



Kacou 37 (Kc.37) : ஒரு சொப்பனத்தின் வியாக்கியானம்
(2004 மே 25 ஞாயிரு காலை அன்று லோகாட்ஜரோ, ஆபிட்ஜான் - ஐவரி காஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 இது 2000 ஆம் ஆண்டில் ஒரு சகோதரர் கண்ட சொப்பனம் அதற்க்காக ஏறக்குறைய எல்லா இடங்களில் அவர் கானா வரை சென்று வியாக்கியானத்தை தேடியிருக்கிறார். அவர் இங்கே சபைக்கு 2004 ம் ஆண்டு ஏப்ரல் 25 ம் தேதி வந்தார், சொப்பனத்திற்க்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சொப்பனம் நம் கவனத்திற்கு தகுதியாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்.
2 எந்த ஒரு மனிதனும் ஒரு சொப்பனத்தை அல்லது ஒரு தரிசனத்தை அவன் தீர்க்கதரிசியாக இல்லாதப் பட்ச்சத்தில் தேவன் அவனுக்கு இந்த சொப்பனத்தை வெளிப்படுத்தாமல் அவனால் வியாக்கியானம் செய்ய முடியாது என அறியுங்கள். பாவனை செய்தல் ஒரு உச்சக்கட்ட அக்கிரமம். யாராவது உங்களிடம் இவ்விதமாக : "நான் ஒரு சொப்பனம் அல்லது தரிசனத்தில் கோவில் மீது தன்னுடைய அலகில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு புறாவைக் கண்டேன், மற்றொரு புறா அதினுடைய அலகில் ஒரு சாவியை வைத்து பின் தொடர்ந்தது என்று கூறினால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? இது தேவனிடத்திலிருந்து வந்ததா அல்லது பிசாசினிடத்திலிருந்து வந்ததா? நீங்கள் அதை ஒரு வேளை வியாக்கியானம் செய்து முடித்த பிறகு, அவர் உங்களிடம் : "நான் அதைப் போன்ற எதையும் பார்த்ததில்லை! உன்னை சோதிக்கும்படி நானே இதை கண்டுபிடித்தேன்" என்று கூறினால் என்ன!. ஆனால் முதலில், சொப்பனத்தைக் கண்டவர், சகரியா 4-ஆம் அதிகாரத்தில் காணப்பட்டது போல அதினுடைய விளக்கத்திற்கு தேவனிடம் ஜெபிக்க வேண்டும்.
3 நல்லது! இப்போது இந்த சொப்பனத்திற்க்கு வரலாம். இந்த நிகழ்வுகள் 18 மணி அளவில் நடைப்பெற்று சாயங்கால வேளைகளை வெளிப்படுத்துகின்றது. முதலாவதாக, ஒரு புறத்தில், "கொல்லப்படுவதற்கு ஒப்புக்கொள்வதற்காக ஒரு மனிதனை சம்மதிக்க வைக்க முயலுகிறார்கள், அவன் மறுபடியும் உயிர்த்தெழுவான் ஏனெனில் அவன் ஏற்கெனவே இயேசுவை ஏற்றுக்கொண்டான். அவனை சம்மதிக்க வைத்த பின்பு அவனை கொன்றனர், பிறகு அவர்கள் அவனை சமைத்து சாப்பிட்டார்கள்". இது சூன்யம்! மேலும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், அனைத்து வெளிப்படுத்தப்பட்ட சபைகள் என்று அழைக்கப்படுகிற அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள் உட்பட யாவும் மாந்திரீகத்தின் சகோதரர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மக்களுக்கு நற்செய்தியை அளிக்க நாடுகின்றனர், இந்த மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவர்களை கொன்று இவர்கள் சாப்பிடுகிறார்கள்.
4 சகோதரர் தொடர்ந்து கூறுகிறார்: "அதற்குப் பிறகு, என்னுடைய இரண்டாவது தங்கை, அதாவது, பிரன்ஹாமிஸ்டுகள், நான் இரட்சிக்கப்படுவதற்க்கு தனித்தன்மை வாய்ந்த ஒரே வழி எனக்கு காண்பிக்கின்றாள். அங்கே பல பாதைகள் உள்ளன ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அதனுடைய மூப்பு நிலையில் (Senority) மற்றவர்களை விட வேறுபட்டது. அவள் எனக்கு இந்த வழியை காட்டினாள், ஆனால் அவள் அதை பின்பற்ற மறுத்துவிட்டாள். "ஆமென்!
5 அந்த பழமையான வழி, பேதுரு, பவுல், சீலா, தீமோத்தேயு அதில் கடந்தனர் பாலிகார்ப், ஐரெனியஸ், பாபியாஸ், ஆரிஜென், ஜெரோம், அதானசியஸ், ஹிலாரி, யூசேபியஸ், ஜான் கிறிசோஸ்டோம் ஆகியோர் அதில் கடந்தனர். மார்ட்டின் லூதர், சைப்பிரியன், டெர்டுல்லியன், ஜான் கால்வின், உல்ரிச் ஸ்விங்லி, ஜான் வெஸ்லி, வில்லியம் சீமோர் மற்றும் வில்லியம் ப்ரான்ஹாம் ஆகியோர் அதில் கடந்தனர். இப்போது காக்குவ் பிலிப்பு மற்றும் அவரது குழுவினர் இப்போது கடந்து செல்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
6 அவரது சகோதரி அவரிடத்தில் இப்படியாக : "மற்ற அனைத்து வழிகளிலிருந்து திரும்புங்கள்" என கூறினார்கள். 10 கி.மீ மேற்பட்ட பிறகு நான் ஒரு தார் சாலையை கண்டேன் மற்றும் என் முதல் சிறிய சகோதரியையும் கண்டேன். பின்னர் நாங்கள் ஒரு மருத்துவமனை போன்ற இடத்திற்க்கும் பிறகு ஒரு அகதி முகாமுக்கும் சென்றோம். அங்கே ஏறக்குறைய முப்பது பேர் இருந்தனர்.
7 பின்னர், எனக்கு எதிராக ஒரு போர் தொடங்கியது. என் வலது கையில் பிணைக்கப்பட்டுள்ள தேவனின் வார்த்தையின் காரணமாக உலகம் முழுவதும் எனக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டு அடக்க முடியாத சினத்தை கொண்டார்கள் என்று உணர்ந்தேன்; அது என் கையில் இல்லை ஆனால் பின்னக்கப்பட்டு இருந்தது, என் வலது கையில் இணைக்கப்பட்டுள்ளது. என் வலது கையை வெட்டி எடுக்க அல்லது என்னை கொல்ல ஒரு யுத்தம் இருந்தது. நான் ஆயுத போர் போன்று ஒன்றுக் கண்டேன் மற்றும் முழு உலகமும் எனக்கு எதிராக எழும்பினது. என்னைக் கொல்லும் எவருக்கும் பெரிய வெகுமதி கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டது..
8 பின்னர், நான் போர்க்கால முகாமில் இருப்பதாக என்னை நான் கண்டேன்; போர் தீவிரமடைந்தது, நான் தேவனிடம் அழுதேன், பிறகு நான் மறுரூபமாக்கப்பட்டேன். முழு உலகையும் எதிர்த்துப் போரிட தேவனின் வீரனைப் போல உடுத்துவிக்கப்பட்டிருந்தேன், பின்னர், போர்களத்தின் நடுவில், நான் மீண்டும் தேவனிடம் கூச்சலிட்டேன் மேலும் பல தேவதூதர்கள் மனித ரூபங்களை எடுத்துக்கொண்டு எனக்காக சண்டையிட வானத்திலிருந்து இறங்கினார்கள். அது ஒரு இறுதி நிகழ்வாக இருந்தது.
9 சகோதரர்களே அதை புரிந்துகொள்கிறீர்களா? இந்த செய்தியின் விளைவாக இந்த காரியங்கள் எல்லாம் நடக்கும். முழு உலகமும் நமக்கு எதிராக எழும்பும். நம்மை சுற்றிலும் நீங்கள் காண்கின்ற சபைகள் நமக்கு விரோதமாக எழும்பும். தேசங்கள் நமக்கு விரோதமாக எழும்பும் . நம்மை பாதுகாக்க யாரும் இருக்கமாட்டார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? காவல்காரர்கள் மற்றும் நீதிமன்றங்கள் மற்றும் நீங்கள் பார்க்கும் அனைத்தும் நமக்கு எதிராக எழும்பும். இந்த போராட்டத்தில் நாம் உறுதியாக நிற்கதக்கதாக சர்வ வல்லமையுள்ள தேவன் தேவதூதர்களை நம் சார்பாக அனுப்புவார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
10 கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய நாட்களிலும் தீர்க்கதரிசிகளின் காலத்தில் இருந்தபோது, இவ்விதமாக தங்களுடைய கைகளில் வேதாகமங்களை வைத்துக் கொண்டு இருக்கும் சபைகளை நீங்கள் காணலாம். நமக்கு எதிராக எழும்புவோர்க்கு காவல்கார்களும் நீதிமன்றங்களும் அவர்களுக்கு பெலனாக இருப்பார்கள். மேலும் தரிசனத்தில் இருந்ததை போல, ஆட்டுக்குட்டியானவரே இறங்கி வந்தார். ஆகையால் அப்பொழுது நாம் அவர்கள் நடுவே ஆட்டுக்குட்டிகளாக இருப்போம். நம்முடைய விசுவாசத்தை தக்கவைத்துக் கொள்ளும்படியாக உன்னதமான தேவன் அவருடைய தூதர்களை அனுப்புவார்.
11 யார் இந்த தேவதூதர்கள்? இவர்கள் இந்த செய்தியின் முதல் பிரசங்கிகள், பின்னர் உண்மையான தேவ புத்திரர்களுடைய வெளிப்பாட்டின் வளர்ச்சியின் படி மேலும் இது தலைமுறை தலைமுறையாக, மரித்தோரின் உயிர்த்தெழுதல் வரை இருக்கும். அவர்கள் வெளியே சென்று வென்று திரும்பினார்கள், அவர்கள் வெளியே சென்று வெற்றி பெற்றனர் ... அவர்கள் மற்றொரு முறை திரும்பி வந்து, "நாங்கள் எதிரிகளைத் தள்ளிவிட்டோம், மற்றும் எங்களுக்கு ஒரு ஆச்சரியப்படச் செய்வதாக வாக்களித்தனர்".
12 மேலும் எல்லாவற்றையும் ஒருங்கினைத்த ஒரு மனிதன் இருந்தான். இந்த மனிதன், இப்போது மலைகளின் பாதையை எடுக்க சொன்னான், அவர்கள் உன்னை ஆச்சரியத்திற்குள் ஆக்குவதை விட, நீங்கள் தான் அவர்களை ஆச்சரியப்படுத்தப் போகிறீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13 இங்கே இருக்கும் இந்த சபை, அது முதலாவது சத்தமிட்ட பிறகு, இப்போது இது இங்கு இருக்கின்றது. ஆனால் உலக அளவில் உள்ள கட்டத்தில் சபைகளின் சார்பாக இருக்கின்ற சிற்றோடைகளிலிருந்து வந்த பரிசுத்த ஆவிகளை எதிர்த்து தேவதூதர்கள் போர் தொடுத்தனர். தவறான பரிசுத்த ஆவிகள், அவைகள் உண்மையில் பார்க்கும் போது விசித்திரமான ஒழுங்குள், ஆறுகள், சிற்றோடைகளிலிருந்தும் மற்றும் அனைத்து இவ்வகையான இடத்திலிருந்து திருச்சபைகளில் உள்ள பரிசுத்தவான்களுக்கு எதிராக அதாவது நமக்கு எதிராக சண்டையிடும் நோக்கத்தில் படையெடுத்து வந்தது. மேலும் அது தான் இப்பொழுது நடைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றது.
14 நீங்கள் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் பார்க்கும் இந்த பரிசுத்த ஆவிகள் எல்லாம் குறிச்சொல்லும் பிசாசுகள். அந்த பிசாசுகள் நமக்கு எதிராக போராடும் . இந்த பேய்களுக்கு கூடுதலாக, நீங்கள் இந்த காவல்காரர்கள், நீதிமன்றங்கள், தேசங்கள் மற்றும் பூமியின் அனைத்து அமைப்புகளையும் எண்ண வேண்டும்.
15 ஆனால் உங்களுக்கு என்ன நடந்தாலும், இறுதிரை உறுதியாய் இருங்கள். ஏனென்றால், பரலோகத்தில் ஒரு வெகுமதி உண்டு. அந்த வெகுமதி ஒரு போதும் அழியாது. தேவன் உங்கள் கண்ணீரை துடைப்பார். துன்பத்தில் உறுதியாக நில்லுங்கள், சிறையில் இருந்தாலும்! துன்புறுத்தல் ஒரு பொருட்டு அல்ல, உறுதியாக நில்லுங்கள்! ஒரு நாளிலே, உங்கள் சந்தோஷம் பரலோகத்தில் நித்தியமாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16 ஆனால் இந்த சொப்பனத்தில் நான் சுட்டிக் காட்டுவது, குறிப்பாக இந்த சொப்பனத்தின் இரண்டாம் பகுதியானது, நமக்கும் ஒரு தீர்க்கதரிசனமாகவே எஞ்சி இருக்கின்றது. அவருடைய சிறுவயதிலிருந்து இந்த செய்திக்கு வருகிற வரைக்கும், அவர் பெந்தெகொஸ்தே சபையில் இருந்தார், சில மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் இயேசு-கிறிஸ்துவின் நாமத்தில் பிரசங்கிப்பதைக் கண்டார். உங்களால் காண முடிகிறதா? இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், தேவனுடைய பார்வையில் அவர்கள் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களுமாக இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் அடிமையான நான் காக்குவ் பிலிப்பு 1993 ஏப்ரல் 24 ம் தேதியின் தரிசனத்தின் வல்லமையின் அடிப்படையில் இதை நான் உங்களுக்கு கூறுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17 நீங்கள் பார்க்கும் இந்த சபைகள் அனைத்தும், அவர்கள் மந்திரீகத்தின் சகோதரர்கள். அவர்களுடைய துதிப்பாடல்கள், அவர்களுடைய ஜெபங்கள், அவர்கள் செய்யும் எல்லாமே சாத்தானின் பிராத்தனைகள். இங்கே தேவன் செய்வதை தவிர மீதமுள்ள அனைத்தும் வெரும் ஒரு மாந்திரீகம்,மாயமந்திரம் மற்றும் சூனியம். அவைகள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்தாலும், அவைகள் மாயவித்தை மற்றும் மந்திரம். அவைகள் பேய்கள். ஆனால், பிரசங்கிப்பதற்கு அவர்கள் உங்களை அழைத்தால், செல்லுங்கள்.
18 இந்தச் செய்தியை அறிந்திருக்கிறவர்கள் நம்மை அழைக்கும் பொழுது ஒரு பிரச்சனையும் இல்லை. இந்தச் செய்தியைப் பிரசங்கிக்கவோ அல்லது விவரிக்க என்னை எங்கு அழைத்தாலும் எங்கு வேண்டுமானாலும் நான் சென்று, பிரசங்கிக்க தயாராக இருக்கிறேன். ஏன்? உங்களைப் போலவே, தேவனின் உண்மையான பிள்ளைகள் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேவனுடைய கிருபையானது அவர்களை அங்கு சந்திக்க வேண்டும். மேலும் அவர்கள் நித்திய ஜீவனை பெரும்படியாக அவர்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியை விசுவாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.