en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 53 (Kc.53) : ஏழு பரிமாணங்கள்
(மே 1, 2005, ஞாயிரு காலையன்று லோகாட்ஜரோ, அபிட்ஜான், ஐவரிகோஸ்டில் பிரசஙகிக்கப்பட்டது)
1 நல்லது, இந்த தவறான பதிப்பு வேதாகமங்களை (bibles) சுட்டெரிக்கவேண்டுமென்பது தேவனிடமிருந்து வரும் கட்டளை என்று நாங்கள் ஏன் விசுவாசிக்கிறோம் என்பதை புதியவர்களுக்கு விளக்க விரும்புகிறேன். அதற்குப் பின்னால் ஒரு குறிசொல்லும் ஆவி நிற்கிறது என்பதை ஒரு தீர்க்கதரிசி மூலம் தேவன் வெளிப்படுத்தியதால், சிலர் அதை எரித்து விடுகின்றனர், அதுதான் உண்மையான விசுவாசம். தேவன் அதைச் சொன்னதால் அவர்கள் விசுவாசத்தினால் அதைச் செய்கிறார்கள். ஆனால் மற்றவர்கள், பிழைகளை காண்கிறதினால் அவைகளை சுட்டெரிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள்: "லூயிஸ் செகண்டு, இறையியல் டாக்டர்" என்றிருப்பதை பார்க்கிறார்கள். அங்கே பிழையேதும் இல்லையென்றால், அவர்கள் அதை நம்ப மாட்டார்கள். ஆனால், மத்தேயு 18:3 -ல் கர்த்தர்: "நீங்கள்... சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று கூறினார்.
2 காரியம் இப்படியிருக்க, நாங்கள் வேதாகமத்தை எரிக்கிறதில்லை, பரிசுத்த வேதாகமம் (Holy Bible) எங்களுடைய அஸ்திபாரமாக இருக்கிறது, ஆனால் கள்ள மொழிபெயர்ப்பு வேதாகமங்களையே (bibles) சுட்டரிக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது]. அப்போஸ்தலர் 19:19 -ஐ வாசிக்கலாம்: "மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்." நீங்கள் பார்க்கிறீர்களா ? அதுதான் ஆதியிலே நடந்தது.
3 அவர்கள் வெளியரங்கமாக அறிக்கை செய்ததாக வசனம் 18 கூறுகிறது. "விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.". அங்கே புத்தகங்களின் இரண்டு பிரிவுகள் இருந்தன: ஒருபுறத்தில் "ஏற்கப்படாத புத்தகங்கள்" என்று அழைக்கப்பட்ட புத்தகங்களும், மறுபுறத்தில் "தால்முத்" என்று அழைக்கப்பட்ட புத்தகங்களும். தால்முத் என்பது மோசே கூறினது என்னவென்று விளக்குவதை நோக்கமாகக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ரபீக்களின் புத்தகங்களாகும். முகம்மது கூறினது இன்னதென்று குறிப்பிடுவதும் விளக்குவதும் நோக்கமாகக் கொண்ட இஸ்லாமின் ஹதீஸ்களின் சொரூபமாக தால்முத் உள்ளது. தால்முத் ஒரு பேய் புத்தகமாக இருக்கிறது. அங்கே பாபிலோனின் தால்முதும் எருசலேமின் தல்மூதும் உள்ளது.
4 புனித நூல்கள் என்று அழைக்கப்படுகிற அவை அனைத்தும் அப்போஸ்தலர்களால் சுட்டெரிக்கப்பட்டன. மோசே கூறியவற்றின் பேரில் ஒரு பெரிய வெளிச்சத்தை கொண்டுவருகின்றவைகள் என உரிமைகோரப்பட்ட புத்தகங்கள் அவை. அப்போஸ்தலர்களோவெனில்: "அதை எழுதினது யார் என்பது ஒரு பொருட்டல்ல, அவனது உத்தமம், மோசேயோடு அவனுக்கு இருக்கும் இணைப்பு ஒரு பொருட்டல்ல, அந்தப் புத்தகங்களை சுட்டெரியுங்கள். ஏனெனில் அந்த புத்தகங்களுக்கு பின்னால் இருப்பது பிசாசுகள் தான், விழுந்துபோன தூதர்களான அவைகளே நீங்கள் ஜெபிக்கும் போது உங்களுக்கு மறு உத்தரவு கொடுக்கிறவைகள். உங்களை சிருஷ்டித்த தேவனும், மோசேயின் தேவனுமானவரே எங்களை உங்களிடத்திற்கு அனுப்பியுள்ளார்!" என்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
5 அந்தக் புத்தகங்களை சுட்டெரிக்கும்படி தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டார்; ஏனென்றால் எல்லாவற்றின் முடிவில் சாத்தானும் அவனுடைய தூதர்களும் அக்கினியிலே தள்ளப்படுவார்கள். அது அவர்களது வேளைக்குரிய செய்தியின் கட்டளையாக இருந்தது. ஆனால் அதனோடுகூட, சாத்தானின் எந்த மறைவிடமும் சுட்டெரிக்கப்படவேண்டும் என்பது தேவனுடைய பிரமாணமாகவும் இருந்தது மேலும் அந்நாட்களில் அந்தப் புத்தகங்கள் பூமியிலே சாத்தானின் மறைவிடங்களாக இருந்தன.
6 மேலும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பிறகு பரிசேயருடைய சுவிசேஷக புத்தகங்களையும், பழைய ஏற்பாட்டின் மற்றும் மோசேயின் ஐந்து புத்தகங்களான தோராவின் தவறான மொழிபெயர்ப்புகளையும், யூதமத துறவிகளின் சுவிசேஷக புத்தகங்களையும், யூத மார்க்கத்தமைந்த கிரேக்கர்களின் சுவிசேஷக புத்தகங்களையும், மோசேயின் சீஷர்களின் சுவிசேஷக புத்தகங்களையும், மோசேயின் கூட்டாளிகளின் சுவிசேஷக புத்தகங்களையும், இந்த ரபீயின் புத்தகம், அந்த ரபீயின் புத்தகம் ... இந்த ஆசாரியனின் புத்தகம், அந்த பிரதான ஆசாரியனின் புத்தகம் ... இந்த வேதபாரகனின் புத்தகம் ... அந்த கண்காணியின் புத்தகம் அத்தகைய மற்றும் அத்தகைய காரியங்களைப் பற்றிய புத்தகங்கள், அனைத்து வகையான புத்தகங்களையும் கொண்டுவந்தார்கள்... ஆனால் அப்போஸ்தலர்கள் அவை அனைத்தையும் அப்போஸ்தலர் 19:19 -ன் பலிபீடத்தின் மீது சுட்டெரித்தனர்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
7 எத்தகைய புத்தகத்தை ஒரு யூதன் நம்புவான்? அல்லது இந்தப் புத்தகம் மோசே, ஆபிரகாம், எலியா, தாவீது அல்லது தீர்க்கதரிசிகளைப் பற்றி பேசாதருந்தால் அதை வைத்திருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள், "சகோதரன் பிலிப்பு, அக்காலத்திலே ஜனங்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவில்லை, அவரவர் விரும்புகிறபடி செய்தார்கள்." என்று சொல்கிறீர்கள். இல்லை, சகோதரரே, அவர்கள் யூதர்கள் என வேதாகமம் கூறுகிறது, மேலும் மோசேயின் நாட்களில் எழுத்துப்பிரகாரமாக நியாயப்பிரமாணமானது கைக்கொள்ளப்பட்டது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்! ஒரு ஆதாரமாக, விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயின் காரியம் உள்ளது, இயேசு தலையிடாமலிருந்தால் அவள் கல்லெறியப்பட்டிருப்பாள். நீங்கள் காண்கிறீர்களா?
8 உபாகமம் 18 என்ன சொல்கிறது? "...குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்." நீங்கள் பார்க்கிறீர்களா? இன்று கிறிஸ்தவ புத்தகங்கள் என அழைக்கப்படுகின்றவைகளைப் போல, நித்தியமான யெகோவாவும் மோசேயும் மையப் புள்ளியாக இருந்த மத புத்தகங்கள் தான் அவைகள்.
9 மேலும் ஒரு ஆசாரியனின் பெயரை கொண்டிருக்கிற ஒரே ஒரு புத்தகத்தை பழைய ஏற்பாட்டிலிருந்து எனக்குக் காண்பிக்கும்படியாக இன்றைக்கு, நான் நின்று கொண்டிருக்கிற இந்த இடத்திலிருந்து, தேவனுக்கு முன்பாகவும் அவருடைய பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் மனுஷர் முன்பாகவும், முழு கிறிஸ்தவத்துக்கும் நான் சவால் விடுகிறேன்! அங்கே இஸ்ரவேலிலே ஆசிரியத்துவத்தில் அசாரியா, அமத்சியா, சாதோக், அபியத்தார்... போன்ற வல்லமைமிக்க ஆசாரியர்கள், வல்லமைமிக்க வேதபாரகர்கள், வல்லமைமிக்க மனிதர்கள் இருந்தனர்... இயேசுவும் ஆசாரியன் அபியத்தாரை ஒரு குறிப்பாக மேற்கோள் காட்டினார் ஆனால் பழைய ஏற்பாட்டின் எந்தப் புத்தகமும் அவர்களின் பெயர்களைக் கொண்டிருக்கவில்லை, ஒருபோதுமில்லை! ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மட்டுமே எழுதுவதற்கு உரிமைபெற்றிருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
10 இன்ன தீர்க்கதரிசியின் புத்தகம், இன்ன தீர்க்கதரிசியின் புத்தகம், இன்ன தீர்க்கதரிசியின் புத்தகம் என நம்மால் காணமுடியும் ஆனால் அவன் ஒரு கண்காணியாகவோ அல்லது பிரதான ஆசாரியனாக இருந்தாலும் இன்ன ஒரு ஆசாரியனின் புத்தகம் என்று ஒருபோதும் நாம் காணமுடியாது! நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு மேய்ப்பன், ஒரு அப்போஸ்தலன், ஒரு உபாத்தியாயன், ஒரு சபை-தீர்க்கதரிசி, ஒரு பிஷப், ஒரு ரெவரண்டு அல்லது வேறு எவராயினும் அவன் எவ்வளவு வல்லமைமிக்கவனாக இருந்தாலும் ஒரு பொருட்டல்ல, தேவன் ஒரு புத்தகத்தை எழுத அவனுக்கு ஒரு போதும் உரிமை கொடுக்கவில்லை!
11 நீங்கள், "ஓ சகோதரன் பிலிப்பு, அப்போஸ்தலன் பேதுரு எழுதினான் ..." என்று சொல்கிறீர்கள். ஆம் சகோதரர்களே! ஆனால் இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்கள் அதை செய்யலாம். இயேசு கிறிஸ்து என்னும் நபராக தேவன் ஒரு மனித உருவில் இருந்தபோது, அவர்கள் தீர்க்கதரிசிகளாக தேவனிடமிருந்து நேரடியாக தங்களது செய்தியை பெற்றனர். எனினும், அவர்கள் தூரமாக போகவில்லையென்பதை பாருங்கள், அவர்கள் வேதபாரகர்களாக எழுதினார்கள். இது தூய சத்தியமாக இருக்கிறது!
12 வேதாகமத்தில் பாருங்கள்! நெகேமியாவின் புஸ்தகம், எஸ்றாவின் புஸ்தகம், ராஜாக்களின் புஸ்தகம், நாளாகமம் ஆகியவை இஸ்ரவேல் புத்திரருடைய மற்றும் ராஜாக்களுடைய தொடர்வரலாறாக வேதபாரகரால் எழுதப்பட்டதாக இருக்கிறது. நீங்கள் காண்கிறீர்களா? யோபு ஒரு தீர்க்கதரிசி. சங்கீதங்களை எழுதியிருக்கிற தாவீது ஒரு தீர்க்கதரிசி. தாவீது ஒரு தீர்க்கதரிசி என்று வேதாகமம் கூறவில்லையா? [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது]. [ஆசிரியர் குறிப்பு: "அப்போஸ்தலர் 2:30" என்று ஒரு சகோதரர் கூறுகிறார்]. ஆமென்! தாவீது ஒரு தீர்க்கதரிசி என்று அப்போஸ்தலர் 2:30 கூறுகிறது. நீங்கள் காண்கிறீர்களா?
13 நாம் பழைய ஏற்பாட்டைப்பற்றிப் பேசும்போது, நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசிகளையும் பற்றி பேசுகிறோம்! மோசே, யோசுவா, சாமுவேல், எரேமியா, ஏசாயா, எசேக்கியேல், தானியேல், தானியேலுக்குப் பிறகு, மல்கியாவோடு முடியும் மட்டும் தொடர்ச்சியாக பன்னிரண்டு தீர்க்கதரிசிகள். நீங்கள் பார்க்கிறீர்களா ? ஒரு ஆசாரியன் எழுதிய ஒரு புத்தகத்தை மட்டும் எனக்குக் காட்டுங்கள் ...! ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு மட்டுமே ஒரு புத்தகம் எழுத உரிமை உண்டு, ஏனென்றால் அவன் ஒருவனே ஒரு செய்தியைக் கொண்டிருப்பவன்!
14 இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு வேறு எந்த அப்போஸ்தலனும் எழுத முடியாது, ஏனெனில் அவன் அப்போஸ்தல பட்டத்தை யாரிடமிருந்து பெற்றிருக்கிறானோ அந்த தீர்க்கதரிசி தேவனல்ல! எந்த அப்போஸ்தலனும், எந்த உபாத்தியாயனும், எந்த மேய்ப்பனும், எந்த சுவிசேஷகனும் எழுதக்கூடாது! ... டாமி ஆஸ்பான் அல்லது யாங்கி சோ அல்லது எவால்ட் ஃபிராங்க் எவ்வளவு வல்லமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு பொருட்டல்ல, அவர்கள் தேவனுடையவர்களேயானால், அவர்களது நாளின் உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் ஒருவனுடையதை மட்டுமே ஏற்றுக்கொள்வதற்காக, அவர்கள் எழுதின அனைத்தையும் இல்லாமற்போகப் பண்ணுவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
15 தீர்க்கதரிசி செய்தியாளனாக இல்லையென்றால் ஒருவனும் ஒரு தீர்க்கதரிசனத்தையோ, இரகசியத்தையோ அல்லது வேதாகமத்தில் இருக்கிற எதையும் வியாக்கியானிக்க முடியாது. ... காரியம் அப்படியிருக்க, ஒரு மேய்ப்பன் அல்லது எவராவது ஒருவர் யோவேல் 2:28 -க்கு ஒரு அர்த்தத்தை கொடுக்க விரும்புகிறான் என்றால், அது சர்ப்பத்தின் சீற்றமாக இருக்கிறது! நீங்கள் காண்கிறீர்களா?
16 சுமார் மூன்றாயிரம் வருட கிறிஸ்தவத்தில், இயேசுவின் நாட்களில் தேவனின் நூலகம் முப்பத்தி ஒன்பது புத்தகங்களை மட்டுமே கொண்டிருந்தது. அப்படியானால் ஆசாரியர்கள், பிரதான ஆசாரியர்கள் இன்னும் மற்றவர்களுடைய புத்தகங்கள் எங்கே? அந்த எல்லா புத்தகங்களும் எங்கே? அப்போஸ்தலர் 19:19 -ன் பலிபீடத்தின்மீது அவைகள் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்டுள்ளன. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு, இன்றைக்கு, சாத்தானின் நூலகம் ஆயிரக்கணக்கான புத்தகங்களை எட்டிவிட்டது. பழைய ஏற்பாட்டிலிருந்து, மோசேயிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரை, பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டின் நிழலாக இருக்கிறதென்றால், மேலும் அந்த நிழல் 39 புத்தகங்களைக் கொண்டிருக்கையில், மத்தேயு புத்தகத்திலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைவரை எப்படி 39 புத்தகங்களுக்கு அதிகமாக இருக்கமுடியும்? நீங்கள் காண்கிறீர்களா? ஆனால் ஒரு காரியம் எனக்குத் தெரியும்: 1906 முதல் 1965 வரையான காலத்தில் அங்கு ஒரே ஒரு புத்தகம் மட்டுமே இருந்தது: தீர்க்கதரிசி வில்லியம் மாரியோன் பிரன்ஹாமின் புத்தகம். மேலும் 1965 முதல் 2002 வரை, பரலோகத்தில் இருக்கிறதான தேவனின் நூலகத்தில் எந்த புத்தகமும் சேர்க்கப்படவில்லை [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது]. மேலும் வில்லியம் பிரன்ஹாமுக்குப் பிறகு, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் புத்தகம், ஓர் நாள், தேவனுடைய நூலகத்தில் சேர்க்கப்படும் என்பதை மத்தேயு 25:6 சுட்டிக்காட்டியுள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
17 வேதாகமங்களின் தவறான பதிப்புகளை சுட்டெரிப்பதும் நடுராத்திரி சத்தத்திலிருந்து எதையும் வெளியே எடுத்துவிடாமல் பிரசங்கிப்பதுமே இந்த மணி நேரத்தில் அன்பும் ஆவியின் கனிகளைக் கொண்டிருத்தலுமாக இருக்கிறது. நீங்கள்: "ஓ சகோதரன் பிலிப்பு, எனக்கு உண்டு..." என்று கூறுகிறீர்கள். பொருங்கள், நான் கலாத்தியர் 5:22 -ஐ கண்டுபிடிக்கட்டும்... இங்கே, "சகோதரன் பிலிப்பு, நான் அன்பு, சந்தோஷம், சமாதானம், பொருமை... இவைகளை உடையவனாக இருக்கிறேன்" எனலாம், அது நல்லது தான், ஆனால் அதனோடுகூட உங்களது வேளையின் செய்தியையும் சேர்கவில்லையென்றால் நீங்கள் ஒரு பிசாசை கொண்டுள்ளீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
18 சுவிசேஷக சபைகளின் துதி ஒலிநாடாக்களை கேட்பதல்ல, இவைதான் ஆவியின் கனிகளாகும். நீங்கள் காண்கிறீர்களா?... மகத்தான ஞானமும் மனதாழ்மையுமாக இருப்பதென்பது இது தான். மரியாள் மற்றும் இயேசுவின் சிலைகளையும் உருவங்களையும் புரோட்டஸ்டன்டுகள் சுட்டெரித்தபோது, அது ஞானமும் மனத்தாழ்மையுமாக இருந்தது. அப்போஸ்தலர்கள் பரிசேயருடைய சுவிசேஷக புத்தகங்களை அப்போஸ்தலர் 19:19-ல் சுட்டெரித்தபொழுது, அது ஞானமும் மனத்தாழ்மையும் பரிசுத்த ஆவியுமாக இருந்தது.
19 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அந்த மேஜைகளை கவிழ்த்து, அந்த கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள், மற்றும் வெளிப்டுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபையினர் என்று அழைக்கப்படுபவர்களை வாரினால் அடித்தபொழுது, அது வித்தியாசமானதாக இருந்தது, ஆனால் அதுவே ஞானத்தின் நிறைவாக இருந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது]. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். அவர்களது கருத்துப்படி, இயேசு வேறு விதமாக நடந்துகொள்ளவேண்டியவராக இருந்தார். நீங்கள் காண்கிறீர்களா?
20 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "விரியன் பாம்பு குட்டிகளே, புல்லில் இருக்கும் சர்ப்பங்களே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, முட்டாள்களே!!!" என சத்தமிட்டபோது, அது தேவனுடைய வார்த்தையாக இருந்தது. மேலும் இங்கே நள்ளிரவில் லூயிஸ் செகண்டு, ஜேம்ஸ் மன்னன், ஸ்கோஃபீல்டு, தாம்சன் வேதாகமங்கள் மற்றும் பலவற்றை சுட்டெரிந்துகொண்டிருக்கிறதும் அதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது]. நீங்கள் உங்கள் நேரத்தின் செய்தியின் வரிசையிலும் வரம்புகளிலும் நடக்க வேண்டும், அதுவே ஏற்றமணிவேளையின் செய்தியின் ஆவி (Spirit). ஆனால் நீங்கள் யேசபேலின் நக பூச்சுகளையும் உதட்டுச்சாயங்களையும் எதிர்பார்க்கக்கூடாது.
21 அது அந்த சபைகள் "கடல் கன்னி" பற்றி பேசுவதைப்போல் உள்ளது, அவர்களுடைய லூயிஸ் செகண்டு, ஆஸ்டர்வால்டு, ஜேம்ஸ் மன்னன் வேதாகமத்தில் அல்லது அவர்களுடைய கத்தோலிக்க தாயின் டாம்ப் வேதாகமத்தில் அது இருக்கிறதா எனக்கு தெரியாது, ஆனால் எங்கெல்லாம் அவர்கள் தண்ணீரை பார்க்கிறார்களோ, அவர்களுக்கு அது "கடல் கன்னியாக" இருக்கிறது. நீங்கள் காண்கிறீர்களா? அது வேதாகமத்தில் இல்லையென்றால் பின்னர் அந்த பிசாசு இருப்பது அவர்களுக்குள்ளே தான். கடல் கன்னி! இது என்ன? ... எனவே, ஏப்ரல் 24, 1993 -ன் தரிசனத்தில் சமுத்திரத்தில் இருந்து வந்த ஒரு பழைய இராணுவ வண்டிபற்றி நாம் பேசும்போது, அவர்கள் "கடல் கன்னி" என்று காண்கிறார்கள். அது அவர்களுடைய மூதாதையரின் இரத்தம் தான். ஜலப்பிரளயத்தைப் பற்றியும் தண்ணீரை பற்றியும் நோவா பேசுகையில், அவர்களது மூதாதையர்களுக்கு, அது "கடல் கன்னி" என இருந்தது. எசேக்கியேல் கேபார் நதிக்கரையிலுள்ள அவனது தரிசனங்களைப் பற்றி பேசிய போது, அவர்களுக்கு, அது "கடல் கன்னி" என இருந்தது.
22 தானியேல் பெரிய நதியான இத்தக்கேலின் பக்கத்திலுள்ள தனது தரிசனங்களைப் பற்றி பேசியபோது, அவர்களுடைய மூதாதையர்களுக்கு, அது "கடல் கன்னி" என்று இருந்தது. அப்போஸ்தலனாகிய யோவான் பத்மூ தீவில் அவனது வெளிப்பாடுகளை பற்றி பேசியபோது, அவர்களுடைய முன்னோர்களுக்கு, அது "கடல் கன்னி" என்று இருந்தது. வெளிப்படுத்துதல் 12-ல் உள்ள ஸ்திரீகளாக இருந்தாலும் அல்லது வெளிப்படுத்துதல் 17-ல் உள்ளவர்களாக இருந்தாலும், அது அனைத்தும் கடல் கன்னியாக இருக்கிறது. வெளிப்படுத்துதல் 13-ல் யோவான்: "நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன்; ஒரு மிருகம் சமுத்திரத்திலிருந்து எழும்பிவர கண்டேன் ..." என்று சொன்னபோது, அவர்களுக்கு, அது "கடல் கன்னியாக" இருந்தது. மேலும் ஏப்ரல் 24, 1993 -ன் தரிசனத்தில் அவர்களுடைய கொள்ளுப் பேரன்கள் "கடல் கன்னியை" பார்த்தால், அது ஆச்சரியமல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
23 ஆபிரிக்காவில் சுவிசேஷம் வந்தபோது, இந்த கல்வியறிவு அற்ற கறுப்பர்கள் சக்திவாய்ந்த மாந்திரீக பொருட்களை கொண்டிருந்தனர். அந்த மாந்திரீகங்களினால் சிலர் கொடிய வியாதியை மேற்கொண்டிருந்தனர், வேறு சிலர் பிள்ளைகளை, மகத்தான விளைச்சல்களை பெற்றுக் கொண்டனர்... ஆனால் சில பிரசங்கிகள் அங்கு நின்று, "நீங்கள் இந்த மாந்திரீக பொருட்களை சுட்டெரிக்க வேண்டும், அவை உங்களுக்கு கொண்டுவந்த நன்மை ஒரு பொருட்டல்ல. ஏனெனில் இந்த மாந்திரீக பொருட்களுக்குப் பின்னால் இருப்பவை பிசாசுகளாக இருக்கின்றன, விழுந்துபோன தூதர்களான அவைகள் தான் உங்களுக்கு பதில் அளிக்கின்றன. உங்களை சிருஷ்டித்த தேவன் தான் எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளார்!" என்றனர். இயற்கையாகவே, பிசாசின் பிள்ளைகள் தங்கள் காலத்தின் செய்தியின் கட்டளையை நிராகரித்தனர், ஆனால் தேவ புத்திரர் தங்கள் மாந்திரீக பொருட்களை சுட்டெரித்தனர். அந்த நாட்களில், அதைத்தான் தேவன் அவர்களிடமிருந்து எதிர்பார்த்தார்.
24 அதற்குப் பிறகு, சபைக்குச் செல்வதற்காக மனுஷர் அவனது மாந்திரீக பொருட்களை விட்டு விலகிப்போனதை சாத்தான் கண்டபோது, அவனும் கூட அங்குள்ள சபைக்குச் சென்று, வேறு விதமான மாந்திரீக பொருட்களை அவனுக்காக உண்டாக்கும்படி அவர்களை ஏவினான் மேலும் அவனது விக்கிரக பூசாரிகளை கத்தோலிக்க பாதிரிகளாக மாறுவேடமிடச் செய்தான். ஜெபமாலைகள், சிலுவைத்தண்டுகள் மற்றும் சிலைகள் உண்டுபண்ண பட்டன.
25 1517 -ம் ஆண்டு முதல், மார்டின் லூதரின் செய்தியால் தேவன், அந்த ஜெபமாலைகளையும், திருப் பண்டங்களையும், பிசாசின் பிள்ளைகள் சபைகளில் ஸ்தாபித்திருந்த மாபெரும் சிலைகளையும், பவுல், பேதுரு, மரியாள், இயேசு ஆகியோரின் சொரூபங்களையும் சுட்டெரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
26 சகோதரரே! இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை கர்த்தராகிய இயேசுவானவர் பேதுருவுக்கு கொடுத்தார், அவனது சிலையை அல்லது நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் சிலையை சுட்டெரித்தல், அது ஒன்றுமற்ற ஒரு மாந்திரீகப் பொருளை சுட்டெரிப்பதைப் பார்க்கிலும் இப்போது கிறிஸ்தவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது. மரியாளின் சிலை ஒன்றை சுட்டெரிப்பதென்பது, ஓ! பக்திமிக்க வயதான கத்தோலிக்க ஸ்திரீகளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடினது. அங்கிருந்த இந்த சிலைகளின் பிசாசுகள் தான் அவர்களை இப்படி நடந்துகொள்ளும்படி செய்தது. ஒவ்வொருவரும் உங்களை சபிக்கிறபோது நீங்கள் தைரியமாக இருந்தாக வேண்டும். மேலும் அந்த நேரத்தில், ஒரு மாயவித்தை புத்தகத்தை அல்லது மாந்திரீகப் பொருளை சுட்டெரித்தல் என்பது எவருக்கும் எந்த அர்த்தத்தையும் கொடுக்கறதாக இருக்கவில்லை.
27 அதற்குப் பின்பு, சாத்தான் ஆரம்பத்திலே அவன் மறைந்திருந்த இடத்தை நினைவுகூர்ந்தான்; வேதாகமத்தின் தவறான பதிப்புகள், அவை உண்மையில் இன்னொரு வடிவில் உள்ள மாந்திரீக பொருட்களாகும், அதை உருவாக்க ஏவினவன் அவனே மேலும் சாத்தான் ஆசாரியர்களுக்குள்ளே போதகர்களாகவும் தீர்க்கதரிசிகளாகவும் மாறுவேடமிட்டு தன்னையே மறைத்துக்கொண்டான்.
28 நல்லது, இங்கு நீங்கள் அறிகிறதென்ன? அப்போஸ்தலிக்க காலத்திற்கு நம் இருதயங்கள் மீண்டும் திருப்பப்படுமென வேதாகமம் கூறுகிறது, எனவே, அதே பிரகாரமாகவே, சாத்தான் அப்போஸ்தலிக்க காலத்தின் தனது மாயவித்தை புத்தகங்களுக்கு திரும்பிவிட்டான். ஆகையால் யோங்கி சோ, டாமி ஆஸ்போர்ன், பென்னி ஹின் ஆகியோரின் புத்தகங்களுக்கு பின்னாலும் வேதாகமங்களுக்கு பின்னாலும் கூட சாத்தான் மறைந்திருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். காரியம் இப்படியிருக்க, மாயவித்தை புத்தகங்களை சுட்டெரிப்பதென்பது ஒன்றுல்ல! மாந்திரீகப் பொருட்களை சுட்டெரிப்பதென்பது ஒன்றுல்ல! செதுக்கப்பட்ட சிலைகளை சுட்டெரிப்பதென்பது ஒன்றுல்ல!
29 பிறகு முடிவிலே வேதாகமங்கள் (bibles) சுட்டெரிக்கப்பட்டபோது என்ன சம்பவித்தது? [ஆசிரியர் குறிப்பு: தீர்க்கதரிசி "கள்ள வேதாகமங்களை" குறிப்பிடுகிறார்]. பரலோகத்தில் கலகம் செய்தவைகளும், பூமியின் மீது தள்ளப்பட்டவைகளும், மாய வித்தை புத்தகங்கள் மாந்திரீக பொருட்கள் சொரூபங்கள் ஆகியவைகளுக்கு பின்னால் தங்கியிருந்தவைகளுமான அந்த பல்லாயிரக்கணக்கான பிசாசுகள், இந்த கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளுக்குள்ளும், இந்த வெளிப்படுத்தப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட சபைகள் என அழைக்கப்படுகிறவைகளின் உறுப்பினர்களுக்கும் இப்போது புகுந்திருக்கின்றன.
30 மேலும் அந்த பிசாசுகளான அவைகளையே இன்றைக்கு சபைகளிலே ஜனங்கள் பரிசுத்த ஆவிகள் என்று அழைக்கின்றனர். மேலும் மாந்திரீக பொருட்களின் புத்தகங்களும் மரியாளின் சொரூபங்களும் இப்போது லூயிஸ் செகண்டு வேதாகமங்கள், ஜேம்ஸ் மன்னன், தாம்ப்சன், ஸ்கோஃபீல்டு, டாம்ப், இன்னும் அதுபோன்று... அழைக்கப்படுகின்றன. ஆரோனின் பொற் கன்றுக்குட்டியானது மீண்டும் பூமியில் தேவனுடைய மற்றும் அவரது தீர்க்கதரிசிகளுடைய ஸ்தானத்தை அபகரிக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
31 நல்லது, இப்பொழுது கவனமுடன் இருங்கள்! அப்போஸ்தலர்களுடைய நாட்களில் மாயவித்தை புத்தகங்கள் மீது அக்கினி எதற்காக, மாந்திரீக பொருட்கள் மீது அக்கினி எதற்காக? மார்ட்டின் லூதருடைய நாட்களில் இயேசு மற்றும் மரியாளுடைய சொரூபங்கள் மீது அக்கினி எதற்காக? நடுராத்திரியில் அந்த வேதாகமங்களின் (bibles) தவறான பதிப்புகள் மீது அக்கினி எதற்காக? அக்கினி ஏன் சாத்தானை பின்தொடர்கிறது? அக்கினி ஏன் கத்தோலிக்கர்களை, புரோட்டஸ்டன்டுகளை, சுவிசேஷக சபையினர்களை மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளை பின்தொடர்கிறது? சாத்தானையும் அவனது தூதர்களையும் தேவன் அக்கினிக்கென்று நியமித்திருக்கிறார் என்பதே அதற்கான பதிலாக இருக்கிறது... [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
32 ஆனபடியால் தான், அப்போஸ்தல்கள் நாட்களிலிருந்து, அந்த மறைவிடங்களினூடாக, சாத்தானும் அவனது தூதர்களும் எரிகிற அக்கினி மற்றும் கந்தகக் கடலுக்கு நேராக விரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சாத்தானும் அவனது தூதர்களும் மாயவித்தை புத்தகங்களுக்குள் புகுந்துகொண்டபொழுது, அப்போஸ்தலர்களால் அந்த புத்தகங்கள் சுட்டெரிக்கப்பட்டது. சாத்தானும் அவனது தூதர்களும் மாந்திரீக பொருட்களுக்குள் புகுந்துகொண்டபொழுது, மாந்திரீக பொருட்கள் சுட்டெரிக்கப்பட்டது. சாத்தானும் அவனது தூதர்களும் சொரூபங்களுக்குள் புகுந்துகொண்டபொழுது, சொரூபங்கள் சுட்டெரிக்கப்பட்டது. சாத்தானும் அவனது தூதர்களும் வேதாகமங்களின் தவறான பதிப்புகளுக்குள் புகுந்துகொண்டபொழுது, அந்த வேதாகமங்களின் தவறான பதிப்புகள் அங்கே சுட்டெரிக்கப்பட்டது. மேலும் வேதாகமம் (the bible) சுட்டெரிக்கப்பட்டபோதோவெனில், நடுராத்திரி சத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிற அனைவருக்குள்ளும் சாத்தானும் அவனது தூதர்களும் புகுந்திருக்கின்றனர்.
33 அவர்களிடமுள்ள அந்த பரிசுத்த ஆவிகள் (the holy spirits), அவை பிசாசுகளாக இருக்கின்றன என்று அவர்களிடம் ஒவ்வொரு நாளும் நாம் கூறுகிறோம் ஆனால் அவர்கள் மறுக்கின்றனர்! நாம் அவர்களை சுட்டெரிக்கமுடியாது என்பதால், தேவன் தாமே வெளிப்படுத்தல் 20:11 முதல் 15 ல் அவர்களுக்காக எரிகிற அக்கினி மற்றும் கந்தகக் கடலை ஆயத்தம் செய்திருக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா ?அடிப்படை தத்துவப்படி, இந்த கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் ஆகியோருக்காக அந்த எரிகிற அக்கினிக் கடல் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கவில்லை ஆனால் அவர்கள் தங்களுக்குள்ளே இந்த பிசாசுகளைத் வைத்துக்கொண்டிருப்பதில் விடாப்பிடியாக இருப்பதினால், தேவன் அவர்கள் அனைவரையும் அங்கு அனுப்புவார். பரதீஸுக்கும் அது அதேகாரியம் தான். நீங்கள் பார்க்கிறீர்களா ?
34 அடிப்படை தத்துவப்படி, பரதீஸானது தேவனுக்கும் தூதர்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் தேவன் தனியாக அங்கு செல்ல விரும்பவில்லை, அவர் துன்பத்தின் சிலுவையில் நம்மை மீட்டார் மேலும் கலியாணத்தில் பங்கு பெறவும், நித்திய ஜீவனுள்ளவர்களாக, என்றென்றைக்குமாக அவரோடு கூட வாழவும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை முத்திரையிட, தலைமுறை தலைமுறையாக, பரிசுத்த ஆவி வடிவின்கீழ் அவர் தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். பரிசுத்த ஆவி நம்மில் இருப்பதால், தேவன் நம்மில்லாமல் பரதீஸுக்கு செல்லமுடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்]. அது தான் அது!
35 சாத்தானுங்கூட கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளுக்குள் புகுந்து உண்மையான பரிசுத்த ஆவியைப் போல நடந்து கொள்கிறான். கூடுமானால் தெரிந்துகொள்ள பட்டவர்களையும் அது தவறாக வழிநடத்தும் என்று வேதாகமமும் கூறுகிறது, ஆனால் அது சாத்தியமல்ல! சாத்தான் ஒரு "தேவர்கூட்டு சபை" உருப்பினனை அல்லது ஒரு பெந்தேகோஸ்தேயினனை பயன்படுத்தி அந்நியபாஷை பேசுவதை அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கிறதை நீங்கள் காண்பீர்களேயாகில், அது மெய்யான பரிசுத்த ஆவி என்று நம்புவீர்கள், ஆனால் அது ஒரு பிசாசாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
36 நல்லது, நான் ஏழு பரிமாணங்களைப் பற்றி இப்போது பேச விரும்புகிறேன் ... முதலாவது பரிமாணம் என்பது பொருள் (matter) ஆகும், நாம் தொடக்கூடிய, காணக்கூடிய, அல்லது உணரக்கூடியவைகளுக்கும் வாயுக்கள், புகை, மூடுபனி போன்ற... எல்லாவற்றிற்கும் கூட இது பொருந்துகிறது. இரண்டாவது பரிமாணம் ஒளி, எந்த இயற்கை ஒளியும் இரண்டாவது பரிமாணத்தில் உள்ளது. மூன்றாவது பரிமாணம் காலங்களையும், வேளைகளையும், பருவங்களையும் குறிக்கிறது. இந்த முதல் மூன்று பரிமாணங்கள் நமது ஐந்து இயற்கையான புலன்களான: பார்த்தல், சுவைத்தல், உணருதல், முகருதல் மற்றும் கேட்டல் என்பவவைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது.
37 நல்லது, நான்காவது பரிமாணம், அது விஞ்ஞானமாக இருக்கிறது. அது அலைகள் (Waves) மற்றும் இரசாயன எதிர்வினைகளை குறிக்கிறது. ஐந்தாவது பரிமாணம், அது வேதனைகளின் இடம், அதுதான் சாத்தான் மற்றும் பிசாசுகளின் இடம். அது கிறிஸ்து இல்லாமல் மரித்தவர்களின் மற்றும் இழக்கப்பட்டவர்களின் தேசமாக இருக்கிறது. அது திகில் கனவுகள் மற்றும் வேதனைகளின் தேசம். லூக்கா 16:23 அதைப் பற்றிப் பேசுகிறது: "பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்."
38 ஆனாலும், 1 சாமுவேல் 28 -ல் இருக்கிற பிரகாரம் பூமி ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளது. அதனால்தான் தற்போது இருக்கிறபடி பிசாசுகள் நம்மை அணுக முடிகிறது. 1 சாமுவேல் 28:11 மற்றும் 12 -ஐ வாசிக்கலாம்: "அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ண வேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர் தான் சவுலாச்சுதே என்றாள். ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவன் ஒருவர் (a god) பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்." நீங்கள் பார்க்கிறீர்களா ? சங்கீதம் 82: 6 மற்றும் 7 தீர்க்கதரிசிகள் தேவர்களாக இருக்கிறார்கள் என்பதை கூறுகிறது மேலும் அதனால்தான் அவர்கள் நெடுங்காலத்திற்கு அப்பாலுள்ள இரகசியங்களில் நுழைய முடிகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
39 இவ்வாறு, நித்திய (everlasting) பலிக்கு முன்பு, அது சாத்தியமாக இருந்தது ஆனால் இப்போது அது சாத்தியமே இல்லை. அங்கு வேர்பிரித்தல் இருந்தது. ஒரு புறத்தில் வேதனையானது இப்போது பூமியின் துன்மார்க்கரின் தலையான கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் மேல் உள்ளது, பிறகு மறுபுறத்தில் ஆபிரகாமின் மடி இருக்கிறது.
40 மரணத்திற்குப் பின், ஒரு மந்திரவாதி உங்களை அணுகுவானாகில், அப்படியானால் உங்கள் ஆத்துமா ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளது. அல்லது ஒரு மனிதன் மரித்துவிட்டால், அவனை வைத்திருக்கிற சவப்பெட்டி அசையவோ, நடனமாடவோ, ... செய்தால், பிறகு அந்த நபர் நேராக நரகத்திற்கு, ஐந்தாவது பரிமாணத்திற்குச் செல்கிறான். இவ்வாறு, மரணத்திற்குப் பிறகான வேறுபிரித்தல் ஏற்கெனவே நிகழ்ந்தாயிற்று மேலும் பரதீஸுக்குள் பிரவேசித்தல் இப்போது நேரடியாக இருக்கிறது. காளைகளின் இரத்தம் பாவங்களை மூடமட்டுமே செய்தது ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவைகளை இல்லாமற்போகச் செய்கிறது. கடைசியான வேர்பிரித்தல் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப் பிறகு நடக்கும்.
41 உங்கள் சொப்பனங்களில் நீங்கள் துரத்தப்படுகிறவர்களாக இருந்தால் அல்லது உங்கள் சொப்பனங்களில் நீங்கள் பறக்கிறவர்களாக இருந்தால் உங்கள் ஆத்துமா பிறகு ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளது. ஐந்தாவது பரிமாணத்திலிருந்து வேறு பிரிக்கப்படுதலானது ஏற்கனவே நிகழ்ந்தாகிவிட்டது. ஆதியாகமம் 1:2 இனிமேல் சாத்தியமில்லை! 1 சாமுவேல் 28 இனிமேல் சாத்தியமில்லை! நீங்கள் காண்கிறீர்களா? ஆதியாகமம் 1:1 முதல் 10 வரை என்ன கூறுகிறது? நீங்கள் காண்கிறீர்களா? 2 ஆம் வசனம் என்ன சொல்கிறது: "... பூமியானது பாழும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்." அது என்ன? அது ஐந்தாவது பரிமாணமாகும். ஜலமும் ஆழமும், அது ஒரே தண்ணீர்தான், ஆனால் 6 மற்றும் 7 வசனங்கள் ஏற்கனவே இந்த வருங்கால வேர்பிரித்தலை சுட்டிக்காட்டுகின்றன! மேலும் ஆதியாகமம் 1:6-7 ஏற்கெனவே சம்பவித்துவிட்டது என்பதை நான் குறிப்பிட்டேன்! ஆமென்! அதுமுதற்கொண்டு அங்கே ஆகாயவிரிவுக்கு மேலேயுள்ள ஜலமும் ஆகாயவிரிவுக்கு கீழேயுள்ள ஜலமும் இருக்கின்றன. மேலும் லூக்கா 16:19-26 ம் கூட அது அப்படித்தான் என்று கூறுகிறது! ஆனால் 1 சாமுவேல் 28 -ல் அந்த ஸ்திரீ சாமுவேலை எப்படி அணுகினாள்? அது தீர்க்கதரிசி சாமுவேலைப் பற்றினதல்லவென்று இறையியலாளர்கள் கூறுகின்றனர் ஆனால் அது அவனைப் பற்றித்தான் என்று வேதாகமம் தெளிவாகக்கூறுகிறது, நாம் வேதாகமம் கூறுவதுடன் தரித்திருப்போம். காரியம் இப்படியிருக்க, சாமுவேலை அவள் எப்படி அணுகினாள்? நித்திய பலிக்கு முன்பாக, ஏதேன் தோட்டத்தின் பாவம் முதற்கொண்டு, மரித்தோரின் ஏக தங்குமிடத்தின் திறவுகோல்களை சாத்தான் வைத்திருந்தான் ஆனால் உயிர்த்தெழுதலின் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் அந்த திறவுகோல்களை அவனிடமிருந்து திரும்ப பரித்துக்கொண்டார் என்பதே அதன் பதிலாகும்.
42 வெளிப்படுத்துதல் 1:17 மற்றும் 18, "நான் அவரைக் கண்டபோது செத்தவனாக அவருடைய பாதத்தில்விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." என்று கூறுகிறது. ஆமென்! அது நம்முடைய மீட்பாக இருந்தது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
43 பூமியில் நீங்கள் காண்கிற ஒவ்வொருவரும் இந்த ஐந்தாவது பரிமாணத்துடன் ஒரு தொடர்பு வைத்துள்ளனர். சிலர் தங்களுடைய நேரத்திற்கான சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வதற்கு இனியும் அங்கு இல்லை, ஆனால் மற்றவர்கள் அங்கே இருக்கிறார்கள், அந்த பிரன்ஹாமிஸ்டு சபையின் உதாரணத்துக்குப் பிறகும் சில முழுச் சபைகளும் அங்கு இருக்கின்றன. சில விசுவாசிகளை, குறிப்பாக மார்செல் என்ற பெயருள்ள ஒரு இளம் வங்கியாளரை பிடித்துவைத்துக்கொள்ள, அங்கிருக்கிற பாதுகாக்கும் கேரூபீனுக்கு, வாயாக இருக்கிற பாஸ்டர் டேவிட் என்பவன் மீது அவன் தொடர்ச்சியாக இரங்குகிறான். இந்த பிசாசு அவனை உலுக்குகிறது, அவனை உருமாற்றுகிறது, அவனை ஆளுகைசெய்து, பயங்கரமான அரக்கனைப்போல நடக்கச்செய்கிறது. அது அவர்களது சபையின் பாதுகாப்புக் கேரூபினாக இருக்கிறது. இது ஐந்தாவது பரிமாணமாக உள்ளது.
44 கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக சபைகள் மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் உட்பட வெளிப்படுத்தப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட சபைகள் என அழைக்கப்படுகிறவைகள் அனைத்தும் ஐந்தாவது பரிமாணத்திலுள்ள இராஜ்ஜியங்களாக இருக்கிறது. இந்த மறைபரப்புப் பணிகள் மற்றும் ஊழியங்கள், உங்களைச் சுற்றிலும் நீங்கள் பார்க்கிற இந்த அனைத்துச் சபைகளும், நீங்கள் பார்க்கும் அனைத்தும், அவை ஐந்தாவது பரிமாணத்தின் இராஜ்ஜியங்களாகும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
45 நல்லது, இப்போது ஆறாவது பரிமாணம், அது பலிபீடத்தின் கீழ் உள்ளது, அதுதான் ஆபிரகாமின் மடி. அங்கே கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் இருக்கிறார்கள். வெளிப்படுத்துதல் 14:13 இவ்வாறு கூறுகிறது: "பின்பு, கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது என்று சொல்கிற ஒரு சத்தம் பரலோகத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். ஆம், அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம் என்று ஆவியானவர் கூறுகிறார்.". நீங்கள் காண்கிறீர்களா? வெளிப்படுத்தின விசேஷம் 6:9 மற்றும் 11 ல் நாம் அதைக் காண்கிறபடி அவர்கள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள்: "அது ஐந்தாம் முத்திரையை திறந்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொண்டிருந்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்." ஆமென்!
46 அவர்கள் பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள், அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆபிரகாமின் மடியில் இருக்கிறார்கள். அவர்கள் ஆறாவது பரிமாணத்தில் இருக்கிறார்கள். இந்த மூன்று வேறு பரிமாணங்களும் ஆத்துமாவின் ஐந்து புலன்களான கற்பனை, விவேகம், உணர்வுகள், நினைவு மற்றும் மனசாட்சி ஆகியவையை கொண்டுள்ளன. நீங்கள் காண்கிறீர்களா? தேவன் தன்னை மூன்று பண்புகளில் வெளிப்படுத்துகிறார்: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி. மேலும் திருச்சபை மூன்று பண்புகளில் தன்னை வெளிப்படுத்துகிறது: சரீரம், அதாவது அங்கத்தினர்கள் என்று கூறலாம், ஆத்துமா, அதாவது உயிருள்ள தீர்க்கதரிசி, மற்றும் ஆவி, அதாவது தீர்க்கதரிசியை வழிநடத்தும் தேவனுடைய தூதன் . அவை இல்லாமல், அது தேவனுடைய திருச்சபை அல்ல.
47 சரீரத்துக்கு ஐந்து புலன்கள் உள்ளன, ஆத்மாவுக்கும் ஐந்து புலன்கள் உள்ளன, ஆனால் ஆவிக்கு (the spirit) ஒரே ஒரு புலன் தான் இருக்கிறது. அது விசுவாசம் அல்லது அது அவிசுவாசம். ஒன்று அது தேவனுடையது அல்லது அது பிசாசினுடையது. அதனால் தான் சரீரமானது ஆத்துமாவின் பெருக்கமாகவும், ஆத்துமாவானது நமது ஆவியின் (spirit) பெருக்கமாகவும் மேலும் நமது ஆவியானது பரிசுத்த ஆவியின் பெருக்கமாகவும் இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
48 நல்லது, மரணத்துக்குப் பிறகு, மறுபுறத்தில், ஐந்தாவது மற்றும் ஆறாவது பரிமாணம் தனித்தனி என்பதை நாம் கவனிக்கிறோம். ஆனாலும், 1 சாமுவேல் 28-ம் அதிகாரத்தில், பிசாசுகளின் ஆவியுலகத்தோடு தொடர்புகொள்கிற இந்த ஸ்திரீ, தீர்க்கதரிசி சாமுவேலை அணுகியிருந்தாள். ஏனென்றால் அந்த நேரத்தில், பரதீஸ் பூமியில் ஒரு இடத்தில்தான் இருந்தது; அது ஷியோல், அதை ஆபிரகாமின் மடி என்று சொல்ல வேண்டும் மேலும் ஐந்தாம் பரிமாணமும் ஆறாவது பரிமாணமும் ஒன்றாக இருந்தது. ஆனால் நித்திய பலிக்கு பிறகு, இயேசுவானவர் ஷியோலுக்குள் பிரவேசித்து பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்து எல்லா பரிசுத்தவான்களுடன் வெளியேவந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து: "... சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." என்றார். அந்த நாளில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இரண்டு பரிமாணங்களையும் வேறுபிரித்தார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
49 ஆனால் ஆறாவது பரிமாணம் இன்னும் பூமியில் ஐந்தாவது பரிமாணத்திற்குள்ளேயே இருக்கிறது, அவை ஆயிரவருட அரசாட்சியின்போது வேறுபிரிக்கப்பட்டுவிடும். நீங்கள் காண்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "அவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல." என்றார். பாவத்திற்கு முன் பூமியானது ஏதேனில் ஆறாவது பரிமாணத்திற்குள் இருந்தது, ஆனால் இப்போது அது ஐந்தாவது பரிமாணத்திற்குள்ளாகிவிட்டது. ஆறாவது பரிமாணத்தில் ஏதேன் தோட்டம் பலிபீடத்தின் கீழ் வைக்கப்பட்டது. அப்படியானால் ஐந்தாவது பரிமாணம் என்ன? பாதாளம்தான்.நீங்கள் பார்க்கிறீர்களா ? ஐந்தாம் பரிமாணத்தின் வாயில்கள் நம்மை மேற்கொள்ளாது என மத்தேயு 16-ம் அதிகாரத்தில், இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார், ஏனெனில் நாம் பூமியில் இருக்கையில், புது பிறப்பு மற்றும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகியவை மூலமாக ஆபிரகாமின் மடியில் இருக்கிறோம்.
50 எனவே, அந்த அஞ்ஞான நடனங்கள், அந்த புகைப்பவர்கள், காற்சட்டை மற்றும் குட்டைப்பாவாடை அணிந்திருக்கிற அந்த இளம் பெண்கள், இந்த இறுக்கமான பாவாடைகள், இறுக்கமான நைட்டிகள், அந்த அலங்காரங்கள், இந்த பொய் முடி ஆகியவைகளை நீங்கள் காண்கையிலும், ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு மாதவிடாய் இருக்கையில் அடியில் துணிகளை வைத்துக் கொண்டு ஸ்திரீகள் சபைகளில் பிரசங்கிக்கிறார்கள் அல்லது சில சபைகளை அவர்கள் நடத்துகிறார்கள், அவைகளை நீங்கள் காண்கையிலும், அது ஐந்தாவது பரிமாணமாக உள்ளது.
51 "அழகிப் போட்டிகள்..." என்று நீங்கள் அழைக்கிறதும், அந்த இளம் பெண்கள் உள்ளாடைகளில் இருப்பதுமான அந்த அணிவகுப்புகளை நீங்கள் காண்கையில், அது ஐந்தாவது பரிமாணமாக இருக்கிறது. ஓ! இறக்கம்! ... லோத்து வாதிக்கப்பட்டான் என்று வேதாகமம் கூறுகிறது. பெண்கள் நடத்தும் சபைகளுக்கு ஆண்கள் செல்லுவதையும் அந்தப் பெண்கள் தங்கள் கரங்களை அவர்கள் மீது வைப்பதையும் லோத்து கண்டபோது, லோத்தின் ஆத்துமா தொடர்ச்சியாக வாதிக்கப்பட்டது. [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்" என்கின்றனர்].
52 இப்போது ஏழாவது பரிமாணம், அது தேவனுடைய மற்றும் பரிசுத்த தூதர்களுடைய சமுகமாக உள்ளது... இந்த பரிமாணத்தில் தூரங்கள் என்பது கிடையாது, ஏனென்றால் ஒரு தேவதூதன் இங்கே நம்மிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்க முடியும், ஆனால் நம்மால் அவனை பார்க்க முடியாது, ஏனென்றால் நாம் அதே பரிமாணத்தில் இல்லை. நமக்குள்ளே கூட அவனால் இருக்கமுடியும் ஆனாலும் நாம் அவனை உணர முடியாது, ஏனென்றால் நாம் அதே பரிமாணத்தில் இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்" என்கின்றனர்].
53 சரி, இப்போது விபரங்களுக்குள் செல்லுமுன், நான் இன்னொரு பரிமாணத்தைப் பற்றிப் பேச விரும்புகிறேன், அது இந்த எண்ணிக்கையின் வரிசையில் இல்லை மேலும் இந்த வெளிப்பாடு எங்காவது, ஓரளவுக்காவது இருந்தால், நான் அதை அறியேன் ... இது மற்றொரு பரிமாணம், ஒரு புதிய பரிமாணம்; உண்மையில் அதைப்பற்றித்தான் முதலில் நான் ஆழமாக பேச விரும்புகிறேன். நீங்கள் காண்கிறீர்களா?
54 சந்திரன், நட்சத்திரங்கள், சூரியன், ஒன்பது கிரகங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் ப்ளூட்டோ ஆகியவை. மேலும் அந்த அனைத்து உறுப்புகளும் பிற நட்சத்திரங்களும் ஒரே ஒரு நட்சத்திரக்கூட்டத்தில் (galaxy) இருப்பவையாக மட்டுமே உள்ளன, இருப்பினும் அங்கு ஆயிரக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள் (galaxies) உள்ளன. நமக்கு இந்த கிரகங்களின் பங்கு மற்றும் பயன்பாடு என்ன? நாம் ஓர் நாளில் அவைகளில் குடியிருப்போமா?... ஆகியவை நாம் அடிக்கடி நம்முடனே கேட்கிற கேள்வியாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் ஓர் நாளில் அவைகளில் குடியேரலாம் என்னும் கனவு நனவாகாது, மேலும் அவர்கள் அங்கே ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், பூமியானது அவைகளின் விளைவுகளை சந்திக்க நேரிடும், ஏனெனில் இந்த நட்சத்திரங்கள் மற்றும் மற்ற விண்மீன் திரள்கள் பூமியையும் அதன் கூறுகளையும் கட்டுப்படுத்துகிறதற்கான தனிச்சிறப்புமிக்க வல்லமைகளாக உள்ளன.
55 சந்திரனின் ஸ்தானம் கடல் மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் சூரியனின் ஸ்தானம் பூமியில் விளைவுகள் உண்டுபண்ணுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்களா? ஆண்டின் பருவங்கள், மற்றும் நாம் சுவாசிக்கிற காற்று கூட, ஒவ்வொரு உறுப்புக்கும் பூமியின் இயற்கை மற்றும் இயற்கைக்கு மேம்பட்ட நிகழ்வுகளில் ஒரு பங்கு உண்டு. சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன், கிரகங்கள் மற்றும் ஒவ்வொரு சிறிய நட்சத்திரமும் பூமியின் சாய்விற்காகவும், நமது வளர்ச்சிக்கும், இந்த வேறு பரிமாணத்தில் வாழ்வதற்கும் பூமியில் ஒரு செல்வாக்கை செலுத்துகின்றன.
56 இந்த நட்சத்திரங்களும் விண்மீன் திரள்களும் நீங்கள் பார்க்கும் தாவரங்களைப் போலவே வாழும் ஜீவன்களாக இருக்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் பூமியிலுள்ள உயிர்கள் ஆகியவை அவைகள் ஒவ்வொன்றின் விளைவுகளாகும். அதனால்தான் பூமியை சிருஷ்டிப்பதற்கு முன்னதாக தேவன் அவைகளை சிருஷ்டித்தார் என்று ஆதியாகமம் 1:1 கூறுகிறது. "ஆதியிலே தேவன் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தார்."
57 ஆகையால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, பூமியானது வியாழன், சனி, வீனஸ் மற்றும் பிறவற்றைப் போல கிரகம் அல்ல. தேவன் நம்மை உருவாக்க நிலத்தை எடுத்துக்கொண்டது போல அவர் பூமியை உருவாக்க எடுத்துக்கொண்டவைதான் அந்த பிற கிரகங்கள் என நான் கூறுவது அதனால் தான். மனுஷனும் கூட மண்ணாக இருக்கிறான் என்று நாம் சொல்லுகிறதை போல மட்டுமே பூமியும் ஒரு கிரகமாக இருக்கிறது என்று நம்மால் சொல்லமுடியும்.
58 தேவனவர் உட்பட இருக்கிறவைகளின் மற்றும் எந்த சிருஷ்டிப்பின் மூலக்கூறாக அங்கே மனிதனானவன் இருக்கிறான். மனிதன் தேவனுடைய சிருஷ்டிப்பின் இறுதிநிலையாக இருக்கிறான். தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது, அது மிகவும் நல்லது என்று சொன்னார். நீங்கள் காண்கிறீர்களா? மிகவும் நல்லது! [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்" என்கின்றனர்].
59 பூமியானது அதனுடைய கால்ஷியத்தை மட்டும் இழந்துவிட்டால் நாம் அனைவரும் இறந்துவிடுவோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது அதே காரியம் தான்! மனிதன் இந்த நட்சத்திரங்களில் ஒன்றை மட்டும் அழித்துவிட்டால், பூமி அவற்றின் விளைவுகளைச் சந்திக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா ? நமது உடலமைப்பின் உயிரணுக்கள் இந்த தாதுக்கள், உப்பு மற்றும் பிறவற்றால் உயிருடன் இருக்கின்ற அதே பிரகாரமாக, பூமியும் இந்த உறுப்புகளும் இந்த நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களினால் இருக்கின்றன.
60 உண்மையில் இந்த விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கும் மற்றவற்றுக்கும் போகுதல் ஏற்கனவே ஒரு ஆபத்தாக இருக்கிறது, அது பூமியில் ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளை பின்னர் நீங்கள் காண்பீர்கள்! இதனால் வியாதிகள் இருக்கும். இந்த நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்று மட்டும் அகற்றப்பட்டால், பூமியின் வளிமண்டலம் மாறும். இந்த நட்சத்திரங்களின் ஆய்வு மிகவும் அதிகப்படியான ஆர்வமாக உள்ளது. மனிதனுக்கு அவை தேவையில்லை.
61 மனிதன் மனித உடலை ஆராய்ந்தான், அது ஒரு நல்ல பலனை உருவாக்கியது, ஆனால் அந்த பரிசோதனைக்கு இது ஒத்ததாக இருக்காது. நீங்கள் பார்க்கிறீர்களா ? நீங்கள் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால், திரளான ஒருங்கிணைந்த சுற்றுகள், டையோட்கள், கண்டன்சர்கள் மற்றும் பலவற்றை நீங்கள் காண்பீர்கள் ... உங்களுக்கு திரையில் கிடைக்கும் பலனில் அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பங்கு உண்டு. மேலும் அந்த விண்மீன் திரள்களில், பூமி தொலைக்காட்சியின் திரையை பிரதிபலிக்கிறது.
62 இப்பொழுது நான் சொல்லப் போகிறவைகளுக்கு கவனமாயிருங்கள்; அனைத்து நட்சத்திரங்களிலும் விண்மீன் திரள்களிலுமிருந்து வரும் சகல வல்லமைகளின் நிறைவேற்றிடம் பூமியாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் இருப்பது போல், ஒளி மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு விண்மீன் திரள் உள்ளது, ஒலி மண்டலத்தை பிரதிபலிக்கும் ஒரு விண்மீன் திரள், வண்ண மண்டலத்திற்கான மற்றொரு விண்மீன் திரள், உருவங்களுக்கான மற்றொரு விண்மீன் திரள் ... பூமியானது முதல் ஏழு பரிமாணங்களில் இருந்து வேறுபட்ட ஒரு பரிமாணத்தில் இந்த அனைத்து நட்சத்திரக் கூட்டங்களின் செயலாக்க மண்டலமாக இருக்கிறது.
63 மேலும் ஒவ்வொரு மண்டலமும் ஒரு விண்மீன் குழுவை உருவாக்குகிறது, அதற்கு வானராசிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை, அது பேய்த்தனமாகும். எண்கணிதம், ஜோதிடம் மற்றும் அது போன்ற காரியங்கள் பொய்யானவைகளும் பேய்த்தனத்துக்கடுத்தவைகளுமாக இருக்கின்றன. எந்த ஒரு நட்சத்திரமும் ஒரு நபர் மீது ஆவிக்குரிய செல்வாக்கு செலுத்த முடியாது. அப்படிச் செய்வது பிசாசுகள் தான்! ஆனால் அந்த காரியங்களை விசுவாசிப்பதற்குப்பினால் உள்ள உண்மை என்னவென்றால், என்னவென்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறதோ அதன் படி உங்கள் வாழ்கையில் விளைவை ஏற்படுத்த, ஒரு பிசாசு வந்து, அதற்குப் பின்னால் நிற்கிறது... ஜோதிடர்கள் பேசும் வானராசிகளான, பன்னிரண்டு நட்சத்திர மண்டலங்கள் அவற்றின் ஸ்தானத்தில்க் கூட அந்நேரத்தில் இருப்பதில்லை.
64 வானியலாளர்களின் கூற்றுப்படி, சமநிலைக்குரிய துல்லியத்தோடு சம்பந்தப்பட்ட விண்மீன்கூட்டங்களுக்கு இடையே ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கும் ஒரு பட்டம் (1 °) ஒரு மாற்றம் இருக்கிறது; எனவே, ஒவ்வொரு 2000 ஆண்டுகளுக்கும் ஒரு மாற்றத்தின் அறிகுறி ஒன்று அங்கிருக்கிறது.
65 நல்லது, கிழக்கின் சாஸ்திரிகள் இன்னும் மற்றவர்களின் கதை மூலம், தேவன் அந்த நட்சத்திரங்களின் மூலமாக பேசினார் என்று நமக்கு தெரியும். ஆனால் இப்போது, இந்த கேள்வியைக் கவனியுங்கள்: இன்றையதினத்திலிருந்து 2000 வருடங்களுக்கு முன், வெளிப்படுத்துதல் 12:1 பத்மூ தீவில் இருந்து பார்க்கக்கூடியதாக இருந்ததா? நட்சத்திரங்களிடமிருந்தா வெளிப்படுத்துதல் 12:1 -ஐ யோவான் கண்டான்? நட்சத்திரங்களைப் பார்த்து யோவான் அதை விவரிக்க வில்லை என்பதே அதைப் பற்றிய என் எண்ணம். தரிசனங்கள் மூலம் தான் அவன் பேசினான் ஆனால் வானக சேனைகள் பத்மூ தீவிலிருந்து அதை சுட்டிக்காட்டின.
66 மண்ணிலிருந்தும் அதன் கனிம உப்புகளிலிருந்தும் நாம் உருவாக்கப்பட்டிருக்கிற அதே வழியில், தேவன் நட்சத்திரங்களிலும், விண்மீன் கூட்டங்களிலும் இருந்துள்ள தொடர்போடுகூட பூமியைப் படைத்தார். பூமியைப் படைக்க தேவன் அவை ஒவ்வொன்றின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டார். பூமியைப் படைப்பதற்கு முன்பே தேவன் அவைகளை படைத்தார் ... ஏனென்றால் பூமியில் ஜீவனானது அவைகளின் நிலைத்தன்மையையும், செல்வாக்கையும், அவற்றின் நிலைப்பாட்டையும் பொறுத்து இருக்கிறது.
67 இப்பொழுது ஆதியாகமம் 1:27 மற்றும் ஆதியாகமம் 2: 7 ஆகியவற்றை நாம் இப்போது எடுத்து கவனிக்கலாம். நமது உடல் நிலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது, அதாவது: கனிம உப்பு, எண்ணெய், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், ... என்பவைகளால் நம்மை தேவன் உருவாக்கினார் எனலாம். மேலும் நாம் நோய்வாய்ப்பட்டது, அவைகளின் அளவில் ஒரு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதன் காரணமாகத்தான்.
68 மருந்து குறிப்புகளைப் பாருங்கள்! கவனத்துடன் இருங்கள்! பரிசுத்த ஆவியானவர் தேவனே, மேலும் தேவன், நமது சரீரத்தை இந்த பூமியின் தூசியிலிருந்தே படைத்தார், ஆனால் நம் ஆத்துமா பற்றி என்ன?சிறிய எழுத்துடன் கூடிய நமது "ஆவி" (spirit) பற்றி என்ன? உங்களுக்கு புரிகிறதா? அது தான்! ... நித்தியம் போன்று நிலத்தின், ஆயிர வருட அரசாட்சியின் கூறுகள் சிருஷ்டிப்பின்போது இருந்தது. ஆமென்! இப்போது எழுந்து நிற்போமாக!
--:--
--:--