en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 72 (Kc.72) : நற்செய்திப்பணியின் வழிமுறைகள்
(மே 8, 2008 வியாழக்கிழமை, ஐவரிகாஸ்டின்-ஆபிட்ஜானுக்கு பக்கத்திலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கபட்டது)
1 நான் நற்செய்திப்பணியின் பேரில் வழிமுறைகளை அளிக்க விரும்புகிறேன் ஆனால் சில கரியங்களைப் பற்றி பேச என்னை அனுமதியுங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
2 வில்லியம் பிரன்ஹாமைப் பற்றி நான் சொல்லுகிறது என்ன என்பதை புரிந்துகொள்ளாதவர்களுக்கு. மல்கியா 4 மற்றும் வெளிப்படுத்துதல் 10:7 ஆகியவற்றின் அடிப்படையில் சர்வ வல்லமையுள்ள தேவனால் அனுப்பப்பட்ட உண்மையான தீர்க்கதரிசிதான் வில்லியம் பிரன்ஹாம். அவருடைய வார்த்தைகளும் கூட வேதாகம தீர்க்கதரிசிகளுடையதற்கு ஒப்பானதாக அதே மதிப்புவாய்ந்தவைகளாக இருக்கிறது. ஆனால் அவர் இறந்த பத்தாண்டுகள் கழித்து, அவரைப் பின்பற்றிய அனைவராலும் ஒரே ஒரு ஆத்துமாவையாவது இரட்சிப்புக்குள் கொண்டுவர முடியும் என்று நான் நம்புகிறதில்லை. அவருடைய செய்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானதாக இருந்தது, அந்தக் காலம், 40 ஆண்டுகளுக்கு முன்பே கடந்துவிட்டது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
3 ஐரோப்பாவிலிருந்து உலகம் முழுவதிலும் விநியோகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரசுரங்களைப் பொறுத்தவரை, அது வெறுமனே கூடாரத்தின் கீழ் மகிமையான ஊழியத்திற்கான தளத்தை தயார் செய்வதையும், அதன்மூலம், ஏழாவது முத்திரையில் அவர் உரைத்தபடி, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையுமே நோக்கமாகக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். நீங்கள் பர்க்கிறீர்களா?
4 வில்லியம் பிரன்ஹாம் இறந்தபோது, வில்லியம் பிரன்ஹாமை ஒருபோதும் நம்பாத, பின்பற்றாத டாமி ஆஸ்போர்னையே பிரான்ஹாமிஸ்டுகள் முன் வைத்தனர், மேலும் ஏப்ரல் 11, 1966 அன்று, வில்லியம் பிரன்ஹாமின் இறுதிச் சடங்கில், டாமி ஆஸ்போர்ன் தான் பிரசங்கித்தார். டாமி ஆஸ்போர்ன் பிரசங்கித்து அவர்களுக்கு அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் வழங்கியபோது பில்லி பால், லீ வேய்ல், ஜோசப் கோல்மன், பெர்ரி கிரீன், ஓர்மன் நெவில் மற்றும் எவால்ட் ஃபிராங்க் ஆகியோர் அங்கு இருந்தனர்.
5 So much so வில்லியம் பிரன்ஹாமுக்கு பிறகு, டாமி ஆஸ்பான் விரும்பியிருந்தால், அவன் முழு பிரன்ஹாமிஸத்தின் தலைமையை வகித்திருக்கலாம் மேலும் அவனது மனைவி டெய்ஸியைக் கூட பிரன்ஹாம் கூடாரத்தில் பிரசங்கிக்க அனுமதித்திருப்பான்! வில்லியம் பிரன்ஹாம் கண்டனம் செய்த இந்த சுவிசேஷக சபைகள் ஒன்றினால் கூட தங்கள் சபைத்தலைவனின் இறுதிச் சடங்கில் ஒரு கத்தோலிக்க பாதிரியாரையோ அல்லது ரோமாபுரியின் போப்பையோ பிரசங்கிக்க அனுமதிக்க முடியாது. ஒருபோதும் முடியாது!
6 டாமி ஆஸ்பான் 1942 ல் இருந்து டெய்ஸியை திருமணம் செய்து கொண்டான், மேலும் தன்னுடைய மனைவியின் தரிசனத்தைத் தான் அவன் பிரசங்கிக்கிறான். மேலும் அதை, நான் பெயரிட்டு அழைத்த யாவரும் அதை காணாததுபோல் விட்டுவிடுகின்றனர். இரண்டு பிரதான பிரன்ஹாமிஸ்டு போக்குகள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் இருப்பதை நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
7 கடந்த ஞாயிற்றுக்கிழமை, மே 4, 2008 அன்று, நாங்கள் டபோவின் பிரன்ஹாமிஸ்டு சபைக்கு ஞானஸ்நானம் அளித்தோம். நீண்ட காலத்திற்கு முன்பல்ல, அவர்களுக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு பிரன்ஹாமிஸ்டு சபைக்கு ஞானஸ்நானம் அளித்தோம். எவால்டு ஃப்ராங்கின் தலைமையின் கீழிருந்த ஒரு சபை அது. எதிர்த்த பிரன்ஹாமிஸ்டு சபைகள் கூட உடைந்த தொட்டிகளாக இருக்கின்றது, ஏனெனில் ஜனங்கள் அங்கிருந்து நம்மிடம் வருகிறார்கள். ஓ மகிமையான செய்தி! ஜாதிகளின் விலையேறப்பெற்ற ஒளி! ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாததும், பரலோகத்திலிருந்து வருகிறதுமான ஒளியாக அது இருக்கிறபடியினால், சான்பல்லாத்துகளும் தொபியாக்களும் வல்லமையற்றவர்களாக இருக்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
8 ஆதாமைப் போலவே, இந்த தலைமுறையில் மிருகங்களுக்கு பெயரிட தேவன் எனக்கு அதிகாரம் அளித்தார். தேவன் என் முன் ஒரு மிருகத்தை கொண்டுவந்தார், நான் அதை சிங்கம் என்று அழைத்தேன், அது அதனுடைய பேராயிற்று. நான் புராட்டஸ்டன்டுகளை நோக்கி: நீங்கள் ஆட்டுக்கடாக்களாக இருக்கிறீர்கள் என்றேன், அது அவர்களின் பேராயிற்று. நான் சுவிசேஷக சபைகளை நோக்கி: நீங்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் என்றேன், அவர்கள் மனந்திரும்பாவிட்டால், அது தான் அவர்கள் பெயர். நீங்கள் ஒரு கத்தோலிக்கனாக இருந்தால், நீங்கள் ஒரு மிருகமாக இருக்கிறீர்கள், அதனால்தான் நீங்கள் உங்கள் வாழ்நாளின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிக்க முடிகிறதில்லை. நீங்கள் ஒரு புராட்டஸ்டன்டாக இருந்தால், நீங்கள் ஒரு மிருகமாக இருக்கிறீர்கள், அதனால்தான் நீங்கள் உங்கள் வாழ்நாளின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிக்க முடிகிறதில்லை. நீங்கள் ஒரு சுவிசேஷக சபையினனாக இருந்தால், நீங்கள் ஒரு வெள்ளாடாக இருக்கிறீர்கள், அதனால்தான் நீங்கள் உங்கள் வாழ்நாளின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிக்க முடிகிறதில்லை. நீங்கள் ஒரு பிரன்ஹாமிஸ்டாக இருந்தால், நீங்கள் தானியேலின் அந்த பெயரில்லா மிருகமாக இருக்கிறீர்கள், அதனால்தான் நீங்கள் உங்கள் வாழ்நாளின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிக்க முடிகிறதில்லை. நீங்கள் வெவ்வேறு இன மிருகங்கள், ஆனால் தேவனின் வல்லமையானது ஓர்நாள், உங்களை ஏகமாய் கூட்டி, ஒன்றுசேர்க்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
9 முடிப்பதற்கும், நற்செய்திப்பணிக்கான வழிமுறைகளுக்கு வருவதற்கும், நான் அலெக்சிஸ் பாரிலியர் 2006 ம் ஆண்டில் பிரன்ஹாமிஸ்டுகளின் தியானத்திற்காக எவால்டு ஃப்ராங்கிற்கு அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதியை விட்டுவிட விரும்புகிறேன். நான் அதை வாசிக்கிறேன். அது அலெக்சிஸ் பாரிலியர் எவால்டு ஃப்ராங்கிடம் கூறுகிறதாக இருக்கிறது: "... சகோதரன் பிரன்ஹாமின் நாம் பெற்றுக்கொண்டதான பிரசங்கங்கள் நம்மை விழித்தெழச் செய்து இருந்தால், நாம் நீண்ட காலத்திற்கு முன்பே விழித்திருந்திருப்போம். உங்களுடைய அதே நிலையில் நான் என்னையும் வைத்துக் கொண்டதை கவனியுங்கள், ஆயினும் எனது பிரசங்கங்களோ அல்லது உங்களுடையதோ கன்னிகைகள் உறங்கிப்போவதை தடுக்க முடியவில்லை என்பது மிகத்தெளிவாக இருக்கிறது, அதற்காக வேதாகமத்தில் இருந்து ஏவப்பட்ட வார்த்தைகளை கொண்டுவரவே நான் எப்பொழுதும் முயன்றிருக்கிறேன். நமது பரலோக பிதா அதை அறிவார், அதனால்தான் அவர் கன்னிகைகளை எழுப்பின ஒரு சத்தத்தை குறித்து பேசினார், ஏழாம் ஜாமத்திலல்ல, அது கடைசியான ஒன்று, அதில்தான் ஆவியும் மணவாட்டியும் "வா" என்று சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பர். ஆனால், உண்மையில், நடுராத்திரியில் கன்னிகைகள் முன்னேறுவதை நிறுத்தி விட்டனர்...
10 இப்பொழுது கேள்வி என்னவென்றால், நாம் உட்பட கன்னிகைகள் அனைவரும் நித்திரை மயக்கத்தில் இருக்கிறோம் என்பதையும், சகோதரன் பிரன்ஹாம் கொண்டு வந்த செய்தியின் அழைப்பிற்கு கன்னிகைகள் பதிலளித்த பிறகுதான் அது நடந்தது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோமா? நம்முடைய அனைத்து பிரசங்கங்களும் கன்னிகைகள் நித்திரை மயக்கமடைவதை தடுக்கவில்லை என்றால், அவைகளால் அவர்களை நித்திரையிலிருந்து எழுப்பவும் முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? ஆனால் கர்த்தர் புத்தியுள்ள கன்னிகைகளை மாத்திரமல்ல ஆனால் புத்தியில்லாத கன்னிகைகளையும் கூட நடுராத்திரியில் ஒரு உரத்த சத்தத்தின் மூலம் எழுப்புவதற்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்... ஒரு உரத்த சத்தமானது ஒரு செய்தியாகவும் இருக்கிறது, ஏனெனில் ஒரு உரத்த சத்தமானது ஒருவேளை மகிழ்ச்சி அல்லது துயரத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது அல்லது மத்தேயு 25:6 முதல் 7 ன் காரியத்தில் உள்ளது போல எழுப்புதல் அழைப்பின் மற்றும் கடிந்துகொள்ளுதலின் ஒரு செய்தியாக இருக்கிறது.
11 சகோதரன் பிரன்ஹாமிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தி மணவாளனின் கலியாணத்திற்கு மணவாட்டி ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் கன்னிகைகள் தூங்கினால், அவர்கள் எவ்வாறு ஆயத்தமாக முடியும், வெளிப்படுத்துதல் 19:7 முதல் 8 ஐ எப்படி அவர்கள் நிறைவேற்றி, அவளுக்கு உடுத்த கொடுக்கப்பட்டதான பரிசுத்தவான்களின் நீதியின் கிரியைகளை உடுத்துவார்கள்? இன்று நமக்கு உண்மையில் தேவையென்னவென்றால் நடுராத்திரியில் வாக்களிக்கப்பட்ட சத்தத்தின் மூலம் எழுப்பப்படுவது தான். கன்னிகைகளை எழுப்புவதற்காக எவால்டு ஃப்ராங்க் அல்லது அலெக்சிஸ் பாரிலியர் தவிர வேறு எவரையாவது கர்த்தராகிய இயேசு பயன்படுத்துவாரா? ஆம் நிச்சயமாக!" ஆமென்!
12 அந்த வார்த்தைகள் அலெக்சிஸ் பாரிலியர் எவால்டு ஃப்ராங்கிடம் பேசியதாகும். ஒரு பிரன்ஹாமிஸ்டுக்கு புரிந்துகொள்ள முடிந்தால், அவன் புரிந்துகொள்ளட்டும். வில்லியம் பிரன்ஹாமின் வல்லமை வாய்ந்த செய்தி வந்திருந்தாலும், எவால்டு ஃப்ராங்க் மற்றும் அலெக்சிஸ் பாரிலியர் உட்பட எல்லா கன்னிகைகளும் தூங்கிக்கொண்டிருந்ததால், அந்த கன்னிகைகளை விழித்தெழுப்புவதற்காக வேறு எங்காவது இருந்து அவன் வருகிறான் என்பது தெளிவாகிறது. மணவாட்டியை விழித்தெழுப்புவதற்காக எங்கோ இருந்து, வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளைப் போல் ஒரு தீர்க்கதரிசியை ஏப்ரல் 24, 1993 அன்று தேவன் எழுப்பினார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
13 நல்லது, நான் வழிமுறைகளுக்கு வருகிறேன். செய்தி ஏற்கனவே சென்றடைந்திருக்கிற நாடுகளின் பட்டியலில் பல நாடுகள் உள்ளன. ஆனால் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, இந்த செய்தியை நீங்கள் கண்டறியும்போது, எசேக்கியேல் 33 ன் படி இந்தச் செய்தியை உங்களைச் சுற்றிலும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளச் செய்வதற்கு, தேவனுக்கு முன்பாக உங்களுக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. உங்கள் உறவினர்கள் இந்த செய்தியை அறிந்துகொள்ள வேண்டும்; உங்களுக்கு அறிமுகமானவர்கள் இந்த செய்தியை அறிந்துகொள்ள வேண்டும்; எல்லோரும் இந்த செய்தியை அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் உங்களை புறக்கணிக்க வேண்டியதாக இருந்தாலும் கூட, ஆனால் அவர்கள் இந்த செய்தியை அறிந்துகொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
14 ஞானமும் சாந்தமுடனும், இந்தச் செய்தியை உங்களைச் சுற்றிலும் உள்ள அனைவரும் அறியும்படிக்கு நீங்கள் செய்திருக்கவேண்டும். ஜனங்களின் மறுசெய்கைக்கு நீங்கள் பொறுப்பாளிகள் அல்ல, ஆனால் அவர்கள் அதை கேள்விப்படுவதற்கான பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் ஒரு ஸ்திரீயாக இருந்தாலும், உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. மகதலேனா மரியாள், எலிசபெத், சூசன்னா மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சுற்றியிருந்த ஸ்திரீகளைப் போலவே, உங்களது கரங்களில் உங்களது தலைமுறைக்கான நித்திய ஜீவ வார்த்தைகளை நீங்கள் கொண்டுள்ளீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் அதை கேட்கும் படிக்கு நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும். உங்களைத்தான் சகோதரிகளே, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் சாட்சியமளிக்கவும் செய்தியை விளக்கவும் முடியும். தேவன் உங்களுக்குக் கொடுத்த அனைத்துத் திறமையும் இரட்சிப்புக்கானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
15 நீங்கள் ஐசுவரியவானாயிருந்தால், அது இரட்சிப்புக்காக தான். பூமியில் எல்லாம் அழிந்துபோகும், ஆனால் நீங்கள் பரலோகத்திற்குச் செய்தவை ஒருபோதும் அழிவதில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. கட்டிடங்களை கட்டியெழுப்புங்கள், அழகிய கார்களை வாங்குங்கள், ஆனால் இவை அனைத்தும் தேவனுக்கு முன்பாக பைத்தியமாக மட்டுமே இருக்கிறது. ஆனால் உங்களது தலைமுறையில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
16 நீங்கள் ஒவ்வொரு பிரசங்கத்தையும் வாசிக்கவும் கேட்கவும் வேண்டும், அப்போது உங்களுக்கு முன் இருக்கிற நபரின் விசுவாசத்துக்கு ஏற்ப, எந்த பிரசங்கத்தை அவனிடம் கொடுக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள், மீதமுள்ளதை தேவன் பார்த்துக்கொள்வார். அவனது பதிற்செய்கைக்கு நீங்கள் பொறுப்பாளியல்ல, அவன் விசுவாசிக்க கடமைப்பட்டவன் அல்ல ஆனால் இந்த சத்தியத்தை கண்டறியும்படி அவனை அனுமதிக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நியாயத்தீர்ப்பின்போது, பூமியில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு என்னும் பெயரை கேள்விப்படவில்லை என்று அவனால் சொல்ல முடியாது. கேட்கிறதற்கு செவியுள்ளவன், கேட்கக்கடவன்.
--:--
--:--