1 இப்போது நான் சில கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். நான் துவங்குவதற்கு முன் இரண்டு சிறிய கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். முதல் அல்லது இரண்டாவது முறையாக இங்கு வந்திருக்கிற உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் ...
2 நல்லது, முதல் கேள்வி: "சகோதரன் பிலிப்பு, எருசலேமில் பெதஸ்தா என்று அழைக்கப்படும் ஒரு குளம் இருந்தது என்றும், சில சமயங்களில் தூதனொருவன் அதை கலக்குவான் என்றும் யோவான் 5-ல் வேதாகமம் கூறுகிறது. அவன் தேவனுடைய தூதனா அல்லது சாத்தானின் தூதனா?".
3 நல்லது, நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த கேள்வியை எதாவதொரு இறையியலாளருக்கு முன்வையுங்கள், அதை வெறுமனே தவறவிடுவான். ஏனென்றால் அது தேவனின் தூதனாக அல்லது சாத்தானின் தூதனாக இருக்கலாம் என்று அவன் சொல்லுவான். ஆயினும், அது தலைமுறை தலைமுறையாக பூமியிலே அனைவருக்குமாக தேவனுடைய ஒரு நிரந்தர அடையாளமாக இருக்கிறது என்பதே அந்த கேள்விக்கான பதிலாக உள்ளது. அது ஒரே ஒரு தேவதூதன் பற்றிய காரியம் தான் என்னும் உணர்வை நீங்கள் கொண்டுள்ளீர்கள், ஆனால் அது ஒரே ஒரு தேவதூதன் பற்றிய காரியமல்ல, ஆனால் தேவனின் அநேக பரிசுத்த தேவதூதர்கள் அங்கு வந்து இறங்கினார்கள். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் அல்ல, ஆனால் தேவன் அவர்தாமே நியமித்த சில பருவங்களில்; மேலும் இந்த குளமானது நித்திய ஜீவனின் குளமாக, ஒரு சந்ததிக்கு தேவனிடமிருந்து வரும் ஒரு தீர்க்கதரிசன வெளிப்பாடாக இருக்கிறது. இஸ்லாம் மற்றும் யூதம் ஆகியவைகளுடையது உட்பட கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷகசபை, பிரன்ஹாமிஸ்டு குளங்கள் அங்கே இருக்கலாம்... ஆனால் தேவன் அங்கீகரித்தது பெதஸ்தாவின் ஒரே ஒரு குளத்தை மட்டுமே! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நீங்கள் தேவனுடைய குமாரன் என்றால், வேதாகம வாக்குத்தத்தங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்களின்படி, நியமிக்கப்பட்ட காலத்தில், தேவனுடைய சார்பாக பரலோகத்திலிருந்து தேவதூதனொருவன் இறங்கி வந்து அதை கலக்குமட்டாக, நீங்கள் அமைதியாக காத்திருக்கவேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
4 ஒரு ரெவரண்டு, ஒரு பிஷப், ஒரு பெரிய தீர்க்கதரிசி, ஒரு கத்தோலிக்கன், ஒரு புராட்டஸ்டன்டு, ஒரு சுவிசேஷக சபையினன், ஒரு பிரன்ஹாமிஸ்டு தலைவன் அல்லது இஸ்லாமின் அல்லது யூதத்தின் தலைவன் ஒருவன் அதை கலக்கினால், அவன் அந்த குளத்தை மாசுபடுத்த மட்டுமே செய்வான். இந்தத் தண்ணீரை கலக்கப்போவது யார் என்பது ஒரு பொருட்டல்ல, அது கமாலியேலாகட்டும் அல்லது உலகிலேயே மிகப்பெரிய இறையியலாளனாகட்டும், அவன் இந்த தண்ணீரை மாசுபடுத்த மட்டுமே செய்வான். நியமிக்கப்பட்ட நேரத்தில், பரலோகத்திலிருந்து வருகிறவனான ஒரு தேவதூதன் அதற்கு அவசியமாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
5 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்தால், மேலும் எவால்ட் பிராங்க், பரூட்டி காஸோங்கோ, டாமி ஆஸ்போர்ன் அல்லது பில்லி கிரஹாம் அல்லது ரோமின் போப் ஆகியோர் வேதாகமத்தை கலக்குகையில், அதற்கு விலகி உங்களால் முடியுமாவுக்கு நீங்கள் தூரமாக ஓடிப்போவீர்கள்! தேவனிடமிருந்து வந்த ஒரு தேவதூதனைத் தவிர, நீங்கள் அந்த குளத்தில் குதித்தால், அது மரணமே! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
6 அது அதே வேதாகமம், அதே குளம் தான் ஆனால் அது அனைத்தும் அதை கலக்குகிற அவனைச் சார்ந்திருக்கிறது! பரலோகத்திலிருந்து வருகிற ஒரு தேவதூதனாக இருக்கவேண்டியது அதற்கு அவசியமாக உள்ளது, அதை தேவனுடைய ஒரு செய்தியாளன் என்று சொல்ல வேண்டும். தூதன் என்றால் செய்தியாளன் என்று பொருள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள].
7 ஏப்ரல் 24, 1993 ன் தரிசனத்தில் நீங்கள் பார்த்த பிரகாரம், முதலாவதாக ஒரு பரலோக தேவதூதனும் பின்னர் பூமிக்குரிய ஒரு தேவதூதனுமாக இருக்க வேண்டியது அதற்கு அவசியமாக உள்ளது. மேலும் அந்த தேவதூதன் அதை கலக்குகையில், அந்த நேரத்தில் நீங்கள் அங்கு வர வேண்டும்! பிற்பாடு அல்ல, ஆனால் அந்த தூதனானவன் தண்ணீரைக் கலக்குகிற அந்த நேரத்தில். உங்கள் பாவங்கள் என்னவாக இருப்பினும், நீங்கள் சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்பட்டு, புடமிடப்படுவீர்கள் என தானியேல் 12 கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள]. செய்தியாளனுக்குப் பிறகு நாற்பது ஆண்டுகளாக காத்திருக்காதே, ஆனால் முதல் பலன்களின் எண்ணிக்கையில் இருங்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
8 ஒரு இறையியலாளனுக்கு அதை கலக்க உரிமை இல்லை! யாரோ ஒருவர், இறையியல் பட்டத்துடன் அல்லது நாற்பது நாள் உபவாசத்திற்கு பிறகு வரவும் அதற்குள்ளே அவனாகவே குதிக்கவும் செய்தால், அதை விட்டு விலகி இருங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அதற்கு ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் தேவையாக உள்ளது, பின்னர் அந்த வியாதிஸ்தன் கூறுவது போல் யாராவது உங்களை அதற்குள் இறங்க வைப்பார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
9 எரியும் முட்புதறில், முதலில் அங்கே ஒரு தேவதூதன் இருந்தார், பிறகு மோசே ஜனங்களை அந்த குளத்தில் இறங்கப்பண்ணினான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. தமஸ்குவுக்குப் போகிற வழியில் முதலாவது ஒரு தேவதூதன் இருந்தார், பிறகு பவுல் அவனது காலத்தவர்களை அந்த குளத்தில் இறங்கப்பண்ணினான். முதலில் அங்கு ஓஹியோ ஆற்றில் ஒரு தேவதூதன் இருந்தான், பின்னர் வில்லியம் பிரன்ஹாம் தனது காலத்தவர்களை அந்த குளத்தில் இறங்கப்பண்ணினார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
10 மேலும் ஒவ்வொரு தலைமுறைக்காகவும் வேதாகமத்தில் அடங்கியிருக்கிற முழு வாக்குத்தத்தங்களும் ரகசியங்களும் தான் இந்த குளமாக உள்ளது மேலும் அதனுடைய வெளிப்பாடானது தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் சுத்திகரிப்புக்காகவும் மீட்புக்காகவும் தான். உதாரணமாக, திருச்சபையின் ஏழு காலங்களுக்கு, முதல் பருவத்தின் தேவதூதன் வார்த்தை தண்ணீரை கலக்கினவனான பவுல் ஆவான்.
11 பின்னர் அந்தப் பருவத்திற்கு பிறகு, 2 வது நூற்றாண்டில் வேறொரு செய்தியாளன் தண்ணீரை கலக்க பரலோகத்தில் இருந்து புறப்பட்டு வந்தான்... மேலும் நமது பருவத்தின் அந்த ஒருவன், அது ஏப்ரல் 24, 1993 ன் தரிசனத்தில் நீங்கள் கண்ட பிரகாரம் மத்தேயு 25:6 ன் அந்த ஒருவனாவான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
12 தீர்க்கதரிசி செய்தியாளர்கள் தேவனுடைய தூதர்களாக இருக்கின்றனர். தீர்க்கதரிசிகள் தேவர்களாக இருக்கிறார்கள் என்பதை வேதாகமம் கூறுகிறது. ஒரு தீர்க்கதரிசியானவன் ஒரே நேரத்தில் தேவனுடைய பரிமாணத்திலும், தேவனுடைய ஒரு செய்தியாளனாக தேவதூதர்களின் பரிமாணத்திலும் மனுஷரின் பரிமாணத்திலும் இருக்கிறான். நீங்கள் பார்க்கிறீர்களா?
13 ஜனங்கள் இந்த தண்ணீருக்குள் இறங்குவதற்கு மோசே உதவி செய்தான், ஆனால் அதைக் கலக்கினவர், அது எரியும் முட்புதரின் தேவதூதனாக இருந்தது. பவுல் தன்னுடைய காலத்தின் ஜனங்களை குளத்தில் இறங்குவதற்கு உதவி செய்தான், ஆனால் அதை கலக்கியவர், தமஸ்குவுக்கு போகிற வழியின் தேவதூதனாக இருந்தது. ஆமென்!
14 சரி, இரண்டாவது கேள்வியானது: "சகோதரன் பிலிப்பு, வேதாகமம் பரலோகத்தின் ஏழு தேவதூதர்களைப் பற்றி பேசுகிறது. பூமிக்குரிய ஏழு தேவதூதர்களிலும் அதிகமாக எப்படி அது வருகிறது?".
15 உங்களுக்கு நன்றி! பரலோகத்தின் ஏழு தேவதூதர்கள் பூமிக்குரிய பத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்களுக்கு பொருந்துவது எப்படி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அப்படியானால் வெளிப்படுத்துதல் 4-ன் வசனம் 7-ஐ உங்களால் எப்படி விளக்கமுடியும், ஜாதிகளுடைய திருச்சபையின் ஏழு காலங்களில் ஊழியம் செய்யவேண்டிய நான்கு ஜீவன்கள் அங்கே உள்ளன. நான்கு ஜீவன்கள் பரலோகத்தின் ஏழு தேவதூதர்களுக்கு பொருத்தினால், பரலோகத்தின் ஏழு தேவதூதர்களும் தேவன் அனுப்புவதற்கு நலமென்று கண்டரியப் போகும் அத்தனை பூமிக்குரிய தேவதூதர்களுக்கும் பொருந்துவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
16 நல்லது, இப்போது நம்முடைய வேதாகமங்களில் ஆதியாகமம் 6:5 முதல் 6-ஐ எடுப்போம். "பிழையாத்தன்மையின் மறைஉண்மை" என்னும் காரியம் பற்றி நான் பேச விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. [சகோதரர் பிலிப்பு ஆதியாகமம் 6:5 முதல் 6 -ஐ வாசிக்கிறார்]. "மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெரியதாயிருந்தது என்றும், அவனது இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் தொடர்ந்து பொல்லாததென்றும் யேகோவா கண்டு, அவர் பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காக யேகோவா மனஸ்தாபப்பட்டார், அது அவரது இதயத்தில் அவரை விசனப்படுத்தியது."
17 நல்லது, முதலாவது, தேவனோடும் தேவதூதர்களோடும் பரலோகத்திலுள்ள பிழையாத்தன்மை பற்றியும் பிறகு பூமியிலே பிழையாத்தன்மை பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.
18 ஆதியிலே, உலகின் அஸ்திவாரத்திற்கு முன், அங்கே எந்த உயிரினமும் இல்லாதபோது, அங்கே ஒன்றும் இராதபோது, தேவன் தனியாக இல்லையென்றாலும், தேவன் தவறிப்போக முடியாதவராக இருந்தார். தேவனவர் தமது ஆட்சிப்பரப்பை சிருஷ்டித்து நிறுவியதற்கு முன்னும் பின்னும், அப்போது அங்கே எந்த பிசாசும் இல்லை; அனைத்து தேவ தூதர்களும் அவருக்கு கட்டுப்பட்டிருந்தனர், நித்தியத்தில் இருந்து நித்தியம் வரை, தேவன் பிழையாத்தன்மை வாய்ந்தவராக இருந்தார். சாத்தானும் அவனுடைய தூதர்களும் இந்த பிழையாத்தன்மையை சந்தேகப்பட்டார்கள், ஆனால் அது தேவனின் பிழையாத்தன்மையை பாதிக்கவேயில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
19 பரிசுத்த தேவதூதர்கள் ஒருபோதும் தேவனின் பிழையாத்தன்மையை சந்தேகிக்கவில்லை. தேவன் சாத்தானை சிருஷ்டிக்கும் போது, இந்த தூதன் சாத்தானாக இருப்பான் என்பதை அவர் அறிந்திருந்தார்.
20 ஆதியாகமம் 6 -ஐ பார்க்கையில், "அவர் பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காக யேகோவா மனஸ்தாபப்பட்டார், அது அவரது இதயத்தில் அவரை விசனப்படுத்தியது." என்று வேதாகமம் கூறும்போது, மனுஷனின் நடத்தையினால் தேவன் ஆச்சரியமடைகிறார் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்.
21 ஆனாலும் பரிசுத்த தேவதூதர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் தேவனின் சர்வஞானத்தையும் தவறிப்போகாதன்மையையும் ஒருபோதும் சந்தேகிக்கமாட்டார்கள். யோபு தேவனை சந்தேகிக்கவில்லை மேலும் திருச்சபையின் வெவ்வேறு உபத்திரவங்களினூடாக, 6 கோடி 80 லட்சம் கிறிஸ்தவர்கள் எலியாவின் தேவனுக்கு முன்பாக அழிக்கப்பட்டனர். மேஷாக், சாத்ராக், ஆபேத்-நேகோ ஆகியோரின் தேவனுக்கு முன்பாக சிங்கங்கள் அவர்களைக் பீறிப்போட்டன, ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட தேவனின் பிழையாத்தன்மையை சந்தேகிக்கவில்லை. ஏதேன் தோட்டத்தில் மனிதனின் வீழ்ச்சியின் முன்னிலையிலும்கூட, தேவனுடைய குமாரர்களும் தேவனுடைய தூதர்களும் தேவனின் பிழையாத்தன்மையை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
22 1 சாமுவேல் 2:30 ல், ஏலியின் புத்திரருடைய நடத்தையினிமித்தம் தேவன் இப்படி கூறுகிறார்: "உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தேன். ஆனாலும் இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் எனறு இப்போது யேகோவா சொல்லுகிறார்."
23 இப்போது, இந்த வாக்குத்தத்தத்தை செய்யும்போது, அவர்கள் அப்படி நடந்துகொள்வார்கள் என்பதை தேவன் அறிந்திருக்கவில்லையா? நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் நம்மைப் பொறுத்தவரையில், தேவனுடைய தவறமாட்டாமையை அது ஒருபோதும் பாதிக்காது. இந்தப்பிரகாரமாகவே தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மற்றும் பரிசுத்த தேவதூதர்களின் நிலைப்பாடு என்றென்றும் இருக்கும், ஏனெனில் பிழையாத்தன்மை ஒரு தகுதி அல்ல ஆனால் ஒரு முத்திரையாகும். மேலும் இது ஒரு பாராளுமன்ற உறுப்பினரருக்குள்ள விதிவிலக்குத்தன்மையை (the immunity of a Member of Parliament) அதனோடு ஒப்பிடமுடியாது. ஆமென்!
24 ஆதியாகமம் 6-ஐ தவிர, ஆதியாகமம் 18 ல் தேவனவர் சர்வஞானியல்லாதது போல, அவரிடத்திற்கு வந்தெட்டின வதந்திகளின் நிஜத்தன்மையை பரிசோதிக்க அவர் இரண்டு தேவதூதர்களுடனே கூட இங்கிப்போகிறதை நம்மால் காணமுடியும். சோதோம் கொமோராவில் நடக்கிறது என்னவென்பதை பரலோகத்திலிருந்து தேவனால் காணமுடியாதது போல. நீங்கள் பார்க்கிறீர்களா?
25 நான் உரையாற்ற விரும்பும் இரண்டாவது விஷயம் பரிசுத்த தேவதூதர்களைப் பற்றியது. அவர்கள் நமக்கான தேவனுடைய தூதுவர்களாக இருக்கின்றனர் மேலும் தேவனைப் போலவே அவர்களும் பிழையாத்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்! அவர்களில் ஒரு பகுதியினர் சாத்தானைப் பின்பற்றட்டும், தேவனுக்கு விசுவாசமாக நிலைத்திருப்பவர்கள் பிழையாத்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்று நாம் விசுவாசிக்கிறோம். இருபத்தியோரு நாளளவும் சாத்தான் கபிரியேலை எதிர்க்கட்டும், அந்த காபிரியேல் தேவனை போலவே பிழையாத்தன்மை வாய்ந்தவன் என நாம் விசுவாசிக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
26 மூன்றாவது கருத்து தேவனுடைய தீர்க்கதரிசிகளின் பிழையாத்தன்மையாக இருக்கிறது. உண்மையில் நான் பேச விரும்புகிறது அதைப் பற்றித்தான். ஆனால், எவரிடமிருந்து இந்த பிழையாத்தன்மை புறப்படுகிறதோ அவருடைய, அதாவது தேவனுடைய மற்றும் பரிசுத்த தேவதூதர்களுடைய தவறாத்தன்மை பற்றி முதலில் பேசாமல், தீர்க்கதரிசியின் தவறாத்தன்மை பற்றி பேச நம்மால் முடியாது.
27 வேதாகமம் தவறிப்போகமுடியாத தேவவார்த்தையாக இருக்கிறதென்றால் பிறகு அது எவரிடமிருந்து புறப்படுகிறதோ அவர் அதாவது தேவனும் பரிசுத்த தேவதூதர்களும் தீர்க்கதரிசிகளும் தவறாத்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் காண்பித்த மனித பலவீனங்கள் ஒரு பொருட்டே அல்ல, அவர்கள் பிழையாத்தன்மை வாய்ந்தவர்கள் தான் மேலும் இந்த பிழையாத்தன்மை தீர்க்கதரிசனத்தில் மட்டுமல்ல, ஆனால் அவர்களுடைய செயல்களிலும் தான். நீங்கள் பார்க்கிறீர்களா?
28 மேலும் தேவனுடைய குமாரன் ஒருவன் தீர்க்கதரிசி சொல்லுகிறதற்கும் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் சொல்லுகிறதற்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசத்தையும் தேடமாட்டான்.
29 நடத்தையாக பூர்வகால தீர்க்கதரிசிகள் காட்டினதை என்னால் நியாயப்படுத்த முடியாது, ஆனால் அவர்கள் தேவனைப்போல பிழையாத்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனோக்கு தவறிப்போகமுடியாதவனாக இருந்தான். ஜலப்பிரளயத்திற்கு முன்பானாலும் அல்லது அதற்குப் பின்பானாலும், நோவா தவறிப்போகமுடியாதவனாக இருந்தான். மோசே தவறிப்போகமுடியாதவனாக இருந்தான். நோவா அங்கு முழுதும் குடித்துவிட்டு படுத்திருந்தபோதிலும், அவன் தவறிப்போகமுடியாதவனாக இருந்தான். ஏற்கனவே சிப்போராளை திருமணம் செய்துகொண்டிருக்கையிலும், புறதேசத்தாளை மனைவியாக எடுத்துக்கொள்ள தடைசெய்யப்பட்டிருக்கையிலும் மோசே அந்த புறதேசத்து ஸ்திரீயை திருமணம் செய்தபோது, அவன் பிழையாத்தன்மை வாய்ந்தவனாகவே இருந்தான். கோராகு, தாத்தான், அபிராம், ஆரோன், மிரியாம் ஆகியோர் கோபமடைந்தார்கள் ஆனால் யோசுவா இன்னமும் வல்லமைவாய்ந்த மற்றும் தவறிப்போகமுடியாதவனான தீர்க்கதரிசியையே கண்டான். ஆரோன் மற்றும் மிரியாமின் அந்த நடத்தையானது அப்படி இருந்திருக்கவில்லை என்றால், சிப்போராளைத் தவிற, ஒரு எதியோப்பிய ஸ்திரீயை, மோசே விவாகஞ்செய்ததை, நாம் அறியமாட்டோம். மேலும் அது தேவனுடைய பிள்ளைகளுக்கு தீர்க்கதரிசிகள் தவறிப்போகமுடியாதவர்கள் என்பதற்கான ஒரு நிகழ்வாக அது இருக்கவில்லை. மோசே அவளை நேசித்ததினால் அந்த எத்தியோப்பிய ஸ்திரீயானவள் முடிவு மட்டுமாக மோசேயுடனேகூட தனது ஸ்தானத்தை காத்துக்கொள்வாளாகில் அவள் நேரடியாக தேவனுடைய பரதீஸுக்குள் நுழைகிறாள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
30 மோசே மோசமாக நடந்துகொள்ளவில்லை; மேலோட்டமாகக் கூட, அவன் மோசமாக நடந்து கொள்ளவில்லை. மோசே பலவீனமாக இருந்தானா? ஆம் மனுஷர்களுக்கு முன்பாக ஆனால் தேவனுக்கு முன்பாக அல்ல! மோசே மயங்கிவிட முடியுமா? ஆம் மனுஷர்களுக்கு முன்பாக ஆனால் தேவனுக்கு முன்பாக அல்ல! ஆனபடியால் மோசே அவ்விதமாக நடந்துகொண்டால், நாம் அதில் தேவனுடைய செயலை காணவேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
31 ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடச் சென்றபோது அல்லது ஆகாரை ஒரு மனைவியாக எடுத்துக்கொண்டபோது, அது ஒரு தீர்க்கதரிசியாகத்தான். தாவீது ஒலிவமலை மீது அழுகிறபோது, அது ஒரு தீர்க்கதரிசியாகத்தான். மேலும் தாவீதின் ஐந்நூறு மனைவிகளுக்கு நடுவே, சாலாமொன் வெளியே வரவேண்டியது பத்சேபாளிடமிருந்தாக உள்ளது.
32 தாவீதின் மனப்பான்மையில் அநேகர் கோபமடைந்தாலும், தேவன்: "தாவீது என் இருதயத்திற்கு ஏற்ற மனிதன்." என்று கூறுகிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் தேவனை என் சாட்சியாக எடுத்துக்கொள்கிறேன், நான் ஒருபோதும் ஒரு சகோதரியின் மீதும் அத்தகைய ஒரு எண்ணம் கொண்டதில்லை ஆனால் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் அதை செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். மேலும் ஒரு தீர்க்கதரிசி என்னவாக இருக்கிறான் என்பதின் புரிந்துகொள்ளுதலுக்கு முத்திரைபோட இந்த செய்தி வருகிறது.
33 ஏசாயா 6-ல் தன்னை அசுத்தமானவன் என்று கூறுகையில், ஏசாயா தவறிப்போகமுடியாதவனாக இருந்தான். எரேமியா 20 ல் அழுகிற எரேமியா தவறாத்தன்மை கொண்டவனாக இருந்தான்... எல்லா தீர்க்கதரிசிகளும் தவறிப்போகமுடியாதவர்களாக இருந்தனர்.
34 தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியின் பலவீனம் அல்லது பாவம் என மனிதன் அழைப்பதை, தேவன் அவ்விதமாக அதை பார்ப்பதில்லை. தேவன் படைத்த எல்லாவற்றிலும், தீர்க்கதரிசியானவன் ஒருமுனைமுதல் மறுமுனைவரை, தேவனாக, ஒரு தேவதூதனாக, ஒரு ஆசாரியனாக, ஜனத்தில் ஒரு சாதாரண மனிதனாக நடந்துகொள்ளமுடியும். திருச்சபையின் எந்தவொரு பொருப்புகளிலும் ஊழியங்களிலும் அவன் செயல்படலாம்.
35 ஓசியா தீர்க்கதரிசி ஒரு மனைவியை அல்லது ஒரு மணவாட்டியை உடையவனாக இருந்தபோது, அது யார் என்பது எனக்கு தெரியாது, இன்னொரு வழியில் தேவ சித்தத்தை வெளிப்படுத்த, போய் இன்னொருத்தியை எடுத்துக்கொள்ளும்படி தேவன் அவனிடம் சொல்லுகிறார்... நான் இதைச்சொல்ல காரணம் என்னவென்றால் என் மணவாட்டி என் மனைவியாக இருக்கிறாள் ஆனால் என் மனைவி என் மணவாட்டியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவள் என் மனைவியாக மட்டுமே இருக்கின்றாளெனில், எங்கள் ஆத்துமா எவ்விதத்திலும் இசைந்துபோகாது மேலும் என் மணவாட்டியாக நான் அவளை உண்மையாக முன்வைக்க முடியாது [...]. நீங்கள் பார்க்கிறீர்களா? வார்த்தையிலும் பொருளிலும் அங்கே ஒரு வித்தியாசம் உள்ளது. கணவனும் மனைவியும். மணவாளனும் மணவாட்டியும் [...]. ஆனால் மெய்த்திருச்சபை கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
36 சரி, நாம் எசேக்கியேல் 4-க்கு திரும்பி வரலாம், குறிப்பிட்ட சில நாட்களுக்கு அவன் தனது இடதுபக்கமாக ஒருக்களித்து படுக்கும்படி எசேக்கியேலிடம் தேவன் கூறுகிறார் ... இது என்ன? சகோதரரே, யூதா 9-ம் வசனம் அதை எடுத்துக் காட்டுவதுபோல், தேவன் பயன்படுத்தினவனுடைய மரித்த சடலம் கூட சாத்தானின் கரங்களில் இருப்பதை தேவன் அனுமதிக்க முடியாது என்பதை எளிமையாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
37 நடுராத்திரியில் இருக்கிற நம்மைப்போலவே, உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்னவாக இருக்கிறான் என்பதை, யூதர்கள் அறிந்திருக்கின்றனர், அது அவர்களை தொல்லைபடுத்துவதில்லை. மோசே ஒரு எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் செய்தான் ஆனால் புறதேசத்து ஸ்திரீகளை திருப்பி அனுப்புகிறதன் பேரிலான காரியத்தில், எஸ்ரா 10-ல் அதை நம்மால் காண முடிவதுபோல, அவனது செய்தியை செயல்படுத்துவதில் இருந்து அச்செயல் யூதர்களை தடை செய்யவில்லை. ஜான் வெஸ்லி ஒரு விதவையை திருமணம் புரிதல், அது ஒரு பிரன்ஹாமிஸ்டை தொல்லைக்குள்ளாகக்கூடும். நீங்கள் பார்க்கிறீர்களா?
38 ஞானஸ்நானமானது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்யப்படவேண்டும் என்பதையும் அற்புதங்களின் காலமானது கடந்து போய்விடவில்லை என்பதையும் தீர்க்கதரிசிகளின் காலமானது கடந்து போய்விடவில்லை என்பதையும்... ஏற்றுக்கொள்ள மனிதகுலமானது ஆயத்தமாக்கப்படவேண்டிய ஒரு நேரத்தில் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியானது வந்தது. ஆனால் ஒரு தீர்க்கதரிசியென்றால் உண்மையில் என்ன? ஒரு பிரன்ஹாமிஸ்டுக்கு அது தெரியாது மேலும் அதனால்தான் அவர்கள் தீர்க்கதரிசியின்றி இன்று நடக்க முடியும். ஆனால் இது என்னவாக இருக்கிறது, வெளிப்படுத்துதல் 4 க்குப் பிறகு, வெளிப்படுத்துதல் 19-ன் நடுராத்திரி சத்தமாக, எழுதப்பட்ட தேவவார்த்தையாக அவர் மறுபடியும் தோன்றுகையில் இயேசு கிறிஸ்து கொண்டுவருகிறதாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
39 மேலும் தீர்க்கதரிசிகள், அவர்கள் பழைய அல்லது புதிய ஏற்பாட்டில் உள்ளவர்களானாலும், ஒரேவிதமானவர்கள்தான். அவர்கள் மனிதர்கள் மத்தியில் தேவனின் இராஜாதிபத்திய வெளிப்படுதலாக இருந்து, நித்தியத்திலும் காலத்திலும் ஊழியம் செய்கிறார்கள். ஒருவேளை தேவனால் இணைக்கப்படதாக இருக்கிற ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பிரிக்க, ஒரு திருமணத்தைக் கூட ரத்துசெய்ய தேவனின் இராஜாதிபத்திய அதிகார ஒப்படைப்பை அவர்கள் பெருகிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
40 நீங்கள் பார்க்கிறீர்களா?பலவீனத்தினிமித்தம் நான் ஒரு சகோதரியுடனோ அல்லது அஞ்ஞானியான பெண்ணுடனோ சயனிக்கிற காரியம் நடந்தேர முடியாது என்பதை நான் எப்பொழுதும் சொல்லியிருக்கிறேன், நான் அதை இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பேசிக்கொண்டிருக்கிற பிழையாத்தன்மை, அது அதைக்காட்டிலும் மேலானதாக இருக்கிறது. அது ஒரு நித்திய முத்திரையாக இருக்கிறது. அவன் பிழையாத்தன்மை வாய்ந்தவனாக இருப்பானாகில் ஒரு சகோதரி அல்லது ஒரு அஞ்ஞானியான பெண் முன் பலவீனப்பட முடியும் என்பது இன்னும் எனக்கு தெரியாது. நீங்கள் பார்க்கிறீர்களா?
41 நல்லது, பேதுரு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தான், பவுலால் கடிந்து கொள்ளப்பட்டான், ஆனால் அது அவன்மீது ஒருபோதும் சுமத்தப்படாது. மத்தேயு 11:2 முதல் 3 ல் நெருக்கத்தில் இருந்தபோதிலும், யோவான் ஸ்நானகன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சந்தேகிக்கவில்லை என்று சொல்லப்படும். நான் இப்போது ஐந்து ஆண்டுகளாக பிரசங்கிக்கிறேன், நான் பிரசங்கித்ததோடு நான் ஒருபோதும் முரண்பட்டதில்லை ஆனபடியால் யாராலும் அதை நிரூபிக்க முடியும். மாம்சத்தில் நான் ஒருபோதும் விழுந்து போனதில்லை, என் மனதில் கூட எந்தவிதத்திலும் சோதனைக்குள்ளானதில்லை ஆனபடியால் யாராலும் அதை நிரூபிக்க முடியும்.
42 வில்லியம் பிரன்ஹாமின் தலைசிறந்த வேலைப்பாடில் உள்ளதுபோல, மைக்கேலேஞ்சலோ மோசேயை செதுக்கினான், அவன் அந்த சிலையை பேசச்சொல்லும் அளவிற்கு அது மிகவும் பரிபூரணமாக இருந்தது, அவன் அப்படி சத்தமிட்டுக்கொண்டு இருக்கையில், முழுதும் ஒரேமாதிரியான தலைசிறந்த வேலைப்பாடாகவும் மனித இனத்தின் பாரம்பரியத்தில் ஒரு குறியீடாகவும் மாறின அந்த சிலையின் இடதுகாலை அவன் உடைத்துவிட்டான். அதுவாகத் தான் தேவனின் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள், தேவனின் தலைசிறந்த வேலைப்பாடுகள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
43 யோவான் ஸ்நானன் தனது சீஷர்களை கர்த்தராகிய இயேசுவிடம் அவர் உண்மையாகவே கிறிஸ்துதானா என்று அறிந்துகொள்ளும்படி அனுப்பினபோதும், யோவான் தனது முதல் தருணங்களில் இருந்ததுபோலவே தவறிப்போக முடியாதவனாகவே இருந்தான். தமஸ்குவுக்குப் போகும் வழியிலுண்டான அனுபவமுதற்கொண்டு பவுல் தவறிப்போகமுடியாதவனாக இருந்தான்.
44 மேலும் ஆபிரகாம் ஒரு பிள்ளையை பற்றின வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்திற்காக ஆகாரை நோக்கி சென்றபோதிலும், அந்த ஆபிரகாம் தனக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைக் குறித்து சந்தேகம் ஏதும் கொள்ளவில்லை என்று ரோமர் 4-ல் பவுல் மூலம் தேவன் சாட்சி கொடுத்தார். மேலும் தீமோத்தேயு அடிக்கடி உண்டான வயிற்றுவலியினால் துன்பப்பட்டாலும், பவுலின் ஊழியத்தின் அறிக்கையில், எந்த வியாதியும் அல்லது எவ்வித வயிற்றுவலியும் கூட பவுலின் ஜெபத்தைய எதிர்த்துநிற்கவில்லை என்று கூறப்படும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
45 தேவன் உண்மையிலேயே பூமியில் யாராவது ஒருவரை அனுப்பியிருக்கும்போது, தவறமாட்டாமையை ஒரு முத்திரையாக அவனுக்கு அவர் அளிக்கிறார், அது ஒரு பொறிப்படையாளம் அல்லது அஞ்சல் முத்திரையாக இருக்கிறது. ஆனால் அவர் உங்களை அனுப்பாதிருக்கையில், உங்கள் நீதி, உங்கள் பிரயாசங்கள் மற்றும் உங்கள் நேர்மையும் கூட ஒரு கந்தையான ஆடை போன்றதுதான்! கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்!