ஜூன் 12, 2005 ஞாயிறு காலை லோகாட்ஜ்ரோ, அபிட்ஜான், ஐவரிகோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது
1 1993-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று நடந்த இந்த மகிமையான காரியமான உடன்படிக்கையின் தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியை பற்றி வில்லியம் பிரன்ஹாம் கூறியருப்பதாக யாரோ ஒருவர் என்னிடம் சமீபத்தில் கூறினார். அவர் 1963-ல் முன்றாம் முத்திரை பிரசங்கித்த நாள் அன்று, 1993-ல் பூமியின் மேல் ஏதோ ஒன்று நடக்கும் என்று கூறியிருப்பார், அவர் இவ்விதமாக... "ஆகவே நீங்கள் பாருங்கள், அவருடைய வருகைக்கு மூன்று நிமிடத்தில் நாம் இருப்போமானால், அதை பாருங்கள், அது நமக்கு ஏறத்தாழ முப்பது வருடங்களை குறிக்கின்றது. அல்லது அது போன்றது...".
2 மேலும் இறங்கு வரிசையில் எண்ணுதல் பத்தி 103-ல், அவர் கூறினதாவது, "உங்களுக்கு தெரியுமா, ஜான் கிளின் அங்கு குடியேறின போது, அந்த காலையிலே, அவர் இறங்கு வரிசையை பின்பற்றிக் கொண்டிருந்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? இப்பொழுது அது இப்படியாக கூறின இடத்திற்கு நாம் வருகின்றோம், "முன்று நிமிடத்தில் ஏதோ ஒன்று நடக்கும்". அவர்கள் அது என்னவென்று அறியாதிருந்தார்கள். அது நடுராத்திரியிற்கு முன்று நிமிடங்கள் குறைவாக உள்ளது.
3 சகோதரரே, நான் இந்த வாரத்திற்குள்ளாக தான் இந்த குறிப்புகளை பார்த்தேன், ஏப்ரல் 24, 1993 முதல் நாம் நடுராத்திரியில் இருக்கின்றோம் என்று நான் கூறினது இங்குள்ள எத்தனை பேருக்கு நினைவு இருக்கின்றது? [ஆசிரியர் குறிப்பு : அநேகர் ஆமென்! என்கின்றார்கள்]. வில்லியம் பிரன்ஹாம் 1963-ல் : நாம் அவருடைய வருகைக்கு முன்று நிமிடத்தில் இருக்கின்றோம், அது ஏறக்குறைய நமக்கு முப்பது வருடங்கள் ஆகின்றது, அல்லது அது போன்று ஏதோவொன்று மேலும் 1963 கூட்டல் 30 வருடங்கள், அது 1993-ஐ கொடுக்கின்றது மற்றும் ஏப்ரல் 24, 1993-ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அறியாத மொழியின் வியாக்கியானத்திற்காக இறங்கி வந்தார். 1993-ஆம் ஆண்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பவும் வருவார் என்று வில்லியம் பிரன்ஹாம் தவறான தீர்க்கதரிசனம் உரைத்தார் என்று கூறுபவர்களுக்கு நடுராத்திரி சத்தம் மாத்திரமே அவர்களுடைய வாயை அடைக்கின்றது. நான் அதை ஒரு வலைத்தளத்தில் பார்த்தேன்...
4 நல்லது! இந்த காலை வேளையில் நமது வேதாகமங்களை வெளிப்படுத்துதல் 8: 3 முதல் 5 வரைக்கும் பிறகு லூக்கா 11: 1-ஐயும் எடுத்துக்கொள்ளலாம். நான் லூக்கா 11: வாசிக்கின்றேன் "அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் ஜெபிக்கும் படிக்கு எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்".
5 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனுக்காக காத்திருக்கும் பொழுது எபேசியர் 4:11-ன் ஊழியங்கள் கூட சபையின் விசுவாசத்தை பேணி காத்துக் கொள்கின்ற பணியை கொண்டிருக்கின்றது. ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி-செய்தியாளன் மாத்திரமே சபையை மற்றொரு கட்டத்திற்கு அறிமுகப்படுத்துகிறான். ஒரு பாஸ்டரோ, ஒரு அப்போஸ்தலனோ, ஒரு போதகனோ அல்லது வேரு எதுவும் ஒரு போதும் இருந்தது இல்லை. பழைய ஏற்பாடு அல்லது புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு காலமும் அல்லது ஒவ்வொரு கட்டமும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனால் அறிமுகப்படுத்தப்பட்டது : எகிப்திலிருந்து வெளியேறுதல், கானானுக்குள் பிரவேசித்ததிலிருந்து மேசியாவின் வருகை மட்டும் தீர்க்கதரிசி செய்தியாளர்களால் குறிக்கப்படுகின்றது : மோசே, யோசுவா, சாமுவேல், எரேமியா, ஆபகூக், ஆகாய், செப்பனியா, ஓசியா, எசேக்கியேல்... நான் உங்களுக்கு சொல்கிறேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தொடர்ந்து தேசங்களுக்குள் ஏராளமான தீர்க்கதரிசி செய்தியாளர்கள் அனுப்பப்பட்டிருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் குறிப்பிடப்படவில்லை.
6 மனிதகுலத்தை கிறிஸ்தவத்திற்குள் அறிமுகப்படுத்த, அது ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இருந்தது, யோவான் ஸ்நானகன் அதை செய்தார். திருச்சபையை கிறிஸ்துவிற்கு நிச்சயம் செய்ய, பவுல், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் அதை செய்ய வேண்டியதாக இருந்தது. நீதிமானாக்கப்படுதலுக்கு ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தேவையாக இருந்தது, ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளன் பரிசுத்தமாக்கப்படுதலுக்கு தேவைப்பட்டது, சபையை ஒரு காலத்திற்கு கொண்டு வர எப்போதும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தேவைப்பட்டது.
7 முத்திரைகள் திறக்க ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தேவைப்பட்டது, நடுராத்திரி சத்தத்திற்கு ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தேவைப்பட்டது, மற்றும் சேவல் கூவும் வேளையில் எனக்குப் பின் பூமியின் மேல் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பான். இது வேதாகமம் அல்ல, இருப்பினும் உங்களுடைய பிரகாரமாக அது நிறைவாக இருக்கின்றது .ஆனால் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன். மேலும் நான் உங்களிடம் கூறி இருக்கிறேன் மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதலின் வேளையில், பூமியில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8 நல்லது! நீங்கள் பார்க்கிறீர்களா?... மேலும் இங்கும் நான் சென்ற இடங்களிலும், ஒவ்வொரு முறையும் ஒரு கேள்வி வந்தது: "சகோதரன் பிலிப்புவே, நாங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்? நான் இந்த விஷயத்தை பிரசங்கிக்க தீர்மானித்தேன் பிறகு கூடுமானால் கேள்வி பதில்களின் அமர்வைக் கொண்டிருப்பேன்.
9 நல்லது, நீங்கள் பார்க்கிறீர்களா? இவை லூக்கா 11-ஆம் அதிகாரத்தில் இருக்கின்றது, யூதர்கள், ஆபிரகாமின் குமாரர்கள் நியாயப்பிரமாணத்தின்படியேயும், தீர்க்கதரிசிகளின்படியேயும் அவர்களின் எஜமானாகிய கர்த்தராகிய இயேசுவினிடத்தில் அவர்களுக்கு, ஜெபிக்கும்படி போதிக்க கேட்டார்கள். ஆனால் அதற்கு முன்பாக மோசே அவர்களுக்கு ஜெபிக்கும்படி போதித்தார், தீர்க்கதரிசிகள் ஜெபம்பண்ணும்படி அவர்களுக்கு போதித்தார்கள் மேலும் அதற்கு முன்னதாக யோவான் ஸ்நானகன் அவனுடைய சீஷர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தான். வெளிப்பாட்டின் உயர்ந்த நிலைத்தான் ஒவ்வொரு முறையும் இதை உத்திரவிட்டது. நீங்கள் பார்க்கிறீர்களா?
10 பழைய ஏற்பாட்டில் ஜெபங்களுக்கும் சங்கீதங்களுக்கும் பல உதாரணங்கள் ஏற்கனவே இருந்த போது எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று யூதர்கள் எப்படி கேட்க முடியும்? அது அவர்களுடைய மணி வேளையின் மனத்தாழ்மையும், வெளிப்பாட்டின் நோக்கமும் தான் அந்த நிலைப்பாட்டில் அவர்களை வைத்தது, மேலும் தேவனுடைய குமாரனிற்கு இதை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கின்றது . [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11 பரிசேயர்கள், சதுசேயர்கள், ஹெலனிஸ்டுகள் மற்றும் அங்கே உள்ள, பெருமைக்காரர்களும் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை, மேலும் அவர்களுடைய ஜெபங்கள் தெய்வீக மாதிரியின் படி இல்லாமல், அதின் மூலமாக தேவன் அவர்களை தங்களுடைய மணி வேளையின் செய்தியை நிராகரித்த முரட்டாட்டம் உள்ளவர்களாக கண்டார். ஒவ்வொருவரும் அவனது அல்லது அவனுடைய ஜெபத்தின் மூலம் அடையாளம் காணப்படுவான். ஒரு கத்தோலிக்கன் அவனுடைய ஜெபத்தினால் அடையாளம் காணப்படுவான், ஒரு மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், அனாபாப்டிஸ்ட், இஸ்லாமியனும், பௌதிகன்... பூமியிலுள்ள ஒவ்வொருவரும் அவனுடைய ஜெபத்தின் மூலம் அடையாளம் காணப்படுவான்... உங்களுடைய ஜெபத்தின் படியாக பரலோகத்திலிருக்கின்ற தேவன், நீங்கள் உங்களுடைய மணி வேளையின் உயிர் வாழும் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டீர்கள் என்று அறிவார். மேலும் இதை யூதர்கள் அறிந்திருக்கிறார்கள் ஆனபடியினால் அவர்களுக்கு ஜெபிக்க கற்றுத் தரும் படியாக கேட்டுக் கொண்டார்கள்.
12 அவர்களுடைய மணி வேளையில் இருப்பவர்களுக்காக ஏசாயா ஜெபிக்க கற்றுத் தந்தார். எரேமியா தன்னுடைய மணி வேளையில் இருப்பவர்களுக்கு ஜெபிக்க கற்றுத் தந்தார். ஆமோஸ் தன்னுடைய மணி வேளையில் இருப்பவர்களுக்கு ஜெபிக்க கற்றுத் தந்தார். யோவான் ஸ்நானகன் தன்னுடைய மணி வேளையில் இருப்பவர்களுக்கு ஜெபிக்க கற்றுத் தந்தார். மேலும் அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசுவினிடத்தில், அவர்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசியினிடத்தில் கேட்டனர். கடந்த கால செய்தியின் படி நீங்கள் ஜெபித்தால், தேவனும் அறிவார் சாத்தானும் தேவன் நகர்ந்ததை அறிந்து அதற்கு பின்னே தன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு தேவனுடைய எல்லா தன்மைகளையும் கோருகிறான்.
13 உதாரணமாக: ரிக் ஜாய்னரின் ஊழியமானது விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரத்தின் ஊழியம், ஆனால் திருச்சபையின் ஆரம்பத்தில், இயேசு கிறிஸ்து தான் பிரகாசிக்கும் விடிவெள்ளி நட்சத்திரமாக இருந்தார் என நாம் அறிவோம். ஆனால் இப்பெழுது ஒரு சாதாரண பிசாசிற்கு ரிக் ஜாய்னெர் வாய் என்று அழைக்கப்படுகிறான். மேலும் இந்த செய்தியின் மூலமாக பிசாசுகளும் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறது என்றும் அனைத்து மாந்திரீக பூஜாரிகளும் தீர்க்கதரிசிகளாக மாறிப் போனார்கள் என நீங்கள் அறிவீர்கள்.
14 எனவே, நமது முன்னோடிகளை விட அதிக துல்லியமான விவரங்களை வழங்க நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில், யோவானின் சீடர்களும், கர்த்தராகிய இயேசுவின் சீஷர்களும், புதிய விஷயங்களைக் கேட்டு கவலைக் கொண்டு அவர்கள் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை தெரியாமல் போனார்கள். மற்றவர்கள் அரிதாக ஜெபம் செய்தனர்! இயேசு அவர்கள் செய்த அனைத்தும் பிசாசின் சித்தம் என்றும் மற்றும் அவர்களுடைய ரபீக்கள் பாம்புகளாக இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கூறினார். மேலும் ஒருவன் அநேக ஆண்டுகளாக பிசாசின் சித்தத்தை செய்து செலவழித்திருக்கிறோம் என்று அறியும் பொழுது, அதே விதத்தில் ஜெபிப்பது எதை நிரூபிக்கின்றது, அதே பிசாசை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றது அல்லவா?
15 இதற்கான ஒரே தீர்வானது லூக்கா 11: 1: "ஆண்டவரே யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் ஜெபிக்கும்படிக்கு எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்." [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஆனால் உண்மையான காரியம் என்னவென்றால் இப்பொழுது அவர்கள் மற்றொரு எஜமானனை கொண்டுள்ளார்கள் என்றும் மேலும் அவர்கள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கடந்து வந்திருக்கின்றார்கள் என்பதை சிஷர்கள் மறந்து போனார்கள். இனி முதற்கொண்டு அவர்கள் அந்தகாரத்தின் தலைவனாகிய சாத்தானை விட்டு இந்த உலகத்தின் ஒளியாகிய இயேசு கிறிஸ்துவை, பின்பற்றுவதினால் அவர்களுடைய ஜெபம் நேரடியாக பெறப்படுகிறது என்பது உண்மை. உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியை நீங்கள் விசுவாசிக்கும் பொழுது உங்களுடைய ஜெபம் நேரடியாக தேவனுக்கு முன்பாக பெறப்படும். ஆனால் இந்த கேள்வியை கர்த்தராகிய இயேசுவினிடத்தில் கேட்க்கும்படியாக சீஷர்களை வழி நடத்தியது எது ?
16 நல்லது! யோவான் ஸ்நானகன் வந்தபோது பரிசேயர்கள் சாத்தானை தங்களுடைய பிதாவாக கொண்டிருக்கிறார்கள் மற்றும் அவர்கள் பிசாசினிடத்தில் ஜெபம் செய்கிறார்கள் என்று அவர்களிடத்தில் சொல்லத் துவங்கினான், அவருடைய சீஷர்கள் ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணும்படி மோசே அவர்களுக்கு கற்பித்ததை யாரோ ஒருவர் அது அவர்கள் பிசாசினிடத்தில் ஜெபம் செய்கிறார்கள் என்றும் அவர்கள் செய்கிறது பிசாசின் சித்தமென்றும் கூறியிருக்கிறார்கள், ஆகவே ஜெபிப்பதற்கு வேரு ஒரு விசேஷித்த வழி இருக்க வேண்டும். இயேசு கூறினதை பாருங்கள், "நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்" (யோவான் 8:38). இருப்பினும் அவர்களுக்கு தெரிந்த வரை, அவர்கள் செய்கின்ற அனைத்து காரியங்களையும் மோசே வரைவகுத்து கொடுத்தது. ஆனால் நிஜத்தன்மையில், அது அவர்களுக்கு வரைவகுத்த செய்தியினைத் தாண்டி வேறு எதுவும் இல்லை.
17 இனி முதற்கொண்டு, ஜெபத்தின் தோற்றத்தைக் கொண்டு அதினுடைய பதில் இருப்பதில்லை. ஆனால் வழக்கமாக செய்வதைப் போன்று ஜெபிக்க வேண்டுமானால், அவர்களால் பரிசேயர்களுக்கு சமமாக முடியாது. மேலும் இன்று நாம் வழக்கமாக ஜெபிப்பதைப் போன்று செய்வோமானால், நாம் ஒருபோதும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளுக்கு சமமாக முடியாது. அவர்களால் தொடர்ந்து முழு இரவும் ஜெபிக்க முடியும், அவர்களால் எல்லா வருடமும் நாற்பது நாள் உபவாசம் இருக்க முடியும், மேலும் இப்பொழுது எழுபது நாள் அல்லது நூறு நாட்கள் உபவாசத்திலும் செல்ல முடியும். பைத்தியக்காரர்களைப் போன்று பிடிக்கப்பட்டிருப்பதினால் அவர்களுக்கு பசி இருக்காது. அவர்கள் பண்டைய கால போர் வீரர்கள், இந்த நூற்றாண்டின் கோலியாத்துக்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
18 பாகாலின் தீர்க்கதரிசிகளின் ஆவியினால், அவர்களுடைய அனைத்து ஜெபங்களும் அவர்களுடைய காளைகளின் மீது அதாவது அவர்களின் விசுவாசிகள்மீது திரும்ப திரும்ப செய்யும் அக்கினியும் இரத்தமும இருக்கின்றது . அவர்கள் அங்கே நின்று பாகாலிடம் : "பரிசுத்த ஆவியின் அக்கினி, அக்கினி, நான் அக்கினியை வரவழைக்கிறேன், அக்கினி, அக்கினி, அக்கினி, அக்கினி,... "; என கூப்பிடுகிறார்கள் . அவர்கள் தங்களுடைய கொள்ளு தாத்தாக்களை 1 இராஜாக்கள் 18: 25 முதல் 40 வரையில் எலியா தீர்க்கதரிசி கொன்று போட்டதை போலவே. இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 நல்லது! அநேக பரிசேயர்களும் சதுசேயரும் நிச்சயமாக பயபக்தியுள்ளவர்களும் யோவான் ஞானஸ்நானகனிடத்திற்கு ஞானஸ்நானம் பெற வந்து அவனுடைய சீஷர்களாக ஆனார்கள் என வேதாகமம் கூறுகிறது. குறிப்பாக யோவான் ஸ்நானகனுடைய போதனைகளால் கலக்கமடைந்தார்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுத் தரும்படியாக கேட்டுக் கொண்டார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சீஷர்கள் ஏன் ஜெபத்தைப் பற்றி கற்பிக்க கேட்க்க வேண்டும்?
20 ஏனெனில் அவர்களது பழக்கவழக்கங்களையும் அவர்களின் பழைய நம்பிக்கையையும் சவால் விடச் செய்த புதிய செய்தியை பெற்று இருந்தார்கள். எனவே தங்களுக்குள்ளாக நுழைந்த பிறகு, அவர்கள் ஜெபம் உள்பட அநேக காரியங்களை போதிக்கப்பட வேண்டும் என கண்டறிந்தார்கள். இப்போது அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த யெகோவா என அழைத்ததை சாத்தான் என்று புரிந்துக் கொண்டார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
21 இது முதற்கொண்டு சுவிசேஷ புத்தகங்கள் மற்றும் மற்ற புத்தகங்கள் மாய புத்தகங்கள் என்று அழைக்கப்படும் மற்றும் அப்போஸ்தலர் 19:19-ன் பிரகாரமாக எரிக்கப்படும். எனினும் இந்த புத்தகங்களின் மூலமாக ரபீக்கள் அவர்களுக்கு ஜெபம் செய்ய கற்றுக் கொடுத்திருந்தார்கள். நீங்கள் இப்போது காண்கின்றபடியாக அவர்களுக்கு விடப்பட்டிருந்த ஒரே ஒரு காரியம் அது தாழ்மையாக எப்படி ஜெபிக்க வேண்டுமென போதிக்கப்பட வேண்டும் என்று கேட்ப்பது மற்றும் அவர்களும் அதை தான் செய்தார்கள். அது அவர்கள் தங்களுடைய காலத்தின் செய்தியின் ஆழத்தை புரிந்து கொண்டதைக் காட்டியது.
22 நல்லது! இப்போது, ஜெபம் என்பது மத்தேயு 6: 9 முதல் 11 வரை மனப்பாடமாக ஒப்பித்தல் அல்லது சங்கீதங்களை அல்ல என்பதையும் நான் சொல்லட்டும். நீங்கள் பார்க்கிறீர்களா? கத்தோலிக்கர்கள் "மரியே வாழ்க..." என்பதை மனப்பாடமாக தொடரலாம் என நான் கூறவில்லை அல்லது அப்போஸ்தலர்களின் கோட்பாடுகள்... மற்றும் மெத்தடிஸ்ட்டுகள் : பரமண்டலங்களில் இருக்கின்ற... மற்றும் சுவிசேஷகர்கள் அவர்களுடைய பாகாலின் அக்கினியை வரவழைப்பார்கள்... சகோதரர் பிலிப்பு " நம்முடைய ஜெப முறைமையை மாற்ற வேண்டிய தேவையில்லை என்று கூறுகிறார் என்று சொல்ல வேண்டாம். நீங்கள் சபைகளிலிருந்து தெரிந்துக் கொண்ட காரியங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். வேதாகமத்தில் நீங்கள் பார்க்காத ஒன்றை செய்ய வேண்டாம்! பிசாசை துரத்துவதற்கு யாராவது அக்கினியை வரவழைத்ததை நீங்கள் கண்டதுண்டா? நீங்கள் பார்க்கிறீர்களா?
23 இது கிழக்கில் பேயோட்டுதலின் ஒரு நடைமுறை , அது ஒரு மாய வித்தை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முடக்குவாதங்களை, வலிப்பு, மனநலம் பாதிப்பு ஆகியவற்றை விடுவித்தார். இவைகளில் ஒரு வசனத்திலாவது அவர் அக்கினியை வரவழைத்தாரா? தேவன் அக்கினியை பயன்படுத்தும் போது, அது பட்சிக்கிறதாக இருக்கும். இதை நாம் ஆதியாகமத்தில் சோதோம் கொமோராவோடு காணலாம், இதை எலியாவோடு 1 இராஜாக்கள் 18: 25 முதல் 40 வரையில் பாகால் தீர்க்கதரிசிகளுக்கு முன்பும், 2 இராஜாக்கள் 1: 9 முதல் 12 வரை அகசியா ராஜாவின் ஐம்பது பேர்களிடத்தில் நாம் காணலாம்.
24 இவைகள் யாவும் மாந்திரீகம், மாயமந்திரம் சார்ந்த, ஆவிக்குரிய பழக்க வழக்கங்கள். இப்போது அனைத்து சபைகளும் மாய விதிகளின்படியாக தங்களை அணிவகுத்துக் கொள்கின்றனர் என வகைப்படுத்தப்படுகின்றன. சங்கீதங்கள் மனப்பாடமாக ஓதுவதை அடிப்படையாக கொண்டதின் மூலம் வேதாகமம் மாயக் கட்டளைகளுக்கு பயன்படுகிறது. மேலும் லூயிஸ் செகன்ட் மற்றும் ஜேம்ஸ் மன்னன் வேதாகமங்கள் இந்த பழக்க வழக்கங்களுக்கு உகந்தது. உங்களுடைய வீட்டில் ஒரு வேதாகமம் இருந்தால், அது உங்களுடைய வீட்டில் இருக்கும் ஒரு மாந்திரீக புத்தகமாக இருக்கின்றது. அது சரியே! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25 ஜெபமானது ஒரு ஏவுதலின் துண்டுதலாக இருக்க வேண்டும், அதனால் தான் முதலில் பாடல்களின் தியானம் அல்லது சங்கீதங்களின் தியானம் தேவைப்படுகிறது: தியானம், ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் ஏற்ற ஒரு பொருத்தமான சங்கீதம் இருக்கின்றது. நாம் ஜீவிக்காமல் ஒரு ஜெபமானது தேவனிடத்திற்கு செல்லாது, அதாவது, 1 சாமுவேல் 1-ம் அதிகாரத்தில் அன்னாளோடு காண்கிற சூழ்நிலையில் இருக்க வேண்டும். மத்தேயு 6: 9 முதல் 11 வரை ஓதுவதற்கான ஜெபம் அல்ல, இது ஒரு மந்திரம் அல்ல.
26 இதன்படி, ஜெபத்தை ஆரம்பிப்பதற்கு முன், நாம் ஆவியில் இருக்க வேண்டும் மேலும் நாம் ஆவியில் இருக்கின்றோம் என்பதற்கு அத்தாட்சியானது நாம் ஜெபத்தை நிறுத்த விரும்ப மாட்டோம். மேலும் வார்த்தைகளும் பொருளும் தானாக வந்து தேவனுடைய கிருபையோடும் உதவியோடும் நம்முடைய சித்தத்தின்படியாக சுதந்திரமாக வேகமெடுப்போம்.
27 ஜெபத்தின் முதல் பகுதியானது தேவனை மகிமைப்படுத்தி, துதித்து இந்த மணி வேளையின் நாமங்கள் மற்றும் பண்புகளோடு உயர்த்த வேண்டும். நீதிமொழிகள் 28: 9 கூறுகிறதாவது: ஒருவன் தன்னுடைய மணி வேளையின் தீர்க்கதரிசன வசனத்தைக் கேட்காதபடிக்கு, தன்னுடைய செவியை விலக்கினால் அவனுடைய ஜெபமும் கூட அருவருப்பானது. மோசேயின் காலத்தில், அது இப்படியாக இருந்தது : வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. (நீதிமொழிகள் 28:9). நீங்கள் பார்க்கிறீர்களா?
28 ஒரு ஸ்திரீயானவள் தன் கணவனுக்குக் கீழ்ப்படியாதிருந்தால், அவளுடைய ஜெபமும் கூட அருவருப்பானது. எவன் ஒருவனாகிலும் இந்த நடுராத்திரி சத்தத்தை நிராகரித்தால் அவனுடைய ஜெபமும் கூட அருவருப்பானது. அதின் அர்த்தம் என்ன? எவனாகிலும் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு அல்லது இஸ்லாம் அல்லது யூத மதத்தின் உறுப்பினராக இருப்பவனுடைய ஜெபமும் கூட அருவருப்பானது. நீ உன்னுடைய மணி வேளையின் நற்செய்தியை நிராகரித்திருந்தால், உன்னுடைய ஜெபம் அருவருப்பானது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 மேலும் இவை அனைத்தும் இதைக் கூறுகின்றது அதாவது நம்முடைய மணி வேளையின் செய்தியை பெற்றுக் கொண்டதினால் நம்முடைய ஜெபமானது தேவனால் அங்கீகரிக்கப்படுகின்றது. இதனால், நாம் இயேசு கிறிஸ்து என்றுக் கூறும் போது, அது தாமே பவுல் பிரசங்கம் செய்த அதே இயேசுவை காண்பிக்கின்றது, அதே வேளையில் ஒரு பிரன்ஹாமிஸ்டு, அசெம்பளிஸ் ஆப் காட் திருச்சபை இயேசு கிறிஸ்து என்று கூறும் போது, சாத்தானிடத்திலே அவன் பேச விரும்புகிறான் என்று அவன் அறிவான்.
30 ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேலின் தேவனிடம் நீங்கள் ஜெபம் செய்யலாம்... ஆனால், உங்கள் காலத்தின் செய்தியின் மூலமாக ஜீவித்துக் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவை நிராகரித்தால், சாத்தான் மாத்திரமே உங்களுக்கு பதிலளிக்க முடியும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இப்போது இதை கவனிக்கவும்: நீங்கள் உங்களுடைய மணி வேளையின் செய்தியை ஏற்றுக்கொண்டால், நீங்கள் கல்வி கற்றவரோ அல்லது கல்வி கற்காதவரோ மெய்யான இயேசு கிறிஸ்து உங்கள் ஜெபத்தின் மூலமாக அங்கீகரிக்கப்படுவார். நீங்கள் பார்க்கிறீர்களா?
31 ஒரு விக்கிரக பூசாரி, கத்தோலிக்கன், பிரன்ஹாமிஸ்டு, புராட்டஸ்டன்ட் அல்லது சுவிசேஷகன் இவ்விதமாக : "சர்வவல்ல தேவனே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்த விழாவை ஆசீர்வதித்து உம்முடைய வல்லமையை, உம்முடைய பரிசுத்த ஆவியை என்மேல் அனுப்பும்! " என்று ஜெபம் செய்து கூறுகிறான் என்றால், இந்த அபிஷேகம் அவனை அற்புதங்கள் மற்றும் சுகங்களை அளிக்க அவனை கைப்பற்றுகிறது, அது தான் பிசாசு! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32 இதில் நமக்கு விருப்பம்மளிக்கின்ற காரியம் என்னவெனில் அவர்கள் ஒரு மாந்திரீக பூஜாரிகள். மேலும் லூயிஸ் செகண்டு, தாம்ப் அல்லது புனித நீர் போன்றவை மாந்தீரிகம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? இதனால், ஒரு பிரன்ஹாமிஸ்டு, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் அல்லது சுவிசேஷகனின் ஜெபம் என்னவாக இருந்தாலும், அங்கு கிரியை செய்வது ஒரு பிசாசாகும். சில பிரன்ஹாமிஸ்டுகள் நடுராத்திரி சத்தத்தை நிராகரித்து விட்டு, "தேவனுக்கு மகிமை! நேற்று, எங்கள் பாஸ்டர் மீது அக்கினி ஸ்தம்பத்தை பார்த்தோம், அல்லது ஒரு தூதன் எங்களை பலப்படுத்துவதற்கு எங்களுடைய சபையில் வந்தான் மற்றும் அதை நாங்கள் புகைப்படம் எடுத்துள்ளோம்!" என்று கூறினால். பிறகு இந்த தூதன் லூசிபர் ஆவான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
33 இப்போது லூக்கா 11: 1 முதல் 4 வரையுள்ள இரகசியத்தை கவனியுங்கள். சீஷர்கள் ஜெபத்தைப் பற்றி கற்றுக்கொள்ளும்படி கேட்கிறார்கள், அவர்களுக்கு அவர் ஒரு விசேஷித்த பதிலைக் கொடுக்கவில்லை என்று நாம் காண்கிறோம். கர்த்தர் சொன்னதைக் காட்டிலும் எந்த ஒரு ரபி, ஆயக்காரன் அல்லது யூத மதகுரு அல்லது பாஸ்டர் அவனுடைய ஜெபக்கூட்டத்தில் அதைவிட சிறந்ததை கற்பிப்பான். இரகசியமானது அவர்களுடைய மணி வேளையின் செய்தியை எற்றுக்கொள்வதில் அதிகமாக அடங்கியிருக்கின்றது, இல்லையென்றால் இயேசுவிடம் கேட்கும் முன் அவர்களுக்கு அவர் போதித்திருப்பார், இன்று ஜெபத்தை குறித்து ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் உள்ளன. ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன் நீங்கள் உங்களுடைய மணி வேளையின் செய்தியை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று இருந்தால், நீங்கள் பேசுங்கள், அது போதும் கர்த்தர் தாமே செய்தது போன்றதாகும்..... [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
34 மேலும், நான் இதைக் கூற விரும்புகிறேன் அதாவது ஜெப நேரத்தில் மாத்திரம் நாம் ஜெப சூழ்நிலையில் இருக்க தேடக்கூடாது. ஏனெனில் ஜெபமானது தேவனோடு கொண்டிருக்கும் ஒரு ஐக்கியம் மேலும் ஒவ்வொரு செயலும் அதற்க்காக நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். வானத்திலே உள்ள தூதர்களை போன்று தேவன் பூமியின் மேல் ஆராதிப்பவர்களின் முன்மாதிரியாக பறவைகளை எடுக்கின்றார் எனெனில் இவைகள் பூமியின் மேல் ஒயாமல் தேவனை துதித்துக் கொண்டிருக்கின்றது. மேலும் தாவீது சரியாக தேவனுடைய இருதயத்திற்கு அடுத்த தாசன் என்று சரியாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றது என்று நான் விசுவாசிக்கின்றேன். சங்கீதங்களினுடாக தாவீதின் ராஜ்யமும், ஜீவனும், ஈசாயின் குமாரனாகிய தாவீதைப் போல தேவனைத் துதித்துக்கொண்ட ஒரு மனுஷனைக் காணவில்லை; ஒரு நல்ல சகோதரி தன்னுடைய வாயில் துதிப் பாடல்களில் குறைவு இருக்ககூடாது என்று நான் நினைக்கிறேன். சகோதரிகளே அது உங்களை இன்னும் அழகுப்படுத்துகிறது.
35 மேலும் நீங்கள் ஆவிக்குள்ளாக தொடங்குவதற்காக இருந்தால், நீங்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுவீர்கள், மேலும் ஜெபத்திற்கான பொருள் தானாக வரும் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். நாம் இனி ஒரு போதும் ஞாயிறு காலை வேளைகளில் ஜெபங்களை குறிக்கிடாத நிலைக்கு நாம் வர வேண்டும்... இந்த துதிப்பாடல்களை பாடும் போது துதிப்பாடல்களை பாடுவதற்கு பழக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஜெபம் செய்வதற்கும், மகிமைப்படுத்துவதற்கும், அவருடைய நற்செயல்களுக்கு நன்றி செலுத்துவதற்கும் உந்தப்படுவீர்கள்.
36 எனக்கு ஆர்வமுண்டாக்குவது என்னவெனில், நீங்கள் தேவனை மகிமைப்படுத்துவது! உங்களுக்கு தேவையானதை நீங்கள் கேட்டு பிறகு, அவர் காணக்கூடிய மற்றும் காணமுடியாத வகையில் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்ற காரியங்ளுக்காக அவர் செய்த எல்லாவற்றிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள், மேலும் கொலோசெயர் 4: 12-ல் எப்பாப்பிராவை பற்றி கூறப்பட்டுள்ளபடி எல்லா பரிசுத்தவான்களுக்காகவும், உங்களுக்கு முன்பாக ஒரு பொருப்பில் நிற்கிற யாவருக்கும், விசேஷமாக எனக்காகவும் நீங்கள் ஜெபம் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக ஜெபம் செய்ய சோம்பேறித்தனம் கொண்டிருந்தால், பிறகு எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.
37 ஒரு சிறப்பு ஜெபத்தை செய்ய வேண்டுமென உங்கள் மீது குற்ற உணர்வு கொண்டிருக்க வேண்டாம், அப்படி ஒன்றும் கிடையாது. நீங்கள் "காக்குவ் பிலிப்புவின் தேவனே" என்று சொல்லவில்லையென்றாலும், உங்களுடைய ஜெபம் ஒழுங்கமைப்பில் இருப்பதாக விசுவாசியுங்கள், ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மணி வேளையின் செய்தியை ஏற்றுக்கொண்டீர்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
38 கர்த்தருடைய ஜெபங்களைக் கவனியுங்கள், அங்கே எந்த இரகசியமும் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர் ஜெபம் செய்யும் போது, எளிமையாக "பிதாவே" என்கின்றார் அதே வேளையில் அவரே சாத்தானும் பிதாவாக இருக்கின்றான் என கூறியிருக்கிறார். யோவான் 12: 27 முதல் 28 வரையுள்ள ஜெபத்தைப் பாருங்கள்: "இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று".
39 ஒரு பிரன்ஹாமிஸ்டு, கத்தோலிக்கன் அல்லது ஒரு சுவிசேஷகன் ஜெபம் செய்திருந்தால், அவன் பேசுகிற பிதா அது பிசாசு என்றும் மற்றும் பரலோகத்திலிருந்து வரும் சத்தமானது அது சாத்தானின் தூதன் என்றும் நமக்குத் தெரியும். அவன் உத்தமமாக தேவனிடத்தில் பேசினாலும், அவனுக்கு சாத்தானே பதில் அளிப்பான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
40 இது இரட்சிப்பிற்கும் அதே காரியமாக இருக்கின்றது முதலாவது காரியமானது, அது ஒருவனுடைய மணி வேளையின் நற்செய்தியை விசுவாசித்து முறுமுறுப்புகள் அல்லது சோர்வு இல்லாமல் சோதனைகள் முன் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும். சிலுவையின் மீது உள்ள கொள்ளைக்காரன் என்ன செய்தான்? எழுபது நாட்கள் உபவாசம் இருந்தானா? இல்லை! ஆனால் அவன் தனது நேரத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டான். கொர்நேலேயு என்ன செய்தான்? அவனுடைய அநேக தர்மத்திற்கு கூடுதலாக, அவன் தனது நேரத்தின் ஒரே சத்தியத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதை நீங்கள் செய்யும் போது, உங்களுடைய ஜீவியம் செய்திக்கு தகுதியானதாக இருந்தால் உங்கள் ஜெபம் நேரடியாகப் பெறப்படுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் அதே ஜெபத்தை ஒரு பாப்டிஸ்ட் ஆக ஏறெடுக்கலாம், ஆனால் உங்களுடைய இரண்டு ஜெபங்களும் இரண்டு வெவ்வேறு நோக்குநிலைகளைக் கொண்டிருக்கும். வெறுமனே அது தான் .. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
41 அடுத்த ஞாயிறு, நான் ஆவிக்குரிய வரங்களை பற்றி பேசுவேன் ஆனால் ஒரு காரியத்தை அறிந்துக் கொள்ளுங்கள்: அனைவருக்கும் தங்கள் நம்பிக்கைகள், கடந்த காலத்தின் ஆவிகள் மற்றும் நடைமுறைகளுக்காக மனந்திருந்தியதால், ஒரு ஆவிக்குரிய வரம் இங்கே கிரியைச் செய்தால், அதின் மூலமாக பிசாசை பார்க்காதீர்கள். பரிசுத்த ஆவியானவர் 1 கொரிந்தியர் 12-ன் ஒன்பது வரங்களை வெளிப்படுத்துகிறார் என்று நாங்கள் நம்புகிறோம், பரிசுத்த ஆவியானவர் சொப்பனங்களையும் தரிசனங்களையும் தருகிறார்.
42 ஏப்ரல் 24, 1993-ன் தேவதூதனின் விஜயத்தின் கீழ், மத்தேயு 25: 6-ஐயும் வெளிப்படுத்துதல் 12:14-ன் வாக்குத்தத்தின் கீழ் இந்த செய்தியை கொண்டு வந்தவரின் மூலம் அனைத்து காரியங்களும் நடக்கின்றது என்று நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!