Kacou 56 (Kc.56) : பொன்னால் மூடப்பட்ட சொரூபங்களை நீ ஜெயங்கொள்ள வேண்டும்
(22 அக்டோபர் 2006 இல் ஞாயிற்றுகிழமை அன்று அட்ஜமே, ஆபீட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1...கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் வரப்போகும் காலங்களுக்கும் மாறாதவராக இருக்கின்றார் என்று வேதாகமம் கூறுகிறது. தேவனும் தீர்க்கதரிசிகளும், சபையைும் உலகமும், வரலாறானது வெறுமனே மீண்டுமாக நிகழ்கின்றது. இஸ்ரவேல் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி மூலம் தேவனிடம் திரும்புகிறது மற்றும் ஆசாரியர்களின் பார்வையின் கீழ் மீண்டுமாக உலகத்திற்குள் செல்கின்றது. இந்த பேய்தனத்தின் சுழற்சிக்கு முன்பாக அவர்கள் தாமே வல்லமையற்று இருப்பதினால், உலகம் போன்று பழையதாக இருக்கின்றது. மேலும் மரூப்பக்கத்தில் சபையானது அதே விதிக்கு முன்பாக, பிதாவிலிருந்து குமாரனுக்கு, தலைமுறை முதல் தலைமுறை வரை, காலம் முதல் காலத்திற்கு... உலகம் போன்று பழையதாக இருக்கின்றது.
2ஒரு தலைமுறையானது ஒரு புதிய வஞ்சனையின் அலையோடு வருகிறது மற்றும் தேவன் அந்த வஞ்சனையை வெளிப்படுத்தவும் ஜெயங்கொள்ளவும் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார், தீர்க்கதரிசியும் அவருடைய தலைமுறையும் கடந்து செல்கின்றன; பிறகு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு புதிய தலைமுறையினர் பூமியில் எழும்பி வருகிறார்கள், மேலும் அதே சாத்தான் மீண்டும் ஒரு புதியமுறை வஞ்சனையில் வருகிறான். சாத்தானானவன் அவன் ஜெயம் கொள்ளும் படியாக செல்கின்றான். ஒரு தேவதூதன் தேவனுடைய சமூகத்திலிருந்து வெளியே சென்று சாத்தானின் தாக்குதலுக்கு எதிராக வருகிறான். கச்சிதமாக முத்திரைகளில் நாம் அதை காணலாம். ஆமென்!
3ஒரு புதிய குதிரைவீரன் சாத்தானின் பிரசன்னத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றான், தேவனின் பிரசன்னத்தில் இருந்து ஒரு தூதனும் புறப்பட்டு சென்று பூமியின் மேல் ஒரு மனிதனிடம் செல்வாக்கு செலுத்துவான். சாத்தானின் பக்கமாக, பூமியில் உள்ள கருவிகளான ஆசாரியர்கள் வேதபாரகர்கள், மதகுருக்கள், போதகர்கள், ஆயர் பள்ளிகள், வேதாகம பள்ளிகள், இறையியல் நிறுவனங்கள், ஊழிய இயக்கங்கள் மற்றும் ஊழிய சபைகள் உள்ளன, அதே சமயம் மறுபக்கத்தில், தேவனுடைய சமூகத்திலிருந்து ஒரு தூதன் வெளியே சென்று பூமியின் மேல் ஒரு மனிதனை பயன்படுத்துவான். ஒரு தீர்க்கதரிசி மற்றும் அவனுடைய செய்தியும் அவர்களுடைய காலத்திலுள்ள, அவர்களுடைய தலைமுறையினுள்ள சாத்தானின் தந்திரத்தை ஜெயங்கொள்ளும் தேவனுடைய பிள்ளைகளின் ஆயுதங்களாக இருக்கின்றது.
4இதுதான் நம்முடைய தலைமுறையில் கச்சிதமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது . மேலும் நம்முடைய தலைமுறையானது இணையதளத்துடன் வந்திருக்கின்றது அதைக் குறித்து வில்லியம் பிரான்ஹாம் அறியாதிருந்தார் மற்றும் அதை குறிப்பிடவில்லை, ஒரு முறையும் இல்லை. மேலும் சாத்தான் இணையத்தில் வந்தபோது, பிரன்ஹாமிஸ்டுகள் அதைக் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை, சாத்தான் அவர்களை அவ்வளவாக வஞ்சித்து, தாவீதைப் போலவே, சாயங்கால செய்தியை அதின் மீது வைத்தார்கள். இந்த இணையதளமே அவர்களுடைய சுவிசேஷகனாக இருந்தது. ஆனால், எனக்கு அருளப்பட்ட கிருபையால் மத்தேயு 25: 6 அதை வெளிப்படுத்தியதாவது. வில்லியம் பிரான்ஹாம் இன்று உயிருடனிருந்தால், அதைச் அவர் செய்ய மாட்டார் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு போதும் இல்லை! …
5நல்லது! இப்போது நாம் ஆதியாகமம் 31-ஐ எடுத்துக் கொள்வோம், வசனங்கள் 22-லிருந்து 32 வரை நான் வாசிக்க விரும்புகிறேன். பிறகு நான் வாசிக்கின்றேன் அல்லது பிறகு ஒரு சகோதரர் 35- ஆம் அதிகாரத்தில் இருந்து 16 முதல் 20-ஆம் வசனங்களை வாசிப்பார். நான் வாசிக்கிறேன்: "யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்து போய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான். அன்று இராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான். அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை? நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே. என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய். உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று இராத்திரி என்னோடே சொன்னார். இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான். யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன். ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.".
6மிக நல்லது... ஆதியாகமம் 31 இப்பொழுது, யாக்கோபு நேசித்த இந்த அழகான, ஸ்திரி ராகேலை கவனியுங்கள்... ஒரு மனிதனின் அன்பு தன்னை வெளிப்படுத்துகிற இடத்தில் பாவம் நல்லிணக்கம் கொண்டுள்ளது ஆனால் எங்கே தேவன் ஒன்றுசேர்ந்துள்ளாரோ அல்லது தகப்பன் தனது சொந்த அதிகாரத்தில் திருமணம் செய்து வைத்திருக்கிறாரோ அங்கே குறைவான கறை படிந்திருக்கும். "கட்டாய திருமணம்" இன்று ஆப்பிரிக்காவில் ஜனங்கள் அழைக்கின்றதானது அது ஒரு நல்ல ஒழுக்கம், அது தேவனுடைய ஒரு பரிசு, மேலும் நல்ல உணர்வானது எண்ணவெனில் தேவனுடைய வார்த்தை மாத்திரமே ரத்து செய்ய வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா ?
7நல்லது! மேலும் கட்டாய திருமணத்தின் ஆவியானது லேயாளை முன்மொழிந்தது மற்றும் மனிதனின் ஆசைக்கு பின்பாக இம்முறை தேவனுடைய பரிபூரண சித்தமானது மறைந்திருந்து அழகான ராகேலை முன்மொழிந்தது.
8இந்நாள் மட்டுமாக, ராகேல் இஸ்ரவேலில் ஒரு அடையாளமாக வைத்துள்ளனர், அவளுடைய கல்லறையும் கூட இஸ்ரவேலில் ஒரு அடையாளமாக இருக்கிறது. ஒரு நாளிலே மேசியா வரவிருந்த சிறிய பெத்லகேமாக இருக்க போகும் இடத்திலிருந்து தாவீதுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக அவள் அடக்கம் செய்யப்பட்டாள். அவள் எல்லா யூதர்களுக்கும் தாயானவள் அல்ல, ஆனால் அவள் இப்படி கருதப்படுகிறாள்.
9சீசர் அகஸ்டஸின் கீழ் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், வேதாகமம் மத்தேயு 2:17 இல் இப்படியாக கூற முடிந்தது. "புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று." ஆமென்!
10ஆனால் இரகசியமானது, இந்த இணைப்பிற்கு பின்பாக வெளிப்படையாக ஒரு மனிதனின் உணர்ச்சியின் அடிப்படையில் இருந்து யோசேப்பு வெளியே வருவான், உரியாவினிடத்திலிருந்த எடுக்கப்பட்ட ஸ்திரீயான' பத்சேபாளிடத்திலிருந்து இஸ்ரவேலின் இரட்சகனான சாலொமோன், தாவீதின் வலது கரம் வெளியே வரும். இவ்வாறு அது உயிருள்ள சபையின் மாதிரியாக இருக்கிறது. மேலும் இந்த லேயாள் ஏழு தீர்க்கதரிசன காலங்களுக்குள் சென்றவளாக இருக்கின்றாள் ராகேல் அதன் தொடர்ச்சியாக அதிலிருந்து ஆண்மகன் யோசேப்பு பிள்ளைப் பேற்றின் வலிக்கு முன்பாக வர வேண்டியவனாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11ராகேலிடத்திலிருந்து வந்தவன் தன்னுடைய சகோதரர்களால் அடித்து கொள்ளப்பட்டவனாவான். நீங்கள் பார்க்கிறீர்களா? யோசேப்பு தான் இயேசு கிறிஸ்து மற்றும் ஆண் மகன். ஒரு நாளிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன்னுடைய நாளிலான எகிப்தியர்களுக்கு யூதாஸ் விற்க்கப் போகிறதை போன்று யோசேப்பு விற்க்கப்பட்டான். யோசேப்பு சிறையில் இருந்தபோது, சிலுவையின் மேல் வலது பக்கத்தில் உள்ள இரட்சிக்கப்பட்டு மற்றும் இடது பக்கத்தில் உள்ளவன் கண்டனம் செய்யப்ட்டதைப் போல ஆதியாகமம் 40 இல் யோசேப்பின் வலது பக்கத்திலுள்ள பான பாத்திரக்காரனின் தலைவன் இரட்சிக்கப்பட்டான்; மற்றும் தன்னுடைய இடது பக்கத்திலுள்ள பானபாத்திரக்காரரின் கொல்லப்பட்டான். எப்போதும் அது வலதுபுறத்தில்! நீங்கள் பார்க்கிறீர்களா? லூக்கா 1: 11 இல், காபிரியேல் பலிபீடத்தின் வலது பக்கத்தில் சகரியாவுக்கு தோன்றினார். மேலும் ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில், பெரிய ஜன கூட்டத்தினர், வலது பக்கத்திலிருந்து வந்தனர். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12நல்லது! நான் ஆதியாகமம் 31: 22 முதல் 32 ஐ மீண்டுமாக வாசிக்க விரும்புகிறேன். யாக்கோபின் செய்தியானது பிரசங்கிக்கப்பட்டதை இங்கே காண்கிறோம். லேயாளும் ராகேலும் புறப்பட்டு சென்ற உயிருள்ள சபையாக இருக்கின்றார்கள். இந்தச் சபையானது அவளுடைய இனத்தையும் அவளுடைய தேசத்தையும் விட யாக்கோபின் தேவனை அதிகமாய் நேசித்து அங்கிருந்து அவள் வெளியே வந்தாள்! நீங்கள் பார்க்கிறீர்களா ? இந்த திருச்சபையை காண தூரத்திலிருந்து யாக்கோபு வந்தான். நீங்கள் பார்க்கிறீர்களா ? ராகேல் இந்த செய்தியானது உண்மை என்று கண்டுபிடித்து, அவள் தன்னுடைய உறவினர்களை விட்டு, அவள் தனது சபையை விட்டு, அவளுடைய சொந்தக்காரர்கள், அவளுடைய உணர்வுகளை விட்டுவிட்டாள் ஆனால் இந்த தெய்வங்களை பொறுத்தவரை, அவளால் அவர்களை விட்டு வெளியே வர முடியவில்லை. அதனோடு கூட அவள் வெளிப்படுத்தல் 12:14 ன் வனாந்தரத்திற்கு வந்தாள் மற்றும் வழியில் இறந்தாள், ஆனால் அவள் இடத்திலிருந்து ஆண் மகனான யோசேப்பு வந்தான்.
13மேலும் இந்த புத்தியில்லாத கன்னிகைகளை கவனியுங்கள், மற்றோரு பகுதியில், உண்மையில் இந்த தெய்வங்களின் மீதாக ஜெயம் கொள்ள முடியவில்லை அவைகள் முதலாவதாக தொலைக்காட்சி மற்றும் இணையமாக இருக்கின்றது இது தான் ஆதியாகமம் 31 நடந்தது. ,
14"சகோதரன் பிலிப்பு, தொலைக்காட்சியை அல்லது இணையத்தளத்தை தன்னிடத்தில் ராகேல் எப்படி மறைக்க முடியும்? " என்று நீங்கள் கேட்கிறீர்கள். பொறுமையாக இருங்கள், நான் மொபைல் போன்களில் தொலைக்காட்சி அமைக்கப்பட்டு உள்ளன என்று கற்றுக்கொண்டேன். நீங்கள் பார்க்கிறீர்களா ? இது தொலைக்காட்சி மற்றும் இணையத்தளத்தை குறித்த கேள்வியாக இருக்கின்றது! இந்த இரண்டு காரியங்களும் அங்கே ஜீவனுள்ள சபையின் மேல் செல்வாக்கு செலுத்தினது மற்றும் இங்கேயும் ஜீவனுள்ள சபையின் மேல் செல்வாக்கு செலுத்துகின்றன. தேவனால் அனுப்பப்பட்ட இந்த மகத்தான யோசுவாவின் முன்னிலையில், அது ஒரு தவறான தீர்க்கதரிசியோ அல்லது தவறான போதனையோ அல்ல, ஆனால் இந்த தொலைக்காட்சி மற்றும் இணையமும் தான் இந்த திருச்சபையின் மேல் செல்வாக்கை செலுத்தினது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
15இப்போது, நான் இதைக் கூற விரும்புகிறேன், 2002 க்கு முன், லெபனீசி கடையிலிருந்து ஒரு புதிய தொலைக்காட்சி பெட்டியை வாங்கினேன். சில அறிக்கைகள் மற்றும் ஆவணப்படங்களுடன் பத்திரிகைகள் மற்றும் இதழ்களை மட்டுமே நாங்கள் பார்த்தோம். நாங்கள் ஒருபோதும் ஒரு திரைப்படத்தையும் பார்த்ததில்லை. நான் அதை அனுமதிக்கவில்லை.
16ஆனால் 2002 ஆம் ஆண்டில், நான் இந்த செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, ஒரு நாள் மாலையிலே, இருளடைவதற்கு முன்பு ஒரு வலுவான சிந்தனை ஒரு வார்த்தை போல் என் மனதில் தாக்கியது : "இதை அங்கேயிருந்து நீக்கி விடு." எனவே, ஒரு போராட்டம் தொடங்கியது. நான் சொன்னேன்: அதை ஒரு பழுதுபார்ப்பாளரிடம் கொடுத்து ஒரு சிறிய விலைக்கு எனக்கு விற்க கொடுக்கும் படியாக கேட்கிறேன் என்றேன். ஒவ்ஒரு நிமிடம் கழித்து, அந்த காரியத்தை குறித்து நீக்கிப் போடும்படியான அழுத்தத்தை உணர்ந்தேன். அப்படியானால் நான் செய்ய வேண்டுமானால்" இதை யாருக்காவது நான் கொடுத்து விடுவேன் என்று நான் கூறிக் கொண்டேன். யாராவது ஒரு பாவம் செய்வதற்கான ஒரு இலவசமான வாய்பை நான் கொடுத்து விடுவேன். ஆயினும் நீ உன் அயலானை நேசிக்க வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. நான் இந்த அழுத்தம் அதிகரிப்பதை உணர்ந்தேன்
17இப்போது, நான் இப்படியாக: தேவனே! எல்லோரும் தூங்கும் போது நான் அதை செய்வேன். என்றேன், ஆனால் அழுத்தம் மிகவும் வலுவாக இருந்தபடியினால், நான் அதை திறக்க முடிவு செய்து, அங்கு இருந்த எல்லாவற்றையும் வெட்ட முடிவு செய்தேன். பின்னர் நான் அதை என் வலிமையுடன் தூக்கிச் சென்று, அதை குப்பைத்தொட்டியில் எறிந்தேன். பல நாட்களுக்கு என் மனதில் ஆழமான அமைதியும் ஒரு பெரும் நிம்மதியுமாக இருந்தது.நீங்கள் பார்க்கிறீர்களா ? மனதின் போராட்டத்தை வென்ற பிறகு, சகோ கொளிபாலி தன்னுடைய அயலான்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையாக தீயிடும் படியான ஒரு எண்ணத்தைக் கொண்டிருந்தார். மேலும் அநேக சகோதரர்கள் செய்தனர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.நீங்கள் பார்க்கிறீர்களா ?
18யாத்திராகமம் 23:20 கூறுகிறதாவது: "வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்குமுன்சென்று, எமோரியரும், ஏத்தியரும், பெரிசியரும், கானானியரும், ஏவியரும், எபூசியரும், இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன். நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்து கொள்ளாமலும்…நீங்கள் பார்க்கிறீர்களா ?" இந்தத் தீய காரியங்களைக் கவனித்துப்பார்க்கிற எவனும் புறஜாதிகளுடைய தேவர்களுக்கு முன்பாகத் தன்னைத் பணிந்து க்கொள்கிறான்.
19ஓ தேவனே! பொன்னாள் மூடப்பட்ட இந்த விக்கிரக சொரூபங்களுக்கு உம்முடைய ஜனத்தை தூய்மையாக்கும் படியாக, யோசியா, ஆசா, யெகூ ஆகியோரின் ஆவியை அனுப்பும். ஏசாயா 30: 21 மற்றும் 22 கூறுகிறதாவது: நான் அதை வாசிக்க போகிறேன் "நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்." ஒரு வழி அல்ல ஆனால் ஒரே வழி எந்த வழி? ஏசாயா 35:8. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நான் தொடர்கிறேன்... "உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்." சகோதரர்களே, அவைகளை வெளியே எறியுங்கள்! தொலைக்காட்சியை வெளியே எறியுங்கள்! இணையத்தை வெளியே தூக்கி எறியுங்கள்!
20உங்களுடைய கணினியானது ஒரு நல்ல காரணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ இல்லாவிட்டால், அதை வெளியே எறியுங்கள்! அது ஒரு வேலைக்காகவோ அல்லது பிரசங்கத்தை படிக்கவோ அல்லது கேட்கவோ இல்லாமல் இருந்தால் அதை வெளியே எறியுங்கள்! அதை உங்கள் படுக்கை அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் ஆனால் அதை வெளியே எறியுங்கள்! இவையாவும் ஒருவர் எவ்வாறு பயன்படுத்துகிறாரோ அது அதையே சார்ந்துள்ளது! அதை வெளியே எறியுங்கள்!
21ஏனெனில், ஆதியாகமத்தில் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பம் இருந்ததை போல, இன்று, சாத்தானின் இந்த புதிய ஏதேனில் நன்மை தீமை அறியும் விருட்சமாக தொலைக்காட்சி மற்றும் இணையம் மீண்டும் வருகின்றன. [ ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. தொலைக்காட்சியை ஒரு கிராமத்தில் வையுங்கள், நடத்தைகளும் மனப்பான்மையும் விரைவாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்!
22சகோதரர்களே, தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். நம்முடைய ஆசீர்வாதங்களை பெருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார், ஆனால் நம் வீடுகளில் இந்த விக்கிரகங்களை வாங்கி நிறுத்தி வைக்க வேண்டாம். இந்த உலகத்தை விரும்பவில்லை, அதனால்தான் ஆயிரவருட அரசாட்சி நமக்கு என்று ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23இப்பொழுது யோசுவா 24 ஐ நாம் எடுத்துக்கொள்ளலாம் தேவனின் ஞானத்தை பாருங்கள்! இந்தத் தெய்வங்களின் விக்கிரகங்களை அகற்றுவதற்காக யோசுவா யூதர்களுக்கு நேரடியாக சொல்லியிருந்தால், அவர்கள் அவனிடம் "வானொலி மற்றும் பத்திரிகைகள் பற்றியும் நீ ஏன் பேசக்கூடாது?" என கூறி இருப்பார்கள். ஆனால் யோசுவா: நீ யெகோவாவை பின்பற்ற முடியாது என்றான்! யோசுவா இறப்பதற்கு முன்பு தனது மக்களுக்கு விட்டுச்சென்ற கடைசி மற்றும் மிகப்பெரிய அறிவுரை இதுதான், மேலும் யோசுவா 24 இல் தீர்க்கதரிசி யோசுவா "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று உபயோகிக்கின்றதை நான் பார்த்தேன். அவன் யுத்தங்களை செய்தான், கானானைக் கைப்பற்றினான், அவன் சூரியனை நிறுத்தினான், ஆனால் யோசுவா 24 ல் மோசேக்குப் பின் வந்த இந்த மகத்தான தீர்க்கதரிசி "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறுகிறான்.
24இங்கே பூமியின் மேல் புனிதமான மக்களான இஸ்ரவேலை குறித்த கேள்வியாக இருக்கின்றது. இவர்கள் தீர்க்கதரிசி மூலம் தேவனோடு நடக்கும் ஜனங்கள். அக்கினி ஸ்தம்பம், மேகஸ்தம்பம் மற்றும் மோசேயின் வழிநடத்துதலின் கீழ் பிறந்தவர்கள், உபாகமம் 7-ல் மோசே ஜனங்களிடத்தில் கூறியதாவது, அதாவது, மோசே, அந்த விக்கிரகங்களை ஒன்றாகிலும் கண்டால், அவன் தனது துப்பாக்கியால் சுட்டு விடுவான். ஆமென்! மறுரூபமாக்கும் தேவனின் வல்லமை என்ற செய்தியில் பத்தி 169 மற்றும் 242 இல் இருப்பதாக நான் நம்புகிறேன், அவர் இப்படியாக, நாங்கள் எந்த ஒரு தொலைக்காட்சி பெட்டியையும் கொண்டிருக்கவில்லை. என் வீட்டில் ஒன்றும் இல்லை ஒருபோதும் இல்லை... தேவன் அதை செய்ய வேண்டாம் என்று கூறினார்.
25அதே துண்டுப்பிரசுரத்தில், "என் வீட்டில் ஒரு தொலைக்காட்சி வைத்திருக்க நான் விரும்பவில்லை. நிச்சயமாக இல்லை. நான் என் வீட்டில் அதை கொண்டிருக்க விரும்பவில்லை. நான் அதை என் துப்பாக்கி மூலம் அழித்துவிடுவேன். அந்த பொல்லாங்காண காரியத்தோடு ஒன்றையும் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. இல்லை ஐயா". இருப்பினும், இந்த தெய்வங்கள் பிரன்ஹாமிஸ்டு வீடுகளை ஒரு போதும் விட்டு வைக்கவில்லை! அவர்கள் அதை குறித்து மௌனமாக இருக்கிறார்கள்! அதனால் தான் அவர்களுக்கு யாவும் அனுகூலமாக கொண்டிருந்தாலும், அவர்கள் நடுராத்திரி சத்தத்தை புரிந்துகொள்ளவில்லை. தானியேல் 12: 10 இன் பிரகாரமாக அவர்கள் புரிந்துகொள்ள தேவனே அனுமதிக்கவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா ?.
26ஏன் மனிதனுக்குக் கீழ்ப்படிய விருப்பமில்லை? ஏனென்றால் அது தேவனிடமிருந்து வருகிறது! சாத்தான் அவனிடம் வெறுங்காலுடன் நடக்க சொன்னாலோ அல்லது மூன்று நாட்கள் உலர்ந்த உபவாசத்தில் செலவழிக்க சொன்னாலோ அல்லது நாற்பது நாட்கள் அல்லது ஐம்பது நாட்கள் உண்ணாவிரதம் இருக்க சொன்னால், அவர்களுடைய சரீரத்தை உபயோகமற்ற துன்பங்களுக்காக ஒப்புக்கொடுத்து, அவன் அதை செய்திருப்பான், இதில், ஐசுவரியவான்கள் இதிலிருந்து துன்பப்படுவார்கள்.
27தனக்கு அதிக ஐஸ்வர்யத்தை கொடுக்காமல் இருப்பதற்கு தாவீது தேவனிடத்தில் சொல்ல முடியும் ஏனெனில் அது அவனை அவரிடத்தில் இருந்து பிரித்துவிடும். மார்க் 10 ல் இந்த ஐஸ்வர்ய இளைஞனனின் காரியத்தை போன்று இருந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா ? ஏழைகள் அவருடைய அன்றாட உணவைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அது மிக அதிகமாக இருந்தால், அது என்னைப் போல், ஒரு ரேடியோ, தகவல் கேட்பதற்காக கொண்டிருப்பது. ஒவ்வொரு நாளும் முடிந்த மட்டும் வானொலியில் செய்திகளை நான் கேட்கிறேன். காயினை போன்ற கலகக்காரர்கள் இப்படியாக "வானொலியையும் அவர் ஏன் தடை செய்யக்கூடாது?". என்று கேட்ப்பார்கள் ஆனால் நான் எதை பெற்றுக் கொண்டேனோ அதையே கூறினேன் என்று அறிந்து கொள்ளுங்கள். நான் வெளிப்பாட்டில் வானொலியைக் காணவில்லை ஆனால் அதை நன்மைக்காக பயன்படுத்துகிறேன்! சி.டி. பிளேயர்கள் மற்றும் மற்றவைகளை வைத்துக்கொள்ளுங்கள் மேலும் பரலோக தரிசனத்துக்கு எளிமையாக கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். மேலும் கர்த்தர் தாமே இந்த காலத்திலும் வருங்காலத்திலும் உங்களை ஆசீர்வதிப்பாராக. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28இப்போது நாம் இஸ்ரவேலையும் யோசுவாவையும் மோசேயின் கடுமையான நியாயப்பிரமாணத்தையும் பார்க்கையில், தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தை தவிர அவர்களின் மத்தியில் வேறு எந்த தெய்வங்கள் இருக்க முடியும்? பிசாசு அவைகளை நகைகள் மற்றும் பிறவற்றை என்று உங்களிடத்தில் கூறுவான் ஆனால் அதை நிராகரியுங்கள்! ஆமென்! அதை நிராகரியுங்கள்! அவைகள் இன்றும் அதே தெய்வங்களாக இருக்கின்றது!
29யூத ஜனங்களை நீங்கள் பார்க்கும்போது யோசுவா எல்லோருக்கும், யெகோவாவை பின்பற்றுவதற்கு இஸ்ரவேலரிடத்திலுள்ள பலவீனமும், அவர்களுடைய எல்லைகளையும், கூடாத காரியத்தையும் யோசுவா ஏற்றுக்கொள்ளதக்க பலமுள்ள தெய்வம் தான் என்ன ? அவைகள் தொலைக்காட்சி மற்றும் இணையம்! அவைகள் இன்றும் அதே தெய்வங்கள் தான், இன்றும் வாக்களிக்கப்பட்ட செய்தியான நடுராத்திரி சத்தத்தை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்ற கூடாதபடி இதே தெய்வங்கள் தான் விக்கிரகங்களை உண்டாக்குகின்றன. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
30ஒவ்வொரு காலத்தின் முடிவிலும், "ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ..." என்று எழுதியிருக்கிறது. எதை ஜெயம் கொள்ள வேண்டும்? அவனுடைய மணி வேளையின் தெய்வங்களை! இந்த காலத்தில் தேவனுடைய வெகுமதியானது அவர்களுடையது! அவர்களே இராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்ளும் காலத்தின் ஜெய வீரர்கள் . [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31இன்று தேசங்களின் தெய்வங்கள் யாவை? இன்று முழு பூமியும் அதற்கு முன்பாக வணங்கத்தக்கதாக பொன்னினால் பூசப்பட்ட விக்கிரகங்கள் யாவை? அவைகள் தொலைக்காட்சி மற்றும் இணையம்! இன்று அஞ்ஞானிகளின் தெய்வங்கள் யாவை? அவைகள் தொலைக்காட்சி மற்றும் இணையம்! அரசியல்வாதிகள், கால்பந்து வீரர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் தெய்வங்கள் யாவை? அவைகள் தொலைக்காட்சி மற்றும் இணையம்!
32இன்று கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளின் தெய்வங்கள் யாவை? அவைகள் தொலைக்காட்சி மற்றும் இணையம்! நம்முடைய கைகளில், நம்முடைய வீடுகளில், நம்முடைய இருதயத்தில் உள்ள விக்கிரகங்களின் தெய்வங்கள் யாவை? அவைகள் தொலைக்காட்சி மற்றும் இணையம்! பிசாசு இந்த மறைந்த இடங்களை தொலைபேசிகளுக்கு நகர்த்தும்போது... உங்கள் கதவுகளுக்கு முன்பாக படுத்திருக்கும் மேலும் நீங்கள் அதன்மேல் ஜெயம் கொள்வீர்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
33இணையம் என்பது என்ன? இணையம் என்பது தேவன் இதுவரையில் மனிதகுலத்திற்கு வழங்கிய மிகச் சிறந்த தொடர்புகான வழி, அது எல்லாவிதமான மனித மற்றும் மத தடைகள் அனைத்தையும் ஊடுருவி செல்ல முடியும். ஒரு நாளில், இணையம் மூலமாக இஸ்லாமியின் தடைகளும் சுவர்களும் ஊடுருவப்பட்டு, தேவனுடைய வார்த்தையையும் விடுதலையும் அரபியர்களையும் அதன் உட்புற அறைக்குள்ளும் சென்றடையும்.
34தொலைக்காட்சியும் இணையமும் மிக சிறந்த தொடர்பின் வழிகள், ஆனால் பிசாசு அவைகளை பாவத்தின் பொருட்களாக்கி விட்டான். தொலைக்காட்சியும் இணையமும் இப்போது தேசங்களின் தெய்வங்களின் சொரூபங்களாகிவிட்டன; மேலும் அதுவே சாத்தானின் ஆழம்!. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35அதே போன்று ஏழு பரிமானங்கள் என்ற செய்தியில் தேவன் காண்பித்ததை போல நம்முடைய பால்வெளி மண்டலத்தின் செயல்பாட்டின் மையமாக பூமி அமைந்திருக்கின்றது. இவ்வாறு தொலைக்காட்சியும் இணையமும் ஐந்தாம் பரிமாணத்தின் செயல்பாட்டின் மையமாக இருக்கின்றது. நரகம், பாவக் கடன், மற்றும் சாத்தானின் ஆழம். அது என்ன? தொலைக்காட்சியும் இணையமும் சாத்தானின் வாயாகவும் மற்றும் விழுந்த யூதர்களின் வரிசையில் இருக்கின்றன. இந்த பொன்னினால் பூசப்பட்ட விக்ரகங்களை அகற்றுவதன் மூலம், நீங்கள் அனைத்தையும் விட்டு விடுகிறீர்கள்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
36மேலும் நாம் அதை செய்ய வேண்டும் ஏனெனில் நாம் உலகத்தில் இருந்தாலும் நாம் உலகத்திற்கு உரியவரல்ல. தீமையான அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் மூலமாக வருகின்றதென்று நாம் அறிந்திருக்கின்றோம்.
37நீங்கள் இந்த தவறான முடி அலங்காரங்களை பார்க்கும் பொழுது, காதணிகள் அணிந்திருக்கும் ஆண்கள், குட்டை பாவடைகளில் உள்ள பெண்கள், சபைகளை வழி நடத்தும் ஸ்திரீகள் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் கொண்டிருப்பார்கள், கால்சட்டையில் உள்ள பெண்கள், முக ஒப்பனை, போலியான நகங்கள், போலியான சிகை, பொது விதிகளுக்கு கட்டுப்படாத உடைகள் மற்றும் அனைத்திற்குமான கால்வாயாக தொலைக்காட்சி மற்றும் இணையம் இருக்கின்றது.
38கட்டுப்பாடில்லாமல் தன்னுடைய வீட்டில் தொலைக்காட்சியைக் கொண்ட ஒரு மனிதனிடம் ஐக்கியம் கொள்ளக்கூடாது என்று பவுல் கூறுகிறார், அவன் ஒரு பொய்யான சகோதரன், நீங்கள் அவனை ஒரு அஞ்ஞானியாக பார்ப்பீர்களாக. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39புத்தியுள்ள கன்னிகைகளுக்கும் புத்தியில்லாத கன்னிகைகளுக்கும் உள்ள வேறுபாடானது வார்த்தையை செயல்படுத்துவதில் உள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா ?
40சிலர் ஆவியின் ஆசீர்வாதத்தை உணராத சமயத்தில், சென்று தொலைக்காட்சியை தூக்கி எறியுங்கள். அது அவர்கள் தொலைக்காட்சி மூலமாக மற்ற எல்லா பிசாசுகளிடமிருந்து சுத்திகரிக்கப்பட்டு ஆவியை பெறுவதற்காக. எடுத்துக் கொள்ளப்படுதலானது நடைபெறும். உங்களால் காண முடிகிறதா? அவன் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் ஒரு பங்கும் கொண்டிருக்கக் கூடாது என்று முயற்சி செய்கிற மாத்திரத்திலே எடுத்துக் கொள்ளப்படுதலானது நடைபெறும் அல்லது மரணமானது அவனை மேற்கொண்டிருக்கும்.
41சகோதரர்களே, வார்த்தையோடு விளையாட வேண்டாம்! ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மூடர்கள் தங்கள் சொந்த கருத்துக்களினால் தங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள், இந்த விஷயங்களை தான் அவர்கள் பலவீனமாக்குகின்றது என்பதை அவர்கள் காண்பார்கள். மேலும் அவர்களால் அதே நாளில் கீழ்ப்படிந்து ஞானிகளின் ஆசீர்வாதத்தை கொண்டிருக்க முடியாது. அவர்கள் நிறைவேற்ற முடியாது. மீதமுள்ள அனைவரும் அவர்களின் மாகாணமும் அவர்களுடைய நடையிலுள்ள தந்திரமும் பிரன்ஹாமிஸ்டுகளை போல, ஏப்ரல் 24, 1993 இராணுவ டிரக்கில் உள்ள கலப்பின ஸ்திரீயான வேசியை போன்றுள்ளது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
42தேவனுடைய பிள்ளைகள் பாலைவனத்திலே நடப்பதை என்னால் ஆவியில் பார்க்க முடிகிறது மற்றும் தங்களுடைய தலையின் மேல் உள்ள பெரிய தொலைக்காட்சியின் பலுவினால் அநேகர் குனிந்து பின்னால் இருக்கிறார்கள். அவர்கள் எங்கே செல்கிறார்கள்? பரதீசிற்கா? இல்லை! அவர்கள் தொலைக்காட்சி இல்லாமல் பரதீசை கற்பனை செய்கிறார்கள். ஆனால் தேவனின் வார்த்தை அதற்கு எதிராகக் கட்டளை போன்று வந்த நேரத்தில், நீங்கள் அதினோடு கூட மரித்தால், உன்னுடைய இடம் நரகத்திலே இருக்கும் ஏனெனில் தேவனின் பிள்ளைகளை தொந்தரவு செய்வதற்காக நீ சாத்தானின் கருவியாக இருந்திருக்கின்றாய். பரிசுத்தவான்களின் துதிகளோடும் ஜெபங்களோடும் உன்னுடைய வேசித்தனம், விபச்சாரம் மற்றும் முரட்டாட்டத்தின சத்தத்தை சேர்த்து விட்டாய். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
43நல்லது! தன்னுடைய பிதாக்களுடைய தேசத்திலிருந்து அவளுடைய தெய்வங்களோடு கூட வெளியே வரும்படியாக தேவன் ராகேலை அனுமதித்தார். பாலைவனத்திலே அந்த தெய்வங்களின் பிரசன்னத்திலும் தேவனுடைய கிருபையும் வல்லமையும் அவர்களோடு கூட இருந்தது. ஆனால் தேவன் அவளை தன்னுடைய தெய்வங்களோடு கூட முடிவு மட்டும் சென்றடைய அனுமதிக்கவில்லை.நீங்கள் பார்க்கிறீர்களா ?
44நாம் அதை ஆதியாகமம் 35:16 முதல் 20 இல் வாசிக்கலாம் "பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான். ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் பண்ணப்பட்டாள். அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்."
45ராகேல் அந்த தெய்வங்கள் நிமித்தம் வழியிலேயே மரித்துப்போனாள் ஆனால் அவள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்துக்கும் மீட்பின் பட்டணத்தை அடைந்தாள்; அவள் பெத்லகேமை அடைந்தால். அதேபோன்று தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறஜாதிகளின் தெய்வங்களோடு செல்ல அனுமதித்தார் அதனால்தான் அவர்கள் வழியிலே பாலைவனத்தில் விழுந்தார்கள். அதேபோன்று, சாயங்கால வேளையில், ராகேல் மற்றும் இஸ்ரவேலின் தேவனும் நம்முடைய பிதாக்களை பொன்னாடை ஆபரணங்களினால் உண்டான சொரூபங்கள் ஆன தொலைக்காட்சி மற்றும் இணையத்துடன் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். இப்போது, யோசுவா 24 இல், இந்த செய்தியை இறுதியில், ஒரு எளிய "கர்த்தர் உரைக்கிறதாவது" வருகிறது "எவனிடத்தில் இந்த தெய்வங்களை நீங்கள் காண்கிறீர்களோ அவன் ஜீவிப்பதில்லை" . நீங்கள் பார்க்கிறீர்களா ?
46ஒரு வல்லமையான செய்திக்கு பிறகு சில ஜனங்களும் தங்களுடைய தகப்பனை விட தங்களுடைய தாயை விட தங்களுடைய சகோதரர்களை விட தங்களுடைய சகோதரிகளை விட மற்றும் தங்களுடைய பிதாக்களின் தேசத்தை விட தன்னையும் தன்னுடைய தேவனை அன்புகூர்ந்தவர்களுடைய வீட்டில் தொலைக்காட்சி இணையம் இருப்பதாக, அந்த பொன்னினால் மூடப்பட்ட சொரூபங்களை, அந்த புற ஜாதிகளின் தெய்வங்களை, யாக்கோபினால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மேலும் அவன் சொல்வதற்கு ஒரு நிமிடம் கூட தயங்காமல்: "எவனிடத்தில் இந்த தெய்வங்களை நீங்கள் காண்கிறீர்களோ அவன் ஜீவிப்பதில்லை! ". என்றான்.
47தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்துவதை தவிர, நடுராத்திரி சத்தத்தை விசுவாசித்த ஒருவன் தன்னுடைய தகப்பனாருடைய தேசத்தை விட்டு ஆயிரம் வருட அரசாட்சி செல்லக்கூடிய ஒருவன் தொலைக்காட்சியையும் இணையத்தையும் கொண்டிருப்பான் என்று என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த பொன்னினால் மூடப்பட்ட சொரூபங்களை கொண்டு அதை தவறாக உபயோகித்து ஒருவன் வெளிப்படையான பாவ அறிக்கைக்கு வந்தால். அத்தகைய நபர் ஆயிரம் வருட அரசாட்சிக்குள் பிரவேசிக்காமல் தொலைக்காட்சிகாகவும் இணையத்திற்காகவும் வழியிலேயே மரித்துப் போவான். மேலும் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.