1ஒவ்வொரு மாதமும், நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றில், ஒரு பிரசங்கி வேறொரு சபையிலிருந்து இங்கு வந்து பிரசங்கிக்க நான் இப்பொழுது விரும்புகிறேன் மேலும் இது ஒவ்வொரு சபைக்கும் முற்றிலுமாக பொருந்தும். நான்கில் குறைந்தபட்சம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சபையிலிருந்து வரும் பிரசங்கிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு போதகர் போய், மற்ற இடங்களில் ஆராதனையில் பங்குகொண்டு கற்றுக்கொள்ளவும் உதவி செய்யவும் வேண்டும்.
2அவ்வாறே, நம்முடைய இரட்சிப்புக்காக தங்கள் வாழ்வைப் பிரதிஷ்டைசெய்த பிரசங்கிகளுக்கும் போதகர்களுக்கும், நன்கொடைகள், கொடுக்கப்பட நான் விரும்புகிறேன், அதனால் அவர்களுடைய இருதயங்கள் மகிழும். அவர்களுடைய இருதயங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்ய விரும்புகிறேன். இது நம் ஒவ்வொருவருடைய எண்ணமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா ?
3எபேசியர் 4:11-ல் உள்ள ஊழியர்களில் ஒருவராலேயே ஒரு சபையின் விசுவாசத்தை காத்துபராமரிக்க முடியும் என்று, அதும் மூன்று மாதங்களுக்குக் கூட முடியும் யாராவது நினைத்தால், அது தவறாக இருக்கிறது. நீங்கள் அங்கே சத்தமிடவும் மகிழ்ச்சியடையவும் செய்யலாம், ஆனாலும் நீங்கள் தவறாக இருக்கிறீர்கள். நீங்கள் நோயுற்றவர்களாகவும், ஒரு பாப்டிஸ்டு சபையினனைப்போல மரித்தவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்களுடைய போதகரின் பிரசங்கங்கள் உங்களது ஆத்துமாவுக்கு கால்சியத்தை மாத்திரமே கொடுப்பதாக இருக்கும், நீங்கள் உயிரோடு இருக்கையிலேயே அதினூடாக மரித்தவர்களாக இருப்பீர்கள்.
4தேவன் வார்த்தையின் நான்கு ஊழியங்களைத் திட்டமிட்டார், தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் இந்த நான்கு ஊழியங்களிலிருந்து பயனடைய வேண்டும். அதனால்தான் நான்கில் ஒன்று அல்லது இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மற்ற சபைகளைச் சேர்ந்த வெவ்வேறு பிரசங்கிகளுக்கு ஒதுக்கப்படும் என்று சொன்னேன். ஆராதனையின் முடிவில், வாழ்த்துகளுக்குப் பிறகு, ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் திரும்பி வந்து அமர்வார்கள். மேலும் வருகை தரும் பிரசங்கியார் சபை நிலையாக இருக்கிறதா என்று கேட்பார், ஏதேனும் பிரச்சனை இருந்தால் அனைவர் முன்னிலையிலும் தீர்த்து வைப்பார்.
5எனக்கு மார்ச் 29,2006 கிரகணத்தின் மிகப்பெரிய போஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.கானாவில் உள்ள மர்மவாதிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக கடவுள் அதைச் செய்தார் என்று நினைக்கிறார்கள். கானா மற்றும் எத்தியோப்பியா, நான் Kc63 இல் காட்டியது போல் "மோசஸ் மற்றும் எத்தியோப்பியன் பெண்" இரண்டு குறிப்பிடத்தக்க நாடுகள்.
6மத்திய காலகட்டத்தின் முதல் ஆப்பிரிக்க சாம்ராஜ்ஜியத்திலிருந்ததான அதுதான், கானா நாடு, மீண்டும் மார்ச் 6, 1957 அன்று, நடுராத்திரியில், கருப்பு ஆபிரிக்காவிலே சுதந்திரம் அடைவதற்கான முதல் தேசமாக மாறினது. மார்ச் 7, 1957 அன்று, சிவப்பு - மஞ்சள் - பச்சை கொடி அதன் நடுவில் ஒரு நட்சத்திரத்துடன் கானாவில் மிதக்க முடிந்தது. அந்த நாளில், நமது கிரகத்தின் முக்கிய நபர்கள் கானா நாட்டில் கூடினர், ரிச்சர்ட் நிக்சன் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் கூட அங்கு இருந்தார்கள்.
7கானா தேசிய கீதத்தின் முதல் வசனம் இப்படி உள்ளது: [ஆசிரியர் குறிப்பு: தீர்க்கதரிசி ஆங்கிலப் பதிப்பை வாசிக்கிறார்]. அதாவது, "தேவன் நம் தாயகத்தை ஆசீர்வதிப்பாராக". கடைசி வசனம் இப்படி உள்ளது: [ஆசிரியர் குறிப்பு: தீர்க்கதரிசி ஆங்கிலப் பதிப்பை வாசிக்கிறார்]. அதாவது, "தேவனின் கீழ் எப்போதும் என்றென்றும் அணிவகுத்து நிற்கும்". அது எதியோப்பியாவின் பரிபூரணமான சொரூபம். எதியோப்பியாவின் கொடி எது? சிவப்பு - மஞ்சள் - பச்சை, அதன் மையத்தில் ஒரு நட்சத்திரத்துடன் உள்ளது. அது அற்புதம் அல்லவா? இஸ்ரேலுக்குப் பிறகு உலகில் இரண்டாவது மிக பழமையான கிறிஸ்தவ தேசமாக எத்தியோப்பியா இல்லையா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
8நல்லது! உலகின் முன்னேற்றம் கிறிஸ்தவர்களுக்கு உதவியாக இருக்க வில்லை என்பதை "முன்னேற மறுத்தல்" என்னும் பிரசங்கத்திற்குப் பிறகு நான் சொல்ல விரும்புகிறேன். உங்களால் காணமுடிகிறதா? உதாரணமாக அச்சிடுவதற்கான முன்னேற்றத்தின் காரணமாக, பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் சுருள்கள் வேதாகமம் என்று அழைக்கப்படுகிற ஒரே புத்தகமாக ஒன்றுசேர்க்கப்பட்டது. எனவே "வேதாகமம்" என்றால் "புத்தகங்கள்" என்று பொருள். காரியம் எப்படி இருக்க வேதாகமம் ஒரு பரிசுத்த புஸ்தகம் அல்ல, ஆனால் பரிசுத்த புத்தகங்களின் ஒன்றுசேர்க்கப்படுதலாக உள்ளது. உங்களால் பார்க்க முடிகிறதா?
9அனேக கிலோகிராம் எடைகொண்ட பெரிய சுருள்களை ஒரு சிறிய புத்தகமாக ஒன்று சேர்த்தல் என்பது, நல்ல யோசனையாக இருந்தது; சாத்தான் அதைப் பயன்படுத்தப் போகிறான் என்பதை அறியாமல் அந்த கண்டுபிடிப்பை எல்லோரும் பாராட்டியிருப்பார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா ?
10அறுபத்தாறு புத்தகங்களை ஒரே புத்தகமாக ஒன்று சேர்த்திருக்கவில்லை என்றால், "எனக்கு, வேதாகமம் மட்டும்தான்! வேதாகமத்தை தவிர வேறு எதையும் நான் விசுவாசிப்பது இல்லை!" என்று ஒருவன் இன்றைக்கு சொல்ல முடியாது.
11ஒரு சுருள் அல்லது ஏசாயாவின் புத்தகம் தனித்தனியாக, எரேமியாவின் ஒரு புத்தகம் தனித்தனியாக, மோசேயின் ஒரு புத்தகம் தனித்தனியாக இருந்திருந்தால்... அது மனுக்குலத்திற்கு உதவும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! நீங்கள் அறிந்துகொள்கிறீர்களா? இருப்பினும் நியாயத்தீர்ப்பில், அனைத்து புத்தகங்களும் ஒன்றுசேர்க்கப்பட்ட புத்தகமெதுவும் அங்கு இருக்காது ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதன் புத்தகத்துடன் அல்லது சுருளுடன் அங்கு இருக்கும். நியாயந்தீர்க்கபடுவதற்காக நோவாவின் தலைமுறையானது நோவாவின் புத்தகத்தோடு இருக்கும். எரேமியாவின் தலைமுறையானது எரேமியாவின் புத்தகத்தோடு அல்லது சுருளோடு இருக்கும். மார்ட்டின் லூதரின் தலைமுறை மார்ட்டின் லூதரின் சுருளுடன் இருக்கும்! நியாயந்தீர்க்கபடுவதற்காக பிரன்ஹாமின் தலைமுறையானது வில்லியம் பிரன்ஹாமின் சுருள்களுடன் இருக்கும்!
12ஆனால் ஜாதிகளின் தேசங்களுக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் ஏழு நட்சத்திரங்களை வைத்திருக்கிற வண்ணமாகவே, அவர் ஏழு இடிமுழக்கங்களை, ஏழு நட்சத்திரங்களுடைய புத்தகங்களின் புத்தகத்தை வைத்திருக்கிறார். மேலும் அந்த ஏழு நட்சத்திரங்களும் தோன்றுகையில், ஒவ்வொன்றும் அதன் தலைமுறையோடு நியாயத்தீர்ப்புகாக இருக்கும், அது ஏழு நட்சத்திரங்களின் புத்தகமாக இருக்கவில்லை ஆனால் ஒவ்வொரு நட்சத்திரமும் ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் தேவன் அவரது தூதனிடம் அதற்கு கொடுத்த புத்தகத்துடன் இருக்கும்! ஆமென்! உங்களால் பார்க்க முடிகிறதா?
13அவர் தம்முடைய தெய்வீகத்தன்மையில் தோன்றும்போது, அது ஏழு நட்சத்திரங்களுடனும், பழைய மற்றும் புதிய ஏற்பாடு இரண்டிலுள்ள ஏழு செய்தியுடனும் தான் தோன்றுகிறார். ஆனால் நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்திற்கு முன்பாக தோன்றுவது போல இந்த ஒவ்வொருவரும் பூமியில் தோன்றும்போது, அவனவன் புத்தகத்துடன் தான் தோன்றுகிறான். மேலும் அந்த தலைமுறையின் விசுவாசமானது தேவன் அவனிடம் அனுப்பிய தீர்க்கதரிசியின் சுருளில் எழுதியிருக்கிறதென்னவோ அதன் மேல் தான் இளைப்பாருகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார்ப்"ஆமென்" என்று கூறுகிறார்கள் ]. இறுதி தீர்ப்பு பற்றிய பிரசங்கம் அதை விளக்குகிறது. உங்களால் பார்க்க முடிகிறதா? பெர்கமுவின் குடிகளில் ஒருவன் இப்படியாக, "நான் எபேசு சபையின் தூதனுக்கு அனுப்பப்பட்ட நிருபத்தை நம்புகிறேன்" என்று சொல்ல முடியாது.
14நல்லது, பிரசங்கிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, நான் இதை கூற விரும்புகிறேன், தேவன் ஒரு தரிசனத்தைக் கொடுக்கும்போது, இந்தத் தரிசனத்தின் நிறைவேற்றத்திற்கான ஏற்பாடுகளுடன் அவர் அதை கொடுக்கிறார்.
15தேவன் ஆசியாவைப் பயன்படுத்ததியபோது, ஆசியர்கள் சுவிசேஷத்தை பூமியின் எல்லைகள் பரியந்தம் எட்டப்பண்ணினார்கள். நான்கு கண்டங்கள் ஒவ்வொன்றிற்கும் அது அவ்வாறு தான். அண்மையில், சாயங்காலநேரத்தில், சுவிச்சர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் கிலோக்கணக்கான பிரசுரங்களை நாம் பெற்றோம், அது தேவன் சந்தித்த ஜனத்தின் தகுதிவாய்ந்த குமாரர்கள் பரலோகராஜ்யத்தின் நிமித்தம் நமக்காக தங்களது இன்பங்களை தியாகம் செய்து, தாங்களையே வருமைப்படுத்திக்கொண்டதாக இருந்தது.
16ஒரு ஆப்பிரிக்கனை எழும்ப பண்ணுவது, தேவனுக்கு பிரியமாக இருந்தது என்றால், மத்தேயு 25:6 ஐ தேவன் நிறைவேற்றுவது ஆப்பிரிக்க பணத்தைக் கொண்டுதான்; எலிசாவும் அவனது குமாரரும் மேலும் தீர்க்கதரிசிகளின் புத்திரரும் அந்த தரிசனத்தை நிறைவேற்ற எழும்புவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ]. அவர்கள் வைத்திருக்கிறதை கொண்டு, தேவனுடைய பிள்ளைகள் பூமியில் தாங்கள் செய்த எல்லாவற்றுக்கும் மேலாக தேவனுக்காக ஒரு செயலை செய்ய ஆவலாக இருப்பார்கள். அதனால்தான், இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்குகிற பணத்தை ஒரு சாதாரண சகோதரி கொடுத்தாள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
17இப்பொழுது நான் பிரசங்கத்திற்கு வருகிறேன்: தேவன் ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறார். ஆதியிலே, அங்கே ஆப்பிரிக்கா இருந்தது; ஏதேனானது இஸ்ரேல் உட்பட ... எகிப்தையும் எத்தியோப்பியாவையும் உள்ளடக்குகிறதாக அங்கு இருந்தது.
18வரலாற்றாளர்கள் எப்போதும் கூறியுள்ளபடி ஆப்பிரிக்கா மனிதகுலத்தின் தொட்டிலாக இருந்தது. ஆதியாகமத்தில் நாம் அதைப் பார்க்கையில் உள்ளது போல, ஆரம்பத்தில், எகிப்து நீண்ட காலமாக முதலாவது உலக வல்லரசாக இருந்தது என்பதையும் நாம் அறிவோம்.
19ஆபிரகாமின் காலத்தில், அங்கே பஞ்சம் உண்டானபோது, அவன் கீழே எகிப்துக்குப் போக வேண்டும் என்று தேவன் சொன்னார். இந்த பக்கத்தில், வில்லியம் பிரன்ஹாம், ஆபிரகாமின் ஒரு மாதிரி (type), கீழே எகிப்துக்கு சென்று பிசாசுடன் தோழமைகொண்டார். தேவனுடைய கட்டளையின் கீழ் வில்லியம் பிரன்ஹாம், கீழே அங்கே எகிப்துக்குப் போய், பெந்தேகோஸ்தே சபைகளுடனும் சுவிசேஷக சபைகளுடனும் தோழமைகொண்டிருந்தார், அதே நேரத்தில், ஆதியாகமம் 26 ல் தேவன் ஈசாக்கை நோக்கி: "கீழே எகிப்துக்குப் போக வேண்டாம்." என்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்" என்கிறார்கள் ].
20ஈசாக்குக்கு ஒரு மகத்தான பணி இருந்தது மேலும் புத்தியில்லாத ஒன்றும், 1993 ஏப்ரல் 24 ன் தேவதூதனுடன் போராடுகின்றதான புத்தியுள்ள ஒன்றுமாக இரண்டு சந்ததிகள் அவனிடம் இருந்து வரவேண்டியிருந்தது. செய்தி எவ்வளவு முரட்டுத்தனமானதாக இருந்தாலும் ஒரு பொருட்டல்ல, சேவல் கூவும் வரை அவர்கள் அவரை போக விடமாட்டார்கள். ஆகையால்தான் ஆதியாகமம் 32 ல் யாக்கோபு: "... நான் இப்போது இரண்டு துருப்புகளாக இருக்கிறேன்" என்றான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
21புத்தியுள்ள கன்னிகைகள் தேவனின் காரணமாக, தேவனுக்கு முன்பாக செயல்படுவார்கள் மற்றபடி மனுஷர் காரணமாக, மனுஷருக்கு முன்பாக அல்ல. அவர்கள் செய்யப்போகிற அனைத்தும், தேவனின் காரணமாக, தங்களது இருதயத்தின் ஆழத்தில் இருந்து அதை செய்வார்கள், அங்கே மறைப்பதற்கு ஒன்றும் இருக்காது. அவர்கள்தான் தேவனின் உண்மையான பிள்ளைகள், அவர்களுக்காகத்தான் நித்தியஜீவன். 1993, ஏப்ரல் 24 ன் தேவதூதனானவரைதேவன் அனுப்பினது அவர்களின் நிமித்தம்தான்.
22அவருடைய செய்தியானது புத்தியுள்ள கன்னிகையை கானானிய சபைகளிலிருந்து தூரமாக வெளிப்படுத்துதல் 12:14 ன் பாலைவனத்தில் சேவல் கூவும் வரை சுத்திகரித்து, வெண்மையாக்கி, புடமிடப்போகின்றது. மேலும் அது யாக்கோபை கெட்டுப்போகாநிலைக்கு (incorruptibility) மாற்றப்போகிறது. மேலும் 1993, ஏப்ரல் 24 ன் தரிசனத்தில் இரண்டு புறாக்களின் சந்திப்பினால் அது பிரதிநிதித்துவப் படுத்தபட்டுள்ளதை நாம் பார்த்தபடியே, இந்த அதே செய்தியானது காலைவேளையிலே இஸ்ரவேலில் மீண்டும் கிரியை செய்யும் காலையில், சூரியன் மேலெழும்பினது போலவே, யாக்கோபு பெனியேலை கடந்து போனான். உங்களால் பார்க்க முடிகிறதா? [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்" என்கிறார்கள் ].
23ஆகையால் ஈசாக்கை, பிரன்ஹாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை, எவருடனும் தோழமைகொள்ள தேவன் அனுமதிக்கவில்லை. நாம் ஒரு கத்தோலிக்க, புரொட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபையினனுடன் சேர்ந்து ஒருபோதும் ஜெபிக்காததும் அல்லது அவர்களை கிறிஸ்துவுக்குள் சகோதரர்கள் என்றுகூட அழைக்காததும் அதனால்தான். பூமிக்குரிய காரியங்களின் தொடர்பாக அவர்கள் நமது சக மனிதராக இருக்கின்றனர். உன்னை நேசிக்கிறது போல உன் அயலானையும் நேசிக்க கடவாய் என்று தேவன் கூறியுள்ளதினால், நாம் அவர்களை நேசிக்கிறோம். ஆனால் ஆவிக்குரிய காரியங்களை பொறுத்தவரையில், விசுவாசத்தை பொருத்தவரையில், ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டண்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபையினன் நமக்கு சக மனிதன் அல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
24நல்லது! ஆகையால், யூத ஜனம் எகிப்தில், ஆபிரிக்காவில், உருவாகி, வளர்ந்து, கானான் தேசத்திற்குச் சென்றார்கள். ஏரோதின் காலத்தில் இஸ்ரவேலிலிருந்தும் கூட, கர்த்தராகிய இயேசுவின் உயிரைப் பாதுகாக்க யோசேப்பும் மரியாளும் வந்தது ஆப்பிரிக்காவுத் தான். மேலும் கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தில், துன்புறுத்தலின் போது ஆப்பிரிக்கா ஒரு முக்கிய குறிப்புப் புள்ளியாக இருந்தது. தெர்த்துலியன், ஆரிகன், மற்றும் சைப்ரியன் ஆகியோர் ஆபிரிக்கர்கள் தான். இயேசுவின் சிலுவையைச் சுமந்த சிரேனே ஊரானாகிய சீமோனை மறந்துவிடவில்லை. ஆப்பிரிக்கா உதவுவதற்குரிய ஒரு பாகத்தை கொண்டுள்ளதற்காக நாம் நல்லுணர்வு கொண்டுள்ளோம்.
25ஆனால் உலகத்தோற்றத்கிற்கு முன்னமே அவளிடம் ஒப்படைக்கப் பட்டிருந்ததற்காக, அதுதான் அறியாமொழியின் வெளிப்பாடு, அதினிமித்தம் ஆப்பிரிக்காவானது புறக்கணிக்கப்பட்டதுபோல அல்லது மறக்கடிக்கப்பட்டது போல ஒரு புறமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக முழு உலகமும் தன்னை தாழ்த்திக்கொள்ள வேண்டியதாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
26தேவனால் அவளது மடியிலிந்து மார்டின் லூத்தர், ஜான் வெஸ்லி, வில்லியம் பிரன்ஹாம் மற்றும் வேதாகமத்தில் உள்ளவர்களைப் போல ஒரு தீர்க்கதரிசியை, எழும்பப்பண்ண முடியும் என்பதை அவள்தானே, ஆப்பிரிக்கா தானே முதலாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.
27நம் கடந்த காலம் எப்போதும் ஒரேபோன்று உள்ளதென்பது உண்மைதான். நீங்கள் பார்க்கிறீர்களா? நாம் இனிமேல் உபயோகிக்காத ஒரு பொருளை ஏலத்தில் விற்பதுபோல அடிமை வியாபாரத்தில் நம் பிதாக்கள் விற்கப்பட்டனர். சாதாரண கண்ணாடிகள் மற்றும் அழகுப் பொடுட்களுக்காக நம் பிதாக்கள் பண்டம்மாற்றில் இங்கும் அங்குமாக கொண்டு செல்லப்பட்டார்கள். எங்கள் மூதாதையர்கள் எளிமையான கண்ணாடிகள் மற்றும் குட்டி விஷயங்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்காவிற்கு படகுகளில் அவர்கள் நிர்வாணமாக குவிக்கப்பட்டனர் ...
28அதற்குப் பிறகு காலனிமயமாக்குதலின் போது மீண்டும் அப்படியே, அவர்களை உருவாக்கிய தேவனுக்கு முன்பாக ஆப்பிரிக்கர்கள் அடிக்கடி மிருகங்களைப் போல நடத்தப்பட்டனர். ஆனால் தேவன் அதை செய்யவும் அனுமதிக்கவும் சுதந்திரமுள்ளவர்! அவர் இராஜாதிபத்தியமானவர்! அவர் விரும்புகிறதை செய்ய அவர் சுதந்திரமுள்ளவர் மேலும் அவர் செய்யும் அனைத்தையும், அவர் தமது இறக்க குணத்தில்தான் அதை செய்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
29ஆனால் இன்று மனிதகுலம் ஒரு ஆப்பிரிக்கனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் கேட்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்"என்கிறார்கள்]. ஆனால் தேவன் ஒரு ஆப்பிரிக்கன் மூலமாக, அவர் சார்பாக இருக்கும், அவரது கருப்பு மனிதன் மூலமாக பேசுவார் என்பதை, முதலாவதாக ஆபிரிக்கா ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா !
30ஜனங்கள் காக்குவ் பிலிப்பு ஒரு தீர்க்கதரிசியாக உள்ளார் என்று கூறுகையில், ஜனங்கள் ஒத்துக்கொள்கின்றனர் ஆனால் அவர் வேதாகமத்தின் மோசேயை போன்றே, எரேமியாவை போன்றே அல்லது ஏசாயாவை போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறார் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்கையில், அவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும், ஆப்பிரிக்கர்கள் அவர்களும்கூட அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இப்படியாக: "ஒரு ஆப்பிரிக்கனா? ஹா!!!" என்கின்றனர். அவர்கள் குளிர்ந்தவர்கள். அது ஒரு வெள்ளைக்காரனாகவோ அல்லது குறைந்தபட்சம் ஜோசப் கோல்மன் போன்ற ஒரு கருப்பு அமெரிக்கனாகவோ இருக்க அவர்கள் விரும்பியிருப்பார்கள்.
31ஒவ்வொரு இனமும் அதற்கு மற்றவை கொடுக்கிற ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. வெள்ளை மனிதன் கருப்பனை நோக்கி: "நீங்கள் தகுதியற்றவர்கள்!" என்கிறான் மேலும் கருப்பர்கள் பிரதியுத்தரமாக வெள்ளையனை நோக்கி: "ஆமாம், நான் எப்போதும் தகுதியற்றவன் தான்! தேவன் எப்போதும் உங்கள் மூலம் என்னிடம் பேசட்டும்!" என்று சொல்கிறான். வெள்ளையன் கருப்பனை நோக்கி: "நீங்கள் தலைவனாக இருக்கிறீர்கள் என்று தேவன் கூறுகிறார், ஆகையால் சிங்காசனத்தில் உட்காருங்கள், நான் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன்" என்று சொன்னாலும், இந்த கருப்பனோவெனில்: "நான் தலைவன் தான், ஆனாலும் இந்த நாற்காலியில் மேல் நான் அருமையாக உணருகிறேன், நீங்கள் வெள்ளைக்காரர் எப்பொழுதும் சிங்காசனத்திலேயே அமர்ந்திருங்கள்." என்று சொல்லுவான். அது சரியாக அப்படித்தான் உள்ளது. அது பயமோ அல்லது மனத்தாழ்மையோ என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.
32அமெரிக்காவிலுள்ள இனப் பிரிவினையின் போது, ஒரு வெள்ளைக்காரன் இவ்வாறு சொன்னான்: "எங்கள் கரும்பு தோட்டங்களில் வேலை செய்யும்படியாக நாங்கள் அடிமைகளாக வாங்கிய மக்கள் எங்களைப் போலவே அதே அரசியல் உரிமைகளை கொண்டிருக்க நான் விரும்புவது கிடையாது!".
33அடிமை வியாபாரம், ஆப்பிரிக்கா பங்கிடப்படுதல், காலனித்துவம், அடிமைத்தனம், நிறவெறி, இனப்பிரிவினை, முன்னேற்றமில்லாமை,... ஆகியவற்றைப் பற்றி கறுப்பர்கள் தங்களுக்குள்ளே யோசித்துப் பார்க்கையில் ... தேவன் அவர்களை பணிவிடைக்காக அழைத்திருப்பதாக தங்களுக்குள்ளே சொல்லிக் கொள்கின்றனர்! எல்லா வகையிலும் அவர்கள் வெள்ளைக்காரர்களுடன் இசைந்திருக்க விரும்புகின்றனர். சருமத்தை சுத்தமாக சிலர் சருமத்தை வெண்மையாக்குகிற அழகு பொருட்களுக்காக பார்த்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் ஒரு தீர்க்கதரிசன தயாரிப்புதான் அதை செய்யப்போவதாக இருக்கிறது என்று தானியேல் 12:10 கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
34யோவான் ஸ்நானகனுடையதை போன்றதான மிகப்பெரிய ஊழியத்திற்காக தேவன் ஓர்நாள் ஒரு கறுப்பினத்தவனைத எழும்பச் செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
35வெள்ளையரின் இருதயத்தில் சிறிது காலம் இனவெறித் தன்மையை வைத்தது தேவன் தான் என ஆப்பிரிக்கா அறிந்துகொள்ள வேண்டும், ஆனால் இப்போது அந்த நேரம் கடந்துவிட்டது. அடிமை வியாபாரத்தின் காலம் கடந்தகாலமாக உள்ளது, காலனித்துவத்தின் காலம் கடந்தகாலமாக உள்ளது. அடிமைத்தனம், நிறவெறி மற்றும் இனப்பிரிவினை எல்லாம் பழைய சரித்திரம்! உங்களால் காணமுடிகிறதா? சமாரியர்களுக்கும் புறஜாதி ஜனங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் எந்தப் பங்கும் இல்லாதது போல, கருப்பர்களுக்கு வில்லியம் பிரன்ஹாமிடம் எந்தப் பங்கும் இருக்கக்கூடாது என்பதால், நிறவெறி மற்றும் இனப்பிரிவினை ஆகியவை தேவனிடமிருந்து நிறுவப்பட்டவையாக இருந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்"என்கிறார்கள் ].
36எல்லா மனிதர்களையும் சமமாக தேவன் பார்க்கிறார். மேலும் தேவனுடைய குமாரன் ஒருவன், அவன் எந்த இனத்தை சேர்ந்தவனாயினும், அதற்கு ஆமேன் என்று சொல்லுகிறான் ஏனென்றால் பூமியின் எல்லா இனங்களும் தேவனுக்கு முன்பாக சமமானது என்பதை அவன் அறிந்திருக்கிறான்! நீங்கள் பார்க்கிறீர்களா? அதை செய்த அதே தேவன் மார்ட்டின் லூதர், ஜான் கால்வின், ஜான் வெஸ்லி மற்றும் வில்லியம் பிரன்ஹாம் ஆகியோரின் குமாரர்களை அவர்களின் தோலின் நிறங்களுக்கு அப்பாற்பட்டு அதை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் பண்ணுவார்.
37சில வெள்ளை மனிதர்கள் ஆசியாவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் ஞானஸ்நானத்துக்காகவும் பிரதிஷ்டை பண்ணப்பட்டுவதற்காகவும் இங்கு வருவார்கள். மேலும் "யூதர்களிடமிருந்து இரட்சிப்பு வருகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் இப்பொழுது ஆபிரிக்காவில் இருந்து இரட்சிப்பு வருகிறது" என்று அது சொல்லப்படும், அதனால்தான் மார்ச் 29 ன் சூரியகிரகணத்தின் பிரயாண பாதை இரட்சிப்பின் இந்த பெரிய "எஸ்" (S) வடிவத்தை உருவாக்கினது![ஆசிரியர் குறிப்பு: இரட்சிப்பு என்பதற்குரிய ஆங்கில வார்த்தையான "சால்வேஷன்" என்பதின் முதலெழுத்து தான் "S" எஸ்]. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
38முழு வேதாகமமும் நடுராத்திரி சத்தத்திற்கு சாட்சி பகருகின்றது. நான் சொன்னது போல, வெளிப்பாடு இல்லாமையே வேதாகமத்தின் அனைத்து வசனங்களிலும் நடுராத்திரி சத்தத்தை நீங்கள் பார்க்காதபடிக்கு செய்யும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
39முடிப்பதற்காக, இப்போது இன்னொரு பத்தியை ரூத் 1:6 ல் வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? மார்ட்டின் லூதரின் காலத்தில், முழு வேதாகமமும் அவருடைய செய்தியின் நிறத்தை எடுத்துக்கொண்டது! ஜான் வெஸ்லியின் காலத்தில், முழு வேதாகமமும் அவருடைய செய்தியின் நிறத்தை எடுத்துக்கொண்டது! வில்லியம் பிரன்ஹாம் காலத்தில், முழு வேதாகமமும் அவருடைய செய்தியின் நிறத்தை எடுத்துக்கொண்டது! இன்று, அதேபோல், வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களும் நடுராத்திரி சத்தத்தின் நிறத்தை எடுத்துக் கொண்டன! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள் ].
40நாம் இப்போது ரூத் 1:6-ஐ வாசிக்கலாம்: "யேகோவா தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று [நகோமி] மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடே கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்தாள்;" நல்லது. முதலாவதாக, நகோமி அப்போஸ்தலர்களின் காலத்து திருச்சபையாக உள்ளாள். தேவன் இஸ்ரவேலை விட்டு விலகினபோது, அங்கு வார்த்தையின் ஒரு பஞ்சம் இருந்தது, தேசங்களின் நடுவே மரித்த அப்போஸ்தலர்கள் நவோமியின் கணவனுக்கு முன்னடையாளம். ஆனால் அவர்களது பிள்ளைகள், அவர்களது ஆவிக்குரிய சந்ததியான செய்தியாளர்கள் தான், வயதுசென்ற ஸ்திரியான நகோமின் விசுவாசத்தை பராமரித்து, அவளிடமிருந்து ஜாதிகளுக்குள்ளே இரண்டு கன்னிகைகளை எழும்பப் பண்ணினவர்களாக இருக்கின்றனர்! ஒர்பா என்றழைக்கப்பட்ட முந்தையவள் மாமிசப் பிரகாரமானவளாக இருந்தாள்! அது புத்தியில்லாத கன்னிகளின் முன்னடையாளமாக இருக்கிறது. ரூத் என்று அழைக்கப்பட்ட இரண்டாவதானவள் ஆவிக்குரியவளாக இருந்தாள். இரண்டாவதாக ரூத் ஆன்மீகம் இருந்தது. அது புத்தியுள்ள கன்னிகளின் முன்னடையாளமாக இருக்கிறது. ரூத்தின் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் நடுராத்திரி சத்தத்தின் ஒரு அம்சமாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
41ஆனால், இன்று காலை நமது கவனத்தை ஈர்ப்பது 6-வது வசனமாக இருக்கிறது. நடுராத்திரி சத்தம் முழங்கின போது, தேவன் அவளுடைய ஜனத்தை சந்தித்தார் என்பதையும், அவளுடைய ஜனத்திற்கு தேவன் வார்த்தையின் அப்பத்தை தந்தருளினார் என்பதையும் நகோமி கேள்விப்பட்டபோது, அவள் திரும்பி வந்தாள் என்று வசனம் 6 கூறுகிறது! ஆமென்! அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டண்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் அவள் வாழ்ந்த காலம் ஒரு பொருட்டல்ல! அவளுடைய வயது, அவளுடைய தொடர்புகள், அவளுடைய பொறுப்புகள், இன்னும் மற்றவைகள் ஒரு பொருட்டல்ல... ஒன்றும் அவளை திரும்பவும் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது! நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவராக இருந்தால், நீங்கள் அறியாமலேயே அதைச் செய்வதற்கு வழி நடத்தப்படுவீர்கள் ஏனெனில் உங்களுக்குள் இருக்கிற ஒன்று நீங்கள் அந்த விதமாக செய்யும்படிக்கு ஏவும். நீங்கள் காண்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபைyaar "ஆமென்" என்கிறார்கள்].
42இது விவேகத்துடனோ அல்லது புத்தியுடனோ தொடர்புடைய காரியமல்ல ஆனால் வித்தோடு தொடர்புடைய காரியமாகும்! உலகத் தோற்றத்திற்கு முன்னர் தேவன் உங்களை உருவாக்கியபோது நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதைச் சார்ந்து அனைத்தும் உள்ளது!
43வானிலை எங்காவது அருமையாக இருக்கும் போது, அந்த நேரம் முடியுமட்டாக அனைத்து பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் அங்கு செல்கின்றன. தேவன் ஒரு ஜனத்தை சந்திக்கையில், தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரும், அவர்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிற தேசத்தை நோக்கி தங்கள் கண்களை திருப்புகிறார்கள்! ... இது தான் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஆழம்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நாம் ஜெபத்திற்கு எழுந்து நிற்போமாக! ...