en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 50 (Kc.50) : திருச்சபையில் உள்ள ஒழுங்கு
நவம்பர் 08, 2006 புதன்கிழமை இரவு, அட்ஜமே, ஆபிட்ஜான் - ஐவரிகோஸ்ட்டில் பிரசங்கிக்கப்பட்டது
1 பூமியின் மீதெங்கும் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரியபிரகாரமாகவும் விபச்சாரத்தின் மிகச்சிறந்த இடமாக இஸ்ரவேல் விளங்கியது என்று நான் உங்களுக்குச் சொன்னேன். ஹாலிவுட் மற்றும் வத்திக்கானை விட அதிக அருவருப்பானது. நீங்கள் பார்க்கிறீர்களா? இன்று இஸ்ரவேல் அவ்விதமாக இருக்கிறது. ஒரு நாடு இஸ்ரவேலை ஆசீர்வதித்தால், அது மிகவும் நல்லது ஆனால் ஆசீர்வாதமாக இருக்கும் படியாக ஒருவன் ஆசிர்வதிக்கப்பட வேண்டிய இஸ்ரவேலானது அது ஆவிக்குரியது அதாவது ஒருவனுடைய மணி வேளையின் செய்தியை சுற்றி இருக்கும் உயிர்வாழும் திருச்சபை.
2 இல்லையெனில், நான் உங்களை இஸ்ரவேலிற்காக இரக்கமில்லாமல் இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை, ஆனால் நீங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும் ஹெஸ்பொல்லாவிற்கு எதிராகவும் இருந்தால், நீங்கள் தேவனுக்கு விரோதமாக இருப்பதாகும் மேலும் வெளிப்படுத்துதல் 11 ஊழியத்தின்போது நீங்கள் எலியாவையும் மோசேயையும் எதிர்த்து நிற்பீர்கள் ஏனெனில் இந்த இரண்டு பேரும் இன்று பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹெஸ்பொல்லா என்ன செய்கிறார்களோ அதையே அவர்களும் வார்த்தையில் வெளிப்படுத்துவார்கள் ...
3 இந்த மாலை வேளையிலே, நான் சில காரியங்களை உங்களுக்காக வாசிக்க விரும்புகிறேன். [ ஆசிரியர் குறிப்பு : சகோதரர் பிலிப்பு ஒரு தாளில் வாசிக்கின்றார் ...] "வெள்ளி, நவம்பர் 10, 2006 எருசலேமில் அணிவகுப்பதற்காக ஆயிரக்கணக்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் ... இஸ்ரவேல் அரசின் பொது வழக்கறிஞர், மெனாகேம் மஜுஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த அணிவகுப்பை அங்கீகரித்திருக்கிறார், " ஆகவே கருத்து சுதந்திரத்தின் கொள்கை மதிக்கப்படுகிறது".
4 "இது இஸ்ரேலிய ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் வெற்றி", உடனடியாக எருசலேமின் ஓபன் ஹவுஸ் (JOH) இஸ்ரேலிய லெஸ்பியன் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அறிவித்தது, "இந்த அணிவகுப்பு நடக்கும்படி நடவடிக்கை எடுக்க நாங்கள் உறுதியாக உள்ளோம். அது ஆத்திரமூட்டுவதாக இருக்காது. எந்த கேளிக்கை திருவிழா அல்லது நிர்வாணமான ஆண்கள் அணிவகுப்பில் இருக்க மாட்டார்கள், மேலும் அது சபைகள், தேவாலயங்கள் அல்லது மசூதிகளின் அருகாமையில் நடக்காது ", எலனா கானெட்டி லெஸ்பியன்ஸின் தலைவர் AFP இடம் கூறினார்.
5 "ஓரினச்சேர்க்கையாளர்களின் இந்த அணிவகுப்பில் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த வெள்ளிக்கிழமை எருசலேமில் பன்னிரெண்டு ஆயிரம் போலீஸ்காரர்களை நாங்கள் அணிதிரட்டுவோம்" என்று இஸ்ரேலிய காவல்துறைத் தளபதி மொஷெ கராடி இராணுவ வானொலியில் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு, அணிவகுப்பிற்கான ஆயத்தங்களின் போது, இஸ்ரவேலின் உயர் செபார்டிக் ரபீ, மோஷே அமார், போப் பெனடிக்ட் XVI-க்கு இந்த பேரணிக்கு எதிரான ஆதரவைக் கேட்டு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
6 சமீபத்திய மாதங்களில், ஒரு சோதோமியரை கொல்லும் எவருக்கும் 4,500 டாலர் பரிசு வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் எருசலேம் முழுவதிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
7 2005-இல், எருசலேமில் நான்காவது ஓரினச்சேர்க்கை அணிவகுப்பில், யிஷாய் ஷ்லிசெல், ஒரு வெறித்தனமான தீவிர பழம்பெரும் யூதர் மூன்று பேரைக் கொன்றார் மற்றும் அவருக்கு சிறையில் பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முரண்பாடாக, "ஒரினச்சேர்க்கை அணிவகுப்பு", ஆண்புணர்ச்சிகாரர்கள் மற்றும் பெண்பாற்புணர்சிகாரர்களின் அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும் டெல் அவிவ்-இல் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் கேளிக்கை கொண்டாட்டத்துடன் நடைபெறுகிறது.
8 இஸ்ரவேல் 1988-இல் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கி ஒரினச்சேர்க்கை ஜோடிகளின் உரிமைகள் இஸ்ரேலிய நீதிமன்றங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது "... [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு இஸ்ரவேலை குறித்து: கிறிஸ்துவின் மணவாட்டிக்கு எழுதின நிருபம் என்ற பிரசங்கத்தில் பேசியுள்ளார்]. கிறிஸ்தவர்கள் இஸ்ரேவேலுக்கு புனித யாத்திரை செல்லுவதற்குப் பதிலாக இந்த காரியங்களுக்காக போராட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
9 இப்போது நான் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன்... முதல் கேள்வி: "சகோதரர் பிலிப்பு, பூமியின் மேல் ஒரே வேளையில் இரண்டு தீர்க்கதரிசிகள் இருப்பதில்லை என்று செய்தி கூறுகிறது அதே வேளையில் அப்போஸ்தலர் 13: 1 கூறுகிறதாவது: "அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்..." மற்றும் அப்போஸ்தலர் 15:32-ல் ... "யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தினார்கள்."
10 நன்று, அது மிகவும் எளிது! அங்கு எனக்கு தெரிந்தமட்டும், வேதாகமம் அறிவித்த பிரகாரமாக ஆதியாகமத்திலிருந்து வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகத்திலும் வெளிப்படுத்துதல் 11 வரை எலியா மற்றும் மோசேயை விதிவிலக்காக அறிவித்தது. ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது என இதை முன்கூட்டியே தேவன் அறிவித்தார். இல்லையெனில், காலம் துவங்கியது முதல் அங்கே ஒரு ஜனக் கூட்டத்திற்கு ஒரு தீர்க்கதரிசி மாத்திரமே இருந்திருக்கின்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் அதே வேளையில், எலியாவும் மோசேவும் ஒன்றாக ஒரே பணிக்காக, ஒரே ஆவியில், நீங்களும் நானும் இங்கே இருப்பதை போன்று இருப்பார்கள்.
11 மேலும் எலியா மற்றும் மோசேயும் அங்கு இருப்பதும் கூட உண்மையில் ஒரு இரகசியம், தேவனுக்கு சித்தமானால் ஒரு நாள் அதை நான் விளக்குவேன் ... மேலும் அதில் ஒரு இரண்டாவது இரகசியம் உள்ளது உண்மை என்னவெனில் 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதியன்று அவர்கள் தரிசனத்தில் வந்தார்கள். இதே இரகசியம் தானியல் 12: 5, சகரியா 4:11, மத்தேயு 17: 3 மற்றும் சகரியா 12.10-ன் நிறைவேறுதலில் உள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா? இது வித்தியாசமானது! இல்லையெனில், ஒரே ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மாத்திரமே அந்த காலம் அல்லது அந்த தலைமுறைக்கு பிதாவாக இருக்கிறான். இந்த ஊழியம் பூமியின் மேல் ஒரு காலத்திற்கு ஒரே ஒரு நபரால் மாத்திரமே வழங்கப்படுகிறது! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 ஆனால் அதை தவிர பூமியின் மீது, நூற்றுக்கணக்கான அப்போஸ்தலர்கள், நூற்றுக்கணக்கான சபை தீர்க்கதரிசிகள், நூற்றுக்கணக்கான போதகர்கள், நூற்றுக்கணக்கான சுவிசேஷகர்கள் எபேசியர் 4: 11-க்கு தொடர்பாக நூற்றுக்கணக்கானோர் இருக்கலாம். வசனமானது இவ்வாறு கூறுகிறது: "அந்தியோகியாவிலும், அங்கே இருந்த சபைகளிலும், தீர்க்கதரிசிகளிலும் போதகர்களிலும் அநேகர் இருந்தார்கள்." நீங்கள் பார்க்கிறீர்களா? "தீர்க்கதரிசிகளும் போதகர்களும்!" இது எபேசியர் 4:11-ன் கேள்வியாக இருக்கின்றது. அவர்கள் சில வகையான அழைப்புகளை பெற்றிருக்கலாம் ஆனால் அவர்கள் தேவனுடையவர்களாயிருந்தால், அவர்களுடைய செய்தி அந்த மணி வேளையின் உயிர் வாழும் தீர்க்கதரிசினுடையதாக இருக்கும்.
13 பழைய ஏற்பாட்டில் "தீர்க்கதரிசிகளின் புத்திரர்" என்று வேதாகமம் அழைக்கிறது. தேவன் அவர்களிடத்தில் நீங்கள் கலங்கமிள்ளாத சுவிசேஷத்தை பிரசங்கிப்பீர்கள் அல்லது பூமியை பிரகாசிக்கப்பண்ணுங்கள்" என்று கூட சொல்லலாம். அவர்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசி செய்தியாளனுடைய செய்தியை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் இந்த எபேசிய தீர்க்கதரிசி பொறுமையாக இல்லாவிட்டால், அவனுடைய காலத்திற்கு முன்பே குதித்து மோசேயைப் போன்ற மரணத்தைக் கொண்டு வருவான்...
14 தேவன் அவர்களிடத்தில் 2 இராஜாக்கள் 2-ல் உள்ள தீர்க்கதரிசிகளின் புத்திரர்களிடத்தில் பேசுகிறதை போன்று அவர்களிடம் பேச முடியும் ஆனால் அவர்கள் உண்மையிலேயே தேவனுடையவர்களாகவும் தேவனுடைய ஆவியை கொண்டவர்களாக இருந்தால், அவர்களுடைய புகழ், அவர்களுடைய ஆஸ்தி அல்லது உயரம் அல்லது கல்வியின் நிலை அது ஒரு பொருட்டாக இல்லாமல் அவர்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசி செய்தியாளனிடம் வருவார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
15 2 இராஜாக்களில், அவர்கள் எலிசாவுக்கு முன்பாக ஏற்கனவே தீர்க்கதரிசிகளாக இருந்ததைக் காண்கிறோம். ஆனால் எலியா காட்சியை விட்டு கடந்து எலிசா பொறுப்பேற்ற பொழுது, அவர்கள் எலிசாவிடம் வந்து அவனிடத்தில், "எங்களை இங்கே அனுப்பும்! எங்களை அங்கே அனுப்பவும்! எங்களுடன் வா! " என்றனர். அது எலியாவின் காலத்தில் அல்ல, ஆனால் எலிசாவின் காலத்தில் அவைகள் அதிகமாக வெளிப்பட்டது. நீங்கள் பார்க்கிறீர்களா?
16 எலியாவைப் பின்தொடர்ந்து போகும்படியாக தேவன் அவர்களுடைய இருதயத்தில் வைத்தார். மேலும் அவர்கள் எலிசாவை தங்களுடைய ஒரு தோழனை வற்புறுத்துவதைப் போன்று வற்புறுத்தினார்கள். தேவன் அதைச் செய்தார் ஏனெனில் அவர்கள் எலியாவைக் கண்டுபிடிக்க முடியாதபோது, எலியா இனி ஒருபோதும் பூமியில் இல்லை என்று அவர்கள் அறிந்துக் கொள்வார்கள், அவர்கள் எலிசாவின் ஊழியத்தின் அதிகாரத்தை முழுமையாக மதிக்க முடியும். மேலும் அவர்கள் வார்த்தையோடு ஒத்து இருந்தனர் ஏனெனில் அவர்கள் எலிசாவைப்போல அதே ஆவியானால் உயிரூட்டப்பட்டிருந்தார்கள்.[ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17 இந்த முழு உலகத்தில், ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு பட்டணத்திலும் அங்கே சிலர் இருந்தனர். வேதாகமம் சொல்கிறது: பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் புறப்பட்டுப்போனார்கள்... கில்காலில் இருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் புறப்பட்டுப்போனார்கள்... எரிகோவில் இருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவுக்கு அருகில் வந்தனர் ...
18 மேலும் எலியா எடுத்துக் கொள்ளப்பட்டபிறகு, தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவிடம் சென்று அவனுக்கு முன்பு தரையில் அவரை பணிந்துக் கொண்டார்கள் என்று வேதாகமம் கூறுகிறது! ஒரு நாளிலே, அவர்களில் ஒருவனை எலிசா யெகூவை அபிஷேகம் செய்ய அனுப்பினான். இவ்விதமாக "ஓ, சகோதரன் பிலிப்பு, அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல!" என்று நீங்கள் கூறுகிறீர்கள்!" ஆம் சகோதரனே! அவர்கள் தீர்க்கதரிசிகள் ஆனால் சபையின் தீர்க்கதரிசிகள். சபைக்குள் இருக்கும் தீர்க்கதரிசிகள். அது தீர்க்கதரிசி செய்தியாளனை விட வேறுபட்டது.
19 2 இராஜாக்கள் 9: 1 முதல் 4 வரை வாசியுங்கள். "நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,
20 பிறகு தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான். அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21 அவன் உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களெல்லாருக்குள்ளும் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான். அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் வார்த்து, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன்." ஆமென்! அது என்ன? இளம் வாலிப தீர்க்கதரிசி என்று வேதாகமம் கூறுகிறது. இவ்வாறு தீர்க்கதரிசிகளின் புத்திரர் தீர்க்கதரிசிகளாயிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுடைய மணி வேளையின் உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனுடைய வாயாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த செய்தியை அறிவிக்காத வரை ஒருவரும் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது! அங்கே நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசிகள் இருக்க முடியும், சிலர் சபைகளை கொண்டிருப்பார்கள் ஆனால் அவர்கள் யெகோவாவினுடையவர்களானால், இந்த செய்தியை அவர்கள் சந்திக்கும் நாளிலே, அவர்கள் அதை விட்டு விலக மாட்டார்கள்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22 இரண்டாவது கேள்வி: "சகோதரர் பிலிப்பு, அவர்களுடைய பணித்தலத்தில் இணையத்தில் இணைக்கப்பட்ட கணினி நிலையத்தில் பணிபுரியும்போது ஒரு சகோதரர் அல்லது சகோதரி என்ன செய்ய வேண்டும்?" சகோதரர்களே, நாம் இணையத்தை பயன்படுத்த கூடாது என்று நான் கூறவில்லை. மேலும் ஆரம்பத்திலே, இணையம் நமக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் பெட்டியை போன்று சேவை செய்ய முடியும் என்று நான் கூறியிருந்தால், அது அவ்விதமாக இருந்தாலும் அதினால் நமக்கு அதைக் குறித்து என்ன, ஏனென்றால், கர்த்தர் சொன்னபடியே உலகத்தில் இருந்தும் நாம் உலகமில்லாமல் இருக்கிறோம்.
23 நல்லது! இப்பொழுது நான் திருச்சபையில் உள்ள ஒழுங்கு என்ற பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். ஆனால் மனதில் கொள்ளுங்கள், எபேசியர் 4:11 ஐந்து ஊழியங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுகிறது, உங்களைப் போன்றே ஐந்து ஊழியங்களைக் கொன்டிருக்கின்றது என்று நான் எப்பொழுதும் நினைத்திருக்கிறேன், ஆனால் திருச்சபையில் உள்ள ஒழுங்கைப் பற்றி பிரசங்கிக்க வேண்டியிருக்கும்போது, வெளிப்பாடு என்னிடத்திற்கு வந்தது. ஏனெனில் அவைகளே சபையின் வாசலை காத்துக் கொள்கின்றது. மேலும் அவைகளை நான் நான்காக பெற்றுக் கொண்டேன் ஐந்து அல்ல. இது உங்களை தொல்லைப்படுத்துவதற்கு இல்லை ஆனால் இது உண்மையில் ஐந்து அல்ல ஆனால் வார்த்தையின் நான்கு ஊழியங்கள். அதை நீங்கள் விசுவாசித்தால், ஆமென்! எனக் கூறுங்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நன்றி! அதனால் நான் என்னுடைய பொருளுக்கு நான் நேரடியாக செல்கின்றேன் மேலும் தேவன் அனுமதித்தால், அதைக் குறித்து சிறிது காண்பிக்க நான் திரும்ப வருகிறேன்.
24 நீங்கள் புரிந்ததுக் கொண்டபடியினால் அதை விசுவாசிக்கவில்லை ஆனால் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி சொன்னபடியால் விசுவாசிக்கிறீர்கள் என்று நான் அறிவேன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25 இவ்வாறு இதை மனதில் கொள்ளுங்கள், அங்கே ஐந்து ஊழியங்கள் அல்ல ஆனால், அவை வார்த்தையின் நான்கு ஊழியங்கள் அவைகளாவன : அப்போஸ்தலர், திருச்சபையின் தீர்க்கதரிசி, சுவிசேஷகர் மற்றும் போதகர். எனவே பாஸ்டர் வார்த்தையின் ஒரு ஊழியம் அல்ல. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26 இதை நீங்கள் இன்று விசுவாசிப்பதினால் அல்ல அல்லது ஏப்ரல் 24, 1993 அன்றோ அல்ல அல்லது ஒரு தெளிவான விளக்கத்தினாலும் அல்ல, ஆனால் உலகத்தின் அஸ்திபாரம் இடுவதற்கு முன்பாகவே நீங்கள் தேவனுடைய சிந்தையில் விசுவாசித்தீர்கள். மேலும் சர்ப்பத்தின் குமாரனின் சந்ததி அதை பாவனை செய்ய முடியாது! தேவனுக்கு சித்தமானால், அதன் பேரில் நான் முடிவில் மீண்டும் வருகிறேன்! அது தேவனிடத்தில் இருந்து வந்த ஒரு பரிசு, கிருபையினாலானது! இந்த மாலை வேளையில் என் பொருள்: திருச்சபையிலும் கூடுகையிலும் உள்ள ஒழுங்கு.
27 புதிய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் ஒரு பாஸ்டருடைய ஊழியத்தை பற்றி எந்த குறிப்பும் இல்லை, எரேமியா ஒரு பாஸ்டரைக் குறித்து பேசுகையில், அவன் முழு ஆசாரியத்துவத்தையும் பற்றி பேசுகிறான், ஒரு குறிப்பிட்ட ஊழியத்தை அல்ல. நீங்கள் பார்க்கிறீர்களா? நான்கு ஊழியங்களில் யாராவது ஒருவர் சில உள்ளூர் சபைகளை சந்திக்கும் பணிக்காக அனுப்பப்படலாம் ஆனால் ஒரு பாஸ்டரை அனுப்ப முடியாது. வார்த்தையின் நான்கு ஊழியங்களே மிஷெனரிகள் . இந்த நான்கு ஊழியங்களும் வார்த்தையோடு நேரடியாக சம்பந்தமுடையது.
28 சுவிசேஷகன் வார்த்தையை எடுத்துக் கொண்டு அதை பரப்புகிறான். போதகன் வார்த்தையை எடுத்துக் கொண்டு அதை ஜனங்களுக்கு விவரித்து கூறுகிறான், தீர்க்கதரிசி வார்த்தையை எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு வெளிப்படுத்தி கொடுக்கிறான், அப்போஸ்தலன் வார்த்தைையை எடுத்துக் கொண்டு சபைகளை கண்டுபிடிக்கும் படியாக செல்கின்றான். ஆனால் பாஸ்டரைக் குறித்து என்ன? பாஸ்டர் வார்த்தையோடு சம்பந்தமுடையவன் அல்ல ஆனால் அவன் வெறுமனே ஒரு மேய்ப்பன், அவன் ஒரு கண்காணி. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. வார்த்தையின் நான்கு ஊழியங்கள் நான்கு சுவிசேஷங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் அவை ஆதியாகமத்தில் உள்ள நான்கு ஓடைகள்,  சிம்மாசனத்தைச் சுற்றிலும் உள்ள நான்கு கேருபீன்கள். ஐந்தாவதாக அங்கே ஒன்றும் இல்லை.
29 அந்த வார்த்தையின் நான்கு ஊழியங்களும் நான்கு கேருபீன்களாயிருந்தால் அதாவது நான்கு உயிர் வாழும் ஜீவன்கள் என்று கூறினால், ஒரு ஸ்திரீயானவள் ஊழியத்தை கொண்டிருக்க முடியும் என நினைப்பவர்களுக்கு இந்த வெளிப்பாடானது உதவும் என நாம் நினைக்கின்றோம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
30 அடிக்கடி கேட்க்கப்படும் ஒரு கேள்வி என்னவென்றால், "என்னுடைய ஊழியம் என்ன? நீங்கள் பார்க்கிறீர்களா? மிக முக்கியமானது என்னவெனில் நாம் ஒரு அத்தி மரமா என்று கண்டறிய முயற்ச்சிப்பது அல்ல ஆனால் கனிகளை கொடுக்க வேண்டியதே! தீர்க்கதரிசனங்கள் ஒரு ஊழியத்தை நியமிக்கலாம், ஆனால் இன்னும் மிகத்தெளிவாக வெளிப்படுதல் ஊழியத்தை போல நம்பகத்தன்மையுடனும், உண்மையுடனும் நமக்கு ஆசிர்வாதமாகவும் எதுவும் இருக்க முடியாது. எந்த ஒரு பாவனையை தவிர்பதற்க்கு அதினுடைய முதிர்ச்சியில் இல்லாத ஒரு ஊழியத்தைக் அல்லது செயலாக்கத்தில் இல்லாத ஊழியத்தைக் குறித்து குறிப்பிடுவது நல்லது இல்லை.
31 ஒரு பாஸ்டரானவன் சபையில் உள்ள அனைத்து மனித பிரச்சனைகளையும் எல்லா தாழ்மையிலும் தீர்க்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசியையும் தனிப்பட்ட முறையில் அறிந்து அவர்களை சந்திக்க வேண்டும். அவரே தேற்றுகிறவராகவும் அனைத்து சபையினரும் இளைப்பாற தேடுகிற ஒருவராக இருப்பார்.
32 நல்லது! பாஸ்டருக்கு அடுத்ததாக, மூப்பர்கள்! மூப்பர்கள் அவர்களிடம் பாஸ்டரால் ஒப்படைக்கப்பட்டிருந்த விவகாரங்களை சந்திக்கின்றார்கள். அவர்கள் பாஸ்டரால் தெரிந்துக் கொள்ளப்படுகிறார்கள்.
33 இப்போது யாரோ ஒருவர் எப்படி ஒரு பிரசங்கியாக, பாஸ்டராக அல்லது நான்கு ஊழியர்களில் ஒன்றாக மாறுகிறார்கள்? ஒரு பாஸ்டரோ அல்லது நான்கு ஊழியங்களில் ஒருவரோ சபையில் பிரசங்கியை தெரிந்துக் கொள்கிறார்கள் ஆனால் அது யாரோ ஒருவர் எற்கனவே திறந்த வெளிப் பிரசங்கங்கள் செய்தவராக இருப்பார் அல்லது செய்தி வந்த பொழுது சபையில் ஏற்கனவே ஒரு பிரசங்கியாக இருப்பவராகும். தேவனுடைய சித்தம் மற்றும் ஆசிர்வாதமானது யாரோ ஒருவர் நல்ல சொல்திறமிக்கவராக அல்லது கண்ணியமானவராக அல்லது மதிப்பக்குரியவராக மற்ற திருச்சபைகளுக்கு செல்கின்றவராக அல்ல ஆனால் நான்கு ஊழியங்களில் ஒன்றை செய்கிறதாக இருக்க வேண்டும் மேலும் ஒரு நாளிலே அந்த மையத்தை நாம் அடைய வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
34 ஒவ்வொரு பாஸ்டரும் அவன் நிறுவப்பட்ட திருச்சபையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்தவொரு பிரச்சினைக்கும், அந்த பாஸ்டரையே ஒருவன் அனுக வேண்டும். வேறொரு ஊழியத்தையோ அல்லது தீர்க்கதரிசி செய்தியாளனையோ அல்ல ஆனால் பாஸ்டரை . பிரச்சினை எதுவாக இருந்தாலும்.
35 ஒரு திருச்சபையின் விசுவாசிகள் அவர்களுடைய பாஸ்டரிடத்தில் திறமையின்மை அல்லது வார்த்தையில் திசை மாறுதலை கண்டறிந்தால், அந்த திருச்சபையின் மூப்பர்கள் அதை அறிவிப்பார்கள், ஆனால் வேறொரு சபையின் பாஸ்டர் அல்ல ஆனால் அப்போஸ்தலர்களில் ஒருவர். இந்த அப்போஸ்தலர்கள் பாஸ்டருக்கு செவிக் கொடுக்கிறார்களோ இல்லையோ ஆனால் அவனுடைய வழக்கில் அவர்கள் ஒரு தீர்மானத்தை எடுப்பார்கள் மேலும் அந்த பாஸ்டர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
36 ஆனால், ஒரு திருச்சபையிலே அங்கு ஒரு பாஸ்டர் இருக்கிறார், மூப்பர்கள், ஒழுங்குமுறை அமைக்க உதவி பணியாளர்கள், காணிக்கை பெட்டிக்கு நிர்வாகிகள் மற்றும் அது போன்றவர்கள் உள்ளனர்... இவை அனைத்தும் பாஸ்டரால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன, ஆனால் அவர்களின் பதவி நீக்கம் பாஸ்டரால் முன்மொழியப்பட்டு சபையினரால் முடிவெடுக்கப்படும். ஒரு சபையில் எப்போதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரியதரிசிகள் இருக்க வேண்டும். மேலும் ஒரு பாஸ்டர் அல்லது பிரசங்கி ஒரு காரியதரிசியாக இருக்க முடியாது.
37 ஒரு சபைக் கூட்டத்தில் ஒரு பொறுப்பைக் கொண்டிருக்கும் அனைவரும் மூப்பர்கள் என்று அறியுங்கள். எனவே பிரசங்கிகள், பாடகர்கள், உதவி பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மேலும் பாஸ்டரால் நியமிக்கப்பட்ட அனைவரும் மூப்பர்கள். மூப்பர்களுக்கான ஒரு பிரதிநிதியாக இருக்க வேண்டும். உதவி ஊழியக்காரர்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணிக்கை குறைந்தது இரண்டாவது இருக்க வேண்டும் மேலும் சபையின் அளவைப் பொறுத்து உள்ளது. ஒரு சபைக் கூட்டத்தில், இசைக்குழு, இளைஞர்களின் குழு, இன குழு மற்றும் பிறர் ... போன்ற விஷயங்கள் இருக்க நான் விரும்பவில்லை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய திருச்சபையிலே இந்த காரியங்கள் எனக்கு தேவையில்லை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
38 கூடுதலாக, ஒவ்வொரு சபையும் அனைத்து திட்டங்களிலும் மற்ற சபையைக் காட்டிலும் தன்னாட்சி பெற்றது. ஆனால் ஒரு சபை மற்றொரு சபையிடம் உதவியை கேட்கலாம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39 ஆராதனையின் முறைகளுக்காக ... ஆராதனையின் ஆரம்பத்தில், தலைவர் எழுந்து வருகிறார் ... பிறகு ஒட்டுமொத்த ஜெபம் பிறகு வெளிப்படையான பாவ அறிக்கை. பின்னர், செய்தியிலிருந்து ஒரு பத்தியை வாசிக்கலாம், துதிப்பாடலுக்கு முன்பாக அதைப் பற்றி சுருக்கமான விளக்கத்தை கொடுக்கலாம். இவ்வாறு வெளிப்படையான பாவ அறிக்கைக்கு பிறகு, ஜெபங்கள், சாட்சிகள், ஆராதனை ஜெபங்கள் பிறகு துதிப்பாடல்கள் மற்றும் நீங்கள் பிரசங்கத்திற்கு செல்கிறீர்கள்.
40 தீர்க்கதரிசி செய்தியாளன் இல்லாத போது , தேவனுடைய சித்தத்தை அறிய, நான்கு ஊழியங்களும் பாஸ்டர்களும், ஆவியின் வரங்கள் மற்றும் தரிசனமுடையவர்கள் உபவாசம் மற்றும் ஜெபத்தின் முடிவின் தருணத்திலே அங்கீகரிக்கப்பட்ட ஊழியங்களின் வழி நடத்துதலினால் கூடுவார்கள்.
41 ஒரு சபையானது பரிசுத்த இராபோஜனத்தை முழு இரவு ஜெபத்தோடு அல்லது இல்லாமல் அமைக்க விரும்பினால் அவள் அதைச் செய்யலாம் . மற்ற சபைகளிலிருந்து வர முடிந்தவர்கள் வருவார்கள் மேலும் அடுத்த வருடத்தில் நாம் செய்யும்படியாக நான் விரும்புகிறேன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
42 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! இப்போது வார்த்தையின் நான்கு ஊழியங்கள் மட்டுமே இருந்தன என்று நான் ஏன் சொன்னேன்? இது ஒரு புதிய வெளிப்பாடு மற்றும் ஒரு புதிய வெளிப்பாடானது தேவனுடைய ஜனங்களுக்கு இன்னும் அதிகமான வெளிச்சம் தேவைப்படுகிறது. நான் பார்க்கவோ அல்லது எங்கேயாவது கேட்கவோ இல்லை, ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அதைப் பெற்றுக் கொண்டேன். இவ்வாறு மூன்று நாட்களுக்கு முன்பு, இவ்விதமாக இருக்கும் என்று எனக்கு தெரியாது மேலும் அதைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டதுமில்லை, அது எப்பொழுதும் இவ்விதமாகவே இருந்தது.
43 ஒரு மனிதன் தேவனுடைய இடத்தை எளிமையாக இனங்கண்டுக்கொண்டால் அவன் தன்னுடைய வார்த்தையை வியாக்கியானம் செய்யட்டும், அங்கு எந்த ஒரு விவாதமும் மேலும் பூமியின் மேல் ஒரு தவறான உபதேசமும் இல்லை. சத்தியமானது ஒரு போதும் ஒரு விவாதத்தினால் அல்லது கலந்தாராய்ச்சியினால் வந்தது இல்லை ஆனால் தேவனிடத்திலிருந்து வருகிற சத்தியமானது, எப்பொழுதும் ஆவிக்குரிய வெளிப்பாட்டினால் வருகிறது. மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் தன்னுடைய சபையை ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மீது கட்டுவேன் என்று கூறினார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
44 பேதுரு : "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." என்று சொன்னபோது . அவர் மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்றார். மேலும் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மீது என் சபையை கட்டுவேன்.
45 மேலும் ஒரு தலைமுறையில், உயிருள்ள தீர்க்கதரிசி மூலம் அவருடைய வார்த்தையை தேவன் மாத்திரமே வியாக்கியானம் செய்கிறார் [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
46 நல்லது! இது ஜனங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டோ அல்லது புதிய கோட்பாட்டை உருவாக்கவோ அல்ல, மாறாக உண்மையில், வார்த்தையில் ஐந்து ஊழியங்கள் இல்லை ஆனால் நான்கு. நான்கு ஊழியங்கள் மாத்திரம் உண்டு அவர்களில் ஒருவரிடம் அதிகாரம் கொடுக்கும்படி நான்கு ஊழியங்கள் உள்ளன. அவர்கள் அவனை ஆத்துமாக்களை கண்காணிக்க பாஸ்டராக நிறுவப்படுகிறார். மேலும் இந்த பாஸ்டருக்கு ஆத்துமாக்களை பாதுகாத்துக் கொள்ளும்படியான திறமை உள்ளது அவனே பாஸ்டர் என்று அழைக்கப்படுவான்; இல்லையெனில் அனைவரும் பாஸ்டர்களாக இருப்பார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
47 அப்போஸ்தலர்களுக்கு, சுவிசேஷம் அறிவித்து, கூட்டிச்சேர்த்து, போஷிக்கும்படியான... தகுதியை கொண்டிருப்பார்கள். ஆகவே அவர்கள் சுவிசேஷகர்கள் மற்றும் பாஸ்டர்களாக இருக்க முடியும். தீர்க்கதரிசிகளைப் பொருத்தவரை, அவர்கள் பிரசங்கிகளாக அவர்களுடைய பிரசங்கங்கள் இரகசியங்களை செய்தியின் வரிசையில் வெளிப்படுத்துகிறதாக இருக்கும். போதகர்கள் வேதாகமம் அல்லது இயற்க்கையின் முலமாக செய்தியின் ஆழம் மற்றும் உண்மையின் நிலையை காண்பிப்பார்கள். சுவிசேஷகர்கள் செய்தியை பிரகடனப்படுத்துவதில் அக்கரைக்கொள்வார் மேலும் அதை தான் அவர் செய்வார். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆகவே நீங்கள் வார்த்தையில் எந்த இடத்தை பாஸ்டருக்கு கொடுக்க முடியும்? ஒன்றும் இல்லை! அங்கு ஒன்றுமில்லை! பாஸ்டரானவன் வார்த்தையோடு நேரடியாக தொடர்புடையவன் அல்ல ஆனால் அது மேய்ப்பனின் ஒரு பொருப்பு, ஆத்துமாக்களின் கண்காணி. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
48 ஆனால் பாஸ்டர் தாமே வார்த்தையின் நான்கு பிரதான ஊழியங்களில் ஒன்றாக முற்றிலுமாக இருப்பார். மேலும் அவர் நான்கு ஊழியங்கள் பெற்ற ஆத்துமாக்களை காத்துக்கொள்வதைக் கொண்டுள்ளார். ஆகையால் ஒரு பாஸ்டர் என்பவன் அப்போஸ்தலனாகவோ, சபை தீர்க்கதரிசியாகவோ, சுவிசேஷகனாகவோ, அல்லது போதகனாக இருப்பான். மேலும் எப்பொழுதும் ஒரு போதகனே பாஸ்டருக்குரிய நல்ல நிலையில் இருப்பான்; புத்திச் சொல்லுகிற வரத்தோடு நம்முடைய அன்பான சகோதரர் அகோப் அதைச் செய்கிறார். சகோதாரர் பிலிப்பு "வார்த்தையின் ஐந்து ஊழியம் இருக்கிறது நீங்கள் கூறுகிறீர்கள்," இல்லை சகோதரனே பாஸ்டர் என்பது வெறுமனே உதவி ஊழியக்காரர்கள், மூப்பர்கள் போன்று ஒரு பணி. அவர் தன்னுடைய சொந்த ஊழியத்திற்க்கு அப்பால் ஆத்துமாக்களைச் சந்தித்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்றார் அதாவது : அப்போஸ்தலன், போதகன், சுவிசேஷகன் அல்லது தீர்க்கதரிசி. நீங்கள் பார்க்கிறீர்களா?
49 ஆதியாகமத்தின் நான்கு கேருபீன்களும் ஜீவ விருட்சத்தின் பாதையை காக்கின்றன அவைகளே வார்த்தையின் நான்கு ஊழியங்கள். வியாழனை சுற்றி சுழலும் நான்கு கோள்களும் வார்த்தையின் நான்கு ஊழியங்கள். மேலும் வியாழன் கழுகை அடையாளப்படுத்துகின்றது அதுவே தீர்க்கதரிசி செய்தியாளன். நியாயாயப்பிரமான பலகைகளை காக்கின்ற உடன்படிக்கை பெட்டியின் நான்கு கொம்புகளே வார்த்தையின் நான்கு ஊழியங்கள் நியாயப்பிரமானத்தை காக்கின்றது.
50 நான்கு சுவிசேஷங்களானது : மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியவை வார்த்தையின் நான்கு ஊழியங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? எசேக்கியேலில் உள்ள உயிருள்ள நான்கு ஜீவன்கள் மற்றும் பழைய ஏற்பாட்டில் உள்ள மற்ற யாவும் வார்த்தையின் நான்கு ஊழியங்கள் இந்த நான்கு உயிருள்ள ஜீவன்கள் வெளிப்படுத்துதல் 4 : 7-ன் நான்கு கேரூபின்களும் வார்த்தையின் நான்கு ஊழியங்களாகும்.
51 வார்த்தையின் நான்கு ஊழியங்கள் உள்ளன, ஐந்து ஊழியங்கள் அல்ல. ஆதியாகமம் 2:10-ல் உள்ள ஆற்றின் நான்கு கிளைகளும் வார்த்தையின் நான்கு ஊழியங்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஒருவன் கிராம பிரதிநிதியை போல் ஒரு சபையை வழி நடத்தக் கூடாது, ஆனால் வார்த்தையின் நான்கு ஊழியங்களில் ஒன்றினால் நடத்த வேண்டும். மேலும் ஒரு உண்மையான சபைக்கு இந்த நான்கு ஊழியங்கள் தேவையாக இருக்கின்றது.
52 ஒரே ஒரு ஊழியத்தினால் வழிநடத்தப்படும் ஒரு சபையாக நீங்கள் இருந்தால், அது ஒரு நபர் முழுவதும் கால்சியத்தினால் நிறைந்தவனை போன்று இருக்கும். நீங்கள் கால்சியத்தினால் நிறைந்து இருந்தால் நீங்கள் வியாதியாக இருக்கின்றீர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் உங்களுக்கு நான்கு ஊழியங்கள் தேவை, அப்பொழுது நீங்கள் ஒரு சமநிலையான சபையாக இருப்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
53 வார்த்தையின் ஊழியத்தில் பாஸ்டர் என்ற ஒரு ஊழியம் இல்லை. பாஸ்டர் என்பது வெறுமனே சபையில் உள்ள உதவி ஊழியக்காரர்கள் மற்றும் மூப்பர்களை போன்ற ஒரு பொறுப்பு. போதகன் ஒரு பாஸ்டராக இருக்க முடியும், சுவிசேஷகன் ஒரு பாஸ்டராக இருக்க முடியும், சபை தீர்க்கதரிசி ஒரு பாஸ்டராக இருக்க முடியும், அப்போஸ்தலன் பேதுருவைப்போல ஒரு பாஸ்டராக இருக்க முடியும், அது ஆண்டவர் அவருக்கு ஒப்படைக்கப்பட்ட ஒரு பொறுப்பு என்று நீங்கள் பார்க்கலாம். புரிந்து கொள்ளக்கூடியவன் எவனோ அவன் புரிந்து கொள்ளட்டும்!
--:--
--:--