(06 நவம்பர் 2005 ஞாயிற்றுகிழமை காலை, லோகாட்ஜரோ, ஆபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1நல்லது! நான் சபையை இன்னும், அதிக ஞானத்திற்கு அழைக்கிறேன். இந்த அர்த்தத்தில், ஒரு விசுவாசி நல்லவனாக தோற்றமளித்து இருப்பினும் உங்களுக்குள் சாத்தானின் முகவர்களாக இருக்கக்கூடும் என்று நான் கூற விரும்புகிறேன், ஒரு சபையும் கூட சாத்தானின் ஒரு ஆலயமாக இருக்கலாம். உதாரணமாக, வெளிப்படையான பாவ அறிக்கையின் பொழுது உத்தமமாக இருக்கும் ஒரு சகோதரன் அல்லது ஒரு மேய்ப்பன் அறிக்கையிடும் போது ஒன்றும் கூறாத சபை அது பிசாசாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
2பாவம் எதுவாக இருந்தாலும் அந்த மாத்திரத்திலே ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி பொதுவான பாவ அறிக்கையின் போது அறிக்கையிட தைரியம் கொண்டிருந்தால் உங்களுடைய நோக்கம் அதை சிதைப்பதாக இருக்க கூடாது, ஆனால் இனி அவன் அல்லது அவள் ஒரு போதும் அந்தப் பாவத்தை திரும்ப செய்யாதவாறு எல்லா தாழ்மையோடும் நீங்கள் அவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டும். 1 இராஜாக்கள் 2: 26-ல் அபியதாருக்கு முன் சாலொமோனை நினைவில் வையுங்கள்.
3ஒரு சகோதரன் அல்லது சகோதரி, ஒரு எடுத்துக்காட்டாக இருந்து, மனமாற்றங்களை அடையச் செய்து, தன்னுடைய அனைத்து பலத்தோடும் ஊழியத்தை தாங்கி பிறகு விழுந்து அதை ஒரு முறையில் அறிக்கையிடும் பொழுது, ஞானமாக இருங்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? அதே விதத்தில், உள்ளிருக்கும் சத்துருக்களையும் ஆகானையும் பார்க்கிலும் ஒரு பலவீனமான சகோதரரை அல்லது ஒரு கலப்பின ஜாதியை வெளியேற்றுவதில் கவனமாயிருங்கள் . [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
4சகோதரர்கள் மோசே, பெனி மற்றும் கெளலிபலி ஆகியோரைக் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஒரு போதகன் மற்றும் அவனுடைய சபையும் நடுராத்திரி சத்தத்திற்கு இணங்கி இருக்க முடியும் என்று அவர்கள் காண்பித்திருக்கிறார்கள். அதை நான் என் முழு இருதயத்தோடும் கூறுகிறேன்... அவர்கள் ஒரு சிறந்த ஆலயம், சிறந்த பலிபீடம், கம்பளங்கள் மற்றும் மற்றவைகளுடன் இருந்தார்கள், ஆனால் தாழ்மை ஜெயம் கொண்டது! நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த புத்தகத்தின் முழு பதிப்பிற்கும் பணத்தை கொடுத்த சகோதரி ரேச்சலை தேவன் ஆசீர்வதிப்பாராக. எல்லா இடங்களிலும் சாட்சி கொடுக்கும் சகல சகோதரிகளையும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தவர்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக, . [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
5விஞ்ஞானத்தின்படி, கரு முட்டையின் திசையை நோக்கி செல்லும் விந்துக்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு , ஒன்றை ஒன்று கூட கொண்றுவிடும் என்று சகோதரர் ஃபோஃபானா என்னிடம் கூறினார். "பிளானட்" என்று அழைக்கப்படும் ஒரு தொலைகாட்சி சேனல் அதை காண்பித்து இருந்தது... அதை நான் போதித்திருக்கின்றேன் மேலும் அதை நான் அறியாதிருந்தேன். நீங்கள் பார்க்கிறீர்களா? இது ஆதியாகமம் 7, காக்குவ்:27 படி ஜலப்பிரளயத்தனூடாக பிசாசின் புத்திரர்கள் கடந்து வந்த பாதை என்ற பிரசங்கத்தில் உள்ளது.
6நல்லது! நான் தொடங்கும் முன், நான் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். முதல் கேள்வி: "சகோதரர் பிலிப்பு, டார்பி பதிப்பை தேவன் நமக்கு பரிந்துரைத்திருக்கின்றார், ஆனால் அதில் பிழைகள் இருக்க முடியுமா? டார்பி பதிப்பில் எந்த பிழைகளும் இதுவரை நான் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் "தேவனுடைய தவறிழைக்க முடியாத திட்டத்தில் மனிதனின் அடிச்சுவடு" என்ற பிரசங்கத்தை நினைவில் கொள்ளுங்கள். 2 சாமுவேல் 10:18 மற்றும் 1 நாளாகமம் 19:18 ஆகியவற்றைப் பற்றி பேசுகையில், அங்கே அது தேவனின் தவறிழைக்காத தன்மையை பாதிக்கவில்லை என்பதை நான் காண்பித்தேன்.
7வேதாகமத்தை எடுத்து பாருங்கள் ஒருபுறத்தில் : "சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் "எழுநூறு" இரதவீரரையும் நாற்பதினாயிரும் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்." என்று கூறுகிறது. மறுபுறத்தில், 1 நாளாகமம் 19:18 ல் : "சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் "ஏழாயிரம்" இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்." என்று கூறுகிறது நீங்கள் பார்க்கிறீர்களா?
8மனிதன் தவறிழைக்கக்கூடும் என்று தேவன் அறிந்திருக்கின்றார். ஆனாலும் அவர் தூதர்களை விட்டுவிட்டு, அந்த மனிதன் தன்னுடைய சுவடுகளை விட்டு விடுவான் என்று தெரிந்தும் அவனை உபயோகிப்பார். ஆனால் தேவன் அதை செய்கிறார், ஏனெனில் அவர் தேர்ந்தெடுத்து அனுப்பிவைக்ப்பட்ட மனிதரின் அடிச்சுவடு அவரது தவறிழைக்காத தன்மையை பாதிக்காது. நானும் அவர் தேர்ந்தெடுத்து அனுப்பின மனிதனின் அடி சுவட்டை கூறுகிறேன் ... [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
9" சரித்திரம் வெளிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது" என்ற செய்தியையும் நான் பிரசங்கித்தேன். ஆனால் ஆலிவ்டன் பதிப்பு சிறந்த பதிப்பு என்று நான் சொன்னபோது, இந்த ஆலிவ்டன் பதிப்பு பல நூற்றாண்டுகளாகவும் காலாகாலத்திற்கும் பரிபூரணமானது அல்ல, ஆனால் அந்த நாட்களுக்கு அது தேவனுடைய செய்திக்கு பொருந்தியிருந்தது. மேலும் கால்வின் அதற்கு முன்னுரையை எழுதினார் என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்.
10இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், டார்பி பதிப்பு நடுராத்திரி சத்தத்திற்கு புள்ளிக்கு புள்ளியாகவும் மற்றும் வார்த்தைக்கு வார்த்தையாக அது செய்யும் என்பதை நாம் அறிவதற்கு முன்பாக அது பொருந்தினது. நீங்கள் பார்க்கிறீர்களா? இது 2002 ஆம் ஆண்டில் டார்பி பதிப்பை வெளிப்பாட்டில் சுட்டிக்காட்டியது, ஆனால் முதல் பிரசங்கம் முதல் சூலமத்தி ஸ்திரீக்கு எழுதின நிருபம் வரை, டார்பி தோல்வியடைந்ததில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11பெரும்பாலும், வார்த்தைகளின் வேறுபாடுகளைப் பற்றி நாம் பேசுவது உன்மைதான், ஆனால் மிக முக்கியமானது, ஒரு மணி வேளையின் செய்தியின் ஆவி மற்றும் பதிப்பின் ஆவியானது ஒரு முனையிலிருந்து மற்றொறு முனை வரை ஒன்றாக இருக்க வேண்டும். உதாரணமாக, நடுராத்திரி சத்தமானது, மத்தேயு 25 ன் பத்து கன்னிகையில் ஐந்து பேர் நித்திரையடையவில்லை என கூறுகிறது. மேலும் புதிய ஏற்பாட்டின் மத்தேயு 25: 7 மற்றும் பழைய ஏற்பாட்டின் 2: 7-ன் உன்னத பாடல் அதை காண்பிக்கின்றது.
12நான் ஒரு பாப்டிஸ்ட் மேய்ப்பனை சந்தித்தேன். அவன் இவ்விதமாக, "நீங்கள் சொல்வது உண்மையாயிருக்கிறது, ஆனால் நான் காணும் அமைப்பு முறைக்கு முன்னால் நான் என்ன செய்ய முடியும்? நான் வெளியேற வேண்டும் என்றால், நான் போஷிக்க வேண்டிய ஒரு பெரிய குடும்பம் உள்ளது!... இந்த உண்மையான காரியங்கள் எல்லாம் உள்ளன, ஆனால் ஜனங்களுக்கு இன்னொரு பக்கத்தின் நிஜத் தன்மையை முன்வைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." மேலும் அவர்: "நாங்கள் கத்தோலிக்கம் போன்ற மாநில- சபைகள் இடத்தில் சிறிய மானியங்கள் பெறுவதற்காக அரசின் பாதுகாப்பிற்கு உட்பட்டுள்ளோம்...."
13அவர் தன்னை ஆறுதல் படுத்துவதற்காக : உனக்குத் தெரியுமா தேவன் உன்னை ஆசீர்வதிப்பதற்காக சீசர் வழியாக கடந்து செல்ல முடியும் என்று சொல்லி முடித்தார். காகங்கள் எலியாவை போஷித்தது!". ஆனால் நான் அவருக்கு உள்ளாக நிச்சயமற்ற தன்மையை உணர்ந்தேன், சில நேரங்களில் அவர் சிந்தனை செய்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? ஏதோ தவறு என்று அவர் அறிந்திருக்கிறார், ஆனால் இருக்கமான பாதை எடுக்காமல் நரகத்திற்கு செல்ல விரும்புகிறார். அவ்வாறு பிசாசின் பிள்ளைகள் இருக்கின்றார்கள்! அவனை விட்டு போகும் முன், அவன் தன்னுடைய எல்லா தொலைபேசி எண்களை எனக்கு கொடுத்து நான் எப்போது வேண்டுமானாலும் அவனை சந்திக்க சொன்னான். நீங்கள் பார்க்கிறீர்களா?
14நல்லது! இந்த பொருளை பற்றி இன்று காலை நான் பேச விரும்புகிறேன்: மீட்டளிக்கப்படுதல் என்பதின் அர்த்தம். ஆகவே நீதிமொழிகளின் புத்தகத்திற்க்கு நம்முடைய வேதாகமங்களை எடுத்துக்கொள்ளலாம். யோபுவின் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம், யோபு 42: 10 முதல் 12 வரை. யோபுவின் புத்தகத்தில் ஒரு பகுதியையும், தானியேலின் புத்தகத்தில் இன்னொரு பகுதியையும் நான் குறித்து வைத்துள்ளேன். நாம் அதை வாசிப்போம்: "யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்".
15முதலில், ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தின் நிமித்தம், தேவன் படைத்த அனைத்தும் மீட்டளிப்பிற்காக காத்திருக்கின்றது. மனிதன் ஒரு மீட்டளிப்பிற்காக காத்திருக்கின்றான்... விலங்குகள் மீட்டளிப்பிற்காக காத்திருக்கின்றன... மரங்கள் ஒரு மீட்டளிப்பிற்காக காத்திருக்கின்றன... ஆதியிலே, ஆதாம் தேவனாக இருந்தான். ஆதியாகமம் 2: 19 பிரகாரமாக அனைத்து உயிரினங்களையும் அவன் தான் பெயரிட்டான். மேலும் நாம் ஆயிர வருட அரசாட்சியில் தேவர்களாக இருப்போம். காலப்போக்கில் நம்முடைய நம்பிக்கை பல முத்திரைகள் பெற்றது.
16மோசே பேசியபோது, காரியங்கள் தோன்றினது, தண்ணீரும், மறைவானவைகளும் மோசேக்குக் கீழ்ப்படிந்தபோது,... யோசுவா பேசுவதையும், சூரியன் கீழ்ப்படிவதையும் ஆதாம் கண்டபோது நீங்கள் பார்க்கிறீர்களா? அது அவர்கள் கொண்டிருந்த நிலைக்கு அப்பால் சென்றார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆதாம் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட தேவ தூதர்களின் உணவான மன்னா வானத்திலிருந்து இறங்குவதை பார்த்தபோது, அவன் காத்திருந்த மீட்டளிப்பிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17அகராதியின்படி, மீட்டளிப்பு என்பது முதல் நிலைக்கு திரும்புவதாகும். மீட்டளிப்பு என்பது திரும்ப அளிக்கப்படுதல், மீளமைத்தல், அதன் முதல் நிலைக்கு திரும்புதல்... ஆனால் ஆவிக்குரிய ரீதியாக, அது அதை காட்டிலும் அதிகமானது. இருப்பினும் தேவன் அந்த வீழ்ச்சியை அனுமதித்திருந்தால், அது அவர் மீட்டளிப்பின் தேவன் என்று காண்பிப்பதற்காகவே. நோய், பலவீனம், மலட்டுத்தன்மையை தேவன் அனுமதித்திருந்தால்... அது அவர் மீட்டளிப்பின் தேவன் என்று காண்பிப்பதற்காகவே. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர் சாராளுக்கு ஒரு குழந்தையை மட்டும் கொடுக்கவில்லை, ஆனால் அவர் மறுரூபப்படுத்தினார், எனவே அபிமெலேக்கு ராஜா தொண்ணூறு வருடங்களுக்கும் மேலாக இந்த வயதான பெண்ணை இச்சித்தார், ஏனென்றால் அவளை மறுரூபப் படுத்தியவர் மீட்டளிப்பின் தேவன், சிம்சோனை இந்த விடுவிப்பாளனை இஸ்ரவேலுக்கு அனுப்பியபோது, வீழ்ச்சியடைந்த பிறகு, தேவன் அவனுடைய பெலனை மீட்டளித்தவிதமானது; சிம்சோன் இறந்தபோது, அவன் முன்பு கொன்று போட்டதை விட பல பெலிஸ்தர்களையும் கொன்றான் என்று வேதாகமம் கூறுகிறது.
18ஆனால் அப்போஸ்தலருடைய விசுவாசத்திற்கு நம்முடைய விசுவாசம் திரும்பும்போது யோவான் 6-ல் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்திற்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை என்பதை நினைவில் வையுங்கள். அப்போஸ்தல விசுவாசத்தை அல்ல, அனால ஒரு தீர்க்கதரிசன விசுவாசம். யூதர்கள் உயிருள்ள தீர்க்கதரிசியை தங்களுடைய முற்றிலுமானதாக கொண்டிருக்கிறார்கள்... [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19"சகோதரர் பிலிப்பு, தேவனுடைய கிருபையினாலே, நீங்கள் பிரசங்கிக்கப்பட்டவைகளையெல்லாம் நான் புரிந்து கொள்கின்றேன்... ஆகையால் அதை விசுவாசிக்கின்றேன்." என்று நீங்கள் கூறுகிறீர்கள். காரணக் காரியங்களை அறிந்து ஆராய்ந்த பிறகு, உங்கள் புத்திக் கூர்மையினால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, அதை நீங்கள் புரிந்து கொண்டு, பிறகு அதை விசுவாசித்தால் அது இனி ஒருபோதும் விசுவாசம் இல்லை... மேலும் மீட்டளிக்கப்படுதல் உத்தரவிடும் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்க வேண்டாம். இல்லை! நீங்கள் விசுவாசத்தின் மூலம் நம்பவில்லை ஆனால் புத்திக் கூர்மையினாலும் மற்றும் உங்கள் புரிந்துக் கொள்ளுதலின் அளவின் மூலம் நம்புகிறீர்கள. இது ஒரு அறிவார்ந்த நம்பிக்கை!
20ஓ! தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக! எனக்கு சில கேள்விகள் இருந்தன, நான் விசுவாசிக்கவில்லை ஆனால் எல்லாவற்றையும் எனக்கு விளக்கப்பட்ட பின்பு, இப்பொழுது நான் விசுவாசிக்கின்றேன்!". நீங்கள் செய்தியினால் ஜெயங்கொள்ளப்பட்டதினால் மற்றும் விவாதத்தின் குறைப்பாட்டினால் விசுவாசித்தால், அது தீர்க்கதரிசன விசுவாசம் அல்ல, ஆனால் அது அப்போஸ்தல விசுவாசம். இப்போது சரியான நம்பிக்கை தீர்க்கதரிசன விசுவாசம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21ஒரு தேவனின் பிள்ளை இவ்விதமாக, "சகோதரர் பிலிப்பு, அவை அனைத்தும் எனக்கு புரியவில்லை, ஆனால் நான் விசுவாசிக்கிறேன், நான் என்ன செய்ய வேண்டும்? என்று கூறுகிறான். "பிசாசின் பிள்ளை இவ்விதமாக "அதில் அநேக உண்மைகள் உள்ளன, ஆனால் சில குறிப்புகளை நாம் விவாதிக்க வேண்டும்! " என்று கூறுகிறான். இவன் ஒரு பிசாசின் பிள்ளை மற்றும் அவன் தோற்கடிக்கப்பட்டால், அவன் நம்புவான்! ஒருவன் நம்புகிறதினால் விசுவாசிக்கின்றான், மற்றவன் தோற்கடிக்கப்பட்டதினால் விசுவாசிக்கின்றான். நீங்கள் பார்க்கிறீர்களா?
22விசுவாசம் இருதயத்தின் ஆழத்திலிருந்து வருகிறது மற்றும் தலையில் இருந்து வருகிறதில்லை... அதனால்தான், வேதாகமத்தின் மாணாக்கர்களாக இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் அற்புதங்களை எதிர்பார்ப்பதில்லை. தேவன் தலையோடு ஈடுபடுவதில்லை ஆனால் இருதயத்தோடு ஈடுபடுகிறார். தேவன் புத்திக்கூர்மையோடு ஈடுபடுவதில்லை ஆனால் விசுவாசத்தோடு ஈடுபடுகிறார். வெளிப்பாடானது புத்திக் கூர்மையினால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை ஆனால் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவன் நம்முடைய புத்திக்கூர்மையோடு ஈடுபடுவதும் அதனோடு கிரியை செய்வதும் இல்லை ஆனால் நம்முடைய விசுவாசத்தோடு செயல்படுகிறார். நீங்கள் பார்க்கிறீர்களா?
23"என் தேவனே உனக்கு நெருக்கமாக இருக்கிறேன்!". என்ற ராகத்தில் "என்னால் கேட்க இயலாத போது புரிந்து கொள்ளாமல் ஏற்றுக்கொள்கின்றேன், நான் உம்மை அதிகமாக நேசிக்க விரும்புகிறேன்..." என்று பாடுவது நல்லது தான், ஆனால் அதனுடைய செயல்படுத்துதலை தேவன் காண்கின்றார். உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியை பின்பற்றாமல் நீங்கள் அந்தப் பாடலை பாடக் கூடாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24ஆனால் விசுவாசத்தால் பின்பற்றுவோருக்கு மட்டுமே மீட்டளிப்பின் வாக்குதத்தங்கள் இருக்கின்றன. தேவனின் பார்வையில், இந்த செய்தியை விசுவாசிக்கிறவர்கள், அதை புத்திக் கூர்மையினால் நம்புகிறவர்கள் அல்ல, ஆனால் விசுவாசத்தினால் நம்புகிறவர்கள். அவர்கள் தரிசனத்தில், ""நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்..." என்றார்கள். எப்படி? விசுவாசத்தின் மூலம்! இந்த விசுவாசத்தின் அடிப்படையில் இந்த சரீர மற்றும் ஆவிக்குரிய குழப்பத்திற்குள்ளாகவே, இந்த காலத்திலும் வரவிருக்கும் காலத்திலும் உங்களுக்கு மீட்டளிப்பானது எப்பொழுதும் முக்கியம் வாய்ந்தது!. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25திருச்சபையின் ஆரம்பத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு தூய்மையான வார்த்தை, ஒரு உண்மையான ஆவி, மற்றும் மகத்தான வல்லமையை அருளினார் ஆனால் பிசாசனவன் இறையியல், குறிச்சொல்லும் ஆவி மற்றும் மகத்தான வஞ்சனையின் வல்லமையை அதற்கு பதிலாக வைத்தான். தேவன் தாமே அவர் மீட்டளிப்பின் தேவன் என்று காண்பிக்க அதை அனுமதித்தார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26இப்போது நான் ஏப்ரல் 24, 1993 தரிசனத்திற்கு வர விரும்புகிறேன் ... இந்த மீட்டளிப்பின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு, இனி எந்த சபைக்கும் அவன் செல்லமாட்டான் என்று நாகமான் கூறினான், அவனுடைய எஜமான், சிரியாவின் ராஜாவும் ரிம்மோன் தெய்வத்தின் வீட்டிற்குள் நுழைய, அவன் கையில் சாய்ந்து இருந்தான். தேவனாகிய யெகோவா அதை அவனுக்கு மன்னிப்பாராக! நீங்கள் பார்க்கிறீர்களா?
27திரும்ப அளிக்கப்படுதலின் போது, ஆண்கள் மரங்களைக் போல காணப்பட்டனர். நாம் அதை தெளிவாக பார்க்க வில்லை. வேதாகமங்களைப் போல ஒரு அகராதியானது காணப்பட்டது... வேதாகமத்தைப் போன்று ஒரு கலைக்களஞ்சியம் காணப்பட்டது... லூயிஸ் செகண்டை ஒரு வேதாகமமாக நாம் பார்த்தோம்... ஜேம்ஸ் மன்னன் பதிப்பு ஒரு வேதாகமம் என காணப்பட்டது... டாப், ஸ்கோஃபீல்ட், தாம்சன், கொலோம்பே... வேதாகமங்களைப் போன்று காணப்பட்டது ஆனால் மீட்டளிப்பிற்க்குப்பின், நம்மால் தெளிவாகத் பார்க்க முடிகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?
28திரும்ப அளிக்கப்படுதலின் வேளையில், எந்த ஆவியும் அந்நியபாஷை பேசி பரிசுத்த ஆவியானவராக ஒரு சபையில் ஊழியம் செய்வதை நாம் பார்க்க முடிந்தது; ஆனால், மீட்டளிப்பிற்க்குப்பின், நாம் தெளிவாக பார்க்கிறோம். மீட்டளிப்பிற்க்கு முன்னர், கோட் சூட்டுகளில் இருந்த மாந்திரீக பூஜாரிகளை நாம் கண்டு அவர்களை "தீர்க்கதரிசிகள், மேய்ப்பர்கள், தேவனுடைய மனுஷர்" என்று அழைத்தோம் ஆனால் மீட்டளிப்பிற்கு பின் நாம் தெளிவாக காண்கின்றோம்! நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29லவோதிக்கிய காலத்தில் கண்ணுக்கு கலிக்கத்தை வேதாகமம் வாக்களித்திருக்கின்றது ஆகையால் நாம் தெளிவாகக் காண முடிகிறது, மற்றும் அதை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்... நாகமான் நடு ராத்திரியின் சத்தத்தை புரிந்துக் கொள்ளவில்லை, ஆனால் அவன் மீட்டளிப்பின் ஞானஸ்நானத்தை பெற்றபோது அவனுடைய மனது திறக்கப்பட்டு இந்த செய்தியின் ஆழத்தை அவன் புரிந்துக் கொண்டான்…
30நம்முடைய விசுவாசம் தனியாக மனித ஞானத்திற்கு தூரமாக, தேவன் செய்கிறவற்றை ஏற்றுக்கொள்ளும்போது, மீட்டளிப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும். நம்முடைய புத்திக்கூர்மையோ அல்லது நம்முடைய காரணக் காரியங்களை அறிதலோ அல்லது நம்முடைய புரிந்துக் கொள்ளுதலோ அல்ல, ஆனால் நம்முடைய விசுவாசம்.
31பூமிக்குரிய காரியங்களுக்காக மட்டுமே நாம் கொண்டிருக்கும் புத்தியையும் ஞானத்தையும் தேவன் கொடுத்திருக்கிறார். மேலும் இரட்சிப்பின் திட்டத்தோடு நாம் அதை கலந்து விடக்கூடாது. தேவனின் வார்த்தை தேவனுடைய வெளிப்பாட்டினால் ஒரு தீர்க்கதரிசி மூலம் வந்து விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தானியேல் 12: 4-ன்படியாக மகத்தான பிரன்ஹாமிஸ்டு அறிவின் அடிப்படையில் அல்ல. ஆனால் விசுவாசத்தின் அடிப்படையில். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32நடையிலே காரணக்காரியங்கள், ஞானம் மற்றும் புத்திக்கூர்மை அருவருப்பானது. சிறிது காலத்திற்கு தேவனால் அதை சகித்துக்கொள்ள முடியும் ஆனால் நம்முடைய எல்லா நடையும் அநேக எகிப்திய அறிவை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அது தவறு. புரிந்துகொள்ளுதல் மற்றும் புத்திக்கூர்மையுடன் நடக்கும் எவரும் ஒரு தீர்க்கதரிசியின் கருத்தை பற்றிக்கொள்ளவில்லை. இருப்பினும், அழைப்பு மற்றும் பணிநியமத்தின் அடிப்படையில் நம்முடைய விசுவாசமானது தூண்டப்பட வேண்டும். உங்களால் காண முடிகிறதா? எல்லாவற்றிக்கும் ஒரே தரமாக இந்த விசுவாசமானது உற்பத்தியாக வேண்டும். தேவன் சரியாக ஆரம்பத்திலேயே அதை கொடுத்திருக்க வேண்டும்.
33எரேமியா, ஏசாயா, ஆமோஸ், ஒபதியா, ஆகாய், செப்பனியா, ஓசியா, யோவேல், மற்றும் பிற பெயர்கள் உங்களுக்கு எதை நினைப்பூட்டுகிறது? அற்புதங்களையா? இல்லை! ஒருவேளை அவர்கள் செய்திருக்கலாம், ஆனால் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றும் அறிக்கையில், கூட அது அறிவிக்கப்படவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
34அப்போஸ்தலர் 26 ல், பெஸ்துவிற்கும் அகிரிப்பா ராஜாவுக்கும் முன்பாக பவுல் ஜாதிகளுக்கு முன்பாக தோன்றி தன்னை வழங்கினபோது அவர் எதை குறித்து பேசினார்? இயேசுவின் ஊழியம் எவ்வளவு மகத்தானது என்பதை அவர் காட்ட முயன்றாரா? இல்லை! எகிப்திலிருந்து வந்த யூதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதைக் காட்ட அவர் முயற்சி செய்தாரா? இல்லை! அப்போஸ்தலர் 14: 8-ல் லீஸ்திராவில் அவருடைய அற்புதம் எவ்வளவு மகத்தானதாக பிறவியிலிருந்து முடமாக இருந்தவன் நடந்த பொழுது அவர்கள் அவருக்கு காளைகளை பலி செலுத்த விரும்பியதை அவன் காட்ட முயன்றானா? இல்லை சகோதரர்களே! அவன் ஒரு காரியத்தை பற்றி பேசினான், பவுல் ஒரே ஒரு காரியத்தை பற்றி பேசினான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரே ஒரு காரியம்: தமஸ்குவின் சாலையில் அவனுக்கு உண்டான அனுபவம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35எப்படியாக பகல் வேளை வெளிச்சத்தில் ஒரு ஒளியானது அவனை சுற்றி பிரகாசித்து மற்றும் அவன் எப்படியாக விழுந்து ஒரு சத்தமானது அவனிடம் ஹெபாரிக் மொழியில் வானத்திலிருந்து பேசி, அவனை பணி நியமனம் செய்ததை பற்றி காண்பித்தான்... மேலும் அவன் 19 ஆம் வசனத்தில், "அகிரிப்பா ராஜாவே, நான் பரலோகத் தரிசனத்துக்குக் கீழ்ப்படியாமற்போகவில்லை" என்று சொல்லி முடித்தான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால், அவனுக்கு செவிக் கொடுப்பவர்களுக்கு அது ஒன்றையும் அர்த்தங்கொள்ளவில்லை ஏனெனில் அவர்கள் தீர்க்கதரிசியின் கருத்தை கொண்டிருக்கவில்லை.
3624-ம் வசனத்தில் பெஸ்து இவ்வாறு சொன்னான்: "இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்." நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் இப்படியாக : ஆனால் அவன் என்ன பேசுகிறான்? சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசுவதற்குப் பதிலாக, அவனை சுற்றிலும் வெளிச்சம் இருப்பதைப் பற்றி அவன் நமக்கு சொல்கிறான். " என்றார்கள். ஆனால், சகோதரர்களே, கூர்ந்து கவனிக்கவும்! கவனியுங்கள்! வசனம் 27 ல் அகிரிப்பா ராஜாவிடம் பவுல் என்ன கேள்வி கேட்டான்?
37பவுல் இவ்விதமாக "அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான்..." பவுல், தான் ஒரு தீர்க்கதரிசியின் அழைப்பைக் கொண்டிருக்கிறான் என்பதும், மோசே எரியும் முற்செடிக்கு முன்பாக, கொண்டிருந்ததை போன்ற இந்த அழைப்பின் அடிப்படையில் அவனுக்கு செவி கொடுக்கும் அனைவரும் அவனை நம்ப வேண்டும் என்பதாகும். தீர்க்கதரிசிகளில் அகிரிப்பா ராஜா விசுவாசம் கொண்டிருந்தால், இந்த அழைப்பானது தேவனுடைய தீர்க்கதரிசியின் அழைப்பாகும் என்று அவன் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
38தேவன் மோசேயிடம், "போ! என்று சொன்ன பொழுது, மோசே எகிப்தில் தன் சகோதரர்களுடன் இல்லை; அவர்களை வெளியே கொண்டு வருவதற்காக அவன் எகிப்த்திற்கு சென்றான். அவன் ஒரு தீர்க்கதரிசி. தேவன் வில்லியம் பிரன்ஹாமை நோக்கி, "மது அருந்த வேண்டாம், புகைக்க வேண்டாம், பெண்களால் உன்னை நீ தீட்டுப் படுத்த வேண்டாம்" என்று சொன்னபோது அவன் ஒரு கிறிஸ்தவன் அல்ல, ஆனால் அவர்களை வெளியே கொண்டு வர எகிப்த்திற்கு சென்றான்.
39தேவன் என்னை நோக்கி, "போ! என்றார். நான் ஒரு கிறிஸ்தவன் இல்லை பின்னர் உங்களை வெளியே கொண்டுவரும் படியாக எகிப்த்திற்கு சென்றேன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?.இவ்வாறு தேவன் தம்முடைய மகத்தான தீர்க்கதரிசிகளை எழுப்புகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களை பெறும்படி ஜெப ஆலயங்களுக்கு செல்லவில்லை. மேலும் அது தான் ஏற்கனவே ஒரு பெரிய மெத்தடிஸ்ட் பிரசங்கியாக இருந்த ஏவால்ட் ஃபிராங்க்கிற்கு வேலை செய்யவில்லை.
40மல்கியா 4, நம்முடைய விசுவாசம் யூதர்களுடையதாக திரும்பும் என்று கூறுகிறது, இது சில பார்வோனின் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, ஆனால் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியின் அடிப்படையை கொண்டதாக இருக்கின்றது. இதை தான் பிரன்ஹாமிஸ்டுகள் புரிந்துக் கொள்ளவில்லை. ஒரு தீர்க்கதரிசி அவர்களை பாபிலோனிய மேய்ப்பர்கள் மற்றும் பாரோனின் நடப்பாட்சி முறையிலிருந்து கொண்டு வந்த மாத்திரத்திலே அவர்கள் அதற்குள்ளாக சென்று மீண்டுமாக ஐஸ்வர்யமான, , புத்திசாலித்தனமான, இன்னும் புத்திசாலித்தனமான மேய்ப்பர்களாக அவர்கள் மீது நிலைநாட்டினர். நீங்கள் பார்க்கிறீர்களா?
41ஆனால் தேசங்கள் தீர்க்கதரிசியை காட்டிலும் அவர்களை மனித அறிவினாலும் வலிமையினாலும் வழி நடத்தும் மேய்ப்பர்களை நேசிப்பதற்கான காரணமானது அவர்கள் எப்பொழுதும் தங்கள் மேல் பேரரசர்கள், பார்வோன்கள், ராஜாக்கள், ஜனாதிபதிகள் மற்றும் கிராம தலைவர்களை தங்கள் மீது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஞானமும் அறிவார்ந்த ஜனங்கள். அவர்கள் மேப்பரின் வகையினர். அவர்கள் ஒரு தீர்க்கதரிசியின் கருத்தை கொண்டிருக்கவில்லை, ஆனால் அது தேவனுக்கு முன்பாக அவர்களுக்கு அது ஒரு காரணமாக இருக்க முடியாது. மேலும் அவைகள் சபைகளுக்குள்ளாக கொண்டு செல்லப்பட்டது.
42இருப்பினும் தேவன் பூமிக்கு அனுப்பிய மகத்தான ஆசாரியன் அது ஆரோன். ஆரோன் எபேசியர் 4: 11-ல் உள்ள நான்கு ஊழியங்களுக்கு மாதிரியாக இருக்கின்றான் அவை அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன் மற்றும் போதகன். ஆனாலும் தீர்க்கதரிசி செய்தியாளனாகிய மோசே கடந்த பிறகு ஆரோன் ஒரு பொன் கன்றுக்குட்டியை எழுப்பினான். மேலும் உங்களை விட அதிகமான ஆவிக்குரிய யூத ஜனங்கள் அதற்கு பணிந்து கொண்டார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு வெளியே, அவைகள் பொன் கன்றுக்குட்டிகள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
43தீர்க்கதரிசி சாமுவேலுக்கு பதிலாக யூதர்களும் கூட ஓசியா 12:14 ல் கூறுகிறபடியாக "கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்" அதை மறந்து விட்டு ஒரு ராஜாவை விரும்பினார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே தான் எகிப்திலிருந்து வெளியேரின அந்த ஆயிரக்கணக்கான யூதர்களை தேவன் அழித்துப்போட்டார் மற்றும் அவர்களுடைய இடத்திலே, அவர்களுடைய சொந்த பிள்ளைகள் பிறந்து, ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியின் மேற்பார்வையின் கீழ் வளர்ந்தனர். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
44இஸ்ரவேலின் மீட்பின் தொடக்கத்தில், தூதன் மோசேயிடம் தோன்றினான்! வேதாகமத்தின் நடுப்பகுதியில், தேசங்களின் மீட்பின் தொடக்கத்தில், தூதன் பவுலுக்கு தோன்றினார், வேதாகமத்தின் முடிவில், தூதன் இங்கே மீண்டுமாக தோன்றினார். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அது கச்சிதமாக உள்ளது!
45முதலாவதாக, மீதியானியரிடமிருந்து வெளியே, யூதர்கள் மத்தியில் இல்லாமல் மோசேயை காட்சியை பொருப்பில் எடுக்க அழைத்தார். வேதாகமத்தின் மத்தியில், தேவன் கிறிஸ்தவன் அல்லாத பவுலை, பரிசேயர்கள் மத்தியிலிருந்து அழைத்தார். மேலும் இறுதியில், அவர் அதை மீண்டும் செய்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? தன் வயலில் உழுதுக் கொண்டிருந்த எலிசாவை அழைத்தார், தன் மந்தையை காத்துக் கொண்டிருந்த ஆமோசை அழைத்தார். நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு அதை நம்ப வேண்டும்.
46யோசுவாவும் காலேபையும் போல, நாம் பார்க்காமலும் கேட்க்காமலும் விசுவாசித்தோம். தேவன் அத்தகைய விசுவாசத்திற்கு வெகுமதியை கொடுக்க மாட்டாரா? அவர் கொடுப்பார்! ஏனென்றால் அது தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின் விசுவாசம், அது காலத்தில் ஜெயங்கொள்ளுகிறவர்களின் விசுவாசம். நாம் தீர்க்கதரிசியின் ஆவிக்குரிய சந்ததியாக இருக்கின்றோம். உயிர் வாழும் தீர்க்கதரிசியின் மூலம் தேவனுடைய ஆட்சியின் கீழ் கருத்தரிக்கப்பட்டோம்.
47பரலோக கானானை மறுபடியும் மீட்டளிக்கும்படியாக யோர்தானின் தண்ணீரைக் கடக்க தேவன் ஒரு தீர்க்கதரிசியை நமக்கு அனுப்பினார். நம்முடைய பிதாக்கள் அக்கரையில் தங்கிவிட்டார்கள், எகிப்தும், அதினுடைய பார்வோன்களும் அவர்களைப் பிடித்துக்கொண்டனர். ஆனால் நாம் ஜெயங்கொண்டோம் ஏனெனில் நாம் தீர்க்கதரிசன விசுவாசத்தை கொண்டுள்ளோம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
48சகோதரர்களே, அப்போஸ்தல விசுவாசத்திற்கு மேலாக ஒரு விசுவாசம் இருக்கிறது, அது தீர்க்கதரிசன விசுவாசம். 1 யோவான் 1: 1 முதல் 3 வரை அப்போஸ்தல விசுவாசத்தைப் பற்றி பேசுகிறது: "... *நீங்களும்* எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்". அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமா ஆவான். பெரோயா ஊரானை போலவே தோமா மிகவும் ஆவிக்குரிய அப்போஸ்தலனாக இருந்தான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
49ஆயினும் தீர்க்கதரிசன விசுவாசம் இப்படியாக கூறுகிறது, "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்...". நீங்கள் பார்க்கிறீர்களா? அப்போஸ்தல விசுவாசம் இப்படியாக கூறுகிறது: "... *நீங்களும்* எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்". [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] …
50[...] நல்லது! இப்போது நான் சொல்ல விரும்புகிறதாவது கத்தோலிக்க அல்லது சுவிசேஷ சபையில் இருந்தபோது எகிப்தில் யோசேப்பு என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தாலும், மீட்டளிப்பிற்கான தேசமாக கானான் இருந்தது! நீங்கள் பார்க்கிறீர்களா? சகோதரர்களே, கானான் தேசம் யூதர்களின் நிலமாக இருந்ததை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், தேவன் அதை வெறுமனே யூதர்களுக்கு மீட்டளித்து தந்தார். ஆமென்!
51ஆதியாகமம் 17: 8-ல் தேவன் ஆபிரகாமிடம், "நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்." நீங்கள் பார்க்கிறீர்களா? மற்றும் ஆதியாகமம் 35:12 ல், யாக்கோபுக்கு தேவன் அதை கூறினார்.
52ஆனால் இப்போதும், நான் இதை கூற விரும்புகிறேன் சகோதரரே, எகிப்திற்கும் கானான் தேசத்தை மீட்டளிப்பதற்கு நடுவே அங்கே ஒரு பாலைவனம் இருந்தது; மற்றும் மத்தேயு 25: 6 மற்றும் நாம் நம்புகின்ற மீட்டளிப்பிற்கு இடையே, வெளிப்படுத்துதல் 12:14 இன் வனாந்தரம் உள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா? எகிப்தில் பூமியிலுள்ள எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் பெற முடியும், ஆனால் அழைப்பின் சத்தத்தின்போது நாம் புறப்பட்டு போக வேண்டும். இது வெளிப்பாட்டின் மூலம் தான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
53கடைசியாக, 1993 இன் தரிசனத்தில், ஜனங்கள் இவ்வாறு சொன்னார்கள் என்பதை நான் கூற விரும்புகிறேன்: "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பார்க்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் , ஏனென்றால் தேவன் தந்தது எதுவோ அதை பிசாசு பறித்துக்கொண்டான், அவை இப்பொழுது உம்மிடத்தில் மீட்டளிக்கப்பட்டுள்ளது"
54இது என்ன? முதலாவதாக உண்மையான விசுவாசத்தின் மீட்டளிப்பானது வாசிக்கின்றவர்களின் உரிமையாக நீதிக்கு ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது. அது தேவனுக்கு இடத்தை தேவனுக்கும் மனிதனுடைய இடத்தை மனிதனுக்கும் கொடுக்கின்றது. எனவே தேவன் பூமிக்கும் மனிதனுக்கும் என்ன கொடுத்தாரோ மற்றும் அவைகளை பிசாசு இழக்க செய்தவைகளோ, இப்பொழுது அவர்களுக்கு மீட்டளிக்கப்படுவதாக. நீங்கள் பார்க்கிறீர்களா? அது அதினுடைய உண்மையான உரிமையாளரான தேவனிடம் திரும்பியது, ஆனால் இப்போது அது பூமிக்கு மீட்டளிக்கப்பட்டது. நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
55தேவன் சபைக்கு என்ன கொடுத்தாரோ மற்றும் பிசாசு அவளை இழக்க செய்தது எதுவோ, இப்பொழுது அவளுக்கு மீட்டளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அவள் இந்த உண்மையான விசுவாசத்தை கண்டுபிடிக்க வேண்டும். தேவன் நமக்கு ஆசீர்வாதங்களாக எதை கொடுத்தாரோ மற்றும் நம்மிடத்திலிருந்து எதை பிசாசு எடுத்தானோ, இப்போது நமக்கு மீட்டளிக்கப்பட்டிருக்கின்றது, உயிருள்ள சபையாகிய உங்களைத்தான், நீங்கள் பார்க்காமலும் கேட்க்காமலும் விசுவாசத்தினால், "தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற அனைத்தையும், பிசாசு உங்களிடத்திலிருந்து எடுத்துக் கொண்டவைகளும், இப்பொழுது உங்களிடத்திற்கு மீட்டளிக்கப்பட்டிருக்கின்றது." [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
56இப்போது நாம் ஜெபிக்கலாம்... ஒ மோசே, எலியா, வில்லியம் பிரான்ஹாம் மற்றும் காக்குவ் பிலிப்புவின் தேவனே! நான் மீட்டளிப்பை பிரசங்கிக்கும் பொழுது அது மூன்று முறையாகின்றது மேலும் இப்பொழுது தான் அதை அணுகுவதாக நான் உணர்கிறேன்! இது எங்களுக்கு ஒரு மூல பொருளாக உள்ளது, ஏனென்றால் இயற்கை மற்றும் ஆவிக்குரிய முழு வளிமண்டலமும் மீட்டளிப்பிற்காக காத்திருக்கிறது. அதற்கு காத்திருக்காத ஒரு படைப்பும் இல்லை! மீட்டளிப்பிற்காக நீர் சிலுவையில் மரிக்க வந்தீர் ஏனென்றால் மீட்டளிப்பானது மனிதனின் தெய்வீகமும் நித்தியமும்!
57ஆண்டவரே, இந்த மீட்டளிப்பானது இங்கே மற்றும் உலகம் முழுவதிலும் இந்த செய்தியை விசுவாசிக்கின்ற அனைவரோடும் இந்த காலையிலே துவங்குவதாக. அவர்கள் உம்முடைய கிருபைக்கு பாத்திரவான்கள் ஏனெனில் அவர்கள் பார்க்காமலும் கேட்காமலும் விசுவாசித்தார்கள். இந்த மீட்டளிப்பானது மலட்டுத்தன்மை, தோல்வி, வியாதிகள் மற்றும் வறுமையின் சுவர்களை உடைப்பதாக! எங்களுடைய ஜீவியங்களில் கூடாது என்று சாத்தான் எழுப்பின சுவர்களை இந்த மீட்டளிப்பானது உடைப்பதாக. இந்த செய்தியை விசுவாசிக்கும் அனைவருக்கும் மீட்டளிப்பின் அர்த்தத்தை அனுபவிப்பார்களாக.
58எங்களுடைய மாம்சப் பிரகாரமான, சரீரப் பிரகாரமான, சமுதாய மற்றும் ஆவிக்குரிய ஜீவியங்கள் மீண்டுமாக செழிக்கட்டும் ஏனெனில் நீர் மீட்டளிப்பின் தேவன். எங்களுடைய ஜீவியம் மற்றும் நிலைகள் மூலமாக, மீட்டளிப்பிற்கு உணர்வு அளிப்பதற்கு உம்மிடத்தில் வல்லமையுண்டு! இதை எங்களுக்கு அருளும் மேலும் கனமும், மகிமையும் மற்றும் மகத்துவமும் என்றென்றைக்கும் சதாகாலமும் உம்முடையதாவதாக, ஆமென்!