செப்டம்பர் 28, 2005 புதன்கிழமை மாலை யோபோகொன்- குவைத் லோகாட்ஜ்ரோ, ஆபிட்ஜான், ஐவரிகோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது
1 அவர் மீண்டுமாக செய்த காரியத்திற்காக நான் கர்த்தருக்கு நன்றியுள்ளவனாக இருக்கின்றேன், நம்முடைய சகோதரர் ஃபோபனாவின் தாயாருக்கு அவர்களுடைய நுரையீரல்கள் ஆழமாக பாதிக்கப்பட்டு மருந்துகளினால் இனி ஒன்றும் செய்ய முடியாமற் போனது மேலும் அவள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். உணவு அவர்களுடைய வாயில் கொண்டு செல்லப்பட்டது, அவர்களுடைய வயது அவை யாவும், நீங்கள் பார்க்கிறீர்களா? நம்முடைய சகோதரர் ஒரு சொப்பணத்தை கண்டார் அதிலே அவருடைய தாயார் அவரிடத்தில் கடைசியான நம்பிக்கை போல அவரைக் பார்த்தார்.
2 தேவன் அவர்களுடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தினார் ஏனெனில் அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தார்கள். பிறகு நான் அவர்களை அழைத்தேன், அவர்கள் இங்கிருந்து 380 கி.மீ தூரத்தில் இருக்கின்றனர் மற்றும் அவர்களை எனக்கு தெரியாது. நான் அவர்களுடைய மகளிடத்தில் பேசினேன், அங்கு ஒரு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. நான் ஜெபித்து இவ்விதமாக, " கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய தீர்க்கதரிசிகளுடைய ஜெபத்தை கேட்க்கும்படியாக நான் ஜெபிக்கின்றேன், இந்த வயதான ஸ்திரீயின் பாவங்களை மன்னித்து அவளை அற்புதமாக குணப்படுத்தி அதை தெரியப்படுத்தும் ஏனெனில் அது நான் ஜெபம் செய்து அவ்வாறு ஆயிற்று என்பதினால் ஆமென்! ... அவர்கள் என்னை அழைத்தார்கள்; அந்த வயதான பெண்மணி தாமே தொலைபேசியை எடுத்து ஆயிரம் முறை எனக்கு நன்றித் தெரிவித்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அதிசயம் மாத்திரமே இஸ்லாமியர்களை இருதயத்தை தொடக்கூடிய ஒரேக் காரியம் ...
3 நல்லது! இன்று காலை வேளையில், உன்னதப்பாட்டு புத்தகத்தின் மூலமாக "சூலமித்திக்கு எழுதின நிருபம்" என்ற தலைப்பில் நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான புத்தகம். சபைகள் தங்கள் திருமணங்களை சந்தோஷப்படவும் இதைப் பயன்படுத்துகின்றன, ஆனால் நமக்கு, அது எசேக்கியேல் மற்றும் தானியேல் போன்ற ஆவிக்குரிய மற்றும் தீர்க்கதரிசன புத்தகம். நீங்கள் பார்க்கிறீர்களா?
4 [...] சாலொமோன் அரசனுக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தனர், ஆனால் அது எல்லா நாடுகளிலிருந்தும் வரவிருந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்ததில்லை. இந்த சிறிய சூலமத்தி அவர்களில் ஒருவராக இருந்தாள். இது ஒரு சிறிய ஸ்திரீ, நன்கு வளர்க்கப்பட்டு நல்ல பெண்மணிக்கு உள்ள நல்லொழுக்கங்களுடன் பிறந்தாள். பூமியில் உள்ள எல்லா ஸ்திரீகளைவிட அவள் அழகாகவும், சிறந்தவளாகவும் இருந்தாள்.
5 ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை, அத்தகைய அழகைப் பற்றி ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. யூத ஸ்திரியோ, பாபிலோனிய, வெனிசுலா, இந்திய ஸ்திரியும் அவளுக்குக்கு சமம் ஆக முடியாது. சாலொமோன் ராஜா, ராஜாவாக அபிஷேகம் செய்தபோதும் மகிழ்ச்சியடைந்தார். ஓ! சூலமித்தியே!
6 4-ஆம் அதிகாரம் 7-ம் வசனத்தில், சாலொமோன் கூறுகிறார், "என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை." உன்னத பாடல்களின் முழு புத்தகத்திலும், ஒரு முனையிலிருந்து மறு முனை வரைக்கும் இந்த சூலமித்தியை புகழ்கின்றது, ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு வரியும் இந்த கருப்பு இளவரசியின் அழகை வெளிப்படுத்துகிறது. மேலும் மகத்தான ராஜா சாலொமோன் பூமி அனைத்திற்கும் புகழ் வாய்ந்த மனிதன் பேசுகிறான்.
7 ஆயிரம் மனைவிகளை கொண்டிருக்கும் மனிதன் இந்த சிறிய கறுப்புப் பெண்ணின் அழகில் மயங்கி இருக்கிறானா? 6-ம் அதிகாரம் 5-ஆம் வசனத்தில், அவர் கூறுகிறார், "என் பிரியமே! நீ திர்சாவைப் போல் செளந்தரியமும், எருசலேமைப் போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள். உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது;" இந்த சூலமித்தீயின் கருப்பு தோல் நிறத்தை தவிர, சாலொமோன் பூகழாத உடலின் ஒரு பகுதியும் இல்லை. ஓ! இனிய கொஞ்சம் சூலமித்தி! எருசலேமின் பன்னிரண்டு குமாரத்திகள் 6-ம் அதிகாரம் 1-ஆம் வசனத்தில் சாட்சி கூறுகிறாள்: "உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே!..."
8 ஆமாம்! அவள் கருப்பாக இருக்கின்றாள். 1-ஆம் அதிகாரத்தின் 5 மற்றும் 6-ம் வசனங்கள் கூறுகிறதாவது : "எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன். நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; " அவள் ஆப்பிரிக்காரியாக இருந்தாள். அவள் யார்? நம்முடைய பெரிய பாட்டி. நீங்கள் பார்க்கிறீர்களா?
9 இனவெறிக்கு முன்னர், எந்த இனவாதத்திற்கு முன்பு, இனப் பிரிவினைக்கு முன்பு, இனப்படுகொலைக்கு முன்பு, தேசங்களின் ஒரு பெண் அதற்கும் மேலாக ஒரு ஆப்பிரிக்க பெண், யூதனின் கையில், தேசங்கள் சமாரியர்களோடு எந்த ஒரு பங்கும் இல்லாமல் இருந்தார்கள்!... எந்த விதமான இயற்கையான மற்றும் இயற்கைக்கு மேம்பட்ட விதியையும் உடைத்தது. அது என்ன? அது இயேசு கிறிஸ்துவும் நம்மையும்தான். அது வேறு ஏதும் இல்லை அது இயேசு கிறிஸ்துவும் நம்மையும்தான். 7-ஆம் அதிகாரத்தின் 5-ம் வசனம் கூறுகிறதாவது, "ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார்." அவள் எல்லா கன்வென்ஷன்கள், கருத்தரங்குகள் மற்றும் பிற கூட்டங்களுக்கும் செல்லும் ஒரு அக்கறையற்ற ஸ்திரீயாக இல்லை, இந்த பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர்களுக்கு, அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு தன்னுடைய பலிப்பீடத்தை கொடுக்கும் படியான வேசி சபையாக அவள் இல்லை.
10 4-ஆம் அதிகாரம் 12-ம் வசனத்தில் வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: "என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்." இந்த திருச்சபையின் விசுவாசமுள்ளவர்கள் அதாவது இந்த தோட்டத்தின் தாவரங்கள் அவர்கள் ஜீவ தண்ணீர்களின் நீரூற்றுகள் மற்றும் நீர் கிணறுகள் என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
11 5-ஆம் அதிகாரம் அவளுடைய வீழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை, ஆனால் தானியேல் 11: 33 முதல் 35 வரை துன்புறுத்துதலை வெளிப்படுத்துகிறது. 5-ஆம் அதிகாரத்தின் 5-ம் வசனம் என்ன சொல்கிறது: "என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது". வெள்ளைப்போளம் துன்புறுத்துதல் மற்றும் மரணமாகும். ஆண்டவராகிய இயேசு பிறந்தபோது அவருடைய மரணத்தை அறிவிக்கப்படுவதற்கு வெள்ளைப்போளத்தை ஞானிகள் அளித்தார்கள்.
12 மணவாளன் சிலுவையில் இருப்பதைப் போன்று, இந்த மணவாட்டி காயம் அடைந்தாள். "நகரத்தைச் சுற்றியுள்ள காவலாளர்கள் என்னை அடித்துக்கொண்டு என்னை காயப்படுத்தினார்கள்" என்று அவள் கூறுகிறாள். அவள் ஏன் காயமடைந்தாள்? ஏனென்றால் அவள் உயிரோடு இருக்கும் சபை, அவள் மணவாளனின் சத்தத்தை கேட்டு புறப்பட்டு சென்றாள். ஆமென்!
13 6 மற்றும் 7-ஆம் அதிகாரங்களை வாசியுங்கள், இந்த காயங்கள் அதன் கம்பீரமான அழகுகளிலிருந்து ஒன்றையும் எடுக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அவள் ஒரு போதும் பாவம் செய்ததில்லை! அவள் சோம்பேறியாகவோ அல்லது அசதியாக இருந்ததில்லை, ஆனால் அவளது வருங்கால மணவாளனுக்காக நேரத்திற்குள் கதவை திறக்க அவள் எழுந்தாள். அவள் ஒருபோதும் வருத்தப்படவில்லை, அது அவளுக்கு ஒரு போதும் நிந்தையாக இருக்கவில்லை. 1 முதல் 7-ம் அதிகாரம் வரை இந்த சூலமித்தி ஒருபோதும் வீழவில்லை! அவள் நடு ராத்திரியில் உள்ள உயிருள்ள சபை மற்றும் அவள் விழ மாட்டாள்! அவளால் விழ முடியாது மற்றும் அவள் விழமாட்டாள்!
14 அவருடைய பெயர்: "அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறவர்." மற்றும் அவள் தாமே ஒரு அடைக்கப்பட்ட தோட்டம், ஒரு மறைவு கட்டப்பட்ட நீருற்றும் மற்றும் முத்திரையிடப்பட்ட கிணறுமாயிருக்கிறாள்! எப்படி ஒருவனால் அதை அழிக்க முடியும்? அவள் அவனுக்கு செவிக் கொடுக்க விரும்பாதபோது எப்படி ஒரு பிரன்ஹாமிஸ்டு அல்லது பெந்தேகோஸ்தே பாஸ்டர் இந்த திருச்சபையை தீட்டுப்படுத்த முடியும் ?
15 5-ஆம் அதிகாரம் 2-ஆம் வசனத்தில், அவள் : "நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற..." என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? அவளால் தன்னுடைய மணவாளனுக்கு மட்டுமே திறக்க முடியும், அவள் அவருடைய சத்தத்தை தவிற ஒன்றையும் அறியாள். எந்தப் பாஸ்டருக்கும் அவளுடைய பிரசங்க பீடத்தை கொடுக்க மாட்டாள். அவள் ஒரு மூடப்பட்ட தோட்டம், மறைவு கட்டப்பட்ட நீருற்றும் மற்றும் முத்திரையிடப்பட்ட கிணறுமாயிருக்கிறாள் என்று வேதாகமம் கூறுகிறது!
16 "சகோதரர் பிலிப்பு, 2-ஆம் வசனத்தில், அவள் கதவை அவசரமாக திறக்கவில்லை? என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் அவள் செய்தாள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்! 5-ஆம் வசனம் அவள் அதை செய்ததாக கூறுகிறது! அவள் அலட்சியமாகவோ அல்லது சோம்பேரியாகவோ இல்லை மற்றும் அவளுடைய மணவாளன் அந்த விதமாக அவளை ஏதும் நிந்திக்கவில்லை.
17 5-வது அதிகாரத்திற்கு முன்பாக இருந்த இந்த சூலமித்தி 5-வது அதிகாரத்திற்கு பின்னர் சாரளாக புதுப்பிக்கப்பட்டாள் மேலும் இவள் தானே 8-ஆம் அதிகாரத்தில் உள்ள 8-ம் வசனத்திலும் இருக்கிறாள். நீங்கள் பார்க்கிறீர்களா? அதற்கு அவள் : நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு அவள் மதிலுக்கு ஒப்பாக இருக்கின்றாள் பிறகு அவள் : நான் ஒரு மதில் என்கிறாள். பிறகு காவல்காரன் எப்படி தன்னுடைய மதிலை விழச் செய்வான். அவர்களுடைய கதவை அவர்களே எப்படி உடைப்பார்கள்.
18 முன்பு, 3-ஆம் அதிகாரம் 3-ஆம் வசனத்தில், இந்த காவலர்கள் அவளை சந்தித்தார்கள்; பார்வோன் கோட்டிலிருந்து இந்த சிறிய இளவரசி சாலொமோனின் எதிர்கால மனைவியாக இருக்கப் போகிறாள் என்று அவர்கள் உண்மையில் அறிந்தார்கள். அவள் யார்? சாலொமோன் ராஜாவின் அன்பின் ஆரம்பம். அவருடைப பாதுகாப்பிற்காக காவலாளிகள் அங்கு இருந்தார்களா? நீங்கள் பார்க்கிறீர்களா?
19 அவள் தானே உயிர் வாழும் திருச்சபை, இன்னும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லை ! அவள் இந்த கட்டத்திற்குள்ளாக செல்ல வேண்டியதாக இருக்கிறது ஏனெனில் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்பாக திருச்சபை அதினூடாக செல்ல வேண்டும் என்பதால். அவள் சிறிது அசைக்கப்பட வேண்டும். இப்போது மணவாளனை பாருங்கள், 5-ஆம் அதிகாரம் கூறுகிறதாவது : "அவன் தலை மற்றும் பாதசாட்சிகள் பொன்னால் நிறைந்தவை, அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போலிருக்கிறது; மற்றும் பூமியில் உள்ள எந்த மனிதனை காட்டிலும் அதிக ஞானத்தினால் நிறைந்தவன். இது என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய ஏழு திருச்சபைகளும் அவருடைய கரத்தில் படிகப்பச்சை போன்று பதிக்கப்பட்டுள்ளன.
20 அவ்வளவுதான், யாவும் ஆவிக்குரியதாக இருக்கின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இவள் ஒரு அழகான ஆசிய பெண்ணாக இருந்தால் பிறகு ஒரு அழகான ஐரோப்பிய பெண் பிறகு ஒரு அழகான அமெரிக்க பெண் மற்றும் இறுதியாக இந்த சிறிய கருப்பின பெண். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21 உன்னதபாட்டின் முழு புத்தகமும் இராத்திரியில் நடைப்பெறுகிறது... அதை நாம் 2-ஆம் அதிகாரம் 16 மற்றும் 17-ம் வசனத்தில் அதை வாசிக்கலாம்: "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். என் நேசரே! பொழுதுவிடிந்து நிழல் பறந்துபோகும்வரைக்கும்...". அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார் மேலும் நாமே பள்ளத்தாக்கில் உள்ள உண்மையான லீலிகள். சர்ப்பங்கள், வஞ்சனைகள் மத்தியில் சாத்தான் நம்மை நெறிக்க அனுப்புகிற யாவும்... நீங்கள் பார்க்கிறீர்களா?
22 அவளுடன் கூடி வேலை செய்ய டஜன் கணக்கான தேவாலயங்கள் முயல்கின்றன, டஜன் கணக்கான இயக்கங்கள் மற்றும் ஊழிய பணிகள் , டஜன் கணக்கான விழிப்பு ஜெபக்கூடங்கள், டஜன் கணக்கான அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள், துன்புறுத்தல், சிறைவாசம், ஆனால் நாம் ஒளியை தேடி அதை அடைய உழைத்து வருகிறோம். எனவே பள்ளத்தாக்கின் லிலீயை, அதை பூமியில் இருந்து வெளியே வராதபடிக்கு தடுக்கும் பெரிய கற்கள் ஒரு பொருட்டு அல்ல, அது அவைகளை தவிர்த்து விட்டு இறுதியில் வெளியே வந்து விடும்.
23 இதனால் அது உண்மையான சபையினுடையது. நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த சிறிய சூலமித்தி தேசங்களின் குமாரத்திகளுக்கு தூரமாக இருக்கிறாள், எருசலேமின் குமாரத்திகளுக்கு துரமாக இருக்கிறாள் சகல சபைகளுக்கு துரமாக இருக்கிறாள். "நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்."
24 ஆப்பிரிக்காவிலிருந்து அவளோடு கூட கருப்பு செம்மறி ஆட்டுடன் இந்த மணவாட்டி வந்தாள். இந்த கடைசி செம்மறி ஆடு, இவளே பரிபூரண மணவாட்டி, வீழ்ச்சிக்கு முன்பாக இருந்த ஏவாளை காட்டிலும் பரிபூரணமானவள்! சிலுவையில் கிறிஸ்துவின் பக்கத்தில் இருந்து வந்த ஒருவள், கிறிஸ்துவின் மாம்சத்திற்கு மாம்சமும், கிறிஸ்துவின் எலும்பிற்கு எலும்புமானவள் மற்றும் அவளுடைய பெயர் கிறிஸ்துவை போன்று மாதிரியான பெயர். அவளுடைய பெயர் S...L... M... ( SoLoMon, ShuLaMite!) சாலோமோன், சூலமித்தி! அது என்ன? பரிபூரணமான காரியம்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அவர் இறுதியாக அவளைக் கண்டுபிடித்தார் மேலும் இதுவே அவருடன் உள்ள நம்முடைய திருமணப் பாடல், உன்னத திருமணங்களின் உன்னதப்பாடல்!
25 சூலமித்தியின் பாதுகாவலர், பிரதானி எங்கே, யேகாய் எங்கே? அவர் அங்கு இருப்பதால் அவன் ஒரு தூரத்தில் இருந்து விட்டான். யேகாய் எங்கே? அவன் அவளை ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்து அவரிடம் கொண்டு சென்றார். இது மத்தேயு 25: 6 மற்றும் அவனுக்கு யாவும் முடிந்தது, தேவனே உமக்கு நன்றி! எல்லாம் நிறைவேற்றப்பட்டது, தேவனே உமக்கு நன்றி! அது முடிந்தது! சூலமித்தி, இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள்!
26 இந்த சூலமித்தியே நடு ராத்திரியில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை மற்றும் 6-ஆம் அதிகாரம் 13-ஆம் வசனத்தில் உள்ள உள்ள இரண்டு சேனைகள், ஒரு புறம் புத்தியுள்ள கன்னிகைகள், மறுபுறம் பத்தியில்லாத கன்னிகைகள். 2-ஆம் அதிகாரம் 7-ஆம் வசனம், 3-ஆம் அதிகாரம் 5-ஆம் வசனம் மற்றும் 8-ஆம் அதிகாரம் 4-ஆம் வசனத்தில் "விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி" என்று வேதாகமம் கூறுகிறது. ஏனெனில், புத்தியில்லாத ஸ்திரீயின் சேனை நித்திரையடைந்தார்கள் மற்றும் அவர்களை எழுப்ப வேண்டும் ஆனால் அங்கே புத்தியுள்ள ஸ்திரீகள் கலைத்துப் போனார்கள், வெறுமனே அவர்களை எழுப்ப வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா?
27 ஒருவேளை அங்கு பயன்படுத்தப்படும் அதே எபிரெய வார்த்தை இருந்திருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் டார்பி மூலமாக, "விழிக்கப்பண்ண வேண்டாம், எழுப்ப வேண்டாம்" என்று எழுதினார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. லூயிஸ் செகண்ட் மற்றும் மற்றவர்கள், இறையியல் செல்வாக்கின் கீழ் "எழுப்ப வேண்டாம், எழுப்ப வேண்டாம்" என்று எழுதியுள்ளனர். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆவியுள்ளவனையும் ஆவியில்லாதவனையும் அது தான் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கின்றது. பரிசுத்த ஆவி இல்லாமல் ஒருவனும் வேதாகமத்தை மொழிப்பெயர்க்கக் கூடாது. ஆவி இல்லாமல் டார்பியினால் எப்படி எழுத முடியும் ? நீங்கள் பார்க்கிறீர்களா? முழு வேதாகமும் சரியாக பொருந்துகிறது.
28 உன்னதப்பாடல்களின் புத்தகம் இரவிலே நடைப்பெற்று விடியற்காலையில் முடிகிறது. 4-ஆம் அதிகாரத்தின் 6-ஆம் வசனம் அதை நன்றாக கூறுகிறது, "பொழுதுவிடிந்து நிழல் பறந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்." நீங்கள் பார்க்கிறீர்களா?
29 இந்த புத்தகம் எட்டு அதிகாரங்களினால் இருப்பதை நம்முடைய கண்களில் காணலாம், ஆனால் அங்கே ஏழு உள்ளன. எட்டாவது ஒரு சுருக்கம் ஆனால் ஆவிக்குரிய விதத்தில், முதல் ஏழின் மீட்டளிப்பு. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
30 நல்லது! இந்த நேசத்தில், என்ன நடந்தது? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மலைகளில் மற்றும் குன்றுகளில் சவாரி செய்கிறவர், அவளுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார். அதுதான் 2-ஆம் அதிகாரம் 8-ஆம் வசனத்திலுள்ள சத்தம். இங்கே இருக்கும் நட்சத்திர குறியை காண்கிறீர்களா? ஆதியாகமம் 2: 4-ஆம் வசனமே ஆதியாகமம் 2-ஆம் அதிகாரத்தின் துவக்கமாக இருக்கின்றது என்று நீங்கள் அறிகிறீர்களா? 119-ஆம் சங்கீதம் ஒவ்வொரு அதிகாரத்தில் 8 வசனம் கொண்டு 22 அதிகாரங்களின் கூட்டமாக இருக்கின்றது மேலும் ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திர குறியுடன் துவங்குகின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? 2-ஆம் அதிகாரம் 8-ஆம் வசனத்தில் ஒரு சத்தம் உள்ளது. மேலும் அந்த சத்தம் என்ன செய்தது ? அது சுத்த கன்னிகை என்று அழைக்கப்படுகிறது. 3-ஆம் அதிகாரம் 6-ஆம் வசனத்தில், அவர் உரக்க சத்தமாக "தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? நீங்கள் பார்க்கிறீர்களா?
31 மோசேயோடு கூட வனாந்திரம் வரைக்கும் இஸ்ரவேலர்கள் சென்றதை போல, இவ்வாறு இந்த சூலமித்தி வெளிப்படுத்துதல் 12.14-ல் உள்ள வனாந்திரம் வரைக்கும் செல்வாள். மேலும் சுருக்கத்தில், 8-ஆம் அதிகாரம் 5-ஆம் வசனத்தில், 8-ஆம் அதிகாரம் துவங்குகிறது, அதே சத்தம் கூறுகிறதாவது : "தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்?". உங்களால் காண முடிகிறதா? இறுதியில், 8-ஆம் அதிகாரம் 13-ஆம் வசனத்தில், சூலமித்தியிடம் ஒரு சத்தமானது : "தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்."
32 ஓ! நடு ராத்திரியிலே வெள்ளைக் கல்லின் வியாக்கினத்தின் கிருபை கொடுக்கப்பட்டவர்களே சந்தோஷமானவர்கள். சுற்றியுள்ள நாடுகளில் இருக்கும் உங்களுடைய தோழர்கள், உங்களுடைய சத்தத்திற்காக காத்திருக்கின்றோம். மத்தேயு 25: 6-ன் சத்தத்திற்குக் காத்திருக்கிறோம். இந்த ஆவிக்குரிய இரவின் நடுவிலே, தங்களை வேசித்தனத்தில் ஈடுப்படுத்திக் கொள்ளாத உங்களுடைய தோழர்கள் இந்த மத்தேயு 25 : 6-ன் சத்தத்தை உன்னிடமிருந்து கேட்க்க காத்திருக்கின்றனர். அது என்ன?
33 மிக அழகான ஸ்திரீக்கு, மிக பிரியமானவளுக்கு மிக விலையேறப்பெற்ற காரியமான அறியாத மொழியின் வியாக்கியானம் கொடுக்கப்பட்டது மேலும் அதினுடைய சந்தோஷமே 4-ஆம் அதிகாரத்தின் 16-ஆம் வசனத்தில் உள்ளது. அவள் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்க்கில் உள்ள அனைத்து கன்னிகைகளை அவளோடு களிக்கூறும்படியாக அவள் அழைத்தாள். இதே காரியம் 4-ஆம் அதிகாரத்தில் எல்லா இடத்திலிருந்து மணவாட்டியை மணவாளன் அழைக்கிறார். "லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்." நீங்கள் பார்க்கிறீர்களா?
34 அனைத்து தேசங்களிலிருந்தும் வாருங்கள், அனைத்து சபைகளிலிருந்தும் வாருங்கள், பூமியின் எல்லா ஜாதிகளிலிருந்தும் வாருங்கள். தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும். நாடுராத்திரியில் மணவாளனின் சத்தத்தைக் பெற்றுக்கொண்ட நீங்கள், சகோதர சகோதரிகளே, நானும் அதைக் கேட்கட்டும்.
35 நீ, இனிய சிறிய சூலமித்தியே, ஐரோப்பா கேட்கட்டும், ஆசியா கேட்கட்டும், வெளிப்படுத்துதல் 5-ன் ஆட்டுக்குட்டி இங்கே ஆப்பிரிக்காவில் அறியாத மொழியை வியாக்கியானம் செய்வதற்காக வந்திருக்கின்றது என்று அமெரிக்காவிற்க்கு கூறுங்கள். எத்தியோப்பிய மந்திரியின் கொள்ளுப் பேரன்களை இயேசு கிறிஸ்து சந்திக்கின்றார் என்று ஆப்பிரிக்காவிற்கு கூறுங்கள்! அவர்களுடைய இதய அன்பு கதவை தட்டுகிறது என்று சூலமித்தியின் கொள்ளுப் பேரன்களிடம் கூறுங்கள்.
36 முழு உலகிற்கும் நடுராத்திரி சத்தம் தொனித்து விட்டது என்று கூறுங்கள்! அன்னாள் அல்லது சமாரிய ஸ்திரீயை போன்று தேவன் என்ன செய்தார் என்பதை சாட்சி கொடுங்கள். உங்களை சுற்றியுள்ள அனைவரும் அறிந்துக் கொள்ளட்டும்.