en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 71 (Kc.71) : ஆராதனை ஒழுங்குகள்
(2008 ஏப்ரல் 27 ஞாயிறு காலை அட்ஜாமின், அபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 சகோதரரே, ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படி நாம் கூட்டிச்சேர்க்கப்பட்டிருப்பது இன்னமும் ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. அது ஒரு மகத்தான காரியமாக இருக்கிறது ... [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
2 இந்த காலைவேளையில் நான் ஆராதனை ஒழுங்குகளின் பேரில் ஒரு பெரிய கருத்துக்கு பதிலளிப்பேன், ஆனால் அதற்கு முன்னர், நான் பதிலளிக்க வேண்டிய குறிப்பிட்ட எண்ணிக்கையான கேள்விகளை நான் கொண்டுள்ளேன்.
3 தொடக்கத்தில் மோசேயுடன் கூடாரங்களின் கீழ் ஒரு மகிமையான ஊழியம் இருந்தது. இறுதியில், இந்த பக்கத்தில், கூடாரத்தின் கீழ் உள்ள மகிமையான ஊழியம் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புடன் வருகிறது. மேலும் கூடாரத்தின் கீழ் ஊழியமானது ஆப்பிரிக்காவிலும், ஒரு ஆப்பிரிக்கன் மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கு காரணம் என்னவென்றால், நாம் அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கருப்பு இனம் மிக தாழ்ந்ததாக உள்ளது என்பதுதான். 1 கொரிந்தியர் 6:19 கூறுவதுபோல மனிதனின் சரீரமானது ஒரு வாசஸ்தலம் என்றால், கூடாரத்திற்கு முன்னடையாளமாக இருக்கக்கூடிய அந்த ஒன்று ஆப்பிரிக்கனுடையது தான். சுமார் நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் யூதர்கள் அடிமைகளாக இருந்தபோது நம்முடைய அதே நிலையில்தான் அவர்கள் இருந்தனர்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
4 நல்லது, நான் கேள்விகளுக்கு வருகிறேன் ... முதல் கேள்வி: "சகோதரன் பிலிப்பு, செய்திப் புத்தகங்களை விநியோகிப்பது தொடர்பாக எவால்டு ஃப்ராங்க் பற்றி நீங்கள் சொன்னதுபோலவே, அப்போஸ்தலனாகிய ஜோசப் கோல்மேன் முன்பொருதரம் தேவனுடைடைய பரிபூரண சித்தத்தில் இருந்திருக்க முடியுமா?"
5 தொலைபேசியும் தந்தியும் ஏற்கனவே இருந்த சமயத்தில் வில்லியம் பிரன்ஹாமின் மரணத்தை பற்றி யாரோ ஒருவரால் எவால்டு ஃப்ராங்க் கேள்விப்பட்டது 1966 ஜனவரி மாதத்தில் தான். இன்று நான் இறந்துவிட்டால், என் சீஷர்களில் ஒருவன் அதை அவனது தேசத்தில் கேள்விப்பட அது எவ்வளவு காலமாகும், எனக்குச் சொல்லுங்கள்? வில்லியம் பிரன்ஹாமின் சீஷனாக ஒருபோதும் இருந்திராதவனான ஜோசப் கோல்மேனுக்கும் அது அதே காரியம்தான்!
6 வில்லியம் பிரன்ஹாம் பூமியில் பிரசங்கிக்கும் போது ஜோசப் கோல்மேன் அவனது ஊழியத்தையும், அவனது செய்தியையும் கொண்டிருந்தான் மேலும் அவனது பிரசங்கமும் அங்கே ஒலிபரப்பப்பட்டது! டாமி ஆஸ்போர்னுக்கும், பல பெந்தேகோஸ்தே மற்றும் பாப்டிஸ்டு பிரசங்கிகளுக்காகவும் வில்லியம் பிரன்ஹாம் ஜெபித்ததுபோலத்தான், வில்லியம் பிரன்ஹாம் அவனுக்காகவும் ஜெபித்தார். வில்லியம் பிரன்ஹாமின் மரணத்திற்கு முன்பிருந்தே ஜோசப் கோல்மேன் பிரசங்கங்களை வெளியிடவும், வெளியிடுவதை அவன் தொடரவுமில்லையா?
7 வில்லியம் பிரன்ஹாம் தனது செய்தியை நம்பாத மக்களிடையே பிரசங்கிக்க முடியும், இந்த அர்த்தத்தில் அவர் திரளான பிரசங்கிகளுக்கும், அவர்களிடையே ஜோசப் கோல்மேன், டாமி ஆஸ்போர்ன் மற்றும் அவரை நம்பாதவர்களான அவனைப்போன்ற பல பிரசங்கிகளுக்காகவும் ஜெபம் செய்தார்.
8 ஆழம் ஆழத்தை கூப்பிடுகிறது என்னும் திரைப்படத்தில், பண்டைய காலங்களில் இருந்தது போன்று, அவனது பெந்தகொஸ்தே சபையில், ஒரு எழுப்புதல் இருக்கும் படிக்கு, ஒரு பிரசங்கிக்கு வில்லியம் பிரன்ஹாம் ஜெபிக்கவில்லையா? “டாமி ஹிக்ஸ் அல்லது ஓரல் ராபர்ட் இந்த நகரத்தில் பிரசங்கிப்பார், நீங்கள் போய் அவரது பிரசங்கத்தைகேட்கலாம் என்று வில்லியம் பிரன்ஹாம் தன்னுடைய சபைக்குச் சொல்லலாம். பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு நல்ல தேவ ஊழியன் தான் அது”. நீங்கள பார்க்கிறீர்களா? நான் உங்களை ஒரு சுவிசேஷகசபை தீர்க்கதரிசியிடத்திற்கு போகவும் பிரசங்கத்தை கேட்கவும், அவன் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவன் என்று கூறவும் எப்படி முடியும்? ஒரு சுவிசேஷகசபை தீர்க்கதரிசி எவ்வாறு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்க முடியும்?
9 ஆபிரகாமைப் போல, வில்லியம் பிரன்ஹாம் எகிப்தில் இருந்தார், அவர் ஒரு எகிப்திய ஆசாரியனாக இருந்தார். ஜீயஸ் (Zeus) தெய்வத்தின் ஒரு ஆசாரியனுக்கும், ஓசிரிஸின் ஆசாரியனுக்கும், எந்த எகிப்திய கடவுளின் ஆசாரியனுக்கும் அவர் ஜெபிக்க முடியும்! அவர்களுடைய பலிபீடங்களில் அவர் பலியிட்டார்! அவருக்கு, வில்லியம் பிரன்ஹாமுக்கு, எகிப்திய தெய்வங்களின் இந்த எல்லா ஆசாரியர்களும் தேவனின் ஊழியர்கள் தான்.
10 ஓரல் ராபர்ட், டாமி ஆஸ்போர்ன், டாமி ஹிக்ஸ் இன்னும் மற்றவர்களுடன் வில்லியம் பிரன்ஹாம் தோழமைகொள்ளவில்லையா மேலும் அவர் அவர்களை கிறிஸ்துவில் சகோதரர்கள் என்று அழைக்கவில்லையா? அவர்கள் ஒவ்வொருவரிலும், உதாரணமாக டாமி ஆஸ்போர்ன் விரும்பியிருந்தால் ஜோசப் கோல்மேன் மற்றும் எவால்டு ஃப்ராங்க் ஆகியோரை விட அவன் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
11 இரண்டாவது கேள்வி: "சகோதரன் பிலிப்பு, வில்லியம் பிரன்ஹாம் கூடார தரிசனத்தில் பேசும் அந்த பேராலயம் (cathedral) என்ன?".
12 சகோதர சகோதரிகளே, ஆரம்பத்தில் இருந்து செய்தி முடிவடையும் வரை, எவால்டு ஃப்ராங்குதான் பேராலய ஊழியத்தை கொண்டிருக்கிறான் என்பதை நான் எப்பொழுதும் சொன்னேன். அவனது சொந்த வெளிப்பாடுகள் அதற்கு மாறாக பிரதிபலிக்கவும் இல்லை. பிரன்ஹாமிஸ்டுகள் விழிப்புடன் இருக்கவில்லை என்பது தான் அதன் காரணம். எவால்டு ஃப்ராங்க் இவ்வாறாக கூறினான், "1966 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியன்று ஒரு பிரமாண்டமான அறையிலுள்ள கூட்டத்திற்கு ஆவியிலே நான் கொண்டுசெல்லப்பட்டேன். ஒரு பக்கமானது அமறும் அடுக்குப்படிக்கட்டுகளுடன் (gallery), ஒரு பேராலயம் போல் திடமாக கட்டப்பட்டிருந்தது; மீதமுள்ளது ஒரு கூடாரத்தை போன்று வட்டத்தில் இருந்தது". இப்போது, அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு சொல்லுங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
13 மூன்றாவது கேள்வி: "சகோதரன் பிரன்ஹாமை நாம் அக்கினி ஸ்தம்பத்துடன் கண்டது போல, தேவன் ஒரு ஊழியக்காரனை அனுப்புகையில், அவனை உறுதிப்படுத்துகிறார். உங்கள் உறுதிப்படுத்தலின் அடையாளம் என்ன?".
14 நான் ஒரு அடையாளம் தேடவில்லை, இங்கே நடுராத்திரி சத்தத்தில், நாங்கள் அடையாளம் தேடுகிறதில்லை. தேவனின் இராஜாதிபத்தியத்துக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். வில்லியம் பிரன்ஹாம் பதினேழாம் வயதிலிருந்து ஊழியம் செய்தார், ஆயிரக்கணக்கானவர்கள் அவரை விசுவாசித்தனர். அவருக்கு வயதாகி, அவருக்கு வழுக்கை விழுந்தபோது தான் தேவன் அவருக்கு அந்த அக்கினி ஸ்தம்ப அடையாளத்தை அருளினார். யாரைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்களோ அவர், வில்லியம் பிரன்ஹாம் அக்கினிஸ்தம்பம் தோன்றுவதற்கு முன்னமே பல ஆண்டுகள் ஊழியம் செய்தார்.
15 நான் இப்பொழுது தான் எனது ஐந்தாவது ஆண்டு ஊழியத்தில் இருக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கும்படி என்னிடத்தில் ஒரு அடையாளத்தை கேட்கிறீர்கள்! ஆனால் தாம் விரும்புகிறதைச் செய்ய தேவன் சுதந்திரம் உள்ளவராக இருக்கிறார். மேலும் வில்லியம் பிரன்ஹாம் மற்றும் காக்குவ் பிலிப்பு; இது ஒரே காலகட்டம் அல்ல. இப்பொழுது, எந்த அடையாளமும் இல்லாமல் வில்லியம் பிரன்ஹாமை விசுவாசித்தவர்கள் மற்றும் அடையாளத்தினிமித்தம் விசுவாசித்தவர்கள் ஆகிய இவர்களில், யார் தேவபுத்திரர்? இயேசு கிறிஸ்துவை ஒரு அடையாளமுமின்றி விசுவாசித்தவர்கள் மற்றும் அவரை விசுவாசிக்கும்படிக்கு மத்தேயு 12:38-ல் அடையாளத்தை கேட்கிறவர்களுமான இவர்களில், யார் தேவபுத்திரர்?
16 தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவார் என நாங்கள் விசுவாசிக்கிறோம், ஆனாலும் தேவன் தம் வார்த்தையை ஏற்கனவே உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிகிறார். வியாதியஸ்தர்கள் சுகம் அடைதல் மற்றும் பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் விடுதலையடைதல் ஆகியவை மட்டுமல்ல ஆனால் தீர்க்கதரிசன ஒழுங்குக்கடுத்த சாட்சிகளை நாங்கள் இங்கு கொண்டுள்ளோம். மார்ச் 7, 2008 அன்று நடந்த ஜெபக்கூட்டத்தில் ஒரு சகோதரிக்கு நான் ஜெபித்தேன். அவளுக்கிருந்த நீர்க்கட்டியிலிருந்து சுகமாக்கப்பட்டாள். அவளது சுகமடைதலை அறிந்த அவள் பிற்பாடு என்னிடம் இப்படி சொன்னாள், நான் அவளுக்கு ஜெபிப்பதையும் அவள் சொஸ்தமடைவதையும் 2006 ஆம் ஆண்டில் அவள் ஒரு சொப்பனத்தில் கண்டாள், மேலும் 2006 ன் அந்த சொப்பனத்தில், நான் அணிந்திருந்த உடைகளைத் தான் மார்ச் 7, 2008 அன்று அணிந்திருந்தேன். மேலும் அவள் பார்த்த பிரகாரமே "விசுவாசிக்க மாத்திரம் செய், விசுவாசிக்க மாத்திரம் செய்!" என்று பாடிக்கொண்டிருந்தேன். அந்த சொப்பனத்தில் அவளுக்கு தெரியாத, ஒரு குறிப்பிட்ட பெண்மணியின் பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள் என்று சொன்னாள், அனைத்தும் இவ்விதமாகவே மார்ச் 7 அன்று சம்பவித்தது. இது, சொப்பனத்திற்கு பிறகு இரண்டு ஆண்டு கடந்துதான். இருப்பினும், நான் அணிந்திருந்த உடையானது 2008 மார்ச் 7 ம் தேதிக்கு ஐந்து நாள் முன்னர் தான் எனக்கு தைத்து கிடைத்தது. இவை ஒரு தீர்க்கதரிசியின் அடையாளங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
17 நான்காவது கேள்வி: "சகோதரன் பிலிப்பு, ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று நீங்கள் உரிமைகோருகிற சகோதரன் பிரன்ஹாம் பயன்படுத்தின லூயிஸ் செகண்டு வேதாகமத்தை நாம் ஏன் சுட்டெரிக்க வேண்டும்?"
18 இந்த கேள்விக்காக உங்களுக்கு நன்றி, ஆனால், "பொய் சொல்லாதிருப்பாயாக!" என்று யாத்திராகமம் 20-ல் வேதாகமம் கூறுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது பத்து கட்டளைகளில் ஒன்றாகும். நான் அதைச் சொல்ல காரணம் என்னவென்றால், லூயிஸ் செகண்டுக்கு ஆங்கில பதிப்பு கிடையாது. வில்லியம் பிரன்ஹாம் ஒரு லூயிஸ் செகண்டு பதிப்பை பயன்படுத்தவும் இல்லை. வில்லியம் பிரன்ஹாம் டார்பி மற்றும் ஜேம்ஸ் மன்னன் பதிப்பைப் பயன்படுத்தினார்.
19 இப்போது, ஒரு தீர்க்கதரிசியாக, நான் வில்லியம் பிரன்ஹாம் மொழிபெயர்த்திராத ஜேம்ஸ் மன்னன் வேதாகமத்தை சுட்டெரித்தேன் ஆனால் எனக்கு முன்பு, வெறும் ராஜாவான எசேக்கியா, தீர்க்கதரிசி மோசே செய்த வெண்கல சர்ப்பத்தை உடைத்து, சுட்டெரித்தான். அப்படியானால் எதில் நீங்கள் வெட்கமடைந்தீர்கள்? சிகரெட்டுகள் இங்கே விற்கப்படுகிறபோதிலும், சுங்க அதிகாரிகள் பெருமளவிலான சிகரெட்டுகளை சுட்டெரித்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அவர்கள் பறிமுதல் செய்கிற பெருமளவிலான உள்ளாடைகளையும் (loincloth) கூட எரித்தனர், இருப்பினும் நாம் இன்னும் உள்ளாடைகளை அணிகிறோம், சில ஏழை ஜனங்களும் அதன் அவசியத்தில் உள்ளனர்.
20 ஆகையால் அந்த லூயிஸ் செகண்டு, ஜேம்ஸ் மன்னன் மற்றும் புது உலக மொழிபெயர்ப்பு, ஸ்கோஃபீல்டு, தாம்ப்சன் வேதாகமங்கள் மற்றும் கிறிஸ்தவ கடைகளில் உள்ள புத்தகங்கள் உட்பட மீதமுள்ள அனைத்தையும், பரிசுத்த ஆவியின் சுங்க சேவையானது பறிமுதல் செய்து சுட்டெரித்ததாக இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
21 ஐந்தாவது கேள்வி என்னவென்றால்: "சகோதரன் பிலிப்பு, தியோபனி பற்றிய உபதேசம் என்ன?" தியோபனி உபதேசமா? சகோதரர்களே, ஒரு உபதேசம் தேவனின் உண்மையான தீர்க்கதரிசி-செய்தியாளனிடமிருந்து வரவில்லை என்றால், அந்த உபதேசத்தின் முக்கியத்துவத்துவமும் உண்மைத்தனமும் கூட ஒரு பொருட்டல்ல, அதற்குப் பின்னால் இருப்பது பிசாசுதான். அதை குப்பை தொட்டிக்குள் எறிந்து விடுங்கள், அதை வாந்தி பண்ணிவிட்டு, என்றென்றைக்குமாய் அதைப்பற்றி மறந்து விடுங்கள். நீங்கள் விபசாரத்தினால் எரிந்து கொண்டிருந்து, சர்ப்பத்தின் வழியிலிருந்து நின்றுவிட விறும்பினால், அதைச் செய்யுங்கள்! ஆனால் சர்ப்பம் உங்களிடம் சொன்னதை நீங்கள் ஆதாமிடம் சொல்ல வரவேண்டியதில்லை. சர்ப்பத்தின் வாயிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதை சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் சொல்லுவதற்கு நீங்கள் வரவேண்டாம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
22 அது ஒரு சகோதரன் என்னிடம் இவ்விதமாக கூறினது போன்று உள்ளது. அவர், "சகோதரன் பிலிப்பு யோசுவா ஹா மேஷியாவின் (Jeshua Meshiah) நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் கொஞ்சம் ஜனங்கள் அங்கிருக்கின்றனர்" என்றார். நான்: "அவர்கள் யூதர்களா? அவர்கள் எபிரேயமொழி பேசுகின்றனர்?" என்றேன். அவர்: "இல்லை!" என்று பதிலளித்தார். நான்: "அது என்ன அந்தவிதமாகவா அவர்களது வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது?" என்று கேட்டேன். அவர்: "இல்லை" என்று பதிலளித்தார். நான்: யோசுவா அல்லது ஜஹோசுவா அல்லது யாவா அல்லது யேசுவா அல்லது யாவே? என்ற வார்த்தையை அவர்கள் எவ்விதம் எழுதுகின்றனர்? என்றேன். அவர்: "எனக்கு தெரியாது" என்று பதிலளித்தார். நான்: "எந்த தீர்க்கதரிசி - செய்தியாளன் அதனை அவர்களுக்க வெளிப்படுத்தினான்?" என்றேன். அவர்: "எனக்கு தெரியாது" என்றார். நான்: "சகோதரர்களே, சர்ப்பங்களின் ஊதுதல்களினால் தடுமாறவேண்டாம்" என்றேன். அது சரியானதாக இருந்தால்கூட அது ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளனால் வரவில்லையென்றால் அதனை குப்பைத் தொட்டிக்குள் எரிந்துவிடுங்கள், அவைகளெல்லாம் சர்ப்பங்களின் சீற்றங்களாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
23 சமீபத்தில் யாரோ ஒருவர் என்னிடம்: "நீங்கள் மத புத்தகங்களை வாசிப்பதை தடுக்கிறீர்கள் அதேநேரத்தில், நீங்கள் வரலாற்று புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறீர்கள்!" என்று சொன்னார். நான்: "ஒரு வரலாற்றாளர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் தாங்கள் கண்டதைப் பற்றிக் கூறுகையில் அவர்கள் நடுநிலை வகிக்கிறார்கள் என்றால் அங்கே எந்த தீய ஆவியும் இல்லை. அவர்கள் இந்த காரியத்தில் தேவனின் வேதபாரகர்களாக இருக்கின்றனர். மேலும் வில்லியம் பிரன்ஹாம் ஏழாவது முத்திரையில்: "தரிசனமும், வார்த்தையும், சரித்திரமும், சபைகாலங்களும்; ஒன்றோடொன்று இணைகின்றன." என்றார், என்று சொன்னேன். நீங்கள் பார்க்கிறீர்களா?
24 கத்தோலிக்க, புரொட்டஸ்டண்டு மற்றும் சுவிசேஷக சபைகள் உட்பட மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை வாசித்தால், அவர்கள் வில்லியம் பிரன்ஹாமை விசுவாசிப்பார்கள். மேலும் பிரன்ஹாமிஸ்டுகள் ஏழாவது முத்திரையை வாசிப்பார்களேயானால், வாக்குவாதம் எதுவுமின்றி அவர்கள் நடுராத்திரி சத்தத்தை விசுவாசிப்பார்கள். உங்களால் காணமுடிகிறதா? வில்லியம் பிரன்ஹாம் வியாக்கியானிக்காத ஒரு அறியாமொழி அங்கு உள்ளது என்பது கூட பிரன்ஹாமிஸ்டுகளுக்கு தெரியாது, அது ஏனென்றால் அவர்கள் ஏழாவது முத்திரையை வாசிக்கமாட்டார்கள்.
25 நல்லது! ஆராதனை நடத்தை பற்றி இப்போது பேச விரும்புகிறேன். பல நாடுகளிலிருந்து அது பற்றி நம்முடன் கேட்கப்பட்டுள்ளது! நம்மோடு ஒரே ஆவியில் இருப்பதற்காக அவர்கள் அதை அறிய விரும்புகிறார்கள்! வேறு ஒரு நகரத்தில் அல்லது வேறு நாட்டில் இந்த செய்தியை யாராவது தனியொருவராக விசுவாசிக்கையில், அவர் என்ன செய்ய வேண்டும்? அது பற்றித்தான் நான் பேச விரும்புகிறேன். ஒரு நாட்டில் முதலாவது செய்தியை விசுவாசிக்கிற ஒருவருக்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அது ஒரு தீர்க்கதரிசன அழைப்பை போன்று காணப்படுகிறது.
26 விசுவாசிக்கிறவர்களான நீங்கள் அனேகர் இருந்தால், எங்காவது இருந்து உங்களிடம் ஒரு போதகர் வர காத்திருக்க வேண்டாம்! பாஸ்டர்கள், சுவிசேஷகர்கள், போதகர்கள் அது நீங்கள்தான் மேலும் அந்தப் பட்டணத்தில் அல்லது அந்த இடத்தில் இந்த செய்தியை பரப்புவதற்கு தேவனுக்கு தேவைப்படுகிற அனைத்தும் அதுதான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இந்த செய்தியில் நீங்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பது அவசியமாக இருக்கிறது, உங்களுக்கு தேவைப்பட்டால் முழு இரவும் அதற்காக எடுத்துக் கொள்ளலாம்! ஏனென்றால் நீங்கள் செய்தியைப் பற்றிய எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.
27 திறந்த வெளி பிரசங்கத்திலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் இன்னும் மற்றவைகளிலும் எல்லா இடங்களிலும் நீங்கள் நகல் எடுப்பதற்கும் விநியோகிப்பதற்கும் மாதிரியாக இருக்கும் சுவிசேஷக-துண்டுப்பிரதிகளை விரைவில் நான் உங்களுக்குத் தருவேன். அந்த நாட்டில் விசுவாசிப்போருக்கு அது உதவும்.
28 நல்லது, மார்ச் 7, 2008 அன்று, பரிசுத்த இராப்போஜனத்தின் ஜெபக் கூட்டம் நடந்தபோது, நடுராத்திரி சத்தம் செய்தியானது ஐவரி கோஸ்ட்டில் பதினேழு சபைகளை கொண்டிருந்தது. பதினேழில் பன்னிரண்டும் ஏற்கனவே புராட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபைகளாக இருந்தவைதான். எட்டு சபைகள் பிரன்ஹாமிஸ்டு சபைகளாக இருந்தவை, மற்ற நான்கும் புராட்டஸ்டன்டு மற்றும் சுவிசேஷக சபைகளாக இருந்தவை.
29 பிரன்ஹாமிஸ்டுகள் மிகவும் எளிதாக புரிந்துகொள்கிறார்கள் ஆனால் அடி முட்டாள்கள் காணப்படுகிறதும் அவர்கள் நடுவே தான். ஆனால் இப்போது, அவர்கள் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களது வழியில் நிற்க வேண்டாம் என்று நடுராத்திரி சத்தத்தை விசுவாசித்தவர்களான அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனின் பிள்ளைகள் என்றால், வில்லியம் பிரன்ஹாம் இறையியலை கண்டனம் செய்தது முதற்கொண்டு, அவர்கள் தங்களது கரங்களில் லூயிஸ் சீகண்டு அல்லது ஜேம்ஸ் மன்னன் வேதாகமங்களை வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
30 நல்லது, இப்போது எவ்வாறு ஆராதனை நடத்தப்படுகிறது? இந்த பொருளை பல பிரசங்கங்களிலும் நான் கையாண்டிருக்கிறேன், இந்த காலையிலும், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு யோசனையை நான் மீண்டும் கொடுப்பேன். ஆராதனையின் முன்பு ஞாயிறு காலையில் சாப்பிடக்கூடாது. ஆனால் நீங்கள் சாப்பிட்டால், அது பாவம் அல்ல. ஆராதனைக்கு முன்னும் பின்னும், கெட்ட மூச்சைத் தவிர்ப்பதற்கு ஒரு மிட்டாய் சாப்பிடலாம். மெல்லும்-பசை அல்ல ஆனால் மிட்டாய்கள்.
31 முதலாவதாக, நியமிக்கப்பட்ட நேரத்தில், ஆராதனை ஸ்தலத்தில் அனைவரும் கூடிவர வேண்டும். இடத்திற்கு முக்கியத்துவம் கொஞ்சம்தான்: ஒரு வீடு, ஒரு பள்ளி, ஒரு கடை அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாம். மேய்ப்பர், பிரசங்கிகள் மற்றும் மூப்பர்கள் எல்லாம் மற்ற எந்த ஒரு சகோதரனையும் போலவே சபையினறோடு உட்காருகின்றனர். கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளிடம் காணப்படுவதுபோல பிரசங்க பீடத்திற்குப் பின்னால் உட்கார எவருக்கும் உரிமை இல்லை. நாமெல்லாம் சகோதரராக இருக்கிறோம், பெரியவராய் இருப்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
32 நம்மிடையே உள்ள அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள், மேய்ப்பர்கள் எல்லாம் எஜமான்கள் அல்ல ஆனால் அடிமைகள். அவர்கள் பணிவிடைக்காக உள்ளனர், அதற்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு எந்த ஸ்தானமும் இல்லை. இந்த இடம் வெறுமனே ஒரு வகுப்பறையில் உள்ளதுபோல ஏற்பாடு செய்யப்பட வேண்டும். சகோதரர்களும் சகோதரிகளும் சபையில் வெவ்வேறாக உட்காருகிறார்கள்; பிரசங்க பீடத்தின் வலது பக்கத்தில் ஒரு பிரிவும் இடது பக்கத்தில் மற்ற பிரிவும். பேச்சாளர்கள், நடத்துனர்கள் மற்றும் பாடல் தலைவர்கள் அதே பிரசங்க பீடத்திற்கு பின்னால் ஒருவர்பின் ஒருவராக உட்காருகிறார்கள். ஒரு பட்டணத்தில் மூன்று பேர்களின் எண்ணிக்கை முதற்கொண்டு, நாம் ஆராதனை செய்ய ஆரம்பிக்கலாம்.
33 குறித்த நேரத்துக்காக காத்துக்கொண்டிருக்கயில், பாடல் தலைவருக்கு அவசியமானால், சபையாரோடு சில பாடல்களை ஒத்திகை செய்யலாம். பிறகு ஆராதனை துவங்க குறிக்கப்பட்ட நேரத்தில், அங்கு ஒரு பிரசங்க பீடம் இருக்குமானால், நடத்துனர் பிரசங்க பீடத்திற்கு முன்வருகிறார், கர்த்தராகிய இயேசுவுக்கு முழு ஆராதனையையும் ஒப்புக்கொடுக்கும்படிக்கு நீங்கள் அனைவரும் எழுந்து நிற்கிறீர்கள். முழு சபையாரோடும் கூட ஒரு பாடலுடன் அல்லது ஒரு ஜெபத்துடன் அவர் துவங்கலாம். பாடலுக்கு அல்லது ஜெபத்திற்குப் பிறகு, நடத்துனர் வாசிக்கிற வேதாகமத்தின் அல்லது செய்தியின் பாகத்தைப் பற்றி வாசிக்கையில் ஒரு சிறிய கருத்துரை அளிக்கிறார்.
34 பின்னர், வெளிப்படையான பாவ அறிக்கைக்கு செல்கிறோம், அறிக்கை செய்ய வேண்டிய அனைவரும் எழுந்து நிற்கவேண்டும், ஒருவருக்குப் பின் மற்றொருவராக, அவர்கள் சகோதரர்களிடமிருந்து அறிக்கைகளை துவங்குகிறார்கள். அறிக்கைகளுக்கு பிற்பாடு, அறிக்கைகளின் பேரில் தீர்மானம் செய்வதற்காக சபையினரிடம் நடத்துனர் காரியத்தை ஒப்படைக்கிறார். செய்தியின் ஆவிக்கு ஏற்ற பிரகாரமாக ஒருவனது அறிக்கை இல்லாத காரணத்தினால், ஒருவர் ஒரு சகோதரனிடமோ ஒரு சகோதரியிடமோ ஒரு கேள்வியைக் கேட்கலாம், இந்த ஒன்றின் பேரில் ஒருவர் ஒரு கருத்து சொல்லலாம், இன்னொருவருடைய அறிக்கையின்பெரில் ஒரு விலக்கி வைத்தல் காலத்தை செய்தியின் படி ஒருவர் முன்மொழியலாம் அல்லது உட்காரும்படி கூறலாம். அதன்பிறகு, சபையானது எந்த சகோதரர்களுக்கு ஜெபிக்கத் தீர்மானிக்கிறதோ அவர்கள் முழங்கால்படியிடுவார்கள். பிறகு உட்கார்ந்திருக்கிற சபையானது அறிக்கை செய்த சகோதர சகோதரிகள் அனைவருக்காகவும் ஒரே ஜெபத்தை ஏறெடுக்கும்.
35 வெளிப்படையான பாவ அறிக்கைக்குப் பிறகு, நாம் சாட்சியங்களுக்கு செல்வோம், சாட்சி கொடுக்க விரும்புவோரும் எழுந்து நிற்பார்கள், சுருக்கமாகவும் துல்லியமாகவும் பேசுவார்கள்; ஆனால் அதற்கு முன்னர், பகிர்ந்துகொள்ள ஒரு சாட்சியம் வைத்திருக்கும் நீங்கள் ஆராதனைக்கு முன்பு தலைவரிடம் அது குறித்து தெரிவிக்க வேண்டும். சாட்சியங்களுக்குப் பிறகு, இப்போது ஜெபத்தின் பல்வேறு கருத்துக்களுக்கு வருகிறோம். ஜெபங்களுக்கு பிறகு, ஆராதனை பாடல்களின் நேரமாக இருக்கிறது. ஒரு காரணத்திற்காக, வெளிப்படையான பாவ அறிக்கைக்கு முன்பாக ஆராதனை பாடல்கள் வரும் என்றும் சபை தீர்மானிக்கலாம், அப்படி செய்யலாம். வெளிப்படையான பாவ அறிக்கைக்கு பிறகு, ஒன்று அல்லது இரண்டு பாடல்களுக்காக பாடல் தலைவர் மறுபடியும் வருவார்.
36 ஆராதனைப் பாடல்களுக்கு, நீங்கள் எந்தவித இசை கருவியையும் பயன்படுத்தலாம் மேலும் உங்களுக்கு வழி இருந்தால் நீங்கள் ஒரு பியானோ கூட வைத்திருக்கலாம். முதலில் சபை மூன்று பாடல்களை ஒன்றாக பாடி, உட்கார்ந்துவிடும்; பிறகு ஒரு சகோதரி வந்து பாடல் தலைவரின் மேற்பார்வையின் கீழ் ஒரு தனிப்பாடல் பாடுவாள், கூடுமானால் ஒரு சகோதரனும் பாடலாம். அதற்குப் பிறகு எழுந்து நின்று, இரண்டு அல்லது மூன்று பாடல்களோடு சபை ஸ்துதி ஸ்தோத்திரத்தை தொடரும்; ஸ்துதி ஸ்தோத்திரத்திற்குப் பிறகு, அது பிரசங்கத்திற்கான நேரம்.
37 ஆராதனையின் ஆரம்பத்திலிருந்து பிரசங்கத்தின் ஆரம்பம் வரை, அது இரண்டு மணி நேரத்திற்கும் குறைவு. பிரசங்கமானது ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடாது. பிரசங்கத்திற்குப் பிறகு, அனைவருக்கும் முன்பாக செய்தியை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு பிரசங்கி வேண்டுகோள் விடுக்கிறார். இவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி முழு சபையின் ஜெபத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரசங்க பீடத்திற்கு முன்னால் முழங்கால்படியிடுவார்கள். அப்படி செய்கையில் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கவும் அவர்களது தீர்மானத்தை தாங்கவும் செய்வார். பிறகு அவர்கள் தங்களது இருக்கைகளுக்கு திரும்புவார்கள். அதனோடு கூட பிரசங்க பீடத்திலிருந்து, அவன் நடத்தப்படுகிற பிரகாரம், பிரசங்கியானவன் வியாதியஸ்தர்களுக்காக அவர்களுடைய இருக்கைகளில் இருந்தவாரோ அல்லது பிரசங்க பீடத்திற்கு முன்பாக வந்தோ ஜெபிக்கப்பட கேட்டுக்கொள்ளலாம்.
38 அதன் பிறகு, மேய்ப்பர் அல்லது நடத்துனர் அறிவிப்புகளுக்கும் தகவல்களுக்கும் இறுதி ஜெபத்திற்குமாய் மீண்டும் வருகிறார். கடைசியில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்கையில், அந்த கதவின் அருகே, நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில், தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகள் இன்னுமாக செலுத்தாதவர்கள் அதை செய்யலாம். குறைந்தது இரண்டு காரியதரிசிகள் சபையின் தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகளை எடுத்து நிர்வகிப்பார்கள். மேய்ப்பரல்ல ஆனால் காரியதரிசிகள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இந்த காரியதரிசிகள் சுதந்திரமாக செயல்படுபவர்கள். மேலும் அதை வைத்திருப்பவர்களும் மேய்ப்பருக்கு கணக்கு கொடுக்கிறவர்களும் அவர்கள்தான்.
39 பொறுப்புக்களைப் பொறுத்தவரை, அங்கே சகோதரர்கள் ஏற்படுத்தப்பட்டு, அவைகளை நிறைவேற்ற அவர்களுக்கு திராணியாகும் வரை, துவக்கத்தில், நடத்துனர், பாடல் தலைவர் மற்றும் பிரசங்கியின் பணிகளை ஒரு தனிநபர் செய்யலாம். காலப்போக்கில், இந்த சபையின் தேவைக்கேற்ப ஒரு சபையானது அனேக நடத்துனர்கள், பாடல் தலைவர்கள், பிரசங்கிகள் ஆகியோரை கொண்டிருக்கலாம். பத்துப்பேருக்கு அதிகமானவர்கள் உள்ள ஒரு சபையில், ஒரு தனிநபர் அனைத்து பணிகளையும் கையாளுவது என்பது கூடாத காரியம்! அது சாத்தியமல்ல! ஐம்பது உறுப்பினர்கள் முதற்கொண்டு, ஒரு சபையானது ஒரு உதவி மேய்ப்பரை கட்டாயமாக கொண்டிருக்கவேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
40 பாடல்களை பொறுத்தவரையில், உதாரணமாக "விசுவாசிக்க மாத்திரம் செய்" "விசுவாசத்தின் செட்டைகள்" என்னும் புத்தகங்களில் இருக்கிற பாடல்களை நீங்கள் பாடலாம். ஆனால் பாடல் தலைவர் அல்லது ஏவப்பட்ட ஒரு சகோதரன் மாத்திரமே, அதை செய்திக்கு ஏற்றவாறு சரி செய்ய முடியும், அப்படி செய்வது மிகவும் சிறந்ததாக இருக்கும். உதாரணமாக, "தேவன் ... என்னை மறுசீரமைத்திருக்கிறார்!" என்று சொல்லப்பட்டால், "தேவன் என்னை மீட்டளித்துள்ளார்!" என்று சொல்ல வேண்டும். உங்களுக்கு புரிகிறதா? முடிந்தால், பெரும்பாலான பாடல்களில், நாம் நடுராத்திரியில் இருக்கிறோம் என்பதை குறிப்பிட, இந்த புத்தகத்தில் நாம் காண்கிறதுபோல, ஒரு வசனத்தை அதில் போடுங்கள். அதேநேரத்தில் காக்குவ் பிலிப்பு ஏதோவொன்றாக இருக்கிறார் என்று காட்டுவதை தவிற்கவும்; இதைத்தான் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
41 உபவாசத்தை பொருத்தவரையில், அனைவரும் சில வேளைகளில் உபவாசங்களை தொடங்கலாம், அவன் நடத்தப்படும் விதமாக, அவன் விரும்புவது போல, பல நாட்களுக்கு இருக்கலாம். இது ஆராதனை சேவையின் படிகளுக்கு ஒரு துணிக்கையாக இருக்கிறது.
42 சபைகளை பொறுத்தவரையில், ஒரே நகரத்தில் பல சபைகள் இருக்கலாம் என்று நான் அதை குறிப்பாக சொல்லுகிறேன். அபிட்ஜானில் மட்டும் நான்கு சபைகள் உள்ளதை நீங்கள் பார்க்கிறீர்கள்! ஆராதனைக்கு செல்ல ஜனங்கள் பல மாவட்டங்களை கடந்து அல்லது பல வாகனங்களை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை. எல்லோரும் அவர் விரும்பும் சபையில் கலந்துகொள்ள சுதந்திரமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த சில வழிகாட்டுதல்கள் மற்றும் செய்தியில் உள்ள அனைத்தையும் தவிர, செய்யப்பட வேண்டிய எல்லாவற்றிற்குமாக ஒவ்வொரு சபையும் அதன் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்! தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
43 இப்போது! "... ஒரு தீர்க்கதரிசியாக அல்ல, ஆனால் ஒரு ஆபிரிக்கனாக நான் பேச அனுமதியுங்கள்! வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளை போன்று, பூமியின் அனைத்து இனங்களின் மத்தியிலும் தீர்க்கதரிசிகள் இருந்திருக்கிறார்கள் ... ஜான் வெஸ்லி, மார்ட்டின் லூதர், வில்லியம் பிரன்ஹாம்... அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இயற்கைக்கு மேம்பட்ட அழைப்பு, பணிநியமனம், செய்தி... என ஒரு தீர்க்கதரிசி கொண்டிருக்க வேண்டியதான அனைத்தையும் உடைய ஒரு ஆப்பிரிக்கன் முதன்முறையாக ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறான். மேலும் வெரும் ஐந்து ஆண்டுகளில், அவரது செய்தியானது ஆப்பிரிக்காவின் கடை எல்லைகளுக்கு அப்பால் செல்ல முனைகிறது.
44 ஆப்பிரிக்கர்களுக்காக நிலைகொள்ளும் கொள்கைக்காக (Panafricanism) நான் வாதாடுகிறதில்லை ஆனால் ஒரு ஆப்பிரீக்கனாக பேசுகிறேன், நீங்கள் ஒரு மந்திரவாதியாக இல்லை என்றால், அவன் என்ன கூறுகிறான் என்பதை அறிய முயற்சிப்பதற்கு முன்பு, அத்தகைய ஒரு மனிதனுக்கு எதிராக உங்களால் போக முடியுமா? என்னுடைய குழந்தை பள்ளியில் மோசமாக இருந்தால், எனது அயலானின் புத்திசாலியான மகனுக்கு உதவிசெய்யும்படி நான் அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கமுடியாமல் போகுமா? ஆப்பிரிக்கன் ஒருவன் வேதாகமத்தின் ஏசாயா, எரேமியாவைப் போல ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறான் என்பதை நீங்கள் கேள்விப்படுகையில் அல்லது உங்களுக்கு அவனை தெரியும் என்பதால் உங்களை நீங்களே ஒரு எதிரியாக அமைத்துக் கொள்ளலாமா?
45 இதோ, ஒரு ஆபிரிக்க விவசாயி புதர்காட்டை கடந்து சென்றுகொண்டிருக்கையில் ஒரு மேதையை, விசித்திரமான தோற்றத்தைக்கொண்ட ஒரு மனிதனை சந்தித்தான். அந்த விவசாயி, ஓடிப்போக விரும்பினான், ஆனால் மேதை அவனைப் பார்த்து, "ஓடாதே, நீ என்னை சந்தித்தது உனக்கு ஒரு ஆசீர்வாதம், உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், இப்பொழுதே அது உனக்குக் கொடுக்கப்படும். ஆனால் நீ எதை கேட்கிறாயோ அதனுடைய இருமடங்கு கிராமத்தில் இருக்கும் உனது அண்டை வீட்டுக்காரன் பெற்றுக் கொள்வான் என்பதை மட்டும் அறிந்துகொள்!" என்றார். விவசாயி மேதையை நோக்கி, "10 கிலோ தங்கத்தை கேட்டால் என்னவாகும்?" என்று கேட்டான். மேதை, "நீ 10 கிலோ தங்கத்தை கேட்டால், உனது அண்டை வீட்டுக்காரனுக்கு 20 கிலோ தங்கம் கிடைக்கும்" என்று கூறினார். அந்த விவசாயி மேதையை நோக்கி, "என் கண்களில் ஒன்றை நீர் கெடுத்துவிட்டால் என்னவாகும்?" என்று கேட்டான். மேதை: "நான் உன் கண்களில் ஒன்றை கெடுத்தால், உன் அயலானின் கண்கள் இரண்டும் கெடுக்கப்படும்." என்றார். அந்த விவசாயி மேதையை நோக்கி, "என் கண்களில் ஒன்றை கெடுத்துவிடும்" என்று சொன்னான். மேலும் மேதை அவனது ஒரு கண்ணை கெடுத்தார். அது அவ்விதமே செய்யப்பட்டது! உணரக்கூடியவன் எவனோ, உணர்ந்து கொள்ளக்கடவன்!
--:--
--:--