en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 64 (Kc.64) : இரண்டு தரிசனங்களின் வியாக்கியானம்
(அக்டோபர் 17, 2007 புதன்கிழமை மாலை, அட்ஜாமே, அபிட்ஜன் - ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளன் பூமியில் ஊழியம் செய்ய போகிறபோது,தேவன் சூழ்நிலைகளை ஆயத்தப்படுத்துகிறார் மற்றும் உலக தோற்றத்திற்கு அஸ்திவாரம் இடுவதற்கு முன்பே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருப்பவர்களில் அநேகர் பூமியின் மீது பிறக்க துவங்குகிறார்கள்.
2 நல்லது! நான் தொடங்கும் முன் வேறு ஒரு காரியத்தை குறித்து பேச விரும்புகிறேன். சாலொமோனின் ஞானத்தைப் பொறுத்த வரை, சேபாவின் ராணி சாலொமோனிடத்தில் வந்தபோது, அதை கவனியுங்கள், அவள் தாமே மிக ஞானமுள்ளவள் என்றும் அவள் சாலொமோனை உவமைகளாலும் விடுகதைகளினாலும் சோதிக்கும் வரை சென்றாள் என்று வேதாகமம் கூறுகிறது. 2 நாளாகமம் 9. சாலொமோனின் செல்வத்தை பொருத்த வரை, அவள் கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் வந்தாள் என்றும் கூட வேதாகமம் கூறுகிறது; அவள் சாலொமோனிற்கு மூன்று டன்களுக்கும் அதிகமான பொன்னை கொடுத்தாள். இந்த அளவிற்கு அதிகமான பொன்னை ஒருவனும் சாலொமோனுக்கு கொடுத்ததில்லை. அவள் விலையுயர்ந்த கற்களை மிகுதியாக அவனுக்கு கொண்டு வந்தாள். நீங்கள் பார்க்கிறீர்களா?
3 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! இந்த மாலை வேளையில், முதலில் நான் ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தை வாசிக்க விரும்புகிறேன். நல்லது! "அந்த தரிசனத்தில், நான் கடற்கரை மணலின்மேலும் பிறகு ஓர் உயரமான கூர்நுணி கோபுரத்தின்மேலும் (pyramid) பிறகு மறுபடியும் வேறொரு இடத்தில் கடற்கரை மணலின்மேலும் நான் நின்று கொண்டிருக்கிறதாக என்னை நானே பார்த்தேன்; மேலும், பழைய இராணுவ வண்டி (an old military truck) சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து வெளியே வந்து எனக்குப் பின்னாக செல்லுவதை நான் கண்டேன். நான் திரும்பி பார்த்தேன், உயிரோடிருக்கும் ஜனங்கள் அதில் இருந்தனர். அவர்கள் ஸ்திரிகளாகவும், அவர்களில் ஒருத்தி கலப்பு இனமாகவும் இருந்தாள்.
4 பின்னர், இரண்டு புறாக்கள் என்னை நோக்கி வந்து, மறுபடியும் திரும்பித் தண்ணீர்களுக்கு மேலாக சென்றது. ஒரு கிரகணம் ஏற்பட்டது மேலும் மேக (a Cloud) தோற்றமளித்த ஒரு மனிதர், ஒரு பட்டயத்தை பிடித்துக்கொண்டு செம்மறியாட்டுக்குட்டியுடனே வானத்திலிருந்து இறங்கி வந்தான், பூமி மறுபடியும் பிரகாசமாயிற்று. அவர்கள் தண்ணீர்களின் மீது நின்றனர், செம்மறியாட்டுக்குட்டி ஒரு அறிய முடியாத மொழியில் (an unknown language) என்னுடன் பேச ஆரம்பித்தது. அவருடைய பேச்சின் சத்தம் எனக்குள்ளாக வந்தது, நான் மரித்தவனாக விழுந்தேன். எனது சரீரம் கடற்கரை மணலின்மேல் கிடக்கும்வேளையிலே தண்ணீர்களுக்கு மேலாக போய் நிற்கும் படியாக என் ஆத்துமா வெளியேறிற்று. அது என்னுடனே பேசி முடித்த பொழுதோ, என் ஆத்துமா எனக்குள் திரும்பி வந்தது நான் மறுபடியும் உயிருள்ளவனானேன் ஆனால் மேற்கொண்டு அவர்களை நான் காணவில்லை.
5 பிறகு மக்கள் கூட்டம் என் வலது பக்கத்திலிருந்து என்னிடமாக வந்தனர், “தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், "இல்லை" என்றனர். நான், "தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் அவர்கள் செய்தவைகள் அனைத்தையும் உங்களால் எப்படி பார்க்காமலிருக்க முடிந்தது?" என்று அவர்களை கேட்டேன். அதற்கு அவர்கள், "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்; ஏனென்றால் தேவன் தந்தது எதுவோ அதை பிசாசு பறித்துக்கொண்டான், அவை இப்பொழுது உம்மிடத்தில் மீட்டளிக்கப்பட்டுள்ளது (restituted)" என பதிலளித்தனர். நான் மேல் நோக்கிப்பார்த்தபோது, வானத்திற்கும் பூமிக்கும் நடுவே ஒரு ஏணியைக் கண்டேன்; தண்ணீர்களுக்கு மேலாக தூதர்கள் ஏறவும் இறங்கவுமாக இருந்தனர். அந்த தரிசனம் முடிந்தது."
6 நல்லது! ஐந்து நாட்களுக்கு முன்பு, நான் ஒரு சகோதரியுடன் அமர்ந்திருந்தேன். அவர் என்னை விட்டு கடந்த போய் மூன்று மணி நேரம் கழித்து, அவள் செய்திக்கான மிகவும் முக்கியமான ஒன்றை பெற்றுக் கொண்டாள் என்று நான் உணர்ந்தேன். நான் தொலைபேசியில் அவளை அழைத்தபோது காரியமானது சரியாக இருந்தது. அவள், " நான் இரண்டு தரிசனங்கள் கொண்டிருந்தேன்." என்றாள். அடுத்த நாள் மாலையில், இரண்டு தரிசனங்களையும் விளக்குவதற்காக அவள் திரும்பி வந்தாள். இருப்பினும் என்னை சந்திப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னால் அவள் அதை கொண்டிருந்தாள்.
7 நல்லது! நான் இரண்டு தரிசனங்களிடத்தில் வருகின்றேன். முதலாவது தரிசனம் : சகோதரி கூறியதாவது, "நான் என்னுடைய வீட்டிலே அமர்ந்திருந்தேன், எனக்கு முன்பாக ஒரு மேஜை இருந்தது மற்றும் முழுவதும் வெண்மையாக உடுத்துவிக்கப்பட்ட ஒரு மனிதன் கடற்கரை மணலின் மீது நிற்கிறதை கண்டேன். அவன் ஒரு கருப்பின மனிதன். ஒரு ஆப்பிரிக்கன். அவன் எதோ ஒன்றிற்காக காத்திருப்பதை போன்று தண்ணீர்களின் மேற்பரப்பில் நோக்கிக் கொண்டிருந்தான் மற்றும் நான் அவனை பின்புறத்திலிருந்து கண்டேன்.
8 அவன் கவனித்துக் கொண்டிருக்கையில் ஒரு மீனைப் போன்ற ஒரு திமிங்கலம் தண்ணீர்களின் மேற்பரப்பில் எழும்பினது. பிறகு சிறிது நேரம் கழித்து, மூச்சு விட்ட பிறகு தண்ணீர்களின் ஆழத்திற்கு மெதுவாக சென்று. மரித்து போனதை போன்று காற்று குமிழிகள் வெளியே வந்தது. பிறகு விதத்தில் ஒரு மீன் அதே தோற்றத்துடன் வேரு ஒரு இடத்தில் தோன்றி முதலாவதை போன்று அதே விதத்தில் மறைந்து போனது. பிறகு முன்றாவது, பிறகு நான்காவது, பிறகு ஐந்தாவது, பிறகு ஆறாவது மற்றும் ஏழாவது மற்றும் அனைத்தும் அதே விதத்தில் நடந்தது.
9 ஏழாவது மீன் மறைந்த போது, வெண்மையான வஸ்திரம் தரித்தவனுக்கு முன்பாக தண்ணீர்களின் மேல் ஒரு மின்னலின் மின்வெட்டொளி அங்கே இருந்தது. அந்த மின்வெட்டொளியானது ஓலிகளை தீப்பொறியுடன் உள்ள சத்தங்களை போன்று உண்டாகினது. அது ஏதோ சில மின்னலோ அல்லது சில இடியோ அல்ல ஆனால் அந்த மின்வெட்டொளியானது தீப்பொறிகளுடன் உள்ள வெடி சத்தம் போன்று சக்தி வாய்ந்த இரைச்சல்களை உருவாக்கினது. அந்த ஒளியும் மின்வெட்டொளியின் சத்தங்களும் மனிதனுக்குள்ளாக சென்றது மற்றும் அவன் சிறிது அசைந்தான்.
10 மேலும் ஒளியும் மின்வெட்டொளியின் சத்தங்களும் அனைத்து சிருஷ்டியையும் தாக்கினது; மற்றும் காற்றானது தண்ணீர்களின் மேலும் மரங்களின் மேலும் அடித்தது. அலைகள் பாறைகளை மோதியது. மேலும் இதற்காக தான் அந்த வெண்மையான வஸ்திரம் தரித்திருந்த மனிதன் காத்திருந்ததை போல அது இருந்தது பிறகு தரிசனம் முடிந்தது.
11 இந்த முதல் தரிசனத்தை நீங்கள் பாருங்கள், அதே தோற்றத்தில் ஏழு திமிங்கலங்கள் வெவ்வேறு இடங்களில் தோன்றின. சபையின் ஏழு காலங்கள் மற்றும் ஏழு செய்தியாளர்கள் பூமியின் வெவ்வேறு இடங்களில் வெளிப்படுகின்றனர்; ஆசியாவில் பவுலுடன், ஐரோப்பாவில் மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, உல்ரிச் ஸ்விங்லி ஆகியோருடன் அமெரிக்காவில் வில்லியம் பிரன்ஹாமுடன் மற்றும் இப்பொழுது ஆப்பிரிக்காவில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவுடன். அது எப்பொழுதும் தேசங்களின் காலத்தின் முடிவு வரை இருக்கும். ஏழு மீன்கள், மேலும் இந்த மீன்கள் ஏழுவரை மறைந்து போகும் அது வில்லியம் பிரன்ஹாமின் காலமும் கடந்து போகும் என்பதை குறிப்பிடுகிறது. அதன்பின், தேவன் ஒரு ஆபிரிக்கனை எழுப்புவார் அவன் மூலமாக மனுக்குலமானது இரட்சிக்கப்பட வேண்டும். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 இப்போது நாம் இரண்டாவது தரிசனத்திற்கு வருகிறோம். முதலாவது தரிசனத்திற்குப் பிறகு, அந்த சகோதரி, "ஆனால் அது என்ன? என்று கேட்டாள். உடனடியாக இரண்டாவது தரிசனம் ஒரே நேரத்தில் தொடர்ந்தது. அதே ஆப்பிரிக்கன், நான் கண்ட அதே வெண்மையான வஸ்திரத்தால் உடையணிந்து இருந்த மனிதன் கடற்கரை மணலின் மேல் நின்று கொண்டு மிக உயர்ந்த மலை மேல் ஒரு வெள்ளை குதிரையின் மீது உட்கார்ந்திருந்தான். இந்த மலையானது ஒரு கூர்நுனி கோபுரம் போல வெறுமையாக இருந்தது. தண்ணீர் இந்த கூர்நுனி கோபுரம் மீது ஒடிக்கொண்டிருந்தது. மலைகளின் தொடர்ச்சியோடு இல்லாமல் இந்த மலை மட்டும் தனியாக இருந்தது.
13 இந்த ஆப்பிரிக்கனின் முகத்தை நான் பார்க்க விரும்பினேன், ஆனால் நான் அவனை பின்னால் இருந்து பார்த்ததினால் அது சாத்தியம் இல்லாமல் இருந்தது. அவன் மெதுவாக இறங்கி சென்றான், அவன் முன் நோக்கி நகர்ந்த பொழுது, அவன் நின்று கொண்டிருந்த அந்த மலை அதனுடைய இடத்தில் இருந்தது ஆனால் பூமியின் மற்ற மலைகளும் குன்றுகளும் அவனுக்கு முன் சிறிய கற்களாக ஆனது மற்றும் எல்லா பெரிய சிறிய மரங்களும் வளைந்து அதினுடைய இலை தழைகள் அவனுக்கு முன் தரையை தொடும் மட்டும் வனைந்தது மற்றும் அவன் ஒரு வயதான கருப்பின ஸ்திரீயிடம் சென்றான்.
14 இந்த வயதான கருப்பின ஸ்திரீ நீண்ட காலமாக இந்த மனிதனுக்காக காத்துக்கொண்டிருந்ததை போல் இருந்தது. அவள் முதுமையால் வளைந்திருந்தாள், அவளுடைய முகத்தில் உள்ள சுருக்கங்கள் மிகவும் வலுவாக இருந்தன, அவளுடைய அசைவுகள் மிகவும் மெதுவாக இருந்தன. அவள் அந்த குதிரை வீரன் வருவதை ஒருவர் தன்னுடைய ஒரே நம்பிக்கையை கொண்டிருப்பதை போன்று மற்றும் அது அவளுக்காகவே அவன் வருவது போன்று இருந்தது. வெண்மை நிறத்தில் உடையணிந்திருந்த அந்த மனிதன் அவளிடம் சவாரி செய்தான். அவன் அந்த வயதான ஸ்திரீயை தொட்டபோது, அவள் மிகவும் அழகிய இளம் பெண்ணாக ஆனாள். அவளுடைய ஆடையும் கூட மருரூபமானது.
15 அந்த அற்புதம் நடைபெற்றதாக மகத்தான ஜன கூட்டத்தினர் மீண்டுமாக வந்து அந்த அற்புதத்திற்காக தேவனை துதித்து மற்றும் ஆராதித்தார்கள். அந்த ஜனக் கூட்டம் மிகவும் பெரியதாக ஆனது. அங்கே ஆண்களும் பெண்களும், இளம் வயதினரும், வெள்ளையர்களும் கருப்பர்களும், பூமியிலுள்ள சகல இனத்தாரும் உரத்த குரலில், "நம்முடைய தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நம்முடைய தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நாங்கள் இரட்சிக்கப்பட்டோம்! நாங்கள் இரட்சிக்கப்பட்டோம்!". மேலும் இந்த செய்தி பரவியது மற்றும் ஜனக்கூட்டத்தினர் எல்லா இடங்களிலும் இருந்து வந்தார்கள். குதிரை வீரன் முன்னேறிச் சென்றான் மற்றும் திரளான கூட்டத்தினர் அவனை பின்தொடர்ந்து சென்றார்கள். தரிசனம் முடிந்தது, அதன் நிமித்தமாக பல நாட்கள் நான் கலங்கினேன். ஆமென்!
16 இதுதான் கச்சிதமாக பூமியில் நடந்து கொண்டிருக்கின்றது மற்றும் மனிதகுலம் அதை பார்ப்பதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிகப்பெரியதாக இருக்கும் என்றும் தொலைக்காட்சி சேனல்கள் அதை மறு ஒளிபரப்பு செய்யும் என்று மனிதகுலம் நினைத்தது. ஆனால் தேவன் எளிமையில் தம்மை வெளிப்படுத்துகிறார் மற்றும் தேவனுடைய பிள்ளைகள் அதை இனங்கண்டு கொள்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஆனால் பூமியின் இந்த மகத்தான மரங்கள் மற்றும் பெரிய மலைகள் பூமியில் இந்த தெய்வீக நடவடிக்கைக்கு முன் வணங்குகின்றன என்று தரிசனம் கூறுகிறது.
17 முதல் தரிசனத்தை கவனியுங்கள்! முதல் தரிசனம் ஏப்ரல் 24, 1993 இன் செய்தியோடு நேரடியாக தொடர்புடைய மிகப்பெரிய தரிசனம். மேலும் அது பெரிய இதெக்கேல் ஆற்றங்கரையில் தானியேல் 12:10 இன் அறியாத மொழி தொடர்பாக நடைபெறுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியின் மேல் என்ன செய்தார் என்பதை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோரின் புத்தகங்களில் ஒன்றை போல் இது 24 ஏப்ரல் 1993 இன் தரிசனத்தின் மற்றொரு படம். தீர்க்கதரிசன வரமானது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை சமமாக்க முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா?
18 அவள் இரண்டாம் தரிசனத்தைக் கண்டபோது, அவள்: "இத்தகைய மனிதன் பூமியின் மேல் நடப்பானோ?" என்று சொன்னாள். நீங்கள் பார்க்கிறீர்களா? உலக தோற்றத்திற்கு அஸ்திபாரம் இடுவதற்கு முன்பே எவன் ஒருவனுக்கு அதை புரிந்து கொள்ளும்படியாக கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவன் அதை புரிந்துக் கொண்டு மற்றும் அதை விசுவாசிப்பான். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் இவர்கள், ஒரு சரீரத்தை கொண்டிருப்பதற்கு முன்பாகவே பூமியில் வெளிப்படுவதற்கு முன்பாகவே, அவர்கள் உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்னே தேவனுடைய சிந்தையில் ஏற்கனவே விசுவாசித்தார்கள்.
19 இப்போது, நாம் முதலாவது தரிசனத்தைக் பார்க்கலாம். ஏழு திமிங்கலங்கள் பூமியிலுள்ள பல்வேறு இடங்களில் எழும்பும் தேசங்களின் ஏழு சபைகள். வெளிப்படுத்துதல் 17:15 ல் நாம் பார்க்கிறபடி தண்ணீர்கள் தேசங்களாக இருக்கின்றது. நான்கு காற்றுகள் அலைகளை எழுப்பும் சக்திகளாகவும் பேய்களாகவும் இருக்கின்றது, அதாவது பரிசுத்தவான்களுக்கு விரோதமான ஜனக்கூட்டம் அதை நாம் வெளிப்படுத்துதல் 12:14 முதல் 17-ல் காணலாம். "சர்ப்பம் அந்த ஸ்திரீக்கு விரோதமாய்த் தண்ணீரை ஊற்றிவிட்டது," அதாவது சபை என்று சொல்ல வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா?
20 முதலாவது திமிங்கலம் அது எபேசு சபை மேலும் இதே திமிங்கலம் ஏழாவது வரை தோன்றி மறைகின்றது. ஏழாவது திமிங்கிலம் முற்றிலுமாக மறைந்துவிடுவதற்கான உண்மை என்னவெனில் சாயங்கால செய்தியானது நடுராத்திரி சத்தம் ஒலிப்பதற்க்கு முன்பாக முழுவதுமாக மறைந்து விடும் அதை "நீ கண்ட நான்கு மிருகங்களின் (இரகசியம்" என்ற பிரசங்கத்தில் நாம் காணலாம். ஏழாவது திமிங்கிலம் முற்றிலுமாக மறைந்து மற்றும் பூமியின் மேல் நடுராத்திரி சத்தம் ஒலிப்பதற்கு முன்பு பிரன்ஹாமிஸ்டுகள் தானியேல் 7 இன் நான்காவது மிருகத்தை போல் ஆகிறார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. லவோதிக்கேயாவிற்கு பிறகு, வெளிப்படுத்துதல் 19 இன் குதிரை வீரனுடைய ஊழியம் வருகின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா?
21 ஏழாவது திமிங்கலத்திற்கு பிறகு, மின்வெட்டொளி ஏற்பட்டது, வானத்தில் அல்ல ஆனால் தண்ணீர்களின் மேலே, ஏற்படுகிறது. சரியாக 24 ஏப்ரல் 1993 தூதனும் ஆட்டுக்குட்டியும் நின்ற அதே இடத்திலும் அது தூரத்திலும் எற்படுகிறது. சகோதரி மின்வெட்டொளியை கண்டாள் ஆனால் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தூதனையும் ஆட்டுக்குட்டியும் தெளிவாக கண்டார.
22 தானியேலும் அங்கே கேட்டதை போல சத்தங்கள் போன்ற கூர்மையான மற்றும் ஒழுங்கற்ற சத்தங்கள் போன்று அவள் கேட்டாள் ஆனால் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தெளிவாக வார்த்தைகள் கேட்டார, அவர் சொன்னதாவது : அந்த மொழியானது அரபிக் மொழியோடு நெருங்கி இருந்தது. ஏனெனில் எவராகிலும் எபிரேய மொழியை பேசுவதை ஒருபோதும் கேட்டதில்லை யோவான் 12:28 முதல் 29-ல் ஜனங்கள் இடிமுழக்கங்களைக் கேட்டார்கள், ஆனால் அவைகள் வார்த்தைகளாக இருந்தது: " மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று." [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23 ஏழாவது திமிங்கிலம் மறைந்த பொழுது அந்த மனிதன் ஏதோ ஒன்றுக்காக தயாராக இருந்தான், பின்னர் மின்வெட்டொளியானது வந்தது. மின்வெட்டொளியிலிருந்து வெளிவந்த ஒலி, தண்ணீரில் நான்கு காற்றுகளை விடுவித்தது, மற்றும் தண்ணீர்கள் எழும்பி பாறையை தாக்கியது மற்றும் வெண்மையான வஸ்திரம் தரித்திருந்தவனின் பின்பாக இருந்த இடமானது 1993 இன் இரண்டாவது தரிசனத்தில் நான் கண்டதை போன்று பாலைவனம் போன்று இருந்தது.
24 அங்கே பாறைகள் இருந்தன; அங்கே எனக்கு முன்பாக ஒன்று இருந்தது ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நித்திய கன்மலையாக இருக்கின்றார். மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அங்கே மின்னல்களை குறித்து பேசியிருக்கிறது, அது சத்தங்களும் இடிமுழக்கங்களும் குறித்தும் கூட பேசியிருக்கிறது. அக்கினி பொறிகளும் மின்னல்களும் அது சத்தம் என்று உறுதிப்படுத்துகிறது. யோபு 37:4 கூறுகிறது: அவருடைய சத்தம் கேட்கப்படும்போது மின்னல்களை அவர் பிடித்து வைப்பதில்லை. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25 இரண்டாவது தரிசனம் மகிமை வாய்ந்த ஊழியத்தை குறித்ததாக இருக்கின்றது. இந்த பர்வதம் வெறுமையாக இருந்தது என்றும் அதன்மீது தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தது என்று அந்த சகோதரி குறிப்பிட்டாள். அது உயர்ந்ததாக நின்றது மட்டுமல்ல, மலைகளின் தொடர்ச்சியில் அது இல்லாமல் அது தனியாக இருந்தது. இந்த உயர்ந்த மலையானது அப்போஸ்தலர்களை தொடர்ந்த அதே பழைய சபை. மலைகளின் சங்கிலி தொட்ச்சியில் இல்லாமல், அது தனியாக நின்றது , மலைகளின் தொடர்ச்சியோடு இல்லை; மற்ற சபைகளோடு இருக்கவில்லை அதாவது வேறு ஒரு மலையோடு ஒரு போதும் இருந்ததில்லை மற்றும் ஒரு போதும் இருக்கப் போவதுமில்லை அதவாது சபை என்று சொல்ல வேண்டும்.
26 குதிரைவீரன் சவாரியில் முன்னேறுகையில், சபைகள் பூமியின் மலைகளும் குன்றுகளாக இருக்கின்றவைகள் தரைமட்டமானது, மரங்களும் அவனுக்கு முன்பாக வணங்கியது. இந்த மரங்களானது பெரிய மத மனிதர்கள், இறையியலாளர்கள் மற்றும் பூமியின் ராஜாக்கள் ஆவார்கள். சில எம்.பி க்கள், மந்திரிகள் மற்றும் பூமியின் ஜனாதிபகளும் அரசர்களும் கூட இந்த தரிசனத்தை நிறைவேற்றுவதற்காக எழும்புவார்கள். மேலும் பரலோகங்களின் தேவன் ஒரு ஆப்பிரிக்கனை உபயோகப்படுத்தினார் என்று கூறப்படும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையை சுமப்பதற்காக அல்ல ஆனால் தேவனுடைய சார்பாக பேசுவதற்கு, பூமியிலுள்ள மனுக்குலம் அனைத்திற்கும் அவர் கடந்த காலத்தில் மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் சில காலங்களுக்கு செய்தது போல, இந்த ஆப்பிரிக்கனை தவிர இந்த முழு பூமியின் மேல் ஒருவரும் இரட்சிப்படைய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27 ஆம்! தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் கிழக்கு மற்றும் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கில் இருந்து கழுகுகளின் சிறகுகளின் மேல் வருவார்கள்; ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்காவிலிருந்து ஞானஸ்நானங்களுக்கும், பிரதிஷ்டைகளுக்கும் மற்றவைகளுக்கும், நம்மோடு ஐக்கியம் கொள்வார்கள் ஏனெனில் உலக தோற்றத்திற்கு முன்பாகவே அவரோடு நாம் மகிழ்ச்சி கொண்டிருந்தோம். கண்டங்கள் நம்மை பிரித்தன, செல்வம் நம்மை பிரித்தன, இனங்கள் மற்றும் சபைகள் நம்மை பிரித்தன ஆனால் 2 நாளாகமம் 20:20 மற்றும் ஓசியா 12:14 பிரகாரமாக தீர்க்கதரிசி நம்மை கூட்டிச்சேர்க்கின்றார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28 இந்த வயதான ஸ்திரீயானவள் நடுராத்திரியில் இம்முறை ஒரு ஆப்பிரிக்க ஸ்திரீயாக இங்கு தோன்றும் அப்போஸ்தலர்களின் அதே பழைய சபையே தவிர வேறொன்றும் இல்லை. அவளால் ஒரு வெள்ளை மனிதனை தன்னுடைய தீர்க்கதரிசி செய்தியாளனாக கொண்டிருக்க முடியாது. ஏனெனில் வேதாகமம் கலப்பினத்தை கண்டனம் செய்கின்றது. கடந்த தலைமுறையில் இருந்ததை போல அவளுடைய மணி வேளையின் தீர்க்கதரிசியே அவளை திரும்பவும் இளமையாக்கினான்.
29 இரண்டு தரிசனங்களிலும், வெண்மை நிறத்தில் ஆடை அணிந்திருந்த மனிதனின் முகத்தை சகோதரி பார்க்கவில்லை. எப்போதும் அவன் நின்று கொண்டிருந்த விதமானது அவளால் அவனுடைய முகத்தை பார்க்க கூடாமல் இருந்தது. ஏனென்றால் அது வேறு எவரும் இல்லை ஆனால் ஒரு நாள் பூமியின் மேல் காணப் போகிற மத்தேயு 25:6 இன் நபர், அவள் அவனை கண்டிருந்தால், ஒரு செய்தியினால் அல்லாமல் அவனை அடையங்கண்டதினால் இன்று அவள் விசுவாசித்திருப்பாள் ஆனால் இது ஒரு செய்தியின் காரணமாக இருக்க வேண்டும், அது தான் சரியாக இப்பொழுது நடை பெருகிறது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
30 தேவனிடத்திலிருந்து ஒரு தரிசனத்தை நீங்கள் காணும்போது, பத்து வருடங்களுக்குப் பின்னும் அந்த தரிசனம் நேற்றைய தினத்தை போலவே ஞாபகத்தில் இருக்கும். பிறகு அவள் அது நான் தான் என்று அறிந்துக் கொள்வாள். ஆனால் என்னை அவள் இப்பக்கத்தில் பார்த்தபோது, அவளுடைய தரிசனத்தில் இருந்த அந்த வெண்மையான வஸ்திரம் அணிந்திருந்தவன் நான் தான் என்று அவளால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, அந்த நபர் தேவனுக்கு முன்பாக மகத்துவமானவனாகவும் மனிதர்களுக்கு முன் அற்பமானவனுமாக இருந்தான்.
31 ஏனெனில் மனிதர்களுக்கு முன்பாக எவை மகத்தானதாக இருக்கின்றதோ அவை தேவனுக்கு முன்பாக அற்பமானதாக இருக்கும் மற்றும் தேவனுக்கு முன்பு எவை மகத்தானதாக இருக்கின்றதோ அது மனிதனுக்கு முன்பாக அற்பமானதாக இருக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா? நான் பிரசங்கிக்கும் முன்னர், ஒரு ஆப்பிரிக்கன் ஒரு செய்தியைக் கொண்டு வருவான் என்றும் பூமியின் எல்லா இனத்தாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று சர்வ வல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தினார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32 நீங்கள் ஆசியனாக, ஐரோப்பியனாக, அமெரிக்கனாக அல்லது ஆப்பிரிக்கனாக இருந்தாலும், நோவாவின் நாளில் இருந்ததைப் போலவே, இந்த ஆப்பிரிக்கனை தவிர ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது என்று நீங்கள் அறிய வேண்டும். ஒரு காலத்திலே அது பவுல் அங்கே ஒரு ஆசியனாக இருந்தது. பிறகு ஐரோப்பாவில் மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, உல்ரிச் ஸ்விங்லி மற்றும் அங்கு பலரோடு. பின்னர் அமெரிக்காவில் வில்லியம் பிரான்ஹாம் உடன். இப்பொழுது தேவன் ஒரு ஆப்பிரிக்கனை எழுப்புகிறார்.
33 அவனுடைய காலத்திற்காக நோவாவைப் போலவே, அவனுடைய காலத்திற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை போலவே ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவனுடைய காலத்திற்காக இருக்கின்றான், இன்று அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு பிரசங்கித்தற்கு வெளியே நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்க்கக்கடவன்!
--:--
--:--