



Kacou 6 (Kc.6) : மத்தேயு 25:6தீர்க்கதரிசனத்தின்வெளிப்பாடு
(2002 டிசம்பர் 22 ஞாயிறு காலை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 மத்தேயு 25:6-ன் பேரில் நான் மறுபடியும் பேச விரும்புகிறேன். மத்தேயு 24:27-ன் படி, ஆசியாவில் இருந்து சுவிசேஷம் புறப்பட்டது என்று நமக்குத் தெரியும். அப்போஸ்தலனாகிய பவுலுடன் சுவிசேஷம் கிழக்கிலிருந்து வந்தது. உதித்து வரும் சூரியனின் நிறம் மஞ்சள் மற்றும் ஆசியாவின் குடிமக்கள், சீனர்களை போல மஞ்சள் நிறமேனியுடையவர்கள். பின்னர் சூரியன், சுவிசேஷமானது வெள்ளை நிறமாக மாறுகின்ற ஐரோப்பாவிற்கு வந்தது. தூர் நகர பரிசுத்த மார்ட்டின், ஐரேனியஸ், கொலம்பா, மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி மற்றும் அதுபோன்று மகத்தான தேவமனிதர்கள் ஐரோப்பாவில் இருந்தார்கள். மேலும் அங்கு, ஐரோப்பாவில் வாழ்கிறவர்கள் வெள்ளை நிற மேனியை உடையவர்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
2 பின்னர், அந்த மாலை நேரத்தில் சூரியன் மேற்கு நோக்கி இறங்கினது, அதை அமெரிக்கா என்று சொல்லவேண்டும். மேலும் மாலை நேரத்தில், சூரிய அஸ்தமனத்தில், சூரியன் சிவப்பு நிறமாகிறது மேலும் அமெரிக்காவின் ஆதி குடிகள் சிவப்பு நிற மேனியை கொண்டவர்கள், செவ்-இந்தியர்கள். அங்கேதானே வில்லியம் பிரன்ஹாம் சாயங்கால வெளிச்சத்துடன் இருந்தார். வில்லியம் பிரன்ஹாம் தனது பாட்டி வழியாக செவ்-இந்திய இரத்தத்தை கொண்டவர் என்பதை காண்பித்தார். இன்று, ஆப்பிரிக்காவின் நேரத்தில், ஈவால்டு ப்ராங்க் (Ewald Frank), ஒரு வெள்ளைக்கார மனிதன் நடுராத்திரி சத்தத்தை பேசுகிறான். ஆயினும், வெளிப்படுத்துதல் 11-ன் இரண்டு சாட்சிகளுடன் மறுபடியும் கிழக்கிற்கு போகுமுன் மாலை நேரத்திற்கு பிறகு, அது நள்ளிரவாக இருக்கிறது, கறுப்பினத்தவர்கள், ஆபிரிக்கா, என்று நாம் அறிந்திருக்கிறோம்.
3 சரீரபிரகாரமாக கூட கறுப்பர்கள் உலகின் எல்லா மேல்மட்டதிலும் உள்ளனர். முதல் முறையாக, ஐ.நா.வின் தலைமையில் ஒரு கறுப்பினத்தவரை காண்கிறோம். சமீபத்திய பத்து ஆண்டுகளில், கறுப்பின அமெரிக்கர்கள் ஆப்பிரிக்காவில் ஆர்வம் காட்டுவதைக் கண்டிருக்கிறோம், அவர்களுடைய துல்லியமான மரபினத்தை தேடுவதை பார்க்கிறோம். ஆப்பிரிக்காவானது சந்திக்கப்படும்போது, டோசியெஸ்யூ லூவர்ப்பர் (Toussaint Louverture), வில்பர்ஃபோஸ் (Wilberforce), மார்ட்டின் லூதர் கிங் மற்றும் பலரின் பிள்ளைகளை தேவன் நினைவுகூருவார்.
4 ஒரு வெள்ளைக்காரர் ஃப்ரேடெரிக் டி க்ளார்க் (Frederik de Klerc) மற்றும் ஒரு கருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா இருவரும், 1993 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்துக்கு முன் கைகுலுக்கி, ஒரே நேரத்தில் சமாதானத்திற்கான நோபல் பரிசை வாங்கியபோது, நிறவெறி மற்றும் ஒரு காலத்தின் முடிவுமாக அது இருந்தது. இது ஒரு முக்கியமான ஆவிக்குரிய பக்கத்தின் மறைக்கப்பட்ட ஒரு சிறிய அடையாளமாகும்.
5 இன்னுமாக, மத்தேயு 25:6ன் படி, நடுராத்திரியில் ஒரு சத்தம், ஒரு குறுகிய பிரசங்கம் ஏழு சபைகாலங்களின் கன்னிகைகளை எழுப்பவும் விழித்துக்கொள்ளவும் பண்ணுகிறது. இந்த எழுப்புதல், மணவாட்டியை மணவாளனிடம் வழிநடத்தும். இயேசு கிறிஸ்து ஆப்பிரிக்காவை சந்திப்பார். மத்தேயு 24:27ன், சூரியன் மற்றும் மின்னல் ஆகியவற்றிற்கு பிறகு, சந்திரனும் நட்சத்திரங்களும் பிரகாசிக்கும். ஏசாயா 30 நிறைவேறும். பல்வேறு தீர்க்கதரிசிகளும், ஒரு எழுப்புதல் ஐவரி கோஸ்ட்டில் இருந்து புறப்படுமென்பதை ஒப்புக்கொள்கிறார்கள். மேலும் இன்னுமாக, இருதயம் மற்றும் சிந்தையில் மனத்தாழ்மை உள்ளவர்களுக்கு, பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப் படுதலுக்காக காத்திருக்கிறவர்களுக்கு, இது இனிமேலும் ஒரு தீர்க்கதரிசனம் அல்ல, ஆனால் ஒரு நிஜமாகும்.
6 பூமியின் மற்ற இடங்களைப் போலவே, தேவன் சீரேனே ஊரானாகிய சீமோனுடைய கொள்ளுப் பேரன்களை நினைவுகூர்ந்தார் என்று நான் கூறலாம். காலனித்துவப்படுத்தாத அல்லது ஆதிக்கம் செலுத்தாதவர்கள் மனிதரிடத்தில் பாரபட்சம் இல்லாதவருடைய இரட்சிப்பின் கிருபையை பெற்றுக்கொள்கிறார்கள், மேலும் முழு உலகமும் அதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
7 இப்பொழுது வேதாகமத்தை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் வீட்டில் அமைதியாக படிக்க வேண்டும் என்று சில வசனங்களை உங்களுக்குத் தருகின்றேன், இன்று காலையில் நமக்கு நேரம் இல்லை. எசேக்கியேல் 29-ம் அதிகாரம் முதல் 32-ம் அதிகாரம் வரை, ஏசாயா 18-ம் அதிகாரம் முதல் 20-ம் அதிகாரம் வரை, பின்பு எரேமியா 46-ம் அதிகாரம். மீண்டும் எசேக்கியேல் 21:1 முதல் 5 மற்றும் ஓசியா அதிகாரம் 7-ல் இருந்து 12-ம் அதிகாரம் வரை. ஆமென்!
8 இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் ஆப்பிரிக்காவைப் பற்றியவை, இது எகிப்து, எத்தியோப்பியா, லிபியா ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது. ஏசாயா 19:23 முதல் 25-ஐ வாசிப்போம் ... கர்த்தர் அவனை ஆசீர்வதித்து: “என் ஜனமாகிய எகிப்தும் ... என் சுதந்தரமான இஸ்ரவேலும் ஆசீர்வதிக்கப்பட்டது!” என்கிறார். இன்னும் வேதாகமம் பேசுவது நமக்கு தெரிந்த எகிப்து என்ற இஸ்லாமிய தேசத்தையல்ல ஆனால் அது முழு ஆப்பிரிக்காவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வசனம் 2-ஐ பாருங்கள்: எகிப்தியரை எகிப்தியருக்கு விரோதமாகத் திருப்புவேன்; பட்டணத்திற்கு விரோதமாக பட்டணமும், தேசத்துக்கு விரோதமாக தேசமும், ... யுத்தம்பண்ணும்." உங்களால் கானமுடிகிறதா? ஏசாயா 20:4-ல் அடிமைத்தனத்தையும் அடிமை வியாபாரத்தையும் கூட நாம் காண்கிறோம், "வாலிபனும், வயோதிபனும், நிர்வாணமாகவும், வெறுங்காலுமாகவும், அவர்களுடைய பிட்டங்கள் மூடப்படாமல்... ஆபிரிக்காவிற்கு அவமானம்". 15-ம் நூற்றாண்டுக்கு முன்பே, அசீரியா உட்பட பாபிலோனியாவாக இருந்த ஈராக்கிற்கும், குறிப்பாக 9-ம் நூற்றாண்டில் பாஸ்ராவிற்கும் ஆபிரிக்கர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
9 தேவன் பேசின அக்காலத்தில், புர்கினா இருக்கவில்லை ஜிம்பாப்வே இல்லை, கென்யா இல்லை, தென்னாப்பிரிக்காவும் இருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். பின்பு அங்கே யாத்திரைகளும் வெளியேறுதல்களும் இருந்தன. அஷாந்தி இனக்குழு எவ்விதம் எகிப்திலிருந்து வந்தனர் என்பதை குவாம் நெக்ருமா (Kwame Nkrumah) எவ்வாறு காண்பித்தார் என்பதை நாம் அறிவோம்.
10 நல்லது! எசேக்கியேல் 29:12 மற்றும் எசேக்கியேல் 30:26-ஐ வாசிப்போம் ... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, யேகோவா கூறுகிறார்: "நான் எகிப்தியரை தேசங்களுக்குள்ளே... பூமியின் மீதெங்கும் சிதறடிப்பேன்." இப்போது! மத்தேயு 27:25 "... அவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கட்டும்" பின்னர் 70-வது ஆண்டில், ஜெனரல் தீத்து தலைமையிலான ரோம ராணுவம் எருசலேமிலிருந்த யூதர்களைப் படுகொலை செய்தது, அது "... எங்கள்மேலும்” என்பதன் நிறைவேறுதலாக இருந்தது. 1900 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகம் முழுவதிலும், மிக முக்கியமாக ஜெர்மனியில் அடோல்ப் ஹிட்லர், சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்டாலின், இத்தாலி, போலந்து, பிரான்ஸ் போன்றவற்றில் பெனிட்டோ முசோலினி போன்றவர்களால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தேசங்கள் ரோமன் கத்தோலிக்க சபையின் அதே நோக்கத்தை கொண்ட வெளிப்படுத்துதல் 17:13-ன் பத்துக் கொம்புகள்.
11 ரோமன் கத்தோலிக்க சபை மில்லியன் கணக்கான புராட்டஸ்டன்களை கொன்றது போலவே, இந்த பத்து நாடுகள் யூதர்களை கொலை செய்வதற்கு எழும்பின! அது "... எங்கள் பிள்ளைகள் மேலும்” என்பதன் நிறைவேறுதலாக இருந்தது. மேலும் இன்னுமாக, அந்த பிள்ளைகளான இந்த ஜெர்மானிய யூதர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யூதர்கள் சிலுவையில் அறைந்தபோது, இஸ்ரவேலில் இருக்கவில்லை என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த யூதர்கள் உலகம் முழுவதும் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம், இந்தத் தீர்க்கதரிசனம் அவர்களைப் பின்தொடர்ந்தது. மேலும் எகிப்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்களுடனான ஆபிரிக்காவிற்கும் இன்றும் அதே காரியம் தான்!
12 தொடக்கத்தில், தேவன் பூமியில் மிகவும் துயரப்பட்ட மக்களுடன் இடைபட்டார், முடிவில், தேவன் பூமியில் மிகவும் துயரப்படுகின்ற இனத்துடன் இடைபடுகிறார்... இந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற தேவன் ஒரு ஆப்பிரீக்கனை எழுப்புவதாக அது உள்ளது. அதனால்தான் ஒரு நாட்டிற்கு அந்த தேசத்தானல்லாத மனிதன் ஒருவன் வெளிச்சப்பந்தம் ஏந்துகிறவனாக (torchbearer) இருக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன்.
13 இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக எகிப்தியன் ஒருவனையோ அல்லது வெள்ளையர் சந்திக்கப்பட கருப்பினத்தவனையோ தேவன் பயன்படுத்துவதில்லை. இவ்விதமாகத்தான் தேவன் செயல்படுகிறார். மேலும் கறுப்பினத்தவர்கள் அதற்கு தகுதியற்றவர்கள் அல்ல. அதனால்தான், வல்லமை மிக்க சுகமளிக்கும் வரங்களை கொண்டிருந்த போதும், கருப்பு ஆப்பிரிக்காவிற்கும் யூதர்களிடத்திற்கும் செல்ல, வில்லியம் பிரன்ஹாமை தேவன் அனுமதிக்கவில்லை. பூமியின் ஒவ்வொரு இனமும் அதற்குரிய வாக்குத்தத்தத்தையும் சந்திப்பின் காலத்தையும் உடையதாக இருக்கிறது. வில்லியம் பிரன்ஹாம் இஸ்ரேலுக்கு போவதற்கான தனது பயனவழியில் இருந்தார், ஆனால் எகிப்துக்கு அவர் வந்தவுடனே, தேவன் அவரை நிறுத்தினார். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தில், தம்முடைய சீஷர்களை சமாரியரிடத்திலும் புறஜாதிகளிடத்திலும் செல்ல அனுமதிக்கவில்லை.
14 இங்கே இந்த பிரசங்கங்கள் மத்தேயு 25:6-ன் சத்தமேயல்லாமல் வேறு எதுவுமல்ல. மேலும் இது விழித்தெழச்செய்யும் பிரசங்கத்தின் அடிப்படையாகும். சிலர் என்னை அந்திகிறிஸ்து, சாத்தானின் தூதன், “கொடிய கசப்பை” பிரசங்கிக்கிறவன் என்றும் அழைக்கிறார்கள், இன்னும் மற்றவர்கள் என்னைச் சபிக்கிறார்கள், என் வாழ்க்கையில் தீங்கு நேரிட தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள், ஆனால் நம் சார்பில் எந்த முயற்சியும் இல்லாமல் ஜனங்கள் வருகின்றனர் விசுவாசிக்கின்றனர் அக்காரணத்தினால் நான் மகிழ்சியுறுகிறேன். வேதாகமம் என்ன சொல்கிறது? அப்போஸ்தலர் நடபடிகள் 13:48: "...நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ, அவர்கள் விசுவாசித்தார்கள்,” ஆமென்!
15 சிறிது காலத்தில், சில பிரசங்கிகள் இதே ஆவியுடன் இங்கிருந்து புறப்பட்டுச் செல்வர், இன்னும் நான் பிரசங்கியாதிருக்கிறதையும் பிரசங்கிப்பார்கள். தேவன் என்னை விட கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான மொழியுடன் கூடிய சில ஜனங்களை எழும்பப் பண்ணுவார். லூதரின் பிரசங்கங்கள் “மிகவும் ஆண்தன்மையற்றது” என்று முட்சர் மற்றும் கால்வினால் கண்டுகொள்ளப்பட்ட வழக்காகும் இது. நடுராத்திரி சத்தம் எதிரொலிகளைக் கொண்டிருக்கும். எதிரொலியானது சில பண்புகளை இழக்கலாம் ஆனால் பொருளும் நோக்கமும் தொடர்ந்து இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
16 நல்லது! மத்தேயு 25:6 ... இரட்சிப்பினுடைய சரித்திரத்தின் வேறொரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். பளிங்கு, கம்பளங்கள், மின்விசிறிகள் மற்றும் சிறந்த ஒலிக்கருவிகளுடன் கூடிய பெரிய மற்றும் கம்பீரமான மத கட்டிடங்களை எழுப்புவதற்கான நேரம் இதுவல்ல. தேவனின் மனிதன் வில்லாக்கள்(villas), வாகனங்கள் இன்னும் மற்றவைகளை பற்றி கணவு காண்பதற்கு இனியும் நேரமில்லை. ஆனால் இந்த எழுப்புதல் காரணமாக, ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு பொருளாதார பங்களிப்பும், இந்த சத்தியத்தை பரப்புவதற்கான அர்த்தத்தில் நேரடியாக செல்கிறது.
17 தேவன் இங்கே செய்து கொண்டிருக்கிற காரியத்தின் எதிரொலியாக இராமல், பூமியின் முகத்திலெங்கும் ஒருவனும் தேவனை சேவிக்க முடியாது. அதனால்தான் நான் சுவிசேஷக சபையினர்களுக்கு, பாப்டிஸ்டுகளுக்கு, நாற்சதுர சபையினர்களுக்கு மற்றும் பலவற்றிற்கு எதிராக இருக்கிறேன் ... அவர்களுக்கு எதிராக நான் உங்களை எச்சரிக்கிறேன்! நமக்கு அவர்களுடன் எவ்வித பங்கும் இல்லை! மாய்மாலக்காரர்களாக, எங்களுக்கு எதிராக மற்றுமொரு போர்முனையை நிறுவ வேண்டாம். அவர்கள் காகங்கள். கழுகுகள் சத்தமிட்டால், காகங்கள் மௌனமாயிருக்கக் கடவது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
18 நீங்கள் ஒரு முஸ்லீமை அல்லது ஒரு கத்தோலிக்கனை உங்கள் சுவிசேஷத்தினால், பாப்டிஸ்ட் அல்லது பெந்தேகோஸ்தே சபைக்கு அனுப்பிவைத்தால், நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஒரு கைதியின் சிறை அறையை மட்டுமே மாற்றியுள்ளீர்கள். அது சாத்தானின் அதே அடைப்புவேலி. தேவன் இங்கே என்ன செய்கிறாரோ அதற்கு எதிரான முரண்பாட்டுச் சத்தமாக நீங்கள் இருக்கிறீர்கள்.
19 மத்தேயு 25:6 முதல் 7,... பிரயாண பிரசங்கிகளின் காலம் மறுபடியும் திரும்ப வந்திருக்கிறது, மேலும் அது அப்போஸ்தல விசுவாசத்தின் பாலம். இஸ்லாம் மற்றும் யூத மதம் உள்ளிட்ட கத்தோலிக்க, புரோட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளில்... செயல்படும் ஆவிகள் அனைத்தும் தேவனுடைய ஆவி அல்ல ஆனால் பிசாசின் ஆவி என்றும், மேலும் அந்த சுவிசேஷக சபைகளின் தீர்க்கதரிசிகள் பாரம்பரிய விக்கிரக பூசாரிகளை போலவே தந்திரமான குறிசொல்பவர்கள் மட்டுமே என்றும், பிச்சைக்காரர்களின் கூடைகளாகவும், மானியங்களாகவும் மற்றும் அரசியல் கருவிகளாகவும் இருக்கிற சபைகளின் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் உண்மை முகத்தை அனைத்து மாம்சங்களுக்கும் வெளிப்படுத்தவும் சில பிரசங்கிகள் நாட்டுப்புறங்கள், நகரங்கள் மற்றும் நாடுகள் எங்கெங்கும் செல்வார்கள்…., தேவன் பிச்சைக்காரர் அல்ல.[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
20 போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், அவர்களுக்கு இடையே, தனியார் பள்ளிகள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளில், போக்குவரத்து பேருந்துகள், டாக்சிகள், போன்றவற்றுடன் போட்டியிடுகின்றனர். அவைகள் வியாபார சபைகள் ... மேலும் ஞாயிறு காலை அவர்கள் அனைவரும் தேவதூதர்கள் ஆகிவிடுகின்றனர். சபைகள் அழுகிவிட்டன! அவர்களது தலைவர்கள் கார்களை, வீடுகளை, கனவுகாண்கின்றனர், தங்களை கொழுக்க வைக்கின்றனர், அதிக விலையுள்ள ஷூக்கள், ஜாக்கெட்டுகள் ஆகியவற்றை தரித்துக்கொள்கிற வேளையில் அதே சபைகளில் அங்கே ஏழை ஜனங்கள் இருக்கிறார்கள். உங்களால் காண முடிகிறதா? ஓநாயும் மேய்ப்பனும் ஆட்டுக்குட்டிகளை ஒரேவிதத்தில் பார்க்கமுடியாது. ஆமாம் ஐயா! ஓநாயும் மேய்ப்பனும் ஆட்டுக்குட்டிகளை ஒரேவிதத்தில் பார்க்கமுடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
21 ஆட்டுத்தொழுவத்தின் வாசற்படியை ஓநாயிடம் தேவனால் எப்படி விட்டுவிட முடியும்? அவர்கள் உண்மையான மேய்ப்பர்களாக இருந்தால், அவர்களால் எப்படி ஆட்டுத்தொழுவத்தின் வாசற்படியை விட்டு வெளியேறி, அரச மாளிகைகளில் தங்களைக் கண்டடைகிறார்கள்? அந்த லூயிஸ் பாலாவு, ப்ராங்க் அலெக்ஸாண்ட்ரே, ஜிம் லாஸ்ஸிட்டர், ஹம்சா ஏக்லர், சாமுவேல் ரெனே சிராட், நிக்கிகோ நிவானோ, கொன்ராட் ரெய்ஸர், எலியோ டாப்ஃப், பில்லி கிரஹாம், மோரிஸ் செருலோ மற்றும் பென்னி ஹின் ஆகியோர் மனித சரீரத்தில் வீழ்ந்து கிடக்கின்ற பிசாசுகளேயன்றி வேறல்ல.
22 இனிமேலும் அது பரிசுத்த ஆவியினால் அல்லது அழைப்பு மற்றும் பணிநியமனம் ஆகியவற்றின் மூலமாக அல்லாமல், சபைகளின் சங்கங்களுடைய உறுப்பினர் அட்டையால் ஒரு மனிதன் தேவனுடைய ஊழியனாக அங்கீகரிக்கப்படுகிறதாக அது உள்ளது. மேலும் இந்த கொள்ளைக்கார கும்பல், தங்களை பின்செல்வோருடன் சுதந்திரமாக நடந்து திரிகிறது. சாத்தானின் கேலிச்சித்திரங்களாக இருக்கின்ற சபைகளின் கூட்டமைப்புகளான நீங்கள் அதற்கு நேர்மாற்றாக உங்களை எனக்கு காண்பிக்காதவரை, உங்களுக்கு எதிராக பாதாளமானது: “ஆக்கினை! ஆக்கினை! ஆக்கினை!” என்று சத்தமிடுவதை நிறுத்தாது. நீங்களும், உங்கள் குருமார்களும், உங்கள் உறுப்பினர்களும், நீங்கள் எல்லோரும் நரகத்திற்கு போவீர்கள். நீங்கள் பூமியை கெடுத்துப்போட்டீர்கள், தேவன் உங்களை அழித்துப்போடுவார். ஏற்கனவே நான் உங்களுக்கு எதிராக ஒரு இருப்பு கோலாயும் நாணேற்றப்பட்ட வில்லாயும் இருக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
23 ஓ, தேவனே! மட்டுப்படுத்தமுடியாத மொழியின் அடிப்படையிலும், உருக்கினாலான ஆத்மாக்களையுடைய, புயல் பிரசங்கத்துடன், ஒன்றுக்கும் கவலைப்படாத, உள்ளுக்குள்ளே பற்றி எரிகிற ஆவியும் அக்கினியும் நித்திய ஜீவ வார்த்தைகளையும் உள்ள சில பிரசங்கிகளை மேலே எழுப்பும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
24 “இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்” என்று எழுதியிருக்கிறது, இருப்பினும் இராயன் தானே செம்மறியாட்டு உடையில் வந்து, சபைகளில் தேவனைப்போல் உட்கார்ந்து, கிறிஸ்துவை சேவிப்பதற்கு பதிலாக கிறிஸ்துவை உபயோகிக்கிறான். இராயன் இனி முன்னர் ரோம சாம்ராஜ்யத்தில் செய்ததுபோல தலைகளை வெட்ட முற்படுவதில்லை, ஆனால் ஆத்துமாக்களின் தொண்டையை நெரித்து இயேசு கிறிஸ்துவின் பெயரில் கொள்ளையடிக்கிறான்.
25 அவர்கள் கடவுள்களாகி விட்டனர். அவர்கள் சிம்மாசனங்களில் அமர்ந்துகொண்டு திருச்சபை போதககுருக்களின் தலைவன் (head of the clergy) என தங்களை பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர், அதை சபையின் தலை அல்லது தலைவன் எனலாம். கத்தோலிக்க போதககுருக்களின் தலைவன், புராட்டஸ்டன்ட் போதககுருக்களின் தலைவன், இன்ன இன்ன சுவிசேஷக சபைகளின் தலைவன், இஸ்லாம் மற்றும் யூதமதம் உள்ளிட்டவை… இன்ன பிரன்ஹாமிஸ்ட் சபையின் தலைவன். இன்ன மறைபரப்பு பணி அல்லது ஊழியத்திலுள்ள போதககுருக்களின் தலைவன். ஒரு சபையானது ஒரு போதககுருமார்களை போல (clergy) இருக்கிறது மேலும் எந்த ஒரு சபை தலைவனும் அந்த போதக குருக்களின் தலையாக இருக்கிறான். தேவனின் வாயான ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனை தவிர, மற்ற அனைவரும் பிசாசுகளாவர். அவர்கள் போதக குருக்களின் தலைவர்கள்.
26 அதற்கு என்ன அர்த்தம்? போதக குருக்களின் தலைவன், லத்தீனில் "DUX CLARIV'S" என அழைக்கப்படுகிறான். அது ரோமன் எண்களில் 666-ஐ தருகிறது மேலும் 666, அதுதான் அவர்களின் தலைப்பு எண். உங்களால் காணமுடிகிறதா? ரோம் போப்புதான் VICARIV'S FILII DEI, அது 666-ஐ கொடுக்கும். ஆனால் அங்கே அநேக அந்திகிறிஸ்துக்கள் வருவார்கள் என அப்போஸ்தலனாகிய யோவான் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான். கத்தோலிக்க சபைக்கு பெண்பிள்ளைகள் இருந்ததாக வெளிப்படுத்துதல் 17 கூறுகிறது. கத்தோலிக்க சபைத் தலைவன் ஒரு மிருகம், ஒரு பிசாசு என்றால், பின்னர் ஒவ்வொரு புரோட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபையின் தலைவனும் கூட ஒரு பிசாசு தான்.
27 அந்த தலைமுறையின் உயிர்வாழும் தீர்க்கதரிசிக்கு வெளியே உள்ள எல்லாமே சாத்தானால் இயக்கப்படுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. அந்திகிறிஸ்து ஒருவன் வருகிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இப்போதே அநேக அந்திகிறிஸ்துக்கள் இருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அங்கே ஒரு பேய் தனமான சபை வருகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் இப்போது பல பேய் சபைகள் உள்ளன என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28 அதை நான் யோவான் 2:18-ல் இருந்து வாசிக்கப்போகிறேன்: "பிள்ளைகளே, இது கடைசி நேரமாயிருக்கிறது; அந்திகிறிஸ்து வருகிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இப்போது அநேக அந்திகிறிஸ்துக்கள் இருக்கிறார்கள்." ஒரு போப் வருவான் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் இப்போது ஒவ்வொரு சபையும் அதன் போப்பை, அதன் தலைவனை கொண்டிருக்கிறது... அங்கே அநேக சபை போப்புகள்..... அந்திகிறிஸ்துக்கள் இருக்கின்றனர். மேலும் திருச்சபை போதக குருமார்கள் (clergy-க்ளர்ஜி) என்பது ஒரு சபையிலுள்ள அனைத்து குருமார்கள் அல்லது போதகர்கள் தான். அவர்கள் அனைவரும் பேரரசர்களும், கிரீடம் இல்லாத இராஜாக்களுமாம். வேதாகமம் அவர்களை நூற்றுக்கு அதிபதிகள் (chiliarches) என அழைக்கிறது. கிரீடம் இல்லாத இராஜாக்கள்... ... எவ்வளவு சிறிய சபைகளின்மேல் அவர்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் பிசாசுகளே. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
29 இப்போது DUX CLARIV'S இன் கருத்தை காணலாம்! ஞானமுடையவன், இவனது பெயரின் இலக்கத்தை கணக்குப்பார்க்கக்கடவன். நான் இதை பலகையில் எழுதுகிறேன். ரோமானிய எண்களில், நம்மிடம் உள்ளபடி: D = 500, X = 10, C = 100, L = 50, I = 1, V = 5 இவ்வாறாக, DUX CLARIV'S 666 ஐ தருகிறது. எனினும், ரோம் போப் VICARIV'S FILII DEI அதுவும் கூட 666-ஐ கொடுக்கிறது, இதன் பொருள் என்னவென்றால்: தேவனுடைய குமாரனின் பிரதிநிதி அல்லது தேவனுடைய குமாரனுக்கு பதிலாக இருப்பவன்.
30 மேலும், வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 13 மற்றும் அதிகாரம் 17 ன் படி, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக சபைகள், மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க சபையின் சொரூபமான பெண்பிள்ளைகள், எனவே அவற்றின் தலைவர்கள் ரோமாபுரியினுடைய போப்பின் சொரூபம் மட்டுமே என்பதை நாம் தெளிவாக காணலாம். ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தின் கலப்பின பெண்ணான, பிரன்ஹாமிஸ்டுகளை விட்டுவிடாமல் தான் இதை நான் கூறுகிறேன்.
31 உங்களால் காணமுடிகிறதா? பங்குச் சாமியார் (parish priest), பயபக்திக்குரியவர் (reverend), சபை தலைவர் (president), கார்டினல் (cardinal), போப் (pope) என்று அழைக்கப்படுகிற இந்த ஊழியங்கள் தான் என்ன? மேலும் மதசார்பான அர்த்தத்தில், பயபக்திக்குரியவர் என்னும் வார்த்தையின் பொருள்: வணக்கத்துக்குரியவர் அல்லது ஆராதனைக்குரியவர் என்பதே. கத்தோலிக்கர்கள் மரியாளை போற்றுவதாக சொல்கிறார்கள், அது ஆராதித்தல் எனும் அர்த்தம் கொண்டது என்பதை நீங்கள் காணவேண்டும். புறஜாதியார் மத்தியில், அதன் பொருள்: மதிப்புக்குரிய (honourable) அல்லது மரியாதைக்குரிய ஒருவர் என்பதாம். சாதுர்யமான சிற்பாசாரி மரத்தைகொண்டு எதை செய்கிறானோ, அதையே சாத்தான் உங்களுடன் இருந்து, செதுக்கப்பட்ட சொரூபங்கள், தெய்வங்களாக, அந்த சபைகளின் தலைவர்களாகிய நீங்கள் அவனது சார்பாக பேச உங்களுக்கு அதிகாரமும் கொடுத்திருக்கிறான். 1 இராஜாக்கள் 12:28 முதல் 30, ... மற்றும் ஓசியா 4:17-ல் யெரொபெயாம் முதற்கொண்டு, விக்கிரக ஆராதனையின்மேல் அவர்களுக்கிருந்த மிகுந்த ஆர்வத்தினால், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட, அந்த தாண் மற்றும் எப்பிராயீம் கோத்திரத்தாரின் பக்தன் தான் அந்த ஐவரிகாஸ்ட் தேசத்தானாகிய ரெவரண்டு டியோன் ராபர்ட் (Ivorian reverend Dion Robert).
32 ஆப்பிரிக்காவுக்கு சுவிசேஷம் வந்தடைவதற்கு முன்னதாக பிசாசுகள் தங்களிடமிருந்த எதையுமே இழக்கவில்லை. அவைகள் வெறுமனே ஆறுகள், மரங்கள் மற்றும் புனித காடுகள், ஓடைகள், உயர்ந்த ஸ்தலங்கள், மலைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அஞ்ஞான கொண்டாட்டங்களை விட்டுவிட்டு சபைகளுக்குள் புகுந்து கொண்டன. உலகின் அஸ்திபாரத்திற்கு முன்பாக, ஆட்டுக்குட்டியின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாத அந்தப் பன்றிகளும், அசுத்தமான, வெறுக்கத்தக்க, அருவருப்பான பறவைகள் யாவும், வெளிப்படுத்துதல் 13:8-ன்படி அவைகளை ஆராதிக்கின்றன. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
33 மேலும் ஏசாயா 14:13 முதல் 14-ல், இந்த சபைகளின் தலைவர்கள், இந்த விழுந்துப்போன தூதர்கள், தேவனுடைய சிங்காசனத்தில் தேவனைப்போல ஆராதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். நான் அதை வாசிக்கப்போகிறேன்: "நீ உன் இருதயத்திலே: வானங்களுக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களைப் பார்க்கிலும் என் சிங்காசனத்தை உயர்த்தி, வடக்கில் உள்ள சபையின் பர்வதத்திலே போய், உட்காருவேன்; நான் மேகங்களின் உயரங்களுக்குச் செல்வேன், நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றாய்”. மேலும் " பரலோகத்தில் ஒரு யுத்தம் நடந்தது, அவைகள் வெளிப்படுத்தின விசேஷம் 12:7 முதல் 9 வசனங்களில் படிப்படியாகப் அங்கிருந்து பூமியில் தள்ளப்பட்டன. பிறகு காலங்களின் முடிவில், மனித வடிவங்களை எடுத்துக்கொண்டு, மனந்திரும்புவதற்குப் பதிலாக, சபைகளின்மேல் தெய்வங்களாக தங்களை ஸ்தாபித்து கொண்டன. அவைகள் மறுபடியுமாக பாதாளத்தில் தள்ளப்படுவதை நாம் காண்போம், அவைகள் என்பது, அவர்களின் சபைகளும் அவர்களின் தீர்க்கதரிசிகளுமாம்.
34 உங்களுடன் பேசுகிற நான், ஒரு அஞ்ஞானியாக இருந்தேன் மேலும் 1993-ல், ஜனாதிபதி ஹௌபோயொட் (President Houphouet) இறந்த ஆண்டு, நான் ஒரு அழைப்பையும் (call) பிறகு பணி ஆணையையும் (commission) பெற்றேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. "ஆகையால், சத்தியம் என்று நானாக எண்ணிக் கொண்டிருப்பதை அல்லது எனது கற்பனையை நான் பிரசங்கிக்க முடியாது, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சார்பாக நான் பேசுகிறேன். நான் எந்த போதகர் பள்ளியிலும் இருந்தது இல்லை, அல்லது ஒரு இறையியல் புத்தகத்தையும் படித்தது இல்லை. அது எவராவது ஒருவர் ஆர்வ உணர்ச்சியால் அல்லது சபையில் ஆவிக்குரிய மரணத்தை காண்பதால் ஒருவர் எதையாவது செய்ய தொடங்குவதிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. அது ஒரு தவறாகவும் அதை செய்வது ஒரு பாவமுமாகவும் இருக்கிறது, ஏனெனில் அது உங்களுக்கு ஒரு ஊழியம் இருப்பதாகவோ அல்லது நீங்கள் அதை செய்ய வேண்டும் என்றோ அர்த்தமாகாது! ஒரு ஆதரவாளர் தனது அணியின் மோசமான விளையாட்டை பார்க்கும்போது அவரே களத்துக்குள் குதிப்பதல்ல அது. அப்படியல்ல! நீங்கள் செய்ய போகிறவைகள், நீங்கள் செய்யப்போகிற அற்புதங்கள், உங்கள் கூற்றுப்படி நீங்கள் இரட்சிக்கப்போகிற ஆத்துமாக்கள், இவை ஒன்றும் ஒரு பொருட்டல்ல, நீங்கள் தகுதியற்றவர்கள் தான். தேவனால் அனுப்பப்படாதவனின் வேலையையையும் பிரயாசத்தையும் அவர் அங்கீகரிப்பதில்லை. மேலும் அப்படிப்பட்ட ஒருமனிதனை ஒருவன் பின்பற்றுவானாகில், அது அவனுடைய இழப்பிற்காகவே.
35 பிரன்ஹாமிஸ்டுகள் உட்பட இந்த சபைகளை எல்லாம் நான் கண்டனம் செய்கையில், அது தீர்க்கதரிசியின் வார்த்தையாக இருக்கிறது, அது “கர்த்தர் உரைக்கிறதாக இருக்கிறது”, அது அனைத்தையும் நான் சந்தேகிப்பது கிடையாது. உங்களால் காண முடிகிறதா ? மேலும், நான் தொடர்ந்து அதை கூறவிரும்புவது, தேவன் பரலோகத்திலிருந்து வெளிப்பாட்டை கொடுக்கிறார் மேலும் இந்த வெளிப்பாட்டின் நிறைவேறுதலை அங்கீகரிக்க பூமிக்கு இறங்கிவருகிறார்... வேதாகமம் கூறுகிறது: "... மேலும் யேகோவா ஆபேலையும், அவனது காணிக்கையையும் நோக்கிபார்த்தார்; மேலும் காயீனையும், அவனது காணிக்கையையும் அவர் பார்க்கவில்லை...". நீங்கள் காண்கிறீர்களா? அங்கே, ஒரு புறம், அந்த நபர், மேலும் மறுபுறத்தில், அந்த நபரின் காணிக்கையும் உள்ளது. உலகத்தோற்றத்திற்கு முன்பாக தேவன் ஆபேலைத் தன் சிந்தையில் அங்கீகரித்திருந்தார், அதனால்தான் அவர் அவனை அங்கீகரித்தார் மேலும் இதை முதலாவதாக அவனுக்கு வெளிப்படுத்துவதில் கவனமாக இருந்து அவனது காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டியவராக அவர் இருந்தார் [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
36 ஆபேல் செலுத்த வேண்டிய காணிக்கையை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தியிருந்தார். தேவனிடமிருந்து வராத சில நல்லவைகளை தேவன் ஏற்றுக்கொள்வார் என்றால், பிசாசுகள் நமக்கு முன்னே சென்றுவிடும், ஏனெனில் நல்லது எதுவென்று அவைகளுக்கு தெரியும். அது உபவாசத்திலிருந்து உபவாசத்தை பற்றியோ, தேவனுக்காக ஒரு யானைபோல் வேலை செய்வது பற்றியோ அல்ல, ஆனால் எல்லாம் தேவனின் இராஜதிபத்தியத்தை (sovereignty) பொறுத்தது. உலகத்தோற்றத்திற்கு முன்பே, ஆபேல் அங்கீகரிக்கப்பட்டான், பின்பு ஏதேன் தோட்டத்தில், அவனும் அவனுடைய காணிக்கையும் அங்கீகரிக்கப்பட்டது.
37 பதினாறாம் நூற்றாண்டில், மார்ட்டின் லூதர் கத்தோலிக்கத்துடன் போராடிக் கொண்டிருந்தபோது, அவருடைய நண்பர் எராஸ்மஸ் (Erasmus), மார்ட்டின் லூதரின் பிரசங்கத்தை "மிகவும் அவமதிக்கின்ற மற்றும் ஆத்திரமூட்டும் தன்மைகொண்டவை" என்று கருதி, அவரை கைவிட்டார். ஆனால் மார்டின் லூதர் தன்னுடைய இரத்தத்தைவிட தேவனுடைய வேலையானது மிகவும் விலைமதிப்பற்றது என எண்ணிப்பார்த்து தொடர்ந்து அதை பேணிகாத்தார். இன்றும் அது அவ்வாறு தான்.
38 குறைந்தபட்சம் வேதாகமத்தை பார்ப்பதற்கு அல்லது ஜெபிப்பதற்கு பதிலாக, ஜனங்கள் போதகர்களிடமும் மற்றவர்களிடமும் திரும்ப விரும்புகின்றனர். ஆனால் என்னுடைய பங்கிற்கு, வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து, தேவனுக்கு முன்பாகவும் அவருடைய பரிசுத்த தூதர்கள் மற்றும் மனிதர்களுக்கு முன்பாகவும், நான் வழியையும், சத்தியத்தையும், ஜீவனையும் உங்கள் கரங்களில் வைக்கிறேன். அவைகளோடு நீங்கள் விரும்பியதை செய்யுங்கள்!