en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 65 (Kc.65) : பரலோகத்தில் திருகும் திறவுகோல்கள்
(நவம்பர் 04, 2007, ஞாயிற்றுக்கிழமை காலை அன்யாமா, அட்ஜாமே, அபிட்ஜன் - ஐவரி கோஸ்ட் இல் பிரசங்கிக்கப்பட்டது)
1 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நாம் வேதனுடைய பரிசுத்த வார்த்தையை இங்கு செவிகொடுத்துக் கேட்பதற்கு இது மீண்டும் ஒரு சிலாக்கியம். இன்று காலையில் நாம் எந்த ஒரு பாவ அறிக்கையும் கொண்டிருக்கவில்லை அது நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும் நாம் எண்ணிக்கையில் அதிகமாகி முதிர்ச்சியுள்ளவர்களாகி, இன்னும் அதிகமான அறிக்கைகள் குறைந்து போகின்றன; அதை தான் நாம் கவனித்தோம்.
2 இன்று காலை நான் வெளிப்படுத்துதல் 19-ல் பிரசங்கிக்க விரும்புகிறேன். இது வேதாகமத்தின் மூலதன செய்தியாகும். வெளிப்படுத்தல் 19 இன் குதிரைவீரன் யார் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ஆனால் அதற்கு முன் நான் பல விஷயங்களைப் பற்றி பேசுவேன்.
3 தேவன் சர்வ ஞானியாக இருக்கிறார், ஒரு தீர்க்கதரிசியை அழைப்பதற்கு முன்பாகவே மற்றும் அவன் பூமியின் மேல் தன்னுடைய பணியை துவங்குவதற்கு முன்பாகவே அவன் தன்னுடைய பணியை முடிப்பதை அவரால் காண முடியும். இந்த தீர்க்கதரிசியின்பேரில் விசுவாசிக்கிறவர்கள் ஏற்கனவே உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தேவனுடைய சிந்தனையில் விசுவாசித்தார்கள். பூமியில் அது நடை பெருவதற்கு முன்பாகவே ஏப்ரல் 24, 1993 இன் மகத்தான ஜனக் கூட்டத்தை பற்றிய துல்லியமான எண்ணிக்கையை தேவன் அறிந்திருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
4 அந்த சகோதரியின் இரண்டாவது தரிசனத்தில், கறுப்பர்கள், வெள்ளையர்கள், பூமியின் எல்லா இனத்தவர்களுமே இருந்ததை உங்களால் காண முடியும். மேலும் எல்லா இனத்தவரும், பூமியிலுள்ள சகல ஜாதியாரும் இங்கே வந்திருக்கவில்லை என்றால், அதன் நிமித்தமாக நான் விலகிப் போனவன் ஆகவும் நான் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதை நான் காண்பேன். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
5 மோசே எகிப்தியனை கொன்றபோதிலும், அவனுடைய நாட்களில் பூமி முழுவதிலும் இரக்கமுள்ள மனிதன் என்று தேவன் அறிவித்தார். மற்றும் தாவீது, உரியாவின் மரணத்தின் போதிலும் அவன் தேவனுடைய இதயத்திற்கு அடுத்த தாசன் என்று அறிவிக்கப்பட்டான் மற்றும் அவன் ராஜாவும் தீர்க்கதரிசியும் சங்கீதக்காரனுமாயிருந்தான். அவனுடைய ஐநூரு மனைவிகளில் பத்சேபாளுக்கு தான் சாலமோன் பிறந்தான், அவனே ராஜாவும், தீர்க்கதரிசியும், பிரசங்கி நீதிமொழிகள் மற்றும் உன்னத பாடல்களின் ஆக்கியோன் ஆக இருந்தான்.
6 தானியேலின் 70 வாரங்கள் என்ற பிரசங்கத்தில் 1977 ல் எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறும் என்று வில்லியம் பிரன்ஹாம் வலியுறுத்தினாலும் தேவன் அவரை உறுதிப்படுத்தி தவறாத தன்மையை உடைய தீர்க்கதரிசியாக அறிவிக்கின்றார். தேவன் மனித கணக்குகளை செய்வதில்லை. தேவன் ராஜாத்திபத்தியம் உள்ளவர். அவர் செய்ய விரும்புவதை செய்ய அவருக்கு சுதந்திரம் உண்டு! ஆமென்!
7 இப்பொழுது, நாம் வெளிப்படுத்துதல் 19:1 முதல் 16-ஐ எடுத்துக்கொள்ளலாம் ... இந்த பத்தியில் முதல் மூன்று அட்டவணைகளை கொடுக்கிறது என்பதை கவனியுங்கள். வசனம் 1 முதல் 5 வரை, இது முதல் அட்டவணை! வசனம் 6 முதல் 10 வரை, இது இரண்டாவது அட்டவணை ஆகும். 11 வது வசனத்திலிருந்து, 16 வது வசனம் வரை இது மூன்றாவது அட்டவணை ஆகும். இந்த மூன்று அட்டவனைகளும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் போன்று அதே காரியங்களை காண்பிக்கின்றன. நீங்கள் பார்க்கிறீர்களா? முதல் அட்டவணையில் யோவான் எதை பார்த்தானோ அதை தான் மற்ற இரண்டு அட்டவணையிலும் பார்த்தான்.
8 நல்லது! இப்போது நாம் வசனங்கள் 9 மற்றும் 10 ஐ எடுத்துக் கொள்ளலாம்: அதில் எழுதப்பட்டதாவது "பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்." நீங்கள் பார்க்கிறீர்களா?
9 யோவான், அது தான் அந்த தேவதூதனைப் பின்பற்றின சபையாக இருக்கின்றது; தூதன் என்றால் செய்தியாளன். அந்த தேவதூதனுக்கு கொடுக்கப்பட்டு ஊழியத்தின் நேரத்திலே தேவன் அவனுக்கு ஒரு செய்தியாளனை அனுப்பினார் அந்த புத்தகத்தில் அடங்கியுள்ள தூதனுடைய செய்தியின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது என்று யோவான் கண்டபோது... நீங்கள் பார்க்கிறீர்களா? மத்தேயு 25:6 இல் தூதன் அவனிடத்தில் கூறினதைப்போல: இதோ, மணவாளனாகிய வார்த்தை ... இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள்: மேலும் தேவதூதன் அவனை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; நான் இயேசு அல்ல! உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், அதாவது கிறிஸ்தவர்கள்!
10 இவ்வாறு ஒரு தூதனை, தேசங்களின் ஏழு சபை காலங்களில் தேவன் செய்தியாளர்களில் ஒருவரை தேசங்களுக்கு அனுப்புவார் இன்னும் கச்சிதமாக அவர் நடுராத்திரியிலே வருவார். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. சாயங்கால வேளைக்கு பிறகு சபையானது வெளிப்படுத்துதல் 4 இல் மறைந்து வெளிப்படுத்துதல் 19 இல் மீண்டுமாக தோன்றுகிறது.
11 வில்லியம் பிரன்ஹாம் கூறியதாவது: "வெளிப்படுத்துதல் புஸ்தகத்தில் முதல் மூன்று அதிகாரங்கள் சபைக்கு நேரடியாக அனைத்தையும் வெளிப்படுத்துகிறது. பிறகு, வெளிப்படுத்துதல் 3ஆம் அதிகாரம் முதல் 19 ஆம் அதிகாரம் வரை சபை ஒருபோதும் காணப்படுவதில்லை. வெளிப்படுத்துதல் 4 ஆம் அதிகாரத்தில் சபையானது மேலே செல்கின்றது, பிறகு வெளிப்படுத்துதல் 19 இல் திரும்ப வருகின்றது, மணவாளனும் மணவாட்டியும் ஒன்றாக பூமிக்கு வருகிறார்கள்." எக்காளங்கின் பண்டிகை Ref 37 மற்றும் வெளிப்படுத்துதல் நான்காம் அதிகாரம் புத்தகத்தை ஒப்பிட்டு பார்க்கவும்.
12 வெளிப்படுத்துதல் 19-ம் அதிகாரத்தின் அனைத்தும் பூமியில் நிறைவேறியது. வெளிப்படுத்துதல் 19-ல் உள்ள 21 வசனங்களில் ஒவ்வொன்றும் பூமியில் நிறைவேறியது! கர்த்தரே அந்த தூதன் என்று யோவான் கண்டான்! வில்லியம் பிரன்ஹாமும் கர்த்தரே அந்த தூதன் என்று கண்டான்! ஆனால் அவன் ஆண்டவர் இல்லை! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13 அப்போஸ்தலர்கள் முதற் கொண்டு வெளிப்படுத்துதல் 19 இன் இந்த குதிரை வீரன் கிறிஸ்து தான் என்று கற்பிக்கப்பட்டது! இந்த குதிரை வீரன் கிறிஸ்து என்று இறையியல் வல்லுனர்கள் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் அது கிறிஸ்து அல்ல! 12 வது வசனம் அவருடைய தலையில் பல மணிமுடிகள் இருப்பதாகக் கூறுகிறது, ஆனால் மணிமுடிகள் ராணிகளின் கிரடங்களாக இருக்கின்றது. ஆமென்!
14 இரண்டு தரிசனங்களில், சகோதரி அந்த மனிதனை பின்னால் இருந்து கண்டாள். அவன் தண்ணீருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான்; மற்றும் இரண்டாவது அட்டவணையில் அதே மனிதன் வெள்ளை குதிரை மீது உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் முழுவதும் வெண்மையான ஆடை அணிந்திருந்தான் மற்றும் அவன் ஜெயம் கொள்ளும்படியாக ஜெயம் கொள்வதற்கு வெளியே செல்ல வேண்டும். அவளுடைய அத்துமா அவனை நேசித்தது என்று அவளால் சொல்லக்கூடும்.
15 நீங்கள் பார்க்கிறீர்களா? அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு மூன்றாவது அட்டவணையை பார்க்கிறான் மேலும் இந்த அதே மகிமையான தூதன் சவாரி செய்கிறான் மற்றும் அதே மகிமை வாய்ந்தவன் இங்கே வெள்ளை குதிரையில் அமர்ந்து இருக்கிறான். பரலோகத்தில் உள்ள சேனைகள் பரலோகத்தில் அவனை பின்பற்றினார்கள் என்று வேதாகமம் சொல்கிறது. இப்போது, பூமியில் உள்ள சேனைகள் பூமியின் மேல் அவரை பின்பற்றுவார்கள். [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16 மேலும் அது தான் பூமியின் மேல் சரியாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்த வகையில் நம்முடைய பிதாக்கள் அவர்களுடைய காலத்தில் எந்த ஒரு சரித்திர பூர்வமான நிகழ்வுகளை கூறாமல் தாங்களாகவே இரட்சிப்பை அனுபவித்தார்கள், நாமும் அவர்களை போன்று இரட்சிப்பின் ஒரு பங்கை பெறும்படியாக இரட்சிப்பின் நடிகர்களாக இருக்கின்றோம். நம்முடைய பிதாக்கள், தலைமுறை தலைமுறையாக உள்ள பரிசுத்தவான்கள் நம்மை போன்று அவர்கள் மத்தியில் உள்ள ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியியோடு இரட்சிப்பை அனுபவித்தார்கள். நம் மத்தியில் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனோடு இரட்சிப்பை அனுபவிக்கும்படியாக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் வேதாகம தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக இருந்தால், பிறகு நீங்களும் அவ்வாறே இருக்கிறீர்கள்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17 நாற்பது வருடங்களுக்கு முன்பு அல்லது 2000 வருடங்களுக்கு முன்பு யாரோ ஒருவர் செய்ததை நாம் விளக்கவோ அல்லது அறிவிக்கவில்லை ஆனால் இங்கே நடைபெறுவதை நாம் வேதாமமாக எழுதுகிறோம் மேலும் இங்கு என்ன நடை பெறுகிறதோ அதை தான் பிசாசின் புத்திரர்கள் நமக்கு பிறகு அது ஒருபோதும் நித்தியஜீவனை கொடுக்க கூடாமல் இருக்கும் பொழுது அதை பெரிதாக்குவார்கள்.
18 அந்த தூதன் யார் என்ற வெளிப்பாட்டைக் குறித்து, அது அவனுடைய கிரியைகளிலும் மற்றும் அவனுடைய தொடையிலும் எழுதப்பட்டிருக்கிறது, எனவே அவை வெளிப்படுத்தப்பட, புரிந்துகொள்ள மற்றும் எற்றுக்கொள்ள முடியாது ஆனால் மணவாட்டியினால் மாத்திரமே முடியும்! [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 அந்த தூதன் தாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று யோவானுக்கு தோன்றிற்று ஏனெனில் அவர் அநேக தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களை வெளிப்படுத்துகிறார் இத்தனை அனேக தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற முடியும்? அவர் பரலோகத்தின் மேகங்கள் மீது நடக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. மேலும் வானத்தின் மேகங்கள் அது பரிசுத்த தூதர்களே!
20 ஆனால் அவனுடைய பிறப்பின் பொழுது தேவதூதர்கள் பாடினார்கள் என்றால், தேவதூதர்கள் அவனுடைய ஊழியம் முழுவதிலும் அவனுடன் இருப்பார்கள் ஏனென்றால் ஊழியம் பிறப்பை காட்டிலும் அதிக மகிமையானது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஆனாலும் அந்த போதிலும், அந்த தேவதூதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லை. யோவான் வெறுமனே செய்தியை சரியாக புரிந்து கொள்ளவில்லை! ஆனால், இன்னுமாக அவனுடைய தொடையின் மீது "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா" என்று எழுதப்பட்டிருந்ததாக கூறுகின்றது. ஆமென்!
21 நல்லது! நான் தானியேல் 7:13 முதல் 14-ஐ வாசிக்க விரும்புகிறேன். அதை வெளிப்படுத்துதல் 19:10 இல் கவனியுங்கள். யோவான் இந்தத் தூதனை ஆராதிக்க வேண்டுமென விரும்பினான். அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இன்னொரு வடிவத்தில் இருக்கின்றார் என்று யோவான் நினைத்தான். அவனுடைய பாதங்களுக்கு முன்பாக ஆராதிக்கும் படியாக யோவான் விழுந்தான்.
22 அதற்கு அவன்: அப்படியானால், இந்த வார்த்தைகளைச் யாரால் சொல்ல முடியும்? இது கர்த்தராகிய இயேசு இல்லையெனில் இவைகளை யாரால் வெளிப்படுத்த முடியும்? அந்த சகோதரி இரண்டாம் தரிசனத்தில் அதைக் கண்டபோது, "இத்தகைய மனிதன் பூமியின் மேல் நடப்பானோ?" என்று கேட்டாள். அது ஒரு வெள்ளை மனிதனாக இருந்தால், யோவானை போன்று அவளும் அதே தவறை செய்திருப்பாள்! நீங்கள் பார்க்கிறீர்களா? அது கிறிஸ்து அல்ல. நீ இப்படி செய்யாதபடிக்கு பார், நானொரு சாதாரன தூதன், ஒரு செய்தியாளனாக இருக்கிறேன் என்று யோவானுக்கு சொல்லப்பட்டது. நீங்கள் பார்க்கிறீர்களா?
23 நான் தானியேல் 7:13 முதல் 14 ஐ இப்போது வாசிக்கிறேன் ... "இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, ஒரு மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்தார், அவர்கள் அவர் சமீபத்தில் அவரை கொண்டுவந்தனர். சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்." அந்த மனுஷகுமாரனுக்கு (THE Son of Man) ஒப்பானவர் என்றல்ல ஆனால் ஒரு மனுஷ குமாரன் (a son of man) போன்றவர், அதன் பொருள் ஒரு தீர்க்கதரிசி. வெளிப்படுத்துதல் 19 ன் இந்த குதிரை வீரன் கிறிஸ்து அல்ல ஆனால் பூமியில் வெளிப்பட போகிறவனான ஒரு தீர்க்கதரிசி. கிறிஸ்துவின் ஒரு வெளிப்படுதல்! ஆமென்!
24 தானியேலுக்கு தேவன் ஏன் இதைக் காட்டினார்? அறியாமொழியின் வெளிப்பாட்டிற்காக தானியேலின் ஆவியானது மறுபடியும் பூமியின்மேல் வரவேண்டியுள்ளது, அந்த நேரத்தில் தேவன் வெளிப்படுத்துதல் 19 ஐ நிறைவேற்றுவார் என்பதனால்தான் தேவன் அதைச் செய்தார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது]. அது வெளிப்படுத்துதல் 19:11 ன் அதே பாகத்திலேயே உள்ளது. அதன் வெளிப்பாட்டிற்கும் நிறைவேறுதலுக்கும் உரிய நேரம் இன்னும் வராமலிருந்ததினால் மேய்ப்பர்களும், போதகர்களும், இறையியலாளர்களும், பூமியின் அனைத்து மதசார்பான மனிதர்களும், அவர்கள் தேவனுடையவர்களானாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் தாமே என்று போதித்திருந்தனர்.
25 மேலும் 27 வது வசனம் கூறுகிறது, எழுதப்பட்டிருக்கிற ஐந்தாம் இராஜ்ஜியம் பற்றி பேசுகிறது: "வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்தவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்." ஆமென்!
26 இராஜா இல்லாமல் எந்த ராஜ்யமும் இருக்க முடியாது. அதனால்தான் இந்த மனுஷன், தானியல் 7:13 முதல் 14 ன் மனுஷகுமாரன் போல, இந்த ஐந்தாம் ராஜ்யத்தின்மீது அரசாட்சி பெற்றுக்கொகிறார். ஆனால் மெய்யான இராஜாவான, நீண்ட ஆயுசுள்ளவர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த மனுஷகுமாரன் மூலமாக, சாமுவேலைப் போல, தமது ராஜ்யத்தை வழிநடத்துகிறது தான் இது. நீங்கள் பார்க்கிறீர்களா? வெளிப்படுத்துதல் 19:16 ம் வசனமானது அவர் "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்"... ஆக இருக்கிறார் என்று கூறுகிறது.
27 இந்த அரசாட்சியும் ஆளுகையும் ஆவிக்குரியவை. எனவேதான், ஏப்ரல் 24, 1993 ன் தரிசனத்தில், அவரது ஆத்துமா தண்ணீரில் நிற்பதற்கு வெளியேறினது; அவர்களுக்கு முன்பாக சமீபத்தில் கொண்டுவரப்பட்டாலொழிய, புருஷனாலும் ஸ்திரியினாலும் ஜெநித்த எந்த மனித ஆத்துமாவும் தேவதூதனானவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் சமீபமாக நெருங்க முடியாது! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
28 தேவன் ஆவியாயிருக்கிறார்; தானியேல் அவரை மனிதவடிவில் உண்மையிலேயே, அடையாளம் கண்டுகொண்டு, அவரை: "நீண்ட ஆயுசுள்ளவர்", அதாவது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்றழைத்தான்; ஆனால் மற்ற பாத்திரத்தைப் பொருத்தவரையில், அது யார் என்று தானியேலுக்குத் தெரியாது! ஆனால் அது கிறிஸ்து அல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். ஆமென்!
29 ராஜரிகமும் ஆளுகையும் அவருக்கு கொடுக்கப்பட்டபோதிலும் தானியேல் அவரை தொழுதுகொள்ளவில்லை! மேலும் இந்த பக்கத்திலே வெளிப்படுத்துல் 19 ல், பூமியிலுள்ள மத சார்பான மனிதர்கள் அனைவரின் எண்ணமும் அவனை தொழுதுகொள்வதைப் பற்றித்தான், அந்த குதிரை வீரன் கிறிஸ்துதாமே என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது கிறிஸ்து அல்ல என்பதை தானியேலின் ஆவியானது அடையாளம் கண்டுகொண்டது! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது]. நீங்கள் பார்க்கிறீர்களா? பிலிப்பு என்பதற்கு "குதிரைகளை விரும்புகிறவன்" அல்லது "சவாரி செய்கிறவன்" என்று அர்த்தமாம்; அது தான்: குதிரை வீரன்.
30 லவோதிக்கேயாவின் வெகுமதியானது வெளிப்படுத்துதல் 3:21 அதைக் காட்டுகிறவண்ணமாக ஒரு சிங்காசனமாக இருக்கிறது. ஏனெனில் அது ஒரு இராஜாதிகாரம். ஆமென்!
31 மனிதகுலம் தேவனுடைய ஆவியிலிருந்து வருகிறது. தானியேலின் புத்தகம் அதைக் காட்டியதுபோல, மனிதகுலம் நான்கு பேரரசுகள் ஆனது, பாபிலோனிய ராஜ்யம், மேதிய-பாரசீக ராஜ்யம், உலக கிரேக்க ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் ஆகிய மாம்சப்பிரகாரமான நான்கு ராஜ்யங்கள் ஆனது. அதன் பிறகு, தோற்கடிக்கப்பட முடியாத ஒரு ஐந்தாவது ராஜ்யம் எழும்பியது, அதுதான் கிறிஸ்தவம், மேலும் இந்த ராஜ்யமும், அதாவது கிறிஸ்துவமும் கூட பரிபூரணமான காரியமாக இல்லாததினால் நான்கு மிருகங்களாக மாறியது!
32 அந்த நான்கு மிருகங்களும் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்யமும், புராட்டஸ்டன்டு சாம்ராஜ்யமும், சுவிசேஷக சபை சாம்ராஜ்யமும் நான்காம் இடத்தில், பெயரற்ற மிருகமான பிரன்ஹாமிஸ்டு சாம்ராஜ்யமுமாக இருக்கின்றன. இரும்பும் பகுதி களிமண்ணுமான பாதங்களைக் கொண்டிருந்த நெபுகாத்நேச்சரின் சொரூபம் போலவே, பிரன்ஹாமின் மகன்களுடன் அங்கே மேற்கத்திய பிரன்ஹாமிஸமும், எவால்டு ஃபிராங்க் மற்றும் அலெக்சிஸ் பாரிலியர் ஆகியோருடன் ஐரோப்பாவில் கிழக்கத்திய பிரன்ஹாமிஸமும் இருந்தன. ஆனால் அந்த நான்கு மிருகங்களுக்குப் பிறகு, பூமியின் அனைத்து பரிசுத்தவான்களும் அந்த நான்கு மிருகங்களையும் இயக்குகிற பரிசுத்த ஆவிகள் பேய்கள்தான் என்பதை அடையாளம் கண்டுகொள்வர்.
33 "அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை அமைப்பார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, பட்சித்துப்போடும், தானோ என்றென்றைக்கும் நிற்கும்." என்று தானியேல் 2:44 கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது]. ஆதியிலே கிறிஸ்தவத்தை உருவாக்கியது எதுவோ அதுவே இந்த ஐந்தாவது ராஜ்யத்தை உருவாக்கும், அது அழிக்கப்படாது! கிறிஸ்தவம் உருவானது என்னவென்றால் இந்த ஐந்தாவது ராஜ்யம் அழிக்கப்படாது. நீங்கள் பார்க்கிறீர்களா? இதுவே மிகச்சரியான சத்தியம்!
34 2000 ஆண்டுகளுக்கு முன்பு மகத்தான ராஜாவும் தீர்க்கதரிசியுமான அவர்தாமே பூமியின் மீது நடந்தார் ஆனால் எவருமே அவருக்கு கவனத்தைச் செலுத்தவில்லை. பூமியின் மீது ராஜாக்களையும் தீர்க்கதரிசிகளையும் அவர் அனுப்பி கொண்டிருக்கிறவரையில் அது அவ்வாறே இருக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ரோமாபுரியின் போப்புக்கும் சபைத் தலைவர்களுக்கும் ஒப்பிட்டுப் பாருங்கள், அது நீங்கள் இரவையும் பகலையும் ஒப்பிட்டுப் பார்ப்பது போல இருக்கும் அதேநேரத்தில் அவர்கள் அவருடைய அடிமை என்று கூறுகிறார்கள்...
35 தான் கிறிஸ்துவின் அடிமையாக இருப்பதாக போப்பு கூறுகிறான், பூமியின் மிகப்பெரியவன் பூமியின் மிகச் சிறியவருடைய அடிமையாக இருக்கிறதாக உரிமைகோறுகிறான். இதுதான் மிகச் சரியாக பூமியில் இன்று நடந்து கொண்டிருக்கிறது. நானோ, ஒரு மிகச் சிறிய மனிதனாக இருக்கையில், என்னுடைய அடிமையாக இருக்க ரோமாபுரியின் போப்பினால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நானோ, ஒரு மிகச் சிறிய மனிதனாக இருக்கையில், பூமியின் பயபக்திக்குரியவர்கள், ஆயர்கள், சபைத் தலைவர்கள் ஆகியோரால் என்னுடைய அடிமைகளாக இருக்க ஒப்புக் கொள்ள முடியுமா?
36 ஆனால் பூமியின் பரிசுத்தவான்கள் தங்களது நேரத்தின் நட்சத்திரத்தை அடையாளம் கண்டுகொண்டு அந்த நட்சத்திரத்தின் அடிச்சுவடுகளிலும் வெளிச்சத்திலும் நடைபோடுவார்கள். உலகத் தோற்றமுதற்கொண்டு தலைமுறை தலைமுறையாக அது அவ்வாறே இருந்தது, நமது தலைமுறையிலும் அது அவ்வாறே இருக்கும், எப்பொழுதும் அது அவ்வாறே இருக்கும். தேவன் பூமியின் மீது ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவார் மேலும் அவனது நேரத்தின் பரிசுத்தவான்கள் அவனது வெளிச்சத்தில் நடப்பார்கள்! உணர்ந்து கொள்ளக் கூடியவன், உணர்ந்துகொள்ள கடவன்!
--:--
--:--