



Kacou 77 (Kc.77) : ஏழு மலைகள்
(2008 ஜூலை 30 புதன்கிழமை மாலையில் யோப்பொகான் - குவைத், ஆபிட்ஜான் - ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கபட்டது)
1 ... நடுராத்திரி சத்தத்தைப் பற்றி அறிந்துகொள்ள முழு உலகிற்கும் ஒரு உரிமை உள்ளது! நடுராத்திரி சத்தம் என்பது பூமியின் குடிகள் ஒவ்வொருவருக்கும் தேவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு வெகுமதி ஆகும். ஆகையால் அவர்கள் இங்கே வரவில்லையென்றாலும் கூட, அவிகளின் இடமாற்றம் மூலமாய் பிசாசுகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாகதபடிக்கு அவர்கள்மேல் இங்கேயும் அங்கேயும் மக்கள் தங்கள் கைகளை வைக்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? வெளிப்படுத்துதல் 3:18 ன் படி நடுராத்திரி சத்தமானது பார்ப்பதற்கான உரிமையாக இருக்கிறது. பரலோகத்திலிருந்து அது அவனுக்கு கொடுக்கப்படவில்லை என்பதால் அவன் நம்பாவிட்டாலும் கூட, நடுராத்திரி சத்தத்தைப் பற்றி தெரிந்துகொள்வது அவனுடைய உரிமையாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
2 நல்லது! நிச்சயதார்த்தங்களைப் பொறுத்தவரையில், ஒரு சகோதரன் சுயாதீனமானவனாக இருந்து மேலும் செய்திகுள்ளாக மனம்மாறி குறைந்தபட்சம் ஏழு மாதம் ஆகியிருக்கும்போது, அவன் ஒரு சகோதரியைப் பார்த்தால், அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அந்த சகோதரி சுயாதீனமானவளாக இருக்கிறாளா என்பதை பரிசோதிக்க அவன் தனது பாஸ்டரிடம் செல்லலாம், பிறகு, அவள் சுயாதீனமானவளாக இருந்து, அந்த பாஸ்டரும் சம்மதிப்பாரேயானால், அவன் அந்த சகோதரியிடம் விருப்பத்தை தெரிவிக்கலாம். அவனது விருப்பத்தை அந்த சகோதரி ஏற்றுக்கொண்டால், இருவரும் போய் அதைப் பற்றி பாஸ்டரிடம் தெரிவிக்க வேண்டும். பாஸ்டர் அதில் எந்தத் தீங்கையும் காணவிவில்லை என்றால், பிறகு பரஸ்பர அறிக்கைக்காக (mutual confession) அவர்களுக்கு ஒரு வாரம் உண்டு, அதன்பிறகு, அவர்கள் சேர்ந்துவாழ விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்த அவர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் ஒன்றாக வாழ தயாராக இருந்தால், பாஸ்டர் அடுத்த ஆராதனையில் அதை அறிவிப்பார்!
3 திருமண நிச்சயதார்த்தத்தின் அல்லது அறிவிப்பின் ஏழு மாதங்களுக்குப் பிறகும் திருமணம் நடைபெறவில்லை என்றால், அவர்களில் ஒருவர் இல்லாத நிலையிலும்கூட நிச்சயதார்த்தத்தை பாஸ்டர் புதுப்பிக்கலாம், மறுபடியும் ஏழு மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறவில்லை என்றால் அவர்களில் ஒருவர் இல்லாத நிலையிலும்கூட, அவர்களது வேறுபிரிதலை பாஸ்டர் அறிவிக்கலாம்!
4 மணஒப்பந்தமான ஜோடிகளின் சந்திப்புகள் பொதுப் பார்வையில் இருக்கவேண்டும். அவ்வளவுதான்! மேலும் ஒரு சகோதரன் இன்னொரு சபையிலுள்ள அல்லது இன்னொரு தேசத்திலுள்ள ஒரு சகோதரியுடன் விருப்பத்தை தெரிவிக்கலாம். ஆனால் நான் தெரிவிக்க விரும்புகிற முக்கியமானது என்னவென்றால், பரஸ்பர அறிக்கையின்போது மனப்பூர்வமாக மறைக்கப்படும் ஒரு காரியமானது இணைப்பை ரத்து செய்யலாம் அல்லது கேள்விக்குறியாக்கலாம்.
5 இப்பொழுது நான் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகிறேன் ... முதல் கேள்வி: "பிலிப்பு சகோதரனே, எப்போது நாம் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவோம்?" உங்கள் காலத்தின் செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, உணர்ச்சியுடனோ அல்லது இல்லாமலோ செய்தியின் ஆவியாகிய பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நீங்கள் பெறுவீர்கள். இது உங்கள் ஆத்துமாவிலோ அல்லது உங்கள் ஆவியிலோ நடைபெறுகிறது மேலும் நீங்கள் செய்தியின் கனிகளை தோன்றச்செய்வீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
6 இரண்டாவது கேள்வி: "பிலிப்பு சகோதரனே, இரத்தப்போக்குள்ள ஸ்திரியை பற்றி பேசுகிறபோது, அது விழுந்தல்ல என்றீர்கள் ஆனால் லூக்கா 9:37 முதல் 43 ல் கீழேவிழுந்த ஒரு வலிப்பு நோயாளியைக் கண்டோமே!" சரி, ஆனால் வலிப்பு வியாதியே கீழே விழுவதுதான் என்பது உங்களுக்கு தெரியாதா? இந்த வலிப்பு நோயாளி கர்த்தராகிய இயேசுவிடம் வருவதற்கு முன்னர், அவன் ஏற்கனவே விழவில்லையா?
7 மேலும் மாற்கு 5 ல், அந்த பைத்தியக்காரனை நிர்வாணமாக்கியிருந்தது தேவனின் வல்லமையா அல்லது அந்த பைத்தியக்காரனை பிடித்திருந்த பேய்களா? நீங்கள் பார்க்கிறீர்களா? எவராவது விழுக்கூடும்; என் ஊழியத்தின்போது யாரும் என் முன்னால் விழுந்ததில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த ஜெபக்கூட்டங்களில் ஜனங்களை விழவைக்கிற அல்லது வாந்தியெடுக்கவைக்கிற அந்த பேய்த்தன அபிஷேகம் தேவனுடையது என்று நாம் நம்ப வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், நான் “இல்லை” என்று சொல்கிறேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
8 இன்றிரவு, நான் வெளிப்படுத்துதல் 17 ன் ஏழு மலைகள் பற்றி பேச விரும்புகிறேன். யாராவது எங்காவது இந்த வெளிப்பாட்டை அளித்திருந்தால், நானறியேன்! தேவன் அனுமதித்தால், வெளிப்படுத்தின விசேஷத்தின் பல அம்சங்களைப் பற்றி நான் பேசுவேன், ஆனால் இன்று மாலை, ஏழு தலைகளாகிய இந்த ஏழு மலைகள் பற்றி நான் பேச விரும்புகிறேன். பழைய ஏற்பாட்டிலும், வரலாறு முழுவதிலும் போய் அவை எல்லாவற்றையும் காண்பிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை; ஆனால், அது என்னவென்று புரிந்துகொள்ள தேவன் நம்மை அனுமதிப்பார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
9 நீண்ட காலத்திற்கு முன்னரல்ல, இனி தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள் என்று கூறுகிற ஒரு பிரன்ஹாமிஸ்டு எனக்கு எழுதியிருந்தான். நான் அவனிடம்: "ஐயா, நடுராத்திரி சத்தம் கழுகுகளுக்காக, அதாவது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமே பேசப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு காகத்தை கழுகாக வேண்டுமென்றோ அல்லது ஒரு நண்டை மீனாக வேண்டுமென்றோ கேட்கவில்லை!" என்றேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. எவருடனும் கூட்டுவைக்காமல் அல்லது இனையாமல் நடுராத்திரி சத்தத்தை அறிவிக்க நான் ஆப்பிரிக்காவின் நிலங்களிலும் முழு உலகத்திலும் நடப்பேன் என்பதை தேவன் ஏற்கனவே பரலோகத்தில் முடிவு செய்திருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. மேலும் நான் அவனிடம்: "லூதரன் சந்ததியை தொடர்ந்து உற்பத்திசெய்யவும் பாதுகாக்கவும் செய்யக்கூடியதான கைவிடப்பட்ட ஒரு லூதரன்சபை நிச்சயமாக அங்கிருக்கவேண்டும் என்றிருக்கையில், மார்ட்டின் லூதருக்கு பிறகு ஒரு செய்தியாளன் இருப்பான் என்று ஒரு லூதரன் விசுவாசிப்பதெப்படி? மெத்தடிஸ்டு சந்ததியை உற்பத்திசெய்து மகிழ்விக்கக்கூடிய ஒரு மெத்தடிஸ்டு வேசி அங்கு நிச்சயமாக இருக்கவேண்டும் என்றிருக்கையில், ஜான் வெஸ்லிக்குப் பிறகு ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பான் என்று ஒரு மெத்தடிஸ்டு விசுவாசிப்பதெப்படி?
10 மேலும் ஏப்ரல் 24, 1993 ன் தரிசனத்தின் கலப்பின வேசி என்றும் தானியேல் 7 ன் பெயரில்லா மிருகம் என்றும் நீங்கள் அழைக்கப்படுகயிலே, வில்லியம் பிரன்ஹாமுக்கு பிறகு அங்கே ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பான் என பிரன்ஹாமிஸ்டுகளாகிய நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?" என்றேன்.
11 நல்லது! தேவன் பூமியில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை மீண்டும் அனுப்பலாம் என்று முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் ஒருபோதும் விசுவாசித்ததில்லை என்ற உண்மையிலிருந்து வெளிப்படுத்துதல் 17 ன் ஏழு மலைகளை பற்றி நான் இப்போது பேசுகிறேன்.
12 வெளிப்படுத்துதல் 17:1 முதல் 3-ஐ நான் வாசிக்கப் போகிறேன்: "ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீயானவள் ஏறியிருக்கக்கண்டேன்."
13 மிக நன்று, மத்தேயு 25:6 ஒரு மறைபொருள்; வெளிப்பாட்டிற்கு வெளியிலிருக்கும் யாரும் அதை புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் வெளிப்பாட்டிற்கு வெளியே இருந்தால், அது உங்களுக்கு ஒரு பைத்தியம்! ஆனால் உள்ளே இருப்பவர்களுக்கு அது ஞானமே! நீங்கள் பார்க்கிறீர்களா? இயேசு தம்முடைய ஊழியத்தை முடித்தவுடன், பிசாசின் குமாரர்கள், "அது அதிஉன்னதமானது! அது முடிந்தது! அது பூட்டப்பட்டாயிற்று! இனிமேல் தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள்!" என்றனர். அவர்கள் அதை பரப்பி முடிப்பதற்குள் தேவன் பவுலை அனுப்பினார்! அவர்கள் பவுலை நோக்கி: "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் என்னும் நபரில் நமக்குத் திருவுளம்பற்றினார்! அது முடிந்தது! வேதாகமம் பூட்டப்பட்டாயிற்று, தீர்க்கதரிசிகள் அனைவரும் அறிவித்த அந்த ஒருவர் வந்து விட்டார், அது முடிந்தது! பலி செலுத்தப்பட்டு, தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்துபோயிற்று! நமக்கு இனி எந்த மத்தியஸ்தனும் அவசியமில்லை; கடைசி செய்தியாளன் இயேசுவே! அவரே ஒமேகா, அது முடிந்தது!" என்றனர்.
14 யூதமதமானது யூதமதத்தின் அஸ்திவாரங்களை அமைத்த மனிதனாகிய, மோசே என்னும் ஒரே ஒரு மனிதனை மட்டுமே பார்க்கிறது. கிறிஸ்த்துவமானது கிறிஸ்தவத்தின் அஸ்திவாரங்களை போட்ட மனுஷனான இயேசு கிறிஸ்து என்னும் ஒரே ஒரு மனிதனை மட்டுமே பார்க்கிறது. ஆனால் அப்படிச்சொல்லுகிற அதே சமயத்தில், அவர்கள் கொரிந்தியர், ரோமர், கலாத்தியர்கள் ... வெளிப்படுத்தினவிசேஷம் ஆகியவைகளையும் மேற்கோள் காட்டுகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
15 பவுல் அவர்களுக்கு ஏசாயா 49:6 -ஐ காட்டியபோது, அவர்கள் "இல்லை, பவுலே! இந்த வசனம் இயேசுவைப் பற்றி பேசுகிறது, இயேசு தான் புறஜாதிகளின் ஒளி!" என்றனர். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் தீமோத்தேயு, தீத்து, சில்வானு... ஆகியோரைப் பரியாசம்பண்ணி, "நீங்கள் ஒரு மனுஷனின் சீஷர்களாக இருக்கிறீர்கள்; எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் இயேசுவின் சீஷர்களாக இருக்கிறோம், நீங்கள் ஒரு மனுஷனான பவுலால் பணிக்கப்பட்டு, வழிநடத்தப்படுகிறீர்கள்! நாங்கள் ஒரு மனுஷனில் நம்பிக்கை வைக்கமாட்டோம்!" என்றனர். தாங்கள் மோசேயின் சீஷர்கள் என நேற்று கூறிய இந்த அதே ஜனங்கள் இப்போது, "நாங்கள் இயேசுவின் சீஷர்களாக இருக்கிறோம்!" என்று கூறுகின்றனர். பரிசுத்த ஆவியானது ஊற்றப்பட்ட போது மேலறை வீட்டில் விசுவாசித்தவர்களில் அநேகர் பிசாசின் புத்திரர்கள் மட்டுமே! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
16 ஜெபஆலயங்களில் அவனுடைய கடிதங்களும் நிருபங்களும் வாசிக்கப்பட வேண்டுமென பவுல் அவர்களிடம் சொன்னபோது, அது அவர்களை புண்படுத்தியது! அங்கே இனிமேல் செய்தியாளன் இருக்க மாட்டான் என்று கூறுகிற அந்த காரியமானது அப்படி அங்கு இருந்தாலும், அது கத்தோலிக்க பிசாசின் திட அஸ்திவாரமாக இருக்கிறது.
17 சமீபத்தில் நான் ஒரு வயதான பிரன்ஹாமிஸ்டிடம், "ஐயா பூமியில் இனிமேல் மழை பெய்யாது என்று வேதாகமத்தின் மூலமாக நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் மேலும் மறுநாளிலே மழை பெய்ய ஆரம்பிக்கிறது, அப்படியானால் அது வேதாகமம் பொய் சொன்னதா அல்லது வேதாகமத்தை பற்றிய உங்களது புரிந்துகொள்ளுதல் தவறானதா?" என்று கேட்டேன். அவனால் பதில் சொல்ல முடியாது! நீங்கள் பார்க்கிறீர்களா? அங்கு உயிர்த்தெழுதல் இருந்தபோதிலும், இனி இல்லை என்று சதுசேயர்கள் சொல்லியிருந்தார்கள்! தெய்வீக சுகமளித்தல் அங்கு இருந்தபோதிலும், வேறுசிலர் இனி அது இல்லை என்று கூறுகின்றனர்! அந்த பழைய நடத்தையில் அங்கே ஒரு மர்மம் உண்டு என்பதை அது காட்டுகிறது.
18 உங்களுடைய புரிந்துகொள்ளுதலின்படி, அங்கே இனி தீர்க்கதரிசி இருக்க மாட்டான்; ஆனால் அனைத்தும் வேதாகமப்பிரகாரமாகவும் வேதாகம தீர்க்கதரிசிகளின் பிரகாரமாகவும் ஒரு தீர்க்கதரிசியின் அழைப்பு மற்றும் பணி நியமனத்துடனும் ஒரு தீர்க்கதரிசன செய்தியுடனும் யாராவது எழும்பினால், பிறகு அது வேதாகமம் ஒரு பொய் சொன்னதா அல்லது வேதாகமத்தை பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதல் தவறானதா? அது ஒரு மர்மம், அவர்கள் இவ்விதமாக நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
19 பவுல் மரித்தபின், அவனுடைய சீஷர்களும் இவர்கள் சொல்லுகிறபடியே துல்லியமாக செயல்பட்டு நடந்தார்கள்; பவுலுக்கு பிறகு அங்கு இனி செய்தியாளன் இல்லை என்று சொல்லி பிறகு அவர்கள் பவுலீனியர்கள் ஆனார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
20 ஒரு செய்தியாளனாக பவுல் கிறிஸ்துவுக்கென்று ஒரு தூய, புத்தியுள்ள கன்னிகையை எழும்பப் பண்ணினான் ஆனால் அங்கிருந்த பவுலீனியர்களை, தேவன் புறக்கணித்தார்! அந்த பவுலீனியர்கள் கிறிஸ்துவின் செட்டைகளின் கீழ், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில், பவுலின் தேவனால் நடத்தப்பட்டார்கள் ஆனால் பவுல் மரித்தபோது, அவர்கள், "பவுல் தான் கடைசி செய்தியாளன், அது முடிந்தது! இனிமேல் செய்தியாளன் இருக்க மாட்டான்!" என்றனர்.
21 பவுலின் செய்தியை இந்த பவுலீனியர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதினாலல்ல அது, ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருந்தது! நீங்கள் பார்க்கிறீர்களா? அவ்விதமாக அவர்கள் செயல்படாமல் இருப்பதென்பது அவர்களுக்கு முடியாதகாரியமாக இருந்தது! பவுலீனியர்கள் அவ்விதமாக நடந்து கொள்ளாவிடில், அவர்கள் எல்லோரும் ஐரேனியஸை விசுவாசித்திருப்பார்கள், அங்கே எந்த பவுலீனியர்களும் இருக்கமாட்டார்கள். ஐரேனியஸுடையவர்கள் அனைவரும் கூட கொலம்பனை விசுவாசித்திருப்பார்கள்... அங்கே எந்த ஒரு லூதரன்களும், ஸ்விங்லியன்களும், மெத்தடிஸ்டுகளும், கால்வனிஸ்டுகளும், பிரன்ஹாமிஸ்டுகளும் இன்றைக்கு இருக்கமாட்டார்கள்!
22 அது உலகத்தைப் போலவே ஒரு வயதுசென்ற பிசாசாக இருக்கிறது. "இயேசுவுக்கு பிறகு அங்கே தீர்க்கதரிசி கிடையாது! பவுனுக்கு பிறகு, அங்கே தீர்க்கதரிசி கிடையாது! முகம்மதுவுக்கு பிற்பாடு, அங்கு தீர்க்கதரிசி கிடையாது! பிரன்ஹாமுக்கு பிற்பாடு அங்கே தீர்க்கதரிசி கிடையாது! ..." நீங்கள் பார்க்கிறீர்களா? அது உலகத்தின் அளவிற்கு வயது சென்ற ஒரு பிசாசாக இருக்கிறது. முஸ்லீம்களும், அந்த மற்ற நபர்களும் விவாதத்தில் இருக்கும்போது நீங்கள் விலகி நிற்க வேண்டுமென்று நான் ஏன் சொல்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? ஒன்று அவர்கள் சரி, அல்லது அவர்கள் அனைவரும் தவறு! ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருகிறவரையில் பூமியிலே தீர்க்கதரிசி செய்தியாளர்கள் இருப்பார்கள் என்று தேவகுமாரர்களான, நாம் விசுவாசிக்கிறோம். எடுத்துக் கொள்ளப்படுதலின் நாளிலும் கூட, அங்கே பூமியின் மேல் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
23 கத்தோலிக்கர்களே, புராட்டஸ்டன்டுகளே, சுவிசேஷக சபையினர்களே, பிரன்ஹாமிஸ்டுகளே, இஸ்லாமிய மற்றும் யூத மத உறுப்பினர்களே, உங்கள் தெய்வங்கள் மரித்துவிட்டன அல்லது தூங்குகின்றன அல்லது ஆழ்ந்த மயக்கத்தில் உள்ளன, ஆனால் எங்களது தேவன் இன்னும் பேசுகிறார்! பூமியில் தேவனுடைய பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், பரலோகத்தில் உள்ள தேவனும் உயிரோடிருக்கிறார் என்றால், அங்கே பூமியில் சில உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். ஏனென்றால் அவருடைய பிள்ளைகளிடம் பேசுவதற்கான தேவனின் வாயாக உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் இருக்கிறான்! நமது தேவன் உயிரோடு இருந்து பேசுகிற வரையில் அங்கே சில உயிர்வாழும் தீர்க்கதரிசிகள் இருப்பார்கள்! ஏனெனில் தீர்க்கதரிசி பூமியில் தேவனின் வாயாகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
24 இப்போது, மற்றொரு காரியத்தைக் கவனியுங்கள் ... இஸ்ரவேல் என்றால் "தேவனுக்கு மணமுடிக்கப்பட்ட" என்று பொருள், தேவனின் மனைவி; ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் கனிக்கு இறங்காதபடிக்கு, பாலுண்கிற தன் பாலகனை மறந்தாலும், அவர், தேவன், தம் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிற இஸ்ரவேலை ஒருபோதும் மறப்பதில்லை என்பதை அவர்தாமே கூறினார்! இஸ்ரவேல் அங்கு இருக்கும்போது தேவன் புறஜாதிகளிலிருந்து ஒரு மணவாட்டியை எடுக்கிறதற்கு, அது வருகிறதெப்படி? லூத்தரன்கள் அங்கு இருக்கையில் தேவன் ஒரு மெத்தடிஸ்ட்டை எடுத்துக்கொள்ள, அது வருகிறதெப்படி? மெத்தடிஸ்டுகள் அங்கு இருக்கையில் தேவன் ஒரு பிரன்ஹாமிஸ்டை எடுத்துக்கொள்ள, அது வருகிறதெப்படி? தேவன் ஒருபோதும் ஒரு பலதாரமணம் புரிபவர் அல்ல, அப்படி கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்! அது மீட்டளிப்பின் செய்தி என்னவென்று புரிந்துகொள்கிறதின் காரியமாக உள்ளது! பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது].
25 யோசுவா 6-ல், ஏழாம் நாளில், ஆசாரியர்கள் ஏழு சத்தங்களைத் திரும்ப முழக்கியபோது, அது ஒரு எட்டாவது காலமல்ல! நாகமான் தானே யோர்தானுக்குள் ஏழுதரம் மூழ்கியபோது, அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல் ஆனால் மீட்டளிப்பின் ஞானஸ்நானமாக இருந்தது! நீங்கள் பார்க்கிறீர்களா?
26 வெளிப்படுத்துதல் 17-ஐ நாம் கருத்தில் கொள்வோம், மிருகத்தின் முத்திரை, கத்தோலிக்க ஆவி, மூன்று அசுத்த ஆவிகள் தவளைகளாக ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் கொண்டுள்ளது. இந்த ஏழு தலைகள் என்ன? இந்த ஏழு தலைகளும் கத்தோலிக்க சபையின் ஏழு சொரூபங்களாக, ஏழு அம்சங்களாக, ஏழு அடையாளங்களாக இருக்கின்றன. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
27 குத்துவிளக்கின் ஏழு அகல்களான ஏழு சபை காலங்களினூடாக உண்மையான திருச்சபையின் ஏழு சொரூபங்களை நாம் காணலாம். இந்த ஏழு தலைகள் வழியாக மிருகத்தின் சொரூபத்தை நாம் காணலாம். இந்த ஏழு தலைகளும் ரோமில் உள்ள ஏழு வரலாற்றுப்பூர்வ மலைகளால் சரீரப்பிரகாரமாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன! எபேசு சபையின் காலம், ஒரு மலையும் ஒரு தலையுமாம்! சிமிர்னா சபையின் காலம், ஒரு மலையும் ஒரு தலையுமாம்!
28 பெர்கமு சபையின் காலம், ஒரு மலையும் ஒரு தலையுமாம்! தியாத்திரா சபையின் காலம், ஒரு மலையும் ஒரு தலையுமாம்! சர்தை சபையின் காலம், ஒரு மலையும் ஒரு தலையுமாம்! பிலாதல்பியா சபையின் காலம், ஒரு மலையும் ஒரு தலையுமாம்! லவோதிக்கேயா சபையின் காலம், ஒரு மலையும் ஒரு தலையுமாம்! ஏழு தலைகளாகிய ஏழு மலைகள் எதை உருவாக்குகிறதோ அவ்விதமாகவே ஏழு சொரூபங்களும் ரோமன் கத்தோலிக்க சபையின் ஏழு வடிவங்களை உருவாக்குகிறது! நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. வத்திக்கானின் ஏழு மலைகள்!
29 இந்த மாலைவேளையில் நமக்கு அளிக்கப்பட்ட இருக்கிற வெளிப்பாட்டின் படியும், வெளிப்படுத்துதல் 16:13 ன் படியும், முழு கிறிஸ்தவமும் ஒரு மதம் என்னும் முறையில் ரோமன் கத்தோலிக்கத்தின் ஆவிக்குள்ளாக இருக்கிறது. அவை கத்தோலிக்க மதத்தின் ஏழு உருமாற்றங்களாக, கத்தோலிக்க மதத்தின் ஏழு அடையாளங்களாக இருக்கின்றன. வேறொரு படமாக, வெளிப்படுத்துதல் 17 -ஐ ஒவ்வொரு மலையின் மீதும் உட்கார்ந்திருக்கிற ஒரு வேசியோடு ஏழு மலைகளுடைய வடிவின் கீழ் காட்டலாம்; ஏழாவது மலையின் மீது கவர்ந்திழுக்கிற ஒரு கலப்பின பிரன்ஹாமிஸ்டு இருக்கிறாள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. தேவனின் பார்வையில், பூமியிலுள்ள அனைத்து சபைகளும் கத்தோலிக்கத்தின் ஆவியான ஒவ்வொன்றுக்கும் உரிய ஒரு அடையாளத்துடன் ஏழு குடும்பங்களாக்கப்பட்டுள்ளன!
30 மிருகத்தைப் பற்றிய ரகசியத்தை மட்டுமே வெளிப்படுத்தும்படி வில்லியம் பிரன்ஹாமுக்கு கொடுக்கப்பட்டது ஆனால் அதன் சொரூபத்தின் ரகசியத்தை அல்ல, அதனால் அது அவருக்கு தெரியாது ஏனெனில் அவரது காட்டுச் சந்ததியானது அதன் பாகமாகப்போகிறது! அவர் ஒரு தீர்க்கதரிசியாக, வெண்பாறையின் வடிவில் அவர் அதை கண்டார்! அவர் அதை கேட்டார் ஆனாலும் அறியாமொழியின் வடிவிலாம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
31 போப்பின் பிரதிநிதிகள் (apostolic nuncios) மூலமாக வத்திக்கான் பூமியிலுள்ள ஒவ்வொரு தேசத்திலும் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறது! பூமியின் குடிகள் மீது ஆட்சி செலுத்தும் சிறிய நகரம் இது என வேதாகமம் கூறுகிறது! அது பூமியில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலாக ஆதிக்கம் கொண்டிருக்கிறது: அரசியல், பொருளாதாரம், கிறிஸ்தவ மதத்தோடு முதலிடம் பெற்றது!
32 அனைத்து மதங்களிலும், இஸ்லாமியம், புத்தமதம் இன்னும் மற்ற மதங்களுடன் ஒப்பிடும்போது கிறிஸ்தவமதம் மிகவும் சாத்தானிய மதமாகும்! அதிநிமித்தம் தான் அஞ்ஞான ரோம மார்க்கமானது தனது ஸ்தானத்தை அதற்குள்ளே கண்டடைந்து இருக்கிறது! ஃப்ரீமேசன்ஸ், ரோசிகுரூசியனிஸம் இன்னும் மற்றவைகளுடன் ஒப்பிடுகையில், கிறிஸ்தவ மதமே அனைத்து மாயமந்திர முறைமைகளை பார்க்கிலும் மிகவும் பேய்த்தனமானதாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
33 தேவன் ஒரு செய்தியாளனுடன் ஒரு வேலைப்பாட்டை செய்து முடிக்கும்போது, பிசாசு அந்த வேலைப்பாட்டை எடுத்துக்கொள்கிறான்; ஏனென்றால், உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்பாகவே தேவன் அவனுக்கு இந்த அதிகாரத்தை அளித்திருக்கிறார் என்பதை ரோமாபுரியின் இந்த ஏழு மலைகளும் காட்டுகின்றன! தேவன் செய்து கொண்டிருப்பதற்கு புறம்பாக, நீங்கள் சகல சத்தியத்தையும் பிரசங்கித்தாலும், பிறகு நீங்கள் சாத்தானின் கரங்களில் உள்ள ஒரு ஒளியின் தூதனாக அல்லது நியாயாதிபதியாகத்தான் இருக்கிறீர்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
34 பரலோகத்திலுள்ள நான்கு ஜீவன்களைக் குறித்து வேதாகமம் பேசுகிறது; அவைகளின் பிரதிநிதித்துவம் நரகத்திலும் உள்ளது. சாத்தானின் கரங்களில் உள்ள நான்கு மிருகங்களையும், புறஜாதிகளின் நான்கு சாம்ராஜ்யங்களையும் நீங்கள் நினைவு கூறுங்கள்! எசேக்கியேலும் சகரியாவும் அங்கு நான்கு குதிரைகளைக் காண முடிந்தது; இந்தப் பக்கத்தில் யோவானும் சாத்தானின் கரத்தில் உள்ள நான்கு குதிரைகளைக் காணமுடிந்தது!
35 அந்த நான்கு ஜீவன்களும் தேவனின் ஏழு ஆவிகளையும் ஏழு சபை காலங்களையும் வெளிப்படுத்தின என்று வெளிப்பாடினால் நீங்கள் கண்டீர்கள். முதல் காலத்தின் ஆவியான சிங்கம் தொடங்கி கழுகு வரை! அங்கே நான்கு ஜீவன்களே இருக்கிறபடியால், அங்கு நான்கு சபை காலங்களும், நான்கு பரலோக தூதர்களும், நான்கு பூமிக்குரிய தூதர்களுமே இருக்கவேண்டும்! அங்கே ஏழு பரலோக தேவதூதர்கள் இருப்பதால் அங்கே பூமியில் ஏழு செய்தியாளர்கள் மட்டுமே இருக்க வேண்டுமென, அங்கே ஏழுதான் இருக்கவேண்டுமென சரியாக பிரன்ஹாமிஸ்டுகள் விரும்புகிறதுபோலவே! ஆனால் அது சாத்தியமல்ல ஏனென்றால் ஒவ்வொரு பரலோக தூதனும் பூமியில் பல செய்தியாளர்களை, பூமியில் பல தீர்க்கதரிசிகளை எழும்ப பண்ணுவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
36 முழு ரோமாபுரியும் வத்திக்கானின் சரீரமாக இருக்கிறது. வெளிப்படுத்துதல் 17 ம் அதிகாரம் காண்பிக்கிற பிரகாரமாக, ரோமாபுரி வத்திக்கானாக இருக்கிறதுபோலவே முழு உலகமும் வத்திக்கானாகவும், போப்பின் சிங்காசனமானது பூமியின் அனைத்து ராஜாங்கங்களின் சிங்காசனமாகவும் இருக்கிறது. அஞ்ஞான ரோமாபுரியில், இந்த ஏழு மலைகள் ஒவ்வொன்றிலும் ஒரு குறிப்பிடத்தக்க பொய்வழிபாடு கொண்டாடப்பட்டது! ரோம அஞ்ஞான மார்க்கத்தில், ஒவ்வொரு மலையும் ஒரு பெரிய தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது! நீங்கள் பார்க்கிறீர்களா?
37 மாம்சப் பிரகாரமான மட்டத்தில் கேப்பிட்டோலைன், பாலட்டைன், காயிலியன், அவன்டைன், க்விரினல் மற்றும் விமினல் ஆகிய இந்த ஏழு மலைகளும் வத்திக்கான் நகரத்திற்கு உள்ளே இருக்கின்றன; இப்படித்தான் இது ஆவிக்குரிய விதமாக, ஏழு சபை காலங்களின் ஏழு மலைகள் ரோமன் கத்தோலிக்க மதத்துக்குள் அதே கத்தோலிக்க கருத்துக்களுடனும், சொரூபங்களுடனும், காரண காரியங்களுடனும் இருக்கின்றன! ரோமாபுரியில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிற எல்லா கிறிஸ்தவமும் இதுவாக இருக்கிறது! பரலோகத்திலுள்ள புறஜாதிகளின் ஏழு குழுக்கள், ஆபிரகாமின் மடியில் உள்ளன! பூமியிலுள்ள ஏழு குழுக்கள் ரோமாபுரியின் போப்பின் மடியில் உள்ளன! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
38 பூமியின் அனைத்து சபைகளும் ரோம போப்பின் மடியில் உள்ளன. இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக, பிரன்ஹாமிஸ்டு சபைகள் உட்பட இஸ்லாமியம் மற்றும் யூதம் ஆகியவைகளிலுள்ள பரிசுத்தப்படுத்துதல்கள் என்று அழைக்கப்படுபவை அனைத்தும், உத்திரிக்கிர ஸ்தலங்கள் மட்டுமே!
39 தேவனின் செய்தியாளன் ஒருவன் பூமியை விட்டு வெளியேறும்போது, இங்கே கதவு மூடப்படுகிறது; அவன் தனது கூட்டத்தாருடன் பரலோக பரிமாணத்தில், பரலோகத்திற்குள் செல்கிறான்; அதே நேரத்தில் பூமியிலே அவனது காட்டுச் சந்ததியை பிசாசானவன் சிறைபிடித்து, இனிமேல் அங்கே பூமியிலே தீர்க்கதரிசி செய்தியாளன் கிடையாது என்று நம்ப வைக்கிறான், பிறகு ரோமன் கத்தோலிக்க சபையான அதன் தாயின் ஆவியை அதற்குள் வைப்பதற்காக, அவன் இதன் சுவைக்கு ஏற்ப அதற்கு அழகு சேர்க்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
40 இந்த ஏழும் ஏழு அந்திக்கிறிஸ்து ஆவிகளாக இருக்கின்றன. தேவன் ஏழு ஆவிகளை வெளிப்படுத்தவும் வெளிப்படுத்துதல் 17 ஐ நிறைவேற்றவும் நோக்கமாய் முன்னேற்றமடையாதபடிக்கு பிசாசின் புத்திரருடைய இருதயத்தில் வைத்தார். இவ்வாறு அங்கே பரலோகத்தில் தேவனுடைய ஏழு ஆவிகளும், பூமியில் பிசாசின் ஏழு ஆவிகளும் இருக்கிறன. ஏழு நட்சத்திரங்களுடன் பரலோகத்தில் ஒரு கிறிஸ்து இருக்கிறார், தனது வலது கரத்தில் ஏழு மலைகளுடன் பூமியிலே ஒரு அந்திக்கிறிஸ்து இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
41 நல்லது. தானியேல் 2:44 என்ன சொல்கிறது: இந்த ராஜாக்களின் நாட்களிலே, பரமண்டலங்களின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை அமைப்பார்; அந்த ராஜ்ஜியம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அது இந்த ராஜ்யங்களையெல்லாம் துண்டுகளாக நொறுக்கி பட்சித்துப்போடும், தானோ என்றென்றைக்கும் நிற்கும்." இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது ஏன்? உயிர்வாழும் தீர்க்கதரிசியில் விசுவாசம் கொள்கிற ஜனமாக நாம் இருக்கிறபடியினால் அது நிறைவேறுகிறது. எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிற வரையில் அங்கே வேதாகம தீர்க்கதரிசிகளுக்கு ஒப்பாக செய்திகளுடன் தீர்க்கதரிசிகள் இருப்பார்கள் என்றும் அங்கே இருந்தார்கள் என்றும் விசுவாசிக்கிற ஜனமாக நாம் இருக்கிறோம்!
42 மேலும் நாம் இந்த நல்லெண்ணத்தை உடையவர்களாக இருப்பதாலும், நாம் தேவனை விசுவாசிக்க விரும்புவதாலும், அவரது உயிர்வாழும் தீர்க்கதரிசிகள் மூலமாக தேவனுக்கு செவிகொடுக்க விரும்புவதாலும், பூமியிலே ஒரு தீர்க்கதரிசி இருக்கும்போது, நாம் அவனை அடையாளம் கண்டுகொள்ளும்படி தேவன் செய்வார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. வேதாகமம் அவர்களைப் பற்றி என்ன சொல்லி இருந்தபோதும் கூட, பத்திற்கும் மேற்பட்ட பிரன்ஹாமிஸ்டு சபைகள் நடுராத்திரி சத்தத்தை விசுவாசிக்கிறது என்றால், நடுராத்திரி சத்தம் சபைகளும் தேவ குமாரர்களும் தேவன் பூமியில் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகின்ற ஒவ்வொரு முறையும் விசுவாசிப்பார்கள்! ஏனெனில் 2002 ம் ஆண்டு முதற்கொண்டு பூமியின் மேல் வீசத் துவங்கியிருக்கிற புது ஆவியாக அது இருக்கிறது!
43 கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு உதாரணமாக, சாயங்கால நேரத்திலிருந்து வந்த பாஸ்டர் டிஜூ பாஸ்கல் ஞானஸ்நானம் பெற்றார். சாயங்கால நேரத்திலிருந்து நடுராத்திரிக்கு கடந்துபோகிற இன்னொரு சபையாக அது இருக்கிறது! இத்தகைய ஒரு குறுகிய காலத்திற்குள், சுமார் முப்பது சபைகள் நடுராத்திரி சத்தத்தை தங்கள் பாஸ்டர்களோடுகூட விசுவாசித்திருக்கின்றன! ஒரு முழு சபையே விசுவாசிக்கிறது, அது ஒரு அதிசயத்தைக் காட்டிலும் மேலானது! நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
44 நான் மரித்த மனிதனை உயிரோடு எழுப்பினால் கூட பரலோகத்தில் அவ்வளவு சந்தோஷம் இருக்காது. கிறிஸ்தவத்தின் துவக்கத்தில் மட்டுமே நாம் அதை காண முடியும். எந்தவொரு தேவ மனுஷனும், எந்தவொரு செய்தியாளனும், எந்தவொரு தீர்க்கதரிசியும் அதை செய்ததில்லை. அது எந்தக் காலத்திலும் சம்பவித்தது இல்லை! நாம் அரசியல்வாதிகளையும் குடிகாரர்களையும் புகைபிடிப்போரையும் மாத்திரம் ஞானஸ்நானப்படுத்தவில்லை ஆனால் நாம் எந்த விதிவிலக்குமின்றி பாஸ்டர்களையும் சுவிசேஷகர்களையும் அப்போஸ்தலர்களையும் போதகர்களையும் தீர்க்கதரிசிகளையும் ஞானஸ்நானப்படுத்துகிறோம். தேவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
45 நான் உயிருடன் இருக்கையிலே, நமது நடுவே உள்ள ஒரு சிறியவனும்கூட ஒரு தீர்க்கதரிசி என்னவென்பதை அறிந்திருக்கிறான். மேலும் தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் மட்டுமே வருகிறதென்றும், கர்த்தர் தாமதிப்பாரானால், எனக்குப் பிறகு, அங்கே இன்னமும் தீர்க்கதரிசிகள் இருப்பார்கள் என்றும் அவனுக்குத் தெரியும். நீங்கள் அவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். இது ஒரு புதிய ஆவி! கத்தோலிக்கத் தாய் முதற்கொண்டு பிரன்ஹாமிஸ்டுகள் வரை, அது ஒருபோதும் இருந்ததில்லை! பிரன்ஹாமிஸ்டுகள் தானியேலின் நான்காம் மிருகமும் வெளிப்படுத்துதல் 17 ன் ஏழாவது மலையும் ஆகவேண்டியிருந்ததினால் அது இருக்க முடியாது.
46 தேவன் லூசிபரை சிருஷ்டிக்கையில், அவன் சாத்தானாக இருப்பான் என்பதை அவர் அறிந்திருந்தார்! தேவன் காயீனையும் யூதாஸ் இஸ்காரியோத்தையும் உருவாக்கிய போதே, அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதுவாகவே ஆவார்கள் என்று அவருக்குத் தெரியும்! தேவன் அந்த பக்தியுள்ள கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளை உருவாக்கியபோதே, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அதையே செய்வார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்! தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் நோக்கில், பரிசுத்த ஆவிக்கு சமானமான ஒரு அபிஷேகத்தை அவர்கள் மீது அவர் வைத்தார். மேலும் வத்திக்கான் நகரத்திற்குள்ளேயே ஏழு மலைகள் வைக்கப்பட்டிருந்ததான வெளிப்படுத்துதல் 17 ன் ஏழு தலைகள் போன்ற சில இரகசியங்களைப் பற்றிய ஒரு கரடுமுரடான வியாக்கியானத்தை அவர் கொடுத்தார்; அதன்மூலம் வேதாகமம் சொல்வதை அவர்கள் நிறைவேற்றும் வரை அது என்னவென்று அவர்கள் அறிய விரும்பமாட்டார்கள்! ஆமென்! தேவன் இராஜாதிபத்தியமானவர், அவர் அதை செய்ய சுதந்திரமுள்ளவராக இருக்கிறார்.
47 ஜெபத்திற்காக நாம் இப்போது நிற்போமாக!