Kacou 43 (Kc.43) : 1 இராஜாக்கள் 19:11 முதல் 13 வரையின் படியாக இறுதி வஞ்சிப்பை திரை நீக்கி காண்பித்தல்
பிப்ரவரி 13, 2005-இல் ஞாயிறு காலை லோகாட்ஜ்ரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது
1இப்பொழுது நாம் வேதாகமங்களை 1 இராஜாக்கள் 19: 1 முதல் 13 வரை எடுத்து வாசித்துப்போம். ஏனெனில் இந்த காலை வேளையிலே, தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி மனிதகுலத்திற்கு பேச விரும்புகிறார். வசனங்கள் 9 முதல் 13 வரை பிரசங்கிக்க விரும்புகிறேன். 11 முதல் 13 வரையுள்ள வசனங்களை மறுபடியும் வாசிக்க விரும்புகிறேன்: "அப்பொழுது யெகோவா அவனை நோக்கி : நீ வெளியே வந்து யெகோவாவிற்க்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவிற்க்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான்."
2நல்லது... எலியா, தேவனுடைய தீர்க்கதரிசி, அவருடைய ஊழியத்தின் முடிவில், மோசேயைப்போல வரும்படியான காரியங்களை அவருக்கு காண்பிக்கும்படி தேவன் மலையின்மேல் ஏறச் செய்தார். பென்னி ஹின், டேவிட் ஒளவூர், பருட்டி காசோங்கோ மற்றும் அநேக கள்ள தீர்க்கதரிசிகள் பூமியை வஞ்சிப்பதை கண்ட போது, எலியா அழுதான். உபாகமம் 34: 1 முதல் 3-ல் இஸ்ரவேல் புத்திரர்களுக்கு கானான் பிரிக்கப்பட்டதை மோசே தரிசனத்தில் கண்டபோது இஸ்ரவேல் இன்னுமாக யோர்தானுக்கு வேரு பக்கத்தில் இருந்தது.
3தேவனுடைய தீர்க்கதரிசியாகிய மோசே தரிசனத்தில் வரப்போகிற யுத்தங்களைக் கண்டான். யுத்தங்கள், வஞ்சனைகள், தந்திரங்கள் மற்றும் கானானியர்கள் யூதர்கள் மீது சுமத்தப் போகிற தவறுகளைக் மோசேக் கண்டான்; யோசுவா 6-ஆம் அதிகாரத்தில் உள்ள ஏழு ஆசாரியர்களை ஏழு சபைக் காலங்களிலும், 5-ம் வசனத்தில் நடுராத்திரி சத்தத்தையும் மோசே கண்டார். ஓசியா 12:14-ல் "கூறுகிற விதமாக கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்" தேவன் இஸ்ரவேலை தீர்க்கதரிசி யோசுவாவைக் கொண்டு பாதுகாக்கின்றதை மோசே கண்டார்.
4இவ்வாறு, 1 இராஜாக்கள் 19-ல் எலியாவின் ஊழியத்தின் முடிவில், வஞ்சனைகளை அவனுக்கு காண்பிக்கும் படியாக தேவன் அவனை அந்த மலையின்மேல் ஏறி போகப் பண்ணினார், பூமியின் குடிகளை சோதிக்கும்படி தேவனுடைய மகத்தான சேனை வரப்போகிறது. அந்த வஞ்சனைக்கு பிறகு மென்மையான மற்றும் இரகசிய சத்தம் கேட்கப்படும்.
5கர்த்தராகிய இயேசு தாமே இந்த மகா வஞ்ஜகத்தைக் கண்டார். கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தின் முடிவில், மத்தேயு 24-ல், அவர் அந்த மலையின் முகட்டில் ஏறின பிறகு மத்தேயு 25-ம் அதிகாரத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலை கண்டார். இந்த மலையின் முகட்டில் இருந்து, ஏழு முத்திரைகளையும் மத்தேயு 24: 24-ஐயும் அதாவது 1 இராஜாக்கள் 19: 11 முதல் 13-ஐயும் கண்டார். அப்போஸ்தலர் 20: 17 முதல் 38 வரையுள்ள பவுலின் ஊழியத்தின் முடிவில், தேவன் அவனை அந்த மலையின் மேல் உயர்த்தின பொழுது மேலும் அவன் இந்த வஞ்சகத்தைக் கண்ட போது, அவன் அழுதான்.
6பென்னி ஹின், டேவிட் ஔவோர், பருட்டி காஸோங்கோ மற்றும் அபிஷேகங்களோடு உள்ள தீர்க்கதரிசிகள் பூமியைச் செய்யவேண்டுமெனக் கொண்டிருந்த எல்லா தீய செயல்களையும் பவுல் கண்டபோது, அவர் அழுதார், அவர் கூறினதாவது: நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். இந்த செய்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்று மற்றும் அரை ஆண்டின் தீர்க்கதரிசன ஊழியத்தின் முடிவில், இந்த இரகசியம் வெளிப்பட்டது. ஆமென்!
7அப்பொழுது அனைத்து பெரிய தீர்க்கதரிசிகளும் கடைசி நாட்களில் உள்ள இந்த மகா வஞ்சகத்தைக் கண்டார்கள்; ஆகாப் பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு வழங்கின சில வகையான சிம்மாசனத்தின் மீது சூட்டுகள் அணிந்து கொண்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள். யேசபேலின் குமாரத்திகள், சர்ப்பத்தின் சந்ததிகள் அதே வகையான சிம்மாசனங்களின் மீது அவர்களுடைய சபையோர் முன்பாக உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பாக, ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள்.
8இப்பொழுது, 1 இராஜாக்கள் 19: 11 முதல் 13 வரையுள்ள மகிமையான உரைக்கு செல்லலாம். நீங்கள் பார்க்கிறீர்களா? மூன்று கட்டங்களுக்கு பின்னர் ஒரு இரகசிய சத்தம், ஒரு எக்காளமோ அல்லது, சத்தங்களோ அல்ல ஆனால் ஒரு சத்தம்! மோசே அது ஒரு சத்தத்தின் வடிவத்தில் அதைக் கேட்டான், மேலும் அதை ஒரு மனிதன் சுட்டிக் காட்டப் போகிறான், யோசுவா. மத்தேயு 25: 6 மற்றும் வெளிப்படுத்துதல் 12:14-ன் இந்த ஊழியத்தில் இயேசு கிறிஸ்து ஒரு சத்தத்தின் வடிவத்தில் அதைக் கேட்டார்.
9சபினோ கனியனில், வில்லியம் பிரான்ஹாம் அந்த சத்தமானது அவருக்கு மேலே ஒருவரிடம் பேசுவதைக் கேட்டார் [ஆசிரியர் குறிப்பு: ஏழாவது முத்திரை, Ref.191-192]. வில்லியம் பிரான்ஹாம் கூறுகிறாதாவது: "நான் பார்த்த பொழுது, ஒரு மூலையில் பெட்டியைப் போன்று ஒரு சிறிய ஸ்தலம் இருந்தது. நீங்கள் புகைப்படத்தில் காணும் அந்த ஒளியானது எனக்கு மேல் காணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது". நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் அவருக்கு இந்த ஒளியானது என்ன கூறினது என்றும் அதை அவர் அறியாத மொழியில் கேட்டார் என்றும் அவருக்கு தெரியாது. 1993-ல், நான் அந்த சத்தத்தைக் கேட்டேன், ஆனால் யாரையும் நான் பார்க்கவில்லை, நான் அறியாத மொழியில் கேட்டேன், ஆனால் நீங்கள் அதை நேரடியாகக் கேட்டு மேலும் அதை புரிந்துக் கொள்கிறீர்கள், ஏனென்றால் வாக்குதத்தமானது உங்களுடையது.
101 இராஜாக்கள் 19-ல் இந்த காற்று, பூமி அதிர்ச்சி மற்றும் அந்த அக்கினி அந்த இரகசிய சத்தத்தின் மூலமாக என்ன நடந்தது? " கனிவான" என்ற வார்த்தையின் பொருள் "இரகசியம்". வில்லியம் பிரான்ஹாம் கூறினதாவது : "... ஒரு சத்தமானது இருக்கும், அவிசுவாச உலகத்தின் மத்தியில் அல்ல; அது ஒரு இரகசியமாக இருக்கும்". 1963, ஆகஸ்ட் 18-இல் பிரசங்கித்த " இணையும் நேரம் மற்றும் அடையாளம்" பத்தி 134-ல் உள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு இரகசியம். அது என்ன?
11காலங்களின் முடிவில் எலியாவினுடைய ஆவிக்குரிய சந்ததியில் காத்திருக்கும் காரியங்களை தேவன் அவருக்கு வெளிப்படுத்தினார். அவைகளும் ஏழு முத்திரைகளாகும். அந்த சத்தம் ஏழு இடிகளில் அடங்கியிருந்தது, வஞ்சனை திரை நீக்கப்படும் மட்டும் காலத்தின் முடிவு வரை முத்தரிக்கப்பட்டிருக்கின்றது.
12பிரன்ஹாமிஸ்டுகள் திரை நீக்கி காண்பிக்கும் வரை ஏழு இடி முழக்கங்களின் வெளிப்பாடு முடிவடையாது. நீங்கள் பார்க்கிறீர்களா? மார்ட்டின் லூதர் பிரசங்கித்தபோது, அது ஏழு இடி முழக்கங்கள். வில்லியம் பிரான்ஹாம் பிரசங்கித்தபோது, அது ஏழு இடி முழக்கங்கள். கர்த்தராகிய இயேசு வரும் வரை அது எப்போதும் ஏழு முழக்கங்களாக இருக்கும்.
13மாலை வேளைக்கும் நடுராத்திரிக்கும் இடையில் பூமியிலிருந்து வரும் பெரும் வஞ்சகத்தை மூன்று கட்டங்களானது குறிப்பிடுகின்றது. வெளிப்பாடு கூறுகிறதாவது எலியா குகையில் இருந்த பொழுது, ஒரு சத்தமானது அவருக்கு மேலே ஒருவரிடம் பேசினதை ஏழாம் முத்திரையில் இருப்பதை போன்று கேட்டார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
14இந்த மென்மையான மற்றும் இரகசியமான சத்தமானது எலியாவிடம் அவர் அங்கு என்ன செய்கிறார் என்று கேட்ட சத்தத்தை விட வித்யாசமானதாக இருக்கின்றது. முதல் சத்தமானது மத்தேயு 25: 6-ன் உடையது. எலியா வெளியே சென்றார். தானியேலும் அதைக் கேட்டான்! எலியா அதைக் கேட்டபோது, மத்தேயு 25: 6-ல் அவர் வெளியே சென்றார். ஆனால் அவர் அதை புரிந்துக் கொள்ளும்படிபாக அவருக்கு கொடுக்கப்படவில்லை. ஆமென்!
15இப்போது, இந்த மூன்று சாத்தானிய தாக்குதல்களையும் பாதாளத்திலிருந்து வருகிறதை நான் காண்பிக்க விரும்புகிறேன். முதலாவதாக ஒரு பலத்த பெருங்காற்று: அவைகள் மகத்தான ஆவிக்குரிய இயக்கங்கள் இன்னுமாக உலகத்தை அசைத்துக் கொண்டிருக்கின்றது ஏனெனில் ஆவியானது ஒரு பலத்த பெருங்காற்று முலமாக வருகின்றது. அப்போஸ்தலர் 2: 2-ல் கூறினதாவது, பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டானது.
16இந்தத் துருவ காற்றுகள் இந்த நூற்றாண்டின் மலைகளைக் கிழித்து, எப்படிக் குலைத்துள்ளன என்பதை நீங்கள் பார்க்கறீர்கள்: நாட்டின் ஜனாதிபதிகள், மந்திரிகள், செல்வந்தர்கள், மேயர்கள், பிரதிநிதிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசர்கள், பிரபுக்கள், நன்கு அறியப்பட்ட ஆட்கள் ஆகியோரின் கல்லான இருதயங்களை இவ்வாறு உடைத்தது. நீங்கள் பார்க்கிறீர்களா? செய்தி எதுவும் இல்லாமல் இந்த அற்புதங்களின் இயக்கத்தில் அனைவரும் கொண்டு செல்லப்பட்டனர். பிசாசின் அபிஷேகத்தால் மூடப்பட்ட சாத்தானின் புத்திரர்கள், இயேசுவின் நாமத்தை உடையவர்களாக தேசங்களை உலுக்கினர், அவர்கள் ஒரு உலக புகழைப் பெறாமல் தங்கள் நாட்டின் மேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் தேவன் அந்த காற்றில் இல்லை என்று வேதாகமம் கூறுகிறது.
17நீங்கள் அந்த விழிப்பு கூட்டங்கள் மற்றும் சுவிசேஷ கூட்டங்களில், பிசாசின் அபிஷேகத்தினால் ஜனக் கூட்டத்தினர் மயங்கி விழுந்ததை கண்டிர்கள். இங்கே, ஐவரிக் கோஸ்டில், நற்செய்தியின் புல்டோசர்கள் இயக்கம் உள்ளது ... எந்த மரமும் அவர்களை எதிர்க்க முடியாது! தீர்க்கதரிசன ஜெபங்கள் அல்லது பிரகடனங்கள் என்று சாத்தானிய மந்திரங்கள் இருந்தன. நாம் அதை கண்டிருக்கின்றோம்.
18மேலும் 1 இராஜாக்கள் 19-ல் அவர்களின் தெய்வமாகிய பாகால், தேவர்கள், பிசாசுகள் மற்றும் தண்ணீர்களின் சிலைகள், நிலத்திடமிருந்து, வானத்திலிருந்து, பர்வதங்களிலிருந்து, பொன்னிலிருந்து, வெள்ளியிலிருந்து வெண்கலத்திலும், கற்கலிடம் இருந்து அவர்களுக்கு அருளும் ஆசீர்வாதத்தைத் தரும் படியாக அதிகாரத்துடன் ஆர்ப்பரிப்பதை எலியாவினால் கேட்க்க முடிந்தது.
19எலியாவினால் இவைகளை கேட்க்க முடிந்தது : "பாகாலே, என் தூதனை மீண்டும் கொண்டு வாரும்! பாறையே, என் ஆசீர்வாதங்களைத் திரும்பக் கொடு! மலைகளே, என் ஆசீர்வாதங்களைத் திரும்பக் கொடு!, வானமே, சந்திரனே, பூமியே, நான் என் திருமணத்தை உன்னிடததிலிருந்து பறித்துக் கொள்கின்றேன், என் வேலையை உன்னிடத்திலிருந்து பறித்துக் கொள்கின்றேன், பாகாலின் நாமத்தினால் என் ஆசீர்வாதங்களைக் திரும்பக் கொடு! எருதுகளின் இரத்தத்தோடு என் வாழ்க்கையின் மீது ஆசீர்வாதத்தை எழுதுகிறேன்! நீ இரவு கணவனே, நான் உன்னுடைய அந்தரங்க பகுதிகளை பிடுங்குகிறேன் ... மற்றும் நீ இரவு மனைவியே, நான் உன்னுடைய மார்பகங்ளை வெட்டுகிறேன் ... சாத்தானே, நான் உனக்கு எதிராக மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களை அனுப்புகிறேன், நான் உன் மேலாக மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை அனுப்புகிறேன், மேலும் இப்போது உங்கள் முகாமுக்கு அணு குண்டை அனுப்புகிறேன் !!! ... உங்கள் முகாமில் இருந்து புகை எழும், அது முடிந்துவிட்டது ... ஆமென்! ". நீங்கள் பார்க்கிறீர்களா? பிசாசின் புத்திரர்களே, நீங்கள் எந்த வேதாகமத்தில் அதை பார்த்தீர்கள் ? அதற்க்கு எலியா : நான் கீசோன் ஆற்றங்கரையிலே இவைகள் எல்லாவற்றையும் கொன்று போட்டேன் அல்லவா? பிறகு அவற்றை மீண்டும் ஏன் பார்க்கிறேன்? " என்றான்.
20அப்பொழுது எலியா: உங்களுடைய ஆத்துமாக்கள் இளைப்பாருவதாக!" என்றான். இந்த பிசாசுகள் சத்தமாக கூக்கூரலிட்டது. அவைகள் அதினுடைய கைகளை தட்டி, பூமியின் மீது பாதங்களை அடித்து, வியர்வையில், விரல்களில் சுடக்கிட்டு கொண்டிருந்த போது மேலும் எலியாவினால் அவைகள் பேசுகிறதை கேட்க்க முடிந்தது : "நான் என் சாபங்களை அழித்து, என் விரலைக் காளையின் இரத்தத்தில் தோய்த்து. நான் பூமியிலும் வானத்திலும் என் ஆசீர்வாதத்தை எழுதுகிறேன் ... நான் ஆசீர்வதிக்கப்பட்டவன், மேலும் நான் பாகாலின் நாமத்தினால். கிரியை செய்கிறேன், நான் பாகால் நாமத்தினால் என் குழந்தைகளுடன் என் வீட்டில் இருக்கிறேன் ... பாகால் என்ற நாமத்தினால்! பாகால் என்ற நாமத்தினால்! ".
21இன்று, பூமியின் மேல் உள்ள இந்த பிசாசுகள், பாகாலை அழைப்பதற்கு பதிலாக, அவைகள் இயேசு கிறிஸ்துவை அழைக்கிறது, இந்த பிசாசின் பிள்ளைகள் ஏமாற்றப்படுகிறார்கள். இயேசுவும் அப்போஸ்தலர்களும் ஏதாவது மந்திரங்களைச் செய்தார்களா? அது மாந்திரீகம். மந்திரவாதிகளின் சகோதரத்துவம்; நன்றாக மனக்கும் சூட்டுகளில் இருக்கும் சூனியக்காரர்கள், நீங்கள் அதை பார்க்கிறீர்களா?
22அங்கே இளைஞரும் முதியோரும், ஆண்களும் பெண்களும், ஏழை மற்றும் ஐஸ்வரியவான்களும் வியர்வையில், தரையில் பாதங்களை அடித்து, கரங்களை தட்டி, தீவிரமாக அழுது பாகாலின் போதனைகளைப் படிப்படியாகக் கட்டளையிட்டபடி அவர்கள் இறையியல் கல்லூரி மற்றும் ஆயர் பள்ளிகளில் கற்றுக்கொண்டதற்க்கு ஏற்றபடி செய்தார்கள. உரத்த சத்தமிட்டு கூப்பிடும் படியாக அவர்களுக்குச் சொன்னதை எலியா நினைவு கூர்ந்தார். நாம் அதை வாசித்துப் பார்ப்போம்: "மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்". நீங்கள் பார்க்கிறீர்களா?
23இந்த மாயவிசாரணை பிரகடனங்களுக்குப் பிறகு, அவர்கள் காளைகளின் இரத்தத்தை எடுத்து, 1 இராஜாக்கள் 18:28-ல் கூறுகிறதாவது அவர்கள் மேல் இரத்தம் பிரீட்டு வரும்படியாக செய்தார்கள் மேலும் எலியாவினால் வெளியே இவைகளை கேட்க்க முடிந்தது : "நான் இயேசுவின் இரத்தத்தில் என்னை மூழ்கடிக்கின்றேன், நான் இயேசுவின் இரத்தத்தினால் என்னைத் தூய்மைப் படுத்தினேன். நான் காளைகளின் இரத்தத்தில் என்னைக் கழுவினேன். இயேசுவின் இரத்தத்தை நான் குடிக்கிறேன்! நான் என் வீட்டின் கதவில், என் படுக்கையில் ... நிலத்தில் இரத்தத்தை பூசுகிறேன், நான் எருதுகளின் இரத்தத்தின் மூலமாக என் ஆசிர்வத்தை உன் மீது எழுதுகிறேன், நான் எருதுகளின் இரத்தத்தின் கீழ் எனது வெற்றியை அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மேல் வெற்றியைத் தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன். ". அதற்கு எலியா : நான் கீசோன் ஆற்றங்கரையில் பருட்டி காசோங்கோவை கொன்றுப் போட்டேன அல்லவா ? நான் கீசோன் ஆற்றங்கரையிலிருக்கிற எல்லாரையும் கொன்று போட்டேன் அல்லவா?
24அப்பொழுது எலியா, "ஒ இரக்கம்! உங்கள் ஆத்துமா அமைதியில் இளைப்பாரட்டும்! ". சில சமயங்களில், ஒரு சத்தமானது இது போன்ற வார்த்தைகளை பேசும் : "நாங்கள் ஜெபம் செய்தோம், எங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது", அப்பொழுது ஜனக்கூட்டம்: பாகாலின் நாமத்திலே பாகாலின் நாமத்திலே ... பாகால் என்ற நாமத்தினால்! ". சத்தம் பேசின போது, ஜனங்கள் பதில் அளித்தார்கள் : "பாகாலின் நாமத்தினால்!!! பாகாலின் போதனைகளின் படி .
25மாயவித்தைகளின் வல்லமையான வரங்கள், தீர்க்கதரிசனம், அந்நிய பாஷையில் பேசுவது, பகுத்தறிவு, இந்த சூனியத்தை உறுதிப்படுத்தியது. இவ்வளவாக வேதாகமம் கூறுகிறதாவது கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படுவார்கள். இந்த சபைகளில், ஊழிய இயக்கங்கள் மற்றும் ஊழியங்களில் கிரியைச் செய்யும் ஆவிகள் பரிசுத்த ஆவி இல்லை என்பதை பகுத்தறிபவன் யார்?...
26அதன் பிறகு, ஒரு பூமி அதிர்ச்சி. என்ன நேரத்தில்? பூமியானது சாயங்கால செய்தியை சிலுவையில் அறைந்த நேரத்தில். அங்கே, ஏப்ரல் 24, 1993 அன்று கிரகணம் எழும்புகிறது. இவை பூமி அதிர்ச்சிகள் அல்ல, ஆனால் பூமி அதிர்ச்சி பின்னர் இருள். யோவேல் 1: 4 கூறுகிறபடி, பலத்த பெருங் காற்றினால் வஞ்சிக்கப்படாதவர்கள் இந்த பூமி அதிர்ச்சியினால் வஞ்சிக்கப்படுவார்கள்.
27சாயங்கால செய்தி இயேசு கிறிஸ்து என்றால், மத உலகம் அவரை சிலுவையில் அறைய வேண்டும், இதுதான் பிரன்ஹாமிஸ்டுகள் ஏற்றுக்கொள்ள விரும்பாதது. மார்ட்டின் லூதர் வழங்கிய செய்தி சிலுவையில் அறையப்பட்டது. ஆனால் லூத்தரன்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஜான் வெஸ்லி வழங்கிய செய்தி, சிலுவையில் அறையப்பட்டது. ஆனால் மெத்தடிஸ்டுகள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் யோவான் ஸ்நானகன் வழங்கிய மாம்சத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டதை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
28பூமி அதிர்ச்சிக்கு பின், அங்கே அக்கினி இருந்தது. அதை நாம் வாசிப்போம்: "... பூமி அதிர்ச்சிக்குப்பின் ஒரு அக்கினி ; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை " பெருங்காற்று மற்றும் பூமி அதிர்ச்சி ஆகியவற்றை விட்டுச் சென்றதை இந்த அக்கினி பட்சிக்க இருந்தது. "... பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. யோவேல் 1: 4, யோவேல் 2:25, தேவன் தாமே அவைகளை அனுப்பியவர் என்று கூறுகிறது. 2 தெசலோனிக்கேயர் 2: 11 முதல் 12 வரை அதை கூறுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?
29இந்த மூன்றாவது சாத்தானிய தாக்குதல் நரகத்தில் இருந்து எழும்பி வந்தது ... பாகாலின் தீர்க்கதரிசிகளால் கொல்லப்பட்ட எருதுகள் இந்த சபைகளின் உறுப்பினர்கள். மேலும் எலியா இவ்வாறு கேட்டார்: "அக்கினி! அக்கினி! அக்கினி! ... நான் உன்னை அக்கினியினால் பட்சிக்கின்றேன் ! பரிசுத்த ஆவியானவரின் அக்கினி! ... நான் அக்கினியை அழைக்கிறேன்! அக்கினி! அக்கினி! அக்கினி! ".
30இந்த மாந்திரீக தலைமைக்கு முன், இந்த பேய் படையெடுப்பு முன், விசுவாசத்தின் முதன்மையானவர்கள் (சாம்பியன்கள் ) இருந்தனர். மூன்று அல்லது நான்கு முறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்த சிலர், மற்றவர்கள் எழுபது அல்லது நூறு நாட்கள் உபவாசம் இருந்தவர்கள், இந்த நூற்றாண்டின் கோலியாத்துக்கள். பழங்காலத்தின் ராட்சதர்கள்! களிமண் பாதம் கொண்ட கோலியாத்துக்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? எழுபது அல்லது நூறு நாட்கள் உபவாசம் இருந்தவர்கள், இவர்கள் தவம் இருப்பவர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? சிறு தொலைவில், வெளிப்பாட்டின் மூலம் என்னால் கேட்க்க முடிந்தது : "ஹு ஹா! ஹு ஹா! ஹு ஹா! ஹு ஹா! அவர்கள் தங்கள் பாதங்களைத் தரையில் அடித்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அது விலங்குகள் போல இருந்தது!
31எலியா அக்கினியின் தீர்க்கதரிசியாயிருந்தான். 1 இராஜாக்கள் 18: 25 முதல் 40 வரை அவன் அக்கினியை வரவழைத்தான், ஆனால் இந்தத் அக்கினி இயக்கத்தில் அவன் இருப்பதாக பார்க்க முடியவில்லை. பிறகு, தான் கொல்லப்பட்ட பாகாலின் தீர்க்கதரிசிகளைப் போலவே அழுகைகளும் இருந்ததை எலியா கண்டான்.
32பிறகு பூமியில் எப்பொழுது அவனுடைய ஆவி ஊழியம் செய்யப்போகும் காலத்தில், பூமியில் காலங்களின் முடிவில், அவன் கொன்றுப்போட்ட பாகாலின் தீர்க்கதரிசிகளின் ஆவிகள் பூமிக்குத் திரும்பவரும் என்று தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார் ... பென்னி ஹின், மோரிஸ் செருலோ, கிறிஸ் ஓகைகிலோம் கடந்தார்கள் கத்தோலிக்க சபைகள் கடந்து சென்றன, புராட்டஸ்டன்ட் சபைகள் கடந்து சென்றன, சுவிசேஷ சபைகள் கடந்து சென்றன, பிரன்ஹாமிஸ்டு சபைகள் கடந்து சென்றன, அக்கினியின் இயக்கங்கள் கடந்து சென்றது, இயக்கங்கள் மற்றும் அக்கினி ஊழியங்கள் கடந்து சென்றது.
33மேலும் அவர்கள் அனைவரும் உரத்த சத்தமாக, "பாகாலின் ஆவியின் அக்கினி! பரிசுத்த ஆவியின் அக்கினி! அக்கினி! அக்கினி! அக்கினி! நான் அக்கினியை அழைக்கிறேன்! அக்கினி! ... " அதே வேளையில், ஒவ்வொரு பிரன்ஹாமிஸ்டு பாஸ்டரிடமும் ஆயிரக்கனக்கான அக்கினி ஸ்தம்பங்கள் இறங்கி வருகிறதைக் கண்டான். எலியா இந்த அளவின் வஞ்சகத்திற்காக அழுதான்.
34சகோதரர்களே அவர்கள் எங்கு செல்கிறார்கள்? எபிரெயர் மொழியில் அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அவர்கள் செல்வதாக வேதாகமம் கூறுகிறது. நீங்கள் புரிந்துக் கொண்டால், ஆமென்! என கூறுங்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35பாகாலின் நாறுற்று ஐம்பது தீர்க்கதரிசிகள் காளைகளின் மேல் அக்கினி வரும் படியாக அழைத்து தீர்க்கதரிசனம் உரைத்தார்கள் என வேதாகமம் கூறுகிறது. அவர்கள் ஒரு போதும் பாகாலின் அக்கினி என அழைக்கவில்லை ஆனால் பரிசுத்த ஆவியின் அக்கினி என்று அவர்கள் மறுமொழி கூறுகின்றனர். இருப்பினும் அவைகள் அது பாகாலின் அதே ஆவிகள், அதே பிசாசுகள். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, எலியா சொன்றுப் போட்ட பாகாலின் தீர்க்கதரிசிகளின் வேதனையின் அழுகைகள் நரகத்திலிருந்து நம் மட்டும் எழும்பினது.
36எலியா இடைவிடாமல் சதா காலமும் அதைக் கேட்டான்... "அக்கினி! நான் அக்கினியை அழைக்கிறேன்! அக்கினி! அக்கினி! அக்கினி! அக்கினி! ... அக்கினி உங்களை பட்ச்சிக்கும்" எலியா தன் இருதயத்தில்: உங்கள் ஆத்துமாக்கள் அமைதியில் இளைப் பாரட்டும் என்றான் ; ". இந்த சத்தங்கள் எல்லாம் அவன் கொன்றுப் போட்ட பாகால் தீர்க்கதரிசிகளின் சத்தங்கள் என அவன் அறிந்திருந்தான். இன்று, அது சுவிசேஷ சபைகள், இயக்கங்கள் மற்றும் ஊழியங்கள் மூலம் பூமியின் மேல் மீண்டும் வருகிறது, மற்றும் பாகாலின் அதே தீர்க்கதரிசிகள் நம் மத்தியில் இன்று சூட்களில் ( Suit Jackets ) இருக்கிறார்கள் மேலும் மனித குலம் அதை அறியாமல் இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
37நீங்கள் என்னை நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் அது தூய்மையான உண்மையாகும். ஏன்? ஏனென்றால் நீங்கள் பாகாலின் ஆவியால் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
38இங்கே அநேகர் தீய ஆவிகளிலிருந்து விடுதலை அடைந்திக்கின்றார்கள், ஆனால் நான் ஒரு முறையாவது அக்கினியை அழைத்திருக்கிறேனா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிசாசுகளைத் துரத்தினார், சில மன நலம் குன்றியவர்களை குணமாக்கினார், சிலரை மரித்தோரிலிருந்தெழுப்பினார் ஆனால் அவர் அக்கினியை அழைத்தாக நீங்கள் கண்டு இருக்கிறீர்களா? மேலும் பிரன்ஹாமிஸ்டுகளே அக்கினி ஸ்தம்பந்தை சுமந்து செல்கிறவர்களே, இதுவும் அதே பிசாசு! தேவனின் அக்கினி ஆதியாகமத்தில் இறங்கியபோது, அது சோதோம் கொமோராவைப் பட்சித்துப் போட்டது. 2 இராஜாக்கள் 1-ல் எலியா அக்கினியை அழைத்த போது, அகசியா ராஜாவின் ஐம்பது பேரை பட்சித்துப் போட்டது. மேலும் 1 இராஜாக்கள் 18-இல், எலியாவின் தகனபலியை அக்கினி எரித்தது. நீங்கள் பார்க்கிறீர்களா?
39இந்த பிரசங்கமானது இயேசு கிறிஸ்துவின் தூய வெளிப்பாடு ஆகும். தேவனின் பிள்ளைக்கு ஏற்கனவே அவனுக்குள் தேவனின் வித்து இருக்கிறது என்று நான் கூறிக் கொண்டே இருக்கின்றேன். ஒரு நாள் இந்த செய்தியை அவன் வாசிக்கும் பொழுது அல்லது கேட்க்கும் பொழுது, அவன் தேவனை ஆசிர்வதித்து, "இது சத்தியம்! ஓ! என்னால் அதை கொஞ்சம் பார்க்க முடிகிறது ! நான் ஏற்கனவே இந்த கேள்விகளைக் குறித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்... நான் இந்த செய்தியை வாசிக்க துவங்கின பொழுது, செதில்கள் போன்ற ஒன்று என் மனதில் இருந்து விழுந்தது! " எனக் கூறுவான்.
40பிசாசின் புத்திரன் ஒருவன் அதைக் காணும் பொழுது, அவன் எரிச்சல் அடைகிறான். ஏன்? ஏனெனில் அது அவனுக்கு இல்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் போய் அவனுடைய பாஸ்டரிடம் கொடுத்துவிடுவான்.
41சகோதரர்களே! ஒரு தேவனுடைய பிள்ளையை எடுத்து, அவனுடைய கைகளையும் கால்களையும் பிணைத்து, நரகத்தின் வாசலில் வைத்து விடுங்கள், அவன் உருண்டு சென்று பரலோகத்திற்குச் சென்று விழுவான். ஒரு பிசாசின் பிள்ளையை எடுத்து, அவனது கைகளையும் கால்களையும் பிணைத்து, பரதேசியின் வாசலில் வைத்து விட்டு, அவனிடத்தில் அவன் பரதேசியின் வாசலில் இருப்பதாகக் கூறுங்கள் ஆனால், அவன் உங்களை நோக்கி : "நரகத்தின் வாசல் எங்கே?" என கேட்பான்... ஏனெனில் அவனுடைய ஆழம் நரகத்தில் உள்ளது!
42அநேகர் நற்செய்தியைப் பெறாமல் இங்கு வந்தார்கள், ஆனால் கேள்விகளைக் கேட்க்காமல் எளிமையான பிரசங்கத்தின் மூலம் வந்தார்கள். இது மிக எளிமையானது ஏனென்றால் அது தான் அவர்களை உருவாக்கிய வார்த்தை. எல்லா காரியங்களும் நாம் எதினோடு துவங்கினோம் என்பதை சார்ந்து இருக்கின்றது ...
43இந்த செய்தி எங்கு வந்தாலும், அங்கே மன மாற்றங்கள் இருக்கும். இதைக் கேட்கும் ஒரு தெரிந்துக் கொள்ளப்பட்டவன் அவனைச் சுற்றி இதை பிரசங்கிப்பான். அவரது குடும்பம் அவருக்கு எதிராக எழும்பினாலும், தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் விசுவாசிப்பார்கள். அப்போஸ்தலர் 13: 48-ன் பிரகாரமாக தேவன் இவ்வாறு செய்வார்! பிசாசின் பிள்ளைகளைப் பொருத்தவரை, நண்டுகளை மீன்களாக மாற்றவோ அல்லது வல்லூர்களை கழுகுகளாக மாற்றும் சக்தி நமக்கு இல்லை. அவைகள் அழுகும் சடலங்களைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் வல்லூர்கள், முழுவதுமாக புழுக்களின் கூட்டம். ஆனால், நாம் புதிய மாமிசத்தைச் சுற்றியுள்ள கழுகுகள் வெளிப்படுத்துதல் 12: 14-ன் பெரிய கழுகு நமக்கு கொடுத்திருக்கிறது.
44தேவனுடைய பிள்ளைகள் விசுவாசத்தினால் விசுவாசிக்கிறார்கள், ஏனென்றால் வெளிப்பாடு விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆனால் பிசாசின் பிள்ளைகள் அதைப் பல கேள்விகளும் காரண காரியங்களுக்குப் பிறகு ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய புத்திக் கூர்மை பிடித்துக் கொண்டப்பின் ஏற்றுக் கொள்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. யூதர்களைப் போலவே, தேவனின் பிள்ளைகள் விசுவாசிக்கின்றார்கள், ஏனெனில் அது தீர்க்கதரிசி கூறினது! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]...
45எடுத்துக் கொள்ளப்படுதல் வாசலில் இருக்கின்றது. வடக்கு மீது மட்டும் உங்களுடைய கண்கள் இருக்கட்டும். தேவன் அற்புதமாக இஸ்லாமைப் பற்றிய நல்ல அறிவைப் பெற்ற மனிதர்களைப் பயன்படுத்துவார், இது தேசங்களுக்கு முடிவாக இருக்கும். உலகம் முழுவதும் இந்த அதிகாரத்தால் இஸ்லாம் அசைக்கப்படுவதை நீங்கள் காணும்போது, பிறகு அது 2000 ஆண்டுகளின் புறஜாதி தேசங்களின் திரையாக இருக்கின்றது. அப்போஸ்தலர் 3-ல், இருப்பதை போன்று, மசூதிகளுக்கு முன்னால் பல முடக்குவாத, முடமான, குருட்டு மற்றும் நோயுற்றவர்கள் குணமடைந்து மசூதிகள் கோவிலாக மாறும். இந்த ஒரு காரியத்திற்காக மாத்திரம் பூமியானது எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றது மற்றும் எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறும்.
46அப்பொழுது அந்த ரோம படைவீரர்கள் என்னைக் குறித்துச் இப்படியாக சொல்லுவார்கள்:"மெய்யாகவே அந்த காக்குவ் பிலிப்பு ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி தான் மேலும் நாமே அவரை துன்புறுத்திக் கொண்டிருந்தோம். அவர் எங்களுக்கு இந்த விஷயங்களை கூறினார்!". மத்தேயு 27:54 ஆனால் சபைகள் எதுவும் நடந்திராததைப்போன்று அதே மாயவித்தையின் அபிஷேகங்களினால் தொடந்துக் கொண்டிருக்கும். அவர்கள் சுவிசேஷத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார்கள் ...
47சகோதரரே, பவுலைப் போல, இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டை நான் பிரசங்கித்தேன். இந்த இரகசியங்களுக்காக நான் 1993-ல் ஒரு விசித்திரமான அழைப்பைப் பெற்றேன். இந்த விஷயங்களை நான் புரிந்துகொள்வதால் நான் புத்தியுள்ளவன் என்று யாராவது விசுவாசித்தால், அது அவருடைய பிரச்சனை.
48பிறகு, நாம் இந்த எல்லா தலைமுறையின் நியாயதிபதிகளாக இருப்போம். ஜலப்பிரளயத்திற்கு முன் இருந்த அநேக சபைகள் நியாயத்தீர்ப்பிற்க்காக நோவாவிற்க்கு முன்பாக வரும். அவர்கள் ஜலப்பிரளயத்திலே விழுங்கப்பட்டதை போன்று, இவ்வாறு அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். ஏசாயாவை துண்டு துண்டுகளாக வெட்டினவர்கள், அவர்களை நியாயந்தீர்ப்பதற்காக ஏசாயா இருப்பதைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். தங்களை இயேசுவினுடையவர்கள் என உரிமைக் கோரி ஜான் ஹுஸ் மற்றும் ஜான் விக்லிஃப் ஆகியோரை எரித்தவர்கள் அவர்களுடைய நேரத்தின் நியாயாதிபதிகளாகப் இவர்களை பார்க்க ஆச்சரியப்படுவார்கள்.
49எரேமியா 26: 7 முதல் 11 வரையுள்ள தீர்க்கதரிசிகள் மற்றும் ஆசாரியர்கள் நியாய்த்தீர்ப்பு பட்டியல் கேட்கப்படும் போது, அவர்கள் பூமியில் நன்கு அறிந்திருந்தவர்களை அவர்கள் முன்னால் வைத்திருப்பார்கள்: எரேமியா, அவர்களை வேதனைப்படுத்திய புற்றுநோய் அவர்களுடைய நியாயதிபதியாக இருப்பான். அது பற்கடிப்பாக இருக்கும்.
50மோசே தன் ஊழியத்திற்குத் திரும்பி வந்தபோது, கதவு அடைக்கப்பட்டது. ஆனால் கதவை அடைத்தது யார்? கதவைத் அடைப்பது செய்தியாளன் அல்ல, ஆனால் தேவன் தாமே அடைக்கிறார்! நீங்கள் பார்க்கிறீர்களா? நோவா பேழைக்குள் நுழைந்தபோது, தேவன் தான் கதவை மூடுவதற்கு முன் மனிதகுலத்திற்க்கு சிறிது நேரம் கொடுத்தார். ஆதியாகமம் 7:16 கூறுகிறது, "அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்." நீங்கள் பார்க்கிறீர்களா? மோசே வீட்டிற்கு திரும்பின போது, மோசே மற்றும் அவனுடைய ஜனக் கூட்டத்திற்கு கதவை அடைப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே தேவன் காத்திருந்தார். யோசுவாவிலிருந்து, மோசேவுடன் எவரும் நுழைய முடியாது.
51இது ஒரு சிறப்பு வெளிப்பாடு. பின்னர் வந்த எவரும், மோசே அவர்களிடம் அவனுக்கு பின் எண்ணெயை விற்பவனிடம் போகச் சொன்னான், அதாவது, யோசுவா. தேவன் எப்போதும் ராஜ்யத்தின் திறவுகோல்கள் உடைய ஒரு மனிதனை பூமியில் கொண்டிருக்கிறார், யோவான் 6: 28 முதல் 29-ன் பிரகாரமாக ஒரு மனிதனை நாம் விசுவாசிக்க வேண்டும், அவை கூறுகிறதாவது, அவர் அனுப்பினவரை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையும் சித்தமுமாயிருக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?
52ஒரு நாள், வில்லியம் பிரான்ஹாம் மரித்த பின்பு அவரது மகன்களில் ஒருவரான, ஜோசப் அல்லது பில்லி பால் தனது தந்தை செய்த அதே அற்புதங்களை நிகழ்த்தினார் என ஒரு பிரன்ஹாமிஸ்டு என்னிடம் கூறினார். அது இன்றும் தொடருகிறதா என நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர் "இல்லை! என்றார்". நீங்கள் பார்க்கிறீர்களா? 1993-ஆம் ஆண்டிற்கு பிறகு தேவனால் வில்லியம் பிரான்ஹாமின் கதவு மூடப்பட்டுவிட்டது.
53ஜோசப் பிரன்ஹாம் தாமே நடுராத்திரி சத்தத்தின் எதிர்பார்ப்பு இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுதலில் இரட்சிக்கப்பட முடியாது. அதுதான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு பிரசங்கித்துக் கொண்டிருப்பது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
54எவால்ட் ஃபிராங்க் ஜனவரி 3, 1981 அன்று எடுத்துக் கொள்ளப்படுதல் மீது தனது அனுபவத்தை பற்றிக் கூறுகிறார், நான் அவரோடு ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? வெண்மையான வஸ்திரத்தோடு கணக்கிட முடியாத ஜனக் கூட்டத்தினர் அவர்களுடைய இளமையின் பிரதானத்தில் அவரும் இருப்பதை கண்டார், எவால்ட் பிராங்க் முன் வரிசையில் இருந்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் அவர் வில்லியம் பிரான்ஹாம் அல்லது பால் அல்லது நெவில்லைக் கண்டதாக அவர் சொல்லவில்லை. அது சரி! பூமியின் மேல் நீங்கள் இருக்கும் பொழுது விசுவாசிக்காத ஒரு தீர்க்கதரிசியினால் அல்லது நீங்கள் பிறப்பதற்க்கு முன்னால் மரித்த தீர்க்கதரிசியின் மேல் விசுவாசம் கொண்டு நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. இது தோல்வியடைய முடியாத தேவனின் வெளிப்பாடு ஆகும் அது பூமியிலோ அல்லது பரலோகத்திலோ தோற்காது.
55பிறகு நியாயத்தீர்ப்பிலே, பவுல் தனது கூட்டத்தினரோடு வந்திருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்தி, "கலாத்தியர் 1: 11 முதல் 12-ன் படியாக கர்த்தாவே, நீர் ஒரு தரிசனத்தில் என்னை அழைத்தீர், நான் பிரசங்கித்ததை உம்மிடமிருந்து பெற்றுக்கொண்டேன்..." தேவன் பவுலை அடையாளம் காணாவிட்டால், அவரைப் பின்பற்றிய அனைவருக்கும் எல்லாம் முடிந்தது. பிறகு அநேகர் வந்தார்கள், மார்ட்டின் லூதர்... ஜான் கால்வின்... ஜான் வெஸ்லி...
56மேலும் லூத்தரன்கள் வருவதை நாம் காண்கிறோம். அவர்கள் தேவனிடம், "தேவனே! நாங்களும் மார்ட்டின் லூதரை விசுவாசிக்கின்றோம், உமது பரிசுத்த ஊழியக்காரர்!". ஆனால் லூத்தர் உரத்த குரலில், "லூதர் என்னையா! நான் உன்னை அறியேன்! என்றார், நீங்கள் பூமியில் என்னை எங்கு பார்த்தீர்கள்? எந்த ஆண்டு நீ என்னை விசுவாசித்தாய்?". இந்த லூதரன்கள், "1560-இல்" என்றார்கள். அதற்கு லூதர், "1560 என்றால் அது ஜான் கால்வின்! அவர்களை ஜான் கால்வின் இடம் கொண்டு செல்லுங்கள் 'ஆமென்'!
57ஆனால் ஜான் கால்வின், "ஆண்டவரே, நான் பூமியில் இருந்தபோது, நான் அவர்களிடம் பிரசங்கிக்கையில் தங்களை லூதரன்ர்கள் என அழைத்தார்கள்", மேலும் கால்வின் தங்களை கண்டனம் செய்த லூத்தரிடம் அனுப்பினார். ஆமென்! ஒரு நாளிலே, நான் கத்தோலிக்க, புராடஸ்டென்ட், சுவிஷேசக மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளை முதலாவது கண்டனம் செய்வேன்.
58லூக்கா 23: 7 மற்றும் 11-ல், ஏரோதுவின் அதிகாரத்தில் இயேசு இருந்தார் என்று பிலாத்து அறிந்து, அவரை ஏரோதுக்கு அனுப்பினார். வெள்ளை சிம்மாசனத்தின் நியாயத்தீர்ப்பின் போது என்ன நடக்கும்? முதலாவது பரிசேயர்கள் வந்தார்கள் மோசேயிக்கு பதிலாக அவர்கள் கர்த்தராகிய இயேசுவையும் அப்போஸ்தலரையும் பார்த்தார்கள். அவர்கள் பயந்து, "நாங்கள் மோசேயினுடையவர்கள் என்றனர்!". அதற்கு கர்த்தராகிய இயேசு, "அப்படியானால், மோசேயிடம் கொண்டு செல்லுங்கள்" என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா?
59மோசே அவர்களை நோக்கி, "நீ என்னுடன் வனாந்தரத்தில் இருந்தாயா?... கோரா மற்றும் தத்தான் கலகம் செய்தபோது, நீ என் பக்கத்தில் இருந்தாயா? உனக்கு ஆரோன் மற்றும் மிரியாம் தெரியுமா? என்றார். அதற்கு அவர்கள், "இல்லை! "மோசே ஆச்சரியமடைந்தார் மேலும் மோசே அவர்களிடம்," நீங்கள் என்னிடம் எகிப்தில் இருந்திர்கள் ஆனால் வெளியே வரவில்லையா ?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை! நாங்கள் ஏறக்குறைய 30 அல்லது 40-வது ஆண்டில் பூமியில் வாழ்ந்தோம்! ஆனால் நாங்கள் உமக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம் என்றார்கள்.
60அதற்கு மோசே :"30-வது ஆண்டில், அங்கே கர்த்தராகிய இயேசு இருந்தார்!. ஆனால் நீங்கள் ஏன் என்னுடையவர்கள் என கூறுகிறீர்கள்?... கர்த்தராகிய இயேசுவிடம் போங்கள்! 30 வது ஆண்டில் அது அவர் தாமே அப்போஸ்தலர்களுடன் பூமியில் இருந்தார்" எனக் கூறினார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
61அப்பொழுது, பரிசேயர் அவர்களைக் குறித்து யோவான் 5:45-ல் கர்த்தராகிய இயேசு கூறினதை நினைவுக் கூர்ந்தார்கள், பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே(ஒருவன்) உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. வெஸ்லி தனது செய்தியை மறுத்துவிட்ட லூதரன்களுக்கு இப்படியாக கூற முடியும், " பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற லூதரே (ஒருவன்) உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். "[ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]...
62வில்லியம் பிரன்ஹாம் மெத்தடிஸ்டுகளுக்கு இப்படியாக கூற முடியும் "பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற வெஸ்லியே (ஒருவன்) உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். " [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
63மேலும் நான் பிரன்ஹாமிஸ்டுகளிடம் இப்படியாக சொல்ல முடியும்: "பிதாவினிடத்தில் நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற வில்லியம் பிரன்ஹாமே (ஒருவன்) உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? நியாயத்தீர்ப்பிலே, நடுராத்திரி சத்தத்தை கேட்டு அதை நிராகரித்த பிரன்ஹாமிஸ்டுகள் வந்த பொழுது அது அதே காரியமாக இருந்தது. அது தீர்க்கதரிசனமானது! பூமியின் மேல் காக்குவ் பிலிப்பு ஜீவித்த பொழுது பூமியில் நீங்கள் ஜீவித்திருந்தால், நீங்கள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறீர்கள் என்பதை அறியுங்கள். ஆமென்!
64ஜோயல் ஆஸ்டீன், டீ டி ஜேகஸ், டக் பேட்சிலர், பில்லி கிரஹாம், எடிர் மெசிடோ, வல்டிமிரோ சாண்டியாகோ, சைலஸ் மலாஃபியா, பவுலா வயிட், ஜாய்ஸ் மேயர், ஆல்பர்டோ மொட்டிஸி, நீங்கள் அனைவரும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் அதிகார வரம்பின் கீழ் உள்ளீர்கள். கார்லோஸ் அன்னாகண்டியா, கிளாடியோ பிரீட்ஸன், டேன்டே கபேல் மற்றும் இவர்களைப் பின்பற்றும் அனைவரும் தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்புவின் அதிகாரத்தின் கீழ் உள்ளனர்!
65டாமி ஆஸ்போர்ன், கென்னத் ஷாகின், கிறிஸ் ஒக்கிலோம் டேவிட் அவ்வுர், இம்மானுவல் மக்கன்டிவா, யுபெர்ட் ஏஞ்சல், டி பி யோசுவா டேவிட் ஒயிடிப்போ மற்றும் அவர்களை பின்பற்றிய அனைவரும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் அதிகார வரம்பின் கீழ் உள்ளனர் ! பென்னி ஹின் மனாசே ஜோர்டான், ஜெஸ்ஸி ஜாக்சன், ஜான் ஹாகி, பாட் ராபர்ட்சன், ஜோவாக்கிம் கோன்கால்வ்ஸ், டொனால்ட் பர்னெல் அலெஜாண்ரோ புல்லோன், கில்லர்மோ மால்டொனாடோ மற்றும் மற்றும் அவர்களை பின்பற்றிய அனைவரும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் அதிகார வரம்பின் கீழ் உள்ளனர்!
66நீங்கள் ஒரு கத்தோலிக்கனாகவோ, புராடஸ்டன்டாகவோ, சுவிஷேச அல்லது பிரன்ஹாமிஸ்டு, அல்லது இஸ்லாம் அல்லது யூதமதத்தை சேர்ந்த அங்கத்தினர்களாக இருந்தாலோ, இந்த நற்செய்தியைக் தேவன் எனக்குக் கொடுத்திருந்தால், ஏசாயா மற்றும் எரேமியாவைப் போல, 2002 முதல் உங்களை கண்டனம் செய்து கொண்டிருக்கும் ஒருவனே பரலோகத்தில் உங்களை நியாயம் தீர்ப்பான் என அறியுங்கள்.
67பரிசேயர்கள் நீண்ட தோற்சுருள்களை மன்றத்திற்க்கு கொண்டு வந்து "நாங்கள் மோசேயினுடையவர்கள்..." என்றார்கள். அவர்கள் இன்று நாங்கள் இயேசுவினுடையவர்கள் என கூறுவார்கள்!". [ஆசிரியர் குறிப்பு: சபையார் சிரிக்கின்றனர்]. மேலும் யோவான் 5: 45-ன் பிரகாரமாக மோசே அவர்களைக் கண்டனம் செய்தான்! உங்களுடைய மணி வேளையின் செய்தியை நீங்கள் நிராகரிக்கும் போது, உங்களுடைய உபவாசங்களும் ஜெபங்களும் தேவனுக்கு முன் அருவருப்பானவை. உங்கள் தசமபாகங்களும் காணிக்கைகளும் தேவனுக்கு முன்பாக அருவருப்பானவைகள். உங்களுடைய பக்திவைராக்கியம், கலாத்தியர் 5:22-ன் கனிகள் அருவருப்பான மற்றும் அனைத்திற்க்கும் மேலே, உங்களுடைய இயேசு சாத்தானாக இருக்கிறது.
68சகோதரரே, தேவனுக்கு முன்பாக அந்த சபைகளுக்கு முன்பாக நிற்க நான் காத்திருக்க முடியாது. ஆனாலும், அவர்களில் தாழ்மையான, பரிசுத்தமான அல்லது மிகவும் ஆவிக்குரியவன் பரலோகத்திற்கு சென்றாலும், பின்னர் தேவன் என்னிடம் பேசவில்லை என்பதாகும். நோவாவின் காலத்தில், அவர்கள் வணங்குவதாகக் கூறும் அனைத்து தெய்வங்களும் அவர்களை விழுங்கும். அவர்களுடைய, பாஸ்டர்கள், தலைவர்கள், பாகாலின் தீர்க்கதரிசிகள், மற்றும் அவர்களது பெருமளவிலான பரிசுத்த ஆவிகள் அனைத்தும் நரகத்திற்கு செல்லும். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்!