(2005 ஜுன் 5, ஞாயிற்றுக்கிழமை காலை லோகாட்ஜரோ, ஆபிட்ஜான், ஐவரிகோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1நாம் ஜெபம் செய்வோமாக! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த காலை வேளையிலே உம்மோடு கூட நாங்கள் வந்து புசிப்பதற்கு சந்தோஷமாக இருக்கின்றோம். உம்முடைய கிருபையே எங்களை இங்கே அமர்த்தியது! இந்த அதே கிருபை தாமே எங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை வழிநடத்தி மேலும் உம்மிடத்தில் இருந்து வெளிப்பாடானது எங்களுக்கு அருளப்படுவதாக! ஒவ்வொரு சகோதர மற்றும் சகோதரிக்கு குறிப்பாக நான் ஜெபிக்கின்றேன், அவர்களுடைய மணி வேலைக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை பெற்றுக்கொள்வதற்காக எல்லா இடத்திலிருந்தும் இந்த காலை வேளையிலே வந்திருக்கின்றார்கள். மேலும் அவர்கள் சுகமடைந்து, விடுதலை பெற்று, ஆசிர்வதிக்கப்பட்டு திரும்பி போகும்படியாக அனுமதியும், தீர்க்கதரிசியை தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை பெறுவான் என்று கூறப்பட்டுள்ளது. ஆமென்!
2நல்லது! இப்பொழுது நாம் நம்முடைய வேதாகமங்களை மத்தேயு 4:1 முதல் 11 வரையில் உள்ள புத்தகத்திற்கு எடுத்துக் கொள்வோம். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு மத்தேயு 4:4 முதல் 11 வரை வாசிக்கின்றார்], மனதின் போராட்டம் என்ற பொருளின் பெயரில் நான் பேச விரும்புகிறேன். இது ஒரு தினசரி போராட்டமாகும். மேலும், 11 ஆம் வசனம் காண்பிக்கின்ற படியாக எல்லா ஆசீர்வாதங்களும், சாபங்களும் அதன் பின்பாக வருகின்றது: "அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்."
3உலகத்திற்கு அஸ்திவாரம் இடுவதற்கு முன்பாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜெயம் பெற்றார் என்று வேதாகமம் கூறுகின்றது. பூமிக்குரிய காரியங்களை சந்தித்து அவர் ஜெயம் பெற்றார், ஆவிக்குரிய காரியங்களை சந்தித்து அவர் ஜெயம் பெற்றார், மனிதனின் அனைத்து மகத்துவமான காரியங்களை சந்தித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களாக இருப்பதற்காக நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயரை பாத்திரராய் சுமக்கின்றோம்.
4நல்லது! நான் பேச விரும்பும் முதல் முக்கியமான விஷயம், நமது சொந்த மனதானது தூய்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. நீங்கள் மற்றவர்கள் உங்களைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கற்பனை செய்து அதை அறிக்கையிட்டு அல்லது அது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட நடத்தையை நீங்கள் பின்பற்றினால், பிறகு நீங்கள் மனதின் போராட்டத்தில் தோற்று விட்டீர்கள்.
5நீங்கள் இவ்விதமாக, "ஓ சகோதரன் பிலிப்பு,, இந்த உறவினர் அல்லது இந்த நபர் என்னுடைய ஜீவியத்தின் தோல்விகளுக்கு காரணம்" என்று நீ கூறினால் பிறகு மனதின் போராட்டத்தில் நீங்கள் தோற்று விட்டீர்கள். தேவன் தன்னுடைய சாயலில் உன்னை சிருஷ்டித்தார் என்பதை நீ ஒத்துக்கொள்ளவேண்டும் தேவன் உன்னை ஆசீர்வதித்து இருக்கின்றார் ஆனால் நீயோ தேவன் குறிக்காத சில வழிகளில் நடந்ததினால் அது இப்பொழுது உன்னுடைய தற்போதைய சூழ்நிலைக்கு வழி நடத்தி உள்ளது.
6உன்னுடைய சூழ்நிலைக்கு நீ பொருப்பாக இருக்கிறாய் என்பதை நீ ஒத்துக்கொள்ளவேண்டும் நீ இவ்விதமாக "ஒ சகோதரன் பிலிப்பு நான் அவனை தரிசனத்தில் கண்டேன் அல்லது என்னுடைய சபையில் ஒரு தீர்க்கதரிசி என்னிடத்தில் கூறினார் என்றால் பிறகு நீ உன்னுடைய மனதின் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றாய். உன்னுடைய சாபங்களை அதிகரிப்பதற்காக உன்னுடைய பெற்றோர்களுக்கு விரோதமாக எழும்பும் படியாக பிசாசானவன் உனக்கு வெளிப்பாடுகளை கொடுப்பான் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்.
7மேலும் பிசாசானவன் உன்னுடைய சபையின் தீர்க்கதரிசிக்குள்ளாக, உன்னுடைய சபையின் மேய்ப்பனுக்குள்ளாக, உன்னுடைய சபையில் உள்ள ஒரு ஸ்திரீ அல்லது ஒரு புருஷன் மூலமாக ஒரு வெளிப்பாட்டை கொடுத்து உன்னுடைய பெற்றோர்களை விட்டு அல்லது அவர்களுக்கு விரோதமாக எழும்பும் படியாக செய்ய முடியும். ஆனால் தேவனால் அப்படி செய்ய முடியாது.
8உங்களுடைய துன்பத்திற்கு நீங்கள் தான் ஆக்கியோனாக இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, நீ ஒரு ஸ்திரீயாக இருந்து, பரிசமிடாத ஒருவனோடு நீ ஜீவித்தால், பிறகு நீ தேவனுடைய சித்தத்திற்கு எதிர்மறையாக இருக்கின்றாய் என்று நீ அறிந்து கொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
9பட்டச்சான்றிதழ்களை கொண்டிருப்பவர்களே மற்றும் எந்த ஒரு சமுதாய அந்தஸ்தும் இல்லாதவர்களே உங்களுடைய துன்பங்களுக்கு ஒருவரும் அதனுடைய வேரில் இல்லை திருமணத்திற்கு வெளியே ஆதாம் மற்றும் ஏவாளை போன்று பாலியல் உறவுகளை நீங்கள் கொண்டிருந்தால் பூமியின் மேல் சாபங்களையும் துன்பங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறியவில்லையா? யாரோ ஒருவர் அதற்கு காரணமாக இருந்தார்களா? உபாகம் 28 ன் பிரகாரமாக நீ சாபத்தின் கீழ் இருக்கின்றாய்.
10"நீ இவ்விதமாக ஓ தீர்க்கதரிசியே அவன் எனக்கு பரிசம் இடவில்லை ஆனால் நாங்கள் சட்டப்படியாக திருமணம் ஆனவர்கள்" என்று சொல்லுகிறாய். தலைவர் ( Mayor ) உன்னுடைய தகப்பனாக இல்லாத பட்சத்தில் நீ சாபத்தின் கீழ் இருக்கிறாய் என்பதை நான் உனக்கு சொல்லுகிறேன் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருந்து கொண்டு பரிதாபமான வயதானவர்களை குற்றச்சாட்டை கொண்டிருக்கிறாய். பிசாசினாலும் தவறான தீர்க்கதரிசிகளினாலும் மற்றும் பொய்யர்களால் ஊக்குவிக்கப்பட்டு உன்னுடைய பெற்றோர்களை குற்றச்சாற்றி அவர்களை அவமானத்திற்கு வெளிப்படுத்துகின்றாய்.
11எந்த ஒரு மேய்பனும் தீர்க்கதரிசியும் சூனியக்காரர்களும் பிசாசாக ஒரு மாந்திரீக பூசாரியாக இருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். மாந்திரீக பூஜாரிகள் மாத்திரமே சூனியங்களை காண்பிக்க முடியும் தேவன் எனக்கு கொடுத்த விசுவாசியின் மேலாக சூனியத்தின் ஆவியை நான் கண்ட நாளிலே ஒருவரும் அறிவதற்கு முன்பாகவே இந்த விசுவாசியை நான் விடுவிப்பேன் நீங்கள் பார்க்கிறீர்களா ? அந்த தீர்க்கதரிசிகள் சூனியக்காரர்கள் வெறுமனே சாத்தானுடைய கரங்களில் இருக்கும் ஆயுதங்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய நீங்கள் தோற்றுப்போனீர்கள்
12நீங்கள் சந்தேகத்துக்கிடமாக அல்லது யாரோ ஒருவருடத்தில் உங்களுடைய நடத்தையை மாற்றிக்கொண்டாலும் மனதின் போராட்டத்தில் நீங்கள் தோற்றுப் போனீர்கள் என்று அறியுங்கள். நீ உண்மையான தேவனுடைய பிள்ளையாக இருந்தால் மனதின் போராட்டத்தில் ஜெயம் கொள்ள வேண்டும் நான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய கண்களை கடந்த காலத்திற்கு திருப்புங்கள் உன்னுடைய இருதயத்தில் யாராவது ஒருவரை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் பிறகு நீ மனதின் போராட்டத்தில் தோற்று விட்டாய்.
13சமீபமாக, ஒரு சுவிசேஷ சபையின் மேய்ப்பன் என்னிடத்தில் அவனுடைய தாயார் ஒரு சூனியக்காரி என்றும் மற்றும் இது அவனுடைய சொப்பனத்தில் பின்தொடர்ந்தது என்று என்னிடம் கூறினான். மேலும் நான் அவனிடத்தில் உன்னுடைய தாயாரை கண்ட நாளிலே நான் என்ன செய்யவேண்டும் என்று அவனிடத்தில் கேட்டேன்! பிறகு அவன் தர்மசங்கடத்திற்கு உள்ளானான். நீங்கள் பார்க்கிறீர்களா ? இதுபோன்ற மனிதன் மேல் காமின் சாபம் உள்ளது. நாம் அதை வாசிப்போம்... "அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைத் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்." நீங்கள் பார்க்கிறீர்களா? கடந்த காலத்தில் நீங்கள் அதை செய்திருந்தால் இனி ஒருபோதும் அதை செய்ய வேண்டாம் அவர்கள் எல்லோரும் மாந்திரீக பூஜாரிகள். உலகத் தோற்றம் முதற்கொண்டு சூனியமானது இருக்கின்றது. ஆனால் ஒவ்வொரு தீர்க்கதரிசியின் ஊழியத்தையும் பாருங்கள்! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை பாருங்கள்! அவர்களில் எத்தனை பேர் தங்களுடைய சீஷர்களின் குடும்பத்தில் சூனியக்காரர்கள் துரத்தி இருக்கிறார்கள்?
14ஒரு தேவ மனுஷன் உன்னுடைய பெற்றோர்களை மந்திரவாதிகள் என்று சொல்லி நீ அவனுக்கு செவிகொடுத்தால் நீ மனதின் போராட்டத்தில் தோற்றுப் போனாய். வாழ்க்கையில் கஷ்டங்களை கொண்டிருப்பவர்களே உங்களுடைய கஷ்டங்களின் ஆகியோன் அது நீங்கள் தான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும் தேவனிடத்தில் ஜெபித்து கதறுங்கள் ஆகவே அவர் தாமே உங்களுக்கு கிருபையை அருள்வாராக நீங்கள் உண்மையாகவே தேவனுடைய வழியை பின்பற்றினால் எந்த ஒரு மந்திரமும் உங்களை அணுகாது மேலும் ஆசிர்வாதமானது உங்களை பற்றிக்கொண்டு உங்களிடத்தில் வந்தடையும் என்று எழுதப்பட்டிருக்கிறது உங்களுடைய ஜீவியத்தின் மேல் தேவன் முன்னறிவித்த ஆசீர்வாதத்தை எந்த ஒரு சூனியக்காரனாளும் தடுத்து நிறுத்த முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
15இப்பொழுது, இதற்கு செவி கொடுங்கள் இதற்கு செவி கொடுங்கள்: நீங்கள் இவ்விதமாக: "ஓ சகோதரர் பிலிப்பு செய்தியை குறித்து பேசுவதில் நான் வெற்றி பெறவில்லை நான் வெட்கமடைந்தேன் அல்லது வெறுக்கப்பட்டு விடுவேனோ என்று பயந்தேன் என்று சொன்னால் பிறகு நீ மனதின் போராட்டத்தில் தோல்வியுற்று இருக்கிறாய். வேதாகமம் மத்தேயு 10:32 கூறுகிறதாவது,"மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்."
16ஜன கூட்டத்தாருக்கு முன்பாக உன்னுடைய விசுவாசத்தை காண்பிக்க முடியாவிட்டால் நீ மனதின் போராட்டத்தில் தோற்றுப் போய் இருக்கின்றாய். நீ இருக்கும் எல்லா இடத்திலும் வேலை ஸ்தலத்திலும் பிரயாணத்திலும் உன்னுடைய குடும்பத்திலும் நீ எங்கு இருந்தாலும் உன்னை சுற்றி உள்ள அனைவரும் செய்தியை அறிந்திருக்க வேண்டும் உன்னை சுற்றி உள்ள மக்கள் அனைவரும் செய்தியை தெரிந்து கொள்ளவேண்டியது உன்னுடைய கடமையாகும் அவர்கள் விசுவாசிக்கவில்லை என்றால் அது உன்னுடைய பொறுப்பு அல்ல ஆனால் அவர்கள் அதை கேட்கும் படியாக செய்வது உன்னுடைய பொறுப்பாகும்
17இப்பொழுது, இன்னுமாக மனதின் போராட்டத்தில் நாம் மற்றொரு விஷயத்திற்கு திரும்புவோம். ஒரு உறவினரோ அல்லது உன்னுடைய மனைவியோ உன்னிடத்திலிருந்து ஒரு சண்டையை எதிர்பார்த்தால் அல்லது சில சண்டைகளில் சம்பந்தப்படும்படியாக உன்னை தேடினால் பிசாசை பகுத்தறிந்து திடமாய் இருக்கவேண்டும் உன்னுடைய நண்பனிடத்தில் ஒரு பெரிய வீட்டையோ ஒரு பெரிய வாகனத்தையோ மற்றும் நீ கொண்டிருக்காத காரியங்களை நீ பார்க்கும் பொழுது அதை இச்சிக்கும் படியாக மனதின் போராட்டத்தில் தோற்றுப் போக வேண்டாம். ஆனால் உன்னுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியை நீ இனங்கண்டு கொண்டததினால் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீ கொண்டிருக்கும் செல்வமானது ஒரு போதும் அழியாது. தன்னிடத்தில் ஐஸ்வரியங்கள் இருந்தாலும் உலகமானது நித்திய செல்வத்தை பெற முடியாது .
18உன்னுடைய தாயாரோ அல்லது உன்னுடைய மனைவி இவ்விதமாக "இன்னார் இன்னார் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்னிடத்திலே ஒரு தைரியமான கணவன் அல்லது மகன் இருக்கிறான் என்று அவனுக்கு காண்பியும் என்று சொல்வார்கள்" ஆனால் ஒன்றும் செய்ய வேண்டாம். மனதின் போராட்டத்தில் தோற்க்க வேண்டாம் நீங்கள் சோதனையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் மேலும் மனதில் போராட்டத்தில் இழக்க கூடாது,
19மனதின் போராட்டத்தின் உயர்நிலையான வெற்றியானது சோதனை மற்றும் பரிட்ச்சையின் தருணங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜெயம் கொண்ட பிறகு, தூதர்கள் அவருக்கு ஊழியம் செய்யும்படியாக வந்தார்கள் ஸ்தேவான் ஜெயம் கொண்ட பிறகு பரலோகமானது திறக்கப்பட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மகிமையிலே இருப்பதை கண்டான்.
20நீங்கள் மனதின் போராட்டத்தை எதிர்க்க வேண்டும். மேலும் தேவன் உங்களை பெலப்படுத்துவார். லூக்கா 22:44 வேதாகமம் கூறுகிறதாவது, அவர் போராட்டத்தில் இருந்ததினால் , அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது." பெலப்படுத்துவதற்காக ஒரு தூதன் வந்தான். அது என்ன போராட்டம்? மனதின் போராட்டம்.
21உங்களுடைய நடையின் குறிப்பிட்ட நேரத்திலே, இனி ஒரு போதும் ஆர்வமும் சுறுசுறுப்பும் நீங்கள் உணராத போது சோர்வடைய செய்கிற எண்ணங்கள் உங்கள் இடத்தில் மீண்டும் மீண்டுமாக வரும் அது மனதின் போராட்டம்! உன்னுடைய முழு இருதயத்தோடும் நீ நேசிக்கின்ற ஸ்திரீயானவள் செய்தியிலிருந்து உன்னை நகர செய்வாள் அது மனதின் போராட்டம்! உன்னுடைய முழு இருதயத்தோடும் நீ நேசிக்கின்ற ஒருவன் செய்தியிலிருந்து உன்னை நகர செய்வான், அது மனதின் போராட்டம் ஆனால் நீ ஒருபோதும் மனதின் போராட்டத்தில் தோற்க கூடாது ஏனெனில் நீ அழியாத ஒரு பொக்கிஷத்தை கொண்டிருக்கிறாய். ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22மனதின் போராட்டத்தில் ஒரு போதும் நான் ஏன் இவ்வளவாக கஷ்டப்படுகிறேன் மற்றும் அநேக காரியங்களிலிருந்து நான் துண்டிக்கப்பட்டிருக்கிறேனோ? இந்த எல்லா காரியமும் இருந்தபோதிலும் நான் பரதேசிக்கு செல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று ஒரு போதும் சொல்ல வேண்டாம். சகோதரர் அல்லது சகோதரியே நீங்கள் பரதேசிக்கு செல்வதற்கான ஆதாரமானது உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியின் மீது விசுவாசம் கொண்டுள்ளீர்கள் மேலும் நீங்கள் செய்யவேண்டிய காரியமானது பேழையை விட்டு வெளியே வரக்கூடாது.
23நினைவு கொள்ளுங்கள் ஒரு நாளிலே சர்ப்பமானது உன்னுடைய கையிலே இந்த செய்தி இருப்பதை கண்டு, தந்திரத்தோடு ஏளனத்தோடு எந்த ஒரு பிசாசின் புத்திரனிடத்தில் இருக்கும் சுபாவத்தை போன்ற "ஓ இந்த காக்குவ் பிலிப்புவை எனக்கு தெரியும் அந்த முதற் கொண்டு நீங்கள் மனதின் போராட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும் திசைதிருப்பப்பட்டு போக வேண்டாம் அது உண்மையில் உனக்கு நிரூபிப்பதற்காக வந்துள்ளது இந்த செய்தியை சென்று அறிவிப்பதற்காக .
24நீங்கள் தீர்மானம் செய்தால் அது மிக நல்லது ஆனால் குறிக்கப்பட்ட நேரத்தில் சாத்தானானவன் மனதின் போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்துவான் ஆனால் மனதின் போராட்டத்தில் நீங்கள் தோற்று போக கூடாது ஒவ்வொரு நாளும் பிசாசானவன் எண்ணங்களை அனுப்புவான் இவர் உண்மையான தீர்க்கதரிசி என்று நீ நிச்சயம் உடையவனாக இருக்கின்றாயா இது அதுவா அது இதுவா உங்களுடைய ஜீவியம் முழுவதும் அது அதிகமாகவே இருக்கும் ஆனால் நீங்கள் ஒரு போதும் மனதின் போராட்டத்தில் இழந்து வேண்டாம்.
25இந்த அனுதின போராட்டத்தில் இயேசு கிறிஸ்து தான் மெய்யான மேசியா என்று அறிய சில தூதர்களை யோவான் ஸ்நானகன் அனுப்பினான். மேலும் உண்மையான சபையானது கர்த்தர் இயேசு வருமளவும் எப்பொழுதும் இந்த போராட்டத்தை எதிர்கொள்ளவும்.
26ஆனால் நாம் மறுபடியும் யோவான் ஸ்நானகனை கருத்தில் கொள்வோம் தன்னுடைய செய்தியை எப்படி அவரால் கேள்வி கேட்க முடிந்தது மேலும் அவரே மேசியா என்று அறிவித்தான் யோவான் தாமே யோவான் 1:33 இல் "நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்."
27வஞ்சிக்கிறவர்கள் மாத்திரமே மனதின் போராட்டத்தில் எதிர்கொள்ளாமல் பாதுகாக்கப்பட்டு தாங்கள் செய்து கொண்டிருக்கிறதில் வைராக்கியத்துடன் தொடர்ந்தனர். ஆனால் என்னுடைய பணியை பொருத்த வரையில் நான் ஒருபோதும் மனதின் போராட்டத்தை கொண்டிருக்க மாட்டேன் ஏனெனில் நான் கடந்து சென்ற யாவும் எனக்கு முன்பாக ஜீவித்த தீர்க்கதரிசிகளின் வரிசையில் உள்ளது.
281993 இல் நான் ஏற்கனவே ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபையில் இருந்து நான் வேதத்தை குறித்து ஒரு எண்ணத்தை கொண்டிருந்தால், 1993 இன் தரிசனமானது நான் கடந்து செல்லும் காரியங்களின் செயல் விளைவாக இருக்கின்றது என்று நான் சொல்லுவேன். நான் தொடர்பு கொண்ட சபையின் குறி சொல்லும் ஆவியானது அதை செய்தது என்று நான் கூறுவேன் மனதின் போராட்டத்தில் நான் தோற்று போயிருப்பேன்; நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பெரிய காரியங்களை கொண்டிருந்தனர்.
29வில்லியம் பிரன்ஹாமின் செய்தியைக் குறித்து நான் கேட்டுக்கும் பொழுது நான் பாப்டிஸ்டு சபையில் இருந்து விசுவாசியாமல் இருந்திருந்தால், நான் ஒரு வினோதமான தீ என்று நான் கூறியிருப்பேன் ஏனெனில் நடு ராத்திரியானது முற்றிலுமாக சாயங்கால வேளை செய்தி வழியாக கடக்க வேண்டும். யோசுவா மோசேயை கடந்து வந்தார், எலிசா எலியாவை கடந்து வந்தார் மற்றும் பவுல் சிஷர்கள் முலமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கடந்து வந்தார். ஆகையால் நான் சாயங்கால வேளை செய்தியை சந்தித்திருக்க வேண்டும்.
30ஒருவேளை ஊழியத்திற்கு முன்பாக நான் ஸ்திரீகளை அறிந்திருந்து நான் குடித்து புகை பிடித்திருந்தால் நான் மத்தேயு 25 : 6 ன் தூதனாக இருக்க வேண்டும் என்று நான் விசுவாசுத்திருக்க மாட்டேன். வேதத்துக்கு வெளியே நாம் நடுராத்திரியில் இருக்கின்றோம் மற்றும் அங்கே ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பார் என்று வேதத்திற்கு வெளியே நான் படித்திருந்தாலும் அல்லது கேள்விப்பட்டிருந்தாலும் மனதின் போராட்டத்தில் தோற்று போயிருப பேன், பிறகு பிசாசின் பிள்ளைகள் சரியாக இருந்திருப்பார்கள் மேலும் நான் சந்தேகப்பட்டு நான் செய்கின்ற யாவையும் குறித்து கேள்வி எழுப்பி இருப்பேன். ஆனால் அது அவ்விதமாக இல்லை ஏனெனில் 1993 தரிசனத்திற்கு முன்பாக நான் ஒரு போதும் ஒரு சபைக்கும் சென்றதில்லை அல்லது வேதத்தை வாசித்ததும் இல்லை. இந்த ஊழியத்திற்காக வெளிப்படையாக ஒரு கன்னிகையை மனைவியாக தேடி இருப்பேன். மனதின் போராட்டத்தை நான் இழந்து இருப்பேன்.
31மேலும் இன்று பூமியின் ஐஸ்வரியங்கள் என்னுடைய நோக்கமாக இருந்திருந்தால் நான் என்னுடைய பணிகளையும் உறுதியான வருமானத்தையும் விட்டுவிட்டு பிரசங்கிக்க வந்திருக்க மாட்டேன். நான் ஐசுவரியவானாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இருந்தால் பொது விடுதி, சினிமா மற்றும் அதுபோன்ற காரியங்களில் மேலாளர்களாக இருக்கிற சகோதரர்களிடத்தில் அந்த வேளையில் தொடர்ந்து செய்து வேறு வேலை கிடைக்கும் மட்டும் நான் தசமபாகம் மற்றும் காணிக்கைகளை செலுத்த வேண்டாம் என்று கூறமாட்டேன். சகோதரர்களே வருத்தப்பட வேண்டாம் கவலைப்பட வேண்டாம் இதுதான் வெளிப்பாடு நீங்கள் ஒரே முறையில் நிறுத்த வேண்டியதாக இருந்தால் நான் உங்களிடத்தில் கூறியிருப்பேன்.
321993 ன் தரிசனமானது ஜனங்கள் தானாகவே வருவார்கள் என்று காண்பிக்காமல் இருந்திருந்து மேலும் இந்த தரிசனமானது பிரன்ஹாமில்டுகள் அல்லது பாப்டிஸ்டுகள் வேதத்தின் அடிப்படையில் முரண்பாடாக்கப்பட்டிருந்தால், நான் மனதில் போராட்டத்தில் இழந்து போய் இருப்பேன். மேலும் என்னுடன் சண்டையிட வந்தவருக்கு முன்பாக எப்பொழுதும் நான் உத்தமமாக சபைக்கு முன்பாக அவர்களை வரவேற்கின்றேன். அவர்கள் இந்த செய்தியை முரண்பாடு செய்வதில் வெற்றி அடைந்து இருந்தால் மனந்திரும்புவதற்கு முதல் ஆளாக நான் இருந்திருப்பேன் ஆனால் நாங்கள் செய்தியின் ஒரே ஒரு கருத்தில் கூட நாம் ஒரு போதும் முரண்பட்டதில்லை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
33நடுராத்திரி சத்தமானது பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் அறிவிக்கப்படாமல் இருந்தால் மத்தேயு 25:6 வெறுமனே ஒரு உவமை என்று நான் விசுவாசித்திருப்பேன். ஆனால் இந்த செய்தியை ஒரு போதும் முரன்பாடு கொண்டிருக்கவில்லை மேலும் நாங்கள் எந்த ஒரு எதிரிகளையையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே நாங்கள் ஒருபோதும் மனதின் போராட்டத்தில் இழந்து போகவில்லை.
34எதிரியானவன் எங்களுக்கு எதிராக வரும் பொழுது அவன் ஜனங்கள், திட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களை எங்களுக்கு எதிராக எழுப்புகிறான் ஏனெனில் அவனால் வார்த்தையை எடுத்துக்கொண்டு எங்களிடம் யுத்தம் செய்ய முடியவில்லை ஏனெனில் நாங்களே வார்த்தையின் மணவாட்டி நீங்கள் இருந்தால் நீங்கள் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளாக இருந்தால் சாத்தானை ஆராதிக்கிறவர்களாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிய வேண்டும் மேலும் தேவனுடைய பரிபூரண சித்தமானது உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசி இடம் உள்ளது.
35மேலும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் இன்னும் உள்ள தேவனுடைய பிள்ளைகளே, பிசாசானவன் உன்னிடத்தில் வந்து இப்படி பேசும்போது "அந்த காரியம் அந்த சபையில் தான் உனக்காக செய்யப்பட்டது, நீ விடைபெற போகிறாயா? நீ நன்றியுள்ளவனாக இல்லை!!" பிறகு நீ இப்படி சொல்ல வேண்டாம், "சகோதரர் பிலிப்பு இந்த செய்தியானது உண்மை என்று நான் அறிவேன் ஆனால் இந்த சபையில் உள்ள ஜனங்கள் என்னிடத்தில் மிக கனிவாக இருந்தார்கள் என்னுடைய கஷ்டமான நேரங்களில் அவர்கள் என்னை தாங்கினார்கள் அவர்கள் இந்த இந்த காரியங்களை எனக்காக செய்தார்கள்..."
36சகோதர அல்லது சகோதரிகளே, உணர்ச்சிகள் உங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம். பிசாசானவனே உங்களிடத்தில் பேசுகிறான் அல்லது இந்த விதத்தில் ஊக்குவிக்கிறான். பார்வோன் மற்றும் அவனுடைய வீட்டார் மோசேவிற்கு செய்த எல்லா நல்ல காரியங்களையும் தேவன் மாத்திரமே அறிவார். நீங்கள் முற்றிலுமாக அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் என்று அழைக்கப்படுகிற சாத்தானின் விடுதிகளை விட வேண்டும். நீங்கள் மாய்மாலக்காரர்களாக இருக்க கூடாது ஆனால் நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை காண்பிக்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
37மனதின் போராட்டமானது பூமியில் எங்கும் நம்மை பின் தொடரும் என்று அறிந்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் இந்த செய்தியை விசுவாசிக்கும் ஒரு எளிமையான உண்மையே நீங்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே அவரோடு கூட நீங்கள் ஒரு பங்கை கொண்டு உள்ளீர்கள் என்று காண்பிக்கின்றது மேலும் 24 ஏப்ரல் 1993 ன் தரிசனத்தின் பெருங்கூட்டத்தின் எண்ணிக்கையில். நீங்கள் இருந்தீர்கள். உங்களால் காண முடிகிறதா? உண்மையில் இது இந்த செய்தியை விசுவாசிக்கும் அனைவருமே. அது அப்போஸ்தலர் 13:48 "நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்...".
38மேலும் தேவனுடைய பிள்ளைகள் மாய்மாலக்காரர்களாக இருப்பதில்லை உங்களுடைய இருதயம் ஒரு காரியத்திலிருந்து தூரமாகி வளரும் பொழுது, அந்த காரியத்தின் மீது உங்களுடைய ஆத்துமாவை வழிநடத்த வேண்டாம். நாம் இங்கே அங்கே என்று சிதறி கிடந்தோம், 24 ஏப்ரல் 1993 ல் தேவன் நாம் ஒரு செய்தியை சுற்றி கூடுவோம் என்று வெளிப்படுத்தினார். ஆகவே நீங்கள் இந்த செய்தியை விசுவாசித்தால், மனதின் போராட்டத்தில் பிசாசானவன் உங்களுடைய மனதில் என்ன அனுப்பினாலும், என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் அறிவீர்கள்..
39பவுலின் உடன் ஊழியக்காரனாகிய திமோத்தேயும் கூட தனக்கு அடிக்கடி வரும் வயிற்று வலியிலிருந்து சுகமடையாமல் இருந்த வேலையிலும், தன்னுடைய மணி வேளைக்கான நித்திய ஜீவனுடைய வார்த்தைகளை பவுல் உடையவனாக இருக்கின்றான் என்று அவனுடைய ஆத்துமா அவனிடத்தில் கூறினது. முடிவு மட்டும் நாம் முறுமுறுக்காமல் இருந்து முடிவு மட்டும் திடமாக நிற்க்க வேண்டுமென தேவன் நம்மிடத்திலிருந்து கோருகிறார். இதை தான் யூதர்கள் பாலைவனத்திலே புரிந்துக் கொள்ளாமல் இருந்தார்கள.
40மனதின் போராட்டத்தில், தேவன் இனி ஒருபோதும் அவர்களிடத்தில் இல்லை, அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் அதிகமான பாடுகளுக்கு மேலாக அவர்கள் பாடுகளிலேயே அழிந்து போக போகிறார்கள் என்று பிசாசு அவர்களை விசுவாசிக்கும்படி செய்தான். ஆனால் இவை எல்லாவற்றிலும், நாம் திடமாக நிற்க வேண்டும் ஏனெனில் நாம் பூமியின் மேல் கழிக்கும் வருடங்களை பார்க்கும் பொழுது நித்தியத்தை ஒப்பிட முடியாதது. சகோதர சகோதரிகளே முடிவுபரியந்தம் நாம் மனதின் போராட்டத்தில் திடமாக இருக்க வேண்டும் இது ஒரு முடிவில்லாத போராட்டம், ஆனால் இந்த செய்தியில் தேவன் நமக்கு தோற்கடிக்கும் ஆயுதங்களை நமக்கு கொடுத்திருக்கிறார் ஏனெனில் நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கின்றோம் ஆமென்!