



Kacou 76 (Kc.76) : ஆப்பிரிக்காவுக்கு அருளப்பட்ட கிருபை
(ஜூன் 15, 2008 ஞாயிற்றுக்கிழமை காலையில் ஐவரிகாஸ்டின் ஆபிட்ஜானுக்கு பக்கத்தில் உள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1 பூமியின் பிற இனங்களைப் போலவே, ஆப்பிரிக்காவுக்கும் தேவன் ஒரு கிருபையை அருளினார். ஆனால், பிரசங்கிக்கும் முன்னர் நான் குறிப்புகளுடன் தொடங்க விரும்புகிறேன். அது பிரசங்கங்களைப் பற்றியது. மாலைநேர ஆராதனைகளில் அல்லது இரண்டு, மூன்று பேர் கொண்ட மாலைநேர ஆராதனை வேளைகளில், ஒரு பிரசங்கியின் அல்லது மேய்ப்பனின் தெரிவுக்கு ஏற்ப ஒரு பிரசங்கத்தை வாசித்து அதன்பேரில் கருத்துரை அளிக்க நான் விரும்புகிறேன்.
2 நல்லது! "நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்" என்ற பிரசங்கத்தை கேட்ட ஒருவர், "சகோதரன் பிலிப்பு, யூதர்களின் ராஜா பெத்லகேமிலே பிறக்கவேண்டும் என்னும், வானசாஸ்திரிகள் அறியவேண்டிய அதே காரியத்தையே வேதபார்கள் அனைவரையும் அறியச்செய்தனர்!" என்றார். நான், "இல்லை! வானசாஸ்திரிகளுக்கு அது தேவைப்படவில்லை! ஏரோதுக்கும் யூதர்களுக்குமே அது நல்லது. இந்த வசனம் இருந்த போதிலும், இரண்டு ஆண்டுகளில் பிறந்த அனைத்து குழந்தைகளிலும் எது கிறிஸ்து என்பது வேதபாரகர்களுக்கு தெரியாது! எந்த வசனமும் வீட்டைக் காண்பிக்காது ஆனால் நட்சத்திரம் அதைச் செய்தது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
3 "அவர்கள் ராஜா சொன்னதை கேட்டு, தங்கள் வழியே புறப்பட்டுப்போனார்கள்; இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரமானது, சிறு பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது." என வேதாகமம் கூறுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? நட்சத்திரத்தால் மட்டுமே அதைச் செய்யமுடியும்! எந்த புத்தகத்தையும் பயன்படுத்தாமல் அல்லது எவரிடமும் வினவாமல் எந்த நபரும், பாமரனும் கூட, மேசியாவைக் கண்டுபிடிக்க கிழக்கிலிருந்து வெளியேறலாம்.
4 நீங்கள் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஒருவராக இருந்து, நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்றால், எப்பொழுதும் இருந்ததிலேயே இரட்சிப்பானது மிக எளிதான காரியம் என்பதை நீங்கள் காண்பீர்கள்! நீங்கள் பார்ககிறீர்களா? நட்சத்திரத்தை கண்டுபிடிப்பதுதான் மிக முக்கியமான காரியமாக இருந்தது! பிறகு எளிமையாக நட்சத்திரத்தை பின்தொடர வேண்டியதுதான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
5 ஆகாபின் கொள்ளுப்பேரனான, ஜனாதிபதி ஏரோதுக்கும் யூதருக்கும் முற்றிலுமானதாக (Absolute) இருந்தது எது? வசனங்கள் 3 மற்றும் 4 இதை கூறுகிறது, "ஆனால் ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்; அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்." நீங்கள் பார்ககிறீர்களா? அவனது முற்றிலுமானது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்தான். மேலும் பிரதான ஆசாரியர்களின் முற்றிலுமானதோவெனில் கரடுமுரடான அதே பழைய சுருள்கள்தான்!
6 இப்போது, ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஒரு சபையில், ஒரு குறிப்பிட்ட மார்கஸ் கார்வே என்பவர், "ஆப்பிரிக்காவை நோக்கி பாருங்கள், அங்கே ஒரு கருப்பு அரசன் முடிசூட்டப்படப் போகிறான்." என்றதை தெரிவிக்க வேறொரு நபர் எனக்கு எழுதினார். அவர் மறுபடியும் என்னிடம்: "நீங்கள் பேசுவதை நான் கேட்கும்போது, அருமை தீர்க்கதரிசியே, பூமியின் எல்லா மூலைகளிலிருந்தும் காணக்கூடியதான, அந்த வருகிற காரியத்தை என்னால் பார்க்கமுடியும். “சிலேசியா வாழ்க” என்பதைக்காட்டிலும் மகத்தானதும் புனிதமுமான ஒன்று!" என்று சொன்னார்.
7 சகோதரர்களே, அது மிகவும் நல்லது! ஆனால் இங்கே ஒரு ஆப்பிரிக்க தீர்க்கதரிசியை பார்ப்பது அல்லது ஆபிரிக்காவுக்கு ஒரு பெருமை என நோக்குவது போன்ற காரியமல்ல அது ஆனால் ஒருவனது இரட்சிப்புக்காக நோக்குகிற காரியமாக இருக்கிறது! ஆப்பிரிக்கர்களான நீங்கள், உங்களை கவனித்துக் கொள்ளாவிட்டால், வெள்ளையர்கள் உங்களுக்கு முந்தி இராஜ்யத்திற்குள் போவார்கள். நான் ஆப்பிரிக்கர்களுக்காக வாதாடும் கொள்கைக்காரனல்ல (Pan African), நான் ஒரு போதும் அப்படியாகமாட்டேன். நடுராத்திரி சத்தமானது பூமியின் ஸ்தாபனங்களுக்கும் அமைப்புகளுக்கும் எதிரான ஒரு கொள்கைவிளக்க அறிக்கையல்ல ஆனால் விசுவாசிப்போரின் இரட்சிப்புக்கேதுவாக இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
8 நல்லது, முதலில் 1 இராஜாக்கள் 10:13 ன் ஒரு பாகத்தை நான் படிக்க விரும்புகிறேன் ... நான் அதை வாசிக்கிறேன், "ராஜாவாகிய சாலொமோன்தானே சந்தோஷமாய் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் ஊழியர்களுடன் தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்”.
9 இப்போது, இரண்டுவிதமான கன்னிகைள் தங்கள் நாளின் உயிர்வாழும் தீர்க்கதரிசியின் பிரசங்கத்தைப் பெற்றுக்கொள்வதை கவனியுங்கள், ஆனால் விவேகமுள்ளவர்கள் மட்டுமே தீர்க்கதரிசியினுடைய ஜீவியத்தின் பிரசங்கத்தைப் பெறுகிறார்கள், அது செய்திக்குப் பின்னாலுள்ள ஒரு இரகசியமாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
10 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் கிறிஸ்துவை அறிவிக்கலாம், கிறிஸ்துவின் சார்பாக பேசலாம் அல்லது கிறிஸ்துவை வெளிப்படுத்தலாம். யோசேப்பு கிறிஸ்துவை வெளிப்படுத்தினான் மேலும் அந்த யோசேப்பு முப்பது வயதாக இருந்தபோது அவன் பார்வோனுக்கு முன்பாக நின்றான் என்றும் அனைத்து ராஜாங்கமும் அவனுக்கு அளிக்கப்பட்டது என்றும் வேதாகமம் கூறுகிறது! கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவை போல, யோசேப்பு விற்கப்பட்டான். சிறை அறையில், அவனுடைய இடதுபக்கத்தில் இருந்த சுயம்பாகியின் தலைவன் கொலைசெய்யப்பட்டான், அவனுடைய வலதுபக்கத்தில் இருந்த பானபாத்திரக்காரரின் தலைவன் காப்பாற்றப்பட்டான்.
11 மின்னலானது பிரன்ஹாமிஸ்டு சபையுடனேகூட மேற்கிலிருந்து வந்து, ஆப்பிரிக்காவை எட்டுகிறபோது, அவனால் மட்டுமே அந்த ஒன்றை கண்டுகொள்ள முடியும், என்பதை அறிந்து கொள்ளுங்கள்! மேலும் பூமியின் சகல இனத்தின் மனிதர்களும் அவனுடனேகூட இரட்சிக்கப்படுவார்கள். ஒவ்வொரு தீர்க்கதரிசியின் காலத்திலும், இருந்ததுபோல, பூமியின் ஒவ்வொரு இனத்தின் மனிதரும் இந்த தீர்க்கதரிசியுடனேகூட இரட்சிப்படைவார்கள். மேலும் இந்தப் பக்கத்தில், இந்த ஆவிக்குரிய அர்த்தத்தில்தான், கர்த்தர் அதை "தென்தேசத்து ராஜஸ்திரி" என்று அழைக்கிறார், அதுதான், கிறிஸ்துவின் அச்சடையாளங்களோடுகூடிய, ஆப்பிரிக்க திருச்சபையின் துவக்கமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
12 அது மின்னலின் வேலை அல்ல, ஆனால் சுத்திகரிக்கப்படு, வெண்மையாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாக விளங்கவும், எடுத்துக்கொள்ளப்படுதலின் போது கறை திரை இல்லாமல் அற்பணிக்கப்படவுமே மின்னலானது தேவைபடுகிறது! இவ்வாறு, திருச்சபைகள் எழும்பும், எழும்பும், மீண்டும் எழும்பும் ஆனால் ஆவிக்குரியபிரகாரமாக அப்போஸ்தலர்களின் காலம் முதற்கொண்டு, அது எப்போதும் இந்த ஒரே திருச்சபையாகத்தான், பூமியிலுள்ள இனங்களுக்கேற்ப தன்னையே வெளிப்படுத்துகிறவளாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
13 இது ஆப்பிரிக்காவிற்கு முதன் முதலாக வழங்கப்பட்ட யுகமாகும், அவள் மட்டுமே இந்த வகைக்கு அழைக்கப்பட முடியும். சேவல் கூவும் வேளையின் முடிவின்போது அவர்கள் தோன்றுகிற வரையில், அங்கே வகைவகைகளாக இருக்கும், இந்த ஒன்றை போல் அல்ல ஆனால் கரை திரையற்ற தூய்மையான கன்னிகையாக இருக்கும்.
14 சேவல் கூவுகிற இந்த கட்டத்தில், அது மறுபடியும் தோன்றும், மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் பரிபூரணமடைவதற்காக மறுபடியும் தோன்றும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இஸ்ரேல் தனது முதலாவது தோன்றுதலில், எகிப்திய குறிசொல்லுதல்லுக்கு வெளியே, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக்கொள்ள முடியவில்லை! சரீரப்பிரகாரமாக, ஒரு தலைமுறையானது விழுந்தது இன்னொரு தலைமுறையானது எழுந்தது ஆனால் ஆவிக்குரிய பிரகாரம் அது தானியேல் 12:8 முதல் 10 ன் வழியாக அதே இஸ்ரவேலாக இருந்தது.
15 நாற்பதுநாள் மட்டும் மோசே போய்விட்ட பொழுது, இஸ்ரவேல் வழிதவறிப் போனதை நினைவுகூறுங்கள். சொல்லப்போனால் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு வெளியே, ஆசாரியர்களான அப்போஸ்தலர்கள், சபைத் தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்கள் ஆகியோரால் சபையானது தேவனுடைய சித்தத்தில் இருக்கமுடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு, பவுல் வரவேண்டியிருந்தது. மேலும் பவுலின் வாழ்நாள் காலத்தில் ஏற்கனவே, சபையில் சில தொல்லைகளை நாம் காண்டோம்.
16 பவுல் காட்சியைவிட்டு போனபோது, சபை மறுபடியும் வழிதவறிப் போயிற்று. ஒருவர் பின் ஒருவராக, அனேக ஊழியக்காரரை தேவன் மேலெழும்ப பண்ணினார். தேவனின் ஊழியக்காரன் ஒருவன் பூமியின் மீதெங்காவதிருந்து தோன்றினான், மேலும் அவன் மரித்தபோதோவெனில் சபையானது அஞ்ஞான மார்க்கத்திற்கு திரும்பினது. இந்தப்பிரகாரமாக ஜான் வெஸ்லி, உல்ரிச் ஸ்விங்லி, மார்ட்டின் லூதர், ஜான் கால்வின், ஜான் ஹஸ், ஜான் விக்லிஃப் ... போன்ற பெயர்களை நாம் அறிந்தோம். அவர்கள் அனைவரும் சபையை அஞ்ஞான மார்க்கத்தில் இருந்து வெளியே கொண்டுசெல்ல பூமியின் மீது தேவன் அனுப்பின தூதர்களாக இருந்தனர்.
17 இன்று, பூமியின் மீதெங்கிலும் உள்ள இந்த சகல அஞ்ஞானமார்க்கத்தையும் பாருங்கள், சாத்தான்தானே கிறிஸ்தவத்தில் உட்கார்ந்திருக்கிறான். சாத்தான் கிறிஸ்தவத்தை பூமியில் தனது ராஜ்யமாக்கியிருக்கிறான். அவனுடைய ஆவி கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் செயல்படுகிறது, ஜனங்கள் அதை பரிசுத்த ஆவி (holy spirit) என்றழைக்கிறார்கள். மாதவிடாயில் பெண்கள், அவர்களின் அடியில் உறுஞ்சுபட்டைகளுடன், ஆண்கள் மீது கரங்களை வைக்கிறார்கள், சபைகளில் பிரசங்கிக்கிறார்கள் ... இது என்ன? சாத்தானுடைய ராஜ்யம் பூமியில் இருக்கிறது. மேலும் கிறிஸ்த்துவம் சாத்தானுடைய ராஜ்யமாயிருக்கிறது. ஆனால் எல்லா காலங்களிலும் இருந்தது போல, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களினிமித்தம், தேவன் எப்பொழுதும் பூமியில் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியை அனுப்புவார். மேலும் இந்த தீர்க்கதரிசி சாத்தானுடைய அந்த ராஜ்யத்திற்கு எதிராக போரிட எங்கிருந்தாகிலும் வருவான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
18 மோசேயும் யூதர்களும் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, அது யூதர்களின் தேவனானவர் மனிதகுலத்தை ஜெயிக்கப்போகிறதாக இருந்தது. எகிப்தின் தெய்வங்களும் கூட புறப்பட்டு, மனிதகுலத்தை ஜெயங்கொள்ளச் சென்றன. ஆகையால், யூதர்களின் தேவன் பிரசங்கிக்கப்படும் இடங்களிலெல்லாம், எகிப்தின் தெய்வங்களும் கூட தங்கள் பலிபீடங்களை ஸ்தாபிப்பார்கள். மேலும் அங்கே இஸ்ரவேலில் ஒரு எலியா இருந்தபோது, அங்கே இஸ்ரவேலில் நூற்றுக்கணக்கான பாகால் தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
19 இஸ்ரேல் சோதோமும் எகிப்துமாகும் என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு, யோவான், பத்முத்தீவில், கண்டான். ஓரினச்சேர்க்கையின் காரணமாக, சோதோம். ஓரினச்சேர்க்கையாளர்கள் எருசலேமின் தெருக்களில் அணிவகுத்து வருவார்கள் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு யோவான் கண்டிருந்தான். இன்றைக்கு கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளாக இருக்கிற அந்த எகிப்திய தெய்வங்கள், இஸ்ரேலுக்கு புனித யாத்திரை செல்லுகின்றன. இஸ்ரேல் பிசாசுகளின் சுற்றுலாத்தலமாக மாறும். யோவான் அதை கண்டான். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, அது நமது கண்களுக்கு முன்பாக நிறைவேறிக் கொண்டிருக்கிறதை நாம் காண்கிறோம்.
20 பிசாசின் புத்திரர்களான கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள், இஸ்ரேலுக்கு புனித யாத்திரை செல்கின்றனர். அது பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது! தீர்க்கதரிசனங்கள் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறி வருகின்றன! பிசாசின் புத்திரரான பேய்கள், இஸ்ரேலில் புனித யாத்திரைகளுக்கும் ஓரினச்சேர்க்கை அணிவகுப்புகளுக்கும் செல்கின்றன. ஓ! அவைகள் பூமியில் நிறைவேறுகிறதைதைப் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது! அதே நேரத்தில், எலியாவின் தேவனும் எலியாவின் ஆவியும் பூமியில் கிரியைசெய்து பாகால் மற்றும் யேசபேல் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறது, எகிப்தின் தேவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறது, இப்பொழுது சபைகளில் குடிகொண்டிருக்கிற எகிப்திய பிசாசுகளுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறது.
21 தேவன் தம் சார்பாக பேச ஆப்பிரிக்காவின் பகுதிகளில் இருந்து ஒரு சிறிய தீர்க்கதரிசியை எழுப்பியிருக்கிறார். "யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்.". [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. தீர்க்கதரிசனங்கள் பூமியில் நிறைவேறிக்கொண்டு வருகின்றன, ஆனால் மானிடம் அதை காண்கிறதில்லை. நீங்கள் பார்ககிறீர்களா?
22 மனிதன் தனது விருப்பத்தை கொண்டிருக்கிறான் அது தேவனுடைய சித்தமாயிருக்கவேண்டிய அவசியமில்லை! ஆனால் தேவனே, தமது வார்த்தையை நிறைவேற்றுவதற்காக, அதை கவனிக்கிறவறாக இருக்கிறார்! மேலும் இன்று மனிதயினத்தின் இரட்சிப்புக்கேதுவாக தேவனின் வார்த்தை நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
23 ஆனால் இந்த முறை ஆப்பிரிக்காவுடன், முழு உலகமும் மனிதயினத்தின் இரட்சிப்பின் சரித்திரத்தை மீண்டும் எழுத வேண்டும். அது விரும்பிய வழியில் அல்ல, அதன் சுவைப்படி அல்ல, ஆனால் தேவனுடையை சித்தத்தின்படி! புறம்பாக இருக்கிறவர்களுக்கு, ஆக்கினைத்தீர்ப்பின் மின்னல்களும் ஆனால் உள்ளே இருப்பவர்களுக்கு, இந்த தீர்க்கதரிசியின் காலத்திற்கு குறிக்கப்பட்டுள்ள கடுங்காற்றுகளினூடான முன்னேற்றமும் உண்டு! கேட்கிறதற்குக் காதுகளுள்ளவன் கேட்கக்கடவன்!