1பூமியின் மேல் ஒரு உண்மையான தீர்க்கதரிசியை தேவன் மீண்டும் அனுப்பும்போது, அவனுடைய ஊழியம் வேதாகமத்தில் நன்கு அடையாளம் காணப்படும். அவன் தனது செய்தியை பிரசங்கிக்க துவங்குவான், முதாலவதாக தனது அழைப்பு மற்றும் பணிநியமனத்தோடு துவங்குவான்; அவன் பெருகவேண்டும், நான் சிறுக வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்கிறார்கள் ]
2நடுராத்திரி சத்தத்தின் நிழலானது பிரன்ஹாமிஸடு ஆலோசனை சங்கம் மற்றும் குருமார்களின் மன்றத்தின் மேல் சுற்றுவது ஒருபோதும் நிறுத்தப்படாமல் இருப்பதை நாம் காணலாம். எவால்டு ஃபிராங்கின் ஒவ்வொரு சுற்றறிக்கை கடிதமும் நடுராத்திரி சத்தம் பற்றி பேசவும் அல்லது நடுராத்திரி சத்தம் கூறுகிற காரியங்களுடன் முரண்படவும் முயற்சி செய்கிறதையும் இப்போது நாம் காணலாம். உதாரணமாக டிசம்பர் 2007 ன் சுற்றறிக்கை கடிதத்தைப் பார்க்கவும் ...
3மத்தேயு 25:9-ல் எண்ணெய் விற்கிறவர்கள் யார்? எனக்கு தெரியாது, நான் அதை அறிய எந்த ஆராய்ச்சியும் செய்ய மாட்டேன் ஆனால் ஏப்ரல் 24, 1993 ன் தேவதூதனானவர் அதை என்னிடம் வெளிப்படுத்தும் நாளில், அது எவராலும் முரண்பட முடியாத ஒரு நித்திய சத்தியமாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன் " என்று கூறுகிறது].
4நல்லது "காரியங்களை அமைக்கும் மேகம் " என்னும் பொருளில் இன்று நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். இந்த விதமாகவே தேவன் எப்பொழுதும் செயல்படுகிறார் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
5ஏழு நாட்களில், தேவன் ஒவ்வொரு காரியத்தையும் அதன் ஸ்தானத்தில் வைத்திருந்தார், ஆனால் ஆதாமின் மணவாட்டியான, ஏவாள் அதற்குப் பிறகு வந்தாள். மேலும், இந்த பக்கத்தில், திருச்சபையின் ஏழு காலங்களுக்கும், பூமிக்குரிய ஏழு செய்தியாளர்களுக்கும் பிறகு, நடுராத்திரி சத்தத்தோடு எஸ்தர் தோன்றுகிறாள். உங்களால் காணமுடிகிறதா? ஒவ்வொன்றும் அதன் ஸ்தானத்தில் அமைக்கப்பட்ட பிறகு அவள் தோன்றுகிறாள்! அதைப் பற்றித்தான் நான் ஒரு கணம் நான் பேச போகிறேன் ...
6நல்லது! இன்று காலை, நான் கூறியதுபோல், "மேகம் காரியங்களை அமைக்கிறது" என்ற பொருளில் பிரசங்கிக்க விரும்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? இப்போது, இதை பாருங்கள்: தேவனின் மனதில் உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பே ஜலத்தின் மேல் மீட்பதற்கான திட்டத்தை விளக்குகிற, அசைவாடுகிற தேவனின் ஆவியானது - தேவனின் ஏழு ஆவிகள் - இருந்தன. தேவனுடைய மீட்பின் திட்டத்தை தோற்கடிப்பதற்காக பிசாசின் ஆவியும் அங்கே இருந்தது, அதனால் தேவன் மீட்பின் திட்டத்தை வெளியே கொண்டுவரும் போது, வெளிப்படுத்துதல் 12:14 ல் நாம் அதை காண்கிறதுபோல அவன் அதை தோற்கடிக்க முயலலாம்.
7பிறகு ஆதியாகமத்தில், அதை வெளியே கொண்டு வர தேவன் நித்தியத்திலிருந்து வெளிப்பட்டார். அது இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது: "இந்த காரியம் உண்டாகக்கடவது என்று தேவன் உரைத்தார்!..". "அந்த வேறொரு காரியம் உண்டாகக்கடவது என்று தேவன் உரைத்தார்... அது அப்படியே ஆயிற்று! ..." உங்களால் பார்க்க முடிகிறதா?இப்படியாக, தேவனுடைய மனதில், மேகத்தினால் எல்லாமும், நான்கு நதிகளும் கூட அமைக்கப்பட்டிருந்தது, இருப்பினும் ஆதாமும் ஏவாளும் வீழ்ந்தனர். இப்படியானபோதிலும், தேவன் இந்த திட்டத்தை செயல்படுத்தினார், மேலும் ஆதியாகம புத்தகத்தில், நான்கு நதிகள் அமைக்கப்பட்டபோதிலும் ஆதாமும் ஏவாளும் சர்ப்பத்தால் வீழ்ந்தனர். தேவன் திட்டத்தை மாற்றியிருந்தால் அல்லது அநேக திட்டங்களை முயற்சி செய்திருந்தால், அவர் தேவனாக இருக்க முடியாது; “அவர் இருக்கிறவர்” என வேதாகமம் கூறுகிற பிரகாரமாக அவர் இருக்க முடியாது! உங்களால் பார்க்க முடிகிறதா?
8மேலும் ஆதியாகமத்திற்குப் பிறகு, யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் ஆகிய புத்தகங்கள் அங்கே அமைக்கப்பட்டிருந்தன, ஆனால் யூதர்கள் அனைவரும் வனாந்தரத்தில் கொள்ளிவாய்ச் சர்ப்பத்தால் (fiery serpent) வீழ்ந்தனர். பின்னர், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய சுவிசேஷங்கள் நிலைபடுத்தப்பட்டு, கர்த்தர் வெண்கலப் சர்ப்பத்தைப் போல் சிலுவையில் உயர்த்தப்பட்டார். ஆனால் அங்கே ஒரு உயிர்த்தெழுதலும் பிறகு யோசுவாவின் புத்தகத்தைப் போல அப்போஸ்தலர்களுடைய நடவடிக்கையின் ஒரு சிறிய புஸ்தகம் அங்கு இருந்தது. நான்கு சுவிசேஷங்களின் மீது நிறுவப்பட்ட திருச்சபை ரோமில் விழவேண்டியிருந்தது, அங்குதான் பழைய பாம்பாகிய, சாத்தான் தனது சிங்காசனத்தில் இருந்தான். ஆனால் அது இன்னும் முடிவுக்கு வரவில்லை.
9அதன்பிறகு, திருச்சபை லவோதிக்கேயாவை அடைந்து, சுவிசேஷக சபைகளிலுள்ள குறிசொல்லுதலின் அபிஷேகங்கள் தான் மத்தேயு 25:9 ன் எண்ணெய் என்று சாயங்கால நேரத்தில் சொல்வதனால் அந்த பழைய சர்ப்பத்தை போற்றினது. சுவிசேஷக சபைகளின் மாயமந்திர முறைமைகள் மற்றும் மாயவித்தைகளுக்கு முன் உண்மையான சபை வஞ்சிக்கப்பட்டது.
10தேவன் பல முறை இந்த திட்டத்தை வெளியே எடுத்தது போலவே, பல முறை சர்ப்பம் அதை தோல்வியடைய செய்தது. ஆனால் இறுதியில், பூமியிலிருந்து ஒரு ஜனம் எழும்பினது, இந்த சர்ப்பத்தின் முகத்திற்கு விலகி தூரமாக கொண்டு செல்லப்படுவதற்காக, முதலாவதாக பெருங்கழுகின் இரண்டு செட்டைகளை அது பெற்றுக்கொள்கிறது. பிறகு பூமியில் அமைக்கப்படபோகிற ஐந்தாவது இராஜ்ஜியத்தில் சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்பட்டு, புடமிடப்பட்டதாய் விளங்கும். மேலும் அது பரிசுத்தவான்களை மீண்டும் நிதியத்துக்கு கொண்டுவரும்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. இந்த நேரத்தில், சர்ப்பமானது அதன் தந்திரத்தோடும் வஞ்சிக்கிற வல்லமையோடும் வருகின்ற போதிலும், அது யுத்தம் பண்ண வேண்டியுள்ளது, ஏனெனில் இந்த ஜனங்கள் அதன் அனைத்து அம்சங்களிலும் அதை அறிந்தவர்களாக உள்ளனர்.
11தேவன் இந்த காரியத்தை செய்யும்போது இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் பூமியிலே இருக்கும் என்று வேதாகமம் கூறுகிறது. தானியேல் 2:44 "அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை அமைப்பார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி துண்டுகளாக்கி, பட்சித்துப்போடும், தானோ என்றென்றைக்கும் நிற்கும்." என்று கூறுகிறது.
12மற்றொரு பத்தி கூட, தானியேல் 7:17 "அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு இராஜாக்கள். ஆனாலும் உன்னதமானவருடையை பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைப் பெறுவார்கள், அவர்கள் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களுக்கும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்" என்று கூறுகிறது.
13கிழக்கத்திய கத்தோலிக்க சபை, ரோமன் கத்தோலிக்க சபை மற்றும் அனைத்து கத்தோலிக்க போக்குகளும் உட்படுகிறதான கத்தோலிக்க சபை தான் முதலாவது மிருகமாக இருக்கிறது. இரண்டாவது மிருகம், அது பழைய லூதரன், பாப்டிஸ்டு, அனாபப்டிஸ்டு, ஸ்விங்கிலியன், கால்வினிஸ்டு போக்குகள் இன்னும் மற்றவை உட்படுகின்றதான புரோட்டஸ்டண்டுகள் தான்.
14மூன்றாவது மிருகம், அது மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள், முகாம்கள் மற்றும் பிரார்த்தனை குழுக்கள், தியான மையங்கள், அரசு சாரா கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் முதலியன உட்பட அனைத்து சுவிசேஷக சபைகளின் போக்குகள் தான். மேலும் பெயரற்றதான நான்காம் மிருகம், எந்த விதிவிலக்கும் இல்லாமல் அது அனைத்து பிரன்ஹாமிஸ்டு போக்குகள் தான். அஞ்ஞானிகள் அவர்களை: "பெயரில்லாத சபை" என்கிறார்கள்...
15நீங்கள் பார்க்கிறீர்களா ? பவுலோடு முதலாவது காலத்தில் கிறிஸ்துவம் துவங்கியது போலவும், மோசேயோடு முதலாவது காலத்தில் யூதமார்க்கம் துவங்கியது போலவும், அனைத்தும் வார்த்தையோடு முதலாவது காலத்தில் ஏதேனில் துவங்கியது. ஏழாவது நாளில், தேவன் ஓய்ந்திருந்தார். தொடர்ந்து எட்டாவது நாளில் ஏவாள் காட்சிக்கு வந்தாள், அவள் புது ஒழுங்கின் தாயாக இருந்தாள் மேலும் தேவனுடைய சிந்தையில் மேகத்தினால் அமைக்கப்பட்டிருந்த எல்லாவற்றிற்கும் ஏற்ப பிசாசினால் ஏவாளிடம் அணுக முடிந்தது. ஆனபோதிலும், மீட்பிற்கும் சுத்திகரிப்புக்குமான வல்லமையை அவர் கொண்டிருக்கிறதான திட்டம் மிகவும் நல்லது என்று தேவன் கண்டார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
16இவ்வாறு தேவன் ஆதியாகமத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக தமது திட்டத்தை நடப்பித்தார். இந்த பக்கத்தில், பூமிக்குரிய ஏழாவது செய்தியாளனுக்கும், பிரன்ஹாமிஸ்டு வஸ்தியின் அந்த அவமதிப்பிற்கும் பிறகு, அவ்வேழுபேரின் மத்தியிலிருந்து, ஒரு எட்டாவதான அரண்மனை விசாரிப்புக்காரன், ஏகாய் உடன் எஸ்தர் வரவேண்டியிருந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
17ஜாதிகளின் இந்த மணவாட்டியானவள் மீட்புக்கான வல்லமையோடு சுத்திகரிப்பின், வென்மையாக்குதலின் மற்றும் புடமிடப்படுதலின் வல்லமையை சேர்க்க வேண்டும் என்பதை கவனியுங்கள்.
18இந்த மேகமானது காரியங்களை அமைப்பதையும் இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாக போகிறதையும், வேதாகமத்தினூடாக முழுவதுமாக நம்மால் பார்க்க முடியும். இந்த மேகமானது காரியங்களை அமைகிறதை முழு வேதாகமமும் காண்பிக்கிறது. ஆனால் ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில் மோசேயுடன் அதைப் பார்க்க முடிகிறது. பிறகு கடைசியாக ஏழாம் காலத்தில் இந்த பக்கத்தில்தான் நாம் பார்க்க முடியும். டூஸானில் சூரிய அஸ்தமன மலையின்மீது புகைப்படம் எடுக்கப்பட்ட அதை சாயங்கால செய்தியிலிருந்து வந்தவர்களில் அநேகர் பார்த்திருப்பீர்கள். அது என்ன? அது காரியங்களை அமைக்கும் மேகம். நீங்கள் ஆவிக்குரிய கண்களைக் கொண்டிருப்பீர்களேயானால், இந்த மேகம் இங்கிருப்பதை நீங்கள் காண்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
19நீங்கள் பெரிய தீர்க்கதரிசியாகிய மோசேயை அறிந்தும் உணர்ந்தும் இருந்தால், நீங்கள் சிறிய யோசுவாவை அறிந்து பின்பற்றுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. நீங்கள் பெரிய தீர்க்கதரிசியாகிய எலியாவை அறிந்து உணர்ந்திருந்தால், நீங்கள் சிறிய எலிசாவை அறிந்து பின்பற்றுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன் " என்று கூறுகிறது]. நீங்கள் பெரிய தீர்க்கதரிசியாகிய வில்லியம் பிரன்ஹாமை அறிந்து உணர்ந்திருந்தால், நீங்கள் சிறிய தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்பை அறிந்து பின்பற்றுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளும் இந்த வார்த்தைக்கு "ஆமேன்" என்று சொல்லும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
20நீங்கள் ஒரு தேவகுமாரனாக இருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே ஞானஸ்நானம் கொடுத்தவனும், ஸ்திரீகளினிடத்தில் பிறந்தவர்களில் மிகப்பெரியவனுமான, யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றவனாக இருந்தாலும், முன்னாள் கிறிஸ்தவ துன்புறுத்தல்காரனான பவுலால் மறு-ஞானஸ்நானம் பெற நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
21ஆமாம், பிரியமான பிரன்ஹாமிஸ்டுகளே! நீங்கள் வில்லியம் மாரியன் பிரன்ஹாமை அறிந்தும் புரிந்தும் இருப்பீர்களேயானால், நான் யார் என்று உங்களுக்கு சொல்லப்படாமலேயே நீங்கள் என்னை அறிந்துகொள்வீர்கள்! முஸ்லிம்களைப் போலவே, வில்லியம் பிரன்ஹாமின் மரணத்திற்குப் பின்னர் பிரன்ஹாமிஸ்டுகள் பிறந்தனர். அவனது தகப்பன் இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு பிறந்த ஒவ்வொரு குழந்தையும் கள்ளத்தொடர்பில் உண்டான குழந்தையாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
22உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பாக தேவன் தம்முடைய மனதில் நடப்பித்த அதே திட்டம் தான், அவர் ஏதேனில் இறங்கினதும் அதே திட்டமாக இருக்கிறது, மேகமானது நிறைவேற்றுவதும், அவர் தலைமுறை தலைமுறையாக நிறைவேற்றப்போவதும் அதே திட்டம் தான். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! காரியங்களை அமைக்கும் மேகம்.
23ஆதியாகமத்தில் ஆரம்பத்திலே, தேவ ஆவியானது ஜலத்தின் மேல் அசைவாடினதாக வேதாகமம் கூறுகிறது. பகல்நேரத்தில் மேகஸ்தம்பமும் இரவில் அக்கினி ஸ்தம்பமுமாக அது இருந்தது. அது அங்கேயே அசைவாடிக் கொண்டிருந்தது என்றல்ல அல்லது அது அங்கே அசைவாட பயன்படுத்தப்பட்டது என்றல்ல ஆனால் உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பே அந்த வீழ்ச்சியானது ஏற்கனவே தேவனுடைய சிந்தையில் நடந்தேறிவிட்டதனால், மனிதனின் மீட்பிற்காக ஏதாவது செய்ய வேண்டுமென, நமது மீட்பிற்கான காரியங்களை அமைக்கும் நோக்கில் அது அசைவாடிக்கொண்டிருந்தது. உங்களால் காணமுடிகிறதா?
24தேவனுடைய மனதில், பாவம் ஏற்கெனவே நிகழ்ந்தது, சாத்தானும் அவனுடைய தூதர்களும் ஏற்கனவே பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளப்பட்டு, ஏற்கனவே கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளை சொந்தமாக்கிவிட்டனர்.
25ஆதாமும் ஏவாளும் பூமியில் உருவானதற்கு முன்பே, மேகமானது அங்கே அசைவாடிகொண்டிருந்தது! எதற்காக? காரியங்களை அமைக்க! ... மேலும் அது: "இந்தக் காரியம் இந்த விதமாக இருக்க வேண்டும் என்று தேவன் கூறுகிறார்! ...". "அந்த வேறு காரியம் அந்த வழியில் இருக்க வேண்டும் என்று தேவன் கூறுகிறார்! ..." என்றது. அவ்விதமாகவே காரியமானது உருவாக்கவும் அமைக்கப்பட்டது.
26பூமியும், வானங்களும், பொருள், காலம் ... எல்லாம் நம்மை மீட்கும் பொருட்டு அதன் ஒழுங்கில் உள்ளது. அதன் பிறகு, காரியங்களை அமைக்க நிதியத்தில் இருந்து வந்த இந்த மேகமானது, மனிதனை மீண்டும் நித்தியத்திற்கு கொண்டுவரும் வரை காலவேளையிலும் தொடர்கிறது ஏனெனில் அவனது துவக்கம் அங்கிருந்து தான். ஏனெனில் பரிபூரணமானது நித்தியமாகும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
27காலம், பல்வேறு பருவங்களை கொண்ட சீதோஷ்ணம் மற்றும் நீங்கள் காணக்கூடிய அனைத்தும் பாவத்தின் விளைவுகளாக இருக்கிறது.
28தானியேலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, ஒவ்வொரு சந்ததியாரும், ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு தீர்க்கதரிசியும், ஒவ்வொரு செயல்பாடும், பூமியிலே நடக்கும் யுத்தமும் கூட நம்முடைய மீட்பினிமித்தம் பூர்வகால முதற்கொண்டு மேகத்தினால் நிர்ணயிக்கப்பட்டவைகளும் அமைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது. நீங்கள் அறிந்து கொள்கிறீர்களா? மேகமானது காரியங்களை அமைகிறது...