(2004 ஜூலை 18, ஞாயிற்றுக்கிழமை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரி காஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 இந்த போதனை ஏற்கனவே எங்காவது இருக்கிறதா, நான் அறியேன். நான் அதைப் வாசித்ததில்லை, அதைக் கேள்விப்பட்டதில்லை, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலுமென்ன, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தான், ஒரு ஊழியத்தின் அதிகாரப்பூர்வமான அனுபவம் காட்சிக்கு வரவேண்டும் என நான் நினைக்கிறேன்.
2 எசேக்கியேல், தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகியவை ஒரே ஆவி வெளிப்படுத்தியதாக இருக்கிறது. மேலும் அவற்றின் வியாக்கியானமானது வெளிப்பாட்டின் முடிசூட்டுதலாக மட்டுமே இருக்கமுடியும். அது உண்மையிலேயே ஒரு வெளிப்பாடாக இருந்தால் தான் அவ்விதமிருக்க முடியும். ஏனெனில் இன்று, ஜனங்கள் வெளிப்பாடு என்று அழைக்கிற அவைகள் மதிப்புமிக்க கண்டுபிடிப்புகள் மற்றும் வசனங்களின் ஒப்பீடுகள் மட்டுமே. எஸ்தரைப் போலவே, நமக்கும் அவர்கள் வெளிப்படுத்துகிற அனைத்தும் முக்கியமற்றதாம். ராஜாவின் பிரதானியான யேகாய் வழியாக, தேவன் நமக்குக் கொடுக்கப் பிரியப்பட்டது எதுவோ அதை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்வோம். எஸ்தர் 2:15-ன் படி அவர் தம்முடைய இராஜாதிபத்தியத்தினால் தேர்ந்தெடுத்த அவன் மூலம் நமக்கு வெளிப்படுத்த தேவனுக்கு பிரியப்பட்டது எதுவோ அதை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்வோம்.
3 நாம் தேவனுடைய முகத்தை தரிசிக்கிற நித்தியத்தின் சிருஷ்டிகள் அல்ல என்றாற்போல் பரலோகத்திற்குரிய காரியங்களை அறியாதவர்களாக இருந்தாலும், மாம்சத்துக்குரிய ஒன்றில் நாம் வைக்கப்பட்டிருக்கையில், பூமிக்குரிய காரியங்களை அறிந்தவர்களாக இருப்பது போல, என்றாவது ஓர்நாள், நாம் அழியாமைக்குள் வைக்கப்படும்போது, நித்தியத்தையும், அதைச் சார்ந்த அனைத்தையும் நாம் அறிந்துகொள்வோம். […]
4 இரட்சிப்பின் திட்டத்தின் நிறைவேறுதலானது, விரிவாக ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு சுருளைப் போல இருக்கிறது. தேவன் அதை திறக்கிறார், அதன் திறக்கப்படுதலும் நிறைவேறுதலும் நியமிக்கப்பட்ட நேரத்திலும் நிமிடங்களிலும் முடிவடையும்.
5 நல்லது ... எசேக்கியேல் யோவானைப் போல ஆவிக்குள்ளாக ஆனான். அப்போது, மோசே யாத்திராகமம் 19-வது அதிகாரத்தில் கண்டதைக் கண்டான். ஆனாலும், 1 இராஜாக்கள் 19:12-ல் எலியா கண்டதல்ல அது. ஒன்றாம் அதிகாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் வசனம் 4-ல், எசேக்கியேல் தூரத்தில் இருந்து பார்த்தான். வசனம் 26 மற்றும் 27-ல் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் தான், வசனம் 4-ல் உள்ள ஒளிரும் பித்தளை நிறமாக (சொகுசாவின் நிறம்) இருப்பது. இங்கே இருக்கிற இரண்டு செட்டைகள் பழைய மற்றும் புதிய உடன்படிக்கையை ஆதாரமாகக்கொண்ட ஒரு செய்தியாக இருக்கிறது, இடது செட்டையும் வலது செட்டையும். பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும். அவை ஒன்றையொன்று தழுவி, நான்கு சுவிசேஷங்களைப் போல ஒத்திருக்கிறது.
6 காரியம் இப்படியிருக்கிறபடியால், அது இரைச்சலோ அல்லது சத்தமோ பற்றிய காரியமல்ல, ஆனால் வெளிப்படுத்துதல் 8:13-ல் உள்ளது போல சத்தங்கள், அது: "... மீதமுள்ள எக்காள சத்தங்களை" பேசுகிறது. அந்த லூயீஸ் செகண்டு அதை கூறுகிறதில்லை. கேருபீன்கள் ஒன்றை இன்னொன்றின் பக்கமாக திருப்பாமல் அவைகள் புறப்பட்டுப்போனது. ஒவ்வொன்றும் அதன் ஊழியத்தையும், அதன் செய்தியையும், அதின் பாணியிலும், கொடுக்கப்பட்ட கட்டளையின்படியும் வெளிப்படுகளின் படியும் செய்தது. ஏனெனில் அவைகள் ஒரே பிரகாரமாக நடந்து கொள்ளமுடியாது, மேலும் மற்றவை எவ்விதமாக ஊழியம் செய்தது என்று பார்க்காது; அப்படி இல்லையெனில் அங்கே ஒரு ஏற்றத்தாழ்வு வந்திருக்கும். நீங்கள பார்க்கிறீர்களா? மனித முகத்தை கொண்டிருந்த லூதரால், ஞானஸ்நானத்தை பார்க்க முடியவில்லை... இருப்பினும், அவன் ஒரு கேருபீன் ஆக இருக்கிறான். அதனால் தான் அவன் சிங்கமுகத்தை கொண்டிருந்த பவுல் பக்கமாக திரும்பவில்லை, அவன் ஒரு திரித்துவ ஞானஸ்நானத்தை கொடுத்தான்.
7 ஆனால் எசேக்கியேல் 1-ல் ஜீவன்களின் வரிசை கிரமம் வெளிப்படுத்துதல் 4:7-ன் படியானதல்ல. ஆனாலும், வெளிப்படுத்துதல் 4:7-ல், அது யாத்திராகமமான சிங்கத்திற்குப் பொருந்துகிறது, பின்பு அது கன்றுக்கு ஒப்பான லேவியராகமத்துக்குப் பொருந்துகிறது, பின்னர் மனிதனின் முகத்திற்கு ஒப்பான எண்ணாகமத்துக்குப் பொருந்துகிறது, இறுதியாக, அது கழுகுக்கு ஒப்பான உபாகமத்துக்குப் பொருந்துகிறது. மத்தேயு 1-ஆம் அதிகாரம் கர்த்தராகிய இயேசுவின் வம்சாவளியினுடைய புத்தகமாக இதுப்பதுபோல, ஆதியாகமம் ஆதாமின் வம்சாவளியினுடைய புத்தகமாக இருக்கிறது. அது மத்தேயு - மாற்கு - லூக்கா - யோவான் ஆகியவையின் வரிசை கிரமத்திலும் கூட இருக்கிறது. கழுகு, வார்த்தையின் வெளிப்பாடாக இருக்கிறது.
8 வெளிப்படுத்துதல் 4:7-ல், அது முதலாவது செராபீன்கள் பற்றிய காரியமாக இருக்கிறது. ஆனால் அவை ஆதியாகமம் 3:3, ஏசாயா 6:1முதல் 7, எசேக்கியேல் 1 மற்றும் 10-ல் உள்ள அதே ஜீவன்களாக இருக்கின்றன. அவைகள் வெறுமனே தங்கள் ஊழியங்களை மாற்றியுள்ளன அவ்வளவுதான்... அது ஏழு சபைகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் ஏழு எக்காளங்களை முழக்கி, பிறகு ஏழு கலசங்களை ஊற்றுகிற தேவனுடைய ஏழு ஆவிகளை போல, அவைகளெல்லாம் ஒன்று தான். ஊழியங்களை மாற்றிக்கொள்கிற தேவனுடைய அதே ஏழு ஆவிகள். இது இருபத்தி நான்கு சிங்காசனங்களுக்கும் அதேதான். அதனால்தான் வெளிப்படுத்துதல் 19:5 ன் சத்தம் இருபத்தி நான்கு மூப்பர்களுடையதாக உள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா?
9 மேலும் வெளிப்படுத்துதல் 15:5 சாட்சியின் கூடாரமாகிய ஏதோ ஆலையத்தைப் பற்றி பேசுகிறது. ஏழு சபைகளும் ஏழு ஆலையங்களாக இருக்கின்றன என்பதையும், அவைகளின் பிரதிநிதித்துவம் பரலோகத்தில் உள்ளதையும், அவை ஒரே ஆலயத்தில் ஒன்றிணைக்கப்பட முடியும் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். சில கேருபீன்கள் அநேக வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டதை நம்மால் காண இயலும்; இங்கே ஆறு செட்டைகளைக் கொண்டுள்ளது, அதாவது கேருபீன்களின் மூன்று தன்மைகள் இங்கே செட்டைகளை கொண்டுள்ளது, மேலும் செட்டைகள் ஏதும் இல்லாத நான்காவது ஒரு தன்மையும் உள்ளது. ஆறு செட்டைகள், அது மூன்று கேருபீன்களை மூன்று தூதர்களை காட்டுகிறது மேலும் ஒரு முகம், அதனுடைய சரீரத்தில் செட்டைகள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஆமென்!
10 இப்போது, பழைய ஏற்பாட்டைப் பாருங்கள்: ஆதியாகமம் முதல் 2 சாமுவேல் வரை, அது சிங்கமாகும். 1 இராஜாக்கள் முதல் நெகேமியா வரை, இராஜாக்களின் அநேக பலிகளுடன் அது கன்று (calf) ஆக இக்கிறது. எஸ்தர் முதல் பிரசங்கி வரை அது மனிதனின் முகம். நீதிமொழியையும் பிரசங்கியையும் பாருங்கள், அது தேவனுடைய சார்பாக மனிதனின் ஞானமாக இருக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? உன்னத பாடல்கள் புத்தகம் மனித முகம் மற்றும் கழுகு முகம் இடையே பாலமாக உள்ளது.
11 உன்னத பாடல்களில் இருந்து மல்கியா வரை செல்கிறதான, தீர்க்கதரிசிகளின் பெயர்களைக் கொண்ட பதினேழு தீர்க்கதரிசன புத்தகங்கள் அங்கே தொடர்சியாக உள்ளன மேலும் அது கழுகு முகத்தின் காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அது என்ன? பழைய ஏற்பாட்டின் ஒரு முனை முதல் மறுமுனை வரை, தேவனுடைய சார்பாக தீர்க்கதரிசன ஆவியானது, காலத்துக்குரிய ஜீவன்களின் ஆளுகையின் கீழ் எழுதினதாக அது இருக்கிறது. மேலும் வெளிப்படுத்துதல் 22:6-ல் அவர் தேவன், தீர்க்கதரிசியின் ஆவியாக இருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. ஆமென்!
12 வெளிப்படுத்துதல் 14:6 முதல் 10 ல், மூன்று தூதர்கள் தான் இருக்கின்றனர், ஆனால் ஏழு திருச்சபைக் காலங்களை அதனுடைய ஏழு பரலோகதூதர்களுடன் அதில் நீங்கள் பார்க்க வேண்டும். 6-வது வசனம் சிங்க முகத்தை வெளிப்படுத்துகின்றவனான அப்போஸ்தலன் பவுலுடன் ஒத்துப்போகிறது, லூத்தர் 8-ம் வசனத்திலும், எலியாவின் ஆவி 9-ம் வசனத்திலும் உள்ளனர். பிறகு வசனம் 14 முதல் 19 வரை, நாம் மறுபடியும் ஏழு திருச்சபையின் காலங்களை காண்கிறோம், ஆனால் இரண்டு தூதர்கள் மட்டும் தான் உள்ளனர், ஆனால் அவர்களுக்கிடையே மற்ற ஐந்து தூதர்கள் இருக்கிறார்கள். ஆமென்!
13 வெளிப்படுத்துதல் 14 வசனம் 18-ல், அது தொடர்ந்தும் எலியாவின் ஆவியாக உள்ளது, அது வசனம் 9 முதல் 10 வரையில் உள்ளது போல, தேவனிடம்: "தேவனே என்னை அனுப்பும், என்னை அனுப்பும், பூமியில் என்னை வைய்யும்" என்று கூறுகிறது. அது கருக்கான அரிவாளாகிய அவன் தான், எலியாவின் ஆவி தான் அது. ஆமென்! பவுல் 14 ஆம் வசனத்தில் தோன்றும்போது, பூமியில் எந்த கட்டும் (bunch) இல்லை, அதாவது புறஜாதிகளுக்கு எந்த சபையும் இல்லை; ஆனால் காலங்களிள் முடிவில் எலியாவின் ஆவி வந்தபோது அங்கே ஆயிரக்கணக்காக இருப்பவைகளிலிருந்து நல்ல திராட்சைத் பழங்களை சேகரித்து வைக்கப்படவும் மீதமுள்ள அந்த அனைத்து கட்டுகளும் மத்தேயு 13:24 முதல் 30 வசனங்களின் படி சுட்டெரிக்கப்படவும் வேண்டும்.
14 எழுத்துப்பிரகாரமாக இக்காரியங்களை புரிந்துகொள்ள முடியுமா? முடியாது! யாத்திராகமம் 24:10-ல் கர்த்தராகிய இயேசுவின் பாதத்தின் கீழ் நீலக்கல்லிழைத்த வேலைப்பாடு என்ன? இது எசேக்கியேல் 1:26 மற்றும் எசேக்கியேல் 10:1 ன் சிங்காசனம் தான். சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துதல் 15:1-ல் உள்ளதைப் புரிந்து கொள்ளுவது பற்றி நாம் ஆச்சரியப்படுகிறோம், ஏனெனில் அது வெளிப்படுத்துதல் 20:11 போலவே ஒரு முழு பத்தியாக உள்ளது. இந்த முதல் வசனத்தில், ஏழு தூதர்கள் சில அறிவுறுத்தல்களைப் பெற்றனர், ஆணைமொழி எடுத்துக்கொண்டனர், நான்கு சேராபீன்களின் கரங்களிலிருந்து ஏழு வாதைகளையும் பெற்றார்கள்.
15 அரையிலே கட்டப்பட்ட பொற்கச்சையானது மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவமாக இருக்கிறது; மார்பிலே கட்டப்பட்ட பொற்கச்சையானது பணிக்கான ஆணைமொழி மற்றும் உச்ச நீதி அதிகாரத்திற்கானதுமாக இருக்கிறது. இது தெய்வீக நியாத்தீர்ப்புக்கு அல்லது அதை செயல்படுத்துவதற்கு ஆகும். ஆனால் வெளிப்படுத்துதல் 20-ல், நாம் மார்பருகே பொற்கச்சைகளை பெற்றபோது, யோவான் அதைக் காணவில்லை. ஆனால் பரலோகத்தில் நியாயம் தீர்ப்பது யார்? தீர்க்கதரிசிகள்! தீர்க்கதரிசிகள் புறஜாதிகளின் நியாயாதிபதிகளாக இருக்கின்றனர் மேலும் அவர்களை பின்பற்றுவோரும் அவர்களுடனேகூட நியாயந்தீர்ப்பார்கள். ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவனது காலத்திற்காக உள்ளான். ஆமென்!
16 1993-ல் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எப்படியாக நான் மூன்று வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டேன், ஆயினும் நான் ஒரே ஒரு நபர் தான். எனவே, அது உண்மையில் ஒரே ஒரு உயிரினத்தைப் பற்றின காரியம் தான். எசேக்கியேல் 10:20: "... அது நான் கண்ட அந்த ஜீவன் தானே..." என்று கூறுகிறது, மேலும் அது ஒருமையில் இருக்கிறது, அது நான்கு சக்கரங்கள் ஒரு சக்கரமாக இருக்குமாப்போல் உள்ளது.
17 அந்த நான்கு கேருபீன்களும் ஜீவனுள்ள திருச்சபையாம்; அதே போல் நான்கு சக்கரங்களும். நீங்கள் காண்கிறீர்களா? ஒன்றுக்குள் நான்கு! வெளிப்படுத்துதல் 6-ல், இருளின் சாம்ராஜ்ஜியம் துவங்குகையில், அந்த சாம்ராஜ்ஜியத்துக்கான நான்கு குதிரைகளை நாம் காணலாம். ஆமென்! ஆனால் ஆதியாகமம் 12-ன் படி அவர்கள் பூமியில் ஒன்றாக இருந்ததுபோல, ஆதியிலே பரலோகத்தில் அவர்கள் ஒன்றாக இருந்தனர். மேலும் 1 சாமுவேல் 28-ன் படி திரைக்கு அப்பால் அவர்கள் ஒன்றாக இருந்தனர். ஆனால் தேவன் பரலோகத்தில் அதை வேறுபிரித்தார், பூமியிலும் அதை தேவன் வேறுபிரித்தார். மேலும் லூக்கா 16:26 ன் படி, திரையின் மறுபக்கத்திலும் தேவன் அதை வேறுபிரித்தார். ஓர் நாள், அதன் பேரில் நான் பிரசங்கிப்பேன்.
18 சரி, இப்போது, எனக்கு கிடைத்த வெளிப்பாட்டை நான் உங்களுக்குத் தருகிறேன். ஆமென்! சிங்காசனம் நீலவைரக்கல்லுக்கு (sapphire stone) ஒப்பாகவும் நான்கு ஜீவன்கள் படிகப்பச்சை வைரக்கல்லாகவும் (chrysolite stone) இருக்கிறது என்று வேதாகமம் கூறுகிறது. என்னுடைய அகராதியில் சரிபார்க்கப்படுவதற்கு முன், சேப்பியர் (sapphire) கல் நீல நிறத்திலும், படிகப்பச்சை (chrysolite) கல் பச்சை நிறத்திலும் இருக்கும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். மேலும் பக்கங்கள் கிழிந்து இல்லாமல் போய்விட்ட எனது சிறிய அகராதி: சேப்பியர் என்பது (விலைமதிப்பற்ற கல், நீல நிறம் கொண்ட வைரக்கல்), படிகப்பச்சை (chrysolite) என்பது (கொஞ்சம் மதிப்பு கொண்ட கல், பச்சை கலந்த மஞ்சள் நிறம்) என்னும் இந்த அர்த்தங்களை கொடுக்கிறது. பரலோகத்தில் நீலநிறமும் பூமியில் படிகப்பச்சை நிறமுமாக இருக்கிறது. பாலைவனமாக இருப்பதால் சில பாலைவன நாடுகள் மஞ்சள் வண்ணம் கொண்டுள்ளன, அவைகள் இன்னதென்று நான் மறந்துவிட்டேன். தனது ஏழு குறியீட்டு நிறங்களின் காரணமாக வானவில்லுக்கும் அது அவ்விதமே. இவ்வாறு நீல நிறம் பரலோகமும், பச்சை நிறம் பூமியும், அதாவது பூமியிலே இருக்கிற ஜீவனுள்ள திருச்சபையுமாக இருக்கிறது. நடுராத்திரியில், தானியேல் 10:5 முதல் 6 ல், அந்த சரீரமானது படிகப்பச்சை போன்றுள்ளது, அது திருச்சபை உருவானதாகும். ஆமென்!
19 நான்கு ஜீவன்களும் பிரகாசிக்கிற வெண்கலத்தைப் போல இருந்தது, சக்கரங்களும் அப்படியே இருந்தது. அசுத்தங்கள் இருக்க வாய்ப்புள்ளதினால் இந்த தீப்பொறிகள் உண்டாகிறதில்லை, மாறாக இந்த நான்கு தன்மைகளின் எதிர்மாறான வல்லமையால் அவை கேருபீனுக்குள் ஒன்றொடொன்று உரசும்போது அப்படி உண்டாகிறது; ஏனெனில் அவைகள் சிங்கம், கன்று, மனிதன் மற்றும் கழுகின் சுபாவங்களாக உள்ளது. ஆமென்!
20 மின்னல் உச்சகட்ட வல்லமையை அறிவிக்கிறது, இடிகள் தேவனுடைய சத்தமாக இருக்கிறது மேலும் அவை அனைத்தும் அந்த நான்கு ஜீவன்களில் இருந்து புறப்படக் கூடியதாக இருக்கிறது. ஒரு மின்சார உபகரணம் நிறுவப்படுப் போது தீப்பொறி உண்டாகின்றது என்றால், அது அசுத்தங்கள் காரணமாக அல்ல, ஆனால் அது வெவ்வேறு தன்மைகள் கொண்ட இரண்டு கம்பிகள் ஒன்றோடொன்று தொடர்பில் வருவதால்தான். நீங்கள் பார்க்கிறீர்களா?
21 வெண்கலத்தினாலான சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருக்கிறதையும் அந்த ஜீவன்களையும் சக்கரங்களையும் கூட கவனியுங்கள். அது தெய்வீக நியாயத் தீர்ப்பாகும், [...] கண்ணாடிக் கடலை பொருத்தவரையில், வசனம் 22-ல் அது பளிங்கு போல தெளிந்திருந்தது, ஆனால் வசனம் 27-ல் வெண்கலம் அக்கினியுடன் கலந்துள்ளது. வெளிப்படுத்துதல் 4:6, அது கண்ணாடிக் கடல் பற்றினது, ஆனால் தானியேல் 7:9 முதல் 10 அல்லது வெளிப்படுத்துதல் 15:2 உள்ளது போல் அங்கே ஒரு நியாயத்தீர்ப்பு இருக்கிறதினால் அது அக்கினியுடன் கலந்திருக்கிறது. அது கண்ணாடிக் கடல் தான். ஆமென்!
22 இந்த கற்களை மீண்டும் நாம் சிந்திக்கலாம். நீலவைரக்கல் பரலோக கல்லாக இருக்கிறது, அது மணவாளனுடையதாகும். படிகப்பச்சை வைரக்கல், அது பச்சைகலந்த மஞ்சள் நிறம், அது மணவாட்டி-சபையினுடையதாகும். பச்சை நிறம் ஜீவனை குறிக்கிறது. வெளிப்படுத்துதல் 4:3-ல், யஸ்பி வைரக்கல் யாக்கோபின் முதல் குமாரனான, ரூபனின் பிறப்புக்கல் ஆகும், பதுமராகம் பென்யமீனின் பிறப்புக்கல் ஆகும். யாத்திராகமம் 39:8 முதல் 14-ல் ஒழுங்கானது திருப்பியமைக்கப்பட்டுள்ளது. பென்யமீன் யாக்கோபின் கடைசியான குமாரன்.
23 நல்லது. வெளிப்படுத்துதல் 21:19 முதல் 20-ஐப் பார்ப்போம். அங்கே இரண்டு வரிசைகள் உள்ளன. ஒரு பரலோக வரிசையானது யஸ்பி முதல் நீலவைரம் வரை செல்கிறதான முதல் ஆறு பரலோக கற்களால் ஆனது, பூமிக்குரிய வரிசையானது படிகப்பச்சை முதல் செல்லுகிதான ஆறு கற்களை கொண்டதாக இருக்கிறது. அவர் பரிபூரணத்தின் தேவனாக இருக்கிறார். [...]
24 எசேக்கியேல் 10:12 நான்கு ஜீவன்களைப் பற்றியும், அவைகளின் உடலையும், அவைகளின் முதுகுகளையும், கைகளையும், செட்டைகளையும், சுற்றிலும் கண்கள் உள்ள சக்கரங்களையும் பற்றி பேசுகிறது. இந்த கண்களுக்கு என்ன அர்த்தம்? அது அறிவாகும். ஞானம் என்பது தேவனை அறிகிற அறிவாகும். சர்வஞானமல்ல அது தேவன் ஒருவருக்கே உரியது, இது அறிவாகும் அதாவது முகருதல், உணருதல் போன்றவைகளை அறியும் அறிவு.
25 சர்வஞானமும், சர்வவியாபித்தனமும், சர்வவல்லமையும் தேவன் ஒருவருக்கே உரியது. அவைகளிலிருக்கிற கண்களை பொருத்தவரையில், அவை மனித கண்களாக இருக்கிறது; ஆனாலும் மனிதனுடைய ஞானம் என்பது தேவனுக்கு பயப்படுகிற பயமாக இருக்கிறது. ஆமென்! நீங்கள் பர்க்கிறீர்களா? அவைகள் மனித கண்களாக இருக்கின்றன ஆனால் செட்டைகள் கழுகினுடையதும் பாதங்கள் கன்றினுடையதுமாய் உள்ளன. அவைகள் வலது பாதத்தை புறஜாதிகளுக்கும் இடது பாதத்தை இஸ்ரவேலுக்கும் கொண்டுள்ளன.
26 வெளிப்படுத்துதல் 10:2-ல், அவர் தானே முதலில் வலது பாதத்தை சமுத்திரலும், இடது பாதத்தை பூமியிலும் வைக்கிறார். ஆமென்! சமுத்திரத்தின் மேல், வலது பாதம், வெளிப்படுத்துதல் 17:5-ன் படி அது ஜனக்கூட்டங்களும், ஜாதிகளும், கோத்திரங்களும், பாஷைக்காரருமாம். மேலும் எசேக்கியேல் 1-ல், இந்த கிரியையானது தேசங்களுக்குள் இருந்து, ஐரோப்பாவை நோக்கி, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவை நோக்கிச் சென்றது. ஐரோப்பா தான் வடக்கு.
27 யோவானையும் தானியேலையும் போல எசேக்கியேல் புறஜாதிகளின் மத்தியில் நாடு கடத்தப்பட்டிருந்தான். ஏதோ ஒரு ஏப்ரல் 24-ல், தானியேல் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் ஆவிக்குள்ளானான், அதுபோலவே யோவான் பத்முதீவிலும் எசேக்கியேல் கேபார் ஆற்றங்கரையிலும். நிலக் குறிப்படையாளம் ஒரு நகரமோ, சபையோ, இன்னும் மற்றவையாகவோ இருக்கவில்லை... ஆனால் ஏப்ரல் 24, 1993 போலவே தண்ணீர்களாக இருந்தது. ஆமென்! ஏன்? ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவறாக இருக்கிறார். ஆமென்!
28 நல்லது! வெளிப்படுத்துதல் 21-ஐயே தொடர்ந்தும் பார்ப்போம்! யோவான் பார்க்கிறது என்ன? ஆயிரவருட அரசாட்சிக்கு இறங்கி வரும் பரிசுத்தவான்களைத் தான். ஏழு தூதர்களில் ஒருவன், குறிப்பாக ஏழாம் தூதன், யோவானிடம், "நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன்..." என்றான். மேலும் யோவான் கண்டது என்ன? பரலோகத்திலிருந்து அனைத்து பரிசுத்தவான்களும் இறங்கி வருகின்றனர். இறங்கிவருகையில் நாம் ஒரு நகரத்தின் ரூபத்தை எடுக்கிறோம்.
29 டூசானில், ஏழு தூதர்கள் தாடி, வெள்ளை முடி மற்றும் அதுபோன்றவைகளை கொண்ட ஒரு மனிதனின் முக ரூபம் எடுத்ததை நினைவில் வையுங்கள். அது தான். ஆமென்! ஒரு நாள் நீங்கள், குடிபெயரும் பறவைகளுடைய ஒரு கூட்டத்தின் அணிவகுப்பை பார்ப்பீர்களேயாகில், யோவான் பார்த்ததை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பக்கங்களின் காவலாளிகள், ஒரு வழிகாட்டி... போன்றவர்கள் அங்குண்டு. அது ஒரு கூட்ட பபூண்கள் நகருவது போன்றதாகும்.
30 மதிலானது உள்ளே இருக்கிறவர்களின், இஸ்ரவேலிலும் புறஜாதிகளிலும் இருந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக உள்ளது. இயேசு கிறிஸ்து: "ஆட்டுத்தொழுவத்திற்கு நானே வாசற்கதவு" என்றார். நீங்கள் பர்க்கிறீர்களா? அவரை கடவாமல் ஒனாயால் ஒரு செம்மறியாட்டை அடைய முடியாது. அவரை கடவாமல் ஒரு செம்மறியாடு ஆட்டுத்தொழுவத்தை விட்டு வெளியேர முடியாது.
31 பன்னிரண்டு வாசற்கதவுகளையும் பன்னிரண்டு அஸ்திபாரங்களையும் கொண்ட காலங்களின் முடிவு வரைக்கானதுமான இந்த மதில்சுவரானது பழைய மற்றும் புதிய உடன்படிக்கையின் தீர்க்கதரிசிகளால் உருவானது என்று வேதாகமம் கூறுகிறது. அவை ஜனங்களால் ஆன சுவர்கள், ஜனங்களால் ஆன அஸ்திவாரங்கள், ஜனங்களால் ஆன தூண்கள், ஜனங்களால் ஆன வாயில்கள், ஜனங்களால் ஆன விளக்குகள்.
32 தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலரையும் தூதர்களையும் எரிகிற கற்களாக காண்கிற அளவுக்கு யோவான் அதை வெகு தூரத்திலிருந்து கண்டான். தீர்க்கதரிசிகள் மற்றும் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் உபதேசங்களின் மேல் இந்த மதில்ச்சுவர் நின்றது. இந்த நகரத்தின் நகர்வானது வெளிப்படுத்துதல் 4:8-ல் உள்ள உள்ளும் புறம்பாக சுற்றிலும் கண்களால் நிறைந்த நான்கு ஜீவன்களான சாரணர்களின் (scouts) வழிகாட்டுதலில் இருந்தது. வெளிப்படுத்துதல் 21 எசேக்கியேல் அதிகாரம் 1 மற்றும் எசேக்கியேல் 10. எசேக்கியேல் 10:12: "அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன." என்று கூறுகிறது. நீங்கள் பர்க்கிறீர்களா?
33 இப்போது எசேக்கியேல் 10-ஐ கவனியுங்கள், தானியேல் 10-ன் புருஷன், நகரத்தின் மீது இரைக்க நெருப்புத்தழலை பெறுகிறான். அது ஒரு தண்டிக்கப்படுதல் அல்ல ஆனால் ஏசாயா 6:7 ல் உள்ளது போல சுத்திகரிப்புக்காகத் தான். அந்த சுத்திகரிப்புக்குப் பிற்பாடு, அந்த கேருபீனிலிருந்து (the Cherub) மகிமையானது நான்கு கேருபீன்களுக்கு (the four cherubim) செல்கிறது. ஆமென்!
34 18 -ஆம் வசனத்தில், நெருப்புத்தழலை எடுத்தது இந்த மகிமையின் கேரூப் (Cherub) ஆகும், மற்றபடி லூயீஸ் செகண்டு காண்பித்த பிரகாரமான நான்கு கேருபீன்களில் ஒன்றல்ல. இந்த நான்கும் ஒரு சுத்திகரிப்பின் பணியை கொண்டிருக்கவில்லை ஆனால் ஆதியாகமம் 3:25-ல் உள்ளது போல, காவற்காரர்களாக உள்ளது. ஆனபடியால் கர்த்தர் இயேசுவின் ஊழியத்தை கொண்டுள்ள ஐந்தாவதான ஒருவன் அங்கே இருக்கிறான். தானியேல் 7:13 முதல் 14 ஐ பாருங்கள்...
35 ஆனால் தானியேல் 8:13-ல், முதலாவது பரிசுத்தவான் காபிரியேலும் இரண்டாவது தானியேலுமாகும். நாம் அதை வாசிக்கலாம்: பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவனை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்கடிப்பை உண்டாக்கும் அருவருப்பைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேளையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம், எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான். அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.". ஆமென்!
36 1993-ன் தரிசனத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்று கூர்நுனி கோபுரமாகும். ஒரு சுவிசேஷக சபை தீர்க்கதரிசியானவன் அது மாயவித்தையின் மிக உயர்ந்த வடிவம் என்று சொன்னான். நிச்சயமாக, ஒரு கெட்ட எண்ணத்துடன், அவன் அதை கூறினான், ஆனால் தானியேல் பற்றி ஒருவன் கூறினதை கவனியுங்கள்: "அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவியும், வெளிச்சமும், விவேகமும் இருக்கிறது". நேபுகாத்நேச்சார் இராஜா அவனை சாஸ்திரிகளுக்கும், மாயவித்தைக்காரருக்கும், கல்தேயருக்கும்... அதிபதியாக்கினான்.
37 கூர்நுனி கோபுரமானது வெளிப்படையாக வெளிப்பாட்டின் ஓர் மிக உயர்ந்த வடிவமாக உள்ளது ஆனால் விசேஷமாக எடுத்துக்கொள்ளப்படுதலின் அடையாளமாக இருக்கிறது மேலும் எடுத்துக்கொள்ளப்பட்டவனான ஏனோக்கின் நாட்களுக்கு மீண்டும் அது செல்கிறது மேலும் இந்த எடுத்துக்கொள்ளப்படுதலின் ஆவி எகிப்தில் துவங்கினது. அது என்ன? தலைக்கல் தீர்க்கதரிசன ஊழியத்தின் நிறைவு. ஆமென்!
38 எசேக்கியேல் 10:7-ஐ நெருக்கமாக கவனிப்போம், நான்கு ஜீவன்களுக்குப் பிறகு: யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் ஆகியவைக்கு பிறகு என்ன நடக்கும்? பவுலுடன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நடபடிகள் புத்தகம். பவுல் ஒரு சுத்திகரிப்பு பணியைக் கொண்டிருக்கவில்லையா? உங்களுக்கு புரிகிறதா?
39 ஏழு தூதர்களுக்குப் பிறகு, எட்டாம் தூதன் ஒருவன் தோன்றுகிறான் என்று வெளிப்படுத்துதல் 8:3-5 சொல்கிறது! ஆமென்! எசேக்கியேல் 10 மற்றும் தானியேல் 12:8-10 ஆகியவற்றின் படி அவன் ஒரு சுத்திகரிப்பின் ஊழியத்தை கொண்டிருக்கிறான். திருச்சபையை சுத்திகரிக்கும்படிக்கும், பரிசுத்தவான்களின் ஜெபத்திற்கு பலத்தை அளிக்கும்படிக்கும் அவனுக்கு உபதேசங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பர்க்கிறீர்களா? அவன் பொற் பலிபீடத்திலிருந்து நெருப்புத்தழலை பூமியின் மேல் இரைக்கிறான்; துர் உபதேசங்கள், பேய்த்தன ஜெபங்கள், பொல்லாத ஆவிகள் என்பவைகளிலிருந்து பரிசுத்தவான்கள் சுத்திகரிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த பொற் தூபகலசம், இந்த செய்தி, பூமியின் மீது கொட்டப்படுகையில், இந்த வேலையை செய்த, அதி உன்னத தேவனின் சிங்காசனத்துக்கு எதிராக முறுமுறுத்த, தூஷித்த பிசாசின் புத்திரர்கள் தகிக்கப்பட்டு வாதிக்கப்பட்டனர். நீங்கள் காண்கிறீர்களா? "நான் பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று நான் விரும்பினாலென்ன?..." என்று கர்த்தர் கூறினார். லூக்கா 12:49-51. நீங்கள் பர்க்கிறீர்களா?
40 சிங்கத்திற்கும், கன்றுக்கும், மனிதனுக்கும், சாயங்கால தேரத்தில் கழுகுக்கும் பிறகு, "அநேகர் சுத்தமும், வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்." என்று கூறுகிறதான தானியேல் 12:8 முதல் 10 ன் சுத்திகரிப்பு ஊழியத்தை இந்த கேருபீன் கொண்டிருப்பதனால், அவன் அண்டைக்கு திரும்பவேண்டியது அவசியமானதாக இருக்கிறது. ஆனால், எதைக்கொண்டு சுத்திகரிக்கப்பட்டது? நெறுப்புத்தழலால், ஒரு பிரகாசிக்கிற செய்தியால்.
41 அதற்கு பிறகு, என்ன சம்பவிக்கிறது? எசேக்கியேல் 10:18 முதல் 19 வரை, மகிமையானது கேருபீன்களின் மேல் போய் நின்றது, அவைகள் கிழக்குத் திசையில் சென்றன. ஆனாலும் ஆரம்பத்தில், அவைகள் வடக்கு, மேற்கு, தெற்கு, அதாவது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் இருந்தன. அவைகளின் பாதம், வலது பாதம் தண்ணீர்களின் மேல் இருந்தன, ஆனால் இங்கே, வெளிப்படுத்துதல் 11-ன் நிமித்தம், அவைகள் கிழக்கே நோக்கின, ஏனெனில் 144000 பேரின் மீட்புக்காக எலியா மற்றும் மோசேயின் ஊழியம் அங்கே உள்ளது. புறஜாதிகளினிமித்தமாக அவை வலது பாதமாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது இஸ்ரவேலினிமித்தமாக அவன் கிழக்கு திசையில் நோக்குகிறான். ஆனால் வெளிப்படுத்துதல் 6:9-ல் உள்ள மற்ற யூதர், அவர்கள் நாஜி ஆட்சியில் மரித்த யூதர்களாக இருக்கின்றனர். இப்போது வெளிப்படுத்துதல் 16:7 ஐக் கவனியுங்கள், "...பலிபீடம் கூறுவதை நான் கேட்டேன்:.." நீங்கள் பர்க்கிறீர்களா? இங்கே பலிபீடம் பேசியது. பலிபீடத்தின் கீழ் உள்ள யூதர்களின் சத்தம் பலிபீடத்தின் மூலம் பேசப்பட்டது.
42 கேருபீன்கள் கிழக்கு நோக்கி எழுந்தன; ஏனென்றால் புறஜாதிகளின் காலம் முடிந்துவிட்டது. பிரகாசமான அந்த ஏழாவது தூதன், தனது மார்பை முன்னால் தள்ளியவாறு, கிழக்கே நோக்கிக்கொண்டிருந்தான் என்று ஏழாவது முத்திரையில் வில்லியம் பிரான்ஹாம் கூறுகிறார். "இதோ, வாசற்படியின் கீழிலிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது;" என்று எசேக்கியேல் 47:1 கூறுகிறது.
43 இப்பொழுது அனைத்தும் கிழக்குப்பக்கமாக திருப்பப் பட்டுள்ளது, ஆயினும் தென்திசையை கடவாமல் ஒருவனாதும் கிழக்கை அடைய முடியாது. அதனால் தான், தண்ணீர்கள் முதலாவது ஆலயத்தின் வலது புறமாய் பலிபீடத்திற்கு தெற்கே பாய்ந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
44 எசேக்கியேல் 40 முதல் 48 வரை அது ஒரு மூன்றாவது ஆலயத்தைப் பற்றி பேசப்பட்டதல்ல, ஆனால் எஸ்றா கட்டியெழுப்பின ஒன்றைப் பற்றியதாகும். முதலாவதான ஒன்று கர்த்தராகிய இயேசுவுக்கு முன் 1012 ல் கட்டப்பட்டு, 587-ல் கர்த்தராகிய இயேசுவுக்கு முன்னமே அழிக்கப்பட்டது. மேலும் அது மறுபடியும் கட்டியெழுப்பப்படுவதைப் பற்றித்தான் எசேக்கியேல் பேசுகிறான். மேலும் தேவனுடைய கட்டளைப்படி பேரரசர்களான கோரேஸ், தரியு, மற்றும் அர்தசஷ்டா ஆகியோரின் தீர்மானத்தினால் 82 ஆண்டுகளுக்குப் பிறகு அது நிறைவேறிற்று.
45 நல்லது, "...தானியேல், எலியா, மற்றும் அப்போஸ்தலர்களின் ஆவி ஊழியம் செய்யும்" என்பதன் அர்த்தம் என்ன? இன்னதென்று அறியாமலேயே நான் அது அனைத்தையும் கூறினேன். [ஆசிரியர் குறிப்பு: ஞானஸ்நானம் பற்றிய காக்குவ் 34 ஐ பார்க்கவும்].
46 இப்பொழுது நாம் ஜெபிக்கலாம்; உண்மையும் சத்தியமுமானவரே, தேவனுடைய வார்த்தையானவரே, தேவனுடைய வெளிப்பாட்டின் முடிவுமானவரே, நான் சேவிக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே; உம்முடைய இரத்தத்தினால் நீர் மீட்ட உம்முடையவர்களை பாதுகாப்பதற்கான முழு வெளிப்பாட்டையும் கொண்டுவர நீர் பாத்திரராய் இருக்கிறீர். கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பின்ஹாமிஸ்டு சபைகள் பிரசங்கித்து ஆராதிக்கிற இயேசு கிறிஸ்துவுக்கு மேல் எங்களுக்கு ஜெயத்தை அருளுவீராக. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
47 அந்த ஆஸ்பான், மோரிஸ் செருல்லோ மற்றும் யாங்கி சோ ஆகியோர் ஆராதிக்கும் இயேசு கிறிஸ்துவுக்கு மேல் எங்களுக்கு ஜெயத்தை அருளுவீராக. 1993 ஆம் ஆண்டின் தரிசனத்தில், நான், "யாரால் விசுவாசிக்கக் கூடும்?" என்று கேட்டேன். உடனடியாக, வலது பக்கத்திலிருந்து வருகிறவர்களும், அனைத்து சபைகளிலிருந்தும், அனைத்து தேசங்களிலிருத்தும், அனைத்து இனங்களிலிருந்தும், இந்த பிரகாசிக்கிற செய்திக்கு வருகிறவர்களும், "நாங்கள் எதையும் காணவில்லை ஆனால் அவை யாவற்றையும் விசுவாசிக்கிறோம்" என்கிறவர்களுமான, திரளான ஜனக் கூட்டத்தை கண்டேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
48 மேலும் இந்த மணி நேரத்தில் நாம் மட்டுமல்ல ஆனால் பரலோகத்திலும், பூமியிலும், கீழே பூமிக்கு அடியிலும், சமுத்திரத்திலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளும்: ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலமும் ஆட்டுக்குட்டியானவருக்கே உரியது! என்று கூறுகின்றன. ஆமென்!