



Kacou 62 (Kc.62) : நீங்கள் யார் ஐயா?
(மே 30, 2007, புதன் மாலையன்று அபோபோ, அபிட்ஜான், ஐவரிகோஸ்டில் பிரசஙகிக்கப்பட்டது)
1 தவறாத்தன்மை பற்றி பேசுகையில், பொறிப்படையாளமாக அல்லது அஞ்சல் முத்திரையின் அர்த்தத்தில் அதை ஒரு முத்திரையாகக் கருதப்பட வேண்டும் என்று சொன்னேன்; அதன் அர்த்தம் என்னவென்றால் தீர்க்கதரிசி காட்சியில் நுழைவதற்கு முன்னால், தேவன் அவன் மேல் ஒரு அடையாளமிடுகிறார், அவர் அவன் மீது "தவறிப்போகமுடியாதது" என்று எழுதுகிறார். பிறகு அவன் என்ன செய்ய போகிறான் அல்லது சொல்லப்போகிறான் என்பது ஒரு பொருட்டல்ல, அவன் தவறிப்போகமுடியாதவன் தான்.
2 தேவன் கோதுமையிலிருந்து பதரை பிரிக்க காரியங்களை அனுமதிக்கிறார், ஆனால் அது இந்த தீர்க்கதரிசியின் பிழையாத்தன்மையை பாதிக்காது. நீங்கள் பார்க்கிறீர்களா? அதுதான் அது, அதனால்தான் வேதாகமம் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனின் வாழ்க்கையை ஒருபோதும் அறிவிக்கவில்லை. இன்ன அல்லது இன்ன ராஜா யெகோவாவின் பார்வையில் நன்மை அல்லது தீமை செய்ததைப் பற்றி வேதாகமம் கூறுகிறது, ஆனால் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தேவனுக்கு முன்பாக சரியாக நடக்கவில்லையென ஒருவரால் எப்படி சொல்லமுடியும்? நீங்கள் பார்க்கிறீர்களா?
3 நல்லது, இப்போது நம் வேதாகமத்தில் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். அப்போஸ்தலர் அதிகாரம் 9-ல் முதல் ஐந்து வசனங்களை வாசிப்போம். நான் அதை வாசிக்க போகிறேன்! “ஆனால் சவுல் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். ஆனால் அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான். அதற்கு அவன், "நீர் யார், ஆண்டவரே?" என்றான்"].
4 நீங்கள் பார்க்கிறீர்களா? பவுல் அந்த ஒளியிடம், "நீ யார், ஆண்டவரே?" என்கிறான். இது கிறிஸ்தவத்தின் தொடக்கமாகும், யூத மார்க்கத்தின் தொடக்கத்திலிருந்து அது வேறுபட்டிருக்க முடியாது. அந்தப் பக்கத்தில் மோசே! தேவன் தாமே எரிகிற முட்புதரின் தேவதூதனாக இருந்தார் மேலும் இந்த பக்கத்தில் தமஸ்குவுக்குப் போகிற வழியின் தேவதூதனாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தேவனாகிய அவர் தாமே இருந்தார். நீங்கள் பார்க்கிறீர்களா?
5 மோசே இயற்கைக்கு மேம்பட்டதை சந்தித்து எரிந்து போகாமல் இருக்கிற அந்த முட்புதரை கண்டான். மேலும் தன்னை ஊழியத்திற்கு நியமித்த தேவதூதனை நோக்கி, "யூதர்கள் என்னிடம் கேள்வி கேட்கும் போது, நான் அவர்களுக்கு அறிவிக்கும்படிக்கு, நீர் யார், ஆண்டவரே என்றான். நீங்கள் காண்கிறீர்களா? மோசே, "தேவன் இயற்கைக்கு மேம்பட்டவர் என்பது உண்மைதான் மேலும் இந்த எரியும் முட்புதரானது ஒரு மனிதனின் வேலையும் அல்ல, ஆனாலும் நீர் யார் ஆண்டவரே?" என்றான். தேவன் மோசேயிடம், "... நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் இருக்கிறேன் (I AM) என்பவர் உங்களிடத்திற்கு என்னை அனுப்பினார் என்று சொல்" என்றார். அங்கே நிகழ்ந்தது என்ன, யூத மார்க்கத்தின் தொடக்கத்தில், அனைத்து யூதர்களுக்கும் ஒரு அடையாளம் இருந்தது மேலும் யூத மார்க்கத்தின் உண்மையான ஒரு குமாரனான பவுலால் அதைச் செய்யாமல் இருக்க முடியவில்லை ஆனால் அதைச் செய்தான். நீங்கள் பார்க்கிறீர்களா?
6 பவுல் தமஸ்குவுக்கு மிகவும் உறுதியுடன் சென்று கொண்டிருந்தான், திடீரென்று ஒரு ஒளி பரலோகத்திலிருந்து பிரகாசித்தது. இந்த ஒளியானது கத்தோலிக்கம், புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் உட்பட இஸ்லாமியம் மற்றும் யூதம் ஆகிய அனைத்தின் அபிஷேகங்களும் ஒன்று சேர்ந்திருப்பதைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பவுல் கிறிஸ்துவின் எதிராளியாக இருந்ததால், அவன் கீழே விழுவதற்கு இந்த வெளிச்சமானது காரணமாயிற்று. தேவனுடைய கிருபையைத் தேடுகிற ஒரு ஏழை ஆத்துமா கீழே தள்ளப்பட இந்த ஒளி ஒருபோதும் ஏதுவாகாது. நீங்கள் பார்க்கிறீர்களா?
7 குணமாவதற்கான அல்லது விடுவிக்கப்படுவதற்கான தேடுதலில் இருக்கிற ஒரு ஏழை ஆத்துமாவை கீழே விழவைக்கிற எந்த ஒரு அபிஷேகமும் பிசாசினுடையதாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. தேவனின் சத்துருக்கள் அல்லது எதிராளிகள் மேல், அக்கினி கீழே வரவழைக்கப்பட்டது! சோதோமுக்கும் கொமோராவிற்கும் மேல் அக்கினி விழுந்தது! அகசியாவின் ஐம்பது ஆட்களுக்கு மேல் அக்கினி பொழிந்தது. ஆனால் குணமடைவதற்காக அல்லது விடுவிக்கப்படுவதற்காக தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஏழை ஆத்துமாவின் மீது அக்கினியை அழைக்கிறவன் எவனோ அவன் மனித அவதாரமெடுத்த ஒரு பிசாசாக இருக்கின்றான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].…
8 இந்த மகத்தான வெளிப்பாட்டின் முன்னிலையில் மோசே என்ன செய்தான்? அவனிடம் பேசிய அந்த சத்தத்தினிடம்: நீர் யார் ஆண்டவரே? என்றான். ஆமென்! மேலும் தமஸ்குவுக்கு செல்லும் வழியில், இந்த ஒளி பிரகாசித்த போது, பவுல் கீழேவிழுந்தான். பவுல் அனைத்து வலிமையையும் இழந்துபோனான்; பவுல் நனைவிழந்துபோனான். அது அவனது வாழ்க்கையின் முடிவாக இருந்ததைக் கண்டான்!
9 பவுல் மரணத்தை சந்தித்தான், ஆனால் அவன் நினைவுக்கு வந்தபோது, என்ன நடந்தது? "இது மிகவும் இயற்கைக்கு மேம்பட்டதாக உள்ளது, எனவே இது தேவன் தான்" என்று அவன் சொன்னானா? இல்லை! "இந்த வல்லமையை பார்க்கையில், இது சீனாய் மலையின்மேல் வந்த சர்வவல்ல தேவனாகத் தான் இருக்க வேண்டும்!" என்று அவன் சொன்னானா? நீங்கள் அறிந்துகொள்கிறீர்களா? ஆனால் மோசேயும் பிதாக்களும் எப்போதுமே முன்வைக்கிற பழையதும் இறுதியுமான கேள்வியை முன்வைத்தான். "உம்முடைய மகத்துவமிக்க மகிமையைக் கண்டேன்; நிலத்திலே என்னை தூக்கி எறிந்த உம்முடைய மகத்தான வல்லமையை நான் கண்டேன்; உம்முடைய இடிமுழக்கமான சத்தத்தைக் கேட்டேன்... ஆனால் நீர் யார் ஆண்டவரே? (BUT WHO ARE YOU LORD?)" என்று பவுல் கேட்டான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. ... நீர் என்னை தோற்கடித்தது உண்மைதான் ஆனால் நீர் யார்? நீங்கள் பார்க்கிறீர்களா?
10 இன்று மனிதவர்க்கம் கேட்கத் தவறிய கேள்வி இங்குள்ளது. நீர் யார் ஆண்டவரே? இன்றைக்கு திறளான கள்ளத் தீர்க்கதரிசிகள் அங்கே இருக்கிறார்களென்றால், அதை செய்ய மனிதயினம் தவறிவிட்டதே அதற்கு காரணம். பூமியெங்கும் நோக்கிப் பாருங்கள், எத்தனை யூதர்கள் டாமி ஆஸ்போர்ன், பில்லி கிரஹாம், மோரிஸ் செருலோ அல்லது யோங்கி சோ ஆகியோரால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்? யாரும் இல்லை, அவர்கள் தடுமாற்றம் அடையவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
11 நமது நாட்டில் ஒரு இஸ்ரேலிய தூதரகம் இருக்கிறதென்றால், அதற்கு காரணம் இங்கு யூதர்கள் உள்ளதுதான் ஆனால் அவர்களில் எத்தனை பேர் நம்முடைய சபைகளில் இருக்கிறார்கள்? யாரும் இல்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு ஜெபக் கூட்டத்தில் பென்னி ஹின் ஒரு உண்மையான யூதனை கீழே விழவைத்தால், இந்த யூதன்: "நீ ஒரு சக்திவாய்ந்த மனிதன் என்பதை நான் பார்க்கிறேன், ஆனால் நீ யார்?" என்று அவனைப் பார்த்து கத்துவான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
12 யோவான் 1:19 முதல் 23-ல் யோவான் ஸ்நானகனின் காரியத்தைப் பாருங்கள்: "எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, யோவானளித்த சாட்சி இதுதான். அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். ஆனபடியால் அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்”. நீங்கள் பார்க்கிறீர்களா?
13 யோவான் ஸ்நானகன் செய்கின்ற அனைத்தையும் யூதர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் கேள்விப்பட்ட காரியங்களெல்லாம் அந்த விதமாகவே உள்ளதா என்று பார்க்க அவர்கள் ஆசாரியரையும் லேவியரையும் அனுப்புகிறார்களா? இல்லை! அவனுடைய ஊழியத்தின் செழிப்பை அல்லது ஏராளமான மனமாற்றங்களையும் அவன் அணிந்திருந்தது என்னவென்றும் பார்க்க அவர்கள் இந்த ஆசாரியர்களையும் லேவியரையும் அனுப்பியிருந்தார்களா? இல்லை!
14 அவர்களோடு ஒத்துழைக்க வேண்டுமென்பதற்கு அல்லது சபைகளின் கூட்டமைப்பில் யோவான் ஸ்நானகன் இணையும்படிக்கு வேண்டுகோள் விடுக்க அவர்கள் இந்த ஆசாரியர்களையும் லேவியரையும் அனுப்புகிறார்களா? இல்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? தங்கள் ஜெப ஆலயங்களில் வந்து நற்செய்தியை அறிவிக்க அவர்கள் யோவான் ஸ்நானகனை அழைக்கும்படி இந்த ஆசாரியர்களையும் அல்லது லேவியரையும் அனுப்பினரா? இல்லை! ஆனால் அவன் யார்? என்று கேட்கும்படி யோவானிடம் ஆசாரியரையும் லேவியரையும் யூதர்கள் அனுப்பியதாக வேதாகமம் கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
15 யோவான்: "நான் கிறிஸ்து அல்ல." என்றான். அவர்கள்: சரி, ஆனால் நீ யார்? என்றார்கள். அவன்: நான் இதுவோ அல்லது அதுவோ அல்ல என்றான், ஆனால் அவர்களோவெனில்: சரி, அப்படியென்றால் நீ யார்? என்றார்கள். நீ யார் என்று எங்களுக்குச் சொல்லு! நீங்கள் அறிந்துகொள்கிறீர்களா? "இந்த பக்கத்தில் மூன்று ஆயிரம் விசுவாசிகள் எனக்கு உள்ளனர், ஒவ்வொரு நகரத்திலும் சில சபைகளை நான் வைத்திருக்கிறேன், பெல்ஜியத்தில், பிரான்சில் சில சபைகளை நான் வைத்திருக்கிறேன் ... அத்தகைய அற்புதங்களை நான் செய்தேன், நான் இன்ன இன்ன புத்தகங்களை எழுதியிருக்கிறேன்... எனக்கு இருபது ஆண்டு அனுபவம் உண்டு ..." என்று யோவான் சொன்னாலும், இந்த யூதர்கள் தடுமாற்றமடையார்கள்! அவன் யார் என்பதில் தான் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
16 வேதாகம தீர்க்கதரிசிகளின் காரியத்தில் அது இருந்தபிரகாரம், நீ செய்து கொண்டிருக்கிறவைகளை அதுவும் இந்த நேரத்தில், இந்த இடத்தில், ஒரு மனிதன் செய்வான் என்பதை வேதாகமம் கூறுகிறதா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? யோவான் 8:44-ல் அவர்கள் பிசாசின் புத்திரராக இருப்பதாக கூறப்பட்ட போதிலும், யூதத் தவறுகள் இருந்தபோதிலும், அவர்கள் யோவானிடம் அவன் யாரென்று கேட்பதற்கான குறைந்தபட்ச ஞானத்தை அவர்கள் கொண்டிருந்தனர் ஏனென்றால் யூத இரத்தம் அவர்களில் பாய்ந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
17 ஒரு யூதனுக்கு முன்பாக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், புகழ்பெற்று இருங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், உங்களுக்காக உலகத்தை கொண்டிருங்கள் ... ஆனால் அவன் உங்களிடம்: நீங்கள் யார், ஐயா? (SIR, WHO ARE YOU?) என்று கேட்பான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. ஏனென்றால், மனித இனம் செய்யத் தவறியது அதுதான். இன்று, ஆயர்கள், தீர்க்கதரிசிகள், ரெவரண்டுகள், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், சுவிசேஷகசபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் பூமியை கெடுக்கின்றார்களென்றால், அதற்குக் காரணம் மனிதயினம் இந்த கேள்வியை தொலைத்துவிட்டதுதான். அவர்கள் பிசாசின் குமாரராக இருப்பதால், அவர்களுக்கு, இயற்கைக்கு மேம்பட்ட அந்த அனைத்தும் தேவனாக உள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா?
18 மோசே செய்ததைப் போல் நீங்கள் எரிந்துகொண்டிருக்கும் முட்செடியண்டையில் போனாலும், எந்த யூதனும் அல்லது தேவனின் குமாரனும், அவன் சிறியவனானாலும் அல்லது பெரியவனானாலும், நீ யார் என்பதை உன்னிடம் கேட்பான்! ஒரு யூதனை இராவிழிப்பு ஜெபக்கூட்டத்தில் கீழே விழ வையுங்கள், பவுல் போன்று நிலத்திலே கிடந்துகொண்டு, அவன் உன்னைப் பார்த்து, "நீங்கள் யார் ஐயா?" என்று கத்துவான். ஆனால் பிசாசின் குமாரன் ஒருவனோவென்றால், "ஓ! அவர் எவ்வளவு வல்லமைமிக்கவர் என்பதைப் பாருங்கள்!" என்பான். நீங்கள் பார்க்கிறீர்களா?
19 ஒரு தேவதூதன் வந்துவிட்டால் கூட, அதுவும் அதே காரியம் தான்! தேவனுடைய குமாரன் அந்த தேவ தேவனை நோக்கி, "ஐயா நீங்கள் யார்?" என்று கேட்பான். அது தான் காரியம்! நாம் வாழ்கின்ற நேரத்தில் நீங்கள் வருவீர்கள் என்றும் ... நீங்கள் செய்து கொண்டிருப்பவைகளை பிரத்தியட்சப்படுத்துவதற்கு உங்களைப் போன்ற ஒருவரை தேவன் அனுப்புவார் என்றும் வேதாகமம் கூறுகிறதா? அது தான் அது.
20 லூக்கா 1-ல், ஒரு மனிதன் சகரியாவுக்கு விசித்திரமான காரியங்களைக் கூறினான். அவன் ஒரு தேவதூதன் என்று சகரியாவுக்கு தெரியாது. இந்த காரியங்களை கேள்விப்பட்ட பிறகு, இந்த மனிதன் யார் என்று நேரடியாக கேட்டிருந்தால், அவன் ஊமையனாக்கப்பட்டிருக்க மாட்டான்! நீங்கள் பார்க்கிறீர்களா? அவனைப் போன்ற ஒரு ஆசாரியனுக்கு அது குழப்பமாக இருக்கிறது.
21 நாம் அதை லூக்கா 1:19 ல் வாசித்துப் பார்ப்போம்: "தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: *நான்* தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும்,... அனுப்பப்பட்டு வந்தேன்;". சகரியா தனது மனைவியின் முதிர் வயதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை ஆனால் அவன் எளிமையாக இந்த மனிதனிடம்: "என்னிடம் நீர் கூறுகின்ற காரியம் விசித்திரமானதாக உள்ளது, ஒரு மனிதன் அதை கூற முடியாது ஆகையால் நீர் யார் ஆண்டவரே?” என்று சொல்ல வேண்டியவனாக இருந்தான். ஆனால் அதற்கு பதிலாக, ஒரு யூதனான அவன் அதற்கும் மேலாக ஒரு ஆசாரியனாக இருக்கிறவன் தனது முதிர் வயதினை ஒரு பொருட்டாக எண்ணி கவலைப்படுகிறான். அந்த குறிப்பிட்ட நோக்கில் தான் காபிரியேல் கேள்விக்கு பதிலளித்த போது, "நான் தேவ சன்னிதானத்தில் நிற்கிற காபிரியேல்" என்றான்.
22 வேதாகமம் முழுவதுமாக வாசியுங்கள், அதைத்தான் நீங்கள் காண்பீர்கள். யோவான் ஸ்நானகன் அவனே தனது சீஷர்களை இயேசுவிடம் அனுப்பின போது, அது அற்புதங்களை பற்றி தன்னிடம் வந்தெட்டின தகவல்களின்படி தானா என்பதற்காக அல்ல, ஆனால் நீர் யார்? (WHO ARE YOU?) உண்மையிலேயே நீர் கிறிஸ்துதானா? என்பதுதான் கேள்வியாக இருந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா?
23 மத்தேயு 16-ல் இயேசு தம் சீடர்களைக் கண்டபோது, இரக்க உணர்வுகொண்டார். மோசேயைக் குறித்தும், நியாயப்பிரமாணத்தைக் குறித்தும் தீர்க்கதரிசிகளைக் குறித்தும் தேவனைக் குறித்தும் பேசினார் ஆகையால் ஜனங்கள் அவரை பின் சென்றார்கள்; அவர் நோயாளிகளை சுகப்படுத்தினார், மரித்தோரை எழுப்பினார், ஆனால் சீஷர்களில் ஒருவனும் அவர் யார் என்று கேட்க துணிவு கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு உண்மையான தேவ மனிதன், அவ்வளவு தான்! ஒரு நாள், இயேசு தாமே அவர்களின் ஸ்தானத்திலிருந்து அந்த கேள்வியைக் கேட்டார்.
24 மத்தேயு 16:13 முதல் 14 ல் இருந்து நான் அதை வாசிக்கப் போகிறேன்: "பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், மற்ற சிலர் எலியா என்றும்; வேறு சிலர் மீண்டுமாக எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.". [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் யாரைப் பின்தொடர்ந்தார்கள் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது! அந்த இயேசுவானவர் மோசேயையும் தீர்க்கதரிசிகளையும் பற்றி அவர்களிடம் பேசுவதுதான் அவர்களுக்கு முக்கிய காரியம். இன்றைக்கு மனிதகுலம் செய்யத்தவறினது அது தான். நீங்கள் பார்க்கிறீர்களா?
25 அந்த டாமி ஆஸ்பான், யோங்கி சோ, கிறிஸ் ஒயாக்கிலோம், டேவிட் ஒளவொர், இம்மானுவேல் மாகான்டிவா, உபர்ட் ஏஞ்சல், டி.பி. ஜோசுவா, டேவிட் ஒயேடிபோ, ஈவால்டு ப்ராங்க், மோரிஸ் செருல்லோ அல்லது ரெய்ன்ஹார்ட் பொங்கெ ஆகியோரை இயற்கைக்கு மேம்பட்டவர்களென நீங்கள் கண்டால், "ஐயா, நீங்கள் யார்? இன்று நீங்கள் செய்கிறவைகளை செய்வீர்கள் என வேதாகமம் அறிவிக்கிறதா? யோவான் ஸ்நானகனைப் பற்றி அறிவிக்கப்பட்டிருந்ததுபோல வேதாகமம் உங்களைப் பற்றி அறிவிக்கிறதா? நாம் வாழ்கிற இந்த காலகட்டத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைச் செய்யும்படிக்கு இந்த தலைமுறையில் உங்களுடைய இனத்திலிருந்து ஒரு மனிதன் எழும்புவான் என்று வேதாகமம் அறிவித்திருக்கிறதா? மோசே, பவுல் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப் போல உங்களை தேவன் (GOD) அழைத்து, பணிக்கு நியமித்திருக்கிறாரா? ... உங்களுடைய அற்புதங்கள் அனைத்தையும், உங்களுடைய அபிஷேகங்களையும், உங்களுடைய ஞானத்தையும் நாங்கள் காண்கிறோம் ஆனால் நீங்கள் யார்? நீங்கள் யார் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்!" என்று அவனை கேட்கவேண்டுமென வேதாகமரீதியிலான காரணகாரியமானது கட்டளையிடுகிறது.
26 நீ தேவனின் குமாரனொருவனேயானால், அந்த ஜோயல் ஆஸ்டீனை, டி.டி.ஜாக்ஸை, டக் பச்லரை, பில்லி கிரஹாமை, இடிர் மாசிடோவை, வால்டிமிரோ சந்தியாகுவை, சிலாஸ் மலாஃபியாவை, பவுலா வைட்டை, ஜாய்சி மேயரை, ஆல்பர்ட்டோ மொட்டேசியை, கிலவுதியோ ப்ரெய்டுசனை அல்லது டான்டே கிபெல்லை இயற்கைக்கு மேம்பட்டவர்களென நீ கண்டால், அவனை கேட்டவேண்டிய கேள்வி அதுதான்.
27 நீங்கள் அந்த பென்னி ஹின், மானாசே ஜோர்டன், யோவாக்கிம் கான்க்ளேவ்ஸ், டொனால்டு பர்ணல், அலெஜான்ட்ரோ புல்லோன், அல்லது குயிலெர்மொ மால்டொனால்டோ ஆகியோரை இயற்கைக்கு மேம்பட்டவர்களென கருதுகிறீர்கள் என்றால், "ஐயா, நீங்கள் யார்? இன்று நீங்கள் செய்கிறவைகளை செய்வீர்கள் என வேதாகமம் அறிவிக்கிறதா? யோவான் ஸ்நானகனைப் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது போல வேதாகமம் உங்களைப் பற்றி அறிவிக்கிறதா? நாம் வாழ்கிற இந்த காலகட்டத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைச் செய்யும்படிக்கு இந்த தலைமுறையில் உங்களுடைய இனத்திலிருந்து ஒரு மனிதன் எழும்புவான் என்று வேதாகமம் அறிவித்திருக்கிறதா? மோசே, பவுல் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப் போல உங்களை தேவன் (GOD) அழைத்து, பணிக்கு நியமித்திருக்கிறாரா? ... உங்களுடைய அற்புதங்கள் அனைத்தையும், உங்களுடைய அபிஷேகங்களையும், உங்களுடைய ஞானத்தையும் நாங்கள் காண்கிறோம் ஆனால் நீங்கள் யார்? நீங்கள் யார் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்!" ஆனால் அவர்கள் யோவேல் 2:28 மற்றும் 1 கொரிந்தியர் 2:4 முதல் 5 ன் கீழாக உள்ள மந்திரவாதிகளாக இருக்கிறபடியால் அவர்களால் பதிலளிக்கமுடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
28 நீங்கள் யார் ஐயா? உங்களைத்தான், பெனடிக்ட் XVI அவர்களே... உங்களைத்தான், சபைகளின் தலைவர்களே, ... உங்களைத்தான், ரெவரண்டுகளே, ஆயர்களே, ... உங்களைத்தான், அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளே, ... சபைகளையும் மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்களையும் திறக்கிறவர்களே, நீங்கள் யார்? பெரிய டாக்ஸிடோ கம்பளி உடையில் இருப்பவர்களே, மனுஷருக்கு முன்பாக நற்கந்தமாகவும் தேவனுக்கு முன்பாக தானியேல் 8-ல் உள்ள ரோமம் மிகுந்த வெள்ளாட்டுக்கடாவின் நாற்றத்திற்கொப்பாக துர்கந்தமாகவும் உள்ளவர்களே, நீங்கள் யார்? சுவர்களில் உங்களது சுவரொட்டிகளையும் புகைப்படங்களையும் தொங்கவிட்டிருப்பவர்களே, நீங்கள் யார்? நீங்களெல்லாம் யார் ஐயா? (WHO ARE YOU SIRS?) எந்த தெய்வீக ஆணையின் தைரியத்தினால் நீங்கள் அதைச் செய்கிறீர்கள்?
29 எங்களிடம் கேட்கிறவர்களுக்கு நாங்கள் ஒரு பதில் கொடுக்கும்படிக்கு நீங்கள் யார் என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். மத்தேயு 25:6 மாம்சமானதுதான் நீங்களா? நீங்கள் கிறிஸ்துவா? நீங்கள் தீர்க்கதரிசியா? நீங்கள் உலகத்தின் ஒளியா? இன்று பூமியிலே ராஜ்யத்தின் திறவுகோல்களை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? ... நீங்கள் யார்? நீங்கள் யார் என்று சொல்லுங்கள்? ... ஓ தேவனே! உமக்கு நன்றி, சதாகாலமும் உமக்கே மகிமை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
30 ஜெபத்தின் ஆவியில் நாம் இப்பொழுது எழுந்து நிற்கலாம் ... நீங்கள் முதல் அல்லது இரண்டாவது முறையாக அல்லது மூன்றாவது முறையாக இங்கே இருப்பவர்களானால் மேலும் நீங்கள் இதுவரை இந்த செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்,நோவாவின் பேழையைப் போல இன்று என் இரட்சிப்புக்காக வந்திருக்கிற ஒன்றுதான் இந்த செய்தி என்று நான் நம்புகிறேன் என்று கூறுவதற்காக உங்கள் கரத்தை எளிமையாக உயர்த்துங்கள்! நீங்கள் இப்பொழுது அதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை கூறுவதற்காக உங்கள் கரத்தை எளிமையாக உயர்த்துங்கள்! ...
31 மேலும் இந்தப் பிரசங்கத்தை நீங்கள் கேட்டதற்கு பிற்பாடு, மத்தேயு 25:6 மற்றும் வெளிப்படுத்துதல் 12:14-ன் படி நமது தலைமுறைக்கு வரப்போகிறவரான தீர்க்கதரிசிதான் நான் என நீங்கள் விசுவாசிப்பீர்களேயாகில், உங்கள் கரத்தை உயர்த்துங்கள் மேலும் இந்த விசுவாசத்தில் நிலைகொண்டு உங்களுக்கு தேவையானது எதுவானாலும் கேளுங்கள் அது உங்களுக்கு அருளப்படும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக மேலும் உனது அற்பணிப்பை என்றென்றைக்குமாய் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!