



Kacou 75 (Kc.75) : அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டோம்
(ஜூன் 1, 2008 இல் ஆட்ஜாமே அதன் பிறகு ஆபிட்ஜான் அருகில் உள்ள அன்யாமா - ஐவரி கோஸ்டில் ஞாயிரு காலையில் பிரசங்கிக்கப்பட்டது)
1 சகோதரர்களே, எங்கே மனிதன் விழுந்து போனானோ அங்கிருந்து என்றைக்குமாய் உயர்த்தப்படும்படியாக, அசலான கிறிஸ்துவமானது ஏதேனுக்கு மாத்திரமே திரும்ப முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! ஆதியிலே, இது பலதாரமணம் ஆக இருக்கவில்ல! தேவன் ஆதாமிடமிருந்து ஒரே ஒரு விலா எலும்பை எடுத்து அந்த விலா எலும்பிலிருந்து ஒரே ஒரு ஸ்திரீயை உருவாக்கினார் மற்றும் சர்ப்பமானது அவளை கற்புக்குலைச்சலாக்கியபோது, தேவன் ஆதாமிற்க்கு அவளுக்கு பதிலாக வேறொன்றை வைக்க அல்லது உருவாக்க துணிகரம் இல்லாதவராக இருந்தார்! ஆனால் பலதார மணமானது பிசாசின் புத்திரர்களால் பூமியின் மேல் செயல்படுத்தப்பட்ட காரியங்களில் ஒன்றாக ஆதியாகமம் 4 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 இந்த புறாக்களின் ஜோடியை பாருங்கள், இந்த விலங்குகளின் ஜோடிகள் எல்லா இயற்கையும் பலதார மணமானது தேவனுடைய அசலான அமைப்பில் இருந்ததில்லை என்பதை போதிக்கிறது! காயீனினுடைய ஒரு கொள்ளுப் பேரன் அதை செய்தான் [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நீங்கள் இங்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகளோடு வரலாம் ஆனால் இந்த செய்தியை அறிந்துகொண்ட மாத்திரத்திலே ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டபோது ஒரு போதும் இரண்டு மனைவிகளை கொண்டிருக்க முடியாது மற்றும் ஒரு சகோதரன் அதை செய்தால் இந்த செய்தியில் பத்து அல்லது இருபது வருடங்கள் ஆனாலும் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
3 திருமண வாழ்க்கையில், தன் மனைவியோடு ஏழு மாதத்திற்கு பின்பு ஒரு மனிதன் வாரத்தில் மூன்று முறைக்கும் மேலாக ஒருவன் அவளோடு சயனித்தால், அவன் அதை அறிக்கை செய்ய வேண்டும் என்று நான் கூறினேன்! நீங்கள் பார்க்கிறீர்களா?
4 நல்லது, நான் என்னுடைய பொருளுக்கு வருகிறேன்! அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டோம்... இந்த நோக்கத்திற்காக, நான் மத்தேயு 2:1-2 ஐ வாசிக்கப் போகிறேன்... ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்த பொழுது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்".
5 நல்லது, இஸ்ரவேலின் தேவன் உண்மையாகவே கோரா, தாத்தா மற்றும் அபிராமை வனாந்தரத்திலே பயன்படுத்தினார் ஆனால் அவர்களின் பிழையானது மோசேயை எதிர்த்து போகவேண்டும் மற்றும் அவர்கள் தங்களை மோசேக்கு சமமாக இருக்க முடியும் என்று நினைத்தனர். இருப்பினும் மோசேக்கு சமமாக இருந்து மற்றும் தேவனை ஏற்றுக்கொள்ள செய்வது, அதைத்தான் முயற்சி செய்திருக்க கூடாது. மற்றும் தீர்க்கதரிசி பிலேயாம் என்னும் பெயர் கொண்டவன் அதை புரிந்து கொள்ளவில்லை! இஸ்ரவேலின் தேவன் உண்மையாகவே அவனிடம் பேசினார் மற்றும் அவன் தன்னை அவனுடைய நேரத்தின் தீர்க்கதரிசி செய்தியாளன் என நினைத்தான் ஆனால் மோசே அணுகிய போது மோசேயை அவன் கண்டு அவன் வழியைவிட்டு யோவான் ஸ்நானகனை போன்று வெளியேறி அமைதியாக இருந்திருக்க வேண்டும்! ஆனால் அவன் அதை புரிந்து கொள்ளாமல் பணத்தினாலும் மற்றும் அவனுக்கு இருந்த புகழ்ச்சியினாலும் மற்றும் கடந்தகால பிரபலத்தினாலும் செல்வாக்கு மிகுதியால் மோசேக்கு எதிராக சென்றான்!
6 மேலும் நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் என இந்த பீலேயாம் தான் தீர்க்கதரிசனம் உரைத்தவன்! பிலேயாம் எண்ணாகமம் 24:17 "அவரைக் காண்பேன், இப்போது அல்ல அவரை தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்”. மேலும் அது தலைமுறை தலைமுறையாக போதிக்கப்பட்டு வந்தது! நீங்கள் பார்கிறீர்களா?
7 பிலேயாம் தவறான வழியை எடுத்துக் கொண்ட போதும் அவன் வாயில் இருந்த தேவனுடைய வார்த்தையானது எப்போதும் சத்தியமாக இருந்தது. மேலும் பிலேயாம் போல ஆப்பிரிக்க குதிரை வீரனை குறித்து வில்லியம் பிரனஹாம் கூறினதை தவிர, எத்தனை ஆப்பிரிக்கர்கள் சர்வவல்லமையுள்ள தேவன் ஆப்பிரிக்காவிற்கு ஒரு நாளில் ஒரு அடையாளத்தை கொடுப்பார் என்று அறிவிக்காமல் இருந்தார்கள்! ஆனால் அதற்கு காத்திருப்பதற்கு பதிலாக அவர்கள் ஏற்கனவே பிரதான ஆசாரியர்களுடன் எருசலேமில் இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் எப்படி இந்த அடையாளத்தை காண முடியும்?
8 இப்பொழுது, இதை கவனியுங்கள்: சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தை கண்டபோது, அக்கினிஸ்தம்பமானது யூதர்களை வனாந்திரத்தில் வழி நடத்தியதை போல இந்த நட்சத்திரமானது தங்களை வழி நடத்தும் படியாக விட்டனர். பூமியின் மேல் எருசலேம் ஒரு பரிசுத்தமான மற்றும் மிகவும் ஆவிக்குரிய ஸ்தலமாக உள்ளது மற்றும் பரலோகத்தின் தேவன் அவருடைய நாமம் அங்கே குடியிருக்கும் படியாக செய்தார் என்பதை மாத்திரம் இந்த சாஸ்திரிகள் அறிந்திருந்தனர்!
9 எருசலேம், பூமியின் மீது மிகுந்த ஆவிக்குரிய தாகவும் மற்றும் பரிசுத்தமானதாகவும் எப்பொழுதும் இருந்தது. வாடிகன் நகரத்தை விட மிகவும் ஆவிக்குரிய மற்றும் பரிசுத்தமானதாக இருந்தது! மிகப்பெரிய வேதாகம நிறுவனங்கள் பார்ப்பதற்காக இது எருசலேமில் உள்ளது மற்றும் தேவன் ஒரு பணியை பூமியின்மீது நிறைவேற்ற வேண்டுமானால் அது தாவீதின் நகரமாகிய எருசலேமை, தவிர வேறு எந்த ஒரு நகரமாகவும் இருக்க முடியாது.
10 நட்சத்திர மண்டலமானது எருசலேமின் திசையை எடுத்துக் கொண்டுள்ளது என சாஸ்திரிகள் கண்ட பொழுது... முதலாவதாக, அவர்கள் அந்த நட்சத்திரத்தை மிக நன்றாக தொடர்ந்து வந்தனர் ஆனால் அவர்கள் எருசலேமை கண்டபோது, தங்களுக்குள்ளே, இப்படியாக "நம்முடைய தேவனுக்கே மகிமை! தேவனுக்கு நன்றி, நாம் இதை அடைந்துவிட்டோம்!!! என கூறிக் கொண்டனர். அவர்கள் எருசலேமுக்குள் நுழைந்தார்கள் ஆனால் நட்சத்திரம் நுழையவில்லை! நட்சத்திரத்தினால் நுழைய முடியவில்லை!
11 மற்றும் ஒருமுறை எருசலேமில், நட்சத்திரமானது மறைந்துவிட்டது என்று அவர்கள் உணர்ந்த பொழுது, அவர்கள் "நாம் அடைந்து விட்டோம் எனக் கூறினார்கள், மகப்பேறு மருத்துவ மனையை கண்டுபிடிப்பதுதான் மீதமாக உள்ளது என்றார்கள்!" ஆனால் அவர்கள் ஆச்சரியத்திற்கு இணையாக, நேரம் கடந்து கொண்டிருக்கிறது ஆனால் ஒன்றும் இல்லை. அவர்களால் இனி ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே அவர்கள் ஒவ்வொருவரையும் அதிகமாக விசாரிக்க ஆரம்பித்தார்கள் ஆகையால் செய்தியின் பகுதியானது அப்போது இருந்த பிரதான ஆசாரியனை சென்றடைந்ததும் அவன் அதை ஏரோது ராஜாவுடன் மேஜையில் இருந்த பொழுது அறிவித்தான். பரலோக அடையாளத்தின் கீழ் பிறக்கப்போகும் யூதர்களின் ராஜாவை மூன்று ஞானிகளும் தேடிக் கொன்டிருந்தார்கள்!
12 ஏரோது மற்றும் எருசலேமில் இருந்த அனைத்து கிறிஸ்தவ மதத்தினர், அனைவரும் இதனால் கலக்கமடைந்ததாக வேதாகமம் கூறுகிறது! நீங்கள் பார்க்கிறீர்களா? ஒருமுறை, மேய்ப்பர்கள் தேவதூதர்களின் ஏதோ பாடலைப் பற்றி அவர்களிடம் சொன்னார்கள் மேலும் அவர்கள் அது அவர்களுடைய ஆயர் பள்ளிகளினால் ஆனது, அவர்களுடைய சபைகளினால், அல்லது எருசலேமில் வந்திருந்த ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசியினால் என்றார்கள். ஆனால் இங்கே, கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் அங்கே அவர்கள் கண்ட அடையாளத்தை பற்றி அவர்களிடம் பேசினார்கள். ஒருமுறை மேய்ப்பர்களாக இருந்தது மற்றும் இப்பொழுது அவர்கள் சாஸ்திரிகளாக இருக்கிறார்கள். ஏரோதும் எருசலேமும் தொல்லைக்குள்ளாயின. நீங்கள் பார்க்கிறீர்களா ?
13 இப்பொழுது, என்ன நடந்தது? ஞானிகள் எருசலேமை கண்டபொழுது, அதைப் பற்றிக் கேட்க அவர்கள் பிரதான ஆசாரியர்களை அணுகினார்கள்! தாங்கள் கேட்டதை குறித்து அவர்கள் நிச்சயம் உடையவர்களாக இப்படி, "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?," என்று கேட்டார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தையினால் தரித்திருந்த இந்த யூதர்கள் பரிசுத்த ஆவியினால் நிரம்பி இருந்தும் அதைக் குறித்து ஒன்றும் அறியாமல் இருந்தார்கள்!
14 அவ்வாறு மேய்ப்பர்கள் தேவதூதர்களின் பாடல்களை பற்றி அவர்களிடத்தில் அறிவித்தபோது அதைக் குறித்து அவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்தார்கள்! "இது இயற்கைக்கு மேம்பட்ட தேவனுடைய கிரியை அல்லவா?" என்று மேய்ப்பர்கள் சொல்ல முடிந்தது. தேவன் ஆதாமை சிருஷ்டித்த பொழுது தேவதூதர்கள் ஏதேன் தேசம் முழுவதும் பாடினார்கள் என்பதை நினைவில் கொள்ளும்படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அண்டை தேசத்தில் ஒரு குழந்தையானது பிறக்கவில்லையா? அதற்கு அவர்கள் "இல்லை ஒன்றும் இல்லை! என்றார்கள். அங்கே ஒருவன் இருக்கின்றான் ஆனால் அவன் எந்த ஒரு ஆலயத்திலும் கலந்து கொள்ளாத ஒரு படிக்காத விவசாயின் மகன். அந்த விவசாயின் பெயர் காக்குவ் தானியேல் மற்றும் அவனுடைய மனைவியின் பெயர் மேரி". நீங்கள் பார்க்கிறீர்களா ?
15 எருசலேம் தன்னுடைய பல பயனற்ற வேலைகளை பற்றி சென்றது. தெருக்களில் வந்தபோது, சாஸ்திரிகள் விசாரிக்க விரும்பினார் ஆனால் ஜனங்கள் மிக்க அவசரத்துடன் இருந்தனர் ஆகையால் அவர்கள் வேலைகளுக்கு, அவர்களுடைய வியாபாரத்திற்கு, ஜெபக் கூட்டத்திற்கு அல்லது பாடல் குழுவிற்கு ஒத்திகை பார்ப்பதற்கு தாமதமாக கூடாது! நோவாவின் காலத்தில் அவர்களுடைய பெரிய தாத்தா பாட்டிமார் செய்ததைப் போன்று சரியாக இருந்தது.
16 ஆசாரியர்கள் அதை குறித்து கேட்டபோது, அவர்கள் வானத்தை ஒரு முனையிலிருந்து மற்ற முனைவரை பார்த்து ஒன்றையும் காணாது இருந்தார்கள். அதற்கு அவர்கள் "நீங்கள் வெறுமனே ஒரு நட்சத்திரத்தை கண்டோம் என்று கூறவேண்டும்! அது யூதர்களின் ராஜாவின் பிறப்புடன் தொடர்புடையதா இல்லையா என்பதை குறிப்பிட ஆசிரியர்களான நாங்கள் இருக்கின்றோம், இதிலே நீங்கள் ஞானமாக இருக்கவில்லை" என்றார்கள். மற்ற ஆசாரியர்கள், "இது ஒன்றும் சிறப்பானது அல்ல, அது நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு நினைத்திருக்கிறீர்கள் அது வெறுமனே ஒரு பெரிய நட்சத்திரம். மேலும் நீங்கள் நடந்து சென்றபோது, அது நகர்ந்தது என்ற உணர்வை நீங்கள் பெற்றீர்கள். அது ஒன்றும் கிடையாது!" என்றார்கள்.
17 நட்சத்திரத்தை விட்டு வெளியேறினதினால் அவர்கள் ஒரு தவறை செய்தார்கள் என்று ஞானிகள் அறிந்தார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென் என்கின்றனர்]. இருப்பினும் ஞானிகள் நன்றாக தொடங்கினார்கள்! மோசேயும் இஸ்ரவேலரும் வனாந்தரத்திலே இருந்ததைப் போன்று இந்த நட்சத்திரமானது அவர்களுடைய முற்றிலுமானதாக இருந்தது! நட்சத்திரம் வேகமாக சென்றபோது, அவர்கள் வேகமாக போனார்கள், நட்சத்திரம் திரும்பிய போது, அவர்களும் திரும்பிவிட்டார்கள்! நட்சத்திரம் நிறுத்தப்பட்டபோது, அவர்களும் நிறுத்திவிட்டார்கள்! அதுதான் அவர்களுடைய முற்றிலுமானது! எப்பொழுதும் ஒரு உயிருள்ள முற்றிலுமானது! தேவனுடைய புத்திரர்களின் முற்றிலுமானது எப்பொழுதும் உயிருடன் இருக்கும். ஒரு மனிதன் மரிக்கும் பொழுது அவனுடைய மகத்துவம் என்னவாக இருந்தாலும், உயிருள்ள ஜனதாருக்கு அவன் ஒரு முற்றிலுமானதாக இருக்க முடியாது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென் என்கின்றனர்].
18 யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய பொழுது, பிசாசின் புத்திரர்கள் உட்பட "தீர்க்கதரிசி தான் எங்களுடைய முற்றிலுமானது! என்று அவர்கள் எல்லோரும் சொன்னார்கள். அது தான் மோசே! ஆனால் தேவன் அவர்களுடைய இருதயத்தை கண்டார். எந்த ஒரு வேதாகமமும் அல்லது புத்தக சுருளும் இல்லாதிருந்தும் அவர்கள் மத்தியில் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி தான் முற்றிலுமானவன் என்று தேவனுடைய புத்திரர்கள் சொன்னது போன்று அவர்களும் சொல்ல கடமைப்பட்டு இருந்தார்கள்! ஆனால் அதே விதமாகத்தான் பரலோகத்தில் சில தூதர்கள் தங்களை அவருக்கு கிழ்படுத்திக் கொள்ளவில்லை என்று தேவன் அதை அறிந்திருந்தார், ஏனெனில் அவரும் அவர்களை போன்ற ஒரு தூதனாக இருந்தார். பிசாசின் புத்திரர்கள் ஒருபோதும் அவர்கள் மத்தியிலுள்ள ஒரு உயிருள்ள தீர்க்கதரிசிக்கு கீழ்ப்படிந்து இருக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த தீர்க்கதரிசியானவன் அவர்களைப் போன்று ஒரு மனிதனாக இருக்கின்றான்!
19 எங்களுடைய முற்றிலுமானது மோசே, எங்கள் மத்தியில் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி என்று சொன்னபோது அது ஒரு பொய் என்று தேவன் பரலோகத்தில் அறிந்திருந்தார். ஒரு உயிர் வாழும் நபரை தங்களுடைய முக்கியமானதாக பிசாசின் புத்திரர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன்பின் மரண தூதன் எழும்பினான் ஆனால் தேவனோ அவனிடத்தில் "அவர்களை தனியாக விட்டுவிட்டு குறித்த நேரத்தில் அவர்கள் பிரித்து வைக்கப்படுவார்கள்". என்றார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென் என்கின்றனர்].
20 பிசாசின் புத்திரர்கள் எப்பொழுதும் ஒரு புத்தகத்தை தங்களுடைய முற்றிலுமானதாக விரும்புகின்றனர், ஏனெனில் அவர்களின் பிதாக்கள் எப்பொழுதும் மூடநம்பிக்கைகள், பொருட்களை தங்களுடைய முற்றிலுமானதாக விரும்பினார்கள். ஒரு பிசாசின் புத்திரன் ஒரு துண்டு இரும்பை முற்றிலுமானதாக கொண்டிருப்பான், அவன் ஒரு பொருளை முக்கியமானதாக கொண்டிருப்பான் மேலும் அதே விதமாக ஒரு நாளிலே ஒரு புத்தகமானது அவர்களுடைய முற்றிலுமானதாக இருக்கும் என்று தேவன் அறிந்திருந்தார். அவர்களுடைய ஆவிக்குரிய ஆர்வத்திற்கு மரித்த தீர்க்கதரிசிகளையே அவர்கள் விரும்பினார்கள் அவைகளையே ஆப்பிரிக்காவில் பெரிதான அளவில் நாம் காணலாம். அதனால்தான், மோசே இறந்தவுடன், "நாங்கள் மோசேயைச் சேர்ந்தவர்கள்! எங்களது முற்றிலுமானது, அது மோசேயின் சுருள்" அதாவது மோசேயின் ஐந்து புத்தகங்கள் என்றனர். மேலும் இந்த பிசாசு ஆனது இன்று வரை பூமியின் மேல் வேலை செய்து கொண்டிருக்கின்றது!
21 ஏசாயா பேசினபோது, அவர்கள், "வேதாகமம் எங்களுடைய முற்றிலுமானது. நாங்கள் ஒரு மனிதன் மேல் நம்பிக்கை கொண்டு இருப்பது இல்லை! நாங்கள் வேதாகமத்தில் விசுவாசம் கொண்டுள்ளோம்!" என்றார்கள். யோவான் ஸ்நானகன் பேசினபோது, அவர்கள், "வேதாகமம் எங்களுடைய முற்றிலுமானது. நாங்கள் வேறு எந்தக் காரியத்தின் மேலும் நம்பிக்கை கொண்டு இருப்பது இல்லை!" என்றார்கள். அங்கே இருந்த பிசாசுகள் புத்திரர்கள் "ஆமன்" என்றார்கள். மேலும் யோவான் ஸ்நானகனக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை! தீர்க்கதரிசிகள் அவ்வளவாக துன்பப்பட்டார்கள்! ஒரு தீர்க்கதரிசியின் வாழ் நாளின் போது, அவனை சுற்றி தேவனுடைய புத்திரர்களை ஏற்படுத்துகிறான் ஆனால் அவன் இல்லாத போது, இரட்சிப்பின் எந்த வழியும் கெடுத்து போடும்படியாக பிசாசின் புத்திரர்களே ஆசாரியத்துவத்தை கைப்பற்றுகிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
22 ஞானிகள் நட்சத்திரத்தை கைவிட்ட போது, இப்பொழுது அவர்கள் ஆசிரியர்களிடத்தில் இருந்தார்கள் மேலும் அந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் மற்றும் மற்றவர்களும் அந்த ஞானிகள் இடத்தில் நேரத்தை செலவு செய்து மோசேயுடனான செங்கடலைக் கடந்து வருதல் எவ்வளவு மகத்துவமாக இருந்தது என்றும் மற்றும் மோசே அதை செய்தான், மோசே அதை எகிப்த்தில் செய்தான். மேலும் இந்த தீர்க்கதரிசி இதை செய்தார், அந்த தீர்க்கதரிசி அதை செய்தார், உயிருள்ள நட்சத்திரத்தையும் மற்றும் அங்கு கண்ட யாவையும் குறித்து ஞானிகள் பேசும்படியாக கேட்பதற்கு பதிலாக. அவர்கள் சரித்திரத்தை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தோல் சுருள்களை விரித்து, இதையும் அதையும் காண்பித்தார்கள். அவை அனைத்தும் இருந்தது!
23 அவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு போதிக்கும் படியாக அஞ்ஞான ஞானிகள் இடத்தில் ஒன்றும் இல்லை. தேவன் பூமியின் ஜனத்தாரிடத்திற்க்கு பேச வேண்டுமென்றால், பூமியின் மேல் மிகவும் ஆவிக்குரியவர்களான ஆசாரியர்களான அவர்கள் மூலமாகத்தான். இன்றும் மீண்டும் ஆக பிரதிபலிக்கின்ற பெருமையை நீங்கள் பார்க்கிறீர்களா? நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலே நட்சத்திரத்தை கண்ட இந்த சிறு புருஷர்கள் இடத்தில் செவி கொடுப்பதற்கு பதிலாக, ''எங்களிடத்தில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை குறித்து பேசுங்கள், அவர் யார்? அவர் புதிதாக எந்த காரியத்தை கொண்டு வந்திருக்கின்றார்? இந்த ஏப்ரல் 24, 1993 மகத்தான தரிசனம் எவ்விதமாக நடந்தது? நாங்கள் புரிந்து கொள்ள விரும்புகின்றோம். நாங்கள் அரிய விரும்புகின்றோம்". அதற்கு பதிலாக அவர்கள் இயேசு இதை செய்தார் அத்தகைய அப்போஸ்தலர் அதை செய்தார், அதுபோன்று ... கதைகளைக் கூறுகிறார்கள். அவர்கள் பிசாசின் புத்திரர்கள் . மேலும் அந்த சரித்திரம் ஆனது மீண்டும் ஆக தன்னைத் தானே பிரதிபலிக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
24 ஆனால் இந்த மகத்தான ரபீக்களால் என்ன செய்ய முடியாததை அதை ஒரு அஞ்ஞானி செய்தான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஏரோது ராஜா அதை செய்தான் ஆனால் பொல்லாங்கான உள்நோக்கத்துடன் அதை செய்தான். இந்த நட்சத்திரமானது எப்பொழுதிலிருந்து தோன்றியது மற்றும் இந்த அனைத்து காரியங்களையும் ஞானிகள் தன்னிடத்தில் கூறும்படியாக அவர்களிடத்தில் கேட்டான். ஆனால் வேதபாரகரும் பரிசேயரும் மற்ற அவர்கள் எல்லோரும் அதைக்குறித்து ஒன்றையும் அறியாதிருந்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த மகத்தான போதகர்கள், ஆயர்கள், பேராயர்கள் அவர்களுடைய பெருமையை நிமித்தம் இந்த யோசனையை கொண்டிருக்க முடியவில்லை. மனுக்குலத்தின் இரட்சிப்பிற்காக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிருள்ள நட்சத்திரத்தை மீண்டும் ஆக தேவன் கொண்டு வந்து இருக்கையில், மேலும் அது பூமியின் மேல் இவ்விதமாகத் தான் இன்னும் ஆக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
25 இப்பொழுது இதைக் கேளுங்கள் : நட்சத்திரம் தோன்றும் என்று வேதாகமம் சொல்வது உண்மைதான் ஆனால் அந்த நட்சத்திரம் யாக்கோபின் இருந்து வெளியே வருவதாக சொல்லியிருந்த அதே வேதாகமத்தை முற்றிலும் மானதாக இந்த ஞானிகள் பற்றிக் கொண்டிருந்தால் அவர்கள் தேடிக்கொண்டிருந்த இலக்கை ஒரு போதும் கண்டிருக்க மாட்டார்கள்! ஆனால் அவர்களுடைய முற்றிலுமானதும், அவர்களுடைய வழிகாட்டியும் அடையாளமும் அது உயிருள்ள நட்சத்திரமாக இருந்தது! அவர்கள் நட்சத்திரத்துடன் நடந்தார்கள், அவர்கள் நட்சத்திரத்துடன் பேசினார்கள், நட்சத்திரம் அவர்களுக்கு பதில் அளித்தது, நட்சத்திரத்தின் பிரசன்னம் மற்றும் வளிமண்டலம் மிகவும் நன்றாக இருந்தது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
26 வேதாகமம் முற்றிலுமானதினுடைய சாட்சியாக இருக்கின்றது ஏனெனில் தீர்க்கதரிசியே தேவன் ஜனங்களுக்கு கொடுத்த முற்றிலுமானதாகும்! 2 நாளாகமம் 20:20, ஓசியா 12:14 மற்றும் ஆமோஸ் 3:7 வேதாகமத்தையோ அல்லது ஏற்கனவே மரித்துப் போன தீர்க்கதரிசியின் மேல் நம்பிக்கை கொள்ளும்படியாக கூறவில்லை
27 இதோ, இதை கவனியுங்கள்: பிரதான ஆசாரியர்களுக்கு அறிவிக்க வந்த மேய்ப்பர்களால் எருசலேமுக்கு வெளியே தேவதூதர்கள் பாடினது கேட்க்கப்பட்டது! அவ்வாறே, பூசாரிகளுக்கு தோன்றுவதற்கு பதிலாக நட்சத்திரம் ஞானிகளுக்கு தோன்றியது! தன்னுடைய ஊழியர்களாகிய ஆசாரியர்களை அவமதிக்கும்படி, தேவன் ஏன் இதைச் செய்கிறார்? இது தேவனுடைய வார்த்தை ஒரு ஆசாரியனுக்கு வரவில்லை என்று கூறுகிறதா?
28 இன்று, அப்போஸ்தலர்களும், சபை தீர்க்கதரிசிகளும், சுவிஷேசகர்களும், போதகர்களும், மேய்ப்பர்களும் மற்றும் நீங்கள் பார்க்கிற யாவரும் புதிய உடன்படிக்கையின் ஆசாரியர்களாக இருக்கிறார்கள். ஒரு அப்போஸ்தலனோ, சபை தீர்க்கதரிசியோ, சுவிசேஷகேனா, போதகனோ அல்லது மேய்ப்பனோ அல்லது ஆயரோ அல்லது பேராயரோ மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் தேவனுடைய வார்த்தை அவனிடத்திற்கு வர முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? இயேசு கிறிஸ்து தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார், அவர் பூமிக்கு வந்தபோது, அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்த யோவானிடம் சென்றார். ஆசாரியத்துவமானது அவனுடைய காலத்தின் உள்ள உயிர் வாழும் தீர்க்கதரிசி சொல்வதை எதிரொலிக்க வேண்டும்.
29 மேலும் இன்று நீங்கள் ஒரு அப்போஸ்தலனாகவோ, சபை தீர்க்கதரிசியாகவோ, சுவிசேஷகனகவோ, போதகனாகவோ, மேய்பனாகவோ, மற்றும் அது போன்று இருப்பீர்களானால், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு கூறுகிறதை எதிரொலித்தால் மாத்திரமே நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
30 மேலும் இன்று தேவன் இங்கு செய்து கொண்டிருப்பது இந்த கத்தோலிக்க, புராடெஸ்டண்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு தலைவர்களுக்கும் அவ்விதமாகவே இருக்கின்றது. மேலும் இது இப்படி இருக்கும் போது, பிரதான ஆசிரியர்கள் அதை நிராகரிப்பதில் துரிதமாக உள்ளனர்! மேலும் ஏப்ரல் 24, 1993 இல், தேவதூதன் இறங்கி வருகிறார்! தேவதூதன் இறங்கி வந்து வேதாகமத்தை திறக்காத ஒரு சிறிய அஞ்ஞானியிடம் பேசினார்! ஆனால் தேவன் தன்னுடைய வழியை மாற்றிக்கொள்ள கூடுமோ? இல்லை, ஏனெனில் அவர் நேற்றும், இன்றும், மற்றும் வரப்போகும் காலத்திற்க்கும் மாறாதவராக இருக்கின்றார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
31 தேவதூதர்கள்களின் பாடலானது ஆசாரியர்களிடம் போவதை விட்டு தேவனை பற்றி ஒன்றுமே அறியாத சிறிய மெய்ப்பார்களிடம் சென்றது. நட்சதிராமனது ஆசாரியர்களிடம் செல்வதை விட்டு தேவனை பற்றி ஒன்றுமே அறியாத சிறிய சாஸ்திரிகளிடம் சென்றது. மேலும் ஏப்ரல் 24,1993 இல் தேவ தூதனும் அட்டுக்குட்டியும் கத்தோலிக்க, பிராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் பிரதான ஆசாரியர்களிடம் செல்வதை விட்டு ஐவரி கோஸ்ட் இல் உள்ள சிறிய பிராந்தியத்தில் படிப்பறிவில்லாத இடத்திற்கு போனது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
32 நல்லது, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு ஆகிய என்னுடைய வாயில் உள்ள தேவனுடைய வார்த்தை, ஏசாயா, எரேமியா மற்றும் வேதாகமத்தின் அனைத்து தீர்க்கதரிசிகளை போன்று அதே மதிப்பை கொண்டுள்ள தவறு இழைக்க கூடாதது என எத்தனை பேர் விசுவாசிக்கிரீர்கள்? மேலும் நான் இதை கூறவேண்டுமானாலும் அதை கூறுகிறேன். மேலும் இப்பொழுது நான் இதை கூற வந்துள்ளேன், நான் தோற்றுப்போனேனா? [ஆசிரியர் குறிப்பு : சபையார் "இல்லை" என்கிறார்கள்] வெளிப்படனது மிகவும் கடினம் ஆனால் தேவன் அதை நிர்னைக்கப்பட்டவர்களுக்கு தருகிறார்.
33 இப்பொழுது! ஏன் சாஸ்திரிகள் முன்னேறி கொண்டிருந்தனர்? சாஸ்திரிகளுக்கு ஜீவிக்கின்ற வழிகாட்டி இருந்தால் அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர், ஒரு ஜிவிக்கின்ற முற்றிலுமானது! மேலும் நமக்கு ஜீவிக்கின்ற முற்றிலுமானதொன்று வேண்டும் ஏனெனில் அமோஸ் 3:7 இல் கர்த்தராகிய ஆண்டவர் எபேசியர் 4:11 இன் உழியக்கரர்களாகிய ஆசாரியர்களுக்கு தமது ரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார் என கூறவில்லை ஆனால் அவருடைய உயிர் வாழும் தீர்க்கதரிசிகளுக்கு தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்தாமல் தேவன் ஒன்றும் செய்வதில்லை. என கூறினார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
34 தேவன் இன்று ஏதோ ஒன்றை செய்ய வேண்டுமானால், ஜெர்மனியில் உள்ள மார்டின் லூதர் இன் கல்லறைக்கு சென்று வெளிப்படுத்த மாட்டார், ஜெப்பேர்சன்வில்லில் உள்ள வில்லியம் பிரன்ஹாம் மின் கல்லறைக்கு வெளிப்படுத்த மாட்டார். ஆனால் உங்கள் மத்தியில் ஜீவிக்கிற மற்றும் நடந்து கொண்டிருக்கிற தீர்க்கதரிசி காக்கு பில்லிப்புவிடம் வெளிப்படுத்துவார் [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்]. மற்றும் சாஸ்திரிகளிடதில் பேசுவதற்கு தீர்க்கதரிசி இல்லாததால் தேவன் ஒரு வேதாகமத்தை அல்ல ஆனால் ஒரு நட்சத்திரத்தை அனுப்புகிறார்! நீங்கள் பார்க்கிறீர்களா?
35 பூமியின் மீது ஐநுறு வருடங்களுக்கு தீர்க்கதரிசி இல்லை என்றாலும், தேவன் ஒருபோதும் அவருடைய வார்த்தையை ஆசாரியனுக்கோ, ஒரு அப்போஸ்தலனுக்கோ, சபை தீர்க்கதரிசிக்கோ, ஒரு போதகருக்கோ, மேய்ப்பனுக்கோ அல்லது சுவிசேஷகனுக்கோ வெளிப்படுத்த மாட்டார்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்]. மேலும் ஒரு தீர்க்கதரிசி பூமியை கடந்து செல்லும் போது, அந்த நட்சத்திரம் நின்று போனதாக இருக்கிறது மற்றும் நீங்கள் அங்கேயே நிற்கும் வரைக்கும், நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் மேலும் தேவன் உங்களோடு இருக்கிறார். ஒரு தீர்க்கதரிசி பூமியை கடந்து சென்ற பின் யாக்கோபில் இருந்து வேறொரு நட்சத்திரம் வெளியே வருவதை கணும் வரை தரித்து இருங்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
36 இன்று உயிர் வாழும் ஒரு மனிதனுடய முற்றிலுமானதாக எப்படி இறந்த மனிதனாக இன்று உயிருடன் இருக்கும் ஒரு மனிதனின் முழுமையானவன் எப்படி இறந்த மனிதனாக இருக்க முடியும்? 2800 வருடங்களுக்கு முன் இறந்த ஏசாயாவின் புத்தகம் எப்படி உயிருடன் இருக்கும் யாரோ ஒருவருக்கு முற்றிலுமானதாக இருக்க முடியும்? இந்த சாஸ்திரிகளுக்கு முற்றிலுமானதாக நகர்ந்து கொண்டிருக்கிற நட்சத்திரமாக. இருந்தது! சாஸ்திரிகளிடதில் டன் கணக்கில் சுருள்களை கொடுத்திருந்தால் , அவர்களால் ஒரே ஒரு அடி கூட முன்னோக்கி சென்று இருக்க முடியாது மேலும் அவர்களின் எல்லா முயற்சியும் அவர்களை தேவனிடம் இருந்து வெளியே கொண்டு போயிருக்கும்! அதனால் தான், அங்கே இருந்த சுருள்களுக்கு பதிலாக, தேவன் நட்சத்திரதை அனுப்பினர், ஒரு உயிர் வாழும் முற்றிலுமானது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
37 நீங்கள் தீர்க்கதரிசி இல்லாமல் இதை செய்ய விரும்பினால், நீங்கள் எல்லா மத புத்தகங்களையும் வாசிப்பீர்கள், நீங்கள் அதிகமாக ஜெபிப்பீர்கள் ஆனால் இவை அனைத்தும் உங்களை பிசாசினால் நிரப்பிக் கொண்டே இருக்கும் மற்றும் தேவனை விட்டு விலகச் செய்யும் மேலும் நீங்கள் தீர்க்கதரிசி யை காட்டிலும் பத்து முறை அதிகமாக கணவுகளைக் கொண்டிருப்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
38 முடிப்பதற்கு, நான் மத்தேயு 2 ஆம் அதிகாரம் 9 மற்றும் 10 ஆம் வசனத்தை வாசிக்கலாம். நான் வசிக்கிறேன்... "அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்].
39 இந்த கடைசி பத்தியை நான் விரும்புகிறேன், நான் அதை விரும்புகிறேன்! நீங்கள் பார்க்கிறீர்களா? வேதாகமானது இப்படியாக அவர்கள் தங்கள் வழியே சென்றார்கள் மற்றும் எருசலேமை விட்டு வெளியே சென்ற போது அவர்கள் மறுபடியும் நட்சத்திரத்தை கண்டனர் என கூறுகிறது! அவர்கள் மறுபடியும் கிழக்கிலே கண்ட நட்சத்திரத்தை கண்ட போது , அவர்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். குழந்தை இருக்கும் இடத்தில் வந்து நிற்கும் வரை அவர்கள் நட்சத்திரத்தின் பரர்வையை இழக்கவில்லை. ஆமென்!
40 அவர்கள் ஆசாரியர்களையும், சபைகளையும், எருசலேம் அனைத்தையும் விட்டு வந்தவுடன் , அவர்கள் நட்சத்திரத்தை கண்டனர் மற்றும் நட்சத்திரத்தை கண்டவுடன், அவர்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தனர். நீங்கள் பார்க்கிறீர்களா? உங்களால் பிசாசு பிடித்த கிறிஸ்துவதிற்குள்ளகவும் , கத்தோலிக்க, புரொடஸ்ட்டென்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளுக்குள்ளகவும் இதற்குள்ளாக உள்ள உழியங்களிலும் நட்சத்திரத்தை காண முடியாது. சாத்தானின் இந்த ராஜ்யத்தில் உங்களால் நட்சத்திரத்தை காண முடியாது நீங்கள் அதை விட்டு வெளியே வர வேண்டும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர்]
41 சகோதரர்களே, எப்போதும் உங்களுடைய கண்களை நட்சத்திரத்தின் மேல் வையுங்கள் மேலும் நீங்கள் ஒருபோதும் தேவனுடைய திட்டத்தில் இருந்து விலக மாட்டீர்கள்! நீங்கள் விரும்புகிற தீர்க்கதரிசிகளின் சுறுள்களை வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் படியுங்கள் ஆனால் உங்களுடைய முற்றிலுமானது எப்பொழுதுமே உங்களுடைய காலத்தில் ஒரு உயிர் வாழும் நட்சத்திரமாக இருக்கட்டும். நட்சத்திரமானது வலது புறம் சென்றால், வலது புறம் செல்லுங்கள்! நட்சத்திரமானது இடது புறம் சென்றால், இடது புறம் செல்லுங்கள்! நட்சத்திரமானது முன்னோக்கி நகர்ந்தால், அதோடு கூட நகருங்கள். ஆனால் இப்படியாக, ஆனால் ஏசாயா இதை கூறினான், பவுல் அதை கூறினான், என கூறதேயுங்கள்! இல்லை, நட்சத்தித்தோடு கூட நகறுங்கள்!
42 துவக்கத்தில் மோசேயோடு இருந்தது போல, நாம் கிழக்கில் இருந்து வெளியே வந்த அதிக எண்ணிக்கை உடையவர்கள் ஆனால் நட்சத்திரத்தை தொடர்ந்த ஞானிகள் இங்கே இருக்கிறார்கள் மற்றும் அதை பின் தொடாரதவர்கள்! சிறு குழந்தையை கண்டவுடன் அவர்கள் சந்தோஷ மடைந்தர்கள் இது உண்மை ஆனால் வேதாகமானது இப்படியாக கூறுகிறது அவர்கள் நட்சத்திரத்தை கண்ட போது, அவர்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்! மற்றும் என்னால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை கற்பனை செய்ய முடிகிறது. மற்றும் இங்கே ஜனங்கள் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டென்ட், சுவிஷேசக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளை நம்பாமல் இருந்தால் அவர்கள் இந்த சந்தோஷத்தை உணரமுடியும், பிரங்கமிஸ்டுகள் உணர்ந்த சந்தோசம் இங்கே உள்ளது. டிசம்பர் 24, 1965 இல் நட்சத்திரமானது நின்று போன போது முன்னேரி செல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரன்ஹாமிஸ்டுகள் உணரக்கூடிய சந்தோஷம் இங்கே உள்ளது. புரிந்துகொள்ளும்படி ஞானம் உள்ளவன் புரிந்து கொள்ளட்டும்.