(ஆகஸ்டு 21, 2008 வியாழக்கிழமை மாலையில் ஐவரிகாஸ்டின் ஆபிட்ஜானுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1…நல்லது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நான் பதில் சொல்லவேண்டிய தொடர் கேள்விகளானது இங்கே இருக்கிறது. முதல் ஒன்று: "பிலிப்பு சகோதரனே, ஏப்ரல் 24, 1993 ன் தேவதூதனானவர் வெளிப்படுத்துதல் 19 ன் ஒருவர்தான் என்று நமக்குத் தெரியும் ஆனால் இந்த தேவதூதனானவர் தீர்க்கதரிசியுடன் இருப்பவரா அல்லது தீர்க்கதரிசிக்குள்ளே இருப்பவரா?".
2ஆம், சரியாக, ஏப்ரல் 24, 1993 ன் தேவதூதன் வெளிப்படுத்துதல் 19 ன் ஒருவரே, இந்த தேவதூதனானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாக இருக்கிறார். அது மோசே, வில்லியம் பிரன்ஹாம் மற்றும் பல தீர்க்கதரிசிகளோடு இருந்ததைப் போல இந்த தேவதூதனானவர் தீர்க்கதரிசியுடனேகூட இருக்கிறார் என்பதுதான் சிறந்த புரிந்துகொள்ளுதலாக இருக்கிறது. அவர் அவர்களிடமிருந்து விலகியிருக்கலாம், அவர்களுடைய வலப்பக்கத்திலோ அல்லது சில சமயங்களில், தேவைப்பட்டால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவர்களில் சரீரப்பிரகாரமாகவோ நிலைகொள்ளலாம்.
3அது எப்போது தேவதூதனாக இருக்கிறது என்றும் அது எப்போது ஒரு சகோதரனாக இருக்கிறது என்றும் அறிந்துகொள்வதுதான் மிக முக்கியமான காரியமாக இருக்கிறது! எப்போது அவர்கள் இரண்டு வெவ்வேறு நபர்களாக இருக்கிறார்கள், எப்போது அது ஒரே நபராக இருக்கிறது! மீட்டளிப்பின் ஊழியத்தில், எப்போது அது சிங்கத்தின் நேரத்தில், கன்றின் நேரத்தில், கழுகின் நேரத்தில் அல்லது மனிதனின் நேரத்தில் இருக்கிறது? சரியாக எசேக்கியேல் தீர்க்கதரிசி கேபார் நதிக்கரையில் எதைக் கண்டானோ அதுதான் அது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
4இரண்டாவது கேள்வி: பிலிப்பு சகோதரனே, நமது மணமகளுக்கான பரிசமாக மதுபானத்தை ஒரு மனிதன் நம்மிடத்தில் கேட்டால், அதை நாம் கொடுக்கலாமா? சகோதரர்களே, இராயனுக்கு உரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள் என்று வேதாகமம் கூறுகிறது! ஒவ்வொரு மனிதனும் தனது மகளுக்கான பரிசமாக தான் விரும்புகிறதை கேட்க உரிமையுண்டு, அதையே நீங்கள் கொடுக்கவேண்டும். சவுல் தனது மகள் மீகாளுக்காக மனிதர்களின் நூறு நுனித்தோல்களை பரிசமாகக் கேட்டபோது, தாவீது பணத்தைக்கொண்டு அதை செலுத்தவில்லை! மதுபானத்தைப் பற்றி, சற்று நேரத்திற்குள் அதைப்பற்றி நான் பேசுவேன்!
5இப்போது, நீங்கள் ஒரு கனவு கண்டால், அதை நீங்கள் மறக்கவில்லை என்றால், அதை கவனத்தில் கொள்ளுங்கள்! உதாரணமாக அது ஒரு மாசுபாட்டை விளைவிக்கிறது என்றால், பாவத்தை அல்லது பிசாசை அதிலே அடையாளம் காணமுடியும் என்பதால், நேரடியாக அதை நிராகரிக்க வேண்டாம். அது நீண்ட காலத்திற்கு முன்பு செய்த ஒரு பாவமாகவோ, உங்கள் ஞானஸ்நானத்திற்கு முன்புள்ளதாகக் கூட இருக்கலாம், அந்த பிசாசு இன்னமும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் அதை மறுபடியும் அறிக்கைச் செய்ய வேண்டும்!
6இப்போது மூனறாவது கேள்வி: "பிலிப்பு சகோதரனே, சிகை அலங்காரங்கள் குறித்து நாம் எத்தகைய நடத்தையை கொண்டிருக்கவேண்டும்?" அதில் எனக்கு எந்த குறிப்பிட்ட உபதேசமும் கிடையாது ஆனால் சவரகன்கத்தி உங்கள் தலையில் கடந்துசெல்வது நல்லது அல்ல! மேலும், சகோதரிகள் தங்களுடைய இயற்கையான முடியைப் பின்னிக்கொள்லலாம். 1 தீமோத்தேயு 2, அது விபச்சாரத்தின் ஒரு அடையாளமான சவுரி முடியைப் பற்றியதாகும்; வெறுமனே தன்னையே அலங்கரித்துக் கொள்வதற்காக நாம் உடுத்துக்கிற வஸ்திரங்களை போல எதையாவது போட்டுக்கொள்வதாக அது இருக்கிறது. நமது சகோதரிகளிடம் தேவன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அவர்களுடைய தலைமுடியானது அவர்களின் தலையை மூடினவாறு கீழே தோள்வரை இருக்கவேண்டும் என்பது தான், மீதமுள்ளதைப் பொருத்தவரை, அவர்கள் அதை வெட்டவும் வைத்துக்கொள்ளவும் சுதந்திரமுள்ளவர்களாக இருக்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
7இன்னொரு கேள்வி: "பிலிப்பு சகோதரனே, எபிரேயர் புத்தகத்தை எழுதியவர், பவுலா, அப்பொல்லோவா அல்லது வேறு எவரேனுமா? எபிரெயர் புத்தகத்தினை எழுதியவர் பவுல் என்று நான் சொன்னேன். பாணியை பற்றியும் யார் வாழ்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் ஒரு இறையியலாளன் பேசலாம், ஆனால் அது பவுல் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்! அதற்குள்ளே நாம் உபதேசங்களையும் கூட காண்கிறபடியினால் அது பவுலன்றி மற்றொன்றாக இருக்கமுடியாது! அப்பொல்லோவோ யோவான் ஸ்நானகனின் ஒரு சீஷனாக இருந்தான், ஆனால் அவன் பவுலை விசுவாசித்தபோது, அவன் தீமோத்தேயு, தீத்து, சில்வானு ஆகியோர்களைப் போலவே பவுலின் சீஷனாக ஆனான். அப்படியானால் அவன் ஒரு எபேசியனாக இருக்கிறான் மேலும் காக்குவ் 57 பிறகாரமாக அவன் எழுத முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
8நல்லது! அரசியலில் அல்லது சில பண விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு என் விசுவாசிகளை நான் மிகவும் நேசிக்கிறேன்! ஒரு ஓநாய்தான் அதை செய்ய முடியும் ஆனால் நான், ஒருபோதுமில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. ஒரு சகோதரர் பண திட்டங்களில் ஈடுபட முடியாது. எனக்கு ஒன்றும் இல்லாதபோது, நான் எதைச் செய்யவில்லையோ, இன்றும் நான் அதைச் செய்யப்போவதில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? என் விசுவாசிகளை ஒரு பணப்பெருக்க வலைத்தொடருக்குள் இழுப்பதை, என்னால் செய்யமுடியாது. அந்த காரியங்களை நான் கடந்துவிட்டேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
9நல்லது, எலியா மற்றும் மோசே ஆகியோரது வருகையின் முன்னடையாளங்களைப் பற்றி பேசுவதற்காக வெளிப்படுத்துதல் 11-ல் இருந்து இப்போது எனது பிரசங்கத்தை நான் எடுக்கிறேன். ஆனால் முதலாவதாக, நான் காக்குவ்.50 ல் ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். நான் அதை வாசிக்கிறேன்: "இந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 10, 2006 அன்று எருசலேமில், ஆயிரக்கணக்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு அணிவகுப்பு நடத்த ஆயத்தமாகின்றனர் ... "கருத்துச் சுதந்திரத்தின் விதிகளுக்குரிய கண்ணியத்துக்காக" இஸ்ரேல் அரசின் பொதுவழக்கறிஞர் மெனாகேம் மஸோஸ் ஞாயிறு மாலை இந்த ஊர்வலத்தை அங்கீகரித்தார்.
10"இது இஸ்ரேலின் ஜனநாயகத்துக்கும் விட்டுக்கொடுத்தலுக்கும் ஒரு வெற்றியாக இருக்கிறது." என எருசலேமின் திறந்தவீடு - அதாவது எருசலேமின் பெண்பாற் புணர்சியாளர்கள் (lesbians) மற்றும் ஓரினச்சேர்கையாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் உடனடியாக உரிமைகோரினார்கள். "இந்த அணிவகுப்பு நடைபெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். அது ஆத்திரமூட்டுவதாக இருக்காது. அணிவகுப்பில் திருவிழாவண்டிகள் அல்லது நிர்வாண மனிதர்கள் இருக்க மாட்டார்கள், மேலும் அது சபைகள், ஜெப ஆலயங்கள் அல்லது மசூதிகளின் சமீபத்தில் அமையமாட்டாது" என்று லெஸ்பியன்களின் தலைவர் எலேனா கானீடி ஏ.எஃப்.பி செய்தி (AFP) நிருவனத்திடம் கூறினார்.
11"ஓரினச் சேர்க்கையாளர்களின் இந்த அணிவகுப்பின் பங்கேற்பாளர்களை பாதுகாப்பதற்காக, எருசலேமில் இந்த வெள்ளிக்கிழமை அன்று பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமான போலீஸ்காரர்களை நாங்கள் அணிதிரட்டுவோம்" என்று இஸ்ரேலிய காவல்துறையின் தளபதி மோஷே கராடி இராணுவ வானொலியில் அறிவித்தார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அணிவகுப்பு ஏற்பாடுகளின்போது, இந்த அணிவகுப்புக்கு எதிராக ஆதரவுகேட்டு, இஸ்ரேலின் சேஃபார்டிக் (Sephardic) பிரிவின் தலைமை ரபி, மோஷே அமார், போப் பெனடிக்ட் -16 க்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். ஒரு சோதோமியனை கொல்கிற எந்த நபருக்கும் 4,500 டாலர் பரிசுத்தொகையை வாக்களிக்கிறதான துண்டுப் பிரசுரங்கள் எருசலேம் முழுவதும், இந்த சமீப மாதங்களில், விநியோகம் செய்யப்பட்டது.
122005 ம் ஆண்டில், எருசலேமில் ஓரினச்சேர்க்கையாளர்களின் நான்காவது ஊர்வலத்தில், தீவிர மதப்பற்றுள்ள ஒரு யூதன் யிஷாய் ஷ்லிசெல், மூன்று அணிவகுப்பு பங்கேற்பாளர்களை குத்தினான்; அவனுக்கு பன்னிரண்டு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. நம்பமுடியாவிட்டாலும் உண்மையாக, 'கே ப்ரைடு' (Gay Pride) என்னப்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்கள் அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும், டெல் அவீவில் அசம்பாவிதம் ஏதுமில்லாமல், ஒரு திருவிழாச் சூழ்நிலையில் நடைபெறுகிறது. இஸ்ரேல் 1988-ல் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கிற்று, ஓரினச்சேர்க்கை தம்பதிகளின் உரிமைகள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டது"... ஆமென்!
13இவை எலியா மற்றும் மோசே பற்றிய முன்னடையாளங்கள். "எருசலேமின் தெருக்களில் ஓரினச்சேர்க்கையாளர்களும், லெஸ்பியன்களும் அணிவகுத்து நிற்பதைப் பார்க்கும்போது, உங்கள் மீட்பானது சமீபமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள், அதற்காக முதலாவது இந்த இடமானது சோதோமாக மாறும்! இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு தெய்வங்கள் எருசலேமில் கோவில்கொள்ள வருவதை நீங்கள் காணும்போது, உங்கள் மீட்பானது சமீபமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள், அதற்காக முதலாவது இந்த இடமானது எகிப்தாக மாறும்!" என்று வெளிப்படுத்துதல் 7-ன் 1,44,000 பேரிடம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் கூறமுடியும். நீங்கள் பார்க்கிறீர்களா?
14இந்த வசனத்தில் பிரசங்கிப்பதற்கான பல விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் நான் மீண்டும் வாசிக்கப்போகிறதான ஒரு வாக்கியத்தில் இந்த மாலை கவனம் செலுத்த விரும்புகிறேன்: "ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அணிவகுப்பு ஏற்பாடுகளின்போது, இந்த அணிவகுப்புக்கு எதிராக ஆதரவுகேட்டு, இஸ்ரேலின் சேஃபார்டிக் (Sephardic) பிரிவின் தலைமை ரபி, மோஷே அமார், போப் பெனடிக்ட் -16 க்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்". அவரது வருகையின் அடையாளங்கள் என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா?
15ஒவ்வொரு வருடத்திலும், 1988 ம் ஆண்டுக்கு முன்புகூட இருந்ததைப்போலவும், அந்த நவம்பர் 2006 லும் புனித நாடு என்று அழைக்கப்படுகிறதிலே ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களின் இந்த அணிவகுப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான யூதர்கள் தொல்லைக்குள்ளானார்கள்! ஏதோ நகரத்திலல்ல ஆனால் கிறிஸ்தவத்தின் வரலாற்று நகரத்தில்! இந்த யூதர்களிடையே கலக்கமடைந்தது யார், இஸ்ரேலின் சேஃபார்டிக் (Sephardic) பிரிவின் தலைமை ரபியான, மோஷே அமார் தான்!
16எருசலேம் தாவீதின் நகரம், அது தீர்க்கதரிசிகளின் மற்றும் கிறிஸ்துவின் பூமிக்குரிய தாயகமாக இருக்கிறது! எருசலேம் அத்தகைய பெரிய தீமைக்கு தகுதியானதல்ல! இந்த தலைமை ரபீ கலக்கமடைந்ததையும் வாதிக்கப்பட்டதையும் என்னால் கற்பனைசெய்து பார்க்கமுடிகிறது! அந்த பிசாசுகள் இங்குமங்கும் திரிவதையும், தங்கள் கரங்களை முன்னுக்கு வீசி, தங்கள் உடல்களை அந்த விதமாக நெளிப்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது! எருசலேம் அதற்கு தகுதியானதல்ல!
17சகோதரர்களே, அவர்களது பழைய தாயகத்திற்கு திரும்பிவந்த அந்த ஆட்டுக்குட்டிகள் தங்கள் தேசத்தில் அதை சகித்துக்கொள்ளுமென்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எவராலும் கற்பனை செய்யமுடியாது. இஸ்ரேவேலைப் பாருங்கள், இந்த யூதர்களைப் பாருங்கள், முழு சூழ்நிலையும் ஆவிக்குரியதாக இருந்தது மேலும் உலகின் பழமையான கொடி, தாவீதின் நட்சத்திரத்துடன் மீண்டும் பறந்தது! ஒவ்வொரு கிறிஸ்தவனும், அவன் எங்கிருந்தாலும், மகிழ்ந்தான்! நீங்கள் காண்கிறீர்களா? வேதாகமம் பேசுகிற இஸ்ரவேலானது மறுபடியும் மேலே இருந்தது!
18இஸ்ரவேலானது "இஸ்ரவேலுடைய தீர்க்கதரிசிகளின் இலட்சியத்துக்கேற்ப சுதந்திரம், நீதி, சமாதானம் ஆகியவற்றின் மீது நிறுவப்பட்டது" என்று மே 14, 1948 ல் இஸ்ரவேலின் மறுமலர்ச்சியை டேவிட் பென் கூரியன் அறிவித்து கூறினார், அப்போது இந்த தேசமானது சோதோமாக, பூமியின் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களின் கண்காட்சிநடத்தும் ஸ்தலமாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியாது. இந்த நாடு எகிப்தாக இருக்குமென்றும், பூமியின் அனைத்து சபைகளுடைய தெய்வங்களின் புனிதயாத்திரை ஸ்தலமாக இருக்குமென்றும் அவருக்குத் தெரியாது. நீங்கள் பார்க்கிறீர்களா?
19அதிகமான பாலஸ்தீனிய குண்டுகள் அவர்கள்மேல் மோசமாக விழுகின்றன. நாடு கடத்தப்படுதல், இனப்படுகொலை மற்றும் சித்திரவதை முகாம்கள் ஆகியவை அவர்களை மாற்றவில்லை! அதனால்தான், தேவனின் முகத்தை இடைவிடாமல் தரிசிக்கிற இரண்டு பெரிய தீர்க்கதரிசிகளை தேவன் அனுப்புகிறார்! ஏனெனில் யூதர்கள் தீர்க்கதரிசிகளில் விசுவாசம் வைக்கிறார்கள். மேலும் இவ்வாறு கூறப்பட்டது: "ஓ தேவனே! பாலஸ்தீனியர்களை விட்டு விடுவீராக, அரபியர்களுடன் சேர்ந்து எங்களை துன்புறுத்தமாட்டார்கள், ... உமது பரிசுத்த தீர்க்கதரிசிகளில் ஒருவன் அவர்களிடத்தில் பேசினால், அவர்கள் விசுவாசிப்பார்கள்".
20அதற்கு தேவன்: "சரி, மோசே மட்டுமல்ல நான் அவர்களுக்கு எலியாவையும் அனுப்புவேன்!" என்றார். வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும், சமுத்திரத்திலுமுள்ள சிருஷ்டிகள் யாவும், அவைகளிலுள்ள வஸ்துக்கள் யாவும் உரத்த சத்தத்தில்: "சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும், ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக" என்றன. மேலும் அவர்கள் தாழவிழுந்து தொழுதுகொண்டனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
21அந்த அணிவகுப்பின் அறிவிப்புக்கு நாம் கொஞ்சம் திரும்பி வாருவோம்! ஆரம்பத்தில் அது ஒரு தெய்வ குற்றமாக இருந்தது! பிசாசின் பிள்ளைகள் கூட அதற்கு எதிராக எழுந்தார்கள், பிறகு சிறிது சிறிதாக அவர்கள் அதற்கு பழகிப்போகவும், அதை பொறுத்துக்கொள்ளவும் தொடங்கினார்கள். ஆனால் அதற்கு எதிராக தேவனுடைய குமாரர்கள் மாத்திரம் மீந்திருக்கையில், தேவன் எலியாவையும் மோசேயையும் அனுப்புவார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
22இஸ்ரேலின் பிரதான ரபீ இந்த பெரிய யூத அரசியல்வாதிகளை சாந்திருக்க முடியாது! இஸ்ரேலிய தேர்தல்களில், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், எருசலேமில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களின் அணிவகுப்பு இனிமேல் இருக்காது என்கின்ற எத்தனை வேட்பாளர்கள் இருக்கின்றனர்? எத்தனை பேர்? அவர்களில் எவரும் இல்லை! மாறாக அவர்கள் பாலஸ்தீனியர்களை தூரமாக ஒடுக்கிநிறுத்த எவ்வாறு திட்டமிடுகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள், அதன்மூலம் பந்துகள், களியாட்டம், திருவிழாக்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களின் அணிவகுப்பு அமைதியாக நடக்கும்! அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சுற்றுலாப்பயணிகள் பாதுகாக்கப்படலாம். இந்த ஒருவன் இத்தகைய ஒரு திட்டத்துடன் எழும்புகிறான். இன்னொருவன் வேறொரு திட்டத்துடன் எழும்புகிறான், இன்னும் அதுபோன்று பல. ஆனால் ஒருபோதும் இஸ்ரேலின் பரிசுத்தத்திற்காக அல்ல. அவர்கள் பார்ப்பதற்கு தேசாதேசங்களைப் போலவும், இன்னும் அதுபோன்று பலவாகவும் இருக்க விரும்புகின்றனர். நீங்கள் பார்க்கிறீர்களா?
23பாலஸ்தீனியர்களின் பெரும் பலம் வாய்ந்த எதிரியான ஏரியல் சாரோன் இப்போது இரண்டு ஆண்டுகளாக கோமா நிலையில் தள்ளப்பட்டுள்ளது எப்படியென்று பாருங்கள்! உயிருடன் இருக்கயிலே அவர் மரித்தவராக இருக்கிறார்! நீங்கள் வெளிப்பாட்டில் இல்லையென்றால், “இஸ்ரேலிய படையினர் அத்தகைய பல பாலஸ்தீன ஆர்வலர்கள் கொன்றனர்” என்று கேள்விப்படுகையில் மகிழ்வீர்கள்! சகோதரர்களே, எலியாவையும் மோசேயையும் கொல்வது பாலஸ்தீனியர்களல்ல ஆனால் யூதர்கள் என்பதை நினைவில் வையுங்கள்! நான் இஸ்ரேலுக்காக வலுவாக இருக்கிறேன், நான் பாலஸ்தீனியர்களை ஆதரிக்கவில்லை ஆனால் இந்த பாலஸ்தீனிய ஆர்வலர்கள் தேவனின் கோபத்தை தனிக்கிறதற்கான தேவ ஊழியர்கள் என்று நான் நம்புகிறேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
24இந்த தலைமை ரபீ இஸ்ரேலிய தலைவர்களை நம்பியிருக்க முடியாது, அதனால்தான் அவர் உதவி தேடுவதில் வேறு எங்காவது தனது சிந்தனையை செலுத்துகிறார்! ஆனால் உயிருள்ள தீர்க்கதரிசி தான் தேவனின் உதவி என்பது நமக்குத் தெரியும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
25இந்த ரபீக்கு யாரிடம் திரும்பவேண்டுமென்பது தெரியவில்லை, புகழ்பெற்ற இராஜாக்கள் மற்றும் ஜனாதிபதிகளின் பெயர்கள் அவருடைய தலைக்குள் வந்தன! ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம் போன்ற பெரிய சர்வதேச நிறுவனங்களின் பெயர்கள் அவரது தலைக்குள் வந்தன! பெரிய சபைகளுடைய மற்றும் சபைகளின் பெரும் கூட்டமைப்புகளின் பெயர்கள் அவருடைய தலைக்குள் வந்தன! செல்வாக்கு மிக்க ரெவரெண்டுகள் மற்றும் சபைகளின் பெரும் தலைவர்களின் பெயர்கள் அவரது தலையில் தோன்றின! டாமி ஆஸ்போர்ன், பில்லி கிரஹாம், மோரிஸ் செருல்லோ, ரெய்னார்ட் போன்கே, பென்னி ஹின்... போன்ற பெயர்கள் அவரது தலையில் தோன்றின!
26இஸ்ரவேலுக்காக உபவாசம்பண்ணி ஜெபம் பண்ணுகிற அனைவருடைய பெயர்களும் அவர் தலைக்குள் வந்தன. அந்த பிரதான ரபீ தனக்குள்ளே: “அவர்கள் எஜமானராகிய இயேசு கிறிஸ்து விற்கிறவர்களையே தேவாலையத்திலிருந்து வெளியே தூரத்தியிருந்தால், அவர்களது எஜமானரின் நகரம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களால் தாக்கப்படுவதைக் கேட்கும்போது அவர்கள் எவ்வளவாக பொங்கியெழுவார்கள்?” என்று சொல்லிக் கொண்டார். அவர் அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டு இருந்தார், திடீரென்று போப்பின் பெயர் ... ஆமென்! அவர் "தேவனுக்கு மகிமை!" என்று சத்தமிட்டிருக்க வேண்டும். "பரிசுத்த பிதா, அப்போஸ்தலரின் இளவரசன், தேவனுடைய குமாரனுக்கு பதிலாள்! (the vicariv's filii dei!)". ஆமென்! அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
27இந்த பிரதான ரபீ, போப்பின் பதவி கொண்டிருக்கும் அந்தஸ்துக்கேற்ப மிகுந்த மரியாதையுடனும் மிகச்சிறந்த சொற்கள் கொண்டதுமான தனது கடிதத்தை யூத ரபீக்களின் சங்கம் சார்பாக வடிவாக்கி சீரமைத்து, பின்னர் அவர் உயர்திரு பரிசுத்த பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட்டிடம் சென்று இந்த கடிதத்தை கொடுக்க ஒரு சிறப்பு தூதனை நியமித்தார்! அவர் போப்பிற்கு மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் மத ரீதியான பல முக்கிய நபர்களுக்கும் இந்த கடிதத்தை அனுப்பினார் ஆனால் அணிவகுப்பானது திருவிழா மற்றும் விருந்தின் சூழலில் நடந்தது! சகோதரர்களே, தயாரிக்கப்பட்ட அது ஒரு அருவருப்பான காரியமாகும், போப்பும் மார்க்க சம்பந்தமான உலகமும் பதிலளிப்பதற்கு யூத ரபீயிடமிருந்துள்ள ஒரு கடிதத்தின் அவசியமில்லை!
28ஆனால், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்டிலும் அதேகாரியம் நடக்கிறதினால் அவர்களால் அதன்பேரில் கருத்துத் தெரிவிக்கமுடியாது; அவர்கள் இதை அழகிப்போட்டி, இன்னின்ன நாட்டின் அழகி என்றழைக்கின்றனர், ஆனால் உண்மையில் இளம் விபச்சாரிகளின் அணிவகுப்பு! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்" என்று கூறுகிறது]. மேலும் இப்போது அது, இணையதள அழகி, இந்த அழகி, அந்த அழகி என அனைத்து வகைகளாக உள்ளன! பாஸ்டர்கள் அதை அவர்களுடைய தொலைக்காட்சியில் காண்கின்றனர்.
29விபச்சாரத்தால் நிறைந்த கண்களோடுள்ள ஆண்களுக்கு முன் பெண்கள் உள்ளாடைகளை அணிந்துக்கொண்டு வலம் வருகிறார்கள்! ஒரு நாட்டின் மிக அழகிய பெண்ணைப் பார்ப்பது மோசமானது என்று நான் நினைக்கவில்லை ஆனால் முதல் அளவுகோல் கன்னித்தன்மையே! அவள் கன்னியாக இருக்க வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. உங்களுக்குத் தெரிகிறதா? உள்ளாடையில் விபச்சாரிகள் மற்றும் இளம் தாய்மார்களின் அணிவகுப்பு நடத்துதல், அது அருவருப்பானது! அவர்களில் சிலர் ஒழுக்கங்கெட்டவர்களும், லெஸ்பியன்களும் சோதோமியர்களுமாம்! அது ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களின் அதே அணிவகுப்புகளாகத்தான் இருக்கிறது!
30ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களின் இந்த அணிவகுப்பை முழு உலகமும் தடைசெய்ய முடியும் ஆனால் அதை செய்யாது! அதுதானே கெட்டுப் போய் இதுபோன்ற காரியங்களில் மூழ்கிப்போகிறது! அமெரிக்கா உண்மையில் அதை தடை செய்யலாம், வத்திக்கான் தனது பிரசேதத்தில் அத்தகைய ஒரு காரியத்தை ஏற்க முடியாது என்பதினால் வத்திக்கான் உண்மையிலேயே அதை தடைசெய்யலாம், உலக சபைகளின் பேரவை உண்மையிலேயே அதை தடைசெய்யலாம், சபைகளின் இந்த ஆயிரமாயிரமான சம்மேளனங்களும் சங்கங்களும் உண்மையிலேயே அதை தடைசெய்யலாம் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை! ஆனால் அவர்கள் ஏன் அப்படி செய்யவில்லை? அதைத்தான் இந்த தலைமை ரபீ புரிந்துகொள்ளவில்லை! எருசலேமில் ஒரு ஓரினச்சேர்க்கையாளனை கொன்றதற்காக பன்னிரண்டு வருட சிறை தண்டனை வழங்கப்பட்ட இந்த வைதீக யூதனான யிஷாய் ஷ்லிசெல்-க்கு, உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களில் எத்தனை பேர் விடுதலையை கேட்கிறார்கள் அல்லது தங்கள் ஆதரவை அளிக்கிறார்கள் என்பதுகுறித்து கிறிஸ்தவர்களிடம் திரும்புவதற்கு முன் அவர் ஆச்சரியப்பட வேண்டியதிருந்தது!
31நம்முடையதைப் போன்ற ஒரு நாட்டில், நாகரிகமும் அறநெறிக் கல்வியும் பள்ளிகளில் முக்கிய பாடமாக இருக்கவேண்டும் மேலும் கன்னித்தன்மையே தனது முதன்மையும் தெய்வீகமுமான டிப்ளமோ என்றும் தனது ஒழுக்கத்தின் அடையாளம் என்றும் ஒவ்வொரு மாணாக்கரும் அறிந்திருக்கவேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அடுத்த ஆண்டிலும் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அவர்கள் கொண்டிருக்கிறதான ஒரு தேர்விலோ அல்லது போட்டித் தேர்விலோ அவர்கள் தோல்வியடைந்ததினால் சோகமாக இருக்கிற அல்லது அழுது கொண்டிருக்கிற மாணாக்கரை நீங்கள் காணலாம்! ஆனால் அவர்கள் ஒருபோதும் திரும்பக் கண்டடைய முடியாத கன்னித்தன்மையை அவர்கள் இழந்ததற்காக அவர்களில் எத்தனை பேர் அப்படி செய்கின்றனர்? நீங்கள் பார்க்கிறீர்களா?
32இந்த ரபீ ஜனங்களுக்கு கடிதங்களை அனுப்பிவைப்பதற்கு முன்பு, அவர்களது செல்வாக்கையோ அல்லது அவர்களது அரசியல் மதிப்பையோ அல்ல, ஆனால் அவர்களது சொந்த நாட்டில் அவர்களின் ஒழுக்கநெறியை கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் இருந்தது! நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த காரியங்களைப் பற்றி பேசுவதற்கு நான் அடிக்கடி ஊக்குவிக்கப்படுகிறேன் ஏனெனில் மத்தேயு 25:6 ல் உள்ள பத்துக் கன்னிகைகளின் தூதனாக நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு செய்தியாளனும் அவனது ஆவியின் அந்த யுகத்துக்கேற்ப செயல்படுகிறான். அதனால்தான் வெளிப்படுத்துதல் 11 ன் செய்தியாளர்கள் எலியாவும் மோசேயும் என அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
33நல்லது, நாம் வெளிப்படுத்துதல் 11-ஐ எடுக்கலாம். நான் அதை வாசிக்கப் போகிறேன்: "பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு." ஆமென்!
34முதலாவது எலியாவும் பிறகு மோசேயையும் இந்த இரண்டு தீர்க்கதரிசிகள் மூலமாக அடையாளம் கண்டுகொள்ளப் படுகிறார்கள்! ஆயினும், "இயேசு கொஞ்சம் குடித்தார் ஆகையால் நீங்களும் மதுபானங்களை அருந்தலாம்" என்று கூறுவதற்கு பிசாசின் புத்திரர்கள் எழும்பி இருப்பதை இன்று நாம் காண்கிறோம்! ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் தீர்க்கதரிசிகளுடைய ஆவிகளின் தேவனாக இருக்கிறார் என்பதும் இந்த மணிநேரத்தில் கிரியை செய்துகொண்டிருக்கிற அந்த தேவ ஆவியானது இன்னமும் எலியாவின் ஆவியாயிருக்கிறது என்றும் அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பிவருவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியுமா? நீங்கள் பார்க்கிறீர்களா?
35ஒருவன் சாராயப் பிசாசினால் பிடிபட்டவனாக இருந்து, அவன் மதுபானங்களை அருந்த விரும்பினால், அவன் குடிப்பானாக ஆனால் "இயேசு மதுபானங்களை அருந்தினார் அல்லது தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார்" என்று சொல்லாதிருப்பானாக. பழைய ஏற்பாட்டில், யோவான் ஸ்நானகன் என்ற ஒரு மனிதனைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது: "அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் எலியாவின் ஆவியிலும் வல்லமையிலும் அவருக்கு முன்னே செல்வான்" [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
36நோவாவையும் இயேசுகிறிஸ்துவையும் போல அவர்களும் மது அருந்தலாம் என்பதை நிரூபிப்பதற்கு ஒரு பிசாசின் குமாரன் வந்தாலும் கூட யோவான் ஸ்நானகனுக்கும் அவனது சீஷர்களுக்கும் மதுபானம் பண்ணாமலிருப்பது அதினிமித்தம் சாதாரணமானதாக இருந்தது. "ஒருபோதும் புகைக்காதே, ஒருபோதும் குடிக்காதே, ஒருபோதும் உன்னுடைய சரீரத்தை பெண்களுடன் கரைப்படுத்திக் கொள்ளாதே. நீ வளர்ந்து பெரியவனாகும்போது நீ செய்யவேண்டிய பணியொன்று உண்டு." என்று வில்லியம் பிரன்ஹாமிடமும்கூட சொல்லப்பட்டது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இப்படியிருக்க, ஏழாவது தூதனான, லவோதிக்கேயா சபை காலத்தின் ஆவியானது கர்த்தர் இயேசுவின் திரும்பிவருதலுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிற எலியாவின் ஆவியாக இருக்கிறது!
37மேலும் எலியாவின் ஆவியானது பாலியல் ஆவியோ அல்லது சாராயத்தின் ஆவியோ அல்ல ஆனால் எடுத்துக்கொள்ளப்படப் போகிறவனான வெளிப்படுத்துதல் 11 ன் எலியாவைப் போலவும், எடுத்துக்கொள்ளப்பட்டவனாகிய திஸ்பியனான எலியாவைப்போலவே எடுத்துக்கொள்ளப்பட்டவனும், ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த எலியாவாக இருந்தவனான, ஏனோக்குபோல எடுத்துக் கொள்ளப்படுதலே நோக்கமாகக் கொண்ட பரிசுத்தத்தின் ஆவியாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
38எலியாவின் ஆவியானது எடுத்துக்கொள்ளப்படுதலின் ஆவியாக இருக்கிறது; எனவே எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக மணவாட்டியை ஆயத்தப்படுத்துகிற தேவ ஆவியானது எலியாவின் ஆவியாக மட்டுமே இருக்க முடியும் மேலும் எலியாவின் ஆவியானது குடிக்காது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
39எனவே இன்று ஊழியத்திலிருப்பது எலியாவின் ஆவியாக இருக்கிறது மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருகிற வரையிலும் அது எப்பொழுதும் எலியாவின் ஆவியாகவே இருக்கும். ஏனோக்கும் அவனது சீஷர்களும் மதுபானம் பண்ணவில்லை! திஸ்பியனாகிய எலியாவும் அவனது சீஷர்களும் மதுபானம் பண்ணவில்லை! யோவான் ஸ்நானகனும் அவனது சீஷர்களும் மதுபானம் பண்ணவில்லை! வில்லியம் பிரன்ஹாமும் அவரது சீஷர்களும் மதுபானம் பண்ணவில்லை ஏனெனில் அது எப்பொழுதும் எலியாவின் ஆவியாக இருக்கிறது!
40மேலும் ஆதியாகமம் 18 ல், ஆபிரகாம் இந்த விருந்தளித்தபோது, அவர்கள் புசிக்கவும் மதுபானம் பண்ணவும் செய்தார்கள் என்று வேதாகமம் கூறவில்லை ஆனால்: "அவர்கள் புசித்தார்கள்."! அங்கே தேவனிடம் எந்த குழப்பமும் இல்லை! ஆதியாகமம் 18:6 முதல் 8: "அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி கோதுமை மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். ஆபிரகாம் வெண்ணையையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்களுக்கு முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்." என்று கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
41அதுபோலவே சோதோமில் இரண்டு தூதர்களுக்கு லோத்து அளித்த விருந்தில், அவர்கள் புசித்து மதுபானங்கள் அருந்தியதாக வேதாகமம் கூறவில்லை ஆனால் அவர்கள் புசித்தனர்! ஏன்? ஏனென்றால் அந்த இரண்டு தேவதூதர்கள் மோசேயும் எலியாவும் தான்! நீங்கள் பார்க்கிறீர்களா? பெந்தகோஸ்தேயினரையும் சுவிசேஷக சபையினரையும் பாருங்கள், இந்தக் காரியங்களின் கருத்து இன்னதென்று அவர்கள் அறியாதபோதிலும், அவர்கள் மதுபானங்களை அருந்துவது கிடையாது ஆனால் எலியாவின் ஆவிக்குரியவர்களாக இருப்பதாக உரிமைகோறுகிறவர்களும், பிரன்ஹாமிஸ்டுகளின் இனங்களாக இருப்பவர்களுமே அத்தகைய காரியங்களை போதிக்கின்றவர்களாக இருக்கின்றனர். அது துன்பகரமானது!
42ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவனது தலைமுறையும் அந்தத் தலைமுறையிலே செயல்படும் தேவனுடைய ஆவியின் பண்புகளின்படி செயல்படுகின்றனர்! புரிந்துகொள்ளக் கூடியவன், புரிந்துகொள்ளக் கடவன்.