en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 57 (Kc.57) : அப்போஸ்தலர் 19:19 இன் பலிபீடம்
(24 டிசம்பர் 2006 ஞாயிற்றுக்கிழமை காலை அட்ஜமே ஆபீட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 நல்லது! தேவன் ஒரு தேவதூதனை அனுப்புகிறார் என்று இந்த நற்செய்தி மூலம் எப்பொழுதும் நான் காண்பித்திருக்கிறேன். ஏனென்றால், மனிதன் சீர்கெட்டு, தன் சொந்த இரட்சிப்பின் வழியைக் கெடுத்துவிட்டான். இந்த தேவதூதன் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெளியே வந்து தேவனுடைய சார்பாக வெளிப்படுத்துதல் 18: 1-ல் காணப்பட்டதைப் போன்று உலகைப் பிரகாசிக்க ஒரே ஒளி என்ற நித்திய சுவிசேஷத்துடன் தேவனிடமிருந்து வருகிறான். சிறகுகள் இருப்பதை போன்று நாம் கற்பனை செய்துக் கொள்ளும் இந்த பரலோக தேவதூதன், வானத்திலிருந்து இறங்கி பூமியில் உள்ள ஒரு மனிதனுக்குக் தன்னுடைய செய்தியை கொடுக்கிறான், இந்த மனிதன் பூமியிலே பரலோகத் தூதனை பிரதிநிதித்துவம் செய்கிறான். இந்த மனுஷன் தேவனுடைய பங்காகவும் மனுஷருக்குள்ளே சுதந்திரவாளியாக இருக்கிறான் .
2 அதை 1993 ஏப்ரல் 24-ன் தரிசனத்தில் அங்கே தூதனும், ஆட்டுக்குட்டியும், என்னுைடைய ஆத்துமாவும் தண்ணீர்களின் மேல் மத்தேயு 17-ல் எலியாவும் மோசேயும் இயேசுவும் மறுரூப மலையில் இருந்ததை போன்று ஒன்றாக உருவாக்கியுள்தை நீங்கள் கண்டீர்கள்.
3 இந்த பூமிக்குரிய தேவதூதன் என்ன பிரசங்கித்தாலும், அது எவ்வளவு சிறியதாக அல்லது மென்மையாக, அல்லது அற்பமானதாக அது இருந்தாலும், அது தான் இந்த தூதனின் தலைமுறைக்கென்று தேவனுடைய சித்தமாயிருக்கிறது. எவரேனும் எங்காவது கொண்டுவரும் வேறு எதுவும், நகச்சாயம் , உதட்டுச்சாயம் மற்றும் மற்ற வடிவங்களில் உள்ள முகத்தின் ஒப்பனை போன்று தேவனால் பார்க்கப்படுகிறது.
4 அவனுடைய ஊழியத்தின் வேளையிலே இந்த தீர்க்கதரிசி கூறுகிற அல்லது அவன் செய்கிறதான காரியங்கள். அந்த ஒரு காரியத்தை மாத்திரமே அவனோ அல்லது வேத பாராகர்களோ, புத்தகங்கள், நாடாக்கள், குறுந்தகடுகள் மற்றும் பிற வழிகளோடு பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு தேவாலயத்திலும், ஆசாரியர்கள் தங்களுடைய விசுவாசிகளிடத்தில் அவர்களுடைய மணி வேளையில் தீர்க்கதரிசி கூறியதை தங்களுடைய விளக்கவுரையோடு அறிவித்தார்கள். அந்தத் தீர்க்கதரிசி இறந்தபோது, காலப்போக்கில் தேவன் வேறொருவரை எழுப்பினார். நீங்கள் பார்க்கிறீர்களா ? ஆமோஸிற்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஏசாயாவை தேவன் எழுப்பினார். யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசு என இரண்டு தீர்க்கதரிசிகள் பூமியிலிருந்த அதே சமயத்தில் காட்சியளித்திருந்தாலும், அவர்களில் ஒருவன் காட்சியை விட்டுப் கடந்து போவான்.
5 இப்பொழுது அப்போஸ்தலர் 19: 19-ஐ வாசிக்கலாம். "மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்."... விசுவாசித்தவர்கள் தங்களுடைய புத்தகங்களை கொண்டு வந்தனர். தேவனால் அங்கீகரிக்கப்பட்ட தீர்க்கதரிசியினால் எழுதப்படாத எந்த புத்தகமும் அல்லது இஸ்ரவேலில் வேதபாரகர்களால் எழுதப்பட்ட வரலாற்றின் ஒரு புத்தகமும், அவை எரிக்கப்பட வேண்டும்.
6 இன்றைய ரோஸி குருசியன் புத்தகங்களைப் போன்ற புத்தகங்கள் என்று ஒரு கனமும் நினைக்க வேண்டாம். அது அவை அல்ல! உபாகமம் 13-ஐயும் உபாகமம் 18-ஐயும் வாசிக்கவும், ஒரு யூதன் ஒருபோதும் அவனுடைய கையில் ஒரு மாய புத்தகத்தை கொண்டு இருக்க முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஏன்? ஏனென்றால் நியாயப்பிரமாணம் அதின் கண்டிப்பில் செயல்படுத்தப்பட்டது. எனவே, யோவான் 8-ல், இயேசு தலையிடாவிட்டால் விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிபட்டவள் கல்லெறியப்பட்டு இருப்பாள். மோசே எல்லா விசித்திரமான பழக்கவழக்கங்களையும் முறையாக பாதுகாத்து வந்தான். ஒவ்வொரு யூதனும் அவன் எங்கு இருந்தாலும் அவனுடைய செயல்பாட்டை கவனித்துக்கொண்டிருந்தான்.
7 அப்போஸ்தலர் 19: 19-லிருந்து எரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் யாவை? அவைகள் இரண்டு பிரிவுகளாக இருந்தன: ஒருபுறத்தில் "கட்டுக்கதை (Apocryphal) புத்தகங்கள்" மற்றும் மறுபுறத்தில் <மரபுவழிக் கதைகள்" (Talmud) என்று அழைக்கப்பட்ட புத்தகங்கள், இவை குருக்கள், ரபீக்களின் புத்தகங்கள் மற்றும் அக்காலத்தின் சுவிசேஷ புத்தகங்கள். "கட்டுக்கதை புத்தகங்கள்" : அ இவைகள் தீர்க்கதரிசன சுபாவத்தை உடையதாக இருந்தது, தெய்வீக உந்துதல் அல்லது தீர்க்கதரிசிகளின் பெயர்களைக் கொண்டிருக்கும் ஆனால் உண்மையில் அவை இல்லை என்பதையே இது காட்டுகிறது. உண்மையில் இல்லை என்று நான் கூறுகிறேன்.
8 பழைய ஏற்பாட்டின் கட்டுக்கதை புத்தகங்களில், நான் ஒன்றை எடுத்தேன், அங்கே டஜன் கணக்கானவை உள்ளன ஆனால் நான் ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளேன்: "நெரிஜாவின் மகனான பாருக்கின் புத்தகம்". இது எரேமியா தீர்க்கதரிசியின் தோழனான பாருக். அவன் ஒரு மிகச் சிறந்த புத்தகத்தை எழுதினான், ஆனால் இந்த புத்தகமானது அப்போஸ்தலர் 19:19 ல் எரிக்கப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசியின் தோழனாக அல்லது சீஷனாக இருப்பதென்பது, ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு உனக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காது, அந்த புத்தகம் எவ்வளவு நன்றாக இருந்தாலும், அது அப்போஸ்தலர் 19:19 இன் பலிபீடத்தில் எரிக்கப்பட வேண்டும்!
9 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு மாத்திரமே ஒரு புத்தகத்தை எழுத உரிமை உண்டு. அதனால் தான் நீங்கள் வேதாகமத்தில் இவ்விதமாக , இந்த தீர்க்கதரிசி புத்தகத்தில், இந்த தீர்க்கதரிசி புத்தகத்தில், இந்த தீர்க்கதரிசி புத்தகத்தில் என்று பார்க்கிறீர்கள், ஆனால் நீங்கள் இந்த ஆசரியனின் புத்தகம், இந்த பிரதான ஆசரியனின் புத்தகம், மேற்பார்வையாளரின் புத்தகம். ரபியின் புத்தகம் ... யூத மார்க்கத்து ஆசாரியன் அல்லது பழைய உடன்படிக்கையின் புத்தகம் என்று ஒரு போதும் பார்க்க மாட்டீர்கள் அவைகள் எபேசியர் 4:11 இன் ஊழியங்கள் அதாவது அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன், மற்றும் போதகன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
10 புதிய ஏற்பாட்டில் நான் இரண்டு புத்தகங்களை எடுத்துள்ளேன். அதாவது: "நிக்கொதேமுவிற்கு எழுதின சுவிசேஷம்". நிக்கொதேமு கர்த்தராகிய இயேசுவிடம் நேர்காணலை கொண்டிருந்து மற்றும் தூரத்திலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை பின்தொடர்ந்து இருக்கின்றான் மேலும் அவருடைய மரணத்தின் போதும் அவன் அங்கே இருந்தான் ஆனாலும் அவைகள் எல்லாம் ஒரு போதும் ஒரு சுவிசேஷத்தை எழுத அவனுக்கு அதிகாரத்தை அளிக்கவில்லை. மேலும் இந்த சுவிசேஷமானது எவ்வளவு நன்மையாக இருந்தாலும் அந்த சுவிசேஷம் அப்போஸ்தலர் 19:19 இன் பலிபீடத்தின் மீது எரிக்கப்பட வேண்டும்.
11 இன்று இந்த புத்தகத்தை ஜனங்கள் பார்த்தால், அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அவர்கள் இவ்விதமாக, "ஆ! நிக்கொதேமு அவன் கர்த்தராகிய இயேசுவிடம் சொன்னவற்றை விவரிக்கிறான். என்பார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா ? ஒரு ஆசாரியன் ஒரு புத்தகத்தை எழுத முடியாது என்று நிக்கோதேமுவு நன்றாக அறிந்திருந்தான்! எந்த ஒரு புத்தகமும் ஆசாரியரின் பெயரை கொண்டிருக்காது!
12 அவன் அபியத்தாராக அல்லது சாதோக்காக அல்லது அசரியா அல்லது எல்நாத்தானுமாக இருந்தாலும். ஒரு புத்தகத்தை எழுத தேவன் ஒருபோதும் அவனுக்கு உரிமை அளிக்கவில்லை. ஆனால் நிக்கொதேமு பேதுரு யாக்கோபு மற்றும் பிறர் எழுதுவதை பார்த்த போது, அவனும் எழுத முடியும் என்று நினைத்தான் அவன் அதை செய்தான். மேலும் அவனுடைய புத்தகம் அதிகமாக பாராட்டப்பட்டது ஆனால் அப்போஸ்தலர் 19:19 இன் பலிபீடத்திற்கு முன்பாக அவனுடைய புத்தகம் எரிக்கப்பட்டது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13 ஒரு புத்தகம் அதன் உள்ளடக்கங்களிலும் தேவனுடைய வார்த்தைகள் அல்லது உண்மையான வசனங்களை கொண்டிருந்திருந்தாலும், அல்லது ஏசாயா போன்ற ஒரு புத்தகம் .போல இருந்தாலும் அப்போஸ்தலர் 19: 19-ன் பலிபீடத்தின் மீது எரிக்கப்பட வேண்டும்! ஆமென்! முழு வேதாகமத்தையும் எடுத்து பாருங்கள். தீர்க்கதரிசி செய்தியாளர்கள் மாத்திரமே புத்தகங்களை எழுதி இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு ஆசாரியனின் புத்தகத்தை நீங்கள் ஒருபோதும் பார்க்கமாட்டீர்கள்..
14 இன்று கிறிஸ்தவத்தில், ஆசாரியத்துவத்தில் அப்போஸ்தலர்கள், சபை தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்கள் இருக்கின்றார்கள். ஒரு புத்தகத்தை எழுத அவர்களுக்கு உரிமை இல்லை. ஒரு அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகர் அல்லது சபை தீர்க்கதரிசியின் புத்தகத்தை நீங்கள் கண்டுபிடித்தால், அதை அப்போஸ்தலர் 19: 19-ன் படி நீங்கள் எரிக்க வேண்டும்.
15 ஜோயல் ஆஸ்டீன், டி.டி.ஜாக்ஸ், டௌக் பச்லர், பில்லி கிரகாம், எடிர் மாசிசோ, வால்டிமிரோ சந்தியாகு, சிலாஸ் மலாபியா, பவுலா வைட், ஜாய்சி மேயர் மற்றும் கிறிஸ் ஒயாக்கிலோமிடம் அப்போஸ்தலர் 19: 19 இன் பிரகாரமாக அவர்களுடைய எல்லா புத்தகங்களையும் எரிக்கும் படியாக தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மீண்டுமாக அப்போஸ்தலர் 19:19 பலிபீடத்தின் தீயை மூட்டி இருக்கின்றார் என்று சொல்லுங்கள்.
16 டேவிட் ஒளவொர், இம்மானுவேல் மாகான்டிவா, உபர்ட் ஏஞ்சல், டி.பி. ஜோசுவா, டேவிட் ஒயேடிபோ, ஆல்பர்டோ மொட்டெசி, கிலவுதியோ ப்ரெய்டுசன் மற்றும் டான்டே கிபெலிடம் பூமியிலே அவர்கள் எழுதியிருக்கிறவைகளையெல்லாம் பூமியிலே சுட்டெரிக்க தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மீண்டுமாக அப்போஸ்தலர் 19:19 பலிபீடத்தின் தீயை மூட்டி இருக்கின்றார் என்று சொல்லுங்கள்.
17 பென்னி ஹின், மானாசே ஜோர்டன், ஜெஸ்சி ஜாக்ஸன், ஜான் ஹாகி, பாட் ராபட்சன், யோவாக்கிம் கான்க்ளேவ்ஸ், டொனால்டு பர்ணல், அலெஜான்ட்ரோ புல்லோன், மற்றும் குயிலெர்மொ மால்டொனால்டோவிடம் அவர்கள் பூமியின்மேல் நிறைவேற்றின யாவையும் எரிக்கும் படியாக தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மீண்டுமாக அப்போஸ்தலர் 19:19 பலிபீடத்தின் தீயை மூட்டி இருக்கின்றார் என்று செல்லுங்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
18 இந்த காலை வேளையிலே டாமி ஆஸ்போர்ன், யோங்கி சோ, கென்னத் ஹாகின் ரெயின்ஹார்ட் பங்கே, எவால்டு ஃபிராங்க், ரெபேக்கா பிரவுன், வின் வொர்லே மற்றும் புத்தகங்கள் எழுதி உள்ள அனைவரிடம் நான் மிக சத்தமாக கூறுவதாவது நான் அப். 19:19 இன் பலிபீடத்தின் புதிய தீயை மூட்டியுள்ளேன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அவர்கள் எல்லோரிடத்திலும் அப்போஸ்தலர் 19:19 பலிபீடத்தில் மர துண்டுகளுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என கூறுங்கள் மேலும் அந்த மரத்துண்டுகளானது அவர்களுடைய புத்தகங்கள், உடன்படிக்கைகள் மற்றும் வேதாகமம் என்று அழைக்கப்படும் வேதாகமங்கள் ஆக இருக்கினறது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 கத்தோலிக்க புராடெஸ்டான்ட், சுவிசேஷக மற்றும் அனைத்து பிரன்ஹாமிஸ்டு சபைகள், வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள் என அழைக்கும் சபைகள் உள்பட அனைவரிடமும் இந்த காலையிலே நான் மிக சத்தமாக கூறுவதாவது, நான் அப். 19:19 இன் பலிபீடத்தின் புதிய தீயை மூட்டியுள்ளேன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அப்போஸ்தலர் 19:19 இன் பலிபீடம் இங்கே தீ மூட்டப்பட்டு உள்ளது என்று முழு உலகத்திற்கும் நான் உரத்த சத்தமாக கூறுகிறேன். அப்போஸ்தலர் 19:19 இன் பலிபீடம் மீது உங்கள் புத்தகங்களை கொண்டு வந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள், அல்லது அது உங்களுக்கும் உங்கள் புத்தகங்களுக்கும் அக்கினி கடலாக இருக்கும்! நீங்கள் பார்க்கிறீர்களா ? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
20 மேலும் புதிய ஏற்பாட்டிற்காக மற்றொரு புத்தகத்தை நான் எடுத்துள்ளேன்: அது "பர்னபாவின் நிருபம்" ஓ! சகோதரர்களே, ஒரு புத்தகமானது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், அது "பர்னபாவின் நிருபம்" ஆக இருக்க வேண்டும். பர்னபா கிறித்துவத்திற்கு ஒரு சான்றாதாரம் மற்றும் பாதுகாக்க பட வேண்டிய பல அற்புதங்களை செய்தான் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பவுலை வழங்கக்கூடிய மரியாதையானது அவன் மேல் விழுந்தது! ஆனால் அவன் மற்றவர்களைப் போலவே அப்போஸ்தலர் 19:19 பலிபீடத்தின் மீது அவனுடைய புத்தகம் எரிக்கப்பட்டது.அவன் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இல்லாதிருந்த போதிலும் ஒரு புத்தகம் எழுதினான், அவன் ஒரு வகையான அழிவிற்குள்ளாக சென்றான் என்று வேதாகமம் கூறுகிறது. பவுலின் கடிதங்களில், விசுவாசத்தின் இந்த கடுமையான போர்வீரரின் பெயரை நாங்கள் பார்த்ததில்லை.
21 ஆனால் சகோதரரே, பர்னபா ஒரு புத்தகத்தை எழுத வேண்டுமா? இல்லை! பழைய ஏற்பாட்டின் மூலமாக ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மாத்திரமே எழுதுவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளான் என்று அவன் அறிந்திருந்தான். அவன் தன்னுடைய கரத்தின் மூலம் அற்புதங்களோடு கூட ஏதோ ஒன்று நடக்கின்றதை கண்ட போது. வேதாகமம் எல்லா இடத்திலும் பவுலும் பர்னபாவும் அல்ல ஆனால் பர்னபாவும் பவுலும் என்று கூறினதை அவன் கண்ட பொழுது விசேஷமாக அப் 13:2 இல் அவன் புவுலை போன்று அதே ஊழியத்தை கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டான்.
22 இப்போது, இரண்டு தீர்க்கதரிசி செய்தியாளர்கள் ஒரே நேரத்தில் பூமியில் ஊழியம் செய்ய முடியாது. அவன் இதை எல்லாவற்றையும் கண்ட பொழுது அவனுடைய இருதயம் ஓசியா போன்று உயர்த்தப்பட்டு அவன் ஒரு மத சம்பந்தமான புத்தகத்தை எழுத முடியும் என்று நினைத்தான். நிச்சயமாக பர்னபாஸ் தன் இருதயத்தில் இதை நினைத்தான்: "இது பரிசுத்த ஆவியின் மூலமாக மாத்திரமே ஒருவனால் எழுத முடியும் ஆகையால் தான் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசி செய்தியாளன் மாத்திரமே எழுதினார்கள் . ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவன் எல்லோர் மீதும் பரிசுத்த ஆவியை ஊற்றியிருக்கிறார் மேலும் தேவாலயத்தின் திரைச்சீலையானது கிழிக்கப்பட்டது, பரிசுத்த ஆவியானவர் தாமே என்னை ஊக்குவிக்கும் பொழுது அல்லது சபையின் பக்திவிருத்திக்கு என்று என்னுடைய கை உருவாக்கப்பட்டிருக்கும் பொழுது எது என்னை எழுதுவதிலிருந்து தடுக்க முடியும்.மேலும் பவுலைப் போன்று அவன் ஒரு நிருபத்தை எழுதினான். அப்போஸ்தலர் 19: 19 இன் பலிபீடத்திற்கு முன்பே அவர்கள் மிக எளிமையாக, "இந்த நிரூபம் யாருடையது? என்று கேட்டார்கள். அவர்கள் அதிலுள்ள குறைகள் என்னவென்று தேடவில்லை ஆனால் வெறுமனே இந்த நிரூபம் யாருடையது என்று கேட்டார்கள்? நீங்கள் பார்க்கிறீர்களா ? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23 ஒரு போதகனோ, ஆயரோ அல்லது ஒரு பேராயரோ ஒரு அற்புதமான புத்தகம் எழுதினால், நீங்கள் அதில் பிழைகளையோ அல்லது மற்றவைகள் எதையும் பார்க்க கூடாது. ஆனால் ஒரு போதகனோ, ஒரு ஆயரோ, ஒரு பேராயரோ அல்லது ஒரு அப்போஸ்தலன் அல்லது ஒரு சுவிசேஷகன் அல்லது போதகனோ அதை யார் எழுதினாலும் அப்போஸ்தலர் 19: 19-ன் பலிபீடத்தின் மீது நீ சுட்டெரிக்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24 பாரூக் மற்றும் பர்னபாவின் இந்த உதாரணங்கள் ஏவால்ட் ஃபிராங்கிற்கு நன்றாக உதவும் ஆனால் பரிதாபம்!. ஒவ்வொரு முறையும் ஏவால்ட் ஃபிராங்கைப் பற்றி நான் நினைக்கும் பொழுது, காப்ரியலை போன்ற மகிமையான ஊழியத்தை கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பின லூசிபரின் சாயலை நான் பார்க்கிறேன்.
25 ஏவால்ட் ஃபிராங்கை விட பாரூக் மற்றும் பர்னபா மிக பெரிய ஊழியங்களை கொண்டிருக்கவில்லை என்று வேதாகமத்தில் பாருங்கள்! பாரூக் எரேமியாவோடு கூட மிக நெருங்கி ஜீவித்திருக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள், ஆனால அது அவனை ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு உரிமை அளிக்கவில்லை. பர்னபா பவுலுக்கு எல்லாக் காரியங்களும் செய்திருக்கலாம் ஆனால் அதோடு கூட அது செய்தார், அது ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான உரிமை அவருக்கு வழங்கவில்லை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26 தீர்க்கதரிசி செய்தியாளனால் எழுதப்படாத எந்த புத்தகமும் அல்லது இஸ்ரவேலின் அல்லது சபையின் வரலாறாக இல்லாத ஒன்று அது சாத்தானியவாத புத்தகம். ஒரு அப்போஸ்தலனோ, சபை தீர்க்கதரிசியோ ஒரு சுவிசேஷகனோ, ஒரு போதாகனோ, ஒரு பேராயரோ, ஒரு ஆயரோ மத சம்பந்தமான புத்தகத்தை எழுதினால், தேவன் அதை ஒரு ஆபாச புத்தகம் போன்று பார்க்கின்றார் மேலும் அது அப்போஸ்தலர் 19:19 பலிபீடத்தில் எரிக்கப்பட வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27 சில புத்தகங்கள் வேதாகமத்தில் இல்லை, ஆனால் வேதாகமம் அவைகளுக்கு நன்மதிப்பை தருகின்றது ஏனென்றால் அவை தீர்க்கதரிசி செய்தியாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள்; 1 நாளாகமம் 29:29 பிரகாரமாக தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புத்தகம் மற்றும் தீர்க்கதரிசியாகிய காத்தின் புத்தகம் போன்றவைகள். மிஷனா, கேமாரா, பாபிலோனின் தால்முட், எருசலேமின் தால்முட் மற்றும் மற்ற அனைத்து புனித நூல்களும் இவற்றை கொண்டிருந்தவர்கள் அப்போஸ்தலர் 19: 19-ல் கொடுக்கப்பட்டுள்ள வழிநடத்துதலின் படியாக அவைகள் அவர்களால் எரிக்கப்பட்டது.
28 பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர் 2 ல் இறங்கின பின்பு; இவை எல்லாவற்றிற்கும் பிறகு, காலப் போக்கில், அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்களின் வழிநடத்துதலினாலே, ஜனங்கள் எங்கும் இருந்த மத புத்தகங்களை ஏறக்குறைய எரித்துக் கொண்டிருந்தார்கள். எபேசுவில் மட்டுமல்லாமல், கிறிஸ்தவம் இருந்த எல்லா இடத்திலும் எரித்தார்கள்..
29 இப்பொழுது இதை கவனியுங்கள், ஏன் இந்த காரியங்கள்? இப்போது பின்பற்றவும்: நிக்கோதெமுவினால் எழுத முடியாது ஏனென்றால், எழுதவேண்டியவர் தீர்க்கதரிசி செய்தியாளன் மாத்திரமே. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
30 பழைய ஏற்பாட்டில் இருக்கும் முப்பத்தி ஒன்பது புத்தகங்களில் இருபத்தி ஒன்பது புத்தகங்கள் தீர்க்கதரிசன புத்தகங்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் பெயர்களை உடையதாக இருக்கின்றது என்று நான் கண்டேன், மற்றும் மீதமுள்ள பத்து புத்தகங்கள் எதிர்கால தலைமுறைகளுக்காக வேதபாரகர்களால் இஸ்ரவேலின் வரலாற்று புத்தகங்களாக உள்ளது என்று பார்க்கின்றேன். பழைய நாட்களில், ஒரு வேதபாரகன் அவன் என்ன வேண்டுமானாலும் எழுதுவதில்லை, அது ஒரு புனிதமான விஷயம்!
31 எஸ்தர் 2:23 என்ன கூறுகிறது: "அது ராஜாவிற்கு முன்பாக இஸ்ரவேலின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருந்தது." நீங்கள் பார்க்கிறீர்களா ? ராஜாவிற்கு முன்பாக! ஒரு வரலாற்றின் புத்தகத்தில் ஒரு வசனத்தின் விளக்கத்தை நீங்கள் காண மாட்டீர்கள். இராஜாக்களின் புத்தகம், நாளாகமம், நெகேமியா மற்றும் எஸ்றா ... பார்க்கவும்... சங்கீதம் அல்லது நியாயப்பிரமாணத்தில் கருத்துகளை நீங்கள் காண மாட்டீர்கள். வேதபாரகர்கள் எழுத்தாளர்களாக இருந்தார்கள், அவர்களே இஸ்ரவேலின் வரலாற்றை எழுதவும் மற்றும் தீர்க்கதரிசிகள் பெரும்பாலும் கல்வி இல்லாமல் இருக்கும் ஜனங்களாக இருந்ததினால் அவர்கள் கூறுவதை எழுதுவார்கள்.
32 ஏனென்றால், மத்தேயு 23: 34 மற்றும் 35-ல் தேவன் வேதபாரகர்களை நமக்கு வாக்களித்தினால் கால்வின், மார்ட்டின் லூதர் மற்றும் மற்றவர்களின் வரலாற்றை நாம் அறிந்திருக்கிறோம் [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இன்று தேவன் ஒரு வேதபாரகரை அனுப்பியிருந்தால், அவன் கிறிஸ்தவத்தின் அனைத்து அம்சங்களும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளாமல், ஒரு வசனத்தையும் விளக்க முயற்ச்சி செய்யாமல் எழுதுவான். அவன் அதை நன்றாக செய்திருந்தால், ஒரு நாள், அத்தகைய ஒரு புத்தகம் வாசிப்பதற்கு தகுதியுடையதாக இருக்கும். அது ஒரு வரலாற்றின் புத்தகமாக இருக்கும் நம்முடைய வரலாற்றின் புத்தகம் .
33 இப்போது நான் சில காரியங்களை கூற விரும்புகிறேன்: வேதாகமத்தில் முதலாவதாக தீர்க்கதரிசி செய்தியாளன் இரண்டாவதாக எப்பேசியர் 4:11 இன் நான்கு ஊழியங்கள் அதாவது, அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன் மற்றும் போதகன் மற்றும் மூன்றாவதாக 1 கொரிந்தியர் 12 ல் உள்ள ஒன்பது வரங்கள் ...
34 கவனமாக இருங்கள். ஊழித்தில் மூன்று நிலைகள் உள்ளது : வரங்கள், சபைகளில் உள்ள ஊழியங்கள் மற்றும் தீர்க்கதரிசி செய்தியாளனின் ஊழியம் அவனில்லாமல் பூமியின் மீது சபை ஏதும் இல்லை. 1 கொரிந்தியர் 12 அதிகாரத்தின் வரங்களில் ஏதாவது ஒன்று கிரியை செய்தால், அந்த வரமானது அந்த சபைக்கு மாத்திரமே மேலும் அதை வேரு எங்கும் பரப்ப முடியாது.
35 இப்பொழுது ஒரு அப்போஸ்தலன், ஒரு சபை தீர்க்கதரிசி, ஒரு சுவிசேஷகன், அல்லது ஒரு போதகன் பிரசங்கித்தால், அது அவனுடைய தேசத்திற்கு மாத்திரமே மேலும் அவனுடைய நாட்டிற்கு வெளியே அது போக முடியாது. ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளன் மட்டுமே முழு மனிதகுலத்திற்கும் நோவாவைப் போல பிரசங்கிக்க முடியும், அவனுடைய நேரத்தில் அவன் மாத்திரமே இருந்தான். இரட்சிக்கப்படுவதற்கு நீ அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
36 அப்போஸ்தலனோ அல்லது ஒரு போதகனோ பக்திவிருத்திக்கு ஏதுவான பிரசங்கத்தை கொடுத்தால் அது நல்லது, ஆனால் அதை மற்றொரு நாட்டிற்கு அனுப்பவோ பதிவு செய்யவோ எழுதவோ அல்லது மற்ற வேறு எதாவது செய்ய முடியாது. ஆனால் இப்பொழுது ஊழியங்கள் ஆனது அனைவரின் பக்தி விருத்திக்காக இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே ஒரு சகோதரர் மற்றொரு நாட்டிலிருந்து பிரசங்கிக்கும் ஒரு பிரசங்கிக்குச் செவிகொடுக்கவோ கேட்கவோ முடியும்.
37 நீங்கள் எங்கு இருந்தாலும் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு இதுதான் தேவனுடைய வெளிப்பாடாக இருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அப். 19:19. நீ ஒரு அப்போஸ்தலனாக, தீர்க்கதரிசியாக, சுவிசேஷகனாக அல்லது போதகனாக இருந்து, நீ ஒரு புத்தகத்தை எழுத முயற்சித்தால், நீ நேரடியாக 2 நாளாகமம் 26:16, இல் உள்ள உசியா ராஜாவின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்கின்றாய். அவனுக்கு உரிமை இல்லாத போது யெகோவாவிற்கு தூபம் காட்ட வேண்டும் என்று விரும்பிய ஒரு ராஜா.
38 பிரதான ஆசாரியனான அசதியாவும் அவனுக்கு ஆதரவாக என்பது ஆசாரியர்களும் அவனை சந்திக்க சென்று அதை செய்வதிலிருந்து தடுப்பதை கண்டபோது நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அவன் ஆராதனையை தவறாக செய்தான் என்பதினால் அவர்கள் அவனை தடுக்கவில்லை ஆனால் அவர்கள் அவனிடத்தில் சென்று "உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; நீ ஒரு ராஜா மேலும் அதை செய்வதற்கு உமக்கு அடுத்ததல்ல என்றார்கள்
39 நாம் அதை வாசிக்கலாம்: அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி,... தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து, ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அப்பொழுது உசியா கோபங்கொண்டான்;... அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
40 மேலும் அந்த மாத்திரத்திலே வென்குஷ்டரோகம் அவனை தாக்கியது என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு ஆயர், பேராயர், மேய்ப்பன், போதகன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன் ஒரு புத்தகத்தை எழுதும் பொழுது உசியாவின குஷ்டரோகம் அவன் மேல் இருக்கின்றது. இது தேவனுடைய தவறிழைக்க முடியாத வெளிப்பாடாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
41 வேதாகமத்தில் நியாயப்பிரமாணத்தின் கீழ், இரத்தமும் மாம்சத்திற்க் கீழ் கோரினபோது தேவன் எதை அனுமதிக்கவில்லையோ, அதை அவர் பரிசுத்த ஆவியின் புதிய உடன்படிக்கையின் கீழ் அதை அனுமதிக்கமாட்டார். ஏன்? ஏனென்றால் அவர் நேற்றும், இன்றும் வரப்போகும் காலங்களிலும் மாறாதவராக இருக்கின்றார்.
42 ஒரு ஆசாரியன் பழைய ஏற்பாட்டில் எழுதியதில்லை, அதாவது ஒரு அப்போஸ்தலனோ, சபை தீர்க்கதரிசியோ, சுவிசேஷகனோ அல்லது போதகனோ, புதிய ஏற்பாட்டில் ஒரு மத புத்தகத்தை ஒருபோதும் எழுதுவதில்லை. அப்படி அவன் செய்தால், உசியாவின் குஷ்டம் அவன்மீது இருக்கிறது என்று அறியுங்கள். மேலும் அதை உங்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசி உங்களிடத்தில் கூறுகிறான் [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
43 இன்று, அந்த அப்போஸ்தலர்களும், மேய்பர்களும், போதகர்களும், சபை தீர்க்கதரிசிகளும் எழுதுகிற அனைத்தையும; தேவன் அவைகளை மாயவித்தை புத்தகங்கள் என்று, ஆபாச புத்தகங்கள் என்று அழைக்கின்றார். மேலும் அப்போஸ்தலர் 19: 19-ல் , அவர்களுடைய மூதாதையர் எழுதின நூல்களை எரித்தனர்.
44 ஆனால் மார்ட்டின் லூதர், வில்லியம் டைன்டேல், ஆலிவ்டன் மற்றும் மற்ற தேவனுடைய உண்மையான ஊழியர்கள் எழுதின அல்லது வேதாகமங்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகள் எரிக்கப்படவில்லை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அவர்கள் உண்ணாவிரதம் மற்றும் ஜெபங்கள் மற்றும் அத்தகைய ஒரு பொருள் மீது விலைமதிப்பற்ற புத்தகங்களை எழுதினார்கள், ஆனால் அவைகள் அனைத்தும் எரிக்கப்பட்டது. தீர்க்கதரிசி செய்தியாளனைத் தவிர வேறு எவரும் தேவனுடைய வார்த்தையைப் பற்றி எழுத முடியாது!
45 சபையின் வரலாற்றில், எபிரெயர் புத்தகத்தைச் சுற்றி ஒரு சூடான விவாதம் நடைபெற்றது. எபிரெயர் புத்தகம் பவுல் எழுதியது என்று வரலாற்றாசிரியர்கள் மற்றும் இறையியலாளர்களை கொண்ட ஒரு குழு இருந்தது. மேலும் எபிரெயர் புத்தகம் அப்பொல்லோ அல்லது அது போன்ற ஏதாவது ஒருவர் எழுதப்பட்டிருப்பதாக மற்றொரு குழு சொன்னது. ஆனால் வெளிப்பாடு மற்றும் தேவனின் வெளிப்பாட்டின் வரிசையில் பவுல் அதை எழுதியவர் என்று நமக்கு கூறுகிறது.
46 அது பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஒரு மனிதனாக இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் எழுதுவதற்கு எழும்பினால், உசியாவின் குஷ்டரோகம் அந்த மாத்திரத்திலே உங்களைத் தாக்கும். அவன் எப்பொழுது குஷ்டரோகத்தினால் தாக்கப்பட்டான்? அது முதல் நாள் அல்ல, ஆனால் அவன் வார்த்தைக்கு முன்னால் தனது கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்த நாளிலே. மேலும் நீங்கள் பூமியில் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுது தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்புவிற்கு செவிக் கொடுக்கும் பொழுது இன்றும் அது அவ்விதமாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
47 வார்த்தையானது உரைக்கப்பட்ட பிறகு, நீங்கள் ஒரு கனப்பொழுதினாலாவது காரணக் காரியங்களை அறிந்தால், உங்களுடைய மரணம் மட்டும் உசியாவின் குஷ்டரோகத்தால் தாக்கப்படுவீர்கள். அவன் தூபத்தை தீயிடும் மட்டுமாகவும் தேவன் காத்திருக்கவில்லை ஆனால் அவன் வனங்கா கழுத்துள்ளவனாக இருந்த மாத்திரத்திலே, குஷ்டரோகம் தோன்றியது! ஆமென்! அவனுடைய கையில் அல்ல ஆனால் அவனுடைய நெற்றியில்! ஒரு வெள்ளை குஷ்டம்! அவன் வார்த்தையை காரணம் கண்ட போது சரீரப் பிரசுரமாகவும் ஆவக்குரிய குஷ்டரோகம் உண்டானது !
48 உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட தருணத்திலிருந்து மேலும் நீ காரணக் காரியங்களை அறிந்தால், உசியாவின் குஷ்டரோகம் உன் நெற்றியில் இருக்கும். ஒரு மேய்ப்பனோ அல்லது போதகனோ அல்லது அப்போஸ்தலனோ அல்லது சுவிசேஷகனோ அல்லது சபை தீர்க்கதரிசியோ எழுத முடியாது என்று உங்களுடைய மணி வேளையின் உயிர் வாழும் தீர்க்கதரிசி சொல்லும் பொழுது, நீ உனக்குள்ளாக இப்படியாக சிந்தித்துக் கொண்டு, "அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் எழுதவில்லையா? ராஜாவாக இருந்த தாவீது எழுதவில்லையா? என்று இந்த விதத்தில் காரண காரியங்களை சிந்தித்தவுடனே உன்னுடைய நெற்றியில் உசியாவின் குஷ்டரோகம் தோன்றுகிறது!
49 ஏன்? ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களும் சீடர்களும் தீர்க்கதரிசிகள் என்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு கூறுகிறார். மேலும் இந்த தீர்க்கதரிசிகள் அவர்களுடைய செய்தியை தேவன் பூமியின் மேல் மனித வடிவத்தில், கர்த்தராகிய இயேசு என்ற மனிதருக்குள் இருந்த பொழுது தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
50 தீர்க்கதரிசி என்பவன் தேவனிடத்திலிருந்து நேரடியாக வார்த்தையை பெற்றுக்கொள்கிறான். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனாக இருக்கின்றார். ஆமென்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. தீர்க்கதரிசிகள் தேவதூதர்களாக இருக்கின்றார்கள். இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் மற்றும் அவருடைய சீஷர்கள், அது சர்வ வல்ல தேவன் யூதர்கள் மத்தியில் இருப்பதாகும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
51 இப்போது இதைப் பின் தொடருங்கள்: ஏசாயா தனது செய்தியைக் கொடுத்தபோது, அங்கே இருந்த குருமார்கள், அதை அறிவிக்க ஆரம்பிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அது அவர்களுடைய காலத்திற்காக தேவனுடைய சித்தமாயிருந்தது. ஏசாயா மரித்தபோது, அங்கு இருந்து ஜனங்கள் நிறுத்த வேண்டியிருந்தது. சாதாரணமாக, நடுராத்திரி சத்தத்தின் செய்தியாளனுக்கு பின், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு பிறகு, மக்கள் முன்னோக்கி நகரச் செய்வது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி-செய்தியாளன் என்று ஜனங்கள் அடையாளம் கண்டு கொண்டால் அங்கு பிரிவு எதுவும் இருக்க கூடாது.
52 யாத்திராகமம் 32 இல் மோசே ஜனங்களை விட்டு கடந்த போது, ஜனங்களை ஒரு படி மேலே கொண்டு செல்வதற்கு ஆரோனுக்கு எந்த உரிமையும் இல்லை. உலகம் அறிந்த மிகப் பெரிய ஆசாரியனாக ஆரோன் இருந்தான், ஆனால் அவன் ஜனங்களை முன்னேற்ற முயன்ற போது, அது ஒரு பொற் கன்றுகுட்டியாக இருந்தது!. எபேசியர் 4 :11, எந்த ஒரு ஆசாரியனோ அல்லது ஒரு ஊழியக்காரனோ அதாவது அப்போஸ்தலனோ, சபை தீர்க்கதரிசியையோ, சுவிசேஷகனோ, அல்லது போதகனோ ஒரு புத்தகத்தை எழுதினால் அந்த புத்தகமானது ஒரு பொற் கன்றாக இருக்கின்றது! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. தேவன் பூமியின் மேல் வேறு ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை அனுப்பும் வரை ஒரு ஆசாரியன் ஜனங்களின் விசுவாசத்தை காத்துக் கொள்ளும் ஊழியத்தை கொண்டிருக்கிறான் என்பதை ஒவ்வொரு யூதனும் அறிந்து இருக்கின்றான். ஒரு ஆசாரியன் அதை சாதித்திருக்க வேண்டுமெனில் அது ஆரோணாக இருக்க வேண்டும் அவன் எல்லா ஆசாரியதத்துவத்திற்கும் தலைமுறை தலைமுறையாக இம்மட்டுமாக தகப்பனாக இருக்கின்றான்.
53 ஆரோன் அப்போஸ்தலர்கள், சபை தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்களுக்கு தகப்பனாக இருக்கின்றான். மேலும் ஆசாரியத்துவத்தின் தகப்பனான ஆரோன், தேவனுக்கு ஏதாவது செய்ய விரும்பி, ஒரு பொன் கன்றுக்குட்டியை செய்தான், ஒவ்வொரு அப்போஸ்தலனும், சபை தீர்க்கதரிசியும், சுவிசேஷகனும் அல்லது போதகனும் இனங்கண்டுக் கொள்ள வேண்டியதாவது அது ஜனங்களை முன்றேற்றுவதற்க்கு ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனே மாத்திரமே அங்கிகாரம் பெற்றவன் என்று தேவனின் இறையான்மை கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
54 மேலும் இன்று ஆசாரியத்துவமானது அது எபேசியர் 4:11 ன் ஊழியங்கள். இருப்பினும், இஸ்ரவேலின் விசுவாசம் அது ஓசியா 12:14 மற்றும் 2 நாளாகமம் 20:20. ஒரு மேய்ப்பன்,, அப்போஸ்தலன், அல்லது போதகனின் புத்தகம் எவ்வளவு ஆழமாகவும் பலன்களை கொண்டிருந்தாலும், அவன் ஒரு கிறிஸ்தவனாக பர்னபாவை போன்று பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவனாக இருந்தாலும், அப்போஸ்தலர் 19:19 இன் பிரகாரமாக அந்த புத்தகமானது எரிக்கப்பட வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. வேதாகம்ம் மற்றும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் கூறுவதற்கு புறம்பாக அப்போஸ்தலர் 19:19 இன் பிரகாரமாக அனைத்தையும் எரிக்கப்பட வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
55 மற்றொரு தீர்க்கதரிசி சொன்னதைப் பற்றி ஒரு தேவனுடைய புத்தகம் கருத்து தெரிவிக்காது என்று நான் மீண்டும் சொல்கிறேன். எசேக்கியேல் 1-ஆம் அதிகாரத்தில், பரலோகத்தில், தேவனை சுற்றியிருந்த நான்கு விலங்குகளும் அவர்களுடைய திசைகளில் பார்த்தன என்பதை நாம் பார்த்தோம். பூமியிலே, இவர்களுடைய காலத்தில் உயிர் வாழும் தீர்க்கதரிசியை சுற்றியுள்ள எபேசியர் 4:11 ஊழிங்களாக இருக்கின்றது.
56 இதனால், அதினுடைய பரிமானத்தில் அவனுடைய மகன் இல்லாவிட்டால் இன்னொரு சிருஷ்டியானது என்ன சொன்னது என்று ஒரு சிருஷ்டியினால் சொல்ல முடியாது. சிங்கத்தின் குமாரர்கள் அல்லது சீஷர்கள் சிங்கத்திற்காக உள்ளது, கன்றின் குமாரர்கள் கன்றிற்க்காக, மனிதனின் முகத்தை கொண்டுள்ள சிருஷ்டிப்பின் குமாரர்கள் மனிதனின் முகத்தை கொண்டுள்ள சிருஷ்டிப்பிற்காக மற்றும் கழுகின் குமாரர்கள் கழுகிற்காக.
57 தன்னைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனமாக இல்லாவிடில் எரேமியா அல்லது எரேமியாவின் சீடரோ ஏசாயா சொன்னதை வியாக்கியானம் செய்ய அதிகாரமில்லை. ஒரு தீர்க்கதரிசியின் புத்தகத்தினுடாக நாம் கடந்து செல்லும் பொழுது, தீர்க்கதரிசியானவன் நியாயப்பிரமாணத்தைக் குறித்தும் மற்றும் அவனுக்கு முன்பாக வந்த தீர்க்கதரிசிகளை அறியாமல் இருக்கின்றார் என்று கருத தோன்றும்
58 ஏசாயா மோசேயையும் மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் மற்ற எந்த தீர்க்கதரிசியையும் பற்றி பேசவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா ? இன்று, தேவன் நம் காலத்தில் வேறொரு தீர்க்கதரிசியை அனுப்பி வைத்தால், அவர் ஏரேமியா கூறினதையோ , நசரேயனாகிய இயேசு கூறினதையோ, மோசே கூறினதையோ, அல்லது வேரு ஒரு தீர்க்கதரிசி கூறினதை பிரசங்கிக்க அல்ல ஆனால் இன்று பூமியின் மேல் நேரடியாக தேவன் கொடுத்த தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாட்டை போதிக்க அனுப்பபடுவான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
59 மல்கியா எரேமியா புத்தகத்தையோ, வேறொரு தீர்க்கதரிசியையோ, நியாயப்பிரமாணத்தையோ, சங்கீதத்தையோ குறித்து கருத்து தெரிவிக்க வில்லை! தீர்க்கதரிசி சகரியா, தானியேல் புத்தகத்தையோ அல்லது வேறொரு தீர்க்கதரிசியையோ, நியாயப்பிரமாணத்தையோ, சங்கீதத்தையோ குறித்து கருத்து தெரிவிக்க வில்லை! தீர்க்கதரிசி ஏசாயா ஆமோஸ் புத்தக்ததையோ, வேறொரு தீர்க்கதரிசியையோ, நியாயப்பிரமாணத்தையோ, சங்கீதத்தையோ குறித்து கருத்து தெரிவிக்க வில்லை! கடந்த காலத்தைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி சொன்னதுபோல், ஊழியத்தில் அவருடைய நிறைவேற்றத்திற்காக ஆண்டவர் இயேசுவை அடிக்கடி தீர்க்கதரிசிகளையும் சங்கீதங்களையும் குறிப்பிடுவதைக் கண்டார்.
60 இந்த அர்த்தத்தில் நான் மத்தேயு 25: 6, வெளிப்படுத்துதல் 12:14, ஏசாயா 30, யோசுவா 6, தானியேல் 12, மற்றும் மற்றவைகள் என்னை நேரடியாக குறித்து இருப்பதை நான் குறிப்பிடப்படுகிறேன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இல்லையெனில், தேவன் ஒரு தீர்க்கதரிசியை பூமியின் மேல் அனுப்பும்போது, அது உலகம் அறியாத புதிய ஒன்றை கூறுவதற்காகவே. அதனால்தான் தீர்க்கதரிசி செய்தியாளன் அவனுடைய மணி வேளையின் உலகத்தின் ஒளியாக இருக்கின்றான்
61 ஆகவே நடுராத்திரி சத்தமானது லூயிஸ் செகண்ட், ஜேம்ஸ் மன்னன் பதிப்பகம் ஸ்கோஃபீல்டு, தாம்சன் வேதாகமங்கள் மாந்திரீக பானைகளாக இருக்கின்றது என்று கூற வருகிறது... கத்தோலிக்க, புரோடெஸ்டெண்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், வில்லியம் பிரான்ஹாமின் செய்தியை அதின் தூய்மையில் பின்பற்றுபவர்களும் மேலும் அவர்களை செயல்படுகின்ற ஆவி பிசாசின் ஆவிகளாக இருக்கின்றது என்று கூற வருகின்றது.
62 நடுராத்திரி சத்தமானது மத்தேயு 25: 6 ஐ நிறைவேற்ற வருகின்றது. நடுராத்திரி சத்தமானது வெளிப்படுத்துதல் 12:14 நிறைவேற்ற வருகின்றது. நடுராத்திரி சத்தமானது அறியாத மொழியை வியாக்கியானம் செய்ய வருகின்றது. நடுராத்திரி சத்தமானது அர்மகெதோனின் யுத்தம் என்ன என்பதை வெளிப்படுத்த வருகிறது. நடுராத்திரி சத்தமானது ஆதியாகமம் 7 ஐ வெளிப்படுத்துவதற்கு வருகிறது. நடுராத்திரி சத்தமானது இஸ்மவேலருக்கு தேவனுடைய சந்திப்பு மற்றும் அது இந்த சந்திப்பில் எதை கொண்டிருக்கும் என்பதை பற்றி அறிவிக்க வருகிறது.
63 நடுராத்திரி சத்தமானது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவிற்கு வெளியே அனைத்து தீர்க்கதரிசிகளும் சாத்தானின் கருவிகளாக இருக்கின்றன என்பதை கூற வருகிறது. நடுராத்திரி சத்தமானது நாம் நள்ளிரவில் இருக்கிறோம் என்று சொல்ல வருகிறது. நடுராத்திரி சத்தமானது இந்த மணி வேளையின் தண்ணீர் ஞானஸ்நானமானது மீட்டளிக்கப்படுதலின் ஞானஸ்நானம் என்று கூற வருகிறது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
64 நடுராத்திரி சத்தமானது சங்கீதங்களைப் பற்றியோ அல்லது பவுலின் நிருபங்களை விளக்குவதற்கு வரவில்லை. கடந்த காலத்தில் நீங்கள் புத்தகங்களை வைத்திருந்தால், இந்த புத்தகங்கள் உங்களுக்கு விசுவாசத்தில் எவ்வளவு உதவியாய் இருந்தது என்பது ஒரு பொருட்டல்ல, நாம் அஞ்ஞானிகளாக இருந்த சமயத்தில் ஒரு மந்திரவாதி எங்களுக்குக் கொடுத்த தாயத்தை போல எரித்துப்போடும் …
65 இந்த காலையிலே, இந்தப் பிரசங்கத்தை கேட்ட நாம். தேவன் நம்மை காக்கும் படியாக நாம் ஜெபம் செய்யலாம். மத்தேயு 25: 6 ல் ஒரு செய்தியானது வரும் என்று வேதாகமம் கூறுகிறது. புதிய உடன்படிக்கையானது பழைய உடன்படிக்கையின் பிரதிநிதித்துவம் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் இந்த செய்தியானது இரண்டு உடன்படிக்கைகளின் மீட்டளிக்கப்படுதலாக இருக்கின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா ? பெருங் கழுகின் இரண்டு சேட்டைகள் ஸ்திரீயினிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று வேதாகமம் கூறுகிறது. இடது இறக்கை மற்றும் வலது இறக்கை . பழைய உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கை. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடானது பாம்பின் முகத்திலிருந்து சபையை விலக்கி கொண்டுச் செல்லும்.
66 இப்படியாக இது வெளிப்படுத்துதல் 18 ல் கூறப்பட்டுள்ளது: அவளை விட்டு வெளியே வாருங்கள், ஆனால் எங்கே போகவேண்டும்? நீங்கள் பார்க்கிறீர்களா ? ஆனால் இந்த முறை, கடைசியாக, இந்த சுவிசேஷமானது தேவனுடைய பிள்ளைகளை சர்ப்பத்தின் முகத்தில் இருந்து தூரமாக உயிர் வாழும் சபையை எடுத்துச் செல்ல வேண்டும்! அது என்ன? ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபையின் பரிசுத்த ஆவி ஒரு போதும் நம்மில் பலவீனமானவர்களையும் வஞ்சிக்க முடியாது! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
67 நாங்கள் ஒரு போதும் ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபைக்கு சென்று உட்கார மாட்டோம், திருமணத்திற்க்காவும் அல்ல அல்லது எங்கள் தந்தையின் சடங்கிற்க்காகவும் அல்ல! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அது எந்த ஒரு திருச்சபையின் பெயரை எடுத்துக் கொண்டாலும் அது ஒரு பொருட்டல்ல அதினுடைய முகத்திற்கு முன்னால் எங்களை பார்க்காது! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
68 ஒரு ஜேம்ஸ் மன்னன் வேதாகமம், ஸ்கோஃபீல்டு அல்லது லூயிஸ் செகண்ட் வேதாகமம் நம்மை ஒரு போதும் வஞ்சிக்காது ஏனெனில் என்னெ்றைக்கும் அது ஒரு மாந்திரீக புத்தகம் இருக்கின்றது என்று நாம் அறிவோம். ஒரு கள்ளத் தீர்க்கதரிசியின் இரவு விழிப்பு கூட்டத்திற்கோ மற்றும் ஒரு ஆசாரியனின் புத்தகத்திற்க்கோ அல்லது எபேசியர் 4:11 ன் ஊழியம் அதாவது ஒரு அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன் அல்லது போதகனின் புத்தகத்தை எங்களுடைய வீடுகளில் ஒரு போதும் காண முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
69 இம்முறை, சர்ப்பத்தின் முகத்திற்கு என்றென்றைக்குமாக சர்பத்தின் முகத்திற்கு தூரமாக்கப்பட்டிருப்போம் என்று வேதாகமம் கூறுகிறது. ஏன்? வெளிப்படுத்துதல் 12:14ன் நிறைவேறுதலாக தீர்க்கதரிசன செய்தியை கிருபையாக கொடுத்திருக்கின்றார் மேலும் இந்த செய்திதான் உலகத்தின் ஒளி! ஏனெனில் இராஜ்ஜியத்தின் திறவுகோள்கள் இங்கே உள்ளன.
70 [அசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு மற்றும் சபையினர் ஒன்றாக ஜெபம் செய்கின்றனர] ... இப்போது நாம் உட்காரலாம், நான் அழைப்பு விடுக்க விரும்புகிறேன் பிறகு நான் ஜெபித்து நம்முடையை கூட்டத்தை முடிக்கலாம். நாம் ஜெபத்தின் ஆவியில் இருக்கும் வேளையில், நான் அழைப்பு விடுப்பேன்.
71 பிரசங்கம் முடிந்தபின் நீங்கள் ஒரு பாப்டிஸ்டு மேய்ப்பனிடமோ அல்லது பெந்தேகோஸ்தேவிடம் செல்லும் படியாக, நீங்கள் நன்றாக உணரும்படியாக இங்கு நாங்கள் ஒரு சாதாரணமான பிரசங்கத்தை கொடுக்கவில்லை. நோவாவின் நாட்களில் அவனுடைய பேழையை போன்று தனியாகவும் தனித்துவமாகவும் ஒரு செய்தியானது வருகின்றது. இந்த மேஜையில் சாப்பிடும் எவரும் மற்றொரு மேஜையில் சாப்பிட மாட்டார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
72 இந்த செய்தியானது வார்த்தையின் பிரத்தியட்சமாக அதாவது நம்முடைய நேரத்தின் இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக இஸ்ரவேலில் நீங்கள் ஜீவித்து இருந்தால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமானது இன்று அவர் அனுப்பினவரை நீங்கள் ஏற்றுக்கொள்வதாகும். ஏனெனில் அவர் மத்தேயு 10:40 இல் சொன்ன பிரகாரமாக " என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
73 தேவன் தம்முடைய பிள்ளைகளை அவர்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியை சுற்றி கூட்டிச் சேர்க்கின்றார்.. ஆகையால் வேதாகமம் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களாக இருக்கின்றது. இங்கே பூமியிலே தேவன் தம்முடைய பிள்ளைகளை கூட்டி சேர்க்க வேண்டுமானால், அவர் எப்பொழுதும் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை சுற்றி எப்பொழுதும் சேர்க்கின்றார்.
74 மத்தேயு 13: 24 முதல் 30 இன் பிரகாரமாக எரிக்கப்படும் படியாக பிசாசின் குமாரர்கள் சபைகளில் பிரிந்து இருக்கின்றார்கள், ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவரோடு கூட பரலோகத்தில் கூட்டி சேர்ப்பதற்கு முன்பாக நம்முடைய வேளையின் தீர்க்கதரிசியை சுற்றி ஒரே இடத்தில் கூட்டி சேர்க்கப்பட வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நாம் ஒரே ஆவி, ஒரே மொழியைக் காத்துக்கொள்ள வேண்டும், அதேபோல் தேவனுடைய பிள்ளைகளுக்கு இது பொருத்தமானது. இதை தான் எல்லா நேரங்களிலும் தேவன் செய்தார்.
75 பூமியில் ஒரு தீர்க்கதரிசி இல்லாதபோது, தேவனுடைய பிள்ளைகளின் விசுவாசம், அத்தகைய பழைய தீர்க்கதரிசியின் சீடர்கள். பரிசேயர்கள், சதுசேயர்கள், கிரேக்கவாதிகள், ஆர்சால்கள், ஏரோதியர்கள், எசீனியர்கள் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆனால் தேவன் அவர்களுடைய நேரத்தில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை அனுப்புகையில், இந்த சபைகளில் பிரிக்கப்பட்ட மற்றும் சிதறிப்போன தேவனின் பிள்ளைகள் அனைவரும் வந்து, இந்த தீர்க்கதரிசியின் செய்தியைச் சுற்றி சேர்கின்றார்கள் அங்கே ஒரு யாத்திராகமம் உள்ளது. தேவனுடையவர்கள் தேவாலயங்களில் இருந்து வெளியே வந்து தங்களுடைய மணி வேளையில் செய்தியை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், அதாவது பூமியில் உயிரோடிருக்கிற தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட ஒரு செய்தியை சொல்ல வேண்டும்.
76 அனைத்து கிறிஸ்தவமும் வேதாகமத்தை சுற்றியிருந்தால் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களை முழுவதுமாகப் பெற்றிருந்தால், ஏனெனில் தேவன் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி- செய்தியாளனிடம் மட்டுமே தம் மக்களை சேகரிக்கிறார். நீங்கள் தேவனை உடையவர்களாக இருந்தால், நீங்கள் இரட்சிக்கப்பட ஒரு வரலாற்று விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆனால் உங்களுடைய நேரத்தின் செய்தியை ஏற்றுக்கொள்வதே ஆகும், அதாவது, உங்களுடைய நேரத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியின் மூலமாக கொண்டு வந்த செய்தி. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
77 யாராவது இங்கே முதல் அல்லது இரண்டாவது முறையாக இன்று காலையில் வந்து இருந்தால், இந்த வாய்ப்பானது அவனிடத்தில் வழங்கப்படுகிறது, வெறுமனே உங்கள் கையை உயர்த்தி, எங்களுடைய தலைமுறையில் நோவாவை போன்று அவன் மூலமாக இரட்சிப்படையத்தக்கதாக நான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை தேவன் அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்.
78 எற்றுக் கொள்வதற்கு எவராகிலும் இருக்கிறீர்களா? சகோதரனே தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்! சகோதரரே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! சகோதரியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்! தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். நன்றி! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக!
79 இப்போது நான் உங்களிடத்தில் விசேஷமாக கேட்க விரும்புகிறேன். நீங்கள் முன்னே வர முடியுமா நாங்கள் உங்களுக்காக ஜெபம் செய்வோம். அந்த வரிசைகளை விட்டு வாருங்கள்... அங்கே அறையில் மற்றும் வெளியே தார்பாலின் கீழ் நீங்கள் பார்க்கின்ற அனைவரும் அவர்கள் பலவான்கள் அல்ல ஆனால் தேவனுடைய ஒத்தாசையோடும் கிருபையோடும் நாங்கள் இந்த செய்தியை பின்பற்றுகிறோம் வாசல் குறுகியதாகவும் பாதை இறுக்கமாகவும் இருக்கின்றது ஆனால் தேவனுடைய கிருபையோடும் ஒத்தாசையோடும் எங்களால் கூடும்.
80 கடந்த காலத்தில், அவர்கள் பரிசேயர், சதுசேயர், ஹெலனிஸ்டுகள், ஏரோதியர் ஆகியோரிடம் இருந்து வெளியே கர்த்தர் இயேசுவினிடத்தில் வந்தனர். இன்று, அவர்கள் கத்தோலிக்க புரோட்டஸ்டண்ட், சுவிசேஷக மற்றும் பிரனஹாமிஸ்டு இடமிருந்து இந்த தலைமுறையினருக்கு ஆண்டவராம் இயேசு கிறிஸ்து அனுப்பியவர் இடத்தில் வருகிறார்கள்.
81 அவர்கள் எல்லா இடங்களிலிருந்தும் எல்லா கண்டங்களில் இருந்தும் வருவார்கள், அவர்கள் பூமியில் வாழும் அனைத்து ஜாதிகளில் இருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் ஏப்ரல் 24, 1993 அன்று கொடுத்த இந்த செய்தியின் இடத்தில் வருவார்கள் . அது அவ்வாறு இருக்காமல் இருக்க முடியாது, ஏனென்றால் தேவன் அதை நிறைவேற்றுவதற்காக ஏப்ரல் 24, 1993 அன்று தேவதூதரை அனுப்பி வைத்தவர். அது பூமியில் நிறைவேற்றப்படும் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.
--:--
--:--