(ஞாயிற்றுகிழமை காலை, செப்டம்பர் 16, 2007 அன்று அட்ஜாமே, அபிட்ஜான் - ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது.)
1நல்லது! நிர்வாணத்தை குறித்து அறிக்கையிடுகையில், உங்கள் கண்கள் மோசமாக உடையனிந்த ஒரு பெண் மீது அல்லது ஒரு தூய்மையற்ற படத்தின் மீது உங்கள் பார்வைகள் விழுந்தபோது நீங்கள் உடனடியாக இரண்டாவது முறை இச்சையோடு பார்க்காத பொழுது நீங்கள் பாவம் செய்யவில்லை என்பதை நான் குறிப்பிடுகிறேன்.
2நல்லது! இங்கே நான் இரண்டு கேள்விகளை குறித்து வைத்துள்ளேன் அதற்கு நான் பதில் கூற விரும்புகிறேன். முதலாவது: "சகோதரர், பிலிப்பு, தேவன் பூச்சிகளை ஏன் படைத்தார்?". நீங்கள் பார்க்கிறீர்களா?
3ஜீவியத்தில் அவற்றின் முக்கியத்துவத்தை நாம் காண்பதில்லை ஆனால் உண்மையில், பூச்சிகள் அதினுடைய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஈக்கள், முசுக்கட்டைபூச்சி, புழுக்கள், மற்றும் மற்றவைகள் எதிர்கால விதைகளுக்கு மீண்டும் பூமியைச் செழிப்பாக்குவதற்காக இறந்துவிட்ட அனைத்தையும் சிதைவுபடுத்துகின்றது. விசேஷமாக அதற்காகவே தேவன் அவைகளை படைத்தார். நீங்கள் பார்க்கிறீர்களா?
4மனிதன் உயிர் பிழைப்பதில் பூச்சிகள் ஈடுபடுகின்றன. இந்த பூச்சிகள் ஒரு இனத்தை மறையப் பன்னினால், அது தேவனின் திட்டத்தில் ஒரு செயலிழப்பை ஏற்படுத்தும்.
5அது ஆதியில் இருந்தது போலவே, தேவன் வெறுமனே காயீனை மரிக்க செய்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை, ஏனென்றால் ஏதோ ஒரு இடத்தில் காயீனும் அவனுடைய பிள்ளைகளும் நமக்கு தேவையாக இருக்கின்றார்கள். இன்று நாம் கார்கள், விமானங்கள், கைபேசிகள் கொண்டிருக்கிறோம் என்றால்... அதற்காக தூபால்-காயினுக்கு நன்றி. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
6ஆதியாகமம் 4:22-ல் வேதாகமம் கூறுகிறது: "சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்" நீங்கள் பார்க்கிறீர்களா? அவன், தொழிலதிபர்களின் தகப்பன், அவர் காயினின் ஒரு பிள்ளை நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் ஆவிக்குரிய காரியங்களுக்காக காயீனை சபித்தபோது, பூமியின் காரியங்களுக்காக அவனுக்கு வரத்தை கொடுத்திருந்தார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7அவ்வாறு, இந்த பூசாரிகள், மேய்ப்பர்கள், தீர்க்கதரிசிகள், மற்றும் பூமியெங்கும் உள்ள மதத் தலைவர்களை பாருங்கள். அவர்கள் நமக்கு பூச்சிகள் மற்றும் தூபால் காயின் போன்று நமக்கு பயனுள்ளதாக இருப்பார்கள். அமெரிக்காவில், டேவிட் வில்கர்சன் அவர்களில் ஒருவரான நிக்கி க்ரூஸ், சுவிசேஷம் செய்வதன் மூலம் பல கொள்ளைக்காரர்களை பாதிப்பில்லாதவர்களாக ஆக்கியது உங்களுக்கு நினைவிருக்கிறது.
8தேவன் காயினை ஜீவிக்க விடாமல் விட்டு இருந்தால், இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு பூஜாரிகள் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறு சீரமைக்கப்பட்ட சபைகள் என்று அழைக்கப்படும் சபை போதகர்கள் இந்த லட்சக்கணக்கான காட்டு விலங்குகளை பணிய வைக்கவும் மற்றும் இந்த சபைகள் மற்றும் மசூதிகளில் கட்டுப்படுத்த பிறந்திருக்க மாட்டார்கள். மேலும் நாம் பூமியில் எளிதாக கட்டுப்படுத்த முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் பூச்சிகளை போலவே முக்கியம் வாய்ந்தவர்கள். சபைகள் மற்றும் மசூதிகள் நம்முடைய பாதுகாப்பு திட்டத்தில் கலந்து கொள்கின்றது.
9நல்லது! இரண்டாவது கேள்வி, "சகோதரர் பிலிப்பு, நீங்கள் பிரசங்கிக்கும் செய்திக்கு வெளியே ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியுமா?". அதற்கான பதில் இல்லை! இது சாத்தியமில்லை. சகோதரர் நீங்கள் பார்க்கிறீர்களா? முதலில் நான் அப்போஸ்தலர் நடபடிகள் 10 ஐ வாசிக்க போகிறேன், அங்கே நான் இரண்டு வசனங்களை உங்களுக்கு காண்பிப்பேன். பிறகு 11-ம் அதிகாரத்தில் மற்றொரு வசனம்.
10எவராக இருப்பினும் சுத்த இருதயத்துடனே நல்லதொரு வாழ்கை வாழ்ந்தால் போதும், தேவன் (தற்பொழுது) செய்துகொண்டிருப்பவைகளை ஏற்றுக்கொள்ளாமலேயே இரட்சிப்படைய முடியும் என பிசாசின் பிள்ளைகள் எண்ணுகின்றனர். இருப்பினும் அது துல்லியமாக தேவன் (தற்பொழுது) செய்துகொண்டிருப்பதென்னவோ அதுமட்டுமே இரட்சிப்பின் ஒரே வாசலாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11கொர்நேலியு தேவனுடைய பிள்ளையாக இருந்ததால், பரிசேயர்கள், சதுசேயர்கள், கிரேக்கவாதிகள், ஏரோதியர்கள், எசேனியர்கள்... ஆகியோருடன் மரிக்க தேவன் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் தனது நேரத்தின் சத்தியத்திற்கு அவனை அவனுடைய தலைமுறையில் ராஜ்யத்தின் திறவுகோல்களை கொண்டிருந்த பேதுருவிடம் வழி நடத்தினார், இன்று நீ தேவனுடைய பிள்ளை என்றால், தேவன் அவ்வாறு செய்வார். ஏன்? ஏனெனில் அவர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராக இருக்கின்றார்.
12உங்களுடைய இருதயம் சுத்தமாக இருந்து மேலும் நீங்கள் உண்மையிலேயே நல்லவராக இருப்பீர்களாயின், உங்களை தேவன் இவ்விடத்திற்கு வழிநடத்தாமலிருப்பது கூடாத காரியம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நோவாவின் காலத்தில், உங்களுடைய இருதயம் தூய்மையாகவும் சரியானதாகவும் தேவனுக்கு முன்பாக இருக்குமானால், நீங்கள் நோவாவினுடைய பேழைக்குள்ளாக வந்துவிடுவீர்கள். உங்களது பார்வையில் உங்களது இருதயம் செம்மையானதாக இருக்கலாம், அவ்வாறாக இருக்கிறதென கூறுகிறது நீங்கள்தான் ஆனால் நீங்கள் நோவாவின் பேழைக்குள்ளாக பிரவேசிக்கும்பொழுது அது அவ்வாறாக உங்கள் இருதயம் உண்மையிலேயே செம்யையாக இருக்கிறதை நாங்கள் காண்போம். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகள் 10:1 முதல் 3 எடுப்போமாக, இது கொர்னேலியுவின் கேள்வியாக இருக்கிறது. நெருக்கமாக தொடருங்கள்! "இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான். தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே! என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி என்றது". ஆமென்!
14அவன் பக்தியுள்ளவனாக இருந்தான் என வேதாகமம் கூறுகிறது. மேலும், தன் வீட்டாரனைவரோடும் கூட தேவனுக்கு பயந்திருந்தான் எனவும் வேதாகமம் கூறுகிறது. நான் குறிப்பாக: வீட்டாரனைவரோடும், அவனது மனைவியும் அவனது பிள்ளைகளும். பின்னும், ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்தான், அதே குடும்பத்திலுள்ள ஆட்களுக்கு மட்டுமல்ல அல்லது அவனிருக்கும் ஜெப ஆலயத்திலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஆனால் எல்லா ஜனங்களுக்கும் என வேதாகமம் கூறுகிறது. மேலும் தொடர்ந்து ஜெபம்பண்ணி உபவாசித்துக்கொண்டிருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது ஆனால் அப்போஸ்தலர் நடபடிகள் 11:13 முதல் 14 ல், கொர்நேலியுவைப் பற்றி இது கூறுகிறது: "அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு; நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
15தேவதூதன் அவனை பெலப்படுத்தவோ அல்லது அவனை ஆசீர்வதிக்கவோ அல்லது அவன் மீது தன்னுடைய கைகளை வைக்கவோ அல்லது அவனிடத்தில் அநேக நாட்கள் உபவாசத்தில் கழிக்கும் படியாக கூறவோ அல்லது அவன் இரட்சிக்கப்பட்டான் என்று சொல்லவோ வரவில்லை. ஆனால் ஒரு மனிதனிடத்தில் வழிநடத்தும்படியாக வந்தான். பேதுரு, அந்த மணி வேளையில் பூமியின் மேல் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைக் கொண்டிருந்தவன்.
16இன்றும், நீங்கள் ஒரு உண்மையான மேய்ப்பனாக, தீர்க்கதரிசியாக அல்லது எதுவாக இருந்தாலும், நீங்கள் செய்வது உண்மையில் தேவனிடம் செல்கின்றது, உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியினிடத்தில் வரும்படி செய்யாமல் தேவன் ஒரு தூதனை அனுப்பி ஒரு காரியத்தை செய்யும்படி கூற மாட்டார், ஏனென்றால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவும் நீங்களும் உங்களை பின்பற்றுகிறவர்களும் இரட்சிக்கப்படும்படியாகவும் இராஜ்ஜியத்தின் திறவுகோல்களையும், நித்திய ஜீவனுடைய வார்த்தைகளையும் அவன் கொண்டிருக்கின்றான். ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17கொர்நேலேயு செய்த யாவும் நன்மையாக இருந்தது ஆனால் அவனை இரட்சிக்கக்கூடிய பரலோக இராஜ்ஜியத்தின் ஒரே வாசலின் திறவுகோல்கள், அவனையும் அவனுடைய வீட்டார் எல்லோருடைய இரட்சிப்பும் அவனுடைய வார்த்தையில் கொண்டிருந்தது. அது இல்லாமல், அவன் எளிதாக நரகத்தில் அவனை காண முடியும். அவனுடைய மணி வேளையில் தேவன் என்ன செய்கின்றார் என்பதை கொர்நேலேயு எற்றுக் கொள்ளாவிட்டால், அவனுடைய இருதயத்தின் எல்லா உத்தமத்திலும் அவன் தன்னை நரகத்தில் காண போகின்றான்.
18பேதுரு கல்வாரியின் சிலுவையில் மரிக்கவில்லை அவன், பேதுரு தாமே நித்திய ஜீவனின் வார்த்தைகள் மற்றும் பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை கொண்டிருந்தான். காக்குவ் பிலிப்பு உனக்காக கல்வாரியின் சிலுவையில் மரிக்க வில்லை ஆனால் அவனிடத்தில், இன்று நீங்கள் இரட்சிக்கப்படக்கூடிய நித்திய ஜீவனின் வார்த்தைகள் மற்றும் இராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் காக்குவ் பிலிப்புவினிடத்தில் உள்ளது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19கொர்நேலியு நல்லவன் என்பதற்கான ஆதாரம், அது தேவன் தன்னுடைய மணி வேளையில் என்ன செய்கிறார் என்பதை அவன் எற்றுக் கொண்டான். நீங்கள் பார்க்கிறீர்களா? எது இரட்சிக்கின்றது? அது உங்களுடைய நேரத்தின் தேவனுடைய உயிருள்ள வார்த்தை, அது உயிருள்ள தீர்க்கதரிசியினிடத்திலிருந்து புறப்பட்டு வரும் வார்த்தை. இன்று உயிருள்ள தேவனுடைய வார்த்தை, ஒரு தலைமுறையில் உயிருள்ள தேவனுடைய வார்த்தை, அது பூமியின் மேல் ஒரு தீர்க்கதரிசி உயிரோடு இருக்கும் வேளையில் இந்த தலைமுறையின் தீர்க்கதரிசியின் வாயின் மூலமாக வரும் தேவனுடைய வார்த்தை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
20ஆதியிலே வார்த்தை இருந்தது! அது ஒரு சபை அல்ல ஆனால் வார்த்தை! மேலும் அந்த வார்த்தையானது உண்மையிலே உன்னை சிருஷ்டித்திருந்தால், "நான் ஒரு நல்ல சபையை தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று நீங்கள் ஒருபோதும் சொல்ல மாட்டீர்கள். ஆனால், என் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி எங்கே, என்னுடைய காலத்தின் சுவிசேஷம் எங்கே? என்று நீங்கள் சொல்வீர்கள் [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21இங்கே, தூதன் கொர்நெலேயுவை நோக்கி, "நீ செய்யும் யாவும் நன்மையானது. நீ சபைக்கு செல், நீ ஜெபம் செய்து அதிகமாக உபவாசம் இரு, நீ பக்தியாய் இருக்கின்றாய், நீ தீங்கு செய்யாதே, நீ தேவனுக்கு பயந்து இரு, நீ நன்கொடை செலுத்து... ஆனால் யோவான் 6: 28-29-ஐ நீ உபயோகிக்காவிட்டால் நீ நரகத்திற்கு செல்வாய். அது கூறுகிறதாவது அவர் *அனுப்பினவரை* நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22நோவாவின் காலத்தில், அவனுடைய ஜனங்கள் மத்தியில் உயிருள்ள தீர்க்கதரிசியாக இருக்கின்ற நோவாவை விசுவாசிப்பதே தேவனுடைய கிரியையாக இருந்தது. மோசேயின் காலத்தில், அவனுடைய ஜனங்கள் மத்தியில் உயிருள்ள தீர்க்கதரிசியாக இருக்கின்ற மோசேயை விசுவாசிப்பதே தேவனுடைய கிரியையாக இருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில், அவனுடைய ஜனங்கள் மத்தியில் உயிருள்ள தீர்க்கதரிசியாக இருக்கின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதே தேவனுடைய கிரியையாக இருந்தது.
23இன்று, இந்த தலைமுறை மத்தியில் உயிருள்ள தீர்க்கதரிசியாக இருக்கின்ற தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிப்பதே தேவனுடைய கிரியையாக இருக்கின்றது. தேவனுடைய கிரியை அது யோவான் 6:28 முதல் 29 ஆகும். இதுதான் 1993 தரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது: "... குறிக்கப்பட்ட நேரத்தில், நீ புரிந்து கொண்டு, முறைமையின்படி நீ கற்றரியாததை நீ போதிப்பாய், அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு".
24மேலும் அந்த "எவனோ", விற்குள்ளாக, எல்லோரையும் எண்ணிக் கொள்ள வேண்டும் நீ யாராக இருந்தாலும் என்னவாக இருந்தாலும் உன்னுடைய விசுவாசம் மற்றும் உன்னுடைய இருதயத்தின் தூய்மை ஒரு பொருட்டல்ல, பரலோகத்திலிருந்து தேவன் ஒரு சோதனை உனக்கு அனுப்பினாலும் அது அவர் உன்னுடைய காலத்தில் என்ன செய்கின்றாரோ அதற்கு வழிநடத்தும்படியாகத்தான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25இந்த வாரத்துக்குள்ளாக, நான் ஒரு போதகரிடம் கேட்டேன், நான் அவரை நோக்கி, "ஐயா, நோவாவின் நாட்களில் பூமியில் எங்கேயாவது யாராவது ஒருவர் அவரும் தேவனுடைய வேலையில் இருக்க முடியுமா? அவரால் பதில் சொல்ல முடியவில்லை. நான் மீண்டுமாக இவ்வாறு சொன்னேன்: "ஐயா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியிலே பிரசங்கிக்கும்போது, எங்கேயாவது யாராவது ஒருவர் அவரும் தேவனுடைய வேலையில் இருக்க முடியுமா?".
26அவருடைய வாய் மூடப்பட்டது மற்றும் இவ்வாறுதான் அவர்களுடைய வாய் சதாக்காலமும் பூமியிலும் பரலோகத்திலும் மூடியிருக்கும்; இது நியாயத்தீர்ப்பில் அவர்களுக்கென்று காத்திருக்கும் ஒரு கேள்வியாகும், அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. தேவன் பரலோகத்தில் தனித்துவமானவர், அவருடைய வாய் பூமியிலும் தனித்துவமானது, தேவனுடைய வாயானது உயருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனே. பூமியில் ஒரே நேரத்தில் ஒரு நபரிடம் மட்டுமே இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை காண முடியும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27நல்லது! தானியேலின் ஆவியானது நம்முடைய காலத்தில் செயல்பட வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அறியாத மொழியினைப் பற்றி பேசுகையில், ஊழியத்தின் மகத்தான கட்டம், அது தானியேலின் ஆவி. ஆனாலும் தேவனுடைய ஆவி சில சூழ்நிலைகளில் செயல்படுகிறது. அதை தான் அது சித்தரிக்கின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா?
28தானியேலின் ஆவி அங்கு ஊழியம் செய்த போது, அது பாபிலோனில் இருந்தது. தானியேலின் ஆவி இந்த பக்கத்தில் ஊழியம் செய்யும் போது, பாபிலோனில் நேபுகாத்நேச்சாரின் அரண்மனையுடன் உள்ளது, அங்கு உலகின் மிகப் பிரபலமான மத கட்டிடம் உள்ளது. தானியேல் நான்கு சாம்ராஜ்ஜியங்களை பற்றி பேச முடியும்: பாபிலோனிய சாம்ராஜ்ஜியம், மேதியன் மற்றும் பெர்சிய சாம்ராஜ்ஜியம், கிரேக்க உலக சாம்ராஜ்ஜியம் மற்றும் ரோம சாம்ராஜ்ஜியங்கள் "நீ கண்ட நான்கு மிருகங்களின் இரகசியம் " என்ற பிரசங்கத்தில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டன.
29ஆப்பிரிக்காவில்... சேபாவின் ராஜஸ்திரீ ஆப்பிரிக்காவின் பங்கு இல்லை என்று எப்போதும் நான் சொன்னேன். ஆதாரம் என்னவென்றால், ஆப்பிரிக்கர்களை தேவன் சந்திக்கும் போது, இந்த நேரத்தில் தான் சேபாவின் ராணியின் பிள்ளைகள் ஃபாலாஷாஸ், இஸ்ரேலுக்குத் திரும்ப வேண்டிய நேரம் எனவே ஷேபாவின் ராணி ஆப்பிரிக்காவுடன் செய்வதற்கென்று ஒன்றுமில்லை. தேவனிடத்தில் எந்த குழப்பமும் இல்லை.
30நல்லது! நாம் இதைக் கவனிக்கலாம்: சேபாவின் ராஜஸ்திரீ, இந்த எத்தியோப்பிய ஸ்திரீ தனது காலத்தின் மிகப்பெரிய மனிதனிடம் செல்கின்றாள். ஆதியாகமம் 2:13 கூஷ் என்று கூறுகிறது அதாவது எத்தியோப்பியா ஏதேன் தோட்டத்தில் இருந்ததையும், மார்ச் 29 இன் கிரகணம் அதை கடந்தது. கூஷ் அது எந்தியோப்பியா, ஆதியாகமம் 10.6 எத்தியோப்பியா பூமியின் மேல் புகழ் பெற்றதாக இருக்க வேண்டும்.
31இப்போது எத்தியோப்பிய ஸ்திரீயுடன் உண்மையில் என்ன நடந்தது? மறுபடியும் தீர்க்கதரிசி மோசேயிடம் எத்தியோப்பியா திரும்பி வருகின்றது. அங்கே ஒரு எத்தியோப்பிய ஸ்திரீ மோசேயிடம் சென்றாள் பிறகு ஆரோன் மற்றும் மிரியாமின் மூடத்தனம் வெளிப்பட்டது. சாலொமோனிடம் அந்த எத்தியோப்பிய ஸ்திரி செல்லும் வரை அவன் அவளுக்கு ஒரு போதும் கவனம் செலுத்தவில்லை. மோசேயிடம் அந்த எத்தியோப்பிய ஸ்திரி செல்லும் வரை அவன் அவளுக்கு ஒரு போதும் கவனம் செலுத்தவில்லை.
32நல்லது! நான் சாலொமோனையும் சேபாவின் ராணியிடத்திற்கு திரும்பி வருகிறேன். நல்லது! வேதாகமம் ஒரு குறியிடப்பட்ட புத்தகம். ஆதியாகமத்தில், அது பாலியல் செயலாக இருக்கும்போது தேவன் கனி என்று சொல்லலாம். சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடத்திற்கு அவனுடைய மகத்துவத்தை காணச் சென்றாள் என்று கூறுகிறது ஆனால் வெளிப்பாடானது சாலொமோனின் மகத்துவத்தை, சாலொமோனை தாமே பார்ப்பதற்காக சென்றாள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
33அவள் ராஜாவாகிய சாலொமோனிடம் கர்ப்பந்தரித்து மற்றும் அங்கிருந்து ஃபாலாஷாசின் சந்ததி வந்தது. வெளிப்படையாகவே, எத்தியோப்பிய ஸ்திரீ தீர்க்கதரிசி மோசேயின் மகத்துவத்தைக் காண மட்டுமே சென்றாள். இந்த ஃபாலாஷாஸ் எத்தியோப்பியாவில் ஹாலே சேலாசேவின் மாதிரியை பின்பற்றிய பெரிய மனிதர்களாக இருந்தார்கள், ஆனால் இஸ்ரவேலில் முக்கியத்துவமற்றதாக இருந்தார்கள். ஆனால் இந்த இஸ்ரவேலர்கள் இந்த ஃபாலாஷாஸ்களை அவர்களை போன்ற யூதர்களாக கூட பார்க்கவில்லை.
34மோசேவுடன் பழைய உடன்படிக்கையில் இந்த எத்தியோப்பிய ஸ்திரீ தோன்றியபோது, அங்கே அவள் மூலமாக பிசாசை கண்டவர்கள் எண்ணாகமம் 11-ல் விழுந்து போனார்கள். மோசேக்கு எத்தியோப்பிய ஸ்திரீயை வழி நடத்திய சர்வ வல்லமையுள்ள தேவனை "பிசாசு" என்று அவர்கள் அழைத்தார்கள். இது தான் அவர்களின் மரணத்தின் உண்மையான காரணம் இது அடுத்த அத்தியாயத்தில் ஆரோன் மற்றும் மிரியாமினிடத்தில் தொடர்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் ஏற்கனவே அதே மன்னா, வெப்பம், பாலைவனத்தின் தாகம் ஆகியவற்றில் கோபமாக இருந்தார்கள்; மோசே அதைச் செய்தபோது அவர்கள் கவனம் கூட செலுத்தவில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் அது அவர்களுக்கு ஒரு காரணமாக இல்லை ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்கள் மற்றும் அவர்கள் அதின் மூலமாக தேவனை இனங்கண்டு கொள்ள வேண்டும், அவர்கள் தேவனுடைய கரம் மற்றும் மோசேயோடு தேவனுடைய வார்த்தையை கண்டார்கள் மற்றும் அவர்கள் அதின் மூலமாக தேவனை இனங்கண்டுகொள்ள வேண்டும்.
35உதாரணமாக, நாம் யாத்திராகமம் 19-ம் அதிகாரத்தை வாசிப்போம்: "யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் ஆரோனிடத்தில் எண்ணாகமம் 12-ல் நினைவுபடுத்தினார்.
36இருமுறை, மோசே தேவனுடனும் பரிசுத்த தூதர்களுடனும் தங்கி இருந்தான். மேலும், இஸ்ரவேல் புத்திரர் கூட மகிமையினால் அவனுடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்று வேதாகமம் கூறுகிறது. ஆமென்! ஜெபத்திற்கு இப்போது நாம் எழுந்து நிற்போம்.