மார்ச் 21, ஞாயிற்றுக்கிழமை, லோக்காட்ஜ்ரோ, அபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது
1 முதலாவதாக, நான் ஆதியாகமம் 4:15 முதல் 16 வரைப்பற்றி சிறிது பேச விரும்புகிறேன். பின்னர் நம் வேதாகமங்களை எடுப்போம். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு ஆதியாகமம் 4:9 முதல் 16 வரை வாசிக்கிறார்]. நல்லது, 15 மற்றும் 16 வசனங்களை வலியுறுத்த நான் விரும்புகிறேன். அங்கே மனிதகுலத்தின் முதல் நீதிமன்றங்களில் ஒன்றை நாம் பார்க்கிறோம். காயீன் விசாரணை செய்யப்பட்டு, மரண ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டான், ஆனால் மேல்முறையீடு செய்தான். அவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதினால் உச்சந்தலையில், ஒரு ஆவியால் குறியிடப்பட வேண்டும். மேலும் 16-ம் வசனப்படி அவன் தேவனுடைய சமுகத்தை விட்டு புறப்பட்டுப் போனான். ஏன்? ஏனெனில் அது கிருபையின் கீழிருந்தது.
2 முதலில், "இதைச் செய்யாதே, அதைச் சாப்பிடாதே..." என்கிற நியாயப்பிரமாணமாக இருந்தது. ஆதாம் மற்றும் ஏவாள் வீழ்ந்தபோது, தேவன் அவர்களை அடித்து தமது கோபத்தில் அவர்களை வெளியே துரத்திவிட்டார். ஓர் நாள் அவர் கீழே தோட்டத்துக்கு வந்தபோது, அவர் அவர்களை நினைவுகூர்ந்து, அந்த நியாயப்பிரமாணத்தை கிருபையாக மாற்றினார். அவர் நமதுபாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவில் நம்மிடம் வந்ததுபோல அவர்களிடம் சென்றார்.
3 இந்த அர்த்தத்தில், வேதாகமத்தில் ஒரு அடையாளம் அல்லது ஒரு முத்திரை என்றால், அது ஒரு ஆவியாக இருக்கிறது. தேவன் காயீன் மீது ஒரு தீய ஆவியை வைத்தார். அந்த கணத்தில் இருந்து, காயீன் தூங்கும்போது, அவனது சொப்பனத்தில் அவன் சண்டையிட்டுக் கொண்டும், இரத்தம் பீறிட்டு வருமாறு ஜனங்களை காயப்படுத்திக்கொண்டும், கொன்றுக்கொண்டும் இருந்தான். ஏனெனில் அவன் மீது போடப்பட்டிருந்த அந்த அடையாளமானது கொலைகார ஆவியாக இருந்து, அவன் நரகத்துக்குப் போகாமல் இருப்பதற்காக அவன் அதனிடமிருந்து விடுதலையடைய வகைபார்த்திருக்கவேண்டும். அவன் அந்த ஆவியிடமிருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், கடைசி நியாயத்தீர்ப்பில், அந்த குற்றம் அவன் மீது சுமத்தப்படாது. ஆனால் கூட, அவன் விடுவிக்கப்படவில்லையென்றால், அவன் வருவதை தேவன் கண்ட உடனே, அவன் மீதுள்ள அடையாளத்தை அவர் பார்ப்பார், அது ஆபேலை கொலை செய்ததற்கானது என்பதை அவர் அறிந்துகொள்வார். மேலும் அவனது மரணம் வரை, சொப்பனத்தில் அக்காரியங்களைப் பார்ப்பதை காயீனால் நிறுத்தமுடியவில்லை. அது நரகம் அவனுக்கெதிராக கூக்குரலிடுவதாகும்.
4 அதற்கு பின்னர், ஒரு நாள், அவன் சுயபுணர்ச்சி செய்து, ஆதியாகமம் 38-ல் ஓனான் போல தரையில் அவனது இந்திரியத்தைச் சிந்தினான், அதன் மீது எந்த காரணமுமிறாதபடிக்கு நிலமானது ஒரு சாபத்துக்காக தேவனிடம் கூக்குரலிட்டது, தேவனும் இன்னொரு அடையாளத்தை காயீன் மீது போட்டார். பிறகு, சில சொப்பனங்களில், அவன் தன்னையே கெடுத்துக்கொள்ளவும், சிலவேளை அவன் விழித்தெழும்பவும், அவனது இந்திரியத்தினால் அசுத்தமாக்கப்படவும் செய்தான். ஏன்? தேவன் அவன் மீது ஒரு ஆவியை வைத்தார், அவன் தீட்டுப்படும்படிக்கு அவனுடைய விந்து அவன்மீது வழிய அது ஏதுவாயிற்று. நிலத்தின்மேல் அவன் போட்ட சாபம் அவன் மேலும் அவனுக்கிருந்த அனைத்தின் மேலும் அவன் கையிட்டுச் செய்த அனைத்தின் மேலும் விழுந்தது. ஒவ்வொரு பாவமும் காயீனின் மேல் ஒரு அடையாளத்தை போட்டது.
5 பிறகு, அவன் பரிசம் கொடுக்காத ஒரு ஸ்திரியுடன் அவன் பாலியல் உறவு கொண்டான். இப்போது, அவன் ஸ்திரிகளுடன் சொப்பனத்தில் பாலியல் உறவு கொள்கிறான். அவன் சொப்பனத்தில் உண்ணுகிறான், அவன் சொப்பனத்தில் தூரமாக பறக்கிறான், அவன் சொப்பனத்தில் துரத்தப்படுகிறான்... இது என்ன? பிரமாணத்தின் கீழ், அவன் மரணத்துக்கு பாத்திரன், ஆனால் கிருபையின் கீழ், பொல்லாத ஆவிகளான அடையாளங்களை தேவன் அவன் மீது போடுகிறார். மேலும் அவனது மரணத்துக்கு முன் விடுதலையடைவதற்கும், அவர் பூமியில் அனுப்பக்கூடிய தீர்க்கதரிசி செய்தியாளனூடாக நித்திய ஜீவனை அடைவதற்குமான வாய்ப்பையும் அவனுக்கு அளிக்கிறார். இன்னமும், தேவன் ஆதியில் கையாண்ட அதே வழியின்படியே, அவர் நம்மோடும் இடைபடுவார். ஆமென்!
6 இப்போது டார்பி, ஆஸ்டர்வால்டு, டேவிட் மார்டின் மற்றும் லூயிஸ் செகண்டு வேதாகமங்களுக்கு இடையிலான ஒப்பீட்டுக்கு நான் மாறிப் போக விரும்புகிறேன். திருச்சபை வரலாற்றைப் போலவே, வேதாகமத்துக்கும் வரலாறு இருந்தது. வரலாற்றின் சில புத்தகங்களினூடாக நான் கடந்துவந்தேன். இன்றைய தினம் வரை நான் பிரசங்கித்த எல்லாவற்றிலும் சரிசெய்ய எனக்கு எதுவும் இல்லை. தேவனுடைய உண்மையான வார்த்தையை சரித்திரம் உறுதிப்படுத்துகிறது. யூசேபியஸ், பாலி கார்ப், சைப்பிரியன், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின், ஜான் வெஸ்லி போன்ற அனைவரையும் நான் பார்த்தேன்.
7 ஆனால், இத்தகைய காரியங்கள் அல்லது இத்தகைய பிழைகளின் அடிப்படையில் ஜேம்ஸ் மன்னன் அல்லது லூயிஸ் செகண்டு வேதாகமம் பிசாசினுடையது என்று நான் கூறுகிறதில்லை, மாறாக ஏப்ரல் 24, 1993-ல் நான் பெற்றுக்கொண்ட வெளிப்பாட்டின் அடிப்படையில்தான் கூறுகிறேன். மேலும் அந்த வேதாகமங்களை வைத்துக் கொண்டிருத்தல், அது நரகத்திற்குச் செல்வதை தேர்ந்துகொள்வதாகும். மத்தேயு 16:18 மற்றும் 19-ன் படி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது திருச்சபையை ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் கட்டுவதாக வாக்களித்திருக்கிறார். அதுவே நமக்கு முக்கியம் வாய்ந்தது.
8 நமது முன்னோர்கள் கிறிஸ்தவத்துக்கு வருகையில் அனுபவித்தவைகளுடன் ஒப்பிடும்போது லூயிஸ் செகண்டு வேதாகமத்தை சுட்டெரிப்பதென்பது ஒன்றுமல்ல. அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும் அனைத்துவித ஆசீர்வாதங்களையும் வழங்கிய "அருட்கொடைவள்ளல்கள்" என்னும் முனிவர்களான, சக்திவாய்ந்த மந்திரவாதிகள் இருந்தனர்... திடீரென, யாரோ ஒருவர் தோன்றுகிறார் மேலும் அவை மோசமானதென்றும், அந்த மாந்திரீகப் பொருட்களை அவர்கள் சுட்டெரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அது கடினமாக இருந்தது, வாசிக்க முடியாதவர்களுக்கு கடினமாக இருந்தது... ஆனாலும் அந்த ஏழை பாமரர்கள் அந்த மாந்திரீகப் பொருட்களைப் சுட்டெரித்தனர். மேலும் நியாயத்தீர்ப்பின் போது, அந்த ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்கு வருவார்கள் என்றும், இன்றைய கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளை குற்றப்படுத்துவார்கள் என்றும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9 மேலும் இன்றைக்கு, எப்படி படிக்கவேண்டும் என்பதை நீ அறிந்திருக்கையில், நீ பேதுருவின், மரியாளின், இயேசுவின் சிலைகளை உன் சபைகளில் எழுப்பினாய். வாசிக்க தெரிந்திருக்கிற உங்களிடம், அவைகளை உடைக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் நீங்களோவெனில்: "முடியாது, நாங்கள் அதைச் செய்யமுடியாது, அவை பேதுருவினுடைய, பவுலினுடைய சிலைகளாக இருக்கின்றன..." என்கிறீர்கள். ஆனால், இப்போது உங்கள் கரங்களில் வேதாகமத்தை வைத்துக்கொண்டு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? தேவன் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பார்.
10 நியாயத்தீர்ப்பின்போது சில பாமரர்கள் எழும்பி உங்களைக் குற்றவாளிகளாக தீர்ப்பார்கள். பிசாசின் குமாரரான கத்தோலிக்கர்களே, பிசாசின் குமாரரான புரோட்டஸ்டன்டுகளே, சுவிசேஷக சபையினரே, பிரன்ஹாமிஸ்டுகளே! பிசாசின் குமாரரே, நரகமே உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீங்களோவெனில்: "முடியாது, நாங்கள் அதை உடைக்க முடியாது, அவை இயேசுவானவர் திறவுகோல்களை கொடுத்த மனிதனாகிய, பேதுருவினுடைய சிலைகளும், இயேசுவின் சிலைகளுமாக உள்ளன, மேலும் அது அந்த ஆயரே கடந்த ஆண்டு அவைகளை கொண்டுவந்ததாக அது உள்ளது" என்றும் கூறுகின்றீர்கள். ஆனால், அவைகளுக்குப் பின் இருப்பது சாத்தானானபடியால் அந்த சிலைகளை தகர்த்துப்போடவேண்டுமென்று எங்களைப் போன்ற அற்பமான சில மனுஷர் உங்கள் பிதாக்களிடம் கூறினர். தேவனுடையவர்கள் கீழ்படிந்தனர். நீங்கள் பார்க்கிறீர்களா? பரிசுத்த பொருட்களுக்குப் பின்னால் சாத்தானா? இயேசுவின் ஒரு சிலைக்குப் பின்னால் சாத்தானா? அதைத்தான் மனிதன் புரிந்துகொள்கிறதில்லை...
11 இப்போது, நான் சில காரியங்களை கூற விரும்புகிறேன், அது சிலரை புண்படுத்தக்கூடியதாக இருக்கலாம்: வில்லியம் பிரன்ஹாமின் நாட்களில் எவராவது தெளித்தல் ஞானஸ்நானம் கொடுக்க வந்து, மேலும் அவனது பெயர் மார்ட்டின் லூதர் அல்லது ஜான் வெஸ்லி என்று இருந்தாலும், அவன் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்! மேலும் இன்று திருச்சபை நடுராத்திரி வேளையிலும் இந்த மணிவேளைக்குரிய வெளிப்பாட்டின் பிரகாரமாகவும் இருக்கையில், எவராவது இரண்டு அல்லது அனேக வேதாகம பதிப்புகளை உபயோகித்துக்கொண்டு, பிரசங்கிக்க வந்தால், அவனது பெயர் மார்ட்டின் லூதர் அல்லது ஜான் வெஸ்லி அல்லது வில்லியம் பிரன்ஹாம் என்று இருந்தாலும், அவன் ஒரு பொய்யனும் கள்ளத் தீர்க்கதரிசியுமாக இருக்கிறான். நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் ஒரு பொய்யனாக இருக்கிறான் ஏனெனில் அங்கே ஒருவித பதிப்பு அவரை தவறு என்று நிரூபிக்கிறது, இன்னும் மற்றொருவித பதிப்பு அவரை சரி என்று நிரூபிக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
12 ஆனால் இன்றைய தினம் வரையாக வேதாகமம் எப்படி கடந்து வந்தது, அதைப் பற்றித்தான் நான் இப்போது பேச விரும்புகிறேன். முதலாவதாக, பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் எபிரெயுவில் எழுதப்பட்டன, ஆனால் தானியேல் 2:4 முதல் தானியேல் 7:28 வரை அரமாயிக் மொழியில் எழுதப்பட்டது, அது இயேசு கிறிஸ்துவிற்கு முன் 8-ம் நூற்றாண்டு முதல் கிழக்கின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது, அதேநேரத்தில் புதிய ஏற்பாடு பழைய கிரேக்க மொழியில் உள்ளது.
13 இப்போது இதை கவனிக்கவும்: டார்பி பதிப்பின் அட்டைக்கு பின்னால்: "மூல எபிரெயு மற்றும் கிரேக்க பாடங்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது" என்று எழுதப்பட்டிருக்கிறது. மேலும் லூயிஸ் செகண்டின் அட்டைக்கு பின்னாகவும்: "மூல எபிரெயு மற்றும் கிரேக்க பாடங்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் அது ஒரே மூல பாடமல்ல.
14 பிறகு இரண்டாவதாக, 16 ஆம் நூற்றாண்டில், வூட்டுகளின் வேண்டுகோளின் பேரில், ஜான் கால்வினின் உறவினரான ராபர்ட் ஆலிவ்டான் , வால்கேட்டை விட ஒரு சிறந்த பதிப்பை அசல்களிலிருந்து மொழிபெயர்த்தார், ஒரு பதிப்பு 1535-இல் வெளியிடப்பட்டது, அது ஜெனீவா வேதாகமத்திற்கும் (bible) ஆஸ்டர்வால்டுக்கும் சினோடல் (synodal) ஒன்றிற்கும்... ஒரு ஆதரவாக பயன்படுத்தப்பட்டது, இந்த பதிப்பு 1859-ம் ஆண்டில் வழக்கறிஞ்சர் ஜான் நெல்சன் டார்ன்பியினுடையது வரை அசல்-மூல பாடங்களுக்கு மிகவும் உண்மையுள்ளதாக இருந்தது.
15 மேலும் இந்த ஆலிவ்டான் பதிப்புக்கு ஜான் கால்வினால் இந்த வார்த்தைகளில் முன்னுரை எழுதப்பட்டிருந்தது மற்றும் அது என்னை வெகுவாக ஈர்த்தது... நான் அதை வாசிப்பேன்: "தேவனுடைய பூமியிலுள்ள அனைத்து பேரரசர்கள், அரசர்கள், இளவரசர்கள், மற்றும் ஜனங்கள் யாவருக்கும்... இந்த புனிதமான வேலைப்பாடு ஒரு சமீபத்திய துவக்கத்தை கொண்டிருக்கவில்லை. இதற்கு மனிதர்களின் பாராட்டு தேவை என்று நமக்கு தோன்றவில்லை. அதுபோலவே, நமது எதிராளிகள் முறுமுறுத்து எரிச்சலும் அடைவார்கள். அதற்கு என்ன அர்த்தம், அப்படியல்லவென்றால் இந்த நன்மையை அனுமதித்ததற்காக அவர்கள் தேவனை நிந்திப்பார்களா? ஓ! தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற கன்னிகைகளான நான்கு குமாரத்திகளை உடையவனான பிலிப்புவின் காலத்தில் அவர்கள் வாழ்ந்திருந்தால், அவர்கள் அதை கண்டு, அவர்களை எப்படி சகித்திருப்பார்கள்! ...
16 ஆனால் அவர்கள் இந்த பக்கங்களில் சிலவற்றைக் கடந்து வந்தால், அவர்களை நான் வரவேற்க்கிறேன்; அது தாக்குவதற்கல்ல, சில விலைமதிப்பற்ற ஆய்வுகள் செய்த தகுதிமிக்க ஒரு அறிஞ்சனை குற்றஞ்சாட்டுவதற்கல்ல. பேனாவிலோ அல்லது பேச்சிலோ எந்த தயவும் கொண்டிராதவர்களுக்கு, அவர்கள் நினைவு கூரும்படி நான் கேட்டுக் கொள்வதாவது, அவதூறுப் புயலை வீசச் செய்வது மிகவும் எளிது, மேலும் அது, இந்த கருத்தில், வதந்திகளின் குருக்குவழிகளில், அவர்களுக்கு எப்பொழுதும் திறமை வாய்ந்த அவதூறாளர்கள் கிடைப்பார்கள்... தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு வாக்குருதி பெற்றிக்கும் ஒரு மனிதனுடன் தான் அவர்கள் பயமேதுமின்றி, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு மொழியை மறுபரிசீலனை செய்யாமல் இடைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். ஆனால் அவர்களின் நஞ்சான பேச்சில் இருந்து எந்தவொரு மகத்தான மகிமையையும் எதிர்பார்க்கப்படுகிறதில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
17 ஆனால் நீங்களோ, சிறியோரும் அசட்டைபண்ணப் பட்டிருக்கிறவர்களுமாயிருக்கிற திருச்சபையே, அக்கிரமத்துக்கு சேவை புரிந்ததற்காக போய், உங்கள் அழுக்கான கரங்களை கழுவுங்கள்! மூடநம்பிக்கையுடைய உங்கள் மங்கலான கண்களை சுத்தம் செய்யுங்கள்! இந்த வார்த்தையை, வாக்குத்தத்தத்தை மற்றும் உடன்படிக்கையை பெற்றுக்கொள்ளுங்கள்... அங்கு உங்களது மணவாளனாகிய கிறிஸ்துவின், சித்தத்தை உன்னால் காணமுடியும், மேலும் உனது ஆளோட்டிகளிடமிருந்தும், நீ நீண்டகாலம் தாய் என அழைத்த அத்த மாற்றான் தாயிடம் (stepmother) இருந்தும் விடுப்பு எடுத்துக்கொள். இந்த நல்லது உன்னுடையதே! எந்த மூத்த ஒன்றிலிருந்து வருவதும் நல்ல பழக்கமாக இருக்கிறது, அது அவ்வாறே இருக்க வேண்டும் மேலும் அதை உனக்கு அவர்கள் கொடுக்கையில் ஒரு பெரிய ஆதாயம் என நீ அதை பெற்றுக்கொள்ள வேண்டும். என்னவாயினும், அதை உனக்குக் கொடுத்த அவருக்கே அது முழுவதும் சேர்த்ததாக இருக்கிறது". ஆலிவ்டான் வேதாகமத்துக்கு ஜான் கால்வின் எழுதின முன்னுரை இதுவே. ஆமென்!
18 பாரம்பரிய பதிப்புகள் மூலபாடம் என்ன கூறுகிறதோ அதை காண்பிக்க முயலுகின்ற அதே நேரத்தில், அது எவ்விதமாக சொல்லப்பட்டிருந்தாலும் இறையியல், மொழியியல், தொல்பொருள் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் மூலபாடம் என்ன அர்த்தம்கொண்டது என்பதை காண்பிக்க தரமான அல்லது நவீனமான பதிப்புக்கள் முயலுகின்றன.
19 அது ஒரு அசல் வியாக்கியானமாகும், ஏனென்றால் புரிந்துகொள்ளுதல் தேவனுக்கு உரியதாக இருக்கிறது. ஏன் தேவன் ஒரு எளிய மொழியை உபயோகிக்கவில்லை? எபிரேய மொழியில் எந்த உயிரெழுத்துமில்லை. வேதாகமம் மனிதனுடைய மட்டத்துக்கு தாழ வேண்டுமா, மனிதன் வேதாகமத்தின் மட்டத்துக்கு உயரவேண்டுமா? ஆனாலும் அவனது கலாச்சாரம், அவனது மொழி... ஆகியவை தொடர்சியாக மாற்றமடைகிறதும், தாறுமாறாக்கப்படுகிறதுமாக இருப்பதால் பரிசுத்தமானதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அவன் அறிந்தவனாக இருக்கிறான். தெருவின் மனிதனுக்கான ஒரு மொழிபெயர்ப்பிற்கு நாங்கள் செல்கிறோம் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். மறைந்திருக்கும் கட்டங்களுடன் கூடிய வெள்ளை ஆடைகளை இயேசு அணிந்திருந்தார் என்று சொல்லப்படுவதை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஏனென்றால் அது மேற்ச்சட்டைகள், தளராடைகள் (tunics), நீண்ட அங்கிகள் மற்றும் கிழக்கத்திய புபு ஆடைகளுக்கு அது சமானமாக இருக்கிறது.
20 மூலபாடம் சொன்னதை வார்த்தைகளுடன் அது எவ்வாறு சொல்லப்பட்டுள்ளதோ அவ்விதமாகச் சொல்வதே அவசியமாயிருக்கிறது. அதை புரிந்துகொள்வது கடினம் என்பதை நான் கண்டரிந்தாலும், தேவனின் புனிதமான சொல்லமைப்பையே நான் விரும்புகிறேன். மேலும் பரிசுத்தமானதைப் பற்றி எந்தவொரு கருத்தும் இல்லாதவர்கள் அல்லது பரிசுத்தமானதுடன் சேர்ந்து வளரவோ அல்லது அதற்காக பிறவாதவர்களோவென்றால், அமைதியாக இருக்கட்டும்...
21 தோற்சுருள்கள், சுருள்கள், தோல்கள், செம்மறியாட்டுத் தோள் எலும்புகள் ஆகியவை மாற்றப்படலாம், ஆனால் பாடம் அவ்விதமாகவே இருக்க வேண்டும். வேதாகமம் நேரடியாக புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்றால், எத்தியோப்பிய மந்திரிக்கு மற்றொரு பதிப்பை பிலிப்பு பரிந்துரை செய்திருக்க வேண்டும். பாரம்பரிய மொழிபெயர்ப்பில், சொல்லகராதி வார்த்தைகள் அதனுடைய பொருள் முன்னேற்றமடைந்தது மேலும் இன்றைய பாணியிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு பாணியை கொண்டுள்ளது.
22 அந்த வார்த்தைகள் அவற்றின் சமானமானவற்றால் அவற்றுக்கு பதிலாக மாற்றப்படக்கூடாது ஆனால் தரமான மொழிபெயர்ப்பு (classic translation) ஒரு மாற்றியமைத்தலாக, பரிசுத்தமானதின் பரிணாமமாக இருக்கிறது. அது பிசாசின் ஒரு வேலைப்பாடாக உள்ளது. உதாரணமாக, எபேசியர் 1:3 முதல் 14 வரை கிரேக்க மூலபாடத்தில் ஒரு வாக்கியமாக உள்ளது, மேலும் அது இருக்கிறவண்ணமாகவே மொழிபெயர்க்கப்படவேண்டும். பரிசுத்தமானது வளர்சியடைய வேண்டியதானால், ஒர் நாளில், அது இனிமேலும் பரிசுத்தமானதாக இருக்கமுடியாது. வளர்ந்த அல்லது வழக்கற்றுப் போகும் வார்த்தைகளை பக்கத்தின் அடியில் குறிக்கப்பட வேண்டும்.
23 மேலும் முடிவுக்கு வர, நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்: இந்த செய்தியின் ஆரம்பத்திலிருந்து வேதாகம பதிப்புகள் பற்றி பேசுகையில், நான் சொல்ல விரும்பினது ஒரே ஒரு காரியம் தான். இந்த செய்தியை விசுவாசிக்கிறவர்களான நமக்கு ஒரு இரகசியம்: ஜான் நெல்சன் டார்பி வேதாகமம் ஒரு வேதாகம பதிப்பு அல்ல, ஆனால் அது தன்னில் தானே வேதாகமமாம், மேலும் அது ஒரு இரகசியமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் டார்பியை வைத்துக்கொண்டிருந்து மேலும் நரகத்திற்குப் போகலாம் என்பதை நினைவில் வையுங்கள், ஏனெனில் உங்களுடைய வாழ்நாளின் உயிர்வாழும் தீர்க்கதரிசியின் செய்தியே இரட்சிக்கிறதாக இருக்கிறது.
24 [ஆசிரியர் குறிப்பு: சபையினர் பாடிக்கொண்டிருக்கையில் சகோதரர் பிலிப்பு ஜெபம் செய்கிறார்]: ஓ! தேவனே, எப்போதும் எங்களுக்கு சில தீர்க்கதரிசிகளை அனுப்பும்! நான் முதல்வனும் அல்ல, நான் கடைசியானவனாக இருக்கவும் முடியாது. ஆனால் எனக்குப் பிறகு நீர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகையில், எங்கள் பிள்ளைகள் அவனை அடையாளம் கண்டுகொள்ள அருள்புரிவீராக, ஏனென்றால் பூமியிலே மிகப்பெரிய ஆசீர்வாதமானது உயிர்வாழும் தீர்க்கதரிசி தான்...
25 தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் அவனது காலத்தில் மோசேயை அடையாளம் கண்டுகொண்டது போல, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவனது காலத்தில் எரேமியாவை அடையாளம் கண்டுகொண்டது போல, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவனது காலத்தில் தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டுகொண்டது போல, நீர் பூமியில் இருந்தபொழுது, உம்மை தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அடையாளம் கண்டுகொண்டது போல, இன்றைய தினத்திலுள்ளது போலவே, இக்காலத்தில் ஜீவிக்கிற தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டுள்ளனர், எனக்கு பிற்பாடு, நீர் பூமியிலே தீர்க்கதரிசிகளை அனுப்பும் போது, எங்களது பிள்ளைகள் அவர்களை அடையாளம் கண்டுகொள்வதை நிச்சயப்படுத்தியருளும். இதுவே எனது ஜெபம் கர்த்தாவே. அதை எங்களுக்கு அருளும் கர்த்தாவே! உமக்கு நன்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. ஆமென்!