en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 44 (Kc.44) : பரிசுத்த இராபோஜனம்
ஏப்ரல் 04, 2004 ஞாயிறு காலை லோகாட்ஜ்ரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது
1 நான் முதன் முறையாக ஒரு சபைக்கு சென்றேன், அது மூன்று பெரிய தரிசனங்களுக்குப் பிறகு மே 1993-இல் இருந்தது. பாப்டிஸ்ட் ஊழியர் என்னிடம் "என்னை அழைத்தவர் யார்?" என்று கேட்டார். அதற்கு நான், "யாரும் இல்லை! நான் தரிசனங்களைக் கொண்டிருந்தேன், பிறகு நான் எழும்பி வந்தேன்" எனக் கூறினேன். நான் தரிசனங்களை விளக்கினேன், மேலும் கூட்டத்திற்கு பிறகு அவர் என்னை ஜெபம் செய்ய சொன்னார். அதற்கு நான் : "நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் ஜெபம் செய்ததில்லை என்றேன். அவர் என்னை முயற்சி செய்ய சொன்னார் ... இறுதியாக, அவர் வார்த்தைகளை கூறினார், பிறகு நான் அதை திரும்பக் கூறினேன். அவர் இப்படியாக, "கர்த்தராகிய இயேசுவே" ... மேலும் நான் மீண்டுமாக: "கர்த்தராகிய இயேசுவே! என்றேன். அவர் : "நான் பாவி என்று நான் ஒப்புக்கொள்கிறேன்," நான் மீண்டும் சொன்னேன்: "நான் ஒரு பாவி என்று நான் உணர்கிறேன்! அவர் சொன்னார், "நான் உங்களிடம் வருகிறேன்..." நான் மீண்டும் சொன்னேன்: "நான் உங்களிடம் வருகிறேன்! தேவனை குறித்து எதுவும் அறியாத ஒருவர் இந்த மகத்தான தரிசனங்களைப் பார்க்க முடியும் என்பதை அவர் உணரவில்லை. இது மே 1993-இல் இருந்தது.
2 மனிதன் என்னிடம் எதையும் விதைப்பதற்கு முன், தேவன் விதைத்திருந்தார். [ஆசிரியர் குறிப்பு சபையார்" ஆமென்!" என்கிறார்கள்].
3 சகோதரர்களே, இந்த நூற்றாண்டின் தீர்க்கதரிசிகள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாய் இருப்பதை நாம் காணலாம். அங்கே மிக குறைவான சுவரொட்டிகள், அறிவிப்புகள் மற்றும் விழிப்புக் கூட்டங்களே இருக்கின்றது. அது நகைச்சுவை என்று சில மக்கள் உணர்கிறார்கள்; விழிப்புடையவர்களும் அதிலே சாத்தானின் வஞ்சனை இருப்பதை பார்க்கிறார்கள். அமெரிக்காவில், அங்கே தங்கப் பற்கள் இருந்தன, தங்க பொடிகள் மற்றும் தீவிர ஜெபத்தின் போது வானத்தில் இருந்து தூதர்களின் சிறகுகள் விழுந்தது, பணம் பெருக்கெடுத்ததைப் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பிசாசின் பிள்ளைகளின் இந்த வெளிப்பாடானது முடிவுக்கு வருகிறது... [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
4 நல்லது! பரிசுத்த இராபோஜனத்தைக் குறித்து இந்த காலையில் நான் பேச விரும்புகிறேன். பரிசுத்த இராேபாஜனத்தின் தயாரிப்பு பல சபைகளை பிரித்தது. அதன் தயாரிப்பை பார்க்காமல், அதைக் குறித்து கேட்காமல் நான் அதை வழங்கினேன். மேலும் நான் பெற்றுக் கொண்ட விதமாக இது தான் அந்த வெளிப்பாடும், அதன் விளக்கமுமாக இருக்கின்றது: அப்பமானது தேவனுடைய வார்த்தையின் பரிபூரண சாயலாக இருக்கின்றது, அதைக் கொடுப்பவர் பாவனை இல்லாமல் பிரசங்கம் செய்கிறார்.
5 இருப்பினும் ஒரு தலைமுறையில் தேவனுடைய வார்த்தையானது உயிருள்ள தீர்க்கதரிசியினடத்தில் மாத்திரமே வருகிறது; ஒரு போதகனிடத்திலோ, பாஸ்டரிடத்திலோ, சுவிசேஷகனிடத்திலோ அல்லது அப்போஸ்தலனிடத்திலோ அல்ல, ஆனால் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனிடத்திலே வருகின்றது, அவனே தன்னுடைய காலத்தின் தேவனுடைய வார்த்தையின் பண்பு மற்றும் வெளிப்பாடாக இருக்கின்றான்.
6 நாம் லேவியராகமம் 2: 4 முதல் 16 வரை கூறுகிறதை நினைவு கூறுவோம்: நாம் ஒவ்வொரு காணிக்கையிலும் எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும் என்கின்றது. அதற்கு எதிர்மாறாக நான் கூறவில்லை, ஆனால் அதினுடைய விளக்கம் அநேகமாக வேறுவிதமாக இருக்கும். மேலும் நான் என்னுடைய பதிப்பை கொடுக்கவில்லை அது தவறாக இருக்கக் கூடும், ஆனால் இது இயேசு கிறிஸ்துவின் விழுந்து போகாத வெளிப்பாடு. அப்பத்தைக் கொடுக்கும் பொழுது எண்ணெய் அல்லது உப்பு சேர்க்கக் கூடாது.
7 இருப்பினும், கர்த்தருடைய இராபோஜனத்தை எப்படி தயாரிப்பது? இது தயாரிப்பவர்களுக்கு எப்போதுமே வில்லியம் பிரான்ஹாம் வரைக்கும் இரகசியமாகவே இருந்தது. வார்த்தையானது தீர்க்கதரிசியிடம் எப்படி வருகிறது? அது அவருக்கு ஒரு இரகசியம். நல்ல சமையல் அதினுடைய இரகசியத்தை கொண்டிருக்கிறது. லேவியராகமம் 2: 4 முதல்16 வரையின் அப்பமானது மூன்று கூறுகளுடன் ஒரு சாயல், கிறிஸ்துவின் சரீரத்தின் நிழல். மேலும் மரணத்திற்கு முன்பு, ஆவியானவர், அதாவது பிதாவானவர், சரீரத்தை விட்டு பிரிந்தார்.
8 ஆவி, அதாவது, எண்ணெய். அதினால் மரிக்க முடியாது, மற்றும் சரீரத்தோடு உடைக்கப்பட முடியாது... அவரது பக்கம் குத்தப்பட்ட போது, நாம், அதவாது மணவாட்டி, ஆவிக்குரிய ஏவாள் வெளியே வந்தாள் ஆனால் (நாம்) என்பதில் நான் விசேஷமாக என்ன அர்த்தம் கொள்கின்றேன்? நாம் உலகதிற்க்கு உப்பாவும் ஒளியாகவும் இருக்கின்றோம் (மத்தேயு 5: 13 முதல் 14 வரை). ஆவி உடைக்கப்பட்டிருந்தால், மீட்பானது தோல்வியடைந்திருக்கும். உப்பாகிய நாம் சிலுவையில் அகற்ப்பட்டிருந்தால், கர்த்தருக்கு பிறகு மீட்பானது தடைப்பட்டிருக்கும்.
9 இவ்வாறு, எண்ணெய், அதாவது ஆவி உயிருடன் இருக்கிறது, வார்த்தையானது வரும் போது அதை நாம் பதப்படுத்தி ஆவியின் தூண்டுதலின்கீழ் உலகத்திற்கு வழங்குகிறோம் அவரே திராட்சை ரசமாக இருக்கின்றார். இயேசு ஒரு மனுஷகுமாரனாக, வானத்திலிருந்து இறங்கி வந்த அப்பம், மேலும் ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளனும் வானத்திலிருந்து இறங்கி வருகிற அப்பம், அவர்களுடைய செய்தியோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மத்தேயு 16: 5 முதல் 12-ன் படியாக நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள் அது இந்த செய்தியோடு பதப்படுத்த வேண்டும்.
10 நமக்கு, லேவியராகமம் 2-ஆம் அதிகாரம் சமையல் எண்ணெயை பற்றி பேசவில்லை, ஆனால் ஆவியைக் குறித்து பேசுகிறது. லேவியராகமம் 2-ஆம் அதிகாரம் சமையல் உப்பு பற்றி பேசவில்லை, ஆனால் நம்மைக் குறித்து பேசுகிறது. லேவியராகமம் 2-ஆம் அதிகாரம் புளித்த மாவை ( Baking Yeast ) குறித்து பேசவில்லை ஆனால் இறையியல் பற்றி பேசுகிறது. நாம் " வார்த்தையின் எழுத்துக்களை" பெருகிறோம், ஆனால் அதை பன்படுத்துவதும் பரிசுத்த ஆவியானவரை பெறுவதும் நம்மை சார்ந்து இருக்கின்றது.
11 மேலும் சிலர் விசுவாசிக்கின்றதைப் போன்று நீங்கள் எண்ணெயையும் வார்த்தையும் ஏற்கனவே பிசைந்து பெறவில்லை! நாம் மத்தேயு 12: 1 முதல் 8 வரை மீண்டும் வாசிப்போம்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,"...மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்" மேலும் நவீன பரிசேயர்களிடத்தில் அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்ற உப்பு மற்றும் அப்பம் நாம் என்று சொல்லலாம், அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்ற எண்ணெய் நமக்குள் இருக்கின்றது. மேலும் நாம் லேவியராகமம் 2-ஆம் அதிகாரத்தின் அப்பமாக இருக்கின்றோம் எவனொருவன் நம்மை புசிக்கின்றானோ அவன் மரிப்பதில்லை மற்றும் ஒருக்காலும் பசியடையான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 ஆகையால், கர்த்தருடைய இராபோஜனத்தில், பேக்கரியில் தயாரித்த ரொட்டியை உபயோகிக்க கூடாது. மேலும் கர்த்தருடைய இராபோஜனம் பரிசுத்தமான கைகளால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும், லேவியராகமம் 2: 1 முதல் 2 வரையுள்ள பிரகாரமாக ஜெபத்துடன் அதாவது தூபத்துடன்.
13 திராட்சை ரசத்தை குறித்து, நான் எந்த போதகத்தையும் வகுக்கவில்லை ஆனால் அது மது என நான் நினைக்கவில்லை, நன்றாக பதப்படுத்தப்பட்டது அதை கர்த்தரும் அவருடைய சீஷரும் குடித்தார்கள் ஆனால் அது இனிப்பான திராட்சை ரசம். பதப்படுத்தாத திராட்சை சாறு. பனை சாறு போன்றது, இதே திராட்சை பழச்சாறை இனிப்பான மது என்று அழைக்கப்படுகிறது. மதுவை எந்த ஆசாரியனுக்கும் தடை செய்யப்பட்டது: நியாயாதிபதிகள் 13: 3 முதல் 4 வரை, லூக்கா 1:15... திராட்சைகள் திராட்ச்சை கொடியின் கனிகளாக இருக்கின்றது...
14 அப்பத்தில் எண்ணெய் இருக்ககூடாது என்றால் திராட்சை ரசத்திலும் மது இருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன், ஏனெனில் ஊக்கமுட்டல் ஆவியிலிருந்து வருகிறது.  மற்றும் சிலுவையில், ஆவியானது மாம்சத்தையும் இரத்தத்தையும் விட்டுச் சென்றது... பரிசுத்த இராபோஜனத்தை எடுத்துக்கொள்வது பற்றி, ரொட்டி சிறிய துண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது போல, ஒவ்வொரு நபருக்கும் மதுவானது ஒவ்வொரு நபருக்கென சிறிய கண்ணாடிக்குடுவைகளில் பிரிக்க வேண்டும். ஆமென்.
15 நல்லது! ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோம், ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஜெபம் செய்ய வேண்டுமென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்தி, அந்த விஷயத்தின் மீது உங்கள் மனதை வையுங்கள்! அநேக கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன!... மிக நல்லது!...
16 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, சகல கிருபைக்கும் தேவனே, வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா வல்லமையும் உடையவரே, காரியங்கள் உரு பெரும் முன்பே அதை அழைப்பவரே. இந்த செய்திக்கு ஒத்த விதமாக, நீர் தாமே இந்த ஆத்துமாக்களின் பாவங்களை என்றென்றைக்கும் கழுவுவீராக என்று நான் ஜெபிக்கின்றேன்.
17 மேலும் நீ சாத்தானே, நிச்சயமாக நீ பாவங்களின் மூலமாக அவர்களுடைய ஜீவியத்திற்க்குள் நுழைந்தாய் ஆனால் இந்த காலை வேளையில், அவர்கள் கிருபையைப் பெற்றார்கள், மேலும் 1993 ஏப்ரல் 24-இல், இந்தச் செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று நான் அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டிருக்கின்றேன், அது நிருபனப்படுத்தப்பட வேண்டும், அதனால் தான், நான் உனக்கும் உன்னுடைய தூதர்களுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனங்களை விட்டு போகும்படிக்கு கட்டளையிடுகிறேன். மேலும் வியாதிகளே, அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து மறைந்து விடு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! அந்த உயிரணுக்கள் இப்போதே மீண்டும் கட்டப்படட்டும்! அவர்களுடைய வாழ்வில் உள்ள அனைத்து தோல்வி மற்றும் சாபம் நீக்கப்படட்டும்!
18 ஓ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, ஏப்ரல் 24, 1993-ன் தூதனும் ஆட்டுக்குட்டியானவரே, அக்கினி ஸ்தம்பமே, யெகோவாவின் தூதனானவரே, பூமியின் மேல் இனி ஒருபோதும் ஒன்றும் இருக்க வேண்டாம்! குழப்பம், அவமானம் மற்றும் உடன்பாடின்மையை எடுத்துப் போடும்! எந்த கவலையையும், எந்த தோல்வியும், எந்த துன்பமும், எந்த சாபத்தையும் நீக்கி விடும் புதிதாக ஒளி பிரகாசிக்கட்டும், இந்த செய்தியை அவர்கள் விசுவாசித்ததினால்! நம்பிக்கையிழந்த இருதயத்தில் மீண்டுமாக சந்தோஷம் சந்திக்கட்டும்! உம்முடைய தீர்க்கதரிசிகளின் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறபடியால், இதுவரை எது சாத்தியமில்லாமல் இருந்ததோ இப்பொழுது சாத்தியமாகும். என்னுடைய ஜெபமானது இந்த செய்தியை முழுவதுமாக விசுவாசிக்கின்ற எல்லா இடங்களிலும் இவ்விதமாகவே இருக்கட்டும் [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 இப்போது, நான் இங்கே கேள்விகளை வைத்திருக்கின்றேன்... "சகோதரர் பிலிப்பு, ஒரு முழு சபை இந்த நடுராத்திரி சத்தத்தை விசுவாசிக்கும் பொழுது, இவ்வாறு எற்கனவே சில வழக்குகளைப் போல, அவர்கள் என்ன செய்ய வேண்டும் ? நல்லது, ஆகவே,நான் இந்த செய்தியை பிரசங்கித்து முடிப்பதற்கு முன், சில முழு சபைகளும் விசுவாசித்தது மேலும் தேவனுடைய கிருபையினால் அதினுடைய பாதையானது மிகவும் எளிதானதாக இருந்தது. முதலாவதாக, அந்த பாஸ்டர், அவரால் கூடுமானால், அவருடைய சபைக்கு செய்தியை அறிவிக்க வேண்டும். மேலும் சபையானது விசுவாசிக்குமானால், பிறகு அவர்கள் அனைத்து செய்தியையும் வெளிப்படையான பாவ அறிக்கை உள்பட நடைமுறைப்படுத்த வேண்டும்.
20 பின்னர், அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும், ஆனால் அவர் ஞானஸ்நானத்தை பெற்று அர்பணிக்கப்படாமல் அவரால் ஞானஸ்நானம் அல்லது அர்ப்பணிப்பை நிர்வகிக்க முடியாது. அவரும் முழு சபையும் தீர்க்கதரிசி அனுப்பிய ஒருவரால் ஞானஸ்நானம் பெற வேண்டும். ஆனால் அவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு விசுவாசிக்கும் புதிய மக்களுக்கு அவர் ஞானஸ்நானம் கொடுக்க முடியும்.
21 இது வேரு ஒரு தேசத்தில் இருந்தால், தொலைப்பேசி மூலம் ஞானஸ்நானம் மற்றும் பிரதிஷ்டை ஆகியவற்றை செய்ய முடியாததால், ஞானஸ்நானம் மற்றும் பிரதிஷ்டை செய்ய காத்திருக்கும் வரை அவர்கள் அனைத்து செய்தியையும் வெளிப்படையான பாவ அறிக்கை உள்பட செயல்படுத்தலாம். எனவே நீங்கள் எங்கிருந்தாலும், இந்த செய்தியை பெற்று அதை முழுவதுமாக விசுவாசித்த பிறகு நீங்கள் அதை பிரசங்கிக்க துவங்கலாம், மேலும் உங்களைச் சுற்றி இருக்கும் மக்களைச் சந்திக்கவும் தொடங்கலாம். பிறகு வெளிப்படையான பாவ அறிக்கையோடு ஆராதனையை நடத்தலாம்.
22 நீங்கள் உண்மையில் விசுவாசித்தால், நீங்கள் இந்தச் செய்தியை உங்களைச் சுற்றிலும் பரப்புவீர்கள். உங்களுடைய பெற்றோர், நண்பர்கள் மற்றும் உங்களை அறிந்தவர்கள் அதைக் கேட்பார்கள். மேலும் ஒருநாள் ஒரு சகோதரர் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, உங்களைப் பரிசுத்தமாக்குவதற்கும், இந்த காரியங்களுக்காக உங்களுக்குக் கட்டளையிடும் வரை, நீங்கள் அவ்வாறு செய்வீர்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23 ஆராதனை முறையின்ப்படி, இது இப்படி தான் செய்யப்பட வேண்டும் : முதலாவதாக அறிமுக ஜெபம் பின்னர் வெளிப்படையான பாவ அறிக்கையின் கட்டம் மற்றும் ஜெபங்கள் மற்றும் ஆராதனை ஜெபங்கள் பிறகு துதிப்பாடல்கள் பிறகு பிரசங்கம் பிறகு பிரசங்கத்திற்கான ஜெபங்கள் பிறகு இறுதி ஜெபம் மற்றும் கைகளைக் குலுக்கும் பொழுது காணிக்கைகள் செலுத்தலாம். நிச்சயமாக இந்த முழு காரியத்திலிருந்து சில மாற்றங்கள் சாத்தியமானது, அது ஒரு போதனையின் திட்டம் அல்ல, ஆனால் நீங்கள் எவ்வாறு வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அது இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24 இரண்டாவது கேள்வி: "சகோதரர் பிலிப்பு, ஒரு சகோதரி தன் முடியை சுருட்டி விடலாமா"? இந்த விஷயத்தில் விவாதங்கள் என்னவெனில் ஜனங்கள் முடியை சுருட்டுவதற்க்கும் மற்றும் முடியை நேராக்குவதற்கும் குழப்பம் அடைவார்கள். குறிப்பாக, நம்முடைய கருப்பு சகோதரிகளுக்கு இந்த முடியை நேராக்குதல் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது இங்கே இருக்கும் சில சகோதரிகளைப் போன்று ஒரு சகோதரி தன் தலைமுடியை நேராக்காமல் தக்கவைத்துக் கொள்ளலாம், அது மிகவும் நல்லது! ஆனால் மிகவும் சிக்கலாகிவிட்ட முடி கொண்ட ஒரு சகோதரி முடியை நேராக்கி அதை பராமரித்துக் கொள்வதை நான் எதிர்க்க மாட்டேன், அவற்றை ஒரு கோட்பாடாக்க வேண்டாம்.
25 மேலும் ஒரு சகோதரி எப்போதுமே தனது முடியை நன்றாக மூடியிருந்தாலும், வீட்டிலும் கூட, ஒரு சகோதரி எப்பொழுதும் தன் தலைமுடியைக் பின்னல் கொண்டிருக்கும்படியாக நான் விரும்புகிறேன். ஆனால் அறுபது வயதுக்கு மேல் இருக்கும் ஒருவன் தன் தலைமுடியை கருமையாக்கினால், அவை வெளிப்படையான பாவ அறிக்கைக்கு வராது, ஆனால் அது ஒரு அருவருப்பானது, ஏனெனில் நரைமுடி அவருக்கு ஒரு மகிமையாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26 நல்லது! மூன்றாவது கேள்வி : "சகோதரர் பிலிப்பு, வெளிப்படுத்துதல் 12: 5 முதல் 6 வரையுள்ள ஸ்திரீ மறுபடியும் 14-ம் வசனத்தில் காணப்படுகிறாளா" ? "நல்லது!... வசனங்கள் 5 மற்றும் 6-ல், அது யூதமதமாக பன்னிரண்டு அப்போஸ்தலர்களை பெற்றெடுத்தது, அவர்களே அந்த ஆண்மகன். 6-ம் வசனத்தில், பரிசேயர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் அவள் வனாந்திரத்திற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறுகிறது, காலங்களின் முடிவில், எலியா மற்றும் மோசேயினால் 1260 நாட்கள் போஷிக்கப்பட்டாள்.! இது வித்தியாசமானது! நீங்கள் பார்க்கிறீர்களா? அவள் பாலைவனத்திற்குத் திரும்பிச் சென்றாள்.
27 பிறகு 14-ஆம் வசனத்தின் உள்ள ஒன்றும் பெரிய கழுகின் இரு செட்டைகளால் பாலைவனத்திற்குப் புறப்பட்டது. இது வித்தியாசமானது! நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் 1-ஆம் வசனத்திலிருந்து யாவும் வேறுபடுகிறது, அங்கே சூரியனின் பிரகாசத்தில் அவள் இருக்கவில்லை ஆனால் அவள் தன்னை உடுத்தி வித்துக் கொண்டாள் அல்லது அவர்களுடைய ஸ்தானத்தை, இருபத்தி நான்கு நட்சத்திரங்களை தெளிவாகப் பார்ப்போம். இவ்வாறு, பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் கிறித்துவத்திற்கு முன்பும் பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பும் யூத மதத்திலிருந்து வந்த ஆண் மகன்... இது 14-ஆம் வசனத்தின் ஸ்திரியிலிருந்து வித்தியாசமானது. இந்த ஆண் மகன் புத்தியுள்ள கன்னிகைகளின் முழுமை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28 நல்லது! இப்போது நான்காவது கேள்வி: "சகோதரர் பிலிப்பு, ஒரு தவறான பாஸ்டர் ஞானஸ்நானம் கொடுக்கும் பொழுது, இந்த ஞானஸ்நானம் அங்கீகரிக்ப்பட்டதா"? அவை அனைத்தும் அவர் ஞானஸ்நானம் பெற்ற தருனத்தில் இருந்த ஆவி பொறுத்தது. அவர் நேர்மையானவராக இருந்திருந்தால், இந்த ஞானஸ்நானம் அங்கீகரிக்கப்பட்டது! ஆனால் அவர் ஒரு கெட்ட நோக்கத்தோடு செய்திருந்தால், பிறகு ஞானஸ்நானம் மீண்டும் செய்யப்பட வேண்டும். ஒரு மாய்மாலக்காரன் அல்லது பாவி பாவங்களை மன்னிக்க அல்லது நீதிமானாக்கப்படுதலை நிர்வகிக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 ஐந்தாவது கேள்வி: "சகோதரர் பிலிப்பு, டிசம்பர் 18, 2005 அன்று நடுராத்திரி சத்தம் முடிவுக்கு வருமா"? இல்லை சதோதரனே! வில்லியம் பிரன்ஹாம் 1962-ல் ஒரு கேள்வியின் பதிலில் அதைக் குறித்து கூறியது என்னவென்றால்: "புள்ளிவிபரங்கள் காண்பிக்கிறதாவது ஒரு மனிதரின் செய்தி எப்படியிருந்தாலும், மூன்று ஆண்டுகள் நீடிக்கும்; பின்னர் தேவன் தம்மை அழைக்கும் வரையில், அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரது நற்பெயரில் அவர் வாழ்கிறார். சரி, இப்பொழுது கிறிஸ்துவிற்கு பிறகு, அது மூன்றரை ஆண்டுகள் ஆனது. பாருங்கள்? இது வரலாறு முழுவதுமாக, ஸ்பர்ஜன், நாக்ஸ், கால்வின், காலப்போக்கில், அது ஒரு மனிதன் ஊழியத்திற்காக, மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் வரை அதினுடைய எல்லையாக இருக்கின்றது. அவரது மெழுகுவர்த்தி எரிந்து, அவர் தனது கடந்த புகழின் மீது வாழ்ந்து வருகிறார் - அவரது படைப்புகள் அனைத்தும் அவரை பின்பற்றுகிறது. அவ்வளவு தான்.". நீங்கள் பார்க்கிறீர்களா?
30 இப்போது, வில்லியம் பிரான்ஹாம் இங்கே ஸ்பர்ஜியன், நாக்ஸ் மற்றும் கால்வின் ஆகியோரை செய்தியாளர்கள் என்று கூறுகின்றார்! அவர்கள் ஏழு நட்சத்திரங்களில் இருந்தார்களா? இல்லை! அவர்கள் எட்டாவது தூதனா? இல்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? வேதாகமத்தில் அவர்களுடைய சுவடுகளை கூட நாம் பார்க்க முடியாது... மோசே தொடங்கி யோவான் ஸ்நானகன் வரைக்கு ஏழு செய்தியாளர்கள் இருந்தார்கள் என்று தேவனால் சொல்ல முடியாதா? நாம் பவுல் முதற்க்கொண்டு எந்த நிழலில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம்? நீங்கள் பார்க்கிறீர்களா? பிரன்ஹாமிஸ்டுகள் ஒரு நாளிலே தேவனுக்கு முன்பாக இதற்கு பதில் சொல்லுவார்கள் ! தேவன் பழைய உடன்படிக்கைக்கு ஏராளமான தீர்க்கதரிசிகளை அனுப்பியதைப் போலவே, புதிய உடன்படிக்கையில் தேவன் பத்திற்க்கும் மேற்பட்ட செய்திளார்களை பவுல் முதற்க்கொண்டு அனுப்பியுள்ளார்.
31 கடந்த 2000-ம் ஆண்டுகளில், பூமிக்கு தேவன் செய்தியாள்ர்களை அனுப்பாமல் ஒரு தலைமுறை கூட கடந்து செல்லவில்லை. ஒன்றின் பிறகு ஒன்று, பவுல் ஆசியாவை விட்டு வெளியேறிய பின்பு, கிழக்கிலிருந்து மேற்க்கு சென்று இப்போது காக்குவ் பிலிப்பு வரை, தேவன் தேசங்களுக்கு தீர்க்கதரிசி செய்தியாளர்களை அனுப்பியுள்ளார் ஆனால் இந்த அனைத்து தீர்க்கதரிசிகளும் ஏழு பரலோக தூதர்களாகிய, ஏழு நட்சத்திரங்களின் செல்வாக்கின் கீழ், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கையில் உள்ள ஏழு ஆவிகளினால் ஊழியம் செய்தார்கள்.
32 ஒரு நட்சத்திரம், அவருடைய நாளில் உள்ள பரலோக தூதன் அநேக தீர்க்கதரிசி செய்தியாளனை பூமியின் மேல் எழுப்பினான், மேலும் மார்ட்டின் லூதர், உல்ரிச் ஸ்விங்லி, ஜான் கால்வின் ஆகிய இவர்கள் அனைவரும் ஒரு பரலோக தூதனின் செல்வாக்கின் கீழ் ஒரே நட்சத்திரத்தின் கீழ் செயல்பட்டனர் என நான் கூற முடியும். மற்றும் அதைப் பற்றி பிரன்ஹாமிஸ்டுகள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
33 ஏழு நட்சத்திரங்கள் கர்த்தருடைய கரத்தில் உள்ளன, ஏழு பரலோக தூதர்கள், ஆனால் எத்தனை பேர்களை, எத்தனை மனிதர்களை, எத்தனை தீர்க்கதரிசி செய்தியாளர்களை இந்த நட்சத்திரங்கள் பூமியில் பயன்படுத்தியது? தேவன் மாத்திரமே அதை அறிந்திருக்கிறார்! [ஆசிரியர் குறிப்பு சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் தெரிந்துக் கொள்ளப்பட்டவரின் நிமித்தம், எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழாத வரை. தேவன் எப்போதும் பூமியில் தீர்க்கதரிசி செய்தியாளர்களை அனுப்புவார். புரிந்து கொள்ளக்கூடியவன், அவன் புரிந்து கொள்ளட்டும்!
--:--
--:--