(பிப்ரவரி 22, 2007 வியாழன் அன்று அட்ஜாமின், ஆபிட்ஜான்- ஐவரி காஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது.)
1 [ஆசிரியர் குறிப்பு: சகோதரன் பிலிப்பு நியாயாதிபதிகள் 12:1 முதல் 6 வரை வாசிக்கிறார்]. இந்த மாலை, நான் "இரத்தத்தின் தாக்கம்" என்னும் காரியத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். எப்பிராயீம் மனுஷர் யெப்தாவுக்கு எதிராகவும் கீலேயாத்துக்கு எதிராகவும் வந்து, அவனை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள். பின்பு யெப்தாவும் எதிர்த்தெழும்பி; எப்பிராயீமுக்கு எதிராகப் போரிடுவதற்காக அவன் தனது மனுஷரை ஒன்று திரட்டினான். எப்பிராயீம் புத்திரர் தோற்கடிக்கப்பட்டபோது, கீலேயாத் மீந்திருக்கிறவர்களுக்காக பதிவிடை வைத்தான்.
2 தப்பி ஓடுகிறவர்களான எப்பிராயீமர் அக்கரைக்குப் போகவேண்டும் என்கையில், அவர்களிடம் இவ்வாறு கேட்கப்பபட்டது, நான் அதை வாசிக்கப் போகிறேன். நியாயாதிபதிகள் 12:1 முதல் 6-ல், "கீலேயாத்தியர் எப்பிராயீமருக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்பான். அப்பொழுது அவர்கள் அவனிடம், [நீ எப்பிராயீமனல்லவென்றால், நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்]; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்.". நீங்கள் பார்க்கிறீர்களா?
3 ஒரு எப்பிராயீமனால் "ஷி" என்று உச்சரிக்க முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: நீ எப்பிராயீமன் அல்லவென்றால், "ஷிபோலேத் " என்று சொல் என்றனர். ஆனால் அவன் "சிபோலேத் " என்று கூறினான். அவன் தனது வாயையும் தனது நாவையும் சரிசெய்து, "ஷி" என்ற சத்தத்தை வரவழைக்க, அவன் சில முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அவனது வாயிலிருந்து அது வெளியே வந்தபோது "சி" என்றிருந்தது. அங்கே "ஷி" என்ற உச்சரிப்பு காணாமல் போனது! "ஷிபோலேத்" என்று சொன்னதாகவே அவன் எண்ணிக்கொண்டான் ஆனால் கீலேயாத் மனுஷன் அவனை நோக்கி: "கீலேயாத்தியரான தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்த கீலேயாத்தியன் என்று உனது அடையாள அட்டையில் எழுதப்பட்டிருக்கிறது. உன்னுடையது என நீ சொன்ன கீலேயாத்தின் பட்டணமும் மாவட்டமும் கீலேயாத்தில் உள்ள பட்டணமும் மாவட்டமும் தான். உனது பெற்றோராய் இருப்பதாக நீ கூறும் பெயர்களும், ஜனங்களும் உண்மையில் கீலேயாத்தில் இருக்கிறார்கள். ஆனால் நீ "சிபோலேத் " என்று கூறினாய்" என்றான். பின்பு அவன் யோர்தானின் கரையோரங்களில் கொண்டுபோகப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
4 நீ கீலேயாத்தின் குமாரனின் இரத்தத்தை கொண்டிருப்பாயானால், பாலுண்ணும் பருவத்திலிருந்தே நீ ஒரு எப்பிராயீம குடும்பத்தால் வளர்க்கப்பட்டு இருந்தாலும், "ஷிபோலேத் " என்று உச்சரிக்க உன்னால் முடியும். அக்காலத்தில் நாற்பத்தீராயிரம் எப்பிராயீம் மனுஷர் மரித்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. அது என்ன? அதுதான் மனிதனின் மீது இரத்தத்தின் தாக்கம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
5 துவக்கத்தில், ஆதாமும் சர்ப்பமும் அங்கு இருந்தனர் என்பது நமக்குத் தெரியும். இதனால் கலப்புகளும், ஒட்டுகளும், கலப்பினங்களும் இருந்தன. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தினூடாக பிசாசின் பிள்ளைகள் கடந்துவந்த பாதை என்னும் பிரசங்கித்ததில் நான் காண்பித்ததைப் போலவே இதுவும் இருந்தது. மொழி மட்டுமல்ல, அனால் ஒவ்வொரு மனிதனிலும் தோல் நிறம் மற்றும் பல கூறுகளும் கூட! மனித முயற்சிகள் அல்லது சில விஞ்ஞானங்களால் இவை மாறாது, ஏனெனில் அது இரத்தத்தில் இருந்து, தலைமுறை தலைமுறையாக நமக்கு பரவுகிறது.
6 ஒரு கறுப்பு இளம் பெண் தன் தோலை வெளுக்க முயற்சி செய்கிறாள், அவள் அழகு பொருட்களின் எல்லாவிதமான பொருள்களையும் பயன்படுத்துவாள், சிறிது காலத்திற்கு அவள் தோலைச் சுத்தமாக வைத்திருப்பாள். ஆனால் இரத்தத் தாக்கத்தின் காரணமாக நிச்சயமாய் ஜெயம்கொள்ளப் போகிற தனது சொந்த கருப்பு சருமத்திற்கும் அந்த வெள்ளை சருமத்திற்கும், இடையேயுள்ள மோதல் தவிர அது வேறு ஒன்றுமல்ல. நியாயாதிபதிகள் 12-ல் நாம் காண்பது சரியாக அதையே தான். இந்த விதமாகத்தான் ஒரே நாட்டில் சில வார்த்தைகளை பேசமுடியாத சிலரும், பேசக்கூடிய சிலரும் இருக்கிறார்கள். பூமியில் குடியிருக்கிற ஒவ்வொருவனும் அவனைப் பின்தொடரும் ஒரு மன அழுத்தத்தை கொண்டுள்ளான். அவன் செல்லுகிற இடமெல்லாம் அவன் தனது மொழியல்லாத மற்றொரு மொழியை பேச முயற்சிக்கிறான். அது என்ன? அது இரத்தத் தாக்கமாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
7 நல்லது, ஆவிக்குரிய பிரகாரமாக அது என்ன என்பதை பார்க்கலாம். நீ வேதனையோடே பிள்ளைகளை பெறுவாய் என்று தேவன் ஏன் ஸ்திரியிடம் கூறினார்? அது ஏன்? ஏனென்றால் மூல பாவமானது பாலியல் பாவமாக இருந்தது! கீலேயாத் எப்பிராயீமை மறுபடியும் வார்த்தைக்கு கொண்டுவருவது ஏன்? அது உண்மையில் வார்த்தையின் உச்சரிப்பு பற்றிய காரியம்! வார்த்தையின் அடிப்படையின் பேரில் தான் நம்மைச் சுற்றியுள்ள எப்பிராயீமரோடு நாம் எந்த பங்கையும் கொள்ளாமல் இருக்கிறோம்! சரியாக நாம் செய்கிறபடி வார்த்தையை உச்சரிக்க கூடாதவன் எவனோ அவன் ஒரு எப்பிராயீமனாக இருக்கிறான். நம்மால் அவர்களுடன் எந்த பங்கையும் கொள்ள முடியாது.
8 அவர்களோடு நாம் போராட முடியாது. நாம் அவர்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியாது. நியாயாதிபதிகள் 12 ம் அதிகாரத்தில் சம்பவிப்பது சரியாக அதுதான். நம்மைப் போன்று ஒரே செய்தியை எழுத்துக்கு எழுத்து, கருத்துக்கு கருத்து, அசைவுக்கு அசைவு துல்லியமாக உச்சரிப்பது பற்றிய காரியமாக அது இருக்கிறது. செய்தியை விசுவாசிக்கிறதாக எவராவது உரிமைகோருகிற நேரத்தில் இருந்து, அவனால் ஏற்றுக்கொள்ளவோ அல்லது உச்சரிக்கவோ முடியாத ஒரு சிறிய புள்ளியோ (iota), எழுத்தோ இருக்கிறதென்றால், நீங்கள் அவனை ஒரு எப்பிராயீமனாக கருதவேண்டும். அத்தகைய மனிதனுடன் உங்களுக்கு ஐக்கியமேதும் இல்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
9 கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளாகிய உங்களைத்தான், நாங்கள் அதை பேசுவது போலவே செய்தியை துல்லியமாக உச்சரிக்க உங்களால் முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது. அதனால்தான் நாம் ஒருபோதும் சகோதரர்களாக இருக்க முடியாது. உங்களது முழு இரவு ஜெபங்களுக்கும், கூட்டங்களுக்கும், இன்னும் மற்றவைகளுக்கும் எங்களை அழைத்திருக்கலாம், ஏனென்றால் உங்களைப் போலவே நாங்களும் நடுராத்திரி சத்தத்தை முழுவதுமாக விசுவாசிக்கிறோம் என்று எப்பிராயீமர் சொன்னார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? நம்மைப் போன்றே நடுராத்திரி சத்தத்தை விசுவாசிப்பதாக அநேகர் உரிமைக் கோருகின்றனர். செய்தியை பிரசங்கிக்கப்போவதாக உரிமைக் கோருகின்றனர் ஆனால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
10 எவராவது செய்தியை வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து துல்லியமாக செயல்படுத்த வில்லையென்றால், அந்த நபருடன் உங்களுக்கு எந்த பங்கும் இல்லை, ஏனென்றால் அவன் ஒரு எப்பீராயீமனாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது]. அங்கே என்ன நடந்தது என்று பாருங்கள்; அவர்கள், "தூதன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் நம்புகிறோம், நாங்கள் இதைச் செய்துள்ளோம், நாங்கள் இதைச் செய்தோம்." என்றனர். பிறகு, கீலேயாத், "நீ பிரசங்கிப்பதை நாங்கள் பார்க்க வேண்டும்" என்று சொன்னான். பிறகு, எப்பிராயீம் பிரசங்கித்தான், ஆனால் அந்த நேரத்தில் ஒரு சிறு புள்ளியளவு (iota) வித்தியாசம் இருப்பதை கீலேயாத் கண்டபோது, தங்களைப் போன்ற விதமாக அவர்கள் அதை நம்பவில்லை என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் செய்ய வேண்டியது அதுதான்.
11 ஒவ்வொரு எழுத்தும் ஒரு உபதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்து, "ஷ" என்ற எழுத்து கிட்டத்தட்ட ஒன்றையும் பிரதிநிதித்துவப்படுத்தாமலும் இருக்கலாம். சில சொற்களில், "ஷ" என்ற எழுத்து சிறு புள்ளியைவிடவும் (iota) அதிகமாக காணப்படாமல், உச்சரிப்பும் கூட இல்லாமல் உள்ளது. ஆனால் கீலேயாத்தின் குடிகள் சிறிய காரியங்களுக்காக கூட கருத்தாக இருந்தார்கள்! கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் அது அப்படித்தான். எப்பிராயீம போதகர்கள், அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உச்சரிப்புகளை அறிந்துகொள்ள கீலேயாத் மலையிலேயே தரித்திருங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
12 எப்பிராயீம பிரசங்கிகள் சில காரியங்களை அலட்சியம் செய்ய ஆரம்பித்தவுடனே, மெய் திருச்சபையானது, அதுதான் கீலேயாத்தினுடையது, அது இனிமேலும் அவர்களை கிறிஸ்துவுக்குள் தங்கள் சகோதரராக கருதாது. ஏனென்றால் அந்த நபர்கள் செய்தியின் உண்மையான உச்சரிப்பை இழந்துவிட்டார்கள். எப்பிராயீம போதகரின் வாயிலிருந்து "சிபோலேத்" வெளியே வர ஆரம்பித்தவுடனேயே, கீலேயாத்தின் சகோதரர்கள் அவனை ஒழுங்குக்குத் திரும்ப வரவழைக்க முயற்ச்சித்தனர். நீங்கள் ஒரே ஏவுதலின் கீழ், ஒரே விதமாக உச்சரித்தாக வேண்டும். இரண்டு ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகள் ஆனாலும், நாம் எப்போதும் ஒரே உச்சரிப்பைக் கொடுக்க வேண்டும்.
13 ஒருவன் நடுராத்திரி சத்தத்தை விசுவாசிப்பதாக கூருகிறான் என்றால், அது நல்லது, ஆனால் அது ஞானஸ்நானத்திற்கு வருவதும், தேவனுக்கு முன்பாகவும், மனிதர்களுக்கு முன்பாகவும் பயத்துடனே செய்தியின் ஒவ்வொரு கருத்தையும் செயல்படுத்துவதுமாக அது உள்ளது; அவன் நம்முடைய சகோதரன். செய்தியை விசுவாசிப்பதாக ஒருவன் உரிமைகோருகிறானெனில், அவனுக்கு தருணம் அளிக்கப்பட்டதுமே அவன் விரைவில் ஞானஸ்நான தண்ணீர்களண்டைக்கு வருவான். ஆனால் அவன் ஒரு எப்பிராயீமனாயிருந்தால், அவன் உங்களுக்கு நெருக்கமாகவும், உங்களோடுகூடவும் வாழலாம்; அவனுடைய இரத்தம் எப்பிராயீம் இரத்தமாக இருக்கும். அது பிசாசின் குமாரன் ஒருவன் அல்லது பிசாசின் குமாரத்தி ஒருத்தி, மாய்மாலத்துடன் உன்னுடன் நடப்பதாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
14 அவ்வாறே, ஒரு புராட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு பாதிரியாரோ அல்லது போதகரோ இந்த செய்திக்கு குருக்கே வந்தால், அவன் தனக்குள்ளே கிலேயாத்தின் இரத்தத்தை கொண்டிருந்தால், அவன் உத்தமமாகவும் நேர்மையாகவும் இருப்பான். அவன் இந்தச் செய்தியை வெளிப்படையாக தனது சபைக்குத் தெரிவிப்பான். காக்குவ் பிலிப்பு என்ற பெயர் கொண்ட தீர்க்கதரிசி ஒருவர் பூமியில் உள்ளார் என்று சொல்லுவான், பின்பு எதையும் மறைத்து வைக்காமல் தனது சபையாரை இந்த செய்திக்கு நேராக நடத்துவான். அவன்தான் தேவனின் குமாரன், அவன்தான் ஆபிரகாமின் குமாரன். ஆனால் அவன் ஒரு எப்பிராயீமனாக இருந்தால், அவன் இந்தச் செய்தியின் சில கருத்துக்களை எடுத்துக் கொண்டு, அதை போதிக்க ஆரம்பிப்பான். பூமியில் காக்குவ் பிலிப்பு என்ற பெயர் கொண்ட தீர்க்கதரிசி ஒருவர் இருப்பது கூட அவனது சபையினருக்கு தெரியாது; முடிவோ நரகமாம். அந்த ஜனம் ஒரு எப்பிராயீமிய போதகனால் வழிநடத்தப்பட்ட எபிராயீமரான ஜனமாக உள்ளனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
15 இரத்தம் வித்தியாசத்தை ஏற்படுத்தும். தேவனின் உண்மையான குமாரன் ஒருவன், "ஓ, நான் இந்தச் செய்தியை பிரசங்கிக்க தகுதியற்றவன். நான் ஆயத்தமாக இல்லை! எங்களுக்கு கற்றுக்கொடுக்க, எங்களிடம் ஒருவரை அனுப்பிவையுங்கள். "நானும் கூட, கற்றுக்கொள்ள விரும்புகிறேன்." என்பான். ஆனால் அவன் ஒரு பிசாசின் குமாரனாக இருந்தால், அவன் தனது பெருமையுடன் அங்கு நின்று கொண்டிருப்பான், அவனது பிரசங்கம் சில "சிபோலேத்" ஆக மட்டுமே இருக்கும். அவனது முயற்சிகள் மற்றும் அவனது பிரசங்கங்கள் சில "சிபோலேத்" ஆக மட்டுமே இருக்கும், ஏனெனில் அது தான் அவனது ஆழம்.
16 சகோதரரே, காலம் கடக்கும், செய்தி முன்னேறும், பல ஜனங்கள் எங்கும் இருந்து வருவார்கள் ஆனால் இந்த மாலையின் செய்தியை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் முழு செய்தியையும் விசுவாசிப்பதாக உரிமை கோரினாலும், நீங்கள் அவனைப் பின்பற்றுவதற்கு முன் அவன் எப்பிராயீமிய போதகனா இல்லையா என்பதைப் பார்க்கும் படிக்கு அது முற்றிலும் வெளிப்படையானதும், சாதாரணமானதுமாக அமைந்துள்ளது.
17 சபைகள் இங்கே விசுவாசிக்கின்றன, உலகம் முழுவதிலுமுள்ள எல்லா இடங்களிலும் விசுவாசிக்கும் ஆனால் நீங்கள் ஒரு எப்பிராயீமிய மொழி அல்லது நடத்தையை கண்டீர்கள் என்றால், அதை விட்டு அப்பாலே செல்லுங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].சகோதரர்களே, ஒரு போதகர் சரியான விதத்தில் செய்தியை அறிவிக்கிறார் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக கன்னியாகவும் தூய்மையாகவும் செய்திக்கு இணங்க உங்களை காத்துக்கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
18 ஒரே ஒரு வேதாகமம் மட்டுமே இருக்கிறது, ஆனால் ஏன் லட்சக்கணக்கான சபைகள் பூமியில் உள்ளன? எப்பிராயீமிய பாதிரியார்களும் போதகர்களும் தான் அதைச் செய்தவர்களாக இருக்கிறார்கள். ஒரே ஒரு பரிசுத்த ஆவிதான் உண்டு, ஆனால் கிறிஸ்தவத்தில் ஏன் இந்த குழப்பம் இருக்கிறது? எப்பிராயீம பாதிரியார்களும் போதகர்களும் தான் அதைச் செய்தவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் தேவனின் குமாரன் என்றால், நீங்கள் அதை விட்டு விலகியிருப்பீர்கள். ஒரு தலைமுறையில், தேவன் கொடுக்கும் ஒரு மொழி அங்கு உள்ளது. நோவாவின் காலத்தில், நோவாவின் மொழியே துல்லியமான மொழியாக இருந்தது, பிற மொழி எப்பிராயீமிய மொழியாக இருந்தது. நீங்கள் தேவனின் பிள்ளை என்றால் நீங்கள் அதை விட்டு விலகிவிடுவீர்கள்.
19 உங்கள் காலத்திலே உயிரோடிருக்கிற தீர்க்கதரிசி சொல்லுகிறவைகளுடன் இசைந்து செல்லாத அனைத்தும், எப்பிராயீமிய மொழிகளாக இருக்கிறது. நீங்கள் அதை விட்டு விலகியிருக்கவேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. கத்தோலிக்கர்கள் எப்பிராயீமராக இருக்கின்றனர். புராட்டஸ்டன்டுகள் எப்பிராயீமராக இருக்கின்றனர். சுவிசேஷக சபையினர் எப்பிராயீமராக இருக்கின்றனர். பிரன்ஹாமிஸ்டுகள் எப்பிராயீமராக இருக்கின்றனர். அவர்களைச் சங்காரம் பண்ணுவதற்குப் பதிலாக, தேவன் அவர்கள்மேல் அடையாளத்தை போடுகிறார், அந்த அடையாளங்களை அவர்கள் பரிசுத்த ஆவி என்கின்றனர். அதன் மூலம் அவர்கள் அழிவுக்காக குறியிடப்பட்டுள்ளனர். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.