en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 70 (Kc.70) : கூடார ஊழியம்
(பெப்ரவரி 27, 2008 புதன்கிழமை மாலையில் யோபோகான் –குவைத், ஆபிட்ஜான்- ஐவரிகோஸ்டில் பிரசஙகிக்கப்பட்டது)
1 சமீபத்தில் நான் என் கிராமத்தில் இருந்தேன், அங்கு நிகழ்ந்த, தேவதூதர்கள் பாடின, அந்த நிகழ்வை கொண்டாடுவதற்காக முதல் தடவையாக அவர்கள் தையல் சீருடைகளை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்று எனக்கு கூறப்பட்டது ... எல்லோரும் நன்கு அறிந்த பழைய நிகழ்வு அது. தேவதூதர்கள் அங்கு பாடினர் என்பதை புறக்கணிக்கிறவர்களான ஒரு ஆணோ பெண்ணோ அபிட்ஜியின் பன்னிரெண்டு கிராமங்களிலும் இல்லை...
2 சரி, இப்பொழுது பாலியல் பாவம் சம்பந்தமாக நான் அதை கூற விரும்புகிறேன், சகோதரன் ஒருவன் விலக்கி வைக்கப்பட்ட அவனது காலத்தை முடித்துவிட்டு, அந்த பெண் இல்லாமல் திரும்பி வரும்போது, சபையால் அவனுக்காக ஜெபம் செய்ய முடியாது, அவன் ஒரு பொறுப்பை கொண்டிருந்தவனானால் அல்லது ஒரு பொறுப்பு கொண்டிருக்கவேண்டியவன் என்றால், அவனால் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு எதையும் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவர் ஒரு சகோதரன் தான் மேலும் பிற காரியங்களுக்காக அறிக்கை செய்வான்.
3 யூதர்களையும் நம்மையும் போல நமது பிள்ளைகளும் நமது பேரப்பிள்ளைகளும் உயிர்வாழும் தீர்க்கதரிசிகளை நேசிப்பார்களாக. ஓசியா 12:14 மற்றும் 2 நாளாகமம் 20:20 உங்களது விசுவாசத்திற்கு அஸ்திவாரமாக இருக்கக்கடவது மேலும் உயிர்வாழும் தீர்க்கதரிசி சொல்வதைக் கேட்பதில் பிரியப்படுவீர்களாக. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
4 சரி! இந்த மாலையில் "கூடாரத்தின் கீழ் ஊழியம்" என்னும் பொருளின் பேரில் நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். இது வில்லியம் பிரன்ஹாம் காலம் முதற்கொண்டு வந்ததான ஒரு காரியமல்ல ஆனால் ஒரு பழமையான காரியம், சாயங்கால நேரத்தில் எளிய விதத்தில் அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வில்லியம் பிரன்ஹாமுக்கு முன், இந்த தரிசனமானது பழைய ஏற்பாட்டில் மோசே மற்றும் எலியாவின் ஊழியங்களில் முதலில் காணப்பட்டுள்ளது.
5 நமது காலத்துக்கு, அனைத்தும் 1955 ம் ஆண்டு டிசம்பர் முதல் துவங்கியது. அப்போதுதான் வில்லியம் பிரன்ஹாம் மூன்றாம் இழுப்பு மற்றும் அறியாமொழி தொடர்பாக இந்த கூடார தரிசனத்தை கொண்டிருந்தார்.
6 வில்லியம் பிரன்ஹாம், ஏழாவது முத்திரை, பத்தி. 299 ல் இவ்வாறு கூறினார்: "... பின்னர் அவர் என்னை எடுத்து கொண்டுசென்று, என்னை ஒரு கூட்டம் நடக்குமிடத்தில் உட்காரவைத்தார். அது ஒரு கூடாரத்தைப்போல அல்லது ஒரு பேராலயத்தைப் போல காட்சியளித்தது. அங்கு நான் பார்த்த பொழுது ஓரத்தில் ஒரு பெட்டியைப் போல, ஒரு சிறிய ஸ்தலம் அந்தப்பக்கமாக இருந்தது. மேலும் அந்த ஒளியானது எனக்கும் மேலாக காணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன், நீங்கள் புகைப்படத்தில் காணும் ஒளிதான் அது. அது என்னிடமிருந்து, இவ்விதமாக சுழன்று சென்று அந்த கூடாரத்தின் மீது தங்கி, என்னை நோக்கி, "உன்னை அங்கு சந்திப்பேன். இதுதான் மூன்றாம் இழுப்பு...", என்றது. அதனுடன் மூன்று மகத்தான காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன, ஒன்று இன்றைக்கு அல்லது நேற்று திறக்கப்பட்து, இன்னொன்று இன்றைக்கு வெளியானது, மேலும் என்னால் வியாக்கியானிக்க முடியாத இன்னொன்று அங்கு உள்ளது, ஏனென்றால் அது ஒரு அறியாமொழியில் உள்ளது.".
7 நீங்கள் பார்க்கிறீர்களா? 1993-ல் வில்லியம் பிரன்ஹாம், ஒரு புதிய நாமத்தின் கீழும் புதிய தோற்றத்தில் கீழும் அறியாமொழிக்கு பின்னால் அமைந்திருக்கும் கூடார ஊழியத்திற்கு திரும்பி வருகையில், அவருடைய சொந்த சந்ததியானது, பேராலயங்களில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள், உதாரணமாக பிரன்ஹாம் கூடாரத்தை தானியேல் 11 பற்றிய பிரசங்கத்தில் நாம் தெளிவாக பார்த்தோம்.
8 மேலும் உலகம் முழுவதிலுமுள்ள பிரன்ஹாமிஸ்டுகள் அவ்விடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்... அங்கே பிரன்ஹாம் கூடாரத்தில் இப்பொழுது கத்தோலிக்க ஆலயங்களில் உள்ளது போல சிலுவைகளும் அவைகள்மேல் இயேசுவின் உருவங்களும் உள்ளன.
9 ஒரு கூடாரமானது மிகவும் தாழ்ந்த வகையான குடியிருப்பாக இருக்கையில் பிரன்ஹாம் கூடாரமோவெனில் ஒரு பேராலயமாக மாறிவிட்டது. மேலும் வழியோரத்தில் உள்ள, இந்த சிறிய கட்டிடம், லோகாட்ஜ்ரோவின் இந்தப் பெட்டியானது ஒரு உதாரணமாக உள்ளது. வில்லியம் பிரன்ஹாம் இவ்வாறு கூறினார்: "... ஒரு சிறிய பெட்டி போன்று, ஒரு சிறிய ஸ்தலம் அந்தப்பக்கமாக [வழியோரத்தில்] இருந்தது. மேலும் அந்த ஒளியானது எனக்கும் மேலாக காணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்". [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
10 மேலும் 1997-ல் நான் இதைப் பார்க்கும் முன்பு, 1993-ல் ஒரு சொப்பனத்தில் இந்த சிறிய கட்டுமானத்தை பார்த்தேன். மேலும் உள்ளே நான் வார்த்தைகளை கேட்டேன்...
11 .1955 முதல், ஆண்டுக்குப் பின் ஆண்டாக, அவரது இறப்பு வரை, வில்லியம் பிரன்ஹாம் இந்த தரிசனத்திற்கு திரும்பிச் செல்கிறவராக இருந்தார். அது ஒரு மர்மமான தரிசனமாக அவரால் குறிக்கப்பட்டிருக்கிறது, அவரை விசுவாசிக்கிற அனைவராலும் அப்படி குறிக்கப்பட்டுள்ளது. வில்லியம் பிரன்ஹாம் முன்னமாகவே அடக்கம் பண்ணப்படாமல் ஏப்ரல் 11, 1966 அன்று செய்யப்பட்டிருந்தால், அதற்கு காரணம் வரவிருக்கும் ஒரு பணியை தெளிவாகக் காண்பித்த இந்த தரிசனம்தான். மேலும் வரவிருக்கும் ஒரு பணியை காண்பிக்கிற இந்த தரிசனத்தை யாராலும் சந்தேகிக்க முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா?
12 வில்லியம் பிரன்ஹாம் டிசம்பர் 24, 1965 அன்று இறந்தார். வில்லியம் பிரன்ஹாமின் இறுதிச் சடங்கு டிசம்பர் 29, 1965 அன்று நடந்தது. 1965 டிசம்பர் 29 அன்று வில்லியம் பிரன்ஹாம் உயிர்த்தெழுந்து வருவார் என்று பிரன்ஹாமிஸ்டுகள் நம்பினர், ஆனால் உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, சரீரமானது அடக்கம் பண்ணப்படவுமில்லை. அதை அறிவிப்பதற்கு துணிவுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக, மேடா இன்னும் அடக்கஸ்தலத்தை தேர்வு செய்யவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். ஒரு கிறிஸ்தவன் பொய் சொல்லக்கூடாது! நீங்கள் காண்கிறீர்களா?
13 கூடாரத்தின் கீழ் ஊழியத்தின் நோக்கத்தோடு, கர்த்தரை போன்று வில்லியம் பிரான்ஹாமும் ஈஸ்டர் நாளன்று உயிர்த்தெழும்படிக்கு, சடலமானது தொடர்ந்து பராமரிக்கப்பட்டு, 1966 ன் ஈஸ்டர் வரைக்கும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இன்றைய தினம் உள்ள அளவுக்கு விஞ்ஞானம் வளர்ச்சியடையாத ஒரு காலத்தில், சடலத்தின் பராமரிப்புக்காக அளவிடமுடியாத செல்வம் செலவழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. வில்லியம் பிரன்ஹாமின் எலும்புகள் ஏற்கனவே மறுபடியும் இணைந்துருவாகிவிட்டதாக மருத்துவர் சொல்லியிருப்பதாக அவர்கள் வதந்தியைச் சுற்றிலும் பரப்பியிருந்தனர். அது ஏன்? கூடாரத்தின் கீழான ஊழியத்தின் காரணமாகத் தான்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
14 1966 ம் ஆண்டு ஏப்ரல் 10 ம் தேதி ஈஸ்டர் நாளன்று வில்லியம் பிரன்ஹாம் உயிர்த்தெழாத நிலையில், அவரது உடல் அடக்கம் பண்ணப்பட்டது, அதாவது ஈஸ்டர் மறுநாள் 1966 ஏப்ரல் 11ம் தேதி எவால்ட் பிராங்க் மற்றும் பிரன்ஹாமிஸ்டு உலகின் முன்னணி தலைவர்களின் முன்னிலையிலும் நடந்தது. "ஒன்லி பிலீவ்" என்னும் பல்லவியானது, அதாவது "விசுவாசிக்க மாத்திரம்செய்" என்ற பாடலானது கூடார ஊழியத்தின் நோக்கத்தில் ஒரு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பாடப்பட்டது. எவால்ட் பிராங்கும் கூட வில்லியம் பிரன்ஹாமின் உயிர்த்தெழுதலுக்காக இரண்டு மணிநேரம் பாடினான்! மேலும் இன்று, அவன் அதை கண்டனம் செய்கிறான். நான் மாய்மாலக்காரர்களையும் துரோகிகளையும் விரும்புவதில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
15 இப்போது, விசுவாசிக்க மாத்திரம்செய் என்று அவர்கள் ஏன் இரண்டு மணிநேரமளவும் பாடிக்கொண்டிருந்தனர்? ஏனென்றால் வில்லியம் பிரன்ஹாமுக்கு தேவன் இன்னொரு கட்ட ஊழியத்தை வாக்குப்பண்ணியிருந்தார், ஒரு தீர்க்கதரிசனமாகவே மீந்திருந்ததும் கூடார ஊழியம் என்று அழைக்கப்பட்டதுமான இன்னொரு கட்ட ஊழியம்.
16 இருப்பினும் 1933 முதல், வில்லியம் பிரன்ஹாம், வல்லமையின் பெரிய வெளியரங்கமான காட்சிகளுடன் முதல் இரண்டு இழுப்புகளை நிறைவேற்றுவதில் பெருமளவிலான மக்கள் கூட்டத்தை வடிகட்டியுள்ளார். ஆனால் ஓர் நான் வருமென்றும், டிசம்பர் 1955 ன், இந்த தரிசனத்தின் படி, ஒரு குறிப்பிட்ட ஊழியமானது கூடாரத்தின் கீழாக இருக்குமென்றும் அங்கே தேவன் அவரோடு வெளியரங்கமான காட்சியாக இல்லாமல், ஒரு வித்தியாசமான வழியில் இடைபடுவார் என்றும் அவரை விசுவாசித்த அனைவரும் அறிந்திருந்தார்கள்.
17 "ஜனங்கள் ஏன் மிகவும் அலைக்கழிக்கப்பட்டவர்களாக உள்ளனர்?" என்று தலைப்பிடப்பட்ட 1956 ம் ஆண்டின் ஒரு பிரசங்கத்தில், வில்லியம் பிரன்ஹாம் இவ்வாறு கூறுகிறார், பத்திகள் 32 மற்றும் 33: "... அந்தக் கட்டிடத்திற்குள் போவதற்காக, அந்த ஒளி என்னை விட்டுப்போனதை கண்டேன், அந்தக் கட்டிடத்திற்குள் போக; அப்போது ஒரு சத்தம் என்னை நோக்கி, "நான் உன்னை அங்கு சந்திப்பேன்; அது மூன்றாவது இழுப்பாக இருக்கும்." என்றது. நான், "ஏன்?" என்றேன். அவர், "நல்லது, அது மற்றவற்றை போல ஒரு வெளியரங்க காட்சியாக இருக்காது." என்றார். நான் வந்தேன் ...". நீங்கள் காண்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
18 இந்த மூன்றாம் இழுப்பு ஒரு அறியாமொழிக்கு பின்னால், வெளியரங்கமான காட்சிகளுக்கு அப்பாலிருந்து வருமென்பதை அவர் கூறுகிறார்!
19 பிரன்ஹாம் கூடாரத்திலிருந்தும் உலகம் முழுவதிலிருந்தும் ஜனங்கள் கண்டதைவிடவும் குறைவான ஜனங்களைக்கொண்டதான ஒரு ஊழியத்தை இனி வில்லியம் பிரன்ஹாம் கொண்டிருக்க முடியுமா அல்லது அறியாமொழிக்கு பின்னால் கூடாரத்தின் கீழான ஊழியம் செய்ய திரும்பவும் ஜீவியத்திற்கு வர முடியுமா?
20 அவரது செய்தி மனமாற்றம் செய்த அந்த அனைவரும் உலகமெங்கும் செயல்படுவதை நிருத்தாதிருக்கையில், இப்போது சிங்காரிக்கப்பட்டிருக்கும் பிரன்ஹாம் கூடாரத்திலிருந்து மிக தொலைவில், அவருடைய இறப்புக்கு முன்பு அவரை பின்பற்றின கணக்கில்லா பெருங்கூட்டத்திற்கு அப்பால் இருந்தும், சிறிய தோற்றங்கொண்ட ஒரு ஊழியத்துக்காக, வில்லியம் பிரன்ஹாம் 1965 க்கு பிறகு எப்படி உயிர்பெற்று வரமுடியும்? அது எப்படி சாத்தியமாகும்? அவர் மற்றொரு மனித தோற்றத்தின் கீழ் உயிர்பெற்றுவருதலும், மேலும் வெளியரங்கமான காட்சிகளிலிருந்து தூரமாக, அறியாமொழிக்கு பின்னால் வருகிற இந்த கூடார ஊழியத்தை நிறைவேற்ற, அவர்மீது தங்கியிருந்த எலியாவின் ஆவியானது மற்றொரு நபர் மீது திரும்பவருதலுமே, அது சாத்தியமாவதற்கான ஒரே வழி. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
21 அந்த ஒளி அவரை விட்டுப்போனது என்று வில்லியம் பிரன்ஹாம் கூறுகிறார், ஏழாவது முத்திரையில் அவர் இவ்வாறு கூறுகிறார்: "அந்த ஒளியானது எனக்கு மேலாக இருந்த யாருடனோ பேசுவதைக் நான் கண்டேன் ...".
22 வில்லியம் பிரன்ஹாம் உண்மையில் ஒரேமுறை நடுராத்திரி சத்தம் பற்றி குறிப்பிட்ட போது, அவர் இவ்வாறு கூறினார், "... இந்த நடுராத்திரி சத்தத்திற்கு ஆயத்தமாகுங்கள்! நீங்கள் நினையாத நேரத்தில் அது வரும். அந்த சத்தம் அவிசுவாசிக்கின்ற உலகத்தின் நடுவில் உண்டாகாது; அது ஒரு இரகசியமாக இருக்கும்.". ["இணையும் நேரமும் அடையாளமும்" பத்தி-134]. வில்லியம் பிரன்ஹாம் : "அது ஒரு இரகசியமாக இருக்கும்" என்று கூறுகிறார், அதாவது: பெரிய வெளியரங்கமான காட்சிகளில் இருந்து வெகுதூரமாக இருக்கும். மேலும் அதனோடு கூட, 1 இராஜாக்கள் 19-ல் உள்ள அவனது கூடார தரிசனத்தில், தீர்க்கதரிசி எலியா அதை "மெல்லிய சத்தம்" என்று அழைத்தான், அதை இரகசியம் எனலாம்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
23 ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நடுவே, அனைத்து பிரன்ஹாமிஸ்டுகளும் அதை தவறவிட்டனர். ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் வேதாகமம் காட்டுகிறது. உங்களால் காணமுடிகிறதா? அது மோசேயின் காலத்திலும் எலியாவின் காலத்திலும் செயல்பட்ட ஒரு பழைய பிசாசாக இருக்கிறது, இப்போது அது பிரன்ஹாமிஸ்டு சந்ததியினிடம் செயல்படுகிறது.
24 ஒவ்வொரு தீர்க்கதரிசியின் காலத்தையும் கவனியுங்கள், இந்த பக்திமிக்க பிரன்ஹாமிஸ்டுகள் அனைவரும் பிசாசின் பிள்ளைகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், அதனால்தான் அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கூடாரத்தின் கீழ் ஊழியம் இங்கே நடைபெருவதை அவர்களால் அறியமுடிகிறதில்லை. அது அப்படியிருக்குமென்று வில்லியம் பிரன்ஹாம் சொன்னதைப் போலவே சரியாக உள்ளது! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. கூடாரத்தின் கீழாக ஊழியம் ஒன்று இருக்கும் என்று வில்லியம் பிரன்ஹாம் கூறியிருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், ஆனால் உண்மையில் அது நடக்குமா? அது எப்படி நடக்கும்? அதைப்பற்றி எதுவும் அவர்களுக்கு தெரியாது!
25 அந்த கூடார தரிசனம் பற்றிய கேள்வியை போப்பாண்டவரான எவால்டு ஃபிராங்கிடம் கேட்கப்பட்டபோது, அவனால் பதிலளிக்க முடியவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. "மனிதர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள் ... தேவன் அவருடைய வார்த்தையால் பதிலளிக்கிறார்" என்னும் அவனது புத்தகத்தில், கேள்விகள் எண் 29 மற்றும் 30 ஆகியவற்றில் அது காணப்படுகிறது. அவன் புதரை சுற்றி அடிக்கிறானே தவிர அவனால் பதில் சொல்ல முடியவில்லை. உங்களால் காணமுடிகிறதா? அங்கே கூடாரத்தின் கீழ் ஒரு ஊழியம் இருக்கிறதா அல்லது இல்லையா? அது இல்லையென்றால், வில்லியம் பிரன்ஹாம் பல ஆண்டுகளாக பொய்யான வெளிப்பாட்டில் நடந்தார். அங்கு இருக்குமென்றால், நீங்கள் அதை எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்!
26 அறியாமொழியென்பது என்ன? அவர்களுக்கு தெரியாது! இதைப் பற்றி என்ன, அதைப் பற்றி என்ன? முன்னேறிச் செல்ல அவர்கள் மறுத்ததால் அதை அறிந்து கொள்ள முடியாமல் அவர்கள் வெறுமனே ஒரு மிருகமாகிவிட்டனர். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. வில்லியம் பிரன்ஹாம் டிசம்பர் 29, 1965 ல் அல்லது ஏப்ரல் 10, 1966 ல் உயிர்த்தெழுவார் என்று சொன்ன அந்த ஆவியானது, ஏப்ரல் 11, 1966 ன் "விசுவாசிக்க மாத்திரம்செய்" என்ற சத்தத்தின் நேரத்தில் அவர்களை அபிஷேகத்தால் நிரப்பிற்று, மேலும் அது பரிசுத்த ஆவி அல்ல ஆனால் தானியேல் 8 ன் நான்காவது மிருகத்தின் ஆவியான ஒரு பிசாசு தான் அது! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. 1966 ஏப்ரல் 11, திங்கட்கிழமை அன்று அவர்கள் தவறின் முத்திரையால் முத்திரையிடப்பட்டனர். இவ்வளவு "கொள்கைகள்" எல்லாவற்றிற்கும் அடிப்படையான இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு அவர்களை வழிநடத்தியது இந்த கூடாரத்தின்கீழ் ஊழியம் பற்றி அவர்களுடைய புரிந்துகொள்ளுதல் தான்.மோசேயின் சரீரத்தை தேவன் மறைக்கவில்லை என்றால், கூடாரத்தின் கீழ் ஒரு ஊழியம் உள்ளதிநிமித்தம் சாத்தானின் இந்த குமாரர்கள் அவனது சரீரத்தை எல்லா இடங்களுக்கும் இழுத்துச் சென்றிருப்பார்கள்.
27 ஓ சகோதரரே, அது ஆச்சரியமாக இருக்கவில்லையா? அது தவறிப்போகமுடியாத உறுதிப்பாடு என்பதை நான் உணருகிறேன், நான் சொல்வது இமியளவு பிசகாத சத்தியமாகும்! இந்த நேரத்தில், இந்த இடத்தின் சூழ்நிலை ஆவிக்குரியவிதமாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. யூதா 9-ம் வசனத்தை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? மோசேயின் சரீரத்தை குறித்து சாத்தான் தர்க்கம் பண்ணினான் என்று யூதா 9-ம் வசனத்தில் ஏன் சொல்லப்பட்டுள்ளது? யோசுவா அங்கு இருந்தான், யோசுவாவை அவர்கள் பின்பற்ற வேண்டியிருந்தது, ஆனால் யூதர்கள் மோசேயின் சரீரத்தைத் தேடிக்கொண்டிருந்தனர், ஏனெனில் மோசே உயிர்த்தெழுந்து நிறைவேற்றவேண்டிய தீர்க்கதரிசனங்கள் அங்கு இருந்தன! அதனால்தான் அவர்கள் இருபது லட்சம் பேர், யோசுவாவும் காலேபும் தவிர, எல்லாரும் மரித்தனர்! உங்களால் காணமுடிகிறதா?
28 சாத்தானின் கருவிகளாக இருந்து மோசேயின் சரீரத்தை தேடினவர்கள் யார்? எமோரியரல்ல, ஏத்தியரல்ல, பெரிசியரல்ல, ஏவியரல்ல, எபூசியரல்ல ... ஆனால் அங்கே மோசே ஏற்படுத்திய ஜனங்களான யூதர்கள் தான், எண்ணாகமம் பதினொன்றில் தேவனின் ஆவி எவர்கள் மேல் இறங்கிவந்ததோ அவர்களும், அவனது முகத்திற்கு முன்பாக தீர்க்கதரிசனம் உரைத்தவர்களும் தான். உங்களால் காண முடிகிறதா?
29 ஒரு பிரன்ஹாமிஸ்டு புரிந்துகொள்ளும்படிக்கு நாம் விளக்கமுடியாத காரியங்கள் இவைகள், அதை விளக்குவதில் நான் ஐந்து ஆண்டுகளை செலவழித்தேன் ஆனால் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது நான் அவர்களை பார்க்கையில், நான் சாதாரணமாக ஒரு மனிதனை பார்ப்பதுபோல் அவர்களை பார்ப்பதில்லை ஆனால் பிசாசின் குமாரனொருவன் எவ்விதமாக இருக்கிறான் என்பதை அவர்களினூடாக நான் பார்க்கிறேன்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
30 சகோதரரே, கலாத்தியர் 1:8-ன் கீழ் அவர்களை வெறுமனே பாருங்கள்! ... வெளியரங்கமான காட்சிகளுக்கு அப்பால், தூரத்திலிருந்து வருகிறதும், அறியாமொழிக்கு பின்னால் உள்ளதுமான கூடாரத்தின் கீழ் ஊழியத்தை ஒப்புக் கொள்ளாதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. வில்லியம் பிரன்ஹாமுக்கு மேலே அந்த வெளிச்சம் பேசிக்கொண்டிருந்தவரான, அந்த "யாரோ ஒருவருக்கு" செவி கொடுக்காதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
31 1 இராஜாக்கள் 19:15-16 ஐ எடுப்போமாக...: யேகோவா எலியாவை நோக்கி: போ, உனது வழியே நீ திரும்பி, தமஸ்குவின் வனாந்தரத்திற்குப் போ; நீ போய்ச் சேருகையில், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவாயாக; பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை நீ இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவாயாக; பின்பு ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார். நீங்கள் காண்கிறீர்களா?
32 தேவன் எலியாவுக்கு மூன்று பணிகளைத் கொடுக்கிறார். எலியா மூன்றுபேரை அபிஷேகம் செய்ய வேண்டும்! ஆசகேல், யெகூ, எலிசா! ஆனால் அந்த மூன்றுபேரில் எலிசாவை மட்டுமே 1 இராஜாக்கள் 19:19 ல் எலியா அபிஷேகம் செய்தான். தொடர்ந்து 2 இராஜாக்கள் 2 ல், யெகூவும் ஆசகேலும் அபிஷேகம் செய்யப்படாமலேயே எலியா எடுத்துக் கொள்ளப்படுகிறான். சம்பவித்தது என்ன? எலியாவுக்கு ஒரு கள்ள தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்டதா? ஒரு தரிசனத்தில் தேவனால் காட்டப்பட்டது நிறைவேற்றப்படாமல் இருக்க முடியுமா? அங்கு ஒரு சிக்கல் உள்ளது!
33 மோசேயையும் வில்லியம் பிரன்ஹாமையும் பொறுத்தவரையில், யெகூவையும் ஆசகேலையும் எலியா அபிஷேகம் செய்யவேண்டிய கூடார ஊழியமானது, கூடார தரிசனமானது, இன்னும் நிறைவேறவில்லை என்பதை தீர்க்கதரிசிகளின் புத்திரர் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எலியாவைத் தேடிச்செல்ல அனுமதிக்கும்படிக்கு எலிசாவிடம் கேட்கிறார்கள். மோசேயின் சரீரத்துடன் பிசாசின் குமாரருக்கு செய்யமுடியாமற்போனதை, தேவன் எலியாவை எடுத்துக்கொள்ளாமலிருந்தால், எலியாவின் சரீரத்துடன் அவர்கள் செய்யப் போகிறார்கள்!
34 மர்மம் என்னவென்றால் எலியாவுக்காகப் போனவர்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளோ அல்லது பாகால் செபூப், சுக்கோத் பெனாத், நர்கல், ஆஷிமா, நிப்ஹாஸ், தர்தாக், அத்ரம்மெலெக்கு ஆகியவற்றின் ஆசாரியர்களோ அல்ல ஆனால் தேவனின் உண்மையான ஊழியர்களும், தாழ்மையும் பக்தியுமுள்ள ஜனங்களும், தீர்க்கதரிசிகளின் புத்திரர் என அழைக்கப்பட்டவர்களும், அவர்களது நாளின் வெளிச்சத்துடன் நடந்தவர்களும், எலியாவுடன் நடத்தவர்களுமாம். அவனது எஜமான் எடுத்துக்கொள்ளப்படுவான் என்று வெளிப்பாட்டினால் எலிசாவுக்குச் சொன்ன அதே ஜனங்கள் தான் அவர்கள். மூன்று நாட்களளவும் எலியாவுக்காக அவர்கள் எல்லா இடத்திலும் தேடினார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. இதுதான் சரியாக 1966 ஏப்ரல் 11 அன்று அங்கே பிரன்ஹாமிஸ்டுகளுடனும் நடந்தது.
35 இருந்தாலும், இந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமானது, எலிசா என்னும் நபராக பூமியில் ஏற்கனவே இருந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. .. அறியாமொழி என்னும் பிரசங்கத்தை கேளுங்கள் அல்லது படியுங்கள் பிறகு தேவன் எதையாவது செய்ய வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்கள்.
36 உங்களைத்தான், திமிர்பிடித்த பெருமைக்கார பிரன்ஹாமிஸ்டுகளே, சூது நிறைந்தவர்களே, மத்தேயு 25:6 செய்ய வேண்டும் என்று வேதாகமம் கூறுகிற எதை நான் செய்யாமல் இருந்தேன் என்று எனக்குச் சொல்லுங்கள்...
37 கீழே அவர்களிடமாக போக வேண்டாம், அவர்களோடு உண்ணவும் குடிக்கவும் வேண்டாம் என்று தேவன் நமக்கு கூறியுள்ளார். ஆனால் பிரன்ஹாமிஸ்டுகளை பாருங்கள், பழைய தீர்க்கதரிசியின் அந்த வித்தானது, 1 இராஜாக்கள் 13 ல் உள்ளது போல மேடைகளின் ஆசாரியர்களோடும் ராஜாக்களோடும் ஒத்துப்போய் அவர்களுடனே உண்ணவும் குடிக்கவும் செய்கிறார்கள். அதனால்தான் அவர்களுடைய ஒலிநாடா முன்னுரையில் நீங்கள் இப்படி கேட்கலாம்: "சாயங்காலத்திலே வெளிச்சம் இருக்கும் என்று சகரியா 14:7 அறிவிக்கிறது... ஒருபோதும் தோல்வி அடைந்திராத நூறாயிரக்கணக்கான தீர்க்கதரிசனங்கள், ஒரு முறை கூட தவறினதில்லை; மற்றவர்களுக்கும், அவர்களுடைய பழக்கவழக்கங்களுக்கும், அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் ஓர் ஆழ்ந்த மரியாதை...".
38 கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு மற்றும் சுவிசேஷக சபைகள் இருப்பதற்கும் மதிக்கப்படுவதற்கும் ஒரு உரிமை உண்டு என்று எவால்டு ஃபிராங்க் சொல்லலாம். ஆனால் நடுராத்திரியில் இருக்கும் நாம், இந்தவிதமாக காரியங்களைப் பார்ப்பதில்லை.
39 தேவன் சிருஷ்டித்த எந்த உயிரையும் நாம் மதிக்கிறோம். தேவன் உருவாக்கிய அனைத்தையும் பற்றி பேசும்போது மனிதவர்க்கம், விலங்குகள், பூச்சிகள் கூட ... மதிக்கப்படுவதற்கும் இருப்பதற்குமுள்ள உரிமைகொண்டுள்ளது என நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் கத்தோலிக்கம், புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் ஆகியவை உட்பட இஸ்லாமையும் யூதத்தையும் உருவாக்கியது தேவன் அல்ல. அதனால்தான் நாம் அவர்களைக் குற்றவாளிகளாக தீர்க்கிறோம். ஆகையால் அவர்களை கிறிஸ்துவுக்குள் சகோதரராக அழைப்பதில்லை. இருப்பதற்கு அவர்களுக்கு உரிமை இல்லாததினால்தான் தேவன் அவர்களுக்காக இறுதி நியாயத்தீர்ப்பையும் அக்கினியையும் ஆயத்தம் செய்துள்ளார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
40 அந்த எவால்டு ஃப்ராங்க், பில்லி கிரஹாம், பென்னி ஹின், டாமி ஆஸ்பான் ஆகியோர் இருப்பதற்கு உரிமை உண்டு என்று ஏற்றுக்கொள்கையில், அவர்களை நம்பாமல் இருத்தல் என்னுடைய கடமையாக உள்ளது, ஏனெனில் அவர்கள் என்னை நரகத்திற்கு கொண்டுசெல்வார்கள், ஆகையால் அவர்களது பழக்கவழக்கங்களுக்கும் அவர்களது நம்பிக்கைகளுக்கும் நான் ஆழ்ந்த மரியாதை கொண்டிருக்க முடியாது. அதனால்தான் நான் அவர்களின் புத்தகங்கள், பிரசுரங்கள் மற்றும் சுற்றறிக்கைகளை சுட்டெரிக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்கிறார்கள் .
41 இப்போதும் வில்லியம் பிரன்ஹாமை நோக்கி பாருங்கள், ஆதியாகமம் 12 ல், பஞ்சத்தின் நேரத்தில், தேவன் ஆபிரகாமை நோக்கி: தங்கும்படிக்கு, அங்கே எகிப்துக்கு போ என்றார். கொஞ்சம் கழித்து, ஆதியாகமத்தில் 26 ல், அதே பஞ்சத்திற்கு, தேவனின் வார்த்தையானது, அவனது குமாரனான ஈசாக்கிடம், "எகிப்து போகாதே ..." என்கின்றது! நீங்கள் காண்கிறீர்களா? ஆதியாகமம் 26:1-2-ல் நான் அதை வாசிக்கப் போகிறேன். "ஆபிரகாமின் நாட்களில் உண்டாயிருந்த பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று;... யேகோவா அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாதே என்றார்...". ஆமேன்!
42 இது என்ன? இந்த மாலையில் என்ன சொல்ல வேண்டும்? வில்லியம் பிரன்ஹாம் எகிப்தியரானார். வில்லியம் பிரன்ஹாம் ஒரு அஞ்ஞானி ஆனார். வில்லியம் பிரன்ஹாமுக்கு, ஒரு கத்தோலிக்க பாதிரியார் தேவனின் மனுஷனாக இருந்தான், ஒரு சுவிசேஷகசபை போதகன் தேவனின் மனுஷனாக இருந்தான். டாமி ஆஸ்பான், ஓரல் ராபர்ட்ஸ் தேவனின் மனுஷர்கள். பில்லி கிரஹாம் தேவனின் ஒரு மனிதன். வில்லியம் பிரன்ஹாமுக்கு, டாமி ஆஸ்போர்ன், பென்னி ஹின், மோரிஸ் செருல்லோ மற்றும் அந்த மற்ற அனைவரின் மேலும் செயல்படுகிறதான பரிசுத்த ஆவியானது (holy-spirit) மெய்யான பரிசுத்த ஆவியாய் (Holy-Spirit) இருந்தது.
43 வில்லியம் பிரன்ஹாமுக்கு, சுவிசேஷக சபைகளில் ஊழியம் செய்துகொண்டிருந்த பரிசுத்த ஆவி, மெய்யான பரிசுத்த ஆவியாக இருந்தது. "அவர்களுக்கு எதிராக எனக்கொன்றுமில்லை, அவர்கள் தேவ மனிதர்களாக இருக்கிறார்கள், ஆனால் நான் அந்த ஸ்தாபனத்திற்கு எதிராக இருக்கிறேன், நான் அந்த அமைப்புமுறைக்கு எதிராக இருக்கிறேன்" என்று வில்லியம் பிரன்ஹாம் கூறினார். ஆனால் அந்த அமைப்புமுறை, அது அவர்கள் தான்: பில்லி கிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஆஸ்பான் மற்றும் அந்த அனைவரும்... அமைப்பு, அது முழு கிறிஸ்தவமாக உள்ளது மேலும் அந்த அமைப்புமுறையானது சாத்தானின் நிறுவனமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
44 மேலும் கிறிஸ்தவம் அதாவது கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக சபைகள் மற்றும் மீதமுள்ள அனைத்தும், அது பூமியில் சாத்தானுடைய இராஜ்ஜியமாக இருக்கிறது. தேவனின் மனிதன் ஒருவன் இந்த பழக்கவழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் ஆழ்ந்த மதிப்புகொண்டிருக்க முடியாது, ஏனென்றால் அவைகள் சாத்தானின் பழக்கவழக்கங்களாக இருக்கின்றன மேலும் முடிவு, அது நரகமே. அதனால்தான் தேவன் கூடாரத்தின் கீழ் ஊழியத்தை முன்னறிவித்திருந்தார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்"என்று கூறுகிறது].
45 முழு சுவிசேஷக புருஷர்களோடு ஒத்திருந்துகொண்டு கூடாரத்தின் கீழ் ஊழியத்தை வில்லியம் பிரன்ஹாம் எப்படி செயல்படுத்த முடியும்? அவரால் இயலாது. அது சாத்தியமல்ல. வில்லியம் பிரன்ஹாம் ஸ்தாபனத்துக்குள், அந்த அமைப்புமுறைக்குள் இருந்தார். வில்லியம் பிரன்ஹாம் ஒரு எகிப்தியனாக ஆனார், அவர் சாத்தானின் ஆசாரியனாக ஆனார்; தேவகுமாரரை பிசாசின் குமாரர்களிடமிருந்து பிரிக்க தேவன் வேறு ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. அங்குதான் அது, கூடாரத்தின் கீழ் ஊழியத்தின் குறிக்கோள் இருந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது]. கூடாரத்தின் கீழ் ஊழியத்தின் குறிக்கோள் பற்றி ஓர் நாள் நான் பிரசங்கிப்பேன்.
46 ஏப்ரல் 24, 1993 ன் தரிசனத்தில், கிரகணமும் காரிருளும் பூமியின் மீதெங்கும் இருந்தது. முழு பூமியின் மேலும் அங்கே எந்த வார்த்தையோ, எந்த வெளிச்சமோ, எந்த சத்தியமோ இன்னுமாக இருக்கவில்லை, ஆனால் தேவதூதனானவரும், ஆட்டுக்குட்டியும் இறங்கினபோது, பூமி மறுபடியும் பிரகாசமாயிற்று. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்று கூறுகிறது].
47 பிரன்ஹாமிஸ்டுகள் தேவனின் தரிசனத்தை இனி புரிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு உயிர்வாழும் தீர்க்கதரிசி இல்லை. அவர்கள் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். அதனால்தான் அவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து எனக்கு எழுதுகின்றனர்... "சகோதரர் பிலிப்பு, ஜோசப் கோல்மேன் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சகோதரர் பிலிப்பு, காங்கோ கின்ஷாசாவின் பியரி காஸைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சகோதரர் பிலிப்பு, பரூட்டி காசாங்கோ பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சகோதரர் பிலிப்பு, இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது என்ன? அது என்ன?.." இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக இருந்த பரிசேயர்களின் அதே ஆவிதான் அது. அவர்கள் நிச்சயம் அற்றவர்கள் ஆனால் நிச்சயத்தன்மை என்பது, இதுதான் அது என்று, அறியாததை அறிந்து கொள்வதல்ல, ஆனால் ஓசியா 12:14, 2 நாளாகமம் 20:20, யோவான் 6:28 ஆகியவற்றை செயல்படுத்துவதும், ஒருவன் தனது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை பின்பற்றுவதுமாம்.[ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமேன்" என்கிறார்கள் ]
48 நம்மைப் பொறுத்தவரை, இந்த பிரசங்கம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் சரி, அது வஸ்தியை வரவைக்காது, ஏனெனில் வஸ்தியால் வர முடியாது!
49 ஆனால் நீங்கள் ஒரு தேவகுமாரனாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் விசுவாசித்தால், ஆசியாவிலும், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், நீங்கள் எங்கிருந்தாலும், அறியாமொழிக்கு பின்னால் உள்ள கூடார தரிசனத்தை நிறைவேற்ற, அவர் கூறியபடியே, வெளியரங்கமான காட்சிகளிலிருந்து தூரமாக, அவர் அதை செய்வதற்கு, மற்றொரு தோற்றத்தின் கீழ், மற்றொரு பெயரின் கீழ், வில்லியம் பிரன்ஹாம் திரும்பவும் வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் "அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டோம்" என்று உங்கள் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் நீங்கள் சொல்லுவீர்கள்!".
50 உலகெங்கும் உள்ள சகோதரர்களே, சகோதரிகளே, இம்முறை நாம் ஆப்பிரிக்காவில் அவரது நட்சத்திரத்தை கண்டு நாம் அவரை பணிந்து கொள்ள வந்தோம்! ஆமேன்!
--:--
--:--