en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 4 (Kc.4) : ஏழுசபைகாலங்கள்மற்றும்ஏழுமுத்திரைகள்
(2002 அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 எனவே, அப்போஸ்தலர் 2-ல் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதில் இருந்து ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் (Rapture) வரை, ஜாதிகளின் திருச்சபையானது (the Church of nations) ஏழு கட்டங்களாக அல்லது காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜாதிகளின் திருச்சபையானது வெளிப்படுத்துதல் 2-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது போல, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஏற்கனவே ஆசியாவில் இருக்கிற ஒரு குறிப்பிட்ட சபையை (assembly) போன்று காணப்படும். காரியம் இப்படியிருக்க, பவுலின் நேரத்தில், அங்கே தங்களை வேறுபடுத்தி காண்பித்த ஏழு சபைகள் அல்லது ஏழு சபைகூடுகைகள் (assemblies) இருந்தன, அவை ஒவ்வொன்றும் அதற்குரிய தனி பண்புகள் சிலவற்றை கொண்டிருந்தன, அனால் இரட்சிப்பைப் பொறுத்தவரையில், தேவன் எல்லா நேரங்களிலும் சபைகாலம் மூலமல்ல தலைமுறைமூலம் இடைபட்டார் என்பதை மனதில் வையுங்கள்.
2 யூதமார்க்கமானது தானியேல் 7 ன் படி நான்கு காலங்கள் பிரசங்கிக்கப்பட்டு அறியப்பட்டது, அதற்குப் பிறகு மேசியா வருவார். பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் தோற்றத்தோடு அங்கே சிங்கத்தின் காலம் இருந்தது, பின்னர் மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்துடன் கரடியின் காலம், பின்னர் உலக கிரேக்க சாம்ராஜ்யத்துடன் சிறுத்தையின் காலம், இறுதியாக ரோம சாம்ராஜ்யத்துடன் பெயரிடப்படாத மிருகத்தின் காலம். தானியேல் முதல் உலகின் முடிவு வரை, பூமியில் நான்கு தீர்க்கதரிசிகள் மட்டுமே இருப்பார்கள் என்று இதற்கு அர்த்தமா? நீங்கள் காண்கிறீர்களா? ஒரு காலத்தை ஒரு தீர்க்கதரிசிக்கு மட்டும் இணைத்தல், அது ஒரு பிசாசின் வேலையாக இருக்கிறது.
3 நியோலித்திக் என்னும் கற்காலம், ரோம-கிரேக்க பெருவாழ்வுக் காலம், மத்திய காலகட்டங்கள், ... இதுபோன்று பல காலங்களை மனிதகுலம் அறிந்திருக்கின்றது, மேலும் ஒரு காலத்தில் பல தலைமுறைகள் இருக்கும். மேலும் ஒவ்வொன்றும் அதன் இராஜாவுடன் வருகிறது. இரட்சிப்புக்கும் அது அதேபோன்றுதான். ஒவ்வொரு தலைமுறையும் அதன் தீர்க்கதரிசி செய்தியாளனுடன் வருகிறது. திருச்சபையின் காலங்களும் இந்தப் பிரகாரமாகத்தான் இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபை “ஆமென்” என்கிறது].
4 அங்கு எபேசு பட்டணத்தில் ஒரு சபை இருந்தது. அங்கு சிமிர்னா நகரத்தில் ஒரு சபை இருந்தது. அங்கு பெர்கமு நகரத்தில் ஒரு சபை இருந்தது. அங்கு தியத்தீரா நகரத்தில் ஒரு சபை இருந்தது. அங்கு சர்தை நகரத்தில் ஒரு சபை இருந்தது. அங்கு பிலடெல்பியா நகரத்தில் ஒரு சபை இருந்தது. கடைசியில், அங்கு லவோதிக்கேயா நகரத்தில் ஒரு சபை இருந்தது.
5 மேலும் அந்த ஏழு சபைகளும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டிருந்தன. பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதில் இருந்து ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் வரை, புறஜாதிகளின் திருச்சபையானது அந்த எழு காலங்களினூடாக செல்லவேண்டியுள்ளது, மேலும் இன்று காலை நான் அதைபற்றித்தான் பேசவிரும்புகிறேன். மேலும் இந்த ஒவ்வொரு காலங்களிலும், வஞ்சக ஆவியோடு போராட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவர் தமது வலது கரத்தில் வைத்திருக்கும் ஏழு நட்சத்திரங்களில் ஒன்றை பூமிக்கு அனுப்புவார். மேலும் பூமியின் மீது அனுப்பப்பட்ட இந்த நட்சத்திரம், அதை பரலோக தூதன் எனவேண்டும்; வஞ்சக ஆவியுடன் போராடுவதற்கென, ஒவ்வொரு தலைமுறையிலும் அது பயன்படுத்துவதற்காக ஒரு மனிதனை கட்டுக்குள் எடுத்துக்கொள்ளும். ஆகையால், இந்த காலமானது முடிந்துபோகாதவரை, இந்த நட்சத்திரத்தினால் அநேக ஜனங்களை உபயோகிக்க இயலும். உங்களால் காணமுடிகிறதா? [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
6 முதலாவது காலம் எபேசு திருச்சபையினுடையதாகும்: வெளிப்படுத்துதல் 2:1 முதல் 7. மேலும் அது இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு 53-ம் ஆண்டு முதல் 170-ம் ஆண்டு வரை பூமியில் நிகழ்ந்தது. மேலும் உலகம் முழுதிலுமுள்ள சபைகளில் இந்த திருச்சபையின் அம்சம் இருந்தது. இந்த காலத்தின் முதல் தீர்க்கதரிசியாக அப்போஸ்தலன் பவுல் இருந்தான். மேலும் பவுலுக்கு பிறகு, தேவன் சில தீர்க்கதரிசிகளை எழுப்பினார்; அவர்களுள் அந்தியோக்கியாவின் இக்னேசியஸும், சிமிர்னாவின் பாலி கார்ப்பும் இருந்தனர்.
7 ஜாதிகளின் திருச்சபையானது தேவனின் போலி ஊழியர்களால் வருத்தமடைந்தது. ஒரு தவறான உபதேசம் பிறந்தது, நிக்கோலாய் மதஸ்தருடைய போதகம்: மனுஷன் தேவனுடைய ஸ்தானத்தை விரும்புதல். வெளியே புறப்பட்டு வரும் அந்த ஜீவன் சிங்கமாக இருக்கிறது. வெளிப்படுத்துதல் 4:7 ன் படி, அங்கே நான்கு ஜீவன்கள் சிங்காசனத்தை சூழ்ந்திருக்கிறதை நீங்கள் அறியவேண்டும்: சிங்கம், கன்று, மனிதமுகமுடைய ஜீவன் மற்றும் கழுகு. முதலாம் காலத்திற்கு, அந்த பிசாசுடன் போராட புறப்பட்டு வரும் ஜீவன் சிங்கமாக இருக்கிறது.
8 இரண்டாவது காலம் சிமிர்னா திருச்சபையினுடையதாக இருக்கிறது: வெளிப்படுத்துதல் 2:8 முதல் 11. அது இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு 170-ம் ஆண்டு முதல் 312-ம் ஆண்டு வரை செல்கிறது. இந்த காலத்தின் முதல் செய்தியாளன் ஐரேனியஸ் (Irenaeus). அனேக செய்தியாளர்களை தேவன் எழும்பப்பண்ணினார், அவர்களுள் அலக்சாண்டிரியாவின் ஆரிகனும் இருந்தார், ஆனால் ஐரேயனியஸ் தான் இந்த காலத்தின் தகப்பனாக இருக்கிற அந்த ஒருவர்: அஞ்ஞான ரோமாபுரி இந்த காலத்தில் திருச்சபையை உபத்திரவப்படுத்திற்று.
9 கிறிஸ்தவர்களின் உடமைகள் அவர்களது விசுவாசத்தினிமித்தம் பறித்துக்கொள்ளப்பட்டது. கிறிஸ்தவர்கள் விக்கிரகங்களுக்கு பலி செலுத்தவேண்டுமென அவர்கள் கூறினர் இல்லையெனில் அவர்கள் மரணத்தை அபராதமாக பெறுவர். கன்று பலியாகும்படி வெளியே புறப்பட்டு வந்தது. உங்களால் காணமுடிகிறதா? இந்த காலத்தில் வெளியே புறப்பட்டு வந்த ஜீவன் (animal) கன்றுக்குட்டியாக இருக்கிறது, அது பலிபொருளாக இருக்கிறது, கிறிஸ்தவர்கள் அங்கே கொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரது வலதுகரத்தில் இருந்து இரண்டாவது நட்சத்திரத்தை அனுப்பினார், மேலும் இந்த நட்சத்திரம் ஐரேனியஸ் போன்ற சில செய்தியாளர்களை பூமியின்மீது அனுப்பிற்று என்பதையும் கூட அறிந்துகொள்ளவேண்டும்.
10 புறஜாதிகளுடைய திருச்சபையின் மூன்றாவது காலம் பெர்கமு திருச்சபையினுடையதாக இருக்கிறது: வெளிப்படுத்துதல் 2:12 முதல் 17. அது இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு 312-ம் ஆண்டு முதல் 606-ம் ஆண்டு வரை செல்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் மூன்றாவதாக ஒரு நட்சத்திரத்தை அனுப்பினார். இந்த நட்சத்திரம் ஏழுப்பின தீர்க்கதரிசிகளில் பரிசுத்த மார்டின், அலக்சாண்டிரியாவின் அதானாசியுஸ் மற்றும் ஜான் கிரிசொஸ்டம் அடங்குவர். இந்த காலத்தில் தான், பிலேயாமின் கொள்கையை ஸ்தாபித்ததான அந்த கத்தோலிக்க சபை பிறந்தது, அதுதானே, பண ஆசை, ஆடம்பரம் மற்றும் விக்கிரகாராதனையாக இருக்கிறது. மேலும் இந்த நட்சத்திரம், இந்த தூதன் அனேக செய்தியாளர்களை இக்காலத்தில் அனுப்பினான். நீங்கள் காண்கிறீர்களா?
11 பூமியில் தேவனுடைய செய்தியாளர்களை எண்ண விறும்புகிறவர்களுக்கு, இக்காலத்தில், அவருக்கு உண்மையுள்ள ஒரு மனிதனை தேவன் உபயோகிப்பார் என்றும் மேலும் அந்த மனிதன் அந்திப்பாவைப் போல மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுவான் எனவும் வேதாகமம் தெளிவாக சொல்கிறது. அதனோடுகூட, 66 புத்தகங்களுள்ள வேதாகமத்தை நாம் அறியும்படி செய்த அந்த மனிதன், அது பவுல், ஜான் வெஸ்லி, மார்டின் லூதர் அல்லது வில்லியம் பிரன்ஹாம் அல்ல ஆனால் யூசேபியஸ் ஆவார், மேலும் தெய்வீகமான பணிக்கப்படுதலின் கீழ் அந்த மனிதன் அதை மனிதயினத்திற்காக செய்தான்.
12 புறஜாதிகளுடைய திருச்சபையின் நான்காவது காலம் அதுதானே தியத்தீரா திருச்சபையினுடையதாக இருக்கிறது: வெளிப்படுத்துதல் 2:18 முதல் 29. அது 606-ம் ஆண்டு முதல் 1520-ம் ஆண்டு வரையாக இருக்கிறது. மேலும் இந்த காலத்தின் தகப்பன், அதுதானே, இந்த காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதான செய்தியாளனான கொலம்பன் ஆவார். புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் இன்று மனிதயினத்தை வஞ்சித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறதுபோல கத்தோலிக்கசபை ஐனங்களை வஞ்சிக்கிறதை சபையானது பார்த்துக் கொண்டிருந்ததற்காக தேவன் சபையை கடிந்துகொள்கிறார்.
13 அந்த 914 வருடங்களுக்கு, கொலம்பனுக்கு அப்பாற்பட்டு, விக்லிஃப், ஜான் ஹஸ் இன்னும் அதுபோன்று தேவனுடைய மகத்தான செய்தியாளர்கள் ஒருவருக்குப்பின் ஒருவராக தொடர்ந்து வந்தனர். அந்த 914 வருடங்களில், தேவனுடைய சமுகத்திலிருந்து ஒரே ஒரு தூதன் மட்டுமே புறப்பட்டுவந்தான், அந்த ஏழிலிருந்து வந்தது ஒரே ஒரு நட்சத்திரம் மட்டுமே. ஆனால் இந்த நட்சத்திரம் பல செய்தியாளர்களை பூமியில் எழும்பப்பண்ணினது.
14 புறஜாதிகளுடைய திருச்சபையின் ஐந்தாவது காலம், அதுதானே சர்தை பட்டணத்திலிருந்த திருச்சபையினுடையதாக இருக்கிறது: வெளிப்படுத்துதல் 3:1 முதல் 6. அது 1520-ம் ஆண்டு முதல் 1750-ம் ஆண்டு வரையாக இருக்கிறது. இந்த காலத்தின் மிகவும் குறிப்பிடப்படக்கூடிய செய்தியாளன் மார்டின் லூதர் ஆவார். மூன்றாவது ஜீவனானது வெளியே வருகிறது, அதுதானே மனித முகத்தையுடைய ஜீவனாக இருக்கிறது. அதில்தானே வல்லமை மிகுந்த செய்தியாளர்கள் இக்காலத்தில் பூமியில் இருந்தனர்: விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதலுக்காக மார்டின் லூதரும், இரட்டை முன்குறித்தலுக்காக ஜான் கால்வினும், அதன் பொருள், நித்திய ஜீவனுக்கென ஒரு முன்குறித்தல் மற்றும் நாசமடைவதற்கென ஒரு முன்குறித்தல்.
15 புறஜாதிகளுடைய திருச்சபையின் ஆறாவது காலம், அதுதானே பிலாதெல்பியா பட்டணத்திலிருந்த திருச்சபையினுடையதாக இருக்கிறது: வெளிப்படுத்துதல் 3:7 முதல் 13. அது 1750-ம் ஆண்டு முதல் 1906-ம் ஆண்டு வரையாக இருக்கிறது. இந்த காலத்தின் மிகவும் குறிப்பிடப்படக்கூடிய செய்தியாளன் ஜான் வெஸ்லி ஆவார். இதுதானே பரிசுத்தமாகுதல் மற்றும் ஆவிக்குரிய வெளிப்படுதல்களின் (spiritual manifestations) காலமாக இருக்கிறது. இதுதானே ஜான் வெஸ்லி, ஜார்ஜ் வைட்ஃபீல்டு மற்றும் வேறு அனேக செய்தியாளர்களின் காலமாக இருக்கிறது.
16 ஏழாவதும், கடைசியுமான காலம், அது நமது காலமாக இருக்கிறது. அதுதானே லவோதிக்கேயாவின் காலமாக இருக்கிறது. வெளிப்படுத்துதல் 3:14 முதல் 22. மேலும் அது 1906-ம் ஆண்டுமுதல் வில்லியம் பிரன்ஹாமுடன் ஆரம்பமானது மேலும் புறஜாதிகளின் கால முடிவுமட்டும் அது தொடரும். அதாவது, புத்தியில்லாத கன்னிகைகளுடைய உபத்திரவப்படுதல் முடிவுருமட்டாக இருக்கிறது. அது நான்காவது ஜீவனின் காலமாகும், அதுதான், கழுகு.
17 மேலும் கர்த்தராகிய இயேசு-கிறிஸ்து கடைசியாக ஏழாவது நட்சத்திரத்தை பூமியில் அனுப்புகிறார். மேலும் இந்த நட்சத்திரந்தானே எலியாவின் ஆவியாக இருக்கிறது. மாற்கு 13:35-ன் படி லவோதிக்கேயா நான்கு தீர்க்கதரிசன காலங்களைக் கொண்டுள்ளது. சாயங்கால நேரத்தில் வில்லியம் பிரன்ஹாமுடன், அது ஏழாவது பரலோக தூதனாக இருந்தது. நடுராத்திரியில் காக்குவ் பிலிப்புடன், அது ஏழாவது பரலோக தூதனாக இருக்கிறது. மேலும் சேவல் கூவும் வேளையில், பூமிக்குரிய ஒரு தூதனுடன், அது அதே ஏழாவது தூதனாகவே இருக்கும். எடுத்துக்கொள்ளப்படுதல் மட்டுமாக, எப்பொழுதும் பூமியில் வெவ்வேறு செய்தியாளர்களுடன் அதே ஏழாவது தூதனாகவே அது இருக்கும்.
18 மேலும் புறஜாதிகளின் காலம் முடியுமட்டாக, எவ்வளவு செய்தியாளர்களை இந்த எலியாவின் ஆவியானது எழும்பச் செய்யுமென்பதை நம்மால் அறியமுடியாது. ஆனால் வெளியே வருவது கழுகு என்பதை நினைவுகூருங்கள், வெளிப்படுத்துதல் 6:7, தீர்க்கதரிசியினுடைய மற்றும் வார்த்தையினுடைய ஆவி (Spirit). ஆனால் அதேநேரத்தில் வலுசர்ப்பத்தின் ஆவியும்கூட பூமியிலே சபைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது.
19 உங்களுடைய தீர்க்கதரிசி இப்படி ஒரு விஷயத்தைச் சொன்னார், ஆனால் நான், காக்குவ் பிலிப்பு, இதை உங்களிடம் சொன்னேன். இன்று, மார்ட்டின் லூதர் அல்லது ஜான் வெஸ்லியைப் போல ஞானஸ்நானம் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று நம்புவது சாத்தானியமானது. இன்று, ஒரு தீர்க்கதரிசி தூதர் ஒரு வயது முழுவதும் தனியாக இருப்பதாக நம்புவது சாத்தானியமானது. நேற்றைய இந்த சத்தியங்கள் இன்று பேய்களின் கோட்பாடுகளாக இருக்கின்றது. மேலும் நீங்கள் சாத்தானிய கோட்பாட்டுடன் மரித்தால், நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்.
20 ஜான் வெஸ்லி மார்ட்டின் லூத்தரைப் போல பிதா குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார். ஆனால் வில்லியம் பிரான்ஹாமிற்கு மூன்பு எந்த சபை காலத்தில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்த தீர்க்கதரிசி தூதர்? ஒரு எபேசியன் 4 அல்லது ஜான் வெஸ்லியின் சீடர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் மூழ்கி ஞானஸ்நானம் கொடுக்க முடியாது, ஏனெனில் ஒரு சீடர் தனது குருவை திரும்பத் திரும்பக் கூறுகிறார்.
21 நான் பேசும்போது, நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும் அது உங்களுடைய தீர்க்கதரிசி பேசுவதை போன்றது தான். இது ஒரு விவாதப் பொருளாக இருக்கக்கூடாது. மரித்த தீர்க்கதரிசியின் ஒரு சீஷனுக்கு, மரித்த தீர்க்கதரிசியால் நிறுவப்பட்ட கோட்பாட்டை நகர்த்த விரும்பும் உயிருள்ள தீர்க்கதரிசியுடன் வாதிட உரிமை இல்லை.
22 அந்த நான்கு ஜீவன்கள் சபைகாலங்களில் தேவனுடைய ஒரே ஆவியின் யுகங்களாக இருக்கிறது. அவைகள் பரலோகத்தில் தேவனின் சிங்காசனத்தை பாதுகாக்கிறது மேலும் அவை பூமியில் தேவனின் ஜீவிக்கிற சபையை பாதுகாக்கிறது, எசேக்கியேல் 1:4 முதல் 12. அவைகள் தான் அப்போஸ்தலநடபடிகள் புஸ்தகத்தை பாதுகாக்கிற நான்கு சுவிசேஷங்களாகவும் ஆதியாகமம் 3:24ல் ஜீவ விருட்சத்தை பாதுகாக்கிற கேரூபின்களாகவும் இருக்கின்றன. அவைகள்தான் பன்னிரண்டு கோத்திரங்கள், ஒவ்வொரு பக்கமும் மூன்றாக, உடன்படிக்கை பெட்டியை பாதுகாவல் செய்கின்றன. [ஆசிரியர் குறிப்பு:சபையார் "ஆமென்" என்கின்றனர்].
23 நல்லது. நாம் இப்பொழுது வெளிப்படுத்தல் அதிகாரம் 6 மற்றும் அதிகாரம் 8 ன் ஏழு முத்திரைகளை பார்க்கலாம். முதலாவது, முதல் முத்திரை, வெளிப்படுத்துதல் 6:1 முதல் 2: "செம்மறி ஆட்டுக்குட்டி ஏழு முத்திரைகளில் ஒன்றை திறக்கிறதை நான் கண்டபோது, வந்து பார் என்று நான்கு ஜீவன்களில் ஒன்று இடிமுழக்கம் போன்றதொரு சத்தமாய் சொல்கிறதை நான் கேட்டேன். நான் பார்த்தபோது: இதோ, ஒரு வெள்ளைக்குதிரை, அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது, அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்." வந்து பார் என்று யோவானை அழைப்பது சிங்கமாக இருக்கிறது.
24 தானியேல் 12:4ல், தானியேலைப்போன்று, இடிமுடிக்கங்கள் தேவனின் சத்தமாக இருக்கிறது (யாத்திராகமம் 19:16/ யோவான் 12:28 முதல் 29). இந்த காரியங்களின் வியாக்கியானம் யோவானுக்கு தொடுக்கப்பட்டது ஆனால் காலங்களின் முடிவு வரைக்கும் அவைகளை எழுதுவதற்கு அவன் தடைபண்ணப்பட்டான் (வெளிப்படுத்துதல் 10:4). அனைத்து காரியங்களும் திரும்ப அளிக்கப்படுங்காலத்தில், ஏழு முத்திரைகளை விளக்குகிற தேவனுடைய சத்தமாக இங்கே ஏழு இடிமுழக்கங்கள் இருக்கிறது.
25 குதிரையின் மீதிருப்பவன் ஒரு வில்லுடன் முன்னோக்கி நகருகிறான் ஆனால் அம்பு எதுவும் இல்லை. அவன் பூச்சாண்டி காட்டுகிறான், ஆனால் அவனால் எதுவும் செய்யமுடியாது. முதலில் அவன் கிரீடம் எதுவும் இல்லாமலிருக்கிறான் ஏனென்றால் அது ஒரு ஆவியாக இருக்கிறது, ஒரு போதகம் (வெளிப்படுத்தல் 2:6): அது நிக்கோலாய் மதஸ்தருடைய போதகம். ஆனால் அவன் ரோமாபுரியின் போப்பாண்டவராக, அந்திகிறிஸ்துவாக ஆனபோது கிரீடத்தை பெற்றுக்கொண்டான். மேலும் அப்போஸ்தலன் யோவான்: அந்திகிறிஸ்து வருகிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் இப்பொழுதே அங்கே அனேக அந்திகிறிஸ்துக்கள் இருக்கிறார்கள் என கூறுகிறான். ஆகையால், ஒவ்வொரு சபைகளின் தலைவர்களும் அந்திகிறிஸ்து என அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
26 இரண்டாவது முத்திரை: “அது இரண்டாவது முத்திரையை திறந்தபொழுது, வந்து பார் என்று கூறுகிற இரண்டாவது ஜீவனின் சத்தத்தை நான் கேட்டேன். வேறொரு, சிவப்பு குதிரை, புறப்பட்டுச் சென்றது; அதற்கு மேல் உட்கார்ந்து இருந்தவனுக்கு, அவனுக்குத்தானே பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடவும், ஒருவரை ஒருவர் கொலைசெய்யத் தக்கதாகவும்; அங்கே அவனுக்கு பெரிய பட்டயம் ஒன்று கொடுக்கப்பட்டது."
27 நல்லது. யோவேல் 1:4 மற்றும் யோவேல் 2:25 மற்றும் வெளிப்படுத்தல் 6ன் நான்கு குதிரை வீரர்களும் அடையாளப்பிரகாரமானவைகளாக இருக்கிறது. அது அந்த ஒருவனான அதே குதிரை வீரன் குதிரைகளை, ஊழியங்களை மற்றும் பண்புகளை மாற்றிக் கொள்கிறதாக இருக்கிறது. முதலாவது முத்திரை முதற்கொண்டு, இந்த குதிரை ஒரு சபையாக இருக்கிறது. மெய் திருச்சபையை போன்று ஒரு வெள்ளை சபையாக இருக்கிறது ஆனால் அவள் பரிசுத்தவான்களை கொலை செய்ய துவங்கினதிலிருந்து, அவள் சிவப்பாக மாறிவிட்டாள். அந்த சிவப்பு, அப்போஸ்தலர்களுடைய மற்றும் புரோட்டஸ்டன்டுகளுடைய இரத்தமாக இருக்கிறது. அந்த சிவப்பு, ரோம்ன் கத்தோலிக்க சபையால் கொலை செய்யப்பட்ட 68 மில்லியன் பரிசுத்தவான்களின் இரத்தமாக இருக்கிறது.
28 மேலும் அந்த போப்பு பூமியிலே தேவனுடைய உண்மையுள்ள பிரதிநிதியாகவும் தேவனுக்கும் மனிதனுக்குமிடையே உயர் அதிகாரமுடைய பிரதான ஆசாரியனாகவும் அப்போஸ்தலர்களின் வழிமறபினனாக இருக்கிறான் எனவும் அவன்தானே உரிமைகோருகிறான். பரலோகத்தின் மற்றும் பூலோகத்தின் பிரதான குருவாக இருக்கிறானாம் ஆனால் உண்மையில் பரலோகம் பூலோகம் மற்றும் உத்தரிக்கிர ஸ்தலத்தினுடைய பிரதி குருவாக இருக்கிறான் ஆனால் வெளிப்படுத்துதல் 13:1 ன் படி அது தூஷணத்தின் நாமங்களே. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
29 இப்பொழுது மூன்றாவது முத்திரையை பரிசீலனை செய்யலாம்: இது சிறப்பு சலுகைகள் வழங்குதலின் காலகட்டமாக இருக்கிறது. பரதீசை அடைவதற்கு ஜனங்கள் பொன்னையும் வெள்ளியையும் கொடுக்கவேண்டும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஜனங்கள் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது. வார்கோதுமையும் கோதுமையும், அது ஜீவனாக இருக்கிறது. எண்ணை ஆவியாக இருக்கிறது (the Spirit), ஆனால் தேவன் அவனிடம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு தீங்கு செய்யாதே, மரியே வாழ்க என்றுகூற அல்லது மரித்தோரிடம் ஜெபிக்க அல்லது விக்கிரகங்களுக்கு பலியிட அவர்களை பலவந்தப்படுத்தாதே என்றார். மேலும் அந்த நேரத்தில் மார்ட்டின் லூதர் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தார்: "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்."
30 இப்பொழுது நான்காவது முத்திரையை கவனத்தில் கொள்ளலாம்: லவோதிக்கேயாவின் காலம் ஆரம்பமாகிறது, குறிசொல்லும் ஆவியான, வலுசர்ப்பத்தின் ஆவிக்கு எதிராக போராட கழுகு வெளிப்படுகிறது. சபைகள் மற்றும் அரசியல், மத மற்றும் பொருளாதார சக்திகளின் கலவைதான் மங்கின நிறமாகும். முதல் மூன்று கட்டங்களின் ஒன்றுகூடுதல். மூன்று கிரீடங்கள் ஒன்றுக்குள், மூன்று நிறங்கள் ஒன்றுக்குள், நிறங்களின், குதிரைகளின், ஊழியங்களின் திரித்துவம்: அந்திகிறிஸ்துவின் ஊழியம், கள்ளத்தீர்க்கதரிசியின் ஊழியம் மற்றும் மிருகத்தின் ஊழியம். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரே ஒரு நபரில் மூன்று ஊழியங்கள்.
31 இப்போது ஐந்தாவது முத்திரையை கவனத்தில் கொள்ளலாம்: ஒவ்வொரு முத்திரைக்காகவும், அவைகளில் அடங்கியிருக்கும் இரகசியங்களை வியாக்கியானிக்கிற அவைகள் தான் ஏழு இடிகள். நான் சில கிரேக்க சின்னங்களை பலகையில் வைக்கிறேன், மூன்று சின்னங்கள். முதல் குறியீடு Ω, இரண்டாவது குறியீடு Σ, மூன்றாவது சின்னம் Ψ. ஆனால் ஒரு குழந்தைக்கு, இந்த காரியங்கள் முத்திரையிடப்பட்டதாக இருக்கிறது என்பதை கவனிக்கவும்.
32 ஆனால் இந்த எழுத்துக்களை படிக்கிற அல்லது வியாக்கியானிக்கிற சத்தம் தான் ஏழு இடிகளாகும். ஏழு இடிகளும் தேவனின் சத்தமாக இருக்கிறது. யோவான் 12:28 முதல் 29 கூறுகிறது: "...ஆனபடியால், நான் மகிமைப்படுத்தினேன், அதை மறுபடியும் மகிமைப்படுத்துவேன்" என்கிற ஒரு சத்தம் பரலோகத்திலிருந்து அங்கே உண்டாயிற்று. எனவே அங்கே நின்றுகொண்டிருந்து அதை கேட்ட கூட்டம், இடிமுழக்கமுண்டாயிற்று என்றனர். வேறுசிலர் தூதனொருவன் அவருடனே பேசினான் என்றனர்." நீங்கள் பார்க்கிறீர்களா?
33 மேலும் யாத்திராகமம் 19:16 முதல் 17 கூட அதை கூறுகிறது. மக்கள் இடிமுழக்கங்களைக் கேட்கிறார்கள், ஆனால் தீர்க்கதரிசி வார்த்தைகளைக் கேட்கிறார். வெளிப்படுத்துதல் 10: 4 என்ன சொல்கிறது? ஏழு இடிமுழக்கங்கள் பேசினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன்: ஏழு இடிகளும் பேசினவைகளை முத்திரைபோடு, அவைகளை எழுதாதே என்று பரலோகத்திலிருந்து கூறுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். நீங்கள் பார்க்கிறீர்களா? ஏழு இடிகளும் கடவுளின் சத்தமாகும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
34 ஆனபடியால் முதலாவது முத்திரை உடைக்கப்பட்டபோது, ஏழு இடிகள் பொருளை வெளிப்படுத்தியது. இரண்டாவது முத்திரை உடைக்கப்பட்டபோது, இந்த முத்திரையின் அடையாளங்களை ஏழு இடிமுழக்கங்கள் விளக்கின. அதுபோன்றுதான் மூன்றாம் முத்திரைக்கும், நான்காம் முத்திரைக்கும், ஐந்தாம் முத்திரைக்கும்; ஆறாவது முத்திரைவரைக்கும் அப்படித்தான். பலிப்பீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் ... ஆகியவற்றால் கொலைசெய்யப்பட்ட யூதர்களாம். அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைத் தவிர ஒன்றும் தெரியாது. அதனால்தான் மன்னிப்பதற்கு பதிலாக நீதிசெயும்படி கேட்கின்றனர். நியாயப்பிரமாணம், அது கண்ணுக்கு கண்ணும் பல்லுக்கு பல்லுமாம். அவர்கள் யூதர்களாக இங்கு இரட்சிக்கப்படவில்லை, ஆனால் தேசங்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக.
35 இப்பொழுது, ஆறாவது முத்திரை: எகிப்தில் நடந்ததுபோன்று வெகுவிரைவில் நிகழப்போகும் யூதர்களின் மீட்ப்பை ஆகாயம் இருண்டுபோவது அறிவிக்கிறது. இந்த முத்திரை வெளிப்படுத்துதல் 11 ல் இரண்டு விளக்குகளான எலியா மற்றும் மோசேயுடன் நிகழ்ந்தேறும். முடிவுகாலங்களை குறித்து பேசுகையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே மத்தேயு 24-ல் ஏழு முத்திரைகளில் அடங்கியிருப்பவைகளை வெளிப்படுத்தினார். மத்தேயு 24:4 முதல் 5 1வது முத்திரைக்கு பொருந்துகிறது, மத்தேயு 24:6 2வது முத்திரைக்கு பொருந்துகிறது, மத்தேயு 24:7 3வது முத்திரைக்கு பொருந்துகிறது, மத்தேயு 24:9 முதல் 13 4வது மற்றும் 5வது முத்திரைக்கு பொருந்துகிறது, மத்தேயு 24:29 முதல் 30 6வது முத்திரைக்கு பொருந்துகிறது, மத்தேயு 24:36 என்பது 7வது முத்திரைக்கு பொருந்துகிறது.
36 இப்போது, ஏழாம் முத்திரையைக் கவனியுங்கள்: 7வது முத்திரை உடைக்கப்பட்டபோது, ஏழு இடிமுழக்கங்கள் அமைதியாக இருந்தன என்பதை மத்தேயு 24:36 மற்றும் வெளிப்படுத்துதல் 8:1 இவைகளால் நாம் புறிந்துகொள்கிறோம் ஏனென்றால் அங்கே இரகசியங்கள் இருக்கின்றன, அவருடைய வருகையின் நாள் எதுவென்று அறியப்படக்கூடாது. இந்த முத்திரையில் தான் அந்த அறியாத மொழி (Unknown Language) அது அடங்கியிருக்கிறது. அது மாலை நேரத்தில் திறக்கப்பட்டது ஆனால் அதன் வெளிப்பாடு இந்தமணி நேரத்தின் செய்தியுடன் முடிவடையும், அதுதானே நடுராத்திரி சத்தமாக இருக்கிறது, அது அறியப்படாத பேச்சின் விளக்கமே தவிர வேறு எதுவும் இல்லை. அறியாத மொழி ஒரு புறமாக ஒதுக்கி விடப்பட்டது. இந்த அறியமுடியாத மொழிக்கு பின்னால் தான் மூன்றாம் இழுப்பு இருக்கிறது என்று சாயங்கால செய்தியான் கூறினார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
37 சரி. வெளிப்படுத்துதல் 17:15 ன் படி "சமுத்திரம்" அல்லது "தண்ணீர்கள்" என்பது ஜனங்களும், தேசங்களும், மொழிகளும், ஜாதிகளுமாம். ஏழு தலைகள் மற்றும் பத்துக் கொம்புகள் கொண்ட மிருகம் ரோமானிய பேரரசாக இருக்கிறது, அதுதானே தானியேல் 7இன் 4வது மிருகம் ஆகும், ஆனபடியால்தான் அது விழுங்கிப்போட்ட மற்ற மூன்று மிருகங்களின் அடையாளங்களை நாம் அதனுள் காணமுடிகிறது.
38 தானியேல் 7: 4 என்பது பாபிலோனிய சாம்ராஜ்யம், அதுதான் சிங்கம், 5வது வசனம் மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம் அது கரடி, 6வது வசனம் அது கிரேக்க உலக சாம்ராஜ்ஜியம், இது சிறுத்தை ஆகும். பத்துக் கொம்புகள் என்பது பத்து ராஜ்ஜியங்கள் அல்லது பத்து நாடுகள். வெளிப்படுத்துதல் 13:3ல், கிறிஸ்தவம் அதை கிட்டத்தட்ட அழித்துப்போட்டது, ஆனால் இந்த ரோம சாம்ராஜ்யம் மதசார்பானதாக மாறி, பூமியை மறுபடியும் வென்றது.
39 எனவே, அஞ்ஞான பேரரசு, ஒரு மனிதன் இப்படி தூஷணத்தின் நாமங்களை: “பூமியில் தேவனுடைய குமாரனின் பிரதிநிதி, the vicariv’s filii dei (தேவகுமாரனுக்கு பதிலாள்), தனிச்சிறப்புவாய்ந்த தலமைகுரு (sovereign pontiff), இயேசு கிறிஸ்துவின் முன்னோடி (the forerunner of Jesus Christ), உலகளாவிய கோத்திரபிதா (the universal patriarch), அப்போஸ்தலர்களின் இளவரசன், பரி.பேதுருவின் வாரிசு...” உடையவனாக இருப்பதற்கு அதிகாரத்தை கொடுக்கிற உலகளாவிய சபை ஆனது, தேவன் மற்றும் அவருடைய தீர்க்கதரிசிகள் போல தன்னைத் தவறிப்போகமுடியாதவனாக ஆக்கிக்கொள்ளுதல். மெதொடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தேயினர், சுவிசேஷக சபையினர், அட்வென்டிஸ்டு மற்றும் பிற போன்றே இந்த பெயர்களும் தூஷனமானவைகள் தான். உங்களால் காணமுடிகிறதா?
40 வெளிப்படுத்தல் 13ல், வசனம் 11ன் மிருகம் பூமியிலிருந்து எழும்புகிறது, ரோமாபுரி போன்று உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாடு, அதுதான் அமெரிக்க ஐக்கிய நாடுகள். ஒரு கரத்தில், அரசியல் மற்றும் பொருளாதார வல்லமையும் மறு கரத்தில் மதசார்பான வல்லமையும் தான் இதன் இரு கொம்புகள். ஒரு ஆட்டுக்குட்டி போல், இந்த நாடு மதசார்பானதாகவும் வேதாகமத்தின் மீது ஆணைமொழி எடுப்பதுமாக இருக்கிறது ஆனால் அதுதானே ஒரு வலுசர்ப்பத்தைப்போல இங்கே தடுப்பு ஆணைகளை (vetoes) உபயோகிக்கிறது, அங்கே பொருளாதார தடைகளை அறிவிக்கிறது, ஐ.நா.சபை ஒப்புதல் இல்லாமல் குண்டுபோடுகிறது.
41 வானத்திலிருந்து அது அக்கினியை வரவழைத்தது என்று வேதாகமம் கூறுகிறது மேலும் அதை நாம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அதனுடைய குண்டுபோடுதல்களில் இருந்து காண்கிறோம். மேலும் இந்த தேசத்திலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து அந்த கத்தோலிக்க சபையின் சொரூபம் வந்தது, அதுதான் அந்த புராடெஸ்டான்ட் மற்றும் சுவிசேஷக சபைகளாக உள்ளது. ஒரு முத்திரை என்பது ஒரு ஆவியாக இருக்கிறது. அவனது நெற்றியில் என்பது, அதை ஏற்றுக்கொள்வதாகும் மேலும் அவனது கரத்தில் என்பது, அந்த சபைகளில் உண்மையாக வேலை செய்வதுதான்.
42 இப்பொழுது, வசனம் 17 என்ன கூறுகிறது? அமெரிக்காவைப்போல அதே ஆவியில் எவராவது கிரியை செய்யாவிட்டால், அவன் க்யூபா மற்றும் லிபியா போன்று வீட்டோ மற்றும் பொருளாதார தடைகளுக்கு ஆளாவான், அவனால் வேறொரு தேசத்துடன் வாங்கவோ விற்கவோ முடியாது. இந்த மற்றும் பொருளாதாரத்தடையின் ஆவி முதல் பேரரசுகளுக்கு முந்தியுள்ளது.
43 2 இராஜாக்கள் 6:24 முதல் 25 –ல் வேதாகமம் இதைப்பற்றிப் பேசுகிறது. இயற்கையாகவே, இந்தத் தடை ஒரு பஞ்சத்துக்கு வழிவகுத்தது, ஏனெனில் அவர்கள் வாங்கவோ விற்கவோ முடியாது. அதை வாசிப்போம்: “இதற்குப்பின்பு சீரியாவின் இராஜாவாகிய பெனாதாத் தன இரானுவத்தைஎல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகைபோட்டான். அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுத்தைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை மிற்றிகைபோட்டார்கள்.”
44 மேலும் 2 இராஜாக்கள் 17:4 முதல் 5 கூறுகிறது, அந்த அசீரிய சாம்ராஜ்யம், அந்த நேரத்தின் உலக வல்லரசு, சமாரியாவில் மூன்று ஆண்டுகள் தடை விதித்தது. வசனம் 5-ஐ வாசிப்போம்: "அசீரியா ராஜா தேசம் அனைத்தையும் தாக்கியழித்து, சமாரியாவுக்கு விரோதமாய்ப் போய், மூன்று வருஷம் அதை முற்றிக்கைபோட்டான்”. எருசலேமுக்கு எதிராக பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் தடைகளை மீண்டும் 2 இராஜாக்கள் 25:1 முதல் 7ல் காண்கிறோம்.
45 யாரும் வாங்கவோ விற்கவோ, வசூலிக்கவோ முடியாது மேலும் வசனம் 3 இவ்வாறு கூறுகிறது: "நான்காம் மாதத்தின் ஒன்பதாம் நாளில் பஞ்சம் பட்டணத்தில் அதிகரித்திருந்தது; தேசத்து ஜனங்களுக்கு அங்கே ஆகாரம் இல்லாமல்போயிற்று”. மேலும் இந்த ஆவி (spirit) 70 ஆம் ஆண்டில் எருசலேமை அழிக்குமட்டாக ரோம சாம்ராஜ்யத்தின் மூலம் செயல்பட்டது, பின்பு இந்த ஆவி ரோமன் கத்தோலிக்க சபையினூடாக கிரியைசெயதது இப்போது அது அமெரிக்காவினூடாக செயல்படுகிறது.
46 முதலாவதாக,பழங்காலத்தில், அவர்கள் முற்றுகையை பற்றி பேசினர், பிறகு அவர்கள் தடையை பற்றி பேசினர் மேலும் இப்போது பொருளாதாரதடையை பற்றிப் பேசுகின்றனர்.இது சரியாக அதே காரியம் தான்.உதாரணத்திற்கு, பதினான்காம் நூற்றாண்டில், போப்பாண்டவரின் ஆட்சிமுறைக்கு எதிரான பவேரியாவின் லூயிஸ் IV மன்னனின் கீழ்ப்படியாமை மற்றும் மோசமான நடத்தையால் போப் ஜான் XXII ஒரு தடையை ஜெர்மனி மீது விதித்தான். பின்பு 1347 ம் ஆண்டில், பவேரியாவின் லூயிஸ் சரணடைந்தான் ஏனென்றால் 25 ஆண்டுகள் தடையால், ஜெர்மனி பலவீனமானது, விற்கவோ வாங்கவோ முடியவில்லை.
47 மேலும் ஓர் நாள், அதிகாரபூர்வமான அல்லது சர்வதேச அளவிலான உதவிகளால் பயனடையவேண்டுமானால் நீங்கள் இந்த புரோட்டஸ்டன்டு மற்றும் சுவிசேஷக சபைகளின் சம்மேளனத்திலோ அல்லது உலக சங்கத்திலோ உருப்பினராகும்படிக்கு, இந்த ஆவி சபைகளில் செயல்படும். வசனம் 8 படி, அது இருக்கிறதை நாம் காண்கிறோம் “உலகத்தோற்றத்திற்கு முன் எழுதப்பட்ட செம்மறியாட்டுக்குட்டியின் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்படாத ஒவ்வொருவரும்” அவர்கள் அந்த கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக சபைகள், அனைத்துவகை பிரன்ஹாமிஸ்டுகள் உள்பட மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்களில் என்றென்றைக்கும் தரித்திருப்பர், தேவனுக்கு முன்பாக அந்த சபைகள் எல்லாம் உத்தரிக்கிற ஸ்தலங்களாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
48 வசனம் 10 ல், அது கூறுகிறது: “சிறைபிடித்து செல்கிறவன் சிறைபடுத்தப்படுவான்...” சுவிசேஷவேலை செய்கிற அந்த பாப்டிஸ்டுகள், பிரன்ஹாமிஸ்டுகள் மற்றும் பிறரை பாருங்கள். தேவன் இங்கே என்ன செய்துகொண்டிருகிறாரோ அதற்க்கு வெளியே, மீதமுள்ள அனைத்தும் சிறைபிடித்தலுக்கு வழிவகுக்கிறது.நாம் இந்த மதசார்பான சிறைச்சாலைகளிலிருந்து ஜனங்களை விடுவிக்க போராடும் போது, மற்றவர்களோவெனில் அவர்களை அதனுள் அனுப்ப முயற்சிகின்றனர். நாம் தோம்ப் (Tob) மற்றும் லூயிஸ் செகண்டு (Louis Segond) வேதாகமங்களை (bibles) எரிக்கும் வேளையில், மற்றவர்கள் அவைகளை விநியோகிக்கின்றனர்.உங்களால் காணமுடிகிறதா?
49 தேசங்களும் சபைகளும் மிருகத்தை வெறுத்து, அதன் மாம்சதை பட்சிப்பார்கள் என்று வேதாகமம் கூறுகிறது.அது என்ன?ஒரு புரோட்டஸ்டன்டு, சுவிசேஷசபையினன் அல்லது ஒரு பிரன்ஹாமிஸ்டுசபையினன் ஒரு கத்தோலிக்கனை அவனது மார்க்கத்தானாக்கும் போது, தேவனுடைய கண்களில், அந்த அனைத்து மனமாற்றங்களும் மிருகத்தின் மாம்சமாக உள்ளன.உங்களால் காணமுடிகிறதா? தேவன் ஒருபோதும் ஒரு ஆத்துமாவை ஒரு புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபைக்கு வழிநடத்தமாட்டார். நீங்கள்: “ஓ, கத்தோலிக்கர்கள் இழக்கப்பட்டவர்கள். நாம் அவர்களை இரட்சிக்க முயற்ச்சிக்கவேண்டும்.” என்று கூறலாம். ஆனால் தேவனுடைய பார்வையில், நீங்கள் கத்தோலிக்க சபையை வெறுத்து மேலும் அதனுடைய மாம்சத்தை பட்சிக்க முயலுகிறீர்கள்.
50 நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் காரியங்களைக் காணலாம், ஆனால் தேவன் பூமிக்கு கொடுத்த ஒரே வழி, அது உயிரோடிருக்கிற தீர்க்கதரிசி செய்தியாளனின் வழி. மேலும் தீர்க்கதரிசியின் வழி தேவனின் வழியாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் தேவனுடைய வார்த்தை, தூய்மையான வார்த்தைத்தண்ணீர் என அழைப்பதை, சாத்தானின் கழிவறைகளிலிருந்து வரும் கழிவுநீராகவே தேவன் பார்க்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
51 தொடர்ந்தும் நாம் வெளிப்படுத்தல் 17ஐ கருத்தில் கொள்வோம்! பொதுவாக, தீர்க்கதரிசன வெளிப்பாட்டில், ஒரு ஸ்திரி ஒரு சபைக்கு பிரதிநிதித்துவமாக இருக்கிறாள்.வெளிப்படுத்தல் 17:1ல், அந்த பெண் ஒரு வேசியாக இருக்கிறாள், அவள் பல காதலர்களின் விதைகளை பெற்றிருப்பவள். அவள் அனைத்து நாடுகள், மொழிகள், மக்கள், கிராமங்கள், மற்றும் முகாம்களில் வேரூன்றியிருக்கிறாள் .... மேலும் பூமியின் ஜனாதிபதிகள் மற்றும் இராஜாக்கள், அமைச்சர்கள் மற்றும் இளவரசர்கள் அவளுடன் ஒத்துப் போயிருக்கின்றனர் என்று 15வது வசனத்தில் வேதாகமம் கூறுகிறது. அவள் ஏழு மலைகளின் மேல் அமர்ந்திருக்கிறாள்: கேப்பிட்டோல் (Capitol), பிலேன்டினா (Palentina), காயிலியஸ் (Caelius), அவன்டைனே (Aventine), க்விரினல் (Quirinal) மற்றும் விமினல் (Viminal), வசனம் 9 மற்றும் 12. மேலும் வசனம் 4 அவளது செல்வத்தை வெளிப்படுத்துகிறது.
52 வசனம் 5 கூறுகிறது அவள் திறளான வேசிசபைகளுக்கு தாயாக இருக்கிறாள்: லூதரன் சபை, ஸ்விங்லியன் சபை, கால்விநிஸ்ட் சபை, ஜான் நாக்ஸுடன் பிரஸ்பிட்டேரியன் சபை, அங்கிலிக்கன் சபை, அது இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வமான சபை, பதினாறாம் நூற்றாண்டில் 8-ம் ஹென்றி ரோமாபுரியுடன் தொடர்பை துண்டித்தபிறகு, கத்தோலிக்க மற்றும் கால்வினசத்தில் ஒரு வகையான சமரசம்செய்தலின் முடிவுதான் அது.
53 பின்னர் ப்யூரிடன்கள், பின்பு மொராவியன் எழுப்புதலின் நேரத்தில் மேத்தொடிஸ்டுகள், பிறகு, ஒரு புறத்தில், அலெக்சாண்டர் காம்ப்பெல்லுடன் கிறிஸ்து சபை, தெளித்தல் மற்றும் குழந்தை ஞானஸ்நானத்தை புறக்கணித்த ஜான் ஸ்மித்துடன் பாப்டிஸ்டு சபை,... பின்னர், மறுபுறத்தில் மெத்தடிஸ்ட் சபைகளின் ஒரு தொடர், நசரேன் சபை வெளிவந்தது, பிறகு பரிசுத்த யாத்ரீக சபை, பின்பு பெந்தேகோஸ்தே சபை பின்னர் தேவர்களின் கூட்டுச்சபை அது பெந்தேகோஸ்தேயினரிடையே 1906ல் ஏற்ப்பட்ட பிரிவின் கிளை. அது ஆரம்பத்தில் பொதுக்குழு கூட்டம் என் அழைக்கப்பட்டது, பிறகு தேவர்களின் கூட்டுச்சபையானது. பிரன்ஹாமிஸ்டுகளிடம் இன்று நம்மால் காணமுடிகிறதுபோல அந்த சபைகள் ஒவ்வொன்றும் திரளான கிளைகளை உடையதாக இருக்கின்றன.
54 ஜான் ஸ்மித் ஒரு கான்கிரிகேஷனலிஸ்டு (Congregationalist) ஆக இருந்தான், அவன் ஆங்லிக்கன் சபையை விட்டு வெளியேறினான் மேலும் அவன்தானே தெளிப்புஞானஸ்நானம் பண்ணப்பட்டவனாக இருந்தான். அவன்தான் பாப்டிஸ்டு சபைகளின் தகப்பன். மூல பாவம் ஒன்று உண்டு என்பதை கூட அவன் நம்பவில்லை. குழந்தைகள் பாவமற்றவை என்று அறிவித்தான். சரியாக சொல்லப்போனால், ஜான் ஸ்மித் மரித்தபிறகு, முதல் பாப்டிஸ்டு சபையை நிறுவினது அவனது சீஷனான தாமஸ் ஹெல்வைஸ் (Thomas Helwys) தான். நான் மென்னோ சிமோன்சை (Menno Simons) மறக்கவில்லை, இந்த முன்னாள் கத்தோலிக்க பாதிரி தான் மென்னோனிய ஒழுங்கள் மற்றும் அனபாப்டிஸ்டு சபையை நிறுவினவன்.
55 நீங்கள் ஒரு சபையில் சேருவதற்கு முன்பு இந்த காரியங்கள் அனைத்தையும் நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஒரு சபையின் ஆரம்பம் தவறானது அல்லது அதன் நிறுவனர் பொய்யானவனாக இருந்தால், நீங்கள் அங்கே எதைச் செய்யதாலும் ஒரு பொருட்டல்ல, அது வீணாகிவிடும், நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
56 அய்மீ செம்பில் மெக்பெர்சன் என்ற குறிசொல்லும் அந்த பெண்ணைப் போன்றுதான் அது, அவள் ஒரு கனேடிய சூனியக்காரி, லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினவள், 1922 ல் நாற்சதுர சபையை ஸ்தாபித்தவள். மேலும், அந்த நாற்சதுர சபையின் உருப்பினர்களே நீங்கள் எந்த பரதீஸுக்கு போகப்போகிறீர்கள்? உங்களால் காணமுடிகிறதா? எவ்வாறு ஒரு பெண், ஒவ்வொரு மாத முடிவிலும் மாதவிடாய் உடையவள், எப்படி ஒரு சபையை ஸ்தாபித்தாள்? அது வேதாகமத்தில் எங்கும் இல்லை. பழைய ஏற்பாட்டினூடாக தேடி பாருங்கள், அனைத்து ஆசாரியத்துவங்களுக்குள்ளும் பாருங்கள், தேவன் ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை, தேவன் ஒருபோதும் அதை செய்யமாட்டார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
57 சரி. இன்னும் வெளிப்படுத்துதல் 17-ஐ நாம் சிந்திக்கலாம். அந்தப் பெண் தண்ணீர்களின் மேல் உட்கார்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணும் தண்ணீர்களும் என்பதை, கடல் கன்னி என குறிசொல்லும் ஆவி ஜனங்களுக்கு கூருகிறது. அது சாத்தான் திசைதிருப்புதலாக இருக்கிறது. வேதாகமம் ஒருபோதும் குறிப்பிடாத, சில ஏனோக்கின் புத்தகங்கள்தான் "கடல் கன்னியை" குறிப்பிடுகிற ஒரே புத்தகம்.
58 இப்போது ஒரு வேசி என்றால் என்ன? ஒரு உண்மை கணவன் இல்லாமல் ஆனால் அனேக காதலர்களை உடைய ஒரு ஸ்திரிதான் வேசி எனப்படுபவள். அந்த வேசி சபைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பாதிரியாரோ, மேய்ப்பனோ கிடையாது. ஒரு பாதிரி அல்லது பாஸ்டர் வருகிறான், போகிறான். வேறொருவன் வருகிறான், போகிறான். மேலும் ஒரு வேசிப்பிள்ளை பிறந்து, தன் தாயின் வழியில் பெயரிடப்படுகிறான்: "நானொரு கத்தோலிக்கன், நானொரு பாப்டிஸ்டு, நான் செய்தியிலிருக்கும் ஒரு சகோதரன்..." உங்களால் காணமுடிகிறதா?
59 வசனம் 6 ல்: இந்த சபை பரிசுத்தவான்களின் இரத்தத்தால் வெறித்திருந்தது, கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள் மேலும் ஒரு சபை அதை எப்படி செய்யும் என்று யோவான் ஆச்சரியப்பட்டான். எப்படி ஒரு சபை பரிசுத்தவான்களை கொல்ல முடியும்? இஸ்ரவேலர் எவ்வாறு தீர்க்கதரிசிகளை துன்புருத்தவும் கொல்லவும் முடியும்? இன்றைக்கு, சபைகள், தங்கள் கைகளில் வேதாகமத்தை வைத்திருக்கொண்டு, அவர்களது நேரத்தில் உயிர்வாழ்கிற தீர்க்கதரிசியாக நான் இருக்கையில் என்னைத் துன்புறுத்துவது எப்படி?
60 மேலும் 8 வது வசனம் அந்த சபைகள் பாதாளத்தில் இருந்து எழும்புகிறது என்பதை காண்பிக்கிறது, ஆறுகள், நதிகள் மற்றும் சமுத்திரத்தின் ஆழங்களில் இருந்து அவர்களது பரிசுத்த ஆவிகள் எழும்பி நரகத்திற்கு செல்கிறது, மேலும், மரணமும் பாதாளமும், அதாவது, மரித்தோரின் உரைவிடம், அவர்களை பின்தொடர்கிறது.
61 ஐந்தாவது பரிமாணம், பேய்கனவுகளின் பிராந்தியமாகும், பேய்களின் பகுதியும் அவர்களை பின்தொடர்கின்றன. மேலும் எல்லாவிதமான பேய்களும் அங்கு செயல்படுகின்றன, அந்நிய பாஷைகளில் பேசுவதும் தீர்க்கதரிசனம் உரைத்தலும், அவர்களுக்கு தரிசனங்கள் மற்றும் சொப்பளங்களையும் கொடுக்கின்றன. மேலும் அவர்கள் அதை பரிசுத்த ஆவி என்று அழைக்கின்றனர். இப்போது, அந்த பரிசுத்த ஆவியை (holy spirit) கவனியுங்கள், அந்த ஆறுகளிலும், நதிகளிலும் இன்னும் பிறவற்றிலும் அவைகள் இருக்கையில், அவை ஆபிரிக்காவில் உள்ள சில கோத்திரங்களை, சில ஜனங்களை, சில கிராமங்களை, சில குடும்பங்களைப், ... பாதுகாத்தன. அது என்ன? பூர்வத்தில் அவைகள் பரலோகத்திலிருந்து தள்ளப்படுவதற்கு முன்னே கேருபீன் பாதுகாவலர்களாக இருந்தன. மேலும் இப்போது இயேசு கிறிஸ்துவின் பெயரின் கீழ் இருப்பது அதே கேருபீன் பாதுகாவலர்கள் தான்.
62 ஒவ்வொரு சபை, மறைபறப்பு பணியும் ஊழியமும் அதன் தலையாக ஒரு கேரூபீனை கொண்டுள்ளது: சபை தலைவர்கள், டாமி ஆஸ்பான், பென்னி ஹின், யாங்கி சோ, ... மேலும் அவர்களின் ஊழியத்திற்கு கீழ் பிரசங்கிக்கிற அனைவரும், வெளிப்படுத்தல் 12 ன் படி பிரதானதூதன் மிகாவேலுக்கு எதிராக பரலோகத்தில் நடந்த பெரிய அர்மெகெதோன் யுத்தத்தில் அவர்களுடைய வால் இழுத்துப்போட்ட தூதர்களாக இருக்கின்றனர். பூமியில் நீங்கள் பார்க்கிற எல்லா பெரிய சபைகளின் தலைவர்களுமே பரலோகத்தில் சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட தூதர்களாக இருக்கிறார்கள்.
63 சரி. 16-ம் வசனம் என்ன கூறுகிறது: "நீ கண்ட பத்துக் கொம்புகளும், மிருகமும், ... வேசியை வெறுத்து, பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்..." மேலும் அந்த பத்து இராஜ்ஜியங்கள் இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரியா, இத்தாலி, போலந்து, ரஷ்யா... இன்னும் மற்றவை, சில ஆவிக்குரிய மிருகங்களை எழும்பப்பண்ணிற்று, அவைகள் தாம் லூதரன் சபை, நசரேய சபை, பாப்டிஸ்டு சபை, மெத்தொடிஸ்ட் சபை, கால்வினிஸ்ட் சபை, பிரஸ்பியிட்டேரியன் சபை, இவைகள் தான் கத்தோலிக்க சபையின் உருப்பினர்களை அவளிடமிருந்து விலகவைத்து அவளை வெருக்கப்பண்ணின. உங்களால் பார்க்கமுடிகிறதா? இப்போது, பத்து கொம்புகள் முழுவதும் புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக (evangelical) மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளே.
64 நாம் 10 ம் வசனத்திற்கு மீண்டும் வருவோம், அங்கே இருக்கிறவன் தான் சீசர், வருகிறவன் தான் நீரோ பேரரசன் அவன் ஆறுமாத கொடூர ஆட்சி செய்தான். அந்த சபைகளில் இருப்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள், ஆனால் அவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்று நமக்குத் தெரியும். எட்டாவதானவன் அது தொடர்ந்து வரும் போப்புகள் தான். 12 வது வசனத்தில்: கிரீடம் இல்லாத அந்த இராஜாக்கள், ஒரு புறத்தில், அவர்கள் ஜனாதிபதிகள்: ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி மற்றும் பலர்.
65 மறுபுறத்தில், அந்த தலைமுறையில் உயிர்வாழும் தீர்க்கதரிசிக்கு வெளியே இருக்கும் ஒவ்வொரு சபைகளின் தலைவர்கள் தான். கத்தோலிக்க சபையினுடையதை போலவே அதே நோக்கத்தை அவர்கள் உடையவர்களாக இருந்தார்கள், ஒன்றில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், மற்றதில் யூதர்கள் கொல்லப்பட்டனர். மேலும் கத்தோலிக்க சபையில் கத்தோலிக்க சபையின் சொரூபம் இருக்கிறது, அதுதான் புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக சபைகள், பிரன்ஹாமிஸ்டு சபைகள், மறைபரப்பு பணிகள் (missions) மற்றும் ஊழியங்கள் உட்பட இவைகளே. பூமியின் குடிகள் மீது ஆட்சி செலுத்துகின்ற சிறிய நகரம் வத்திக்கான் நகரம் ஆகும். ஆமென்!
--:--
--:--