Kacou 45 (Kc.45) : எபேசியர் 4:11-ன் நான்கு ஊழியத்தின் ஸ்தானம்
(டிசம்பர் 05, 2004 ஞாயிறு லோகாட்ஜ்ரோ, அபிட்ஜான், ஐவரிகோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
நான்கு ஊழியங்கள் தொடர்பாக காக்குவ் 50-ஐயும் பார்க்கவும்
1நல்லது! வெளிப்படையான பாவ அறிக்கையை நிறுவப்பட்டதின் மூலம், நாம் மாம்சப் பிரகாரமான பரிசுத்தமாகுதலை முடிவுக்குக் கொண்டுவந்தோம். பரிசுத்தமாகுதலுக்கான எல்லா புத்திமதிகளையும் பெற்றுக் கொண்டோம். நாம் இங்கே வந்து சுவிசேஷ செய்திகளை பிரசங்கிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு அறிக்கையும் அனைவருக்கும் ஒரு செய்தியாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பாளர்களாக இருக்கிறார்கள். இந்த போதனை எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? இராஜாக்கள், இளவரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் அமைச்சர்களால் சாத்தானானவன் சபையிலிருந்து அதை நீக்கிவிட்டான், ஆனால் தேவன் அதை மீண்டும் மீட்டளித்திருக்கின்றார். ஆமென்!
2பூமியில் ஒரே ஒரு செய்தி மட்டுமே இருக்கமுடியும், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனிடமிருந்து கொண்டுவரப்பட்டு, அந்த செய்தியானது திருச்சபைக்கு உள்ளேயும் வெளியேயும் நான்கு ஊழயங்களால் ஆதரிக்கப்பட்டு, விளக்கப்பட்டு பரவுகின்றது. இந்த ஒன்று மாத்திரம் தான் தேவன் உறுதிப்படுத்த முடியும். இதற்குமுன்பு இருந்த அனைத்து செய்தியும் பயனற்றவையாகிறது. இதை விளக்குகின்ற இந்த நான்கு ஊழியங்கள் இன்னும் ஆழமாக சென்று செய்தியை இன்னும் வேத பூர்வமாக்குவார்கள். இந்த ஊழியங்கள் ஒன்றாகிலும் ஒரு புதியகாரியத்தைக் கொண்டுவந்தால் அல்லது முயற்சிசெய்தால், அது ஒரு அந்நிய அக்கினியும் அது உள்ளுக்குள் இருக்கும் எதிரியுமாகும்.
3உதாரணமாக, அவன், "ஆதாமுக்கு தொப்புள் கிடையாது, அப்படியால்லவென்றால் அவன் ஒரு ஸ்திரியினிடத்திலிருந்து பிறந்திருப்பான்" அல்லது "தேவனுடைய ராஜ்யம் என்பது பரலோகராஜ்யம் அல்ல" அல்லது "ஜீவபுத்தகம் என்பது ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுத்தகம் என்பதிலிருந்து வேறுபட்டது”... என்று சொல்வானாகில், இதுபோன்ற விவாதங்களின் பேரில் பேச நான் கடமைப்பட்டவனல்ல. செய்தியின் பாகமாக இல்லாத ஒன்றை இங்கே பிரசங்கிக்ககூடாது. உயிருள்ள தீர்க்கதரிசி தேவனுடைய வாயாக இருந்தால், நான்கு ஊழியங்கள் தீர்க்கதரிசி செய்தியாளனின் வாயாக இருக்கவேண்டும்.
4சபையானது ஒரு பிரசங்கத்தை புரிந்துகொள்ளவில்லை என்றால், அவள் எல்லா ஞானத்துடன், பிரசங்கத்தின் முடிவில் ஒரு கேள்வி பதில்கள் பகுதியில் கேட்க உரிமையுண்டு. நீங்கள் பார்க்கிறீர்களா? நாம் ஒரு சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபையில் இல்லை, அங்கே, ஒரு கூட்டத்தில், ஒரு பிரசங்கி தனது அறிவை காண்பிப்பதற்காக வந்து வருத்தப்படாமல் திரும்பச்சென்று விடுவான். தீர்க்கதரிசி தேவனின் வாயாக இருப்பதைப் போன்று தீர்க்கதரிசியின் எதிரொலியாக இருங்கள். ஒவ்வொரு பிரசங்கத்திலும் செய்தியின் ஆவி இருக்கவேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா?
5எபேசியர் 4:11-ல் உள்ள நான்கு ஊழியங்களுக்கு இப்போது வரலாம். ஆரோன் எபேசியர் 4:11-ல் உள்ள நான்கு ஊழியங்களின் மாதிரியாக இருக்கின்றான். இது பழைய ஏற்பாட்டின் ஆசாரியத்துவத்தின் மாதிரியாகும். இறுதியில் அது ஆரோன் அல்ல யோசுவாவாக இருந்தது ஏன் என்று நீங்கள் புரிந்துகொண்டீர்களா? யாத்திராகமம் 33:11 கூறுகிறதாவது, மோசே, யெகோவாவின் ஊழியக்காரன்... யோசுவா, மோசேயின் ஊழியக்காரன். நீங்கள் பார்க்கிறீர்களா? தீமோத்தேயு பர்னபாவுக்கு முன்னதாக பெற்றதை போல, யோசுவா ஆரோனுக்கு முன்னதாக சேஷ்ட புத்திரபாகத்தைப் பெற்றான். 1 கொரிந்தியர் 4:17-ல் தீமோத்தேயுவைப் போல, எஃப்.எஃப்.போஸ்வொர்த் வில்லியம் பிரன்ஹாமிற்கு முன்பாக அனுப்பப்பட்டார், வில்லியம் பிரன்ஹாமை குறித்து அறிவிக்கவும் மேலும் ஜனங்களை ஆசீர்வாதத்திற்கு ஆயத்தப்படுத்தினார். மேலும் தீமோத்தேயு பவுலுடன், வெட்கமின்றி பவுலுக்கு சாட்சி கொடுக்க வேண்டும், 2 தீமோத்தேயு 1:8. நீங்கள் பார்க்கிறீர்களா?
6தீர்க்கதரிசி செய்தியாளன் தாமே தேவனுடைய வாயாக இருப்பதைப் போன்று, எபேசியர் 4:11-ன் எந்த ஒரு ஊழியமும் அவனுடைய காலத்திற்கான உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனின் வாயாக இருக்கின்றான்.
7நல்லது! வார்த்தைக்கு பாதுகாவலர்களாகவும், தேவனுக்கு ஆட்டுக்குட்டிகளாகவும், ஆனால் உட்புற அல்லது வெளிப்புற எதிரியாக இருந்தால், அவனுக்கு சிங்கங்களாகவும் இருங்கள். உங்கள் மணிவேளையின் செய்தி என்ன கூறுகிறதோ, நீங்கள் அதை சொல்லவேண்டும், மேலும் தேவன் உங்களைக் கொண்டு என்னசெய்யமுடியும் என்பதை எதிர்பாருங்கள். பிசாசானவன், அவனுடைய பிள்ளைகள் மூலம், இந்த வார்த்தையைத் தொடுவதில் வெற்றிப்பெற்றால், நாம் செய்யும் அனைத்தும் தோல்வியடையும். இவ்வாறு, வெளிப்படுத்தலில் நான்கு மிருகங்கள் தேவனின் சிங்காசனத்தைப் பாதுகாக்கின்றதைப் போலவே, எபேசியர் 4:11-ல் உள்ள நான்கு ஊழியங்கள் அவர்களுடைய காலத்தின் செய்தியின் பாதுகாவலர்கள்.
8மேலும், நீங்கள், "வேதாகமத்திலிருந்தோ அல்லது சபை சரித்திரத்திலிருந்தோ இன்ன இன்ன விதமாக ஒருவர் செய்தார் மேலும் தேவன் அவருக்கு அதை அளித்தார், ஆகையால் நானும் அதே விதமாக செய்வேன்" என்று அவ்விதமாகவும் சொல்லக்கூடாது. ஒருவருடத்திற்கு முன்பு என்னைப்போலவே வியாதியுடைய ஒருவரை குணப்படுத்திய ஒரு மருந்தால் எனக்கு நானே சிகிச்சையை நிர்வகிக்கமுடியுமா? இல்லை சகோதரனே! எல்லா நோய்களிலும் வெற்றி பெற்ற பெனிசிலினை உங்களுக்கு தெரியுமா? அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லா நோய்களுக்கும் வெற்றிகரமாக இருந்த ஒன்று, இன்று பயனற்றதாக போனது? ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அது குணப்படுத்தினதைக் கூட இனி ஒருபோதும் குணமாக்க முடியவில்லை? நீங்கள் பார்க்கிறீர்களா? மருத்துவர்கள் இனி ஒருபோதும் பென்சிலினை பரிந்துரைப்பதில்லை. எதையும் பாவனைச் செய்ய வேண்டாம்! நீங்கள் வேதாகமத்தை அல்லது உபத்திரவத்தின் சரித்திரத்தை வாசிப்பதினால் நீங்கள் துன்புறுத்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அதை நிறுத்துங்கள்! தீர்க்கதரிசியும், உங்களுடையமணி வேளையின் செய்தியும் தான் ஒரே வலிமையும், அடிப்படையும் ஆதரவுமாக இருக்கின்றது.
9இரட்சிப்பின் திட்டத்திற்கும் இதே விதமாகத்தான் அது இருக்கின்றது: ஒருதலைமுறையானது அதனுடைய வஞ்சிப்பின் ஆவியோடும், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்திராத சில புதிய காரியங்களோடும் வருகிறது, அதை மேற்கொள்வதற்கு வேதாகமத்தை அல்ல, ஆனால் ஒரு புதிய தீர்க்கதரிசி செய்தியாளனையே தேவன் பூமியின் மேல் அனுப்புகிறார்.
10இது ஒரு பிரசங்கி சனிக்கிழமை இரவிலே தன்னுடைய சொந்த மனைவியை அணுகி பிறகு ஞாயிறு காலையில் பிரசங்க மேடைக்கு சென்று பிரசங்கம் செய்ய செல்லலாம் என்று இரண்டு சுவிசேஷக சபை பாஸ்டர்கள் வாதிட்டதை போன்று இருக்கின்றது. நான் அவர்களிடம் அது சாத்தானிடமிருந்து வந்தது என்று சொன்னேன். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு பிரசங்கி சபையை வார்த்தையினாலும் தன்னுடைய ஜீவியத்தினாலும், கிறிஸ்து மற்றும் சபையை போன்று பரிசுத்தப்படுத்துவதில்லையா? நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு இமாம் அல்லது ஒரு பாரம்பரிய சூனிய பூஜாரியும் வெள்ளிக்கிழமை தினத்தன்று அவ்வாறு செய்யமுடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை... பிரசங்கி, பாடல் ஆராதனையை நடத்துபவரைபோல, அவனுடைய வாழ்க்கை மற்றும் வார்த்தையினால் குற்றமற்றவனாக இருக்கவேண்டும். அவர்களுக்கு சிறிதளவு ஆவிக்குரிய பிரச்சனை இருந்தாலும், தேவ பயமும் சகோதர சகோதரிகளின் மேல் உள்ள அன்பும் அவர்களை இனி மேலும் ஒரு படி எடுத்துவைக்கக் கூடாதபடிக்கு கட்டளையிடுகிறது.
11முழுமையான விடுதலையும் முழுமையான வெற்றியும் பாடல் நடத்துபவரின் அழகானகுரல் மற்றும் தூயபிரசங்கத்திற்கு முந்தியுள்ளது. அதனால்தான், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு முன்பாக அப்போஸ்தலர்கள் (Apostles) வெளியே பிரசங்கிக்க செல்லமுடியும் ஆனால் உள்ளே அல்ல... நீங்கள்: “நான்வேலை செய்யும்போது, நான் உணர்ந்துகொள்வேன், நான் எனது ஜீவியத்தை ஒழுங்காகவைப்பேன், நான் அதிக தேவபயத்தை கொண்டிருப்பேன்” என்று சொல்ல முடியாது. முதலாவதாக வெற்றியுள்ளவர்களாக இருங்கள், மேளம் அடிப்பவரும்கூட. யாராவது ஒருவன் தன்னை உட்புற எதிரியாக அமைத்துக் கொண்டால், தேவன் அவனை மன்னிக்கமாட்டார்.
12நல்லது... இப்போது, வெளிப்பாடு என்பது ஒரு விலையுயர்ந்த கண்டுபிடிப்போ, வேதாகம வசனங்களின் ஒப்பீடுகளோ அல்லது கடந்தகாலத்திலோ அல்லது சரித்திரத்திலோ இருந்துள்ள ஒரு உத்வேகமோ அல்ல என்று நான் சொல்லவிரும்புகிறேன். உங்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசன செய்திக்கு வெளியே நீங்கள் எதை தேடினாலும், அது எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும், அது உங்களை அழித்து விடும். அநேக தந்திரங்கள் வரும் மேலும் நீங்கள் அதை ஜெயங்கொள்ள வேண்டும். தேவன் இந்த செய்தியை போதுமானதாகக் கருதுகிறார். சூழ்ந்திருக்கின்ற எல்லா இரகசியமும் அவை இந்த வார்த்தையின் பண்புகளாக அங்கீகரிக்கப்படத் தக்கவை.
13மனிதன் இனி ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த பரிபூரணமானது மிகவும் நெருக்கமாக உள்ளது. உதாரணமாக, எவால்ட் ஃபிராங்க் பிரசுரங்களை விநியோகிக்கவேண்டும் என்று தேவன் உண்மையில் கூறியிருந்தால், அவன் அதற்கு மாத்திரமே கீழ்படிந்து அவனுடைய சொந்ததுண்டு பிரசுரங்களை உற்பத்தி செய்யக்கூடாது. என் தந்தை ஒரு பயணத்திற்காக சென்றபோது, நான் திரும்பிவரும்வரை இந்த ஸ்திரீயின் இடத்தில் சாப்பிடும் படியாக என்னிடத்தில் கூறும்போது, அவர் சென்றபிறகு அது தூரத்திலிருப்பதினால் நான் வேரு ஒரு ஸ்திரீயினிடத்தில் சாப்பிடுவேன் என நான் சொல்லமாட்டேன், நான் சிறுவயதில் இருந்தபோது, என் பெற்றோர்கள் வயல்வெளிக்குச் செல்லும்போது, இந்த பாம்புகள் சாப்பிடும் பர்கின்நேபிஸ் வேளையாட்களோடு என்னை விட்டுச் செல்வார்கள். நான் சிறியவனாக இருந்தாலும், நான் சாப்பிடமாட்டேன் என்று உறுதியாக இருந்தேன்.
14வார்த்தையின் ஊழியக்காரன் பிரசங்கித்து அவனுடைய பிரசங்கம் வார்த்தைக்கு விரோதமாக இல்லாத பொழுது, ஒருவரும் பிரன்ஹாமிஸ்டுகளை போன்று அதை மறுபடியுமாக திரும்ப எடுத்து, மறுபடியுமாக விளக்கவோ அல்லது பிரசங்கத்தின் மேல் கருத்துச் சொல்லவோ கூடாது.
15நல்லது! நான் ஒரு விளக்கத்தை கொடுக்க விரும்புகிறேன்: அநேக சகோதரர்கள் என்னிடத்தில் ஊழியங்களைக் குறித்தும் வார்த்தையின் ஊழியக்காரனின் கடந்த காலத்தைக் குறித்தும் கேள்விகளை என்னுடைய பிரசங்களில் ஒன்றின் பிரகாரமாக கேட்டிருக்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: காக்குவ் 8-ஐப் பார்க்கவும்]. என்னுடைய வார்த்தையைத் தவிர, நான் சொன்னதைப் பற்றிக்கொள்ளுங்கள்: தீர்க்கதரிசி மற்றும் பாஸ்டரை குறித்து மாத்திரமே நான் பேசினேன், மற்ற ஊழியங்களை நாம் கருதமுடியாது. அதே போன்று யாராவது ஒருவர் செய்தியை பெறுவதற்கு முன்பு ஏற்கனவே பாஸ்டராக இருந்தால், அவர் விரும்பினால் அவர் பாஸ்டராகவே இருப்பார். நீங்கள் பார்க்கிறீர்களா? அது அவ்வளவு தான்.
16நல்லது! இப்போது நான் ஜெபம், ஞானஸ்நானத்தைப் பற்றிப் பேசி நிறைவு செய்யவேண்டும், சில சகோதரர்கள் பிசாசுகளை வெளியே துரத்தி, அவைகளை கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளுக்கு அனுப்புவதை நான் கண்டேன். இது தவறல்ல, ஆனால் இந்த சபைகளில் இன்னும் சிறைபிடிக்கப்பட்ட தேவனின் பிள்ளைகள் இருப்பதால். அவற்றை அண்டவெளி மற்றும் வறண்ட இடங்களுக்கு அனுப்புங்கள்.
17எல்லாகாரியங்களும் நம்முடைய மணிவேளையின் செய்தியின் ஒரு முத்திரையாக இருக்க வேண்டும்: ஜெபம், பாடல்கள்... நசரேயனாகிய இயேசு அல்ல, ஏனெனில் இன்று பதில்தரும் நாசரேத்து இயேசு ஒரு பிசாசு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு மனித சரீரத்தில் அவர் நசரேயனாகிய இயேசு. இன்று அவைகள் நகராத சிலைகளும் விக்கிரகங்களுமாக இருக்கின்றது. நாசரேத்தின் சபைகளில் உள்ள அந்த தெய்வங்கள் அனைத்தும் இன்று நாசரேத்தின் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றன. நீங்கள் பார்க்கிறீர்களா? எனினும், இன்று அவர் ஜீவிக்கின்ற தேவனாக இருக்கின்றார், நம்முடைய மணி வேளையின் தேவன், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் தேவன்.
18ஆகையால், நான் இந்தப் பொருளின் பேரில் பிரசங்கிப்பேன்: "ஆண்டவரே,ஜெபிக்கும்படி எங்களுக்கு போதிக்கவேண்டும்" ஏனெனில் ஒரு நாளிலே, சில யூதர்கள், ஆபிரகாம், மோசே மற்றும் தாவீது என்பவர்களின் குமாரர்கள், நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகள் வழிவந்தவர்கள் யோவான் ஸ்நானகனிடம் வந்து அவர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுக்கும்படி கேட்டார்கள், பிறகு சிலர் இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, ஜெபிக்கும்படி எங்களுக்குப் போதிக்கவேண்டும்" என்றுகேட்டார்கள். இன்று அவர் யார்? இயேசுகிறிஸ்து, தேவனுடைய வார்த்தை, உண்மையும் சத்தியமுமானவர், நடுராத்திரி சத்தம், எலியா, தானியேல் மற்றும் அப்போஸ்தலர்களின் தேவன், அவரே நான் சேவிப்பவர்...
19அனைத்து ஞானஸ்நானங்களும், பிரன்ஹாமிஸ்டுகளுடையது உள்பட தவறு என்று அறியுங்கள். ஒரு நாளிலே, அவனுடைய அலுவலகத்தில் ஒரு புதியமனமாற்றம் அடைந்தவரை பெற்றபொழுது, ஒரு பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர் அவரிடம் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றீர்களா என்று கேட்டார்? அதற்கு அவர், "ஆம்!" என்றார். இந்த ஞானஸ்நானம் சரியானது என்று அந்த பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர் சொன்னான். ஆனால் இது ஒரு சுவிசேஷக சபையில் பெறுகின்ற ஞானஸ்நானம். நீங்கள் பார்க்கிறீர்களா?
20யோவான் ஸ்நானகனுடைய காலத்தில், யோவான் ஸ்நானகனைத் தவிர அனைத்து ஞானஸ்நானங்களும் தவறானவை. பவுலின் காலத்தில், பவுலை தவிர அனைத்து ஞானஸ்நானங்களும் தவறானவை. யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்களையும், அப்பொலோவைப் போல பவுல் மீண்டுமாக ஞானஸ்நானம் கொடுத்தார். இன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் நாட்களில், கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிஷேச மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளின் அனைத்து ஞானஸ்நானங்களும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் ஞானஸ்நானத்தைத் தவிர தவறானவை.
21உங்களுக்கு புரியவில்லை என்றால், தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபியுங்கள். இரண்டு தேவர்கள் இல்லை, இரண்டு சத்தியங்கள் இல்லை, இரண்டு ஞானஸ்நானங்களும் இல்லை, பூமியில் இரண்டு தீர்க்கதரிசி செய்தியாளர்களும் இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22வில்லியம் பிரன்ஹாம் கூறியதாவது: "இயேசு மட்டும் என்ற ஜனக் கூட்டத்தினருக்கு எதிரிடையாக எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் தவறாக ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள், ஏனென்றால் மறுபிறப்புக்காக அவர்கள் ஞானஸ்நானம் கொடுக்கின்றார்கள்.". [சிற்றேடு: "நான் ஏன் ஸ்தாபனங்களுக்கு எதிராக இருக்கிறேன்?" பக்கம்18 பத்தி 103]. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒருவர் செய்திக்காக ஞானஸ்நானம் கொடுக்கின்றார். மேலும் இன்று, செய்தியை கொண்டிருப்பது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. அந்த ஜனங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றார்கள்; ஆனால் அவர்களுடைய ஞானஸ்நானம் தவறு ஏனெனில் அவர்கள் மறுப்பிறப்பிற்காக ஞானஸ்நானம் கொடுக்கின்றார்கள் என்று வில்லியம் பிரன்ஹாம் கூறுகிறார். நீங்கள் பார்க்கிறீர்களா?
23யோவான் ஸ்நானகன் மனந்திரும்புதலுக்காக ஞானஸ்நானம் கொடுத்தார், பாவ மன்னிப்பிற்கு அப்போஸ்தலர்கள் கொடுத்தார்கள... மேலும் இன்று அது மீட்டளிப்பிற்காக. ஆனால் நீங்கள், எந்த செய்திக்காக ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்? சுவிசேஷக சபையே, எந்த செய்திக்காக ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்? கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, பிரன்ஹாமிஸ்டுகளே, என்ன செய்திக்காக ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்? நீங்கள் பார்க்கிறீர்களா?
24கத்தோலிக்கர்களைப் போலவே, ஜனங்கள் ஞானஸ்நானம் என்பது வெறுமனே அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் அல்லது வெறுமனே ஒரு அர்ப்பணிப்பு என நினைக்கிறார்கள். அது அதுவல்ல. நீங்கள் பார்க்கிறீர்களா? அது மத்தேயுவின் பத்துகன்னிகைகளின் எண்ணெய்போல் இருக்கிறது. இது பனை எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய்... என்னவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டு அல்ல. பிரன்ஹாமிஸ்டு மத்தியிலும், அவர்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே முழுக்கு ஞானஸ்நானமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு அது தான் முக்கியமான காரியம், ஏன்? ஏனெனில் அவர்கள் அந்தகாரத்தில் இருக்கின்றார்கள்.
25ஒரு பிரன்ஹாமிஸ்டு இவ்விதாமக கூறினார்: "சகோதரர் பிரன்ஹாம் அவர் திரும்ப அளிப்பதற்கான ஞானஸ்நானத்தை கொடுப்பதாக சொல்லவில்லை." என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? பிரன்ஹாமின் நாட்களில், ஞானஸ்நானம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கவேண்டும் என்று நம்பாத மக்களுக்கு திரும்ப அளிக்கப்படுதலை பற்றி நாம் எப்படி பேசமுடியும்? நீங்கள் பார்க்கிறீர்களா?
26மனிதகுலத்திற்கு ஞானஸ்நானம் என்பது மூழ்கி எடுக்க வேண்டும் என்று எற்க வேண்டிய நேரம் ஒன்று இருந்தது, பிறகு ஞானஸ்நானம் என்பது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் பெற வேண்டும் என்ற ஒரு நேரம் இருந்தது, அது வில்லியம் பிரன்ஹாமின் நேரம், இப்போது தேவன், அவருடைய வெளிப்பாட்டின் முன்னேற்றத்தில், நடுராத்திரியிலே ஞானஸ்நானம் என்பது ஒரு செய்திக்கு தொடர்புடையது என சுட்டிக்காட்டுகின்றது! நீங்கள் நம்பவேண்டிய கட்டாயத்தில் இல்லை ஆனால் அதுதான் உண்மை, அதுதான் இந்த மணிவேளையின் வெளிப்பாடு ஆகும். நீங்கள் பார்க்கிறீர்களா?
27இந்த செய்தியானது வார்த்தையின் நான்கு ஊழியங்களின் இன்றியமையாத செயலினால் மாத்திரமே முழுமையடையும், அவர்கள் உங்களுக்கு விளக்குவார்கள். அது விளக்கப்படவேண்டும், அதைத் தான் நாம் எதிர்பார்கின்றோம்.
28நான் பிரசங்கிக்கையில், அதைப்புரிந்துகொள்வது கடினமாக இருக்கும் ஆனால் அவர்கள் பிரசங்கிக்கும் போது, நமக்கு தேவன் என்ன கூற விரும்புகிறார் என்பதை நீங்களும் நானும் தெளிவாக புரிந்துகொள்வோம். உயிருள்ள தீர்க்கதரிசி-செய்தியாளன் தேவனின் வாயாக இருக்கின்றான். மேலும் எபேசியர் 4:11-ல் உள்ள நான்கு ஊழியங்களும் தீர்க்கதரிசி செய்தியாளனின் வாயாக இருக்கின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? 2 இராஜாக்கள் 19:1 முதல் 4 வரை காண்பிக்கின்றபடியாக, அதே தீர்க்கதரிசி செய்தியாளன், தேவனுடைய வாயும், தேவனுடைய பிரதிநிதியுமாக இருப்பவனே, தேவனுக்கு முன்பாக மனிதகுலத்தின் பிரதிநிதியாக இருக்கவேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா?
29நல்லது! எபேசியர் 4:11-ல் உள்ள நான்கு ஊழியங்கள் அதை செய்யும். அங்கே மிக குறைவான கேள்விகள் மற்றும் பதில்கள் இருக்கும். தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், போதகர்கள் மற்றும் சுவிசேஷகர்கள் கொண்டிருப்பதை நாம் பார்க்க வேண்டும். சாத்தியமானால், அனைவரும் சுவிசேஷகனின் வேலையை முதலில் செய்யவேண்டும். நான் அதை விரும்புகிறேன், சகோதரர் ஜஸ்டின் மற்றும் அநேகர் மாதிரிகளாக இருக்கிறார்கள்.
30இந்த ஊழியமானது உலகமெங்கிலும் வளரும் மற்றும் இந்த செய்தியை அறிவிக்க நீங்கள் வெகு தூரம் கடந்து செல்வீர்கள் என்று கூற நான் வழி நடத்தப்படுகிறேன். துரோகம் செய்யாதீர்கள்! இந்த செய்தியோடு ஒத்துப் போகாத காரியங்களை செய்ய நீ வழி நடத்தப்பட்டால், அதை செய்யாதே! இன்னும் ஆயிரக்கணக்கான நல்ல விஷயங்கள் இருக்கின்றது என்று நான் அறிவேன் ஆனால் தேவன் அவைகளை கொடுக்கவில்லை என்றால், அதை நோக்க வேண்டாம். எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் சில வஞ்சகமுள்ள மனிதர்கள் எழும்புவார்கள். மேலும் யாராவது எழும்பினால், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்குத்தெரியும். என்னை பொருத்தவரையில், தேவனின், ஒன்றான கிருபைக்கு நான் உங்களை பரிந்துரைக்கிறேன், நம்மை பாதுகாக்கவும், நம்மை பரிபூரணத்திற்கு வழி நடத்தவும் வல்லமை அவரிடத்தில் உண்டு.
31மேலும், இது என்னுடைய செய்தி அல்ல, ஆனால் உயிரோடிருப்பவரும், எல்லாவற்றையும் தீர்மானிப்பவருமான தேவனுடைய செய்தியாகும். எனவே, இந்த செய்தியின் சபையை துவங்க யாரும் என்னைத் தொடர்புகொள்ளவேண்டாம். நீங்கள் அதைச் செய்யவழி நடத்தப்பட்டால், அதைச்செய்யவும்!
32ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் உயிருடன் இருந்தால் மட்டுமே ஜனங்களை முன்னுக்கு நடத்தமுடியும் என்று நாம் அறிவோம். ஜனங்களை நடத்தவே தேவன் அவனை அனுப்புகிறார். எகிப்திலிருந்து வெளியேற, அது ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன். யோர்தானைக் கடந்து கானானுக்குள் நுழைய, ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன்.
33கானானிலிருந்து மேசியா வருகைவரை, பழைய ஏற்பாட்டின் பல்வேறு தீர்க்கதரிசி செய்தியாளர்கள் ஜனங்களை முன்னோக்கி கொண்டுவந்திருக்கிறார்கள். ஆசாரியர்கள் அல்ல, அதாவது, எபேசியர் 4:11-ல் உள்ள ஊழியங்கள் அல்ல. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆசாரியர்கள் ஜனங்களின் விசுவாசத்தை விழிப்புடன் காத்துவருகின்றனர், ஆனால், தேவன் வேறொரு தீர்க்கதரிசி செய்தியாளனை அனுப்பும்வரை, ஆசிரியர்களும் ஜனங்களும் தீர்க்கதரிசி செய்தியாளன் விட்டுச் சென்ற இடத்திலேயே தரித்திருப்பார்கள்...
34பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் மேசியாவின் வருகைக்கு இன்னும் சிறந்த நிலைக்கு ஜனங்களை வழிநடத்தினார்கள். மோசே அவனைப்போன்ற ஒரு தீர்க்கதரிசியை தேவன் எழுப்புவார் என்று கூறினான், ஏசாயா வெளிப்படுத்தினதை ஆசாரியர்கள் வெறுமனே ஜனங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியதாக இருந்தது. ஏரேமியா வெளிப்படுத்தினதை ஆசாரியர்கள் வெறுமனே ஜனங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியதாக இருந்தது. ஆகாய் வெளிப்படுத்தினதை ஆசாரியர்கள் வெறுமனே ஜனங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியதாக இருந்தது. செப்பனியா வெளிப்படுத்தினதை ஆசாரியர்கள் வெறுமனே ஜனங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியதாக இருந்தது.....
35எனவே நீங்கள் இவ்விதமாக கேட்கிறீர்கள்: இத்தகைய தீர்க்கதரிசியின் புத்தகம், அத்தகைய தீர்க்கதரிசியின் புத்தகம், அந்த தீர்க்கதரிசியின் புத்தகம்... ஒரு போதும் ஆசாரியரின் புத்தகம் என்று அல்ல, அவர் ஆசாரியர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தாலும். ஏன்? ஏனெனில் தேவனின் வார்த்தை பூமியில் உயிர்வாழும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனிடத்தில் மட்டுமே வருகிறது. பிசாசனவன் இன்று ஒரு பாஸ்டர் ஒரு புத்தகத்தை எழுதும்படியாகவும், ஒரு போதகன் ஒரு புத்தகத்தை எழுதும்படியாகவும் செய்து விட்டான். நீங்கள் பார்க்கிறீர்களா? நான் பேசுவதற்கு அநேக காரியங்களை கொண்டிருக்கின்றேன்.
36நான்கு ஊழியங்கள் அவசியமானவை ஆனால் வரம்புக்குள் உள்ளன. அவர்கள் உள்ளியல்பானவர்களாக உள்ளனர், ஒரு வாக்களிப்பினால் அவர்களை நியமிக்கமுடியாது. நாம் ஒரு ஆயர்பள்ளியில் இருந்து அவர்களை உற்பத்திசெய்யமுடியாது. தேவனுக்காக தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு மட்டுமே அந்த உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். தீர்க்கதரிசி செய்தியாளன் பூமியின் மேல் தேவனுடைய வார்த்தையின் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக உள்ளான். நீங்கள் பார்க்கிறீர்களா?
37எனக்கு இன்னும் ஒரு கார் இல்லை, சூட்-ஜாக்கெட் இல்லை, கை நாற்காலி இல்லை. நான் எல்லா சகோதரனைப் போலவே சபையில் அமர்த்தப்பட்டிருக்கின்றேன். ஆனால் நான் ஒரு ஜாக்கெட்டைக் கொண்டிருந்தால் தீர்க்கதரிசியைக் காட்டிலும் குறைவாக இருப்பேனோ? பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் மிருக தோலினால் உடுத்திவிக்கப்பட்டு பொண்ணும் வெள்ளியும் தேவனுக்குரியது என நமக்குப் போதிக்கவில்லையா? இன்றைய தீர்க்கதரிசிகள் இதைப்பற்றி நன்றாக புரிந்துகொண்டிருக்கிறார்களா? நீங்கள் பார்க்கிறீர்களா? [...]