



Kacou 5 (Kc.5) : மத்தேயு 25: 6ன்தீர்க்கதரிசனநிறைவேறுதல்
(2002 டிசம்பர் 15 ஞாயிறு காலை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 யூதர்கள் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிராகவும் செய்த அதே தவறுகளை நாமும் செய்யக் கூடாது. இன்று, உலகம் ஜான் வெஸ்லிக்கு நினைவுச்சின்னத்தை கட்டியிருக்கிறது அச்செயல் மிகவும் துன்புறுத்துவதாகவும், அவமானகரமானதாமாகவும் இருக்கிறது.
2 ஜான் வெஸ்லி, இந்த மனிதன், உண்மையானவர். அவர் 1725 இல் ஒரு டீக்கனாக இருந்தார் ஆனால் அவர் மனமாற்றமடைந்திருக்கவில்லை. 1737ல், அமெரிக்காவிற்கான ஒரு மறைபரப்பு பணிக்குப் பிறகு இங்கிலாந்துக்கு திரும்பிய அவர்: "தேவனே! நான் இந்தியர்களை மாற்றுவதற்காக அமெரிக்கா சென்றேன். ஆனால் என்னை யார் மாற்றுவார்?” என்றார். [ஆசிரியர் குறிப்பு: அமெரிக்க செவ்விந்தியர்களை தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்]. அந்த நேரத்தில், அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டும் அங்கீகரிக்கபட்டும் இருந்தார். ஆனால், மே 24, 1738-ல், என்னை போல முழு பூமியையும் அழைப்பதற்கான உண்மையான மாற்றத்தை அவர் பெற்றுக்கொண்டார், அதன்பிறகு அவர் கடவுளின் பூமியில் வரவேற்கப்படவில்லை. திடீரென்று, ஆங்கிலிகன் சபையின் நேசகுமாரன் ஏமாற்றத்துக்கு ஆளானார்.
3 ஜான் வெஸ்லி, மூர்க்க வெறி கொண்ட ஜனங்களிடமிருந்து தப்பித்த ஒரு சந்தர்ப்பத்தை குறித்து பேசுகையில், அவர்: "நகரத்தின் திசையில் ஒரு வழுக்கலான பாதையில் நாங்கள் ஒரு மலையிலிருந்து கீழே இறங்கும்போது பலர் என்னை கீழே தூக்கி எறிய முயன்றனர், நான் இனி எழுந்திருக்க முடியாது என்று நினைத்து கொண்டு ஒரு விசை நான் விழப்போனேன். ஆனால் நான் நடுக்கமடையவில்லை, நழுவி விழவுமில்லை. பலர் என்னை தூக்கி எறியும் படி என்னை காலரை அல்லது ஆடைகளை பிடித்து இழுத்தாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கே ஒருவனால் மட்டும் எனது இடுப்பளவு மேலங்கியை பற்றிப் பிடிக்க முடிந்தது, அது விரைவில் அவனுடைய கைகளில் இருந்தது, அங்கே மற்ற பையில் இருந்த ஒரு பணத்தாள் பாதிமட்டும் கிழிந்து போயிருந்தது. என்னை நெருக்கமாக பின்தொடர்ந்து வந்த முரட்டு மனிதன் ஒருவன் ஒரு பெரிய ஓக் குச்சியால் பின்னால் இருந்து பலமுறை என்னைத் தாக்கினான். ... கூட்டத்தினூடாக வந்த மற்றொருவன், என்னை அடிக்க அவனது கையை உயர்த்தி, சட்டென்று கீழே இழுக்கப்பட்ட, எனது தலையை மட்டும் தொட்டு: ‘என்ன மென்மையான தலைமுடி இவனுக்கு!’ என்றான். அவர்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதவர்களும் இருந்தனர். கடந்த மாதத்தில், ஒரு கல்லையும் இன்றிரவு இரண்டு கற்களையும் பெற்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செங்கல் துண்டு என் தோள்பட்டையை உரசிக்கொண்டு சென்றது. அதற்கு முன்னர், இரண்டு கண்களுக்கு இடையே கல் ஒன்றும் வந்து பட்டது" இவ்வாறாக சொல்கிறார். நீங்கள் காண்கிறீர்களா? வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளைப் போலவே ஜான் வெஸ்லியும் அவரது காலத்தில் துன்பப்பட்டார். கடவுள் பூமியில் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகின்ற வரை, அது அப்படியே இருக்கும்.
4 ஆனால் பிரன்ஹாமிஸ்டுகளைப் போலவே, ஜான் வெஸ்லி பற்றி மெத்தடிஸ்டுகளுக்கு எதுவும் தெரியாது. பிரன்ஹாமிஸ்டுகளின் வரிசையிலுள்ள, பாஸ்டர் கோனான் டேவிட் (Pastor Konan David), காக்கோ சீவரின் (Kacou Severin) இறந்தபோது: "ஒரு பெரிய மனிதன் போய்விட்டான்" என்றான். ஒருவராலும் அவன் இழந்து போகாமலிருந்தாலும், இவனுடைய ஆத்துமா நரகத்தில் கிடப்பதால் இந்த பெரும் வழி வஞ்சகனான காகோ செவெரின்-ஐ கடவுளின் மனிதன் என்று சொல்ல முடியாது. ஒரு வஞ்சகன் இன்னொரு வஞ்சகனுக்கு இறுதி மரியாதை செலுத்தினான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. மேலும் மேய்ப்பர் இனமான இந்த குருக்கள் நரகத்திற்கு அனுப்புகிற நூற்றுக்கணக்கான ஆத்துமாக்களான தங்கள் ஆடுகளின் தோல், மாமிசம் மற்றும் எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்புகிறவர்களாக இருக்கிறார்கள்.
5 வில்லியம் பிரன்ஹாம் சபைகளுக்கு சென்று பொதுவான காரியங்களின் பேரில் பிரசங்கிக்கவும், அவர்களுடன் தோழமை கொள்ளவும் செய்வார், மேலும் அவருடைய கூட்டத்தில், பாப்டிஸ்ட் போதகர் ஒருவர், உபதேசங்களாலும், ஜெபங்களாலும் பார்வையாளர்களை வெளியேற்ற செய்யவும் முடியும். சாயங்கால வேளையில் அது மோசமானதல்ல, ஆனால் இன்று நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக சபையின் அல்லது பிரன்ஹாமிஸ்டின் வழிபாட்டிற்கு அல்லது அவர்களுடைய தீர்க்கதரிசிகளின் விழிப்பு ஜெபங்களுக்கு செல்லவும் மற்றும் உட்காரவும் உங்களுக்கு உரிமை இல்லை என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
6 அவைகளெல்லாம் சகலவித அருவருப்புகளின் பலிபீடங்களாக இருக்கின்றன அதை தேவன் தண்டியாமல் விடமாட்டார். நீங்கள் பயணத்திலிருந்தாலும் கூட, ஒருபோதும் அங்கே போக வேண்டாம்! அவர்களிடத்தில் நீ தேடிக்கொண்டிருப்பது என்ன? நீ ஒரு தேவகுமாரனாக இருக்கும்போது, நீங்கள் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக சபையில் அல்லது பிரன்ஹாமிஸ்ட் சபையில் தேடுவதுதான் என்ன? உங்கள் இடம் அதுவல்ல! உங்களால் காணமுடிகிறதா?
7 உங்களைத்தான், பிரன்ஹாமிஸ்டுகளே, தவளைகளின் இனமே! சிங்கம் மான் இனத்திற்கு இருப்பதை போன்று, உயிரோடிருக்கையில், நான் உங்களுக்கு இருக்கிறேன் என்பதை, நான் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை, மேலும் நான் இறந்தபிறகும் அதற்கு சற்றும் குறைந்தவனாக இருக்க முடியாது. உங்களை அழிக்கப்போகிற புற்றுநோயாக நான் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேவனின் நியாயத்தீர்ப்பு மணி வேளை வந்திருக்கிறது மேலும் உங்களால் தப்பமுடியாது. வார்த்தையானது எல்லாவற்றையும் சோதித்து விட்டது மேலும் வெளிச்சமானது உங்கள் கிரியைகளை அறியப்பண்ணிற்று...
8 தேவன் காட்சியிலிருக்கிறார் ஏனென்றால் பயங்கரமான வஞ்சிப்பின் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; உலகிலுள்ள அனைவரும் குடியரசு (Republic) தலைவராக விரும்புகிறது போல, சபைகளிலும்கூட, ஒவ்வொருவரும் ஊழியத்தை உடையவர்களாக இருக்கின்றனர். தீர்க்கதரிசனங்கள், கனவுகள், மற்றும் தரிசனங்கள் எல்லா இடங்களிலும் இருந்து வந்து சில ஊழியங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டுவருகிறது. அவர்கள் ஸ்திரீகளின் செயல்பாடுகளுக்கான நோக்கங்களை பிரசங்கபீடத்திற்கு நீட்டிக்கின்றனர்.
9 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் ஒரு வியாபார சொத்தாகி போனது; ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் விழிப்பு கூட்டங்கள் அமைக்கப்படுகின்றன. கிருபையிலிருந்து விமுந்து, நரகத்திற்கு காத்திருக்கின்ற ஜனங்கள், தேவ ஊழியக்காரர்களாக இருக்கின்றனர். பிசாசுகளின் பிள்ளைகளே! அங்கே செய்வதற்கு இரண்டு காரியங்கள் உண்டு: ஒன்று நான் தவறானவன் என்பதை நிரூபியுங்கள், அப்பொழுது நான் உங்களைச் சார்ந்து கொள்கிறேன் அல்லது நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள், உங்கள் ஜெப ஆலயங்களை நான் கலைத்து விடுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. இவ்வண்ணமாகவே நான் எப்போதும் காரியங்களை காண்கிறேன்.
10 என்னுடைய மனமாற்றத்திற்கு மூன்று மாதங்களுக்கு பிறகு, நான் வேதாகமத்தை முழுவதுமாக வாசித்தேன் மேலும் சபையில் சில பொறுப்புக்களை அவர்கள் எனக்கு கொடுத்தார்கள், இது ஜனங்களை கட்டிவைப்பதற்கான சாத்தானின் மற்றொரு தந்திரமாகும். நான் ஜெபங்களை நடத்தினேன். நான் ஒரு திரித்துவ ஞானஸ்நானத்தை அதாவது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில, அதை நிர்வகிக்க பாஸ்டர் விரும்பினார் என்பதை நான் உணர்ந்துகொண்ட நாளன்று, நான் மறுத்துவிட்டேன் மேலும் நான் அவர்களது அனைத்து ஆவணங்களையும் திருப்பி ஒப்படைத்துவிட்டு இரண்டு வாரங்களுக்கு வீட்டில் தங்கியிருந்தேன் ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒரு சபை இருந்தது எனக்கு தெரியாது.
11 [...] நாம் சபைகளில் அமர்ந்து கொண்டு கண்டனம் செய்யும் காலம் கடந்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்! சாயங்கால நேரம் கடந்துவிட்டது! பொய்யான வெளிப்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்ட சில தந்திரமான மோசடியாளர்கள், தேவன் இங்கே என்ன செய்கிறாரோ அதை கெடுத்துவிட நான் விரும்பவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. அது சாத்தானின் மற்றொரு சூழ்ச்சியாகும்...
12 கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத்திற்கு எதிராக பிரசங்கிக்கையில், பிரான்சிஸ் சேவியர் (Francis Xavier), ஓச்சினோ பெர்னார்டினோ (Ochino Bernardino), ஜீன் பியரே கபேரா (Jean Pierre Cafara), ... போன்ற சில கத்தோலிக்கர்கள் வந்து, அவர்கள், கத்தோலிக்கர்களாகவே இருந்துகொண்டு, ஊருக்கு ஊர் கத்தோலிக்க நடைமுறைகளுக்கு எதிராக பிரசங்கித்தார்கள். அவர்கள் கத்தோலிக்க சபையை சீர்திருத்த விரும்பினார்கள், ஆயினும், ஒரு சபையானது விழுந்து விட்டால், தேவன் இனிமேலும் அதை உயர்த்த மாட்டார், இல்லையெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை பரிசேயர் மற்றும் சதுசேயரோடு செய்திருப்பார்.
13 இது ஒரு சாத்தானின் கண்ணியாகும் (trap) மற்றும் 1545-ல், புராட்டஸ்டன்டுகளுடனான உடன்படிக்கையில், ஒரு கூட்டம் நடைபெற்றது, ஆனால் நியமிக்கப்பட்ட நாளான டிசம்பர் 13, 1545-ல் புரோட்டஸ்டன்டுகள் யாரும் வரவில்லை. மேலும் அந்த அதே பழைய பிசாசுகள் இன்றும் உள்ளன, வேறொருசாராரோ போதக பள்ளியையும் (pastoral school) தங்களுடைய சபைகளானது சபை சங்கங்களுக்குள்ளும் சம்மேளனங்களுக்குள்ளாக பிரவேசிப்பதையும் நிராகரிக்கிறார்கள்... அவர்கள் தங்கள் காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை நிராகரிக்கும் அதே வேளையில் அதுபோன்ற அனைத்து காரியங்களையும் செய்கின்றனர்.
14 ஆனால் நாங்கள் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம்! கிறிஸ்துவின் சரீரம் ஒட்டுப்போடப்படாததும் அவரது அங்கி தையலில்லாமலும் இருக்கிறது. அது சாத்தானுடைய ஒரு கண்ணியாக உள்ளது, மேலும் அந்த சபைகளை ஆதரிக்கும் எவரும் தங்களை குற்றவாளியாக்கி, தங்களை தேவனுக்கு சத்துருவாக்கிக் கொள்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
15 முன்னர் கத்தோலிக்க சபைக்கு பின்னால் இருந்த அதே பிசாசுகள் தான் இன்று நீங்கள் பார்க்கிற இந்த புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளுக்குப் பின்னால் இருகின்றன. ஒரு கத்தோலிக்க புத்தக நிலையத்தில், ஜெபமாலைகள், மெழுகுவர்த்திகள், தூபவர்க்கம், சிலுவைகள் ஆகியவற்றைக் நீங்கள் காணலாம் ... அந்த காரியங்களுக்கு பின்னால் நிற்கும் அந்த அதே பிசாசுகள் தான், சரியாக கிறிஸ்தவ சுவிசேஷக புத்தக நிலையங்களுக்கு பின்னால் நிற்பதும் அந்த அதே பிசாசுகள் தான். ஒன்று மற்றொன்றின் சொரூபமாக இருக்கின்றது, ஆனால் சத்தியத்தின் சமநிலையை பொறுத்தவரை, அந்த புத்தகக்கடைகளில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களைக் காட்டிலும் வேதாகமம் அதிக கனமுள்ளதாக இருக்கிறது.
16 ஒரு கத்தோலிக்க வானொலி நிலையத்திற்கு பின்னால் இருக்கும் அதே பிசாசுகள் தான் அந்த சுவிசேஷக சபைகளின் வானொலி நிலையங்களுக்கு பின்னால் இருக்கின்றன. சுவிசேஷக சபைகளின் வேதாகம பதிப்புகள் கத்தோலிக்க வேதாகம பதிப்புகளின் சொரூபமாக இருக்கிறது. மனிதயினம் இரையை பார்க்கிறது ஆனால் தேவனின் தீர்க்கதரிசி தூண்டிலை காண்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
17 பார்ப்பதற்கு எல்லாம் சரியாக தென்பட்டாலும் ஆனால் இந்த சபைகள் மற்றும் சுவிசேஷக சபைகளின் புத்தகங்கள் எல்லாமே சகலவித அசுத்தங்களின் சாக்கடையே தவிர வேறு எதுவும் இல்லை. உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு புறம்பாக இருக்கிற கத்தோலிக்க சபை மற்றும் அனைத்து சபைகளும், அவை மிருகமும் அதன் சொரூபமுமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும், முதலாவதின் அந்த கொம்பு பிடுங்கப்பட்டு, அதன் சொரூபத்திற்கு கொடுக்கப்படுகிறது, ஆனால் அதற்கோவெனில் ஜீவன் நீடிக்கும்படி அளிக்கப்படுகிறது ...
18 இப்போது, நான் இந்த பிரசங்கத்தை தொடங்குவதற்கு முன்பு, மாலை நேரம் ஒன்று இருந்தது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஓர் நாளில், வில்லியம் பிரான்ஹாமின் ஒலிநாடாவை நீங்கள் எடுக்கும்போது: "சாயங்கால நேர வெளிச்சத்தின் பதிப்புகளை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி: வில்லியம் மரியன் பிரன்ஹாம் ..." அல்லது "சகரியா 14:7 கூறுகிறது சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகுமென்று ..." என நீங்கள் கேட்கலாம் ஆனால் மாற்கு 13:35 நான்கு தீர்க்கதரிசன வேளைகள் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது: மாலை நேரம், நள்ளிரவு நேரம், சேவல் கூவும் நேரம் மற்றும் ஆசியா மற்றும் அரபு தேசங்களுடன் காலை நேரம். அதைத்தான் வேதாகமம் கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
19 இப்போது, மத்தேயு 25:5 முதல் 6ன் வசனத்தை எடுத்துக்கொள்ளலாம். நாம் அதை வாசிக்கலாம்: "மணவாளன் வர தாமதித்தபோது, அவர்கள் அனைவரும் நித்திரைமயக்கம் அடைந்து மேலும் தூங்கிவிட்டார்கள். ஆனால் இரவின் நடுவில்: இதோ, மணவாளன்; அவரை சந்திக்க புறப்பட்டு போங்கள்.” அது “நாங்கள் சத்தமிட்டோம்” என்றல்ல ஆனால் “அங்கே ஒரு சத்தம்” அல்லது, ஒரு சத்தம் தொனித்தது. யோசுவா 6ல் உள்ளதை போன்று “ஆர்ப்பரிப்பு” என்ற வார்த்தையை நான் விரும்புகிறேன், ஆனால் “ஒரு சத்தம் அங்கிருந்தது" என்பதே முற்றிலும் சரியானது.
20 சபைகள் மற்றும் பூமியின் அதிகார வரம்புகளும் பரிசுத்தவான்களுக்கு எதிராக தங்கள் முயற்சிகளை இணைத்து கொள்கின்ற அந்த மணிவேளை வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன், வெளிப்படுத்துதல் 12:14ன் படி, கழுகு குஞ்சுகளான நமக்கு தேவன் இரண்டு செட்டைகளை கொடுப்பார்.
21 ஆனால், அது அனைத்தும் மத்தேயு 25: 6-ல் ஆரம்பமானது. ஒரு பலத்த சத்தம் உண்டாகி கேட்கப்பட்டது மேலும் அந்த சத்தத்தின் தொனி மிகுந்த வல்லமை வாய்ந்ததாக இருந்தது, 1 தெசலோனிக்கேயர் 4:16-ல், அப்போஸ்தலன் பவுல் அதை ஒரு பிரதான தூதனின் சத்தத்திற்கு ஒப்பிட்டான். உங்களால் காணமுடிகிறதா? இந்த சத்தம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, அது பூமியை அதிரப்பண்ணிற்று, நித்திரையாயிருந்த கன்னிகைகளும் விழித்தெழுந்தனர். உங்களால் காணமுடிகிறதா? அது எந்த இடி முழக்கத்தை விடவும் வல்லமை வாய்ந்ததாக இருந்தது.
22 இந்த சத்தம் மிகவும் வலுவாக இருந்ததால் அதை அவர்கள் தொலைதூரத்திலும், பாப்டிஸ்டுகளின் மத்தியிலும் கேட்டனர். அதை அவர்கள் பிரன்ஹாமிஸ்டுகளின் நடுவிலும் கேட்டனர். அதை அவர்கள் பெந்தெகொஸ்தேயினரிடையேயும் கேட்டனர். அதை அவர்கள் சுவிசேஷக சபைகள், மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்களில் கேட்டனர். அவர்கள் அதை அமெரிக்காவில் கேட்டனர். அதை அவர்கள் கனடாவில் கேட்டனர். அதை அவர்கள் பெருவில் கேட்டனர். அதை அவர்கள் அயர்லாந்தில் கேட்டனர். காங்கோ-கின்சாசாவில் அவர்கள் அதை கேள்விப்பட்டனர். அதை அவர்கள் ஆசியாவில் கேள்விப்பட்டனர். அந்த குரலானது சத்தமிட்டு: “இதோ, மணவாளன்; அவரை சந்திக்கப் புறப்பட்டுப் போங்கள்" என்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. இது எலியாவின் ஆவி.
23 தொடக்கத்தில், யோவான்ஸ் ஸ்நானகன்: “இதோ தேவனுடைய செம்மறியாட்டு குட்டி...” என்றான். ஏனென்றால் மீட்பதற்கான, பலியாக அவர் வந்திருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு யோவான் ஸ்நானகன் பிரதான ஆசாரியனாக இருந்தான், தேவன் பலிக்குரிய ஆட்டுக்குட்டியாகவும் இருந்தார்.
24 பிரதான ஆசாரியன் தன் அரையிலே பொற்கச்சையை கட்டியிருப்பான் என்றும் அந்த பொன் தெய்வீகத்தன்மைக்கு அடையாளமாக இருக்கிறது என்றும் உங்களுக்குத் தெரியுமா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்! என்கின்றனர்"]. மேலும் யோவானுக்கு இருந்த இந்த ஸ்தானத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார், இந்த செயலினிமித்தமே, ஸ்திரீகளினிடத்தில் பிறந்தவர்களில், யோவான் பெரியவன் என்று சொன்னார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
25 மற்றும் இறுதியில், அதே மனிதனும், அதே ஊழியமும் அதே எலியாவின் ஆவியானது நடுராத்திரியில்: "இதோ, மணவாளன்..." கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவருடைய மணவாட்டிக்காக வருகிறார்” என்கிறது. இப்போது, அங்கே இரண்டு ஊழியங்கள் இருக்கிறதை கவனிக்கவும்; "இதோ, மணவாளன்” என்பது சாயங்காலத்திற்கும் நடுராத்திரிக்கும் பொருந்தும். நாம் நடுராத்திரியில் இருக்கும் வேளையில் பிரன்ஹாமிஸ்டுகள் சாயங்காலத்தில் இருந்துகொண்டு மணவாளனை முன்வைக்கின்றனர் ஆனால் சத்தமோ வேறொரு நோக்கத்தை கொண்டுள்ளது. அவர்களுடைய பிரசங்கம் எண்ணாகமம் 13:32 முதல் 33 இருக்கிறவைகளில் ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் இன்றைக்கு, மார்ட்டின் லூதரின், ஜான் வெஸ்லியின் அல்லது வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை அதன் அனைத்து தூய்மையிலும் பிரசங்கிப்பது முட்டாள்தனமானதாக இருக்கிறது. அது தவளையின் ஆவி...
26 சரி! மல்கியா 4ல், பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கு திருப்புகிறவன், பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களிடத்திற்குக்குத் திருப்புகிறவனிலிருந்து வேறுபட்டவனாக இருக்கிறான். ஆனால் அது ஒரே ஆவி, அதே ஊழியம். மோசே நேபோ மலையின் மீது ஏறி பார்த்துவிட்டு: "இதோ கானான் ..." என்றான், ஆனால், புறப்பட்டுச் செல்வதற்கான உத்தரவை கொடுத்தது தீர்க்கதரிசியாகிய யோசுவா தான். எரிகோவின் மதில் எவ்விதம் விழும் என்பதை யோசுவாவிடம் கூறினது மோசேயல்ல. எந்தவிதமாக யோர்தானைக் கடக்கவேண்டும் என்று அவனிடம் கூறினது மோசேயல்ல. சூரியனை எவ்விதமாக நிறுத்த வேண்டும் என அவனுக்கு கூறினது மோசேயல்ல.
27 யோசுவா தாமே தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தான், அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் முத்திரையை உடைய தீர்க்கதரிசியாக இருந்தான். எனினும், அது மோசேயின் காலம் மற்றும் ஆவியாக அப்போதும் இருந்தது. அந்தபக்கத்தில் அது கானானை சுதந்தரித்துக் கொள்வதற்கான யுத்தமாக இருந்தது,, மேலும் இந்த பக்கத்தில், இதுவும்கூட அவ்விதமாகவே இருக்கும். அதனால்தான் ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில், அது தண்ணீர்களின் ஆழத்திலிருந்து ஒரு இராணுவ டிரக் வெளியே வந்தது! மோசேயும் யோசுவாவும்! எலியாவும் எலிசாவும்! வில்லியம் பிரன்ஹாமும் காக்குவ் பிலிப்புவும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்! " என்கின்றனர்].
28 இப்போது, இதை நன்றாக பின்தொடருங்கள் ... 1 இராஜாக்கள் 19ல், எலிசா, ஆசகேல், யெகூவை அபிஷேகம் செய்யும்படி தேவன் எலியாவுக்குக் கட்டளையிட்டார். ஆனாலும் ஆசகேல் ராஜாவானபோது எலியா அங்கே இல்லை மேலும் இஸ்ரவேலின்மேல் யெகூவை ராஜாவாக அபிஷேகம் செய்தது ஒரு அறியப்படாத சிறிய தீர்க்கதரிசியாக இருந்தது. ஆனாலும் அது அப்போதும் அதே எலியாவின் ஆவியாக இருந்தது. உங்களால் காணமுடிகிறதா? தேவன் எலியாவிடமும், எலியாவின் அரையிலே அந்நேரத்தில் இருந்த அந்த இளம் தீர்க்கதரிசியிடமும் பேசினார். எனது தன்னடக்க ஜீவியத்தை கருத்தில் கொண்டு, "குடிக்காதே, புகைபிடிக்காதே, ஸ்திரீகளினால் உன் சரீரத்தை தீட்டுப்படுத்தாதே” என தேவன் வில்லியம் பிரன்ஹாமிடம் கூறினபோது நான் அவரது அரையில் இருந்தேன் என்பதை என்னால் விசுவாசிக்க முடியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்! " என்கின்றனர்].
29 லேவி மெல்கிசேதேக்கிற்கு (ஆதியாகமம் 14) தசமபாகம் கொடுத்தான் என்று வேதாகமம் கூறுகிறது. இருப்பினும், அந்நாட்களிலே, அவன் தகப்பனாகிய யாக்கோபும் அவன் தாத்தா ஈசாக்கும் கூட பிறந்ததில்லை. ஆனால் அவனுடைய கொள்ளு-பாட்டன் (great-grandfather) ஆபிரகாம் அதைச் செய்தான் மேலும் அது அவனிடத்தில் கணக்கிடப்பட்டது. உங்களால் காணமுடிகிறதா? “உனது செய்தி எனது இரண்டாவது வருகைக்கு முன்னோடி” என தேவன் வில்லியம் பிரன்ஹாமிடம் சொன்ன போது, வில்லியம் பிரன்ஹாமின் அரையில் இருந்த என்னிடமும், தேவன் பேசிக்கொண்டிருந்தார், மேலும் எனது அந்த செய்தியைத்தான் இன்றைக்கு நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தேவன் ஆவியாக இருக்கிறார், அவர் பேசும் போது, அது அந்த ஆவியுடன் தான் அவர் பேசுகிறார். “எலிசா, ஆசகேல், யெகூவை அபிஷேகம் செய்” என்று எலியாவுக்கு அவர் சொன்னார், மேலும் எலியா எலிசாவை மட்டும் அபிஷேகம் செய்தான். நீங்கள் பார்க்கிறீர்களா? லேவி மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தான் என்று தேவன் கூறுகிறவேளையில், லேவியின் கொள்ளு-பாட்டனான ஆபிரகாம் தான், அதைசெய்தான்.
30 இப்போது மத்தேயு 25: 6ல், "மணவாளன் இதோ," என்று சொல்லுகின்ற சத்தமானது, "அவரைச் சந்திக்கப் புறப்பட்டுப் போங்கள்" என்று கூறுகிற ஒன்றிலிருந்து வேறுபட்டது. ஆனால் அது இந்தப்பிரகாரமான ஒரு குறிப்பிட்ட வழியில் உள்ளது. இவ்விதமான அழைப்பு மற்றும் பணிநியமனம் எளிமையானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். பெருமைகளை ஜெயங்கொண்டு, அருகில் வந்து உண்மையில் இது என்னவாக இருக்கிறது என்று ஏன் பார்க்ககூடாது? யூதர்கள் தீர்க்கதரிசிகளைக் துன்புறுத்தினர், கல்லெறிந்தனர், கொலை செய்தனர், பின்னர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் கொன்றுபோட்டனர். அவர்கள் தாழ்மை உடையவர்களாயிருந்தால் எப்படியாக இருந்திருக்கும்? ரோமர்களும் கத்தோலிக்கர்களும் கட்டுப்பாட்டையும், பணிவையும் காட்டியிருந்தால், அது எவ்வாறு இருந்திருக்கும்? தேவன் எப்போதும் பூமிக்கு அனுப்பின ஏதாவதொன்று ஜனங்கள் செய்கிறவைகளோடு பொருந்திப் போயிருக்கிறதா?
31 எல்லா தீர்க்கதரிசிகளின் பொதுவான குற்றமென்பது, தேவன் தங்களிடம் கொடுத்ததை முழு உலகிற்கும் சொல்வதுதான். உங்களால் காண முடிகிறதா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. சத்தியத்தை சொல்லும்படிக்கு தேவன் நம்மை அனுப்பினார், நாம் அதை செய்வோம், நாம் முடிவு பரியந்தம் செல்வோம். ஏனென்றால், அவர்களுடைய பிதாக்களால் கொலைசெய்யப்பட்ட தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் பரிசுத்தவான்களாகிய நம்முடைய பிதாக்களுடையதை காட்டிலும் நமது இரத்தம் அதிக விலைமதிப்புடையதல்ல. அது ஒரு குறுகிய வாசலும் ஒரு கடினமான வழியுமாக இருக்கிறது, அநேக ஜனங்கள் அதனூடாக கடந்தனர் நாமும் அதனூடாக கடந்துசெல்வோம்.
32 எதற்கும் பயப்பட வேண்டாம்! தூதர்கள் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இங்கே இருக்கின்றனர். அவர்களைவிட நாம் அதிக எண்ணிக்கையுள்ளவர்கள், நம்முடைய ஆத்துமாக்களைப் ஏற்றுக்கொள்வதற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே பட்டயத்திற்குப் பின்னால் நிற்பார். விசுவாச நாயகர்களாக, ஜான் வெஸ்லியைப் போன்று, நாம் ஜெயங்கொள்வோம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
33 ஏப்ரல் 24, 1993ன் தரிசனத்தின்படி இது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு என்பதை எப்போதும் அறிந்து கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் பேசிக் கொண்டிருப்பதால் ஒரு கற்பனையை நான் உங்களுக்கு பிரசங்கித்தால் என் ஆத்துமா என்னை கைவிடட்டும். பூமியின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருகிறவரான தீர்க்கதரிசி-செய்தியாளனுக்கே தேவனுடைய வார்த்தையானது வருகிறது. அவன் மட்டுமே அவனது தலைமுறையில் வழியும், சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
34 ரெபேக்காவைப்போல, நாம் புறப்பட்டுச் செல்வோம், அவர் நம்மை சந்திக்க வருவார், நாம் அவரை அடையாளம் கண்டுகொள்வோம் ஆனால் முன்னமே, தீர்க்கதரிசி எலியேசரின் செய்தியான, ஒட்டகத்தை விட்டு விலகியிருப்போம். ஆமென்! ரெபேக்காவின் சகோதரர்கள், அதே பிரன்ஹாமிஸ்டுகள், அவளை தடுக்க முயற்சிப்பார்கள். உங்களால் காணமுடிகிறதா? நாம் கிறிஸ்தவத்தின் மற்றொரு சகாப்தத்தில் இருக்கிறோம், இந்த எழுப்புதலின் மத்தியில்தான் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் (rapture) நிகழும். மேலும் இந்த சத்தம் தான்: "இதோ, மணவாளன்; அவரை சந்திக்க புறப்பட்டுப் போங்கள்!” என்கிறது. பரிசுத்தவான்கள் இப்போது வெளியே புறப்பட்டு வரட்டும்! எஸ்தரும் கன்னிகைகளும் இப்போது வெளியே புறப்பட்டு வரட்டும்!
35 கத்தோலிக்க ரோமாபுரியின் கீழாக ஒரு நீண்ட உபத்திரவத்தை பின்தொடர்ந்து அங்கே ஒரு மகத்தான எழுப்புதல் உண்டானது, மேலும் காலங்களின் முடிவில், சாயங்கால நேரத்திற்குப் பிறகு, அவற்றின் சொரூபத்திற்கு கீழ் எழுப்புதல் வரும். சபைகள், மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள் தண்ணீர்களை, அதாவது, ஜனக்கூட்டங்களை, நீதிமன்றங்களை, காவல்துறையை, அரசாங்கங்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, பூமியின் அனைத்து அதிகார வரம்புகளையும் வெளிப்படுத்துதல் 12ல் நாம் கான்கிறவண்ணம் பரிசுத்தவான்களுக்கு எதிராக எழும்பச் செய்வர்.
36 ஆனாலும் இந்த உலகத்தினுள் பற்றார்வமும் வைராக்கியமும் கொண்டிராத ஜெயங்கொள்ளக்கூடிய இச்சபையை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு அடிபணியமுடியா சபையானது கடுங்கோபத்திற்கும், தாக்குதலுக்கும், அவமானத்திற்கும், கேலிபரியாசத்திற்கும் எதிராக ஒரு இடத்திலிருந்து இனொரு இடத்திற்கு பகிரங்கமாக பிரசங்கிக்கவும் நிந்திக்கவும் சென்றுகொண்டிருக்கிறது. சகோதரர்களே, இது பூர்வ காலங்கள் முதற்கொண்டு எல்லா பிரசங்கங்களின் முடிசூட்டப்படுதலாகும். நமது வைராக்கியம் துன்புறுத்தலை சந்திக்கும், அது நம்மை அசைக்கமுடியாது, பிறகு உன்னத வல்லமை நம்மீது இறங்கும். மரித்தோர் உயிர்த்தெழுவார்கள், நம்மில் பலருக்கு தேவதூதர்களுடன் (Angels) தோன்றுவர்.
37 நாம் மறைந்து வேறு இடங்களில் தோன்றுவோம், நாம் பேசுவோம் காரியங்கள் அவ்வாறே இருப்பில்வரும். நாம் தண்ணீர்களின் மேல் நடப்போம், ஆனால் கண்கவர்கிற வழியில் அல்ல. அங்கே மனிதவேட்டை ஒன்று இருக்கப்போவதால் நாம் இங்கேயும் அங்கேயும் சிதறடிக்கப்படுவோம். அங்கேதான் மத்தேயு 22:12-ஐ சேர்ந்தவர்கள் கூட உள்ளே வருவார்கள். இந்த துன்புறுத்தலினால் மட்டுமே இந்த உவமையின் ஆவிக்குரிய ஏழைகள், முடவர்கள், ஊனமுற்றோர், மற்றும் குருடர்கள் உள்ளே வருவர். மத்தேயு 22:12-ஐ சேர்ந்தவர்கள் அவர்கள்தான், சாதாரண சூழ்நிலைகளில், நடுராத்திரி சத்தத்தை நிராகரித்தவர்கள், திடீரென நம்முடன் இணைவார்கள்.
38 ஜான் ஸ்க்வாப் (John Schwab), ரிக் ஜோய்னர் (Rick Joyner) ன் வெளிப்பாடுகளால் திசை திருப்பப்பட வேண்டாம். அனைத்தையும் எரித்து விடு! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. இந்த அதிசய நிகழ்வு உலகளாவிய அளவில் இருக்கும், அத்தருணங்களில் எடுத்துக்கொள்ளப்படுதல் நடந்தேறும் அதேசமயத்தில் எடுத்துக்கொள்ளப் படாதவர்களுக்கு எதிராக துன்புறுத்தலானது தொடரும், ஆனால் அவர்கள் அதே விசுவாசம் மற்றும் மனவுறுதி ஆகியவற்றை காத்துக்கொள்வர்.
39 அதற்குப் பின்பு, ஐந்து ஆண்டுகளில், இருபது ஆண்டுகளில் அல்லது அதற்கும் மேலாகவோ, இஸ்ரவேலில் இரண்டு இளம் பிரசங்கிகள் தோன்றுவர், அவர்கள் நியாயத்தீர்ப்பின் அதே பிரசங்கத்தை கொண்டுவருவார்கள். அவர்கள் பாலஸ்தீனியர்களோடு இன்னும் முடிவடையாமலிருக்கும் அந்த யூத வஞ்சகர்களுக்கும் மற்றும் தங்கள் பிதாக்கள் சிலுவையில் யாரை அறைந்தனரோ அவரது நாமத்தில் புறஜாதிகளை வஞ்சிக்க விரும்புகிறவர்களுக்கும் எதிராக பிரசங்கிப்பார்கள். யூதர்கள் பிசாசுடனும் அந்த செய்தி யாரைக் கண்டனம் செய்கிறதோ அவர்களுடனும் சமரசப்படுவார்கள்... அவர்கள் ஒருவர் இன்னொருவரை அழைப்பார்கள் ... ஆனால் இந்த இரண்டு சாட்சிகளும் அவர்களுக்கு எதிராகவும், யூத மத மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு எதிராகவும் பிரசங்கிப்பார்கள் ... [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!" என்கின்றனர்].
40 ஆசியா மற்றும் அரபு தேசங்களுக்கு பிறகு வெளிப்படுத்துதல் 11:3-ல் உள்ள இரண்டு சாட்சிகள் இஸ்ரவேலுக்கு போகு முன் இந்த வார்த்தையின் வெளிப்பாடானது கர்த்தரால் புறஜாதிகளுக்கு வரும் என்று வெளிப்படுத்துதல் 10:1 முதல் 2ல் வேதாகமம் கூறுகிறது. மிகச்சரியாக இதே ஆவி மற்றும் இதே பிரசங்கமும் தான் இஸ்ரேலுக்கு செல்லும், மேலும் இந்த அதே எதிராளியானவன் அவர்களுடன் போர்செய்ய அங்கே நிற்பான்.
41 இந்த எடுத்துக்கொள்ளப்படுதலை தொடர்ந்து, பரிசுத்தவான்களின் இரத்தத்தினிமித்தம் எலியா மற்றும் மோசே ஆகியோரின் ஊழிய சமயங்களில் சபைகள், தீர்க்கதரிசிகள் மற்றும் பூமியின் குடிகளுக்கு பயங்கரமான வேதனைகள் உண்டாகும். யுத்தங்கள், கிளர்ச்சிகள், பயங்கர நோய்கள் மற்றும் இயற்கையான நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் அவர்களை இறுகப் பிடிக்கும். இன்னும் கொஞ்ச காலத்தில், வருகிற நோய்களில் தெரிந்துகொள்ள சிறந்தது எய்ட்ஸ் ஆக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தீர்க்கதரிசிகளுடைய ஆவிகளின் தேவன் பேசினார்; கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
42 நாம் ஏற்கனவே புறஜாதிகளுடைய திருச்சபையின் எழுப்புதலின் மிக முக்கியமான கட்டத்தில் வாழ்கிறோம். ஏனென்றால் எழுப்புதலானது முதலில் வார்த்தையை கொண்டிருக்கிறது, பிறகு வார்த்தையை உறுதிப்படுத்துகிற அடையாளங்கள் வருகிறது. நள்ளிரவு சத்தம் சொன்னதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த சத்தத்திற்காக தான் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
43 என் குறைந்த கல்வி நிலை உங்களுக்கு தெரியும். திடீரென, ஒரு பழங்குடியினன் (Bushman)... நான் ஒன்பது வயதில் முதன்முறையாக ஒரு காரை எடுத்து, ஒரு கொக்கோ வண்டி (a cocoa truck) மேலும் நான் வீட்டிற்கு வந்ததும், மரங்கள் எங்கள் பின்னால் ஓடுகின்றன என்று என் பெற்றோரிடம் சொன்னேன் ...
44 ஒரு முறை, என் அப்பா எனக்காக காலணிகள் (shoes) வாங்கினார். நான் ஏழு வயதுள்ளவனாக இருந்தேன்; அதுதான் நான் முதல் முறையாக ஷூக்களை அணிந்தது. நான் புதருக்குள் சென்ற போது, அதை நான் எங்கோ ஓரிடத்தில் மறந்துவிட்டேன் மேலும் நான் கிராமத்தில் வந்த போதுதான் நான் காலணிகளுடன் காட்டிற்குள் சென்றதை நான் நினைவுகூர்ந்தேன். நீங்கள் பார்க்கிறீர்களா?
45 நான் விரைவிலேயே பள்ளிசெல்வதை நிறுத்திவிட்டேன்! கட்டுரை, தத்துவம் அல்லது எதிர்ஆய்வுரை என நாம் அழைப்பது என்னவென்று எனக்குத் தெரியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? அது ஏனென்றால், ஒன்றுமில்லாததை எடுத்து எதையாவது செய்ய அவரால் முடியும் என்பதால் தான் அவர் தேவனாக இருக்கிறார். என்னவாயினும், எந்த இறையியல் மேதையும், எந்த சபை தலைவரும் வார்த்தை அடிப்படையில் நம்மை எதிர்க்க முடியாது. அவர்கள் தங்கள் கரங்களில் வேதாகமங்களுடன் ஆட்டுத்தோல் போர்த்தின மந்திரவாதிகளாய் இருப்பதால், நாம் அவர்கள் அனைவருக்கும் சவால்விடுகிறோம், அவர்களனைவரையும் மட்டுமழுப்பாமல் கண்டனம் செய்கிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
46 இப்போது, மத்தேயு 25: 6-ல் ஏன் கொஞ்சம் எண்ணெய் மற்றும் அதிக எண்ணெய் என்று பொருள்படுகிறது? இது இயேசு கிறிஸ்துவின் குறிப்பிட்ட வெளிப்பாடு என்பதால் கருத்துடன் இருப்போம். இந்த ஊழியத்தில் நீங்கள் இரு குழுக்களைப் பார்க்கவில்லையா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோது புத்தியில்லாத கன்னிகைகள் யார்? பரிசேயர்களா? இல்லை!
47 மத்தேயு 13:10 முதல் 12-ஐ வாசிப்போம்... "பின்பு சீஷர்கள் அவரிடம் வந்து, நீர் ஏன் அவர்களிடம் உவமைகளில் பேசுகிறீர்? என்றார்கள். அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது; ஆனால் அவர்களுக்கு அது கொடுக்கப்படவில்லை. அதை உள்ளவன் எவனோ அவனுக்கு கொடுக்கப்படும், அது அவனுக்கு மிகுதியாயிருக்கும்; ஆனால் இல்லாதவன் எவனோ அவனிடம் இருப்பதும் அவனிடமிருந்து எடுக்கப்படும்". [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
48 பலரும் நான் என்ன செய்கிறேனோ அதை உத்தமமாகவும் மேலும் பிரசங்கங்களை மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்கின்றனர், ஏனெனில் அவர்களுடைய தரிசனத்திற்கும் காரியங்களைப் புரிந்துகொள்ளுதலின் வரிசையிலும் அது இருக்கிறது. அவர்களின் இருதயங்களும் மனங்களும் நம்முடன் இருக்கின்றன... ஆனால் இந்த செய்தியின் ஒரே சத்தத்தை, ஏற்றுகொண்ட இந்த இரண்டு குழுக்களும், ஒரே சபையில் வந்து சேர்ந்து ஒன்றாக இருக்கிறோம். செய்தி தான் விளக்கு. எனவே இரண்டு குழுக்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. நாம் கர்த்தருடைய பந்தியில்கூட ஒன்றாகச் சேர்ந்து கொள்கிறோம், ஆனால் புத்தியில்லாதவர்களின் கிரியைகள் புத்தியுள்ளவர்களின் அளவுக்கு ஒப்பாக இல்லை. அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்த போதிலும் எல்லாவற்றையும் விசுவாசித்து, துன்புறுத்தல்களை பொருட்படுத்தாமல் செய்தியை எல்லாவிடங்களிலும் அறிவிக்கிறார்கள், அவைதான், புத்தியுள்ளவர்களின் கிரியைகளுக்கு, உதாரணம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
49 அங்கே மூன்றாமிடத்தில், இங்கேயுள்ள கலப்பின கூட்டத்தினரின் குழுவானது, அதுவும் கூட வசனம் 14 மற்றும் 15 ல் உள்ளது. ஆனால் நிக்கோதேமுவைப் போல, இங்கே அமர்ந்திராத புத்தியில்லாத கன்னிகைகளின் மற்றொரு குழுவும் அங்கு இருக்கிறது. அது உண்மைதான்! ஆனாலும், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள், ஏனென்றால் "நான் உங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை" என்று கர்த்தர் சொல்லவில்லை. ஆனால், "இப்பொழுது, நான் உங்களை அறியேன்" என்றார்.
50 மத்தேயு 7:23 மற்றும் மத்தேயு 25:12 இடையே இசைவு ஏதுமில்லை. அங்கு கர்த்தர்: "நான் உங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை" என்றார். ஏனென்றால் அது கத்தோலிக்க, புரோட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய செய்தியாளர்கள் மூலம் காலங்களினூடாக பூமியில் கிரியை செய்தபோது அவர்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, ஆனால் இந்தப்பக்கத்தில், அவர்: "நான் உங்களை அறியேன்" என்று சொன்னார், அதாவது, இப்பொழுது, உங்களை எனக்கு தெரியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனபடியால், மத்தேயு 7:23 மற்றும் மத்தேயு 25:12 வேறுபட்டவைகளாக இருக்கின்றன.
51 லூயிஸ் செகண்டு (Louis Segond) வேதாகமமானது (bible) தாம்பின் (Tob) சொரூபமாக இருக்கிறது என்று நான் சொல்கிறபோது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் அதை நான் சொல்கிறேன். ஏனென்றால், மத்தேயு 25:6 இந்தத் தலைமுறையினருக்கு தேவனின் சத்தமாக இருக்கிறது. மேலும் நீங்கள் அதை விசுவாசிக்கும்போது, கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள். உங்களால் காண முடிகிறதா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. தீர்க்கதரிசி செய்தியாளர்கள் பூமியில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுதலாகும் என்று வெளிப்படுத்துதல் 19:10 கூறுகிறது. தங்கள் காலத்தின் தீர்க்கதரிசி செய்தியாளனை அறிந்து, நேசித்த அனைவருமே தங்கள் தலைமுறையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து நேசித்தவர்களாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. தீர்க்கதரிசி செய்தியாளனால் அவனுடைய தலைமுறையில் அறியப்பட்டு நேசிக்கப்பட்ட அனைவருமே, அது இயேசுகிறிஸ்து தாமே அவர்களை அறிந்தும் நேசித்ததுமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
52 எழுப்புதலைபற்றி பேசுகையில், நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் உலகத்தில் எல்லாவிடங்களிலும் அதை ஒருங்கிணைக்கிறார். மணவாட்டியானவள் வெளிப்படுத்துதல் 10:11-ன் படி, சபைகளிலும், ஜனங்களிலும், தேசங்களிலும், மொழிகளிலும் தீர்க்கதரிசனம் உரைப்பாள். விதிவிலக்கு இல்லாமல் அனைவருக்கும் எதிராக பிரசங்கிப்பாள். பிரன்ஹாமிஸ்டுகளுக்கு எதிராகவும் கூட.
53 வில்லியம் பிரன்ஹாம் தேவனின் தூதன், ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள் சத்திய வழிகளைத் திசைதிருப்ப சாத்தானால் எழுப்பப்பட்டவர்கள். அவர்களை கண்டனம் செய்! அவர்கள் அஞ்ஞானிகள். ஒரு பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர் ஒரு கத்தோலிக்க பாதிரியை போன்றே வெறுமையாக (empty) இருக்கிறான். அவனால் ஒரு பிசாசை துரத்த முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. பிரசங்கியுங்கள், கண்டனம் செய்யுங்கள், சவால் விடுங்கள், எதிர்த்து நில்லுங்கள்! எந்தவொரு சட்டத்திற்கும் அடிபணிய வேண்டாம், நமக்கு ஒரு சட்டமும் இல்லை, ஆனால் வேதாகமமே, அதை அவர்கள் மதிப்பதில்லை. சபைகளுக்கு முன்னால், எல்லா இடங்களிலும், பிரசங்கியுங்கள், அவர்கள் கதவுகளில் சில பிரசங்கங்களை ஆணியடிக்கவும், அவைகள் மாயமந்திர விடுதிகள் மட்டுமே.
54 மத புத்தகங்களை பகிரங்கமாக சுட்டெரியுங்கள். ஆம், முழு உலகமும் ஆர்வப்பற்றுடைய மற்றொரு இன மனிதர்களை பார்க்க வேண்டும். என்னை விட கடினமான, கண்டிப்பானவர்களாக இருங்கள்! இயேசு கிறிஸ்துவின் அதிகாரம் மற்றும் ஒழுங்குடன் எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ் தேவனுடைய பூமியில் இருக்கிறீர்கள். உங்களை பிரசங்கிக்க கட்டளையிட்டது அவர்களல்ல, மேலும் அதனால் பிரசங்கிக்காதபடிக்கு உங்களை தடை செய்யக்கூடியவர்களும் அவர்களல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
55 மேலும் இந்த யுத்தத்தில், உங்களுக்கு மூன்று முனைகள் இருப்பதை அறியுங்கள்: வெளிப்புற எதிரி மற்றும் மிகவும் ஆபத்தான உட்புற எதிரி மற்றும் இன்னொரு முனை. அதனால் தான் பாளையத்தில் உறுதியாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஞானஸ்நானம் பெற்ற ஒருவன் உபத்திரவத்தில் விசுவாசத்தை மறுதலித்தால், எந்த காரணத்திற்காகவும் அவனை மறுபடியும் சபையில் சேர்த்துக்கொள்ள கூடாது.
56 உங்களை குழப்பக்கூடிய எந்த வார்த்தைகளையும் கடிந்துகொள்ளுங்கள். ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனிடத்தில் இருந்து வராதது எதுவும் ஒரு சர்ப்பத்தின் சீற்றமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. இப்போது அந்த கலப்பினக்கூட்டத்தை பாருங்கள்! இங்கு வந்து உட்கார்ந்து ஒவ்வொரு வார்த்தையையும் பெற்றுகொள்ள நிச்சயமுடையவர்களாக இருப்பதற்கு பதிலாக, அவர்கள் வெளியே இருக்கிறார்கள்... அல்லது இங்கே உட்கார்ந்துகொண்டு, விசுவாசத்தினால் அல்லாமல், ஆனால் ஞானத்தினாலும் புத்திக்கூர்மையினாலும் நடக்கிறார்கள். அவர்கள் மாய்மாலக்காரர்களாக உட்கார்ந்துகொண்டு, நம்முடன் ஒத்துப்போயுள்ளனர். ஆனால் அவர்களின் முடிவு நரகம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
57 ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தில், திருச்சபையின் ஏழுசபை காலங்களின் கூர்நுனி கோபுரத்தின் (pyramid) மேலே நான் நின்று கொண்டிருந்ததை நீங்கள் காணலாம். மேலும் இந்த கூர்நுனி கோபுரத்தின்மேல் இருந்து, தீர்க்கதரிசி எலியாவை போன்று, வரக்கூடிய அனைத்து வஞ்சனைகளையும் நான் பார்க்க முடியும்.
58 மூன்றாவது முனை கடினமாதாக இருக்கும், ஏனென்றால் தேவதூதர்கள் இறங்குவார்கள், அதைப்போல் சாத்தானின் தூதர்களும் இறங்கி வருவார்கள், ஆனால் மத்தேயு 4:1 முதல் 10 இல் உள்ளதை போன்று நாம் அவர்களை வார்த்தையால் தோற்கடிப்போம். அதனால்தான் நாம் வார்த்தை-மணவாட்டி.
59 உபத்திரவத்தின் பழைய சுமைவண்டி (old truck) தண்ணீர்களிலிருந்து வெளியேவரும் முன் இந்த பிரசங்கங்கள், இந்த சத்தம், பத்து கன்னிகைகளை எழுப்பவும், ஆயத்தம் பண்ணவும் செய்யும். அது ஒரு எக்காளம் அல்ல, ஆனால் ஒரு சத்தம் (Cry) ... மேலும் அது சாயங்கால வேளையில் நடக்காது ஆனால் நள்ளிரவில். இதைப் பற்றிய தெளிவான வெளிப்பாடு முன்பு தேவனுடைய மனிதர்களால் கொடுக்கப்படவில்லை, ஏனென்றால் அது அவர்களுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் இப்போது, நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! இப்போது பாடுவோம்: "நான் ஒரு மகத்தான செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன்..." ஆமென்!