en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 40 (Kc.40) : அர்மகெதோன் யுத்தம்
( மார்ச் 14, 2004 இல் ஞாயிரு லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசஙகிக்கப்பட்டது)
1 [ஆசிரியர் குறிப்பு : சகோதரர் பிலிப்பு வெளிப்படுத்துதல் 16:13, 14 மற்றும் 16 வாசிக்கின்றார் ] ... வசனம் 13 ல், அது சபைகள் கூடுகின்ற காரியம், அர்மகெதோன் யுத்தத்திற்காக மனமாற்றம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகள் மத்தேயு 24:24 போன்ற அதே பிசாசுகளின் ஆவிகள் என்று வேதாகமம் கூறுகிறது, இது வெளிப்படுத்துதல் 12:15 முதல் 17 வரை மற்றும் வெளிப்படுத்துதல் 19:11 முதல் 21 வரை உள்ள அதே யுத்தம் போன்றது. அர்மகெதோனின் முதல் யுத்தமானது பரலோகத்தில் நடந்தது. ஆனால் பூமியிலே, இஸ்ரவேல் எகிப்தை விட்டு வெளியேறினபோது முதல் யுத்தம் நடந்தது. அங்கு, எகிப்திய தெய்வங்களை தேவன் சந்தித்தார், அது வேறொன்றும் இல்லை பரலோகத்தில் ஆர்மகெதோன் யுத்தத்தின் போது பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டவைகள்.
2 யாத்திராகமம் 7:19 ல், தேவன் நதிகளை, ஆறுகள்,குளங்கள் மற்றும் தண்ணீரின் அனைத்து குவியல்களை இரத்தமாக்கும் போது, அவர் பாதுகாப்பு குடையாக இருக்கின்ற ஹப்பி (Hâpi) கேருபீனை அடித்தார். யாத்திராகமம் 8:1-3-ல், தேவன் ஒசிரிஸ் (Osiris) மற்றும் சபேக் (Sabek) கேருபீன்களை அடித்தார். யாத்திராகமம் 8:16 ல், இது தோத் (Thot) கேருபீன், அற்புதங்களின் தேவர்களை இயேசு கிறிஸ்து தாக்கினார் யாத்திராகமம் 8:20 முதல் 21, அது பெளடோ (Bouto) மற்றும் ஹோரூஸ் (Horus) கேருபீன்களை இயேசு கிறிஸ்து தாக்கினார். யாத்திராகமம் 9:6-ல், ஹாதோர் (Hathor) கேருபீனை இயேசு கிறிஸ்து தாக்கினார். யாத்திராகமம் 9:10-ல், தெய்வீக குணப்படுத்தும் கடவுளாகிய ஆமோன்- ரா( Amon-ra) கேருபீனை இயேசு கிறிஸ்து தாக்கினார். நீங்கள் பார்க்கிறீர்களா?
3 ஒவ்வொரு தெய்வமும் தன்னுடைய சொந்த ஆராதனையை, தன்னுடைய சொந்த பலிபீடத்தை, தன்னுடைய சொந்த போதனைகளை, தன்னுடைய சொந்த ஆசாரியர்களை பிரதான ஆசாரியனின் அதிகாரத்தின் கீழ் கொண்டிருக்கின்றது. அவனே பாதுகாக்கும் கேரூபீனின் நேரடி பிரதிநிதியாக இருக்கின்றான். மற்ற ஆசாரியர்கள் பரலோக யுத்தமான அர்மகெதோனின் போது அதினுடைய வால் இழுத்துக் கொண்ட தூதர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள், வெளிப்படுத்துதல் 12, 4 மற்றும் 9-ம் வசனங்கள் கூறுகிறதாவது, அதினுடைய வால்கள் பரலோகத்தில் தேவனுக்கு முன்பாக நிற்கும் தேவதூதர்களைக் கொண்டு வந்தன. இன்றும் அவர்களுடைய சொருபங்கள் ஒரு செய்தியையும் கொண்டிராததை போல அவைகள் ஒரு செய்தியையும் கொண்டிருக்கவில்லை என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
4 பூமியில் அர்மகெதோனின் முதல் யுத்தம் எகிப்தில் நடந்தது, வெளிப்படுத்துதல் 16:13-16 உள்ள அர்மகெதோன் யுத்தம் எகிப்தில் நடக்கும் மற்றும் வெளிப்படுத்தல் 11:3-12 உள்ள மூன்றாவது மற்றும் இறுதி அர்மகெதோன் யுத்தம், எகிப்தில் நடக்கும். வெளிப்படுத்துதல் 11:8 என்ன கூறுகிறது? எலியா மற்றும் மோசேயின் உடல்கள், ஆவிக்குரிய எகிப்த்து என்னும் இடத்தில் வைக்கப்படும். அங்கே தான் அவர்களுடைய கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்! ஆமென்!
5 இஸ்ரவேலில் இரண்டு சிறிய பிரசங்கிகள் எழும்புவார்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன். அதற்கு முன்பு, அநேகர் எழும்பி, சிலர் எலியாவையும் மோசேயையும் போல பாவனை செய்து கடந்து செல்வார்கள். ஆனால் அவர்கள் வஞ்சனையாளர்கள். இந்த இரண்டு பேரும் நான் கண்டனம் செய்தவர்களுடன் கூட்டுசேர்வதற்க்காக பூமியை கடந்து செல்ல மாட்டார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? நடுராத்திரி சத்தம் ஒலிக்கும் போது, இந்த செய்தியின் எதிரொலியாக இல்லாத ஒரு யூதனை நீங்கள் பார்த்தால்,மற்றும் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக, பிரன்ஹாமிஸ்டு பகடி, அறிஞர்களோடு கூட்டு வைத்துக் கொள்ளுகிறவன், பாகாலின் ஒரு தூய தயாரிப்பு ஆகும்.
6 சில யூதர்கள் அதாவது பாகாலின் குமாரர்கள்; தங்களுடைய கையில் வேதாகமங்களை வைத்துக் கொண்டு பூமியெங்கிலும் கடந்து சென்று பிசாசுகளைக் கூட்டுச் சேர்த்து, எலியாவையும் மோசேயையும் சந்திப்பதற்காக இஸ்ரவேலுக்கு அனுப்புகிறான். அவர்கள் பேய்களின் ஊடுருவலை நாடுவதற்கு தேசங்களின் சுவிசேஷத்திற்கு செல்கின்றனர். இஸ்ரவேலுக்கு செல்லும் இந்த பயணங்களையும் மற்றும் கிறிஸ்தவர்களின் யாத்திரைகளை பாருங்கள், எலியாவையும் மோசேயையும் சந்திக்க அந்த நாட்டிற்க்கு பிசாசுகள் படையெடுக்கின்றது..
7 நான் இனி பூமியில் இல்லாமல் போகும் பொழுது, இந்த இரண்டுபேரும் எழும்பி; ஆவிக்குரிய விபச்சாரத்தின் புதிய தலைநகரமான இஸ்ரவேலை நியாயம்தீர்த்து கண்டனம் செய்வார்கள் , அங்கே, "தேவனுக்கு மகிமை, அல்லேலூயா!!!". என்று சத்தமிடுவேன். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் சிரியா, ஜோர்தான் லெபனானைக் ... கண்டனம் செய்வார்கள், அவர்கள் அமெரிக்கா, பிரான்ஸை ... கண்டனம் செய்வார்கள். அவர்கள் ஐவரி கோஸ்டை கண்டனம் செய்வார்கள். அந்நாட்களில் இஸ்ரவேலுக்கு ஆவிக்குரிய விஜயம் செய்யும் புறஜாதிகளின் புத்திரர்களுக்கு எதிராக அவர்கள் பிரசங்கிப்பார்கள், மேலும் அவர்களுடைய சீஷர்களும் அவ்வாறே செய்வார்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும், காவல் துரையினர், நீதிமன்றங்கள் மற்றும் ஜனக்கூட்டத்தினர் அவர்களைத் துன்புறுத்துவார்கள். தேவன் இந்த காரியத்தை செய்யும்போது பிசாசின் புத்திரர்கள் புறஜாதி தேசங்கள் மத்தியில் இஸ்ரவேலுக்கு கனமும் மகிமையும் கொண்டு வருகிற நேரமாக இருக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா? எலியா மற்றும் மோசேயின் சடலங்கள் ஆவிக்குரிய விதத்தில எகிப்து என அழைக்கப்படுகிற இடத்தின் மீது வைக்கப்படிருக்கும் என்று வெளிப்படுத்துதல் 11:8 கூறுகிறது. அங்கே தாமே அவர்களுடைய கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார். உண்மையில், எலியா மற்றும் மோசேயின் ஆவியுடன் இஸ்ரவேலுக்கு வரப்போகும் ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டுமே, ஒரே ஒரு சரீர நபர் மட்டுமே. நீங்கள் பார்க்கிறீர்களா?
8 கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட காலத்திலிருந்து, இஸ்ரவேல் ஆவிக்குரிய விதத்தில் எகிப்தாக இருக்கின்றது. எகிப்தின் தேவர்களின் பலிபீடங்கள் : பரிசேயர், சதுசேயர், ஹெரோடியர்கள், உணர்ச்சி வெறியர்கள், யூதத்துறவியர் குழு ... என அழைக்கப்படுகிறது. அவைகள் மெதுவாக இன்று நீங்கள் பார்க்கும் சபைகளை அடைந்திருக்கிறது. இது அர்மகெதோன் யுத்தத்தின் தவறிழைக்காத வெளிப்பாடாகும்.
9 இந்த செய்தி உங்களுக்கு புரிகிறதா? தேவன் இங்கே என்ன செய்கிறார் என்பதற்க்கு வெளியே, இந்தத் பேரரசர்கள் தலைவர்கள் மற்றும் சபை தலைவர்கள் அனைவரும் கேருபீன்களாக உள்ளனர். டாமி ஆஸ்போர்ன் யாருடைய பாதுகாப்பின் குடையின் பூமிக்குரிய பிரதிநிதியாக இருக்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. அது சபேக் அல்லது பூட்டோ அல்லது ஒசைரிஸ் ஆக இருக்கும். ஆனால் இந்த கேருப் எகிப்தில் மோசேக்கு எதிராக இருந்தது. இந்த அதே கேருபீம் 2 இராஜாக்கள் 17:29 முதல் 31 ல் மற்ற பெயர்களின்கீழ் தோன்றியது: நெர்கல், அட்ரோம்மேலெக், நிப்காஸ், தர்தக், சுக்கோத்-பெனத் ...
10 ஆனால் இன்றைய தினம் இருக்கும் பிரச்சனை என்னவெனில் அவைகள் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றன. சபேக் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறது, ஓசரிஸ் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறது, பெளடோ இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறது ... கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ சக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபையின் தெய்வங்கள் ஒவ்வொன்றும் அறியப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகளில் உள்ளவை யாவும் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றன. எல்லோருக்கும் மூலதன "G" யுடன் தனது கடவுளை எழுதுகிறார். அதாவது God . அனைத்து சபைகள், பணிகள் மற்றும் ஊழியங்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
11 அந்த காரியம் தான் சிக்கலாக்குகிறது, ஆனால் ஒரு பாமர கிராமத்து விவசாயியும் அறிந்து கொள்ளும் படியாக மாந்திரீக பூஜாரியை கிராமத்தில் அசைத்த அந்த பிசாசே இந்த சபைகளில் பரிசுத்த ஆவி அல்லது இயேசு கிறிஸ்து என்ற பெயரில் கிரியை செய்துக்கொண்டு இருக்கின்றது. அதிசயங்களின் மகத்துவம் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.
12 முன்பு ஓடைகள், புனித காடுகள், முகமூடிகள் இருந்த ஜீன்கள் இப்பொழுது இந்த சபைகளில் பரிசுத்த ஆவி என்ற பெயரில் இன்று உள்ளது. இந்த ஜீன்கள் கிராமங்கள், குடும்பங்கள், மண்டலங்களில், பழங்குடியினர், மொழிகளை... காப்பதற்க்காக இருந்தவைகள் சபைகளில் நுழைந்த போது, அவைகள் அதே ஊழியத்தை தொடர்கின்றது.
13 கிராமத்தில் பிரதானமாக இருந்த ஜனங்கள் மாந்திரீக பூஜாரிகளாக இருந்தவர்கள் இன்று கையில் வேதாகமங்களோடு சூட்டுகளில் உள்ளனர், அதனால் அறுவடை சிறியதாக மாறியுள்ளது, மேலும் அதிகமான ஆட்கள் உள்ளனர். ஆனால் தேவனின் சத்தம் மற்றும் உங்களுடைய சந்திப்பின் நாளை அறிந்த நீங்கள், அமைதியாக இருங்கள்! நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தேவன் அவர்கள் எல்லோரையும் விழுங்குவார்! இது தான் சுவிசேஷம், நம்முடைய தலைமுறையின் ராஜ்யத்தின் நற்செய்தி!
14 இன்று கவனியுங்கள், அமெரிக்காவின் அடிமை முறையை ஒழித்த நற்செய்தி இனி எந்த கருப்பு அமெரிக்கருக்கும் அது ஒரு நற்செய்தி அல்ல, அது வெறுமனே ஒரு மகிழ்ச்சியான நினைவகம். இன்று, பிரெஞ்சு மக்களுக்கு பாசிடலை இடித்தது ஒரு நற்செய்தி அல்ல. ஜூலை 14, 1789 அன்று மகிழ்ச்சியின் பொருளாக இருந்தது வெறுமனே ஒரு நினைவகமாக மாறினது.? இன்று, மே 14, 1948 இல், இஸ்ரவேலின் சுதந்திரம் பற்றிய பிரகடனம் ஒரு யூதனுக்கு அர்த்தமற்றதானது. ஆனால் அது ஒரு கட்டித் தழுவுகின்ற காரியமாக இருந்தது மற்றவர்கள் சந்தோஷத்தில் ஆர்பரித்தனர் ஆமென்! இன்று நாம் இராஜ்யத்தின் நற்செய்தியை அறியாமல் இருக்கின்றோம், அது நடுராத்திரி சத்தம் தான்.
15 இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிப்பதற்காக 2,000 ஆண்டுகளுக்கு முன் மறித்தார் என்று அனைவரும் அறிந்திருக்கிறோம். மார்ட்டின் லூதர் மூலம் கத்தோலிக்க திருச்சபை பிசாசினுடையது என்று ஐந்நூறு ஆண்டுகளாக அனைவரும் அறிந்திருக்கிறோம். மார்ட்டின் லூதர் மூலம் ஐநூறு ஆண்டுகளாக நாம் கிருபையினால் விசுவாசத்தின் முலம் இரட்சிக்கப்படுகிறோம் என அனைவரும் அறிந்திருக்கிறோம். ஜான் வெஸ்லி முலம் பரிசுத்தமாக்குதல் என்பது இரட்சிப்புக்கு அவசியம் என்று அனைவரும் அறிந்திருக்கிறோம், இந்த விஷயங்களை மீண்டுமாக செய்வது அது நல்லது தான், ஆனால் நம்முடைய தலைமுறை மத்தேயு 25:6-ல் உள்ள நற்ச்செய்திக்காக காத்திருக்கிறது. ஆமென்!
16 [...] தேவன் உங்களை நிச்சயமாக அழைத்திருந்தால், நீங்கள் ஒரு வேதாகம கல்லூரிக்கு சென்றால், தேவன் உங்களுக்கு அளித்திருப்பதையும், மனிதரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதையும் நாங்கள் எவ்வாறு அறிந்துகொள்வோம்? நீங்கள் பார்க்கிறீர்களா? கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷசக, மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் மூன்று பிசாசுகள் தவளைகள் போன்று செயல்படுவதாக வெளிப்படுத்துதல் 16:13 கூறுகிறது.
17 தவளைகள் தேங்கி கிடக்கும் மற்றும் நாற்றமெடுக்கும் தண்ணீர்களை விரும்பும், அழுகின மன்னா அல்லது இறையியல். ஆனால் மீன் ஆழ்ந்த மற்றும் தெளிவான தண்ணிர்களில் இருக்கும். மீன் தவளைகளுடன் கூட்டு வைத்துக் கொள்வதில்லை என்பதை கவனியுங்கள். பரிதாபமான தவளைகள்! அவைகளுக்கு மழை தேவையில்லை; அவைகள் கத்தும் ஆனால் மழை வரும் போது மீன்களே அதை பெற்றுக் கொள்ளும். ஆமென்!
18 தவளை ஒரு வகையான நிலநீர் வாழுயிர்களில் ஒன்று, கண்களை அதினுடைய தலையில் கொண்டிருக்கும் மேலும் அதினால் தொலை தூரத்தில் உள்ளதை பின் நோக்கி அல்லது முன் நோக்கி பார்க்க முடியும் ஆனால் நிகழ்காலத்தில் உள்ளதை பார்க்க முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? "மோசே, மோசே, மோசே ... மேசியா வர போகிறார்" ... இயேசு நல்லவர், இயேசு இதைச் சொன்னார், இயேசு அதைச் சொன்னார், இயேசு அதை செய்தார் ... இயேசு வருகிறார்" ஆனால் இயேசு கிறிஸ்து ஒரு புதிய தோற்றத்தின் கீழ், ஒரு புதிய பெயரில் கிரியை செய்து கொண்டு இருக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? மற்றொரு பக்கத்தில் உள்ள தவளை : "சகோதரர் பிரன்ஹாம் கூறினார் ... சகோதரர் பிரன்ஹாம் கூறினார் ... மூன்றாவது இழுப்பு வரும், மூன்றாவது இழுப்பு ..." ஆனால் நாம் நடுராத்திரியில் இருக்கின்றோம்.
19 நல்லது! வெளிப்படுத்துதல் 12:15 முதல் 17-ல், வெளிப்படுத்துதல் 19:11 முதல் 21-ன் அதே யுத்தத்தின் கேள்வியாக இது இருக்கின்றது. துன்புறுத்தலையும் சிறைப்படுதலையும் நாம் அறிந்துக கொள்வோம். இது துன்புறுத்தல் ஆனால், புத்தியுள்ள கன்னிகைகளின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு பிறகு அதிக துன்புறுத்தல் இருக்கும். ஏனெனில் புத்தியுள்ள கன்னிகைகள் எகிப்திலுள்ளதைப் போல சகலவித வாதைகளால் அடித்துப் போடுவார்கள் ; அவர்களை குருட்டாட்டம், வயிற்று புண், முடக்கம், பூகம்பம், புயல்கள், வெள்ளம், மற்றும் தீயினால் அடித்துப் போடுவார்கள் ...
20 இவ்வாறு, நாம் ஒரு மாமரத்தை நோக்கி : "மா மரமே, "தேவனுடைய வார்த்தையின் வல்லமையின் கீழ்" நான் உன்னை அடைவதற்கு முன்பு, பழுத்த பழத்தை கொடுப்பாயாக, அதை நாங்கள் சாப்பிட்டு, அங்கே ஒரு பெரிய ஓய்வு இருப்பதாக" என்று கூறுவோம். அது மாம்பழங்களின் காலமாக இல்லாமல் இருந்தாலும், ஆனால் இது போன்ற காரியங்கள் நடக்கும்.
21 ஆனால் நாம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, புத்தியில்லாத கன்னிகைகளை கொல்லும்படியாக அவர்கள் மேல் சபைகளின் கை ஒங்கி இருக்கும், இந்த புத்தியில்லாத கன்னிகைகள் தங்களுடைய மணி வேளையின் செய்தியை நிராகரிக்காமல் இருக்கும் அளவிற்க்கு மாத்திரம் எண்ணெயை கொன்டிருப்பார்கள். அவர்களிடத்தில்: "நீங்கள் தான் வேதாகமத்தை எரித்து, உங்கள் சபைக்கு விதிகள் மற்றும் உள்ளான விதிமுறைகளை விதித்தீர்களா?" என்று கேட்க்கும்போது, அவர்கள், "ஆம்!" என்பார்கள்.
22 அதற்க்கு சபைகள் : "அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகத் தூஷித்தனர், மற்றும் எங்கள் சபைகளில் வேலை செய்யும் ஆவி உண்மையான பரிசுத்த ஆவியல்ல என்று அவர்கள் சொன்னார்கள்!" என கூறுவார்கள். மேலும் அஞ்ஞான நீதிமன்றங்கள் பரிசுத்த காரியங்களை நியாயந்தீர்க்கும். ஏனெனில் பிசாசு தன்னுடைய பிள்ளைகள் முலம் அதை செய்ய அனுமதித்தான். புத்தியில்லாத கன்னிகைகள் மறைந்துபோவதோ அல்லது குருட்டாட்டத்தினால் அவர்களைத் தாக்கவோ முடியாது; ஆனால் அவர்கள் அதே வேளையில் விசுவாசத்தை மறுதலிக்க மாட்டார்கள். ஆமென்!
23 நடுராத்திரி சத்தத்திற்கு வெளியே உள்ள ஒவ்வொரு மனமாற்றமும் அர்மகெதோன் யுத்தத்திற்க்காக ஒரு ஆட்சேர்ப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் ஆஸ்போர்ன், மோரிஸ் சருல்லோ மற்றும் எவால்ட் ஃபிராங்க் ஆகியோர் பூமியெங்கிலும் அதற்க்காக செல்கிறார்கள்.
24 வெளிப்படுத்துதல் 19:19, கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு இராணுவங்கள் ஆவிக்குரிய எகிப்தில் அல்லது அர்மகெதோன் என்ற இடத்தில் நமக்கெதிராக யுத்தம் செய்ய கூடினர், 18 ஆம் வகம் கூறுகிறதாவது, ஐஸ்வரியங்கள், சபைகளின் மாம்சம் அதாவது குதிரைகள் கொள்ளை அடிக்கப்படும்.
25 வெளிப்படுத்துதல் 17 போலவே, வெளிப்படுத்துதல் 19:18-ல் உள்ள இந்த ராஜாக்கள் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், சபை அலோசனை சங்கங்கள் மற்றும் சபைக் கூட்டமைப்புகள். இவைகள் எல்லாம் ராஜ்ஜியங்களாக இருக்கின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு சபை ஒரு ராஜ்ஜியம். இதனுடைய தலைவர்கள் சபைத் தலைவர்கள். இந்த சபைகளின் உறுப்பினர்கள் அடிமைகள். இந்த சபைகளில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் சுதந்திரமாக மற்றும் பறவைகளை போன்றவர்கள்.
26 மேலும் வெளிப்படுத்தல் 16:13 முதல் 14 கூறுகிறதாவது பிசாசுகளின் ஆவிகள் அற்புதங்களை செய்து ஆர்மகெதோன் யுத்தத்திற்க்காக பூமியினுடைய குடிகளை சேகரிக்கின்றது! இன்று பூமியின் குடிகளை ஒன்றாக கொண்டு சேர்க்கும் இந்த சாத்தானின் தூதர்கள் யார்? இன்று, நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதாவது கிறிஸ் ஒயாகிலோமே டேவிட் ஒளவூர், இம்மானுவல் மக்கன்டிவா, ஏஞ்சல் யூபிர்ட், டி பி யோசுவா மற்றும் டேவிட் ஒயிடிபோ இந்த தீர்க்கதரிசனத்தை பூர்த்தி செய்யும் சாத்தானின் தூதர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும்! இன்று நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதாவது தேவதூதர்கள் ஜோயல் ஆஸ்டின், TD ஜோக்ஸ், டக் பேட்சிலரால், பில்லி கிரகாம், எடிர் மெசிடோ, வால்டிமீரோ சாண்டியாகோ, சைலஸ் மலாஃபியா, பவுலா வையிட், ஜாய்ஸ் மேயர், ஆல்பர்டோ மொட்டிசி கிளாடியோ ஃபிரைட் சான் மற்றும் தாந்தே கிபெல் ஆகியோர் இன்று, இந்த தீர்க்கதரிசனத்தை பூர்த்தி செய்துக் கொண்டிருக்கும் சாத்தானின் தூதர்கள்! இன்று நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதாவது பென்னி ஹின் மனாசே ஜோர்டான், ஜெஸ்ஸி ஜாக்சன், ஜான் ஹாகி, பாட் ராபர்ட்சன், ஜோகிம் கோன்ஸ்லாவ்ஸ், டொனால்ட் பர்னெல், ஆலேஹான்ட்ரோ பூல்லான் கில்லர்மோ மால்டொனாடோ ஆகியோர் இன்று, இந்த தீர்க்கதரிசனத்தை பூர்த்தி செய்துக் கொண்டிருக்கும் சாத்தானின் தூதர்கள்!
27 இப்போது, எகிப்தில் என்ன நடந்தது? இந்த தெய்வங்கள் எல்லாமே யூதர்களைக் கொள்வதற்காக பாரோவின் படைக்கு தங்கள் அதிகாரத்தை கொடுத்தன. மேலும் இந்த சபைகள் தங்களுடைய வல்லமை மற்றும் அதிகாரத்தை காவல் துரை மற்றும் நீதிமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு கொடுக்கும். இது தலைமுறை தலைமுறையாக இன்று வரை நடக்கின்றது. பரிசேயர், சதுசேயர், ஹெலனிஸ்டிக், எசேன் தேவர்கள்... ஆகியோர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கைது செய்து கொன்று போடும் படியாகவும் அப்போஸ்தலர்களைத் துன்புறுத்துவதற்காகவும் ரோம வீரர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தார்கள். இன்று என்ன நடக்கும்? இந்த சபைகளின் தெய்வங்கள் காவல் துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை துன்புறுத்துவதற்காக தங்களுடைய அதிகாரத்தை கொடுக்கும், இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் திசை திருப்பப் பட வேண்டாம்! இவை சாத்தானின் கரங்களில் உள்ள ஆயுதங்கள்.
28 இப்போது, வெளிப்படுத்துதல் 11: "... அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு ... அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும். மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு." புறஜாதிகளின் சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு இஸ்ரவேலில் எலியா மற்றும் மோசே ஆகியோருடன் நடக்கும் இந்த அர்மகெதோன் யுத்தம் துன்புருத்துதலின் மற்றொரு கட்டமாகும்.
29 நல்லது! தவளையை கவனிக்கவும், நீர் பாம்புகளை போல, தவளை தண்ணிருக்குள்ளும் தண்ணீருக்கு வெளியேயும் வாழ முடியும். ஆனால் மீன் அதை செய்ய முடியாது. அது பாசாங்குத்தனமானது. அவர்கள் எங்களுடன் ஜெபம் செய்யலாம் ஆனால் அவர்களோடு நாம் ஜெபம் செய்ய முடியாது. நீரில் இருவரும் இருப்பினும் மீன் தவளையோடு சிநேகிதம் வைத்துக் கொள்ள எதிர்பார்க்காது. நீங்கள் கவனித்தீர்களானால் தவளை காகம் போன்ற அதே சத்தத்தை கொண்டிருக்கும் ... ஆமென்!
30 நல்லது! அர்மகெதோன் மற்றும் துன்புறுத்தலுக்குப் பிறகு, அது தேசங்களின் உபத்திரவமாகும் ஏனெனில் பரிசுத்தவான்களுடைய இரத்தம் சிந்தப்படுவதினால். அனைத்து சந்தர்ப்பங்களிலும், வெளிப்படுத்துதல் 16:13 முதல் 16 வரை அது அரபு-இஸ்ரேலியப் போரையோ அல்லது ஒரு நாடு இன்னோரு நாடுடன் ஆன யத்தம் அல்லது மற்றொரு அல் கொய்தாவிற்கு எதிரான யுத்தம் என பேசவில்லை.
31 வெளிப்படுத்துதல் 16:13 முதல் 16-ஐ நன்றாக வாசியுங்கள். சபைகளில் இருக்கும் சாத்தான் பூமியின் குடிகளை வஞ்சிக்கின்றதை நீங்கள் பார்ப்பீர்கள். மிருகத்தின் அடையாளத்தைப் போலவே, அர்மகெதோன் யுத்தம் முற்றிலும் ஆவிக்குறியதாகும். முழு உபவாசம், இந்த சுவிசேஷ பிரச்சாரங்கள், நடுராத்திரி சத்ததிற்க்கு வெளியே நீங்கள் பார்க்கிற அற்புதங்கள் அர்மகெதோன் யுத்தத்தை நோக்கமாக கொண்டு இருக்கின்றன. எவை இந்த யுத்தத்தை துவங்கும் என ஏற்கனவே இந்த செய்தியில் அடங்கியிருக்கிறது, ஆனால் உலகம் முழுவதிலுமுள்ள அனைத்துத் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களும் அதைக் கேட்கும் வரை தேவன் தக்க வைப்பார். உங்களுடைய கண்களை இந்த பிரசங்கங்கள் மேல் வையுங்கள் " சபையும் அரசும்" அல்லது தீயின் மூலம் அவர்களுடைய வேதாகமங்கள் கடந்து செல்லுதல். நடுராத்திரி சத்தத்தை விட இன்னும் உண்மையாகவும் கடினமாகவும் வர முடியாது.
32 தேசங்கள் மூன்று காரியங்களுக்காக எதிர்பார்க்கின்றன, ஒரு யுத்தம், ஒரு துன்புறுத்தல் பிறகு ஒரு உபத்திரவம். இப்போது வெளிப்படுத்தல் 19:11 முதல் 21-ல் உள்ள கூறுகளை நான் பிரசங்கிக்கிறேன். அறியாத மொழியில் வருகின்ற புதிய அறியாத பெயர். அது என்ன அர்த்தம்மென்று எனக்குத் தெரியாது ஆனால் தேவன் அவைகளை வெளிப்படுத்தினார். நீங்கள் பார்க்கிறீர்களா?
33 நல்லது! இப்போது என்னை நன்றாகப் பின்பற்றுங்கள், வெளிப்படுத்துதல் 2 மற்றும் 3 ஆம் அதிகாரம் ஏழு சபைக் காலங்களில், நாடுகளின் பல்வேறு சபைகள் தொடர்பாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு வெவ்வேறு பெயர்களை கொண்டிருந்தார். சபை தொடர்பாக கர்த்தரின் பெயர் மாறும் மற்றும் வெளிப்படுத்துதல் 19 ல் அறியாத பெயர் இருக்கும் என கூறுகிறது ஏனெனில் அறியாத மொழியின் வெளிப்பாடு இன்னமும் முத்திரையிடப்பட்டிருக்கின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா?
34 அத்தகைய காலம் அல்லது அத்தகைய சபையின் ஆரம்பத்தில், எதிர்கால புதிய பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன: " இவ்விதமாக இன்னார் இன்னார் கூறினார்...". நீங்கள் பார்க்கிறீர்களா? ஆதியும் அந்தமும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், தேவக்குமாரன், ஆமென், உண்மையும் சத்தியமும் ... அது என்ன? சபையின் ஒவ்வொரு கட்டத்திலும், இயேசு கிறிஸ்து ஒரு புதிய பெயரை எடுத்துக் கொள்கின்றார். சபைகளின் ஒவ்வொரு கட்டத்திலும், சாத்தானும் ஒரு புதிய பெயரைப் எடுத்துக் கொண்டான். நீங்கள் பார்க்கிறீர்களா?
35 "நான் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்," என்று இயேசு சொன்னபோது, "நான் கத்தோலிக்கன்" என்று சாத்தான் சொல்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து "நான் தேவனுடைய குமாரன்" என்று சொன்னபோது, சாத்தான்: நான் புராட்டஸ்டன்ட்-மெத்தடிஸ்ட் என்று சொல்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,' நான் உண்மையும் சத்தியமுள்ளவர்", என்று சொன்னபோது, சாத்தான் : நான் கிறிஸ்தவ-சுவிசேஷக, நான் ஒரு பாப்டிஸ்ட் கிறிஸ்தவன், நான் அனபாப்டிஸ்ட் கிறிஸ்தவன், நான் தேவனின் கிறிஸ்தவ கூட்டம், நான் ஒரு பெந்தேகோஸ்தே கிறிஸ்தவன், நான் ஒரு அட்வெண்டிஸ்ட் கிரிஸ்துவனாக இருக்கிறேன், நான் லூத்தரன் கிறிஸ்துவாக இருக்கிறேன்... என்று சொன்னான். நீங்கள் பார்க்கிறீர்களா? புதிய பெயர்கள், பிசாசுப் பெயர்கள், நரகத்திலிருந்து வந்த சாத்தானின் பெயர்கள்.
36 இப்போது வெளிப்படுத்தல் 19:12 நாம் பார்க்கலாம் நான் இதை வாசிக்கின்றேன்"... அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது" எழுதியிருந்த நாமம் என்ன நாமம்? ஏழு இடி முழக்கங்கள் பேசப் போகின்றன... இந்த இயேசு கிறிஸ்துவின் இடத்தில் ஒரு பதிலி பெயர் அல்ல, ஆனால் அவருடைய வெளிப்பாட்டின் ஒரு பண்பு. அது ஆதியிலே பெயர்கள் ஒரு செய்தியை வெளிப்படுத்தினது என்று குறிப்பிடுவதர்க்கு இது ஒரு தருணமாக இருக்கின்றது. அது மனிதர்களுக்ளோ, அல்லது விலங்குகளுக்கோ ல்லது பறவைகளுக்கோ. ஒரு பறவையின் பெயரானது அது அந்த பறவையின் சத்தமாக இருக்கின்றது.
37 முதலாவதாக, 11-ம் வசனத்தில், அது எப்பொழுதும் ஏழாவது காலமாக இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் வெளிப்படுத்துதல் 3:14-ல் அவர் உண்மையும் சத்தியமுள்ளவர். ஆனால் இங்கே, ஒரு அறியாத பெயர் மற்றும் வசனம் 13 கூறுகிறதாவது. இந்த பெயர் "தேவனுடைய வார்த்தை" என்று கூறுகிறது. ஆனால் வெளிப்படுத்துதல் 2:12 முதல் 17-ல் பெர்கமு சபையின் காலமானது வெளிப்படுத்துதல் 19 ல் நடுராத்திரி கட்டத்தில் லவோதேக்கியா காலத்தின் நேரடியான நிழல் ஆகும்.
38 பெர்கமமு மூன்றாவது காலம், லவோதேக்கியா ஏழாவது காலம். ஏற்கனவே பெர்கமுவில், "இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;" என்று எழுதப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்துதல் 19:15 ல்: "புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது;" ஆனால் பெர்கமுவிடம் 16 ஆம் வசனத்தில் . அவர் ... என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். என்றார். ஆமென்!
39 பெர்கமுவிற்க்கு, என்னும் இடத்தில் அவர், "சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், சாத்தான் அங்கே சபைகளில் வாழ்கிறான், ஆனால் நீங்கள் என் மேல் உள்ள விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. இப்போது இதை கவனிக்கவும்: 17 ஆம் வசனத்தில் பெர்கமுவிற்க்கு இதை கூறுகிறார்: உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன் தேவதூதர்களிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் நான் மறைத்து வைத்திருந்த மன்னாவை உங்களுக்குக் கொடுப்பேன். நான் உங்களுக்கு ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பேன், அதில் ஒரு புதிய பெயர் எழுதப்பட்டுள்ளது. ஆமென்!
40 இப்போது பெர்கமுவில் உள்ள மணவாட்டியின் பெயர் தன் நடுராத்தியில் மணவாளனின் புதிய பெயர். வெளிப்படுத்துதல் 2:17-ன் புதிய எழுதப்பட்ட பெயர் வெளிப்படுத்துதல் 19:12-ல் எழுதப்பட்ட புதிய பெயர். அது என்ன? நடுராத்திரி சத்தம். ஏழாவது காலத்தில் இறுதி ஊழியத்தின் நிழலாக பெர்கமுவின் காலம் இருக்கிறது.
41 மத்தேயு 25:6 ன், சத்தம் கூறினதாவது: "இதோ, மணவாளன் வருகிறார், ..." நாம் புறப்பட்டு வெளியே சென்ற போது, யாரை கண்டெடுத்தோம்? ஒரு எழுதப்பட்ட செய்தி அதாவது, "தேவனின் வார்த்தை". இந்த எழுதப்பட்ட செய்தியை தெரிந்துகொள்ளும் எவரும் தூய அர்த்தத்தில், அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அறிந்திருக்க முடியாது... ஒரு பெரிய இரகசியம் எளிமையில் வெளிப்பட்டிருக்கின்றது. ஆமென்!
42 ஆனால் துன்புறுத்தல் எப்படி நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாள் நான் என் சொந்த லூயிஸ் செகண்டு வேதாகமத்தை பகிரங்கமாக எரித்தபோது எத்தனை பேர் இருந்தார்கள்? மெகாபோன் எடுக்கப்பட்டது மற்றும் அங்கே ஒரு மனிதர் இருந்தான், அவன் எந்த NG0 என்று எனக்கு தெரியாது, அவன் என்னை காப்பாற்ற விரும்பினார். அவன் இவ்விதமாக, "அவரிடத்தில் மெகாபொன்னை கொடுங்கள், அவர் ஒரு ஐவரிக் குடிமகன்! என்றான்" வெளிப்படுத்தும் சுதந்திரம் அடிப்படையில், அதை தடுக்க எந்த உரிமையும் இல்லை!" என்றான். ஆனால் லூயிஸ் செகண்டு வேதாகமத்தை பகிரங்கமாக எரித்ததாகக் கேள்விப்பட்டபோது அவர் விட்டு சென்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? எந்த அரசு சாரா நிறுவனமும், எந்த ஒரு நிறுவனமும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க முடியாது! எல்லா நேரங்களிலும், ஒரு மனிதன் இருக்கலாம்! ஆனால் எவால்ட் பிராங்க கூறுகிறபடியாக எந்த அமைப்பும் இருக்காது. பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் அப்படியாக அது இல்லை!
43 சேவல் கூவும் வேளையில் இந்த செய்தி இன்னொரு திருப்புமுனையை எடுக்கும் பொழுது மேலும் இந்த செய்தியை விசவாசித்த முந்தய இஸ்லாமியர்கள் குர்ஆனை பொதுவான இடத்தில் வைத்து எரிப்பார்கள், அது துன்புறுத்தலைத் தூண்டும் மற்றும் சர்வதேச ஒற்றுமைக்கு எச்சரிக்கையாக, பல மாநிலங்கள் அவர்களுக்கு ஏற்ப தடை விதிக்கப்படும், சட்டங்கள் மற்றும் உண்மையான திருச்சபை வாயில்கள் மூலம் தங்கள் பிரதேசங்களில் இத்தகைய சபை மூடப்படும்.
44 இந்த நடவடிக்கையை அமல்படுத்தாத எந்தவொரு தேசமும் சர்வதேசத் தடைகளை அம்பலப்படுத்தி, தூதுவர்கள் நினைவூட்டல்களுடன் தொடங்கி, அத்தகைய ஒரு தேசத்துடனான உறவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி, அத்தகைய ஒரு நாட்டோடு ஒத்துழைக்கும் எந்த தேசத்துடனும் வெளிப்படும். ஆனால் இதைச் செயல்படுத்தாத எதாவது ஒரு நாடு இருக்குமா? இல்லை சகோதரர்களே! இந்த பிராந்தியத்தில் இருந்து இந்த சபையை அகற்றுவதற்காக தேசங்கள சந்தோஷப்படுகிறதை நான் மீண்டுமாக கூறுகிறேன்.
45 நீங்கள்: "சகோதரர் பிலிப்பு, நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாகவே தெரிகிறது ஆனால் முன் எச்சரிக்கையாக, அது தொடங்கும் போது அதை ஏற்றுக்கொள்வேன்!" என கூறுகிறீர்கள். நீங்கள் அதை ஏற்க வேண்டும் என்றால், தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இருப்பதற்க்கு இப்பொழுதே அது நேரம். அது நிகழ்வதற்க்கு முன்னமே நீங்கள் இறந்துவிட்டால் கூட! இல்லாவிட்டால் நீங்கள் ஏறக்குறைய மத்தேயு 22:12-ல் ஏற்கனவே வாய்ப்பை கொடுத்திருந்தும் ஒன்றும் இல்லாமல் கலியாண விருந்திற்க்கு வந்தவர்கள் போல இருப்பீர்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். ஆமென்!
--:--
--:--