1... பெல்ஜியத்தின் சகோதரி மைரேலியின் (Sister Mireille) வாழ்த்துக்களை உங்களுக்கு கைமாற என்னை அனுமதியுங்கள். மேலும் நான், மேய்ப்பர் அக்கோபேயிடம் (Akobé) "ஷிபோலேத் அல்லது இரத்தத் தாக்கம்" என்னும் பிரசங்கத்தை தட்டச்சு செய்யும்படி கேட்டிருந்தேன். அவர் அதை முடித்துவிட்டார். நான் வாசிக்கப் போகிறேன், நீங்கள் அதை சீக்கிரம் பெற்றுக்கொள்வீர்கள்!
2சகோதரன் போகா எரிக் மற்றும் சகோதரன் யானிக் அக்கா ஆகியோருக்கு நன்கொடைகளை வழங்குமாரு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இந்த செய்திக்காக தங்களை அர்ப்பணித்துள்ளார்கள், அவர்கள் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த ஊழியத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருப்பதும், அவர்களுக்கு குடும்பங்கள் இருப்பதும் உங்களுக்கு தெரியும், ஆனால் அவர்களுக்கு வருமான ஆதாரம் ஏதும் இல்லை.
3நல்லது, இப்பொழுது, இரண்டு கேள்விகளுக்கு நான் பதில்சொல்ல விரும்புகிறேன். பல உள்ளன, ஆனால் அவைகளில் இரண்டுக்கு நான் பதில்சொல்ல விரும்புகிறேன். முதலாவது: "சகோதரன் பிலிப்பு, வெளிப்படுத்துதல் 18:10 முதல் 13 ன், மனித ஆத்துமாக்கள் கத்தோலிக்கசபை விற்ற சரக்குகளின் பாகமாக உள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று? பணத்தைக் கொண்டு வாங்குவதற்கு ஏதுவாக மனித ஆத்துமாக்களை ஒருவனால் எப்படி விற்பனை செய்ய முடியும்?”. இந்த மாலைவேளையில் என் பிரசங்கத்தின் பொருள் அதுவாகத்தான் இருக்கப்போகிறது.
4மிக நன்று, ஆத்தும வியாபாரிகள்! வெளிப்படுத்துதல் 18:10 முதல் 13. இந்த மாலை உரையாடலின் தலைப்பாக நான் இதை எடுக்க விரும்புகிறேன்: ஆத்தும வியாபாரிகள்! சகோதரர்களே, இது கத்தோலிக்கசபையை பற்றிய காரியம் மாத்திரமல்ல ஆனால் அவளது குமாரத்திகளான, மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள் உட்பட, புராட்டஸ்டண்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் பற்றிய காரியமாகவும் இருக்கிறது. அந்த ஆத்துமாக்களை அரசுக்கு விற்பனை செய்வதினால் தான் கத்தோலிக்க சபையானது ஊதியங்களையும் மானியங்களையும் பரிசுகளையும் பெருகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். பூமியில் உள்ள அனைத்து சபைகளும் இப்போது தங்களது தாயான, கத்தோலிக்க சபையை போன்றே அந்த ஆவியில் உள்ளன.
5ஒரு பாஸ்டர் உலகம் முழுவதும் கடிதங்களை அனுப்புகிறபோது அல்லது இணையத்தில் இவ்வாறாக, "இவ்வளவு மக்கள் கொண்ட ஒரு சபை என்னிடம் உள்ளது,எனக்கு நிதியுதவி தேவைப்படுகிறது, நாங்கள் இதை, அதை செய்ய விரும்புகிறோம் ... ஆப்பிரிக்காவில் உள்ள ஆத்துமாக்கள் ஏழைகளாக இருக்கின்றனர், ஆகையால்..." என்று இந்த விதமான காரியங்களை எழுதுகிறபோது, அவர்கள் ஆத்தும விற்பனையாளர்களாக உள்ளனர்! அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் பிசாசின் பிள்ளைகளாக இருப்பதினால் அவர்கள் அந்த ஆத்துமாக்களை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் உலகின் தாறுமாறான ஆட்களுக்கும் விற்கிறார்கள். மேலும், உலகின் அஸ்திபாரத்திற்கு முன்பாக ஆட்டுக்குட்டியானவருடைய புத்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப்படாததினால் தான் அவர்கள் இவர்களைப் பின்பற்றுகின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
6நீங்கள் உண்மையிலேயே கடவுளின் பிள்ளையாக இருந்தால், உங்கள் ஆத்தமா பணத்திற்கு விற்கப்படுவதற்காக நீங்கள் ஒருபோதும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ அல்லது பிரான்ஹாமிஸ்ட் சபையில இருக்க மாட்டீர்கள். நீங்கள் பார்க்கும் அனைத்து கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட தலைவர்கள், அவர்கள் ஆத்துமா விற்பனையாளர்கள். அவர்கள் ஆத்துமாக்களை அரசியல்வாதிகளுக்கு, உலகில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு விற்கிறார்கள், ஏனென்றால் நாம் வாழும் காலத்தில் அவர்கள் அதைச் செய்வார்கள் என்பதை வெளிப்படுத்துதல் குறிக்கிறது.
7சோதோம் கொமோராவின் காலங்களில் நாம் இருக்கிறோம். பரிசுத்தமாக இருப்பதாக உரிமை கோருகிறவனான ஒரு சபைத்தலைவனை அரசியல்வாதிகளோடு உட்கார்ந்திருக்கிறதையும், ஒரே விசுவாசத்தை கொண்டிராத வேறுசில சபைகளின் தலைவர்களுடன் உட்கார்ந்திருக்கிறதையும் நீங்கள் காணலாம். இது என்ன? அவன் தனது சபை உறுப்பினர்களின் ஆத்துமாக்களை மாய்மாலத்தனத்தின், உலகப்பற்றின், அரசியலின், ஓரினச்சேர்க்கையின் பலிபீடத்தின்மேல் விற்பனை செய்திருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. ஒரு மெதடிஸ்டு சபையானது சர்வதேச அளவிலான ஐக்கிய மெதடிஸ்டு சபையுடன் இணைந்தால், அங்கு கொஞ்சம் ஆத்துமா விற்பனை செய்யப்படுகிறது! ஒரு சிறிய அப்பாவி சபையானது, எங்காவது இருக்கிற ஒரு பெரிய சபையுடன் ஒத்துப்போக தொடங்குகிறது போது, அவனது தலைவன் தனது சபை உறுப்பினர்ளின் ஆத்துமாக்களை விற்பனை செய்துவிட்டான்! இதில் சோகம் என்னவென்றால், பெரும்பாலான நேரம் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதுக்கூட சபை உறுப்பினர்களுக்குத் தெரியாது. எனவே இது மாந்திரீகத்தின் மிக உயர்ந்த வடிவமாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
8ஜோயல் ஆஸ்டீன், டி.டி. ஜேக்ஸ், டௌக் பச்லர், பில்லி கிரஹாம், இடிர் மாசிடோ, வால்டிமிரோ சந்தியாகு, சிலாஸ் மலாபியா, பவுலா வைட் மற்றும் ஜாய்சி மேயர் மற்றும் நீங்கள் பார்க்கிற அனைவருமே அவர்கள் சுவிசேஷ விற்பனையாளர்களாக இருந்தனர், இயேசு கிறிஸ்துவும் வேதாகமமும் அங்கு சரக்குகளாக இருந்தன, பூமியின் குடிகள் வாடிக்கையாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இப்போது அவர்கள் ஆத்தும வியாபாரிகளாக உள்ளனர்! இப்போது அவர்கள் ஆத்தும வியாபாரிகளாக உள்ளனர்!
9கிறிஸ் ஓயாக்கிலோம், டேவிட் ஔவொர், இம்மானுவேல் மக்கான்டிவா, உபர்ட் ஏஞ்சல், டி.பி. ஜோஷுவா, டேவிட் ஓயேடிபோ, அல்பர்டோ மொட்டேசி, கிளவிதியோ ப்ரெய்டுசன், டான்டே கிபல் மற்றும் நீங்கள் காண்கிறவர்கள் அனைவரும் ஆத்தும விற்பனையாளர்களாக இருக்கின்றனர்! அவர்கள் சுவிசேஷ விற்பனையாளர்களாக இருந்தனர், இயேசு கிறிஸ்துவும் வேதாகமமும் அங்கு சரக்குகளாக இருந்தன, பூமியின் குடிகள் வாடிக்கையாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இப்போது அவர்கள் ஆத்தும வியாபாரிகளாக உள்ளனர்! பென்னி ஹின், மனாசே ஜோர்டன், ஜெஸ்சி ஜாக்ஸன், ஜான் ஹாகி, பாட் ராபட்சன், யோவாக்கீம் கான்க்ளேவ்ஸ், டொனால்டு பர்ணல், அலெஜான்ட்ரோ புல்லோன், குயிலெர்மொ மால்டொனால்டோ மற்றும் நீங்கள் காண்கிற அனைவருமே ஆத்தும வியாபாரிகளாக இருக்கின்றனர்!
10வேதாகமமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் சரக்குகளாக இருந்தது, பூமியின் குடிமக்கள் வாடிக்கையாளர்களாகவும் இருந்தனர், இப்போது அவர்கள் ஆத்தும வியாபாரிகளாக உள்ளனர்! சுவிசேஷ விற்பனையை அவர்கள் முடித்துவிட்டனர், இப்பொழுது அவர்கள் தங்கள் சபை உறுப்பினர்களின் ஆத்துமாக்களை உலகில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் விற்பனை செய்கின்றனர். சீக்கிரத்தில் அவர்கள் அனைவரும் ஓரினச்சேர்க்கைக்குள் செல்வார்கள் மேலும் அவர்கள் நடுவே ஓரினச்சேர்க்கையாளர்கள் வந்து அமர்வார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
11முதலில், அவர்கள் "ஓ, நாங்கள் அதை ஏற்க விரும்பவில்லை! நாங்கள் அதை ஏற்க முடியாது! நாங்கள் அதற்கு எதிரானவர்கள்!" என்று சொல்லுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அவர்கள்: "ஓ, அவர்கள் எங்கள் நடுவே இருக்கலாம். அவர்கள் எங்கள் நடுவே உட்காரலாம் ஆனால் அவர்கள் பாஸ்டர்களாக இருக்கமுடியாது." என்பார்கள். பிறகு, அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
12பின்னர், சில ஓரினச்சேர்க்கையாளர்கள் கத்தோலிக்க, புராட்டஸ்டண்டு, சுவிசேஷக சபை மற்றும் பிரன்ஹாமிஸ்டு குருக்களாகவும் போதகர்களாகவும் இருப்பார்கள். நீங்கள், "ஓ, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவே, அது ஒருபோதும் சாத்தியமாக முடியாது, நான் அதை ஏற்க மாட்டேன்!" என்று கூறலாம். அதை ஏற்றுக் கொள்வீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
13உங்களைத்தான், கத்தோலிக்கர்களே, ஓர்நாள், நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளனான கத்தோலிக்க குருவுடன் ஒரே பெஞ்சில் உட்காருவீர்கள். உங்களைத்தான், புராட்டஸ்டண்டுகளே, ஓர்நாள், நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளனான புராட்டஸ்டண்டு தலைவனுடன் ஒரே பெஞ்சில் உட்காருவீர்கள். உங்களைத்தான், சுவிசேஷக சபையினரே, ஓர்நாள், நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களான சுவிசேஷக சபை தலைவர்களுடன் ஒரே பெஞ்சில் உட்காருவீர்கள். உங்களைத்தான் பிரன்ஹாமிஸ்டுகளே, ஓர்நாள், ஓரினச்சேர்க்கையாளர்களான சில போதகர்களும் பிரசங்கிகளும், உங்களுக்கு பிரசங்கிக்க, அங்கே பிரசங்க பீடத்தில் நிற்பார்கள், நீங்களும் அதை ஏற்றுக் கொள்வீர்கள்.
14ஓரினச்சேர்க்கையாளர்கள் உங்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் ஊர்வலம் வருவார்கள், நீங்கள் அதை சாதாரணமென காண்பீர்கள். ஏன்? ஏனென்றால் நீங்கள் பிசாசின் குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறதினாலும், உங்களது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை நீங்கள் நிராகரித்ததினாலும் தான். அது எப்படி நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது ஆனால் சாத்தான் அதை செய்வான், நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
15இப்போது, நான் இரண்டாவது கேள்விக்கு வருகிறேன். இரண்டாவது கேள்வி சற்று நீண்ட ஒன்று. அது எழுதப்பட்டிருக்கிறது: "சகோதரன் பிலிப்பு, தேவன் பூமியிலே முதல் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்க்கதரிசிகளை ஒரேசமயத்தில் பயன்படுத்த முடியாது என்பதை விசுவாசிக்கிறேன். ஆனால் எஸ்றா 5:1-ஐ எப்படி விளக்க முடியும், அங்கு ஆகாய் மற்றும் சகரியா இருவரும் ஒரே சமயத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே. என்னிடம் அதை யாரோ கேட்டார்கள் ஆனால் அதை எப்படி விவரிப்பது என்பதை நான் அறிந்திருக்கவில்லை ஆனால் பூமியிலில் ஒரே சமயத்தில் தேவன் இரண்டு முதல் முக்கியத்துவமான தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்த முடியாது என்னும் உண்மையை நான் சந்தேகிக்கவில்லை!"
16அது மிகவும் அருமையானது சகோதரனே! சமீபத்தில், நானும் அதை வேதாகமத்தில் பரிசோதித்தேன். தேவன் முதல்முறையாக ஆகாய் தீர்க்கதரிசியிடம் பேசினது 519 ஆம் வருடம் ஆறாம் மாதத்திலும், கடைசி முறையாக பேசினது 519 ஆம் வருடம் ஒன்பதாம் மாதத்திலும் என்பதை நான் கண்டேன். இவை எல்லாவற்றிலும், வேதாகமத்தின்படி, நான்கு மாதங்கள் மட்டுமே தேவன் அவனோடு கூட பேசினார். சகரியாவைப் பொருத்த வரையில் தேவன் அவனிடம் முதல்முறையாக பேசினது 519 ஆம் வருடம் எட்டாம் மாதத்திலிருந்துதான், அவனைத்தான் தேவன் அனேக வருடங்கள் பயன்படுத்தினார். யோவான் ஸ்நானகனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பேதுருவுக்கும் பவுலுக்கும், பழைய ஏற்பாட்டில் இன்னும் அனேக தீர்க்கதரிசிகளுக்கும் அது அதே காரியம்தான்!
17பழைய ஏற்பாட்டில் நீங்கள் காணும் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது: தேவன் இந்த ஒருவனுடன் பேசுவதும் மேலும் வேறு ஒருவனுடன் பேசுவதும் திரும்பவும் அவனிடம் பேசுவதற்கு வருவதுமான இந்தக் காரியம்; தேவன் ஒரு தீர்க்கதரிசியை எழும்பபண்ணுதல், மேலும் எந்த தீர்க்கதரிசியும் எழும்ப பண்ணாதிருத்தல், திடீரென்று அனேக தீர்க்கதரிசிகளை எழும்பபண்ணுதல், இனி எந்த தீர்க்கதரிசியையும் எழும்ப பண்ணாதிருத்தல், ஒன்று அல்லது பல தீர்க்கதரிசிகளை எழும்பபண்ணுதல், புறஜாதிகளின் தேசத்திலே எசேக்கியேலும் தானியேலும் நாடு கடத்தப்படுதல் ஆகிய இவைகளெல்லாம் நீங்கள் செய்யக்கூடிய சிறிய இறையியல் ஒப்பீடுதல்களை விட உயர்ந்த அர்த்தம் கொண்டதாக இருக்கிறது.
18நான்கு ஜீவன்களை நினைவில் கொள்ளுங்கள்! உலகிலுள்ள எல்லா மகத்தான இறையியலாளர்களும் வேதாகமத்தை வியாக்கியானிப்பதற்கு தங்களை ஒரு பக்கத்தில் வைத்தாலும், அது பிசாசு தான். அதை துவங்கும் முன்பும் அவர்கள் ஜெபிக்கலாம், ஜெபத்தின் போது, "கர்த்தர் உரைக்கிறதாவது: உங்கள் தேவனான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நானே. இந்த வேலையில் நான் உங்களுடன் இருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாக, நாளையதினம், இந்த மணிவேளையில் மழை பெய்யும்!" என்று கூறுகிற சில தீர்க்கதரிசனங்களும் கூட புறப்பட்டு வரலாம், சகோதரர்களே, மறுநாள், குறிப்பிட்ட நேரத்தில், மழை பெய்தாலும்கூட, அது பிசாசாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அது 1 இராஜாக்கள் 22:20-22! அவர்கள் உண்டு பண்ணப்போகிற எந்த விளைவையும் சுட்டெரிக்க பயப்பட வேண்டாம்! முழு உலகமும் ஒன்றுகூடினாலும் ஒரு தேவதூதனுடன் நடைபோடும் தீர்க்கதரிசி செய்தியாளனை எட்ட முடியாது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
19தேவன் இல்லாத அறிவு பயனற்றது! வசனங்களின் ஒப்பீடுகள் மற்றும் வேதாகம அகராதிகளின் அடிப்படையிலான எல்லா பிரசங்கங்களும் தேவனுடைய வார்த்தை அல்ல. இந்தத் தலைமுறையின் உயிர்வாழும் தீர்க்கதரிசிக்கு தேவன் கொடுக்க பிரியப்பட்டது எதுவோ அதுதான், தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. ஏசாயா அல்லது எரேமியா சொன்னவகைகளால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ஒரு யூதனை இரட்சிக்கமுடியாது.
20"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் கூறினார். இன்றைக்கும் அதே தான். வேதாகமம் கூறுவதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பரலோகத்துக்கு போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வஞ்சிப்பில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது காலத்திற்கான ஜீவ புத்தகம் என்பது, உங்களது காலத்தில் உயிர்வாழும் தீர்க்கதரிசியினால் கொண்டுவரப்பட்டிருக்கிற செய்தியாக இருக்கிறது. உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி இல்லாமல், நீங்கள் இருளில் நடக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
21இப்பொழுது, நமது பொருளுக்கு திரும்புவோம். மார்ச் 29, 2008 ன் மகத்தானதும் சரித்திரமுமான மாநாட்டிற்குப் பிறகு அந்த பத்திரிகைகளில் ஒன்றை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். "தேவனின் மனுஷர்களை அம்பலப்படுத்திய தீர்க்கதரிசி" என்ற தலைப்புச்செய்திகள் அங்கு இருந்தன. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தீர்க்கதரிசி எலியாவின் காலத்தில், "ஒரு தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷர்களை சங்காரம் பண்ணினான்" என்று ஒரு செய்தித்தாளில் ஒருவன் வாசிக்க முடியும்.
22ஆகாபின் மற்றும் யேசபேலின் பாதுகாப்பின் கீழ் இருக்கிறவர்களும், அதேநேரத்தில் அவர்களில் ஒவ்வொருவனும் தனது சபையை உடையவர்களுமான, ஒரு தேசத்தின் அனைத்து தேவ மனுஷர்களையும் ஒரே ஒரு மனிதன் எப்படி சங்காரம்பண்ண முடியும்? ஒரு தேசத்தின் அனைத்து தேவ மனிதர்களையும் ஒரே ஒரு மனிதன் எப்படி அம்பலப்படுத்த முடியும்? அது சரித்திரம் தன்னையே மறுபடியும் நிகழ்த்திக்கொள்கிறதாக இல்லையா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு நாள், ஒரு தீர்க்கதரிசி தனது காலத்திலிருந்த தேவ மனுஷர்கள் என அழைக்கப்பட்டவர்களை சங்காரம் பண்ணினான் என்பதை அறிந்தவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, அவர்கள் "அம்பலப்படுத்துதல்" என்னும் வார்த்தையை மற்றொரு வண்ணத்தில் பயன்படுத்தினர்.
23இன்னொரு பத்திரிகையாளர், அந்த மாநாட்டில் நடந்த அனைத்தையும் கண்டு கேட்டு, அந்த எல்லா ஜனங்களின் கேள்விகளுக்கும் நான் விடை அளித்தபோது, "தீர்க்கதரிசியின் தேர்ச்சியடைந்த தன்மை" என்று எழுதினார். ஆம், அவன் எஜமானக, வார்த்தையின் எஜமானக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
24அன்றையதினம், மத்தேயு 25:6 என்ற ஒரே ஒரு வசனத்தை, அடையாளப்பூர்வமாக வாசித்த பிறகு, பிரசங்கித்தேன். பத்திரிகைகள், மதத் தலைவர்கள், பாராளுமன்றத் தலைவர்கள், பேரவைகள் மற்றும் பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கேள்விகளுக்கு ஒருமுறைகூட வேதாகமத்தை திறக்காமல் பதிலளித்தேன், வேதாகமத்தின் வசனத்தை அரிதாகவே மேற்கோள் காட்டினேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. ஏனெனில் தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியாக இருக்கின்றனர் என்று வேதாகமம் கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
25முடிவாக, பிசாசானவன் உலகம் முழுவதிலும் ஒரு புது சிந்தனையை வளர்த்து வருகிறான், இப்போது அனேக ஜனங்கள் அதை அங்கே வெளிப்படுத்துகின்றனர் என்பதை மனதில் வையுங்கள். அதனால் தான், இந்த மாலையில் அதைப் பற்றி பேச நான் கடமைப்பட்டேன். அது என்ன? அவர்கள், "செய்தி மெய்யானது என்று நாம் காணலாம், உண்மையிலேயே நாம் அதை நமது தேசத்திற்கு இங்கே கொண்டுவர விரும்புகிறோம் ஆனால் காலப்போக்கில் பிரன்ஹாமிஸ்டுகள் வில்லியம் பிரன்ஹாமுடன் செய்வதைப் போலவே தீர்க்கதரிசியை வணங்க நேரிடுமா?” என்கின்றனர். இப்படிப்பட்ட காரியங்களை சொல்ல ஊக்கம் உள்ளவர்கள் உண்மையிலேயே ஒரு ஊழியத்தை கொண்டிருக்கின்றனரா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! உங்களுக்கு ஒரு ஊழியம் இருக்கிறது என்றால், பிறகு நீங்கள் வார்த்தையின் ஒரு பாதுகாவலனாக இருக்கிறீர்கள். அதை செய்ய வேண்டியவர்கள் நீங்களாக இருக்கிறீர்கள் ஆகையால் அது அந்த விதமாக ஆகாது என்றும் அந்த வணங்குதல் ஒருபோதும் வராதபடி செய்வதும் உங்களுடையது.
26எபேசியர் 4:11-ல் உள்ள ஊழியங்களானது உத்தரவாதமளிப்பவர்களாகவும் வார்த்தையின் பாதுகாவலர்களாகவும் இருக்கின்றனர். செய்தியானது சத்தியமாக இருக்கிறது என்றும் அங்கே அதில் ஜீவன் இருக்கிறது என்றும் தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினால் பிறகு காலப்போக்கில் தீர்க்கதரிசியானவனை வணங்க வேண்டும் என்று வந்தால், அத்தகைய "வணக்கத்தின் பிசாசை!" தடைசெய்வதற்கான பெரிய பொறுப்பு தனக்கு இருப்பதை அவன் கண்டு கொள்வான். இந்த எண்ணம் உண்மையாகவே வந்தாலும், இந்த செய்தி உண்மையாக இருந்தாலும் சரி, பிசாசின் பிள்ளைகளை தடைசெய்யும் நோக்கில் அவன் அதைச் செய்ய முயற்சிப்பான் என்று நம்புகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
27எண்ணாகமம் 21:8 முதல் 9 ல் தேவனிடம் மோசே: "பிசாசின் பிள்ளைகள் அதை வணங்கி அதற்கு தூபம் காட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறதினால் வெண்கல சர்ப்பத்தை உண்டாக்க நான் விரும்பவில்லை" என்று கூறியிருந்தால் அது எப்படி இருந்திருக்கும். கொள்ளிவாய் சர்ப்பங்களால் கடிக்கப்பட்டால் ஜனங்கள் எப்படி சுகமடைவார்களழ யோசுவாவும் காலேபும் மோசேயை நோக்கி: "நீர் ஒரு உண்மையான தீர்க்கதரிசிதான், ஆனால் நாங்கள் உம்முடன் வர மறுக்கிறோம், ஏனென்றால் நீண்டதொரு காலத்தில், பரிசேயர்களும் சதுசேயர்களும் உமது ஆசனத்தில் அமர்ந்து கொள்வார்கள் என்பதால் நாங்கள் உம்முடன் வர மறுக்கிறோம்" என்று சொல்லியிருந்தால், அது எப்படி இருந்திருக்கும்?
28இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று அப்போஸ்தலர் நடபடிகள் 21 ல் அகபு கூறினபோது, பவுல் எருசலேமுக்கு போகவில்லையா? நீங்கள் பார்க்கிறீர்களா? அங்கே நிறைய உதாரணங்கள் உள்ளன! செய்தியை புறக்கணிப்பதற்கான உங்கள் வாதமாக அது இருக்கிறபடியினால் நீங்கள் அதை சொல்லலாம், அப்படி அல்லவென்றால் ஊழியமோ குணமோ இல்லாத ஒருவனால்தான் அதை சொல்ல முடியும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
29ஏப்ரல் 24, 1993 அன்று எனது சரீரமல்ல ஆனால் எனது ஆத்துமா தேவதூதன் மற்றும் ஆட்டுக்குட்டியின் அருகே தண்ணீர்களின் மேல் நின்று கொண்டிருந்தது. மேலும் இந்த தண்ணீரானது பூமியின் எல்லா தேசத்தார்களும், பாஷைக்காரர்களும், இனத்தார்களும், ஜனத்தார்களுமாக உள்ளது. தண்ணீர்களுக்கு மேலே தேவதூதனையும் ஆட்டுக்குட்டியையும் என்னையும் தவிர வேறு ஒருவரும் இருக்கவில்லை. போப் பெனடிக்ட் XVI மற்றும் அவரது மருமகன் எவால்டு ஃப்ராங்கு அங்கு இல்லை. பில்லி பால் மற்றும் ஜோசப் பிரன்ஹாம் அங்கு இல்லை. டாமி ஆஸ்பான், மோரிஸ் செருல்லோ, பென்னி ஹின் மற்றும் ரெய்ன்ஹார்ட் போன்கே அங்கு இல்லை! இந்த தரிசனமானது தேவனிடமிருந்து வந்ததேயானால், இந்த செய்தியானது பூமி எங்கும் பரவி, நீங்கள் கத்தோலிக்க, புராட்டஸ்டண்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் என்று அழைக்கிற தாகோனின் அனைத்து விக்கிரகங்களையும் நடுங்கச் செய்யும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
30நீங்கள் பூமியில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், உங்கள் ஊழியம், உங்கள் அனுபவங்கள் மற்றும் பிற எதுவாக இருந்தாலும், நீங்கள் தண்ணீரின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். நான் ஒவ்வொருவரையும் என்னிடத்திற்கு கொண்டுவரும்படிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்று உங்களை விசுவாசிக்க வைக்க பிசாசினால் முடியாது, ஆனால் கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுளாகிய நீங்கள் யாரால் இரட்சிக்கப்படவேண்டுமோ அந்த தீர்க்கதரிசியாக நான் இருக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
31இப்பொழுது, நான் மற்றொரு விஷயத்திற்கு வரப்போகிறேன். அது யாராவது ஆத்துமாவையும் சரீரத்தையும் பற்றி சில குழப்பத்தை உண்டாக்கலாம் அல்லது வெளிப்படுத்தல் 19:10 ல் யோவானின் காரியத்தைப் போல அவனும் கூட அதை இந்த வழியில் பார்க்கலாம், அப்படி சம்பவிக்கலாம். ஆனால் அதை செய்யக்கூடாது என்று எளிமையாக அவனிடம் சொல்லப்பட்டது. முடிவு இன்னமும் நமக்குதெரியாத இந்த ஊழியத்தினூடாக யோவான் பார்த்ததையே அனைத்தும் சார்ந்திருக்கிறது. நிறைவேறினதை மாத்திரம் கவனிக்கவும், சம்பவிக்க போகிறவைகளை குறிப்பிட வேண்டாம்.
32நான் ஒரு உதாரணத்தை எடுக்கிறேன்: தேவன் இஸ்ரவேலை மணந்தார்; இஸ்ரவேல் என்றால் "தேவனோடு மணம்முடித்தது" என்று பொருள். ஏழு ஆண்டுகளான, நியாயப்பிரமாணத்தின் ஏழு காலங்களுக்குப் பிறகு, மகிமையின் காலத்திலும், ஆவிக்குரிய கட்டத்திலும், எகிப்து முதற்கொண்டு, பாலைவனம், போர்கள், நாடுகடத்தல்கள், பஞ்சங்கள் இன்னும் பிறவற்றில் மிகவும் துன்பப்ட்டவர்களான இஸ்ரவேலரிடமிருந்து அவர் தூரமாக விலகிவிடுகிறார். மணவாட்டியை எடுத்து, திருமணத்திற்காக அவர் சுத்தீகரித்து, வெண்மையாக்கி, புடமிடும்படிக்கு, புறஜாதிகளிடம் திரும்புகிறார். ஏன்? இஸ்ரவேல் ஒரு மாய்மால, விபச்சாரி என்பதால் தான் மேலும் தேவனுக்கு மட்டுமே அது தெரியும்.
33இஸ்ரவேலைப் போலவே, யாராவது அதை விரும்பவில்லை என்றால், அவனது ஆத்தும வியாபாரத்தில் ஈடுபடும்படிக்கு, அவன் தூரமாகவே இருக்கக்கடவன்! குழப்பமான சிந்தனைகளோடு அவன் எங்கே வராமலிருப்பானாக! குறிப்பாக, நாம் கடந்த காலத்தில், கடந்து வந்த காரியங்களின் பேரில் கேள்விகளை எழுப்புவதுடன். நீங்கள் பார்க்கிறீர்களா?
34இங்கே ஐவரி கோஸ்ட்டில், சில ஜனங்கள் வந்தார்கள், போதகர்களும் பிரசங்கிகளும், சிலர் பதினைந்து, இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவத்துடன் அல்லது ஊழியத்துடன் வந்து, "நாங்கள் முழுமையாக நம்புகிறோம், ஆனால் நாங்கள் மறு-ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் நாங்கள் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியிலிருந்து வருகிறோம்!" என்று கூறுகின்றனர். உங்கள் உத்தமம் ஒரு பொருட்டல்ல, இது ஆத்திரமூட்டல் என்று நான் நினைக்கிறேன். இந்த புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை தவிர வேறு ஒரு விளக்கத்தை தருகிறதைக்கூட என்னால் பார்க்கமுடியாது, தொலைவாகவே இருங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
35சகோதரன் ஸாடி ராபர்ட்டை இங்கே பார்க்க எனக்கு மகிழ்ச்சி. அவர் வில்லியம் பிரன்ஹாம் செய்தியில் முப்பத்தி நான்கு ஆண்டுகள் செலவிட்டார்! 1974 இல் நான் குழந்தையாக இருந்தபோது வில்லியம் பிரான்ஹாமின் செய்திக்கு அவர் வந்தார். ஐவரி கோஸ்ட்டில் வில்லியம் பிரன்ஹாம் செய்தியில் முதலில் செயல்பட்டவர்களில், அவருடைய பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது.
36அவருடைய சாட்சியின் ஒரு பகுதியை நான் படிக்கப் போகிறேன். அவர் சொல்கிறார், "... 1974-ல் நான் இருந்த பாப்டிஸ்டு சபைக்கு சகோதரர் பிரன்ஹாமின் பிரசுரங்களை விநியோகித்தேன். 1974-ல் நான் சகோதரன் பிரன்ஹாமின் செய்திக்கு வந்போது நான் செய்தது அதுதான், மிஷனரியான ஜான்ஸன் டேனியல் வந்தபோது நான் ஏற்றுக்கொண்டேன்... பெரிய ஆலயமான ஆபிட்ஜான் சபையில் இருந்தேன், அது பிட்ஜி ஸ்டானிஸ்லாஸால் நடத்தப்பட்டது, அது இப்போது பாடி, சோம்போ இன்னும் மற்றவர்களால் நடத்தப்படுகிறது... நடுராத்திரி சத்தம் செய்தியை நவம்பர் 27, 2006 ல் நான் ஏற்றுக் கொண்டேன். நான் சகோதரன் பிரன்ஹாமின் செய்தியில் சிறந்த தேர்ச்சி செய்திருந்ததினால், அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் 3 தரிசனங்களை நான் வாசித்த போதே என்னை விசுவாசிக்க செய்துவிட்டது. டிசம்பர் 2 அன்று நான் தீர்க்கதரிசியை சந்தித்தேன். அதே 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அடுத்த நாள் நான் ஞானஸ்நானம் பெற்றேன்… ". நீங்கள் பார்க்கிறீர்களா?
37எனவே 40 அல்லது 50 வருட அனுபவங்களால் நான் திசைதிருப்பப்படவில்லை! நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல் பெரியவராக இருந்தால், நீங்கள் உங்களை தாழ்த்திக்கொண்டு யோவான் ஸ்நானகனின் முன்னிலையில் வருவீர்கள். உங்கள் எஜமானரான வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை நீங்கள் புரிந்துகொண்டிருந்தால், அப்போஸ்தலர் நடபடிகள் 19 ல் சிறிய பவுலுக்கு முன்பாக அப்பொல்லோவைப் போல, நீங்களும் உங்களை தாழ்த்துவீர்கள். இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த மனிதனான யோவான் ஸ்நானகன், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து இருந்தாலும் கூட, நீங்கள் பவுலின் காலத்தில் உயிரோடு இருந்தால் நீங்கள் உங்களைத் தாழ்த்திக் கொள்வீர்கள், பவுல் உங்களை மறு-ஞானஸ்நானம் செய்விப்பான்!
38கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் தாமே அல்லது ஒரு தேவதூதன் தாமே உங்களிடம் கேட்கக்கூடிய விதமாக பேசி இருந்தால் கூட, ஞானஸ்நானம் பெறுவதற்காக நீங்கள் உங்களை தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பிற்கு முன்பாக தாழ்த்திக் கொள்வீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. உண்மையிலேயே நீங்கள் தேவனின் ஒரு குமாரனாக இருந்தால், உங்களது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியிடம் வருவதற்காக, நீங்கள் அந்த ஆத்தும வியாபாரிகளை விட்டுவிடுவீர்கள். நீங்கள் அதை புறக்கணிப்பீர்களாயின், நியாயத்தீர்ப்பின் நாளில் உங்களது அழிவுக்கு நீங்களே கையெழுத்திட்டு விட்டீர்கள். நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிற இந்த சத்தம் தான், உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிற இந்த சத்தம் தான், தேவனுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பின் நாளில் உங்களுடன் பேசும். கேட்கிறதற்கு செவியுள்ளவன் கேட்கக் கடவன்!