



Kacou 41 (Kc.41) : நீ கண்ட நான்கு மிருகங்களின் இரகசியம்
(2007 ஜனவரி 21, ஞாயிற்றுக்கிழமை, ஐவரி காஸ்டிலுள்ள ஆபிட்ஜானுக்கு சமீபமான அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1 சாத்தானின் அடுத்தகட்ட தந்திரங்களை நாம் மீண்டும் காண்கிறோம். இது இப்போது மூன்று நபர்கள், அவர்களில் இரண்டு தீர்க்கதரிசிகள், இப்படியாக, "காக்குவ் பிலிப்பு உண்மையிலேயே மத்தேயு 25:6-ன் தீர்க்கதரிசி செய்தியாளனாக இருந்தாகவேண்டும், ஆயினும், அவரது நேரம் கடந்துவிட்டது, ஏனெனில் நாம் இனிமேலும் சத்தத்தின் கட்டத்தில் இல்லை ஆனால் எண்ணையின் கட்டத்தில் உள்ளோம். சத்தத்துடன் கன்னிகைகளின் வேலை முடிந்துவிட்டது, சேமிப்பிலுள்ள எண்ணையை அவர்கள் இப்போது தேடவேண்டும். யேகாயின் ஊழியம் முடித்துவிட்டது! காக்குவ் பிலிப்பின் மூலம் தேவன் பேசுவதை முடித்துவிட்டார்!
2 செய்தி உண்மை என்று நம்புகிறவர்களிடமிருந்து இது போன்ற காரியங்களை நாம் கேட்பதென்பது எளிதானதல்ல. ஆனால் நாம் கலங்கவேண்டியதில்லை, அது ஒரு பலவீனம். இதுபோன்ற எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் ஒரு பழைய பிசாசு என்பதை அறிந்திருங்கள். கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோர் பெரியவர்களாக எண்ணம்கொண்டபோது, அதைத்தான் அவர்கள் மோசேயிடம் சொன்னார்கள், முக்கியமாக மோசே ஒரு எத்தியோப்பிய மனைவியை எடுத்துக்கொண்டபோது. ஆனால் சகோதரரே, அமைதியாயிருங்கள்! பரலோகத்திலிருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாலொழிய அவன் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது; தாவீதின் ஸ்தானத்தில் எவராவது இருக்கவேண்டியது இருந்தால், அது அதோனியாவோ அல்லது அப்சலோமோ அல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
3 நல்லது, மீண்டும், நான் இன்று காலை விசித்திரமான காரியங்களை சொல்ல விரும்புகிறேன், யாராவது அதை எங்காவது சொல்லியிடுக்கிறார்களா, அதை நான் அறியேன். ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இந்தச் செய்தியைப் புரிந்துகொள்ளாவிட்டால், அதை ஒரு சகோதரனிடமோ அல்லது பாஸ்டரிடமோ கேட்பதற்கு மனத்தாழ்மை உள்ளவர்களாக இருக்கட்டும்.
4 தானியேல் 2:35-ஐ வாசிப்போமாக ... நேபுகாத்நேச்சாருக்கு தேவன் அருளின தரிசனத்தினுடைய வியாக்கியானத்தின் முடிவில். இந்த கல் சிலையை மோதி, துண்டுகளாக நொருக்கின போது, வேதாகமம் அதை கூறுகிறது... நாம் அதை இப்போது வாசிக்கலாம்: "அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாகிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; அந்தச் சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று. ஆமென்! தயவாக, இந்த வசனத்தின் கடைசிப் பகுதியை கவனியுங்கள்: "...அந்தச் சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று."
5 "நீ கண்ட நான்கு மிருகங்களின் இரகசியம்" என்பதின் பேரில், இன்று காலை, நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். தானியேல் புத்தகத்தின் மற்ற இரண்டு அதிகாரங்களைப் பற்றியும் நான் பேசுவேன். முதலாவது தானியேல் 7, அதில்தான் இந்த நான்கு காட்டு மிருகங்களைப் பற்றி பேசப்பப்பட்டுள்ளது, அவையாவன: சிங்கம், கரடி, சிறுத்தை மற்றும் நான்காவதாக பெயரில்லாத ஒரு மிருகம். மேலும் தானியேலின் இந்த சொப்பனமானது துண்டுகளாக நொறுங்கின பெரிய சொரூபத்திற்கும், 8-ம் அதிகாரத்திற்கும் இடையேயுள்ள பிளவில் இருக்கிறது. அங்கு தான் இரண்டாவது மிருகமான ஒரு ஆட்டுக்கடா பற்றி பேசப்பட்டுள்ளது ஏனெனில் தானியேல் 8:20 கூறுகிறதுபோல அது மேதிய-பெர்சிய சாம்ராஜ்யமாக இருக்கிறது. பிறகு மூன்றாவது மிருகமான ஒரு வெள்ளாட்டுக்கடா, அதாவது ஒரு ஜவானான, கிரேக்க உலக சாம்ராஜ்யம் தான் அது.
6 அதற்கு முன்னர், அந்தச் சிலையை நொறுக்கின கல் என்னவாக இருக்கிறது? அந்த கல் பற்றித்தான் நான் முதலில் பேச விரும்புகிறேன். அந்த கல் எங்கிருந்து வந்தது? அந்த கல் பரலோகத்தை விட்டு எப்போது புறப்பட்டது? அந்த கல் கொண்டிருந்த நோக்கம் என்ன? இங்கே தானியேல் 2-ல், இந்த பெரிய சொரூபத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த கெடுக்கும் நேரம் முடிவடைந்ததும், அதாவது இந்த நான்கு பெரிய சாம்ராஜ்யங்கள் பூமியில் தோன்றின பிறகு, இந்த கல் காட்சியில் வந்தது என்று சொல்ல வேண்டும்!
7 அவைகளின் அடையாளச்சின்னமான பெரிய சிலை நொறுக்குண்டதற்குப் பிறகு, இந்த வெள்ளைக் கல் ஒரு பெரிய பர்வதமாக மாறியதாக வேதாகமம் கூறுகிறது. அதிலிருந்து வெளிவந்ததான ஒரு பர்வதத்தினால் அது மூடப்பட்டிருந்தது, மேலும் அது பெரியதாக மாறி பூமியின் மேற்பரப்பு முழுவதையும் நிரப்பினது. ஆமென்! இந்த பர்வதம் வெள்ளைக்கல்லின் பெருக்கமாக மாறிற்று. மேலும் இந்த வெள்ளைக் கல்லையும், அதை உள்ளாகக் கொண்டிருக்கும் பர்வதத்தையும் தவிர பூமியில் எதுவும் மீந்திருக்கவில்லை. இவ்வாறு, இந்த கல் அது தீர்க்கதரிசன வெளிப்பாட்டின் அதே கல்லாக இருந்தது, ஆனால் இது இம்முறை ஒரு பர்வதத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆமென்!
8 இன்னும் இங்கே, தீர்க்கதரிசியாகிய தானியேல், அந்த பொன்னாலான தலை பாபிலோன் சாம்ராஜ்யம் என்றும் அதன் தலைவன் நேபுகாத்நேச்சார் என்றும் சுட்டிக்காட்டினான். வெள்ளியினாலான மார்பும், கைகளும் மேதிய-பெர்சிய சாம்ராஜ்யமும், வெண்கலத்தினாலான வயிறும் தொடைகளும் உலக கிரேக்க சாம்ராஜ்யமும், இரண்டு கால்களும் ரோம சாம்ராஜ்யமுமாம். இவை பூமியில் ஏற்கனவே நிறைவேறி முடிந்த நிகழ்வுகளாக உள்ளன.
9 ஆனால் 8-ம் அதிகாரத்தில் தானியேலுக்கு உண்டான பெரிய தரிசனத்தைப் பற்றி, வேதாகமம் அதை அங்கே கூறுகிறது, இந்த மகத்தான தரிசனம் வேறொரு விதத்தில் அது 7-ம் அதிகாரத்தினுடையதாக இருக்கிறது, அதினுடைய ரூபங்கள் வெளிப்படுத்தின வேசேஷத்தில் காணப்படுகிற உருவங்கள் போல இருக்கின்றன; அங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் அது ஆசியாவிலுள்ள எழு சபைகளுக்கான ஏதோ ஏழு செய்திகள் பற்றிய காரியமாக இருந்தது, அங்கே, அந்த கடிதங்கள் எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலாதெல்பியா மற்றும் லவோதிக்கேயா என்னும் ஏழு சபைகளுக்கு எழுதப்பட்டது, அது முடிவு காலத்தில் அவைகளின் தீர்க்கதரிசன நிறைவேறுதலை கொண்டிருக்கும். ஆனால் வேதாகமம் அதை அறிவிக்கவில்லை. ஆனாலும் புறஜாதிகளின் திருச்சபைக்கான தீர்க்கதரிசன அடையாளங்களை அவை கொண்டிருக்கின்றன என்பதை எப்படியாயினும் நாம் கண்டுகொண்டோம். ஆனால் தானியேல் 7-ன் நான்கு மிருகங்களும், தானியேல் 8-ன் மற்ற நான்கு மிருகங்களும் பற்றி, அவைகளின் நிறைவேறுதல் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்று வேதாகமம் கூறுகிறது. ஆமென்!
10 நாம் அதை தானியேல் 8:15 முதல் 17 வரை வாசிப்போம்: "அதற்கு பிற்பாடு, தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில், இதோ, மனுஷசாயலான ஒருவன் எனக்கு எதிரே நின்றான். அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் கரைகளினிடையே இருந்து கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன். அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு, முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்ன நோக்கி: மனுஷகுமாரனே, அறிந்துகொள்; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.". ஆமென்!
11 அவன்: மனுஷகுமாரனே, அதாவது, தீர்க்கதரிசியே அந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்ததுமட்டுமே என்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்றான். இவ்வாறு, தானியேல் 7 மற்றும் தானியேல் 8-ன் நான்கு மிருகங்களும் பாபிலோனிய சாம்ராஜ்யமோ அல்லது மேதிய-பெர்சிய சாம்ராஜ்யமோ அல்லது உலக கிரேக்க சாம்ராஜ்யமோ, அல்லது அஞ்ஞான ரோமாபுரியோ அல்ல, ஆனால் அவைகளின் நிறைவேறுதல் முடிவுகாலத்துக்கு அடுத்ததாக இருக்கிறது! ஆமென்! தானியேல் 7:17 முதல் 18 வரை இவ்வாறு கூறுகிறது: "அந்த நான்கு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நான்கு இராஜாக்கள். ஆனாலும் உன்னதமானவருடையை பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைப் பெறுவார்கள், அவர்கள் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களுக்கும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." என்றான். ஆமென்! நீங்கள் பார்க்கிறீர்களா?
12 தானியேலின் 8-ம் அதிகாரத்தில் அல்லது 7-ம் அதிகாரத்தில், இந்த நான்கு மிருகங்களுக்குப் பிறகு, உடனே பரிசுத்தவான்கள் காட்சியில் பிரவேசித்து, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களுக்கும் ராஜரிகத்தையும் ஆளுகையையும் பெற்றுக்கொள்கிறதை நாம் காணலாம். ஆமென்!
13 இருப்பினும் இந்த தரிசனங்களின் நிறைவேறுதலானது முடிவுகாலத்திற்கு வைக்கப்பட்டிருகிறது என்பதுதான் நான் சுட்டிக்காட்ட விரும்பும் மிக முக்கியமான காரியமாக இருக்கிறது. ஆகையால், இந்த தரிசனங்களின் நிறைவேறுதலுக்கு நோக்கிப்பார்க்க வேண்டியது நேபுகாத்நேச்சாரின் காலத்திலோ அல்லது பழைய ஏற்பாட்டின் காலத்திலோ அல்ல ஆனால் முடிவு காலத்தில். ஆயினும் நம்முடைய மீட்பிற்காக மாம்சத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுதலே முடிவுகாலத்தின் துவக்கத்தை அடையாளப்படுத்தவும் அறிவிக்கவும் செய்கிறது. மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்து தான் தானியேல் 7 மற்றும் தானியேல் 8-ன் முதலாவது மிருகம் வெளிப்படுவதை நாம் தேடவேண்டும்.
14 வெளிப்படுத்துதல் 17-ம் மற்றும் 18-ம் அதிகாரம் பேசுகிற பாபிலோனானது ஆதியாகமத்திலுள்ள நிம்ரோத்தின் பாபிலோனோ அல்லது வேதாகமத்தின் மத்தியில் உள்ள நேபுகாத்நேச்சாரின் பாபிலோனோ அல்ல, ஆனால் அது ரோமன் கத்தோலிக்கச் சபையைப்பற்றின காரியம் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள், விசுவாசிக்கிறீர்கள்? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
15 இந்த முதல் மிருகம் ஒரு மனுஷனைப்போல அதன் காலில் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது, மனுஷ இருதயம் அதற்கு கொடுக்கப்பட்டது என்று வேதாகமம் கூறுகிறது; மேலும் அது ஒரு அரசாங்கத்துடன் ஒரு தேசத்தைப் போல நடந்து கொண்டது, தூதர்களுடன் கூடிய (ambassadors) ஒரு அரசாங்க அந்தஸ்தும் கொண்டிருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. தானியேல் 7 மற்றும் 8-ன் முதல் மிருகமான கத்தோலிக்கச் சபை, முடிவுகாலத்திலே பாபிலோனின் சொரூபம் என்பதை நீங்கள் நம்புவீர்களேயாகில், பிறகு கத்தோலிக்கச் சபைக்கு முன்பு அல்ல அதாவது கத்தோலிக்கச் சபைக்கு பின்புதான் மற்ற மூன்று மிருகங்களுக்காக நீங்கள் நோக்கிப்பார்க்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
16 மேலும் முடிவுகாலத்தின் இந்த முதல் மிருகம் மார்க்கசம்பந்தமானதாக இருக்கிறதேயானால், பிறகு மற்ற மூன்று மிருகங்களும் அப்படியேயாகும்! மேலும் முடிவுகாலத்திலுள்ள இந்த மிருகம் ஒரு சபை-சாம்ராஜ்யமாக இருக்கிறதேயானால், பிறகு அதற்குப் பின்னால் வருகிறதான மற்ற மூன்று மிருகங்களுங்கூட சபை-சாம்ராஜ்யங்களாக இருக்கும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. மேலும் தானியேல் 8-வது அதிகாரத்தின் 15, 16 மற்றும் 17 வசனங்களுக்கு பிறகு 26-ம் வசனம் பின்வருமாறு கூறுகிறது: "சொல்லப்பட்ட மாலைவேளையின் மற்றும் காலைவேளையின் தரிசனமானது சத்தியமாயிருக்கிறது; ஆனால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்து வை; அதற்கு இன்னும் அநேகநாள் [செல்லும்] என்றான்." ஆமென்! மேலும் திருச்சபையின் சரித்திரமும் நடுராத்திரி சத்தமும், நான்கு நிலைகளை, கிறிஸ்தவத்தின் நான்கு கட்டங்களை வெளிப்படுக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?
17 மார்க்கசம்பந்தமான நான்கு சாம்ராஜ்யங்களில் முதலாவதான ஒன்று கத்தோலிக்கமாகும். மேலும் மார்க்கசம்பந்தமான மற்ற மூன்று சாம்ராஜ்யங்களான மிருகங்கள் புரோட்டஸ்டன்டிஸத்தில் இருந்து தோன்றினது. அதன் முக்கிய கொம்புகளாவன: லூதரன் சபை (the Lutheran church), கால்வீனிய சபை (the Calvinist church), சுவிங்லியன் சபை (the Zwingli church), ஆங்கிலிக்கன் சபை (the Anglican church), மெதொடிஸ்டு சபை (the Methodist church), அனாபாப்டிஸ்டு சபை (the Anabaptist church) மேலும் அது பாப்டிஸ்டு சபையின் துவக்கமாக இருக்கிறது. இந்த காட்டுத்தனமான புரோட்டஸ்டன்டிஸம் தான் தானியேல் 8-ன் ஆட்டுக்கடாவாக உள்ளது.
18 ஆட்டுக்குட்டியின் முன்னேற்றமடைந்த வடிவம் தான் ஆட்டுக்கடா; யெகோவாவுக்கு சுகந்தவாசனையான பலிக்காக இனிமேலும் அது ஆசாரியர்களுக்கு தேவைப்படாது. மேலும் ஆட்டுக்குட்டி முன்னேற்றமடைதலே அட்டுக்கடாவாக இருக்கிறபடியினால், அது ஆட்டுக்குட்டியின் வம்சாவளியாக இருக்கிறது, அதாவது வெளிப்படுத்துதல் 4:7-ன் கன்றுக்கு கீழாக வெளியே வந்தவர்களின் பின்சந்ததியாக உள்ளது.
19 மார்ட்டின் லூதர், ஜான் கால்வின், ஜான் ஹஸ், ஜான் விக்லிஃப், ஜான் வெஸ்லி,... அவர்களை விசுவாசித்த அனைவரும் மற்றும் அவர்களது சீஷர்களாக இருந்தவர்களுமான, தேவனின் உண்மையான ஆட்டுக்குட்டிகளின் முன்னேற்றமடைந்த காட்டு உருவம் தான் இப்பொழுது ஆட்டுக்கடாவாக இருக்கிறது! மெதோடிஸ்டுகள் அல்லது லூதரன்கள் இன்றைக்கு அதை அறியலில்லை என்றாலுங்கூட, தேவனுடைய சித்தத்தை அவர்களுடைய விசுவாசமானது வெளிப்படையாக அறிவிக்கிறது, அவர் அனுப்பின அவனை விசுவாசிப்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது, ஆனால் ஆட்டுக்கடா முன்பு ஆட்டுக்குட்டியாக இருந்தது போல அது ஒரு பழைய விசுவாசமாக இருக்கிறது.
20 ஆட்டுக்கடாவுக்குப் பிறகு வருகிறதான வெள்ளாட்டுக்கடா, அது அனைத்து சுவிசேஷக இயக்கங்களும், சுவிசேஷக சபைகளும், காட்டு மிருகங்களும், அசலான பிசாசின் பிள்ளைகளுமாக இருக்கின்றனர். தேவனுடைய வார்த்தையாக ஒருபோதும் இருந்திராததையே அவர்கள் விசுவாசிக்கிறார்கள். அவர்களது பிதாக்களாக இருக்கிறவர்கள் ஒருபோதும் தேவனின் உண்மையான செய்தியார்களாக இருந்ததில்லை. அவர்கள் வெள்ளாடுகள். முற்றிலும் காட்டு மிருகங்கள். அவர்கள் இறையியலிலிருந்தும் குறிசொல்லுதலிலிருந்தும் பிறந்தவர்களும், அவர்கள் எப்போதும் உண்மையான பரிசுத்த ஆவியென்று நம்பினதும் ஆனால் அவ்வாறல்லாதுதுமான அந்த பிசாசுகளின் வல்லமையின் கீழ் வளர்ந்தவர்களுமாக இருக்கின்றனர். சுவிசேஷக சபைகள் அல்லது சுவிசேஷ சபைகளின் இயல்புள்ள அல்லது நடுராத்திரி சத்தத்திற்கு வெளியே கிரியை செய்கிற, வேறெங்காவது இருத்து வருகிற இவை அனைத்தும் அதுவாகத்தான் இருக்கிறது.
21 எவனாவது ஒருவன் இவ்வாறாக: "நான் நாற்சதுர சபையை சேர்ந்தவன்" என்று கூறுகையில்; பிறகு அவன் ஒரு வெள்ளாடாக இருக்கிறான்! நான் எம்.ஐ.ஆர்.ஒ.எஸ் (MIEROS), எம்.ஐ.இ.வி.எ (MIEVA), எம்.இ.டி.எ (MEDA), எம்.ஐ.இ.வி.ஐ (MIEVI) ஊழியத்தை அல்லது இன்ன ஒரு சுவிசேஷக, சர்வதேச அல்லது தீர்க்கதரிசன ஊதியத்தைச் சேர்ந்தவன்"; அப்படியானால் அவன் ஒரு வெள்ளாடாக இருக்கிறான்! [ஆசிரியர் குறிப்பு: தமிழகத்திலும் இந்தியாவிலுமுள்ள, "இயேசு அழைக்கிறார் - காருண்யா", "இயேசு விடுவிக்கிறார் - நாலுமாவடி"; சபைகளின் தேசிய மன்றம், இவாஞ்ஜெலிக்கல் உறுப்பினர் உரிமைக் கழகம் ஆகியவற்றின் கூட்டமைப்பான தேசிய ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் இன்னும் அதுபோன்றவற்றைச் சார்ந்தவன் என ஒருவன் சொல்வானேயாகில் அவன் ஒரு வெள்ளாடு என்று தீர்க்கதரிசி கூறுகிறார்]. "நான் மார்மொன், நான் யெகோவா சாட்சி"; அப்படியானால் அவன் ஒரு வெள்ளாடாக இருக்கிறான்! "நான் இன்னவொரு சுவிசேஷக ஊழியத்தை சேர்ந்தவன்"; அப்படியானால் அவன் ஒரு வெள்ளாடாக இருக்கிறான்! உங்கள் முன் நிற்கிற யாராவது ஒருவர், மாம்சப் பிரகாரமாக அவன் உங்களுக்கு யாராக இருந்தாலும் ஒரு பொருட்டல்ல, "நான் இன்ன இன்ன சுவிசேஷக சபையைச் சேர்ந்தவனாக இருக்கிறேன்" என்று அவன் சொல்கையில், சகோதரர்களே அப்படியானால், ரோமம் மிகுந்த ஒரு வெள்ளாட்டுக் கடாவை நீங்கள் உங்கள் முன் கொண்டுள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
22 அவர்கள் அனைவருக்கும் இருப்பது, ஒரு பேய்த்தன வைராக்கியமும் வல்லமையுமே! இதைக் கொண்டுதான் வெள்ளாட்டுக்கடா எல்லாவற்றையும் நடப்பித்தது மேலும் வெள்ளாட்டுக்கடாவுக்கொத்த வல்லமையுள்ள ஒரு மிருகமும் அங்கு இருந்ததேயில்லை! அநேக ஆண்டுகள் சகோதரன் ஜோசப் கிரியைகள் மற்றும் ஊழியங்களின் பாப்டிஸ்டு சபையில் இருந்தவேளையில், அவருடைய இரட்சிப்பின் நம்பிக்கை அந்த சபையில் இளைப்பாறிக் கொண்டிருந்தது, அப்பொழுது அவர் எந்த சபையைக் காட்டிலும் அதில் அதிகமாக எதிர்பார்த்தார்; ஆராதனைவேளையில், அவர் ஒரு தரிசனத்தில், இவ்வாறு கண்டார்.... அவர் கூறுகிறார்: "நான் சபையில் உட்கார்ந்திருந்த போது, வெள்ளாட்டுக்கடாக்கள் சபையின் நுழைவாயிலை காவல் காத்துக்கொண்டிருந்தன. நான் மறுபக்கத்தை நோக்கிப்பார்த்தேன் அதுபோலவே சபையின் வாசற்கதவை வெள்ளாட்டுக்கடாக்கள் காவல் காத்துக்கொண்டிருந்தன".
23 ஒவ்வொரு மனிதனும் அந்த டாமி ஆஸ்பான், பென்னி ஹின், ரெய்ன்ஹார்ட் பொங்கெ, மோரிஸ் செருல்லோ, யோங்கி சோ, வாச்மென் நீ அல்லது பில்லி கிரஹாம் ஆகியோர் ஒரு அவலமான மெதோடிஸ்டை விட ஆவிக்குரியவர் என்று சொல்வான், ஆயினும் தேவனுடைய பார்வையில் அது அப்படியல்ல. மேலும் பழைய ஏற்பாட்டில், கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டபோது, அவைகளுடனேகூட வெள்ளாட்டுக்கடாக்களையும் செலுத்தினர், அது யெகோவாவுக்குப் பிரியமான காணிக்கையாக இருக்கவில்லை, ஆனால் அது முக்கியமாக பதிலீடாக செலுத்தப்பட்டது, ஏனென்றால் ஜனங்கள் வெள்ளாடுகளாக செயல்பட்டனர், அதுவுமன்றி இந்த பலியானது ஜனங்கள் மத்தியிலிருந்த வெள்ளாடுகளின் சந்ததிகளை அடையாளப்படுத்துவதாகவும் இருந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
24 நல்லது, இப்போது புரோட்டஸ்டன்டிஸத்தை பார்ப்போம்! கவனியுங்கள், பிறகு, மிக முக்கியமான ஒன்றுண்டு: தானியேல் 7-வது அதிகாரத்தில், முதலிடத்தில், வேதாகமம், முதலாவதாக, பாபிலோன் சாம்ராஜ்யமான சிங்கத்தைப் பற்றி பேசுகிறது, அதுதான் கத்தோலிக்கம், பிறகு புரோட்டஸ்டன்டிஸமான கரடியைப் பற்றியும், பிறகு வல்லமையும் பெலனும் கொண்டு பூமியை ஜெயிக்க புறப்பட்ட அனைத்து சுவிசேஷக இயக்கங்களான சிறுத்தையை பற்றியும், பிறகு முழு பிரன்ஹாமிஸ்டுகளான, நான்காவதான பெயரில்லாத மிருகத்றைப் பற்றியும் பேசுகிறது. மேலும் இந்த நான்காவது மிருகம் பெரிய காரியங்களை பேசினது, அதனுடைய கொம்புகளில் ஒன்றில் மனுஷ கண்கள் இருந்தது, அதாவது தானியேல் 12:4-ல் முன்னுரைக்கப்பட்டுள்ளதுபோலவே அது மிகுந்த அறிவாகும்.
25 செய்தியானது ஏன் பிரன்ஹாமிஸ்டுகளுக்கு எதிராக இருக்கிறது என்பதை நீங்களும் நானும் அறிந்திருக்கவில்லை ஆனால் இன்றைக்கு, அது அவ்வாறு தான் இருக்கவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஏனெனில் பொன்னாலான தலை வெளிப்படுத்தல் 17-ன் கத்தோலிக்க பாபிலோனிய சாம்ராஜ்யமாக இருக்கிறபடியினால், இரும்பும் களிமண்ணுமான கால்கள் பெயரில்லாத மிருகமாக இருக்கவேண்டும். அந்த கல்லானது முதலாவதாக மோதினது அந்த பெயரில்லாத மிருகத்தில் தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
26 இந்த நான்காவது மிருகத்திற்குப் பிறகு, அங்கே வரப்போவது மிருகமோ நாசமோ அல்ல ஆனால் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாம்; அவர்கள் எந்த இறையியலுக்கும், எந்த வஞ்சகத்துக்கும், சபைகளின் எந்த பரிசுத்த ஆவிகளுக்கும், மேலாக உன்னதங்களில் வீற்றிருந்து, ராஜ்யத்தை என்றென்றைக்கும் சுதந்தரித்துக்கொள்வார்கள். கிறிஸ்தவம் என அழைக்கப் படுகிறதான இந்த மிகப்பெரிய மதத்தை மோதியடித்த வெள்ளைக்கல்லின் வியாக்கியானமானது இப்பொழுது அவர்களில் இருப்பதால் அந்த பரிசுத்தவான்கள் பூமியை என்றென்றைக்குமுள்ள சதாகாலத்துக்கும் சுதந்தரித்துக்கொள்வார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
27 மேலும் தீர்க்கதரிசி வில்லியம் பிரன்ஹாமின் நேரத்தில், ஜூனியர் ஜாக்சன் என்னும் பெயர்கொண்ட ஒரு புகழ்பெற்ற பாஸ்டர், முதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொப்பனத்தை கொண்டிருந்தார் ... "ஐயா, இதுதான் முடிவின் அடையாளமா?" என்னும் செய்தியில் அது உள்ளது, நான் அதை வாசிக்கப்போகிறேன்: "... மண்ணைத் தண்ணீர் அடித்துக்கொண்டு போன இடத்தில், அது ஏதோ சில வாசகங்களை இந்த கற்கள் மீது பொறித்திருந்தது, நீர் அங்கே நின்றுகொண்டு, இந்த கற்களின் மேலிருந்த வாசகங்களை வியாக்கியானித்துக் கொண்டிருந்தீர்... நாங்களெல்லாரும் ஒன்று சேர்ந்து நின்று கொண்டு, அந்த மலையிலே அந்த கற்கள் மேலிருந்த அந்த இரகசிய எழுத்துக்களை நீர் வியாக்கியானம் செய்வதை கவனித்துக்கொண்டிருந்தோம்... பின்பு நீர் ஏதோ ஒன்றை, காற்றிலிருந்து எடுத்தது போல் கடப்பாரை போன்ற ஒன்றை, எடுத்தீர். அதை எப்படி எடுத்தீர் என்று நான் அறியேன். மலையின் உச்சியில் குத்தி, அதைச் சுற்றிலும் பிளவுபடுத்தி, அதன் முகட்டை அதைவிட்டு அப்புறப்படுத்திவிட்டீர். அது ஒரு கூர்நுனி கோபுர வடிவில் இருந்து. நீர் அந்த முகட்டை பெயர்த்து அதிலிருந்து நீக்கிவிட்டீர்... அதனடியில் வெள்ளைக்கல், க்ரானைட் இருந்தது. நீர் எங்களிடம்... இதை கவனித்துக்கொண்டிருங்கள்! என்றீர்". ஆமென்!
28 மேலும் இந்த சொப்பனத்தில் எப்போதும், வில்லியம் பிரன்ஹாம் அனைத்து பிரசங்கிகளுக்கும், அவர்கள் அருகில் வரும்போதும் அவர்களெல்லோரும் மேலே ஒன்றுகூடினபோதும் சொன்னதென்னவென்றால், ஒரு எழுத்தோ கல்வெட்டோ அல்லது வாசகமோ இல்லாத அந்த வெள்ளைக்கல்லின் மேல் தங்களது பார்வையை வைக்கும்படிக்கு வில்லியம் பிரன்ஹாம் அவர்களை கேட்டுக்கொண்டார். அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, வில்லியம் பிரன்ஹாம் ஒரு பக்கமாக நழுவி, மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தார் என்று ஜூனியர் ஜாக்சன் கூறுகிறார். பின்னர் பிரசங்கிகள் ஒவ்வொருவரும் தனது திசையில் செல்லத் தொடங்கினர், சிலர் இந்த திசையில், மற்றவர்கள் அந்த திசையில் சென்றதாக கூறுகிறார். இன்னும் சிலர் வேறு திசையில் சென்றனர். மேலும் இதுதான் உண்மையில் கிறிஸ்தவத்தில் நிகழ்ந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
29 இப்போது வில்லியம் பிரன்ஹாம் இந்த கூர்நுனி கோபுரத்தின் முகட்டை ஏன் வெட்டிப்போட்டார்? இந்த மிகப் பெரிய உருவம் மறுபடியும் கிறிஸ்தவம் என்னும் பெயரின் கீழ் எழும்பினதினால் தான். மேலும் வில்லியம் பிரன்ஹாம் எளிதாக அந்த முகட்டை வெட்டிப்போட்டுவிட்டு, கல்வெட்டெதுவும் இல்லாத அந்த வெள்ளைக் கல்லை கண்டார்; ஆனால் அதற்கான வியாக்கியானம், அது அவருக்கு பிறகு வரும் மற்றொரு பாத்திரம் என்பதே. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அறியாத மொழியாம் இந்த வெள்ளைக் கல்லை வியாக்கியானிப்பதற்கு வில்லியம் பிரன்ஹாமை தேவன் ஏன் அனுமதிக்கவில்லை? ஏனென்றால், அவருடைய சொந்த சந்ததியான பிரன்ஹாமிஸம் நான்காம் மிருகமாக மாரும் என்பதாலேயே. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
30 நல்லது, தானியேலின் இந்த 8-ஆம் அதிகாரத்தை நாம் இன்னும் கவனிப்போம். வேதாகமம் ஒரு இரண்டாம் மிருகமான ஆட்டுக்கடாவைப் பற்றியும், பிறகு மூன்றாம் மிருகமான ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பற்றியும், பிறகு மிகுந்த அறிவுகொண்டதும் மறைபொருள்களை (அதை இரகசியங்கள் எனலாம்) புரிந்துகொள்கிறதுமான, பெயரில்லாத நான்காம் மிருகத்தைப் பற்றியும் பேசுகிறது.
31 ஆனால் மிகவும் வல்லமையுள்ள மிருகம் அது வெள்ளாட்டுக் கடாவான மூன்றாம் மிருகம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை அனைத்து சுவிசேஷக சபைகள் எனச் சொல்லலாம். மேலும் தானியேல் 8-ன் இந்த மூன்றாவது மிருகத்தைப் பற்றி இங்கே வேதாகமம் என்ன கூறுகிறது: நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் படாமல் பூமியின் மீதேங்கும் சென்றது; உங்களால் காணமுடிகிறதா? இந்த மிருகம் மேற்கேயிருந்து வருகிறது, அதை அமெரிக்கா என்று சொல்ல வேண்டும், அமெரிக்காவிலிருந்து தான் அந்த சுவிசேஷக இயக்கம் துவங்கியது.
32 இந்த மிருகம் சுவிசேஷக இயக்கமாகும், இந்த மிருகத்திற்கு முன்பாக நிற்கத் திராணியுள்ள கத்தோலிக்கன் யார்? இந்த மிருகத்திற்கு முன்பாக, இந்த டாமி ஆஸ்பான், பென்னி ஹின், ரெய்ன்ஹார்ட் பொங்கெ, மோரிஸ் செருல்லோ, யாங்கி சோ, வாச்மென் நீ, பில்லி கிரகாம்... போன்ற இராட்சதர்களுக்கு முன்பாக நிற்கத் திராணியுள்ள மெதோடிஸ்டு, லூதரன், நசரேய சபையினன் யார்? அந்த இராட்சதர்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய முகத்துக்கு முன்பாக அக்கிரமத்தை நிறைவுசெய்ய வருகிற அக்கிரமக்காரர்களாக இருக்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
33 செட்டைகளோ பெயரோ இல்லாத இந்த நான்காவது மிருகத்தைப் பொறுத்தவரையில், அதனுடைய கரத்தில் விழுந்த எந்த கத்தோலிக்கனையும், புரோட்டஸ்டன்டையும், சுவிசேஷக சபையினனையும் நொறுக்குவதற்கு உள்ள அதன் இரும்புப் பற்களையும் அதனுடைய கொம்பில் இருக்கிற அதன் கண்களையும் தவிற வேறு செல்வாக்கு எதுவும் அதற்கு இல்லை மேலும் வெண்கல நகங்கள் அதற்கு இருந்தது என்றும் வேதாகமம் கூறுகிறது. அதுதான் பிரன்ஹாமிஸ்டுகள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
34 தானியேல் 7:23 கூறுகிறது: "அவன் சொன்னது: நான்காம் மிருகம் பூமியிலே உண்டாகும் நான்காம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து,...". மேலும் பிரன்ஹாமிஸத்திற்கு, இந்த நான்காம் மிருகத்திற்கு, நிச்சயமாகவே இரும்புப் பற்களும் பெரிய காரியங்களை பேசுகிற வாயும் இருந்தது, ஆனாலும் கத்தோலிக்கச் சபை, புரோட்டஸ்டன்டிஸம் மற்றும் சுவிசேஷக சபைகள் ஆகிய முதல் மூன்று மிருகங்களின் முன் அந்த பிரன்ஹாமிஸ்டு சாம்ராஜ்யம் ஏதாவது செல்வாக்குகளைக் கொண்டிருக்கும் என வேதாகமம் எங்கும் கூறவில்லை.
35 வெண்கல தொடைகளுக்கு முன்னதாக இருக்கிற இரும்பும் களிமண்ணுமான பாதம் என்ன? குறிப்பிடப்படவேண்டிய காரியம் என்னவென்றால், கையால் வெட்டப்படாத ஒரு வெள்ளைக்கல் திடீரென அதில் மோதினவுடனேயே, அது உடைந்து நொருங்கிப் போனதினால், பெயரில்லாத இந்த நான்காம் மிருகம் நீண்ட காலம் நிற்கவில்லை என்று வேதாகமம் கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
36 இந்த நான்காம் மிருகத்திற்குப் பிறகு பரிசுத்தவான்களின் ஜனம் வருகிறன்றனர். அந்த நான்கு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நான்குராஜாக்கள். ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்.". வேறு வார்த்தையில், இந்த பரிசுத்தவான்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் கத்தோலிக்கர்களையும், புரோட்டஸ்டன்டுகளையும், சுவிசேஷக சபையினரையும், பிரன்ஹாமிஸ்டுகளையும் நொறுக்கி ஆளுகை செய்வார்கள்.
37 தானியேல் 2:44-ல் வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: "அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை அமைப்பார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, பட்சித்துப்போடும், தானோ என்றென்றைக்கும் நிற்கும்.". [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?
38 இந்த நான்கு மிருகங்களும் பூமியிலே வெளிப்பட்டிருக்கும் நாட்களில், பரலோகத்தின் தேவன் அவர்தாமே பூமியில் வார்த்தையின் ராஜ்யம் ஒன்றை அமைப்பார்; அந்த ஆளுகை ஒருபோதும் மீண்டும் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அது ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய தலைமைக்குத் திரும்புகிறதாக இருக்கிறது. இந்த ஜனம் எப்பொழுதுமே உயிர்வாழும் தீர்க்கதரிசியுடன் நடக்கும்; அதின் தீர்க்கதரிசி பூமியை விட்டு போகையில், அது தேவனை நோக்கிக் கூப்பிடும், தேவனும் இன்னொரு தீர்க்கதரிசியை அனுப்புவார். கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் மனுஷர்களால் நடப்பார்கள் ஆனால் தேவனுடைய ஜனங்கள் எப்பொழுதும் ஒரு ஜீவனுள்ள தீர்க்கதரிசி - செய்தியாளன் மூலம் பூமியிலே நடப்பார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
39 அது அங்கே எழும்பும் என்றோ அல்லது தேவன் எழுப்புவார் என்றோ வேதாகமம் கூறவில்லை, ஆனால் பரலோகங்களின் தேவன் பூமியில் ஒரு இராஜாங்கத்தை அமைப்பார் (s-e-t u-p). அது அவரது சொந்த இராஜாங்கமாக இருக்கும். ஏனென்றால் ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டுப் பரிசுத்த ஆவி அவர்களை இனி ஒருபோதும் வஞ்சிக்காது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
40 ஒரு திருமணத்திற்காவது அல்லது ஒரு இறந்த மனிதனுக்காகவாவது இனி ஒருபோதும் அவர்கள் ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு கோவில் கதவைக் கடக்கமாட்டார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இனி ஒருபோதும் அவர்கள் ஒரு சுவிசேஷக புத்தகத்தை அல்லது வேதாகமத்தின் தவறான பதிப்பை வாசியார்கள். ஒரு பாடல், சாட்சி அல்லது சுவிசேஷக பிரசங்கத்தின் பதிவுகளை அவர்கள் இனி ஒருபோதும் கேட்க மாட்டார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
41 இங்கே பூமியில், நாம் அவர்களுடன் சாப்பிடலாம், அவர்களுடன் உறங்கலாம், அவர்களுடன் ஒரே வாகனத்தில் போகலாம் ஆனால் அவர்கள் நம்மை மீண்டுமாக ஒருபோதும் காணமாட்டாத வேளையானது வருகிறது ஏனென்றால் வார்த்தை கொண்டுவருகிற வேறுபிரித்தல் ஒரு நித்திய வேறுபிரித்தலாக இருக்கிறது. மேலும் வெளிப்படுத்துதல் 12:14-ன் வல்லமையின் கீழ், ஆத்துமாவின் வேறுபிரிதல் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது, சரீரத்தின் வேறுபிரிதலுக்காக மட்டுமே நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
42 ஆதியிலே தேவன் தம்முடைய ஜனத்தை ஒரு தீர்க்கதரிசியினாலே வழிநடத்தினார். மோசே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான், யோசுவா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். சாமுவேல் வரைக்கும் எப்பொழுதும் அவர்கள் தீர்க்கதரிசிகளாகவே இருந்தனர்; இஸ்ரவேல் ஒரு மனிதனை, ஒரு பாஸ்டரை, ஒரு ரெவரென்டை, ஒரு ஆயரை கேட்டார்கள் தேவனும் அவர்களுக்கு அதை கொடுத்தார். ஆனால் முடிவு காலத்தில், தேவனுடைய ஜனம், உன்னதமானவருடைய ஜனம், தேவனுடைய ஒரு தீர்க்கதரிசியைப் பெறுகிறார்கள், மேலும் இந்த ஜனம் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனின்றி பூமியில் நடக்கும்படி ஒருபோதும் கேட்காது.
43 அவர்களை ஒரு அப்போஸ்தலன் ஒருபோதும் வழிநடத்த மாட்டான், அவர்களை ஒரு சபை-தீர்க்கதரிசி ஒருபோதும் வழிநடத்த மாட்டான், அவர்களை ஒரு சுவிசேஷகனோ அல்லது போதகனோ அல்லது பாஸ்டரோ ஒருபோதும் வழிநடத்த மாட்டான். ஆனால் அவர்கள் ஒரு தீர்க்கதரிசன அழைப்புள்ள, ஒரு தீர்க்கதரிசன பணிநியமனம் பெற்ற, ஒரு தீர்க்கதரிசன செய்தியைக் கொண்ட, ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் மூலமே எப்போதும் நடப்பார்கள். இதுவே தேவனின் மெய்யான சித்தத்திற்குரியது.[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
44 ஒரு தீர்க்கதரிசியினால் யெகோவா இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஒரு தீர்க்கதரிசியினால் இஸ்ரவேல் பாதுகாக்கப்பட்டான். யோசபாத் இந்த வெளிப்பாட்டைக் கொண்டிருந்தான், அவன், "ஓ, இஸ்ரவேலே, தேவனை நம்பு, அவருடைய தீர்க்கதரிசிகளை நம்பு" என்று சொன்னான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
45 வேதாகமம் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகம். தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, தேவன் எப்போதும் பூமியில் தீர்க்கதரிசிகளை அனுப்பியுள்ளார், எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறவரையில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, தேவன் எப்போதும் பூமியில் தீர்க்கதரிசிகளை அனுப்புவார். உணர்ந்துகொள்ளக் கூடியவன் எவனோ, அவன் உணர்ந்துகொள்ளக்கடவன்.