



Kacou 47 (Kc.47) : பிலிப்புவும் அன்னகனான எத்தியோப்பிய மந்திரியும்.
ஜூன் 12, 2005 ஞாயிறு காலை லோகாட்ஜ்ரோ, அபிட்ஜான், ஐவரிகோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது
1 சகோதரர்களே, தேவனிடத்தில் எந்த குழப்பமும் இல்லை! மேலும் சமரசம் மற்றும் பாசாங்குத்தனத்தை பிரன்ஹாமிஸ்டுகள் மத்தியில் நாம் தெளிவாக காணலாம். ஒரு பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர் இன்னொருவரிடம் பிரசங்கிக்க போகும்பொழுது, அங்கே அவர்களை பிரிக்கக்கூடிய போதனைகளின் குறிப்புகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அது முதல் படியாகும். பின்னர் அவர்கள் அரசியல்வாதிகளுடனும் ஸ்தாபனங்களுடனும் ஐக்கியம் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் கன்வென்ஷன் கூட்டங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அவைகள் அனைத்தையும் அவர்கள் செய்யும்படியாக தேவன் தாமே அர்மகெதோன் யுத்தத்திற்காக அவர்களுடைய இருதயத்தின் மேல் வைத்திருக்கின்றார் மேலும் லூக்கா 23:12-ல் ஏரோதும் பிலாத்துவைப் பற்றி கூறப்பட்டதைப் போலவே அவர்கள் அதை செய்வார்கள்.
2 நல்லது! கடந்த காலத்தில் தீர்க்கதரிசிகள் மற்றும் முழு வேதாமத்திலும் அறிவித்த பிரகாரமாக, சாயங்கால வேளையில் முத்திரைகள் மற்றும் சர்ப்பத்தின் வித்து திறக்கப்பட்ட பிறகு, வானத்திலே பிரஞ்ச் மொழியில் தேவனுடைய கரத்தினால் எழுத்தப்பட்ட நியாயத்தீர்ப்போடு, அனைத்து காரியங்களும் திரும்ப அளிக்கப்படுகின்றதின் முடிவை நாம் அடைந்திருக்கின்றோம்; அதை நான் உங்களை காண்பதை போன்று தெளிவாக கண்டேன். இந்தத் தலைமுறையினரோடு தேவனுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பில் நிற்க நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
3 இந்த வேத வசனங்கள் பூமி அனைத்திற்கும் என தேவனிடமிருந்து வந்திருந்து, ஆனால் அவற்றை நிராகரித்து விட்டவர்களுக்கு ஐயோ. இரண்டு வருடங்களாக நாம் எரிக்கும் வேதாகமங்களின் பதிப்பை கண்டனம் செய்தது தேவனாக இருக்கும் பட்சத்தில் அதை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கு ஐயோ. ஆரம்ப கால புராட்டஸ்டண்டுகள் பிரன்ஹாமிஸ்டுகளை கண்டனம் செய்வார்கள் ஏனெனில் அவர்கள் கத்தோலிக்கத்தை கைவிட்ட மாத்திரத்திலே கத்தோலிக்க வேதாகமத்தை புறக்கணித்தனர். நீங்கள் மனந்திரும்பிய மாத்திரத்திலே உங்களுடைய கையில் ஒரு வேதாகமம் இருக்கும். மேலும் அவர்கள் தங்களை இஸ்லாமியர்களாக பிறந்து அதிலே தரித்து இருக்கும் முஸ்லிம்களைக் காட்டிலும் அதிக ஆவிக்குரியவர்கள் என நினைத்துக் கொள்கின்றனர். வெளிப்படையான பாவ அறிக்கையை கட்டளையிட்டது தேவனாக இருந்து மறைவான பாவங்களினால் அதை நிராகரித்திருந்தால் அவர்களுக்கு ஐயோ.
4 இந்த கத்தோலிக்க, புரோட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளில் பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படும் ஆவிகளை அவருடைய கிருபையினாலே திரைநீக்கி காண்பித்தது தேவனாக இருக்கும் பட்ச்சத்தில், அவர்களுக்கு ஐயோ. அவர்கள் பிறவாதிருந்தால் அவர்களுக்கு நலமாக இருந்திருக்கும் இந்த பரிசுத்த ஆவிகளுக்காகவும், அது எவர்களுக்குள் இருக்கிறதோ அவர்களுக்காகவும் எரிகிற அக்கினி கடல் அமைக்கப்பட்டிருக்கின்றது.
5 ஒரு தீர்க்கதரிசியோ அல்லது ஒரு தூதனோ அல்லது ஒரு பரிசுத்த ஆவியோ இந்த செய்தி தவறானது என்று உனக்கு வெளிப்படுத்தியிருந்தால் உனக்கு ஐயோ அது ஒரு பிசாசு! இந்த செய்தியை நீ கேட்காமல் இருந்திருந்தால் அல்லது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் காலத்தில் பிறவாதிருந்தால் உனக்கு நலமாக இருந்திருக்கும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
6 என்னுடைய கடைசி திறந்த வெளி பொது பிரசங்கத்தின் போது அது 2004-ன் ஆரம்பத்திற்கு செல்கின்றது, அந்த கொந்தளிக்கும் கூட்டத்திற்கு முன்பாக நான் பிடிக்கப்பட்டேன், நான் வசனங்களை எழுதிவைத்துள்ள பலகை சிறிய துண்டுகளாக உடைக்கப்பட்டது, பிறகு அவர்கள் எங்களை கிட்டத்தட்ட குளத்தில் எறிந்தார்கள். அவர்களுக்கு தலைவனாக, ஒரு பாப்டிஸ்ட் பாஸ்டர் இருந்தான். அநேக சகோதரர்கள் இருந்தனர். காதணிகளுடன் ரவுடிகள், சில கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்கள் மற்றும் சுவிசேஷ சபைகள் இன்னும் மற்றவர்கள் அபிஷேகத்திற்குள்ளாக இருந்தார்கள்... எங்களை பாதுகாக்க வேண்டிய காவல்காரர்களும் எங்களுக்கு எதிராக கூட்டத்தை உற்சாகப்படுத்தினர். என்னுடைய மெகாபோன் மூன்றாவது முறையாக பறிக்கப்பட்டது ஆனால் தேவனுடைய கிருபையானது மேற்க்கொள்ளப்பட்டு நாங்கள் உயிரோடு விடப்பட்டோம். அது எப்பொழுதும் அந்த விதமாகவே இருந்தது...
7 நான் இயற்கையாவே இனிமையானவன், ஏப்ரல் 24, 1993-ன் தரிசனம் என்னை மாற்றியது. என்னால் இதைச் செய்ய முடியும் என்று என்னுடைய பெற்றோரால் கற்பனை செய்ய முடியவில்லை! மேலும் எதிரிகள் என்னை வன்முறையாக நடக்கும் படி செய்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அறநெறியைப் பிரசங்கிக்கிறவர்களுக்கு மட்டுமே எதிரி இருப்பதில்லை.
8 தேவனுடைய பிள்ளைகளை அவர்களுடைய கைகளிலிருந்து பிடுங்கும்படியாக முதலாவதாக செய்தியை அறிவித்து, பிறகு திறந்த வெளி பிரசங்கத்தில் அந்த கூட்டத்தினரை நம்முடைய முற்பிதாக்கள் சந்தித்ததை போன்று சந்திக்க தீர்மானித்தேன். கிறிஸ்துவுக்காக மரிப்பது ஒரு மகிமை. நான் எவ்வளவு உலக புகழ்ப் பெற்றாலும், நான் திறந்த வெளி மற்றும் ஊர் ஊராக செல்லும் பிரசங்கத்தை கைவிட மாட்டேன்... அங்கு தான் நான் தொடங்கியது, அதினோடு ஏதோ ஒன்று என்னை இணைக்கிறது. மேலும் ஒரு பூமி அதிர்ச்சியை போன்று, இந்த செய்தியின் முன்னேற்றத்தை ஒருவராலும் தடுக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
9 நல்லது! இப்பொழுது நம்முடைய வேதாகமங்களை யோவான் 1: 44 முதல் 52 வரை எடுத்துக்கொள்ளுவோம். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு வாசிக்கின்றார்]. நாம் ஒரு தீர்க்கதரிசன காலத்தில் இருக்கும்போது, உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனே பூமியின் ஜனத்தாருக்கு வழிகாட்டியாகவும் கண் ஆகவும் இருக்கின்றான். இவர் ஒரு பூமிக்குரிய தூதன், மனித குலத்தின் வழிகாட்டி. தீர்க்கதரிசி செய்தியாளன் எங்கு நிறுத்தினாரோ அங்கு மனிதன் நிறுத்த வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
10 நல்லது! இந்த உரையில், நாத்தான்வேல் பெரிய பொருளாக இருந்தாலும், நான் அதன் விவரத்திற்குள்ளாக செல்லவில்லை. அப்போஸ்தலனாகிய பிலிப்பு பற்றி நான் பேசுகிறேன். சாயங்கால வேளையில் கவனித்தீர்களானால் ஆதியாகமம் 18-ல் ஆபிரகாமிடத்தில் இருந்ததை போன்று தூதனானவர் பிரன்ஹாமிடத்தில் (Bran-HAM, A-B-R-A-H-A-M ஏழு எழுத்துக்களை கொடுக்கின்றது.
11 நல்லது! இப்பொழுது நாம் அப்போஸ்தலர் 8: 26 முதல் 40 வரை வாசிக்கலாம். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு வாசிக்கின்றார்]. இந்த பத்தியை நீங்கள் கவனமாக வாசித்தால், நீங்கள் ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தையும் இந்த ஊழியத்தையும் பார்க்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சில சகோதரர்கள் "ஆமென்!!!" என்கிறார்கள்]. முதலாவதாக, ஒரு தூதன் பிலிப்புவிடம் ஒரு செய்தியை கொடுக்கின்றார். இரண்டாவதாக, வார்த்தையானது பலியின் ஆட்டுக்குட்டியை வெளிப்படுத்துகிறது. "ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்;... ஒரு ஆட்டுக்குட்டி!!!" மூன்றாவதாக: பிலிப்பு தெற்க்கை நோக்கி செல்கிறான் அதாவது ஆப்பிரிக்கா. நான்காவதாக: பிலிப்பு ஏழு தூதர்களில் ஒருவரான உல்ரிச் ஸ்விங்லி மற்றும் ஜான் கால்வின் போன்றவன்.
12 ஏழு பரலோக தூதர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஒவ்வொருவரும் பூமியின் மேல் எத்தனை பேர்களை எழுப்பினார்கள்? நமக்கு அது தெரியாது. தியத்தீராவின் காலம் 914 ஆண்டுகள் நீடித்தது, கொலம்பஸ்ஸிற்க்கு அப்பால் அவரை விட சக்திவாய்ந்த செய்திகளைக் கொண்டு குறைந்தது ஐந்து செய்தியாளர்களை தேவன் எழுப்பினார். இம்மட்டுமாக பிரன்ஹாமிஸ்டுகளுக்கு புரியவில்லை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13 நல்லது! அப்போஸ்தலர் 8: 26-ல் தேவதூதன் யாரை முன்னிலைப்படுத்திப் பேசுகிறார்? ஏவால்ட் ஃபிராங்கையா? இல்லை! ஜோசப் கோல்மேனையா? இல்லை! அப்போஸ்தலர் 8:26 வேதாகமத்திலுள்ள மிக மகிமையான வார்த்தைகளில் ஒன்றாகும். தூதன் அவனை எங்கே போகும் படி கூறினார்? ஒரு கருப்பு மனிதனிடம், ஆப்பிரிக்காவை நோக்கி. பிலிப்பு ரதத்தில் ஏறினபோது, அவன் தானே எஸ்தர் 2-ம் அதிகாரத்தில் உள்ள பிரதானியாகிய யேகாய்.
14 இந்த மந்திரியை போல நீ எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும், உன்னுடைய இருப்பிடமானது இந்த மந்திரியை போல் அரண்மனையில் வசித்தாலும், கருப்பினம், அல்லது கலப்பினம், மாநிறம்... நீ எதுவாக இருந்தாலும் நித்திய ஜீவனுக்காக நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறீர்கள்.
15 தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு அனைத்து காரியங்களும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்றது, தானியேல் என்பதற்கு: " தேவனுக்காக நியாயந்தீர்க்கிறவர்" என்பதாகும். ஆனாலும் வேதாகமம் கூறும் தானியேல், நீங்கள் பார்க்கிறதைப் போல எந்த நியாயத்தீர்ப்பையும் உண்டுபண்ணவில்லை, அதே விதமாக என் தாத்தா மத்தேயு 25: 6-ன் படி சத்தமிடவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
16 26 முதல் 40 வரையுள்ள வசனங்களுக்கு நான் திரும்ப வருவேன், ஆனால் நாம் அப்போஸ்தலர் 8: 4 முதல் 5 வரை பார்க்கலாம்; சமாரியர்களுக்கு கிறிஸ்துவைப் பிரசங்கித்தது யார்? பிலிப்பு! ஆனால் சமாரியர்கள், அவர்கள் யூதர்களுக்கும் தேசங்களுக்கும் மத்தியிலுள்ள இனம். மாற்கு 13:35-ன் பிரகாரமாக நம்முடைய நிலைப்பாட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர்கள் வட ஆப்பிரிக்கர் மற்றும் எத்தியோப்பியர்கள்... மற்றும் ஒரு நாள் அவர்கள் இஸ்லாமியத்தை ஏற்றுக்கொள்ள நிராகரித்து இயேசு கிறிஸ்துவை எற்றுக் கொள்வார்கள் என்று சொன்னேன். பிலிப்பு என்ன செய்தான்? இஸ்ரவேல்... சமாரியா... ஆப்பிரிக்கா. நடுராத்திரி சத்தம் என்ன செய்யும்? தேசங்கள்... சமாரியா... இஸ்ரவேல், அதாவது, ஆப்பிரிக்கா... சேவல் கூவும் வேளை... அது இஸ்ரவேல். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17 அங்கே சேவல் கூவும் வேளையில் என்ன நடக்கின்றது? அப்போஸ்தலர் 8: 19-ஐ பாருங்கள்... உங்கள் கைகளை எங்கள் மேல் வையுங்கள், அப்போதுதான் நாங்கள் உங்களை போன்று அற்புதங்களைச் செய்வோம். நல்லது! இப்போது அப்போஸ்தலர் 8: 26 முதல் 40 வரைக்கு திரும்ப வருவோம், இவை யாவும் எங்கே நடக்கின்றது? பாலைவனத்திலே! வெளிப்படுத்துதல் 12:14 மற்றும் 1993-ஆம் ஆண்டின் 2-வது தரிசனத்தின் படி "... பாலைவனத்தில் இருக்கும் ஒருவர்".
18 கர்த்தர் உரைக்கிறதாவது: 36-ஆம் வசனத்தில் பிலிப்பு நடுராத்திரி சத்தத்தை பிரசங்கித்தான், தேவனுடைய புத்திரர்களின் பிரத்தியட்சமாகுதல் 38-ஆம் வசனத்தில் தொடங்குகிறது, ஆனால் 39-ல் நாம் பார்க்கும் போது: "... ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல்..." 40 ஆம் வசனத்தில் "...பிலிப்பு அசோத்திலே காணப்பட்டான்," பள்ளத்தாக்கிலே ஏலா என்ற பெரிய ஆறு அது நான்கு பெரிய நதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தீர்க்கதரிசனமாகும். நான் அதைக் கேட்கவோ, வாசிக்கவோ இல்லை. மேலும் அது அப்போஸ்தலர் 21: 8-ஐப் பற்றி விவரிக்கிறது.
19 இப்பொழுது 26-ஆம் வசனத்தில், பிலிப்பு கண்டான்... காக்குவ் பிலிப்பு தூதனை கண்டான் என்று நான் சொல்வேன்... ஆனால் அவன் அதிகாலை 4 மணி வரை அவரைப் பார்க்கவில்லை. இப்பொழது நாம் நடுராத்திரிக்கு அப்பால் இருக்கின்றோம் என்று உங்களுக்குத் தெரியும்... பிலிப்பு அவனுக்கு பிரசங்கித்த அந்த ஆட்டுக்குட்டியின் செய்தியை இந்த மந்திரி முழுமையாக விசுவாசித்தான். அவன் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டான் ஆனால் எலியாவின் இரதத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அதை வெறுத்தார்கள்.
20 பின்னர் அவன் அதை ஆப்பிரிக்காவிற்கு கொண்டு வந்தான். மேலும் அனைவரும் அசைக்கப்பட்டனர். பிறகு ராணி தன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, "நீ ஏன் அவனை இங்கே வர அனுமதிக்கவில்லை, நானும் ஞானஸ்நானம் பெற்றிருப்பேனே என்றாள்? "அப்பொழுது மந்திரி தாழ பனிந்துக் கொண்டு. தன் முகத்தை மூடி, "ஓ! ராணி, என்றென்றும் வாழ்க! அவர் காணாமற்போகாதிருந்தால், நான் இங்கே அவரைக் கொண்டுவந்திருப்பேன் அதற்கு தேவன் எனக்குச் சாட்சியாக இருக்கிறார். "அந்த ராணி ஒரு சொப்பனத்தை கொண்டிருந்தாள், மேலும் தேவன் அவளிடம், "காலங்களின் முடிவிலே, சாயங்கால வேளை மற்றும் அமெரிக்காவிற்கு பிறகு நான் ஆபிரிக்காவையும் முழு பூமியையும் சந்திப்பேன், நடந்தது எதுவோ அவை உனக்கு ஒரு அடையாளமாக இருக்கும்!" மேலும் ராணி ஆறுதல் அடைந்தாள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21 2000 ஆண்டுகளுக்கு பிறகு, எத்தியோப்பிய மந்திரியின் கொள்ளுப் பேரன்கள் மற்றும் தெற்கின் ராணி, இந்த செய்தியைக் காணும்போது, "ஆதியிலே, நம்முடைய மூதாதையர் எருசலேமிலிருந்து அவருடைய வழியாக திரும்பி வரும் பொழுது அவருக்கு பிரசங்கித்து ஞானஸ்நானம் கொடுப்பதற்க்கு ஒரு தூதன் பிலிப்பு என்ற பெயரையுடைய ஒரு மனிதனை அனுப்பியிருந்தான்." முதலில் சரியாக என்ன நடந்தது? பிலிப்பு மந்திரியிடம்: "கர்த்தருடைய தூதன் என்னை நியமனம் செய்யும்படியாக ஒரு தரிசனத்தில் இறங்கினான்" என்றான். அதற்கு அந்த மந்திரி, " நான் தூதனையும் ஆட்டுக்குட்டியையும் பார்க்கவில்லை... ஆனால் அவைகளை முழுவதுமாக விசுவாசிக்கின்றேன்" என்றான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இதேபோல், எத்தியோப்பிய மந்திரியின் பெரும் பேரப்பிள்ளைகள், அவர்கள் ஆபிரிக்காவில் இருந்தாலும், ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டு இருந்தாலும் அந்த விதமாக இனங்கண்டுக்கொள்வார்கள். ஆவிக்குரிய அனைத்து ஆப்பிரிக்காவும் அந்த எத்தியோப்பிய மந்திரியின் அரைக்குள்ளாக இருந்தது மந்திரியோடே மீண்டும் ஞானஸ்நானம் பெற்றனர்.
22 காலங்களின் முடிவில், அதே தூதன், ஆட்டுக்குட்டியின் அதே செய்தி, அதே காக்குவ் பிலிப்பு. பரலோகத்திலிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசன செய்தி பூமியை பிரகாசிக்க செய்தது. இந்த எத்தியோப்பிய மந்திரி மீண்டும் உயிர்த்தெழுந்தால், அவன் இவ்விதமாக உரக்க சத்தமிடுவான், "இது பாலஸ்தீனப் பாலைவனத்தில் என்னோடு பேசிய அதே சத்தம். ஒரு தூதன் அவனிடம் பேசவில்லையா? அவன் பாலைவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லையா? " இந்த மந்திரிக்கு என்னுடைய பெயர் பிலிப்பு என்று கூறினால், அது சிறந்ததாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23 முடிவாக, பூமியின் மேல் தேவன் ஒரு ஊழியத்தை அனுப்பியுள்ளார் அவருடைய பெயர் வேதாகமத்தில் தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளது. நியாயத்தீர்ப்பிலே உலகம் எந்த சாக்கும் சொல்ல முடியாது என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? ஏசாயாவின் ஒரு சிறிய வசனத்தின் அடிப்படையில், இந்த பெரிய மனிதன் விசுவாசித்தான் மற்றும் நீங்கள் இந்த செய்தியை நிராகரித்து, நீங்கள் பரதீசைப் பற்றி பேசுகிறீர்கள். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்களே, இந்த மந்திரியே உங்களை கண்டனம் செய்வான், ஐரோப்பியர்கள் மற்றும் மற்றவர்கள் இந்த தூதனின் சத்தத்தை இனங்கண்டு கொண்டதினால், அவன் சந்தோஷமடைந்தான் என்று 39-ஆம் வசனம் கூறுகிறது.
24 ஓ தேவனே! அது வார்த்தையிலே இருக்குமானால், நான் இன்னும் கூடுதலாக என்ன சொல்லுவேன்? இந்த செய்திக்கு ஏற்ப நான் உம்மிடத்தில் கெஞ்சுகிறேன், நீரே கிரியைச் செய்யும், உமக்கு சித்தமானால், தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு வழி இன்னுமாக இருக்கிறது என்றும் மேலும் அது நீர் தாமே இந்த செய்தியை எனக்கு கொடுத்தீர் என்று காண்பிக்கதக்கதாக தரிசனங்களையும் சொப்பனங்களையும் தாரும்.
25 சந்தேகப்பட்ட அனைவரும் அல்லது எனக்கு எதிராக சண்டையிட்டவர்களும், அவர்கள் அதை உமக்கு எதிராக செய்தார்கள், ஆனால் அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னியும்; நான் இழக்க வரவில்லை, இரட்சிக்கவே வந்தேன். இதை உம்முடைய நாமமாகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய வார்த்தை, உண்மையும் சத்தியமுள்ளவர் நாமத்தில் நான் வேண்டுகிறேன். ஆமென்!... நீங்கள் சந்தோஷமாக இருந்தால், இந்த காலை வேளையில் பாடி மகிழ்வோம். ... பாடல் தலைவர் ஒரு பாடலோடு தயாராகட்டும்!
26 கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளிலிருந்து முதல் முறையாக வரும் சகோதரர சகோதரிகளுக்கு, முத்துகளாக நீங்கள் விசுவாசிப்பதை விற்று போட்டு, உங்கள் சகோதரர்கள் செய்ததைப் போல இந்த முத்தை வாங்கவும். இது பரிசுத்தவான்களின் பாகமாகும்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. கிறிஸ்துவின் வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்கள் உள்ளன, அதாவது ஏழு பரலோக தூதர்கள். ஆனால் ஒவ்வொரு நட்சத்திரமும் அதனதன் நேரத்தில் பூமியில் எத்தனை தீர்க்கதரிசி செய்தியாளர்களை எழுப்பும் என்பதை தேவன் மாத்திரமே அறிந்திருக்கிறார். வாரத்திலே எட்டாவது நாள் ஒன்று இருக்கின்றது லேவியராகமம் அதை பற்றி பேசுகிறது. பெந்தேகோஸ்தே நாளானது வாரத்தின் எட்டாவது நாளாக இருக்கின்றது மற்றும் அது ஏழாம் வாரத்தின் பாகமாக இருக்கின்றது.
27 வெளிப்படுத்துதல் 17-ஆம் ஆதிகாரத்தில் தேவன் எட்டு தலைகள் என கூறியிருக்கலாம் ஆனால் அவர் ஏழு என கூறினார் ஆனால் 11-ஆம் வசனத்தில் அது, "இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும்... " இப்போது அதை எப்படி விளக்க போகிறீர்கள்? இருப்பினும், ஆவிக்குரிய விதத்தில் அது சாத்தியம்... அது தான் எட்டாவதாக, ஆனால் எட்டு தலைகள் இல்லை.
28 ஆனால் அப்போஸ்தலர் 13: 48-ஐ கொண்டு ஒவ்வொரு நாளும் என்னை தேற்றிக் கொள்கிறேன்: "... நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்". [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுமார் 4 மணியளவில், ஒரு பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெறுவதற்க்காக வந்தான். நான் முன்பு அவனை பார்த்ததில்லை, அவன் செய்தியை மட்டுமே கேட்டிருக்கிறான். அவன் தம்முடைய விசுவாசிகளையும் உள்ளே கொண்டு வருவதற்கு தயார்படுத்துகிறான். மத்தேயு 25: 6-ன் அழைப்பிற்கு சில கன்னிகைகள் அதாவது சொல்வோமானால் முந்தைய தீர்க்கதரிசியின் விசுவாசிகள் பதில் அளிப்பதாக வேதாகமம் கூறுகிறது. ஒரு தலைமுறையில் முந்திய தீர்க்கதரிசியின் விசுவாசிகளே கன்னிகைகள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. சில சபைகள் உலகமெங்கிலும் விசுவாசிக்கும். அதை நாம் அப்போஸ்தலர் 21: 8 முதல் 9-ல் காணலாம். இரவும் பகலும் அங்கே சேவல் கூவும் வேளையில் சந்தித்தது.
30 இனி பிலிப்புவை பற்றி நாம் யாரும் பேசுவதில்லை, ஆனால் பூமியின் அனைத்து தேசங்களிலும் உள்ள நான்கு காற்றுகளிலிருந்து வரும் நான்கு கன்னிகைகள். அவர்கள் சிரியா, லெபனான், சவுதி அரேபியாவில் இருந்து, ஜப்பான், சீனா, கொரியா, இந்தியா, ஈரான்... போர்த்துக்கல், இத்தாலி, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யாவில் இருந்து, இங்கிலாந்தில் இருந்து... கனடாவில் இருந்து வரும், அமெரிக்காவிலிருந்து, பிரேசில், பெருவில் இருந்து, சிலி... செனகல், காங்கோ-கின்ஷாசா, கேமரூன், சூடான், அல்ஜீரியாவில் இருந்து...
31 பிலிப்புவின் செய்தி உருவாக்கிய கன்னிகைகள். காக்குவ் பிலிப்பு தாமே காட்சியில் இல்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் பூமியெங்கிலும் உள்ள கன்னிகைள் வெளிப்படுத்துதல் 10: 8 முதல் 11 வரையுள்ள ஊழியத்திற்காக ஆயத்தமாக இருக்கின்றார்கள், இது தேசங்களின் மணவாட்டியின் முடிவான ஊழியமாகும். அவர்களுடைய பிதா பிலிப்புவின் செய்தியால் பிறந்தவர்கள் [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32 இந்த எத்தியோப்பிய மந்திரி முதலாவதாக எலியாவின் இரதத்திலிருந்து இறங்கினான் என்பதை நாம் பார்க்கலாம்; அது தானே சாயங்கால வேளைச் செய்தி. அவன் வாசித்துக் வாசித்துக், வாசித்துக் கொண்டு இருந்தான்... அவன் அறிவை கொண்டிருந்தான் ஆனால் வெளிப்பாட்டை கொண்டிருக்கவில்லை. தூதனானவன் காக்குவ் பிலிப்புவிற்கு கொடுத்த செய்தியின் மூலமாக அவன் வெளிப்பாட்டை பெற்றான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அது மிக எளிமையானதாக இருந்ததினால் இரதத்தில் உள்ள அனைத்து பிரன்ஹாமிஸ்டுகளும் அதை வெறுத்தார்கள்.
33 ஆனால் பிலிப்பு காணாமற் போனபோது, அவர்கள் 1 இராஜாக்கள் 18: 11 முதல் 12 வரையுள்ள பிரகாரமாக அவர்கள் விசுவாசிப்பதாக கோரின எலியாவின் ஆவி இந்த முக்கியமற்ற நபரில் இருந்ததை கண்டார்கள். அவர்கள் தங்கள் சத்தத்தை துக்கப்படுவதற்காக எழுப்பினர், ஏனென்றால் அது அவர்களுக்கு முடிந்தது என்று அறிந்திருந்தார்கள். ஆனால், அந்த மந்திரி குதித்து பாடி மற்றும் நடனமாடினான். ஒசன்னா! அல்லேலூயா! மகிமை! கர்த்தராகிய இயேசுவைத் துதியுங்கள்! ஒ தேவனே நன்றி! பிலிப்பு! எட்டு எழுத்துக்கள்! அப்போஸ்தலருடைய நடபடிகள் எட்டாம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசுவின் சீடர்களின் மத்தியில் எட்டாவது. ஆமென்! "சந்தோஷமாக, நாம் தேவனை ஆசீர்வதிப்போம்.." ஆமென்! யாவும் பரிபுரணமாக இருக்கின்றது! எல்லாம் முடிந்தது. தேவனே உமக்கு நன்றி!
34 ஓ, பூமியின் மேல் ஞானிகளும் புத்திமான்களே, தேவனுக்கு முன்பாக நாளை உங்கள் பிள்ளைகளே உங்களுடைய நியாயாதிபதிகளாக பிரசங்கிக்கப் போவதை நிராகரிக்க வேண்டாம். உணர்ந்து கொள்ளக் கூடியவன் எவனோ, அவன் உணர்ந்துக் கொள்ளக்கடவன்.