(2007 நவம்பர் 22 புதன்கிழமை மாலை, அட்ஜாமின் - ஆபிட்ஜான், ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1கிறிஸ்துவின் உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வமான ஊழியராக மனிதகுலம் அனைத்தும் இன்றைக்குஅங்கீகரிக்கிற ஜான் வெஸ்லியின் சரித்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியை, இந்த மாலைவேளையில், நான் வாசிக்க விரும்புகிறேன்.
2நான் அதை வாசிக்கிறேன்: "அமெரிக்காவில் காதல் தோல்வி அடைந்த பிறகு, ஜான் வெஸ்லி, தான்மணமாகநிலைக்கு விதிக்கப்பட்டிருந்ததாக நம்பினார்... பின்னர், 1751 ம் ஆண்டில், ஒரு வியாதியின்போது அவரைகவனித்துக்கொண்டிருந்த ஒரு விதவையான மேரி வசிஸ்லேவை (Mary Vazeille) திருமணம் செய்து கொள்ளவிதிக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார்: அவர் காரியங்களை தீர்மானித்து அதை செய்து பதினைந்து நாட்கள் சென்றது. ஆனால் மேரி வசிஸ்லேவின் அனைத்து குணங்களும் பின்னர் வீண் என நிரூபிக்கப்பட்டது: அவள்பொறாமைக்காரியும், புத்தியினமானவளுமாக இருந்தாள்...
3திருமதி வெஸ்லி அனைத்து நிலைகளிலும் அவளது கணவனின் உண்மையை சந்தேகிக்கிறவளாக இருந்தாள். அவரை கட்டுப்படுத்திவைக்கும் நோக்கில், அடிக்கடி பயணம் செய்யாத ஒரு வாழ்க்கையை அவர்மேல் தினிக்கவிறும்பினாள். அவள் தொடர்சியான வேளைகளில் சிடுசிடுவென வெடிப்பாள், அவருடைய ஆவணங்களில் தேடுதலைநடத்துவாள், அவைகளை திருடுவாள், அவளது கணவனின் உண்மைத்தனத்தை பரிசோதிக்க லட்டனிலிருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பாலும் எதிர்பாராத நேரத்தில் வருவாள்...
4அவள் அவரை அடித்து, தரையில் வீசி, அவரது தலைமயிரை பிடித்து இழுத்துச்செல்வாள், அவர் தன்னைதற்காத்துக்கொள்ளமாட்டார். தன் கணவரின் எதிரிகளுக்கு அவள் திருடிய ஆவணங்களைக் கொடுக்க அவள்தயங்கவில்லை. அவள் தனது மணவீட்டில் இருந்து பலமுறை போய்விடுகிறாள், அவள் திரும்பிவர வெஸ்லி கெஞ்சவேண்டியிருந்தது. இது இருபது ஆண்டுகளுக்கு நீடித்தது
5ஓர் நாள், அவள் நிச்சயமாக வெஸ்லியை விட்டுபோனாள். வெஸ்லி இப்படி எழுதினார்: "அவள் நியூயார்க்கிற்குசென்றுவிட்டது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, அதன்மூல் அவள் திரும்பி வரமாட்டாள் என்று என்னிடம்சொல்லுகிறாள், நான் அவளை விலக்கிவைக்கவில்லை, நான் அவளை துறத்திவிடவுமில்லை; திரும்பிவரும்படி நான்அவளிடம் கேட்கவுமாட்டேன்."...".[ "ஆசிரியர் குறிப்பு: ஃபேடி "ஜான் வெஸ்லியின் சரித்திரம்" என்னும்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பாகமிது."] இவ்விதமாகவே புகழ்பெற்ற செய்தியாளன் ஜான் வெஸ்லி வாழ்ந்தார்மேலும் அவருடைய காலத்தில் அவரைவிட மேலான நீதிமான் அல்லது பெரியவன் அங்கே எவருமில்லை. [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
6ஆயினும், வெளிப்பாட்டின் படி, ஒரு போதகரின் மனைவி அந்த நடத்தையைத் தொடங்குகையில், இந்த போதகர்ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் இது ஜான் வெஸ்லிக்கு அப்படியல்ல ஏனெனில் அவர் ஒரு தீர்க்கதரிசிசெய்தியாளனாக இருக்கிறார். யாத்திராகமம் 28 ல் ஆரோனின் வஸ்திரங்களைப் பாருங்கள் ஆனால் மோசே எந்தவஸ்திரத்தை அணிய வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள்! உங்களால் பார்க்க முடிகிறதா? ...
7சரி, தேவன் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை பூமியில் அனுப்பும்போது, தேவனுடைய பிள்ளைகள் ஒரு பெரியஎண்ணிக்கையில் பிறந்திருக்கிறார்கள் என்று ஒரு பிரசங்கத்தில் நான் சொன்னேன். இந்த ரகசியத்தை நீங்கள்புரிந்துகொள்ள விரும்பினீர்கள். இது ஒரு மறைபொருள்! யாராவது ஏற்கனவே இதை பற்றி எங்காவதுபேசியிருந்தால், நான் அறியேன்.
8நல்லது, 640 ம் ஆண்டில் தேவன் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை பூமியில் அனுப்பப்போகிறார் என்றுவைத்துக்கொள்ளுவோம். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு பலகையில் ஒரு விளக்கப்படம் வரைந்துள்ளார் ...] எனவே, 640 ல் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் பூமியில் காட்சியில் வருவான். பிறகு என்ன நடக்கிறது? அதற்குமுன்னர் 600 ம் ஆண்டின் துவக்கத்திலேயே ஆதியாகமம் 7 ன் மறைபொருளுக்கு ஏற்ப, தங்களது அறைகளில்இருக்கிறவர்களான தேவகுமாரரை பிசாசின் புத்திரர் பெற்றெடுக்க ஆரம்பிக்கின்றனர் என்பதை நான் உங்களுக்குச்சொல்லுகிறேன்.
9பிறக்கிற இந்த மிகவுமான தேவகுமாரர்களுக்குள் தான், அந்த தலைமுறையின் இரட்சகன் இருக்கிறான், அதுதான், தீர்க்கதரிசி செய்தியாளன். அவன் ஒரு இரட்ககன் (saviour). அதனால்தான்: "... தேவனுக்கு கனத்தைசெலுத்து. இயேசுவைப்பற்றிய சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது", என்று பத்மு தீவில் யோவானுக்குஅது சொல்லப்பட்டது, அதாவது, பூமிக்கு வருகிற ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளனும் அவனது தலைமுறைக்குகர்த்தர் இயேசுவின் சாட்சியாக, கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறவனாக இருக்கிறான். நீங்கள் காண்கிறீர்களா? மேலும் திருச்சபையானது தீர்க்கதரிசிகளுடைய வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டுள்ளது. திருச்சபையின்ஒவ்வொரு செய்தியாளனும் மத்தேயு 16:19 ஆக, கிறிஸ்துவாக (the Christ), ஜீவனுள்ள தேவனின் குமாரனாகஇருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
10இப்பொழுது, ஆதியாகமம் 31:6-8 வரை வாசிக்க விரும்புகிறேன்: "என்னால் இயன்றமட்டும் நான் உங்கள்தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்கள் தகப்பனோ, என்னைப்பரியாசம்பண்ணி, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன்அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன்சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது."
11உபாகமம் 2:2-3 வரையுள்ள வசனங்களையும் கூட வாசிக்கவும், "முன்னேற மறுத்தல்" என்னும் காரியத்தின்பேரில் மறுபடியும் பிரசங்கிக்கவும் விரும்புகிறேன். அதற்கு முன்னர், ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்புகிறேன்: சகோதரன் பிலிப்பு, மத்தேயு 25:6 ன்ஊழியமானது, வெளிப்படுத்துதல் 10:8 ஐ போன்றதான அதே ஊழியமா?
12முதலாவதாக, மத்தேயு 25:6 என்பது ஒரு மனிதனின் ஊழியமாக இருக்கிறது, மேலும் இந்த ஊழியம்வெளிப்படுத்துதல் 10:7 க்குப் பிறகாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படுத்துதல் 10:7 என்பது தானியேல்12:4 ஆக உள்ளது, அதேநேரத்தில் வெளிப்படுத்துதல் 10:8 என்பது தானியேல் 12:8-10 ஆக உள்ளது. நீங்கள்அறிந்து கொள்கிறீர்களா? தானியேல் 12:4 ன் திறக்கப்பட்ட சிறு புத்தகம், வெளிப்படுத்துதல் 10:1-2 ன்புத்தகமாகவும், அதேநேரத்தில் தானியேல் புத்தகம் 12:8-10ன் பாகமாகவும், வெளிப்படுத்துதல் 19:9 மற்றும்வெளிப்படுத்துதல் 22:8-9 ன் பாகமாகவும் இன்னும் மற்றவைகளின் பாகமாகவும் உள்ளது. சிறு புத்தகத்தைஎடுக்கும்படி அந்த சத்தமானது யோவானுக்குச் சொன்னது அறியாமொழியின் வெளிப்பாடுக்கு பிறகுதான். வெளிப்படுத்துதல் 10:10-ல் உள்ள சிறிய புத்தகம் வெளிப்படுத்துதல் 10:2-ன் அதே தோற்றத்தைக்கொண்டிருக்கவில்லை என்பதை யோவான் கவனித்திருக்கலாம் ஆனால் அது அதே புத்தகமே.
13இப்போது, உபாகமம் 2:2-3-ஐ வாசிக்கலாம். நான் அதை வாசிக்கிறேன்: "யேகோவா எனக்குச் சொல்லியபடிநாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர்மலையைச் சுற்றித்திரிந்தோம். அப்பொழுது யேகோவா என்னை நோக்கி சொன்னது: நீங்கள் இந்த மலையைசுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்". என்னுடைய பொருள், "முன்னேற மறுத்தல்" என்பதாம்.
14சாயங்கால நேரத்திற்கும் நள்ளிரவுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கருத்துக்களை நான்இங்கே குறித்து வைத்திருக்கிறேன். அவைகள் பொதுவாக மத்தேயு 25:6 ன் செய்தி கூறினதாகவோ அல்லதுசெய்ததாகவோ இருக்கும். மேலும் சாயங்கால செய்தியானது அதைப் பற்றிப் பேசுவதில்லை! நேர்மாறாகவும்இருக்கும். அல்லது சாயங்கால செய்தி அல்லது வேதாகமம் அறிவித்ததும், இங்கே நடுராத்திரியில்நிறைவேறினதுமான காரியங்கள் அவை. உதாரணமாக, 1993-ல் இயேசுவின் வருகை. உங்களால் பார்க்கமுடிகிறதா?
15குறைந்தபட்சம், சாயங்கால செய்தியில் உள்ள பத்து முக்கியமான தீர்க்கதரிசனங்கள், நள்ளிரவில் இங்கேநிறைவேறின. இவற்றில் அறியாமொழி மற்றும் வெண்பாறையின் வியாக்கியானமும், ஏழாவது முத்திரை பக்கம் 31ல்வில்லியம் பிரன்ஹாம் கூறின அந்த மகத்தான நபர் பற்றிய வெளிப்பாடும் அடங்கும்...
16[ஆசிரியர் குறிப்பு: சகோதரன் பிலிப்பு வாசிக்கிறார்...]: "...சபினோ கான்யானில், அவர் என்னிடம்: "இதுதான்மூன்றாவது இழுப்பு" என்றார். அங்கே அதனுடன் மூன்று மகத்தான காரியங்கள் சம்மந்தப்பட்டுள்ளன. ஒன்றுநேற்றைய தினம் வெளியானது, மற்றொன்று இன்றைக்கு வெளியானது ஆனால் என்னால் வியாக்கியானிக்க முடியாதஇன்னொன்று அங்கே உள்ளது, ஏனென்றால் அது ஒரு அறியாத மொழியில் இருந்தது. நான் நின்றவண்ணம் அதைஉற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அதை பார்த்தேன் அது மூன்றாம் இழுப்பு வருவதாக இருந்தது.
17அந்த ஏழாம் முத்திரையின் அதே 31-ம் பக்கத்தில், அவர்: "அங்கு நான் பார்த்த பொழுது ஓரத்தில் ஒருபெட்டியைப் போல, ஒரு சிறிய ஸ்தலம் அந்தப்பக்கமாக இருந்தது. மேலும் அந்த ஒளியானது எனக்கும் மேலாககாணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன், நீங்கள் புகைப்படத்தில் காணும் ஒளிதான்அது." என்றார்.
18இன்னும் தொடர்ந்து, ஏழாம் முத்திரை பக்கம் 34 ல் பத்தி 209-210 ல், வில்லியம் பிரன்ஹாம் கூறுகிறார்: "... என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஏழு இடிகளும் பரலோகம்அமைதியானதின் இரகசியத்தை தங்களுக்குள் வைத்துள்ள என்பதை நான் அறிவேன். அனைவருக்கும் புரிந்ததா? அந்த மகத்தான நபர் காட்சியில் தோன்ற நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே, அவர் காட்சியில் தோன்றும்நேரம் இப்பொழுதாக இருக்கலாம். ஜனங்களை வார்த்தைக்கு திருப்ப முயன்ற இந்த ஊழியம் ஒருவேளை அதற்குஅஸ்திவாரமாக இருக்கலாம்; அப்படியானால், நன்மைக்காக நான் உங்களை விட்டு போய் விடுவேன். ஒரேநேரத்தில்நாங்கள் இருவர் இருக்கமுடியாது, அப்படி இருந்தால், அவர் (he) பெருக வேண்டும், நான் சிறுக வேண்டும்... ". [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
19பிரன்ஹாமிஸ்டுகள் இதை நன்கு அறிந்திருக்கிறார்கள் ஆனால் முன்னேற மறுக்கின்றனர்! முன்னேற மறுத்தல்! இந்த வார்த்தைகள் ஏப்ரல் 24, 1993 முதல் மாமிசமாகிவிட்டதை நீங்கள் அறிவீர்கள், இந்த இந்த வார்த்தைகள்ஏசாயா 40:3, மல்கியா 4 ஆகிய தீர்க்கதரிசனங்கள் போன்று இப்பொழுது சரித்திரமாகிவிட்டது என்பதை நீங்கள்அறிவீர்கள்.
20வில்லியம் பிரன்ஹாம் தொலைக்காட்சியை வெறுத்தார் ஆனால் மத்தேயு 25:6 ன் செய்தியாளன் அதைதிருச்சபையிலிருந்து வெளியேற்றினார். இப்படி மத்தேயு 25:6 ன் செய்தியானது சாயங்கால நேரத்தினுடையதைவிடஅதிகமாக செல்கிறது. ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள் முன்னேற மறுக்கிறார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
21ஸ்தாபனங்கள் புத்தியில்லாத கன்னிகைகள் அல்லவென்பதை நடுராத்திரி சத்தத்தின் மூலம் நாம் அறிவோம்.அது வில்லியம் பிரன்ஹாம் அறிந்திராத காரியம். ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள் அதைப் பார்க்கிறார்கள், வெளிப்பாடுகள் முன்னேற்றமடைந்துள்ளதை காண்கின்றனர் ஆனால் அவர்கள் முன்னேற மறுக்கின்றனர்!
22இது முன்னேற மறுக்கிற, ஒரு லூத்தரன் அல்லது ஒரு மெத்தடிஸ்டு, வில்லியம் பிரான்ஹாமை நோக்கி, "ஜான்வெஸ்லியும் மார்டின் லூதரும் எங்களிடம், பிதாவின் பெயரிலும், குமாரனின் பெயரிலும், பரிசுத்த ஆவியின்பெயரிலும் ஞானஸ்நானத்திலும் கொடுக்கவேண்டும் என்றனர்". என்று சொல்வது போன்றுள்ளது. உங்களால்காணமுடிகிறதா? அது என்ன? அது முன்னேற மறுத்தல்
23இன்றும், பிசாசின் குமாரன் ஒருவன் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் நின்றுகொண்டு, "எங்கள் சபையில்அக்னி ஸ்தம்பம் தோன்றுகிறது ... எங்கள் கூட்டங்களின்போது அக்கினித்தம்பமானது தோன்றுகிறது ... தேவன்எங்களோடு இருக்கிறார்!" என்பான். உங்களால் காணமுடிகிறதா? ஆனால், அவர்கள் அனைவரும் நரகத்திற்குப்போவார்கள். ஏன்? தேவன் ஜீவனோடு இருக்கிறார் மேலும் அவர் தமது ஜனங்களை ஜீவக்கின்ற தீர்க்கதரிசி மூலம்வழிநடத்துகிறார்.
24ஒரு தீர்க்கதரிசி, எவ்வளவு மகத்தானவன் என்றாலும், அவனது மரணத்திற்குப் பிறகு அது அவ்வளவுதான். மோசேஎவ்வளவு பெரியவனாக இருந்தாலும், அவன் இறந்தபின் யோசுவா இஸ்ரவேலை வழிநடத்த வேண்டும். கர்த்தராகியஇயேசு கிறிஸ்து உங்களிடம் அனுப்பிய தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை இரட்சகனாக நீங்கள் அடையாளம்கண்டுகொள்ளாமல் இன்று நீங்கள் தேவனுடைய சித்தத்தில் இருக்க முடியாது. முன்னேற மறுத்தல்!
25சோதோமுக்கும் கொமோராவுக்கும் வந்த இரண்டு தேவதூதர்கள், அது பில்லி கிரஹாமோ ஓரல் ராபர்ட்ஸோஅல்ல, அல்லது காபிரியேலோ மைக்கேலோ அல்ல, ஆனால் அது எலியாவும் மோசேயும் தான் என்பதை, உண்மையிலே ஆவியானது சுட்டிக்காட்டினது. அது வில்லியம் பிரன்ஹாமுக்கு தெரியாத காரியம். பிரான்ஹாமிஸ்டுகளால் முரணாகச் சொல்ல முடியாது ஆனால் ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை? அவர்கள்முன்னேற மறுக்கிறார்கள்!
26[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இது முன்னேற மறுக்கிற, ஒரு லூத்தரன் அல்லது ஒருபிரஸ்பிட்டேரியன் அல்லது ஒரு மெத்தடிஸ்டு, வில்லியம் பிரான்ஹாமை நோக்கி, "ஜான் வெஸ்லியும் மார்டின்லூதரும் எங்களிடம், பிதாவின் பெயரிலும், குமாரனின் பெயரிலும், பரிசுத்த ஆவியின் பெயரிலும்ஞானஸ்நானத்திலும் கொடுக்கவேண்டும் என்றனர்" என்று சொல்வது போன்றுள்ளது. வெஸ்லி பிரசங்கிக்கையில், அவருடைய செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் லூத்தரன்கள் ஆனார்கள்.
27வில்லியம் பிரான்ஹாம் பிரசங்கிக்கையில், தங்களது நேரத்தின் தீர்க்கதரிசியாக அவரை அங்கீகரிக்கமறுத்தவர்கள், முன்னேற மறுத்து மெத்தடிஸ்டுகளாக மாறினர். இன்றும், பிரன்ஹாமிஸ்டுகள் முன்னேறமறுக்கிறார்கள், சாத்தானோவெனில் அக்கினி ஸ்தம்பங்களினூடாக அவர்களுக்கு ஒரு பிழையின் வல்லமையைஅனுப்புகிறான்.
28பிசாசின் புத்திரர் ஜலப்பிரளயத்தை கடந்து வந்தது விபசாரத்தினால் அல்ல என்பதை இன்று, நடுராத்திரிசத்தத்தினால், நாம் அறிந்திருக்கிறோம்.
29வில்லியம் பிரன்ஹாம் ஜேம்ஸ் மன்னன், டார்பி, ஸ்கோஃபீல்ட் அல்லது தாம்ப்சன் வேதாகமங்ளைப் பயன்படுத்தமுடியும் மேலும் அவருக்கு முன்னால் ஒருவன் ஜான் வெஸ்லி மற்றும் மார்ட்டின் லூதர் ஆகியோருடன் ஒரு திரித்துவஞானஸ்நானம் மூலம் இரட்சிக்கப்பட முடிந்ததுபோல இரட்சிக்கப்படவும் முடியும் ஆனால் இன்று நடுராத்திரியில், இது சாத்தியமில்லை! நீங்கள் தீர்க்கதரிசி பிலிப்புவை நிராகரிக்கிறீர்கள் என்றால், நீங்கள் நரகத்தைதேர்ந்துகொள்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஜேம்ஸ் மன்னன், க்ராம்பன், ஸ்கோஃபீல்டுஅல்லது தாம்சன் வேதாகமங்களை பயன்படுத்தவும் இரட்சிக்கப்படவும் முடியாது! பிரான்ஹாமிஸ்டுகள் அதைபார்க்கிறார்கள் ஆனால் முன்னேற மறுக்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ]
30பிரன்ஹாமிஸ்டுகள் ஒருவர் மற்றொருவரோடு பரிசுத்த இராப்போஜனத்தில் பங்குகொள்ளமாட்டார்கள். மேலும்அவர்கள் பிரிவில் இருந்து பிரிவுக்கும், கொள்கையில் இருந்து கொள்கைக்கும், தனியினத்தில் இருந்துதனியினத்திற்கும், துண்டத்திலிருத்து துண்டத்திற்கும், ... செல்கின்றனர். ஏதோ காரியம் தவறாக உள்ளதென்றுஅவர்கள் அறிவார்கள் ஆனால் அவர்கள் முன்னேற மறுக்கிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா ?
31ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மரிக்கும் போது, அவனது உடல், அதாவது, அவனது ஜனம் சிதைந்துவிடும். இதுஇயற்கையின் பிரமாணமாகும். பிரன்ஹாமிஸ்டுகளுக்கு இது புரியாது, ஏனென்றால் அவர்கள் முன்னேறமறுக்கின்றனர். முன்னேற மறுத்தல்! வனாந்தரத்தில் மோசேயுடனேகூட, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவர்கள்அதை செய்தனர், தேவன் அவர்களை நோக்கி, "போதும், நீங்கள் இவ்வளவுகாலம் இந்த மலையை சுற்றினதுபோதும், வடக்கே செல்லுங்கள்!" என்றார்.
32தேவன் உருவாக்கிய அனைத்தும் முன்னேறுகிறது. மரங்கள் விதைகளிலிருந்து துவங்கி செடிகளாகி, பின்னர்இந்த மரங்களில் பழங்கள் உண்டாகின்றன, பின்னர் இந்த விதைகள் நிலத்தில் இடப்பட்டு, மீண்டும்செடிகளாகின்றது, இது அனைத்த்தும் ஒரு முடிவில்லாத சுழற்சியாக இருக்கிறது. இது ஒரு இயற்கை சட்டம்! நீரோடைகள், ஆறுகள், கடல்கள், சந்திரன், சூரியன், பூமி, கிரகங்கள், விண்மீன் மண்டலம், வானிலை, பருவங்கள்... அனைத்தும் முன்னேறுகிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. ஆனால் பிசாசின்பிள்ளைகள் தங்களது நேரத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை பின்பற்றாததினால், சாத்தானின் சபைகள்முன்னேறுகிறதில்லை.
33தன்னிலே ஜீவனை கொண்டிருக்கிற எதுவும் முன்னேறுகிறது ஆனால் மரித்த எதுவும் முன்னேறுகிறது இல்லை!பிசாசின் புத்திரர்கள் தங்கள் நடுவே ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியை கொண்டிருக்கமாட்டார்கள், அதனால்தான்கத்தோலிக்கம், புராட்டஸ்டன்டு, சுவிசேஷக சபைகள் மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் ஒருபோதும்முன்னேறுவதில்லை. தேவன் பூமியில் பேசுவது ஒரு தீர்க்கதரிசியினால் தான். தீர்க்கதரிசிகள் தேவனின் வாயாகஇருக்கின்றனர், அதனால்தான் வேதாகமம் தீர்க்கதரிசிகளுடைய புத்தகங்களின் புத்தகமாக இருக்கிறது. உங்கள்காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நீங்கள் தேவனுடைய சித்தத்தில் இருக்கமுடியாது
34மரித்த மரங்களைப் பாருங்கள், அவைகள் எப்படி முன்னேறும்? மரித்த ஒரு மிருகத்தை அல்லது மனிதனைபாருங்கள், அவன் எப்படி முன்னேறுவான்? அவனுக்கு மீதியாயிருக்கும் ஒரே காரியம், அது பிரன்ஹாமிஸ்டுகளைப்போன்று கொள்கையில் இருந்து கொள்கைக்கும், ஒரு பகுதியில் இருந்து பகுதிக்கும், துண்டுகளில் இருந்துதுண்டுகளாக அழுகி மக்கிப்போவது மட்டுமே. ஆனால் இயேசுவின் சாட்சியை காத்துக் கொள்கிறவர்களும், தேவன்பேசுவது உயிர்வாழும் தீர்க்கதரிசி மூலமாக மாத்திரமே என்பதை அறிந்தவர்களும் எடுத்துக்கொள்ளப்படுதல்வரைக்கும் எப்போதும் முன்னேறிக்கொண்டே இருப்பர்! ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட இயக்கத்தில் தூதனுடனும்செம்மறியாட்டுக் குட்டியுடனும், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனின் அடிச்சுவடுகளில், எடுத்துக்கொள்ளப்படுதல் வரைமுன்னோக்கி செல்வர். அவர்கள் முன்னேறி வருகிறார்கள், அவர்கள் எப்போதும் முன்னேறுவார்கள். இதுஇயற்கையின் பிரமாணம்.
35கண்டுபிடிப்பிலிருந்து கண்டுபிடிப்புக்கு சென்றுகொண்டு, விஞ்ஞானம் முன்னேறுகிறது! வருகிற ஒவ்வொருவிஞ்ஞானியும் முந்தைய விஞ்ஞானியை விட மிக அதிகமாக செல்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்"என்கிறார்கள் ]. தொழில்நுட்பம் முன்னேற்றமடைகிறது, மருத்துவம், தொலைத்தொடர்பு, அரசியல், பள்ளிக் கல்வி... எதுதான் முன்னேறாமல் இருக்கிறது? எனக்கு தெரியாது! ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியினால் மாத்திரமேசபையானது முன்னேற முடியும். ஆனால் உயிர்வாழும் தீர்க்கதரிசியின் அடிச்சுவடுகளில் நடந்து முன்னேற சபைகள்ஏன் மறுக்கிறது? எனக்குத் தெரியாது!
36இஸ்ரவேல் முன்னேறுவது அது தீர்க்கதரிசி மோசேயினால் தான். ஆனால் யூதர் பார்வோன்களை விரும்பினர். மோசேக்கு பிற்பாடு, இஸ்ரவேல் முன்னேற வேண்டியது உயிர்வாழும் தீர்க்கதரிசிகளினால்தான். ஆனால் இஸ்ரவேல்முன்னேற மறுத்து ஆசாரியர்களை விரும்பி தேர்வு செய்துகொண்டது.
37ஒரு தீர்க்கதரிசி அவர்களிடம், கடற்கரைக்கு செல்வதற்கான உரிமை இனிமேல் அவர்களுக்கு இல்லை என்றுசொல்லப்போகிறான், ஒப்பனைகளையும் கால்சட்டைகளையும் போட்டுக்கொள்ள இனிமேல் அவர்களுக்கு உரிமைஇல்லை என்று ஸ்திரீகளிடம் சொல்லப் போகிறான், இப்பொழுதிலிருந்து தங்கள் பாவங்களை வெளியரங்கமாகஅறிக்கை செய்யவேண்டும் என்று அவர்களுக்கு சொல்லப் போகிறான். அவர்கள் அதை விரும்பவில்லை. அவர்கள்சாத்தானின் செல்வாக்கின் கீழ் தங்க விரும்புகிறார்கள்.
38ஆனால் போக்குவரத்து தொழில்நுட்பத்தை, மற்றும் உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றையும் பாருங்கள். முதலில், குதிரைகள் இருந்தன, பின்னர் மோட்டார் பைக்குகள் அங்கு இருந்தன, அந்த மோட்டார்சைக்கிள்களுக்குப் பிறகு, அந்த வாகனங்களுக்கு பிறகு கார்கள். மேலும் 1960 ன் கார்கள் இன்று நாம் பார்க்கும்கார்களிலிருந்து வேறுபட்டவைகள். ரயில்களை பாருங்கள்! 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரயில்கள் இன்றுநாம் பார்க்கும் ரயில்களில் இருந்து வித்தியாசமாக உள்ளன, அதிவேக ரயில்கள். விமானங்களை பாருங்கள்!இப்போது, நாம் ராக்கெட்டுகளை வைத்திருக்கிறோம் ... அது என்ன? அனைத்தும் முன்னேறுகின்றன ஆனால் சபைமுன்னேற மறுக்கிறது.
39மருத்துவத்தை பாருங்கள்! எண்ணற்ற நோய்கள் அங்குள்ளன, ஆனால் அவைகளை கட்டுப்படுத்திக்கொண்டிருக்க மருத்துவமானது தினமும் பரிணமிக்கிறது. ஆனால் சபை ஏன் முன்னேற மறுக்கிறது? சாத்தானின்செல்வாக்கிற்குக் கீழாக தரித்திருக்கும்படிக்கு சபையானது தேவன் அதற்கு அனுப்பிய உயிர்வாழும்தீர்க்கதரிசிகளை மறுதலிக்கிறது.
40ஆயுதங்களை பாருங்கள்! முதலில் அங்கு அம்புகள் இருந்தன, பின் துப்பாக்கிகள். 40 ஆண்டுகளுக்குமுன்பிருந்த துப்பாக்கிகள் இன்றைய துப்பாக்கிகளைவிட வித்தியாசமானதாக உள்ளன. பாருங்கள், இப்போதுதுப்பாக்கிகள் உள்ளன! ஆனால் முதலில், அது வெடி மருந்தாக இருந்தது மேலும் இப்போது நாம் தானியங்குஆயுதங்கள், கையெறி குண்டுகள், குண்டுகள், அணு ஆயுதங்கள், மற்றும் பல வைத்திருக்கிறோம்.
41பருவங்களை, காலங்களைப் பாருங்கள்... அனைத்தும் முன்னேறுகிறது ஆனால் சபை முன்னேற மறுக்கிறது.பள்ளி பாடத்திட்டத்தை பாருங்கள்! உங்கள் தந்தையர் பயன்படுத்திய புத்தகங்கள் இன்று நீங்கள் பயன்படுத்தும்புத்தகங்களிலிருந்து வேறுபட்டவை. இன்று நீங்கள் பயன்படுத்தும் புத்தகங்கள் நாளை உங்கள் பிள்ளைகள்பயன்படுத்தும் புத்தகங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும். அது என்ன? எல்லாம் முன்னேறுகின்றன.
42ஆனால் சபை ஏன் முன்னேற மறுக்கிறது? சபையானது முன்னேறுவதற்கான ஒரே வழி, அது அவர் அனுப்பும்தீர்க்கதரிசிகளின் மூலமாக தேவன் தான். ஆனால் சபை தீர்க்கதரிசிகளை மறுத்து, சாத்தானின் போப் புகள் மற்றும்தலைவர்களுடன் அவனது பிடியை விரும்புகிறது. உங்களால் பார்க்க முடிகிறதா? தேவன் சபையை முன்னோக்கிநடத்துவது ஒரு உயிர் வாழும் தீர்க்கதரிசியினால் மாத்திரமே. ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு, தேவன் இஸ்ரவேலைஎகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார், ஒரு தீர்க்கதரிசியினால், இஸ்ரவேல் காக்கப்பட்டான்." என்று ஓசியா 12:14 கூறுகிறது.
43தொலைதொடர்பை பாருங்கள்! முதலில் கடிதங்கள் இருந்தன, பின்னர் தந்தி, அதாவது கம்பிகளைகொண்டுள்ள தோலைபேசிகள், செல்போன்கள், வில்லியம் பிரான்ஹாம் கூட தெரியாத இணையம். அது என்ன?எல்லாம் முன்னேறும்! ஆனால் தேவன் அவளிடம் அனுப்பும் தீர்க்கதரிசிகளின் மூலம் முன்னேற சபையானதுமறுக்கிறது.
44ஒரு மரித்த தீர்க்கதரிசியைக்கொண்டு, ஒரு சடலத்தைக்கொண்டு நீங்கள் முன்னேற முடியாது. தேவன் உயிரோடுஇருக்கிறார்! அவர் ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார் மேலும் உங்களிடம் பேசுகிற என்னைப் போன்று ஒருஉயிர்வாழும் தீர்க்கதரிசியினாலேயே அவர் எப்போதும் பேசுவார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்"என்கிறார்கள்]. நீங்கள் அறியாத ஒரு தீர்க்கதரிசியை நீங்கள் எப்படி உரிமைகோர முடியும்?
45நீங்கள் பிறப்பதற்குமுன் இறந்த ஒரு தீர்க்கதரிசி, ஒரு தீர்க்கதரிசியானவன் பூமியில் உயிரோடு இருந்தபோதுநீங்கள் அவனில் விசுவாசம் கொண்டிருக்கவில்லை. ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியில் விசுவாசம் வைக்க நீங்கள்மறுப்பதாலேயே, உங்களது பிறப்புக்கு முன்னமே மரித்துப்போன ஒரு தீர்க்கதரிசியை சேர்ந்தவர்கள் என நீங்கள்உரிமைகோறுகிறீர்கள். ஆனால் வேதாகமமானது அவர் மரித்தோரின் தேவனாக இராமல் ஆனால் ஜீவனுள்ளோரின்தேவனாக இருக்கிறார் என்று கூறுகிறது.
46"அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோஎன்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசுபட்டணத்துக்கு வந்தான்." என்று அப்போஸ்தலர் நடபடிகள் 18:24 இப்படிகூறுகிறது. அவன் யோவான் ஸ்நானகனின் சீஷனாக இருந்தான். ஆனால் யோவான் ஸ்நானகன் இறந்தபொழுது, அப்போல்லோ யோவான் ஸ்நானகனை தனது தீர்க்கதரிசி என்று சொல்லவில்லை, ஆனால் அவன் பூமியிலேராஜ்யத்தின் திறவுகோல்களை வைத்திருந்த அந்த ஒருவனான பவுலிடம் சென்றான். பவுல் அவனைமறு-ஞானஸ்நானப்படுத்தினான்.
47நான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, நான் உங்கள்மேல் குற்றஞ் சுமத்துவேன் என்று பிரன்ஹாமிஸ்டுகளாகியநீங்கள் நினையாதிருங்கள். நியாயத்தீர்ப்பின்போது உங்கள் மேல் குற்றஞ்சுமத்த அப்பொல்லோ எழுவான். கர்த்தர்இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவனான, மகத்தான தீர்க்கதரிசி யோவான் ஸ்நானகனின் சீஷனாகஅப்பொல்லோ இருந்தான் ஆனால் யோவான் ஸ்நானகன் இறந்தபோது, அவன் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியிடம்சென்றான். தேவன் ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார். நீங்கள் தேவனுடைய ஒரு குமாரனாகஇருப்பீர்களேயானால், நீங்கள் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியை பின்பற்றுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்" என்கிறார்கள் ].
48ஆனால் சாத்தானின் சபைகளோ அங்கேயே தரித்திருப்பதை விரும்பித் தேர்ந்துகொள்கின்றன, முன்னேறமறுத்தல்! ஏன்? ஏனென்றால் தேவன் அவைகளுக்கு அனுப்புகின்ற தீர்க்கதரிசிகளை அவைகள் புறக்கணிக்கின்றன. தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு அவர்கள் மத்தியில் இருந்து வராததினால் அவர்களால் தீர்க்கதரிசி காக்குவ்பிலிப்புவுக்கு செவிகொடுக்க முடிவதில்லை. ஆனால் தேவன் இராஜாதிபத்தியமானவரும், தாம் விரும்புகிறவனைதெரிந்துகொள்ள சுதந்திரம் உள்ளவருமாக இருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
49அங்கு, உபாகமம் 2 ல், அவர்கள் அவ்விடம் விட்டுப் போகவேண்டும் என்று தேவன் எல்லாவற்றையும் செய்தார்,ஆனால் அது அவர்களை தடுமாறக்கூட செய்யவில்லை! மார்ட்டின் லூதரின் பின்சந்ததி தேவனோடு முன்னேறசம்மதித்திருந்தால், இன்று அங்கே லூத்தரன்கள் இருக்கமாட்டார்கள். ஜான் வெஸ்லியின் பின்சந்ததி தேவனோடுமுன்னேற சம்மதித்திருந்தால், இன்று அங்கே மெத்தடிஸ்டுகள் இருக்கமாட்டார்கள். வில்லியம் பிரன்ஹாமின்பின்சந்ததி தேவனோடு முன்னேற சம்மதித்திருந்தால், இன்று அங்கே பிரன்ஹாமிஸ்டுகள் இருக்கமாட்டார்கள். உங்களால் காணமுடிகிறதா? முன்னேற மறுத்தல்!
50இன்று, மத்தேயு 25:6 ன் சத்தம் பிரன்ஹாமிஸ்டுகளை நோக்கி, "இது போதும், நீங்கள் இவ்வளவு காலம் இந்தமலையைச் சுற்றிக் கொண்டிருந்தது போதும்; நடுராத்திரி சதத்தை நோக்கி திரும்புங்கள்" என்கிறது. [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ]. ஆனால் அவர்கள் முன்னேற மறுக்கிறார்கள்! நீங்கள் காண்கிறீர்களா?
51காலங்களின் கூர்நுனிக்கோபுரமான, இந்த மலையின்மேல் உன்னை கொண்டுவரும்படிக்கு, எகிப்தின்ஆழங்களிலிருந்து உன்னை வெளியே கொண்டுவந்தவரான, தீர்க்கதரிசிகளுடைய ஆவிகளின் தேவனாகிய கர்த்தர்,நானே. ஆனால் அது போதும், என்று இப்பொழுது நான் உனக்குச் சொல்லுகிறேன்! கூர்நுனி கோபுரத்தின் படியில்நீ சுற்றினது போதும்; தலைக்கல்லை நோக்கி தலையைத் திருப்பு! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்"என்கிறார்கள் ]. நீங்கள் பார்க்கிறீர்களா? பிசாசு அவர்களிடம், "உனக்கு வேண்டியதெல்லாம், எல்லாம், புனித மலைமீது, வில்லியம் பிரான்ஹாமின் துண்டுப்பிரதிகளில் உள்ளது" என்று கூறுகிறான். மேலும் அவர்களோவெனில்முன்னேற்றமடையாதபடிக்கு தங்களது நிலையில் தங்களை வலுப்படுத்திக் கொள்கின்றனர். நீங்கள்பார்க்கிறீர்களா? முன்னேற மறுத்தல்!
52"நாங்கள் முன்னேறும்படிக்கு எங்களுக்கு என்ன அடையாளத்தை கொடுக்கிறீர்?" என்று கேட்டார்கள்; அங்குஒரு அடையாளம் இருந்தாலும் முன்னேறவேண்டும் என்பதற்காக அவர்கள் அதை கேட்பதில்லை, ஆனால் அவர்கள்முன்னேற விரும்பாததினால் தான் அவர்கள் அதை சொல்கின்றனர்! ஒரு அடையாளமானது எவரையாவது முன்னேறச்செய்ய முடியும் என்றால், பரிசேயர்களும் சதுசேயர்களும் கர்த்தராகிய இயேசுவுடன் சேர்ந்திருப்பர் மேலும் ஐம்பதுஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் பிரான்ஹாமின் தலைக்கு மேல் அக்கினி ஸ்தம்பம் தோன்றினபோது அனைத்துகிறிஸ்தவமும் அவருடன் சேர்ந்திருக்கவேண்டும். நீங்கள் அறிந்துகொள்கிறீர்களா? உபாகமம் 2 ல், யூதர்கள்அனைவரும் பிசாசின் குமாரராக இருந்ததால் முன்னேற மறுத்தனர்; அவர்கள் எல்லாரும் வனாந்தரத்திலேவிழுந்தார்கள்.
54நன்கு கவனித்துப் பாருங்கள், ஒரு வெள்ளாடு ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியாக மாறமுடியாது என்பதையும் ஒருநண்டு ஒரு மீனாக மாறமுடியாது என்பதையும் அல்லது மீனின் சுபாவத்தைக் கூட கொண்டிருக்க முடியாதுஎன்பதையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் அங்கே முன்னேறவில்லை, அவர்கள் இங்கு முன்னேறவில்லை,அவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ]. அவர்களுக்குமுன்னேற முடியாது!
55வில்லியம் பிரன்ஹாம் ஒரு சுவிசேஷக சபையில் அல்லது கூட்டத்தில் அழைக்கப்பட்டு, அவர்களுடன்ஒத்துப்போகலாம், அவரது வீட்டில் கூட, ஒரு சுவிசேஷக சபையின் போதகர் கூட்டத்தை முடித்து வைக்கலாம்ஆனால் இங்கே நடுராத்திரியில் அது சாத்தியம் இல்லை. அந்த பழக்கமானது பிசாசுகளினுடையது என்பதைபிரன்ஹாமிஸ்டுகள் அறிந்திருக்கிறார்கள், ஆனாலும் அதை வைத்திருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் முன்னேறமறுக்கிறார்கள். ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு தலைவன் சாத்தானின்அவதாரமாக இருக்கிறான் மேலும் எனது கூட்டத்தை முடித்துவைக்க அவனால் முடியாது. நாம் ஒரு பயணத்தில்இருந்தாலும்கூட, அவர்களோடு ஜெபிக்கவோ அல்லது அவர்களது சபைகளுக்கு செல்லவோ நம்மால் முடியாது.நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபை யார் "ஆமென்" என்கிறார்கள் ].
56ஆபிரகாமைப் போல, வில்லியம் பிரன்ஹாம் இந்த அடிப்படையில் கொஞ்சம் துவங்கி, பெந்தகோஸ்தேயினர்களோடும் இன்னும் மற்றவர்களோடும் ஒத்துப்போகலானார் ஆனால் இந்த பக்கத்தில் தேவன்அதை அனுமதிக்கவில்லை! ஏன்? ஏனெனில் இஸ்லாமியம் மற்றும் யூதம் உட்பட கத்தோலிக்க, புரொட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் தற்போது ஊழியத்திலுள்ள ஆவிகள் பிசாசுகளாக உள்ளன!
57வில்லியம் பிரன்ஹாம் உபயோகித்த ஜேம்ஸ் மன்னன் வேதாகமம் கூட ஒரு மாந்திரீகப் பாணையாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
58நடுராத்திரி சத்தம் நம்மை தீர்க்கதரிசன விசுவாசத்திற்கு கொண்டுவந்ததை நீங்கள் காண்கிறீர்கள், அதேநேரத்தில் சாயங்கால செய்தியானது பிரன்ஹாமிஸ்டுகளை அப்போஸ்தலிக்க விசுவாசத்திற்கு கொண்டுவந்து, தீர்க்கதரிசன விசுவாசத்தை அறிவித்தது; அது உண்மையான காரியத்தின் மறுசீரமைத்தலாக இருந்தது மேலும்நடுராத்திரி சத்தமானது ஒரு மீட்டளிப்பின் ஞானஸ்நானத்துடன் அதனுடைய ஸ்தானத்தில் அதை வைத்தது.
59இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்ற பெந்தேகோஸ்தேயினன் பிரன்ஹாமிஸ்டுகளிடம் தனதுஞானஸ்நானத்தை திரும்பப்பெற அவசியமில்லை ஆனால் இங்கு அது அப்படியல்ல. உங்களால் பார்க்க முடிகிறதா?பிரன்ஹாமிஸ்டுகள் அதை கவனித்து கவலையுடன் இருக்கிறார்கள், ஆனால் அதை பார்க்க மறுக்கிறார்கள்ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் முன்னேறாதபடிக்கு முடித்து வைத்திருக்கிறார்கள். வேதவாக்கியங்களைநிறைவேற்றும் நோக்கில் அவர்களது இருதயத்தில் இந்தவிதமான செய்கையை வைத்தது தேவன் தான் என்பதைஅவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ]. அந்த பிரகாரமாகதான் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பதை, உலகத்தோற்றத்திற்கு முன்னமே தேவன் அறிந்திருந்தார்!
60யூதாஸ் பிறந்தபோது அங்கே சந்தோஷம் இருந்தது, எட்டாம் நாளன்று, ஒரு நல்ல பிள்ளையை போல்வே அவன்தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டான், ஆனால் அவன் பிசாசாக இருந்தான். சாயங்கால செய்தி இங்கேவந்தபோது, இங்கு மகிழ்ச்சியும் கட்டித் தழுவுதலும் இருந்தது ஆனால் அவைகள் அங்கே யூதாஸின்கட்டித்தழுவுதல்களாக இருந்தது என்பதை நடுராத்திரி சத்தம் வெளிப்படுத்திற்று! அந்த கட்டித்தழுவுதல்கள்நன்மைக்காக இருந்திருக்குமானால், "மறுசீரமைத்தல்" என்பது "மீட்டளித்தல்" அல்ல என்பதையும் கூர்நுனிகோபுரத்தின் ஏழாவது படியானது தலைக்கல் அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்" என்கிறார்கள்].
61வெளிப்பாடானது முன்னேறுகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்! நீங்கள் பிரன்ஹாமிஸ்டுகளாவதற்குமுன்னர் எகிப்தின் ஒரு பகுதியிலெங்கோ இருந்தீர்கள், பிறகு நீ இனிமேல் ஏன் முன்னேறாமல் இருக்கிறீர்கள்? ஏன்? ஏனென்றால் நீங்கள் பிசாசின் பிள்ளைகள்! வெஸ்லியை பின்பற்றாத லூத்தரன் பிசாசின் பிள்ளைகள் அல்லஎன்பதை எனக்கு காட்டுங்கள்! வில்லியம் பிரான்ஹாமை பின்பற்றாத மெத்தடிஸ்டுகள் பிசாசின் பிள்ளைகள் அல்லஎன்பதை எனக்கு காட்டுங்கள்! அப்போது நீங்கள் பிசாசின் பிள்ளைகளல்ல என்று நான் அறிவேன். ஏன் அவர்கள்முன்னேறவில்லை? ஏனென்றால் அவர்கள் பிசாசின் பிள்ளைகள்!
62நீங்கள் முன்னேற்றமடையவில்லை ஆனால் தேவனுடைய குமாரர்கள் முன்னேறினர், முன்னேறி வருகின்றனர், கர்த்தராகிய இயேசு வரும்வரை எப்பொழுதும் முன்னேறுவார்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்"என்கிறார்கள் ]. நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை பூமியில் அனுப்பியிருக்கிறார், ஆனால் முழு உலகமும் முன்னேற மறுக்கிறது! ஐவரி கோஸ்ட் மற்றும் ஆப்பிரிக்கா முன்னேற மறுக்கின்றன! ஐரோப்பா முன்னேற மறுக்கிறது! அமெரிக்கா முன்னேற மறுக்கிறது! முழு உலகமும் முன்னேற மறுக்கிறது!
63மத்தேயு 22:12 ல், கலியாண வஸ்திரந்தரிக்காத அந்த மனிதனைப் பற்றி நான் விவரித்தபோது, நான் அதைஎங்கும் பார்த்ததில்லை! அர்மகெதோன் யுத்தத்தையும், ஆதியாகமம் 7-ன் இரகசியத்தையும் நான் விவரித்தபோது, அது வேறு எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை. வெளிப்படுத்துதல் 19-ல் உள்ள குதிரைவீரன் ஒருவனைப் பற்றியவெளிப்பாடுவரையிலான, இந்த அனைத்து ரகசியங்களின் வெளிப்பாடும், இவை அனைத்தும் எங்கும்எழுதப்பட்டிருக்கவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா ?
64நாம் இருக்கும் காரத்தின் தகப்பனாக வில்லியம் பிரன்ஹாம் இருக்கின்றார். ஆனால், பிரன்ஹாமிஸ்டு சந்ததிமுன்னேறுவதற்கு உதவும் நோக்கில் இது அனைத்தையும் அனுமதித்தவர் தேவள் தான். உங்களுக்கு தெரிகிறதா?ஆனால் நீங்களோ முன்னேற மறுக்கிறீர்கள்!
65இந்த சபைகளிலும் மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்களிலும் பரிசுத்த ஆவிகளாக ஊழியத்தில் இருக்கும், குறிசொல்லும் ஆவிகள் தான் மிருகத்தின் முத்திரையாக இருக்கிறது என்பதை நடுராத்திரி சத்தம் தெளிவாகக்காண்பிக்கிறது. மிருகம் என்பது கத்தோலிக்கமும், அதனுடைய சொரூபம் என்பது மறைபரப்பு பணிகள் மற்றும்ஊழியங்கள் உட்பட, புராட்டஸ்டண்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளாக இருக்கிறது. [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ]. நீங்கள் தேவனுடைய குமாரர்களேயானால், நடுராத்திரி சத்தத்தைஉங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது எப்படி?
66மேலும், பரிசுத்தத்தை நாடுகிறவன், வெளியரங்கமான பாவ அறிக்கையானது திருச்சபையிலே திரும்பவந்துஇருக்கையில், அதை காணும்போது தேவனுக்கு மகிமை செலுத்தமாட்டானா? [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்" என்கிறார்கள்]. பிரன்ஹாமிஸ்டுகள் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் முன்னேறமறுக்கிறார்கள்!
67ஆவிகளின் இடமாற்றம் பற்றின வெளிப்பாட்டடை பாருங்கள் மேலும் இந்த பிரன்ஹாமிஸ்டுகள் பாதங்களைக்கழுவுகையில் ஒருவர் இன்னொருவர் மீது ஒருவர் கரங்களை வைத்திருக்கிறதை பாருங்கள். ஹாஃப்மேனின்இயேசுவை உட்பட நாம் சுட்டெரிக்கையில், இயேசுவின் படங்கள் என்று அழைக்கப்படுகிற இவைகளை தங்களதுவரவேற்பறையிலும் இன்னும் மற்றவைகளிலும் அவர்கள் தொங்கவிடுகிறதை நீங்கள் பாருங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இந்த எல்லாவற்றுக்கும் முன்பாகத்தான், அவர்கள் முன்னேற மறுக்கின்றனர்! உங்களால் பார்க்க முடிகிறதா?
68வில்லியம் பிரன்ஹாமின் செய்தியானது தானியேல் 12:4-ன் படி, அதை ஏற்றுக்கொள்கிற யாவருக்கும்,கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டண்டுகள், சுவிசேஷக சபைகள் உட்பட தங்கள் சபைகளை விட்டுவெளியேறாதவர்களுக்கும் கூட அறிவை மட்டுமே கொண்டு வந்தது. ஏனென்றால் தேசங்களும் அதன் ராஜாக்களும், அதாவது சபைகளின் பாஸ்டர்களும் தலைவர்களும் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள், அதிலிருந்து வெளியேஎடுத்துக் கொண்ட ஞானத்தினால் நடப்பார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 21 கூறுகிறது! அதை அவர்கள்இந்த பக்கத்தில் புதிதாக முயற்சி செய்வார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா ? ...
69ஒரு பிரன்ஹாமிஸ்டு பிரசங்கி குட்டைக் கால்சட்டையில் சுற்றிதிரிந்துகொண்டு, ஒரு சுவிசேஷக சபைபிரசங்கியுங்கள் ஒத்துப்போய், வியாபாரத்தையும் அரசியலையும் பற்றி பேசிக்கொண்டு இருப்பதை உங்களால்காண முடியும். ஆனால் நடுராத்திரி சத்தம் திருச்சபையின் சுத்திகரிப்பை கொண்டுவரும் என்றும் பரிசுத்த ஆவிகள்என்று அழைக்கப்படுகிற பிசாசுகளிடமிருந்து வெளிப்படுத்தின விசேஷம் 12:14 ன் படி அவளை வேறுபிரிக்கும்என்றும் தானியேல் 12:8-10 கூறுகிறது.[ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமேன் என்கிறார்கள்]
70எல்லோரும் வில்லியம் பிரன்ஹாமை பாவனை செய்கிறார்கள். ஆனால் வருகிற காரியம் ஒன்று அங்கு உள்ளது, அதை அவர்களால் பாவனை செய்ய முடியாது. நீங்கள் அறிந்துகொள்கிறீர்களா? வெளிப்படுத்துதல் 14 இவ்வாறுகூறுகிறது: "அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்குமுன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்துநாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது."
71இதோ, மோசே இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் யூதரோடுங்கூட வருகிறான், ஆனால் பலமுள்ள தேவதூதன்தேசங்களுக்குள் தமது வலது பாதத்தை வைக்கும்போது, தேவனின் அடிமையும், எத்தியோப்பிய ஸ்திரீயின்கணவனுமான, மோசேயின் ஆவியானது, அங்கே மணவாட்டியுடன், ஆட்டுக்குட்டியானவரின் மனைவியுடன் இருந்து, இந்த பக்கத்திலும் கூட ஒருவராலும் கற்றுக்கொள்ளக்கூடாத ஒரு புது பாடலை பாடுகிறது. அது ஒருஅறியாமொழியாக இருந்தது மேலும் அதனுடைய வியாக்கியானத்தை கற்றுக்கொள்ள முடியாது! உங்களால் பார்க்கமுடிகிறதா?
72இஸ்லாமியம் மற்றும் யூதம் உட்பட இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டுசபைகளில் அந்நியபாஷைகளில் பேசுகின்ற மற்றும் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற அந்த ஆவிகள் பிசாசுகளாகஇருக்கின்றன என்று சொல்ல அவர்களால் முடியாது! பிரன்ஹாமிஸ்டுகள் அதை கூற முடியாது ஏனென்றால் அவர்கள்முன்னேற மறுத்துவிட்டார்கள். வில்லியம் பிரான்ஹாம் பிரசங்கித்ததுபோல, மெய்யான பரிசுத்த ஆவிதான் பிசாசின்புத்திரர்கள் மீது கிரியை செய்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவைகள் பிசாசுகளின் ஆவிகள்என்று வெளிப்பாடானது இன்றைக்கு கூறுகிறது; அவர்கள் முன்னேற மறுத்ததினால் அதை அறியாமல்இருக்கிறார்கள்.
73சுவிசேஷக சபைகளின் இயேசு சாத்தான் என்பது பிரன்ஹாமிஸ்டுகளுக்குத் தெரியாது. ஜேம்ஸ் மன்னன், லூயிஸ்செகண்டு, ஸ்கோஃபீல்டு மற்றும் தாம்சன் வேதாகமங்களும் அத்துடன் அவர்களது புத்தகங்கள் மற்றும்பிரசுரங்களெல்லாம் மாயவித்தை புத்தகங்களாக இருக்கின்றன என்று அவர்களால் சொல்லவோ அல்லதுசுட்டெரிக்கவோ முடியாது! எவால்டு பிராங்க், பருட்டி காசோங்கோ, டாமி ஆஸ்பான், யோங்கி சோ, மோரிஸ்செருல்லோ மற்றும் இந்த சபைகளின் தலைவர்கள் பேய்கள் என்று சொல்ல அவர்களால் முடியாது! அவர்கள் அதைச்சொல்ல முயன்றால், "ஷிப்போலேத்" என்று சொல்லும்படி ஒரு எப்பிராயீமியனிடம் கேட்பது போல் இருக்கும்.வில்லியம் பிரன்ஹாம் ஒரு உண்மையான தீர்க்கதரிசி ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள் பிசாசின் பிள்ளைகள். இதுவேதாகமமும் கிறிஸ்தவமும் போன்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
74அந்தக் காரியத்தை ஒரு போதும் பாவனை செய்ய முடியாது என்பதை வில்லியம் பிரன்ஹாம் அவர்களுக்குசொன்னார்! நீங்கள் காண்கிறீர்களா? யாரும் பேசவோ அல்லது கற்றுக்கொள்ளவோ கூட முடியாத ஒரு மொழிஅங்கு இருக்கிறது! நடுராத்திரி சத்தத்தினுடையதுதான் அந்த மொழி! யாரும் பாடவோ அல்லது கற்றுக்கொள்ளவோகூட முடியாத ஒரு பாடல் அங்கு உள்ளது! அந்த பாடல் தான் நடுராத்திரி சத்தம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].