



Kacou 54 (Kc.54) : ஏசாயா 30 ன் பேரிலான விரிவுரை
(மே 15, 2005, ஞாயிரு காலையன்று லோகாட்ஜரோ, அபிட்ஜான், ஐவரிகோஸ்டில் பிரசஙகிக்கப்பட்டது)
1 தொடங்குவதற்கு முன்பாக நான் வெளிப்படையான பாவ அறிக்கையின் பேரில் ஒரு துல்லியத்தை கொண்டுவர விரும்புகிறேன். வெளிப்படையான பாவ அறிக்கையானது ஞானஸ்நானத்திற்குப் பிறகு செய்த பாவங்களை பொருட்படுத்துகிறதாக உள்ளது மற்றபடி நீங்கள் ஞானஸ்நானம் பெருகையில் நீங்கள் அதை மறந்திருந்தாலும் கூட, ஞானஸ்நானத்திற்கு முன்செய்த பாவங்களுக்காக அல்ல. இப்போது, கிட்டத்தட்ட ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாவ அறிக்கைசெய்கிற ஒரு சகோதரன் சபையில் எந்த பொறுப்பும் கொண்டிருக்கலாகாது என்பதை கவனிக்கவும்.
2 ஞானஸ்நானம் பற்றி பேசுகையில், நாம் அதைச்சார்ந்து எந்தவொரு விழாவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஞானஸ்நானத்தின் போது, உடலின் எல்லா பாகங்களும் மூழ்கத்தக்கபடி ஒருவர் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், ஏற்பாடுகளுக்குப் பிறகும் ஒரு பாகம் வெளியே வந்தால், அப்படிநிகழ்ந்தாலும், ஞானஸ்நானம் சரியானது தான். தண்ணீரில் ஞானஸ்நானம் என்பது "மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல்" என்பதாகும். மேலும் ஒருவன் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்துவிட்டால், அவனிடம், "வந்து, மரித்து, சரியானவிதத்தில் மறுபடியும் அடக்கம்பண்ணப்படுங்கள்" என்று சொல்லாதே. அது சாத்தானின் குரலாகும்.
3 இயேசுவானவர் வைக்கப்பட்ட கல்லறையின் ஆழத்தை நீ அறிவாயா? அதைச் செய்கிற விதம் ஞானஸ்நானத்தை பாதிக்காது. உதாரணமாக கடந்த வாரம், நான் ஞானஸ்நானம் கொடுத்த நமது வயதான சகோதரியின் பெயரை என்னால் உச்சரிக்க முடியவில்லை, அது மட்டுமல்ல அவளால் பிரஞ்சு பேசவும் முடியாது. நான் தியோவுலா மொழியை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அவள் ஒரு முஸ்லிமாக இருந்தாள். அவர் பல முறை தனது பெயரை மீண்டும் சொன்னார் ஆனால் நான் அதை உச்சரிக்க முடியவில்லை ... நீங்கள் பார்க்கிறீர்களா ? இன்னும் பிற தீவிர காரியங்கள் வரும்!
4 இப்போது நான் சில கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். சகோதரன் பிலிப்பு, “இறுதி வஞ்சகம் திரைநீக்கப்படுதல்” என்னும் பிரசங்கத்தில், புத்தியுள்ள கன்னிகைகள் தூங்கவில்லை என்று சொன்னீர்கள். உண்மையிலேயே அது அப்படித்தானா? நல்லது, மத்தேயு 25:5-ஐ வாசிக்கலாம்: "மணவாளன் வர தாமதித்தபோது, அவர்கள் அனைவரும் நித்திரைமயக்கம் அடைந்தனர் மேலும் தூங்கிவிட்டனர்" நீங்கள் காண்கிறீர்களா? "மணவாளன் வர தாமதித்தபோது, அவர்கள் எல்லோரும், நித்திரைமயக்கம் அடைந்து தூங்கிவிட்டனர்" என்றோ அல்லது "அவர்கள் நித்திரைமயக்கம் அடைந்தனர்; அவர்களெல்லாரும் தூங்கிவிட்டனர்" என்றோ வேதாகமம் சொல்லவில்லை, ஆனால் "அவர்கள் எல்லோரும் நித்திரைமயக்கம் அடைந்தனர், மற்றவர்கள் தூங்கிவிட்டனர்," அது தான், புத்தியில்லாதவர்கள். "அனைவரும்" என்ற பிரதிபெயர் "நித்திரைமயக்கம் அடைந்தவர்கள்" மற்றும் "தூங்கிவிட்டவர்கள்" ஆகிய இரண்டிற்கும் சேர்த்து பயன்படுத்தப்படவில்லை. 7-ம் வசனத்தில் இந்த வெளிப்பாடு உறுதிப்படுத்தப்படுவதை நாம் காணலாம்: "அப்பொழுது அந்த கன்னிகைகள் எல்லாரும் எழும்பி, தங்கள் பந்தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்." அவர்கள் "விழித்தெழுந்தனர்" என்று வேதாகமம் கூறவில்லை, ஆனால் அவர்கள் "எழுந்தனர்".
5 டார்பி வேறு ஏதாவது சொன்னால், அது தவறு! வேதாகம பதிப்பொன்று "விழித்தெழுந்தனர்" என்று கூறுமானால், அது சுட்டெரிக்கப்படுவதற்கு அது போதும். கடைசியாக 13-ம் வசனம், விழிபாக இராததற்கு புத்தியில்லாத கன்னிகைகளை கடிந்துகொள்வதினால் அதை உருதிப்படுத்துகிறது மேலும் மத்தேயு 26: 41 முதல் 43ன் பிரகாரமாக, விழித்திருக்காதவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிவோம்.
6 இப்பொழுது, நமது வேதாகமங்களில் ஏசாயாவின் புத்தகம் 30-ம் அதிகாரத்ததை எடுத்துக்கொள்ளலாம். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு ஏசாயா 30-ஐ வாசிக்கிறார்] ... இந்த அதிகாரத்தின் வழியே விரைவாக நான் வாசிப்பேன் பிறகு இரண்டு அற்புதமான பாடல்களோடு நாம் முடித்துக்கொள்ளலாம்.
7 நீங்கள் காண்கிறீர்களா? வேதாகமம் நடுராத்திரிச் சத்தத்தைப் பற்றி மட்டும் பேசுவதில்லை, ஆனால் இயேசு கிறிஸ்து நடுராத்திரிச் சத்தமாக இருக்கிறதினால், வேதாகமம் அதுவே நடுராத்திரிச் சத்தமாக இருக்கிறது. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தைப் பற்றி ஏசாயா 30 பேசுகிறது.
8 2-ம் வசனத்தில் உள்ளதுபோல, இந்த காலத்தின் பிள்ளைகள் தங்களது நேரத்தின் தீர்க்கதரிசியை வினவவில்லை என்று வேதாகமம் கூறுகிறது. உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன், தேவனின் வாயாக இருக்கிறான். மிருகமான கத்தோலிக்கத்திற்கு கீழாகவும் அதனுடைய நிழலான, அதாவது மிருகத்தின் சொரூபமான அனைத்து புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளின் கீழாகவும் தஞ்சம் புகும் நோக்கில் அவர்கள் அதை நிராகரித்தார்கள் என வேதாகமம் கூறுகிறது. நான் வாசிப்பை தொடர்கிறேன்: "... என் வாயோடு வினவாமல், எகிப்தின் நிழலில் நம்பிக்கை வைத்து, பார்வோனுடைய பாதுகாப்பின் கீழ் தஞ்சம்புகுவதற்காக,".
9 மேலும், அவர்கள் கலகக்கார புத்திரர்களாக இருப்பதாக வசனம் 1 கூறுகிறது; மொழியில் திறமை, வாழ்கையின் கடினத்தன்மை, வேலை இல்லாத்திண்டாட்டம் ஆகியவை தேவனுடைய ஊழியர்களாக வேடமிடுவதற்கு அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளன. இவைகள் தோல்விகளாக இருக்கின்றன. கடந்த காலங்களில் தேவனுடைய ஊழியர்களுக்குரிய ஒரு வாழ்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் அஞ்ஞானிகள் அவர்கள் மேல் பொறாமைகொள்ளுமளவில் பூமியின்மேல் அவ்வளவாக செல்வத்தை சம்பாதிப்பதற்கான பேச்சுக்கலை மற்றும் தந்திரத்தை அவர்கள் பிதாவான சாத்தானிடமிருந்து மரபுரிமையாக அவர்கள் பெற்றுள்ளனர். 6-ம் வசனத்தின் முடிவும் அதைக் கூறுகிறது. மற்றபடி அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ அதற்கு எந்த பணிநியமனமும் அவர்கள் பெறவில்லை. அவர்கள் செய்வதை அவ்வாரே செய்வார்கள் என்பதை மத்தேயு 24:24-ஐ தவிர வேதாகமம் கூறவுமில்லை. அவர்கள் எந்த செய்தியும் கொண்டிருக்கவில்லை என்பதே அதன் ஆதாரம்…
10 மத்தேயு 25:6-ன் இந்த செய்தியானது தெற்கிலிருந்து புறப்பட்டுவந்து, அது ஆப்பிரிக்காவாகும், முதலாவது தெற்கின் மிருகங்களை தாக்கும், அதாவது ஆப்பிரிக்காவின் சபைகளையும் அவைகளினூடாக முழு உலகத்தின் மிருகங்களையும் தாக்கும் என்பதை ஏசாயா 30-ன் 6-வது வசனம் கூருகிறது. 6-ம் வசனம் வெளிப்படுத்துதல் 12:14 உடன் துவங்குகிறது. ஆனால் காலத்தினால் ஏற்கனவே வெளிப்படுத்துதல் வந்துவிட்டதினால், அப்பொழுதே போர்கள் துவங்கிற்று.
11 சத்தியத்திற்கும், அவர்களது நேரத்தின் தீர்க்கதரிசிக்கும் எதிராக பிசாசின் புத்திரருடைய போர்கள். ஏசாயா 30:6: "தெற்கின் மிருகங்களின் பாரம்: பெண்சிங்கமும் சிங்கமும், விரியனும் பறக்கிற கொள்ளிவாய் சர்ப்பமும் வருகிறதுமான, தொல்லை மற்றும் வேதனையின் தேச வழியாக...". நீங்கள் காண்கிறீர்களா? அவர் இனி சக்திவாய்ந்த கழுகு அல்ல ஆனால் சிங்கமாக இருக்கிறார், அதேநேரத்தில் சாத்தானோவெனில் அதே பழைய பாம்பாகவே இருக்கிறான். நீங்கள் காண்கிறீர்களா? "தொல்லை மற்றும் வேதனையின் தேச வழியாக", ஒரு வார்த்தையில் சொல்லப்போனால், யுத்தத்தில் இருக்கும் ஒரு தேசம்.
12 கர்த்தர் இயேசுவின் நாட்களில் இஸ்ரவேலர் ரோமர்களுடன் மோதிக்கொண்டிருந்தார்கள். மார்ட்டின் லூதரின் நாட்களில் ஜேர்மனியில் விவசாயிகள் போர் இருந்தது, பிரன்ஹாமின் நாட்களில் இரண்டாம் உலக யுத்தம் இருந்தது. மேலும் அது சாத்தானின் சபைகளை சீர்குலைக்கும் நோக்கில் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அது சாதகமாக இருக்கத்தான் அப்படியென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13 ஆனால் இப்போது, இந்தச் செய்தி வசனம் 8-ன் படி ஒரு புத்தகத்தில் ஒன்றுதிரட்டப்பட்டிருக்கிறது: "வரக்கூடிய ஒரு காலத்தில், என்றைக்குமுள்ள ஒரு சாட்சியாக அது இருக்கும்படிக்கு, இப்பொழுது நீ போய், அவர்களுக்கு முன்பாக ஒரு எழுத்துப்பலகையில் அதை எழுது, ஒரு புத்தகத்தில் அதை பதிவுபண்ணு". நீங்கள் காண்கிறீர்களா? நான் பிரசங்கிக்கும் செய்தியைப் பற்றித்தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. நான் பூமிக்கு வருவதற்கு 2800 ஆண்டுகளுக்கு முன், நான் பிரசங்கிக்கிற இந்தச் செய்தி ஒரு புத்தகத்தில் ஒன்றுதிரட்டப்பட்டிக்கும் என்று ஏசாயாவிடம் சொல்லப்பட்டது…
14 பூமியின் குடிகள் தேவனுக்கு முன்பாக வெறுக்கத்தக்க ஜனத்தைப்போல இருக்கிறார்கள் மேலும் அவர்களுடைய நடத்தை தீர்க்கதரிசிகளுக்கு நேராக யூதர்களுடையதற்கு ஒப்பாக இருக்கிறது. அவர்கள் இனிமையான காரியங்களை விரும்புகிறார்கள். மேலும் வசனம் 10 இவ்வாறு கூறுகிறது: "எங்களுக்கு இதமான காரியங்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்று...". அது 2 தீமோத்தேயு 4:3 மற்றும் 4 ஆகவும் உள்ளது. வசனம் 12 இவ்வாறு கூறுகிறது, "இஸ்ரவேலின் பரிசுத்தர் கூறுகிறதாவது: நீங்கள் இந்த வார்த்தையை புறக்கணித்து, ஒடுக்கப்படுதலையும் தாறுமாறையும் மனப்பூர்வமாக நம்பி, அதைச் சார்ந்து கொள்ளுகிறபடியால், ...". தேவன் உங்களை பொய்யை நம்பும்படி செய்வார். மத்தேயு 25:6 ன் இந்த வார்த்தைக்கு வெளியே, வேறு எந்த வழியையும் வேதாகமம் "தாருமாறு" என்று அழைக்கிறது.
15 வேதாகமம் கூறுகிறதென்ன? அது ஒரு நியாயத்தீர்ப்பின் செய்தியாக இருக்கிறது. "... யேகோவா நியாயத்தீர்ப்பின் தேவனாயிருக்கிறார்; அவருக்குக் காத்திருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்." ஏசாயா 30:18. அவருக்குக் காத்திருப்பவர்கள் தேவனின் வாய் நியாயத்தீர்ப்புக்குத் திறக்கிறதை அறிவர். ஆனால், இந்த நியாயத்தீர்ப்பின் செய்திக்குத் திரும்புவதன் மூலம் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை வேதாகமம் கூறுகிறது, மேலும் அந்த நபர்கள் தான் "ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. அவர்களுடைய பெலனுக்கான நம்பிக்கை அங்கே இருக்கும்…
16 மேலும் நடுராத்திரிச் சத்தத்தின் காலத்தில், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் வலது அல்லது இடது பக்கம் சென்றால், அவர்களுக்குப் பின்னால் அவர்களுடைய காதுகளில் ஒரு வார்த்தை கேட்கும் என்று வேதாகமம் கூறுகிறது. "...நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்த் திரும்பும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். (ஏசாயா 30:21).
17 மேலும் இந்த வார்த்தையின் காலத்தில், இந்த செய்தியால், உங்கள் பூர்வ தெய்வங்களை நீங்கள் கனவீனப்படுத்துவீர்கள். "உன் வெட்டப்பட்ட சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் கனவீனம்பண்ணுவாய்; நீ அவைகளைத் மாதவிடாய் தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்" என்று வசனம் 22 கூறுகிறது. வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணம், தேவன் தடைசெய்ததில், அவை நல்ல பொருட்களாக இருக்கின்றன. எவால்டு ஃப்ராங்கு அல்லது ஆஸ்பானின் கட்டுரைகளில் நல்ல காரியங்கள் உள்ளது.
18 இப்பொழுது நாம் உபாகமம் 7:25 மற்றும் 26-ஐ எடுத்துக்கொள்ளலாம். நாம் அதை வாசிப்போமாக: "அவர்களது தெய்வங்களின் வெட்டப்பட்ட விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய யேகோவாவுக்கு அருவருப்பானவைகள். அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய்; அது சாபத்திற்குள்ளான பொருள்."
19 இப்பொழுது இதை கவனியுங்கள்: வானொலி, அது சரி; ஆனால் தொலைக்காட்சி!!! தொலைக்காட்சியில் செய்தி, அறிக்கைகள் மற்றும் ஆவணப்படங்களுக்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கான கார்ட்டூன்களுக்கும் காமிக்ஸ்சுகளுக்கும் மேலும் பாலியல் தன்மையல்லாத திரைப்படங்களுக்கும் எதிராக எனக்கு எதுவும் இல்லை. இவை மட்டுமே இந்த தொலைக்காட்சியின் விலைமதிப்பற்ற காரியங்கள்.
20 நாம் இப்பொழுது தொடருவோமாக, ஏசாயா 30:25-ல், இந்த செய்தியின் பிரசங்கங்கள் தான் நீரோடைகள். இந்த செய்தியின் காலத்தில், கோபுரங்கள் விழும் என்று வசனம் 25 கூறுகிறது. அது செப்டம்பர் 11, 2001 அன்று இரண்டு இரட்டை கோபுரங்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு பொருந்துகிறது... ஆனால் அதுதான் காரியம் என்றால், அது ஒரு கத்தோலிக்க கோபுரமும் அதன் சொரூபமான சுவிசேஷகசபை மற்றும் பிரன்ஹாமிஸ்டுசபை என்னும் கோபுரமுமாக இருக்கும். கண்ணுக்கு தெரியாத ஒரு கரம் அவர்களது தன்னம்பிக்கையிலே அவர்களை தாக்கும். நாம் அதை வாசிக்கலாம்: "... கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே," (ஏசாயா 30:25).
21 வசனம் 26: "சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகல்களின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்." என்பதை கூறுகிறது. இதை இந்தப் பிரகாரமாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: "சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனின் இந்த வெளிச்சம் ஏழத்தனையாக, ஏழு பகல்களின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும் ...". நீங்கள் காண்கிறீர்களா? இது என்ன? இதுதான் மீட்டளிக்கப்படுதல். ஏழு காலங்களின் வெளிச்சம் நடுராத்திரியில் மீட்டளிக்கப்பட்டது.
22 இதோ நடுராத்திரிச் சத்தம் தொலைதூர ஆப்பிரிக்காவிலிருந்து வருகிறது என 27-ம் வசனம் கூறுகிறது: "அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும். அவருடைய கோபம் எரிகிறதும் ... நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கும் ... ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்."
23 29-ம் வசனம் இன்னும் நடுராத்திரிச் சத்தமாக இருக்கிறது மேலும் இஸ்ரவேலில் பாவநிவிர்த்திப் பண்டிகைகளிலே பரிசுத்தமாக்கப்படுதலின் துதியைப்போன்று, மணவாட்டிக்கு இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றி பேசுகிறது. அதுதான் பரிசுத்தமாக்கப்படுதல். மேலும் அந்தக் காலக்கட்டத்தில், சோதோம் கொமோராவாக இருக்கிற அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், பூமியிலே செய்த ஓரினச்சேர்க்கை மற்றும் மார்க்கரீதியாயான அஞ்ஞானத்தனம் ஆகிய அருவருப்புகளினிமித்தம், "யேகோவா தமது சத்தத்தின் மகத்துவத்தை உக்கிர கோபத்துடன் கேட்கப்பண்ணுவார், ..." என்று அந்த வசனம் மேலும் கூறுகிறது.
24 "யேகோவாவின் சத்தத்தினாலே அசீரியன் நொறுங்குண்டுபோவான்: அவர் கோலினால் அவனை அடிப்பார்" என்று வசனம் 31 கூறுகிறது. அசூர் என்பது பாபிலோனிய சாம்ராஜ்யம், அதாவது கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் உள்பட வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட சபைகள் என அழைக்கப்படுகிற சபைகள்; அவை வெளிப்படுத்துதல் 19-ன் கோலால் அடிக்கப்பட்டவேண்டும். அவர்களுக்கு எதிராக எங்கெல்லாம் நடுராத்திரிச் சத்தம் பிரசங்கிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் ஒரு கொந்தளிப்பான யுத்தம் இருக்கும் என்று வசனம் 32 கூறுகிறது. அதாவது, ஒரு நாள் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் வெள்ளத்தை ஊற்றிவிடும். எப்போதும் இருந்தவண்ணமாகவே இந்த மெய் திருச்சபைக்கு எதிராக இந்த வலுசர்ப்பம், ஜனங்களும் தேசங்களுமான வெள்ளத்தை ஊற்றிவிடும். "யேகோவா அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.". தேவன் சபைகளோடு யுத்தம் செய்வார், சபைகளும் மெய் திருச்சபையோடு யுத்தம் செய்யும்.
25 மேலும் கடைசி வசனமான 33-வது வசனம், "அக்கினி தெய்வமான தோப்பேத் இந்த போராட்டத்திற்காக நீண்ட காலத்திற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்டது" என்று கூறுகிறது. தேவன் "அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; யேகோவாவின் சுவாசம், கெந்தகத் தீயைப்போல, அதைக் கொளுத்தும்.". யெகோவாவின் சுவாசம் என்பதன் பொருள் நரகத்தை கொழுந்துவிட்டெரியச் செய்யும் பரிசுத்தவான்களின் பிரசங்கங்கள் தான் என்று உங்களுக்குத் தெரியுமா? நமது பிரசங்கங்கள், உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளர்களுடைய நமது பிரசங்கங்கள் பிசாசின் புத்திரருக்கு எதிராக நரகத்தை கொழுந்துவிட்டெரியச் செய்கிறது. பிசாசின் புத்திரர் எப்பொழுதும் அதற்கு எதிராக வருகிறார்கள். அதுதான் காரியம்!
26 இயேசு-கிறிஸ்துவின் மகிமையை இப்போது பாடுவோம்! நீங்கள் பார்க்கிறீர்களா? நான் பிரசங்கித்தது, முதல் தடவையாக பதினெட்டு நிமிடங்கள் நீடித்தது. இந்தவிதமான நடத்தையையே நான் கொண்டுள்ளேன். நான் எப்போதாவது ஒரு மணிநேரம் வரை பிரசங்கிக்கிறேன், மதியம் வரைக்கும் ஒரு ஆராதனையும் நீடித்தது இல்லை. ஒன்றுகூட! நீங்கள் பார்க்கிறீர்களா? எனக்கு முன்னால் இருந்த தீர்க்கதரிசிகளைப் போலவே, அவசியமானதையே சொல்கிறேன் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் அதை நித்திய ஜீவனுக்கென பெற்றுக்கொள்கிறார்கள். ஆமென்!.