en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 68 (Kc.68) : ஒரு புதிய ஒழுங்கு
(ஞாயிற்றுக்கிழமை காலை 13 ஜனவரி 2008 அன்று, அஜிமு, அபிட்ஜான் - ஐவரி கோஸ்ட் இல் பிரசங்கிக்கப்பட்டது)
1 நல்லது! ஆதியிலே தேவன் தமக்குள்ளேயே இருந்தார், மேலும் தேவன் ஒரு புதிய ஒழுங்கு இருக்க வேண்டும் என விரும்பினார். எனவே தேவதூதர்களின் வெவ்வேறு வகுப்புகளை அவர் உருவாக்கினார், அங்கு ஒரு புதிய ஒழுங்கு இருந்தது.
2 அதற்குப்பின், தேவன் வேறு ஒரு ஒழுங்கை விரும்பினார், பிறகு வேறொரு ஒழுங்கு, பிறகு வேறொரு ஒழுங்கு, வானத்தையும், பூமியையும், தண்ணீரையும், மரங்களையும், பரிமாணங்களையும் மற்றும் மனிதனை படைக்கும் வரை. மேலும் அங்கு ஒரு புதிய ஒழுங்கு இருந்தது.
3 மேலும் இரட்சிப்பின் திட்டத்திலும், இந்த வேலை பூமியில் தொடர்கிறது. ஒரு புதிய தலைமுறை பூமியில் எழும்பும்போது, ஒரு புதிய காரியங்களில் ஒழுங்கானது எதிர்பார்க்கப்படுகிறது, ஒரு புதிய தரிசனத்தோடு மற்றும் தேவனுடைய சித்தத்தின்படி பாவத்தினுடைய ஒரு புதிய வரையறையும் கூட எதிர்பார்க்கப்படுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].
4 ஆபிரகாம் தன் சொந்த சகோதரியை திருமணம் செய்து கொள்ள கூடும். ஆனால் மோசேயினால் கூடாது. மோசே இதை சொன்னார் ஆனால் நான் இதை உங்களுக்கு சொல்கிறேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லக்கூடும். தேவனுடைய ஊழியனாகிய எசேக்கியா, தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசே செய்த வெண்கலச் சர்ப்பத்தை உடைக்கக்கூடும். நீங்கள் பார்க்கிறீர்களா?
5 எனவே, அந்த இரட்சிப்பு ஒரு மதத்தையோ அல்லது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு ஒழுங்கின் மீது இல்லாமல் ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மூலமாக தேவனுடைய வெளிப்பாட்டினால் இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].
6 கர்த்தராகிய இயேசு: ஒரு ஸ்திரீயை இச்சையோடு நோக்கிப்பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் விபசாரம் செய்தானென்று சொன்னபோது, ஒரு பிசாசின் பிள்ளை: "சுருள்களில் எங்கே எழுதி இருக்கிறது என்று கேட்கக் கூடும்?" ஆனால் ஒரு புதிய ஒழுங்கின் தலைவராக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பூமியில் அனுப்பப்பட்டார் என்பது தேவனுடைய பிள்ளைக்கு தெரியும். நீங்கள் பார்க்கிறீர்களா?
7 நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் எந்த ஒரு உண்மையான ஊழியமும் முந்தைய ஒழுங்கை முடிவுக்கு கொண்டுவரும் மற்றும் பூமியின் மேல் புதிய ஒழுங்கை அறிமுகம் செய்கிறது. அதனால் இந்த புதிய தீர்க்கதரிசி செய்தியாளன் என்ன சொல்லப்போகிறான் என்று எதிர்பார்த்து அனைத்து சபைகள், ஆசாரியத்துவ குருக்கள், போதனைகள் மற்றும் பூமியின் மீதுள்ள அனைத்து எபேசியர் 4:11 இன் ஊழியங்கள் பயனற்றதாக ஆனது.
8 இந்த புதிய தீர்க்கதரிசி- செய்தியாளனின் வருகையில் பூமியிலுள்ள ஒவ்வொரு அப்போஸ்தலனும், தீர்க்கதரிசியும் சுவிசேஷகனும் அல்லது போதகனும் அவன் தேவனிடத்திலிருந்து வந்திருந்தாலும் வரவில்லை என்றாலும் இந்த தீர்க்கதரிசி செய்தியாளன் அவனை அடையாளம் கண்டு புதிதாக பிரதிஷ்டை செய்யாமல் அவன் பயனற்றதாக மாறுகிறான். ஆனால் அவர்கள் புதிய கட்டளைக்குள் நுழையவில்லையென்றால், அவர்கள் இறந்துவிட்டார்கள், இப்பொழுது தேவனுடைய எதிரிகள் போல் நடந்துகொள்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].
9 அவர்கள் அப்பொல்லோ மற்றும் அவருடைய சீஷர்கள் போல தேவனுடைய பரிசுத்த சித்தத்தில் இருக்கலாம், ஆனால் அனைவரும் வரவேண்டிய ஒரு புதிய ஒழுங்கிற்க்காக பவுல் தான் பூமியின் மேல் அனுப்பப்பட்ட ஒரு தலைவன் என்று அவர்கள் இனங்கண்டு கொள்ளவில்லை என்றால் எல்லோரும் தேவனுடைய பார்வையில் மரித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பூமியிலிருந்து அழிக்கப்பட தகுதியுள்ளவர்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].[Kc.67V15]
10 கொள்கையளவில், ஒரு தீர்க்கதரிசியின் ஊழியத்திற்குப் பிறகு, நோவாவின் நாட்களில் இருந்ததை போல தம்மை நம்பாதவர்களை தேவன் அழிக்க வேண்டியிருந்தது. கடைசியான நியாயத்தீர்ப்பு இல்லாமல் உலகம் தொடர வேண்டும் அல்லது நரகம் வர வேண்டுமெனில், அதை தான் தேவன் செய்வார். ஒரு தீர்க்கதரிசியின் ஊழியத்திற்குப் பிறகு, அவரில் விசுவாசம் வைக்காத அனைவரையும் தேவன் அழிக்க வேண்டும்.
11 நோவாவின் ஊழியத்திற்குப் பிறகு, அனைத்து கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ சபைகள் மற்றும் ஏனோக்கினுடைய சபைகள் , அதாவது, பிரன்ஹாமிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்" என்கிறார்கள்]. அது ஏன்? ஏனெனில் அவர்கள் பிசாசின் பிள்ளைகள். தேவன் அவர்களை பூமியில் வாழ அனுமதித்தால், நோவாவின் காலத்திலே ஏனோக்கு அல்லது நோவா எப்பொழதும் எங்களுடைய தீர்க்கதரிசி என்று கூறியிருப்பார்கள். இது தான் தலைமுறை தலைமுறையாக நடந்தது மற்றும் வில்லியம் பிரான்ஹாம் ஏற்கெனவே இறந்து விட்ட பிறகு இன்று பிரன்ஹாமிஸ்டுகளிடம் இது தான் நடக்கின்றது.
12 தான் அறிந்திறாத ஒரு தலைமுறைக்கு வில்லியம் பிரான்ஹாம் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக இருக்க முடியும்? தேவன் அதைச் செய்ததாக வேதாகமத்தில் ஒரு பத்தியை எனக்கு காட்டுங்கள். நோவாவின் நாட்களில், ஏனோக்கு தீர்க்கதரிசி என்று எனக்குக் காட்டுங்கள். எரேமியாவின் காலத்தில் மோசே தீர்க்கதரிசி என்று எனக்குக் காட்டுங்கள். பவுலின் நாட்களில் யோவான் ஸ்நானகனா அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவா யார் தீர்க்கதரிசி என்று எனக்குக் காட்டுங்கள். வில்லியம் பிரான்ஹாமின் காலத்தில், மார்ட்டின் லூதரே தீர்க்கதரிசி என்று எனக்கு காட்டுங்கள். ஒரே ஒரு பத்தியை எனக்கு காட்டுங்கள். உங்களால் முடியாது! இன்னும், நீங்கள் அதை செய்கிறீர்கள். ஆனால் நீ ஏன் அதை செய்கிறீர்கள்? ஏனென்றால் நீங்கள் பிசாசின் பிள்ளைகள். [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமென்!" என்கிறார்கள்].
13 ஆனால் வில்லியம் பிரான்ஹாம் தாமே "தெய்வீக சுகமலித்தல்" என்ற பிரசங்கத்தில் 233 பத்தியில் கூறுகிறார், "'நான் வேறொரு தலைமுறையினருடன் நிற்கமாட்டேன். அவர்களை நியாயந்தீர்க்க நான் எதையும் உடையவனாக இல்லை. நியாயத்தீர்ப்பில் நான் அவர்களுடன் நிற்கவேண்டியது இல்லை. ஆனால் நான் எந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் வாழ்ந்திருக்கிறேனோ அவர்களுடன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டியவனாக இருக்கிறேன். ஆமேன். மேலும் வில்லியம் பிரன்ஹாம் தொடர்ந்து கூறுகிறார் : "'அங்கே உயிர்த்தெழுதலில் அது அந்தவண்ணமாகத்தான் கணக்கிடப்படும். என் நாட்கள் நிறைவுருகிறபோது, நான் என்னுடைய சிறந்ததை செய்தேன், மேலும் நான் தேவனின். உழியக்காரனேயானால், நான் சென்றுவிடுகிற அன்னாளில் தேவன் அவனை மற்றொரு மனிதனை மேலே. எழும்பப்பண்ணுவார். [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்]. வில்லியம் பிரன்ஹாம் அதை கூறவில்லை என்றாலும் அது அப்படிதான்!
14 யோசுவாவின் காலத்தில் மோசே தீர்க்கதரிசியாக இருக்க முடியாது! எலிசாவின் காலத்தில் எலியா தீர்க்கதரிசியாக இருக்க முடியாது! மேலும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் காலத்தில் வில்லியம் பிரான்ஹாம் தீர்க்கதரிசியாக இருக்க முடியாது! இது சாத்தியமில்லை! வில்லியம் பிரான்ஹாம் பூமியில் இல்லை. நீங்கள் வில்லியம் பிரான்ஹாமை அறிந்ததில்லை.
15 வில்லியம் பிரான்ஹாமிற்கு நம்முடைய நேரம் தெரியாது. வில்லியம் பிரான்ஹாம் இணையம் மற்றும் எல்லாவற்றையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், உங்கள் தீர்க்கதரிசி உங்களோடு உயிர் வாழும் மனிதனாக இருக்கிறார். இது எப்போதும் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது.தேவன் உயிரோடு இருக்கிறார், மேலும் உயிர் வாழும் மனிதனைக் கொண்டு பூமியின் மேல் பேசுகிறார். [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமென்!" என்கிறார்கள்].
16 ஒரு மரித்த தீர்க்கதரிசியின் புத்தகம் ஜனங்களை தேவனிடத்திற்கு வழிநடத்த கூடுமானால், மோசேக்கு பிறகு உலகத்தின் முடிவு மட்டும் ஒருபோதும் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி இருக்க மாட்டார். ஏவாளுடன் சர்ப்பமானது சயனிக்கவில்லை என்றால், பூமியிலுள்ள லூத்தரன்கள் எவரும் இருந்திருக்க மாட்டார்கள். பூமியில் எந்த மெத்தடிஸ்டுகளும் இருந்திருக்க மாட்டார்கள். பூமியின் மேல் பிரன்ஹா மிஸ்டுகள் இருந்திருக்க மாட்டார்கள். சத்துருவானவன் அதை செய்தான் மத்தேயு 13: 24-30 அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].
17 நோவாவின் ஊழியத்திற்கு பிறகு, மதுவெறியரும், விலைமாதர்கள், இரவுநேர கேளிக்கைவிடுதி மேலாளர்கள் மற்றும் டாமி ஆஸ்போர்ன், மோரிஸ் செருளோ, பென்னி ஹின் மற்றும் அனைவரும் அதே அழுகிய நீரின் கால்வாய்களில் போராடினார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்]. ஜலப்பிரளயம் அவர்களைத் தாக்கியபோது நசரேயனாகிய இயேசுவைப் பற்றி மற்றவர்கள் முழுமையாகப் புகழ்ந்து பாடினார்கள். வெள்ளம் படையெடுத்து வந்த பொழுது மற்றவர்கள் நாசரேத்து ஊரின் இயேசுவை துதித்து ஆராதித்தார்கள்! மற்றவர்கள் முழு அபிஷேகம் அல்லது சுவிசேஷத்தில் இருந்தார்கள்! மற்றவர்கள் அவர்களுடைய நாற்பதாவது நாள் உண்ணாவிரதத்தில் மற்றும் ஜெபத்தில் இருந்தார்கள்!
18 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தன்னுடைய பணியை நிறைவேற்றும் போது இவ்விதமாகத்தான் காரியங்கள் நடைபெற வேண்டும். சோதோம் கொமோராவை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? லோத்து மற்றும் அவரது குழு வெளியே வந்தபோது, அக்கினியானது மகத்தான அரசியல்வாதிகள் மற்றும் சோதோம் மற்றும் கோமொர்ராவின் மத ஜனங்கள் மீது விழுந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].
19 மேலும் அது சரீரப்பிரகாரமாக நடக்கவில்லை என்றாலும், அது ஆவிக்குரிய பிரகாரமாக நடக்கிறது. ஜீவியத்தில் ஒரு நீட்டிப்பு அவர்களுடைய சரீரத்திற்கு வழங்கப்படுகிறது, ஆனால் ஆவிக்குரிய வகையில் அவர்கள் இறந்துவிட்டார்கள்.[ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].
20 மோசே எகிப்திலிருந்து வந்தபோது, எவரெல்லாம் அவனோடு கூட வெளியேறினார்களோ, அவன் சிறப்பினால் ஒரு எகிப்தியனோ இல்லையோ, அவன் தேவனுக்கு முன்பாக ஒரு யூதனாகவும் ஜீவன் உள்ளவனாகவும் இருக்கிறான். அதற்கு வெளியே, இது தவிர, பார்வோன் மற்றும் அவனுடைய இராணுவம் மற்றும் பூமியின் அனைத்து ஜனங்களும் மோசேயின் அதே ஆவியில் இல்லை, அவர்கள் பிசாசின் குமாரர்களும் குமாரத்திகளாக அல்லது பிசாசின் குமாரர்களும் குமாரத்திகளின் தோளில் இருந்தார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].ஒவ்வொரு முறையும் தேவனுடைய தீர்க்கதரிசி பூமியை விட்டுவிட்டு கடந்து செல்லும் பொழுது ஒரு புதிய ஒழுங்கு எழும்புவதற்க்காக இதுதான் ஆவிக்குரிய ரீதியில் நடக்கிறது?
21 மோசே தன்னுடைய ஊழியத்தை செய்ய ஆரம்பித்தபோது, பூமியில் ஒரு புதிய ஒழுங்கு நடைபெறுகிறது. இது யூத மதமாக இருந்தது, இந்த ஒழுங்கில் தான் ஜனங்கள் உண்மையான தேவனை தேட வேண்டியதாக இருந்தது. ஏசாயா தனது ஊழியத்தை ஆரம்பிக்கையில், அது ஒரு புதிய ஒழுங்காக இருந்தது மற்றும் இந்த ஒழுங்கில்தான் ஜனங்கள் ஒரு உண்மையான தேவனை தேட வேண்டியிருந்தது. யோவான் ஸ்நானகனின் செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றால் அது ஆபகுக் புத்தகத்திற்கும் கூட சமமாக இருந்திருக்க முடியாது. ஆனால் தேவன் அவரை புதிய ஒழுங்கின் தலைவராக பூமியில் அனுப்பினார்; மேலும் தேவன் உடையவர்கள் எவராயிருந்தாலும் அவனிடத்தில் வர வேண்டியதாக இருந்தது. அவன்தான் நித்திய ஜீவனின் வழியாக இருந்தான். [ஆசிரியர் குறிப்பு: சபை, "ஆமேன்!" என்கிறார்கள்].
22 நான் தேவனின் பிள்ளை என்றால், எனக்கு புரிகின்றதான, ஒரு சபை தீர்க்கதரிசி, ஒரு அப்போஸ்தன், ஒரு சுவிசேஷகன் அல்லது ஒரு ஆசாரியனின் தெளிவான ஆர்ப்பாட்டங்களை விட, எனக்கு புரியவில்லை என்றாலும், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனின் கடுமையான, அவமதிப்புகொண்ட, சிக்கலான மற்றும் தெளிவற்ற வெளிப்பாடுகளுக்கு செவி கொடுப்பதையே தெரிந்துகொள்ளுவேன். ஏனென்றால் தேவனுடைய வார்த்தை ஒரு ஆசாரியனுக்கு வரவில்லை, ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனுக்குத் தான். ஒரு ஆசாரியனின் மகிமை வாய்ந்த வெளிப்பாட்டை பற்றி எனக்கு அக்கரை இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
23 ஓசியா 12:14 மற்றும் 2 நாளாகமம் 20:20 ஒரு ஆசாரியனை நம்பவேண்டுமென்று என்னிடம் கூறவில்லை. மேலும் எபேசியர் 4:11 என்பது புதிய உடன்படிக்கையின் ஆசாரியத்துவ ஒழுங்காக இருக்கிறது மேலும் ஒரு உண்மையான போதகன், தீர்க்கதரிசி, சுவிசேஷகன் அல்லது குரு தனது காலத்தின் தீர்க்கதரிசி-செய்தியாளன் கூறியவற்றால் ஜனத்தை விழிப்படையச்செய்ய வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபை " ஆமேன் " என்று கூறுகிறது].
24 அவர் தீர்க்கதரிசிகளுடைய ஆவிகளின் தேவனாக இருக்கிறார் என்று வெளிப்படுத்துதல் 22:6 கூறுகிறது, புதுப் பிறப்புக்காக இந்த தீர்க்கதரிசி செய்தியாளனின் தண்ணீர் ஞானஸ்நானத்தினாலும், ஆவியினாலும் (Spirit) புதுப்பிறப்பு அடையவேண்டும் மற்றபடி நீங்கள் மறுபடியும் பிறக்க முடியாது. அதற்கு வெளியே, வேறு எந்த புதிய பிறப்பும் அர்த்தமற்றது! ஒரு தண்ணீர் ஞானஸ்நானத்துடன் பூமிக்கு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி-செய்தியாளன் இல்லையென்றால், "ஜலத்தினால் பிறப்பது" பற்றி நாம் பேசமுடியாது.
25 மேலும், செய்தியின் ஆவியை பெற்றுக்கொள்வதின் மூலமாகத்தான் நீங்கள் செய்தி கூறுவது என்னவென்று புரிந்துகொள்ளவும் அதை கைக்கொள்ளவும் முடியும். உங்களால் காணமுடிகிறதா? அது எளிது!மேலும் நீங்கள் தேவனின் பிள்ளையாக இருந்தால், நீங்கள் ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு ஞானஸ்நானத்தால் அல்லது பரிசுத்த ஆவியால் பிறக்கக்கூடாது. நீ ஒரு கோட்பாட்டிலோ அல்லது பேய் செய்தியிலோ பிறக்கக்கூடாது; அது எவ்வளவாக உண்மையாய் இருக்கிறது என்பது ஒரு பொருட்டல்ல.
26 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனிடம் இருந்து வராத அனைத்தும் நரகத்திற்குச் செல்வதற்கான பாஸ்போர்ட்டாக (கடவுச்சீட்டாக) இருக்கிறது. பிறகு ஏதாவது சத்தியத்தை யாராவது உங்களுக்கு அறிவிக்கிறார் என்றால், அவனை நோக்கி: "எந்த தீர்க்கதரிசி செய்தியாளன் மூலம் தேவன் அதை வெளிப்படுத்தினார்?" என்று கேளுங்கள். மேலும் அந்த தீர்க்கதரிசி செய்தியாளனின் பெயரை கூறுவதில் அவன் வெற்றி அடையவில்லை என்றால், அது சத்தியமாக இருக்கிறதென்று அவன் எவ்வளவாக கூறுகிறான் என்பது ஒரு பொருட்டல்ல, அது பிசாசாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
27 புதுப் பிறப்பு என்பது ஒரு மனரீதியான உணர்ச்சியோ அல்லது சரீரப்பிரகார உணர்ச்சியோ அல்லது வாழ்க்கையின் மாற்றமோ அல்ல, ஆனால் முதலில் அது கொண்டிருப்பதென்னவென்றால், தீர்க்கதரிசி - செய்தியாளனின் தண்ணீர் ஞானஸ்நானத்தினால் பிறப்பதும், தேவன் இந்த தீர்க்கதரிசிக்கு அருளின செய்தியின் ஆவியினால் பிறப்பதுமாகும். நீங்கள் காண்கிறீர்களா? புதுப் பிறப்பு என்பது, சாதாரணமாக நீங்கள் இந்த தீர்க்கதரிசி-செய்தியாளன் மூலம் பூமியில் தேவனால் நிறுவப்பட்ட புதிய ஒழுங்கில் பிறக்கிறதாக இருக்கிறது.
28 மேலும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் எப்பொழுதும் முன்னதாக ஒரு தெய்வீக அழைப்பு மற்றும் பணிநியமனத்தினால் ஒரு ஞானஸ்நானத்துடனும் ஒரு செய்தியுடனும் வருகிறான். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது]. உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனே உலகத்தின் ஒளி, அவன் மூலமாயல்லாமல் எவரும் இரட்சிக்கப்பட முடியாது.
29 வில்லியம் பிரன்ஹாம் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, அது ஒரு புதிய ஒழுங்காக இருந்தது. அந்த ஒழுங்கில் மட்டுமே ஜனங்கள் தேவனை தேட வேண்டியவர்களாக இருந்தனர். மேலும் இன்று நடுராத்திரி சத்தம் முழங்குகையில், ஜனங்கள் வில்லியம் பிரன்ஹாமின் தேவனை தேட வேண்டியது அங்குதான். அது ஏன்? ஏனெனில் அவர் ஏழு பொன்விளக்குகளின் நடுவிலே உலாவுகிறவராக இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவர் அங்கே அமெரிக்காவில் சாயங்கால நேரத்தில் இருந்தார் ஆனால் இப்போது, நாம் நடுராத்திரியில் இருக்கிறோம், அவர் இங்கே ஆப்பிரிக்காவில் இருக்கிறார்.
30 மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரமாயிரமான பரிசேயர்கள், சதுசேயர்கள், செலோத்தேயினர்கள், ஹெலனிஸ்டுகள், ஏரோதியர்கள், எசென்சிகள் தங்கள் ஜெப ஆலயங்களில் முறுமுறுத்துக்கொண்டிருந்தார்கள்; அது ஐந்தாவது பரிமாணமாக, திகில் கணவுகளின் பிராந்தியமாக இருந்தது மேலும் அவர்களின் மகிழ்ச்சி பைத்தியக்காரர்களின் மகிழ்ச்சியைப் போலவே இருந்தது. அவர்கள் அக்கினிக்கு விதிக்கப்பட்ட ஒட்டவைக்கப்பட்ட ஒட்டுக்களாக இருந்தனர்!
31 பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கிறிஸ்தவமயமாதல் வரைக்கும் ஒரு புதிய ஒழுங்கை அறிவித்தனர். கிறிஸ்தவம் அதுதானே யூத மார்க்கத்திற்கு பதிலாக ஒரு புதிய ஒழுங்காக இருந்தது.
32 யோவான்ஸ்நானகன் பூமியிலே வந்தபோது, அது ஒரு புதிய ஒழுங்காக இருந்தது; தேவனால் உண்டான எவனும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூட, அவனிடம் வரவேண்டியவராக இருந்தார். பரிசேய மற்றும் சதுசேய தலைவர்களிடமிருந்து பலர் அவரது ஞானஸ்நானத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. உங்களால் காணமுடிகிறதா? அனைத்தும் உன் வித்தை சார்ந்திருக்கிறது! அவர்கள் அனைவரும் யோவானண்டைக்கு வர வேண்டியிருந்தது. நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவராக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, உங்களை அவனிடத்திற்கு கவர்ந்திழுக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. அது உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பாகவே தேவன் அவரே ஏற்படுத்தின ஒரு காரியமாக இருக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? பரிசேயரும் சதுசேயரும் மென்மையானவர்களாக இருந்தார்கள், ஆனால் யோவான் ஸ்நானகனால் அவர் தாமே நிறுவின ஒழுங்கை மட்டுமே தேவன் அடையாளம் கண்டுகொண்டார்.
33 பவுல் காட்சியில் வந்தபோது கூட, அவன் யோவான் ஸ்நானனுடைய சீஷர்களை மறு-ஞானஸ்நானம் எடுக்கவைத்தான் ஏனெனில் அக்காலத்திலே பவுல் ஒரு புது ஒழுங்கின் தலைவனாக இருந்தான் மேலும் ஒருவர் ஞானஸ்நானம் மூலம் அதில் பிரவேக்கிறார். பூமியின்மீதெங்கும் மத்தேயு 25:6 ஒரு புது ஒழுங்காக இருக்கிறது என்று கூறும்படிக்கு இந்த சகலத்தையும் நான் ஆய்வு செய்தேன். ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குள் அது சம்பவிக்கும், பாதிரியார்கள், போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் பெருமளவில் மறைந்து விடுவார்கள், இன்று நீங்கள் சுவரொட்டிகளில் பார்க்கும் பலர் வர்த்தகர்களாக மாறுவதற்கும் அல்லது நிறுவனங்களில் வேலை தேடுவதற்கும் முயற்சி செய்வார்கள். அவர்கள் வேலைக்காக காத்திருப்பார்கள், ஆனால் செய்தியானது பூமியின் எல்லைகள் பரியந்தம் சிறப்பாக நிறுவப்பட்டிருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
34 நடுராத்திரி சத்தத்தை அறிக்கைபண்ணாதவன் எவனோ எவனோ அவன் தனது விசுவாசத்தை அறிக்கைபண்ணுகையில் வெட்கமடைவான், அது சம்பவிக்கும் ஏனெனில் நடுராத்திரி சத்தத்துக்கு புறம்பாக அவர்கள், சாத்தானை ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று இந்தச் செய்தி சொல்லுகிறது.
35 புது ஒழுங்கினிமித்தம் சில சபைகளும் கூட டார்பி பாதிப்புடனும் வெளிப்படையான பாவ அறிக்கை போன்று நடுராத்திரி சத்தத்தின் சில உபதேசங்களுடனும் எழும்பும்.
36 அது அவ்விதமாகத்தான் இருக்கும் ஏனெனில் ஒரு புதிய ஒழுங்கினால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான், அதனால்தான் அவன் எப்போதும் தனது அஞ்ஞான மார்க்கத்தை இப்போது வரை மாற்றிக்கொண்டே வந்துள்ளான்! மேலும் கிறிஸ்தவ சகாப்தத்தில், சகல ரோமானிய அஞ்ஞான கொள்கைகளும் கிறிஸ்தவமயமாக்கப்பட்டுள்ளதை நீங்கள் காண்கிறீர்கள்! ஆகையால் இதோ, விழிப்பாயிருங்கள், கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்!
--:--
--:--