



Kacou 38 (Kc.38) : தெய்வீக சுகமளித்தலுக்கான அடிப்படைவிதிகள்
(2004 நவம்பர் 14, ஞாயிரு காலை லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 பிரசங்கிப்பதற்கு முன்பு, நான் இரண்டு சிறிய குறிப்புகளை மைய்யப் படுத்த விரும்புகிறேன். முதலாவதாக நாம் கொடுக்கும் சாட்சிகளைப் பற்றி விவரிக்கிறது: பொதுமக்கள் பொதுவான பாவ அறிக்கை மற்றும் துதி பாடல்களுக்கு இடையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு செய்த அற்புதங்கள், குணமாகுதல், மற்ற எல்லாவற்றையும் குறித்து அதற்கென்று ஒரு நேரத்தை அமைக்க வேண்டும். ஆராதனைக்கு முன்பாக உதவிக்காரரிடம் (Deacon) இதை தெரியப்படுத்துங்கள், மிக சுருக்கமாக இருக்கட்டும். பொது வான பாவ அறிக்கை போன்றே, ஒவ்வொரு சாட்சியும் உங்களுக்குச் செவிகொடுக்கிறவர்களுக்கு ஒரு செய்தியாக இருக்க வேண்டும், தேவன் உங்களுக்குச் செய்ததைப் பற்றி மறைத்து வைப்பது நல்லது இல்லை.
2 இரண்டாவது குறிப்பு தசமபாகம் மற்றும் காணிக்கைகளுடன் தொடர்புடையது. ஒரு கிறிஸ்தவன் அவனது எஜமானனைப் போல தான் விதைக்காத இடத்தில் கூட அறுவடை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு, தசமபாகம் மற்றும் காணிக்கையானது எந்த வித வருமானத்திற்க்கும் அல்லது பரிசுக்கும் பொருந்தும், அது எவ்வளவு சிறியது என்பது ஒரு பொருட்டல்ல. சுதந்திரமாக இருந்த போதும், தசமபாகம் அல்லது காணிக்கையை செலவு செய்வது ஒரு சாபம். எவன் ஒருவன் இந்த காரியங்களில் மிக அக்கரையற்று அவனுடைய தசமபாகங்களை சரியாக கொடுக்காமல் இருக்கின்றானோ, அவன் பரிசுத்த இராபோஜனத்தை எடுக்கக் கூடாது.
3 இதேபோல், அவன் நிதி பிரச்சினையிலிருந்து வெளியே வர முடியாது,மேலும் வியாதி அவனை சுற்றி வரும். தேவனுக்கு கொடுக்க மறுத்ததைக் காட்டிலும் இன்னும் அதிகமாக செலவு செய்வான். பழைய ஏற்பாட்டினாலே எல்லாவற்றையும் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறபடியால் நான் இதை புதியவர்களுக்காக கூறுகிறேன். மல்கியா 3: 8 முதல் 10 வசனத்தின்படி, தசமபாகத்தைத் தவறாகப் பயன்படுத்துபவன் ஒரு திருடன், 1 கொரிந்தியர் 6: 9 முதல் 10-ல் திருடர்கள் பரலோகத்திற்கு செல்வதில்லை என்று கூறுகிறது. தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகளைக் காட்டிலும் ஆசீர்வாதத்திற்கான வேறு வழி எதுவும் இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
4 தசமபாகம் மற்றும் பொதுவான காணிக்கையானது தேவனுடைய சொந்த பங்கு. பின்னர் செழிப்பிற்கான காணிக்கைகள் நாம் செழிப்பதற்க்காக இருக்கின்றது அவை ஒரு சகோதரன் அல்லது சகோதரிக்கு தேவையுள்ள போது அவர்களுக்கு கொடுப்பது. அவை செழிப்பிற்க்கான செயல்கள். தேவனே இந்த சட்டத்தின் முலம் இயற்கை மற்றும் ஆவிக்குரிய காரியங்களை நியமித்திருக்கிறார். என்னுடைய ஜெபமானது, தேவன் தாமே உங்களுக்கு சித்தத்தையும், அதைக் காத்துக் கொள்ளும் படியான பலத்தையும் தருவாராக. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
5 இப்பொழுது யோசுவா 3: 7-ஐ வாசிப்போம். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு யோசுவா 3:7 வாசிக்கிறார்] நான் ஜெபக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளேன். மற்றும் நான் ஜெப வரிசைக்கான சில வழிமுறைகளை கொடுக்கிறேன், நீங்கள் வரிசையில் இந்த ஒழுங்கமைத்தலில் வரும் பொழுது நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க முடியும் மற்றும் நான் அதிசயங்கள் குறித்து நான் ஒன்றும் செய்ததுவில்லை, இந்த செய்தியை நிருபனப்படுத்தும்படியாக எதிர்பார்க்கின்றேன்.
6 உலகிற்க்கு அஸ்திபாரம் அமைப்பதற்க்கு முன்பாகவே, தேவன் தம்முடைய சர்வவல்லமையில், சர்வ அறிவினாலும், சர்வாதிகாரத்தில், தரித்திருந்தார். அவர் இரக்கம், தயவு, மற்றும் அன்பின் தேவன். அவர் இரட்சிக்க விரும்புகிறார், அவர் குணப்படுத்த விரும்புகிறார், அவர் ஆசிர்வதிக்க விரும்புகிறார், ஆனால் அவருடைய வார்த்தையின் எல்லைக்குள் மாத்திரமே, அவருடைய விருப்பத்திற்கும் அவருடைய திட்டத்தின் எல்லைக்குள் மாத்திரமே அதை செய்ய விரும்புகிறார். அவர் சர்வவல்லவர், ஆனால் பாவத்திலும் அவிசுவாசத்திலும் இல்லை. அவர் பரிசுத்தத்தில் அமர்ந்து இருக்கிறார் மேலும் பரிசுத்தத்தில் சர்வ வல்லமையும் உடையவர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
7 தெய்வீக சுகமளித்தலை காணக்கூடிய மிகப்பெரிய விளக்கம் யோவான் ஸ்நானகனின் ஊழியமாகும். யோவானைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறன பொழுது ஸ்திரீகளில் பிறந்ததில் அவரே எல்லோரை காட்டிலும் பெரியவர் என்றார். ஏனெனில் யோர்தான் நதியில் தேவன் ஆட்டுக்குட்டி ஆனார், மற்றும் யோவான் ஸ்நானகன் பிரதான ஆசாரியர் ஆனார். அவர் ஆட்டுக்குட்டியைக் கழுவி, அவரை கொடுத்து," இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. என்றார். அவருக்கு முன்பாக இருந்த ஆசாரியர்கள் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாடுகளையும், எருதுகளையும் கொடுத்தார்கள் அவற்றின் இரத்தம் பாவங்களை மறைக்க மட்டுமே முடிந்தது, ஆனால் யோவான் ஸ்நானகன் தேவ ஆட்டுக்குட்டியை வழங்கினார், தனித்தன்மை வாய்ந்த அவருடைய இர்த்தம் பாவங்களை கழுவும். அது ஒரு மிக விரிவான மற்றும் எளிமையான ஊழியம்.
8 ஒரு ஊழியத்திலே, அங்கே பிரசங்கிக்கும் ஒருவன் இருந்தான், அவன் யோவான் ஸ்நானகன். அங்கே வார்த்தை இருந்தது, நம்முடைய காரியத்தில் இயேசு கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார், இயேசு கிறிஸ்துவே வார்த்தை. நீங்கள் கேட்கும் இந்த செய்தி. யோவான் ஸ்நானகனின் விஷயத்தில், நான் உங்களுக்குப் பிரசங்கிக்கின்ற இந்த வார்த்தையே மாம்சமானது. முதலாவதாக, வார்த்தையானது தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானகனிடத்தில் வந்தது. அதை அவர் வழங்கினார். அது எழுதப்பட்ட வடிவத்திலோ அல்லது உரைக்கப்பட்ட வடிவத்தில் இல்லை ஆனால் மாம்சத்தில் அது வந்தது. எனவே, ஜனங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டியிருந்தது, அவர் தாமே யோவான் ஸ்நானகனுடைய செய்தியாக இருந்தார். சிலர் இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்ந்தார்கள், வேரு சிலர் யோவான் ஸ்நானகனுடைய இருக்கையில் தங்களை அமர்த்திக் கொண்டனர். சிலர் இப்படியாக : "யோவான் ஸ்நானகன் அற்புதங்களைச் செய்யவில்லை என்பது உண்மைதான், ஆனால் அவர் இன்னமும் தீர்க்கதரிசியாக இருக்கிறார்..." என்றனர். மற்றவர்கள் இவ்விதமாக : இல்லை! எலியா, யோசுவா, மோசேயிடம் இருந்ததைவிட யோவான் ஞானஸ்நானகனின் செய்தியை தேவன் உறுதிப்படுத்தியிருக்கிறார். என்றனர். மேலும் அவர்கள் எல்லோரும் அதே உன்மையான தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள்
9 யோவான் ஸ்நானகனின் மரணத்திற்குப் பிறகு, இன்று பிரன்ஹாமிஸ்டுகள் செய்கிற காரியத்தையே ஜனங்களும் அவர்கள் மத்தியில் உள்ள அப்பொல்லோவும் செய்தான். அப்பொல்லோ ஒரு பிரன்ஹாமிஸ்டாக இருந்தான் ஆனால் அவன் தேவனுடைய குமாரனாக இருந்தான். தானியேல் 12:4 ன் படியாக, அப்பொல்லோ ஞானத்தைக் கொண்டிருந்தான். மேலும், அப்போஸ்தலர் 18: 24 முதல் 28 கூறுகிற பிரகாரமாக, "சாதுரியவானும், வேதாகமங்களில் வல்லவனுமான, அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான்... " ஆனால் இந்த பிரன்ஹாமிஸ்டுகள் மீட்டளிப்பின் உண்மையான ஞானஸ்நானத்தை அறியவில்லை; அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் முழுக்கு ஞானஸ்நானம் மாத்திரம் பெற்றிருக்கிறார்கள். பரிதாபமான பிரன்ஹாமிஸ்டுகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நடந்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டாரா? வேதாகமம் உங்களை புகழ்ந்து பேசுகிறது, ஆனால் அதே வேதாகமம் நீங்கள் ஏதோ குறைவாக இருக்கிறீர்கள் என கூறுகிறது! "உன்னுடைய நாளையும் அதன் செய்தியையும் அடையளங்கண்டு கொள்ளுதல் ". என்ற பிரசங்கத்தில், உங்கள் எஜமானாகிய வில்லியம் பிரான்ஹாமினுடைய பாடத்தைக் கற்றுக் கொண்டீர்களா? : இதன் பயிற்சி உங்களுக்கு முன் உள்ளது! அந்த ஞானமே புத்தியைக் கொண்டுள்ளது. மத்தேயு 25 ன் கன்னிகைகளின் ஞானம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
10 நல்லது! நாம் யோசுவா 3: 7 ஐ மீண்டும் வாசிப்போம். எது சுகமளிக்கின்றது? எது ஆசீர்வதிக்கின்றது? வார்த்தை. இவ்வாறு, ஒரு தலைமுறையில் ஆசீர்வாதம் மற்றும் சுகப்படுத்துதலும் ஒரு தீர்க்கதரிசி மற்றும் அவரது செய்தியை உறுதிப்படுத்துகின்றன. அப்போஸ்தலர்களும் மற்றும் சீஷர்களும் செய்த அதிசயங்களெல்லாம், அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் அவருடைய செய்தியையும் உறுதிப்படுத்தியது, முற்றிலுமான உண்மைக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட தனிமங்கள் ஒன்று சேரும் போது ஒரு தீர்க்கதரிசியின் செய்தி மிகவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
11 முதலாவதாக, அது தீர்க்கதரிசன மற்றும் தேவனுடைய அதிகாரப்பூர்வமான வார்த்தையாகவும், தேவனுடைய சிங்காசனத்திலிருந்து வரும் வார்த்தையாகயும் இருக்க வேண்டும். அது ஒரு பூத்திக்கூர்மையான, விஞ்ஞான மற்றும் இறையியல் அல்லது நெறிமுறை போதகமாக இல்லாமல் ஆனால் முழு பூமியிற்க்கும் தேவனிடத்திலிருந்து மனிதனுக்கு வருகின்ற ஒரு தீர்க்கதரிசன பிரசங்கம். ஒரு செய்திக்கு பூமியின் எல்லைகளை அடைய ஆற்றலும் வலிமையும் இருக்க வேண்டும்...
12 மூன்றரை ஆண்டுக்குள் ஒரு செய்தி செய்தியாளனின் தேசத்திற்க்கு வெளியே பரவ ஆரம்பிக்க வேண்டும். மேலும் நடுராத்திரி சத்தமானது அதைச் செய்யும் ஏனெனில் வேதாகமம் வெளிப்படுத்துதல் 12:14 அதை முன்னுரைத்திருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. பொதுவாக, மதத் தலைவர்களுடைய ஜனக்கூட்டம் தங்களுடைய சொந்த நாட்டைத் தவிர வெளியே வேறெங்கிலும் இருக்காது. ஆனால் ஐவரி கோஸ்ட்டிற்க்கு வெளியில் இருந்து இந்த செய்தியின் பெரிய கூட்டங்களை நீங்கள் காணலாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
13 நல்லது! இதை கவனிக்கவும்: ஒரு திருச்சபையாக, மூன்று மற்றும் ஒரு அரை ஆண்டுகளில், தேவன் பூமியிலிருந்து நம்முடைய பெயர்களை அழைத்தார், தேவன் வஞ்ஜகத்திலிருந்து தம்முடைய தெரிந்து கொண்டவர்கள் எல்லோரையும் சுமந்தார். இப்பொழுது நாம் நடித்து ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம். நான் " நியாய தீர்ப்பை திட்டவட்டமாக அறிவித்தல்" என்று பிரசங்கிக்கையில். முதல் பெயர்கள் உச்சரிக்கப்பட்டது, அந்த வழியாக விசவாசித்தவர்கள்... அது தான் மாம்சத்தில் இருந்த வார்த்தை செய்தது: "பேதுருவே, என் பின்னே வா!". ஆமென்!
14 பூமியிலே ஒலிக்கும் ஒவ்வொரு தீர்க்கதரிசியின் பிரசங்கமும், அது பிசாசின் பிள்ளைகளின் கண்டனத்திற்காகவும், தேவனுடைய பிள்ளைகளின் அழைப்புக்காகவும் இருக்கும். ஒரு தீர்க்கதரிசியின் செய்தி அவரது தலைமுறையின் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்டிருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
15 நல்லது! யோசுவா 3: 7-க்கு திரும்ப வரலாம்... எல்லோரும் இந்த கிரியையையும் செய்தியையும் வார்த்தையின் மேல் வார்த்தையை விசுவாசிக்க வேண்டும், எல்லா அவநம்பிக்கையும், காரண காரியங்களையும் கொன்று போட வேண்டும்... உங்களுடைய பழைய நம்பிக்கைகளை தியாகம் செய்து விசுவாசிக்க வேண்டும். ஏனென்றால், தேவன் ஒருவரை சுகப்படுத்தினால், அவரால் நூறு பேரை சுகப்படுத்த முடியும். தேவனால் ஒரு குருடனை சுகப்படுத்த முடியும் என்றால், அவரால் பத்து குருடர்களை சுகப்படுத்த முடியும். அவரால் எய்ட்ஸ் உட்பட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். தேவன் ஒரு குறிச்சொல்லும் ஆவியிலிருந்து விடுவிப்பாரானால், அவரால் மன நிலை பாதிப்பிலிருந்தும் விடுவிக்க முடியும். தேவன் வேறொருவருக்கு எந்த காரியத்தைச் செய்தாரோ, அவர் அதை உனக்கும் செய்ய முடியும். நீங்கள் ஜெப வரிசையில் வருவதற்க்கு முன் ஒரு நாளில் நான் அப்படி ஒன்றை கொண்டிருப்பேன். என்ற விசுவாசம் உடையவர்களாக இருக்க வேண்டும். அது ஏதோ, "ஓ! நான் முயற்சி செய்ய போகிறேன், ஒருவேளை அவர் என்னைக் குணமாக்குவார் ", என்று கூறுவது அல்ல, ஆனால் அவருடைய வாக்குத்தத்தங்கள் மற்றும் அவருடைய வார்த்தையை வார்த்தையின் மேல் வார்த்தையாக விசுவாசிக்க வேண்டும். "ஜெபம் செய்தபின், நான் குணமாகவில்லை..." என்று சொல்ல வேண்டாம். ஜெபத்திற்கு முன்பாக நீங்கள் குணமாகிவிட்டீர்கள் என்று நம்புங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
16 ஆனால் சகோதரரே ஜனங்கள் உங்களை மாந்திரீக பூஜாரிகள் என புரிந்து கொள்ள வேண்டாம். நான் பிரசங்கிக்கும் வார்த்தையை அவர்கள் விரும்பவில்லை, அவர்கள் உதட்டளவில் மட்டுமே விசுவாசித்து, அவர்கள் குணமடைந்த பிறகு மீண்டும் தங்களுடைய சபைகளுக்கு போக விரும்புகிறார்கள். ஆனால் இது சாத்தியமில்லை. தேவன் அவனை குணப்படுத்துகிறார் என்றால், அது அந்த குணப்படுத்தலின் மூலம் மற்றவர்கள் இந்த செய்தியை விசுவாசிப்பதற்க்காகவே ஒழிய தேவன் அவனை எதற்க்காக சுகப்படுத்துவார் என்று எனக்கு தெரியவில்லை. செய்தி இல்லாமல் அற்புதங்கள், அது பொய்யான கிறிஸ்து மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள். ஆனால் தேவன் அற்புதங்களையும் வரங்களையும் தருகிறார்; நித்திய ஜீவனுக்காக மனிதகுலத்தை அவருடைய வார்த்தையில் வழிநடத்தும்படி தேவன் எல்லாவற்றையும் தருகிறார்.
17 நீங்கள் இந்த செய்தியை விசுவாசிப்பதினால் இங்கே வருகிறீர்கள். நடுராத்திரி சத்தம் வேதாகமத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவை போன்றது. தேவன் சுகமளிக்கின்றார் என்பதை காண்பிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெறுமனே அற்புதங்களைச் செய்யவில்லை, ஆனால் அவர் தேவனிடமிருந்து அனுப்பிய தீர்க்கதரிசி என்று அவர் செய்து காட்டினார். அவர் இவ்வாறு கேட்கலாம்: நான் தேவனிடமிருந்து வந்த தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா மற்றும் அவருடைய வார்த்தை என் வாயில் உள்ள சத்தியமாக இருக்கிறது என்று விசுவாசிக்கிறீர்களா? இந்த அடிப்படையில், பினியாளிகள் சுகத்தை பெற்றுக் கொண்டனர்.
18 ஆதியிலே வார்த்தை இருந்தது, மற்றும் அற்புதங்கள் மனிதகுலத்தை வார்த்தைக்கு இழுக்கும் தூண்டில் ஆக உள்ளன. உங்களுடைய மணி வேளையின் வார்த்தைக்கு உங்களுடைய அற்புதங்கள் மனுக்குலத்தை ஈர்க்கவில்லையென்றால் உங்களுடைய அற்புதங்கள் வஞ்சகத்தின் அற்புதங்களாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 ஜெபத்திற்க்கு முன்பு நான் இப்படியாக கேட்டேன்: 1993 ஏப்ரல் 24 தேவதூதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த செய்தி மனிதகுலத்தின் இரட்சிப்பிற்காகவும், பரலோகத்திலிருந்து வந்ததாக நீங்கள் நம்புகிறீர்களா? இந்த தலைமுறைக்கு வெளியே இந்த தலைமுறையிலும் வேறு எங்கும் இரட்சிப்பு இல்லை என விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசித்தால், உங்களுடைய சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளின் தேவன் சாத்தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் பிரசங்கிக்கும் செய்தி முழு சத்தியம் என்பதையும், அதை நான் என் சுயத்திலிருந்து பேசவில்லை என்பதையும் மேலும் அதை தவிர வேறு எந்த சத்தியமும் இல்லை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
20 நியாயத்தீர்ப்பில் பதில் சொல்வதற்கு உலகமானது தயாராக இருக்க வேண்டும். சுகமளித்தளுக்கான ஜெபம் முதலில் அதை கட்டளையிடுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].. இதனால்தான் குணமாக்கப்பட்ட அனைவரும் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றினார்கள்.
21 தூதனானவர் வில்லியம் பிரான்ஹாமிடம்: "நீ ஜனங்களக் கொண்டு உன்னை விசுவாசிக்க வைத்தால், புற்றுநோய் கூட உன்னுடைய ஜெபத்திற்கு முன் நிற்காது."என்றார். ஜனங்களைக் கொண்டு யாரை விசுவாசிக்க வைக்க வேண்டும்? நீ பிரசங்கிக்கும் வார்த்தையை, இயேசு கிறிஸ்துவை, ஒவ்வொரு வார்த்தையும். எப்படி? தேவன் அதை செய்வார், ஏனென்றால் நான் இதனூடாக சென்று ஜனங்களை விசுவாசிக்க வைக்க முடியும் எனில் , என் ஜெபத்திற்க்கு முன்பாக எய்ட்ஸ் கூட நிற்க முடியாது பிறகு நான் இவ்விதமாக கூற முடியம் : எங்கெல்லாம் இந்த செய்தி அதின் தூய்மையில் பிரசங்கிக்கப்படுகிறதோ, கர்த்தருடைய தூதனானவர் நிருபனப்படுத்துவதற்க்காக அங்கே நிற்பார். இது மாத்திரமே இந்த மணி வேளைக்கான கர்த்தருடைய விசுவாசமாக இருக்கின்றது. வேறு வழி ஏதும் இல்லை. ஆகவே தேவன் ஒரு வரலாற்று பிரசங்கத்தை, விஞ்ஞான பிரசங்கத்தை இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் கற்பிக்கப்படும் ஒழுங்கு நெறி காரியங்களை தேவன் உறுதிப்படுத்த முடியாது, வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டாலும், அந்த வரலாற்றை தேவன் உறுதிப்படுத்த முடியாது. தேவன் ஒரு வேதாகம பிரசங்கத்தை உறுதிப்படுத்த முடியாது, ஏனெனில் அது ஒரு பண்டைய கால சரித்திரம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
22 சபையிலிருந்து வல்லமையை பறித்த முதல் காரியம், அது மனிதன் தேவனையும் தேவனுடைய வார்த்தையையும் கற்க்க முயன்ற போது. இரண்டாவது காரியம் அறிவு பெருகும் போதும் மற்றும் புத்திகூர்மையை வைத்து காரணகாரியங்களை அறியும் போதும். தேவன் கிரியைச் செய்யும்போது, சிலர் அது பிசாசா, அல்லது சில வித்தையா, அல்லது வேரு ஏதாவதா... என்று ஆச்சரியப்படுகிறார்கள். அவர்கள் இவ்விதமாக லூயிஸ் செகண்டு வேதாகமங்களை கூட எரிப்பதற்க்கு பயப்படுகிறார்கள் மேலும் மற்றவர்கள் "நான் செய்தியை விசுவாசிக்கின்றேன்" அல்லது " நான் செய்தியை புரிந்து கொண்டேன் " என்று கூறுகிறார்கள். நீங்கள் புரிந்து கொள்ளாதது எல்லாம் வார்த்தையை தான்!.
23 கற்பனை செய்து பாருங்கள், கிறிஸ்தவம் ஆப்பிரிக்காவுக்கு வரும் முன், மந்திரவாதிகள் சில ஜனங்களை குணமாக்கினார்கள், மந்திரவாதிகள் சில கருதரிக்காத பெண்களுக்கு குழந்தைகளை கொடுத்தார்கள்... எல்லா விதமான ஆசீர்வாதங்களும் கொடுத்தார்கள். ஆனால் அந்த பழைய படிப்பறிவில்லாத ஆப்பிரிக்கர்கள் இந்த மாந்திரீக பொருட்களை எரிக்க வேண்டுமென்று கேட்கும்போது எதிர்க்கவில்லை.
24 ஆனால் இன்று தேவனிடமிருந்து ஒரு தீர்க்கதரிசி, வேதாகம தீர்க்கதரிசிகளைப் போல ஒரு அழைப்பு மற்றும் நியமத்துடன் உங்களிடம் பேசும் பொழுது, நீங்கள் புரிந்துக் கொள்வதில்லை. மற்றவர்கள் நான் அவர்கள் மத்தியிலிருந்து ஒருவனாக வர வேண்டும் என விரும்புகிறார்கள்! பாப்டிஸ்டுகள் என்னை ஒரு பாப்டிஸ்ட் ஆக இருக்க விரும்பினர். மெத்தடிஸ்டுகள் நான் ஒரு மெத்தடிஸ்ட் ஆக விரும்பிகிறார்கள். அசம்பலிஸ் ஆஃப் காட் என்னை அவர்கள் மத்தியில் இருந்து வந்திருக்க விரும்பிகிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லை.
25 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசேயர்கள் அல்லது சதுசேயர்கள் அல்லது ஹெலனிஸ்டுகள் ஆகியவற்றிலிருந்து வர முடியாது. மற்றவர்கள் அவரை இந்த தலைமுறையின் தீர்க்கதரிசி- செய்தியாளனாக இருக்க விரும்பினார்கள். ஆனால் இராஜாத்திபதியம் உள்ள தேவன் அவர் விரும்புகிறவரைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரமாக இருக்கிறார், நீங்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அந்த தீர்க்கதரிசியை எதிரொலிக்க வேண்டும்.
26 நீ தேவனுடைய பிள்ளை என்றால், இங்கே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]... ஜெப வரிசையில், முழு சபையும் தீவிரமான பரிந்துரைக்கப்படும் ஜெபங்களில் இருக்க வேண்டும், பின்னர் அனைத்து வரங்களும் ஒழுங்காகவும் அமைதியாகவும் செயல்படும்: சில தீர்க்கதரிசனங்கள், அறிவை உணர்த்தும் வசனம், ஆவிகளை பகுத்தறிதலும், அந்நிய பாஷை வரங்களும், வியாக்கியானம் பண்ணுதல், தரிசனங்கள... மேலும், உங்கள் இருதயம் பாவத்தையோ சந்தேகத்தையோ கண்டனம் செய்யும் போது, உங்களுடைய இருக்கையில் இருந்துக் கொண்டு தொடர்ந்து விண்ணப்பித்து தேவனிடத்தில் வேண்டுதல் செய்யுங்கள்.
27 மூன்றாவது விஷயம், மருந்துகளின் வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. தெய்வீக சுகமளித்தலை குறித்து பேசும் போது, சபையானது அற்புதங்களினால் சுகத்தை பெற மற்றும் கைகளை வைத்து ஜெபம் செய் போதிக்கப்பட்டவர்கள் இப்பொழுது மருத்துவமனைகளை கட்டியெழுப்ப ஆரம்பித்துவிட்டன. அதாவது அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்றும் அல்லது தேவன் முன் ஒரு காலத்தில் அற்புதங்கள் மூலம் சுகம் தந்தார், இப்பொழுது மருந்துகள் மூலம் சுகமளிக்கின்றார் என வெளிப்படுத்துகின்றது.
28 மருத்துவம் தேவனிடத்திலிருந்து வந்தது என நான் விசுவாசிக்கின்றேன் மேலும் யுதர்களுடைய அவிசுவாசத்தினால் மோசே வனாந்தரத்திலே செய்யப்பட்ட வெண்கல சர்ப்பத்தையே அதினுடைய அடையாளமாக கொண்டுள்ளது, இதனால், தேவனையும், அவருடைய வார்த்தையையும் புறக்கணித்ததினால் அவர்கள் அவருடைய வல்லமையை நிராகரித்து ஒரு வெண்கல சர்ப்பததை செய்துக்கொண்டார்கள். 2 நாளாகமம் 16:12 ல் இப்படியாக கூறுகிறது, "... அவன்(ஆசா இராஜா) தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்." நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த நல்ல ராஜா மருத்துவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தார் என்ற உண்மையை தேவன் விரும்பவில்லை. இது மருந்துகளின் எல்லைகளுக்கு வெளியே அல்லது மருந்துக்கு அப்பால் போகும் போது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
29 ஜெபநேரத்தில் இந்தக் கேள்வியை உங்களிடமே கேளுங்கள்:... என் கை வளரவில்லை என்றால் எப்படி ஒரு நாள் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக என் சரிரம் மாறும்? என் கண்கள் திறக்கப்படாவிட்டால், எப்படி எனது முழு சரிரம் மாறும்? நான் எய்ட்ஸினால் குணப்படுத்த படாவிட்டால், நான் வயிற்றுப் புண்னினால் (Ulcer) குணப்படுத்த படாவிட்டால். நான் அனைத்து பேய்களிள் இருந்து விடுவிக்கப்படவில்லை என்றால்... என்னுடைய முழு சரிரம் எப்படி மாறும்? ஜெப வரிசைக்கு வருவதற்கு முன்பு அந்த விசுவாசத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அவர், நான் ஆராதிக்கின்ற இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும், எப்போதும் மாறாதவராக இருக்கிறாரா? வேதாகமம் ஒரு புராணக் கதையா அல்லது உண்மையான ஒன்றா? இவை எல்லாம் நீங்கள் விரும்புவதை சார்ந்துள்ளது. நீங்கள் ஒரு வரலாற்று இயேசு கிறிஸ்துவை விரும்பினால், அவரை நீங்கள் பெறுவீர்கள்!! நீங்கள் ஒரு விஞ்ஞான இயேசு கிறிஸ்துவை விரும்பினால், அவரை நீங்கள் பெறுவீர்கள்!!. ஆனால் என்னை பொருத்த வரை இயேசு கிறிஸ்து கூறினதாவது:"விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் பின் தொடரும்..." என்று என்னுடனே சொன்னார், மேலும் என்னுடைய விசுவாசம் இதன் மேல் நிலைத்திருக்கிறது. "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்." என்று சொன்னார். நம்முடைய அவிசுவாசம் ஒரு தடையாக இருக்க வேண்டாம். நாம் தேவனை கட்டுப்படுத்தக் கூடாது ஏனெனில் மீட்டளிக்கப்படுதல் அதை கோருகின்றது.
30 ஆதியாகமத்தின் படியாக மனிதனுக்கு தேவனுடைய அதிகாரப்பூர்வமான மீட்டளிப்பானது ஏதேனுக்கு திரும்புவதாகும் ஜீவனுள்ள சபைக்கு திரும்புவதாகும் வல்லமையை மீட்டளிப்பதாகும். தேவன் அதை மறுபடியுமாக செய்து, உலக தோற்றத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பே வார்த்தையானது உருவாக்கியவர்களை இரட்சிப்பதற்க்காக, வில்லியம் ப்ரான்ஹாமுக்கு மேலே உள்ள அக்கினி ஸ்தம்பம் தான் ஏப்ரல் 24, 1993 ன் தூதன் என காண்பிக்கும். ஏனெனில் மற்ற வரங்களைப் போன்று தெய்வீக சுகமளித்தல் முதலாவதாக அழைப்பிற்காக உள்ளது... இந்த முக்கியமான கட்டத்திற்கு முன்பாக உள்ள வழிமுறைகள். இது யோசுவா 3: 7 கான நேரமாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
31 திருச்சபைக்கு தேவன் கொடுத்திருக்கும் நற்செய்தியின் மிகச் சிறந்த வழி, அது தெய்வீக சுகமளித்தல். ஊடகங்களும் மற்றவர்களும் முன், அது தெய்வீக சுகமளித்தல் மற்றும் அது எப்போதும் தெய்வீக சுகமளித்தலாக இருக்கும். அதனால்தான், பிரசங்கிகள் வியாதியஸ்தர்களுக்காக அவர்களுக்கு வழிநடத்தப்பட்ட விதத்தில் ஜெபம் செய்யலாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
32 இந்த செய்தியின் விரிவாக்கத்திற்காக, விசுவாசமுள்ள எவருக்கும் மற்றும் இந்த தலைமுறையில் பூமியின் மேல் தேவன் அனுப்பின ஒரே தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு என்று அறிக்கையிடுகிற எவருக்கும் நீங்கள் ஜெபம் செய்யலாம், அது ஒரு பாவம் அல்ல. அவருடைய மத விசுவாசம் ஒரு பொருட்டு அல்ல, யாரோ ஒருவருக்கு தெய்வீக சுகமளித்தலை களைகளில் விழுகிற மழையைப் போன்ற தெய்வீக சுகமளித்தலை தேவன் அனுகிரகம் பன்னினாலும், அவன் உயிருள்ள தேவன் இங்கே இருப்பதையும், அதன் முலமாக அவன் ஒரு நாள் மனமாற முடியும்.
33 சபைக்கு முன்பாக ஜெப வரிசைகள் அல்லது தனிப்பட்ட ஜெபங்களுக்கு, நீங்கள் அனைவருக்கும் முன்பாக அந்த நபருடன் பேசலாம். உதாரணமாக: " காலை வணக்கம் ஐயா அல்லது மேடம்... உங்களுடைய தேவை என்ன? தேவனால் இதைச் அல்லது அதைச் செய்ய முடியும் என்று முழு மனதுடன் விசுவாசிக்கின்றீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே என் ஜெபத்தின் மூலம் உங்களைக் குணமாக்க முடியும் என நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் இதை அல்லது அதை விசுவாசிக்கின்றீர்களா"? பின்னர், இந்த நபருக்கு ஜெபம் செய்யுங்கள். அது ஒரு பாவம் அல்ல. நீங்கள் ஒரு சிறப்பு சுகமளித்தலுக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம்.
34 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, ஏப்ரல் 24, 1993 ன் தேவதூதன் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துவார். சாட்சிகள் எங்கும் பரவி, மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் வருவார்கள், ஆனால் உங்களுடைய பிரசங்கத்தை ஒழுங்கில் வைத்துக்கொள்ளுங்கள். மாநாடுகள் போன்ற பொது கூட்டங்களில் வியாதியஸ்தர்களை நினைவு கூறுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
35 தெய்வீக சுகமளித்தல் அல்லது விடுதலை மூன்று கோட்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஜெபித்துவிட்டு, குணமடையவில்லை என்றால், இரண்டாவதாக, நீங்கள் அந்த நபருடன் அவரது வாழ்க்கையைப் பற்றி பேசி மீண்டும் ஒருமுறை ஜெபிக்க வேண்டும். பிறகு மீண்டுமாக, குணமடையவில்லை என்றால், நீங்கள் அந்த நபருடன் மீண்டும் ஒருமுறை பேசுங்கள், ஆனால் இந்த முறை, உங்கள் வெளிப்பாடுகளின்படி அல்லது அவரது வெளிப்பாடுகளின்படி, தடையைக் கண்டறியவும். நீங்கள் அந்த நபரை வழி நடத்துங்கள், அவர் தனது வாழ்க்கையை ஒழுங்கில் அமைக்க வேண்டும், நீங்கள் மீண்டும் ஒருமுறை ஜெபியுங்கள். சுகமளித்தல் பின்தொடரும். ஆமென்.