(2005 ஆகஸ்ட 7 ஞாயிற்றுக்கிழமை காலை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரி கோஸ்டில் பிரசிங்கிக்கப்பட்டது)
1 இந்த காலை வேளையிலே "தேவனுடைய வார்த்தை அவிசுவாசத்திலிருந்து வேறு பிரிக்க கட்டளையிடுகிறது" என்ற பொருளை பற்றி நான் பேச விரும்புகிறேன். நம்முடைய வேதாகமங்களை 2 நாளாகமம் 19 ற்க்கு எடுத்துக் கொள்வோம். யோசபாத் ராஜா ஆகாபை நோக்கி சென்றான். அவர்கள் இருவரும் கிலேயாத்திலுள்ள ராமோத்திடம் வெற்றி பெறும்படியாக போருக்கு சென்றனர் மற்றும் அது ஆகாபின் மரணத்துடன் முடிவடைந்தது. அதை நாம் 1 இராஜாக்கள் 22 லும் காணலாம்.
2 நாம் 2 நாளாகமம் 19: 1 முதல் 3 ஐ வாசிக்கலாம். "யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான். அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் யெகோவாவின் கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது..." நீங்கள் பார்க்கிறீர்களா ?
3 யோசபாத் ராஜா தேவனோடு தனிமையில் இருந்தான் ஆனால் அவன் தன்னுடைய தனிமைக்கு முடிவு கொண்டு வர வேண்டுமென யாரிடமாவது ஐக்கியம் கொள்ளும்படியாக விரும்பினான். அவன் இயற்கையான ஜீவியத்தின் மேல் சலிப்புற்றவனாக இருந்தான். அவனை சுற்றியுள்ள சபைகளின் ராஜாக்கள் விக்கிரக ஆராதனைக்காரர்களும் தேவனுக்கு நிச்சயமான விரோதிகளாகவும் இருக்கிறார்கள் என்று அறிந்திருந்தான். ஆனால், இருப்பினும் அவன் ஒரு நண்பனை விரும்பினான், அதை அவன் அவனைப்போன்று தேவனை அறிக்கை செய்த ஒரே ராஜாவான ஆகாப் என்ற நபருக்குள் கண்டடைந்தான்.
4 ஆனால் என்ன நடந்தது? தேவன் யோசபாத்திடம் கோபம் கொண்டார்! மேலும் தீர்க்கதரிசியானவர் சத்தமிட்டு: " ...துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது." நீங்கள் பார்க்கிறீர்களா ? துன்மார்க்கனுக்குத் துனைநிற்பாயோ? இந்த மணி வேளையின் வார்த்தையான இயேசு கிறிஸ்துவை வெறுக்கிறவர்களை நீ சிநேகிப்பாயோ? இயேசு கிறிஸ்து மாம்சத்தில் இருந்த பொழுது தன்னுடைய செய்தியை தள்ளிப் போட்ட பரிசேயர்களிடத்தில் ஐக்கியம் கொண்டாரா? நீங்கள் பார்க்கிறீர்களா ? தேவன் பரிசுத்த தீர்க்கதரிசிகளின் குணாதியசத்தை யோசபாத்திடம் கோரினார்; எதிரிகள் மற்றும் விரோதிகளுக்கு தூரமாக அவர் எப்போதும் மலைகளுக்கு வழிநடத்துகிறார், ஆனால், யோசபாத் இந்த சித்தத்தை புரிந்து கொள்ளவில்லை.
5 மேலும் மோசே கட்டளைகளை பறைசாற்றுவதற்கு முன்பாகவே, கோராகு, தாத்தான் மற்றும் அபிராமிடமிருந்து சபையானது சுத்திகரிக்கப்பட்டது. அதே விதமாக அப்போஸ்தலர்களிடத்தில், பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருவதற்கு முன்பாக சபையானது யூதாஸ் காரியோத்து மற்றும் மற்றவர்களால் சுத்திகரிக்கப்பட்டது. மேலும் நாம் மகிமையை அறிவதற்கு முன்பாக எல்லா யூதாசும் நம் மத்தியில் இருந்து வெளியே வரும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
6 நாம் வேறு ஒரு பத்தியை பார்ப்போம் 2 நாளாகமம் 20:35 முதல் 37 வரை: "அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான். தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள். மரேசா ஊரானாகிய தொதாவாவின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக்கூடாமற்போயிற்று." நீங்கள் பார்க்கிறீர்களா ?
7 தேவன் தாமே நம்மை ஒரு சபையோடு அல்லது ஒரு மேய்ப்பனுடனோ, சுவிசேஷகனுடனோ, அல்லது போதகன் அல்லது மற்றவர்களுடன் சேராமல் பாதுகாப்பாராக. பூமியை சுற்றிலும் உள்ள இந்த ஆயர்கள், இந்த மகத்தான பேராயர்கள் பிசாசுகள் என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் தாழ்மையோடு இங்கே வந்து ஞானஸ்நானம் பெற்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவினல் பிரதிஷ்டை செய்யப்படாவிட்டால் அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. இயேசு கிறிஸ்துவை தவிர வேறு தேவன் இல்லை மற்றும் பூமியின் மேல் காக்குவ் பிலிப்பு மாத்திரமே அவருடைய ஒரே தீர்க்கதரிசி. மேலும் தேவனுடைய அனைத்து குமாரரும் இந்த வார்த்தைக்கு ஆமென் என்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8 மேலும் இந்த செய்தியை நீங்கள் விசுவாசிக்கும் பொழுது மேலும் நீங்கள் பிரசங்கிகளாகவோ அல்லது இந்த செய்தியின் மேய்ப்பர்களாகவோ இருக்கும் பொழுது இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு உயர் ஸ்தலங்களில் உள்ள மத குருமார்களோடு உங்களை வேசித்தனத்திற்குள்ளாக்க வேண்டாம். தேவனோடு தரித்திருங்கள்! அவருடைய வார்த்தையோடு தரித்திருங்கள்! உபத்திரவம் எவ்வளவாக இருந்தாலும் தேவனோடும் அவருடைய தீர்க்கதரிசியோடும் தரித்திருங்கள்! ஏனெனில் உங்களுடைய மணி வேளையின் உயிர்வாழும் தீர்க்கதரிசிக்கு வெளியே அது கேட்டின் வழியாக இருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் கத்தோலிக்கர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபடவில்லை. நீங்கள் புராட்டஸ்டன்டுகளாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபடவில்லை. நீங்கள் சுவிசேஷக சபை, பிரன்ஹாமிஸ்டுகளாக, இஸ்லாமியர்களாக மற்றும் மற்றவர்களை போன்று இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபடவில்லை. மேலும் எல்லா காலங்களிலும் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறதை போல, உங்களுடைய மணி வேளையிலும் நீங்கள் விசுவாசித்து நித்தியஜீவனை பெறும்படியாக அவர் நோவாவை போன்று ஒரே ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவார். மேலும் இந்த தீர்க்கதரிசியானவன் தன்னை அனுப்பின சர்வ வல்ல தேவனை முற்றிலுமாக கொண்டிருப்பான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
9 மோசேயோ அல்லது நாசரேத்தூரின் இயேசு கிறிஸ்துவோ அல்லது வேதாகமத்தின் வேறு ஒரு தீர்க்கதரிசியோ என்னுடைய முற்றிலுமானது அல்ல என அறிந்துக் கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடைய ஒரு தரிசனத்திலோ அல்லது சொப்பனத்திலோ மோசேயும் எலியாவும் அவருடைய ஊழியத்தின் வேளையிலே தோன்றினது போல தோன்றலாம். ஆனால் அது மோசே மற்றும் எலியாவை அவருக்கு மேலாக அமர்த்துவதில்லை. ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவனுடைய மணி வேளையின் முற்றிலுமானதாக இருக்கின்றார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா ?
10 நல்லது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தன்னுடைய ஊழியத்தில் இரண்டு கட்டங்களை கொண்டிருந்தார். முதலாவதாக, அவர் தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார் மேலும் சிலுவையின் மீது அவருடைய பலியின் மூலம் உன்னையும் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற என்னையும் உட்பட எல்லாம் மனுக்குலத்தையும் அவர் இரட்சித்தார். யோவான் ஸ்நானகன் இவ்விதமாக இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான். ஆனால் ஆட்டுக்குட்டி யானது தன்னை கொன்று போடுகிற ஆசாரியனை காட்டிலும் உயர்ந்தது அல்ல அல்லது பலியிடப்பட்ட பாவியை விட உயர்ந்தது இல்லை. இரண்டாவதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை போன்று ஒரு தீர்க்கதரிசன ஊழியத்தை கொண்டிருந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடைய வெளிச்சம் அல்ல. காக்குவ் பிலிப்புவாகிய நான் என்னுடைய மணி வேளையின் முற்றிலுமாளம் வெளிச்சமாக இருக்கிறது போல அவருடைய மணி வேளையில் உள்ளவர்களுக்கு அவர் முற்றிலுமானவரும் வெளிச்சமாக இருந்தார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் இன்று அவர் 2000 வருடங்களுக்கு முன்பாக ராஜ்யத்தின் திறவுகோல்களை கொண்டிருந்ததை போல, இன்று நான் ராஜ்யத்தின் திறவுகோல்களை கொண்டிருக்கின்றேன்.
11 வெளிப்படுத்துதல் 1:18 இல், அவர் : "நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்". என்றார் ஆனால் இராஜ்யத்தின் திறவுகோல்கள் எங்கே? இராஜ்யத்தின் திறவுகோல்கள் பூமியின் மேல் ஒரு மனிதனிடத்தில் இருக்கின்றது. பூமியை விட்டு கடந்து போகும் முன், அவர் பேதுருவினிடத்தில் : "பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்" என்றார். உலகதோற்றம் முதற்கொண்டு, பரலோகராஜ்யத்தின் திறவுகோல்கள் எப்பொழுதும் ஒரு மனிதனிடத்தில் மாத்திரமே இருந்தது. இன்று இந்த மனிதன். உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற நானே அவன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 இன்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற காக்குவ் பிலிப்பாகிய என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் இன்று யோவான் 3:16 ஆனது : தேவன், தம்முடைய அன்பான தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை போன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தார் மேலும் நீங்கள் இன்று என்னை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் பூமியின் மீது இருந்த போது விசுவாசித்தீர்கள் என்று பாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13 பெருமையும் மனிதனின் மகத்துவமும் மற்றும் அங்கு அவரில் விசுவாசம் கொல்வதற்கு எவையெல்லாம யூதர்களை தடுத்ததோ அதுவே என்னில், உங்களுடைய மணி வேளையின் உயிர்வாழும் தீர்க்கதரிசி, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவில் விசுவாசம் கொள்வதற்கு உங்களுக்கு தடையாக இருக்கின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னைப் போன்று ஒரு மனிதனாக உங்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் என்னை விசுவாசிக்காமல், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்டிருக்கின்றேன் என்றோ அல்லது வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளில் ஒருவரை விசுவாசிக்கின்றேன் என்று பாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
14 நல்லது, இதை பின் தொடருங்கள்! இதே காட்சியானது மோசே மற்றும் இயேசு கிறிஸ்து மூலமாக வழங்கப்பட்டது. பழைய உடன்படிக்கைக்காக மோசே . பழைய உடன்படிககையை மோசே துவங்கி வைத்தான். மேலும் இந்தப் பக்கத்தில், புதிய உடன்படிக்கைகாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இருவரும் ஒரே படத்தை தொடங்கினர்.
15 மோசே எல்லா யூதர்களையும் எகிப்திலிருந்து பார்வோனுக்கு கிரயத்தை செலுத்தி விடுவித்தான் ஆனால் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் மோசேயின் பெயரை காண்பியுங்கள் தீர்க்கதரிசிகளான எரேமியா, ஆமோஸ் மற்றும் மற்றவர்கள் மோசேயைக் குறித்து பிரசங்கம் செய்ததை காண்பியுங்கள்! இந்த தீர்க்கதரிசிகள் மோசே கூறினதை திரும்ப கூறினதாகவோ அல்லது மோசே கூறினதின் பேரில் கருத்தை தெரிவித்ததாக எனக்கு காண்பியுங்கள்!
16 இன்று ஒரு தேவனின் ஊழியக்காரன் வேதாகமத்தை குறித்து கருத்தை தெரிவிக்கவோ, வேதாகமத்தை பிரசங்கிக்கவோ வருவதில்லை, ஆனால் உங்களுடைய மணி வேளையினுடைய தீர்க்கதரிசியினிடத்தில் தேவன் கூறியதை பிரசங்கிக்க வருவான். முதலாவதாக, மோசே நோவாவை குறித்து பேசவில்லை ஏனெனில் அவன் நோவாவின் சீஷன் அல்ல. அவன் நோவாவின் நாட்களில் ஜீவிக்கவில்லை நோவாவின் வரலாறு மோசேக்கு அக்கரை கொடுக்கவில்லை.
17 எரேமியா ஏசாயா மற்றும் தீர்க்கதரிசிகள் மோசேயை குறித்து பேசவில்லை. ஏனெனில் அது வேறு ஒரு நேரம் மோசே தன்னுடைய சீடர்களை கொண்டிருந்தான் மோசே தன்னுடைய வரலாற்றை கொண்டிருந்தான் மற்றும் ஏசாயா எரேமியா மற்றும் மற்ற வேதாகமத்தின் தீர்க்கதரிசிகள் மோசேயோடு கூட இரட்சிப்படைய முடியாது.
18 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் இது அதே காரியமாக இருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய சொந்த அப்போஸ்தலர்களை கொண்டிருந்தார்: பேதுரு, யோவான், யாக்கோபு. அவர்கள் தங்களுடைய மணி வேளையின் வல்லமையுள்ள மனிதர்களாக இருந்தார்கள் மற்றும் அவர்களுடைய தீர்க்கதரிசி அது அவர்களை அழைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு, திமொத்தேயு, தீத்து, சில்வான் மற்றும் அது போன்றவர்களை பவுல் அழைத்ததை நாம் பார்க்கின்றோம். மேலும் இன்று நாம் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் நேரத்தில் இருக்கின்றோம். மேலும் நீ தேவனுடைய ஊழியக்காரன் என்றால் அதாவது உன்னுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியினால் அழைக்கப்பட்டிருப்பாய், அதாவது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவினால் ஞானஸ்நானம் பெற்று பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பாக உன்னால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. உன்னுடைய பெருமையை உடைத்து, தாழ்மையாக இங்கே வா ஏனெனில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவிற்கு வெளியே உன்னால் இரட்சிப்பை அடைய முடியாது.. தன்னுடைய மணி வேளைக்கென்று நோவா, தன்னுடைய மணி வேளைக்கென்று ஏசாயா தன்னுடைய மணி வேளைக்கென்று எரேமியா, தன்னுடைய மணி வேளைக்ககென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தன்னுடைய மணி வேளைக்கென்று பவுல், தன்னுடைய வேளைக்கென்று வெஸ்லி, தன்னுடைய வேளைக்கென்று மார்ட்டின் லூதர், நாம் ஜீவித்து கொண்டிருக்கும் இந்த மணி வேளைக்கென்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. மேலும் 24 ஏப்ரல் 1993 ன் தரிசனத்தின் வல்லமையினால் பூமியிலோ அல்லது பரலோகத்திலோ அது தோற்றுப் போக முடியாது. ஆமென். ஏசாயா, எரேமியா, ஆமோஸ் மற்றும் மற்ற எல்லோரும் மோசே குறித்து பேச முடியாது ஏனெனில் அவர்கள் மோசேயை அறியாமல் இருந்தார்கள்.
20 இன்று நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து பேச முடியாது ஏனெனில் நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்ததில்லை, ஆனால் இன்று நீ அறிந்த ஒருவர் இருக்கிறார் அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. மேலும் நியாயத்தீர்ப்பின் நாளிலே, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை நீ காணும் பொழுது பூமியின் மேல் உன்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த ஒருவராக நீ அவரை இனங்கண்டு கொள்வாய்.
21 ஏசாயா மற்றும் எரேமியா மோசேயின் சீடர்கள் அல்ல ஆனால் அவர்கள் மோசேயை போன்ற தீர்க்கதரிசிகள். மேலும் உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பாகிய நான், நான் மோசேயின் சிஷனும் அல்ல அல்லது நாசரேத்தூர் இயேசுவின் சிஷனும் அல்ல அல்லது வேதத்தோடு ஒத்திருக்க நான் வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளின் ஒருவரின் சிஷனும் அல்ல. ஆனால் அவர்களை போன்று நான் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன்.
22 நீங்கள் என்னை நிராகரிப்பதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு ஆனால் இதை தெரிந்து கொள்ளுங்கள் இன்று நீங்கள் யாராக இருந்தாலும் காக்குவ் பிலிப்புவே உங்களுடைய தீர்க்கதரிசி. நீங்கள் கிறிஸ்தவராகவோ அல்லது யூதர்களாகவோ இஸ்லாமியர்களாககவோ பெளத்தர்களாககவோ அல்லது மற்றவர்களாக இருந்தாலும் காக்குவ் பிலிப்புவே உங்களுடைய தீர்க்கதரிசி. நீ ரோமாவின் போப்பாக இருந்தாலும் அல்லது இஸ்ரவேலில் ஒரு நபியாக அல்லது ஒரு அரசனாக அல்லது ஜனாதிபதியாக இருந்தாலும், காக்குவ் பிலிப்புவே உன்னுடைய தீர்க்கதரிசி.
23 நீங்கள் ஆப்பிரிக்கர்களாக, ஐரோப்பியர்களாக, அமெரிக்கர்களாக அல்லது ஆசியர்களாக இருந்தாலும், காக்குவ் பிலிப்புதான் உங்கள் தீர்க்கதரிசி. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் நீங்கள் ஆராதிப்பதாகக் கூறும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் மூலம் உங்களுடன் பேசுகிறார். இஸ்ரவேலுக்கு மேலே பரலோகத்தில் பேசிய தேவன், எரேமியா என்ற மனித உறை மூலமாக பூமியில் நடந்துக்கொண்டும் மற்றும் பேசுவதும் அதே தேவன்தான் என்பதை யூதர்கள் புரிந்துக்கொள்ளவில்லை
24 எத்தியோப்பிய ஸ்திரீயினுடனான மோசேயின் சாகசங்களை குறித்து பேசுகையில், கோராகு மற்றும் தாத்தான் மிரிய மினிடத்தில் இப்படியாக : "போதும்! தன்னுடைய பாலுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாதவன் எங்களுடைய தீர்க்கதரிசியாக இருக்க முடியாது" என்றான். இருப்பினும், இன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தீர்க்கதரிசியை காட்டிலும் மேலானவனாக இருப்பதை போன்று மோசே ஒரு தீர்க்கதரிசியை காட்டிலும் மேலானவனாக இருந்தான்.
25 மேலும் பிளவுபட்ட நாவுடைய மத தலைவர்களே, உங்களால் அதை புரிந்து கொள்ள முடியாது ஏனெனில் நீங்கள் பூமியின் துன்மார்க்கமாக இருக்கிறீர்கள். நோவாவின் நாட்களில் இருப்பதை போன்று, இரட்சிக்கப்படுவதற்கு என்று நீங்கள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26 இப்பொழுது நான் ஒரு கேள்வியை வைத்திருக்கின்றேன் : தீர்க்கதரிசி காக்குவ் 1946 மே 7 அன்று மாலையில் ஒரு தூதனானவன் கேட்கத்தக்கதான சத்தத்திலே வில்லியம் பிரன்ஹாமிடத்தில், " மோசேயினிடத்தில் இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டதை போல உனக்கும் இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவே, நாங்கள் விசுவாசிக்கதக்கதாக தேவன் உமக்கு எந்த அடையாளத்தை கொடுத்திருக்கின்றார்?".
27 நல்லது, மனுக்குலமானது அவிசுவாசத்திலும் சாத்தானின் அந்தகாரத்திலும் எவ்வளவு ஆழமாக உள்ளது என்று இந்த கேள்வியானது காண்பிக்கின்றது. கவனித்தீர்களானால் இஸ்ரவேலின் அவநம்பிக்கையின் நிமித்தம் மோசே தான் தேவனிடத்திலிருந்து அந்த அடையாளங்களை கேட்டான். யாத்திராகமம் 4 ம் அதிகாரத்தில் மோசே தேவனிடத்தில் "அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; என்றான். இதற்கு பிரதியுத்தரமாக யெகோவா அவனுக்கு இரண்டு அடையாளங்களை கொடுத்தார்.
28 யூதர்கள் எகிப்தியர்களாகவும், பெந்தேகோஸ்தேயினராகவும் இருந்தனர் மாயவித்தைகாரர்களுக்கு பழக்ப்பட்டவர்களாகவும் இருந்தனர். ஆகவே அது ஒன்று மாத்திரமே அவிசுவாசத்திலிருந்து அவர்களை பிரிக்கக் கூடிய ஒரே வழியாக இருந்தது. இல்லையெனில், அது தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருந்திருக்கவில்லை ஆனால் இந்த அடையாளங்களுக்கு பிறகு என்ன பின்தொடர்ந்தது அவர்கள் எல்லோரும் வனாந்தரத்திலே மரித்துப் போனார்கள்.
29 மேலும் இப்பக்கத்திலே, வில்லியம் பிரன்ஹாம் வந்த பொழுது அது அதே காரியமாக இருந்தது, இன்று அவர்கள் எகிப்தியரும் பெந்தேகொஸ்தேயினர்களாக இருக்கிறார்கள். கத்தோலிக்கர்களை போன்று அக்னி ஸ்தம்பங்கள் மற்றும் அடையாளங்களை நோக்கிக்கொண்டு அவர்கள் அவர்களுடைய பெந்தேகோஸ்தே விசுவாசத்திற்கு திரும்பினார்கள்.
30 ஆனால் இங்கே ஒரு ஜன கூட்டத்தினர் இப்படியாக கூறினார்கள் நாங்கள் மின்னல்களையும் இடிகளையும் பார்க்கவேண்டிய அல்லது கேட்கவேண்டிய அவசியம் இல்லை மற்றும் நாங்கள் அடையாளங்களை காண வேண்டிய அவசியமில்லை ஆனால் நாங்கள் முழுவதுமாக விசுவாசிக்கின்றோம்." ஆமென்! எந்த அடையாளத்தை இந்த ஜனங்கள் விசுவாசிக்க வேண்டியதாக இருக்கின்றது? எனக்கு ஒரு அடையாளத்தை கொடுப்பது 24 ஏப்ரல் 1993 இன் தரிசனத்திற்கு நேரடியான முரண்பாடாக இருக்கும்
31 மேலும் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் மெய்யாகவே நடுராத்திரியில் இருக்கும் இந்தக் கூட்டத்தினர் மோசேக்கு முன்பாக இருந்த எகிப்திய யூதர்களை காட்டிலும் உயர்ந்தவர்கள். இங்கே நடுராத்திரியில் உள்ள ஜனக்கூட்டம் வில்லியம் பிரன்ஹாமிற்கு முன்பாக இருந்த கூட்டத்தை காட்டிலும் மேலானது. பிரன்ஹாமிஸமானது பெந்தேகோஸ்தலிசமாக இருக்கின்றது, மேலும் அவர்கள் அப்போஸ்தல விசுவாசத்தோடு, அக்கினி ஸ்தம்பத்தின் புகைப்படங்களோடு பெந்தேகோஸ்தேலிசத்திற்கு திரும்பினார்கள். ஆனால் இந்த பக்கதில், இது தீர்க்கதரிசன விசுவாசமாக இருக்கின்றது. இந்த விசுவாசமானது "நாங்கள் பார்க்கவும் இல்லை கேட்கவும் இல்லை ஆனால் முழுமையாக விசுவாசிக்கின்றோம் என்று கூறுகிறது." [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32 மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடைய நாளை கண்டு, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் நாளைக் கண்டு மகிழ்ச்சியோடு களிப்புற்று காணாமல் அல்லது கேட்காமல் விசுவாசிக்கிற நீங்களே பாக்கியவான்கள் என்றார். இதுவே தீர்க்கதரிசன விசுவாசம் மேலும் இதுவே பரிபூரண விசுவாசமாகவும் எடுத்துக் கொள்ளப்படுதளின் விசுவாசமாகவும் இருக்கின்றது..
33 நீங்கள் அடையாளங்களை கேட்காமலே விசுவாசித்தீர்கள் ஏனெனில் உலகத்திற்கு அஸ்திவாரம் இடுவதற்கு முன்பாகவே நீங்கள் அதை செய்வதற்காக முன் குறிக்கப்பட்டிருக்கிறீர்கள் மற்றும் தரிசனத்திலே அதை பிரத்தியட்சப்படுத்தினீர்கள் மேலும் இப்பொழுது பூமியின் மீது வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். நீங்கள் புத்திமான்களாவும் ஞானிகளாகவும் இருப்பதனால் அல்ல ஆனால் சர்வ வல்ல தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அதை செய்தார்.
34 நாம் எழுந்து நின்று அதற்காக அவருக்கு மகிமை செலுத்துவோமாக. அல்லேலுயா அல்லேலுயா பெந்தேகோஸமானது அப்போஸ்தல விசுவாசம். அது விசுவாசிப்பதற்கு முன்பாக காண்கின்ற விசுவாசம் அது பரிபூரணமான விசுவாசமாக இருக்க முடியாது ஆனால் தேவன் பரிபூரண விசுவாசமான தீர்க்கதரிசன விசுவாசத்தை முன்குறித்து இருக்கின்றார் மற்றும் நாம் இந்த தீர்க்கதரிசன விசுவாசத்தை ஜீவிப்பதற்காக சந்தோஷமாக இருக்கின்றோம்.
35 அப்போஸ்தல விசுவாசமானது "நான் விசுவாசிக்கதக்கதாக நீங்கள் என்ன அடையாளத்தை எனக்கு கொடுப்பீர்கள்?" என்று கூறும் ஆனால் தீர்க்கதரிசன விசுவாசமானது "நாங்கள் பார்க்கவும் இல்லை கேட்கவும் இல்லை ஆனால் நாங்கள் முழுமையாக விசுவாசிக்கின்றோம்". என்று கூறுகின்றது. தீர்க்கதரிசன விசுவாசத்தினால் தேவனுடைய குமாரர்கள் துன்பத்திலும், கஷ்டத்திலும் மரணம் மட்டுமாக தங்களுடைய ஸ்தானத்தை காத்துக்கொள்கிறார்கள். மேலும் உணர்ந்துக் கொள்ளக் கூடியவன் எவனோ, அவன் உணர்ந்துக் கொள்ளட்டும்!