



Kacou 60 (Kc.60) : கடைசி நியாயத்தீர்ப்பின் திரைப்படம்
(மார்ச் 16, 2003 ஞாயிற்றுக் கிழமை அன்று லோக்கோட்ஜரோ, அபிட்ஜான் - ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 நல்லது! நம்முடைய வேதாகமங்களை எடுத்துக்கொள்ளலாம்! நான் மத்தேயு 23: 34 மற்றும் 35-ஐ வாசிக்க போகின்றேன் பிறகு யோபு 33: 23 மற்றும் 24-ஐ வாசிப்பேன் அதை நான் அடுத்த முறை சந்திக்க உள்ளேன். நாம் மத்தேயு 23-ல் வாசிக்கலாம்: "ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
2 நாம் யோபு 33: 23 மற்றும் 24-ஐயும் வாசிக்கலாம்: "ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில், அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்." ஆமென்! யோபு 33-ஆம் அதிகாரத்திலிருந்து இந்த பத்தியை தியானியுங்கள், இன்றையதினம் நான் மத்தேயு 23 சந்திப்பதை போன்று அதை நான் மீண்டும் சந்திப்பேன்.
3 புனித மத்தேயு புத்தகத்தில் நான் வாசித்தேன் ஆனால் இங்கு நான் குறிப்பிட விரும்புகிற முதல் மனிதன் அது ஏனோக்கு ஆவான். ஏனோக்கு வெள்ளத்திற்கு முன்பாக வாழ்ந்தான். யூதா 14-ல் அவன் ஏழாவது என்று வேதாகமம் சொல்கிறது. ஆதியாகமம்5 வசனம் 1 இல் ஆதாம், 3 ஆம் வசனத்தில் நாம் சேத் ஐ கொண்டுள்ளோம் 6 ஆம் வசனத்தில் நாம் ஏனோசை கொண்டுள்ளோம், நான்காவதாக ஆம் வசனத்தில் கேனான், ஐந்தாவதாக 12 ஆம் வசனத்தில் மகாலாலேயேல் ஆறாவதாக 15 வசனத்திலுள்ள யாரோத் பிறகு ஏழாவதாக ஏனோக்கு. "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்". என்று ஆதியாகமம் 5:24 கூறுகிறது. இது தான் வேதாகமம் குறிப்பிடுகிற முதல் எடுத்துக் கொள்ளப்படுதல்". ஆதியாகமம் 5:24 கூறுகிறது, "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்". இது தான் வேதாகமம் குறிப்பிடும் முதல் எடுத்துக் கொள்ளப்படுதலாகும்.
4 ஒரு நாள் தேவன் தண்ணீரினால் பூமியை அழிக்கப்போகிறார் என்று இந்த தீர்க்கதரிசியான ஏனோக்கு தீர்க்கதரிசனம் உரைத்தான். "சகோதரர் பிலிப்பு, ஏனோக்கு அதை சொன்னாரா? என்று நீங்கள் கேட்கிறீர்கள், ஆம், ஏனோக்கு மூலமாக தேவன் அதை உலகத்துக்கு வெளிப்படுத்தினார். அவனுடைய நாளில், ஏனோக்கு உலகின் ஒளியாக இருந்தான், ஏனென்றால் ஏனோக்கை தவிர வேறொன்றையும் நீங்கள் இரட்சிக்கப்படவோ அல்லது தேவனுடைய சித்தத்தில் இருக்கவோ முடியாது.
5 அப்படியெனில் யார் இந்த ஏனோக்கு? அவனே எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் நடந்த முதல் மனிதன். ஏனோக்கு தேவனுடைய வெளிப்பாட்டோடு தங்கியிருக்க தன்னுடைய மணி வேளையில் எல்லா சபைகளையும், அமைப்புகளும் மற்றும் உள்ள எல்லா நிறுவனங்களையும் நிராகரித்தான். அவன் ஒரு தேவாலயம் அல்லது ஒரு வேதாகமத்தின் போதனையைப் பின்பற்றவில்லை, ஆனால் தேவனோடு இருந்தான். இதுதான் முதல் முறையாக தேவன் எலியாவைத் தேர்ந்தெடுக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா?
6 இந்த ஏனோக்கு தான் விலங்கின் தோலை அணிந்திருந்தான் அதை நாம் திஸ்பியனாகிய எலியாவின் மூலம் இணங் கண்டுக்கொள்ள வேண்டும். இது தான் முதல் முறையாக எலியாவின் ஆவி பூமியின் மேல் தன்னை வெளிப்படுத்தியது. ஆதியாகமத்தில் 5 ஆம் அதிகாரத்தில் பரலோகத்திற்குச் சென்ற மனிதன் தான் இந்த ஏனோக்கு. 2 இராஜாக்கள் 2 ஆம் அதிகாரத்தில் பரலோகத்திற்கு ஏறின இந்த மனிதன் தான் ஏனோக்கு. வெளிப்படுத்துதல் 11-ல் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட போகும் மனிதன் தான் ஏனோக்கு. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7 ஏனோக்கு பூமியை விட்டுச்சென்றபோது, அது ஒரு ஒளி புமியை விட்டு சென்றதாக இருந்தது, ஏனெனில் சபைகள் அதை விரும்பவில்லை, உலகம் அதை விரும்பவில்லை.... பிசாசின் புத்திரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு மரத்தில் அவரை அரைந்து இந்த பூமியிலிருந்து அகற்றிய நாளிலே, பூமியை அந்தகாரம் மூடிக்கொண்டது, ஏனெனில் அவர் உலகத்தின் ஒளியாக இருந்தார்.
8 நோவாவை தன்னுடைய சந்ததியினரோடு முரண்பட செய்தது என்னவெனில் தன்னுடைய ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அமைதியாக வேலை செய்வதை விட்டு விட்டு அவன் வெளிப்படையாக நியாயந்தீர்த்து அவர்களை சூனியக்காரர்கள் என்று அழைத்தான். அவர்களைப் பொருத்த வரை, நோவா தேவனுடைய நேர்மையான ஊழியக்காரர்களை இழிவுபடுத்தினான் மற்றும் அதினுடைய உச்சமானது அவன் தனது செய்தியின் மூலம் மட்டுமே எவரும் இரட்சிப்படைய முடியும் என்று சொல்ல துணிந்து இருந்தான். ஜலப்பிரளயத்திலிருந்து ஒருவன் தப்பித்துக் கொள்வதற்கு, அவன் நோவா பிரசங்கிப்பதை விசுவாசித்து பேழைக்குள் நுழைய வேண்டியது அவசியமாக இருக்கின்றது என்றான். தன்னுடைய செய்தியை தவிர ஒருவனும் தேவனுடைய சித்தத்தில் இருக்க முடியாது என்று நோவாபிரசங்கித்தான்.
9 ஜனங்கள் அவனிடத்தில் ஏளனமாக: "நோவா, எங்களுடைய பிதாக்களான ஆதாம் மற்றும் ஏனோக்கு உன்னில் விசுவாசம் கொள்ளாததினால் நரகத்திற்கு செல்வார்களா? " என்றார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் புரிந்துகொள்ளுதலின்படி நோவா கூறினது மிகவும் பொருத்தமற்றதாக இருந்தது, ஆகையால் அவர்கள் பயப்படாமல் இருந்தார்கள். ஆனால் நோவா, "ஆதாமும் ஏனோக்கும் தங்களுடைய தலைமுறையினரோடு நியாயம் தீர்க்கப்படுவார்கள் ஆனால் இந்த தலைமுறை பொருத்தவரை அது என்னுடைய செய்தி தொடர்பாக தான் நியாயம் தீர்க்கப்படும் மேலும் நீ ஆதாம் மற்றும் ஏனோக்கின் வித்தாக இருந்தால், என்னுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென் " என்று நீ சொல்லி என்னுடைய பேழைக்குள் வருவாய்" என்றான். நோவாவும் அவருடைய சிறிய வீட்டாரும் வெட்கமடைய தக்கதாக சில ஜனக் கூட்டத்தினர் மிகவும் சிரித்தார்கள்.
10 ஆனாலும் அந்த நாட்களில், அங்கு ஒரு வேதாகமும் இல்லை, ஏதேன் தோட்டத்தில் ஆதாமினிடத்தில் பேசினதை போன்று தெரிந்துகொள்ளப்பட்ட இனத்திற்கு தேவன் பேசினார். மேலும் ஒரு நாளிலே நோவா தன்னுடைய ஆவியில், மத்திய ஆகாயத்தில், ஒரு கழுகு பறப்பதை கண்டான். கழுகு ஒரு தீவை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது மற்றும் அங்கே ஒரு திரளான கணக்கில்லாத கோழிகள் இருந்தது மற்றும் அதினுடைய எண்ணிக்கை வானத்தின் நட்சத்திரங்கள் போன்று இருந்தது மற்றும் கழுகு கோழிகளை நோக்கி, "இன்னும் 40 நாட்களில் கடலின் மீன் இந்த தீவில் நீந்த வேண்டும்! இது கர்த்தர் உரைக்கிறதாவது! பறந்து என்னோடு கூட மலைகளோடு வா". என்றது. அதற்கு பிரதியுத்திரமாக கோழிகள் ஒன்றாக இவ்வாறு, "நாங்கள் மறுக்கிறோம், அது பொய்! ". என்றது. நோவா பார்த்துக்கொண்டிருந்தபோது, நீர் நிலை உயர்ந்து கொண்டே இருந்தது, கோழிகள் கத்திக்கொண்டிருந்தன, அவற்றின் அனைத்து வலிமையுடனும் குதித்தன. விரைவில் தீவு, கோழிகள் மற்றும் மரங்கள் தண்ணீரின் ஆழத்தில் இறங்கியது. மற்றும் அவனுடைய ஆவியை விட்டு தரிசனமானது வெளியேறினது மற்றும் நோவா தனக்குள்ளாக இப்படி சொல்லிக் கொண்டான்: "ஆனால் அந்த கோழிகள் என்னில் விசுவாசம் கொண்டிருந்தால், அவைகள் கோழிகளாக இருக்கும் வேளையில் எவ்வாறு அவைகளால் பறக்க முடியும் ?".
11 இந்த மேய்ப்பர்கள் விசுவாசிக்க விரும்பவில்லை என்றல்ல ஆனால் அவர்களுக்குள் விசுவாசிப்பதற்க் கென்று ஒன்றுமில்லை என்பதை தேவன் நோவாவிற்கு காண்பித்தார்... அவர்கள் விசுவாசிக்க விரும்பினாலும் கூட, அவர்களால் முடியவில்லை. இது நீங்கள் காட்டில் நுழைந்த பிறகு இரத்தம் வடியக்கூடிய ஒரு மரத்தை தேடுவதை போல இருக்கின்றது. நீங்கள் இல்லாத ஒன்றைக் கொடுக்கும்படியாக யாரோ ஒருவர் உங்களிடம் கேட்பது போல் இருக்கிறது. அது ஒரு எப்பிராயீமைக் "சிப்போலேத்" என்று சொல்ல கேட்பது போலாகும் ஆனால் அவனால் முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?
12 நோவா பேழைக்குள் நுழைந்தபோது, தேவன் சிறிது நேரம் கடக்கும் படியாக விட்டு வைத்தார், பின்பு தேவன் தாமே பேழையின் கதவைத் அடைத்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு செய்தியாளன் பூமியை விட்டு வெளியேறும் நாளில் இருந்து, பரலோகத்திற்கு செல்லும் பாதையானது ஒரு கூர்துனி கோபுரத்தை போன்று சுருங்க ஆரம்பித்துவிடும், பின்னர் அங்கு வெளியேறுலதற்க்கென்று ஒன்றும் இல்லை தேவன் மற்றொரு தலைமுறையினரை எழுப்பி பிறகு மற்றொரு தீர்க்கதரிசி செய்தியாளனை அனுப்புகிறார் . நீங்கள் பார்க்கிறீர்களா?
13 நோவாவுக்குப் பிறகு, அங்கே ஒரு மனிதன் இருந்தான் அவன் பெயர் மோசே. அவன் தன்னுடைய புகழை தேவனுடைய கிருபைக்கு மாத்திரமே கொடுத்தார். தெய்வீக இறையாண்மையில், பூமியின் மேல், தேவன் அவன் மீது ஒரு சாதகமான பார்வையை கொண்டிருந்தார். அவன் கோராகு, தாத்தான் மற்றும் அபிராம் ஆகியோரின் ஞானம், நுண்ணறிவு, புகழை கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் தேவனின் வாயாக இருந்தார்.
14 மோசே இடதுபுறமாக செல்ல சொன்னால், கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோர் எத்தனை அற்புதங்களையும் அடையாளங்களும் நடபிக்க செய்ததை பொருட்படுத்தாமல் நீங்கள் வலது புறம் போக வேண்டும் என்று கூறுவர்கள். இந்த எல்லா ஜனக் கூட்டத்தினரும் அவர்கள் பக்கத்தில் நின்றாலும், நீங்கள் மோசேயின் பக்கத்திலே நின்றுக் கொள்ளுங்கள். தேவனுடைய பக்கத்தில் உன்னை வைத்துக்கொள். எண்ணாகமம் 16 ல், நூற்றுக்கணக்கான ஜனங்கள், பூமியில் தேவன் ஒரு மனிதனைக் கொண்டு பேசுகிறார் என்று தெரியாத அனைவரும் விழுங்கப்பட்டார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
15 யூதர்கள் போலல்லாமல், புற ஜாதி ஜனங்கள் எந்த ஒரு தீர்க்கதரிசன கலாச்சாரத்தை கொண்டிருக்கவில்லை, ஆகவே அவர்கள் ஒரு தீர்க்கதரிசியிடம் வாதிடுகிறார்கள். அவர்களை வழி நடத்துகிறவர்கள் எப்பொழுதும் ராஜாக்களாகவும் பேரரசர்களாகவும் தங்களுடைய ஞானத்தினால் வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். இது மேய்ப்பனின் வகையாகும். நீங்கள் பார்க்கிறீர்களா? யூதர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரித்த காரணம் என்னவெனில் ஒரு தீர்க்கதரிசியை நிராகரிப்பது தேவனை நிராகரிப்பதாகும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். சாமுவேலுக்கு பிறகு, அவர்கள் அதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் அது ஒரு புறஜாதி மனிதனுக்கு ஒன்றையும் கூறவில்லை.
16 நாம் யாரை தீர்க்கதரிசி என அழைப்போம் என்று புறஜாதி ஜனங்கள் அறியாமல் இருக்கிறார்கள். யாரோ ஒருவன் அவர்களுக்கு அற்புதங்களைச் செய்யத் தொடங்குகிறான், அவர்களுக்கு அவன் தீர்க்கதரிசியாயிருக்கிறான். யாரோ ஒருவன் தனக்கு "தீர்க்கதரிசி" என்று ஒரு பட்டத்தை எடுத்துக் கொள்கிறான் பிறகு அவர்களுக்கு அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் யூதர்கள் ஒரு தீர்க்கதரிசி என்றால் என்னவென்று அறிவார்கள். ஒரு தீர்க்கதரிசி இன்னொரு தீர்க்கதரிசி சொன்னதைப் பிரசங்கிக்க வருவதில்லை என்று யூதர்கள் அறிந்திருக்கிறார்கள்.
17 ஒரு தீர்க்கதரிசி இன்று பூமிக்கு வந்தால், வேதாகமம் அவனுடைய முற்றிலுமானதாக இருப்பதில்லை. மனுக்குலம் அறியாத ஒன்றை கூற ஒரு தீர்க்கதரிசி வருகிறான். அவன் தனது காலத்தில், தனது தலைமுறையிலேயே தனித்துவமானவன். அவன் தனது மணி வேளையின் ஒளியும் இரட்சிப்புமாக வருகிறான். அவனுடைய காலத்தில், அவன் மட்டுமே இராஜ்யத்தின் திறவுகோளை வைத்திருக்கிறான், அவனை தவிர வேறு எவராலும் இரட்சிப்படைய முடியாது. அவனே வழியும், சத்தியமும் ஜீவனாக இருக்கின்றான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இவ்வாறு, இது வேதாகமத்தின் ஒவ்வொரு தீர்க்கதரிசி விஷயத்திலும் காரியமாக இருந்தது மேலும் இன்றைய தினம் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப் புவினிடத்தில் காரியமாக இருக்கின்றது.
18 நாம் தீர்க்கதரிசி என்று அழைப்பதை என்னவென்று கூட புறஜாதி தேசங்கள் அறியாதிருக்கின்றது. மற்றும் அவர்கள் இப்படியாக கவலை கொள்வார்கள். ஒரு சிறந்த ஆயக்காரன் ஜனங்களின் விசுவாசத்தை அழியாமற்பேணிகாக்க மட்டுமே கூடும் என்று ஒரு யூதன் அறிவான், ஆனால் தீர்க்கதரிசி செய்தியாளன் மட்டுமே தேவனுடைய சித்தத்தை அறிவான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு முன் நிலவிய பழைய ஏற்பாட்டில் பழைய உடன்படிக்கையில், ஆசாரியத்துவமானது, அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன், போதகன், மேய்ப்பன், பேராயர் மற்றும் இன்று நீங்கள் காணும் அனைத்தும் ஊழியங்களின் மாதிரியாக உள்ளது. ஒரு ஆசாரியன் தன்னுடைய மணி வேளையின் தீர்க்கதரிசி என்ன கூறினாரோ அதை மீண்டுமாக பேச வேண்டும். அவன் ஒரு புதிய உபதேசத்தை, புதிய வெளிப்பாட்டை கொண்டு வர எந்த உரிமையும் இல்லை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
20 நல்லது... அங்கே பூமியின் மேல் வல்லமையான தேவனுடைய மனிதர்கள் இருந்தார்கள்... அங்கே எரேமியா இருந்தான். ஆனால் எரேமியாவுக்கு முன் உரியா இருந்தான். அவனுடைய சிறுவயது மற்றும் இளம்பிராயத்தில் உரியா ஜெப ஆலயங்களுக்கு சென்ற போது, அவனுடைய கண்கள் பிரபலமான ஆயக்காரர்கள் தேவனுக்கு பயப்படுவதை மட்டுமே கண்டது, ஆனால் ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளுடைய தேவன் என்று அவன் விசுவாசித்த கர்த்தராகிய யெகோவா அவனை அழைத்தபோது யுத்தமானது துவங்கியது. பிழைக்கு எதிரான சத்தியத்தின் யுத்தம் துவங்கியது அவனுடைய மரணத்துடன் முடிவுக்கு வந்தது.
21 இரக்கம்! உரியா என்ன செய்தான்? நாம் எரேமியா 26: 15 முதல் 23-ஐ வாசிக்கலாம். எரேமியா அவர்களிடத்தில், "ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான். அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.
22 தேசத்திலே மூப்பானவர்களில் சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி: யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
23 கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான். யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.
24 அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான். இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனை வெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்." நீங்கள் பார்க்கிறீர்களா? உரியா ஓடிப்போன பொழுது, 'அவிசுவாசிகள் இவ்விதமாக சொல்லி இருப்பார்கள், "எகிப்திற்கு ஏன் ஓடுகிறீர்கள்? தேவன் தான் உன்னை அனுப்பினார் என்று நீ சொல்லவில்லையா?' இங்கேயே தரித்திரு, உன் தேவன் தாமே உன்னை பாதுகாக்கட்டும்" நீங்கள் பார்க்கிறீர்களா?
25 எரேமியாவைப் பற்றி வேதாகமம் கூறுகிறதாவது: எரேமியாவைக் கொலை செய்யக்கூடாதபடி ஆசாரியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் அறிவிக்கிற இளவரசர்களும் ஜனங்களும் இப்போது இருக்கிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு புறத்தில் திரளான தீர்க்கதரிசிகள் மற்றும் மதகுருக்கள் ஆனால் மறு புறத்தில் ஏரேமியா அவர்களை கண்டனம் செய்துக் கொண்டிருந்தான்...
26 மோசேயின் சுருள்களை தங்களுடைய கையில் கொண்டிருந்த மதகுருக்கள் மற்றும் தங்களோடு தேவன் பேசுகிறார் என்று பாசாங்கு செய்யும் தீர்க்கதரிசிகளின் கூட்டம், எரேமியாவை கொலை செய்ய விரும்பினார்கள். எரேமியாவின் தேவனும் இந்த தீர்க்கதரிசிகளோடு பேசி வழிநடத்துகிற தேவனும் ஒன்றல்ல என்று உங்களால் காண முடிகிறதா ?
27 இப்போது, இதை கவனிக்கவும்! ஜனங்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள்: நோவா எல்லோரையும் எதிர்த்து தன்னந்தனியாக எழுந்தான் மற்றும் அவன் சரியாக இருந்தான். தாமதமாக இருந்த போதிலும் மொரேசா ஊரானாகிய மீகா எல்லோரையும் எதிர்த்து தன்னந்தனியாக எழுந்தான். அது மிகவும் தாமதமாகி விட்ட போது சேமாயாவின் மகனான உரியா எல்லோரையும் எதிர்த்து தன்னந்தனியாக இருந்ததையும் கூட அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். எலியா எல்லாருக்கும் எதிராக தனியாக இருந்தான் மற்றும் அவன் சரியாக இருந்தான். ஆமோஸ் எல்லாருக்கும் எதிராக தனியாக இருந்தான் மற்றும் அவன் சரியாக இருந்தான். நீங்கள் பார்க்கிறீர்களா?
28 ஜனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? ஏசாயா எல்லோரையும் எதிர்த்து தனியாக இருந்தான் மற்றும் அவன் சரியாக இருந்தான். ஜனங்கள் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இல்லை! இந்த முறை நாம் இதை கவனமாக கருத வேண்டும் என்றார்கள்! எப்போதும் நம் அனைவரையும் எதிர்த்த ஒரு மனிதன் இருந்தான், அவனுடைய மரணத்திற்குப் பின் அவன் சரியானவன் என்று நாம் உணர்ந்தோம், இந்த முறை நாம் கவனமாக கருத வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 நாம் எரேமியா 26: 7 மற்றும் 8-ஐ எடுக்கலாம். நாம் அதை வாசிப்போம்: "எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள். சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப்பிடித்து: நீ சாகவே சாகவேண்டும் என்றார்கள்; ". உங்களால் மீண்டும் காணமுடிகிறதா?
30 சரித்திரத்தின் மூலமாக நாம் தீர்க்கதரிசி ஏசாயா துண்டுகளாக வெட்டப்படுவதை நாம் பார்க்கும் போது, காயினின் முகத்திற்கு முன்பாக நாம் பின்வாங்காமல் இருக்கும் வல்லமையானது தேவனுடையது என்று நாம் புரிந்துக் கொள்கின்றோம். எரேமியா 20:14 முதல் 18 இல் அறிக்கையிடப்பட்டதை போன்று எரேமியா அழுகையின் மையத்திற்கு சென்ற போது, பிரதான ஆசாரியன் பஸ்கூர் அவனை முகத்தில் அறைந்த பொழுது, எரேமியா 38. 7 ல் இதே போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் எரேமியாவை ஒரு குழியில் இறங்க செய்தார்கள், தேவனால் முன்குறிக்கப்படாத இந்த ஊழியம் எப்படி நிற்க முடியும். நீ தேவனிடத்திலிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் சபைகள் எப்படி உன்னை ஆசீர்வதிக்க முடியும்? நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31 அதன் பிறகு, தீர்க்கதரிசி எலியா. அதே யுத்தம் தொடங்கியது, பிழையின் ஆவிக்கு எதிரான சண்டையானது எலியாவின் எடுத்துக் கொள்ளப்படுதலில் முடிவடைந்தது. அவன் ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் தன்னுடைய மணி வேளையில் வாழ்ந்த ஜனங்களுக்கும் தனியாக எதிர்த்து இருந்தான். அதை நீங்கள் 1 இராஜாக்கள் 18 இல் காணலாம். அங்கே அவனுடைய பக்கத்தில் எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லை மற்றும் 1 இராஜாக்கள் 19:10 இல் அவன் இவ்வாறு கூறினான். "அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்." ஆனால் அந்த யூதர்கள், மோசே அவர்களுக்கு கூறின படியாக எலியா போன்ற கலகக்காரரும் மற்றும் மரியாதையற்ற தீர்க்கதரிசிகளை மட்டுமே கொன்றார்கள். அவர்கள் அதைக்குறித்து குற்றவுணர்வு கொண்டிருக்க ஒன்றும் இல்லாமல் இருந்தார்கள்.
32 எலியாவுக்குப் பிறகு 1 இராஜாக்கள் 22 இல் நான் ஜிம்லாவின் மகனான மீகாவைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். அந்த நேரத்தில், இஸ்ரவேலில் நானூறு வல்லமை வாய்ந்த தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். பில்லி கிரஹாம், ஏவால்ட் ஃபிராங்க், பருட்டி காசோங்கோ , யூஷே பிரைஸ், டாமி ஆஸ்போர்ன் மற்றும் யாங்க்கி சோ போன்றவர்களின் வகையான தீர்க்கதரிசிகள். குறைவான நேரத்தில், அவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தார்கள், அவர்கள் சந்தித்த மாநாடுகளையும் ஒருங்கிணைத்தார்கள். அவர்கள் கோட்பாடு வேறுபட்டிருந்தபோதிலும் அவர்கள் கிறிஸ்துவிற்குள்ளாக சகோதரர்கள். ஆனால் மீகா தனியாக இருந்தான், அவன் வந்தபோது தனியாக இருந்தான்.
33 1 இராஜாக்கள் 22:24 ல், மிகா ஆகாபை நோக்கி: ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். அதற்கு மிகாயா: நீ ஒளித்துக் கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்." அப்பொழுது தீர்க்கதரிசிகளில் ஒருவனான சிதேக்கியா வந்து, மீகாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவின் ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.?" இதற்காக மீகா சிறையில் அடைக்கப்பட்டார் என்று நாம் அறிந்திருக்கிறோம், மேலும் அந்த சண்டையானது அவருடைய மரணத்தோடு முடிவிற்கு வந்தது.
34 பிறகு தேவன் ஆமோஸை அனுப்பினார், நாம் அதை ஆமோஸ் 7:10 ல் வாசிக்கலாம்: அப்பொழுது பெத்தேலின் ஆசாரியனாகிய அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் குடும்பத்தின் நடுவிலே உனக்கு விரோதமாகச் சதிசெய்தான்; அவன் வார்த்தைகளையெல்லாம் தேசம் தாங்கவில்லை.
35 வசனம் 12 கூறுகிறது, "அப்பொழுது அமசியா ஆமோஸை நோக்கி: [நீ] தரிசனமானவனே, நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போய், அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு; பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான். ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னை யெகோவா அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா உரைத்தார்". நீங்கள் பார்க்கிறீர்களா?
36 நான் ஒரு தீர்க்கதரிசியும் அல்ல தீர்க்கதரிசியின் மகனும் அல்ல, தேவனை பற்றி நான் ஒன்றும் அறியாதவன் ஆனால் ஏப்ரல் 24, 1993 அன்று, மத்தேயு 25: 6 மற்றும் வெளிப்படுத்துதல் 12:14 ஆகியவற்றின் படி ஒரு பணியை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டேன். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. எலிசாவினால் இப்படியாக கூற முடியும் "நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல ஆனால் நான் என் வயலை உழுதுக் கொண்டிருந்தேன், பிறகு யெகோவாவின் சீட்டு என்மேல் விழுந்தது.
37 மிகவும் ஆவிக்குரிய மனிதன் அது பெத்தேலின் பிரதான ஆசாரியன் ஜனங்கள் மற்றும் ராஜாவின் ஒப்புதலின்படி ஆமோஸ் தீர்க்கதரிசியை துரத்தினான். இரக்கம்! அவன் சொல்வதைக் கவனித்துக் கொள்ளுங்கள், இது தான் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது என்று நீங்கள் காண்பீர்கள், அவன் இவ்விதமாக: "...தேசம் அவனுடைய அனைத்து வார்த்தைகளையும் தாங்கிக் கொள்ளாது... என்றான்
38 நம்மை மகிழ்விப்பது என்னவெனில் தேவனிடத்திலிருந்து வருவது எப்பொழுதும் வெல்லும் மேலும் நடுராத்திரி சத்தமானது ஜெயம் பெரும். உங்களால் ஒரு பூமியதிர்ச்சியை நிறுத்த முடியாதயெனில் பிறகு முழு பூமிக்கும் சென்றடைய தேவனிடத்திலிருந்து வந்த இந்த தீர்க்கதரிசன செய்தியை உங்களால் தடுக்க முடியாது... [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39 பின்னர் தேவன் யோவான் ஸ்நானகனை அனுப்பினார். அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியனாக இருந்தார், ஆனால் அவரிடமிருந்து எதுவும் பெறாமல் அவன் பாலைவனத்திற்கு சென்றான். தேவனே அவனை அனுப்பினார். அவன் மனிதனிடமிருந்து பெற்றுக் கொள்ள ஏதுமில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு தீர்க்கதரிசி தன் தலைமுறையிலே என்ன செய்கிறான்? அவன் முழு ஆசாரியத்துவத்தையும் தாக்குகிறான். ஆனால் தேவன் ஒரே நேரத்தில் இரண்டு தூதர்களை எழுப்புவதில்லை என்பதால், யோவான் ஸ்நானகன் கர்த்தராகிய இயேசுவுக்கு வழிவகுக்க காட்சியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. அது தான் நடந்தது.
40 பிறகு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரும்பினால் ஆன ஒரு கோலைக் கொண்டு இஸ்ரவேலை போஷிக்க துவங்கினார். ஆனால் ஆசாரியர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள், எசேனியர்கள் காரியங்களை வித்தியாசமாக கண்டார்கள். அவர்களைப் பொருத்தவரையில், அவர்கள் தவறாக இருக்கிறார்கள் என்று இயேசுகிறிஸ்து நினைத்தால், அவருக்கு செவிகொடுத்து பரலோகத்திற்கு செல்ல விரும்புபவர்களுக்கு அவர் தன்னுடைய சொந்த தேவாலயத்தை கட்டி அங்கே தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். மேலும் அங்கே பரலோகத்திலே யார் சரியாக செய்தது அல்லது தவறாக இருந்தது என்று நாம் காணலாம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காரியங்களை அந்த வழியில் பார்க்கவில்லை. அவரைப் பொருத்தவரையில், அவரே இந்த உலகத்தின் ஒளி மற்றும் சத்தியத்தின் பொருப்பாளராக இருந்தார். அவர் சண்டையில் இறுதிவரை உறுதியாக இருந்தார் அதனுடைய முடிவை நாம் அறிந்திருக்கிறோம் அதாவது செய்தியாளனின் மரணம். பிறகு இறுதியாக, எல்லாவற்றுக்கும் எதிராக அவர் தன்னந்தனியாக இருப்பதை கண்டார். ஜனங்களுக்கு எதிராக தனியாக இருந்தார். ஏரோதுக்கு எதிராக தனியாக. பிலாத்துவுக்கு எதிராக தனியாக. யோவான் 9:22 கூறுகிறதாவது "...ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்." நீங்கள் பார்க்கிறீர்களா?
41 இன்றும், அதே பிசாசின் புத்திரர்கள் பூமியின் மேல் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் கூறுவதில்லை ஏனெனில் அவர்கள் நடுராத்திரி சத்தத்தை பற்றி பேசும் போது ஒரு வேளை இதை பிரசாரமாக்கி இதை பிரபலமடையச் செய்கிறார்கள் என்று அவர்கள் தங்களுக்குள்ளாக நினைக்கிறார்கள். ஆனால் இறுதியாக இந்த புத்தகத்திற்கு எதிராக எச்சரிப்பார்கள். இதோ, நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். சிலர் இதிலிருந்து அறிவை பெற்றுக்கொள்ளும்படி படிப்பார்கள் அதே சமயத்தில் மற்றவர்கள் முன்னெச்சரிக்கையாக இதைக்குறித்து பேச மாட்டார்கள் ஏனெனில் இது தேவனிடத்திலிருந்து வந்த காரியமாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் பிசாசின் புத்திரர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
42 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசங்கம் செய்யும் போது பரிசேயர்கள் தங்களுடைய ஜெப ஆலயங்களில் இவ்விதமாக கூறினார்கள்... சகோதரர்களே, பரிசேயர்கள் மாபெரும் ரபியை அழைத்திருந்தார்கள், அவன் யகோவாவிற்கு முன்பாக மகத்தான இறையியல் வல்லுநர் அன்னாளிலே தன்னுடைய அவனுடைய நீண்ட சாடின் கவுன் அந்த நாளில், நீண்ட சாட்டின் கவுன், மற்றும் தன்னுடைய நீண்ட தாடியுடன், மோசேயின் சுருள்களை வாசித்தபிறகு, உலகத் தோற்றம் முதற்கொண்டு சாத்தான் பூமிக்கு அனுப்பின மகத்தான கள்ளத் தீர்க்கதரிசி அது இயேசு கிறிஸ்து என்று அவன் காண்பித்தான். அவன் ஜனங்களை கடினப்படுத்துவதற்காக, இஸ்ரவேலை கடினப்படுத்துவதற்காக வார்த்தைகளை கூறினான்.
43 அவன் இவ்விதமான வார்த்தைகளை கூறினான், "எகிப்திலிருந்து நம்மை வெளியேற்றுவதற்கு யார் தியாகம் செய்தது? மோசேயா அல்லது இயேசுவா?... எல்லோரும் மோசே என்று சத்தமிட்டனர். அதற்கு அவன்: இந்த மோசே இன்னும் உயிரோடிருக்கிறார், அவரே நம்முடைய தீர்க்கதரிசி. மோசே மரிக்கவில்லை என்று நிரூபித்துக் காட்டினான் மேலும் அவன் மோசேயின் கல்லறையை எவரெல்லாம் கண்டீர்கள் என்று கேட்டான்?'... மோசே மரிக்கவில்லை. தேவன் அவரை மறைத்தார்
44 மோசே சொன்னார்: நான் இறந்துவிட்டேன் என்று யாராவது ஒரு நாள் உங்களிடம் சொன்னால், அவரை நம்பாதீர்கள். தீர்க்கதரிசிகள் இறப்பதில்லை அவர்களுடைய வார்த்தைகள் உயிர் உள்ளதும் நித்தியமானவைகள். இந்த பரிசேயன் : " தேவன் மோசேயிடம் இரண்டு அடையாளங்களைக் கொடுத்தார். அந்த இயேசுவிற்கு தேவன் எந்த அடையாளத்தை கொடுத்தார்? அவன் ஒரு வஞ்சகன் ஏனெனில் வேத வசனங்கள் மேசியா இஸ்ரவேலின் மேய்ப்பனாக இருப்பார் என்று கூறுகிறது, பிரதான ஆசாரியனான மெல்கிசேதேக்கு மற்றும் ஆசாரியர்கள் லேவியின் கோத்திரத்தில் இருக்க வேண்டும். ஆனால் இந்த இயேசு யூதேயாவின் கோத்திரத்தை சேர்ந்தவன் அது மோசே நமக்கு கூறின வரிசையில் ஒத்திருக்கவில்லை.
45 மேலும் இந்த இயேசு தேவனுடைய மனிதர்களையும் தேவாலயத்தையும் அவமதிப்பதை தவிர ஒரு நன்மையும் கூறுவதில்லை. அவனுடைய செய்தி அவமதிப்புக்குரியது, விரியன் பாம்புக் குட்டிகளே, மாயக்காரர்களே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, மற்றும் அது போன்றவைகள். ஜனங்களை துஷ்பிரயோகம் செய்ய தேவன் ஒரு மனிதனை அனுப்ப முடியாது. யூதர்கள் அனைவரும் களிப்புடன். அவர்கள் மகிழ்ச்சியுடன் கத்தினார்கள், அவர்கள் குதித்தார்கள்... நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் : இந்த இயேசு பலவீனமானவர்களை வஞ்சிப்பதற்காக ஜெப ஆலயங்களின் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை பயன்படுத்துவதை தவிர நன்மையானதை ஒன்றும் சொல்வதில்லை ஆனால் தேவன் ஆசீர்வதிக்கப்படுவராக ஏனெனில் நாங்கள் வேத வசனத்தில் தேர்ச்சியடைந்து இருக்கின்றோம்! அல்லேலூயா!" மேலும் அந்த ஜன கூட்டத்தினர், "ஆமென்! ஆமென்!! ஆமென்!! " என்றனர்.
46 இந்த ரபி தொடர்ந்து, "இந்த இயேசு அனைவரையும் தன்னிடத்திற்கு மாத்திரமே வழிநடத்த விரும்புகிறான், ஆனால் தேவன் நம்மிடம் கேட்பது மோசேயின் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதாகும்! மேலும் அதை நாம் பரிசேயராக, சதுசேயராக, வெறியர்களாக, ஹெலனிஸ்டுகளாக, அல்லது ஏரோதியனாக எங்கு இருந்தாலும், எந்த தேவாலயத்தில் இருந்தாலும் நாம் அதை கடைபிடிக்கலாம். உபதேசத்தின் வேறுபாடுகள் ஒன்றும் இல்லை! ஆனால் நம்முடைய பொருளெல்லாம் மோசே தான். ஒரு நல்ல ஜீவியத்தை ஜீவிக்க வேண்டும்!!! பரிசேயர்கள் சதுசேயர்கள் ஹெலனிஸ்டுகள், வெறியர்கள் ஈஸ்னீஸ் மற்றும் பலர் அது கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை இனங்கள் போன்றவைகள். பரலோகத்தில், நாம் ஒற்றை இனத்தை கொண்டிருப்போம்!! நாம் வெவ்வேறு பூக்களைக் கொண்டிருக்கும் தேவனின் காய்கறி தோட்டம்! அல்லேலூயா... நாம் மோசேயினுடையவர்கள்!!! மோசே மாத்திரம்!!! மோசே அனைத்தையும் கூறியிருக்கிறார்!!! மோசே அனைத்தையும் வெளிப்படுத்தினார்!!! நீங்கள் பார்க்கிறீர்களா?
47 இந்த பரிசேயர் தன்னுடைய அனைத்து வலிமையுடன் சத்தமிட்டான், ஜனங்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரமாக இருந்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பொய்யான தீர்க்கதரிசி என்று அவர்கள் உறுதியளித்தனர். நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த ஜெப ஆலயங்களிலே அவர்கள் பேசுகிற இந்த இயேசு யார்? ஆனால் எல்லா ஜெப ஆலயங்களில் இருந்தும் எல்லா கோத்திரத்திலிருந்தும் சீஷர்கள் வந்திருந்து இந்த இயேசு யார்? எல்லா சபைகளும் பேசுகின்ற, போதகர்கள் அவர்களுடைய சபைகளில் பிரச்சாரம் செய்கின்ற இந்த காக்குவ் பிலிப்பு யார்?
48 எல்லோரும் அவருக்கு எதிரானவர்கள் , எல்லோரும் அவன் சிறையில் இருக்க, மரிக்க விரும்புகிறார்கள், பிறகு இந்த இயேசு யார்? பூமியிலுள்ள சகல ஜாதிகளிலிருந்தும் சகல விசுவாசிகளும், பூமியின் சகல மொழிகளிலிருந்து இவ்விடத்திற்கு வருகின்ற இந்த தீர்க்கதரிசி யார்? இந்தத் தீர்க்கதரிசி யார்? உலகின் அனைத்து சபைகளிலிருந்தும் இவனுடைய விசுவாசிகள் வருகின்றார்களே, இந்தத் தீர்க்கதரிசி யார்? இந்தத் தீர்க்கதரிசி யார்? இதுதான் சரித்திரம் தன்னைதான் மீண்டுமாக பிரதிபலிக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
49 சகோதரர்களே, இந்த ரபி மிகவும் சொற்பொழிவாற்றி, அவன் மிகவும் நம்பிக்கை அளித்திருந்தான், அவன் மிகவும் வேதாகம பூர்வமாக இருந்தான், , ஒரு மணி நேர பிரசங்கத்திற்குப் பிறகு, அது ஒரு தெய்வமயமாக இருந்தது. அவர்கள் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினார்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றாததால் தேவனை ஆசீர்வதித்து இயேசு கிறிஸ்துவினால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக தங்களிடத்தில் விடுவிக்கும்படியாக தேவனிடத்தில் ஜெபம் செய்தார்கள். அவர்கள் இன்றும் மீண்டுமாக அதை தான் செய்வார்கள்.
50 ஆனால், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு ஆகிய நான், நானும் அவர்களுக்கு பதில் அளித்து அவர்களுக்கு கூறுகிறதாவது அவர்கள் ஆகாபின் காய்கறி தோட்டமாக இருக்கிறார்கள், அந்த தோட்டத்திற்காக அவர்கள் நாபோத், தீர்க்கதரிசிகள் மற்றும் இயேசுவை கொன்றார்கள், மேலும் இந்த செய்தியை மீண்டும் ஆக சிலுவையில் அறைய முயற்சி செய்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இது இரத்தம் மற்றும் சாபத்தின் ஒரு தோட்டமாகும்! இந்த தோட்டத்திற்காக பிரன்ஹாமிஸ்டுகள் வில்லியம் பிரான்ஹாமின் செய்தியை கலப்பிடம் செய்தார்கள்.
51 நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த ரபீயின் செய்தியில் பல பிசாசுகள் இருக்கின்றன, அவற்றில் இறுதியானது: "மோசே எல்லாவற்றையும் வெளிப்படுத்தினார்! ". அது ஒரு பழைய பிசாசு! பவுல் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அறிவித்து வந்தபோது, அந்த பழைய பிசாசு "இயேசு எல்லாவற்றையும் வெளிப்படுத்தினார்!". வில்லியம் பிரான்ஹாம் பிரசங்கித்தபோது, அதே பிசாசு, "வேதாகமம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தியுள்ளது!" என்றது. நடுராத்திரி சத்தம் இன்று ஒலிக்கும் போது, அதே பழங்கால பிசாசு அந்தப் சர்ப்பத்தின் வித்துக்கள் இப்படியாக சொல்லும், "வில்லியம் பிரான்ஹாம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார்!". அவர்கள் அதை சொல்லும்படியாக கடமைப்பட்டிருக்கிறார்கள் ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் அதை சொன்னார்கள். அது அவர்களின் இரத்தத்தில் உள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா? புதரிலே ஊர்ந்து செல்லும் பாம்பின் ரத்தத்தை குறித்து நான் பேசுகிறேன்.
52 வெவ்வேறு குரங்கு வகைகளும் வெவ்வேறு இரத்த குழுக்கள் இருப்பதை போன்று, எனவே எங்களுக்கும் இந்த செய்தி விசுவாசிக்க முடியாதவர்களுக்கும் இடையில் ஒரு இன உறவு வித்தியாசம் உள்ளது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
53 அதே சமயத்தில், உண்மையில் மோசே எல்லாவற்றையும் வெளிப்படுத்தவில்லை, அதனால் தான் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்!... நீங்கள் பார்க்கிறீர்களா? 1 தெசலோனிக்கேயர் 4: 16 முதல் 18-ல் உள்ளபடி எடுத்துக் கொள்ளப்படுதல் எவ்வாறு நடக்கும் என்பதை பவுல் எல்லாவற்றையும் வெளிப்படுத்தவில்லையா? ஆண்டவர் வருமட்டும் இதைக்கொண்டு ஆறுதல் அடையும்படி ஜனங்களுக்கு பவுல் கூறவில்லையா? ஆகையால் இப்படியாக தேவன் சில ஜான் வெஸ்லி, மார்ட்டின் லூதர், வில்லியம் பிரான்ஹாம் ஆகியோரை அனுப்பினார் மற்றும் எவ்வாறு தேவன் இனி ஒரு போதும் பூமியின் மேல் தீர்க்கதரிசிகளை அனுப்புவதில்லை? நீங்கள் பார்க்கிறீர்களா?
54 ஆனால் மர்மமான காரியம் என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவின் செய்தி வளர்ந்துகொண்டே போயிற்று, அவருடைய எதிரிகள் தங்கள் நலன்களைப் பார்த்து, அச்சுறுத்தப்பட்ட, ஆலோசனைக் குழுவைக் நடத்தினார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? இரட்சிப்பு ஏற்கெனவே கட்டப்பட்ட தீர்க்கதரிசன வெளிப்பாட்டின் அஸ்திவாரத்தின் மீது மட்டுமே அவர் சொன்னது உண்மை. ஆனால் மத்தேயு 16: 18-ல் இல்லை. ஆனால் உலகத் தோற்றத்திற்கு அஸ்திவாரமிடுவதற்கு முன்பிலிருந்து. ஆயினும் இயேசு கூறினவைகள் மோசேயோடு வரிசையில் இல்லாமல் இருந்தாலும் நாம் விசுவாசிக்க வேண்டும்! அவருடைய சீஷர்கள் சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் கைகளை கழுவாவிட்டாலும், நாம் விசுவாசிக்க வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
55 பராபாசைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்டியது ஆசாரியர்கள் என்று வேதாகமம் நமக்கு கூறுகிறது! நாம் மத்தேயு 27: 20-ஐ வாசிக்கலாம்: "பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்." நீங்கள் பார்க்கிறீர்களா? கச்சிதமாக எல்லா தீர்க்கதரிசிகளின் நாட்கள் போலவே இருக்கின்றது. இன்று காக்குவ் பிலிப்புவிற்கு எதிராக அந்த மேய்ப்பர்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களை எச்சரிப்பார்கள். இது சரித்திரம் தன்னைதான் மீண்டுமாக நிகழ்த்துகின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா?
56 மேலும் மத்தேயு 23: 34 மற்றும் 35-ல் அவர் தீர்க்கதரிசிகளை மீண்டுமாக பூமியின் மேல் சத்தியத்தோடு அனுப்புவார் என்றும், மத உலகம் அவர்களை நிராகரித்து அவர்களைத் துன்புறுத்தும் என கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முன்னுரைத்தார். முழு உலகமும் அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு நினைவுச்சின்னங்களை உருவாக்க நிராகரிக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
57 இப்போது முடிப்பதற்காக மத்தேயு 23 ஐ மீண்டுமாக எடுக்கலாம்: "ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்."
58 நல்லது! கர்த்தர் என்ன கூறுகிறார்? நான் உங்களுக்கு தீர்க்கதரிசிகளை அனுப்பினேன்? இல்லை! ஆனால் நான் எதிர்காலத்தில் உங்களுக்கு அனுப்புகிறேன், தீர்க்கதரிசிகள்! நீங்கள் சிலரை கொலை செய்தீர்களா? இல்லை! ஆனால்... "சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்." கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியிலே தீர்க்கதரிசிகளை அனுப்புவார், பழைய ஏற்பாடு போன்ற தீர்க்கதரிசிகள் அனுப்புவார்.
59 தீர்க்கதரிசி என்றால் என்ன? எபிரேய தோற்றத்தில் நபி என்றால் "செய்தித் தொடர்பாளர்" என்று பொருள். அதினுடைய பன்மை என்பது நெபிம், அதாவது "செய்தித் தொடர்பாளர்கள்" என்று சொல்லப்படுகிறது. ஒரு அபிஷேகத்தை சுமப்பவன் அல்லது ஒரு அதிசயம் செய்கிறவன் அல்ல, ஆனால் ஒரு செய்தி தொடர்பாளர்! ஒரு தீர்க்கதரிசியானவன் முதன் முதலாக மனிதகுலத்திற்கான தேவனின் செய்தியை அறிவிக்கிறான்.
60 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை பூமியில் தேவன் அனுப்பும்போது, பூமியில் இன்னும் சத்தியம் இல்லை என்று பொருளாகும். மேலும் அவன் தேவனுக்கென்று தேவனுக்கு மட்டுமே உரிய அதிகாரத்தோடு அவருக்காக பேசவும், நியாயம்தீர்க்கவும் கண்டனம் செய்கிறான். ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் பூமியில் இருக்கும்போது, அவன் மூலமாக அன்றி இனி ஒருபோதும் சத்தியமும் இரட்சிப்பும் இல்லை. அவனை தவிர வேறெவருமே தேவனை சேவிக்க முடியாது. தேவன் அவனுடைய செய்திகளை அடையாளங்களையும் அற்புதங்களையும் உறுதிப்படுத்துகிறார். அவன் உண்மையானவனெனில், மத உலகம் அவனை நிராகரிக்கும். அவன் அனைத்தையும் தனியாக எதிர்த்து இருப்பான். ஏன்? ஏனென்றால் அவன் பலருடைய நலனுக்கும் அதிகாரத்துக்கும் அச்சுறுத்தலின் பிரதிநிதியாக இருக்கின்றான். எந்த ஒரு நேரத்திலும் எவனொருவனும் எதையாவது இழக்காமல் அவனை நம்ப முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
61 சபையிலே பாருங்கள்! அங்கே அமர்ந்திருக்கும் ககோதரர் ஆஸ்கர் அவர்களை நீங்கள் பாருங்கள், மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் ஒரு சுவிசேஷ சபையில் ஒரு துணைப் போதகராக இருந்ததை நீங்கள் காணலாம். பாஸ்டர் அகோப் மற்றும் பலர். அவர்கள் போதகர்களாக இருந்த அவர்கள் வெறுமனே விசுவாசிகளாக மாறிவிட்டார்கள்? அது எளிதல்ல, ஆனால் பிசாசின் பிள்ளைகளுக்கு எது சாத்தியமில்லையோ அது தேவனுடைய பிள்ளைகளுக்கு சாத்தியம். நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் தங்கள் குடும்பங்கள், தங்கள் சபைகள் மூலம் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறவர்களுக்கு எப்படி கூடும்? நீங்கள் பார்க்கிறீர்களா?
62 ஒருவன் ஒரு தீர்க்கதரிசியை போல பாவித்து அவன் மற்ற தீர்க்கதரிசிகளோடு சேர்ந்து கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கலந்துரையாடலுக்காக சேர்ந்துக் கொண்டால், ஓடிவிடுங்கள் அது ஒரு ஓநாய்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
63 இப்பொழுது, பரலோகங்களின் தேவன் மனு குலத்திற்கு கூறுகிற இந்த உவமையை கேளுங்கள்: ஒரு ஆடு அதன் தொழுவத்தை விட்டு வெகு தூரம் சென்றது, அதினுடைய சிறார்களிடத்தில் விதிமுறைகளை விட்டுச் சென்றது, "கதவை மூடிக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள் மற்றும் நான் திரும்பி வரும் வரை திறக்க வேண்டாம்!". அதற்கு அவைகள், "அம்மா, நாங்கள் புரிந்துகொள்கிறோம் ஆனால் நீங்கள் திரும்பி வரும் பொழுது எங்களுக்கு நிறைய புல் கொண்டு வாரும் என்று சொன்னது!"... அவள் அவைகளை அன்போடு நுகர்ந்து நடந்து சென்றது.
64 உடனடியாக, ஒரு ஓநாய் வந்து நின்று, "ஓ நீங்கள் ஏற்கனவே தூங்கிக்கொண்டிருக்கிறீர்களா? கதவைத் திற நான் உன்னைப் போன்ற ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்கிறேன், நீ வேண்டிக்கொண்டிருக்கிற புல் உன் தாயின் சார்பாக புல் கொண்டு வந்திருக்கின்றேன். கதவைத் திற!". என்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? அவைகளுடைய தாயாரின் வார்த்தையுடன் வந்தது. அவர்களுடைய முற்றிலுமானதினுடைய வார்த்தை. அது தேவனுடைய வார்த்தையோடு வந்தது. ஆனால் அந்த ஆட்டுக்குட்டிகள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு, "நீ எங்களில் ஒருவனா? " என்று கேட்டது, அதற்கு அந்த ஓநாய் பிரதியுத்தரமாக: "நான் உங்களில் ஒருவன், திறந்து பார் அப்பொழுது நீ என்னுடைய வெண்மையான வெள்ளை கம்பளியை காண்பாய் மற்றும் நான் உங்களில் ஒருவன் என்பதை நீங்கள் காண்பீர்கள் எனறது". அப்பொழுது, ஒரு ஆட்டுக்குட்டிகளில் ஒன்று கதவுகளுக்கு கீழே பார்ப்பதற்கு ஞானமாக இருந்து பிறகு அது என்ன கண்டது? குளம்புகள் அல்ல ஆனால் நகங்களுடன் ஓநாயின் பாதங்கள் அடர்த்தியான ஆட்டின் தோலின் கீழ் இருந்தது. அதன் பிறகு, "இது ஒரு ஓநாய்! கதவின் கீழ் அவனுடைய பாதங்கள் பாருங்கள்!". என்று சத்தமிட்டது!" [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஓநாய் கண்டுபிடிக்கப்பட்டதை உணர்ந்து ஒடி விட்டது, நீங்கள் பார்க்கிறீர்களா?
65 நமக்கு புல் தேவை என்பது உண்மைதான், அதாவது, அற்புதங்கள் மற்றும் வார்த்தை ஆனால் நாம் மீண்டும் வியாதிப்பட்டு இறந்தும் கூட விடுவோம் என்பதை நாம் அறிவோமாக. நாம் நம்முடைய ஆத்துமாக்களை அற்புதங்களின் வஞ்சனையினால் கட்டப்படாமல் இருப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 25 இன் பிரகாரமாக ஒரு புத்தியுள்ள சபையை விரும்புகிறார் அவர்தாமே ஞானத்தின் முழுமையாக இருக்கின்றார்.
66 நோவா, எரேமியா, எலியா மற்றும் அனைத்து தேவனின் உண்மையான தீர்க்கதரிசிகள் ஆகியோரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டவைகளின்படி, ஒரு தீர்க்கதரிசியானவன் நெருங்கி வந்து, அவன் ஒரு இறையியல் பயிற்ச்சி ஒன்றைப் பின்பற்றினதாக கூறினால், அது ஒரு ஓநாய்! ஒரு தீர்க்கதரிசியானவன் தன்னுடைய தலைமுறையின் வெளிச்சமாகிய ஒரு செய்தியில்லாமல் ஆனால் ஒரு சபையோடு அணுகினால், அது ஒரு ஓநாய்!
67 ஒரு தீர்க்கதரிசியானவன் தன்னுடைய மணி வேளையின் தீர்க்கதரிசன செய்தியில்லாமல் ஒரு இயக்கத்துடன் அல்லது ஒரு ஊழியத்துடன் அல்லது வார்த்தையின் அறிவோடு அணுகினால் அது ஒரு ஓநாய்! அவன் தன்னுடைய தலைமுறையின் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின் கண்களை திறக்கின்ற ஒரு தீர்க்கதரிசன செய்தியுடன் வர வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
68 தேவனுடைய வார்த்தை ஒரு தீர்க்கதரிசியிடம் மாத்திரமே வருகின்றது, அந்த தீர்க்கதரிசி வார்த்தையோடு ஜனங்களிடத்தில் வருகிறார், ஏனென்றால் ஆதியிலே வார்த்தை இருந்தது, நாம் தேவனின் தூய பிள்ளைகள் என்றால், வார்த்தையின் தூய உற்பத்தி பொருளாக இருந்தால், எல்லோரும் அதை நிராகரிக்கும்போது நாம் விசுவாசிப்போம்.
69 திருச்சபை என்பது சொற்பொருள் விளக்கத்தினபடி அவர்களுடைய மணி வேளையின் செய்தியைச் சுற்றி கூடும்படியாக சபைகளிலிருந்து வந்த அனைவரின் தொகுப்பையும் வரையறுக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு தீர்க்கதரிசி தோன்றிய மாத்திரத்திலேயே வேறு ஒரு தீர்க்கதரிசியிடம் கூட்டமைத்துக் கொண்டு வெவ்வேறு சபைகள், இயக்கங்கள் அல்லது ஊழியங்களை அவர்கள் நிறுவினால் அவர்கள் ஓநாய்கள் மற்றும் அவர்களை வழி நடத்துவது பிசாசின் ஆவி என்று அவர்களுக்குத் தெரிவிக்காமல் இருக்காதீர்கள்.[ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
70 ஒரு மனிதன் அணுகி வந்து, அவன் தீர்க்கதரிசி என்று சொல்லும்போது, அவனுடைய அழைப்பு, பணி நியமனம் மற்றும் வேதாகமத்தில் அவன் செய்வதை குறித்து தேவன் எங்கு கூறியிருக்கிறார் என்று அவனிடம் கேளுங்கள். உதாரணமாக: யோவான் ஸ்நானகன் வருவான் என்று ஏசாயா 40: 3-ல் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் யோவான் ஸ்நானகன் தாமே அதை மத்தேயு 3: 1 முதல் 3-ல் கூறியிருக்கின்றான்..
71 ஏசாயா 61 கர்த்தராகிய இயேசுவை அறிவித்தது மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை லூக்கா 4: 16 முதல் 21-ல் கூறியிருக்கின்றார். மேலும் ஏசாயா 49: 6 பவுலை குறித்து பேசுகின்றது "நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்." அதை பவுல் அப்போஸ்தலர் 13: 47-ல் கூறியுள்ளார்…
72 இறுதியாக, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்: ஏவால்டு ஃபிராங்க் உட்பட எல்லோரும் நாம் நடுராத்திரியில் இருக்கின்றோம் என்று இனங்கண்டு கொள்கின்றார்கள் மற்றும் வில்லியம் பிரன்ஹாம் நாம் அவருடைய ஊழியத்தின் முடிவில் நடு ராத்திரிக்கு சில நிமிடங்களில் நாம் இருக்கின்றோம் என்றார். வில்லியம் பிரன்ஹாமிற்கு நாற்பது ஆண்டுகள் கழித்து, நாம் நடு ராத்திரியில் எப்படி இல்லாமல் இருப்போம். நீங்கள் பார்க்கிறீர்களா? மற்றும் தானியேல் 12 அடிப்படையில், விசுவாசிக்க உங்களுக்கு மத்தேயு 25: 6 தேவையாக இருக்கின்றது. மேலும் வெளிப்படுத்துதல் 12: 14-ஐ அடிப்படையாக, நடுராத்திரி சத்தம் இருக்கின்றது என்று விசுவாசிக்க உங்களுக்கு மத்தேயு25: 6 தேவையில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
73 சாயங்கால வேளையில் அக்னி ஸ்தம்பத்தை வெறுமனே ஆசானின் ஒரு மேகம் என்று சாத்தான் கூறினான் மேலும் நடுராத்திரியில் மத்தேயு 25:6 வெறுமனே ஒரு உவமை என்று அவன் உங்களிடத்தில் கூறுகிறான், அவனிடத்தில் அதை காண்பியுங்கள். யோசுவா 6 ஐ காண்பியுங்கள், 1 இராஜாக்கள் 19 ஐ காண்பியுங்கள் அவனுக்கு முழு வேதாகமத்தையும் காண்பியுங்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
74 இப்போது, ஒரு தரிசனத்தில் கவனியுங்கள், வில்லியம் பிரான்ஹாம் தன்னுடையவர்களோடு கூட்டிச்சேர்க்கப்பட்டார். அவருடைய மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை அவர் பார்க்கும்படி தேவன் அனுமதித்தார். ஆனால், வில்லியம் பிரான்ஹாம் மோசேயைப் பார்க்கவில்லை என்பதை கவனிக்கவும், அவர் எரேமியாவையோ, பவுலையோ மார்ட்டின் லூதரையோ அல்லது ஜான் வெஸ்லி ஆகியோரைக் பார்க்கவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒவ்வொரு செய்தியாளனும் அவருடைய கூட்டத்தினரோடு இருந்தார்கள்.
75 செய்தியாளன் உள்ளே போகும் போது, தேவன் கதவை அடைக்கின்றார், ஏனெனில் இந்த தலைமுறையின் கிருபையின் காலம் குறைந்து முடிவடைகிறது மீண்டுமாக அந்தகாரம் மூடுகின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? நோவா பேழைக்குள் சென்ற போது, ஏழு நாட்களுக்கு பூமிக்கு கிருபை நீட்டி அளிக்கப்பட்டது! ஆனால் இது எப்பொழுதும் அப்படியாக இருந்ததில்லை ஏனெனில் மோசே தன்னுடைய ஜனக் கூட்டத்தாருடன் சேர்ந்தபோது, கதவு அடைக்கப்பட்டது. மோசே தன்னுடைய ஊழியத்திற்குப் பின் திரும்பி சென்றபோது, மோசே மற்றும் அவனுடைய ஜனத்தாருக்கு கதவு அடைக்கப்பட்டது. யோசுவாவிலிருந்து எவரும் மோசேயுடன் உள்ளே போக முடியவில்லை.
76 இது ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடு ஆகும். அதற்குப்பின்பு வந்த ஒவ்வொருவரையும், தனக்கு பின் எண்ணெயை விற்பவனிடம் போகச் சொன்னான் அதாவது சொல்ல வேண்டுமானால் யோசுவா. நித்திய ஜீவனைப் பெற யோவான் 6: 28-29 பிரகாரமாக நாம் விசுவாசிக்கும் படியாக தேவன் எப்பொழுதும் பூமியின் மேல் ஒரு மனிதனை கொண்டிருக்கின்றார். அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
77 அங்கே வில்லியம் பிரான்ஹாமுடன் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: "பவுல் அவருடைய உட்டத்தினரோடு இருக்கிறார்! நீ உன்னுடைய ஊழியத்தை முடிக்கும்போது, நீ எங்களுடன் கூட்டிச் சேர்க்கப்படுவாய், நீ பிரசங்கித்தவைகளால் நீ நியாயந்தீர்க்கப்படுவாய்..." பவுல் வரும்போது, அவன் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருந்தபோது என்ன செய்தான் என்று அவன் சொல்வதில்லை ஆனால் அந்த ஒளியானது தமஸ்குவுக்குப் போகும் நாளில் பவுலிடம் அந்த சத்தமானது அவனிடத்தில் பேசின பொழுதிலிருந்து யாவும் ஆரம்பிக்கும். அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 ஆம் அதிகாரத்தில் உள்ள சத்தமானது தேவனிடமிருந்து வந்திருந்தால், அவனைப் பின்பற்றியவர்கள் அனைவரும் பாக்கியவான்கள் அவனைப் பின்பற்றாத அனைவருக்கும் ஐயோ. நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
78 பவுல் தனது ஜனக் கூட்டத்தாரோடு வருவான். அவன் முன்னே வந்து தன்னை அறிமுகப்படுத்தி, "ஆண்டவரே, ஏசாயா 49: 6-ன் ஊழியத்தின் படியாக நீர் ஒரு தரிசனத்தில் என்னை அழைத்தீர், நான் பிரசங்கித்த எல்லாவற்றையும் உம்மிடமிருந்து நான் பெற்றுக்கொண்டேன்"... தேவன் பவுலை இனங்கண்டுக்கொள்ளவில்லை என்றால் பவுலை பின்தொடர்ந்த அனைவருக்கும் அனைத்தும் முடிந்தது.
79 வெள்ளை சிம்மாசனத்தின் நியாயத்தீர்ப்பிற்கு மோசே வருகையில், அவன் "ஆண்டவரே, ஒரு நாள் நாங்கள் எகிப்த்திலே இன்னுமாக இருக்கும் பொழுது எரியும் முற்செடிக்குள் இருந்து ஒரு தேவதூதன் என்னை அழைத்து பணி நியமனம் செய்தான்.." . அதே போன்று, அனைவரும் பூமியிலே தாங்கள் அறிந்த தங்களுடைய ஜனக் கூட்டத்தாரோடு அனுகுவார்கள். மார்ட்டின் லூதர் மற்றும் அவனுடைய கூட்டத்தினர்... ஜான் கால்வின் மற்றும் அவனுடைய கூட்டத்தினர்... ஜான் வெஸ்லி மற்றும் அவனுடைய கூட்டத்தினர்... அவர்கள் அவர்களை அறிந்திருந்து மற்றும் அவர்களுடன் பூமியில் நடந்தார்கள்.
80 அவர்களுக்குப் பின்னால் லூத்தரன்கள் வருவதை நாம் இப்போது காண்கிறோம். லூத்தரன்கள் இப்படியாக, "ஆண்டவரே, உமது பரிசுத்த தீர்க்கதரிசியாகிய மார்டின் லூதரையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம்" என்றார்கள். அவர்கள் சொன்னபோது, லூத்தர், "என்னையா!!! நான் உங்களை அறியேன்!!! நீங்கள் என்னை எங்கே பார்த்தீர்கள்? நீங்கள் எந்த ஆண்டில் விசுவாசித்தீர்கள்?" என்று சத்தமிட்டான. அவர்கள் 1560 இல் "என்றார்கள். ஆனால் லூத்தர் : "1560-ல் ஜான் கால்வின் இருந்தார்! அவர்களை ஜான் கால்வினிடம் கொண்டு செல்லுங்கள்." என்றார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
81 ஆனால் அவர்களைக் கண்ட ஜான் கால்வின், "ஆண்டவரே, இவர்கள் எல்லாரும் நான் பூமியிலே பிரசங்கிக்கும்போது தங்களை லூதரன்கள் என அழைத்தார்கள்" என்று சொன்னார். ஜான் கால்வின் அவர்கள் அவர்களை கண்டனம் செய்த மார்ட்டின் லூதரிடம் அனுப்பி விட்டார். லூக்கா 23: 7 மற்றும் 11 ல்: "ஏரோதுவின் அதிகாரத்தில் இயேசு இருந்தார் என்று பிலாத்து கேள்விப்பட்டு அவரை ஏரோதிடம் அனுப்பினார். ".
82 வெள்ளை சிம்மாசனத்தின் தீர்ப்பிலே என்ன நடக்கும்? முதன்முறையாக பரிசேயர் வந்து மோசேயிற்கு பதிலாக, அவர்கள் மத்தேயு 19:28 படி பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மற்றும் நாசரேத்தூரானாகிய இயேசுவை கண்டார்கள். அவர்கள் பயந்து, "நாங்கள் மோசேயின் சீடர்கள்!" என்றார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அதை தான் அவர்கள் யோவான் 9: 28-ல் இயேசுவிடம் சொன்னார்கள். அதற்கு இயேசு: "அப்படியானால், மோசேயிடம் அவர்களை கொண்டு செல்லுங்கள்" என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் மோசேயினிடத்தில் வந்த போது, மோசே அவர்களை நோக்கி: பூமியிலே உங்களை நான் அறியேன், நீங்கள் என்னோடு வனாந்தரத்தில் இருந்தீர்களா என்றான். கோராகு மற்றும், தாத்தான் கலகம் செய்தபோது, நீங்கள் என் பக்கத்தில் இருந்தீர்களா? உங்களுக்கு ஆரோன் மற்றும் மிரியாமை தெரியுமா என்றான் ?" பரிசேயர்கள், "இல்லை! என்றார்கள்".
83 மோசே ஆச்சரியப்பட்டு: நீ என்னுடனேகூட எகிப்திலே இருந்து ஆனால் நீங்கள் வெளியேற வில்லையா?". அதற்கு பரிசேயர்கள், "இல்லை! நாங்கள் வருடத்தின் 30, 40 ஆம் ஆண்டு பூமியில் வாழ்ந்து வந்தோம்! ஆனால் நாங்கள் உமக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம், உம்முடைய சீஷர்கள் நாங்கள்!". அதற்கு மோசே, "30 ஆம் வருடமா? பிறகு அது இயேசு கிறிஸ்துவினுடையது! ஆனால்!!! என்னுடையவர்கள் என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே எழும்பப்பண்ணுவார் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா? ஆகையால் இயேசுவினிடத்திற்கு போங்கள் என்றான்!" அதற்கு அவர்கள், "மோசேயே நாங்கள் உம்மிடத்தில் கெஞ்சுகிறோம், எங்களுக்கு இதைக் செய்யாதே என்றார்கள்,! நாங்கள் பூமியில் உன்னைப் பாதுகாத்தோம்! ஆகையால் எங்களை உன்னுடன் ஏற்றுக்கொள்ளும்படி நாங்கள் உம்மிடம் வேண்டுகிறோம் என்றனர். அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: ஆனால் நீங்கள் பூமியில் இருந்த பொழுது அந்த நேரத்தில் உங்களுக்கு யார் தீர்க்கதிரிசி என்று கேட்டான்? " அவர்கள், "இயேசு பூமியில் பிரசங்கித்ததை அறிந்திருந்தோம்.
84 " அதற்கு மோசே, " அது அவ்வளவு தான். அவர் தான் உங்களுடைய நேரத்தின் தீர்க்கதரிசி. அவர் பூமியில் உயிரோடு இருந்தார் நீங்கள் அவரை அறிவீர்கள்! ஆனால் என்னை பொருத்தவரையில், நீங்கள் என்னை அறிந்திருக்கவில்லை. நீங்கள் ஆரோன், மிரியாமை அறியவில்லை. என் ஜனக் கூட்டத்தில் ஒருவரையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை, நீங்கள் என்னுடையவர்கள் அல்ல. ஆனால் நீங்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலருடைய கூட்டத்தை சேர்ந்தவர்கள். இரட்சிக்கப்படுவதற்கு என்று நீங்கள் அவர்களில் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும்". [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
85 இயேசு மற்றும் அவருடைய சீஷர்களின் பெயரை கேட்டு பிறகு பரிசேயர்கள் பயந்தார்கள், பூமியில் இருக்கும் பொழுது இவர்கள் அவர்களை கண்டனம் செய்தார்கள் என்று அவர்களுக்கு தெரியும் மற்றும் பரலோகத்தில் அவர்கள் இவர்களை கண்டனம் செய்வார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. பரிசேயர்கள் இயேசுவின் பெயரைக் கேட்டபோது, அவர்களுடைய இருதயம் துண்டிக்கப்பட்டது! அவர்களுக்குள்ளாக ஒரு குளிர்ந்த இரத்தம் கடந்து சென்றது. யோவான் 5: 45-ல் பூமியின் மேல் இயேசு கூறினதை அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்; "பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்." [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
86 தேவனுடைய வார்த்தை பிசாசின் புத்திரர்களுக்கு ஒரு நியாயத்தீர்ப்பாக இருக்கின்றது என்று நாம் அறிவோம் மற்றும் அவர்கள், "நாங்கள் மோசேயினுடையவர்கள்." என்று ஏற்கெனவே இறந்த ஒருவர் மேல்முறையீடு செய்யும் பொழுது, அவர்கள் ஜீவனுள்ளவைகளுக்கு முன், அவர்கள் வழக்கை இழந்தார்கள் என்று அர்த்தம். நாங்கள் ஏற்கனவே இன்ன இன்ன மரித்த தீர்க்கதரிசியினுடையவர்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? பரிசேயர்கள் மோசேக்கு முன்பாக தோன்றும் படியாக கேட்டுக் கொண்டபோது,, அந்த விசாரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் மோசே அவர்களைக் கண்டனம் செய்யப்போவதாக இயேசு அவர்களிடம் கூறினார்.
87 ஆகவே எல்லாவற்றையும் எளிமையாக்குவதற்க்காக தேவன் மகத்தான வெள்ளை சிம்மாசனத்தின் நியாயத்தீர்ப்பை யூத அலோசனை சங்கத்தினர் (Sanhedrim) போல திட்டமிட்டிருந்தார், இங்கே நம் உச்ச நீதிமன்றத்தின் வகையிலான யூத நியமனம். நீங்கள் பார்க்கிறீர்களா? இயேசுவை ஏற்றுக்கொள்ளாதபடி, அவர்கள் மோசேயின் சீஷர்களின் பட்டியலில் பதிவு செய்துக்கொண்டார்கள். அவர்கள் "மோசேயின் சீஷர்கள்" என்று யோவான் 9: 28-ல் சொன்னார்கள்.
88 பூமியில் நீங்கள் அறியாத ஒருவருக்கு மற்றும் உங்களுடைய தலைமுறையில் கூட ஜீவிக்காத ஒருவருக்கு நீங்கள் எப்படி அவர்களை பின்பற்றுபவர்களாக உங்களால் இருக்க முடியும்?
89 மோசேக்குப் பிறகு நேரியாவின் மகன் பாருக் எரேமியாவின் சீடனாக இருந்தான். எலிசா எலியாவின் சீடனாக இருந்தான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆயிரம் ஆண்டுகள் கழித்து, அவர்களுடைய மணி வேளையின் வெளிச்சமாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு அவர்கள் தங்களை மோசேயின் சீடர்களாக அமைத்துக் கொண்டார்கள்.
90 இன்றும், இந்த பரிசேயர்களின் பெரிய பேரப்பிள்ளைகள், அவர்களுக்காக நரகமானது காத்துக் கொண்டிருக்கின்றது, அப்போஸ்தலர்களும் இயேசுவின் சீஷர்களும் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளனர். இன்று, 2003 ஆம் ஆண்டில், பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் எழுபது சீஷர்களை கொண்டிருந்து எருசலேமின் தெருக்களில் நடந்த நசரேயனாகிய இயேசுவின் அப்போஸ்தலர்களும் சீஷர்களுமாக இருக்கிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
91 ஆனால் பிசாசானவனால் வஞ்சிக்கப்படும்படியாக பிறந்தவர்களை மாத்திரமே வஞ்சிக்க முடியும். ஏனென்றால், கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்., ஆனால் அது சாத்தியமில்லை! தேவன் நல்லவர், அவருடைய நற்குணத்தில் அவர் ஒருநாள் நம் கண்களில் இருந்து குருட்டுத்தன்மையின் செதில்களை விழச் செய்வார் [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
92 வெள்ளை சிம்மாசனத்திற்கு முன்பாக தோன்றும்படி அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆனால், தங்களுடைய காலத்தின் செய்தியை விசுவாசிக்கிறவர்கள், நியாயத்தீர்ப்பிற்கு வருவதில்லை, அவர்கள் ஏற்கனவே இயேசு கிறிஸ்துவின் சிலுவையினாலேயே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறார்கள். சீனாயின் பாலைவனத்திலே ஜீவித்தவர்களுக்கு மோசே உச்ச நீதிமன்றத்தின் தலைவராக இருப்பான் அதே போன்று யோவான் 9:5 ன் படியாக அவர் உலகத்தின் ஒளியாக இருந்த வேளையில் உள்ளவர்களுக்கு வில்லியம் பிரன்ஹாம் இருப்பான்.
93 மேலும் உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் நான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, இந்த தலைமுறைக்கு நான் இருப்பேன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இன்றும் பூமியில் உள்ளவர்கள், அவர்கள் என்னை விசுவாசிக்கின்றார்களோ இல்லையோ, என் அதிகார எல்லைக்குள் இருப்பார்கள்! தேவனுக்கு முன்பாக ஒரு நாள், பெரிய வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பில், நாம் அங்கே தேவனுக்கு முன்பாகத் தோன்றுவோம். கடைசி தீர்ப்பின் திரைப்படத்தை நான் பார்க்கிறேன். ஆமென்! அல்லேலூயா
94 பரிசேயர்களின் சந்ததியாராகிய புராட்டஸ்டன்டு திருச்சபைகள் வந்து, சிங்காசனத்தில் வீற்றிருந்தவரிடம், "நாங்கள் இயேசுவினுடையவர்கள், இயேசுவை தவிர வேறு எதையும் நாங்கள் விசுவாசிக்கவில்லை! ". என்றார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களை நோக்கி, "நான் பூமியில் இருந்தபோது நீ இஸ்ரவேலில் இருந்தீர்களா? நான் பூமியிலிருந்தபோது, ஜாதிகளுக்குள்ளே போகாதபடிக்கு நான் என் சீஷருக்கு அறிவித்தேன் ஏனெனில் என்னுடைய ஊழியமானது என்னுடைய யூத சகோதரர்களிடத்தில் மட்டுமே உள்ளது; அப்படி இருக்க புறஜாதி மனிதர்களாகிய நீங்கள் நாங்கள் இயேசுவினுடையவர்கள், நாங்கள் பூமியின் மேல் உம்முடைய சீஷர்கள் என்று எப்படி சொல்ல முடியும்? நீங்கள் செவிக் கொடுத்து இரட்சிக்கப்படும்படியாக ஏழு நட்ச்சத்திரங்களையும் அதாவது ஏழு தூதர்களையும் நான் வாக்குதத்தம் செய்யவில்லையா? நீ ஏன் அவர்களுக்கு செவிக் கொடுக்கவில்லை? அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.". [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?
95 கர்த்தராகிய இயேசு இவ்விதமாக : "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்று யோவான் 9: 5 ல் நான் சொல்லவில்லையா?" யோவான் 5 : 35 பிரகாரமாக என்று வேதாகமத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா. யோவான் 5:35 படி, யோவான் ஸ்நானகன் உலகத்தின் ஒளியாக இருக்கின்றான் என்று வேதாகமத்தில் வாசிக்கவில்லையா.? நான் இனிமேல் பூமியிலே இல்லாதபோது, மற்ற தீர்க்கதரிசிகள் பிரகாசிக்க செய்யும்படியாக உலகத்தின் ஒளியாக இருப்பார்கள், உதாரணத்திற்கு பவுல்?" நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் வாய்கள் மூடப்படும்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
96 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு, தேவன் என்னை உலகத்தின் ஒளியாக என்னை நிலைநாட்டினார். உலகின் ஒளி அல்ல, உலகின் ஒரே ஒரு ஒளி. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அவ்விதமாக இன்ன இன்ன சபைகள் அனுகினது மேலும் அது அதே விதமாக இருந்தது.
97 பெந்தேகோஸ்தே சபையின் தலைவன் அவனுடைய இதயத்திற்கு நெருக்கமாக ஒரு பெரிய வேதாகமத்தை கொண்டு வந்து, "ஆண்டவரே, நான் அப்போஸ்தலன் யாவோ பயோ, நான் உம்முடைய நாமத்தினால் அநேக அற்புதங்களை செய்துள்ளேன்" கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனிடத்தில், "நீ உன்னை ஒரு அப்போஸ்தலன் என்று அழைத்துக் கொள்கின்றாய், ஆனால் என்னுடைய எந்த செய்தியாளனுக்கு நீ அப்போஸ்தலனாக இருந்தாய்? என்றார். அதற்கு அவன், "ஆண்டவரே, முன் எச்சரிக்கையாக, உம்மை தவிர ஒருவரையும் விசுவாசிக்க வில்லை, உம்முடைய நற்செய்திக்கு நான் அப்போஸ்தலனாக இருந்தேன் என்றான்." ஆண்டவர் அவனிடத்தில், "என்னுடைய அப்போஸ்தலர்கள் பணி ரன்டு பேர் இருந்தனர், நீ அதில் யார் என்று சொல்வார்?" [ ஆசிரியர் குறிப்பு : சபையார் சத்தமிடுகின்றனர், சகோதரர் பிலிப்பு "ஒரு கணம் நிறுத்துகிறார்]...
98 மேலும் மகத்தான மற்றும் பிரபலமான யாவோ பயோ, பெந்தெகொஸ்தே சபையின் தலைவன் வார்த்தையின்றி இருந்தான் மேலும் அண்டவர், "இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும் மணி வேளையானது வரும் என்று நான் சொல்லவில்லையா? அது இஸ்ரவேலில் அல்ல அவர்கள் நோக்கிப் பார்க்க வேண்டியது? தேசங்களில் ஏழு குத்துவிளக்கின் மத்தியில் நான் உலாவி வருவேன் என்று நான் சொல்லவில்லையா?
99 மின்னல் கிழக்கிலிருந்து மேற்குவரைக்கும் போகிறதுபோல, பூமியின் தேசங்களுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்று நான் சொல்லவில்லையா? மத்தேயு 23: 34 மற்றும் 35-ல் நான் இன்னும் தீர்க்கதரிசிகளை பூமியில் அனுப்புவேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையா? பவுல் கிழக்கில் காட்சியில் இருந்தபோது, அது நான் இல்லையா? வெளிப்படுத்தல் 2:13 படி அந்திப்பா காட்சியில் இருந்தபோது, அது நான் இல்லையா?
100 என் ஊழியக்காரன் மார்ட்டின் டி டூர்ஸ் பிரான்சில் காட்சியில் இருந்தபோது, அது நான் இல்லையா? ஜான் கால்வின் சுவிட்சர்லாந்தில் காட்சியில் இருந்தபோது, அது நான் இல்லையா? ஜான் ஹஸ், தூய பேட்ரிக், ஜான் விக்லிஃப்... காட்சியில் இருந்தபோது, அது நான் இல்லையா? மார்ட்டின் லூதர் ஜெர்மனியில் காட்சியில் இருந்தபோது, அது நான் இல்லையா? ஜான் வெஸ்லி காட்சியில் இருந்தபோது, அது நான் இல்லையா?
101 வில்லியம் பிரான்ஹாம் காட்சியில் இருந்தபோது, அது நான் இல்லையா? மற்றும் மத்தேயு 25 : 6 காக்குவ் பிலிப்புடன் நிறைவேறிய போது, அது நான் இல்லையா? நீ ஏன் அவர்களை விசவாசிக்கவில்லை? யூதர்களுக்கு நான் திஸ்பியனாகிய எலியா, எரேமியா, ஆபகூக், ஆகாய், ஓசியா சகரியா, ஆமோஸ், செப்பனியா, ஏசாயா அனுப்பிய அதே வழியில்... உங்களுக்கு, நான் இவர்களை மத்தேயு 23:34 இன் பிரகாரமாக என்னுடைய வாக்குதத்தத்தின் படி அனுப்பினேன், நீங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்! அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் மகிழ்ச்சியில் சத்தமிடுகின்றனர், சகோதரர் பிலிப்பு மீண்டுமாக ஒரு கனம் நிறுத்துகிறார்].
102 பின்னர் ஜோயல் ஆஸ்டீன், டி.டி.ஜாக்ஸ், டௌக் பச்லர், பில்லி கிரகாம், எடிர் மாசிசோ, வால்டிமிரோ சந்தியாகு, சிலாஸ் மலாபியா, பவுலா வைட், ஜாய்சி மேயர் அப்போஸ்தலன் யாவோ பயோ போன்று முன்னே வந்தனர் பிறகு அது அதே நியாயத்தீர்ப்பும் அதே தண்டனையாக இருந்தது! மேலும் கிறிஸ் ஒயாக்கிலோம் டேவிட் ஒளவொர், இம்மானுவேல் மாகான்டிவா, உபர்ட் ஏஞ்சல், டி.பி. ஜோசுவா, டேவிட் ஒயேடிபோ, ஆல்பர்டோ மொட்டெசி, கிலவுதியோ ப்ரெய்டுசன் மற்றும் டான்டே கிபெல் அப்போஸ்தலன் யாவோ பயோ போன்று முன்னே வந்தனர் பிறகு அது அதே நியாயத்தீர்ப்பும் அதே தண்டனையாக இருந்தது!
103 மேலும் பென்னி ஹின், மானாசே ஜோர்டன், ஜெஸ்சி ஜாக்ஸன், ஜான் ஹாகி, பாட் ராபட்சன், யோவாக்கிம் கான்க்ளேவ்ஸ், டொனால்டு பர்ணல், அலெஜான்ட்ரோ புல்லோன், மற்றும் குயிலெர்மொ மால்டொனாடோ அப்போஸ்தலன் யாவோ பயோ போன்று முன்னே வந்தனர் பிறகு அது அதே நியாயத்தீர்ப்பும் அதே தண்டனையாக இருந்தது! பரிசுத்த தூதர்களும் மற்றும் பரலோகத்தில் அனைத்து சிருஷ்டிகளும் சந்தோஷமாக அல்லேலூயா! ஓசன்னா! அல்லேலூயா! ஓசன்னா என்று சத்தமிட்டது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் அல்லேலூயா! ஓசன்னா! என்று சத்தமிடுகிறார்கள்].
104 இங்கே ஒரு வல்லுரு இருந்தால், கழுகுகள் சாப்பிடுவதால் அவைகள் அமைதியாக இருக்கட்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நாம் மீன்கள், நாம் மீன்களாக பிறந்தோம் மேலும் நாம் நண்டுகளை நம்மை போன்ற மீன்களாக மாறும்படியாக நாம் கேட்ப்பதில்லை, அல்லது காகங்களை நம்மைப் போன்ற கழுகுகளாக மாறும்படியாக கேட்ப்பதில்லை!
105 யாரோ ஒருவன் எழும்பி, ஒரு மத அமைப்பை கட்டி அதை சபை என்று அழைத்து தன்னை அப்போஸ்தலன், மேய்ப்பன், போதகன், சுவிஷேசகன் அல்லது சீஷன்... என்று தன்னை அறிவிக்கின்றான். தன்னுடைய மணி வேளையின் தீர்க்கதரிசி செய்தியாளன் அல்ல ஆனால் தான் அறியாத நாசரேத் ஊரின் இயேசுவிற்கு மேலும் சில ஜனங்கள் அவனை மிருகங்களை போல் பின்பற்றுவார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? இருப்பினும் இது ஒரு பழைய அஞ்ஞான நடைமுறை. நான் இரண்டு உதாரணங்களை மாத்திரமே மேற்கோள் காட்டுகிறேன்: நான் அதை வாசிப்பேன்! [ ஆசிரியர் குறிப்பு : சகோதரர் பிலிப்பு பக்கத்தை நோக்கி பார்க்கின்றார்]...
106 அது டேனியேல் ரோப்ஸ், அப்போஸ்தலர் சபையின் சரித்திரம், பக்கம் 157, நான் அதை வாசிக்கப்போகிறேன்: "அப்பொழுது பேரரசர்கான்ஸ்டன்டைன் அவனுடைய முடிவை நெருங்குகிறதை உணரும் போது, பரிசுத்த அப்போஸ்தலர்களை கெளரவிக்கும்படியாக வெண்மையும் சிவப்பும் கலந்த பாறை வகையில் பன்னிரண்டு கல்சவப்பெட்டி, அவர்களை நினைவு கூறும்படியாகவும் மேலும் அவனுக்கென்று பதிமூன்றாவது முன்பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தேவாலயத்தை கட்டினான்.
107 உலகின் மிகப்பெரிய பேராலயம் ஐவரி கோஸ்டில் பதிமுன்றாவது சொரூபத்துடன் இயேசுவின் பதின்மூன்றாவது அப்போஸ்தலனை குறிக்கும் விதமாக ஹாயுபியூட் பொயிகினியுடையதாக இருக்கின்றது என்பதை நீங்கள் அறியுங்கள், நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் கான்ஸ்டன்டைன் மற்றும் ஹாயுபியூட்டை போன்று, அவர்களுடைய மணி வேளையின் வெளிச்சமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல், உங்கள் பிதாக்கள் தங்களை மோசேயின் சிஷ்யர்களாக அமைத்துக் கொண்டது போல இயேசுவின் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்களுடைய பட்டியலை விரிவாக்கிகொண்டு செல்ல உங்களுக்கு சுதந்திரமுண்டு.
108 கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் மற்றும் ஊழிய இயக்கங்கள் மற்றும் ஊழியங்களே உங்களில் ஒருவரை அல்லது உங்களை பின்பற்றும் ஒருவரை தேவன் இரட்சித்தால், அவர் பரிசேயரிடத்தில் மன்னிப்பை கேட்டு யூதாஸ்காரியோத்து உட்பட அவர்கள் எல்லோரையும் இரட்சிக்க வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
109 ஆனால் தேவன் பூமியின் மேல் ஒரு போதும் ஒரு சபையை அனுப்புவதில்லை ஆனால் ஒரு செய்தியை, ஸ்தாபனங்களிலிருந்து வெளியேறி அந்த செய்தியை சுற்றி கூடிக் சேரும்படியாக வருகிறவர்களே சபையை உருவாக்குகின்றனர் என்பதை அறிந்திருக்கிறோம், முதலாவதாக ஒரு சபை, உலகம் அறியாத ஒரு புதிய காரியமாகவும் மற்றும் உலகத்தின் ஒளியாகவும் அது வருகின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா?
110 மோசேயுடன், அவன் நியாயப்பிரமாணத்தைக் கொண்டுவந்தான், மற்றும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒரு செய்தியுடன் வந்தார்கள்... ஒரு தேவாலயத்துடன் அல்ல ஆனால் ஒரு புத்தகத்தில் அடங்கியுள்ள ஒரு செய்தியோடு... மேலும் அந்த செய்தியின் மூலமாக அவனுடைய தலைமுறையானது பூமியின் மேல் நியாயந்தீர்க்கப்பட்டு மற்றும் அவனுடைய தலைமுறையானது பரலோகத்தில் தேவனுக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்படும்.
111 ஜான் வெஸ்லி பூமியின் மேல் தன்னுடைய செய்தியை நிராகரித்த லூதரன்களிடத்தில் இப்படியாக கூறுவான் "பிதாவினிடத்தில் ஜான் வெஸ்லியாகிய நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மார்டின் லூதரே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்." வில்லியம் பிரன்ஹாம் மெதடிஸ்டுகளிடத்தில் இப்படியாக கூற முடியம், "பிதாவினிடத்தில் வில்லியம் பிரன்ஹாமாகிய நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற ஜான் வெஸ்லியே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்."
112 நான் பிரன்ஹாமிஸ்டுகளிடத்தில் இப்படியாக கூற முடியம், "பிதாவினிடத்தில் காக்குவ் பிலிப்புவாகிய நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற வில்லியம் பிரன்ஹாமே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்." [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நியாயத்தீர்ப்பிலே, நடுராத்திரி சத்தத்தை கேட்டு நிராகரித்த பிரன்ஹாமிஸ்டுகள் வந்த போது அது அவ்விதமாக இருந்தது. இது தீர்க்கதரிசனமானது!
113 நீங்கள் 2002 வது ஆண்டில் பூமியில் வாழ்ந்திருந்தால், நீங்கள் மத்தேயு 25:6 இன் அதிகார எல்லையின் கீழ் உள்ளீர்கள். நீங்கள் ஒரு கத்தோலிக்கர்களாக, புராடெஸ்டெண்டுகளாக, அல்லது பிரன்ஹாமிஸ்டுகளாக அல்லது இந்த வெளிப்படுத்தப்பட்ட அல்லது திரும்ப அளிக்கப்பட்ட சபைகள் அல்லது ஊழியம் மற்றும் ஊழிய இயக்கங்களில் ஒரு அங்கத்தினராக இருந்தால். இந்த செய்தியை எனக்கு கொடுத்தது தேவனாக இருந்தால்... ஏசாயா மற்றும் எரேமியா போன்று 2002 முதல் உங்களை கண்டனம் செய்தவனே தேவனுக்கு முன்பு உங்களுக்கு நீதிபதியாக இருப்பான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
114 அதன் பிறகு, பரிசேயர்கள் தங்கள் நீண்ட சுருள்களை மன்றத்திற்கு இழுத்து வந்து, "நாங்கள் மோசேயினுடையவர்கள்" என்று சொன்னார்கள். இன்றைய தினம் அவர்கள் "நாங்கள் இயேசுவினுடையவர்கள்! என்பார்கள். இந்த தருணத்தில் பிரன்ஹமிஸ்டு மத்தியிலிருந்து மற்றவர்கள் மன்றத்திற்கு வந்தார்கள்! பிறகு அவர்கள், "ஆண்டவரே நாங்கள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை நிராகரிக்கவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக நாங்கள் அவருடன் சேர நிரூபணத்திற்காக காத்திருந்தோம்..." என்றார்கள்.
115 அதற்கு ஆண்டவர் அவர்களை நோக்கி இப்படி கூறுவார், `ஆனால், " சாயங்கால செய்தியை கொண்டுள்ளவர்களே, நீங்கள் எந்த அடையாளத்திற்க்காக காத்திருக்கிறீர்கள்??? என்ன நிரூபணப்படுத்துதல்!!! அதற்கு அவர்கள் கூறுவார்கள், "ஆண்டவரே, நீங்கள் வில்லியம் பிரான்ஹாமை அக்கினி ஸ்தம்பம் மூலம் உறுதிப்படுத்தவில்லையா? "... மேலும் கர்த்தர் அவர்களிடத்தில் கூறுவார், "எரேமியா, ஏசாயா, ஆகாய், ஓசியா, யோவேல், தானியேல், செப்பனியா, ஆபகூக்... மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி மற்றும் பலர் ஆகியோரை என்ன நிரூபணப்படுத்துதல் எற்றுக்கொள்ளும்படியாக அனுமதித்தது? ஒரு தீர்க்கதரிசியின் கருத்தை கொண்டிருக்கும் நீங்கள் காத்திருக்கையில் சில பாப்டிஸ்ட், மெத்தடிஸ்ட், கத்தோலிக்க மற்றும் பெந்தேகோஸ்தே வேசிகள் உள்ளே வருகிறார்கள்??? நான் உங்களுடனே நிரூபணப்படுத்துதலுக்கென்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டேனா??? நான் அதை செய்யவே கடமைப்பட்டிருக்கின்றேன் என்று வேதாகமம் கூறுகிறதா? என்னை விட்டு விலகி, உலகத்தின் அஸ்திவாரத்திற்குமுன் உங்களுக்காக ஆயத்தம்பண்ணின அக்கினிக்கு செல்லுங்கள்!!!". [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. வில்லியம் பிரன்ஹாம் தாமே தேவனுக்கு முன்பாக யோவான் 5: 45 இன் பிரகாரமாக கண்டனம் செய்தார்.
116 ஒருதரம் உங்களுடைய மணிவேளையின் நற்செய்தியை நிராகரித்த போது, அது உங்களுக்காக முடிந்துவிட்டது!!! உங்களுடைய உபவாசமும் ஜெபங்களும் அருவருப்பானவைகள்! உங்களுடைய ஆர்வம், கலாத்தியர் 5:22 இன் கனிகள் அருவருப்பானவைகள் மற்றும் அனைத்திற்கும் மேலே, உங்களுடைய இயேசு சாத்தானாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
117 ஒரு தீர்க்கதரிசி- செய்தியாளன் பிரசங்கிக்கையில், அவனுடைய செய்தியை சுமக்காத எந்த ஒரு மேய்பன், போதகன், தீர்க்கதரிசி, சுவிசேஷகன் அல்லது அப்போஸ்தலன் சாத்தானிடத்திலிருந்து வருகிறவனாக இருக்கின்றான். நீங்கள் அவனுடைய செய்தியின் எதிரொலியாக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் பிசாசிற்கே ஆராதனை செய்கிறீர்கள்.
118 நோவா பிரசங்கித்தபோது நோவாவின் செய்தியை விசுவாசிக்க வழிநடத்துவதை தவிர நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. எரேமியா பிரசங்கித்தபோது, உங்களுடைய தேவாலயங்களில் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது ஆனால் எரேமியா என்ன கூறினானோ அதை விசுவாசிக்க வழிநடத்துவதின் மூலமாக மட்டுமே ஊழியம் செய்ய முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசங்கித்தபோது, நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யமுடியாது ஆனால் இயேசுவின் செய்தியை பின்பற்ற ஜனங்களை வழிநடத்துவதின் மூலமாக மட்டுமே ஊழியம் செய்ய முடியும். ஆமோஸ் பிரசங்கிக்கையில், அமோஸியா அமோஸை இனங்கண்டுகொள்ளாமல் தேவனால் அமோஸியாவின் ஆசாரியத்துவத்தை தேவனால் அங்கீகரிக்க முடியாது ஏனெனில் யோவான் 6: 28-29-ல் வேதாகமம் கூறுகிறதாவது... நாம் அதை வாசிக்கலாம்: "அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா?
119 இன்றைய தினம் அவர் உங்களுக்கு அனுப்பியவரை நீங்கள் விசுவாசிக்காமல் உங்களால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கிறான்;.