en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 39 (Kc.39) : தானியேல் 11 ன் பிரகாரமாக பிரன்ஹாமிஸ்டு போப்பாட்சிமுறை.
(டிசம்பர் 12, 2004 இல் ஞாயிரு காலை லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கக்கப்பட்டது)
1 நல்லது! இன்று காலை வேளையில் நான் தானியேல் 11: 29 முதல் 39-ல் பிரசங்கிக்க விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, மனுஷகுமாரன், தீர்க்கதரிசி செய்தியாளன் கூறினதாவது "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்றார். இதை அவர் யோவான் 9:5 ல் கூறினார். அதாவது "நான் உலகத்திலிருக்கையில்" ஏனெனில் அவர் உலகத்தை விட்டு கடந்து போகும் போது, வேறொருவர் உலகத்தின் ஒளியாக இருப்பார்.
2 பூமியில் இருந்தவரை பவுல் உலகத்தின் ஒளியாக இருந்தார், கொலம்பன், பாலி கார்ப், அன்டிபாஸ் மற்றும் மார்டின் லூதர் ஆகியோர் பூமியில் இருந்தபோது உலகத்தின் ஒளியாக இருந்தார்கள். ஜான் வெஸ்லி மற்றும் வில்லியம் பிரான்ஹாம் ஆகியோர் இந்த உலகத்தில் இருந்தவரை உலகத்தின் ஒளியாக இருந்தனர் மற்றும் மத்தேயு 25:6-ன் தீர்க்கதரிசி செய்தியாளன் அவருடைய தலைமுறையின் வெளிச்சமாக இருப்பார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஏப்ரல் 24, 1993 ன் தரிசனத்தில் நீங்கள் அதை கண்டு இருக்கிறீர்கள்... நான் அதைப் வாசிக்க போகிறேன்: “மேலும் மேக தோற்றமளித்த ஒரு மனிதர், ஒரு பட்டயத்தை பிடித்துக்கொண்டு செம்மறியாட்டுக்குட்டியுடனே வானத்திலிருந்து இறங்கி வந்தார், பூமி மறுபடியும் பிரகாசமாயிற்று." . [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
3 மேலும் இன்று, இருபது ஆண்டுகளில் ஜனங்கள் எதை அறிந்துக் கொள்வார்கள் என்பதை பற்றி பேச விரும்புகிறேன். தேவனின் கிருபையினால், நமக்கு வேதாகமத்தில் கிட்டத்தட்ட இரகசியம் ஏதும் மீதமாக இல்லை. என்ன அதை உரைக்கப்பட்ட வார்த்தையாக நமக்கு விவரித்து இருக்கிறார். வெளிப்படுத்தல் 12:1 ஆம் வசனத்தில், இந்த ஸ்திரீக்குள் யூதமதம் மற்றும் கிறிஸ்துவம் இருக்கிறதை காண்கின்றோம். மேலும் 3 ஆம் வசனம் முதல் 6 ஆம் வசனம் வரை அது மறுபடியுமாக யூதமதம், 6 ஆம் வசனத்திலிருந்து எலியா மற்றும் மோசேயின் ஊழியம். இது "ஒரு காலமும், காலங்களும், நியமிக்கப்பட்ட அரைக்காலமும்" என்ற சொற்றொடர் அல்ல, ஆனால் வெளிப்படுத்துதல் 11:3 ல் உள்ளதை போன்று எண்ணிக்கையில் உள்ளது. பின்பு வெளிப்படுத்துதல் 12:13 முதல் 16 அது கிறிஸ்தவமும் மேலும் 17 ம் வசனத்தில் அது யூதமதம் மற்றும் கிறிஸ்தவமாக இருக்கின்றது.
4 நல்லது! தானியேல் 11 க்கு மீண்டுமாக வருவோம். இப்போது ஒரு தீர்க்கதரிசனம் ஒவ்வொரு காலத்திற்க்கும் அதன் விளக்கத்தை கொண்டிருக்கும் என்று அறியுங்கள் . ஆகையால், தீர்க்கதரிசியானவன் தனது காலத்தின் விளக்கத்திற்காக காத்திருக்க வேண்டும், மற்றபடி அவன் கடந்த காலத்திற்கான வெளிப்பாட்டை தன்னுடையதாக எடுக்கக்கூடாது, அல்லாமலும் அவன் தேவனை விட வேகமாக செல்லக்கூடாது.
5 தானியேல் 11 மற்றும் தானியேல் 12 இதெக்கேல் நதியின் தரிசனத்தின் ஒரு நீட்டிப்பு மற்றும் தெற்க்கானது தானியிலேுக்கு தூதன் கொடுத்த விதிமுறைகளின் மையமாக உள்ளது. தெற்க்கு அது ஆப்பிரிக்கா. Septentrion (வடக்கு) அதாவது ஐரோப்பா. கிழக்கு அல்லது உதயம் அது ஆசியா. அஸ்தமனம் அல்லது மேற்கு அது அமெரிக்கா. ஆனால் வடக்கு மற்றும் தெற்கு இந்த வெளிப்பாட்டின் மையத்தில் உள்ளன என்பதை நாம் காண்கிறோம்.
6 இப்போது தானியேல் 11:29 முதல் 39 ல் இந்த பத்து வசனங்களை நாம் காணலாம். முதலாவது தானியேல் 11:29 முதல் 35-ஐ கவனியுங்கள். நல்லது! சாயங்கால வேளையிலிருந்து, பரிசுத்த உடன்படிக்கையானது திருச்சபையின் மீட்டளிப்பதற்கான அதன் கட்டத்தில் உள்ளது. இது எல்லாவற்றையும் மீட்கும் நேரத்தின் துவக்கமாக உள்ளது. இது இறுதி முடிவின் தொடக்கமாகும்.
7 இனி, தேவன் "குறித்த காலத்திற்க்கு" என்ற சொற்றொடரை பயன்படுத்துகிறார். ஆனால் 40வது வசனத்தில், சேவல் கூவும் நேரத்தின் துவக்கத்தில் "முடிவு காலத்தில் ...". என்ற சொற்றொடரை தேவன் பயன்படுத்துகிறார்.அனைத்தும் துல்லியமாக மாறுகிறது. மேலும் தானியேல் 11 கூறுகிறதாவது, "அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்." ஆமென்! அது என்ன?
8 டாமி ஆஸ்போர்ன், பென்னி ஹின், மோரிஸ் செருல்லோ, பாருட்டி கசோங்கோ, ... எழும்புவார்கள் ஆனால் இந்த பிசாசுகளின் படையெடுப்பை வலிந்து செயல்பதிறவர்கள். தங்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்தி எழுவார்கள், நாம் 31 வசனத்தை பார்க்கலாம்: தேவன் ஒரு செய்தியைக் கொண்டு மீட்பார், ஆனால் இந்த சபைகள், புருஷர்கள் மற்றும் பிசாசின் புத்திரர்கள் அவர்கள் சார்பாக இருப்பார்கள், வடக்கில் இருக்கும் இராஜா மற்றும் அமெரிக்காவின் சார்பாக இருப்பார்கள். வடக்கின் இராஜா என்ன செய்வான்? அவன் பாழ்க்கடிக்கும் அருவருப்புடன் பரிசுத்த உடன்படிக்கைக்கு எதிராக வருவான். அது என்ன?
9 பாழாக்கும் அருவருப்பு என்ன? நான் வசனம் 31 ல் சிறிது நிறுத்துகிறேன்: இந்த விஷயங்களை நிறைவேற்றுவது மூன்று கட்டங்களாக உள்ளது. முதலாவதாக, கி.மு 168 ஆம் ஆண்டில், அந்தியோக்கியஸ் எபேசியஸ் யூதேயாவைக் படையெடுத்து 4000 யூதர்களைக் கொன்றான். அவன் அனைவருக்கும் ஒரு பகுதியை பிரகடனம் செய்து மேலும் எருசலேமிலுள்ள தேவாயல்த்தை ஜீயல் கடவுளுக்கு (Zeus God ) அர்ப்பணித்தான். அங்கே அவன் வியாழன் தேவனின் (Jupiter) சிலை ஒன்றை எழுப்பி; பலிபீடத்தின் மீது பன்றிகளை பலி செலுத்தினான். பிறகு எல்லா யுதர்களையும் வியாழனை வணங்கும் படி வற்ப்புறுத்தினான். இது பாழாக்கும் அருவருப்பின் முதல் கட்டமாகும்.
10 இரண்டாம் கட்டத்தில், கி.பி 70 ம் ஆண்டில் ஆலயத்தை அழித்தல் மற்றும் அந்த எல்லையில் ஒரு மசூதி எழுப்பப்பட்டதாகும். அது ஒரு பரிசுத்த ஸ்தலத்தை பாழாக்கும் அருவருப்பானது. மூன்றாவதாக, இன்று என்ன நடக்கிறது? இந்த பிரசங்கம் கடினமானது ஆனால் நான் அதை சொல்ல வேண்டும் மற்றும் நீங்கள் என்னை பொருத்துக் கொள்ளும் படியாக நான் கெஞ்சுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11 மிருகமானது எப்பொழுதும் ஐரோப்பாவிலிருந்து வருகிறதென்பது நமக்குத் தெரியும், அங்கும் நடுராத்திரி சதத்தத்தை தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் விசுவாசிப்பார்கள். நன்றாகப் பின்தொடரவும்! முதலாவதாக, ரோமாபுரி அதன் சொருபமாக ஐக்கிய அமெரிக்கா உள்ளது. இரண்டாவதாக, ரோமன் கத்தோலிக்கம், அதினுடைய சொருபமாக இப்பொழுது இருக்கின்ற புராடஸ்டன்டுகள், அதனுடைய தலைமை ஐக்கிய அமெரிக்கா.
12 மற்றும் மூன்றாவதாக, தீர்க்கதரிசனத்தை நிலைநாட்டவும், தேவன் மீது குழப்பம் இல்லாமல் இருக்கவும், நடுராத்திரி சத்தத்தின் தேவனின் வல்லமை மூலம் ஒரு ஐரோப்பிய, எவால்ட் ஃபிராங்க் தேர்ந்தெடுத்து சாயங்கால செய்திக்கு வில்லியம் பிரான்ஹாம் மூலம் அதை நிறுவ வேண்டும். எவால்ட் பிராங் மற்றும் அலெக்சிஸ் பரைலியர் ஆகியோரின் தெற்கின் மகளிடத்திற்கு ஒவ்வொரு பயணமும், அதாவது தானியேல் 11 இல் உள்ள ஆப்பிரிக்காவில் உள்ள சபைகள்.
13 இந்த சிறிய ஐரோப்பிய மனிதன் எவால்ட் பிராங்க், தானாக ஒளியூட்டப்பட்டு வில்லியம் பிரான்ஹாமின் செய்தி மூலம் புகழ் பெற்று கொண்டு இறையியலை கொண்டு வந்தான்,தேசங்களின் அருவருப்பு அதை வெளிப்பாட்டின் பலிபீடத்தின் மீது ஒரு பன்றியை தியாகம் செய்வது போன்றது . எவால்ட் பிராங்கின் பிரசுரங்கள், அவைகள் தேவனின் பலிபீடத்தின் மீது அந்தியோக்கியஸ் IV ன் பன்றிகள்.
14 எவால்ட் பிராங்கின் பிரசுரங்கள், அது எருசலேம் ஆலயத்தின் இடத்தில் உள்ள அல்-அக்சா மசூதி. ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் பேசின பிறகு, அவர் பேசின காரியங்களை யாராலும் திருத்த முடியாது என்பதை அறியாத அனைவருக்கும் எவால்ட் பிராங்க் என்பவன் நவீன முன்னோடியாக இருக்கிறான்.
15 நல்லது, 33 ஆம் வசனத்தில் கூறினதாவது ஞானமுள்ள, ஞானமுள்ள கன்னிகைகள் இரும்பின் ஒரு கோலைக் கொண்டு ஜனங்களை மேய்ப்பார்கள் ... இதை நாம் வாசிக்கலாம்: "ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்.
16 33 ஆம் இந்த வசனம் அர்மகெதோன் போரின் துவக்கமும் 34 வது வசனமும் வெளிப்படுத்துதல் 12:15, வெளிப்படுத்துதல் 19:11 மற்றும் வெளிப்படுத்துதல் 16:13 முதல் 16 அதாவது, கிறிஸ்தவர்கள் துன்புறுத்துதல் உண்மையிலேயே நிறைவேறும், மேலும் அவர்கள் நம்மிடத்தில் சேருவார்கள், இன்னும் சிலர் கொல்லப்படக் கூடும் இருப்பினும் அவர்கள் நரகத்திற்க்கு செல்வார்கள்.
17 அங்கே தான் மத்தேயு 22:12-ன், கலியாண விருந்திற்க்கு கலியாண வஸ்திரம் இல்லாமல் நுழைந்தவரின் இரகசியம் உள்ளது. அவர்கள் முன்பு நிராகரித்து விட்டு பிறகுதிடீரென வந்தவர்கள். உங்களால் காண முடிகிறதா? அவர்கள் விசுவாசிக்கவில்லை, பிரசங்கம் செய்யவில்லை மற்றும் செய்தியின் ஆவியை பெறவில்லை. அவர்கள் எந்த கிரியையும் செய்யவில்லை, அப்படியிருந்தும் கலியாண வஸ்திரத்தை பெற்றுக் கொண்டார்கள். திருச்சபையின் பல்வேறு துன்புறுத்தல்களால் அவர்கள் நுழைந்தார்கள். அவர்கள் கொல்லப்பட்டு மற்றும் கிறிஸ்தவர்களுடைய அதே தண்டனையை அனுபவித்தார்கள். இங்கே தான் இது காரியம் நடந்தது. அது மத்தேயு 22:12 ல் உள்ளது. அவர்கள் நம்முடைய சொந்த சகோதரர்களாகவும், துன்புறுத்தல்களால் யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் முடமாகவும் இருக்கிறார்கள். துன்புருத்தலின் முலமாக மட்டுமே இந்த ஆவிக்குரிய தரித்திரர்கள், ஆவிக்குரிய நொண்டி, ஊனமுற்றோர் மற்றும் குருடர்கள் உள்ளே நுழைய முடியும். அங்கு, மத்தேயு 13 ன் தூதர்களால் வேரு பிரிக்க முடியவில்லை, இந்த வேரு பிரித்தலை ஏஜமானனே செய்தார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
18 மேலும் 35-ஆம் வசனம் கூறுகிறது, சில ஞானிகளும் கூட விழுவார்கள், ஆனால் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக எழும்புவார்கள். ஏன்? மாம்சத்தினாலே அவர்கள் செய்கிறதிற்க்கு கடினமாயிருந்த அந்த படி மரணத்தின் முலமாக கடந்து வரும். வசனம் 35-ல் அது கூறுகிறதாவது: "அது ஒரு குறித்தக் காலத்திற்குத்தான்". நான் ஒன்று கூறும்படியாக உணர்ந்தேன் : "ஒரு குறித்தக்காலம் அல்ல, ஆனால் ஒரே ஒரு (The) குறித்தக்காலம்" அந்த குறித்தக்காலத்தில் அவர்கள் வீழ்வார்கள்." இன்னுமாக அதே இயற்கைக்கு மேம்பட்டதாக இருக்கின்றது. நான் அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கூறுகிறேன். எனவே, காலங்கள் முடிவதற்குள், அதுவே குறிக்கப்பட்ட நேரமாகும், மேலும் அது இப்போது தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 ஒரு காரியத்தை தெரிந்துக் கொள்ளுங்கள், தானியேல் 11:38 ஆனது, கத்தோலிக்கர்களின் போப் அல்லது அவனது புராட்டஸ்டன்ட் மற்றும் சுவிசேஷப் சொருபங்களை பற்றி பேசுவதில்லை, ஆனால் ஒரு புறத்தில் எவால்ட் பிராங் ,அலெக்சிஸ் பாரிலியர் மற்றும் அவர்களை தொடருகிறவர்கள் மற்றும் இன்னொரு புறத்தில் ஜெபர்சன்வில்லைக் குறித்தது. உலகம் முழுவதும் அவர்களை பாராட்டுகின்றது. ஒரு நிமிடத்தில், எவால்ட் பிராங்கின் சத்தம் பூமியின் கடையாந்தரங்களை சென்று அடையும். எந்த ஜனாதிபதியும் அதை செய்ய முடியாது. நான் என்ன கூறுகிறேன் என்று மற்றவர்கள் அதை பிறகு புரிந்து கொள்வார்கள் ஆனால், அதை அவ்விடத்திலேயே புரிந்துக் கொள்ளும் ஒரு வித்தானது அதற்க்கு "ஆமென்" என்று சொல்லும், [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
20 அனைத்து பிரன்ஹாமிஸ்டுகளும் பிரன்ஹாம் கூடாரத்திற்கு ஒரு முக்கியத்துவத்தை கொண்டுள்ளனர். அவர்கள் மிகவும் விக்கிரகாராதனைக்காரர்களாக இருக்கிறார்கள்., போதகர்கள் மற்றும் விசுவாசம் உள்ளவர்களும் ஒரு நாளிலே இந்த புனிதத்தலத்தின் நடந்து செல்லும் படியாக கனவு காண்பார்கள். அவர்களுடைய சபைகளில், பிரன்ஹாம் கூடாரத்தின் பிரசங்க பீடம் போன்ற மாதிரியில் இருக்கும். அது என்ன? ஜெப்சன்வில்லில் உள்ள வத்திக்கான் நகரம், மற்று அதிலுள்ள பிரன்ஹாம் கூடாரமே ரோம் நகரத்திலுள்ள உள்ள புனித பீட்டர் தேவாலயமாகும்.
21 பிரன்ஹாம் கூடாரம் புதியதொரு புனித யாத்திரை ஸ்தலம், ஏனெனில் மிருகமானது இருந்தால், அங்கே வத்திக்கான் நகரம் மற்றும் அதன் சிறிய புனித பேதுரு தேவாலயம் ஆகியவை இருக்க வேண்டும். வில்லியம் பிரன்ஹாம் வரவிருக்கும் விஷயங்களை ஒரு தரிசனத்தில் பார்த்த கதீட்ரல் போன்ற இடம் இதுதான். இதை தான் நடு ராத்திரியில் ஆவியானது கூறுகிறது. மேலும் இது தீர்க்கதரிசியின் வார்த்தை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22 ஆதியிலே, வெளிப்படுத்துதல் 16:13-ல் பொய்யான தீர்க்கதரிசி அது ரோமின் போப்பாக இருந்தது, ஆனால் இப்போது இந்த பொய்யான தீர்க்கதரிசி க்ரெபெல்டில் உள்ள பிரன்ஹாமிஸ்டு போப்பாக இருக்கிறான். 56 வது சுற்றறிக்கைக் கடிதத்தில் எவால்ட் பிராங்க் மற்றும் வில்லியம் பிரான்ஹாமின் பிள்ளைகளின் புகைப்படத்தை நீங்கள் பார்க்கிறீர்களா? அது சரியாக பில்லி கிரஹாம் மற்றும் போப் ஜான் பால் II ஆகியோரின் புகைப்படம் போலவே இருக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? பில்லி பால் ... அதாவது அமெரிக்காவில் உள்ள பில்லி கிரஹாமின் செல்லப்பெயர் புராட்டஸ்டன்ட் போப் மற்றும் போப் ஜான் பால் II அது வடக்கில் உள்ள மிருகம் அதாவது ஐரோப்பா.
23 சகோதரர்களே, இன்று இந்த பிரன்ஹாமிஸ்டு இயக்கம் தான் என்ன? இது வேரு ஏதும் இல்லை இது கிறிஸ்தவ கொள்கை மீறுதலின் புதிய கூடு. மேலும் நடுராத்திரி சத்தம் அதினுடைய முகமூடி கிழித்ததினால் அது என்றென்றும் சதாகாலமும் மரியாதை, பாராட்டு மற்றும் மாட்சிமைக்கு தகுதியுடையது, [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24 பில்லி கிரஹாம் மற்றும் டாமி ஆஸ்போர்ன் ஆகியோர் ரோமில் உள்ள போப்பிற்கு முன் புராட்டஸ்டன்டின் அந்திகிறிஸ்துவின் தம்பதிகளாக இருக்கின்றனர், பில்லி பால் மற்றும் ஜோசப் ப்ரான்ஹாம் ஆகியோர் எவால்ட் பிராங்கிற்கு முன் உள்ள பிரன்ஹாமிஸ்டு புராட்டஸ்டன்ட்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அது பில்லி பால் மற்றும் ஜோசப் ப்ரான்ஹாம் ஆகியோர் மனிதகுலத்திற்க்கு தாங்கள் சாமுவேலின் காலத்தில் உள்ள ஏலியின் இரண்டு குமாரர்களான ஒப்னி மற்றும் பினெகாஸ் இல்லை என்று காண்பிக்க வேண்டும். அல்லாமலும், திஸ்பியனாகிய எலியாவின் இரண்டு மகன்கள் மற்றும் தேவன் அவர்கள் இறக்கும்முன் இந்த செய்தியோடு அறிக்கையிட அவர்களை அனுமதிக்கும்.
25 ஆனால் சுற்றறிக்கையின் கடிதம் 56 ல் எவால்ட் பிராங்கிற்கு பக்கத்தில் பில்லி பால் மற்றும் ஜோசப் ப்ரான்ஹாம் ஆகியோரின் புகைப்படம் மிக முக்கியம் வாய்ந்தது, ஏனெனில் ஒரு தேவ தூதன் சாத்தானின் தூதனுக்கு அருகில் நின்று அதே படத்தில் இருக்க முடியாது. இது பில்லி கிரகாம் மற்றும் போப் ஜான் பால் II போல ஒரே படத்தில் காட்டுகிறது. அனைத்து பிரன்ஹாமிஸ்டு புராட்டஸ்டன்ட் உலகமும் மற்றும் அனைத்து பிரன்ஹாமிஸ்டு கத்தோலிக்க உலகமும் இந்த இரண்டு பெரிய மிருகங்களும் சாத்தானுக்கு முன்பாக ஒரு மணி நேரத்திற்கு தீர்க்கதரிசியின் அதிகாரம் பெறும் போது உலகம் மெச்சிக் கொள்கிறது.
26 முதலாவதாக அவர்கள் வலுசர்ப்பங்களாக இருக்கிறார்கள், பல்வேறு கூட்டங்களில் அதை நாம் பார்க்கின்றோம்; தலைகள், கருத்துக்கள் மற்றும் போதகங்கள் இவை யாவும் சாத்தானுக்கு முன்பாக ஒரு மணி நேரத்திற்கு அங்கு ஒன்று சேரும். இரண்டாவதாக, அவைகள் மிருகங்கள், மூன்றாவதாக அவைகள் வெளிப்படுத்துதல் 16:13 படி பொய் தீர்க்கதரிசிகள் மற்றும் அவைகள் மூன்று சாத்தானின் ஊழியங்களை வெளிப்படுத்துகின்றது. அவைகள் மேற்கோள்களாக இருக்கின்றது. ஆனால் அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல, உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்பாக அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்படாமலிருந்தவர்களே இவர்களை மெச்சிக் கொள்கிறார்ள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] வெளிப்படுத்துதல் 16:13 முதல் 16 படி சர்ப்பத்தின் வித்துகளை சேகரிக்க சாத்தான் இறுதி ஊழியமானது தவறான தீர்க்கதரிசி மற்றும் தவறான தீர்க்கதரிசிகளை கொண்டு பூமியெங்கும் பூரணமாய்ப் நிறைந்திருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27 நல்லது! 36-ம் வசனத்திற்க்கு நாம் திரும்ப வருவோம் ... தீர்க்கதரிசி எவால்ட் ஃபிராங்க அல்லது அலெக்சிஸ் பாரிலியர் காண்பிக்கும் தாழ்மை ஒரு பொருட்டு அல்ல. ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மூலம் வெளிப்படுத்தப்படுகிற தேவனுடைய வார்த்தைக்கு எந்த விதத்திலும் இந்த மிருகங்கள் ஒரு போதும் அக்கரைக் கொள்வதில்லை என வேதாகமம் கூறுகிறது. இன்று போப்புகளும் மதத் தலைவர்களும் என்ன வெளிப்படுத்துகிறார்களோ , அதை தேவனும் அவருடைய தீர்க்கதரிசிகளும் ஆரம்ப காலத்தில் உள்ள தாழ்மையான போப்புகள் மூலம் பார்த்துள்ளனர் ... [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28 இப்போது, ஏப்ரல் 24, 1993 தரிசனத்திலுள்ள இரண்டு புறாக்களை கவனியுங்கள். 1993 ஒரு முக்கியமான ஆண்டு, நான் ஜனாதிபதி ஹாக்பூட்டெட்டின் மரண ஆண்டு பற்றி சொல்ல முடிந்தது. யாராவது சொல்ல வேண்டுமானால் பழைய ஏற்பாட்டில், ஓசியா அரசரின் மரணத்தின் வருடத்தில் என்பது போல, அத்தகைய அரசனின் மரண வருஷம், மற்றொரு அரசனின் மரண வருஷம், அதனால் தான். இது தீர்க்கதரிசிகளின் மொழியாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 இந்த இரண்டு புறாக்கள் குறித்து என்ன? இந்த இரண்டு புறாக்கள் தேவனின் சாட்சிகள். பெரிய இதெக்கேல் ஆற்றின் விளிம்பில், தானியேல் அவர்களைக் கண்டார்; ஏனென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஒரு செயலைச் செய்தார். .தானியேல் 12:4-ல் சாயங்காலச் செய்திக்குப் பிறகு, தானியேல் அறியாத மொழியை 8 ஆம் வசனத்தில் கேட்க இருக்கும் பொழுது, இந்த இரண்டு புறாக்கள் தானியேலுக்கு தானியேலின் 12 வது வசனம் 5 ல் இரண்டு கதாபாத்திரங்களைப் போல தோன்றினார்கள்.
30 இங்கே, வெளிப்படுத்துதல் 10: 1,ன் பலமுள்ள தூதன், தானியேல் 10:4 மற்றும் ஏப்ரல் 24, 1993 ன் தரிசனம் இரண்டு கைகளையும் பரலோகத்திற்கு எழுப்பின. தானியேல் 12:5-ஐ வாசிப்போம்: "அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து,.. ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக்கேட்டேன். "
31 அங்கு இரு கரங்கள் ஏன் எறெடுக்கப்பட்டது? அதை குறித்து மற்றொரு பிரசங்கத்தில் வருகிறேன். ஆனால் இங்கே, தரிசனத்தின் இரண்டு புறாக்கள் அது எலியாவும் மோசேயும்! அறியாத மொழியின் வெளிப்பாடானது முழு பரலோகமே நகரும் அளவிற்க்கு ஒரு புனிதமான நிகழ்வாக இருந்தது: பலமான தூதன் மற்றும் இரண்டு புறாக்கள் விழாவில் கலந்து கொண்டன. தானியேல் அங்கே இருந்தார்! மோசே அங்கே இருந்தார்! எலியா அங்கே இருந்தார்! வில்லியம் பிரான்ஹாம் அங்கு இருந்தார்! அப்போஸ்தலனாகிய யோவான் அங்கு இருந்தார்! நீங்கள் பார்க்கிறீர்களா? அறியாத மொழியின் வெளிப்பாடு ஒரு பெரிய பணி மற்றும் தேவன் ஒரு மனிதனிடம் அதை ஒப்படைத்தார், பிரதான தூதனான காபிரியேல் அல்லது தேவசெய்தியாளன் மிகாவேல் அல்லது வேறொரு தூதனிடம் அதை தேவன் ஒப்படைக்கவில்லை ... ஆனால் ஒரு மனிதனுக்கு. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32 சகரியா தீர்க்கதரிசி அவர்களைக் கண்டார்; அப்பொழுது தூதனானவன் சகரியாவை நோக்கி: இவர்கள் பூமியிலுள்ள ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற எண்ணெயின் இரண்டு குமாரர்கள். ஆதியாகமம் 18 மற்றும் ஆதியாகமம் 19 ல் தேவன் இந்த இரண்டு சாட்சிகளோடு இறங்கி வந்தார். ஒருவேளை சில நேரங்களில் சிலர் கூறுகிற விதமாக இது காபிரியேல் மற்றும் மிகாவேல், ஆனால் நடு ராத்திரியில் மணமகனுக்கு வழங்கப்பட்ட வெளிப்பாட்டின் படி, இவை ஏப்ரல் 24, 1993 ன் அதே இரண்டு சாட்சிகள், மற்றும் வெளிப்படுத்துதல் 11. இந்த இருவரும் சோதோமின் குமாரர்களை குருடாட்டத்தினால் தாக்கினார்கள். அது என்ன? மிகாவேல் மற்றும் காபிரியேல் ஒருமுறையாவது இதை செய்தார்களா? அவர்கள் இன்னும் அதிகமாக என்ன செய்தார்கள்? அவர்கள் சோதோம் கொமோராவிலும் பரலோகத்திலிருந்து அக்கினியை அனுப்பினார்கள்.
33 வெளிப்படுத்துதல் 11:4 முதல் 5, 2 இராஜாக்கள் 1 மற்றும் 1 இராஜாக்கள் 18-ஐப் படிக்கவும் ... காபிரியேல் மற்றும் மிகாவேல் ஒருமுறை யாராவது ஒருவர் மரணத்தினால் அடித்திருக்கிறார்களா? காபிரியேல் மற்றும் மைக்கேல் தேவனின் இருபுறமும் நடந்திருக்கிறார்களா? வேதாகமத்தின் நடுவில் நாம் இரு சாட்சிகளான எலியாவும் மோசேயும் தானியேல் 12:5 புத்தகத்தில் காண்கின்றோம். மீண்டுமாக நாம் அவர்களை சகரியா 4ல் காண்கிறோம் புதிய ஏற்பாட்டில், மத்தேயு 17:3-ல் நாம் மறுரூப மலையில் அவர்களைக் காண்கிறோம்.
34 பின்னர் வேதாகமத்தின் முடிவில், வெளிப்பாடு 11 ல் அவர்களைக் நாம் காண்கிறோம். அது பரிபூரணமானது! ஆதியாகமத்தில், அவர்கள் இரண்டு சாட்சிகள் ஆதியாகமம் 18:16 மற்றும் வசனம் 20 படி தேவனிடம் உண்மைகள் காண்பித்தார்கள். ஒரு நாளிலே, நாம் அங்கு இருக்கும்போது, நாம் அங்கு இருப்பதைப் போன்ற சரியான உண்மை என்று நீங்கள் காண்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35 இப்பொழுது, ஏப்ரல் 24, 1993 இன் இந்த தரிசனம் எவ்வாறு முடிவடைகிறது? வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தண்ணிர்களுக்கு மேலே ஒரு ஏணி அமைந்திருந்தது. தேவ தூதர்கள் மேலும் கீழம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். சபையின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விசுவாசத்தின் கதாநாயகி முன்பு "பணிந்து கொள்வார்கள். விபியா பெர்பெடுயா ( Vibia Perpetua).
36 தனது சிறையில், ரோம வாள், 257 ஆம் ஆண்டில், தாக்குவதற்க்கு முன்பு, அவள் ஒரு தரிசனத்தில் கொண்டு செல்லப்பட்டாள், மேலும் அவள் பரலோகம் வரைக்கும் ஒரு ஏணி அமைக்கப்பட்டு இருப்பதை பார்த்தாள், இவ்விதமாக: "பெர்பெடுயா, நான் உனக்கு உதவும், செய்கிறேன் ஆனால் ஏணி அடிவாரத்தில் பொய்யான வலுசர்ப்பம் உன்னை கடிக்காமல் இருப்பதாக என்று." அந்த நேரத்தில், எசேக்கியேலின் உயிருள்ள ஜீவன் அது கன்றாக இருந்தது மற்றும் பரலோகத்தின் பாதை இரத்த சாட்சியாக இருந்தது, சிவப்பு வலுசர்ப்பம் கடந்து, பரிசுத்த வான்களின் இரத்தத்தை குடித்து.
37 . யாக்கோபு இதை ஆதியாகமம் 28:12 ல் பார்த்தார், "அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்." 1993 ஏப்ரல் 24-ஆம் தேதியன்று இந்தத் தரிசனத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், தேவன் யாக்கோபை நோக்கி, "உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நானே யெகோவா, ... நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
38 மேலும் யாக்கோபு பயந்து, "இதுதான் பரலோகத்தின் வாசல் என்றான்! யாக்கோபு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். நீங்கள் பார்க்கிறீர்களா? மத்தேயு 25-ன் பத்து கன்னிகைகளின் கலியானத்திற்குறிய வாசல்தான் வானத்தின் ஒரே வாசலாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39 பரலோக இராஜ்ஜயத்திற்க்கு ஒரு வாசல் மட்டுமே உள்ளது மேலும் அதில் ஒருவன் செய்தியின் முலம் நுழைகிறான், ஆனால் நரகத்திற்க்கு ஆயிரக்கணக்கான வாசல்கள் உள்ளன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார்: பாதாளத்தின் வாசல்கள் உன்னை மேற்க்கொள்வதில்லை; பாப்டிஸ்ட் வாசல்கள் உன்னை மேற்க்கொள்வதில்லை! கத்தோலிக்க வாயில்கள் உன்னை மேற்க்கொள்வதில்லை! மெத்தடிஸ்ட் வாசல்கள் உன்னை மேற்க்கொள்வதில்லை! பெந்தேகோஸ்தே வாசல்கள் உன்னை மேற்க்கொள்வதில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? இலவச பாப்டிஸ்ட், ஒரு வாசல். அடிப்படைவாத பாப்டிஸ்ட், ஒரு வாசல். திருத்தூதரக பாப்டிஸ்ட், ஒரு வாசல். மிஷனரி பாப்டிஸ்ட், ஒரு வாசல். தெற்கு பாப்டிஸ்ட், ஒரு வாசல். முழு சுவிசேஷத்தின் ஒரு பாப்டிஸ்ட், ஒரு வாசல். பணித்தளங்கள் மற்றும் ஊழியங்கள், ஒரு வாசல். பாப்டிஸ்ட் விசுவாசமும் மற்றும் ஜிவனும், ஒரு வாசல். பாப்டிஸ்ட் மெழுகுவத்தி, ஒரு வாசல். எவாஞ்சலிக்கல் பாப்டிஸ்ட், ஒரு வாசல். தி எவாஞ்சலிக்கல் பாப்டிஸ்ட் சபை, ஒரு வாசல். பெந்தேகோஸ்தே பாப்டிஸ்ட் திருச்சபை, ஒரு வாயில் ...
40 இந்தத் தலைமுறையின் உயிர் வாழும் தீர்க்கதரிசியின்படி நடக்காத பூமியிலுள்ள ஒவ்வொரு சபையும் நரகத்தின் வாசல் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த தலைமுறையின் ஜீவனுள்ள தீர்க்கதரிசி-தூதுவர் பூமியில் உள்ள ஒவ்வொரு சபைக்கும் நரகத்திற்கு ஒரு வாசல் இருக்கிறது என்பதை அறியுங்கள். ஒவ்வொரு கத்தோலிக்க தேவாலயமும், ஒவ்வொரு புராட்டஸ்டன்ட் தேவாலயமும், ஒவ்வொரு நற்செய்தி தேவாலயமும், ஒவ்வொரு பிரன்ஹாமிஸ்டு சபையும், ஒவ்வொரு பணியும், ஊழியமும் நரகத்திற்கு ஒரு வாசல். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
41 ஆதியாகமம் 28:12 முதல் 17 என்பது ஏப்ரல் 24, 1993 தரிசனத்தின் தொடர்ச்சி மற்றும் முடிவாகும் என்பதை அறிவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அந்த கதவைத் தவிர்த்து யாராவது கலியாணி விருந்திற்க்குள் நுழைந்தால் ... தேவன் அவனை தள்ளி விடுவார், இல்லையெனில் இந்த செய்தி தவறானது. ஒரு தலைமுறையில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனே பரலோகத்தின் வாசலாக இருக்கின்றனர். நானே இன்று வாசலாக இருக்கின்றேன் மேலும் என்னைத் தவிர வேறு எவனும் பிதாவிடம் வருவதில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
42 நாம் ஒரு மகிமையான நேரத்தில் வாழ்கிறோம். இரட்சிப்பு யூதர்களிடமிருந்து வந்தது. இரட்சிப்பு யூதர்களிடமிருந்து வருகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது இரட்சிப்பு ஆபிரிக்காவில் இருந்து வருகிறது, ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த செய்தியின் மூலம் தன்னை வெளிப்படுத்தப்படுகிறார், அவர் முலமாகவேமத்தேயு 25:6-ன் சத்தம் நம்மை வெளியேறுமாறு கேட்கிறது. ஓ! விலைமதிப்பற்ற ஒளி! ஓ! மகிமை வாய்ந்த செய்தி! ... நடுராத்திரி சத்தம் இயேசு கிறிஸ்துவே, மத உலகம் மறுபடியும் நிராகரிக்க வேண்டும், அதாவது, சிலுவையில் அறைய வேண்டும்.
43 யோவான் 6:28 முதல் 29 கூறுகிறதாவது : அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். மேலும் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் பூமியின் மேல் ஒரு வாசல் இருக்கின்றது அதினுடைய திறவு கோள்கள் பரலோத்தின் திறவுகோள்கள், மத்தேயு 16:19: "பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்...". ஆனால் பேதுரு இறந்துவிட்டார். பவுல் இறந்துவிட்டார், மார்ட்டின் லூதர் இறந்துவிட்டார், ஜான் வெஸ்லி இறந்துவிட்டார், வில்லியம் பிரான்ஹாம் இறந்துவிட்டார் ... ஆனால் பரலோக இராஜ்யத்தின் திறவுகோல யாரிடம் உள்ளது? ஒரு உயிருள்ள நபரிடம்! பரலோக ராஜ்யத்தின் திறவுகோள்கள் எப்பொழுதும் பூமியில் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற ஒருவரிடம் மாத்திரமே இருக்கும்.
44 வெளிப்படுத்துதல் 1:18-ன் பிரகாரமாக இயேசுவே இந்த திறவுகோலகளை கொண்டிருக்கவில்லை. நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் ... நீங்கள் பார்க்கிறீர்களா? "இதே விதமாகத்தான் மரியாள் எந்தவொரு மனிதனையும் அறியாமல் அதிசயமான விதத்தில் கர்ப்பம் தரித்தாள், இதே விதமாகத்தான் சிருஷ்டிப்பின்போது நிகழ்ந்தவைகளின் விபரங்களை மோசே பெற்றுக் கொண்டான், நீயும் நித்திய ஜீவ வார்த்தைகளை இந்த ஏப்ரல் 24, 1993 ல் பெற்றுக் கொண்டாய், இது தேவனால் நியமிக்கப்பட்டதாக இருக்கிறது. குறிக்கப்பட்ட நேரத்தில் நீ புரிந்து கொண்டு, முறைமையின்படி நீ கற்றரியாததை நீ போதிப்பாய், அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு". " அது என்ன? யோவான் 3:16 இன்று உயிரோடு இருக்கின்றது! நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
45 மோசே முதற்கொண்டு ஆதியாகமம் முதற்கொண்டு, ஒரு மனிதன் முதன் முறையாக தான் அறியாத விஷயங்களை ஒரு தரிசனம் அல்லது சொப்பனம் இல்லாமல் பேசுகிறான். தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் கூறினதை கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். இந்த செய்தி மனிதனிடத்திலிருந்து வர இல்லை. ஆகையால், இந்தச் செய்திக்கு எதிராக தன்னை எழுப்புகிற எவருமே 1993 ஏப்ரல் 24 தேதியின் தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியை எதிரியாக கொண்டிருக்கிறார்கள். கேட்கிறதற்க்கு காதுள்ளவன் கேட்க்கக்கடவன்!
--:--
--:--