en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 46 (Kc.46) : ஆசாரியத்துவத்தின் மீதான கட்டளைகள்.
செப்டம்பர் 21, 2006 வியாழக்கிழமை மாலை, மற்றும் மறுபடியும் ஜனவரி 2007-இல் அட்ஜாமே அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது
1 ஆசாரியத்துவத்தின் மீதான கட்டளைகளை நான் இன்று மாலையில் பிரசங்கிக்க விரும்புகிறேன், ஆனால் வழக்கம் போல், நான் முதலில் அநேக காரியங்களைப் பேச விரும்புகிறேன்...
2 நடுராத்திரி என்ற வார்த்தையை குறித்து பேசுகையில், இந்த செய்தியானது நடுராத்திரியையும் அந்தகாரத்தின் முன்னேற்றத்தின் முடிவைக் குறிக்கின்றது என சொல்ல விரும்புகிறேன். ஒரு செய்தியானது நடுராத்திரியை சுட்டிக்காட்டுகிறது. இந்த செய்தியில் இருந்து, பூமியானது பகல் வெளிச்சத்தின் விரிவாக்கத்தின் மூலம் பகலை நோக்கி நகர தொடங்கும். இருளின் செதில்கள் வீழத் தொடங்குகின்றன. இது முதற்கொண்டு இது போன்ற ஒரு ஆவி பரிசுத்த ஆவி அல்ல என்றும் இந்த விதமான வேதாகமம் பதிப்புகள் வேதாகமம் அல்ல என்று தேசங்களின் மனிதன் அறிவான்.
3 ஒவ்வொரு முறை ஒரு தூதன் இறங்கும்போது, வெளிப்படுத்துதல் 18: 1 மற்றும் ஏப்ரல் 24, 1993-ன் தரிசனம் சுட்டிக்காட்டுகின்றபடி பூமியானது பிரகாசிப்பிக்கப்படுகிறது. ஒரு மனிதனின் மூலமாக அவர் கொடுக்கும் செய்தியின் வெளிச்சம் பூமியை பிரகாசிப்பிக்கின்றது. ஆமென்! நீங்கள் பார்க்கிறீர்களா?
4 இது நடுராத்திரியாக இருப்பதினால் மாத்திரம் இந்த செய்தியானது கொடுக்கப்படவில்லை ஆனால் இந்த செய்தியே நடுராத்திரியை குறிக்கின்றது, அதாவது ராத்திரியின் முன்னேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என சொல்லலாம்...
5 இப்பொழுது இன்றைய பிரசங்கத்தை தொடங்குவதற்கு, நான் இதை மீண்டுமாக சொல்ல விரும்புகிறேன்: செப்டம்பர் 2006-இல் கோட் டி ஐயருக்கு விஜயம் செய்த அலெக்சிஸ் பாரிலியர் ஏவால்ட் பிராங்கிற்கு அனுப்பிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி இங்கு உள்ளது. அலெக்சிஸ் பாரிலியர் இவ்வாறு கூறுகிறான்: [ ஆசிரியர் குறிப்பு : அலெக்ஸிஸ் பாரிலேரியின் கடிதத்தின் ஆரம்பம்: "நீங்கள் மேடையில் இருந்து கீழே வந்து, நீங்கள் பணியத் தொடங்கி, பிரசங்கிகளின் கைகளைத் தொடும் வேளையில், தொலைகாட்ச்சியில் போப் தன்னுடைய குருமார்கள் ( Cardinals ) மற்றும் பேராயர்களுக்கு முன்பு சுற்றி இருக்கும் பொழுது அவர் செய்ததை நான் கவனித்தேன், அவை என்னுடைய கண்களுக்கு முன்பாக பார்த்தேன்.
6 ...சகோதரர் பிரன்ஹாம் மற்றும் சகோதரர் ஃபிராங்கின் பிரசங்கங்கள் நம்மை எழுப்ப வேண்டுமென்றால், நாம் நீண்ட நாளுக்கு முன்பே எழுப்பப்பட்டிருப்போம். கவனியுங்கள், நானும் உங்களோடு கூட செல்கின்றேன், நான் எப்பொழுதும் வேதாகமத்தினால் ஏவப்பட்ட வார்த்தைகளை மட்டுமே நான் கொண்டு வர முயற்ச்சி செய்திருக்கின்றேன், மேலும் என்னுடைய பிரசங்கங்களோ அல்லது உங்களுடையதோ கன்னிகைகள் நித்திரையடைவதை தடுக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நம்முடைய பரலோக பிதா இதை அறிந்திருக்கின்றார் அதினாலே கன்னிகைகளை எழுப்ப ஒரு சத்தத்தை குறித்து அவர் பேசினார், கடைசி ஜாமமாகிய ஏழாம் ஜாமத்தில் அல்ல அதிலே ஆயத்தமாக இருக்கின்றவர்கள் ஆவியும் மணவாட்டியும் வா என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அது நடுராத்திரியில் ஏனெனில் கன்னிகைகள் முன்னேறுவதை நிறுத்திவிட்டார்கள்...
7 இப்போது கேள்வியானது எல்லா கன்னிகைகளும், நாம் உள்பட, நித்திரையடைந்தார்கள் என்பதை உணர்திருக்கின்றோமா என்று அறிந்துக் கொள்வது, மேலும் அது சகோதரர் பிரன்ஹாம் கொண்டு வந்த செய்தியின் அழைப்பை கன்னிகைகள் பதிலளித்த பிறகுதானா? நம்முடைய அனைத்து பிரசங்கங்களும் கன்னிகைகளை நித்திரையடைய தடுக்காதபட்சத்தில், உண்மையில் இந்த பிரசங்கங்கள் அவர்களை எழுப்ப முடியாது. ஆனால் கர்த்தர் புத்தியுள்ள கன்னிகைகளை மட்டுமல்ல, ஆனால் புத்தியில்லாத கன்னிகைகளையும் நடுராத்திரியில் ஒரு சத்தத்தின் மூலம் எழுப்புவதாக வாக்களித்து உள்ளார்... ஒரு சத்தம், அதுவும் ஒரு செய்தி, ஒரு சத்தமானது ஒரு மகிழ்ச்சியின் செய்தியை அல்லது துயரத்தின் செய்தியை வெளிப்படுத்தக் கூடும். அல்லது எழும்பப்பண்ணுவதற்க்கான அழைப்பின் செய்தி அல்லது கடிந்துரைக்கும் செய்தி, மத்தேயு 25: 6 முதல் 7 வரையுள்ள காரியத்தைப் போன்றது
8 சகோதரர் பிரன்ஹாமுக்கு ஒப்படைக்கப்பட்ட செய்தி மணவாளனின் பந்திக்காக மணவாட்டியை ஆயத்தப் படுத்த வேண்டும். ஆனால் கன்னிகைகள் நித்திரையாக இருந்தால், எப்படி அவர்கள் ஆயத்தமாவார்கள்? அவர்களால் வெளிப்படுத்துதல் 19: 7 முதல் 8 வரை எப்படி நிறைவேற்றுவார்கள் மேலும் அவளுக்கு உடுத்து விக்க வேண்டிய பரிசுத்தவான்களின் நீதிக்கேற்ற கிரியைகளினால் உடுத்துவிக்க முடியும்? நமக்கு இன்று உண்மையில் தேவையானது என்னவென்றால், நடுராத்திரியில் வாக்களிக்கப்பட்ட சத்தம் மூலம் எழுந்திருக்க வேண்டும். ஆகையால் மணவாட்டியை எழுப்ப எவால்டு ஃபிராங்க் அல்லது அலெக்சிஸ் பாரிலியர் ஆகியோரைக் காட்டிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேறொரு நபரைப் பயன்படுத்துவது சாத்தியமா? ஆம், நிச்சயமாக! " [ ஆசிரியர் குறிப்பு : அலெக்சிஸ் பாரிலியரின் கடிதத்தின் முடிவு].
9 அக்டோபர் 16, 2006 பதிலில், ஏவால்ட் ஃபிராங்க் மத்தேயு 25: 6 வர வேண்டியதாக இருக்கின்றது என்று ஒப்புக்கொள்கிறார்! வில்லியம் பிரன்ஹாமின் செய்தி தான் நடுராத்திரி சத்தம் என்று பறைசாற்றி எனக்கெதிராக மிகவும் சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரன்ஹாமிஸ்டுகள் என்ன சொல்வார்கள்? நீங்கள் பார்க்கிறீர்களா?
10 இப்போது வெளிப்படுத்துதல் 1: 6-ஐ நமது வேதாகமத்தில் எடுப்போம்... இந்த செய்தி முதலாவதாக எனக்கு தொடர்புடையதாக இருக்கின்றது. பிறகு கர்த்தரைச் சேவிக்கும் யாவருக்கும், பிரசங்கி மற்றும் மற்றவர்கள், பின்னர் இந்த செய்தியை நம்புகிற அனைவருக்கும் உரியது.. நான் அதை வெளிப்படுத்துதல் 1: 6-ல் இருந்து பெற்றுக்கொண்டேன். பொருள்: ஆசாரியத்துவத்தின் மீதான கட்டளைகள். நான் உண்மையில் மெதுவாக செல்கிறேன். நாம் வசனங்களை படிப்போம்... நீங்கள் அதை புரிந்து கொள்ள முடியும். இன்று, பிரசங்கத்தின் முதல் பகுதியாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன், நிச்சயமாக. ஆமென்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. "தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்."
11 நல்லது! தேவன் அங்கே ஒரு பிரதான ஆசாரியனாக இருக்க வேண்டுமென எப்போதும் விரும்பினார். ஆனால், இந்த பிரதான ஆசாரியன் மனிதன் மூலமாக தேவன். ஏனென்றால் மந்தைகளை உருவாக்குவது அது ஆடுகள் என்று நமக்குத் தெரியும். ஆனால் ஒரு ஆட்டுக்குட்டியின் மந்தையை ஒரு ஆட்டுக்குட்டி வழி நடத்த முடியாது. அது சாத்தியமில்லை! ஆட்டுக்குட்டிகள் கூடிவருகையில், அவைகளுடைய மேய்ப்பனாக இருப்பதற்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் காட்டிலும் ஏதோ ஒன்று அதிகமாக தேவைப்படுகின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா?
12 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தேவ ஆட்டுக்குட்டி என்று வேதாகமம் கூறுகிறது. அது ஒரு இயற்கை ஆட்டுக்குட்டியை விட மேலானது, அது ஒரு நபர். பாருங்கள், எளிமையாக ஆட்டுக்குட்டிகளுக்கு பதிலாக மனிதர்களாக மாற்றி விடுங்கள். ஒரு இயற்கையான மனிதன் மனிதர்களை வழி நடத்த முடியாது, அவன் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இருக்கக்கடவன்; அதாவது ஒரு மனுஷன் மூலமாக தேவன். ஒரு ஆட்டுக்குட்டியானது ஆடுகளின் மந்தையை வழிநடத்த முடியாததை போல அதாவது மற்றவர்களை வழிநடத்தும் ஆட்டுக்குட்டி, அது ஒரு இயற்கையான ஆட்டுக்குட்டி அல்ல. அது தான் மனிதர்களிடத்திலும் நடக்கிறது, மேலும் தேவனே இந்தத் ஆற்றலை கொடுக்கிறார். மேலும் இந்த பணி அதிகமான விதிகளும் கட்டளைகளும் கோருகின்றன. நீங்கள் பார்க்கிறீர்களா?
13 ஆகையால், இன்றைய மாலை வேளையில் சபைக்கு இந்த பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன் : ஆசாரியத்துவத்தின் மீதான கட்டளைகள். இந்த மாலை வேளையில் நான் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இதை அணுக விரும்புகிறேன். நான் கர்த்தரிடம் வருவதற்கு முன், உங்களுக்கு தெரியும், நான் சில காரியங்களை செய்தேன், எனக்கு கொஞ்சம் பணம் இருந்தது. நான் வந்து, இந்தச் செய்தியை பிரசங்கிக்கும்போது, என் நெற்றியின் வியர்வையால் நான் சாம்பாதித்த சிறிது பணம் எனக்கு இன்னுமாக இருந்தது, நான் ஆடைகள், காலணிகளைக் கொண்டிருந்தேன், அவைகளை நான் என் நெற்றியின் வியர்வை மூலம் வாங்கியது. இப்பொழுது நான் கர்த்தருடைய பணியில் இருக்கும் வேளையில், என் நெற்றியின் வியர்வையில் இருந்ததோடு கூட இப்போது, சகோதரர்கள் எனக்கு கொடுக்கிறதையும் சேர்த்து இருக்கிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட வேளையில், தேவன் பிரிவை ஏற்படுத்துகின்றார், ஆனால் எல்லாம் அவருக்கு உடையது.
14 அன்னாள் தேவனிடத்திலிருந்து ஒரு பிள்ளையாண்டானைக் கேட்டபோது, தேவன் சாமுவேல் என்று பெயரிடப்பட்ட இந்த குமாரனை அவளுக்குக் கொடுத்தார் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஏதோவொன்று நடந்தது: நல்லது! நாம் 1 சாமுவேல் 2: 18 முதல் 19 வரை வாசிப்போம். [ ஆசிரியர் குறிப்பு.: ஒரு சகோதரர் வாசிக்கின்றார்:]. எனவே சாமுவேல் தேவனின் முகத்திற்கு முன்பாக இருப்பதை நாம் நினைவில் வைக்கின்றோம். அவருடைய பெற்றோர் ஆண்டுதோறும் சாமுவேலைப் பார்க்க வருவார்கள். ஆகவே சாமுவேல் ஆண்டுதோறும் தனது பெற்றோருடன் விடுமுறைக்கு செல்கின்றார் என்று சொல்லவில்லை, ஆனால் அவனுடைய பெற்றோர் அவனுடன் வருகிறார்கள். நாம் 1 சாமுவேல் 2:21-ஐயும் வாசிக்கலாம்: "அப்படியே யேகோவா அன்னாளைச் சந்தித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்...". ஆமென்!
15 ஆனால், தேவன் ஏன் அப்படிச் செய்தார்? இதன் பேரில் தான் நான் பேச விரும்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? இப்போது நாம் லேவியராகமம் 22-ல் மற்றொரு பத்தியை வாசிக்க விரும்புகிறேன். லேவியராகமம் 22-ல் பல வசனங்களை நாம் வாசிப்போம். ஆனால் நான் இன்று மாலையில் தொடர விரும்புகின்ற பொருளானது, இது மனிதரிடமிருந்து நாம் என்ன பெறுவோம், தேவனிடமிருந்து நாம் எதை பெறுவோம் என்பதின் வேறு பிரித்தலாக இருக்கின்றது. பரிசுத்த காரியங்களாகிய தசமபாகங்களையும் காணிக்கைகளையும் பரிசுத்தவான்களாக ஆசாரியத்துவத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்வதைப் பற்றி நான் குறிப்பாகப் பேச விரும்புகிறேன்.
16 நல்லது! நாம் லேவியராகமம் 22: 4-ஐ வாசிப்போம் : "ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது..." இப்பொழுது, இந்த பத்தியின் அர்த்தம் என்ன? இந்த பத்தியில் அர்த்தம் என்னவென்றால், இங்கே உள்ள அனைவருக்கும் பரிசுத்தமான பொருட்களை சாப்பிட உரிமை உண்டு, அதாவது தசமபாகங்களையும் காணிக்கைகளையும் கொண்டுவருவதன் மூலம், நான் இந்த தசமபாகத்தை கொடுக்க முடியும், இந்த தசமபாகங்கள் அல்லது காணிக்கைகளை நன்றாக ஜீவிக்கும் ஒரு சகோதரரிடம் கொடுக்கலாம். அவர் அதை சாப்பிட தகுதியுடையவர்.
17 இப்பொழுது ஒரு சகோதரர் லேவியராகமம் 22: 6 முதல் 12 வரை வாசிப்பார். நன்றாக கவனியுங்கள், வேதாகமம் தாமே அதை பேசப்போகிறது, 10-ம் வசனத்தில் நான் தொடங்குகிறேன்: "அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது. ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம். ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது."
18 வேதாகமம் இங்கே கூறுகிறதாவது இங்கே ஒரு அந்நியன், அதாவது, உயிர் வாழும் தீர்க்கதரிசியின் காலத்தை விசுவாசிக்காத எவரும், பரிசுத்தமானதை சாப்பிட முடியாது, அதாவது, தசமபாகம் மற்றும் காணிக்கைகள். நல்லது! நான் என்னுடைய பயணத்திலிருந்து வந்தபோது, அது எனது தாயரிடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சகோதரி என்னிடம் ஏதோ ஒன்றை கொடுத்தார்கள் என்று நான் கூறினேன், அது மோசமானது இல்லை, அது சரியானது, ஏனெனில் அது தேவனுக்கு கொடுக்கும் ஒரு தசமபாகம் அல்லது காணிக்கை அல்ல. ஆனால் உண்மையில் இந்த பணம் முதலில் ஒரு சகோதரர் அல்லது சபையில் இங்கு தேவையில் இருக்கும் ஒருவரிடத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? அதுதான் உண்மை. லூக்கா 8: 19 முதல் 21 வரை வாசிப்போம். [ ஆசிரியர் குறிப்பு : ஒரு சகோதரர் படிக்கின்றார்...]. நீங்கள் பார்க்கிறீர்களா? என் தந்தையும் என் தாயும் இங்கே முதன்மையானவர்கள்!
19 தாவீது, அவன் ராஜாவாக இருப்பதற்கு முன்பாக அதை பின்தொடர்ந்தான். அவன் ஏதோ ஒரு இடத்தில் வந்தடைந்த பொழுது அவன் ஆசாரியர்களை கண்டைந்தான், அங்கே அப்பம் இருந்தது, ஆனால் எல்லோரும் அதை சாப்பிட முடியாது. நமக்கு, ஞானஸ்நானத்தை இன்னும் எடுத்துக் கொள்ளாதவர்கள் அல்லது தங்கள் காலத்தின் செய்தியை நம்பாதவர்களே அசுத்தம் அல்லது அந்நியர்களாக இருக்கின்றார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? இப்பொழுது நாம் வாசித்த வசனத்தில் ஒரு ஆசாரியனுடைய மகள் வெளியே சென்று ஒரு அஞ்ஞானியை திருமணம் செய்துக் கொண்டால் அவள் சிலவற்றை சாப்பிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
20 நல்லது! இப்பொழுது தேவனுக்கு ஊழியம் செய்யும் ஒரு சகோதரர் அல்லது ஒரு சபை அங்கத்தினர் சமூக செயலில் பணிபுரிபவர், அவருடைய சம்பளத்திலே தசமபாகம் மற்றும் காணிக்கைகளை எடுத்துக் கொண்ட பிறகு மீதமானதை அவர் தனது பெற்றோருக்கு அனைத்தையும் கொடுக்க விரும்பினால், அது அவருடைய உரிமை, அவ்வாறு செய்வதற்கு அவர் சுதந்திரமாக இருக்கிறார்! அவர் ஒரு ஆசாரியர் அல்லது என்னவாக இருந்தாலும்! அவர் ஒரு உண்மையுள்ள நபராக இருந்தால், அது அவ்விதமாக தான்
21 ஆனால், தேவனுடைய வார்த்தையால் வாழ்கிறவனுக்கு அதைச் செய்ய அவனுக்கு உரிமை இல்லை. ஆனால் அவன் அதை செய்தால், தேவனின் மழையானது களைகளில் விழுந்ததைப் போல் அவன் செய்கிறான். நீங்கள் பார்க்கிறீர்களா? என்னைப் போன்ற தேவனுடைய வார்த்தையிலிருந்து வாழ்கிறவருக்கு, அவன் சென்று செய்தியை விசுவாசிக்காத பெற்றோர்களுக்காக ஒரு வீட்டை வாங்கவோ அல்லது அவர்கள் வந்து வசிப்பதற்காக ஒரு விட்டைக் கட்டவோ முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? அதை செய்ய முடியாது மற்றும் இது அவனது வாழ்நாள் முழுவதும் உள்ளது. அவன் இறக்கும் நாளிலே, அவனுடைய பெற்றோருக்கு அவன் சொத்து என்று கொண்டிருப்பதில் அவர்கள் செய்ய ஒன்றும் இல்லை நீங்கள் பார்க்கிறீர்களா? ஆசாரியன் பலிகளையும், ஆடுகளையும் கொடுக்கிறார், அது உண்மை தான் ஆனால் உண்மையான ஆசரியனின் முதல் பலி அது அவனே.
22 இந்த செய்தியை செயல்படுத்துவதின் மூலம் பலிகளைக் கொடுக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வேதாகமம் எங்கும் அதை குறித்து பேசுகிறது, அநேக வசனங்கள் உள்ளன, ஒரு சில வசனங்களை மட்டுமே நாம் பார்த்தோம். இதை தான் வேதாகமம் கூறுகிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த காரியங்களை ஒழிக்க வரவில்லை. இந்த காரியங்கள் மிக உண்மையாக இருக்கின்ற படியினால் நீங்கள் அவைகளை தப்பிச் செல்ல முடியாது. நீங்கள் காண பார்க்கிறீர்களா?
23 ஒரு பாஸ்டரோ, தீர்க்கதரிசியோ அல்லது மற்ற எவரும் தசமபாகம் மற்றும் காணிக்கைகளை தவறாக உபயோகப்படுத்துபவர்கள் தங்களுடைய ஜனத்தாரின் மீது சாபத்தை கொண்டு வருகிறார்கள் ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி அவருக்கு ஆராதனைக்கு வெளியே கொடுத்தாலும், அது ஒரு பரிசுத்தமான காரியம். நீங்கள் பார்க்கிறீர்களா? பெற்றோர்கள் அதை அறிந்திருக்கிறார்கள்... நாம் அனைவரும் ஆப்பிரிக்காவில் உள்ளோம். மேலும் நாம் ஒவ்வொருவரும் சில மாந்திரீக பூஜாரிகள் பலிகளை கொடுக்கும் பொழுது எல்லோரும் அதை சாப்பிட முடியாது என்று கூறுவதை நாம் கண்டிருப்போம். அவர்கள் அதை கேட்டிருக்கவோ அல்லது எங்காவது பார்க்கவோ இல்லை என்று அவர்கள் கூற முடியாது.
24 மேலும், அவர்கள் வெறுக்கின்ற ஒரு மரம் அல்லது பிசாசுக்கு படைக்கப்பட்டதை, அதினுடைய கனிகளை எப்படி புசிப்பார்கள்? மாந்திரீக பூஜாரி ஒரு பிசாசு என்று எனக்கு தெரியும் பொழுது, நான் இந்த மாந்திரீக பூஜாரிகளின் பலிகளை சாப்பிட முடியாது. என்னுடைய தாயாருக்கு உதவுபவன் என்னுடைய தாயாருக்கு ஆசாரியனாக அல்லது பாஸ்டராக இருக்கின்றான். இது துன்மார்க்கம் அல்ல, ஆனால் இது வார்த்தைக்கு கீழ்ப்படிவதாகும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அது தான் சகோதரர்களே! அந்த காரியங்கள் யாவும் ஆசீர்வாதத்திற்கு நம்மை வழி நடத்தி நம்மை ஆசீர்வதிக்கின்றது. வேதாகமமே அதை கூறுகின்றது மற்றும் குழப்பத்தில் வேலை செய்யாத தேவன் உங்களுடைய பெற்றோருக்குத் தேவையானதை கொடுப்பார்... ஆனால் நான் அவர்களுக்குக் கொடுக்கும்படியாக நேர்ந்ததினால், அது களைகளின் மேல் விழுகின்ற மழையைப் போன்றது அல்லது அவர்கள் எனக்கு செய்த நன்மைகளுக்கான சம்பளமாக இருக்கின்றது.
25 எலியா எலிசாவை அழைத்தபோது, எலிசாவுக்கு செய்த எல்லா நன்மைகளையும் அறிந்து, அங்கே காளையை தியாகம் செய்ய சென்றார்கள். அவன் தானே அங்கே தன்னை தியாகம் செய்தான். இந்த நாள் முதல், ஒரு வேறுபிரித்தல் இருக்க வேண்டும். ஆசாரியன் மது அருந்த கூடாது, இன்ன விதமான ஒரு ஸ்திரீயை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் இப்போது ஆவியானது என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது, தேவனுக்குத் தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் அவர்கள் எவ்விதமான ஊழியத்திலும் இருந்தாலும் இது பொருந்தும். நீங்கள் பார்க்கிறீர்களா?
26 தசமபாகங்களும் காணிக்கைகளும் பரிசுத்தமான காரியங்களாக இருக்கின்றது, அவைகளை செய்தியில் நன்றாக ஜீவிக்காத ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ சாப்பிடக் கூடாது. ஒரு கடமை இருந்தால், அது ஒரு அந்நியருக்கு அல்லது ஒரு சகோதரருக்கு தேவைப்படும் சிறப்பு பங்களிப்பிற்கு உட்பட்டது.
27 நாம் ஊழியத்தில் இருக்கும்போது, ஒரு அஞ்ஞானி வந்து, "எனக்கு உதவுங்கள்! நானும் என்னுடைய வீட்டாரும் நாள் முழுவதும் சாப்பிடவில்லை! " என்று சொன்னால், நாம் அவனுக்கென்று ஒரு சிறப்பு பங்களிப்பை கொடுப்போம். அதைத் தான் ஒரு ஆசாரியன் அவனுடைய குடும்பத்திற்கோ மற்றவர்களுக்கோ அவசர தேவையாக இருந்தால் கேட்பான். ஆனால் அவன் தசமபாகத்தில் அல்லது காணிக்கையை எடுத்து அதை செய்ய போகிறான் என்றால், அது ஒரு பாவம்! ஆசாரியனின் அப்பம் ஒரு தேவ சமுகத்து அப்பம். அந்நியர்கள் சிலவற்றை சாப்பிட கூடாது..
28 இப்பொழது ஒரு உறவினரிடமிருந்து, நண்பரிடமிருந்து அல்லது பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற நன்கொடையிலிருந்து நீங்கள் தசமபாகத்தை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் ஒரு சகோதரன் கொடுத்த நன்கொடையிலிருந்து எந்த தசமபாகமும் எடுக்க வேண்டியதில்லை ஏனெனில் இது உங்களுக்குத் ஒரு சகோதரர் பரிசாக கொடுத்தல் அவர் ஏற்கெனவே தசமபாகத்தைக் கொடுத்திருக்கிறார் என்று கருதப்படுகிறது.
29 ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனிடத்திலிருந்து பெற்றதை, அவன் அதை தனது பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் அவன் ஒரு ஆசாரியனிடம் இருந்து பெற்றதைப் பொறுத்து அல்ல. ஆசாரியனுடைய மனைவியை குறித்துப் பார்க்கும் பொழுது, அவள் வேறு எந்த பணியை செய்யவில்லை என்றாலும் அவள் தன்னிடத்தில் கொண்டிருப்பதை இருப்பதை தன்னுடைய பெற்றோருக்கு கொடுக்கலாம், ஏனென்றால் அவள் அதை ஒரு ஆசாரியனாக பெறவில்லை ஆனால் அவள் ஆசாரியனின் பணிவிடைக்காரியாக அதை பெறுகிறாள்;
30 வேதாகமம் என்ன சொல்கிறது? "கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்..... பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31 இப்போது நான் மிக முக்கியமான ஒன்றை சொல்ல விரும்புகிறேன்! இந்த செய்தியை விசுவாசிக்கின்ற ஒருவரும் பிசாசிற்கு படைத்த பலிகளை உண்பதற்கு அதிகாரம் இல்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவர் ஒரு சபையில் பாஸ்டராக இருந்தால்: புராட்டஸ்டன்ட், சுவிசேஷ, அல்லது அவர் பிரன்ஹாமிஸ்டு அல்லது அவன் ஒரு ஆசாரியத்துவத்திலிருந்து ஜீவித்துக் கொண்டிருந்தால், அவரிடத்திலிருந்து பணம் பெறவோ அல்லது அவனுடைய வீட்டில் சாப்பிடவோ உங்களுக்கு உரிமை இல்லை! நீங்கள் பலிக்கு படைக்கப்படும் ஒரு கருப்பு கபரி அல்லது ஒரு வெள்ளை கோழியை சாப்பிட முடியாது என்று நினைத்தால், நீங்கள் ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ அல்லது பிரன்ஹாமிஸ்டு ஆசாரியன் அல்லது பாஸ்டரிடமிருந்து சாப்பிடக்கூடாது.
32 ஒருவருடனான தனது பகையைத் தீர்க்க பிரசங்க மேடையைப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொள்ளும் போதகர், குறைந்தது ஏழு மாதங்களுக்கு பிரசங்க மேடையை நெருங்க முடியாது. சபை ஒரு நீதிமன்றம் அல்ல, தேவாலயத்தின் இருக்கைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இருக்கைகள் அல்ல...
33 ஆசாரியத்துவத்தின் கட்டளைகளின்படி இந்த பிரசங்கத்தின் முடிவில், ஒரு நாள் பள்ளிகள் என் பெயரை தாங்கும் என்று நான் விரும்பவில்லை என்று சொல்ல விரும்புகிறேன், எந்த ஒரு பள்ளியும், எந்த அறக்கட்டளையும் என் பெயரை கொண்டிருக்க வேண்டாம். என் ஆத்துமா பலவீனர்களோடு இங்கே சுகமாயிருக்கிறது. நான் எளிமையில் பிறந்தேன், என் ஆத்துமா எளிமையில் ஓய்வெடுக்க போகிறது.
34 இந்த நடுராத்திரி சத்தத்தின் புத்தகம் அனைவருக்கும் இலவசம் என்று முடிவெடுத்திருக்கிறேன், அதை நான் எப்போதும் செய்வேன்! ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும், அது எப்போதும் இலவசமாக இருக்கும்! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக!
--:--
--:--