆப் காட் சபையில் எடுக்க முடியாது... மேலும் இந்த குழப்பம் எல்லாம் நரகத்திலிருந்து எழுந்து நரகத்திற்கு செல்வதாக வேதாகமம் கூறுகிறது. அது என்ன? கிறிஸ்தவம் சாத்தானுடைய ராஜ்யம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், இயேசு என்ற நாமத்தினால் உலகின் அனைத்து சபைகளிலும் சாத்தான் ஆராதிக்கப்படுகிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12பூமியின் மேல் உயிர் வாழும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை தவிர, நீங்கள் பூமியில் இயேசு என அழைக்கிற அனைத்தும் பிசாசு. நீங்கள் பரிசுத்த ஆவி என அழைக்கிற அனைத்தும் பிசாசுகளின் ஆவிகள். பிரன்ஹாமிஸ்டுகளை பாருங்கள், அவர்களுக்கு ஒரே விசுவாசம் இருக்காது, ஆனால் அதே கூட்டங்களில் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். அவர்கள் பிசாசின் புத்திரர்கள், அதனால் தான் அவர்களுடைய இதயம் அவர்களைத் கண்டித்து உணர்த்துவதில்லை. அவர்கள் ஒரு உயிர் வாழும் தீர்க்கதரிசியின்றி நடக்கிறார்கள், அவர்களுடைய இதயம் அவர்களைத் கண்டித்து உணர்த்தவில்லை. அது என்ன? வில்லியம் பிரான்ஹாமின் விசுவாசமுள்ளவர்கள் வெறுமனே சில பெந்தேகோஸ்தர்களாக இருந்தனர். மேலும் தேவன் அவர்களை பெந்தேதோஸ்தே குழந்தைகள் என அழைத்தார்.
13நல்லது! இப்பொழுது நாம் மாற்கு 13:35 ல் உள்ள இந்த நான்கு தீர்க்கதரிசன காலங்களுக்கு இப்போது திரும்புவோமாக. நான்கு தீர்க்கதரிசன வேளைகள் உள்ளன: அமெரிக்காவில் வில்லியம் பிரான்ஹாமுடன் ஒரு சாயங்கால வேளை, ஆப்பிரிக்காவில் தீர்க்கதரிசி காக்கோ பிலிப்பு உடன் நடுராத்திரி வேளை. ஏன்? மின்னலானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்கையில், மேலும் காலை வேளையில் மறுபடியும் எலியாவுடனும் மோசேயுடனும் இஸ்ரவேலில் வெளிச்சம் தோன்றும் முன்பு, அங்கே ஒரு ராத்திரி உண்டு. மேலும் அந்த ராத்திரி அது ஆப்பிரிக்கா. யாருக்கும் பாரபட்ச்சம் பார்க்காத தேவன் ஆபிரிக்காவில் ஒரு கருப்பு தீர்க்கதரிசியுடன் தன்னை வெளிப்படுத்த வேண்டும். எனவே இந்த கருப்பு தீர்க்கதரிசி முலமாக அன்றி ஒருவரும் இரட்சிக்க பட முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
14எனவே, துன்புறுத்துதலும், தேசங்களின் காலமும் காலை ஆறு மணியளவில் முடிவடைகிறது. இப்பொழுது மின்னலின் உவமையினால், மஞ்சள் நிறம் ஆசியாவில் இருக்கிறார்கள் என நாம் அறிவோம் மற்றும் உதித்து வரும் சூரியனை மஞ்சள் நிறமாகக் கொண்டுள்ளோம். பின்னர் ஐரோப்பா வருகிறது. ஐரோப்பாவில் சூரியன் வெள்ளையாகும். பின்னர் அமெரிக்கா வருகிறது, மாலை வருகிறது. அமெரிக்காவில் முதல் குடியிேயறினவர்கள் இந்தியர்கள், அது சிவந்த நிறம். சாயங்கால வேளையில் சூரியன் சிவப்பாக உள்ளது.
15மற்றும் சாயங்கால வேளை கழித்து, மத்தேயு 25: 6-ஐ வாசியுங்கள், கருப்பு இரவில் ஒரு சத்தம், ஆப்பிரிக்காவில் ஒரு சத்தம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நடுராத்திரி மற்றும் காலை வேளைக்கு இடையில், அங்கே இருப்பது யார் ? கருப்பு ஆபிரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நாம் யாரை காண்கிறோம்? மற்றும் அவர்களுடைய தோல் கருப்பும் வெள்ளையும் மாறுபடுகிறது அல்லவா? தேவன் பூமியின் அனைத்து இனங்களை உருவாக்கியவர், பூமியின் எல்லா இனங்களையும் தேவன் சந்திப்பார்.
16காலனித்துவ (Colonisation )காலத்தில், தென்னாபிரிக்காவிற்கு சென்று பெரும்பாலான ஜனக் கூட்டத்தினர் குடிபுகுந்தனர் என நாம் அறிவோம். வில்லியம் பிரன்ஹாம் தென் ஆப்பிரிக்காவிற்க்கு ஏன் சென்றார் என உங்களுக்கு புறிகிறதா? தென்னாப்பிரிக்காவில் ஒரு பெரிய வெள்ளை சமூதாம் உள்ளது.தேவன் யூதர்களின் தேசத்தில் இடைப்படும் பொழுது, புறஜாதி தேசமான சமாரியர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
17மத்தேயு 10: 5 மற்றும் 6-ஐ வாசியுங்கள். சாயங்கால வேளையில் தேவன் ஏன் அமெரிக்காவில் இனப் பிரிவினை மற்றும் தென்னாப்பிரிக்காவில் இனவெறியை அனுமதித்தார்? கறுப்பர்களுக்கு தங்களுடைய நேரம் இன்னும் வரவில்லை, ஏனெனில் விலகி இருக்க வேண்டியிருந்தது. இயேசு தம் சீஷர்களிடம், சமாரியரிடத்திலும் புறஜாதிகளிடத்திலும் பிரவேசியாதேயுங்கள் என்றார். ஆமென்!
18நல்லது! மத்தேயு 24:27,மாற்கு 13:35 மற்றும் வெளிப்படுத்துதல் 11 ன் பிரகாரமாக நாம் துல்லியமாக துவங்கலாம். அங்கு இருந்து இரட்சிப்பின் மற்றும் கறுப்பின மக்களின் வரலாறு தொடங்குகிறது, பிறகு எல்லா காரியமும் அங்கே பின்னே போகிறது. இப்போது இருக்கிற இந்த யூதயினம் நாடு கடத்தப்படுதலில் பிறந்தவர்களாக இல்லையென்றால், ஒருபோதும் சந்திக்கப்படாமல் இருந்திருப்பார்கள். அவர்களினிமித்தம், இரட்சிப்பின் வரலாறு அங்கு, எகிப்திலே, சேவல் கூவும் வேளையின் இறுதியில், முடிவடையும்.
19எபிரேயர்களுக்கு, பகல் என்பது ஆறு மணிக்கு ஆரம்பித்து பிறகு சேவல் வேளையில் முடிவடைகிறது. 24 மணி நேரம் நம்முடைய காலை 5 மணிக்கு ஒப்பாயிருக்கின்றது. இப்போதுங்கூட சேவல் கூவும் வேளையின் நிறம் என்ன? [ஆசிரியர் குறிப்பு : சில சகோதரர்கள் : "சாம்பல் (Ash) , சாம்பல் (Grey) வெண்மையான கருப்பு ... என்கிறார்கள்"] ஆமென்! கருப்பு ஆப்பிரிக்காவிற்கும் யூதர்களுக்கும் இடையே உள்ள தோல் நிறம் என்ன? [ஆசிரியர் குறிப்பு: சகோதரர்கள் சொல்கிறார்கள், "கலப்பினம்! வெண்மையான கருப்பு "] ஆம்! உண்மையில், இது கருப்பிலிருந்து வெள்ளைக்கு ஒரு மாறுபாடு தான் . நீங்கள் புரிந்துக் கொண்டதை நான் காண்கிறேன்.[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நல்லது! நாம் வேறு சில காரியத்திற்க்கு செல்லலாம்.
20சேவல் கூவும் வேளையில் என்ன நடக்கிறது? இயல்பாக, பெண்கள் எழுப்புவார்கள், ஆண்கள் அல்ல. இது தான் எழுப்புதல். ஆனால் வேதாகமத்தின் படி, சேவல் கூவும் வேளையில் எந்த பெண்கள் எழுப்புவார்கள் ? அது என்ன? இது தான் எடுத்துக் கொள்ளப்படுதல் ஏனெனில் காலையானது, எலியாவோடும் மோசேயோடும் இஸ்ரவேலில் வருவதாகும். சேவல் கூவும் வேளையில் துன்புறுத்தலில் எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறும். புத்தியுள்ள கன்னிகைகள் எழும்புவார்கள், புத்தியில்லாத கன்னிகைகள் விழிப்பார்கள். அவர்கள் எண்ணெக்காக நித்திரையிலிருந்து விழித்து, அதாவது ஆவியை கேட்பார்கள். புத்தியுள்ள கன்னிகைகள் நடுராத்திரியிலிருந்து நித்திரைக் கொள்ள மாட்டார்கள். நீதிமொழிகள் 31:15 சொல்கிறது, "குணசாலியான ஸ்திரீ இருட்டோடே எழுகிறாள் ". ஆமென்!
21மேலும் காலையில் இரண்டு மணியிலிருந்து, முதலாவது சேவல் கூவத் தொடங்குகின்றது… மற்றும் ஃப்ரெடெரிக் டி க்லெர்க், ஒரு வெள்ளை மனிதன் மற்றும் நெல்சன் மண்டேலா, ஒரு கருப்பினத்தவர், 1993 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அதே சமயத்தில் சர்வதேச சமூகத்துடன் கைகுலுக்கியிருந்தார்,இருவரும் ஒரே நேரத்தில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றபோது; அது நிறவெறியின் முடிவின் ஒரு நேரம். அவை அனைத்தும் ஆவிக்குரியவை.
22நல்லது! பிரசங்கிப்பதற்காக சகோதரிகளை தேவன் பயன்படுத்துவார் என நான் அர்த்தம் கொள்ளவில்லை! ஸ்திரீ, அதாவது சபை. மேலும் நான் தேவன் வெள்ளையர்களை விட கறுப்பர்களை அதிகம் பயன்படுத்த போகிறார் என்றும் அர்த்தம் கொள்ள இல்லை. ஆமென்!
23இஸ்லாமியர்களால் நடுராத்திரி சத்தத்தை புரிந்து கொள்ள முடியும், ஒரு பாப்டிஸ்டை விட சிறந்த முறையில் புரிந்து கொள்வார்கள், சில அக்கினி ஸ்தம்பம் புகைப்படங்களை வைத்திருக்கும் பிரன்ஹாமிஸ்டுகளை விட சிறந்த முறையில் புரிந்துக் கொள்வார்கள். ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவன் என்றால் அவர் எந்த ஒரு உருவபடத்தையும் கொண்டிருக்க முடியாது. நீங்கள் எப்போதாவது முஹம்மதுவின் பிரதிநிதித்துவத்தை பார்த்திருக்கிறீர்களா ? உபாகமம் 4:15 எப்படி விளக்குவீர்கள்? உங்களால் காண முடிகிறதா?
24நாம் இங்கே பிரசங்கிக்கின்ற இயேசு சபைகளில் பிரசங்கம் செய்யும் இயேசுவும் ஒன்று அல்ல என்று இஸ்லாமியர்கள் பார்ப்பார்கள். எந்த பெண் பாடகரும் அல்லது நற்செய்தியாளரும் இல்லையென அவர்கள் காணும்போது, கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு ஆகியோரின் தேவனை நாம் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள். மேலும் பரிசுத்த ஆவியின் வல்லமையால், ஒரு மணி நேரத்திற்குள், அவர்கள் பெரிய எண்ணிக்கையில் மாற்றப்படுவார்கள். உயர்ந்த ஆவிக்குரிய வெளிப்பாடுகள் அங்கு இருந்து துவங்கும். அது அப்படியே இருக்கும்!
25மரணம் வரை, ஒவ்வொரு நாளும் ஆவியை உணரவும்! உங்களுடைய மணி வேளையின் செய்தியை விசுவாசித்ததின் மகிழ்ச்சியை உணருங்கள்! உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை அடையாளம் கண்டுகொண்டதின் மகிழ்ச்சியை உணருங்கள்! பிரசங்கங்களுடன் ஒப்பிடுகையில், நாம் நடு ராத்திரியில் இல்லை, ஆனால் நாம் சேவல் கூவும் வேளையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கின்றோம். அங்கே வேறொரு ஆவிக்குரிய பங்கை, வித்தியாசத்தை கொண்டுவரும் . உங்களுடைய மணி வேளையின் செய்தியை விசுவாசித்ததால் ஆவியை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய மணி வேளையின் பேழையில் இருக்கிறீர்கள். ஒவ்வொரு தலைமுறையும் தனது காலத்தின் தீர்க்கதரிசியுடன் கடந்து செல்லும் போது, நீங்களும் உங்களுடைய காலத்தின் தீர்க்கதரிசியோடு கடந்துபோவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26இப்போது, இதை கவனிக்கவும்! சேவல் கூவும் வேளையின் போது, என்ன நடக்கிறது? பெண்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவார்கள், பின்பு தீ மூட்டுவார்கள். இப்போது, வீட்டை சுத்தம் செய்வது, அது எல்லா விதமான துய்மையற்ற காரியங்கள் மற்றும் ஆவிகளை சுத்தம் செய்தல், அப்போஸ்தலர்களுக்கு பிறகு முதன்முறையாக, வெளிப்படையான பாவ அறிக்கை திருச்சபைக்குத் திரும்பியது. தேவன் சேவல் கூவும் வேளையில் அவ்வளவாக இரட்ச்சிப்பது எண்ணிக்கையின் கருத்தானது காட்சியில் வரும். யூதா கோத்திரத்தார், 12000, ஆசீர் கோத்திரம்,12000, லேவி கோத்திரம்,12000 ... அங்கே சேவல் கூவுதல் இருக்கும்; எசேக்கியேல் 10 ல், கேருபீன் நின்று, கிழக்கு நோக்கிப் பார்த்தார் என்று நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்; நீங்கள் பார்க்கிறீர்களா ?
27இவ்வாறு கிழக்கிற்கு முன்னே, சாயங்கால வேளை, அமெரிக்கா, நடுராத்திரி வேளை, ஆப்பிரிக்கா, சேவல் கூட்டம், மக்ரெப், பிறகு காலையில், எலியா மற்றும் மோசே உடன் இஸ்ரேல் . இது தவறிழைக்காதது! ஏப்ரல் 24, 1993 ன் அழைப்பு மற்றும் நியமனத்தின் வல்லமையின் கீழ் நான் இவ்வாறு கூறுகிறேன், அது அவ்வாறே இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28எல்லா மதப் பிரிவுகளைக் காட்டிலும் மசூதிகளுக்கு முன்பாக சில முடக்குவாதங்கள், சில குருட்டு மக்கள், மற்றும் அனைத்து வகையான பலவீனங்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம்: அவர்கள் என்ன தேடுகிறார்கள்? இந்த இரகசியம் என்ன? அது சேவல் கூவும் வேளைக்காக காத்திருக்க அங்கு அவர்களை சர்வ வல்ல தேவன் வைத்திருக்கிறார். அப்போஸ்தலர் 3 ஆம் அதிகாரத்தை நினைவில் கொள்ளுங்கள்! தேவலாபத்தின் வாசலில் ஒரு முடக்குவாதமாக இருந்த ஒருவன் நடந்தபோது விசுவாசமுள்ளவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்திலிருந்து ஐந்து ஆயிரம் வரை உயர்ந்தது. நான் உங்களுக்கு சொல்கிறேன், சேவல் கூவும் வேளையில் உள்ள அற்புதங்களின் காற்று இன்றுவரை செய்யப்பட்டுள்ள எல்லாவற்றோடு ஒப்பிட முடியாது, நடுராத்திரி சத்தமே அதை வெளிப்படுத்துகிறது மற்றும் அறிமுகப்படுத்துகிறது.
29ஃபுலானி, எகிப்தியர்கள், மொறிடானியர்கள், மகரேபிஸ், இத்தியோபியர்கள், மதகஸ்கார்கள் இருக்கிறார்கள் ஆனால் மார்ட்டினிகர்கள் , ஹெய்டியர்கள், கருப்பு அமெரிக்கர்கள் ஆகிய அவர்கள் ஆப்பிரிக்கர்கள் ஆனால் இந்த தருணத்திலே தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் வெள்ளையர்களை போல சந்திக்கப்படுகிறார்கள். இதே போன்று வில்லியம் பிரன்ஹாம் காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளயர்கள் சந்திக்கப்பட்டனர். மற்றும் திருச்சபையின் இறுதி துன்புறுத்தல் துவங்கும் அந்த நேரத்தில் தேவன் அற்புதங்களோடு ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை எழுப்புவார் மற்றும் அவருடைய நேரத்தில் நாம் வேதாகமங்களின் போலி பதிப்புகளுக்கு செய்தது போல குர் ஆனை பகிரங்கமாக எரிப்பார்கள், அந்த நேரத்தில் முரண்பாட்டின் சத்தங்கள் இருக்கும் ஆனால் உண்மையான ஒன்று போலியிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும். ஆவிக்குரிய ஸ்திரத்தன்மை இனிமேலும் இருக்காது, ஏனென்றால் தேவன் நகர்ந்து விடுவார்.
30மேலும், ஓசியானியா கனடாவை விடவும் சிறியது, மேலும் அதன் மக்கள்தொகை நைஜீரியாவின் பாதி அளவும் தொட இல்லை. மேலும் தேவன் அங்கு ஒரு செயலை கொண்டிருந்தார் அது உலகில் மற்ற இடங்களை போல் தொடர்கிறது.
31கேள்விகள் மற்றும் பதில்களுக்கு முன்பாக இன்னொரு மையத்திற்க்கு வர விரும்புகிறேன். இது உங்கள் புரிதலில் இருந்து வெளியேற விரும்பும் புள்ளிகளில் ஒன்றாகும். ஆபிரிக்காவுக்கு வெளியே உள்ள கறுப்பர்கள் மற்றும் அடிமை வர்த்தகத்தில் நாடு கடத்தப்பட்டவர்கள் இந்த செய்தியை தங்கள் பங்கிற்குப் பெற்றுக் கொள்ள வேண்டும், ஏனெனில் தேவனின் பார்வையில், அவர்கள் கருப்பு ஆபிரிக்கர்கள். T.D. ஜாக்ஸ் ஒரு கருப்பு ஆப்பிரிக்கர். ஜெஸ்ஸி ஜாக்சன் ஒரு கருப்பு ஆபிரிக்கர்.
32அனைத்து கருப்பு அமெரிக்கர்கள் தேவனின் பார்வையில் ஆப்பிரிக்கர்கள் மற்றும் நடுராத்திரி சத்தம் மூலம், தேவன் அவன்களை சந்திக்கிறார். தேவன் அமெரிக்காவின் யூதர்களை சந்திக்க விரும்பினால், அது இஸ்ரவேலில் இருக்கும். தேவன் கருப்பு அமெரிக்கர்களை சந்திக்க விரும்பினால், அது ஆப்பிரிக்காவில் இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
33இது இனரீதியான பிரிவினையோ அல்லது இனவெறி அல்லது வேறு எந்த இனவாத முறையோ, நம்முடைய நன்மைக்காக எல்லாவற்றையும் அனுமதித்து, கட்டுப்படுத்துகிறது தேவன் என்பதை அறிவோம்.இனவெறி மற்றும் இன வேறுபாடு தேவனிடத்திலிருந்து வந்த நிறுவனங்கள் என்பதால், சமாரியர்கள் மற்றும் புறஜாதி ஜனங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் பங்கு கொள்ளக்கூடாது போல, கறுப்பர்களுக்கு வில்லியம் பிரான்ஹாம் உடன் பங்கு இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அதனால்தான் வெளிப்படுத்துதல் 5 ல்,இவை அனைத்தும்,வானத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும், பூமியிலும், தண்ணீரிலும் தண்ணீரினால் அவரை மகிமைப்படுத்துவதற்காக தங்கள் முகங்களில் விழுவார்கள்.
34கிறிஸ்துவ எத்தியோப்பியா முஸ்லீம் எரித்திரியாவில் இருந்து பிரிந்து 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுதந்திரம் வழங்கப்பட்டது. அது ஒரு அடையாளமாக இருக்கிறது! அப்போஸ்தலர் 8:26 முதல் 40 வரை நான் பிரசங்கிப்பேன். இப்பொழுது என்னை அனுப்பிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை பாடுவோம். அனைத்து உயிரினங்களையும் போலவே, அவரை மகிமைப்படுத்துங்கள், ஏனென்றால் அவர் மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக ஒரு ஆப்பிரிக்கரை எழுப்ப பாத்திரர்.