en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 59 (Kc.59) : "இந்த மணி வேளையின் செய்தி" என்பதின் அர்த்தம்
(மே 14, 2006, ஞாயிற்றுகிழமை காலை அன்று அபோபோ, ஆபிட்ஜான் - ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 "இந்த மணி வேளையின் செய்தி" என்றால் என்ன? நான் இன்று இதைப் பற்றி பேச விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன், நான் பல குறிப்புகளை கொண்டுள்ளேன். பொதுவான பாவ அறிக்கையை நடத்தும் எவரும் ஆவிக்குரியவராக இருக்க வேண்டும். ஏனெனில், எதிர்ப்பு மற்றும் பிற விஷயங்களில், அவர் நிலத்தில் (ஸ்தானத்தில்) உள்ள நடுவர் போல கடைசி வார்த்தையை கொண்டுள்ளார்
2 வெளிப்படையான பாவ அறிக்கையின் மீதான தலையீடுகளுக்கு, இந்த தலையீடு சபையினுள்ள அனைவருக்கும் பக்தி விருத்திக்கேதுவாக இருக்கும் பொழுது ஒருவர் தலையீடு செய்யலாம் . அப்படி இல்லையெனில் சபை முடிந்த பிறகு ஒருவர் அந்த சகோதரனிடத்தில் சென்று ஆலோசனை கூறலாம். ஒரு சகோதரரின் வழக்கமான தலையீடுகள் சபைக்கு பக்தி விருத்தி உண்டாக்கவில்லையெனில், அவர் என்றென்றைக்கும் மௌனமாக இருக்கட்டும்.
3 மேலும், நான் 1884 ன் டார்பியின் ஆங்கில பதிப்பைக் பெற்றேன், வெளிப்பாடு 12:18 ல் என்ன கூறப்பட்டுள்ளது என்று நேராக பார்த்தேன். வெளிப்படுத்துதல் 12 ஆம் அதிகாரத்தின் 18 ஆம் வசனத்தில் வசனம் ஒன்றுமில்லை என்று நான் கண்டேன் மற்றும் வெளிப்படுத்துதல் 13 முதல் வசனமானது: ...
4 வெளிப்படுத்துதல் 13: 1-ஐ வாசிப்பதற்கு எனக்கு அனுமதி கொடுங்கள். "பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து மணி முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமங்களும் இருந்தன." இது இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: « Et je me tins sur le sable de la mer ; et je vis monter de la mer une bête qui avait dix cornes et sept têtes, et sur ses cornes dix diadèmes, et sur ses têtes des noms de blasphème ». ஜேம்ஸ் மன்னன், லூயிஸ் செகண்டு மற்றும் மற்றவர்கள் உரிமை கோருவதைப் போல் வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தில் 18-ஆம் வசனம் இல்லை, அல்லது " அது கடற்கரை மணலின் மேல் நின்றது ..." என்று எங்கும் இல்லை. இதைப் பார்ப்பதற்கு முன்பு நான் இங்கே : "நான் கடல் மணலின் மேல் நின்றேன். அது கடலிலிருந்து வருவதைக் கண்டேன் ... "என்று சொன்னேன். ஏனென்றால், எனக்குள்ளாக இருக்கும் ஆவியானவர் வேதாகமத்தின் ஆக்கியோனாக இருக்கின்றார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
5 நல்லது! "இந்த மணி வேளையின் செய்தி" என்றால் என்ன? இந்த காலையில் இதைக் குறித்து தான் நான் பேச விரும்புகிறேன்.
6 நல்லது! ஒரு நாள் தேவன் ஒரு மனிதனை மனிதகுலத்திற்கு அனுப்பினார். அந்த மனிதன் தான் நோவா. அவனுடைய பிரசங்கத்தில் அவன் என்ன சொன்னான்? எனக்கு அது தெரியாது. மோசே அதை அறியவில்லை! எரேமியா, சாமுவேல், ஏசாயா, வில்லியம் பிரான்ஹாம், ஜான் வெஸ்லி மற்றும் எல்லா தீர்க்கதரிசிகளும் அதை அறியாதிருந்தார்கள்!
7 நோவா சொன்னதை மோசே அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரால் தேவன் ஏன் வெளிப்படுத்தவில்லை? அது அவசியமில்லை என்பதால் அவர்கள் அதை செய்யவில்லை! மோசே பிரசங்கிக்கையில், நோவாவின் செய்தி அவருக்கு மதிப்பில்லாமல் இருந்தது, ஏனென்றால் வேறொரு தலைமுறை, வேறொரு வழி, வேறொரு தரிசனம், வேறொரு திட்டம்... நோவா புத்தகத்தின் செய்தியானது, எகிப்திலுள்ள யூதர்களுக்கு அது தேவைபடவில்லை, இன்று, மே 14, 2006, நமக்கு அது தேவைபடவில்லை... [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8 எனவே, அங்கு மோசே, சாமுவேல், ஏசாயா... இருந்தனர் நல்லது! ஏசாயாக்குப் பிறகு எரேமியா இருந்தார். எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தபோது யூதர்களின் வேதாகமத்தில் எத்தனை புத்தகங்களை கொண்டிருந்தது ?... [ஆசிரியர் குறிப்பு: சபையார்: "23 புத்தகங்கள்" என்கின்றனர்]. 23 புத்தகங்கள்! மிக நல்லது, நீங்கள் பிரசங்கத்தின் ஆவியில் இருக்கிறீர்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஆதியாகமம் முதல் ஏசாயா வரை, அது 23 புத்தகங்கள்.
9 நல்லது! எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தபோது யூதர்களுக்கு ஏற்கனவே 23 புத்தகங்கள் இருந்தது. ஆனால், யூதர்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்திருந்தால் இந்த 23 புத்தகங்கள் அவர்களுக்கு எப்போதுமே தேவைபட்டிருக்காது. ஆனால் எல்லா தீர்க்கதரிசன புத்தகங்களிலிருந்தும் மிக முக்கியமான புத்தகம் எரேமியாவின் செய்தியின் ஒரு குறிப்பிட்ட புத்தகமாக இருந்தது என்பதை கவனியுங்கள். இந்த புத்தகமானது மிகவும் போரடாப்பட்டு, யோக்கீம் ராஜாவினால் ஒரு முறை எரிக்கப்பட்டது, எரேமியாவை போன்று பரிகசிக்கப்பட்டது.
10 எரேமியா தாமே உயிரோடு இருந்து அனைவராலும் வெறுக்கப்பட்டார். அந்த நாட்களில், தேவனுடைய உயிருள்ள வார்த்தை ஒரு புத்தகத்தில் அடங்கியிருந்தது, தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கான இந்தப் புத்தகம் சாமுவேலின் புத்தகம், யாத்திராகமத்தின் புத்தகம், ஏசாயாவின் புத்தகம், மற்றும் பலவற்றைவிட மிக மதிப்புமிக்கதாகும். இதை தான் பிரன்ஹாமிஸ்டுகளுக்கு புரியவில்லை!
11 இன்றோ அல்லது இருபது ஆண்டுகளிலோ அல்லது நாற்பது ஆண்டுகளிலோ அல்லது இருநூறு ஆண்டுகளிலோ, வில்லியம் பிரான்ஹாமின் செய்தி எப்போதுமே ஆகாயின் புத்தகம் செப்பனியாவின் புத்தகம் போன்ற தேவனுடைய வார்த்தையாக இருக்கும், ஆனால் அது பிரயோஜனமற்றதாக, இனி ஒருபோதும் யாருக்கும் ஜீவனை கொடுக்க முடியாது! வில்லியம் பிரான்ஹாமின் புத்தகம், அது வேறொரு தலைமுறையின் நற்செய்தி. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 ஒரு வேளை கி.மு 606-ல் நாம் வாழ்ந்திருந்தால், அந்த ஆதியாகமம் முதல் ஏசாயா வரை 23- புத்தகங்கள் கொண்ட வேதாகமத்தை கொண்டிருந்தால், தேவனுடைய சித்தம் என்னவாக இருக்கும்? யாத்திராகமத்தின் புத்தகமோ, அல்லது எஸ்தரின் புத்தகமோ, அல்லது 2 சாமுவேலின் புத்தகமோ அல்ல. ஆனால் பூமியில் இன்னமும் உயிரோடு இருக்கும் குறிப்பிட்ட எரேமியாவின் ஒரு புத்தகம் மேலும் அவன் தன்னை ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக அமர்த்திக் கொண்டு வேதாகமத்தின் 23 புத்தகங்களை போல அதே தீர்க்கதரிசன மதிப்பைக் தன்னுடைய புத்தகம் கொண்டிருக்கின்றது என்றான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அந்நாட்களில் வேதாகமம் 23 புத்தகங்களை கொண்டிருந்தது.
13 ஜனங்கள் எரேமியாவை நோக்கி, "எங்கள் ஜெபக்கூடங்களை சாத்தானின் வலைகள் என்று நீ கூறினாய். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எங்களுடைய வேதாகம பதிப்புகளை மாந்திரீகம் என்று நீ கூறினாய், நாங்கள் ஏற்றுக்கொண்டோம். நீ எங்களுடைய பரிசுத்த ஆவி பிசாசாக இருக்கிறது என்று சொன்னாய், நாங்கள் ஏற்றுக்கொண்டோம், ஆனால் இம்முறை நீ ஒரு அந்திகிறிஸ்துவாக இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம் நீயே உன்னை திரை நீக்கி காண்பித்துள்ளாய்... ". என்றார்கள். அதற்கு எரேமியா அவர்களிடம், உங்களுடைய வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசிகள், உங்களுடைய பிதாக்களினால் இந்த விதத்தில் நடத்தப்பட்டார்கள், மேலும் நீங்கள் என்னை புரிந்துக் கொள்ளவில்லை என்றால் அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாது! ".
14 அவர்கள் எரேமியாவினிடத்தில் அந்த விதத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றவர்கள் அங்கே இருந்து தங்களுடைய கண்களில் கண்ணீர் சிந்தி, "ஒ தேவனே! நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக! ஏனென்றால் இன்றைய தினம் நான் வேதாகமத்தின் மதிப்பையும், நோக்கத்தையும் உணருகிறேன். இன்றுதான் நான் பார்க்கின்றேன், நான் விசுவாசித்த செய்தி கூட இன்று தான் என்னவென்று, அது என்னவென்று எனக்கு புரிகிறது! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. எரேமியா அவர்களை நோக்கி, "உங்களுடைய வேதாகமம் பூர்வகால சரித்திரம்! யாராவது ஒருவன் என்னில் விசுவாசம் கொண்டு, வேதாகமமே இல்லாமல் என்னைப் பின்பற்றுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான், ஏனென்றால் நானே உலகத்தின் ஒளியும், வானத்திலிருந்து உங்களுக்காக இறங்கி வந்த அப்பம்." என்றான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அதற்கு அவர்கள், "ஆனால் இந்த மனிதன் பைத்தியக்காரன்! நாம் ஏன் அவனுக்கு செவிக் கொடுத்து நேரத்தைக் வினாக்குகிறோம்? அவன் தன்னை நம்முடைய சகோதரர் ஏசாயாக்கு சமமாக்கிக் கொள்ள விரும்புகிறான்! "
15 எரேமியா பூமியில் காட்சியிலிருந்த சமயத்தில், ஏசாயாவின் தலைமுறை 31 வருடங்களுக்கு முன்னர் சென்றது என்பதை கவனியுங்கள், ஆனால் ஜனங்கள், மேலும் யூதர்கள் ஒரு தீர்க்கதரிசியின் கருத்தை கொண்டிராததை. போல நடந்துக் கொண்டார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஏசாயா மற்றும் எரேமியாவிலிருந்து, 71 ஆண்டுகளுக்கு முன்பு, 31 வயதில் ஒரு தலைமுறை.
16 எரேமியா அவர்களை நோக்கி: நீங்கள் என்னை நிராகரிக்கிறீர்கள் ஆனால் அவர் அனுப்பினவரை இனங்கண்டு கொள்வதே தேவனுடைய கிரியையாயிருக்கிறது என்று அறியுங்கள் என்றான். இன்று, அவர் அனுப்பிய ஒருவன், அது நீங்கள் சண்டையிட்டுக் கொன்டிருக்கிற எரேமியாவாகிய நான் என்றான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அதற்கு அவர்கள், "தேவன் அனுப்பிய ஒருவர் அது மோசே" என்று பதிலளித்தார்கள். அவர்களில் ஒருவன் : "நாங்கள் உன்னை நிராகரிக்கவில்லை, ஆனால் நீ ஒருவன் மட்டுமே சத்தியத்தை கொண்டிருக்கின்றவன் என்று சொல்ல வேண்டாம் என்றான்!"
17 மற்றொருவன், "மோசேயும் ஏசாயாவும் போல வேதாகமத்தில் உம்முடைய பெயர் "ஏரேமியா" என்று எங்கிருக்கிறதென எங்களுக்குக் காண்பியும் ஆகையால நாங்கள் விசுவாசிக்ககூடும் ஏனென்றால், கள்ள தீர்க்கதரிசிகள் வருகிறார்கள் என்று வேதாகமம் சொல்கிறது என்றான். அதற்கு எரேமியா அவர்களிடம், "உங்களுடைய அநேக தீர்க்கதரிசிகளுக்கு ஏதிராக இங்கே நான் ஒருவனாக இருக்கிறேன்; அவர்களுடைய சுவரொட்டிகள் சுவரில் ஒட்டப்பட்டிருக்கின்றது, மேலும் நீங்கள் என்னை கள்ள தீர்க்கதரிசி என்று நினைக்கிறீர்கள், ஆனால் வேதாகமம் அநேக கள்ள தீர்க்கதரிசிகள் இருப்பார்கள் என்று கூறுகிறது!"
18 இன்னும் சிலர் எரேமியாவை நோக்கி, "நாங்கள் உன்னுடைய செய்தியை விசுவாசிக்க விரும்பவில்லை, ஆனால் வேதத்தை விரும்புகிறோம். எங்களுடைய 23 புத்தக வேதாகமம் உன்னுடைய செய்தியை உறுதிப்படுத்துகின்றதா? உன்னுடைய செய்தியை எங்களுடைய வேதாகமத்தின் மூலமாக எங்களுக்கு காண்பி என்றார்கள்! வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளதைத் தவிர வேறு எதையும் நாங்கள் நம்புவதில்லை! தவறான தீர்க்கதரிசிகள் வருகிறார்கள் என்று மோசே கூறியிருக்கிறான்."
19 எரேமியா அவனுக்கு முன்னால் இருந்த 23 புத்தகங்களில் ஒன்றிலும் அவனுடைய செய்தியை உறுதிப்படுத்த தேடவில்லை. சாமுவேலின் புத்தகத்திலோ அல்லது லேவியராகமம் புத்தகத்திலோ அல்லது, ஏசாயா புத்தகத்திலோ அல்லது, அவனுக்கு முன்பாக வந்த ஒரு தீர்க்கதரிசியின் புத்தகத்திலும் அவன் தேடவில்லை.
20 வேதாகமத்தின் நோக்கமானது செய்திகளை உறுதிப்படுத்துவதோ அல்லது சபைகளில் பிரசங்கத்திற்கு உறுதுணை இருப்பதற்காக என்று நினைத்தால், நீங்கள் கிறித்துவத்தை பற்றி எதையும் புரிந்து கொள்ளவில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா?
21 ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் தலைமுறைக்கு கொடுங்கள், "வேதாகமம் நிறுவனங்கள்", "ஆயர் பள்ளி" மற்றும் அவை எல்லாம் அர்த்தமற்றதாக இருக்கும் மேலும் உலகத்திற்கு அவைகள் தேவையில்லை! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஒவ்வொரு புத்தகத்தையும் அதினுடைய தலைமுறைக்கு கொடுங்கள், நீங்கள் நிர்வாணமாக இருப்பதை காண்பீர்கள்! இது பைத்தியக்காரத்தனம்!
22 வேதாகமத்தில் "ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம்", என்று நீங்கள் பார்க்கும் பொழுது "ஏசாயா தீர்க்கதரிசியின் தலைமுறையின் புத்தகம்" அல்லது "தன்னுடைய தலைமுறைக்கென்று தீர்க்கதரிசி ஏசாயாவின் புத்தகம்" என்று அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
23 தற்போதைய கிறிஸ்தவம் அதன் குறிக்கோளை இழந்துவிட்டது! நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் மணி வேளையின் தீர்க்கதரிசியை நிராகரித்து, நீங்கள் விரும்பிய எதையும் செய்யலாம், உங்களுடைய அறையில் இயேசு, பேதுரு, மகதலேனா மரியாள், மரியாளின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளலாம், சிலுவைகளை சுவரில் தொங்கவிடலாம்... ஆனால் நீ ஒரு ஆள்மாறாட்டம் செய்பவன்! தேவன் உன்னை ஒரு மதிப்பில்லாத பை மற்றும் மூட்டைகளை கொண்டிருக்கும் ஒரு பைத்தியக்காரனைப் போல் காண்கின்றார்!
24 அவர்கள் எரேமியாவை நோக்கி: எங்களிடத்தில் இந்த விதமாக பேசுகிறதற்கு நீ பாவமற்றவனா? இப்போது நீ இரட்சகனா? மோசேயின் இடத்தை நீ எடுத்துக் கொண்டாயா? உன்னுடைய நாமத்தில் தான் இப்பொழுது எல்லா காரியமும் நடக்கின்றதா?" எரேமியா அவர்களை நோக்கி: நீங்கள் சுமக்கின்ற வேதாகமத்தினுடைய புத்தகங்களிலுள்ள தீர்க்கதரிசிகள் மற்றும் செய்தியாளர்களின் ஜீவியத்தை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் பூமியில் அவர்களை அறியாமலேயே இன்ன இன்ன ஒரு தீர்க்கதரிசி இருப்பதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் பிறப்பதற்கு முன்பே அவர்கள் மரித்துவிட்டார்கள். நீங்கள் பிசாசின் புத்திரர்களாக இருக்கிறீர்கள். நியாயத்தீர்ப்பில், அவர் அவர்கள் தங்களுடைய பிதாக்களை இனங்கண்டு கொள்வார்கள். ஆனால் நீங்களோ ஒட்டுக்கிளையும் வெளவால்களாக இருக்கிறீர்கள். நீங்கள் பிசாசின் புத்திரர்கள் என்றான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25 சத்தியம் என்னவென்று ஏரேமியா சொல்லிக் கொண்டு இருக்கும் வேளையில் அவர்கள் எரேமியாவை கொலை செய்ய முயன்றார்கள். அது இன்றும் அதே விதமாக தான் இருக்கின்றது. உன்னை நேசிக்கிற நானே, உனக்கு சத்தியத்தை கூறுகிறேன். நானே கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட்டு, சவிஷேச சபைகள் மற்றும் பிரன்ஹாமிஸ்டை கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்த தேடுகிறவன். உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியினால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26 நீங்கள் ஒரு பழைய பணத்தாள் மூலம் பல்பொருள் அங்காடிக்கு பொருட்கள் வாங்க செல்ல முடியுமா? 1960 இன் ஒரு பணத்தாள்? நீங்கள் பார்க்கிறீர்களா? இது ஒரு உண்மையான பணத்தாள் ஆனால் அதினுடைய நேரம் கடந்து விட்டது! அதை சந்தையில் இருந்து நீக்கிவிட்டார்கள்! உங்கள் கைகளில் நீங்கள் கொண்டிருந்தாலும் கூட, இந்த பணத்தாள் உண்மையானதாக இருந்தாலும் கூட, இன்று இந்த பணத்தாளை கொண்டு நீங்கள் வாங்க முடியாது. வேதாகமம் மற்றும் இரட்சிப்பும் இதே விதமாக தான் இருக்கின்றது. எல்லாவற்றையும் நீங்கள் வேதாகமத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும், ஒரு முனையிலிருந்து மறு முனை வரைக்கும அனைத்தும் பிசாசாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27 நேபுகாத்நேச்சார் எருசலேமை அழிக்க வந்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் அவர்களுடைய மணி வேளையில் தீர்க்கதரிசியான ஏரேமியாவினிடத்திற்கு வருவதற்கு பதிலாக எஸ்தர் உபவாசம், யோசபாத் உபவாசத்தை... வலியுறுத்தினார்கள். அவர்கள் ஒரு அஞ்ஞானியான சிதேக்கியா ராஜாவையும் கூட உபவாசம் இருக்க செய்தார்கள்! அவர்களால் சிதேக்கியா ராஜாவிற்கு தேவ ஆட்டுக்குட்டியைப் போல உடுத்துவிக்க அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள், அவர்கள் அவனை சாலமோன் மோசே, யோசேப்பு தாவீது ... மற்றும் இஸ்ரவேலர்கள் அறிந்த எல்லா நல்ல ராஜாக்களின் பெயர்களை சொல்லி அவனை அழைத்தார்கள் [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு அஞ்ஞான ராஜா!
28 அனைத்து கள்ளத் தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் தங்களுடைய புத்தகத்தில் இவ்விதமாக "சிதேக்கியா ராஜா தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான். ..." என்று எழுதினார்கள். ஆனால் எரேமியா தனது புத்தகத்தில் "சிதேக்கியா ராஜா தாவீதின் வழியை பின்பற்றவில்லை எழுதினான்..." ஆமென்! அது சரியாக ஆகாபிடம் இருந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா?
29 சாலமோனை போன்று ஆகாப் பல தகனபலிகளை செலுத்தினான். மற்றும் தீர்க்கதரிசிகள், " நீர் தாவீது என்று யெகோவா கூறுகிறார், போய் சென்று தாவீதை போன்று சண்டையிடும்!" என்றார்கள் மேலும் அதே தீர்க்கதரிசிகள் அவனுடைய மனைவி, ஒரு சீதோனிய யேசபேல் பற்றி தீர்க்கதரிசனமாக "நீ ஒரு எஸ்தர் என்று யெகோவா சொல்லுகிறார்!". என்றார்கள்.
30 எலியாவுக்குப் பிறகு, தேவன் எலியாவைப் போல் செல்வாக்கு இல்லாத ஒரு சிறிய தீர்க்கதரிசியாகிய மீகா என்னும் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஆனால் அவன் ஒரு விசேஷ தன்மையை கொண்டிருந்தான். மற்ற தீர்க்கதரிசிகளைப் உபயோகப்படுத்தின் தீய ஆவிகளை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார். எலியாவுக்குப் பின் வந்த சிறிய தீர்க்கதரிசி மீகா, "நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை" என்று ஆகாபுக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசனம் மாத்திரம் கொடுத்தான். நீங்கள் பார்க்கிறீர்களா?" அவனுடைய சிங்காசனம் உறுதியாயிருந்து, சமாதானத்தோடே ராஜாவாயிருந்தால், கர்த்தர் என்னைக் கொண்டு பேசவில்லை என்றான். அவ்வளவுதான்! இது தான் ஒரே அடையாளம்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31 நல்லது! இப்போது நாம் யோவான் ஸ்நானகனிடத்திற்கு மீண்டுமாக வருவோம்... நான் விரைவாக செல்வதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழக்கை நான் எடுக்கப் போகிறேன். நல்லது! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசங்கித்தபோது, ஆதியாகமம் முதல் மல்கியா வரை 39 புத்தகங்கள் இருந்தன. பிசாசின் பிள்ளைகளுக்கு, உலகின் முடிவு வரை, 39 புத்தகங்கள் மட்டுமே இருக்கும். அயினும் அந்த மணி வேளையில் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு தேவனின் உயிருள்ள வார்த்தையானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசங்கித்தபோது, தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மதிப்பு அளிக்கும் புத்தகமானது அவர்களுடைய 39-புத்தக வேதாகமத்தில் இல்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? இதை தான் இன்று நாம் சந்திக்கிறோம்.
32 ஏசாயா தீர்க்கதரிசியின் காலத்தில் உலகமானது முடிவடைந்திருந்தால், வேதாகமமானது ஒருநாள் 23 புத்தகங்களை தாண்டிவிடும் என்று யூதர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உலகமானது யோவான் ஸ்நானகனுடன் முடிவடைந்திருந்தால், வேதாகமமானது ஒருநாள் 39 புத்தகங்களை தாண்டிவிடும் என்று யூதர்களுக்கு தெரியாது. நியாயத்தீர்ப்பில் மனிதனுக்குத் தெரியாது, மேலும் மனுக்குலமானது நியாயத்தீர்ப்பிலே அது 66 க்கும் அதிகமான புத்தகங்களை தனக்கு முன்னால் காணும் என்பதை அறியாது.
33 வெளிப்படுத்துதல் 20:12 ல், யோவான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன் வந்த தீர்க்கதரிசிகளின் புத்தகங்களை அடையாளம் கண்டு, மற்றும் அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் செய்தியை தன்னுடைய காலத்தின் ஜீவப் புத்தகமாக அடையாளம் கண்டுக்கொண்டான். ஆதாமிலிருந்து தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் திறக்கப்பட்டன; மற்றொரு புத்தகமும் திறக்கப்பட்டிருந்தது; இது அவருடைய காலத்தின் தீர்க்கதரிசன புத்தகமாக இருந்தது. அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் புத்தகம். வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் இந்த தலைமுறைக்கு சென்று புத்தகங்கள் திறக்கப்படும், மத்தேயுவின் புத்தகம், எரேமியா, ஏசாயாவின் புத்தகங்கள், மற்றும், எனக்கு முன்னால் வந்த எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் திறக்கப்படும், மற்றொரு புத்தகம் திறக்கப்படும் இது உங்கள் தலைமுறையின் ஜீவ புத்தகமான தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் புத்தகம் . [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. "புத்தகங்கள் திறக்கப்பட்டன மற்றும் மற்றொரு புத்தகமும் திறக்கப்பட்டது..." நீங்கள் பார்க்கிறீர்களா?
34 ஆனால் தானியேல் 7 கூறுகிறதாவது, "சிம்மாசனங்கள் அமைக்கப்பட்டன... நியாயத்தீர்ப்பும் அமைக்கப்பட்டது, புத்தகங்கள் திறக்கப்பட்டன...". தானியேல் இறுதி தீர்ப்பைக் கண்டான், தானியேலின் ஆவி தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஆலோசனைக்குள் நுழைந்தது. தானியேல் என்றால் "தேவனுக்கென்று நியாயந்தீர்க்கிறவர்" என்பதாகும். மேலும் நான், காக்குவ் தானியேலின் மகன், நான் இறுதி தீர்ப்பைக் குறித்தும் மற்றும் அது எப்படி இருக்குமென அநேக முறை பேச வழி நடத்தப்பட்டிருக்கின்றேன். இது தான் தானியேலின் ஆவி. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35 ஒவ்வொரு தலைமுறையினரும் நியாயத் தீர்ப்பிற்க்கென்று ஒரு புத்தகம் கொண்டிருப்பார்கள்; ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு புத்தகம்; ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு புத்தகம்! தானியேல் அறியாத மொழியை மட்டும் தானியேல் காணவில்லை, ஆனால் தானியேல் இந்த எல்லாவற்றையும் கண்டான், அவனுடைய ஆவி பூமிக்கு திரும்பும்போது, பூமி அதற்க்குறியதை பெறுகிறது! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
36 ஆடவர்களே, சீமாட்டிகளே, உங்கள் பழைய நம்பிக்கைகள் மற்றும் புத்திக் கூர்மையான மூட்டைகள் மற்றும் உங்களுடைய காரணக் காரியங்களை விட்டு விட்டு நீங்கள் மத்தேயு 25 ஊழியத்தின் மூலம் எலியா, தானியேல் மற்றும் இயேசு கிறிஸ்துவின் ஆவி எதையும் விளக்காமலே கிரியை செய்கின்றதை நீங்கள் பார்ப்பீர்கள். உங்களுடைய இரட்சிக்க கூடியது அல்லது உங்களை கண்டனம் செய்யக் கூடியது உங்களுடைய மணி வேளையின் செய்தியில் இருக்கும்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
37 நோவாவின் நற்செய்தியானது அவனுடைய தலைமுறையினருக்கு மட்டுமே நியாயத்தீர்ப்பையும் மீட்பையையும் கொண்டிருந்தது. வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பிலே நோவாவின் சுவிசேஷத்திற்கு முன்பாக கோராகு மற்றும் தாத்தானின் மனநிலை எப்படி இருந்தது என்பதை குறித்து அவர்களிடம் கேட்க்கப்படாது. யூதர்கள் ஏசாயாவை துண்டு துண்டாக அறுக்கப்படும் போது டாமி ஆஸ்போர்ன் மற்றும் அவனுடைய குழுவினர் என்ன மனோபாவத்தை கொண்டிருந்தார்கள் என்று கேட்க்கப்படாது. வில்லியம் பிரான்ஹாமின் தலைமுறையினரிடம் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு பூமியில் பிரசங்கித்தபோது அவர்கள் என்ன மனநிலையைக் கொண்டிருந்தார்கள் என்று கேட்க்கப்பட மாட்டாது.
38 அப்போஸ்தலர் 19 ல், யோவான் ஸ்நானகனின் சீஷர்கள் பவுலைச் சந்திக்காமல் மரித்திருந்தால் அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இல்லாமல், மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தினால் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பவுலைச் சந்தித்தபோது மறு ஞானஸ்நானம் பெற மறுத்திருந்தால், அவர்கள் நேராக நரகத்திற்குச் சென்றிருப்பார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்! ஆகவே பிரன்ஹாமிஸ்டுகளுக்கு அதை விளக்குங்கள்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39 ஒவ்வொரு சந்ததியும் அதன் காலத்தின் செய்திக்கு முன்னதாக வந்துவிடும். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆயிர வருட அரசாட்சியில் ஒரு வேதாகமமானது வழங்கப்பட வேண்டுமானால்,அது 66 புத்தகங்களை விட அதிகமானதை கொண்டிருக்கும், மேலும் இந்த தலைமுறையினரின் தேவனுடைப தீர்க்கதரிசன புத்தகம் அதிலே சேர்க்கப்படும். இவ்வாறு 1906 முதல் 2002 வரை வில்லியம் பிரான்ஹாமின் ஒரு புத்தகம். ஆகையால் 1965 முதல் 2002 வரையான காலப்பகுதியில் ஒரு புத்தகமும் இல்லை, 2002 ஆம் ஆண்டிலிருந்து தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் புத்தகம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இது நம்முடைய தலைமுறைக்கு வேதாகமத்தின் புத்தகம். இது நம்முடைய தலைமுறையினருக்கான ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகம்.
40 ஒரு தீர்க்கதரிசியின் புத்தகத்தில் அடங்கியிருக்கும் செய்தியானது வேதாகமத்தை ஒளிரச் செய்கின்றது என்று நீங்கள் கேட்டிருப்பீர்கள், ஆனால் அது அதைவிட அதிகமாக இருக்கிறது. தேவன் வேதாகமத்தை ஒளிரச் செய்வதற்காக ஒரு செய்தியை அனுப்புவதில்லை! காக்குவ் பிலிப்புவின் புத்தகம் இது நம்முடைய தலைமுறைக்கு வேதாகமத்தின் ஒரு புத்தகம். [ஆசிரியர் குறிப்பு [சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஓ! மகிமை வாய்ந்த செய்தி! விலைமதிப்பற்ற ஒளி!
41 ஜான் ஹாஸ், மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி மற்றும் மற்றவர்களை பற்றி பேசும் பொழுது தேசங்களின் திருச்சபையின் வரலாற்றோடு வேதாகமம் அதே மதிப்பை கொண்டுள்ளது. எனவே 1520 ல் மார்டின் லூதர் என்ன செய்தார் என்பதை நான் விசுவாசித்து இரட்சிக்கப்பட முடியாது. இரட்சிக்கப்படுவதற்கு யாராவது ஒருவர் கடந்த காலத்தின் செய்தியை விசுவாசிக்க கூடுமானால், இரட்சிக்கப்படுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள செய்தியை விசுவாசிக்க கூடுமானால், இயேசு கிறிஸ்துவிற்கு முன்பாக பரிசேயர்கள் செய்தது போல நான் மோசே, எரேமியா அல்லது ஏசாயாவை விசுவாசிப்பேன். நான் நோவா, மோசே, ஏசாயா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரை விசுவாசிப்பேன் ஏனெனில் வேதாகமமே அதை அங்கீகரித்திருக்கின்றது.
42 மேலும் 2002 ம் ஆண்டிற்கு பிறகு, நடுராத்திரி சத்தத்தை நிராகரித்த பிறகு ஒருவன் வில்லியம் பிரான்ஹாமின் பிரசங்கத்தில் வசதியாக உட்கார்ந்து பின்னர் நியாயத்தீர்ப்பில் இரட்சிக்கப்பட்டால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசேயர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
43 பிசாசும் கூட நாம் நடுராத்திரியில் இருப்பதை அறிக்கையிடுகிறது, பிறகு ஒரு தேவனுடைய குமாரன் அதைக் குறித்து எப்படி அறியாதிருப்பான்? ஏவால்ட் ஃபிராங்க் நாம் நடுராத்திரியில் இருக்கின்றோம் என்று கூறுகிறான், அவனுடைய சுற்றறிக்கை கடிதங்கள் நடு ராத்திரியினுடையது என்று கருதப்பட வேண்டும். 1966 ஆம் ஆண்டு முதல் அவன் சுற்றறிக்கைகளை வெளியிட தொடங்கினான் என்பதை நான் வலியுறுத்துகிறேன். அலெக்சிஸ் பாரிலியர் இவ்விதமாக கூறுகிறான் : "நடுராத்திரியின் சத்தம் தேவனால் வழங்கப்பட்டு தேவனின் பல ஊழியர்களால் வெளிப்படுத்தப்படுகிறது ...".
44 நியாயத்தீர்ப்பில், ஆமோஸ் அல்லது எரேமியாவின் தலைமுறை வரும்போது, அது நோவா அல்லது வில்லியம் பிரன்ஹாமின் செய்தியால் நீயாயம் தீர்க்கப்பட வேண்டுமா? அவர்களுக்கு நோவா அல்லது வில்லியம் பிரான்ஹாம் யார் என்று தெரியாதபொழுது அது சாத்தியமாகுமா? நீங்கள் எப்படி, கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளே, நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடையவர்கள் என்று எப்படி உரிமை கோருவீர்கள்?
45 இயேசு கிறிஸ்துவினுடையவர்கள் என்று உரிமை கூறுகிறீர்கள் ஆனால் இயேசுகிறிஸ்து தாமே இஸ்ரவேல் வீட்டாரின் காணாமல்போன ஆடுகளுக்காக அனுப்பப்பட்டேன் என்று கூறியிருக்கிறார் மற்றும் மத்தேயு 23:34 மற்றும் 35-ல் அவர் தேசங்களுக்கு தீர்க்கதரிசிகளை வாக்களித்திருக்கின்றார். தேவன் யூதர்களுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகளை நிராகரித்து அவர்கள் மோசேயினுடைவர்கள் என்று உரிமை கோரினார்கள் அதேபோன்று நீங்கள் தீர்க்கதரிசிகளை நிராகரித்து அவரை உரிமை கோருகிறீர்கள்
46 வெளிப்படுத்துதல் 20:12 இன் பிரகாரமாக, வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பில், எந்த புத்தகத்தை கொண்டு தேவன் உங்களைத் நியாயந்தீர்ப்பார்? எரேமியாவின் புத்தகத்தை கொண்டா? நீங்கள் எரேமியாவின் தலைமுறையை சேர்ந்தவரா? பஷ்ஷுரை உனக்குத் தெரியுமா? நெரிஜாவின் குமாரனான பாருக்கை உனக்குத் தெரியுமா? யோஹிக்காமை உனக்குத் தெரியுமா? சிதேக்கியாவை உனக்குத் தெரியுமா?
47 வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பில், தேவன் உன்னிடம்: "நீ பூமியில் இருந்தபோது, இஸ்ரவேலின் அதிபதி சிதேக்கியாவா அல்லது ஏரியல் ஷரோனா என்று கேட்பார்? நீங்கள் பார்க்கிறீர்களா? உங்களை வஞ்சிப்பதை நிறுத்துங்கள்? எரேமியா தனது துன்பங்களில் நீ ஆதரித்தாயா அல்லது எதிர்த்து நின்றாயா? உன்னால் காண முடிகிறதா? எரேமியா, ஏசாயா அல்லது மற்றவர்களுடைய இந்த புத்தகங்களின் தலைமுறையோடு நீங்கள் செய்வதற்கென்று ஒன்றுமில்லை
48 நோவா, ஆபேல் மற்றும் ஏனோக்கின் நாட்களில் இருந்ததைப் போல எரேமியாவின் புத்தகம் வேதாகமத்தில் சேர்க்கப்பட முடியாமல் இருந்தது மேலும் இன்று தேவன் தன்னுடைய இலக்கை அடைய போகின்றார். அது மத்தேயு, லூக்கா அல்லது மற்றொன்றின் புத்தகமாக இருந்தாலும் அது ஒரே மாதிரி தான்! ஆனால் நியாயத்தீர்ப்பிலே ஒரு புத்தகமானது திறக்கப்பட்டு நீங்கள் இவ்விதமாக டாமி ஆஸ்போர்ன், ஏவால்ட் ஃபிராங்க், காக்குவ் பிலிப்பு போன்ற பெயர்கள் கேட்கும் போது, அது உங்களுக்கு எதோ ஒரு அர்த்தத்தை கொடுக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா?
49 தானியேல் 11 இன் பிரகாரமாக போப்பாட்சிமுறையை குறித்ததான பிரசங்கத்தை நீ கேட்க்கும் பொழுது, அல்லது 1இராஜாக்கள் 19-ன் பிரகாரமாக கடைசி வஞ்சனை குறித்த பிரசங்கத்தை நீ கேட்கும்போது, நீ இவ்விதமாக "பூமியில் நான் இதை கேள்விப்பட்டேன்" என்று சொல்வாய். ஆனால் நோவாவின் தலைமுறையை சேர்ந்தவன், "ஆனால் அது என்ன? பேசுகிறது யார்?" என்று கேட்பான். நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் அறியாமல் இருப்பான் ஆனால் நீங்கள் அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் குரல் என்று அறிவீர்கள்..
50 இதேபோல் நோவாவின் பேழையயை நீங்கள் பார்க்கையில், "இந்த பெரிய கப்பல் என்ன? என்று கேட்பீர்கள், அது ஒரு மீன்பிடி படகு அல்லது ஒரு சரக்குக் கப்பலாக இருக்க வேண்டும்!" என்று கூறுவீர்கள். ஆனால் நோவாவின் தலைமுறையிலிருந்த ஒருவர், வியப்புடன் "ஓ! இது நோவாவின் பேழை! என்பார்கள், நீங்கள் பார்க்கிறீர்களா ?
51 ஆதியிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கின்ற வார்த்தையாக இருந்தார். இதனால் எரேமியாவின் செய்தி எரேமியாவின் தலைமுறைக்கு ஜீவிக்கின்ற இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றது. நோவாவின் செய்தி நோவாவின் தலைமுறைக்கு ஜீவிக்கின்ற இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றது. ஆமோஸின் செய்தி ஆமோஸின் தலைமுறைக்கு ஜீவிக்கின்ற இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றது.
52 இயேசு கிறிஸ்து தாமே எருசலேமின் வீதிகளில் தன்னை பிரசங்கித்த போது பேதுரு, யோவான், யாக்கோபு, மகதலேனா மரியாள், எலிசபெத், சூசன்னா மற்றும் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அனைவரின் தலைமுறையின் ஜீவிக்கின்ற இயேசு கிறிஸ்துவாக உள்ளது. இன்று, நடுராத்திரி சத்தம் நம்முடைய தலைமுறையினருக்கு இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
53 சபைகளில் சாத்தானின் அனைத்து செயல்களுக்கும் இன்றைய ஜனங்களின் வாழ்க்கைக்கான தீர்வானது வேதாகமத்தின் ஒரு புத்தகத்தில் இல்லை ஆனால் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் புத்தகத்தில் உள்ளது.
54 "நான் அநேக சொப்பனங்களை காண்கிறேன், ஜோசப் கோல்மேன் போன்று எரிகின்ற அல்லது அக்கினி உணர்வுகளை உணர்கின்றேன், நான் இதை உணர்கிறேன், நான் அதை உணர்கிறேன்...". என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதற்க்கான தீர்வானது வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களிலோ அல்லது வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் இல்லை, ஆனால் காக்குவ் பிலிப்புவின் புத்தகத்தில் உள்ளது. இந்த தலைமுறையினருக்கு வேதாகமத்தின் மிக முக்கியமான புத்தகம் அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் புத்தகம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
55 நல்லது! தலையில் இருந்து கால்விரல்கள் வரை சில ஏரியும் உணர்வுகளை பிரன்ஹாமிஸ்டு ஜோசப் கோல்மேன் உணர்கிறான். ஊசி மற்றும் முள் குத்துவதை போன்றும் உணரப்படுகிறான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆரம்பத்தில், அந்த அக்கினி உணர்வுகளை உணர்ந்த பொழுது, அவர் நிச்சயமாக அது நல்லது என்று கண்டார், இதே காரியம் தான் திரளான ஜனத்தாரும் அது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றார்கள். ஆனால் காரியங்கள் கவலைக்கிடமாக ஆகும் பொழுது, அவருக்காக அவருடைய சீஷர்களிடத்தில் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்.
56 ஆனால் தலைவனாகிய நீயே, பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தால், சீஷர்கள் உன்னை எப்படி விடுவிப்பார்கள்? இருப்பினும் அந்த அக்கினி உணர்வுகள் எல்லாம் குறிச்சொல்லும் ஆவியின் சரீரப் பிரகாரமான பிரத்தியட்சங்களாக இருக்கின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் நடுராத்திரியின் சத்தத்தை கேட்ப்பதற்கு முன்பே இறந்துவிட்டாலும் கூட, அவன் தேவனுக்கு முன்பாக குற்றவாளியாக இருக்கிறான். ஏனென்றால் அவன் அவனுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியை தேட வேண்டியவனாக இருக்கிறான்.
57 இப்போது, மோசேயின் தலைமுறையை சேர்ந்த ஒருவன் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் ஜனக்கூட்டத்தோடு வந்து நின்றால், சுவாஹிலியை சேர்ந்த ஒருவன் ஆங்கிலேயன் மத்தியில் இருப்பது போல இருக்கும். ஐந்தாவது முத்திரை திறந்தபோது என்ன நடந்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? கிருபையின் காலத்திலிருந்த யூதர்கள், பூமியின் குடிகள் மீது தங்கள் இரத்தம் பழிவாங்கும்படி தேவனை கேட்டுக்கொண்டார்கள். அதின் பேரில் ஒரு நாள் ஏவால்ட் ஃபிராங்க் வில்லியம் பிரன்ஹாமிடத்தில், நாஜி ஆட்சியின் கீழ் கொல்லப்பட்ட அறுபது லட்சம் யூதர்களின் பாவத்திற்காக ஜெர்மனியின் மேல் தேவன் இன்னமும் பாவத்தை சுமத்துகின்றாரா என கேட்டான். , அதற்கான பதில் மிக எளிது! 1900 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களால் இரத்தம் சிந்தப்பட்ட யூதர்கள் அனைவரின் மீது தேவன் சுமத்தினாரெனில், பிறகு விதிவிலக்கு இல்லாமல், ஜெர்மனியர்களின் குற்றம் ஏவால்ட் ஃபிராங்க் மற்றும் அனைத்து ஜெர்மனியர்கள் மேல் உள்ளது. ஜெர்மனியில் தேவனின் குமாரன் ஒருவன் எனக்கு செவிக் கொடுத்தால், அவன் "தேவனே! எங்கள் மேல் இரக்கமாயிரும்! என்பான்." [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
58 "சகோதரர் பிலிப்பு, இந்த செயல்முறைக்கு உடன்படாத சபைகள் அங்கே உள்ளன!" என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆமாம்! கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறைவதற்க்கு ஒப்புக் கொள்ளாத சில யூதர்களும் அங்கு இருந்தனர், ஆனால் அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர் அல்லது 70 ஆண்டு விதிவிலக்கு இல்லாமல் நாடு கடத்தப்பட்டனர். இந்த சபைகள் தங்களுடைய உயிருக்கு ஆபத்து என்பதால் யூதர்களின் படுகொலைகளை எதிர்த்து நிற்கின்றனர். ஏவால்ட் ஃபிராங்க் வில்லியம் பிரன்ஹாமிடம் என்ன கேட்டிருக்க வேண்டுமெனில், இந்த சாபத்தை எதிர்கொள்ள ஜெர்மனி என்ன செய்ய வேண்டுமென கேட்டிருக்க வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா?
59 யூதர்கள் எல்லாரும் கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறையவில்லை, ஆனால் அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் ஜனங்களை திசைத் திருப்புகிறான், மேலும் அவன் வழித் தவறச் செய்து ஜனங்களின் மனச்சாட்சியை உறங்க வைக்கின்றான். முக்கியமற்ற காரியங்களினால் வில்லியம் பிரன்ஹாமின் செய்தி கடந்து சென்றது. அவன் எதோ ஒரு முக்கிய மற்ற காரியத்தைக் குறித்து பேசுகிறான், அது இல்லாமைக் குறித்தோ அல்லது ரோமைக் குறித்தோ அல்லது கத்தோலிககத்தை குறித்ததாக இருக்கின்றது. முக்கியமற்ற காரியங்கள! காலம் கடந்த விக்ஷயங்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
60 கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை தவறாக வழிநடத்த வல்லமை பெற்றவன் ஏவால்ட் ஃபிராங்க! ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெறுகிறான். இதே போன்று, இன்று ஏவால்ட் ஃபிராங்கும் வில்லியம் பிரன்ஹாமின் பிள்ளைகளும், பிரன்ஹாமிஸ்டு வலுசர்ப்பத்தின் அதிகாரத்தை இயக்குவதற்க்கான சரீரப் பிரகாரமான சாத்தானின் பிரத்தியட்சமாக இருக்கின்றார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? ஓ! அது ஒரு தீர்க்கதரிசனத்தை போன்று வந்தது. ஆமென்!
61 வேதாகமத்தில் புத்தகத்தில் இன்ன இன்ன . காரியங்கள் உங்களுடைய மணி வேளையின் செய்திக்கு முன்பு உங்களை நல்ல ஸ்தானத்தை கொண்டிருக்கும் என்றால், அது மிக நல்லது ஏனெனில் அது தான் வேதாகமத்தின் மிகப் பெரிய நோக்கம். ஒவ்வொரு தலைமுறையிலும் தேவன் என்ன செய்கிறார் என்பதை வேதாகமத்தைக் கொண்டு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தீர்க்கதரிசி எப்படி வருகிறான், எப்படி அவன் நடத்தப்படுகிறான், எப்படி எல்லாக் காரியங்களும் நடக்கிறது, அது தான் வேதாகமத்தின் நோக்கம்.
62 ஆனால் அப்படிப்பட்ட ஒரு நல்ல ஜீவியத்தை ஜீவித்துக் கொண்டு, ஒரு யூத தீர்க்கதரிசியின் செய்தியை தான் இரட்சிக்கப்பட நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நீங்கள் நினைத்தால், மீண்டும் யோசியுங்கள்! உங்களுடைய வேதாகமத்தை மீண்டும் படிக்கவும், பிறகு ஒரு யூதனுக்கு தீர்க்கதரிசியின் செய்தியானது அடுத்த தீர்க்கதரிசியின் செய்தியோடு வேறுபடுகிறது என்று நீங்கள் காண்பீர்கள். ஏனென்றால், அது ஒரே பரிமானமல்ல, அது ஒரே தலைமுறையல்ல, அது ஒரே ராஜாவும் அல்ல... நீங்கள் பார்க்கிறீர்களா?
63 தேவன் இஸ்ரவேலுக்கு தீர்க்கதரிசிகளை அனுப்பி இப்படி தம்முடைய தீர்க்கதரிசிகளின் முன்பாக இருக்கும் அவர்களுடைய நடத்தையைக் குறித்து இஸ்ரவேலை எப்படி நியாயம் தீர்க்க முடியும்? மேலும் தேசத்தின் ஜனங்களே, வெறுமனே பண்டைய சரித்திரத்தை விசுவாசித்து நீங்கள் இரட்சிக்கப்படுவீர்களா? ஆனால் நீங்களும் இரட்சிக்கப்படுவதற்கு, தேவன் உங்களுக்கு தீர்க்கதரிசிகளை அனுப்ப வேண்டும், மேலும் அவருடைய தீர்க்கதரிசிகளை நிராகரிக்காமல், துன்புறுத்தாமல், சிறையில் அடைக்காமல் அல்லது அவருடைய தீர்க்கதரிசிகளை கொலை செய்ய மாட்டீர்கள் என்று தேவன் காண்பார்.
64 ஆனால் வேதாகமத்தின் மூலம் மனிதகுலத்திற்கு தேவன் என்ன காட்ட விரும்புகிறார்? ஒன்றே ஒன்று மற்றும் அதே செய்தி: "உங்களுடைய நாளையும் அதனுடைய செய்தியையும் இனங்கண்டுக்கொள்ளுதல். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. யூதர்களுக்கு என்ன நடந்ததோ அதற்கு நன்றி, புறஜாதிகளின் எல்லா தலைமுறையினரும் வேதாகமத்தோடு அதனுடைய மணி வேளையின் உண்மையான தீர்க்கதரிசியை அடையாளம் கண்டுகொள்ள முடியும். வேதாகமத்தின் நோக்கம் இங்கேயுள்ளது.
65 ஆனால், உன்னுடைய தலைமுறையின் தேவனுடைய செய்தியையும், உன்னுடைய நாளின் சந்திப்பையும் இனங்கண்டுகொள்ள வேதாகமம் உங்களுக்கு உதவவில்லையெனில் பிறகு அதை கொண்டிருப்பது உபயோகமற்றது. மல்கியா அல்லது செப்பனியா அல்லது நசரேனாகிய இயேசுவின் சுவிஷேசத்தின் செய்தியில் நீங்கள் விசுவாசம் கொள்வது வேதாகமத்தின் நோக்கம் அல்ல. நீங்கள் பார்க்கிறீர்களா? ஏற்கனவே மரித்த ஒரு தீர்க்கதரிசியின் மேல் அல்லது வேதாகமத்தின் மீது அல்லது குர்ஆன் மீது உங்களுடைய விசுவாசத்தை அடிப்படையாக கொள்வது, அது சாத்தானை வழிப்படுதல். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
66 2400 ஆண்டுகளுக்கு முன்பு மல்கியா தீர்க்கதரிசி. எருசலேமின் தெருக்களில் நடந்த ஒரு வரலாற்று இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதில் ஒரு கேள்வி இருக்குமானால், அனைத்து சபைகளும் அவருடைய இரத்தத்திற்கு தூய்மையானதாக இருக்கும். ஒவ்வொருவரும் இவ்விதமாக, "நான் இஸ்ரவேலில் இருந்திருந்தால், சிலுவையில் அறையப்படும்படி யூதர்களுடனே நான் சேர்ந்திருக்க மாட்டேன்." என்பார்கள்
67 ஆனால் தலைமுறை தலைமுறையாக, தேவன் எப்போதும் மனுக்குலத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு, எருசலேம் வீதிகளில் உள்ள உயிருள்ள வார்த்தையை போன்று சோதிக்கின்றார். நீங்கள் பார்க்கிறீர்களா?
68 எலியா தீர்க்கதரிசியின் காலத்தில், எலியாவிற்கு முன் வேதாகமம் கூறிய எல்லாவற்றையும் நிராகரித்து நியாயப்பிரமாணங்களையும் தீர்க்கதரிசிகளையும் பின்பற்றுவதற்கு மாறாக, நீங்கள் விசுவாசித்து எலியாவை பின்பற்றுவதற்கு ஏதுவான காரியங்களைச் செய்வது சிறந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில், கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதே சிறந்தது, மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரிப்பதைவிட அவருக்கு முன்பாக இருந்த மோசேயையும் தீர்க்கதரிசி கூறினவைகளையும் நிராகரியுங்கள். இதை தான் அங்கே அந்த பரிசேயர்கள் புரிந்துக் கொள்ளாமல் இருந்தனர். மேலும் இதை தான் இன்று உலக முழுவதுமுள்ள சபைகள் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். தேவன் எலியாவை நோக்கி: ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்." நான் எலியாவைப் பின்பற்றவில்லை, ஆனால் பாகால் முன் நான் வணங்கவில்லை"? என்று யாரோ ஒருவன் கூறுவான் எனில், இல்லை! இது சாத்தியமில்லை. நீ ஒன்று எலியாவைப் பின்பற்ற வேண்டும் அல்லது பிசாசைப் பின்பற்ற வேண்டும்.
69 இன்று, நீ தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை பின்பற்ற வேண்டும் அல்லது பிசாசை பின்பற்ற வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. உங்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசிக்கு வெளியே உங்களால் இரட்சிக்கப்பட முடியாது. இது நோவாவின் நாட்களில் நோவாவின் பேழைக்கு வெளியே யாரோ ஒருவர் இரட்சிக்கப்படுவது போல் இருக்கிறது. இது சாத்தியமில்லை.
70 நல்லது! இப்போது நாம் எழுந்து நிற்போம். இந்த காலையில் இந்த செய்தியை எத்தனை பேர் ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? வெறுமனே உங்கள் கைகளை உயர்த்துங்கள், ஆகையால் உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யலாம்! இந்தச் செய்தி மத்தேயு 25: 6-ன் நிறைவேறுதல் என்று நீங்கள் விசுவாசித்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! ஆமென்!
--:--
--:--