(2003 நவம்பர் 2 ஞாயிறு காலை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரிகோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1நான் டார்பி மற்றும் லூயிஸ் செகண்டின் இடையே ஒரு ஒப்பீடு செய்ய விரும்புகிறேன். 2002-ம் வருடம் முதல், நான் வேதாகமத்தின் பேரிலான வெளிப்பாட்டை பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, இந்த செய்தியோடு தொடர்புகொண்டிருந்த சில தந்திரமான பாஸ்டர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், இந்த செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, டார்பி வேதாகமத்தை அவர்களது சபைகளில் பரிந்துரைக்கத் தொடங்கிவிட்டனர். ஆயினும்கூட, வேதாகமங்களையும் உபதேசங்களையும் அவர்கள் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் மிக முக்கியமான காரியம் என்னவென்றால், பரிசுத்த ஆவி (holy spirit) என்று அவர்கள் அழைக்கிற அந்த குறிசொல்லும் ஆவியை அவர்களால் மாற்ற முடியாது, அது அவர்களை நரகத்திற்கு அனுப்பிவிடும். நீங்கள் பார்க்கிறீர்களா?
22003-ம் ஆண்டிலிருந்து, உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான பக்கங்கள் இணையத்தில் அனுப்பப்பட்டுள்ளன. இதினிமித்தம் அதிகமதிகமான பாஸ்டர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் சுவிசேஷகர்களை டார்பி வேதாகமத்துடன் காண்கிறோம். அவர்கள் தங்களுடைய பெரிய மாந்திரிக புத்தகங்களான லூயிஸ் செகண்டு, ஸ்கோஃபீல்ட், தாம்சன் மற்றும் ஜேம்ஸ் மன்னன்... வேதாகமங்களை கீழே வைத்துவிட்டனர்.
3அதனோடுகூட, இங்கிருந்து நாம் வெளியே துரத்துகிற சில குறிசொல்லும் பிசாசுகள், காரியத்தின் உறைவிடத்தை குழப்பும்பொருட்டு, போய் அதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், என்பதை நான் நம்புகிறேன். சிலர், நான் பிரசங்கிப்பவை சத்தியம் என்று காண்கின்றனர், ஆனால் அதை ஏற்றுக்கொள்வதனால், அவர்கள் அதற்கு என்ன கிரையம் செலுத்த வேண்டிவரும்? ... மத்தேயு 8:28 முதல் 34 வரை நினைவுகூருங்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிற, குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு தகப்பன்மார்களை இயேசு விடுவித்திருந்தார். கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கு மரியாதை செலுத்த, அது ஒரு விழாவாக இருக்கவேண்டியதாக இருந்தது, ஆனால் அச்செயல் அவர்களுடைய ஒருகூட்ட பன்றிகளை கிரையமாகக் கொண்டிருந்ததை கண்ட ஜனங்கள், அதை விரும்பவில்லை, அவர்கள் கர்த்தர் இயேசுவை அங்கிருந்து துரத்திவிட்டனர் ...
4நல்லது! பல சத்தியங்கள் (truths) உள்ளன ஆனால் ஒன்றே ஓன்று மட்டும் தான் சத்தியம் (the Truth). பல தெய்வங்கள் (gods) உண்டு ஆனால் ஒரே ஒருவர் மட்டுமே மெய்யான தேவன் (the true God). பல சபைகள் (churches) உள்ளன ஆனால் ஒன்றே ஓன்று மட்டும் தான் மெய்யான திருச்சபை (the true Church). பல பரிசுத்த ஆவிகள் (holy spirits) உள்ளன ஆனால் ஒன்றே ஓன்று மட்டுமே உண்மையான பரிசுத்த ஆவி (true Holy Spirit). வேதாகம பதிப்புகள் அனேகம் உண்டு ஆனால் ஒன்றே ஓன்று மட்டுமே உண்மையான வேதாகமம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
5செய்தியினுடைய இந்த காரியத்தின் பேரில், ஒரு பெரிய முரண்பாடு பூமியின் மேல் வீசப்பட்டுள்ளது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னிடம்: "தங்கள் மொழியில் டார்பி வேதாகமம் இல்லாதவர்களைப் பற்றி என்ன?” என்பார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? பயப்படவேண்டாம்! உங்களிடமிருந்து வேதாகமத்தை வெளியே எடுத்துவிட நான் விரும்பவில்லை. 1500 ஆண்டுகள், உங்கள் பிதாக்கள் வேதாகமம் உடையவர்களாக இருக்கவில்லை ஆனால் அவர்கள் உங்களைவிட கிறிஸ்தவத்தில் சிறந்த விதத்தில் வாழ்ந்தார்கள்.
6மேலும், டார்பி வேதாகம பதிப்பை வெளியிடுபவர்கள், அதை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நாடுவதற்கு பதிலாக, அவர்கள் அதை திருத்தியமைக்க முயலுகிறார்கள். வரலாற்றில் பதிப்புகளை திருத்தின அனைவரும் ஆவியினால் நிரப்பப்பட்ட, வல்லமையான பிரசங்கிகளாக இருந்தனர். அறிஞர்களான ஒரு கூட்ட மனிதர்கள் அல்ல, ஆனால் ஒரு தனி நபர் மட்டுமே. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
7பழமையான எபிரேயு (Hebrew) இப்போது பேசப்படுவதில்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள், அது உயிர் எழுத்து இல்லாத, இருந்ததிலேயே மிகவும் கடினமான மொழியாகும், ஆனால் என்னால் புரிந்துகொள்ள முடியாத பிறமொழிகளில், ஓர் நாள், இந்த செய்திகள் மொழிபெயர்க்கப்படும், அதுபோல அந்த டார்பி பதிப்பையும் பிறமொழிகளில் அவர்களால் மொழிபெயர்க்க இயலும் என நான் எண்ணுகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். என்னவாயினும், எந்த திருத்தம் செய்வதிலும் நான் நம்பிக்கை கொள்வதில்லை. மொழிகளின் பரிணாமத்திநிமித்தம் விளக்கக் குறிப்புகள் பக்கத்தின் (page) அடியில் தேவைப்படுகின்றது, ஆனால் ஒரு திருத்தம் அல்ல. மொழிகள் எப்போதும் பரிணாமம் அடைந்துகொண்டே இருக்கும்.
8ஆதலால், எனக்கு அருளப்பட்ட கிருபையின்படியே, மத்தேயு 25:6 மற்றும் வெளிப்படுத்துதல் 12:14-ன் இந்த ஊழியம் முதற்கொண்டு, ஆவியானவர் கண்டிக்கிற வேதாகம பதிப்பு ஒன்றை வைத்துக்கொள்வது, ஒரு கலகச்செயல் என்று நான் இப்போது நம்புகிறேன். மேலும், டார்பி பதிப்பை வைத்துக்கொள்ள நான் பரிந்துரைக்கிறேன், மேலும் தேவன் இங்கே செய்து கொண்டிருப்பவைகளிலிருந்து விலகி நீங்கள் தூரமாக இருப்பது, எதையும் மாற்றாது. தேவன் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதற்கு வெளியே இரட்சிப்பு இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
9நல்லது! ஒப்பீட்டிற்கு வருவோம். ஏசாயா 35:8 முதல் 9 வரை, அதில் வழி தான் பரிசுத்தமானது மற்றபடி பெரும்பாதை அல்ல. நியாயாதிபதிகள் 17:1 முதல் 5 வரை, அது தெய்வங்களை (gods) பற்றின கேள்வியாக இருக்கிறது, அதை விக்கிரகங்கள் என்று சொல்லவேண்டும், மற்றபடி சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் விதத்திலல்ல. நியாயாதிபதிகள் 18:23 முதல் 24 வரை வாசியுங்கள், அது "தெய்வங்களை" பற்றியதாக இருக்கிறது, அதை விக்கிரகங்கள் என்று சொல்லவேண்டும் என்று லூயிஸ் செகண்டும் ஒத்துக்கொள்கிறது. யாத்திராகமம் 32:4-ல், பொற்க் கன்றுகுட்டியை ஒரு தெய்வம் (a god) என்று லூயிஸ் செகண்டு ஒத்துக்கொள்கிறது. மேலும் 1 இராஜாக்கள் 12:28-ல், அது பொற்க் கன்றுகுட்டிகளை பற்றியதாக இருக்கிறவேளையில், லூயிஸ் செகண்டு அதை கொட்டை எழுத்து "G" உடன் “தேவன்” (God) என்று எழுதுகிறார்.
10எசேக்கியேல் 2:1, எசேக்கியேல் 3:1 மற்றும் எசேக்கியேல் 4:1-ல் ... அவை “மனுஷ குமாரனை" (son of man) பற்றியதான கேள்வியாக இருக்கிறது, அதை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லாம், மற்றபடி கொட்டை எழுத்தில் “மனுஷ குமாரன்” (The Son of Man) என்றல்ல, ஏனென்றால் அது மத்தேயு 16:13-ல் இருப்பது போன்று, இயேசு கிறிஸ்துவை, அதி-உன்னத தீர்க்கதரிசியை (Supreme Prophet) குறிக்கிறது. மேலும், எசேக்கியேல் 3:12 மற்றும் 14-ல் வெளிப்படுத்துதல் 14:13-ல் இருப்பது போன்று, அது தேவனுடைய ஆவியாக (Spirit) இருக்கிறது, எனவே எசேக்கியேல் 8:3-ல் இருப்பது போல "S" அது கொட்டை எழுத்தில் இருக்க வேண்டும்.
11நான் தொடர்கிறேன். ஆதியாகமம் 1:2-ல்; 1 சாமுவேல் 16:14-ல்; ஏசாயா 61:1-ல்... அது சர்வவல்லமையுள்ள தேவனை பற்றியதாக இருக்கையில் அந்த எழுத்து "S" கொட்டை எழுத்தாக இருந்தாகவேண்டும். இருப்பினும், அங்கு சிறிய எழுத்து "s" உடன் தேவனின் “ஆவி” (the [s]pirit) என்று எழுதுவதற்கு உண்மையான காரணம் என்னவென்றால், அந்த லூயிஸ் செகண்டை பொறுத்தவரையில், அங்கே தேவனுடைய நல்ல ஆவியும் உண்டு தேவனுடைய பொல்லாத ஆவியும் உண்டு. நான் அந்த உபதேசத்தை நம்பவில்லை. மேலும் அது 1 சாமுவேல் 18:10-ல் வெளியரங்கமாகிறது. எப்படியெனில் லூயிஸ் செகண்டு: “தேவனுடைய பொல்லாத ஆவி சவுலை பிடித்தது” (the evil spirit of God) என்று கூறுகிறார். அதேவேளையில் டார்பி: “யெகோவாவினால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி சவுலை பிடித்தது...” என்கிறார். லூயிஸ் செகண்டு: “தேவனுடைய பொல்லாத ஆவி...” என்கிறார், அதேசமயம் டார்பி: “தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி...” என்கிறார். அது இரண்டும் ஒரே காரியமல்ல. அதேகாரியம் தான் 1 சாமுவேல் 19:9-லும் உள்ளது.
12மத்தேயு 24: 24-ல், கள்ளக் கிறிஸ்துக்களின் "C" சிறிய எழுத்தில் (christs) இருக்க வேண்டும், ஏனென்றால் அது மெய்யான பரிசுத்த ஆவி (Holy Spirit) அல்ல. ஆனால் குறிசொல்லும் ஆவிகள் பரிசுத்த ஆவியாக செயல்படுகின்றது. எனவே, அது சிறிய எழுத்து "c" உடன் "கள்ள கிறிஸ்துக்கள்" (false christs) என்று எழுதியாக வேண்டும் மற்றபடி கொட்டை எழுத்து "C" உடன் "false Christs" அல்ல. இப்போது வெளிப்படுத்துதல் 1:4-ல், அது ஏழு காலங்களிலுமுள்ள பரிசுத்த ஆவியாக இருக்கிறதினால், கொட்டை எழுத்து "S" உடன் அது “ஆவிகள்” (Spirits) என்று இருக்கிறது. ஆனால் லூயிஸ் செகண்டு அதை சிறிய எழுத்து "s" உடன் எழுதுகிறார்.
13கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருந்ததில்லை என்று கூறுவதற்காக மத்தேயு 1:25-ல் "முதற்பேறான குமாரன்" என்பது திரும்ப எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. உபதேச காரணங்களுக்காக இவை அனைத்தையும் அவர்கள் செய்ததாக அது வெளிப்படையாகவே உள்ளது.
14சரியான பெயர்ச்சொல்லாக (proper noun) இருந்தாலொழிய கிரேக்க மொழி கொட்டை எழுத்துக்களை அனுமதிக்கிறதில்லை, ஆனபடியினால் தான் அதற்கு ஏற்ப சிறிய எழுத்தில் கிறிஸ்து (christ) என்றும் குறிப்பாக புதிய ஏற்பாட்டில் கர்த்தர் இயேசு (the lord Jesus) என்றும் இருக்கிறது. மத்தேயு 4:10-ல் ... "வணங்குவாயாக" என்பது கிரேக்க வார்த்தையான "ப்ரோஸ்கினியோ" (proskïneo) என்பதன் எழித்துப்பிரகாரமான மொழிபெயர்ப்பாக உள்ளது.
15வெளிப்படுத்துதல் 1:20-ல், அது ஏழு விளக்குகளை பற்றினதாக இருக்கிறது, அதை குத்துவிளக்கின் ஏழு விளக்குகள் என்று சொல்லவேண்டும் மற்றபடி ஏழு குத்துவிளக்குகளல்ல, ஏனெனில் ஏழு குத்துவிளக்குகள் என்பது நாற்பத்தொன்பது விளக்குகளை கொடுக்கும்; வெளிப்படுத்துதல் 11:4-க்கும் அது அவ்வாறுதான். யோவான் 17:11-ல், அது: "நான் உம்மிடத்திற்கு வருகிறேன்" என்பதாம், மற்றபடி "நான் உம்மிடத்திற்கு போகிறேன்" என்றல்ல; அதுபோல 12-ஆம் வசனம், "நீர் எனக்குத் தந்த உமது நாம்" பற்றியது.
16தானியேல் 5:25-ல், லூயிஸ் செகண்ட் சுவரில் எழுதப்பட்ட எழுத்தைப் பற்றி குறிப்பிடவில்லை, அதை: "மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்!" என்று கூறவேண்டும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: உப்பார்சின் என்பது பெரஸின் பன்மை ஆகும்.
17தானியேல் 9:25 முதல் 27 வரை, "தானியேலின் 70 வாரங்கள்" பற்றிய மொழிபெயர்ப்பில் மீகா 1:10 முதல் 15 வரை உள்ளது போல் குழப்பம் நிலவுகிறது. மொழிபெயர்ப்பதில் லூயிஸ் செகண்டு தொல்லைக்குள்ளாகிறார். மீகா 1:10-ல் டார்பி: "...பெத்-லே-அப்ராவிலே புழுதியில் நீ புரண்டுகொள்” என்று கூறுகிறார். லூயிஸ் செகண்டு: "...பெத்-லேபராவின் புழுதியில் நான் புரளுகிறேன்” என்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? அது வித்தியாசமானது! ஒருவர்: "...நீ மண்ணில் புரளு" என்று சொன்னார், ஆனால் இந்த ஒருவரோ: “...நான் மண்ணில் புரளுகிறேன்..." என்பதாக சொல்கிறார்.
18மத்தேயு 24:28-ல், அது "கழுகுகள்" பற்றியது, மற்றபடி "வல்லூருக்கள்" அல்ல. இதனோடுகூட, அந்த லூயிஸ் செகண்டு பதிப்புகள் எல்லாம் ஒரே உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிட தகுதியானதாக இருக்கிறது... மொழிபெயர்ப்பாளர் பூமியின் அனைத்து மொழிகளையும் புரிந்துகொள்ள இயலாது, தேவனுடைய ஆவியில், ஒரு மனிதன் அதை மொழிபெயர்க்க வேண்டும், உதாரணத்திற்கு, டார்பி போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும்கூட உள்ளது, ... மிக முக்கியமான [காரியம்] என்னவென்றால், தேவனுடைய கிருபையினால், செய்தியாளனுடைய மொழியில் அது செய்யப்பட வேண்டும், அது செய்யப்பட்டுள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
19வெளிப்படுத்துதல் 1:10-ல், அது "கர்த்தருடைய நாள்" பற்றிய கேள்வியாக இருக்கிறது, அது ஞாயிற்றுகிழமையோ அல்லது ஒரு "நாளோ" அல்ல, அது தீர்க்கதரிசன நாளை, அதாவது ஆயிரம் ஆண்டுகளை குறிகிறது. ஆயினும், ஆயிரவருட அரசாட்சி (the Millennium) என்பது தனியே ஓராயிரம் ஆண்டுகளாகவும் இருக்கிறது.
20ஆதியாகமம் 4:15-ல், அது காயீனை, கொல்லுகிறவன் ஏழத்தனையாக தண்டிக்கப்படுவான் என்பதாக இருக்கிறது, மற்றபடி காயீன் ஏழத்தனையாக பழிவாங்குவான் என்றல்ல. இங்கே டார்பி இதை: “யொகோவா அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவனும், அதனிமித்தம், ஏழத்தனையாக தண்டிக்கப்படுவான் என்றார்...” என எழுதுகிறார். லூயிஸ் செகண்டு: “யெகோவா அவனை நோக்கி: காயீனை எவனாவது கொலைசெய்தால், காயீன் ஏழத்தனையாக பழிவாங்குவான்...” என்கிறார். அது இரண்டும் ஒரே காரியம் அல்ல. மேலும் ஆதியாகமம் 4:23 முதல் 24 வரை, வேதசாஸ்திரி லாமேக், சிந்தப்படுகிற இரத்தத்தின் ஒழுங்கு படி, அவனுடைய கொள்ளு-பாட்டன் காயீனின் காரியத்தில் உள்ளது போல, அதை தனக்கு சாதகமாக வியாக்கியானித்தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
21நல்லது! மத்தேயு 11:23-ல்: "பாதாளம்" என்பது "மரித்தோரின் தங்குமிடம்" எனப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அங்கே "பாதாளம்" என்பது ஒரு புறத்தில் வேதனைகளின் இடமாகவும், மறுபுறத்தில் ஆபிரகாமின் மடியாகவும் உள்ளது.
22எபிரேயர் 13:17-ல், லூயிஸ் செகண்டு: "உங்களை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிந்து, அவர்களுக்கு அடங்குங்கள்; ஏனெனில் அவர்கள் உங்கள் ஆத்துமாக்களைக் கண்காணிகிறார்கள்..." எனக் கூறுகிறார். ஆனால், அங்கே ஒருவர் மட்டுமே நமது ஆத்துமாக்களையும், நம்மை நடத்துகிறவர்களுடைய ஆத்துமாக்களையும் கண்காணிக்கிறவராக இருக்கிறார் என்று உண்மையான வேதாகமம் கூறுகிறது, அது தேவனாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. எனவே அதன் உண்மையான மொழிபெயர்ப்பு உங்கள் ஆத்துமாக்களை கண்காணிக்கிறவர்கள் என்று அல்ல, ஆனால் உங்கள் ஆத்துமாக்களுக்காக கண்காணிப்பு வேலையில் உள்ளவர்கள் என்றாம்.
231 கொரிந்தியர் 11:15-ல் அதனுடைய முடிவாக, நீண்ட தலைமயிர், அவளுக்கு முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஒரு முற்றுப்புள்ளியுடன் முடிவடைகிறது, மற்றபடி ஒரு கேள்விக்குறியுடன் அல்ல. லூயிஸ் செகண்டு வேதாகமத்தை திருத்தின குழுக்கள் அதை ஒப்புக்கொண்டன.
24ரோமர் 16:1-ல், அது சபையில் "உதவிக்காரி” (deaconess) ஊழியம் பற்றிய கேள்வியல்ல, ஆனால் “சேவைசெய்பவள்" (servant) என்பதாகும். 2-வது வசனம் அதைக் காட்டுகிறது. இந்த ஸ்திரி பரிசுத்தவான்களுக்கு உதவியாக இருந்தாள், அதைத்தான் அவள் செய்தாள். வெளிப்படுத்துதல் 12:18, அது 13-ம் அதிகாரத்தின் முதல் பத்தியின் பாகமாக இருக்கிறது, மேலும் அது: “அது நின்றது” என்றல்ல, ஆனால் “நான் நின்றேன்” என்பதாக இருக்கிறது. ஏனென்றால் அது வலுசர்ப்பத்தை பற்றினதல்ல ஆனால் யோவானை பற்றினது.
25லூயிஸ் செகண்டு வேதாகமத்தில் நடந்த அதே வேலைதான், ஜேம்ஸ் மன்னன், ஆஸ்டர்வால்டு, டேவிட் மார்டின் பதிப்புகளுக்கும் மற்றும் பலவற்றுக்கும் நடந்தது; ஏனென்றால் இந்த பதிப்புகள் ஒவ்வொன்றும் உலகின் ஒரு பகுதியில் ஆட்சி செலுத்துகிறது. லூயிஸ் செகண்டு வேதாகமத்தை அறியாத, சில நாடுகளும், சுவிசேஷக சபையினர்களும் கூட அங்கே உள்ளனர். சாத்தான் ஒரு மாபெரும் வேலையை செய்திருக்கிறான் ஆனால் ஜனங்களோ அதை அறியாமலிருக்கிறார்கள். உங்களால் காணமுடிகிறதா?
26அதுபோலவே, லூயிஸ் செகண்டு வேதாகமம் பல திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது, டார்பி வேதாகமத்தின் காரியத்தில் ஒருபோதும் அது நடைபெறவில்லை. ஆயினும், பொருள் நல்லதாக இல்லாத காரணத்தினால் தான், அது திருத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. மேலும், திருத்த குழுக்கள் எபிரேயுவிலும் கிரேக்கத்திலும் உள்ள அநேக அசல் பத்திகளை வைத்திருக்கவில்லை. ஆனால் இசைவுக்காக அனேக வசனங்கள் சேர்க்கப்பட்டன.
27ஸ்கோஃபீல்டு மற்றும் தாம்சன் வேதாகம பதிப்புகள் உப-பொருட்களாக உள்ளன, அவை லூயிஸ் செகண்டு பதிப்பிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவை என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். ஜேம்ஸ் மன்னன் பதிப்பு குறித்து, அதை ஜேம்ஸ் மன்னன் வேதாகமம் என்று அழைப்பதற்காக, ஸ்காட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் மன்னன், இங்கிலாந்தின் சிங்காசனத்தில் முதலாம் ஜேம்ஸ் மன்னன் என்னும் பெயரின்கீழ் இருந்தபோது, லண்டனின் சிறந்த ஐம்பத்துநான்கு மொழி பெயர்ப்பாளர்களிடம், அவர்களில் அஞ்ஞானிகளும், மதப்பற்றுடையவர்களும் இருந்தனர், கிறிஸ்துவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வழியாக இருக்கும்படிக்கு, தனது பெயரை கொண்டதான ஒரு வேதாகம மொழிபெயர்ப்பை உருவாக்கும்படிக்கு கேட்டுக்கொண்டார். அது ஃபிடல் காஸ்ட்ரோ அல்லது பேரரசர் பொக்ஸா- I பதிப்பு போல, வேதாகமத்தின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பை உலகம் முழுவதற்கும் கொடுக்கக்கூடிய விதத்தில் இருந்தது. இருப்பினும், இவை அனைத்தும் இறையியல் வேலைபாடாக இருக்கிறது.
28உதாரணத்திற்கு லூயிஸ் செகண்டை எடுத்துக்கொள்ளுங்கள், அதன் முதலாவது முரண்பாட்டு கருப்பொருள்: “லூயிஸ் செகண்டு, இறையியல் வல்லுனர்” என்று இந்த வேதாகமத்தின் (bible) முதல் பக்கத்தில் உள்ளது. அதை ஏற்றுக்கொள்வது இறையியலை ஏற்றுக்கொள்வதாகும். ஏனென்றால் "மந்திரவாதம்" நல்லதல்ல என்பதை நான் அறிவேனானால், ஒரு மந்திரவாதி மொழிபெயர்த்ததும் அதன் முதல் பக்கத்தில்: “பெரிய மந்திரவாதி, செரேட்ஜியின் (Zérédji) மொழிபெயர்ப்பு” என எழுதப்பட்டதுமான வேதாகமத்தை (bible), அது சிறந்தமுறையில் செய்யப்பட்டிருந்தாலும், என்னால் எப்படி அதை வாசிக்கமுடியும்?
29இந்த வகையில், குறைந்தபட்சம், புராட்டஸ்டன்ட் மற்றும் சுவிசேஷக சபையினரை நான் பாராட்டுகிறேன், ஏனென்றால் கத்தோலிக்கர்களை கண்டனம் செய்கிறதினால், அவர்கள் கத்தோலிக்கர்களின் தாம்ப் வேதாகமத்தை (Tob bible) பயன்படுத்துவதில்லை. சுவிசேஷக சபையினரும் இறையியல் வல்லுனர்களும் நியாயத்தீர்ப்பு நாளில் நின்று பிரன்ஹாமிஸ்டுகள் மீது குற்றஞ்சுமத்துவார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? வில்லியம் பிரன்ஹாம் கண்டனம் செய்த, அந்த பிரயோஜனமற்ற இறையியல் விருட்சத்தினால், லூயிஸ் செகண்டை போலவே நல்ல கனிகளை கொடுக்க இயலும் என்று மனிதகுலத்துக்கு காண்பிக்க பிரன்ஹாமிஸ்டுகள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள், தேவனுக்கு முன்னால் பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
30லூயிஸ் செகண்டு, ஜேம்ஸ் மன்னன் வேதாகமங்கள் (bibles) இன்னும் மற்றவைகள் ஏன் பிசாசினுடையவைகளாக இருக்கிறது என்று அந்த சபைகளின் அங்கத்தினன் ஒருவன் அறியாதிருந்தால், வசனங்களின் ஒப்பீடுகளை காணும்வண்ணம் இறையியலில் இருந்து ஆரம்பித்து ஜாக்கிரதையாக அவனுக்கு விளக்கும்படி, உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். ஆனால் ஒரு பிரன்ஹாமிஸ்டு, பேலியாளின் பிள்ளை இந்த செய்தியை எதிர்ப்பானாகில், அது தவறான விசுவாசத்தினால் அல்லது பெருமையினால் தான், அவன் ஒரு மந்திரிவாதியாக இல்லாவிட்டாலொழிய இதை புரிந்துகொள்ள முடிவதில்லை என்று அவனால் சொல்ல முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
31வேதாகமத்தை அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரித்ததைப் பற்றி, ஒன்பதாம் நூற்றாண்டில், மசோரெட்டுகள் (Masoretes) (அதாவது ரபீக்கள் மற்றும் யூத அறிஞர்கள்) முதன்முதலாக பழைய ஏற்பாட்டு சுருள்களின் ஓரத்தில் பத்திகளின் சரியான அளவும், முடிவு மற்றும் துவக்கம் பற்றி அறிய சில குறிப்பு எண்களை (figures) இட்டனர். பிறகு, 13-ம் நூற்றாண்டில், இரண்டுபேர்: ஹ்யூகோ என்ற கர்தினால் மற்றும் லாங்க்டன் என்ற ஆங்கில பேராயர் முதல் மொழிபெயர்ப்புகளை அதிகாரங்களாக பிரித்தனர். டார்பி பதிப்பின் உதாரணத்திற்குப் பிறகு எபிரேய சுருள்களில் உள்ளதுபோல, 1520-ஆம் ஆண்டில், சன்டெஸ் பக்ஜின் (Sanctès Pagnin) தனது லத்தின் மொழிபெயர்ப்பின் விளிம்பில் சில குறிப்பு எண்களை (figures) இட்டிருந்தார், அதிலிருந்த வரிகளுக்கு குறியீடுகள் எதுவும் இருக்கவில்லை.
32ஆனால் 1551-ல், ராபர்ட் எஸ்டென்னே (Robert Estienne), புதிய ஏற்பாட்டின் தனது ஆங்கில மொழிபெயர்ப்பை ஜெனீவாவில் வெளியிட்டார், அது லூயிஸ் செகண்டை போலவே, பத்திகளை வரிகளாக உடைத்து, ஒவ்வொரு வசனமும் குறிப்பிடப்பட்ட வரிகளாக்கப்பட்டது, இவ்வாறு எபிரேய மற்றும் கிரேக்க சுருள்களின் பத்திகள் அழிக்கப்பட்டன. 1555-ல் அவர் வெளியிட்ட வல்கேட் (Vulgate) பத்திரிகையின் வெளியீட்டிற்காக ராபர்ட் எஸ்டென்னே அதை செய்தார். மேலும் இந்த பேய்த்தனமான முறையானது பிரான்சின் மதகுருமார்களாலும், அந்த நேரத்தின் பிரதான சுவிசேஷக இயக்கங்களாலும் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
33எனவே டார்பியின் மூலமாக, வெளிப்படுத்துதல் 12:18, வெளிப்படுத்துதல் 13-ம் அதிகாரத்தின் முதல் வசனம் என்பதை அறிந்துகொள்கிறோம். எனவே, வெளிப்படுத்துதல் 12:18 கூறுகிறதாவது: "பின்பு நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன்”; மேலும் வெளிப்படுத்துதல் 13:1 கூறுகிறது: "அப்பொழுது ஏழு தலைகளும், பத்து கொம்புகளும் உள்ள ஒரு மிருகம் சமுத்திரத்திலிருந்து எழும்பிவருவதை நான் கண்டேன், அதன் கொம்புகளின்மேல் பத்து முடிகளும் (diadems), அதன் தலைகளின்மேல் தூஷணமான நாமங்களும் இருந்தன". டார்பியில், உடுகுறியீடு (;) எபிரேய மூல அதிகாரங்களின் துவக்கமாக இருக்கிறது. காரியம் இப்படியிருக்க, ஆதியாகமம் 2:4 என்பது ஆதியாகமம் 2-ம் அதிகாரத்தின் தொடக்கமாகும், மேலும், இது முழு வேதாகமத்துடனும் அந்த காரியம் அவ்வாறுதான். ஆதியாகமம் 2:1 கூறுவதை பாருங்கள்: "இவ்விதமாக ... உண்டாக்கப்பட்டு தீர்ந்தன”. அதுதான் ஒன்றாம் அதிகாரத்தினுடைய முடிவுப்பகுதியின் ஆரம்பம் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ...
34வரலாற்றின்படி, ஜான் நெல்சன் டார்பி (John Nelson Darby) லண்டனில் 1800-ம் ஆண்டு ஒரு ஐரிஷ் தந்தைக்கு பிறந்தார். அவர் வில்லியம் பிரான்ஹாம் மற்றும் கொலம்பன் போன்று ஐரிஷ் மரபுமூலத்தை சேர்ந்தவர். அயர்லாந்தின் டப்ளின் பல்கலைக்கழகத்தில் ஒரு கடுமையான சட்ட படிப்பிற்கு பிறகு, அவர் தேவனைப் பின்பற்றுவதற்காக, வழக்கறிஞர் மன்றத்திற்கு தன்னை ஒப்புக்கொடுப்பதற்கு முன்னமே வழக்கறிஞர் பணியை முடித்துக்கொண்டார்.
35அவரது மேல் அதிகாரிகளிடத்தில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ராஜினாமா செய்வதற்கு முன், 1725-ல் ஜான் வெஸ்லியைப் போலவே, 1825-ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலிகன் சபையில் சிறிய உதவி ஊழியராகவும் (deacon) பின்னர் அடுத்த ஆண்டிலே அயர்லாந்தின் விக்லோ பகுதியில் பாஸ்டராகவும் இருந்தார். ஆர்வமுள்ள சட்டப் படிப்புகளுக்குப் பிறகு, டார்பி கற்ற ஒரே காரியம், அது மொழிகளே, அவர் தம் தாய் மொழியைப் போன்று எபிரேயுவையும் கிரேக்கத்தையும் பேசினார். மொழிகள் கற்பதென்பது இறையியல் அல்ல! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
36அதன் பின்னர், அவரது நன்பர் ஜான் கிப்போர்ட் பெலெட் (John Gifford Bellet), இவரும் ஒரு வழக்கறிஞர், அவருடன் இணைந்துக்கொண்டார். அப்போதிலிருந்து, பரிசுத்த ஆவியை மட்டுமே சார்ந்து, டார்பி அயர்லாந்து, ஐரோப்பா, ஆசிய மற்றும் அமெரிக்கா முழுவதும் கிராமங்களிலும், நாட்டுப்புறங்களிலும் பிரசங்கிக்க ஆரம்பித்தார், சபையின் ஸ்தாபன அமைப்பையும், மனிதனின் தலைமைத்துவத்தையும் மற்றும் ஆடம்பரத்தையும் இறையியலையும் கண்டித்தார். அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகளின் அஸ்திவாரத்திற்கு திரும்பும்படி அனைத்து சபைகளிடமும் அழைப்பு விடுத்து, "பழைய ஏற்பாட்டின் யெகோவா தான் இயேசு கிறிஸ்து" என்று ஏற்கனவே நிரூபித்துக்கொண்டிருந்தார். டார்பி ஆங்கிலம், பிரெஞ்சு, எபிரேயம், கிரேக்கம், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் பேசினார். லூயிஸ் செகண்டு ஜெனீவாவின் பாஸ்டர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி மொழிபெயர்த்ததற்கு முன்னரே, 1859-ஆம் ஆண்டில் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டை அவர் மொழிபெயர்த்தார்.
37டார்பி பதிப்பு இவ்வாறு ஜேம்ஸ் மன்னனின் பதிப்பை மிஞ்சியது, ஜேம்ஸ் மன்னன் கேட்டுக்கொண்டதினால் அவர்கள் அவர்பெயரில் அதை உண்டாக்கினர் மேலும் அது 1611-ஆம் ஆண்டில் உண்டுபண்ணப்பட்ட ஒரு பதிப்பு, அது இரண்டு நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தது, அது வில்லியம் டின்டாலின் பதிப்பிலிருந்து எடுக்கப்பட்ட பிரதி (replication) ஆகும்.
38மேலும் ஜேம்ஸ் மன்னன் பதிப்பை பற்றி பேசுகையில், ஜேம்ஸ் மன்னன் அவரே ஒப்புதலளித்த 47 அறிஞர்கள் மற்றும் பெரிய உரைபெயர்ப்பாளர்களும், சிறந்த கையெழுத்துப்பிரதிகளை (manuscripts) வைத்திருக்கிற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூத ரபீக்களையும் அவர்கள் தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும், பின்பு அவர்களை மூன்று பெரிய குழுக்களாகப் பிரித்தனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு குழுவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இன்னொரு குழுவும் வெஸ்ட்மின்ஸ்டரில் கடைசி குழுவும். மேலும் இந்த ஒவ்வொரு குழுவும் கூட இரண்டு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டது. அவை அனைத்தும் மொத்தம் ஆறு குழுக்கள். முதல் குழு வேலையை முடித்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது குழுவிற்கு வேலைப்பாடு அனுப்பப்பட்டது, அது அடுத்த குழுவிற்கு அனுப்பிவைக்கும் ... இவ்விதமாக இருந்தபோதிலும், 1611-ல் ஜேம்ஸ் மன்னன் பதிப்பின் முதல் வெளியீட்டிற்கு முன்பாக பதினான்கு திருத்தங்கள் இருந்தன. இருப்பினும், அவர்களில் ஒவ்வொருவரும் எந்த யூதனை விடவும் எபிரேய மொழியில் கைதேர்ந்தவர்களாய் இருந்தனர்.
39மேலும் ஜேம்ஸ் மன்னனின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர், எல்லா மொழிகளிலும், முக்கியமாக கிழக்கத்திய மொழிகளில், திறமைவாய்ந்தவராக இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது, பாபேல் கோபுரத்தின் காலத்தில் மொழிகளில் குழப்பம் ஏற்பட்டபோது அவர் இருந்திருந்தால், அவரால் உரைபெயர்ப்பாளராக சேவை செய்திருக்க முடியும். எனவே அத்தகைய மாமனிதனின் கொள்ளுப்பாட்டன் தான் பாபேல் கோபுரத்தை கட்டியெழுப்பினவன், இப்போது அவனுடைய கொள்ளுப் பேரன் இந்த சாத்தானின் ஏதேனில் “ஜேம்ஸ் மன்னன் வேதாகமம்” என்று அழைக்கப்படுகிற ஒரு புதிய பாபேல் கோபுரத்தை கட்டுகிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
40ஆனால் தேவனுடைய அருளால் அந்த டார்பி உருவானது, ஒரே ஒரு மனிதனால், தேவனின் சார்பாக வேதாகமத்தை மொழிபெயர்க்க எழும்பினான். வேதாகமத்தை மொழிபெயர்ப்பதற்கு சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஐம்பத்து நான்கு அறிஞர்கள் தேவைப்படுகிறார்களா? தேவன் புத்திசாலிகளுடன் இடைபடுகிறார? ...
41டார்பி பதிப்பானது சக்தி வாய்ந்த இறையியலாளர் ஆஸ்டர்வால்டின் பதிப்பையும் கூட மிஞ்சினது, லெமாஸ்டிரே டி சீஸ் (Lemaistre de Sacy) வேதாகமத்தின் பேரில் வால்லோன் (Walloon) சபைகளின் குருமன்றத்தின் (synod) கோரிக்கையினால் தத்துவஞானி மற்றும் இறையியலாளரான டேவிட் மார்டினின் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இது. 19-ஆம் நூற்றாண்டில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இவைகளையும் கடந்து ஜான் நெல்சன் டார்பி, சிங்காசனத்தைச் சுற்றியிருந்த 24 மூப்பர்கள் அது 12 அப்போஸ்தலர்கள் மற்றும் 12 கோத்திரபிதாக்கள் என்றும், ஆதியாகமம் 1:27 அது தூதர்களுக்குப் பொருந்தாது என்பதுபோன்ற வேதாகம இரகசியங்களை வியாக்கியானிப்பதர்க்குள்ளும் சென்றார்.
42பூமியின் மேல் ஒரே ஒரு வேதாகமம் தான், தன்னைத்தானே சுமக்கின்றதும், ஒருபோதும் மறுபடியும் தீண்டப்படாததும் அல்லது அதன் ஆசிரியரால் கூட திருத்தம் செய்யப்படாததும், ஒரு பிரதியிலிருந்தெடுக்கப்பட்ட மறுபிரதி அல்லாததும், ஒரு பதிப்பிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டதல்லாததுமாக உள்ளது, அதுவே வழக்கறிஞர் ஜான் நெல்சன் டார்பியினுடைய ஓன்று. இவ்விதமான ஒரு வேதாகமம் தான் இந்த மீட்டளிப்பின் செய்திக்கு (Message of restitution) தேவையானது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. இந்த தகவல் துணுக்குகளுக்கு முன்னமே, காலங்களின் முடிவில் இருக்கிற இந்த மணவாட்டிக்கு இதுதான் வேதாகமம் என்னும் வெளிப்பாட்டை நான் உடையவனாக இருந்தேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
43ஜான் நெல்சன் டார்பி ஏப்ரல் 29, 1882-ல் இறந்தார். இவைதான் அவருடைய கடைசி வார்த்தைகள்: "தேவன் ஸ்தோத்திரிக்கப்படுவாராக, எடுத்துப்போடவோ அல்லது மிக குறைவாக எதையாவது சேர்க்கவோ எனக்கு ஏதாவது இருப்பதாக நான் நம்பவில்லை. அவருக்காக உள்ள எனது உத்தமமான நன்றியறிதல் மற்றும் பாசம் தவிற சேர்க்கும்படியாக என்னிடத்தில் ஒன்றுமில்லை. (மார்ச் 19, 1882-ன் கடிதம்). இந்தச் செய்தியின் முடிவில் இதே வார்த்தைகள் என்னுடையதாகவும் இருக்கட்டும், மேலும், எனக்கும் விசுவாசித்த உங்களுக்கும் வெற்றிவாகை சூட்டப்படட்டும், அதில் தான் நாம் இளைப்பாருகிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
44மோசே, பவுல் மற்றும் எனக்கு முன்னிருந்த அனைத்து தீர்க்கதரிசிகளையும் போல, நான் கண்டதையும், தேவன் எனக்கு கட்டளையிட்டதையுமே நானும் கூறினேன்... நான் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்டபட்ட விதத்தில் அழைக்கப்பட்டுள்ளேன், நான் அவர்களைப் போலவே உழியம் செய்தேன், அவர்கள் உள்ளே பிரவேசித்தால், நாமும் கூட உள்ளே பிரவேசிப்போம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
45இப்போது, பண்டைய கையெழுத்துப்பிரதிகளிலிருந்து (manuscripts) தான் வேதாகமம் வருகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நன்கு-அறியப்பட்ட மூன்று கையெழுத்துப் பிரதிகள் தான் நியதியை (the canon) சேர்க்கிறது, அதாவது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் முழுமையை நிர்ணயிக்கிறது, அவையாவன: சினாய்டிக்கஸ் (the Sinaiticus), 4-ஆம் நூற்றாண்டில் சினாய் மலையில் புனித கேதரின் துரவிமடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் முழுவதையும் கொண்டுள்ளது; லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் இந்த கையெழுத்துப் பிரதி இன்று பாதுகாக்கப்படுகிறது.
46பின்னர் 5-ஆம் நூற்றாண்டில் எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டிரியாவில் கண்டெடுக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரினஸ் (the Alexandrinus) வருகிறது, இது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை கொண்டுள்ளது மேலும் மர்மமான விதத்தில், புதிய ஏற்பாடு மத்தேயு 25:6-ல் இருந்து தொடங்குகிறது. இது ஃபிராங்க் ரைஸ்டோர்ஃப்-ரீஸின் (Frank Reisdorf-Reece) வேதாகம கலைக்களஞ்சியத்தில் காணப்படுகிறது. நமக்கு, அது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
47பிறகு மூன்றாவதாக மதிப்பற்றதும் மூலம் அறியப்படாததுமான வத்திக்கானஸ் (the Vaticanus), இந்த கையெழுத்துப்பிரதியானது 1 மற்றும் 2 தீமோத்தேயு, பிலேமோன், தீத்து மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. அது வத்திக்கானில் பாதுகாக்கப்படுகிறது.
48இந்த அலெக்ஸாண்ட்ரினஸ் கையெழுத்துப்பிரதி ஆப்பிரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் மத்தேயு 25:6 உடன் துவங்குதல் என்பது ஒரு தீர்க்கதரிசன அடையாளம் எனவும் நாங்கள் கருதுகிறோம். அதே கலைக்களஞ்சியத்தின் படி, அதே பக்கத்தில், இறையியலாளர்களின் அறிக்கை இங்கே உள்ளது. அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “முதல் புரோட்டஸ்டன்டு பதிப்புகளில் ஒன்று ஆலிவ்டானாக (Olivetan) (1535-ல்) இருந்தது. 1550-ம் ஆண்டில் ஜான் கால்வினாலும் (John Calvin) பின்னர் தியோடோர் டி பீசேவாலும் (Theodore de Bèze) திருத்தப்பட்டது, பின்னும் கொர்னேலியஸ் பெர்ட்ராமால் (Cornelius Bertram) (ஜெனிவா 1588-ல்) திருத்தப்பட்டது. அதுமுதற்கொண்டு, அது டேவிட் மார்ட்டினாலும் (1707-ல்) மற்றும் ஜீன்-ஃப்ரெடெரிக் ஆஸ்டர்வால்டாலும் திருத்தப்பட்டது.
49இந்த பதிப்புகள் அனைத்தும் லூயிஸ் செகண்டினாலும் (ஜெனீவா 1874, ஆக்ஸ்போர்டு 1880), மற்றும் சினோடால் என அழைக்கப்பட்டவராலும் (1926-ல் திருத்தப்பட்டது) இன்றைக்கு மாற்றப்பட்டிருக்கிறது மற்றும் மூல பாடத்திற்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் என நாம் கருதுகிற ஒருவர், ஜான் நெல்சன் டார்பி. ஆமென்! நீங்கள் அதை பெற்றுக்கொண்டீர்களா? நான் இந்த கடைசி வாக்கியத்தை மீண்டும் படிக்கிறேன்: "...மூல பாடத்திற்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் என நாம் கருதுகிற ஒருவர், ஜான் நெல்சன் டார்பி." [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. ஆனால் பிறகு எப்படி? டார்பி பதிப்புதான் மூலபாடத்துக்கு மிகவும் நம்பகமானதாக இருப்பதை நீங்கள் அறிந்தும் அதை நீங்கள் விட்டுவிட்டு ஜேம்ஸ் மன்னன் பதிப்புகள், ஸ்கோஃபீல்டு, தாமப்சன் பதிப்புகள் மற்றும் ஏனையவற்றை உபயோகிக்க போகிறீர்களா? என்னால் புரிந்துகொள்ள முடிகிறதில்லை. ஆனால் என்னை பொறுத்தவரையில், அதை புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், நான் மிகவும் நம்பகமான பதிப்பையே விரும்புகிறேன்.
50உதாரணமாக, ஜேம்ஸ் மன்னன் பதிப்பை பாருங்கள், அது ஒரு குழுவினரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, எனினும் தேவன் ஒரு குழுவோடு இடைபடுவதில்லை, ஆனால் ஒரே ஒரு நபரிடம் மட்டுமே! அங்கே திருத்தங்கள் மற்றும் திருத்தங்கள் மற்றும் திருத்தங்கள் இருந்தன. ஜேம்ஸ் மன்னன் பதிப்பின் முழுமையான திருத்தம் 1881-ம் ஆண்டில் நடந்தது. நடுராத்திரி சத்தத்திற்கு முன்னர், இவை அனைத்தும் அறியப்படவில்லை, ஆனால் இப்போது அது வெளியரங்கமனது, அதை விவேகிக்க தலைப்படவேண்டாம்! அதை தேவனுடைய ஒரு கட்டளையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென்!
51தெரிந்துகொள்ளப்பட்டவர்களை பாம்பின் முகத்திற்கு விலக்கி தூரமாக கொண்டுசெல்ல ஒரு குறுகிய செய்திவரும் என்று மத்தேயு 25:6 மற்றும் வெளிப்படுத்துதல் 12:14-ல் தேவன் கூறியுள்ளார்; இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், இஸ்லாம் மற்றும் யூதம் உள்பட அனைத்தலிருந்தும் தூரமாக...
52இந்த சபைகளில் கிரியைசெய்கிற பரிசுத்த ஆவிகளிடமிருந்து (holy spirit) தூரமாக.... இந்த காயீன், டாமி ஆஸ்பான், கென்னத் ஹேகின், யூஷே ப்ரைஸ், மோரிஸ் செருல்லோ, யோங்கி சோ ஆகியோரிடமிருந்து தூரமாக! இந்த ஜோயல் ஆஸ்டீன், டி.டி.ஜாக்ஸ், டௌக் பச்லர், பில்லி கிரகாம், எடிர் மாசிசோ, வால்டிமிரோ சந்தியாகு, சிலாஸ் மலாபியா, பவுலா வைட், ஜாய்சி மேயர் மற்றும் கிறிஸ் ஒயாக்கிலோம் ஆகியோரிடமிருந்து தூரமாக! இந்த டேவிட் ஒளவொர், இம்மானுவேல் மாகான்டிவா, உபர்ட் ஏஞ்சல், டி.பி. ஜோசுவா, டேவிட் ஒயேடிபோ, ஆல்பர்டோ மொட்டெசி, கிலவுதியோ ப்ரெய்டுசன் மற்றும் டான்டே கிபெல் ஆகியோரிடமிருந்து தூரமாக.
53இந்த பென்னி ஹின், மானாசே ஜோர்டன், ஜெஸ்சி ஜாக்ஸன், ஜான் ஹாகி, பாட் ராபட்சன், யோவாக்கிம் கான்க்ளேவ்ஸ், டொனால்டு பர்ணல், அலெஜான்ட்ரோ புல்லோன், மற்றும் குயிலெர்மொ மால்டொனால்டோ ஆகியோரிடமிருந்து தூரமாக. யோவேல் 2:28 மற்றும் 1 கொரிந்தியர் 2:4 முதல் 5 வரையின் கீழான மந்திரவாதிகள் மற்றும் மாயவித்தைக்காரர்கள். அடுத்த தலைமுறை கூட்டணிடமிருந்து தூரமாக. கார்லோஸ் அன்னாகண்டியா, பால் அயோ, பெஞ்சமின் போனி, ஜீன்-பாப்டிஸ்ட் நீல் பெயான், பெர்னார்ட் அக்ரே, ... ஆகியோரிடமிருந்து தூரமாக, இந்த புத்தகக்கடைகள் மற்றும் கிறிஸ்துவ ஊடகங்கள் என்று அழைக்கப்படுவவைகளிடமிருந்து தூரமாக, ... இந்த சபைகளின் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களிலிருந்தும் தூரமாக, ...
54லூயீஸ் செகண்டு, ஜேம்ஸ் மன்னன், தாம்ப் (Tob), ஸ்கோஃபீல்டு, தாம்சன் வேதாகமங்கள் (bibles) என நீங்கள் அழைக்கும் அந்த மாந்திரிக புத்தகங்களிடமிருந்து தூரமாக, பூமியிலெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறவர்களான இந்த தீர்க்கதரிசிகளிடமிருந்து தூரமாக கொண்டுச்செல்லவும், வெளிப்படுத்தல் 12:14-ன் பெருங்கழுகின் இரண்டு செட்டைகள் தான் இந்த செய்தி, மேலும் இது தெரிந்துகொள்ளப்பட்டவர்களை பாம்பின் முகத்துக்கு விலக்கி தூரமாக வனாந்தரத்துக்கு கொண்டுச்செல்லும். அவர்களிடமிருந்து விலகி இருங்கள்! இந்த செய்திக்கு வெளியே இரட்சிப்பு இல்லை. நாளையும் (the day) அதன் செய்தியையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள். அவர்கள் யோவேல் 2:28 மற்றும் 1 கொரிந்தியர் 2:4 முதல் 5 வரையின் கீழான மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரர்களுமாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்! என்கின்றனர்].
55நாம் தலைகளை தாழ்த்துவோம்! முதல் தடவையாக இங்கு வந்திருக்கிற நீங்கள், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு, அதை முழுமையாக விசுவாசிக்கிற எவராவது அங்கு உண்டா, அதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் உண்டா? ... அப்படியானால், அவர் வெறுமனே தன்னுடைய கையை உயர்த்தட்டும் ... நீங்கள் சுதந்திரமாக அதை செய்ய வேண்டும், ஏனெனில் தேவன் நண்டுகளை மீன்களாக்க வேண்டும் என்ற விருப்பம் நமக்கு இல்லை! அவர் அப்படி செய்தால், அது நல்லதாக இருக்கும், ஆனால் அங்கே நிறைய மீன்கள் இருக்கும், ஆனால் நண்டுகளின் நடத்தைகொண்ட மீன்களால் நாம் அனைத்துவகை பிரச்சனைகளுக்கும் உள்ளாவோம்...
56எவராவது ஒருவர்: “நான் டார்பி வேதாகமம் வாங்குவேன், ஆனால் நான் என் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபையிலேயே தரித்திருப்பேன்” என்றால், அவனை விட்டு விடு! நீங்கள் பார்க்கிறீர்களா? அது ஒரு நண்டு. ஆனால் இன்று காலையில் தேவன் எதைத் தேடுகிறார் என்றால், மீன்களை, அவர்கள் தான் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள். ஆமென்! இன்று காலை இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள யாராவது விரும்புகிறார்களா? [ஆசிரியர் குறிப்பு: யாரோ ஒருவர் தனது கரத்தை உயர்த்துகிறார்]. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆம், அங்கே, சகோதரனே! அங்கே, சகோதரி, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக ... நான் உங்களுக்காக ஜெபிக்கும்வரை உங்கள் கரங்களை உயர்த்தி வைத்திருங்கள்! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! அங்கே, உன்னை கூட தேவன் ஆசீர்வதிப்பாராக ...
57கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் என் ஆண்டவரும், இரட்சகருமானவர். நான் இந்த அர்ப்பணிப்புடன் வேண்டிக்கொள்கிறேன், நீர் அவர்களது விசுவாசத்தை தாங்குவீர்! அவர்களின் இந்த முடிவை பிசாசானவன் சோதிப்பான். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க அங்கு இருக்க முடியாது, ஆனால் உம்முடைய தெய்வீக கிருபைக்கு நாங்கள் அவர்களை பரிந்துரைக்கிறோம்! இன்று காலை நாங்கள் ஆராதனையை முடித்துக்கொண்டோம். ஒவ்வொரு சகோதரரையும் சகோதரியையும் நான் உமது கரத்தில் ஒப்புவிக்கிறேன், அதனால் சரீரத்தில் பிரிக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் மீண்டும் சந்திக்கும்வரை, எப்பொழுதும் ஒரே ஆவியிலும் ஒரே விசுவாசத்திலும் ஒருமைப்பட்டவர்களாக, பாவத்திலிருந்து தூரமாக விலகியிருக்க இயலும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, எங்களை பலப்படுத்தும், பாவத்திற்கு மேலாகவும் பிசாசுக்கு மேலாகவும் எங்களுக்கு ஜெயத்தை தாரும். கனமும் மகிமையும் மாட்சிமையும் என்றென்றைக்கும் உமக்கே, ஆமென்!